|
|
அறிமுகத்தை இங்கு தொடருங்கள்.
வேண்டுகோள் : மடலின் பொருள் (Subject Line) மட்டும் ஆங்கிலத்தில் /
தமிங்கலத்தில் இருக்கட்டும்.தமிழில் இட்டால் மடல் பிரியும், கூகிள் இதை
சரி செய்யும் வரை இதை தொடர்வோம்.
நன்றி.
ப்ரியமுடன்,
ப்ரியன்.
என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன்.
பெயர்: ஆசிப் மீரான்
மக்கள் வைத்த பெயர்: அண்ணாச்சி
வசிப்பிடம்: துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
தொழில்: கட்டிடக் கலையியல்
உப தொழில்: வானொலியில் அறிவிப்பு
பகுதிநேர வேலை: வலைப்பதிவுகளில் மொக்கைப் பதிவுகள் எழுதுவது,
குழுமங்களில் அரட்டை
பொறுப்பு: கவிமடத் தலைவர், கவுஜைகள் ஆலோசகர்
வலைப்பதிவுகள்: http://asifmeeran.blogspot.com/
இந்த அளவு(க்கதிகமான) அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன்.
எப்படியும் சுயபுலம்பல்கள் இனி இங்கே இடம்பெறாமலா போகும்? :-)
அப்போது பார்த்துக்கொள்ளலாம்
தோழமையுடன்,
ஆசிப் மீரான்
www.ezuthovian.blogspot.com
"There is no such thing as failure. There are only results".
சொந்த ஊர்: தஞ்சை மாவட்டத்திலுள்ள பாபநாசம் எனும் சிற்றூர்
தற்சமயம் பிழைப்பு நடத்தும் ஊர் : சிங்காரச் சென்னை
வேலை : மென்பொருள்
ப்லாக் : http://malarvanam.blogspot.com
சின்னதா ஒரு சுயபுராணம் : கொஞ்சம் இலக்கிய ஆர்வமும், இசை ஆர்வமும் உண்டு. கவிதைன்ற பேர்ல எப்பவாவது அபூர்வமா எதாவது எழுதி அது அதை விட அபூர்வமா பத்திரிக்கைகளில் வந்ததுண்டு. அதுக்கப்புறம் சமீபத்துலதான் இணையத்துல நாம என்ன எழுதினாலும் நாலு பேர் வந்து படிக்கறாங்கன்ற நல்ல சேதி தெரிஞ்சது. ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே இவங்கல்லாம், அப்படின்ற சந்தோஷத்தோட ப்லாக் ஆரம்பிச்சேன். அங்க கொட்டுற குப்பைல கொஞ்சத்தை இங்க வந்தும் கொட்டும்மான்னு அண்ணாச்சி அன்போடு அழைத்ததால பண்போடு இங்க ஒடோடி வந்துட்டேன்...
வணக்கம் நண்பர்களே
எனது பெயர் த.அகிலன்.நண்பர்கள் பெயரெதுவும் வைக்கவில்லை(ஹி ஹி ஹி)
சொந்தவூர்- இந்தியாவிற்கு பக்கத்தி்ல் மரணங்களின் சொந்தவூர்(ஈழம்)தற்சமயம்- அகதியாகவும் நண்பர்களின் அன்பினாலும் சென்னையில்.தொழில் இலங்கையில் ஒரு ஊடகவியலாளன். தற்போதும் அதுதான் தொழில்.இந்தியாவில் தொழில் தேடுகிறேன்.(இருந்தா சொல்லங்கப்பூ)மற்றபடி குறிப்பிடும்படி எதுவும் கிடையாது. ஆ முக்கியமா யாரையும் கலாய்க்கதெரியாது
மிச்சமெல்லாம் போகப் போக தெரியத்தானே போகுது.. அதனால் இப்பத்திக்கு வாலைச் சுருட்டிகிட்டு அப்பீட்..
இப்பத்திக்கு வாலைச் சுருட்டிகிட்டு அப்பீட்..
எல்லோருக்கும் என் வணக்கம்.
தினம் தினம் பதிவுலகத்தில் படிக்கும் பல வலைப்பூக்களின் படைப்பாளிகளை இங்கே சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி :-)
--ஹ ஹா
மன்னிச்சிருங்க ப்ரேம்
என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன்.
