சாத்துக்குடி

0 views
Skip to first unread message

தமிழன் வேணு

unread,
Feb 17, 2009, 1:57:51 AM2/17/09
to பண்புடன்
ஆட்டோவிலிருந்து கையில் கட்டோடு இறங்கிய என்னை அபார்ட்மென்ட்காரர்கள்
ஏதோ, தலையானங்கானத்து செறுவென்ற நெடுஞ்செழியனைப் பார்ப்பது போல
விசித்திரமாகப் பார்த்தார்கள். அபார்ட்மென்ட் காரியதரிசி, பொருளாளர்
இருவரும் மனதுக்குள்ளே,’இவனுக்குக் கைக்கு பதிலா வாயிலே அடிபட்டிருந்தா
நல்லாயிருக்குமே,’ என்று மனதுக்குள்ளே எண்ணிக்கொண்டிருப்பார்கள் என்பது
எனக்குத் தெரியாதா என்ன? வீட்டுக்குள்ளே போய் கட்டிலில்
படுத்துக்கொண்டதுமே கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. ஒட்டுமொத்த சூளைமேடும்
ஆளுக்கு இரண்டு சாத்துக்குடியோடு விசாரிக்க வந்து விட்டது போலிருந்தது.

"அட!எழுந்திருக்காதீங்க! படுத்துக்குங்க!" என்று ஒருத்தர்.

"சும்மா கால்லே சக்கரத்தைக் கட்டிக்கிட்டு சுத்திட்டேயிருப்பீங்க!
திருஷ்டி தான் பட்டிருக்கும்!" இது இன்னொருத்தர்.

"உங்களுக்கு ரேவதி நட்சத்திரமாமே? சனிக்கிழமைக்கு சனிக்கிழமை அனுமாருக்கு
வெண்ணை சாத்துங்கோ! மீன ராசிக்கு கொஞ்சம் நேரம் சரியாயில்லே!" இது
இன்னொருத்தர். அவருக்கென்ன தெரியும், என் ராசி 1961-லிருந்தே
இப்படித்தான் என்று.

"எப்படி சார் ஆச்சு?" இது ஆரம்பத்தில் ரெஸ்ட் எடுத்துக்க சொல்லி அறிவுரை
கூறியவர்.

"ஒண்ணுமில்லே சார்! வழக்கம் போல ஹாரிங்டன் பிரிட்ஜிலே
போயிட்டிருந்தேனா...?"

"அடடா! த்சு த்சு!"

’யோவ், இன்னும் சொல்லவே ஆரம்பிக்கலைய்யா,’ என்று எரிந்து விழலாம்
போலிருந்தது. ஆனால் என்ன பண்ணுவது, விசாரிக்க வந்தவர்களாயிற்றே!

’முன்னாடி ஒரு லேடி சுவிஃப்ட்டிலே வேகமாப் போயிட்டிருந்தாங்களா. திடீர்னு
சடன் ப்ரேக் போட்டுட்டாங்க!"

"அட ராமா! அப்புறம்...?"

சுற்றும் முற்றும் கவனித்தேன். எல்லாரும் சொல்லி வைத்தாற்போல ஒரு கையைக்
கன்னத்தில் வைத்துக்கொண்டிருந்தார்கள். ரொம்பக் கவலையாம்!

"வண்டி மேலே மோதக்கூடாதேன்னு நானும் பிரேக் போட்டேனா,,ஸ்கிட் ஆகி பேலன்ஸ்
தவறி விழுந்திட்டேன்..."

"த்சு த்சு த்சு!"

"மெட்ராஸிலே பொம்மனாட்டிங்க வண்டியோட்ட ஆரம்பிச்சதிலேருந்து ஆக்ஸிடண்ட்
ஜாஸ்தியாயிடுத்து..." என்றார் மாமா.

"ஆவூன்னா பொம்மனாட்டி மேலே பழி போடுங்கோ!" என்று பிடரி சிலிர்த்து
எழுந்து கொண்டாள் மாமி. "நாங்களா மோட்டார் சைக்கிளைக் கண்ணு மண்ணு
தெரியாமா ஓட்டிண்டிருக்கோம்?"

