அப்படியே கிடைத்தாலும் அருந்திவிட்டு வருபவர்களை சர்வ பாதுகாப்பாக வீட்டில் கொண்டு போய் சேர்க்காமல் வழி மறித்துக் கேள்விகள் வேறு கேட்கிறதே காவல்துறை என்பது ஐந்தாவது பிரச்சனை.
இப்படி ஒன்றா இரண்டா இச்"சமூக சேவகர்கள்" சந்திக்கும் இன்னல்கள்?
எதற்காக? காசய்யா காசு. நீங்கள் முப்பதாண்டுகள் முட்டி தேய உழைத்த பிறகு எண்ணிப் பார்க்கும் மொத்த காசையும் மூன்றே மாதத்தில் சுளையாக எண்ணிப் பார்ப்பதென்றால்…
இரவாவது பகலாவது?
சுதேசியாவது விதேசியாவது?
தான் சீரழிந்தால் என்ன சமூகம் சீரழிந்தால் என்ன?
அப்பன் சாவைக்கூட சி.டி.யில் பார்த்தால் போயிற்று.
சம்பளத்தை விடவா சமூகம்?
இப்படி பிற துறையினர் சம்பாதிக்கவே இல்லையா?
இவர்கள் மட்டும்தானா?
உங்கள் கேள்வி நியாயம்தான்.உண்மை.
ஆனால் அவர்கள் எவரும் விடிய விடிய மதுபானக் கடைகளை தங்கள் "தியாகங்களுக்கு" ஈடாக திறந்து வைக்கச் சொல்லவில்லை.
" 'இரவு வாழ்க்கை' குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும்" எனக் கோரிக்கை வைக்கவில்லை.
நடு இரவு வரை தார்ச் சாலை போட்டு விட்டு ஓரத்தில் உறங்கும் பணியாளர்கள் மீது காரை ஏற்றிக் கொல்லவில்லை.
நம்மைப் பொறுத்தவரை ….
நாள் முழுக்க ஓடாய்த் தேய்ந்து பிய்ந்த செருப்புக்களைத் தைத்துக் கொடுக்கும் ஒரு உழைப்பாளியை விட…
பிறரது மலத்தைச் சட்டியில் சுமந்து சென்று தனது பாழாய்ப்போன வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கிற ஒரு துப்புரவுத் தோழனைவிட ….
இவர்கள் எந்த விதத்திலும் உயர்ந்தவர்களில்லை என்பதுதான்!!!!!!!!!!!!!!
ஏற்கெனவே இந்த மேதைகளுக்காக புகைக்கும் அறைகளைக் கட்டிக் கொடுத்துள்ள நிறுவனங்கள் அடுத்ததாக குடிக்கும் கூடங்களையும்(PUBS) கட்டிக்கொடுக்க இருப்பதாகத் தகவல்.
சபாஷ்.
ஊழியர்கள் கண்ணில் நீர் வழிந்தால்
எஜமானர்களுக்கு உதிரம் கொட்டாமலா இருக்கும்?
இக் கணிப்பொறி மேதைகளுக்கு இந்தியப் பொருளாதாரம் குறித்துத்
தெரிந்திருக்கிறதோ இல்லையோ…
ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் அத்துப்படி.
உள்ளூர்ச் சேரிகளில் உயிரோடு கொளுத்தப்படுவது தெரிகிறதோ இல்லையோ….
ஐரோப்பிய நாடுகளது பிரச்சனைகளை அலசி ஆராய்வதில் அசகாய சூரர்கள்.
வெளியில்தான் ஆட்டம் என்றில்லை. உள்ளுக்குள்ளும் அப்படித்தான் என்பதைப் பறைசாற்ற பாலியல் வன்முறைகளை விசாரிக்கவென்றே இருக்கின்ற REDRESSEL….மற்றும் OMS BUD போன்ற குழுக்கள்
இறுதியாக ஒன்றே ஒன்றுதான் சொல்ல இருக்கிறது.
குடிக்கட்டும்…
கும்மாளமிடட்டும்…
இரவு பகல் பொழுதுகள் புரிபடாமல் உடற்கூறின் தன்மைகள் சிதைந்து
கடவுள் பாதி - மிருகம் பாதி ஆளவந்தான்களாய் அலையட்டும்.
அது ஒரு கட்டம் வரை அவர்களது பிரச்சனை.
