நாளை கவிஞர் கண்ணதாசனின் பிறந்த நாள் (ஜூன் 24), கண்ணதாசனைப் பற்றி
தாங்கள் அறிந்த செய்திகளையும் , இணையத்தில் படித்தவைகளையும் இங்கே வந்து
கொட்டுங்கள்
என்றும் அன்ப்கலா
கணேஷ்
அவரை பற்றி சொல்லும் எல்லா செய்தியும் மிக பழையதாகவே இருக்க வாய்ப்புள்ளது.எனக்கு பிடித்த பாடல் ஒன்று உண்டு “ பிறக்கும் போதும் அழுகின்றாய்” என்ற பாடல்( இது கண்ணதாசனுடைய பாடல் தானே?)
இரவின் கண்ணீர் பனிதுளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையென சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்…இயற்கை சிரிக்கும்..
‘
அன்னையின் கையில் ஆடுவது இன்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்…. பெரும் பேரின்பம்..
பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒருனாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே
படம் : கவலை இல்லாத மனிதன்
பாடல் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடியவர் : சந்திரபாபு JP
வரிகள் : கண்ணதாசன்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
அன்பு நடமாடும் கலைக்கூடமே பாடலில் எல்லா வரிகளுமே மே என்று முடிந்திருக்கும்.
மே மாதத்துக்குள் பாட்டு வந்தாகணும்னு தயாரிப்பாளர் நச்சரித்ததால், நொந்து போய் எல்லா வரிகளுமே மே என்னும் எழுத்தில் முடித்ததாக சொல்வார்கள்.
பெரிய (!) கவியரசு கண்ணதாசன் அவர்களிடம் ஒரு படநிறுவனம் பாட்டு எழுதித் தர வேண்டியது. அவரும் அன்புடன் இசைந்திருந்தார். 1973-ம் ஆண்டு மே திங்கள் சிங்கப்பூரில் படமாக்க இருப்பதால் தவறாது முன்கூட்டியே எழுதித் தர வற்புறுத்தவே, கவியரசு சரியென்று சொன்னார்.. என்றாலும் வழக்கம் போல மறந்துவிட்டார்.. பட நிறுவனத்தாரோ பயணம் கிளம்பும் முன் ஒருமுறை மே மாதம் என்று நினைவூட்டி புறப்பட்டனர்.. பலனில்லாமல் போகவே, போய் இறங்கிய பின்பு மணிக்கொரு முறை மே மாதம்… மே மாதம் என்று நச்சரித்தனர்..
எரிச்சல் தாளாத கவிஞர் எழுதினார்…
“அன்பு நடமாடும் கலைக்கூடமே… ஆசை மழை மேகமே.. “
அவன்தான் மனிதன் எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த பிரபலப் பாடலின் அத்தனை அடிகளுமே “மே” என்றுதான் முடியும்…!
சார் இந்த பாட்டு எழுத உந்துதலா எது இருந்தது அவருக்கு?
--
//* ஆடுக்குட்டி முட்டையிட்டு - கவிஞரின் வரிகளுக்கே(பெரும்பாலான பாடல்களுக்கு) வி.ரா. கூட்டணி இசை அமைக்க, இளையராசா என்ற புதிய இசையமைப்பாளர் இசைக்கு பாடல் வரிகள் எழுதச் சொல்லவே ஒவ்வாத செயல்களை பட்டியலிட்டாராம் கவிஞர்//
கண்ணதாசன் ஒரு படத்துக்குப் பாட்டெழுதினார்
.
'
எண்ணிரண்டு பதினாறு வயது - அவள்
கண்ணிரண்டில் காணுதம்மா காதல் கொண்ட மனது
!
பாடல் பதிவானதும் படத்தயாரிப்பாளரும் இயக்குநரும் கவிஞரிடம் கேட்டார்கள், என்ன கவிஞரே ! இப்படி எழுதிவிட்டீர்களே! கதா நாயகிக்கு (தேவிகா) இப்போது வயது பதினாறா? என்று.
கவிஞர் சொன்னார்
, பாட்டை நன்றாகக் கேள்! என்றார். அவர்களுக்குப் புரியவில்லை.
எண்ணி இரண்டு பதினாறு என்று தானே எழுதினேன் என்றார்!
.
-
என்கிற வரிகள் கல் மனதையும் கரையச் செய்யுமே.
"நினைக்கத் தெரிந்த மனமே - உனக்கு
"எனது கைகள் மீட்டும்போது
"எந்த ஊர் என்றவனே
நன்றி:- தினமணி
அந்த சிவகாமியின் மகனிடம் சேதி சொல்லடி பாடல் பஞசவர்ண கிளியா!
அது பட்டனத்தில் பூதம் இல்லையா? கே.ஆர்.விஜயா, சி.ஐ.டி.சங்கர் நடித்தது
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
பட்டணத்தில் பூதம் படத்தில் தான் இந்த பாடல்.
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of VJagadeesh
Sent: Friday, June 24, 2011 10:04 AM
To: panb...@googlegroups.com
Subject: RE: [பண்புடன்] கவிதைகளின் தலைமகன் கண்ணதாசன்
அந்த சிவகாமியின் மகனிடம் சேதி சொல்லடி பாடல் பஞசவர்ண கிளியா!
அது பட்டனத்தில் பூதம் இல்லையா? கே.ஆர்.விஜயா, சி.ஐ.டி.சங்கர் நடித்தது
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Sankar
Kumar
பஞ்சவர்ணக்கிளி என்னும் படத்துக்குப் பாட்டெழுதணும்.
எழுதினார்....படத்துக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு பாட்டை!
'அந்த சிவகாமி மகனிடம் சேதிசொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி!'
--
எதுக்கு படம் பஞ்சவர்ணகிளி என்பதற்காகவா?
சந்திரவதனா அவர்களின் தளத்தில் இப்பாடல் இருக்கிறது பட்டணத்தில் பூதம் என்று படத்தின் பெயரை போட்டு.
நீங்கள் சொன்ன காரணமும் பின்னூட்டம் ஒன்றில் இருக்கிறது.
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Sankar
Kumar
Subject: Re: [பண்புடன்] கவிதைகளின் தலைமகன் கண்ணதாசன்
தேடிப் பார்த்து 'லிங்க்'கறேன்.