பெயர்: என் சுரேஷ்
மக்கள் வைத்த பெயர்: அண்ணன்
வசிப்பிடம்: சென்னை
தொழில்: எலக்ட்ராணிக்ஸ் இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனமொன்றில் அலுவலக பணி
வலைப்பதிவுகள்: http://nsureshchennai.blogspot.com
இந்த அளவு அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன்.
தோழமையுடன்,
என் சுரேஷ்
வணக்கம் நண்பர்களே!!!
பெயர்: ம.எழில்பாரதி
நண்பர்கள் அழைப்பது: எழில்
சொந்த ஊர்: விருதாச்சலம் பக்கத்துல சு.கிணணூர் என்ற கிராமம்.
வசிப்பது: சென்னை
தொழில்: என்ன புதுசா இருக்கபோகுது அதே பொட்டி தட்டுதல்தான்!!!
பொழுதுபோக்கு: அரட்டை,வலைப்பதிவு படிப்பது,இசை,புத்தகம் படிப்பது,கொஞ்சமா எழுதுவது
வலைப்பூ: www.ezhilbharathi.blogspot.com
பெயர்: ரெ.சிவசுப்பிரமணியன்
கூப்பிடு பெயர்கள்: சிவா, சிவசு, சிவகுமார்,
சொந்த ஊர்: மணவை என்னும் மணப்பாறை
வேலை செய்யும் ஊர்: திருச்சி
தொழில்: மனித வள மென்பாட்டுத்துறை
படித்தது: எம்.பி.ஏ (மனித வள மேன்பாடு)
பிடித்தது: தமிழ், இசை, பெண்கள், இயற்கை, நன்பர்கள், குடும்பம்.... நிறைய விடயங்கள் பிடிக்கும்
பொழுது போக்கு: இணைய உலா, ஒத்த நன்பர்களை தேடுதல், இசையில் இலயிப்பது,கணினி விளையாட்டு, எழுதுவது, படிப்பது(ஏதாவது படித்தே ஆக வேண்டும் இல்லயென்றால் தூக்கம் வராது ஆனால் தூக்கத்திற்காக படிப்பது கிடையாது)
என்னைப் பற்றி: அவசியம் தெரிந்து கொள்வீர்கள்
அறிமுகமான இடங்கள்: அன்புடன், முத்தமிழ், ஆர்க்குட் மற்றும் பல :)
கனவு: தனித் தமிழீழம்
பிடித்தது: வெறித்தனமான வாசிப்பு,அடிக்கடி பேருந்து
பயணம்(சன்னலோரம்)
அன்புடன்
பண்புடன்
தமிழ்த்தேனீ
முன்னாடியே குழுமத்தில் இணைந்து விட்டாலும், லேட்டாதான் அறிமுகம்
பண்ணிக்கறேன்.
எனக்கு முன்னாடி அறிமுகம் பண்ணவங்களுக்கு ஒரு வணக்கம் வெச்சுக்கறேன்.
நான் நந்தகுமார். நண்பர்களின் மத்தியில் நந்தா.
தற்போது க்ரியேட்டிவ் டிசைனராக மென்பொருள் துறையில் குப்பை கொட்டுகிறேன்.
சொந்த ஊர் கொளத்தூர். வீரப்பன் ஏரியாங்க. கொஞ்சம் பாத்து பேசுங்க.
http://blog.nandhaonline.com அப்படீங்கற வலைப்பூல எழுதிட்டு இருக்கேன்.
இன்னும் என்னைப்பத்தி பல விஷயங்களை தெரிஞ்சுக்கத்தான் போறீங்க. அதனால
இப்போதைக்கு அப்பீட் ஆகிக்கறேன்.
நட்புடன்,
நந்தா
வணக்கம்.என்னைப் பற்றி சொல்லிக்கொள்ள பெருசா ஏதுமில்லை.
பா.க.ச பயமா?
எல்லோரும் இங்கிட்டுதான் இருக்கோம் ;) கவலை படாதீங்க பாய் ;)
--
ப்ரியமுடன்,
ப்ரியன்.
பெயர்: நிலாரசிகன்
கூப்பிடு பெயர்கள்: நிலா,நிலன்,நிலவன்
சொந்த ஊர்: நடுவைக்குறிச்சி.