ஆனால் அவர்களது வளாகத்தைத் தாண்டி வீதிக்கு வரும்போது அது சமூகத்தின் பிரச்சனை.
மேற்கத்திய நாடுகளின் மனிதர்கள் எந்தெந்த வேளைகளில் கழிப்பறைக்குச்
செல்கிறார்கள்…..வெளிநாட்டுப் பயணங்களின் போது வெளியே தள்ளும் கழிவுகளுக்கான பணத்தை எப்படி முன் கூட்டியே செலுத்துவது…
போன்றவற்றிற்குக் கூட Pரொக்ரம்மிங் செய்து கொடுக்கும் நம் கணிப்பொறி மேதைகளுக்குச் சொல்ல வேண்டிய செய்திகளும் சிலதுண்டு.
அதுதான்:
முதலில் சகல துறைகளிலும் உள்ள உழைப்பாளிகள் எவரை விடவும் தாங்கள் உயர்ந்தவர்களில்லை என்பதை உணரட்டும்.
அடுத்து சம்பளம் மட்டுமே சமூக மரியாதைக்கான தகுதிகளில் தலையாயது என்கிற மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடட்டும்.
சமூகத்தின் சகல மனிதர்களையும் தங்களது சக மனிதர்களாய் நேசிக்கக் கற்றுக்
கொள்ளட்டும்.
சுதந்திரம் என்பது பிற மனிதரது மூக்கின் நுனியைத் தொடாத வரைதான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.
இப்படி மக்களிடம் கற்றுக்கொள்ள அநேகம் இருக்கிறது அவர்களுக்கு.
கற்றுக் கொள்ள மறுத்து அடம் பிடிக்கிறபோது
மிகச் சரியானதொரு சந்தர்ப்பத்தில்
சமூகமே கற்பிக்கும்.
இந்த ஞாநிக்கும் பாமரனுக்கு வேறு வேலை இல்லை. பத்தி பத்தியாய் எழுதுவது தவிர
ஒரு முறை நீயா நானாவில் ஞாநி ஐ.டி காரர்களை பார்த்து கேட்டார் 'இதே 50000 சம்பளத்தை மாதா மாதம் நான் தருகிறேன். இவர்கள் எல்லாம் மலம் அள்ள தயாரா என்று கேட்டார்'.
ஆகா, ஞாநிக்கு தான் என்ன ஒரு சமூக அக்கறை என்று நினைத்த போது, எதிர்ப்புறம் இருந்த ஒருவர் ஞாநியை பார்த்து 'நான் உங்களுக்கு மாதா மாதம் 60000 ரூபாய் கொடுக்கிறேன். நீங்கள் அள்ளுகிறீர்களா?' என்று கேட்ட போது ஞாநி எனக்கு அதெல்லாம் பழக்கமில்லை. என்னால் முடியாது என்றார்
அப்போது அங்கே கிழிந்தது ஞாநியின் முகத்திரை
பாமரனும் அது போலவே தான். இந்த ஒரு 'பப்' விசயத்தை இன்னும் எத்தனை காலம் தான் பேசுவாரோ தெரியவில்லை. ஐ.டி காரர்கள் என்ன மாதிரியான வேலை பார்க்கிறார்கள் என்பதை வெளியில் இருந்து விமர்சனம் செய்வது எளிது. மஞ்சள் காமாலை கண்ணுக்கு எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியும்
முதலில் சகல துறைகளிலும் உள்ள உழைப்பாளிகள் எவரை விடவும் தாங்கள் உயர்ந்தவர்களில்லை என்பதை உணரட்டும்.
அடுத்து சம்பளம் மட்டுமே சமூக மரியாதைக்கான தகுதிகளில் தலையாயது என்கிற மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடட்டும்.
சமூகத்தின் சகல மனிதர்களையும் தங்களது சக மனிதர்களாய் நேசிக்கக் கற்றுக்
கொள்ளட்டும்.
சுதந்திரம் என்பது பிற மனிதரது மூக்கின் நுனியைத் தொடாத வரைதான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.
முதலில் சகல துறைகளிலும் உள்ள உழைப்பாளிகள் எவரை விடவும் தாங்கள் உயர்ந்தவர்களில்லை என்பதை உணரட்டும்.
அடுத்து சம்பளம் மட்டுமே சமூக மரியாதைக்கான தகுதிகளில் தலையாயது என்கிற மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடட்டும்.
