ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி
அவர்கள்.
பேய்கள் என்று ஆட்டம் போடுபவர்களில் 90 சதவிகிதம் பேர் நடிப்பவர்களே, அதன் மூலம் எதையோ சாதித்துக் கொள்ள விரும்புபவர்களே என்பதை அறியலாம்.
இந்த இடத்தில்
நியாயமான ஒரு
சந்தேகம் பலருக்கும்
உண்டு. எவ்வளவோ மருத்துவம் செய்தும்
குணமடையாத இத்தகையோர்
ஒரு சாமியாரின்
விபூதியைக் கண்டவுடன்
– வேப்பிலையைக் கண்டவுடன்
ஓம் ரீம்
என்ற மந்திரத்தைக்
(?) கேட்டவுடன் எவ்வாறு
அடங்கி விடுகின்றனர்?.
மவ்லவிகள், தங்கள்மார்கள் ஆகியோர் மந்திரித்தவுடன்
– தண்ணீர் ஓதி
முகத்தில் தெளித்தவுடன்
அல்லது துணியில்
எதையாவது எழுதி
அதை எரித்து
அந்தப் புகையை
முகரச் செய்தவுடன்
‘விட்டுவிடு இனி
வரமாட்டேன் என்று
கூறிக் கொண்டு
பேய்கள் ஓடுகின்றனவே,
இது எப்படி?
ஒரு பாதிரியாரின்
தாயத்தை அணிந்தவுடன்
அலறிக் கொண்டு
பேய்கள் ஓட்டமெடுப்பது
எவ்வாறு? இது தான் அந்த
நியாயமான சந்தேகம்.
பேய்கள் பிடித்துள்ளதாக நடிப்பவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் அலறிக் கொண்டு ஓடுவதாகவும்
நடித்தாக வேண்டும்.
மந்திரத்துக்கு அடங்காவிட்டால் பேய் பிடித்ததை மற்றவர்கள்
நம்ப மாட்டார்கள்.
இந்தச் சாமியார்களோ,
பாதிரிகளோ அல்லது
தங்கள்மார்களோ ஜபிக்கும்
போது பேய்
பிடித்தவர்களிடம் எந்த
விளைவும் ஏற்படவில்லையென்றால் பிடித்திருப்பது பேயல்ல என்று
மக்கள் நினைப்பதுடன்
பேயோட்டிகளே “பேயில்லை
நோய்தான் என்று
சான்று வழங்கி
விடுவார்கள். அதன்
பிறகு பேய்
வேஷம் போட்டதனால்
எதிர்பார்த்த பலனை
அடைய முடியாது.
பேயோட்டிகளே ‘பேய்
பிடித்துள்ளது என்று
சர்டிபிகேட் வழங்குபவர்களாக உள்ளதால் அவர்களது ஜபத்திற்கு
ஏதேனும் எதிர்
விளைவைக் காட்டியாக
வேண்டும்.
இதனால் தான்
எல்லா மந்திரவாதிகளுக்கும்
(?) பேய்கள் அடிபணிகின்றன.
இதை யார்
வேண்டுமானாலும் சோதித்து
அறிய முடியும்.
பேய் பிடித்ததாக
நம்பப்படுபவனின் முன்னால்
பேயோட்டி போல்
சென்று அமர்ந்து
கொண்டு பேயோட்டும்
திறமை உங்களுக்கு
இருப்பதாக நம்பச்
செய்யுங்கள். அதன்
பிறகு உங்கள்
வாய்க்குள்ளாக ‘அறிவு
கெட்ட மடையா!
யாரை ஏமாற்றுகிறாய்....!
என்பது போல்
எதையாவது கூறி
ஓதுவது போல்
பாவனை செய்து
தண்ணீரில் ஊதித்
தெளித்தால் அப்போதும்
அந்தப் பேயிடம்
எதிர் விளைவைக்
காணலாம்.
பேய் பிடித்ததாகக்
கூறுவது எப்படி
நடிப்பாக உள்ளதோ,
மந்திரத்தைக் கேட்டதும்
அது விலகுவதாக
அலறுவதும் நடிப்புத்
தான்.
