
2009 ஆண்டு வெளியான ஹிந்திப்படம் Road to Sangam , வழக்கமான பொழுது போக்குப்படங்களுக்கு இடையில் இதன் வருகை கவனிக்கப்படாமலே போய்விட்டது, காந்தி குறித்து இந்தியாவில் எடுக்கபட்ட திரைப்படங்களில் முக்கியமான படமிது
இந்தப்படம் மூன்று தளங்களில் செயல்படுகிறது, ஒன்று, காந்தி குறித்து இன்றைய தலைமுறையினரிடம் உள்ள வெறுப்பை, அதன் பின்னுள்ள அரசியலை, அறியாமையைக் கவனப்படுத்துகிறது, இரண்டாவது இஸ்லாமிய சமூகம் மகாத்மா காந்தியை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பதை யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறது, மூன்றாவது, மதக்கலவரங்கள் உருவாகின்ற சூழலில் காந்தியின் முக்கியத்துவம் எவ்வளவு அவசியமானது என்பதை உணர்த்துகிறது
படத்தை இயக்கியிருப்பவர் அமித்ராய், அட்டன்பரோவின் காந்தியைப் போல இது பிரம்மாண்டமான செலவில் உருவாக்கபட்ட படமில்லை, ஆனால் உண்மையான சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட யதார்த்தமான படம்.
அலகாபாத்தில் உள்ள கார் மெக்கானிக் ஹஸ்மத் பாய், எவ்வளவு மோசமான நிலையில் உள்ள காரின் என்ஜினையும் சரிசெய்து தந்துவிடக்கூடிய திறமைசாலி, வயதான மனிதர், நண்பர்களுடன் தினசரி நடைப்பயிற்சிக்குச் செல்வது அவரது வழக்கம், முதியவர்களின் நடைபயிற்சியைப் பற்றி வேடிக்கையான கிண்டலுடன் துவங்குகிறது படம்
ஒரு நாள் அவரிடம் V8 ford engine ஒன்று சரிசெய்யப்படுவதற்காகக் கொண்டு வரப்படுகிறது, அது மிகப்பழைய என்ஜின் என்பதால் சரிசெய்து தருவதற்கு கொஞ்ச கால அவகாசம் வேண்டும் என்று ஹஸ்மத் கேட்கிறார்,
ஒரு வாரத்தில் என்ஜினைச் சரி செய்து தரும்படி அவசரப்படுத்துகிறார்கள், அப்படி என்ன அவசரம் எனக்கேட்டபோது, அந்த என்ஜின் காந்தியின் அஸ்தியைச் சுமந்து சென்ற போர்டுவாகனத்தின் என்ஜின், சரித்திரப் புகழ்பெற்ற அந்த வண்டி மறுபடியும் தேவைப்படுகிறது என்பதால் என்ஜினை உடனே சரி செய்து தரும்படியாக கேட்கிறார்கள், அவரும் ஒத்துக் கொள்கிறார்,
இதற்கிடையில் அலகாபாத் நகரில் எதிர்பாராமல் குண்டுவெடிப்பு நடைபெறுகிறது, இதில் தொடர்புடையவர்கள் என்று இரண்டு இஸ்லாமிய இளைஞர்களை போலீஸ் விசாரணைக்கு அழைத்துப் போகிறது, அவர்கள் அப்பாவிகள் என இஸ்லாமிய அமைப்பினர் ஒன்றுதிரண்டு காவல்துறையினரிடம் முறையிடுகிறார்கள்,
ஆனால் காவல்துறை கைது செய்த இளைஞர்களை தீவிரவாதி என்று அடையாளப்படுத்தி, விடுதலை செய்ய மறுக்கிறது, அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் நாளில் இஸ்லாமிய அமைப்புகள் நியாயம் கேட்டுப் போராட்டம் செய்கிறார்கள்,
இந்தப் போராட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தப்படுகிறது, அதன்முடிவில் துப்பாக்கி சூடு நடந்து அப்பாவிகள் பலர் கொல்லப்படுகிறார்கள், இதில் ஒருவர் இஸ்லாமியத் தலைவரின் மகன், இதனால் ஊரே பதற்றமாகிறது
இந்தச் செயலை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் யாவும் ஒன்று சேர்ந்து கடை அடைப்பு நடத்துவது என முடிவு செய்கிறார்கள், அதன்படி கடை அடைப்பு துவங்குகிறது, இதனால் நகரமே காலியானது போலாகிறது
இன்னொரு பக்கம் மகாத்மா காந்தியின் அஸ்தியில் ஒரு பகுதி கரைக்கப்படாமலே ஒரிசாவில் ஒரு கலயத்தில் பாதுகாத்து வைக்கபட்டிருப்பதாக அறிந்து அதை நீதிமன்றம் வழியாக மீட்டு, அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தில் கரைப்பதற்காக காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார்காந்தி ஒரு ஊர்வலம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன
காந்தியின் அஸ்திக் கலசத்தைத் தாங்கிச் செல்வதற்காகவே மீண்டும் அந்த வேன் தேவைப்படுகிறது என காந்தி ஆசிர நிர்வாகிகள் அவசரப்படுகிறார்கள், சூழ்நிலையின் தீவிரம் ஹஸ்மத்திற்குப் புரிகிறது,
ஆனால் தொடர்ந்த கடையடைப்பு காரணமாக அவரால் மெக்கானிக் ஷாப்பைத் திறந்து வேலை செய்யமுடியவில்லை, ஆகவே தன்னால் என்ஜினைச் சரி செய்யமுடியாது என்பதைச் சொல்லிவிடுவதற்காக காந்தி கமிட்டி தலைவரைப் பார்க்க போகிறார் ஹஸ்மத்