சமூகத்தின் சகல மனிதர்களையும் தங்களது சக மனிதர்களாய் நேசிக்கக் கற்றுக்
கொள்ளட்டும்.சுதந்திரம் என்பது பிற மனிதரது மூக்கின் நுனியைத் தொடாத வரைதான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.
இப்படி மக்களிடம் கற்றுக்கொள்ள அநேகம் இருக்கிறது அவர்களுக்கு.
கற்றுக் கொள்ள மறுத்து அடம் பிடிக்கிறபோது
மிகச் சரியானதொரு சந்தர்ப்பத்தில்
சமூகமே கற்பிக்கும்.இது மிகச்சரிதான் ப்ரேம்
இதை நான் பாமரனின் பொறாமை என்று தான் சொல்வேன். நான் படிக்கும் காலத்தில் எப்படி இருந்தேனோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறேன். இன்னும் என் நண்பர்களும், சொந்தக்காரர்களும் அப்படியே தான் இருக்கிறார்கள். நான் நானாகவே தானே இருக்கிறேன்
அவர் சொல்வது எல்லா ஐ.டிக்காரர்களுக்கும் பொருந்தாது. ஒரு சிலரை வைத்து ஒரு ஒட்டு மொத்த துறையினரை குற்றம் சொல்ல முடியுமா?
பாமரனால் தோன்றும் பிம்பத்தை வைத்து 'எல்லா பத்திரிக்கையாளர்களும் மன நோயாளிகள்' என்று நான் சொல்லவா?
/////பாமரனால் தோன்றும் பிம்பத்தை வைத்து 'எல்லா பத்திரிக்கையாளர்களும் மன நோயாளிகள்' என்று நான் சொல்லவா?
////
சபாஷ்
நான் சென்னை பப்களுக்கு சென்றதில்லை. பெங்களூரில் ஒரு முறை போன போது அங்கே 70% மாணவர்கள் தான் இருந்தார்கள். அப்போது அவர்களை என்ன சொல்வது??
சென்னையில் தினம் வரும் வழியில் நெடுக டாஸ்மாக் கடைகள் திறக்கும் முன்பே அதற்கு முன் ஒரு கூட்டம் காத்திருக்கிறது. அவர்கள் எல்லாம் எந்த ஐ.டி துறையில் வேலை பார்க்கிறார்கள் என்று கேட்டு சொல்வாரா பாமரன்?
கலாச்சார சீர்கேட்டுக்கும் நாங்க தானாய்யா கிடைச்சோம்? போன முறை ஊருக்கு போன போது பின் இருக்கையில் இரு இளைஞர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
'எப்படிடா என்னால அவள மறக்க முடியும்? அவள தான் நான் முதன் முதலில் புணர்ந்தேன். அதுவும் அவள் வயதுக்கு வந்து ஒரு வாரத்திற்குள்'
நன்னா சொன்னிங்க ப்ரேம்.பப்புக்கு 99 சதவிகிதம்ஐடிகாராங்க மட்டும்தான் போறதாலா இருக்கிறது
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
ப்ரேம் , தகவல் தொழில்நுட்பத்துறை விமர்சனத்திற்கு உள்ளாவதில் நிறைய மனரீதியான சிக்கல்கள் இருக்கிறது.
சிலர் அல்லது ஒட்டமொத்தம் என்பதில் இல்லை கோளாறு புரியும் என நினைக்கிறேன்
On 4/25/08, KeN <jakey...@gmail.com> wrote:கென் கோடிட்டு குறிப்பிட்டுள்ளவற்றிற்கு பல ஐடி நண்பர்கள் இங்க இருக்கிங்க. ஐடி நண்பர்கள் அல்லாதவர்கள் பலர் இருக்க கூடும் . நீங்கள் உணர்ந்ததை பதிவுசெய்யுங்கள் .
உங்களுடன் படித்தவர்கள் எல்லோருமே உங்கள் நிலையில் பணிபுரியப்போவதில்லை.
அதே அதே.....
என் நண்பன் ஒருவன் அரசு பணியில் LDCயாக உள்ளான். வேறு சிலர் வெவ்வேறு தொழில்களில் இருக்கிறார்கள். வேலையே இல்லாமல் இருப்பவர்களும் உண்டு.
இதனால் நட்பிற்கு பாதகம் வந்ததாக எனக்கு தெரியவில்லை. அது அப்படியே தான் இருக்கிறது.
இன்னொரு வரியை விட்டுட்டேன்.