இது வரை
நாம் எடுத்து
வைத்த சான்றுகள்
பேய்கள் கிடையாது
என்பதையும் பேய்
பிடிப்பதும் அவற்றின்
நடமாட்டமும் திட்டமிட்ட
நாடகமே என்பதையும்
நிரூபிக்கப் போதுமானவையாக
உள்ளன. ஆயினும் பேய்கள் இருக்குமோ
என்ற தடுமாற்றத்தை
ஏற்படுத்தும் இன்னும்
சில ஐயங்களும்
உள்ளன.
அவற்றையும் அப்புறப்படுத்தாத வரை பேய் நம்பிக்கையை
ஒழிக்க முடியாது.
அத்தகைய ஐயங்களையும்
அது பற்றிய
தெளிவையும் காண்போம்.
பேய் பிடித்ததாக
நம்பப்படுபவர் அதற்கு
முன்னால் அவர்
அறிந்திராத மறைவான
செய்திகளையெல்லாம் அறிவிக்கக்கூடிய நிலையை நாம் காண்கிறோம்.
உதாரணமாக இருபத்தி
ஐந்து வயதுடைய
இளைஞனுக்கு பேய்
பிடித்ததாக வைத்துக்
கொள்வோம். அதாவது ஐம்பது ஆண்டுகளுக்கு
முன்னால் மரணித்தவரின்
ஆவி வந்து
இவனைப் பிடிப்பதாக
வைத்துக் கொள்வோம்.
இவனுக்குப் பேய்
பிடிப்பதற்கு முன்னால்
ஐம்பது ஆண்டுகளுக்கு
முன்பு நடந்தவை
தெரியாமலிருந்து இப்போது
ஐம்பது ஆண்டுகளுக்கு
முந்தைய பேய்
பிடித்துக் கொண்டவுடன்
மளமளவென்று ஐம்பது
ஆண்டுகளுக்கு முன்
நடந்தவைகளை அவன்
கூற ஆரம்பித்து
விடுவதைக் காண்கிறோம்.
இது போலவே
மதுரையில் உள்ள
ஒருவனை நாகர்கோவிலில்
உள்ள பேய்
பிடிப்பதாக வைத்துக்
கொள்வோம். இப்போது இந்தப் பேய்
பிடித்தவன் நாகர்கோவிலில்
நடந்த விபரங்களைக்
கூறுகிறான்.
பேய் பிடிப்பது
என்பது ஒரு
நாடகம் என்றால்
இந்த அதிசய
வல்லமை எப்படி
அவனுக்கு ஏற்படுகின்றது?
என்று பேய்
நம்பிக்கையாளர்கள் வினா
எழுப்புகின்றனர். இப்படி
ஒரு நம்பிக்கை
அவர்களின் உள்ளத்தில்
ஆழமாக வேரூன்றியிருக்கும் போது எந்த ஆதாரங்களும்
அவர்களை அசைத்து
விட முடியாது.
எனவே இதன்
உண்மை நிலையை
நாம் வெளிச்சம்
போட்டுக் காட்டுவோம்.
பேய் பிடித்தவரிடம்
இத்தகைய ஆற்றல்
ஏற்பட்டு விடுவது
போல தோன்றுவது
பொய்த் தோற்றமே
தவிர உண்மை
அல்ல. இதைப் பலரும் உணர்வதில்லை.
25 வயதுடைய இளைஞன்
பேய் பிடித்ததும்
ஐம்பது ஆண்டுகளுக்கு
முந்தைய செய்திகளைக்
கூறுவதும் நடிப்புத்
தான். அவன் கூறுவது போல்
ஐம்பது ஆண்டுகளுக்கு
முன்னால் ஏதும்
நடந்தே இராது.
ஐம்பது ஆண்டுகளுக்கு
முன் நடந்ததை
விசாரித்தறிய பின்னோக்கிச்
செல்ல முடியாது
என்பதாலும் தனது
சாயம் வெளுக்காது
என்ற தைரியத்தாலும்
இவன் உளறிக்
கொட்டுகிறான். அவன்
மறைவான சங்கதிகளைக்
கூறுகிறான் என்று
பேய் ஆதரவாளர்கள்
முடிவு செய்து
விடுகின்றனர்.
கடந்த காலம்
பற்றி இப்படி
கண்டதையும் கூறும்
வசதியை பேய்
பிடித்தவர்கள் மட்டுமே
பயன்படுத்த முடியும்.
