உலகத் தமிழ் நேசர்களே!
கடந்த வாரம் - அதாவது 2023 சூலை மாதம் 7, 8, 9 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு எனது கட்டுரை ஒன்றும் தேர்வாகியிருந்தது. எனக்கு மாறாக என் அம்மா புவனேசுவரி அவர்கள் கட்டுரையை முன்வைக்க தம்பி ஜெயபாலாஜி, சித்தி சியாமளா, தங்கை ஸ்ரீதேவி, மைத்துனர் ரசாக் ஆகியோர் உடன் இருந்தனர். வாழ்வில் முதன் முதலாக உலகளவிலான மாநாடு ஒன்றில் என் படைப்பு இடம்பெற்றது மிகவும் பூரிப்பாக இருந்தது! இந்த ஆய்வுக் கட்டுரையை எழுத ஊக்கமளித்து, முறையாக எப்படி அனுப்ப வேண்டும் என்பது வரை எனக்கு வழிகாட்டியாக விளங்கி இந்தப் பெருமைக்கு மூலக்காரணராக இருந்த உயர்திரு.இலக்குவனார் திருவள்ளுவன் ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியுடன் கட்டுரை இதோ உங்கள் பார்வைக்காக -
https://agasivapputhamizh.blogspot.com/2023/07/ilakkuvanar-thiruvalluvanin-kalaichollaakka-vazhikaatti.html