வேலை செய்யும் ஊர்: சிங்கார சென்னை
தொழில்: கணிப்பொறி மென்பொருளாளர்
படித்தது: எம்.ஸி.ஏ.
பிடித்தது: கவிதைகள்,நண்பர்கள்,இசை,தமிழ்,தாய்.
என்ன இருந்தாலும் கொஞ்சம் பயமா தான இருக்கு.
On 8/21/07, Jazeela Banu <sjaz...@gmail.com > wrote:
On 8/21/07, யெஸ்.பாலபாரதி <kuil...@gmail.com > wrote:வணக்கம்.என்னைப் பற்றி சொல்லிக்கொள்ள பெருசா ஏதுமில்லை.
ரொம்ப தன்னடக்கம்தான்! :-)
என்னைப் பற்றி...
பெயர் : அனிதா
வசிப்பிடம் : பெங்களூரு
சொந்த ஊர் : சென்னை
வேலை : மென்பொருள்
பிடித்த விஷயங்கள் : கவிதை எழுதுவது, புத்தகங்கள் படிப்பது.
பொழுதுபோக்கு : நண்பர்களோடு அரட்டை, வலைப்பூக்கள் படிப்பது.
இது தவிர நானும் என் Blogம் இந்த வலைக்கடலோரம் அமைதியா
வாழ்ந்துகிட்டிருக்கோம். நேரம் கிடைச்சா எட்டிப் பாருங்க...
http://idhazhgal.blogspot.com.
பிரியமுடன்
அனிதா
வணக்கம். வாழிய நலம்.
நான் ராஜா. நண்பர்களுக்கு (கேலியும் கிண்டலுமாக) காதல் ராஜா
தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறேன்.
வளர் இடம்: பழனி
வாழிடம்: சென்னை
உங்களோடு கலப்பதில் மகிழ்ச்சி. கேள்விகள் கேட்கலாம்.
காதலுடன்
ராஜா
On Aug 21, 6:17 pm, "Umanath Selvan" <umana...@gmail.com> wrote:
> பெயர்: திருமால்
>
> > பிறந்தது வளர்ந்தது: இராஜபாளையம்.
> > சென்னையில் ஆறு வருடம்
> > தற்போது பெங்களூரில் 2+ வருடமாக. (ஆக மொத்தம் 26 வயசாச்சு)
>
> > பிடித்தது: *வெறித்தனமான* வாசிப்பு,அடிக்கடி பேருந்து
> > பயணம்(சன்னலோரம்)
>
> பாத்துய்யா...
>
> --
>
>
>
> > விழியன்
> >http://vizhiyan.wordpress.com- Hide quoted text -
>
> - Show quoted text -
இருக்கிறது?' என்று!
- தபூ சங்கர்
வணக்கம் !வந்தனம்! சுஸ்வாகதம்!
பிறந்து வளர்ந்தது தேவதைகளின் ஊர்!
என் பெயரில் இருமுறை வெட்கம் வரும்!
பத்திரிகைகள் இணையதளங்களில் படைப்புகளை
தூவிவிட்டுட்டுருக்கேன்!
வசிப்பது இந்தியாவின் தோட்டநகரம்!
வாசிப்பது அப்பப்போ இணையவானொலில அறிவிப்பு !
விளம்பரப்படங்களுக்கும் குறும்படங்களுக்கும் குரல் கொடுப்பது தவிர சமையல்
சங்கீதம் அரட்டை!
..மத்தபடி
ரொம்ப சாதாரண சராசரிப்பெண்ணுங்க !
பண்புடன்
ஷைலஜா
On Aug 22, 11:01 am, "Jazeela Banu" <sjaze...@gmail.com> wrote:
> 100வது :-) சந்தோஷம்தானே?
>
> On 8/22/07, காதல் ராஜா <kaathalr...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > நான் எத்தனையாவது உறுப்பினரப்பூ....?- Hide quoted text -
தல, இது உனக்கே ஓவராத் தெரியல?????
ஜெய், அருள் எல்லாம் இல்லைங்கிற தைரியமா?
பொன்ஸ், ப்ரியன்: உதவி ப்ளீஸ்!
