பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - அய்யப்ப மாதவன்

312 views
Skip to first unread message

பண்புடன் ஆண்டு விழா குழுவினர்

unread,
Sep 2, 2008, 1:09:18 AM9/2/08
to panb...@googlegroups.com
கவிஞர் அய்யப்ப மாதவன் - அறிமுகம் 
 

சிவகங்கை மாவட்டம்- நாட்டரசன்கோட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். கவிஞர் மீராவின் 'அன்னம்' பதிப்பகத்தின் மூலம் இலக்கியம் அறிமுகமாகி இலக்கியத்திற்குள் வந்தவர். முதலில் தமிழில் ஹைகூ கவிதைகளால் பாதிப்படைந்து 'தீயின் பிணம்' என்ற முதல் நூலை தான் சொந்த பதிப்பில் 'அன்னம்' பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டார்.
 
அதன் பிறகு ' மழைக்குப் பிறகும் மழை' என்ற நூலை 'அகரம்' வெளியீடாக கொண்டுவந்தார். பிறகு நவீன கவிதையின் தாக்கத்திற்குட்பட்டு அதுமாதிரியான கவிதைகள் எழுதத் தொடங்கி, ' நானென்பது வேறொருவன்' என்ற நூலை அகரம் வெளியீடாக கொண்டுவந்தார். இந்த நூல் நவீன தமிழ் கவிதை உலகில் அவருக்கு பரவலான கவனத்தைப் பெற்றுத் தந்தது. பிறகு வரிசையாக ' நீர்வெளி' என்ற நூல் ' அகரம்' வெளியீடாக வந்தது.
 
' பிறகொருநாள் கோடை'  என்ற கவிதை நூல் அவரின் மொத்த கவிதைகளின் தொகுப்பாகவும் பல புதிதான கவிதைகளுடனும் வெளி வந்தது. இந்த நூல் வந்தபொழுது ' இன்று' என்ற கவிதைக் குறும்படத்தையும் எடுத்து வெளியிட்டார். இது பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்சமயம் காலச்சுவடு பதிப்பகத்தின் வழியாக ' எஸ். புல்லட்' என்ற கவிதை நூல் வந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
 
இப்பொழுது சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். மொத்தம் இதுவரை எழுதிய ஏழு கதைகளில் நான்கு கதைகள் வெளியாகிவிட்டன. வருகின்ற சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி அவருடைய சிறுகதை தொகுப்பு ஒன்றும், கவிதைத் தொகுப்பு ஒன்றும் வெளிவரவிருக்கிறது. இது தவிரவும் நாவல் எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.
 
இவர் சினிமாத் துறையில் இயக்குனராகும் முயற்சியிலும் தொடர்ந்து இயங்கிக்கொண்டு அது சார்ந்த திரைக் கதைகளையும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

- கென் -

www.thiruvilaiyattam.com

--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்

"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"

முதலாமாண்டு நிறைவு விழா

http://panbudan.blogspot.com/

M.Rishan Shareef

unread,
Sep 2, 2008, 2:27:29 AM9/2/08
to panb...@googlegroups.com
என் இனிய நண்பர் திரு.அய்யப்ப மாதவன் அவர்களை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி கென்.

--
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk

Asif Meeran AJ

unread,
Sep 2, 2008, 3:57:36 AM9/2/08
to panb...@googlegroups.com
அய்யபப மாதவன் மற்ருமின்றி இன்னும் பல சிற்றிலக்கிய பத்திரிகைகளிலிருந்து
வித்தியாசமான படைப்பாளிகளை நம்க்காக அள்ளி வந்திருக்கிறார் கென்
தம்பியுடையான் படைக்குஅஞ்சான்னு சுமமவா சொன்னாங்க? :-)



பண்புடன் ஆண்டு விழா குழுவினர்

unread,
Sep 18, 2008, 1:44:54 AM9/18/08
to panb...@googlegroups.com
 மழைக்காலம்
- அய்யப்ப மாதவன்
 
தூறல் மழை அடைமழை வராத காலத்தில்
சுவரின் சன்னல் வழியே பொட்டுப் பொட்டாய்
சிதறிய போது பசி பொதிந்த உடல்
நிறைந்தது மழையின் ஞாபகங்களாய்
குடையற்ற பொழுதுகளில்
நீர் கரைத்து நீராய் சாலையில் ஓடியிருந்தேன்
சுமை அழுத்திய வருடங்களில்
பொத்து ஒழுகும் வானம்தான் ஆறுதல்
அதன் கண்ணீர் என் கண்ணீர்
ஏன் என்று தெரியாத வயது
வானம் போல் ஒழுகுவது
பிடித்திருந்தது
 
விரிந்த பொட்டல்களில்
யாருமற்ற ஒரு அநாதைச் சிறுவனாக
தெருக்களில் திரிகையில்
திடீரென உடைத்துக் கொள்ளும் வான்வெளி
இமைகளில் படர்ந்து உள்ளுக்குள்
பட்டாசு கொளுத்திப்போடும்
உடல் பிடித்து நடந்து போகும்
துளிகளுக்குள் மறையும் பொற்காலத்தில்
பொன்பொருள் நிறைந்தவனாவேன்
தின்று திரியும் மனிதக்கூட்டத்தில்
ஒன்றுமறியாச் சிறுவனாய்
ஒரு அபலையாக வெகுளியாக
மழையிடம் சினேகம் வைத்திருந்தேன்
மழை எனக்குள் பெய்வது
மழைக்குள் நான் நுழைவது
சகஜம்.
 

pandii durai

unread,
Sep 18, 2008, 2:52:04 AM9/18/08
to panb...@googlegroups.com

pandii durai

unread,
Sep 18, 2008, 2:59:50 AM9/18/08
to panb...@googlegroups.com
மன்னிக்க கடந்த மடலில் இணைப்பில் பிழை ஏற்பட்டுவிட்டது

சரியான இணைப்பினை இங்கு கொடுத்துள்ளேன்.
 


