Fwd: தினம் ஒரு பாடல்

2 views
Skip to first unread message

AKR Consultants

unread,
Nov 2, 2015, 9:58:06 AM11/2/15
to people-...@googlegroups.com
கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும், போதை மருந்து விற்பவர்களும், பெண்களின் கற்பைச் சூறையாடுவோரும் இன்னும் இத்தகைய பெரும் குற்றவாளிகளும் அரசியலில் இருக்க நாடு நாசமாய்ப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனாலும் நம் மக்களில் பெரும்பாலோர் தங்களுக்கென்ன என்று தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று விதவிதமாக உண்டு களிப்பதிலும், வேறு பல கேளிக்கைகளிலும் ஈடுபட்டுப் பொழுதைக் கழிக்கின்றனர். பலர் அன்று முதல் இன்றுவரை தேர்தலில் ஓட்டுப் போடுவதற்குக் காசு பெருகின்றனர். இவர்களில் அனேகர் குடிகாரர்களே. குடிக்கு ஒருவன் அடிமையாகிவிட்டால் எதையும் அடமானம் வைக்கத் தயங்க மாட்டான். பெண்டாட்டி தாலியையும் ஏன் பெண்டாட்டி பிள்ளை குட்டிகளையுமே விற்றும் குடிப்பதுவே அவனது குறிக்கோளாக இருக்கும்.

அத்தகைய மிகப் பயங்கரமான சாராயத்தைப் பல ஆண்டுகளாக அரசு விற்பனை செய்து இன்று ஆண்டொன்றுக்கு ரூ. 20,000 கோடிக்கு மேல் சாராய விற்பனை அதிகார பூர்வமாகக் கொடி கட்டிப் பறக்கிறது. இதனால் குடல் வெந்து செத்து மடிந்தோர் ஏராளம். மிகவும் பரிதாபகரமான நிலைமையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுத் தம் வீடு, வாசல், சொத்து, சுகம் அனைத்தையும் விற்று வைத்தியம் பார்த்தும் குற்றுயிருக் கொலையுயிருமாக நடைபிணமாக வாழ்வோர் ஏராளம்.

இத்தகைய இழிநிலைகளை மக்களுக்குக் கொண்டு செல்ல நம் நாட்டுப் பத்திரிக்கைகளுக்கும், செய்தி நிறுவனங்களுக்கும் நேரமில்லை ஏனெனில் அவர்கள் தங்கள் வருமானத்திற்காக மக்களைச் சுரண்டி வாழும் பெரும் பணக்கார வர்க்கத்தினரிடமிருந்து பெறும் பணத்திற்காக மக்கள் கவனத்தை திசை திருப்பி வருகின்றனர். இந்நிலையில் சாராயத்தின் கேட்டினைப் பலர் உணர்ந்து போராடி வருகின்றனர். அத்தகைய போராளிகளுள் ஒருவர் இயற்றிப் பாடிய பாடல் இன்றைய பாடலாக வருகிறது.

இதில் வெட்கக் கேடு என்னவெனில் இப்பாடலைப் பாடியவரான கோவன் என்பவரை தேசதுரோகக் குற்றம் சுமத்திக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தமிழக அரசு.

உலை வாயை மூடலாம். ஊர் வாயை மூட முடியுமா? இப்பாடலை தயைகூர்ந்து தமிழ்நாட்டு நலன் கருதி நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டு சாராய சாம்ராஜ்யத்தின் கோரப் பிடியிலிருந்து தமிழகம் மீள உதவுமாறு சிரம் தாழ்த்தி, இரு கரம் கூப்பி வேண்டிக் கொள்கிறேன்.

ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸிலே உல்லாசம்
ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸிலே உல்லாசம்

இட்டிலி ஒத்த ரூவா கக்கூசு அஞ்சு ரூவா
பட்டே சோறு அஞ்சு ரூவா பருப்பு வெலெ நூறு ரூவா
இட்டிலி ஒத்த ரூவா கக்கூசு அஞ்சு ரூவா
பட்டே சோறு அஞ்சு ரூவா பருப்பு வெலெ நூறு ரூவா
பாட்டில் தண்ணி பத்து ரூவா படிக்கப் பீசு லட்ச ரூவா
பாட்டில் தண்ணி பத்து ரூவா படிக்கப் பீசு லட்ச ரூவா நீ
வாழ வச்ச தெய்வமுன்னு கூவலேன்னாக் கொன்னுறுவா

ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸிலே உல்லாசம்

படிக்க உடாமே உஸ்கூல மூடுறான்
குடிக்க ஒயின் ஷாப்பே கோயிலாண்டே தொறாக்கிறான்
படிக்க உடாமே உஸ்கூல மூடுறான்
குடிக்க ஒயின் ஷாப்பே கோயிலாண்டே தொறாக்கிறான்
மாசம் ஒரு நாத்தான் மண்ணெண்ணெ ஊத்துறான்
மாசம் ஒரு நாத்தான் மண்ணெண்ணெ ஊத்துறான் இந்த
நாசமத்த கடையெ மட்டும் மிட்நைட்டுல தான் சாத்துறான்

சும்மாக் கெடந்த ஊருக்குள்ளே கடைய வச்சான்
ஆணு பொண்ணு அத்தன பேரையுங் குடிக்க வச்சான்
சும்மாக் கெடந்த ஊருக்குள்ளே கடைய வச்சான்
ஆணு பொண்ணு அத்தன பேரையுங் குடிக்க வச்சான்