-மதி
யெஸ்.பாலபாரதி எழுதிய:
சொந்த ஊர்: புங்குடுதீவு, இலங்கை
இப்போதும் என்னை அறிமுகப்படுத்திக்கொள்வது: இலங்கையில் பிறந்து
இந்தியாவில் வளர்ந்தவள்
வாழ்நாளில் சென்னையில் இருந்த காலந்தான் அதிகம். என்னை உருவாக்கியதில்
பெரும்பங்கு சென்னைக்கே.
இப்போது வசிப்பது: மொன்ரியல், கனடா
மிச்சமீதியை இங்கே படித்துக்கொள்ளுங்கள்: (மனசில தைரியத்தை
வரவழைச்சுக்கிட்டு போங்க மக்கா)
http://mathy.kandasamy.net/musings/tamil-wiki-intro
-மதி
அப்பா & அம்மா வச்ச பெயர் : ஜெயக்குமார்
நானே வச்சுகிட்ட பெயர் : J K
வசிப்பிடம் : சென்னை
சொந்த ஊர் : நாமக்கல்
தொழில் : மென்பொருள் எழுதும் வேலை
வலைபதிவு : http://saralil.blogspot.com
பொழுது போக்கு : கவிதை படிப்பது, எழுதுவது(பயப்படாதீங்க, எப்பவாவது
எழுதுவேன்),
பி.கு: ஏம்பா, சின்ன பசங்களுக்காக எதாவது வைக்க கூடாதா?... பெரிய தலைங்க
எல்லாம் ஒன்னா சேந்து ஆட்டைய போட்டுகிட்டு இருக்கீங்க...
--
நட்புடன்,
J K
J K அறிமுகம்...
-----------------
பி.கு: ஏம்பா, சின்ன பசங்களுக்காக எதாவது வைக்க கூடாதா?... பெரிய தலைங்க
எல்லாம் ஒன்னா சேந்து ஆட்டைய போட்டுகிட்டு இருக்கீங்க...
பாமகன் அறிமுகம்...
-----------------
அப்பா & அம்மா வச்ச பெயர் : டினேஸ்
நானே வச்சுகிட்ட பெயர் : பாமகன்
பி. திகதி: 24 /10 /19.....
வசிப்பிடம் : கட்டார்
சொந்த நாடு : இலங்கை
தொழில் : பொதுச்செயளாலர்
பொழுது போக்கு : கவிதை படிப்பது, எழுதுவது, சமையல், பாடல்லும் இசையும்.
இழை அறிமுகம்: நந்தா, ஆசிப் மீரான்
வாழ்க்கை: சோகம் கலந்த சொர்க்கம்
பாமகன் அறிமுகம்...
மக்கா இவரைப் பார்த்து எல்லோரும் கத்துக்கிடுங்க.
உங்க பேர் பெரும்பேரா இருக்கிறதாலே நாங்க "பாமகன்"ன்னே கூப்பிடுறோம். சமையல் கலை
கைவந்த கலையாக இருக்கும்போது ஏன் தோற்றுப்போன காதலர் கட்சியிலே இருக்கிங்க.
இப்போவெல்லாம் காதல்ல ஜெயிக்க முக்கிய காரணியே சமையல் தெரிந்திருப்பது தான். அடுத்த
முறை காதலிக்க முயற்சிக்கும்போது உங்க காதலியிடம் உங்களுக்கு சமையக்கத் தெரியும்
என்பதைச் சொல்லி வைங்க.
தத்துவம் #101: சமையலைக் கொண்டு தையலை மையல் கொள்ள வைக்கலாம்.
என்றும் அன்புடன்,
ராஜா
தத்துவம் #101: சமையலைக் கொண்டு தையலை மையல் கொள்ள வைக்கலாம்.
பிடித்தது பிடிக்காதது : இன்னைக்கு பிடிப்பது நாளைக்கு பிடிக்காம
போயிடுது
தற்போது ; திருப்பூரில்
கவி(ஜ)தை எழுதும் முயற்சியில் உள்ளேன்
On Aug 21, 6:17 pm, "Umanath Selvan" <umana...@gmail.com> wrote:
> பெயர்: திருமால்
>
> > பிறந்தது வளர்ந்தது: இராஜபாளையம்.