தலைவர் வெளியே போயிருப்பதால் அவர் வரும்வரை அங்கிருந்த காந்தி ம்யூசியத்தைப் பார்வையிடுகிறார், ஆசிரமத்திலிருந்த காந்தியின் புகைப்படங்களையும் கடிதங்களையும் வாசிக்க வாசிக்க காந்தியின் வாழ்க்கை, அவர் மேற்கொண்ட பயணங்கள், அவரது உயிர்தியாகம் யாவும் அவருக்குள் ஆழமான பாதிப்பை உருவாக்கிவிடுகிறது,
காந்தி போன்ற மகத்தான ஆளுமைக்குத் தன்னால் முடிந்த சிறிய உதவி என்று அந்தப் பணியை முடித்துத் தருவதாக உறுதி தருகிறார், ஆனால் கடையடைப்பை மீறி எப்படி வேலை செய்வது எனத்தெரியவில்லை, இதனால் இஸ்லாமிய அமைப்பின் தலைவரைச் சந்தித்து நடந்த விஷயங்களைச் சொல்லி தனக்குக் கடை திறக்க அனுமதி கேட்கிறார்,
மதத்தலைவரான ஒம்பூரி, காந்தி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர், அவருக்காக நீங்கள் கடைதிறக்ககூடாது என்று கோபப்படுகிறார். இல்லை அவர் இந்துகளுக்கு ஆதரவாக நடந்து கொள்ளவில்லை என்று தான் கோட்ஸே காந்தியைச் சுட்டிருக்கிறான், நாம் அவரது உயிர்தியாகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஹஸ்மத்,
தங்களது கட்டுபாட்டினை மீறி ஹஸ்மத் கடையைத் திறந்தால் மதவிலக்கம் செய்யப்படுவார் என்று ஒம்பூரி அவரைக் கண்டிக்கிறார்.
ஹஸ்ரத் அமைதியான குரலில், தான் கடையைத் திறக்கப்போவதாகச் சொல்லி கிளம்புகிறார், ஹஸ்மத்தின் குடும்பம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது, அவர் உறுதியான நம்பிக்கையுடன் கடைச்சாவியை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார், நகரவணிகர்கள் யாவரும் ஒன்று திரண்டுவந்து அவரை வழிமறித்து கடையைத் திறக்க கூடாது எனத்தடுக்கிறார்கள், வாக்குவாதம் செய்கிறார்கள், மத்துரோகி என திட்டுகிறார்கள், ஹஸ்மத் பாய் அமைதியாக தனது தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்கிறார், இதில் ஆத்திரமாகி ஒருவன் அவரிடமிருந்த கடைச்சாவியைப் பறித்துக் கொள்கிறான்
தனது கடைச்சாவியைப் பறித்தவன் தானே முன்வந்து கடையைத் திறக்க வேண்டும் என்று அந்த இடத்திலே உண்ணாவிரதம் இருக்கத் துவங்குகிறார், அப்படியே கிடந்து சாகட்டும் என்று அவரை கைவிட்டு ஊரார் போய்விடுகிறார்கள்,
ஆனால் விடாப்பிடியான உறுதியோடு அவர் பட்டறையின் முன்பாக இரவில் தனியே உட்கார்ந்திருக்கிறார், அவரிடமிருந்து சாவியைப் பறித்து சென்றவன் தனது தவறை உணர்கிறான், தானே சாவியைத் திரும்ப கொண்டுவந்து பட்டறையைத் திறந்துவிடுகிறான்
துருப்பிடித்துப் போன பழைய என்ஜினை சரிசெய்ய ஹஸ்மத் தனது நண்பர்களுடன் போராடுகிறார், முடிவில் வண்டி தயார் ஆகிறது, காந்தியின் அஸ்தி ஊர்வலம் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன,
ஹஸ்மத், தனது பணிக்குக் கைமாறாக, காந்தியின் அஸ்தி தங்களது வீதியின் வழியாக கடந்து போக வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் வைக்கிறார், ஏற்கனவே மதக்கலவரமாக உள்ளது, இந்தச் சூழலில் அது தேவையற்ற பிரச்சனையை உண்டாக்கிவிடும் என கமிட்டியினர் பயப்படுகிறார்கள், அப்படி எதுவும் நடக்காது என்று ஹஸ்மத் பாய் உறுதி தருகிறார்
காந்தியின் அஸ்தி ஊர்வலமாக இஸ்லாமியக்குடியிருப்பு பகுதிக்குள் வரும்போது அதை வரவேற்க கூடாது என எதிர்ப்புக்குரல் வலுக்கிறது, ஆனால் காந்தியை நாம் முறையாக வரவேற்க வேண்டும் என்று ஒவ்வொரு வீட்டிற்கும் கடிதம் எழுதுகிறார் ஹஸ்மத்
முடிவில் காந்தி ஊர்வலம் வருகிறது, எங்கே கலவரம் மூண்டுவிடுமோ என்ற சூழலில் இஸ்லாமியக் குடியிருப்பு பகுதியில் ஆண்களும் பெண்களும் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு காந்தியின் அஸ்தியை வரவேற்று மரியாதை செய்து அதை உற்சாகமாகக் கொண்டு செல்கிறார்கள்,
காந்தியின் அஸ்தி அந்த நகரில் அதுவரையிருந்த கசப்புணர்வை அழித்துவிடுகிறது, யாவரும் ஒன்று திரண்டு திரிவேணி சங்கமத்தில் காந்தியின் அஸ்தியை கரைக்கப்போகிறார்கள்
காந்தியின் கொள்ளுப்பேரன் அஸ்திக்கலசத்தை கையில் ஏந்தி ஒரு படகில் சென்று சாம்பலை ஆற்றில் கரைக்கிறான், முடிவில்லாமல் ஒடிக்கொண்டிருக்கும் ஆற்று நீரில் காந்தியின் சாம்பல் கரைகிறது, கலயத்திலிருந்த மலர்கள் ஆற்றில் மிதந்து போகின்றன, துஷார் காந்தி கைகூப்பி வணங்குகிறார்