மாமா தேவையில்லாமல் இங்கே வந்து பெண்களின் வண்டியோட்டுகிற உரிமையைப்
பற்றி சீண்டவும், சீதாப்பாட்டியின் சுவீகார புத்ரியான மாமிக்கு ரோஷம்
பொத்துக்கொண்டு வந்து விட்டது. நல்ல வேளை, மாமா அத்தோடு வாயைப்
பொத்திக்கொண்டார்! இல்லாவிட்டால் விஷயத்தை மாமி ரேணுகா சௌத்ரி வரைக்கும்
கொண்டு போனாலும் போயிருப்பாள்.

"இப்படித்தான் சார், ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே...," என்று அடுத்தவர்
ஆரம்பித்தார். "மஹாலிங்கபுரத்திலே நான் பாட்டுக்குப்
போயிட்டிருந்தேனா....?" என்று ஆரம்பிதததும், நான் என் மனைவியைப்
பரிதாபமாகப் பார்த்தேன்.

’இருட்டின பிறகு வீட்டுக்கு வரலாமென்று சொன்னேனே கேட்டியா? இப்படி எல்லா
பிளேடுகளும் ஒன்றாய் வந்து உபத்திரவம் செய்து கொண்டிருக்கிறதே?’ என்று
நான் கேட்க நினைத்ததை அவள் புரிந்து கொண்டாள்.

"இப்ப ஒண்ணுமில்லே அவருக்கு! ரெஸ்ட் எடுத்திட்டு, பிஸியோதெரபி பண்ணினா
சரியாயிடும்னு டாக்டர் சொல்லிட்டாரு," என்று பேச்சை மாற்ற நினைத்தாள்.
ஆனால், அவர்கள் விட்டால் தானே?

அவரவர் ஆளாளுக்கு அவர்களுக்கு வொயிட்ஸ் ரோடிலும், டெய்லர்ஸ்
எஸ்டேட்டிலும், ஈக்காடுதாங்கலிலும் ஏற்பட்ட விபத்துக்களை ஆதியோடந்தமாக
விவரித்துப் பேசி, எனக்கு ஏற்பட்ட விபத்தை விடவும் அவர்களுக்கு ஏற்பட்டது
தான் பெரிய விபத்து என்றும், அவர்கள் மயிரிழையில் உயிர் பிழைத்ததாகவும்,
எனக்கு ஏற்பட்ட அடியெல்லாம் ஒன்றுமேயில்லையென்றும், விபத்துக்குக் காரணம்
போக்குவரத்து நெரிசலா, இரண்டு சக்கர வாகனங்களா, கவனக்குறைவா என்று ஒரு
குடியரசுதின சிறப்புப் பட்டிமன்றமே நடத்தத் தொடங்கி விட்டிருந்தனர்.

இவர்களின் இம்சை போதாதென்று மாமிகள் வேறு, அவா அவா ஆத்துக்காரருக்கு
ஏற்பட்ட விபத்தைப் பற்றி, சித்ரா விஸ்வேஸ்வரனெல்லாம் பிச்சை வாங்குகிற
அளவுக்கு முகத்தில் பல்வேறு பாவங்களை மாற்றி மாற்றிக் காட்டி, அடவுகள்
பிடித்து என் மனைவியின் கழுத்தை அறுத்துக்கொண்டிருந்தனர்.
இவர்களிடமிருந்து தப்பிக்க எனக்கு ஒரே வழி தான் தெரிந்தது.

"வண்டி எப்படியிருக்கு?" என்று மாமா கேட்டபோது, நான் கண்களை மூடிக்கொண்டு
உறங்குவது போல நடிக்க ஆரம்பித்து விட்டிருந்தேன்.

"திருமங்கலத்திலே ரிப்பேருக்கு விட்டிருக்கு.." இது என் மனைவி.

"தூங்கிட்டாரோ?" ’பிறகென்ன, செத்தா போய் விட்டேன்?’

"ஆமாம்! நிறைய பெயின் கில்லர் ஊசி போட்டிருக்கு!"