ஆட்டுக்குட்டி ஃபேனு மிக்சி அள்ளித் தந்த அம்மா ஆட்சி
தெருத் தெருவாக் கடைய வச்சி குடுத்ததெல்லாம் புடுங்கிக்கிச்சி
ஆட்டுக்குட்டி ஃபேனு மிக்சி அள்ளித் தந்த அம்மா ஆட்சி
தெருத் தெருவாக் கடைய வச்சி குடுத்ததெல்லாம் புடுங்கிக்கிச்சி
கேக்காம வாரிக் கொடுக்கும் ஆட்சிடா
கேக்காம வாரிக் கொடுக்கும் ஆட்சிடா இடுப்பு
வேட்டியையும் புடுங்கிக் கிட்டுப் போச்சிடா

ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸிலே உல்லாசம்

தமிழகத்தின் பாருக்கெல்லாம் தலைக்காவிரி மிடாசு
குடிமகன் மொட்டையானா கலெக்டருக்கு சபாசு
தமிழகத்தின் பாருக்கெல்லாம் தலைக்காவிரி மிடாசு
குடிமகன் மொட்டையானா கலெக்டருக்கு சபாசு
பாரெல்லாம் அதிமுக குண்டாசு 
பாரெல்லாம் அதிமுக குண்டாசு இதுக்கு
ஆல் டைமு செக்யூரிட்டி போலீசு

ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸிலே உல்லாசம்

ஐஏஎஸ்ஸு ஐபிஎஸ்ஸு ஆள் படைக்கு சம்பளம்
போலீசு போலீசு செலவு அயிட்டம் ஏராளம்
ஐஏஎஸ்ஸு ஐபிஎஸ்ஸு ஆள் படைக்கு சம்பளம்
போலீசு போலீசு செலவு அயிட்டம் ஏராளம்
அம்மா வந்து போனா அந்த செலவே பயங்கரம்
அம்மா வந்து போனா அந்த செலவே பயங்கரம்
சும்மா கேனத்தனமா மூட சொன்னா அவுங்க
ஃப்யூச்சரெல்லாம் இன்னாவும்?

oorukkooru saaraayam thaLLaatudhu thamizhakam
ooththik kotuththa uththamikku pOyaSilE ullaasam
oorukkooru saaraayam thaLLaatudhu thamizhakam
ooththik kotuththa uththamikku pOyaSilE ullaasam

ittili oththa roovaa kakkoosu anju roovaa
pattE sORu anju roovaa paruppu vele nooRu roovaa
ittili oththa roovaa kakkoosu anju roovaa
pattE sORu anju roovaa paruppu vele nooRu roovaa
paattil thaNNi paththu roovaa patikkap peesu latcha roovaa
paattil thaNNi paththu roovaa patikkap peesu latcha roovaa nee
vaazha vachcha theyvamunnu koovalEnnaak konnuRuvaa

oorukkooru saaraayam thaLLaatudhu thamizhakam
ooththik kotuththa uththamikku pOyaSilE ullaasam

patikka utaamE uSkoola mootuRaan
kutikka oyin shaappE kOyilaaNtE thoRaakkiRaan
patikka utaamE uSkoola mootuRaan
kutikka oyin shaappE kOyilaaNtE thoRaakkiRaan
maasam oru naaththaan maNNeNNe ooththuRaan
maasam oru naaththaan maNNeNNe ooththuRaan indha
naasamaththa kataiye mattum mitnaittula thaan saaththuRaan

summaak ketandha oorukkuLLE kataiya vachchaan
aaNu poNNu aththana pEraiyung kutikka vachchaan
summaak ketandha oorukkuLLE kataiya vachchaan
aaNu poNNu aththana pEraiyung kutikka vachchaan

aattukkutti fEnu miksi aLLith thandha ammaa aatchi
theruth theruvaak kataiya vachchi kutuththadhellaam putungikkichchi
aattukkutti fEnu miksi aLLith thandha ammaa aatchi
theruth theruvaak kataiya vachchi kutuththadhellaam putungikkichchi
kEkkaama vaarik kotukkum aatchitaa
kEkkaama vaarik kotukkum aatchitaa ituppu
vEttiyaiyum putungik kittup pOchchitaa

oorukkooru saaraayam thaLLaatudhu thamizhakam
ooththik kotuththa uththamikku pOyaSilE ullaasam

thamizhakaththin paarukkellaam thalaikkaaviri mitaasu
kutimakan mottaiyaanaa kalektarukku sapaasu
thamizhakaththin paarukkellaam thalaikkaaviri mitaasu
kutimakan mottaiyaanaa kalektarukku sapaasu
paarellaam adhimuka kuNtaasu 
paarellaam adhimuka kuNtaasu idhukku
aal taimu sekyooritti pOleesu

oorukkooru saaraayam thaLLaatudhu thamizhakam
ooththik kotuththa uththamikku pOyaSilE ullaasam

aiEeSSu aipieSSu aaL pataikku sampaLam
pOleesu pOleesu selavu ayittam EraaLam
aiEeSSu aipieSSu aaL pataikku sampaLam
pOleesu pOleesu selavu ayittam EraaLam
ammaa vandhu pOnaa andha selavE payangaram
ammaa vandhu pOnaa andha selavE payangaram
summaa kEnaththanamaa moota sonnaa avunga
fyoochcharellaam innaavum?

-- 

Reply all
Reply to author
Forward
0 new messages