--
நானு என்னடா வரவர டாக்க்டரு எதை சொன்னாலும் மறுப்பு சொல்லிக்கிட்டே இருக்காரேனு தோணிச்சி.
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Sankar
Kumar
Sent: Friday, June 24, 2011 10:18 AM
To: panb...@googlegroups.com
Subject: Re: [பண்புடன்] கவிதைகளின் தலைமகன் கண்ணதாசன்
.இல்லீங்க. நினைவிலிருந்துதான் தட்டச்சினேன்.
இவற்றை விட மட்டமான கெட்ட குணங்கள் என்ன இருக்கிறது?அப்ப ஏன் கோஹ்லிக்கு சப்போர்ட் பண்ணிங்க.
(இப்படிதான் ஒரு த்ரெட் மொக்கையை நோக்கி நகர்கிறது :))
வுடுங்க நாம கந்த வேல் போட்ட பதிவை படிப்போம்,
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Sankar
Kumar
Sent: Friday, June 24, 2011 10:25 AM
To: panb...@googlegroups.com
Subject: Re: [பண்புடன்] கவிதைகளின் தலைமகன் கண்ணதாசன்
இதென்ன புதுக்கதை!
முதல் தடவை ஆசாத் ஜியை சந்திச்சப்போ வைரமுத்துவை பற்றி ஒரு பேச்சு வந்தது.
என்னனு மறந்துட்டேன். ஆனா நான் சொன்னது வறுமையிலேதான் நல்ல நல்ல கவிதைகள், கதைகள் இலக்கியம் பிறக்குது.
வைரமுத்து நல்லா சம்பாதிச்சதாலதான் முன்பு அளவிற்கு அவரது கவிதைகள் இல்லையென்று சொன்ன நியாபகம்.
அப்போ ஆசாத் ஜி சொன்னது கண்ணதாசன் மிகப்பெரிய கோடிஸ்வரர் என்றார்.
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Kandavel
Rajan
Sent: Friday, June 24, 2011 10:24 AM
To: panb...@googlegroups.com
Subject: Re: [பண்புடன்] கவிதைகளின் தலைமகன் கண்ணதாசன்
கண்ணதாசன் பதில்கள்: அனுபவம் அசிங்கமாகத்தான் இருக்கும்
கண்ணதாசன் கோடீஸ்வரர் தான் ..ஆனா சொந்தப் படம் எடுத்து எடுத்து
போண்டியாயிட்டாரு. கவலையில்லாத மனிதன் எடுத்தாரு கவலையுள்ள மனிதனா
ஆயிட்டாரு. கடன் சுமையை கழிக்கிறதுக்குன்னே ரொம்ப பாட்டு எழுதுனார்.
இப்பவும் தியாகராய நகரில் இருக்கும் கண்ணதாசன் பதிப்பகத்துக்கு
போனீங்கன்னா , கண்ணதாசனோட அம்பாஸிட்டர் காரு சும்மா கம்பீரமா நிக்கும்.
இந்தப் பாட்டோட பல்லவியை மட்டும் சந்திரபாபு எடுத்துக் கொடுத்ததா படித்த
நினைவு , தவறாகவும் இருக்கலாம்
சூப்பரப்பு
K.V.மகாதேவன் :
இவரை எல்லோரும் செல்லமா மாமான்னு கூப்பிடுவாங்கலாம் , SPB மேடைகளில்
அடிக்கடி இவரைப் பற்றி பேசுவார்.
கண்ணதாசன் காங்கிரஸுக்கு போனதுக்கப்புறம், எம்.ஜி.ஆர் பாடல்களுக்கு சில
காலம் பாடல்கள் எழுத்வதைத் தவிர்த்தார்.
On Jun 24, 10:14 am, "VJagadeesh" <VJagade...@prouindia.com> wrote:
> இரண்டு வருடங்கள் முன்பே கண்ணதாசனைப்பற்றி குழுவில் மடல் போட்டிருந்தோம் என நினைக்கிறேன்.
>
> அப்போது நான் கண்ணதாசனின் பாடல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தபாடல் உயர்ந்த உள்ளம் படத்தில் வரும்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இந்தப் பாடலை சென்னை எலெக்ட்ரிக் ட்ரெயினில் கண் பார்வையற்ற ஒரு
முதிய்வர் பாடிகொண்டே யாசகம் செய்தார் . அந்த முதியவருக்காகவே கண்ணதாசன்
அந்தப் பாடலை எழுதியதாக நினைத்துக் கொண்டேன்.
0
காட்பாடிக்கு ஒருமுறை நண்பர் ஒருவரது புதுமனை புகுவிழாவிற்காகச்
சென்றிருந்தேன்.பிரியாணி போடுகிறார்கள் என்று அறிந்து கொண்ட குடிமகன்கள்
சிலர் ஏற்கனவே அடித்து விட்டு பிரியாணி சாப்பிட வந்திருந்தனர். அதில் ஒரு
குடிமகன் என்னிடம் வந்து, "அள்ளிக் கொடுத்து வாழ்ந்தவர் நெஞ்சம் ஆனந்தப்
பூந்தோப்பு" என்று பாடிவிட்டு குடிப்பதற்கு 100 ரூபாய் கேட்டான் :)
..
கூட இருந்து குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும் ...
On Jun 24, 10:27 am, "VJagadeesh" <VJagade...@prouindia.com> wrote:
> காற்று வாங்க போனேன் பாடல் கவியரசரா இல்லை வாலியா? யாரா இருந்தா என்ன. இது என்ன எஸ் பி பி குழுமமா மனோ பாட்டுக்கு தடை சொல்ல!
ஹா ஹா கண்ணதாசன் எழுதுனது தான்
0
கோபுரத்து கலசம் அதை ஆடைகள் மூட
கூந்தல் முதல் பாதம் வரை ஆசைகள் ஓட
இது வாலிபக் கவிஞர் ..:P
ஹ்ம் .. கேள்விப் பட்டதில்லை நன்றி கோகுல் சார்
சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு.
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு.
இப்பொழுதும் நான் அதே எண்ணத்துடன்தான் இருக்கிறேன். வறுமை மட்டுமே சிறந்த
படைப்பு உருவாகக் காரணம் கிடையாது. வறுமை தொடர்பான வலிகள் வேண்டுமானால்
உணர்வுபூர்வமாக அந்தப் படைப்பில் இருக்க வறுமையும் ஒரு காரணமாக
இருக்கலாமேயன்றி, வறுமையில்தான் சிறந்த படைப்புகள் உண்டாகும் என்பதை
ஏற்பதற்கில்லை :-)
இது வாலி!
