வணக்கம்,
மூன்றாவது ஆண்டாக தமிழ்வேட்டை 2026 இன்று முதல் தொடங்குகிறது. நம்மைச் சுற்றிக் காணப்படும் தமிழ்ப் பிழைகளைச் சுட்டிக் காட்டி, பரிசுகளை வெல்லும் இணையவழிப் போட்டி. தமிழ் வாசித்தலை ஊக்குவிக்கும் விதமாகவும், பயன்பாட்டில் ஏற்படும் பிழைகளைச் சுட்டிக் காட்டி ஊடகங்களிடையேயும் பொது மக்களிடையேயும் ஒரு விழிப்புணர்வை உருவாக்கவும் இணைய வழியில் தமிழ் மாதம் ஐப்பசியில் நடத்தப்படும் ஒரு போட்டியாகும். பிழையில்லாத் தமிழை எழுதவும் வாசிக்கவும் இது உலகளாவியத் தமிழர்களை ஊக்கப்படுத்தும். பிழையின்றித் தமிழை எழுத விரும்பும் ஒவ்வொருவரும் இதில் கலந்து கொண்டு பிழைகளைச் சுட்டிக் காட்டி நல்ல தமிழை வளர்ப்போம்
போட்டி விதிகளைக் கவனமாகப் படியுங்கள், உங்கள் சமூகத் தளங்களில் பிழைகளைச் சுட்டிக் காட்டி #tamilvettai என்று குறிச்சொல்லுடன் வெளியிடுங்கள். ரொக்கப்பரிசுகளையும் சலுகைச்சீட்டுகளையும் மேலும் பல அங்கீகாரங்களையும் பெறலாம்.
விரிவான தகவல்களுக்கு:
--