நல்லறங்கள் எம்.எம்.ஸைபுல்லாஹ் எம்.ஐ.எஸ்.ஸி

260 views
Skip to first unread message

பயனுள்ள தகவல்கள்

unread,
Dec 11, 2014, 11:29:02 PM12/11/14
to payanull...@googlegroups.com

நல்லறங்கள்

எம்.எம்.ஸைபுல்லாஹ் எம்..எஸ்.ஸி

இஸ்லாமிய மார்க்கம் நற்செயல்களைச் செய்யுமாறு கட்டளையிடுகின்றது. ஆர்வமூட்டுகிறது. அதே வேளையில் அந்த நற்செயல்களுக்குரிய கூலியும் ஏராளமாக்க் கிடைக்கும் என்பதையும் கூறுகிறது. நற்செயல்களைச் செய்யுமாறு இறைவன் குர்ஆனில் பல இடங்களில் ஆர்வமூட்டுகிறான்.
يَاأَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنْ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ(51)

தூதர்களே! தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நல்லறம் செய்யுங்கள்! நீங்கள் செய்வதை நான் அறிந்தவன்

அல்குர்ஆன் 23:51   - يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்
அல்குர்ஆன் 22:77 -   وَبَشِّرْ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ 

"நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன'' என்று நற்செய்தி கூறுவீராக

அல்குர்ஆன் 2:25 - وَالْعَصْرِ(1)إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ(2)إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ(3)

காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிரஅல்குர்ஆன் 103:1+3

நல்லறங்கள் செய்யுமாறும், அவ்வாறு நல்லறங்கள் செய்வோர்தான் வெற்றி பெற்வர்கள் என்றும், சுவனம் கிடைக்கும் என்றும் இறைவன் வாக்குறுதி அளிக்கிறான். நற்செயல்களை செய்யாதோர் நஷ்டவாளிகள் என்றும் இறைவன் எச்சரிக்கை செய்கின்றான்.

எனவே நற்செயல்கள் செய்ய வேண்டும். நற்செயல்களில் போட்டிபோட வேண்டும்.
இறைவன் அறிவுரை கூறுகிறான்.  - وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ

ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள் 
அல்குர்ஆன் 2:148 - سَابِقُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ

உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும், சொர்க்கத்திற்கும் முந்துங்கள்!                          அல்குர்ஆன் 57:21

நமக்கு நல்லறங்கள் செய்வதற்குரிய கால அவகாசங்கள் நேரங்கள் ஏராளம் இருக்கின்றன. அதை நாம் வீணடித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நேரம் வரும். அந்ரேத்தில்தான் நாம் தவறவிட்ட நற்செயல்களுக்காக வருத்தப்படுவோம். அவ்வாறு இரண்டு இடங்களில் நாம் மிகவும் கைசேதப்படுவோம். நற்செயல்கள் செய்வதற்கு அவகாசம் கிடைக்காதா என்று பேராசைப்படுவோம். ஆனால் நற்செயல்கள் செய்வதற்கு அவகாசம் கொடுக்கப்படாது, நற்செயல்களும் செய்யமுடியாது.

முதல் இடம் : உயிர் தொண்டைக்குழிக்குள் அடைக்கும் நேரம்
இறைவன் கூறுகிறான் :

حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمْ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِي(99)لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ(100)

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தைதான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது          அல்குர்ஆன் 23:99

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட் செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களை திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள். உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! "இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே'' என்று அப்போது (மனிதன்) கூறுவான்
அல்குர்ஆன் 63:9,10

உயிருடன் இருக்கும்போது விட்ட எல்லா நற்செயல்களையும் செய்து வருகிறேன். கொஞ்ச நேரம் எனக்கு அவகாசம் வழங்கு என்று இறைவனிடம் மன்றாடுவான். அவன் பேசக்கூடிய பேச்சு வெறும் வார்த்தை தான். வார்த்தைக்கு எந்தப் பயனும் இல்லை என்று இறைவன் மறுப்புக் கூறுகிறான். மேலும் அவனுக்கு அவகாசம் அளிக்கவும் மாட்டான்.

وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ(11)

இறைவன் கூறுகிறான் : அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்
அல்குர்ஆன் 63:11

இரண்டாவது இடம் : மறுமையில்

மரணித்த பின்பு சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழைவார்கள். நரகவாசிகள் நரகத்தில் நுழைவார்கள். அங்கு நரகவாசிகள் உலக வாழ்க்கைக்குத் திரும்பினால் நன்றாக இருக்குமே ஏராளமான நற்செயல்களை செய்வோமே என ஆசைப்படுவார்கள். ஆனால் நற்செயல்கள் செய்வதற்குரிய காலகட்டம் முடிந்துவிட்டது. இப்போது செயல்களுக்கு கூலி கொடுக்கும் காலகட்டமாகும்.