காந்தியின் புன்னகையைப் போல ஒளிர்கிறது ஆற்றின் தண்ணீர், இந்தியர்களின் மனதில் காந்தி என்றும் வாழ்ந்து கொண்டேயிருப்பார் என்ற நம்பிக்கையுடன் நிறைவுறுகிறது படம்
ஹஸ்மத் பாய் எப்படி காந்திய அறங்களை கைக்கொள்கிறார், அது எவ்வாறு அவர் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர், அது படம் பார்க்கின்றவர்களின் மனசாட்சியைத் தொடுகிறது
மிகவும் இயல்பான, சீரான திரைக்கதை, அழுத்தமான கதாபாத்திரங்கள், குறுங்கவிதைகள் போல ஒளிரும் காட்சிகள் இவையே படத்தின் பலம், பரேஷ் ரவால், ஒம்பூரி முக்கியக் கதாபத்திரங்களில் நடித்திருக்கிறார்கள், பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறது இப்படம்,
புதிய இசையமைப்பில் வைஷ்ணவ ஜனதோ பாடல் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது, படம் முடிந்தபிறகும் அப்பாடல் நம் மனதில் ஒலித்துக் கொண்டேயிருப்பது அதன் சிறப்பு.
காந்திய அறத்தின் முக்கியத்துவம் இன்றுள்ள சூழலில் எவ்வளவு அவசியம் என்பதை அழுத்தமாக படம் வலியுறுத்துகிறது, இதற்காக அவசியம் அனைவரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்பேன்
•••
நம்முடைய திரை விமர்சனங்களையும் தாண்டி
இணையத்தில் படிக்க கிடைக்கும் பிறருடை நல்ல விமர்சனங்களை இந்த இழையில் பகிரலாமே. எவைகளை இங்கே பகிரலாமுன்னு நான் நினைக்கிறேன்னா...
எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களுடைய கட்டுரை மீள்பதிவு.
1. தமிழ் திரைப் படங்களாக இருக்கலாம்.

எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களுடைய கட்டுரை மீள்பதிவு.
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ ஒரே நாளில் இரவி, சுகு, வேணு, அன்னா, கல்யாணி எல்லார் வாழ்வும் மாறிப்போகிறது… படத்தில் கடைசி அரைமணி நேரம் தான் பரபரப்பே… இரவி ஜாமீனில் வெளியே வந்து அந்த ஜீப் டிரைவரை தேடிச் செல்வது, தேவனின் நண்பன் பத்ரன் தான் அன்னா மேல் உள்ள காதலால் அவனைக் கொலை செய்தது தெரிய வருவது என நாம் முற்றிலும் எதிர்பார்க்காத திருப்பங்களுக்குள் படம் பயணித்து முடிகிறது… இதை நான் கதையாக சொல்வதை விட, பார்த்து உணர்வதே நல்ல அனுபவமாக இருக்க முடியும்…
ஒரே ஒரு பஸ்… ஒரு சிறிய கிராமம். பத்தே பத்து கேரக்டர்கள்.. ஒரு விபத்து இவர்களது வாழ்வில் நடத்தும் மாற்றங்கள்.. இதுதான் மொத்த படமும்..
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பெண்ணின் பொறுமையை பலவீனம் என எடைபோடக்கூடாது என்பதே இக்கதையின் மையக்கருத்து.
உடலெங்கும்,
கடித்த தடமும், விரல்கள் உடைக்கப்பட்டு, கழுத்தில் காயமும் ஏற்படும் அளவு
வன்முறையாக கற்பழிக்கப்படுகிறாள் டெஸ்ஸா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
பின்னர் வீட்டுக்கு வருகிறாள். சிறில் அவளை மிக ஆதூரமய்க் கவனித்துக்
கொள்கிறான். டெஸ்ஸா எழுந்து நடமாடியதும் சிறில் பிரதாப் போத்தனுக்கு She
is Ready என தகவல் அனுப்புகிறான். அப்போதுதான் சிறில்தான் வில்லன் என்பதே
நமக்குத் தெரிய வருகிறது. சிறில் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு மன்னிப்பு
கேட்க வரும் ஹெக்டே “Can I have sex with you one more time, please”
எனக்கேட்கும்போது பகீரென்றிருக்கிறது. பிரதாப் போத்தன் வில்லனாக அருமையாக
செய்திருக்கிறார்.கேரள சினிமாவில் அதிகம் தெரியாத முகங்கள்தான் படம் முழுக்க. எனக்குத் தெரிந்த ஒரே முகம் பிரதாப்போத்தன் மட்டுமே.
பெங்களூரில் வாழும் கேரள நர்ஸ்களின் வாழ்க்கை கான்பிக்கப்படுகிறது. எப்படி பல பெண்கள் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்கின்றனர் என்பதும், அவர்களுக்குள் நடக்கும் குறும்புகள், எல்லாம் இயல்பாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களில் சிலர் பனத்துக்காக சோரம்போவதுபோல கான்பித்திருப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. மலையாளப்படத்தில் அவர்கள் ஊர்ப்பெண்களைத்தான் காட்டியுள்ளனர். இருப்பினும் இப்படி சித்தரித்திருக்க வேண்டாம்.