சந்தேகந்தான். ஆத்தாடி மாரியம்மாவும் வாலின்னு போட்டிருக்காங்க. வாலி
திரைப்பாடல் தொகுப்பு - கண்ணதாசன் திரைப்பாடல் தொகுப்பு ரெண்டுலயும்
அவங்கதான் எழுதுனதுன்னு இடம்பெற்றிருக்கும் பாடல்கள் பத்துக்கு மேல்
இருக்கும். ஒரே குழப்பம்.
வாலி - புதியபூமி - எம்.ஜி.ஆர்.
> ஹா ஹா கண்ணதாசன் எழுதுனது தான்
கன்ஸ்,
கற்று வாங்கப் போனேன் - கண்ணதாசன் கெடையாது, வாலி.
On Jun 24, 10:56 am, ஆசாத் <banua...@gmail.com> wrote:
> > சின்னவளை முகம் சிவந்தவளை
>
> வாலி - புதியபூமி - எம்.ஜி.ஆர்.
வந்தாராம் வந்தாராம் சீமத் துரை ஹா, வாங்க அண்ணாத்த :)
கண்ணதாசனை குருவென்று கருதும் பிறைசூடன் அவர்கள் இன்று ஜெயா டிவியில்
சொன்னது
பட்டுக் கோட்டையார் இறந்ததும் அண்ணாத்துரை பாட்டுக் கோட்டை சரிந்தது எனக்
கூறினாராம்
On Jun 24, 10:55 am, ஆசாத் <banua...@gmail.com> wrote:
> > இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
> > நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
>
> இது வாலி!
>
>
சில இடங்களில் கண்ணதாசன் எனப் போட்டிருக்கிறார்கள் . ஒரே குழப்பம்.
சிவாஜி சர்க்கஸ்ல பார் வெளையாடுவாரு. அவரு பேரு சந்திரன். அவரச் சந்திக்க
ச.தேவி போவாங்க, அப்ப அங்க சர்க்கஸ்ல இருக்ற தேவிகா அவர சாயந்திர ஷோவுல
பார் வெளையார்ரப்ப பாக்கலாமுன்னு சொல்லி ச.தேவியத் திருப்பி
அனுப்பிருவாங்க.
அப்ப பாட்டு...
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் - அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
இரவிலே அவனைக் காண நானும் நடப்பேன் - அவன்
எல்லோரும் பார்க்கும்படி உயரத்தில் இருப்பான்
சிச்சுவேஷனுக்கு எழுதுறதுன்னா இது. கண்ணதாசன் பெரீ ஆள் சார்!
ஓ, நன்றி
On Jun 24, 10:56 am, ஆசாத் <banua...@gmail.com> wrote:
> > சின்னவளை முகம் சிவந்தவளை
>
> வாலி - புதியபூமி - எம்.ஜி.ஆர்.
டவுட்டா இருந்துச்சி அதனால தான் யார் எழுதுனதுன்னு போடல . தேன் தேன்
வர்ர மாதிரி வளை வளைன்னு வருது அதான் போட்டேன்.
இந்த வஞ்சி மகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
இரு கைகளினாலே கொய்யாப்பூ
என் உள்ளமெனும் சின்னஞ்சிறு பூவை
இவள் கிள்ளி கிள்ளி பறித்துக் கொண்ட பூவை
இதுவும் வாலிதான்
இந்தப் பாட்டுக்கு நான் ஊர் ஊரா அலைஞ்சது எனக்குத் தான் தெரியும் :)
’பூ வைத்தப் பூவைக்கு பூக்கள் சொந்தமா?’ன்ற பாட்டு, ஹீரோ ஒரு வக்கீலு.
கண்ணதாசன் பாட்ட முடிச்சுட்டாரு. அதுல ரெண்டு முணு வரிங்க.
ஆண்:
நான் தொடுப்பேன் காதல் வழக்கு!
பெண்:
போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள் - நான்
போதுமென்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்
அப்படி எழுதிட்டு. என்னவோ யோசிச்சு. இந்த வரிய மாத்தச் சொன்னா
பெண்:
போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள் - உங்கள்
பொன்மனத்தைச் சாட்சி வைத்து வெற்றிகொள்ளுங்கள்
அப்படீனு எழுதிக் குடுத்துட்டுப் போனாராம்.
வாத்தியார் கேட்டவொடனே கரெக்டா இந்தவரில கைய வெச்சாராம். ஆமாங்க ஏற்கெனவே
நீங்க இதுல கை வெப்பீங்கன்னு தெரிஞ்சு கவிஞர் ஆல்டர்னேட் வரியும்
குடுத்திருக்காருன்னாங்களாம். ரெகார்டானது பொன்மனத்தை சாட்சி
வெச்சதுதான்.
அதான் கண்ணதாசனோட எக்ஸ்பீரியன்ஸ். அவரு பெரீ ஆள் சார்.
சூப்பர் அண்ணாத்த , சுசிலா ஹிட்ஸ்னு வர்ர சிடில இந்த மாதிரி பாடுலாம்
இருக்கிறது. எனக்கு ஒரு கேசட்டுல தான் இந்தப் பாட்டு கிடைச்சது.
கன்ஸ்,
ஹீரோ நிழல்கள் ரவியோ?
ஆயிரத்தில் ஒருவனுக்கு ஒரு பாட்டு எழுதுறப்போ , வாலி வளைச்சு வளைச்சு
வரிகள் எழுதுனாராம். ஆனா பாருங்க எம்.ஜி.ஆருக்கு திருப்தியே இல்லையாம் ,
கண்ணதாசன் கிட்ட எழுதச் சொல்லலாமான்னு எம்.ஜி.ஆர்ட்ட கேட்டாங்களாம்.
அப்போ கண்ணதாசன் காங்கிரஸ்ல இருந்தார் , சரி கேட்டு பாருங்கன்னு
சொல்லிட்டு போய்ட்டாராம். கண்ணதாசனிடம் சூழலை விளக்கியதும் , கார்ல
போகும் போதே கண்ணதாசன் சொல்லச் சொல்ல இராம.கண்ணப்பன் எழுதுனாராம்.
அந்தப் பாட்டு தான் அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்.
