Fwd: TNTJ நடத்தும் அர்ரஹீம் முதியோர் இல்லம் .

12 views
Skip to first unread message

பயனுள்ள தகவல்கள்

unread,
Dec 18, 2014, 8:49:10 AM12/18/14
to payanull...@googlegroups.com
 payanullathagaval@googlegroups.com


ஏகஇறைவனின் திருப்பெயரால்....


 அர்ரஹீம் முதியோர் இல்லம் .


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செய்து வரும் மார்க்கப் பணிகளில் மிக முக்கியமான பணிபிள்ளைகளால் கை விடப்பட்ட பெற்றோரை பராமரிக்கும் அரும் பணி.


இஸ்லாத்தில் வலியுருத்தப்பட்ட கடமைகளில் பெற்றோரை கவனிப்பதும் மிகப்பெரும் கடமை.


عن عَبْدِ اللَّهِ بن مسعود رضي الله عنه قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ قَالَ الصَّلَاةُ عَلَى وَقْتِهَا قَالَ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ حَدَّثَنِي بِهِنَّ وَلَوْ اسْتَزَدْتُهُ لَزَادَنِي رواه البخاري 


நான் நபி (ஸல்) அவர்களிடம் 'அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?'' என்று கேட்டேன். அவர்கள், 'உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது'' என்றார்கள். 'பிறகு எது?'' என்று கேட்டேன். 'தாய் தந்தையருக்கு நன்மை புரிவது'என்றார்கள். 'பிறகு எது?'' என்றேன். அவர்கள் 'அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது'' என்றார்கள்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரலி) நூல்: புகாரி 527.

 

இன்றைய நவீன உலகத்தில் உலக சுகபோகங்களில் மூழ்கி திளைப்போர் பெற்றோருக்கு செலவு செய்வதினால் தன்னுடைய சுகபோக வாழ்வுக்கு பணம் போதாது என்று கருதுகின்றனர்.


அதற்காக காரணம் முதுமையில் பெற்றோர்களுக்கு உணவு மட்டும் போதாதுவைத்தியம் இன்றிமையாதது.


முதுமை ஆகி விட்டால் நரம்பு தளர்ச்சி வரலாம்.

* ரெத்த கொதிப்பு வரலாம்.

* இனிப்பு நீர் வரலாம்,

* இதயம் பலஹீனம் ஏற்படும்.

* சிருநீரகம் பாதிப்படையும்.

இவற்றிற்கான வைத்திய செலவு அதிகமாக ஏற்படும்.


இதுவல்லாமல் முதுமையில் தன்னிலை மறப்பதால் இருந்த இடத்தில் மல,ஜலம் கழித்து விடலாம்.


இதுபோன்ற பல காணரங்களுக்காக பிள்ளைகளால் பெற்றோர் கை விடப்படுகின்றனர்.


இது மாதிரி கை விடப்பட்ட முஸ்லீம் முதியோர் பிற மதத்தவர் நடத்தும் முதியோர் இல்லங்களில் தஞ்சம் புகுந்துஇறுதியில் அவர்களது மத சடங்குகள் பிரகாரம் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படும் அவல நிலையை அறிந்த மார்க்கம், மற்றும் சமுதாய பணிகள் செய்வதில்  முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கையிலெடுத்து இதை செய்து வருகிறது.


இதில் இணைக்கப்பட்டுள்ள வீடியோ க்ளிப்பை அவசியம் பாருங்கள்.


http://www.youtube.com/watch?v=F1E55pxRRhI&feature=youtu.be

Reply all
Reply to author
Forward
0 new messages