சிறிலின் பின்புறம் குறித்து டெஸ்ஸாவின் அறைநண்பி அடிக்கும் கமெண்ட் இன்றைய இளவட்டங்களின் ஸ்டைல்போல.
நல்ல ஒளிப்பதிவு. இயல்பான காட்சிகள். தேவையான இசை இவையெல்லாம் படத்தில் நல்ல விஷயங்கள். இவ்வளவுதூரம் தன்னை கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கியவன்மீது இன்னும் கரிசனம் இருப்பதுபோலக் காட்டியிருப்பது கொஞ்சம் நெருடல். அதற்குக் காரணமாக சிறிலின் அம்மாவும் ஒரு நர்ஸ் என்பதால் உனக்கு இந்தத் தண்டனை என்கிறாள்.
ஜெஸிலா | திரைவிமர்சனம் , விமர்சனம் | 0 மறுமொழிகள் | # | Ping Thamizmanam | Ping Thenkoodu
நாம் அன்றாட வாழ்க்கையில் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கிறோம். நம்மைப் போல்
அல்லாதவர்களை அந்நியமாகக் கருதுவோம் - அது உருவத்தில், இனத்தில்,
மொழியில், நிறத்தில் எப்படியான வேற்றுமையாகவும் இருக்கலாம். ஆனால்
கண்டிப்பாக அப்படிப்பட்ட ஒருவரை நாம் கடந்தே சென்றிருப்போம். முகம்
சுழித்திருப்போம், அருவருப்பு அடைந்திருப்போம். அப்படியில்லாமல்
ஒவ்வொருவருக்குள்ளும் நற்குணங்களும், நல்ல திறமையும் ஒளிந்துகிடக்கிறது
அதனை நாம் அறிவுக் கண்களால் பார்க்காமல் புறக் கண்களில் பார்த்து அதனைத்
தவிர்த்து கடந்து செல்கிறோமென்று என்றாவது உணர்ந்ததுண்டா?
அப்படி ஒவ்வொருவரும் உணரத் தொடங்கினால் வேற்றுமையில் ஒற்றுமை மட்டுமல்ல
இல்லாதவர்கள் இல்லாத உலகத்தை நாம் அமைத்திட முடியும். Don't judge a book
by its cover என்று ஒரு ஆங்கிலச் சொற்றொடர் உண்டு அகத்தின் அழகு முகத்தில்
சமயங்களில் தெரியாது நாம் தான் தேடியெடுக்க வேண்டுமென்று மனிதம் பேசும்
படம் இது. இப்படித்தான் இந்தப் படத்தின் நாயகி லெய் ஆன் தொஹியும் (சான்ரா
புல்லக்) இயல்பிலேயே அவருக்குள் இருக்கும் அவரது இரக்க குணம் மைக்கெல்
ஒஹெர்ரை கடந்து செல்லும் போது அன்றைய தினத்தில் அவருக்கு உதவலாமென்று
வீட்டிக்குள் அழைத்துச் சென்று, பின்பு தமது சொந்தப் புதல்வனாகவே
தத்தெடுத்துக் கொள்ளும் அற்புதங்கள் நிகழ்கிறது. இதையெல்லாம் ஒரு நல்ல
கிருத்தவரால்தான் முடியுமென்று மதத்தை சில இடங்களில் தூக்கிப்பிடித்தாலும்
அது கதையை எந்த வகையிலும் சிதைக்கவில்லை.
கருப்பினத்தைச் சேர்ந்த மைக்கெல் ஓஹெர் ஆஜானுபாகுவான உடல் அமைப்பு
கொண்டவர். ’கிங்காங் பக்கத்தில் ஆன் டாரோ இருப்பது போல் மைக்கெல் ஓஹெர்
அருகே நீ’ என்று லெய் ஆன்னின் தோழிகள் கிண்டல் செய்யும் அளவிற்கு
இருவருக்குள் அவ்வளவு உருவ வேற்றுமைகள் இருந்தாலும் தம் குடும்பத்தில் ஒரு
உறுப்பினராக்கிக் கொள்வதில் அவளுக்கு மட்டுமல்ல அவருடைய கணவர் சியான்
மற்றும் குழந்தைகள் கோலின்ஸ், எஸ்ஜே ஆகியோருக்கும் விருப்பம் என்பதை
காட்சியமைப்புகளிலேயே பிரமாதமாக காட்டியுள்ளார் இயக்குனர் ஜான் லீ.
”மைக்கெல் ஓஹெரை வீட்டில் ஒருவராக ஆக்கிக் கொள்வதால் பதின்ம வயதிலிருக்கும்
உன் மகளுக்கு பாதுகாப்பில்லை” என்று மைக்கெல் இனத்தின் மீது
நம்பிக்கையில்லாத வெள்ளைக்காரிகளைக் காரி உமிழ்கிறார் லெய் ஆன். தன்
மனைவியின் சொற்களுக்கு மரியாதை தரும் சியான், மற்றவர்களுக்கு உதவுவதில்
தான் மட்டற்ற மகிழ்ச்சி என்ற தன் மனைவியின் சுபாவத்தை புரிந்து கொண்டு
ஒத்துழைக்கும் நல்ல கணவர். யாரென்ன கேலி பேசினாலும் இவர் என் சகோதரர் என்று
பள்ளி நூலகத்தில் மைக்கெல் அருகே வந்து அமரும் கோலின்ஸின் முகபாவங்களே
போதும் அவருக்கு அங்கு வசனமே தேவையற்றது. பத்து வயதில் தென்படும் எஸ்ஜேதான்
மைக்கெலின் உற்ற தோழன் அமெரிக்க கால்பந்தில் மைக்கெலுக்கு ஆர்வத்தை
ஏற்படுத்துவதே இந்தச் சிறுவன் தான். இப்படியான கதாபாத்திரங்களுடன் அழகாகக்
கதை நகர்கிறது. இரவில் தாய் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் ’ஃபெர்டினந்த்
அண்ட் தி புல்’ (Ferdinand & the Bull) கதை கூட இந்தப் படத்தில்
முக்கிய அம்சம் பெறுகிறது. நம்மூர் சீரியல் போல் பல மாதங்களுக்கு பிறகு
பார்த்தாலும் புரியுமே அப்படியில்லாமல் ஒவ்வொரு காட்சிக்கும்
முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள்.