0
ம.பொ.சி மாதிரி , கண்ணதாசனும் தனக்கு உதவியாளர்களை வைத்திருந்தார்.
இவர்களது வேலை கவிஞர் சொல்லச் சொல்ல பாடல் வரிகளை எழுதிக் கொண்டே
வருவதாகும். காண்ணதாசனிடம் தமிழ்ப்பித்தன் , பஞ்சு அருணாச்சலம்
இராம.கண்னப்பான் ஆகிய மூவரும்
உதவியாளர்காக இருந்தனர். முதல் 300 பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள்
எல்லாம் கவிஞர் சொல்லச் சொல்ல இந்த உதவியாளார்கள் எழுதப்பட்டவை தான்.
மோகன்
Movie : தாம்பத்யம் ஒரு சங்கீதம்
மோகன் , சுலோச்சனா
மாப்பு .. இந்த மாதிரி பாட்டுலாம் இருக்காதுன்னு சொல்லவந்தேன்
சூப்பர் கேள்விப்பட்டதில்லை :)
பொன்மன செம்மலை புண்பட செய்தது யாரோ? அது யாரோ?
இந்தப் பாட்டு கண்ணதாசனான்னு கரெக்டா தெரியாது
ஆனா இப்படிக் கேள்வி கேக்குற மாதிரி கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எல்லாமே
செம ஹிட் லிஸ்ட் வச்சிருக்கேன் , அப்புறமா அனுப்புறேன்
நானொலிக்கும் பேச்சுக்குள் அங்கு மிங்கும்
. நற்றமிழின் சொல்லாடல் வேண்டி யன்று
வானொலியின் அருகாமை பால பாடம்
. வந்ததெனச் சொன்னாலும் குற்ற மில்லை!
ஏனொலித்த திப்பாடல் என்றெண் ணாமல்
. என்றென்றும் அழகியலில் நீந்தி நெஞ்சில்
தேனொலிக்கும் கவியரசு நீயு ரைத்துத்
. தெரிவித்த இலக்கியத்தில் வாழ்ந்த துண்டு!
அத்திக்காய் அரிச்சுவடி சொல்லித் தந்தாய்
. அவள்பறந்து போனதையும் பார்க்க வைத்தாய்
முத்தத்தில் மோகத்தில் மூழ்கி நின்றாய்
. முக்கண்ணர் நாகத்தை நீதி கேட்டாய்
சித்தத்தில் வேதாந்தம் வேண்டி யன்று
. சீராறு கட்டளைகள் பாடி வைத்தாய்
எத்திக்கில் உன்பாடல் செல்ல வில்லை
. என்றுன்னைப் பேசாத நெஞ்ச மில்லை
எல்லைகள் திரையுலகில் மட்டு மில்லை
. எழுதியவை இவையென்ற எல்லை யில்லை
சொல்லுக்குள் பொய்யுரைகள் கொண்ட தில்லை
. சோகத்தை எழுதாமல் விட்ட தில்லை
கல்லெறிந்து வைத்தாலும் தமிழைத் தானே
. கவிதைகளாய் எறிந்திட்ட சிந்தை செய்கை
இல்லையொரு திரைக்கவிஞன் இங்கே யின்று
. இவரைப்போல் என்றுரைத்தால் பொய்யாய்ப் போமோ?
http://www.puratchithalaivar.org/tamil/special-pages/kannadhasan/
தேடிவந்த மாப்பிள்ளைல,
’பூ வைத்தப் பூவைக்கு பூக்கள் சொந்தமா?’ன்ற பாட்டு, ஹீரோ ஒரு வக்கீலு.
கண்ணதாசன் பாட்ட முடிச்சுட்டாரு. அதுல ரெண்டு முணு வரிங்க.
On Jun 24, 12:07 pm, Gokul Kumaran <gokuldu...@gmail.com> wrote:
> ஆசாத்ஜி,
>
> இது மாட்டுக்கார வேலன்.
>
> ஐ லவ் யூ
> ஐ லவ் யூ
> ஐ லவ் லவ் யூ
அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது மெல்ல எழுது.
அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது மெல்ல எழுது.
இது உன்னை நான் சந்தித்தேன்
சுரேஷ்-ரேவதி..!
இது யார் எழுதியதோ?
பட்டப்படிப்பு படிக்கத்தான் நினைத்திருந்தேன்
கொட்டும் மொழி மழையிற் குளிக்கத்தான் நினைத்திருந்தேன்
ஆனால் எட்டாம் வகுப்பை எட்டத்தான் என் பெற்றோர்
இட்டார்;பின் ஏழ்மையிலே என்னை உலகில் விட்டார்
கல்வியிலான் வாழ்வு கரைகாணாத் தோணியெனக்
கலங்கினேன்; கற்றோரைக் கண்டு கரையில் நின்றேன்.
- கண்ணதாசன்
எம்.ஜி.ஆரிடமிருந்து வேறுபட்டு, அரசியல் மேடைகளில் அவரை விளாச ஆரம்பித்தார் கண்ணதாசன்.
“பணத்தோட்டம்” படத்தில் ‘ஜவ்வாது மேடையிட்டு“ப் பாடலை கண்ணதாசன் எழுதியிருந்த நேரம்.
“செம்மாதுளை பிளந்து தா தா தா” என்பது சரணத்தின் கடைசி வரி. “இப்போதுதான் எம்.ஜி.ஆருக்கு ‘தாத்தா பாடல்’ எழுதிவிட்டு வருகிறேன்” என்றாராம் கண்ணதாசன்.
தன்னுடைய கடைசி படம்வரை இளம் கதாநாயகிகளுக்கு ஜோடியாக நடித்த எம்.ஜி.ஆருக்கு வயதாகி விட்டது என்று 1962-63-ல் கிண்டலடித்தார் கண்ணதாசன்
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!
- கவிஞர் கண்ணதாசன்
“காயமே இது பொய்யடா/ வெறும் காற்றடித்த பையடா/ மாயனாராம் மண்ணு குயவன் செய்த/ மண்ணு பாண்டம் ஓடடா” என்று சித்தர்கள் பாடிய ஞானப் பாட்டையும்,
“கத்தன் பிரிந்திடில் செத்த சவமாச்சு/ காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு/ எத்தனைப்பேர் நின்று கூக்குரலிட்டாலும்/ எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ?”- என்ற குணங்குடி மஸ்தானின் ஞானத் தத்துவத்தை எல்லாரும் புரிகின்ற மொழியில்
“பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?”