--
www.pandiidurai.wordpress.com
சிலர்தான் மாற விரும்புகிறார்கள்
மீதிப்பேர் மாற்றத்தைபற்றி சும்மா பேசவே விரும்புகிறார்கள்

பண்புடன் ஆண்டு விழா குழுவினர்

unread,
Sep 25, 2008, 1:36:47 AM9/25/08
to panb...@googlegroups.com
சும்மா வினையாய்
- அய்யப்ப மாதவன்

 
சும்மா போன் பண்ணியிருந்தான் ( ஒரு வேலையுமில்லாமல்)
சும்மா டாஸ்மாக்குக்கு போயிருந்தேன் ( காசில்லாமல்)
சும்மா அவனுக்கு போன் வந்தது ( அநேமதேயமாக)
சும்மா மயூரா ஓட்டலுக்கு வரச்சொன்னான் ( திட்டமில்லாமல்)
சும்மா அவனை பார்க்கப் போனோம் ( வெறுங்கையோடு)
சும்மா ஆட்டோவில் போனோம் ( காசு தராமல்)
சும்மா அவனை கைப்பேசியில் அழைத்தோம் ( ஓசியில்)
சும்மா அவன் எடுக்கவில்லை ( விளையாட்டாக )
சும்மா நாங்கள் கோபப்பட்டோம் ( எரிச்சலில்லாமல்)
சும்மா மயூராவின் பார் உதவியாளனை தொந்தரவு செய்தோம் ( தாட்சண்யமில்லாமல்)
சும்மா உதவியாளனும் தேடினான் ( நடிப்பாக)
சும்மா வெளியில் வந்தோம் (வீணாக )
சும்மா படிக்கட்டுகளில் இறங்கப் பார்த்தோம் ( பொழுதுபோக்காக)
சும்மா மூடியிருந்தது படிக்கட்டு வழி ( வெறுமையாக )
சும்மா லிப்டிக்காக காத்திருந்தோம் ( வேறு வழியின்றி)
சும்மா நின்றது கூட்டம் ( வெட்டியாக)
சும்மா லிப்டிக்குள் ஏறி விட்டோம் ( காரணமின்றி )
சும்மா இரண்டு பேர் சுமை தாங்காமல் வெளியே போயினர் ( ஏமாற்றமாக)
 
சும்மா நாங்கள் சிரித்துக்கொண்டோம்  ( மகிழ்ச்சியில்லாமல்)
சும்மா தரை வந்தது ( எதிர்பார்க்காமல்)
சும்மா வெளியேறினோம் ( களங்க்மில்லாமல்)
சும்மா நண்பன் கோபப்பட்டு அலைய விட்டவனை திட்டினான்( கோபமில்லாமல்)
சும்மா பாருக்கு போனோம் ( வேடிக்கையாக)
சும்மா மனைவி பேசினாள் ( உண்மையாக)
சும்மா விசு வந்தான் ( பொறுப்பாக)
சும்மா ஃபுல் வாங்கினோம் ( காசு தந்து )
சும்மா அறைக்கு வந்தோம் ( எதிர்பார்ப்போடு)
சும்மா குடித்தோம் புகைத்தோம் ( பழக்கமாக)
சும்மா பேசினோம் பேசிக்கொண்டிருந்தோம் ( இயல்பாக)
சும்மா இரவு போய்க்கொண்டிருந்தது ( நிற்காமல்)

கென்

unread,
Sep 25, 2008, 1:57:07 AM9/25/08
to panb...@googlegroups.com
கவிஞர் அய்யப்ப மாதவனின் வலைப்பூ http://iyyappamadhavan.blogspot.com/

lucky shajahan

unread,
Sep 25, 2008, 2:25:55 AM9/25/08
to panb...@googlegroups.com
சும்மா சொல்லக்கூடாது..ரொம்பவே வித்தியாசமா இருக்கு இந்த கவிதை.

2008/9/25, கென் <jakey...@gmail.com>:
கவிஞர் அய்யப்ப மாதவனின் வலைப்பூ http://iyyappamadhavan.blogspot.com/
 


 
On 9/24/08, பண்புடன் ஆண்டு விழா குழுவினர் <panbu...@gmail.com> wrote:
சும்மா வினையாய்
- அய்யப்ப மாதவன்

 


--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.

jmms

unread,
Sep 25, 2008, 2:40:34 AM9/25/08
to panb...@googlegroups.com
சும்மா  ஒண்ணுமில்லாத விஷயத்தை கவிதையாவா?..( ஆச்சர்யமாக..)

lucky shajahan

unread,
Sep 25, 2008, 2:44:30 AM9/25/08
to panb...@googlegroups.com
ஒண்ணுமில்லாத கூட அட என சொல்ல வைப்பது கவிதையில்
தான் இயலும்

 
2008/9/25, jmms <jmms...@gmail.com>:
Reply all
Reply to author
Forward
0 new messages