அவர்கள் உளறும்
போது மட்டுமே
மக்கள் அதை
நம்புவார்கள். பேய்
பிடிக்காதவர்கள் கடந்த
காலம் பற்றி
கூறினால் எவருமே
நம்ப மாட்டார்கள்.
பேய் பிடித்தவர்களிடம் வந்துள்ள பேய்கள் கடந்த காலத்தை
அறிந்துள்ளன; பேய்கள் அவற்றை நமக்கு அறிவிக்கின்றன என்ற நம்பிக்கை சமூகத்தில்
ஆழமாகப் பதிந்துள்ளதால் கடந்த காலம் பற்றி எதை வேண்டுமானாலும் கூற முடிகின்றது.
அதை நம்புவதற்கும் ஆட்கள் உள்ளனர்.
கடந்த காலம்
பற்றியெல்லாம் அறியும்
ஆற்றல் பேய்
பிடித்தவர்களுக்கு எற்படுவது
உண்மையானால் நிகழ்
காலத்தை அறிவது
அதை விட
எளிதானதாக இருக்க
வேண்டுமல்லவா? நிகழ்காலம்
பற்றி எதையேனும்
கேட்டுப் பாருங்கள்!
அவர்கள் விடையளிக்க
மாட்டார்கள்.
உங்கள் கைகளில்
எதையாவது மறைத்து
வைத்துக் கொண்டு
இதில் என்ன
உள்ளது? என்று கேட்டால் அவர்களால்
அதைக் கூற
முடியாமல் போவது
ஏன்?
இதைத் தான்
நாம் சிந்திக்கத்
தவறி விடுகிறோம்.
நமது கையில்
மறைந்திருப்பதைப் பற்றி
அவர் வாயில்
வந்தவாறு விட்டு
அடிக்க முடியாது.
ஏனெனில் உடனேயே
நாம் அவரது
கூற்று உண்மையா?
பொய்யா? என்பதைக் கண்டுபிடித்து விடுவோம்.
அது போல்
பத்து நிமிடத்துக்குப் பின்னால் என்ன ஏற்படும்?
என்ற விஷயத்தைப்
பற்றி பேய்
பிடித்தவனிடம் கேளுங்கள்.
அதற்கும் விடை
வராது.
ஒரு நாளைக்கு
முன் அல்லது
ஐந்தாறு நாட்களுக்கு
முன் அல்லது
சில மாதங்களுக்கு
முன் நடந்தவை
பற்றி மூச்சு
விடுவதில்லை. எனெனில்
இதைப் பற்றி
விசாரித்தறிந்து பேய்
பொய் கூறுகிறது
என்பதை நாம்
கண்டுபிடித்து விடுவோம்.
சென்ற காலத்தில்
(எந்தச் சென்ற
காலம் பற்றி
விசாரித்தறிய முடியாதோ)
எது நடக்கும்
போது பலரும்
சம்பந்தப்பட்டிருக்கவில்லையோ அது போன்ற
காலம் பற்றியும்
– அது போன்ற
சம்பவம் பற்றியும்
மட்டுமே பேய்கள்
கூறுவது ஏன்?
இதைச் சிந்தித்தால்
உண்மை விளங்கும்.
பேய் பிடித்ததாக
நடிப்பவர்கள் திட்டமிட்டு
திறமையாக நடிப்பதால்
ஆற்றல் மறைந்து
கிடப்பது போன்ற
தோற்றத்தை ஏற்படுத்தி
விடுகின்றனர். இது
தான் உண்மையாகும்.
இதை இன்னும்
விரிவாக அறிந்து
கொள்ள இன்னொரு
விதத்தில் நாம்
சோதித்துப் பார்க்கலாம்.
அதாவது ஒரு
மனிதன் தன்
கண் முன்னே
நடப்பதை மட்டுமே
அறிய முடியும்.
அவனது முதுகுக்குப்
பின்னால் நடக்கும்
எதையும் அவனால்
அறிய முடியாது.
இது மனிதனின்
நிலை. ஆனால் பேய்கள் உருவமற்றவை.
அவற்றுக்கு முதுகுப்புறம்
முன்புறம் பின்புறம்
எல்லாம் கிடையாது.