கதைச்சுருக்கம் படிப்பதைவிட இந்தப் படத்தை தேடிப்பிடித்து
பார்த்துவிடுங்கள் இரசிப்புத் தன்மையுடையவர்களுக்கு கட்டாயம் பிடிக்கும்,
எனக்குப் பிடித்தது போல.
இயக்குநர் பரதனுடன் சேர்ந்து சினிமாக்களில் பணியாற்றிய நாட்களைப்பற்றி பேசும்போது பாராட்டுகளைக்கூட பரதன் தனக்கே உரிய முறையில்தான் வெளிப்படுத்துவார் என்று சொன்னார் இசையமைப்பாளர் ஜான்சன். ஏதாவது ஒரு பாடல் அல்லது ஒரு நடிப்பு மிகவும் நன்றாக இருப்பதாகத் தோன்றினால் ‘நல்லது…நீ செய்தது என்று சொல்ல முடியாது’ என்று சொல்வாராம் அவர். புகழ்ச்சியும் இகழ்ச்சியும் கலந்த ஒரு வரி அது என்றார் ஜான்சன்
ஆனால் ஒருவன் தன்னால் செய்ய முடியக்கூடியதன் எல்லையைத் தாண்டிச் செல்வதை தான் அவர் சொல்கிறார் என்று நான் புரிந்துகொள்கிறேன். ஒழிமுறி என்ற படம் என்னை அத்தகைய ஒரு பரதவாக்கியத்தை நினைவுறுத்தியது. சினிமா என்னும் கலையின் இலக்கணத்தையும் அளவுகோல்களையும் கொண்டு வைத்து பார்த்தால் ஒழிமுறிக்கு பல குற்றங்களும் குறைவுகளும் இருக்கக்கூடும். ஆனால் ஒழிமுறியை பார்க்கும்போது நம் முன் நிறைவது சினிமாவுக்கு அப்பால் விரியும் ஒரு சமூகத்தின், அதன் மூன்று தலைமுறைகளின் சித்திரம்
பெண்களுக்கு முழு சொத்துரிமையும் தன் வீட்டிலேயே வாழ உரிமையும் இருந்த முதல் தலைமுறை. பெண் இன்னொரு வீட்டுக்குச் சென்று அங்கே அடிமையாக சுருங்கிவாழும் இரண்டாம் தலைமுறை. அவர்களின் வரலாறுகளை முன்வைக்க இயக்குநர் தேர்ந்தெடுத்து முன்வைக்கும் இன்றைய மூன்றாம்தலைமுறை. திறமையாக எழுதி இயக்கப்பட்ட இந்த படத்தில் அவை மூன்றும் நிரம்பியிருக்கின்றன
மொழியும் நிலப்பகுதியும் காலமும் பெரும்பாலும் பழக்கமற்றவை. ஆனால் நம் முன் தெளிந்துவரும் கதைமாந்தர்கள் மனதிற்குள் சென்று அமைபவர்கள். எவரையும் அஞ்சாத, எந்த நள்ளிரவிலும் தனித்து நடக்க தயங்காத, யாரங்கே என்று கேட்டால் நான் தான் இங்கே என்று திரும்பிநின்று சொல்லக்கூடிய பாட்டிகளை நான் கண்டிருக்கிறேன், இளமையில். ஆறுமணி ஆனபின்னர் தனியாக பெண்கள் வெளியே இறங்கி நடக்கமுடியாத ஒரு காலகட்டம் இன்று வந்திருக்கிறது. பாயும் தலையணையும் கையிலேந்தி வயல் வெளியில் தனியாக கதகளி கானச்செல்கிற அந்த பாட்டிகள் ஒரு வரலாற்று விந்தையாக ஆகிவிட்டனர்
நடிக்கத்தெரியாது என்று மலையாளி நிராகரித்த ஸ்வேதா மேனோன் என்ற நடிகை சென்ற நான்கு வருடங்களில் அடைந்த மாற்றம் ஆச்சரியமளிப்பது. எவரையும் அஞ்சாத அம்மச்சியாக ஸ்வேதா மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார். இளமையிலிருந்து முதுமைக்குச் செல்லும்போது நடையிலும் தோற்றத்திலும் வரும் கவனமில்லாமை மிக இயல்பாக அவரில் நிகழ்ந்திருக்கிறது
அன்பை வசையாக மட்டுமே வெளிப்படுத்தக்கூடிய, வீம்புக்கு குறைவில்லாத , தன்னை அஞ்சக்கூடியவர்களுக்கு முன்னால் சிம்மமாகவும் தன்னைவிட மேலானவர்களுக்கு முன்னால் ஆட்டுக்குட்டியாகவும் ஆகக்கூடிய, சாதாரணமான ஒருவரின் கதாபாத்திரம் லால் வழியாக கச்சிதமாக நிகழ்ந்திருக்கிறது. நட்சத்திர புகழில் நிலைகொள்வதனால் மம்மூட்டியும் மோகன்லாலும் இழப்பது இதைப்போன்ற கதாபாத்திரங்களைத்தான்
வாழ்க்கை முழுக்க சண்டைபோட்டு விலக்கி நிறுத்திய அம்மாவிற்கு நீர்க்கடன் கொடுக்கும்போது நினைவின் எடை தாளாமல் மனமுடைந்து கதறும் மைந்தர்கள் நமக்கு புதியவர்கள் அல்ல. வாழும்போது எதற்காக அந்த வெறுப்பும் வேகமும் என்று நாம் எத்தனையோ முறை நினைத்திருப்போம்
ஒருவரோடொருவர் மனம் திறந்து பேசாத , அஞ்சியும் அஞ்சவைத்தும் வாழ்ந்து வாழ்க்கையை இழந்த ஒரு தலைமுறையைச் சேர்ந்த தந்தையும் அவர் மகனும் கொள்ளும் உறவின் சித்திரம் இப்படத்தில் மிக நுட்பமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. டிராஃபிக் படத்துக்குப்பின் ஆசிஃப் பெற்ற மிகச்சிறந்த கதாபாத்திரம் இது.