இறைவன் கூறுகின்றான்:

وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ نَارُ جَهَنَّمَ لَا يُقْضَى عَلَيْهِمْ فَيَمُوتُوا وَلَا يُخَفَّفُ عَنْهُمْ مِنْ عَذَابِهَا كَذَلِكَ نَجْزِي كُلَّ كَفُورٍ(36)وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَنْ تَذَكَّرَ وَجَاءَكُمْ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِنْ نَصِيرٍ(37)

 (நம்மை) மறுத்தோருக்கு நரக நெருப்பு உள்ளது. அவர்கள் மரணிக்குமாறு முடிவு செய்யப்படாது. அதன் வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. (நம்மை) மறுக்கும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே வேதனை அளிப்போம். "எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி நல்லறங்களைச் செய்கிறோம்'' என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். "படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித்திருக்கவில்லையா?  உங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை'' (என்று கூறப்படும்
அல்குர்ஆன் 35:36,37

நற்செயல் செய்வதற்காக அல்லாஹ் நமக்கு வாழ்வாதாரத்தைக் கொடுத்தான். தூதர்கள் நம்மை எச்சரிக்கை செய்தார்கள். நம்மை நேர்வழியின் பக்கம் அழைத்தார்கள். அந்த வாழ்நாளைப் பயன்படுத்தாமல் மறுமையில் மனிதன் நற்செயல் செய்ய ஆசைப்படுவான். ஆசை நிறைவேற்றப்படாது. ஆக மனிதன் மரண வேளையிலும், மறுமையிலும் நற்செயல் செய்வதற்காக ஆசைப்படுவான். அவனது இந்த ஆசைகள் நிராசையாகிவிடும் என்பதை இறைவன் நமக்கு தெளிவுபடுத்துகிறான்.
எல்லா நிலையிலும் நமக்கு உதவியாக வந்து நிற்கக்கூடியது நற்செயல்கள் தான். நற்செயல்கள் தான் நமக்கு கப்ரிலும் துணையாக நிற்கும்
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتْبَعُ الْمَيِّتَ ثَلَاثَةٌ فَيَرْجِعُ اثْنَانِ وَيَبْقَى مَعَهُ وَاحِدٌ يَتْبَعُهُ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ فَيَرْجِعُ أَهْلُهُ وَمَالُهُ وَيَبْقَى عَمَلُهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறந்துபோனவரை மூன்று பொருட்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பி விடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரி 6514, முஸ்லிம் 5260 

உன்னுடைய குடும்பத்தார்கள், சொந்தபந்தங்கள், பிள்ளைகள், உங்களுடன் உட்கார்ந்தவர்கள், உங்களுடன் பேசியவர்கள் உன்னுடன் கப்ரில் வரமாட்டார்கள். மாறாக உன்னை கப்ரில் வைத்துவிட்டு மண்ணைப் போட்டு மூடிவிட்டு திரும்பி விடுவார்கள்.

அல்லாஹ்வுடைய வழியில் செலவழிக்காத உன்னுடைய செல்வம் உன்னுடன் கப்ரில் வராது. மாறக நீ இறந்தவுடன் வாரிசுகள் பங்கு போட்டு எடுத்துக் கொள்வார்கள்.
மூன்றவதாக நீ செய்த நற்செயல்கள் மட்டும்தான் உன்னுடன் கப்ருக்குள் வரும்.
وَيُفْسَحُ لَهُ فِي قَبْرِهِ مَدَّ بَصَرِهِ قَالَ وَيَأْتِيهِ رَجُلٌ حَسَنُ الْوَجْهِ حَسَنُ الثِّيَابِ طَيِّبُ الرِّيحِ فَيَقُولُ أَبْشِرْ بِالَّذِي يَسُرُّكَ هَذَا يَوْمُكَ الَّذِي كُنْتَ تُوعَدُ فَيَقُولُ لَهُ مَنْ أَنْتَ فَوَجْهُكَ الْوَجْهُ يَجِيءُ بِالْخَيْرِ فَيَقُولُ أَنَا عَمَلُكَ الصَّالِحُ