> > சென்னையில் ஆறு வருடம்
> > தற்போது பெங்களூரில் 2+ வருடமாக. (ஆக மொத்தம் 26 வயசாச்சு)
>
> > பிடித்தது: *வெறித்தனமான* வாசிப்பு,அடிக்கடி பேருந்து
> > பயணம்(சன்னலோரம்)
>
> பாத்துய்யா...
>
> --
>
>
>
> > விழியன்
> >http://vizhiyan.wordpress.com- Hide quoted text -
கிறுக்குதல் என்வேலை
கவிஜ மட தலைமை சிஸ்யன். ( கவி மடத் தலைவரே மரத்தடில தந்த பதவி... யாரும்
போட்டிப்போடப்படாது)
-- ஐயப்பன்
100வது :-) சந்தோஷம்தானே?
On 8/22/07, காதல் ராஜா <kaath...@gmail.com > wrote:நான் எத்தனையாவது உறுப்பினரப்பூ....?
இருக்கிறது?' என்று!
- தபூ சங்கர்
சிவா ஆஆஆ..
நம்மள அண்ணன்னு சொல்லி வயசு அதிகம் பண்ணிட்டியேப்பா..
விழியனையே நம்ம மக்கள் பாப்பான்னுதான் கூப்பிடறாங்க..
ஏதாவதுன்னா பேசித் தீத்துக்கலாம். சரியா?
'ஏன் இந்தப் பூ நகர்ந்துகொண்டே
சொல்வதற்கென்று விசேஷங்கள் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை; சராசரி பெண்ணாக இருக்க இயலாதபடி இதயத்தினுள் நிறைய வேட்கை; நிதர்சனமான இலட்சியத்தை நோக்கிய சரியான பாதையில் தகுந்த நட்புகளுடன் பயணப்படும் பாக்கியசாலி.
யாழ்பாணத்தைச் சேர்ந்த ஆனால் புலம் பெயர்ந்த தமிழ் பெண்; இப்போது வாழ்வது நியூ யோர்க் மாநிலம்.
தமிழன்பினாலும் எழுத்தார்வத்தினாலும் தமிழை எங்கு கண்டாலும் ஓடிப் போய் கை குலுக்கும் ஆதீத ஆர்வம் கொண்டவள். புதிய கலித்தொகை என்ற கவியாக்கத்திலீடுபட்டிருப்பவள். சினேகம் என்ற ஒன்றிணைப்புக் குழுவொன்றை உருவாக்கி அதன் மூலம் புற்று நோய் , தொழுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கட்கு எங்களாலான உதவிகளைச் செய்வதற்காக இன்றும் முயன்று கொண்டிருப்பவள். தமிழ் பிரவாகம் , முத்தமிழ் ஆகிய குழுமங்களின் உறுப்பினர். முத்தமிழ் ஜாம்பவான் மஞ்சூர் அண்ணா மூலம் உங்கள் பண்புடன் குழுமம் பற்றி அறிந்தேன்; இணைந்தேன்.
அன்புடன்
சுவாதி
வருக சுவாதி..
உங்களைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும் இன்று உங்கள் அறிமுகம்
இன்னும் உங்களை அறியத்தந்திருக்கிறது. நன்றி.
--
view my site
http://agiilankanavu.blogspot.com/
காதல் ராஜாவா வாங்கையா வாங்க, நந்தாவ நிம்மதியா இருக்க விடமாட்டீங்களே... இங்கையுமா, இப்பசந்தோஷ்ம்தானே...
நந்தா எஸ்கேப்
பாமகன்
வாருக அன்புக்குயில், பண்புடனுக்கு வருகை தந்தமைக்கு மகிழ்ச்சி.
அன்புக்குயில் கொஞ்சம் கூவுங்களேன் கேட்டு ரசிக்கிறோம். ஆமா
பண்புடனுக்கு பறந்தா வந்தீங்க????????????
பாமகம்
லொல்லு அரசன்
வந்தோம்ல...
பெயர் : வெ. சித்தார்த் [வேற பேர் எல்லாம் இல்லைங்க]
வயது : 28
ஊர் : சென்னை
வசிப்பது : குவைத்
புத்தகம் படிக்க பிடிக்கும். அப்பப்ப ஒவ்வொரு பைத்தியம் பிடிக்கும்.
இப்போதைய பைத்தியம் பழைய தமிழ் கவிதைகள்.