ஐடி அல்லாத நண்பர்கள் ஐடி நண்பர்களுடன் பழகியிருக்ககூடும். நட்புகொண்டிருக்கலாம் அந்த அடிப்படையில் எழுதுங்கள்
துறைச்சார்ந்த சீரழிவுகளில் முதலிடம் தகவல் தொழில் நுட்பத்திற்கு என்பதை தாங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள்( மத்திய மனித வளத்துறையின் ஆய்வு)
அக்காங், என்ன சீரழிவு என்று விளங்கவில்லை
குடிக்கனும் என்று நினைத்துவிட்டால் காசு இருக்குறவன் பப்பில் போய் குடிக்க போறான். காசு இல்லாதவன் கள்ளச்சாராயம் குடிக்கப்போறான்.
அதே போலத்தான் மற்றவையும்
என்னமோ ஐ.டி துறையில் எல்லாருக்கும் கூப்பிட்டு வாயில் ஊத்துற மாதிரி சொல்றீங்க
////குடிக்கனும் என்று நினைத்துவிட்டால் காசு இருக்குறவன் பப்பில் போய் குடிக்க போறான். காசு இல்லாதவன் கள்ளச்சாராயம் குடிக்கப்போறான்.////
அட ஒட்டு மொத்த சீரழிவுக்கும் தகவல் தொழில்நுட்பம்தான் காரணம் என்பதல்ல என் வாதம்.
டாஸ்மாக் எல்லாம் நீங்க போற இடமா அதுக்காகத்தான் நாங்க இருக்கோமே
ஐடி ல இருக்கிற ஆட்களில்தான் என் நட்பு வட்டாரம் நிறைய , மிக முக்கியமாக என்னைத்தன்னோட குழந்தையாக பாவிக்கிற ஒருத்தரும் ஐடிதான்.
ஒட்டுமொத்தமா சேறு பூசறது என் வேலையில்லை தவறுகளுக்கான வாய்ப்புகளும் வசதியும் இருப்பதால் மிக அதிக அளவில் சீரழிவும் நடக்கிறது .
மத்திய மனித வளத்துறையின் ஆய்வின்படி மனிதத்தன்மையே எல்லாவிதங்களிலும் குறைந்து போகிற ஆட்களாக மாறிக்கொண்டிருக்கிறவர்கள் ஐடி ஆட்கள்தானாம்.
இந்த மனிதத்தன்மைன்னு சொல்றது காதல் , காமம், குடும்ப உறவுகள் மற்றும் சில
நாட்டில் நடக்கும் பல சீரழிவுகளுக்கும் காரணம் த்தொ துறை சார்ந்தவர்கள் மட்டுமே காரணமென்று சொல்லி விட முடியாது
சாப்ட்வேர் வல்லுந்ர்களை சபிகாதீர்கள்
நாங்களும் மனிதர்கள் தான்
நாங்கள் வாங்கும் முழுசம்பள பணத்திற்கும்
அரசிற்கு வரிகட்டுகிறோம்....
நாங்கள் மேசைக்கு கீழே கீம்பளம்
வாங்குவது கிடையாது.....
எங்கள் அலுவலகங்களில் அரசு அலுவலகங்கள் போல்
வேலை நேரபலகை இல்லை
இந்தியா வேலை அமைப்பு சட்டத்தின்
சாதி,மதம் என்னும் கட்டத்தை
எங்கள் அலுவலகங்களில் உபயோபடுத்துவது இல்லை
எங்களுக்கு வெயிலின் அருமை தெரியாது
ஆனால் மன அழுத்தத்தின் வலி தெரியும்
எங்களுக்கு சம்பளம் அதிகம் என்று எண்ணுகிறோர்கள்
ஆனால் உங்களை போல் சாகும்வரை
ஓய்வு ஊதியம் இல்லை
மற்ற துறைகளால் இந்தியனின் அறிவு மதிப்பு
அந்நியனுக்கு தெரிந்ததைவிட
எங்களால் தெரிந்தது அதிகம்
எங்கள் அருமை உங்களுக்கு தெரியவில்லை
உங்களின் பொறமைபிடித்த கண்களுக்கு
நாங்கள் அந்நிய அடிமைகள் என்று எண்ணலாம்
குழந்தையின் மழலை பேச்சு தாய்க்கு புரியாதது
குழந்தையின் குற்றம் இல்லை
நாங்களும் மனிதர்கள் தான்