ஒரு அடியான் கப்ரில் வைக்கப்பட்டதும் அழகான முகமுடைய, அழகான ஆடையுடனும், நறுமணத்துடனும் ஒருவர் வந்து அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் சுவர்க்கமும் உனக்கு உண்டு நான் தான் உன்னுடைய நற்செயல் என்று சொல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.        நூல் : அஹ்மத் 17803
أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ قَالَ يَا مَعْشَرَ قُرَيْشٍ أَوْ كَلِمَةً نَحْوَهَا اشْتَرُوا أَنْفُسَكُمْ لَا أُغْنِي عَنْكُمْ مِنْ اللَّهِ شَيْئًا يَا بَنِي عَبْدِ مَنَافٍ لَا أُغْنِي عَنْكُمْ مِنْ اللَّهِ شَيْئًا يَا عَبَّاسُ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ لَا أُغْنِي عَنْكَ مِنْ اللَّهِ شَيْئًا وَيَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللَّهِ لَا أُغْنِي عَنْكِ مِنْ اللَّهِ شَيْئًا وَيَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ سَلِينِي مَا شِئْتِ مِنْ مَالِي لَا أُغْنِي عَنْكِ مِنْ اللَّهِ شَيْئًا

"உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்'' என்னும் (26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, "குறைஷிக் குலத்தாரே!'  என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), "ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்துல் மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை (மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னைக் காப்பாற்ற முடியாது'' என்று கூறினார்கள்  அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 2753 

முன்னர் நாம் நரகவாசிகள் நற்செயல்கள் செய்வதற்குத்தான் ஆசைப்படுவார்கள். அங்கு சென்று ஆசைப்படுவது பயனற்றது. அதை விட நாம் இப்போது நல்ல ஆரோக்கியமாக இருக்கும்போதே நாம் நற்செயல்களை செய்ய ஆசைப்பட வேண்டும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் நற்செயல்கள் செய்வதில் போட்டிபோட்டுக் கொண்டு செய்தார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَاءَ الْفُقَرَاءُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا ذَهَبَ أَهْلُ الدُّثُورِ مِنْ الْأَمْوَالِ بِالدَّرَجَاتِ الْعُلَا وَالنَّعِيمِ الْمُقِيمِ يُصَلُّونَ كَمَا نُصَلِّي وَيَصُومُونَ كَمَا نَصُومُ وَلَهُمْ فَضْلٌ مِنْ أَمْوَالٍ يَحُجُّونَ بِهَا وَيَعْتَمِرُونَ وَيُجَاهِدُونَ وَيَتَصَدَّقُونَ قَالَ أَلَا أُحَدِّثُكُمْ إِنْ أَخَذْتُمْ أَدْرَكْتُمْ مَنْ سَبَقَكُمْ وَلَمْ يُدْرِكْكُمْ أَحَدٌ بَعْدَكُمْ وَكُنْتُمْ خَيْرَ مَنْ أَنْتُمْ بَيْنَ ظَهْرَانَيْهِ إِلَّا مَنْ عَمِلَ مِثْلَهُ تُسَبِّحُونَ وَتَحْمَدُونَ وَتُكَبِّرُونَ خَلْفَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ فَاخْتَلَفْنَا بَيْنَنَا فَقَالَ بَعْضُنَا نُسَبِّحُ ثَلَاثًا وَثَلَاثِينَ وَنَحْمَدُ ثَلَاثًا وَثَلَاثِينَ وَنُكَبِّرُ أَرْبَعًا وَثَلَاثِينَ فَرَجَعْتُ إِلَيْهِ فَقَالَ تَقُولُ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَاللَّهُ أَكْبَرُ حَتَّى يَكُونَ مِنْهُنَّ كُلِّهِنَّ ثَلَاثًا وَثَلَاثِينَ

ஏழைகள் (சிலர்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "செல்வச் சீமான்கள் உயர்வான பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்)கொண்டு போய் விடுகின்றனர். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் தங்களது அதிகப்படியான செல்வங்கள் மூலம் அவர்கள் ஹஜ் செய்கின்றனர்; உம்ரா செய்கின்றனர்; அறப்போருக்காக செலவளிக்கின்றனர்; தான தர்மம் செய்கின்றனர். (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடிவதில்லையே)'' என்று கூறினர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்த சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட(செல்வர்)வர்களையும் நீங்கள் பிடித்துவிடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களை பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களிடையே வாழ்கிறீர்களோ அவர்களில் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படுத்தினால் தவிர (அவர்களாலும் அச்சிறப்பை அடைய முடியாது.) (அந்தக் காரியமாவது:) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; 33 தடவை தஹ்மீத் (அல்ஹம்து-ல்லாஹ்) கூறுங்கள்; 33 தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். நாங்கள் இது தொடர்பாக கருத்து வேறுபாடு கொண்டோம். எங்களில் சிலர் சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை கூறவேண்டும்'' என்றனர். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடமே திரும்பி (ச் சென்று இதுபற்றி வினவி)னேன். நபியவர்கள், "சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ் தூயவன்; அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்; அல்லாஹு மிகப் பெரியவன்) என்று 33 தடவை சொல்! இதனால் அவற்றில் ஒவ்வொன்றும் 33 தடவை கூறியதாக அமையும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி நூல் : புகாரீ 843