என்று பாடியிருப்பான்.

“இரவுக்கு ஆயிரம் கண்கள்,
பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள்,
உறவுக்கு ஒன்றே ஒன்று”
பிரான்ஸிஸ் வில்லியம் போர்டிலோன் (Francis William Bourdillon) என்ற ஆங்கிலக் கவிஞனின் கவிதையிலிருந்து முதல் பத்தியிலிருந்து இரண்டு வரிகளையும் இரண்டாம் பத்தியிலிருந்து இரண்டு வரிகளையும் எடுத்து (இளந்தலைமுறையினருக்கு புரியும்படி சொல்லவேண்டுமெனில் ‘சுட்டு’) அழகுற தன் பாடலில் கோர்வையாக கையாண்டிருப்பான். அந்த ஆங்கிலக் கவிதை இதுதான் :
The night has a thousand eyes,
And the day but one;
Yet the light of the bright world dies
With the dying sun.
The mind has a thousand eyes,
And the heart but one:
Yet the light of a whole life dies
When love is done.
திருமூலரின் திருமந்திரத்தில் காணப்படும் இந்த வாழ்க்கை சித்தாந்தத்தை பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதற்கு கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.
“அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே” என்று பட்டினத்தார் பாடியதை இரண்டிரண்டு வார்த்தைகளாய் மாலையாய் தொடுத்திருப்பான் கவிஞன்.
வீடுவரை உறவு/ வீதிவரை மனைவி/ காடுவரை பிள்ளை/ கடைசிவரை யாரோ?
தொட்டிலுக்கு அன்னை/ கட்டிலுக்குக் கன்னி/ பட்டினிக்குத் தீனி/ கெட்டபின்பு ஞானி – என்ற வரிகளை கேட்கையில் கண்ணதாசனின் அனுபவப் பாடம்தான் நமக்கு நினைவில் வரும். கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்று சொல்வதைப்போல, கெட்ட பின்புதான் கண்ணதாசனுக்கு ஞானமே பிறந்தது.
இடை ஆராய்ச்சியில் கண்ணதாசன் ‘முனைவர்’ பட்டம் பெற்றவர் என்று சொல்ல வேண்டும்.
“நாடகம் ஆடும் இடையழகு” என்றும் “சின்னக் கொடியிடை என்னைப் பிடியென ஆடும் அழகென்ன” என்றும் விதவிதமான கற்பனையைக் கலந்து விருந்து படைப்பார். சொல்லவரும் கருத்துக்களில் ஒரு நளினமிருக்கும்; ஆபாசம் இருக்காது.
விஷயங்களை விரசம் கலக்காமல்; சூசகமாக; சர்க்கரை கலந்த சூரணமாகத் (Sugar Coated pills.. என்பார்களே) தருவதில் கண்ணதாசன் கில்லாடி மட்டுமல்ல பலே.. பலே.. கில்லாடி!!.
‘எடைக்கு எடை’ நாணயம் கொடுப்பதுபோல் இதற்காகவே இவருக்கு ‘இடைக்கு இடை’ ஏதாவது சன்மானம் கொடுத்திருக்கலாம்.
‘தடியிடை’ எந்தக் கவிஞனுக்கும் பிடிக்காது போலும். கவிஞன் ‘மெல்லிடை’ என்றான்.‘கொடியிடை’ என்று சொல்லிப் பார்த்தான். திருப்தி இல்லை. இன்னும் சற்று மெலிய வைத்து ‘நூலிடை’ என்றான். ஊஹூம் அவன் எதிர்பார்த்த ‘எஃபெக்ட்’ கிடைக்கவில்லை. கடைசியில் “இடையே இல்லை” என்று சொல்லி விமோசனம் அடைந்துக் கொண்டான்.
நடையா இது நடையா – ஒரு
நாடகமன்றோ நடக்குது
இடையா? இது இடையா? – அது
இல்லாததுபோல் இருக்குது.
என்ற கண்ணதாசனின் பாடல் கலக்கலான உதாரணம். (இடையே இல்லாவிட்டால் பி.சி.சர்க்கார் மேஜிக் -ஷோவில் காட்டுவதுபோல் உடல் வேறு, கால் வேறாக அல்லவா போய்விடும் என்றெல்லாம் கேள்விகள் கேட்டு என்னைப் படுத்தக்கூடாது)
மனுஷன், இடியுடன்-மின்னலை இணைத்து பாடியிருக்கிறாரோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் இடையுடன்-மின்னலை இணைத்து நிறைய பாடியிருக்கிறார்.
“இல்லை என்று சொல்வதுந்தன்
இடையல்லவா – மின்னல்
இடையல்லவா”
என்ற வரிகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மின்னல் வெட்டினால் கண்கள் கூசும் அல்லவா? அப்படியொரு மின்சார வெட்டாம், அந்த இடையில்.
இடையின் மீது கரிசனம் முற்றிப் போய் கவிஞருக்கு சில சமயம் ‘கிலி’ தொற்றிக் கொள்ளும். இடையை இவ்வளவு மெல்லியதாக எழுதி விட்டோமே, ஒடிந்து விட்டால் என்னவாகும் என்ற பயம் ஏற்பட்டுவிடும். அடுத்த வரியில் அவரே அதற்கு ‘சமாளிபிகேஷன்’ செய்து ‘சால்ஜாப்பும்’ கூறிவிடுவார்.
“ஒடிவது போல் இடை இருக்கும்” என்ற கேள்வி பிறக்க “இருக்கட்டுமே!” என்ற பதிலும் தொடர்ந்து வரும். நாயகி நடந்து போனாலே கவிஞருக்கு வெலவெலக்கத் தொடங்கி விடும்.
“மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்!
முல்லை மலர் பாதம் நோகும்-உந்தன்
சின்ன இடை வளைந்தாடும்
வண்ணச் சிங்காரம் குலைந்து விடும்!”
என்ற தன் பயத்தை வெளிக்காட்டி விடுவார். நாயகி ‘ஸ்லோமோஷனில்’ நடந்து போவதுதான் கவிஞருக்கு பிடிக்கும் போலும். வேகமாக நடந்தால் ஆபத்து என்று அபாயச் சங்கு முழங்குகிறார்.