பெயர் : வல்லத்தரசு
அழைப்பது : அரசு
சொந்த ஊர் : நாட்டுச்சாலை ( பட்டுக்கோட்டை அருகில்)
தற்பொழுது : சென்னை
தொழில் : கணினித்துரை
அன்புடன்
அரசு
வாங்க சித்தார்த் வாங்க....
நீங்க திருப்பாவை பாட்டுகளா போட்டு தாக்கும் போதே நினைச்சேன். இப்படி ஏதாவது இருக்கும்னு
அரசு புதிர் போடுவதில் வல்லவர் ப்ரியன்..
(அதனால்தான் வல்லத்தரசு என்றழைக்கப்படுகிறார் என்று வதந்திகள் உண்டு.)
அதை விடுவிப்பதில் வல்லவர்கள் முன்வரலாம்.
(சத்தியமா அது நானில்ல..) :-)
காதலுடன்
ராஜா
அற்புதமான காதலை மட்டுமல்ல; அதை உன்னிடம்
சொல்ல முடியாத அதி அற்புதமான மௌனத்தையும்
நீதான் எனக்குத் தந்தாய்.
- தபூ சங்கர்
இனிய வணக்கம்!!
அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி!
பெயர்: நா.ஆனந்த குமார்
வயது: இளவட்டம்
தொழில்: இயந்திரவியல் (பாவம்பா நாங்களெல்லாம்... கல்லூரியில் இருந்து
வேலை செய்யும் இடம் வரை... கோஎஜுகேஷன் என்றாலும் பயனில்லாததால்!!)
பொழுதுபோக்கு: கவிதை, கதை, கட்டுரை, சிரிப்பு (என்று நினைத்து) எழுதுவது.
அதில் நிஜமான ஒன்றை படித்துவிட்டால் நம் படைப்புகளை சிலகாலம்
நிறுத்திவிடுவது.
தமிழ் மேல் அதீத பாசம்!!
தமிழ் இருக்கின்ற இடங்களில் எல்லாம் என்னை அழைக்காவிட்டாலும் நானே
வருவேன்!!
அன்புடன்,
நா.ஆனந்த குமார்
On Aug 24, 11:03 am, "காதல் ராஜா" <kaathalr...@gmail.com> wrote:
> அரசு புதிர் போடுவதில் வல்லவர் ப்ரியன்..
> (அதனால்தான் வல்லத்தரசு என்றழைக்கப்படுகிறார் என்று வதந்திகள் உண்டு.)
>
> அதை விடுவிப்பதில் வல்லவர்கள் முன்வரலாம்.
> (சத்தியமா அது நானில்ல..) *:-)*
>
> On 8/24/07, அரசு <ar...@sella.it> wrote:
>
>
>
>
>
>
>
> >http://vallatharasu.blogspot.com
>
> > On Aug 23, 9:30 pm, அரசு <ar...@sella.it> wrote:
> > > வணக்கம் பண்பர்களே,
>
> > > பெயர் : வல்லத்தரசு
>
> > > அழைப்பது : அரசு
>
> > > சொந்த ஊர் : நாட்டுச்சாலை ( பட்டுக்கோட்டை அருகில்)
>
> > > தற்பொழுது : சென்னை
>
> > > தொழில் : கணினித்துரை
>
> > > அன்புடன்
> > > அரசு
>
> --
> காதலுடன்
> ராஜா
>
> அற்புதமான காதலை மட்டுமல்ல; அதை உன்னிடம்
> சொல்ல முடியாத அதி அற்புதமான மௌனத்தையும்
> நீதான் எனக்குத் தந்தாய்.
> - தபூ சங்கர்- Hide quoted text -
>
> - Show quoted text -
வாய்யா ஆனந்து..
மக்களே நல்லா கேட்டுக்கங்க!
சாதரண ராஜாவா சுத்திட்டிருந்த என்ன காதல்ராஜான்னு பேர மாத்தி ஒரு மார்க்கமா சுத்தவிட்ட பெருமை இவரத்தானுங்க சேரும்.
ஆனந்த்த்த்த்த்......................... வாங்கய்யா வாங்கய்யா..... ஒரே ஆனந்தம் உங்களை இங்கே பார்த்ததில் :-)