கணவன் மகன் ஆகிய இருவரை விட இன்னொரு உலகம் இல்லாத, அவர்களுக்காக மட்டும் வாழ்ந்து அதற்காக தன் பிறந்தவீட்டைக்கூட விலக்கிவிட்ட அம்மாக்களின் ஒரு தலைமுறையும் நாமறிந்ததே. என்னதான் தியாகம் செய்தாலும் கடைசியில் பிறர் அளிக்கும் குற்றவுணர்ச்சியை மட்டுமே திரும்பிப்பெறும் விதி கொண்டவர்கள். அவர்களுக்கு கருத்துக்கள் இருக்கக்கூடாது என கட்டாயப்படுத்துபவர்களே அவர்களுக்கு கருத்துக்கள் இல்லை என்று கிண்டல்செய்வதையும் கண்டுகொண்டிருக்கிறோம். இதெல்லாம் இன்றைய கேரளத்தின் உண்மைச்சித்திரங்கள்
மலையாளசினிமாவில் தன் காலடிகளை நிலைநாட்ட ஆரம்பித்திருக்கும் நந்துலாலுக்கு மீண்டும் ஒரு நல்ல கதாபாத்திரம். இரண்டு நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றும் கோபகுமாரின் கதாபாத்திரமும் சிறப்பு. மலையாளசினிமா இந்த நடிகனை இன்னும்கூட நன்றாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்
இதற்கெல்லாம் அப்பால் சற்றே கவனம் கலைந்தாலும் துண்டுதுண்டாக ஆகி மிக சலிப்பூட்டுவதாக ஆகக்கூடிய அபாயம் கொண்ட ஒரு கதையை மிகச்சிறப்பாக இயக்கியிருக்கிறார் மதுபால். படம் முழுக்க வரக்கூடிய குறியீடுகளை முடிந்தவரை நுட்மபாக, நல்ல ரசிகன் மட்டுமே அடையக்கூடியதாக ஆக்கியிருப்பது படத்தை அழகானதாக ஆக்குகிறது
தீயவர் என தோன்றுபவர்களின் நன்மையும் பலவீனர் என தோன்றுபவர்களின் அகவலிமையும் மெல்ல கதை விரிய விரிய நம்மை வந்தடைகிறது. மரணத்தையும் வாழ்க்கையையும் பற்றியுள்ள நுட்பமான வரிகள் மிக முக்கியமானவை என்று தோன்றியது.
தீனிப்பிரியம், எதையும் குற்றம் சொல்வது முதலிய நாயர்குணங்களை விரிவாகவே படம் கேலிசெய்கிறது என்றாலும் ஒரு சினிமாவுக்கு அப்பால் ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த பரிணாமத்தையே காட்டமுடிந்த இந்த சினிமா என்னை மிகவும் கவர்ந்தது
பரதனின் மொழியில் சொல்லப்போனால் ‘நன்றாக இருக்கிறது. ஒரு சினிமா என்றே சொல்லமுடியாது’
வாயனசாலா இதழ் [ http://vayanashala.info/cinema/blog-post-3890-html45359927co9/?utm_source=twitterfeed&utm_medium=twitter ]
ஒரு சினிமாவே அல்ல
by jeyamohan
---
Sent via Epic Browser
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
தமிழர்களை கொச்சைபடுத்துவதை போல் எந்த வசனமும் இல்லை என உத்தரவாதம் தந்தால் பார்க்கிறேன்..
2012/12/18 Ramesh Murugan <rames...@gmail.com>
பகிர்ந்துக்கிட்டதுக்கு மிக்க நன்றி அண்ணே...
இப்பத்தான் படம் பார்த்து முடிச்சேன். சூப்பர் படம். எல்லாரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம். சமீபத்தில் பார்த்த மிக நல்ல படங்களுள் இதுவும் ஒன்று.
http://thepiratebay.se/torrent/7895482/Ozhimuri_%282012%29_Malayalam_Movie_DVDRip_x264_-_Exclusive--என்றும் அன்புடன்,
ரமேஷ்---
Sent via Epic Browser
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--தோழமையுடன்
ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
December 15, 2012
ஜெ,
ஒழிமுறி டிவிடி வாங்க முயன்றேன். எங்குமே இல்லை என்றார்கள்.டிவிட்டரில் ozhimuri என தேடினேன். ஒழிமுறி முழுக்க விற்றுவிட்டது என்று தெர்ந்தது [ https://twitter.com/search/realtime?q=ozhimuri&src=typd ] ஏராளமானவர்கள் பாராட்டியிருப்பதை பார்த்தேன். one of the best in recent times.. என்றும் The power of such a terrific script. என்றும் வாசித்தபோது நிறைவாக இருந்தது. இப்போதும் முழு அரங்கில் ஓடுவதாக ஒரு டிவிட்டர் செய்தி இருந்தது. உண்மையா?