இந்த ‘இடை’ சமாச்சாரங்களைத் தொடங்கி வைத்தது கம்பனா அல்லது அவனுக்கு முந்திய கொம்பனா என்று சரியாக சொல்லத் தெரியவில்லை.
“இழைந்த நூலினை மணிக்குடஞ்
சுமக்கின்ற தென்னக்
குழைந்த நுண்ணிடைக் குவியளா
வனமுலைக் கொம்பே”
என்கிறார் கம்பர். “மணிக்குடங்களை தாங்க இயலாமல் வளையும் கொடிபோல உன் இடை இருக்கிறது என்று திருவாய் மலர்ந்தருள்கிறார்.
‘இடை’ என்று கேட்டுக் கேட்டு புளித்துப் போய் விட்டது, நாம் சற்று வித்தியாமாக எழுதிப் பார்க்கலாம் என்று முயன்று வம்பில் மாட்டிக் கொண்ட கவிஞர்களும் உண்டு.
“குறுக்குச் சிறுத்தவளே” என்றும் ”ஒல்லி ஒல்லி இடுப்பே/ ஒட்டியாணம் எதுக்கு?/ ஒத்த விரல் மோதிரம்/ போதுமடி உனக்கு…” என்றெல்லாம் மாற்று வார்த்தைகளைப் போட்டு மகிழ்ந்துக் கொண்டார்கள்.
நயாகராவுக்கு, வயாகரா என்று எதுகை மோனை போட்டதைப் போல் “இடுப்பு” என்று முடியும் வரிக்கு “அடுப்பு” என்று “ரைமிங் வோர்ட்ஸ்” போட்ட பாடலாசிரியர்களை நினைத்தாலே எனக்கு கடுப்பு வருகிறது.
வைரமுத்து “இஞ்சி இடுப்பழகி” என்று ஏடாகூடமாக எழுதப் போய் தமிழ்மக்கள் அனைவருமே தொல்காப்பியர்களாக மாறி “இஞ்சி இடுப்பழகி”க்கு அருஞ்சொற்பொருள் தேட ஆரம்பித்து விட்டார்கள்.
இஞ்சியைக் கையிலேந்தி அவரவர் தங்கள் ஆராய்ச்சியின் முடிவை அறிவித்தார்கள். “இஞ்சியானது உருவத்தில் பெருத்தும் இடையில் சிறுத்தும் இருப்பதனால் இஞ்சி எடுப்பழகி” என்று கூறியிருக்கக் கூடும் என்று சில பிரகஸ்பதிகள் பிரகடனம் செய்தார்கள்.
இஞ்சியை தினந்தோறும் கரைத்துக் குடித்தால் இடையானது உடுக்கையைப் போன்று குறுகி விடும் என்று சித்தவைத்திய சிகாமணிகளாய் வேறுசிலர் வியாக்யானம் தந்தார்கள்.
வில்லங்கம் பிடித்த ஒரு பத்திரிக்கை விவகாரமான ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டு தாய்க்குலத்தின் ஒட்டு மொத்த கோபத்துக்கும் ஆளாகும் அளவுக்கு அந்த தமிழினக் கவிஞரை தாறுமாறாக மாட்டி விட்டது.
ரேஸில் ஓடுகின்ற குதிரை மிடுக்காக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக அதன் வாலுக்கடியில் இஞ்சியைச் செருகி விடுவார்களாம். அதனால் ஏற்படும் எரிச்சலைத் தாங்க முடியாத குதிரைகள் தாங்கித் தாங்கி நடக்குமாம். இது கேட்டு மாதர் சங்கத்தார் எப்படி கொதித்துப் போயிருப்பார்கள் என்பதை நீங்கள் கற்பனைச் செய்துக் கொள்ளலாம்.
கண்ணதாசனிடமிருந்து வெளிப்பட்ட ‘மூடுமந்திர’ நளின பாஷை மற்ற கவிஞர்களிடத்தில் இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது.
“எப்படி? எப்படி? சமைஞ்சது எப்படி?” மற்றும் “கட்டிப்புடி கட்டிபுடிடா” போன்ற பட்டவர்த்தனமான பாஷையில் வாலிபக் கவிஞர் வாலி கையாண்ட வார்த்தைகள் நம்மை முகஞ்சுளிக்க வைக்கிறது.
“மடி மேலே அழகு சிலை ,
இதழ் மேலே கனியின் சுவை,
இடை மேலே பருவ சுமை,
இது தானே இனிய கதை!”
என்ற கவிஞர் வாலியின் வரிகளில் விரசம் மேலோங்கி இருப்பதை நாம் காண முடிகிறது. தணிக்கைக் குழுவின் கத்தரிக்கோலுக்கும் ஆளாகியது.
“மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடா
சற்றே நிமிர்ந்தேன்
தலைசுற்றிப் போனேன்
அடடா அவனே வள்ளலடா”
என்ற வைரமுத்து பாடல் வரிகள் “பச்சை” என்று குற்றம் சொல்ல முடியாதென்றாலும் ஒரு விதமான “மைல்ட் ஷாக்” ஏற்படுத்தும் ரகம்தான்.
“அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?”
என்ற கண்ணதாசனின் பாடலில் “சின்ன இடை இருந்தும் என்னை என் தலைவன் வெறுத்து விட்டானா?” என்று தலைவி நம்மைப் பார்த்து கேட்கையில் நமக்கே அந்த பாத்திரத்தின்மேல் இரு இனம் புரியாத இரக்கம் ஏற்படுகிறது.
“யாருக்கு மாப்பிள்ளை யாரோ..
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ?”
என்று தலைவி பாடுவாள். கைப்பிடிக்க போகின்ற கணவன் எப்படி இருப்பானோ என்ற கவலை அவளிடத்திலிருந்து ஒவ்வொன்றாய் வெளிப்படும்.
“ஊரறிய மாலையிடுவாரோ..
இல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ..
சீர் வரிசை தேடி வருவாரோ..
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ..”
என்ற வரிகளில் “உள்ளத்தழகை பார்க்காமல், உடலழகை மட்டும் மோகிக்கும் கணவன் வாய்த்து விட்டால் நம் நிலைமை என்னாகுமோ? ஏதாகுமோ?” என்று நாயகி கவலையுறுகையில் நமக்கும் அவள் மீது பச்சாதாபம் ஏற்படுகிறது,
படிப்போர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற வார்த்தைகள்தான் ஒரு படைப்பாளிக்கு கிடைக்கக் கூடிய முழுமையான வெற்றி.