நினைத்தாலே நன்மையே

நற்செயல்கள் புரிந்தால் இறைவன் அதற்கான கூலியைத் தருவான். ஆனால் நற்செயல் செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்தாலே அல்லாஹ் ஒரு நன்மையைப் பதிவு செய்கின்றான்.

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்:

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ قَالَ إِنَّ اللَّهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ ثُمَّ بَيَّنَ ذَلِكَ فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ سَيِّئَةً وَاحِدَةً

அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனத்தில்) எண்ணி விட்டாலே-அதைச் செயல்படுத்தாவிட்டாலும்- அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கை விட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்து விட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலிநூல் : புகாரீ 6491

நம்மால் நற்செயல்கள் எந்தளவிற்கு அதிகமதிகம் செய்ய முடியுமோ அந்த அளவு செய்ய வேண்டும்.

இனிமேல் எளிமையான நற்செயல்களும் அவற்றுக்கான நன்மையையும் பார்ப்போம்.

பஜ்ருடைய சுன்னத் இரண்டு ரக்அத்


عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் இந்த உலகையும் அதில் உள்ளவற்றையும் விடச் சிறந்தவையாகும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் 1314

பஜ்ருடைய சுன்னத் தொழுவதற்கு இரண்டு நிமிடங்கள், மூன்று நிமிடங்கள் கூட ஆகாது. ஆனால் அதற்கு கிடைக்கக் கூடிய நன்மை உலககையும், உலகில் உள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.

பஜ்ருடைய சுன்னத்திற்கே இந்த அளவு நன்மை என்றால் பர்ளான பஜ்ரு தொழுகைக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும். உண்மையிலேயே இந்த சுன்னத்தை தவறவிட்டவர்கள் கைசேதத்திற்குரியவர்கள் தாம். பெரும்பான்மையான மக்கள் இந்த சுன்னத்தை தவறவிடுகிறார்கள். காரணம் இதன் நன்மையைத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

அஸ்தக்பிருல்லாஹ் கூறுவோம்

மனிதன் என்பவன் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் இல்லை. எனவே தவறுகள் செய்தபின் அதற்கான இறைவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என இறைவன் குர்ஆனில் பல்வேறு இடங்களில் வலியுறுத்திச் சொல்லிக் காட்டுகிறான்.

ஒவ்வொரு நபிமார்களும் தங்கள் சமுதாய மக்கள் தவறுசெய்யும் போது அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள் என்ற செய்தியையும் கூடுதலாக சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இறைவன் மன்னிப்புக் கேட்கும்போது இறைவன் நம்முடைய பாவங்களையும் மன்னிக்கின்றான். நமக்கு இறைவனின் புறத்திலிருந்து பரக்கத்தும், இறைவனின் ரஹ்மத்தும் கிடைக்கின்றன.

 


அல்லாஹ் கூறுகின்றான்

 : 
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا(10)يُرْسِلْ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا(11)وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا(12)

உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான்'' என்று கூறினேன். 11. உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான். 12. செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காக சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான்
அல்குர்ஆன் 71:10, 11, 12

நூஹ் நபியவர்கள் தமது சமுதாய மக்களுக்குச் சொன்ன விஷயத்தை அல்லாஹ் இங்கு நினைவுபடுத்துகின்றான்.

அஸ்தக்பிருல்லாஹ் என்று நாம் சொல்வதன் மூலம் 1. இறைவனின் மன்னிப்பு கிடைக்கும், 2. தொடர்ந்து மழையை இறக்குகின்றான். செல்வச் செழிப்பை ஏற்படுத்துகிறான். 3. மக்கட் செல்வத்தை வழங்குகின்றான். 4. தோட்டங்களைக் கொடுக்கின்றான். 5. தோட்டத்திற்குத் தேவையான நீர் வளங்களைக் கொடுக்கின்றான்.