"தூங்கட்டும்! தூங்கட்டும்! நல்லா ரெஸ்ட் எடுத்துக்கணும்! நிறைய ஜூஸ்,
கஞ்சி, பால் சாப்பிடணும். வெறும் வயித்திலே மாத்திரை கொடுக்காதீங்க!"

"ஓட்ஸ் கஞ்சி கொடு! ஒடம்புக்கு ரொம்ப நல்லது!"

"புழுங்கரிசிக் கஞ்சியும் நார்த்தங்காயும் கொடு! வாய்க்கு ருசியா
இருக்கும்!"

’டேய், ஏண்டா வயத்திலே அடிக்கறீங்க!’ என்று மனதுக்குள்ளே கருவினேன்.
நிறைய காரம் போட்டு, சமோசாவும் செனாவும் சாப்பிட வேண்டும் போலிருந்தது
எனக்கு.

சிறிது நேரத்தில் மாமாக்கள் கிளம்ப, மாமிகள் என் மனைவியிடம் குங்குமம்
வாங்கிக்கொண்டு கிளம்ப, வீடே அமைதியானது. கண்ணைத் திறந்து பார்த்தேன்.

"உங்களுக்கு சாத்துக்குடி ஜூஸ் பிழிஞ்சு கொண்டு வரட்டுமா?" என் மனைவி
கேட்டாள்.

"காப்பி கொடேன்!"

"ஜூஸ் சாப்பிட்டாத் தானே உடம்பு தேறும்?"

"சரி! கொடு!!" என்று கூறிவிட்டு தலைமாட்டில் கவனித்தேன். இரண்டு டஜன்
சாத்துக்குடிப்பழங்கள் என்னை பயமுறுத்திக்கொண்டிருந்தன.

தமிழன் வேணு

Shylaja Narayan

unread,
Feb 17, 2009, 2:11:56 AM2/17/09
to panb...@googlegroups.com
நோய்க்கு இடம்கொடு!
ரொம்ப இயல்பா  உங்க வலியையும் மறந்து நகைச்சுவையா எழுதி இருக்கீங்க!
 


 
2009/2/17 தமிழன் வேணு <venugopal...@gmail.com>

Naresh Kumar

unread,
Feb 17, 2009, 2:13:01 AM2/17/09
to panb...@googlegroups.com
வேணு இன்னும் நிறைய சாத்துக்குடி சாப்பிட்டு உடம்பை தேற்றுங்கள்!!!
 
சாத்துக்குடியை விட நீங்கள் எழுதியிருப்பது அதிக சுவையாக இருக்கிறது...
 
உங்கள் கட்டுரையைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு காமெடி ஞாபகத்திற்கு வருகிறது
 
"விபத்தில் அடி பட்டு மருத்துவமனையில்  கிடந்தவரிடம் பார்க்கச் சென்றவர்,
 
என்னங்க இப்டி ஆகிடுச்சே, உங்களுக்கு என்னங்க அடிக்கடி இது மாதிரி விபத்து நடக்குது?
 
அடிக்கடில்லாம் நடந்ததில்லீங்க, 10 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆச்சு, அதுக்கப்புறம் இப்பதான் இது மாதிரி நடக்குது....."
 
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்!!!!

மஞ்சூர் ராசா

unread,
Feb 17, 2009, 2:33:58 AM2/17/09
to panb...@googlegroups.com
இரண்டு சாத்துக்குடியோடு பாக்க வரலாம்னு நெனெச்சேன்.....
 
ம்ம்ம்.. உங்களுக்கு கொடுத்து வைக்கலெ.....

நந்தா

unread,
Feb 17, 2009, 3:44:39 AM2/17/09
to பண்புடன்
நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க போல.

lucky shajahan

unread,
Feb 17, 2009, 3:50:36 AM2/17/09
to panb...@googlegroups.com
நோயுற்றவர்களைப் பார்க்க தமிழகத்தில் இன்றளவும் நம் மக்கள் வாங்கிப்
போய்க்கொண்டிருக்கிறது இரண்டே இரண்டு பொருள்களைத்தான்..
 