சுவாமிநாதன்
அன்புள்ள சுவாமிநாதன்
மலையாள சினிமாவில் டிவிடி விற்பனை என்பது அதன் மொத்தவசூலில் முப்பது சதவீதம் வரை அளிக்கும் ஒரு களம். முறைப்படுத்தப்பட்ட டிவிடி விற்பனை இருப்பதன் விளைவு. தமிழில் அது முழுக்க முழுக்க திருட்டு டிவிடிக்காரர்களுக்குச் செல்கிறது.
ஒழிமுறி டிவிடி 65000 பிரதிகள் விற்றுவிட்டது. இரண்டாம்பதிப்பு ஒருலட்சம் பிரதிகள் நாளை வெளிவரும் என்றார்கள். கடைகளில் கிடைக்கும்.
ஒழிமுறி மூன்றுமாதம் முன்னரே திரையரங்கை விட்டுச் சென்றுவிட்டது. இன்று திருவனந்தபுரம் திரைவிழாவில்தான் முழு அரங்கில் காட்டப்பட்டது
ஜெ
பகிர்ந்துக்கிட்டதுக்கு மிக்க நன்றி அண்ணே...
இப்பத்தான் படம் பார்த்து முடிச்சேன். சூப்பர் படம். எல்லாரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம். சமீபத்தில் பார்த்த மிக நல்ல படங்களுள் இதுவும் ஒன்று.
http://thepiratebay.se/torrent/7895482/Ozhimuri_%282012%29_Malayalam_Movie_DVDRip_x264_-_Exclusive
///ஒழிமுறி டிவிடி 65000 பிரதிகள் விற்றுவிட்டது. இரண்டாம்பதிப்பு ஒருலட்சம் பிரதிகள் நாளை வெளிவரும் என்றார்கள். கடைகளில் கிடைக்கும்.//செம காமெடியா இருக்கு... இங்க எவனை கேட்டாளும் இப்படி ஒரு படம் வந்துச்சான்னு மேலயும் கீழயும் பார்க்குறானுங்க...
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இப்படியான ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு நம்ம குழும நண்பர்கள் யாரும் போகலையா??
”படம் பார்த்துட்டீங்களா? நல்லா இருக்கா?”
“படம் பார்க்கும்போதே பாதிலயே ஃபேஸ்புக்ல மெசேஜ் போட்டிருந்தேனே. படம் செம மொக்கைன்னு.”
“ஓ ஸ்டேட்டஸ் மெசேஜ் நான் பார்க்கலை. அவ்ளோ மொக்கையாவா இருக்கு?”
“பகடி படத்தைதான கேக்குறீங்க? செம மொக்கைங்க. இடைவேளை வரை உட்கார முடியலை. அதுக்கு பின்னாடி நிக்கக்கூட முடியலை. ஓடித்தான் வெளிய வந்தேன்.”
“ஒருவேளை உங்களுக்கு புரியலையோ?’
“என்னங்க புரியலை? படம் மொக்கைன்றேன். சரி, இந்தப் படத்துல புரியறதுக்கு என்ன இருக்கு? ஒரே சினிமாத்தானம். சகிக்க முடியலை. எப்ப பாரு காதல் காதல்னு. சுதந்திரத்துக்கு முன்னாடி நடக்கற படமாம், அப்பவும் காதலைத்தான் காமிப்பாங்களாம். கருமம்.”
“உங்களுக்கு புரியலையோன்னுதான் தோணுது. உதாரணமா ஒரு சீன் வரும் பாருங்க. கதாநாயகனும் கதாநாயகியும் முதல்ல பார்க்கிற சீன். வாவ், கிளாசிக் இல்ல?”
“என்ன கிளாசிக்? நேரடியா பார்க்கவேண்டியதுதான? அதென்ன கீழ கிடக்கிற மழைத்தண்ணில பார்க்கிறது? சரிங்க, அதுக்கு எதுக்கு அஞ்சு நிமிஷம்? இப்படித்தாங்க படம் முழுக்க மெல்லா போவுது.”
“இல்லைங்க, அது மழைத்தண்ணி. கிட்டத்தட்ட சாக்கடை. அதுல ஹீரோவுக்கு ஹீரோயின் முகம் தெரியுது. ஹீரோயினுக்கு ஹீரோ முகம் தெரியுது. சாக்கடைல மலர்ந்த செந்தாமரை மாதிரி.”
“அடக்க்கோராமையே.”
“இதுல என்னங்க கோராமை? அது ஒரு குறியீடுங்க. அப்ப மழைத்தண்ணில ஒரு பூ விழுது பார்த்தீங்களா? அது இன்னொரு குறியீடு.”
“என்னங்க இது குறியீடுன்னு சொல்றீங்க? அதுவும் வெறும் குறியீடா வருதே, சாதா சீனே வராதா?”
“முழுசா கேளுங்க, கடவுளே அந்தக் காதலை ஆதரிச்ச மாதிரியான ஃபிரேம்ங்க அது.”
“டைரக்டருக்கு கடவுள் நம்பிக்கை இல்லைன்னு நினைச்சேனே.”
“அஃப்கோர்ஸ். அதான் மழைன்னு இயற்கையை வெச்சார். உங்களுக்கு நம்பிக்கை இருக்குல்ல, ஸோ அது உங்களுக்கு கடவுள்.”