இவ்வாறிருக்க பேய்
பிடித்தவரின் முதுகுக்குப்
பின்னால் இரண்டு
விரல்களைக் காட்டி
இது எத்தனை
விரல்கள்? என்று கேட்டால் கூட
சொல்ல முடிவதில்லை.
பேய் பிடித்தவரின்
கண்களையும் கட்டி
விட்டு அருகில்
நடப்பதைக் கேட்டால்
அதையும் சொல்ல
முடிவதில்லை.
பார்ப்பதற்கு மனிதனுக்குத்
தான் கண்கள்
வேண்டுமே தவிர
பேய்களுக்குக் கண்கள்
தேவையில்லையே. அப்படியானால்
ஏன்
பேய்களால் இதைச்
சொல்ல முடிவதில்லை?
இந்த இடத்தல்
தான் இதுவொரு
நாடகம் என்பது
தெளிவாகின்றது.
பேய் பிடித்த
மனிதனது கண்களும்
அவனது காதுகளும்
கட்டப்பட்டதும் பேய்களுக்கு
பார்க்கவோ கேட்கவோ
முடியாமல் போவதிலிருந்து
பார்ப்பதும் கேட்பதும்
பேசுவதும் இந்த
மனிதன் தான்;
பேய் கிடையாது
என்பதை நிரூபிக்கின்றது.
பேய் பிடித்ததாகக்
கூறுவது நடிப்பின்
ஒரு காட்சி
என்றால் மறைவான
கடந்த கால
நிகழ்ச்சி பற்றிக்
கூறுவது நடிப்பின்
மற்றொரு காட்சி
என்பதைத் தவிர
வேறில்லை.
இது திட்டமிட்ட
நடிப்புத் தான்
என்பதில் இன்னும்
சந்தேகம் இருந்தால்
இன்னொரு சோதனையின்
மூலம் அதை
நீக்கிக் கொள்ள
முடியும்.
உயிரோடு இருக்கும்
மனிதனிடம் பேய்கள்
வந்து விடுமானால்
ஏற்கனவே பெற்றிருந்த
வல்லமையை விட
கூடுதல் வல்லமை
பெறுகின்றான் என்பது
பேய் நம்பிக்கையாளரின் முடிவு.
பேய் பிடித்ததாக
நம்பப்படும் நிராயுதபாணியான ஒருவனிடம் ஒரு கத்தியை
அல்லது கழியைக்
காட்டி அவனை
அடிக்க முயன்றால்
அவன் அலறுவதைக்
காண்கிறோம். சாதாரண
மனிதனை விட
சக்தி வாய்ந்த
பேய் அவனிடம்
குடி கொண்டிருப்பது
உண்மையானால் அவன்
என்ன செய்ய
வேண்டும்? இந்த ஆயுதங்களைக் கண்ட
பின்பும் அஞ்சாமல்
எதிர்க்க வேண்டும்.
நம்மை வெற்றி
கொள்ள வேண்டும்.
அது தான்
முடியாவிட்டாலும் அந்த
மனிதனிடமே உள்ள
பேய் அவனிடமிருந்து
பாய்ந்து நம்மீது
ஆதிக்கம் செலுத்த
வேண்டும். இப்படியெல்லாம் எங்கேயும் நடந்ததில்லை.
அப்படியானால் மிரள்வதும்
அரள்வதும் அந்த
மனிதன் தானே
தவிர பேயில்லை
என்பது தெளிவாகின்றது
அல்லவா!.
சில பேர்
மிரளாமலும் இருப்பார்கள்.
எனெனில் மிரட்டுபவர்
தன்னை அடிக்க
மாட்டார் என்று
திட்டவட்டமாகத் தெரியும்
போது தான்
இந்த நிலை.
மிரட்டக் கூடியவர்
நிச்சயம் அடிப்பார்
என்று தெரிந்தால்
அப்போது நிச்சயம்
மிரள்வார். சிலர் மிரட்டும் போது
மிரளாமல் இருப்பதும்,
வேறு சிலர்
மிரட்டும் போது
மிரள்வதும் அதனால்
தான்.
பேய் நம்பிக்கையாளரின் இந்தச் சந்தேகம் அடிப்படையில்லாததாக இருப்பதும் உறுதியாகின்றது அல்லவா!