இறைவா என்னை மன்னித்தருள். இறைவா நான் உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன் என்ற ஒரு வார்த்தை எவ்வளவு நன்மைகளை வாரித்தருகிறது.
முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக இறைவன் திருமறையில் சான்றளிக்கின்ற அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நாளும் இறைவனிடம் மன்னிப்புக் கேட்பவர்களாகத் தான் இருந்தார்கள்.
قَالَ أَبُو هُرَيْرَةَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَاللَّهِ إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً

"அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் "அஸ்தஃக் ஃபிருல்லாஹ அதூபு இலைஹி' என்று கூறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி

நூல் : புகாரீ 6307

பாவமன்னிப்புத் தேடக்கூடியவர்களுக்கு கிடைக்கும் இன்னொரு சிறப்பு அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை.

அல்லாஹ் கூறுகின்றான்

 : 
وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ(33)

(முஹம்மதே!) நீர் அவர்களுடன் இருக்கும்போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும்போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை.
அல்குர்ஆன் 8:33

திக்ரு செய்வோம்

சில நற்செயல்களைச் செய்வதற்கு அதற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். இடத்தை ஒதுக்க வேண்டும். பொருளாதாரத்தை ஒதுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளன. ஆனால் சில நற்செயல்களை எல்லோரும் எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் இலகுவான முறையில் எப்போது வேண்டுமானாலும் செய்துவிடலாம். மேலும் இதுபோன்ற நற்செயல்களுக்குக் கிடைக்கும் நன்மையைச் சிந்தித்துப் பார்த்தாலும் ஏராளம் கிடைத்துவிடும்.

அப்படிப்பட்ட இலகுவான மேலும் அல்லாஹ்வுக்கு பிடித்தமான ஏராளமான நன்மைகளை குவிக்கக்கூடியதுதான். சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அலீம் என்று கூறுவது.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَتَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை; நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை

நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். (அவை:)
1.
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்).
2.
சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்).
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி

நூல் : புகாரீ 7563

சுப்ஹானல்லாஹ் எனக் கூறுவோம்

عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ حَدَّثَنِي أَبِي قَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَكْسِبَ كُلَّ يَوْمٍ أَلْفَ حَسَنَةٍ فَسَأَلَهُ سَائِلٌ مِنْ جُلَسَائِهِ كَيْفَ يَكْسِبُ أَحَدُنَا أَلْفَ حَسَنَةٍ قَالَ يُسَبِّحُ مِائَةَ تَسْبِيحَةٍ فَيُكْتَبُ لَهُ أَلْفُ حَسَنَةٍ أَوْ يُحَطُّ عَنْهُ أَلْفُ خَطِيئَةٍ

நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், "உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?''  என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், "எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?'' என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை ("சுப்ஹானல்லாஹ்' என்று கூறித்) துதிக்க, அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல் : முஸ்லிம் 5230

சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹ் வல்லாஹுக் அக்பர்

நாவினால் செய்யக்கூடிய வணக்கம் மக்களுக்கு மிக எளிமையானதாகும். வீணான பேச்சுக்களிலும், கேளிக்கைகளிலும் தங்களுடைய நேரங்களை செல்வழிக்கிறார்கள். நன்மைகளை அள்ளித்தரக்கூடிய இதுமாதிரியான வணக்கவழிபாடுகளில் பொடுபோக்கான தன்மையை மேற்கொள்கிறார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَأَنْ أَقُولَ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ أَحَبُّ إِلَيَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹு இல்லல்லாஹுக் வல்லாஹு அக்பர் 
பொருள் : அல்லாஹ் தூய்மையானவன். புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே. வணக்கதிற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூறுவது சூரியன் உதயமாவதை விட எனக்கு மிகப் பிரியமானதாகும்
அறிவிப்பவர் : அபூஹக்ரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 4861

சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, ரிளா நஃப்சிஹி, ஸினத்த அர்ஷிஹி, மிதாத கலிமாத்திஹி

عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ جُوَيْرِيَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مِنْ عِنْدِهَا بُكْرَةً حِينَ صَلَّى الصُّبْحَ وَهِيَ فِي مَسْجِدِهَا ثُمَّ رَجَعَ بَعْدَ أَنْ أَضْحَى وَهِيَ جَالِسَةٌ فَقَالَ مَا زِلْتِ عَلَى الْحَالِ الَّتِي فَارَقْتُكِ عَلَيْهَا قَالَتْ نَعَمْ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَدْ قُلْتُ بَعْدَكِ أَرْبَعَ كَلِمَاتٍ ثَلَاثَ مَرَّاتٍ لَوْ وُزِنَتْ بِمَا قُلْتِ مُنْذُ الْيَوْمِ لَوَزَنَتْهُنَّ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ

ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், "நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில்தான் நீ இருந்து கொண்டிருக்கிறாயா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்'' என்றேன். நபி (ஸல்) அவர்கள், "நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை:) சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, ரிளா நஃப்சிஹி, ஸினத்த அர்ஷிஹி, மிதாத கலிமாத்திஹி (ஆகியவையாகும்)'' என்றார்கள்.

(பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.)

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : முஸ்லிம் 5272

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும்.

மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரிடமிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். அந்த நாளின் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது இருக்கும். அவர் புரிந்த இந்த நற்செயலை விடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான நற்செயல் புரிந்தால் தவிர."சுப்ஹானல்லாஹி பிஹம்திஹி'' (அல்லாஹ் தூயவன் என்று போற்றித் துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப்படுகின்றன; அவை கடலின் நுரை போன்று (அதிகமாக) இருந்தாலும் சரியே!

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 5221

வணக்கங்களில் மிக எளிமையானது இறை நினைவு திக்ரு செய்வதுதான். இதனால் நமக்கு உடற்சோர்வு ஏற்படாது. கஷ்டம் இருக்காது. நடந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ திக்ரு செய்யலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 7405

லுஹாத் தொழுகை

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُ تَعَالَى أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ مِنْهُمْ وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் ஒவ்வொரு நாளும் (தமது உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (-சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (-அல்ஹம்துலில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு "ஓரிறை உறுதிமொழி'யும் (-லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (-அல்லாஹு அக்பர்) தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில் (ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி) நூல் : முஸ்லிம் 1302

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு விஷயம் (சொல்கிறேன்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவிற்கு அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி (தக்பீர்), அல்லாஹ்வைப் புகழ்ந்து (தஹ்மீத்), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று (ஏகத்துவ உறுதி) கூறி, அல்லாஹ்வைத் துதித்து (தஸ்பீஹ்), அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி (இஸ்திஃக்ஃபார்), மக்களின் நடைபாதையில் (இடையூறாகக்) கிடந்த ஒரு கல்லையோ, அல்லது முள்ளையோ, அல்லது எலும்பையோ அகற்றி, நல்லதை ஏவி, அல்லது தீமையைத் தடுத்(து நல்லறங்கள் புரிந்)தாரோ, அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே நடமாடுகிறார்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் 1833

ஆதமின் மக்களில் மூன்னூற்று அறுபது மூட்டுக்களுக்கு ஈடாக லுஹாத் தொழுகையின் இரண்டு ரக்அத் போதுமானதாகும்.

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, இரண்டு ரக்அத் ளுஹாத் தொழுகை தொழுவது, வித்ர் தொழுதுவிட்டு உறங்குவது ஆகிய மூன்று விஷயங்களை என் உற்ற தோழர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள். நான் இறக்கும் வரை அவற்றை விடமாட்டேன்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 1178

முற்பகல் நேரத்தில் தொழப்படும் தொழுகைக்கு லுஹாத் தொழுகை என்று சொல்லப்படும்

லுஹாத் தொழுகையின் ரக்அத்கள் இரண்டு ரக்அத்திலிருந்து விரும்பிய ரக்அத்கள் தொழுது கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் நான்கு ரக்அத்கள் (ளுஹா) தொழுவார்கள். அல்லாஹ் நாடிய அளவு கூடுதலாகவும் தொழுவார்கள்.
அறிவிப்பவர் ; ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் 1297

 நான் மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் மக்காவின் மேட்டுப் பகுதியில் இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளியலுக்காக எழுந்தார்கள். அப்போது அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்கள் திரையிட்டு மறைத்தார்கள். (குளித்த) பிறகு தமது ஆடையை வாங்கிப் போர்த்திக்கொண்டார்கள். பின்னர் முற்பகல் தொழுகை (ளுஹா) எட்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஹானீ (ரலி) நூல் : முஸ்லிம் 562 புகாரி 1103, 

எம்.எம்.ஸைபுல்லாஹ் எம்.ஐ.எஸ்.ஸி

நன்றி – அக்டோபர் 2014 தீன்குல்ப் பெண்மணி

Reply all
Reply to author
Forward
0 new messages