Arangiyal Vizha, October 01 / அரங்கியல் விழா, ஒக்ரோபர் 01
Friends and Well Wishers!
Greetings to one and all!
We are grateful for your continued support of Thaiveedu. It is no mean a task to continuously bring out a publication of this caliber in this dispersed environment. It is your contributions as readers, sponsors, and enthusiasts that make it possible.
You are most certainly aware of Thaiveedu’s theatre festival – Arangiyal Vizha. The 2017 edition of this festival will take place as two shows at 1:30PM and 6:30PM on 01 October 2017 at Flato Markham Theatre in Markham ON.
We graciously request that you set aside time from your busy schedules to attend this event for one of the two show times.The support you have shown in the past to this event spearheaded in the spirit of communal harmony and with the aim of preserving and promoting traditional art forms is commendable. Your attendance at this event is important not only to strengthen Thaiveedu’s resolve in this regard but also to encourage the artistes who volunteer their invaluable time and talents to support this effort.
We strongly believe it is in your attendance that the event gains strength and meaning.
Tickets are $15 and $100. Contact us for tickets and for further info.
Attached herewith is the video of the Koothu ‘Indru Poi Nalai Vaa’ which was performed at 2016 Arangiyal Vizha
Thank you,
ThaiVeedu
000
அன்பான உறவுகளே!
அனைவருக்கும் வணக்கம்.
தாய்வீடு இதழுக்குத் தாங்கள் தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கு மிகவும் நன்றி. ஓர் இதழைக் காத்திரமாகவும் தொடர்ச்சியாகவும் காலம் தவறாமலும் வெளியிடுவது எளிதான செயலல்ல. வாசகர், வணிகர், ஆர்வலர் போன்ற உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பே இந்த இதழின் இருப்புக்குப் பலமான தளமாக அமைகின்றது.
தாய்வீடு முன்னெடுத்து வருகின்ற அரங்கியல் விழா பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். 2017ம் ஆண்டுக்கான எமது அரங்கியல் விழா, ஒக்டோபர் முதலாம் நாள், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணிக்கும் மாலை 6:30 மணிக்கும் இரு நிகழ்வுகளாக நடைபெறவுள்ளது.
அன்றைய நாளில் இவ்விழாவுக்கு வருகை தருவதற்கென உங்கள் நேரத்தை முற்கூட்டியே ஒதுக்கி வைக்குமாறு அன்போடு வேண்டுகின்றோம்.
தமிழர் கலைப் பராம்பரியத்தைப் பேணும் நோக்கோடும் சமூக ஒருமைப்பாட்டை முன்வைத்தும் நடைபெறுகின்ற இந்த அரங்கியல் விழாவுக்குத் தொடர்ந்து நீங்கள் வழங்கி வருகின்ற ஆதரவு பெருமைக்குரியது.
தாய்வீடு இதழைப் பலப்படுத்தவும் பற்கேற்கும் கலைஞர்களை ஊக்குவிக்கவும் உங்கள் ஒவ்வொருவரினது வருகையும் முதன்மையானது. உங்கள் வருகையே விழாவின் பலமும் தளமும் என்பதை நாம் வலுவாக நம்புகின்றோம்.
நுழைவுச் சீட்டுகள் $15, $100.
நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளவும் கூடுதல் தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் தொடர்பு கொள்ளுங்கள்.
(சென்ற ஆண்டு இதேகாலப் பகுதியில் இடம்பெற்ற அரங்கியல் விழாவில் மேடையேற்றப்பட்ட 'இன்று போய் நாளை வா' என்ற கூத்தினையும் உங்கள் பார்வைக்காக இணைத்துள்ளோம்).
நன்றி
தாய்வீடு