கண்ணதாசனின் மற்றொரு ‘மாஸ்டர் பீஸ்’ “அன்புள்ள மன்னவனே!” என்று தொடங்கும் காதற் கடித பாடல்.
“இளையகன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ?”
என்ற சந்தேகத்தை நாயகன் கிளப்ப
“இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தளர்ந்தது நாணம் அல்லவா”
என்ற நெத்தியடி பதில் நாயகியிடமிருந்து வரும். எவ்வளவு நாசுக்கான ‘இடை’ வருணனை?
எகிப்து போன்ற நாடுகளில் பிரபலமாக இருக்கும் ‘இடை நடன’த்திற்கு ஆங்கிலப் பெயரோ “பெல்லி டான்ஸ்”. தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமெனில் “தொந்தி நடனம்” என்றோ “தொப்பை நடனம்” என்றோ கண்றாவியாக மொழிபெயர்க்க வேண்டிவரும்.
முத்தமிழ் என்று போற்றப்படும் நம் மொழிக்கு வல்லினத்திலிருந்தும், மெல்லினத்திலிருந்தும், இடையினத்திலிருந்தும் ஒவ்வொரு எழுத்தினை தேர்ந்தெடுத்து “தமிழ்” என்ற இனிமையான பெயரைச் சூட்டிய நம் மூதாதையர்களுக்கு ஒரு “ஓ” போட வேண்டும்.
அம்சமாக (‘மடிப்பு ஹம்ஸா’ அல்ல) பெயர் வைப்பதில் தமிழனுக்கு மிஞ்சி யாருமே இல்லை எனலாம். மனித உடம்பில் இடைப்பட்ட பகுதிக்கு “இடை” என்ற எத்துணைப் பொருத்தமானப் பெயர் !!!!
- அப்துல் கையூம்
கந்தவேல்ஜி,
இதுல ஒரு இஷ்யூ இருக்கு.
இத்த எழுதுனது கா.மு.ஷெரீஃப், ஆனா, படத்துல கா.மு.ஷெரீஃப் பேரு வராது.
On Jun 24, 1:40 pm, Kandavel Rajan <kandavelra...@gmail.com> wrote:
> *இடை ஆராய்ச்சியில் கண்ணதாசன் ‘முனைவர்’ பட்டம் பெற்றவர் என்று சொல்ல வேண்டும்.
சூப்பர் கந்தவேல் சார்
ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே
அது ஒய்யார நடை நடக்கும் நடக்கட்டுமே - இது வாலி
0
பவளமென விரல் நகமும் பசுந்தளிர் போல் வளை கரமும்
தேன்கனிகள் இருபுறமும் தாங்கி வரும் பூங்கொடியோ - ஹி ஹி இது கண்ணதாசன் :P
On Jun 23, 8:59 pm, Shylaja N <shyla...@gmail.com> wrote:
> கண்ணதாசன் ஒரு படத்துக்குப் பாட்டெழுதினார்
> .
> '
> எண்ணிரண்டு பதினாறு வயது - அவள்
> கண்ணிரண்டில் காணுதம்மா காதல் கொண்ட மனது
> !
> பாடல் பதிவானதும் படத்தயாரிப்பாளரும் இயக்குநரும் கவிஞரிடம் கேட்டார்கள், என்ன
> கவிஞரே ! இப்படி எழுதிவிட்டீர்களே! கதா நாயகிக்கு (தேவிகா) இப்போது வயது
> பதினாறா? என்று.
> கவிஞர் சொன்னார்
> , பாட்டை நன்றாகக் கேள்! என்றார். அவர்களுக்குப் புரியவில்லை.
> எண்ணி இரண்டு பதினாறு என்று தானே எழுதினேன் என்றார்!
சூப்பர் ஷைலு , வெல் சமாளிப்பு
ஐம்பதிலும் ஆசை வரும் இந்தப் பாட்டு எழுதுன கண்ணதாசனுக்கும் 50 வயசுக்கு
மேல, நடிச்ச சிவாஜிக்கும் 50 வயசுக்கு மேல , பாடுன டி.எம்.எஸ் கும் 50
வயசுக்கு மேல ...
BTW , ஷைலு உங்களுக்கு 50 துக்கு கொஞ்சம் தான கீழ ?
ஒரு மேடையில் கண்ணப்பன் என்றொருவர் கண்ணதாசனின் தாலாட்டுப் பாடல்களின்
சிறப்புகளைப் பற்றிப் பேசியிருக்கிறார்.
" நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே"
"இதையெல்லாம் கவிஞர் எப்படிப் பாடினார் ? " என்று கேட்டுவிட்டு ,
மேடையில் வீற்றிருந்த கண்ணதாசனை நோக்கி " சொல்லடா வாய் திறந்து..." என்று
நிறுத்தவே கண்ணதாசன் உட்பட எல்லோருமே திகைத்து கண்ணப்பனைப்
பார்த்தார்கள்.
கண்ணப்பன் உடனே
" சொல்லடா வாய் திறந்து அம்மா என்று ..
சொர்க்கமே தோன்றுதடா உன்னால் இன்று "
என்று கவிஞரின் வேறு ஒரு தாலாட்டு பாடலைப் பாடியிருக்கிறார்.
0
நான் முதன்முதலில் அண்ணாவை ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில் தான்
சந்தித்தேன் . என்.எஸ்.கே என்னை அவரிடம் அழைத்துச் சென்றார் , அவரின்
எடுப்பான பேச்சு என்னை வெகுவாகக் கவர்ந்தது .எளிமையான மனிதர் வஞ்சகம்
இல்லாத மனிதர் . தமிழ் நடையில் மிகச்சிறந்த ஓட்டம் கொண்டுவந்தது அவர்
தானே ! பற்பல புதிய சொற்களை உருவாக்கியவர் அவர் . அவர் முக்காற்பங்கு
கவிஞர் காற்பங்கு அரசியல் வாதி - (கண்ணதாசன்)
ஒருமுறை ஜனாதிபதி விருது வாங்குவதற்கு தனது அண்ணன் ஏ.எல் சீனிவாசனுடன்
சென்றிருக்கிறார் கண்ணதாசன்.நிகழ்ச்சி நேரத்தில் கண்ணதாசன் அயர்ந்து
தூங்கி விட்டார் . பிறகு ஏ.எல். சீனிவாசன் தான் அந்த விருதை
ஜனாதிபதியிடமிருந்து வாங்கி வந்திருக்கிறார் .
