23 ஆகஸ்ட், 2009 7:44 am அன்று, Naresh Kumar<meet...@gmail.com> எழுதியது:
--
-----------------------------------------
http://angumingum.wordpress.com
தெரியாதது
யாரும் சொல்லித்தரவில்லை
தூத்துக்குடி துர்க்காவின்
துரோகம் இப்படித்தான்
இருக்குமென்று
இறந்து போன மாமாவின்
இரண்டாவது அத்தை
கட்டித் தொங்கவிடப்பட்டது
இன்றுவரை யாரும்
வாய்திறக்கவில்லை
பெரிய தம்பியின் சின்ன வீட்டு
விஷயம் பெற்றோருக்கே தெரியாது
வழக்கின் தீர்ப்பு
வாய்க்கரிசிக்கும் மிஞ்சாது என
வக்கீலுக்கு முன்னரே
எனக்குத் தெரிந்தது
கங்கை கொண்டான் பேருந்தின்
கடைசி இருக்கையில்
வாந்தி எடுக்கப்பட்டுள்ளதை
எச்சரித்தார் எவருமில்லை
நான் உட்காரும்வரை
எவரும் குறிப்பிடவில்லை
இசக்கியம்மன் சாமியாடி
வேண்டியவருக்கு மட்டும்தான்
குறிசொல்வாள் என்பதை
சபை நடுவே சப்தமில்லாக்
குசு போடும் நாசூக்கு
நவின்றார் எவர்
எனினும்
அசைபோட பசுவய்யா கவிதை
என்றிருந்தவனை
எல்லோரும் சொன்னார்கள்
இவன் எங்கே
உருப்படப் போறான் என்று
குமார்ஜி எழுதியது
நன்றி: http://jyovramsundar.blogspot.com/2009/08/blog-post_24.html
ஹைகூ : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள் : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள் : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral
புதுக்கவிதையும் பேச்சு வழக்கும்”சுதந்திரம்” என்ற தலைப்பில்இரவினிலே வாங்கினோம்இன்னும் விடியவே யில்லைஎன்ற கவிதையில் பேச்சு வழக்கின் முழு அமைதியைக் காண முடிகிறது. கோடிக்கணக்கான பாட்டாளி மக்களிம்ஏழ்மைக்கோலமும், பட்டினிக்கொடுமையும் நிழலுருவமாக நம்முன் காட்சி அளிக்கின்றன.
நாங்கள் சேற்றில்.கால் வைத்தால்தான்நீங்கள் சோற்றில்கை வைக்க முடியும்
என்று நகரத்தாரின் ஆடம்பர வாழ்வை இடித்துக்காட்டும் போக்கில் அமைந்த கிராமிய கவிதையிலும்பேச்சு வழக்கின் இறுக்கத்தை காணலாம்.பாரதியின் சர்வதேசியப் பார்வையை மீண்டும் தமிழ்க் கவிதைக்கு வழங்கியவர்களில் இன்குலாப் ஒருவர்.“கிரெளஞ்சவதத்திற்குக் கேள்விகள் இல்லையா? என்ற புதுக்கவிதையில் அமைந்த,இந்த குருச்சேத்திரத்தில் எங்கள் கைகள்ஆயுதங்களை கீழே போடவில்லைமாறாகஎங்கள் கைகளில்தான் ஆயுதங்கள் இல்லைஎன்ற வரிகள் விடுதலை பெறப் போராடும் ஒவ்வொரு நாட்டின் ஆத்ம தாகத்தையும் எதிரொளிக்கின்றன.கண்மூடும்போது கனவுகள் சுரண்டினகண்விழித்தபோது கனவான்கள் சுரண்டினர்இருட்டறையில் வேர்த்துகிடக்கும் நாம்இனிமேல் திறக்கப்போவதுசன்னல்களை யல்லகதவுகளையேஎன்ற கோ.கேசவனின் கவிதை ஆண்டாண்டுக் காலமாகப் புதிய கொத்தடிமையில் சிக்கித் தவிக்கும் இந்தியஆத்மாவின் குரலாக கேட்கிறது.இவ்வாறாக புதுக்கவிதைகளில் பேச்சு வழக்கின் பண்புகளும் காணப்படுகின்றன. யாரோ ஒரு தனிமனிதனின்ஒற்றைக்க் குரலாக இல்லாமல் வீழ்ந்த மானுடத்தின் எழுச்சிக் குரலாய் அவை எதிரொலி செய்கின்றன.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com