சற்றே மத்யமர்கள் வாங்கிப் போவது ஹார்லிக்ஸ்
எல்லோரும் வாங்கிப் போவது சாத்துக்குடி..
 
ஐயா.. ஜூஸ் குடிச்சி சீக்கிரம் உடம்புத் தேறி நல்லபடியா வாங்க


 
On 2/17/09, நந்தா <media...@gmail.com> wrote:
நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க போல.





--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.

mahi

unread,
Feb 17, 2009, 3:51:41 AM2/17/09
to panb...@googlegroups.com
ஆமா வலிய அனுபவிச்சி எழுதிருக்கார்





2009/2/17 நந்தா <media...@gmail.com>

நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க போல.

சுமதி செந்தில்குமார்

unread,
Feb 17, 2009, 4:41:32 AM2/17/09
to பண்புடன்
என்ன சார் இது? அடிபட்டு வந்திருக்கிறவரைப் போய்ப் பார்த்து நாலு
வார்த்தை ஆறுதலா சொல்ல வந்தவங்களைப் போயி....இந்த வாரு வார்றீங்களே? :-))

ஆனாலும் இவ்வளவு நக்கல் கூடாது.

எஸ்.சுமதி

துரை.ந.உ

unread,
Feb 17, 2009, 7:06:49 AM2/17/09
to panb...@googlegroups.com
அய்யா
வீட்டுக்கு வந்துட்டீங்கன்னாலும் ஓய்வா இருங்க 
நான் விரைவில் சென்னை வ்ருவேன்

 
ஹைகூ     :http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்    :http://duraipathivukal.blogspot.com
கனவுகள்    :http://duraikanavukal.blogspot.com

தமிழன் வேணு

unread,
Feb 17, 2009, 8:14:29 AM2/17/09
to பண்புடன்
> வீட்டுக்கு வந்துட்டீங்கன்னாலும் ஓய்வா இருங்க
> நான் விரைவில் சென்னை வ்ருவேன்

தாராளமா வாங்க! அவசியம் சந்திப்போம்.

கணினியோட விசைப்பலகையைத் தொட்டதும் எல்லாம் காற்றாகப் பறந்து விட்டது
துரை அவர்களே! விட்டதெல்லாம் பிடிக்க வேண்டாமா? :-)) இப்போ படு உற்சாகமா,
ஆரோக்கியமா இருக்கேன்.

தமிழன் வேணு

On Feb 17, 5:06 pm, துரை.ந.உ <vce.proje...@gmail.com> wrote:
> அய்யா


>
> On 2/17/09, சுமதி செந்தில்குமார் <sumathi.sunth...@gmail.com> wrote:
>
>
>
> > என்ன சார் இது? அடிபட்டு வந்திருக்கிறவரைப் போய்ப் பார்த்து நாலு
> > வார்த்தை ஆறுதலா சொல்ல வந்தவங்களைப் போயி....இந்த வாரு வார்றீங்களே? :-))
>
> > ஆனாலும் இவ்வளவு நக்கல் கூடாது.
>
> > எஸ்.சுமதி
>

> --
> அன்புடன் துரை
> கவிதைகள்:http://duraikavithaikal.blogspot.com

mynah

unread,
Feb 18, 2009, 12:53:52 AM2/18/09
to பண்புடன்
இடுக்கண் வருங்கால் நகுக என்று ஐயன் சொன்னதை அப்படியே செயல்
படுத்துகிறீர்கள் போலும் வேணு.
பாவம் உங்க தங்கமணி. நீங்க பாட்டுக்குக் கண்ணை மூடிக்கிட்டுத்
தூங்கறாப்போல நடிச்சா, வரவங்களை அவங்கதானே
சமாளிக்கணும். இன்ஃபாக்ட், அந்த சாத்துக்குடிகளைப் பிழிஞ்சு அவங்களுக்கு
ஜூஸாக் குடுத்திடுங்க. தென்பு வேணுமே...

கெட் வெல் ஸுன்

மைதிலி

> "தூங்கிட்டாரோ?" ’பிறகென்ன,...
>
> read more »

Reply all
Reply to author
Forward
0 new messages