0
கண்ணதாசனுக்கு அவரது அண்ணன் ஏ.எல் சீனிவாசன் மேல் அளவு கடந்த பாசம் .
பாசமிகு அண்ணன் தவறியதும் தீராத துயரத்தில் இருந்தார் கண்ணதாசன் . அடுத்த
ஒருவாரத்தில் கண்ணதாசன் மகள் கலைச் செல்வி
சொக்கலிங்கத்திற்கு(பார்வதிக்குப் பிறந்தவர்) ஆண் குழந்தை
பிறந்திருக்கிறது. " என் அண்ணன் தான் எனக்குப் பேரனாகப்
பிறந்திருக்கிறார் .. " என்று உணர்ச்சிப் பெருக்கோடு கூறினாராம்
கண்ணதாசன்.
பேரனுக்கு கண்ணதாசன் வைத்த பெயர் சீனிவாசன்.
0
ஒரு மேடைக் கச்சேரியில் எம்.எஸ்.விஸ்வநாதன்
" மலர்ந்தும் மலராத பாதி மலர்போல
வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே! "
பாடலைப் பாடிவிட்டு , " இந்த மாதிரி பாடல்களையெல்லாம் என் நண்பன்
கண்ணதாசன் ஒருவனாலேயே எழுதமுடியும் " என்று கூறி விட்டு...
" புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்.. " என்று பாடியிருக்கிறார்.
தொட்டான் .. தடவினான் என்று எழுதினால் செக்ஸ் , அன்றைய இரவு இன்பமயமாக
இருந்தது என எழுதினால் இலக்கியம் - கண்ணதாசன்
ஆசை லயத்தில் கட்டுண்ட மனிதனை ஆட்டிப் படைப்பவை மூன்று . அவை .. பதவி ,
பொருள் , பெண் (சேரமான் காதலி)
0
சேரமான் காதலி நாவலுக்காகத் தான் கண்ணதாசனுக்கு சாகித்ய அகடமி விருது
கிடைத்தது (1980) . கண்ணதாசன் கவிதைகளுக்கு விருது கொடுக்காமல் நாவலுக்கு
விருது கொடுத்திருக்கிறார்களே என்று பொருமினார்களாம் கண்ணதாசனின்
தாசன்கள்.
பட்டினத்தார் சொன்ன தத்துவம் பல்கலைகழக நூல்நிலையத்தைத் தொட்டதே தவிர
பாமரனைத் தொட்டதில்லை . " போனால் போகட்டும் போடா .. இந்த பூமியில்
நிலையாய் வாழ்ந்தவர் யாரடா " என்று சுலபமாக எல்லோரையும் தொட்டவர்
கண்ணதாசன் - ( அமுதவன் )
0
பட்டுக் கோட்டையாரின் பாடல்கள் பாமரத்தனமான மக்களை பெரிதும் கவரும்
வகையில் எழுதப்பட்டவை , ஆனால் கண்ணதாசனின் பாடல்களோ பண்டிதர் பாமரர் அகிய
இருபாலரையும் ஒருங்கே ஈர்க்கும் (வாலி)
" சித்திரத்தில் பெண்ணெழுதி சீர்படுத்தும் மானிடனே
ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிடமாட்டாயா ? "
இப்படியெல்லாம் இனி யார் எழுதப் போகிறார்கள் - தமிழருவி மணியன்
நெஞ்சில் ஓர் ஆலயத்தில் முத்துராமன் ஒரு புற்று நோயாளி . நாளை
இறந்துவிடுவோம் என்ற நினைப்பு. மனைவியை அழைத்து , உன்னை மணக் கோலத்தில்
பார்க்க விரும்புகிறேன் . நகைகளை அணிந்து கொண்டு பட்டுப் புடவை கட்டி
பூச்சூடி பொட்டோடு வா , என் ஆசையை நிறைவேற்றி வை என முத்து ராமன்
தேவிகாவிடம் சொல்வார். இந்த இடத்தில் தேவிகா பாடுவது போல் ஒரு பாட்டு
வெண்டுமென கவிஞரிடம் சொன்னேன்.
ஒரு நிமிடம் கூட இருக்காது , நான்கே வரிகளில் நான் சொன்ன சம்பவத்தை
உருக்கமாக உருவாக்கித் தந்தார்.
" என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ
முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ
முகத்தைப் பார்த்துக்கொள்ள துடித்தாயோ .. ? "
இந்த முதல் நான்கு வரிகளும் என்னை உலுக்கிவிட்டது.கண்ணீர்விட்டழுதேன்.
படம் பார்த்தவர்களை முத்துராமன் தன் நடிப்பினாலும் கவிஞர் தன்
சொல்லாற்றலாலும் நெகிழவைத்துவிட்டார்கள்.
- ( டைரக்டர் ஸ்ரீதர் )
On Jun 23, 9:29 am, Gokul Kumaran <gokuldu...@gmail.com> wrote:
> ஏதோ ஒரு படத்தில் டாக்டரிடம் சிகிச்சை பெற்று விட்டு ஒரு கவிதை சொல்லுவார்
> கண்ணதாசன்.
>
> ”ஆஹா, என்ன கவிதை, அது தான் கண்ணதாசன்” என்று உளம் மகிழ்வார் டாக்டர். (நாகேஷ்
> என்று நினைக்கிறேன்)
>
> “அது தான் ஃபீஸ்” என்று சொல்லி கமுக்கமாக கண்ணதாசன் கிளம்பிவிடுவார்.
>
> என்ன படம் என்று ஞாபகமில்லை.
>
> --
> *Gokul Kumaran*
அந்தப் பாட்டையும், சீர்பிரித்து எழுதியும் காட்டியுள்ளேன்.
நகைஞர் நாகேஷுக்கு வாழ்த்து - கவிஞர் கண்ணதாசன்:
http://nganesan.blogspot.com/2009/02/nagesh.html
நா. கணேசன்
நகைஞர் நாகேஷுக்கு வாழ்த்து - கவிஞர் கண்ணதாசன்:
http://nganesan.blogspot.com
TRP ராஜா சார் ரொம்ப நன்றி. இந்த இழை 100 மடல்களைத் தாண்டி வெற்றிகரமாக
ஓடவேண்டும் :)