“ஓ, இதெல்லாம் நாமளா வெச்சிக்கிறதுதான் இல்ல?”
“நோ நோ, படத்தோட குறியீடு சொல்ற சங்கதி அது. அந்த சீன்ல, பூ விழுந்த உடனே, தேங்கிக் கிடக்கிற மழைத்தண்ணி லேசா அசைஞ்சு திரும்பவும் ரெண்டு பேரோட முகமும் தெரியுது பாருங்க, ஒரு பெண் ஒரு பூ. அவ வரவும் சலனம். அவளுக்குன்னா, ஒரு ஆடவன் பூ தர்றவன். அவன் வரவும் சலனம். கிளாஸ் இல்லை? அதுமட்டுமில்லை, பின்னாடி வரபோற கஷ்டங்களெல்லாம் தெளிஞ்சு அவஙக் நல்லா வாழ்வாங்கன்னு சொல்ற மாதிரி இல்லை?”
“அப்ப அந்த சீனோட படம் முடிஞ்சு போச்சுன்னு சொல்றீங்களா? நான் இது தெரியாம கடைசி வரை இருந்து முழுப்படத்தையும் பார்த்துட்டேனே.”
“சே சே. டைரக்டர் எவ்ளோ ரசிச்சி எடுத்திருக்கான் பாருங்கன்னு சொல்லவந்தேன்.”
“படம் நாம ரசிச்சு எடுக்கத்தான எடுக்கணும்? சரி, அதுக்கும் எதாவது சொல்வீங்க.”
“கதையாவது உங்களுக்குப் புரியுதா?”
“என்னங்க புரிய இருக்கு? ஒருத்தன் ஒருத்தியை லவ் பண்றான். அப்ப சுதந்திரப் போராட்ட காலம். ஒரு ஆங்கிலேய அதிகாரி அதை எதிர்க்கிறான். ஏன்னா அவனுக்கு இவ மேல ஒரு கண்ணு. இவன் அவனை ஏமாத்திட்டு கல்யாணம் பண்ணிக்கிறான். இதுல என்ன புரியாம இருக்கு?”
“இல்லைங்க, அப்படி நேரடியா பார்க்கக்கூடாது.”
“படம் பார்க்கும்போது நான் கொஞ்சம் கோணலா தலையை சாச்சுத்தான் பார்ப்பேன். வீட்டுலயே கிண்டல் பண்ணுவாங்க.”
“அதைச் சொல்லலை. ஒரு படத்தை படமா பார்க்கக்கூடாது.”
“ஐயையோ. 30 வருஷமா அப்படித்தானே பார்த்துட்டேன்.”
“அதுதான் உங்க பிரச்சினையே. இப்ப பாருங்க. ஹீரோ ஆங்கிலேய அதிகாரியை எதிர்க்கிறதை சும்மா காதலுக்காக எதிர்க்கிறான்னு நினைக்கக்கூடாது. இந்தியனைப் பொருத்தவரை பொண்ணுதான் மண்ணு. மண்ணுதான் நாடு. எனவே அவன் நாட்டுக்காக ஆங்கிலேய அதிகாரியை எதிர்க்கிறான்னு பாக்கணும்.”
“அடக்கோராமையே.”
“இதுல என்னங்க கோராமை. அப்படித்தாங்க படத்தை பார்க்கணும்.”
“ஆனா படத்துல அதை சொல்லவே இல்லையேங்க.”
“சொல்லமாட்டாங்க. படம்னா அது கேக்கிறதுக்கு இல்லை. பாக்கிறதுக்கு.”
“என்னங்க மொதல்ல நேரா பாக்ககூடாதுன்னீங்க, இப்ப கேக்கக்கூடாதுன்றீங்க. தியேட்டருக்கு போய் என்னதான் பண்றது?”
“கிண்டல் பண்ணாதீங்க சார்.”
“யாரு நானா?”
“சரி விடுங்க, இப்ப பாருங்க அது வெறும் காதல் கதையாவா தோணுது? ஏன் அதை சுதந்திரக் காலத்துல வெச்சான்னு யோசிங்க. காதல்ங்கிறது ஒரு குறியீடு இங்க.”
“இந்த குறியீடுன்றதுதாங்க எனக்கு புரியலை. படத்துல பாட்டு வருது, ஃபைட்டு வருது, அதெல்லாமேவும் குறியீடுதான்றீங்களா?”
“சே சே. அதெல்லாம் சும்மா சீனுங்க.”
“ஏங்க எப்ப குறியீடு வருது எப்ப சாதா சீன் வருதுன்னு எப்படி தெரிஞ்சுக்கறது? ஏன் இந்த டைரக்டர் குறியீடு வர்ற சீனெல்லாம் ஒரு ப்ளஸ் சிம்பல் போட்டுக் காமிக்கக்கூடாது?”
“இப்பத்தானே சொன்னேன், படம்ங்கிறது கேக்கிறது இல்லை, பார்க்கிறதுன்னு. நீங்களா யோசிக்கணும் சார்.”
“இல்லைங்க, நானும் ப்ளஸ் சிம்பலை காட்டத்தான் சொன்னேன், ப்ளஸ்னு சொல்லச் சொல்லலை.”
“கிண்டல் பண்ணாதீங்க சார். இன்னும் இது மாதிரி நிறைய சீன் இந்தப் படத்துல இருக்கு. ஒரு சீன்ல பாருங்க, அந்தப் பொண்ணோட அப்பா தற்கொலை பண்ணிக்கிற சீன்ல வெறும் கயிறு மட்டும் ஆடிக்கிட்டே இருக்கு பார்த்தீங்களா?”
“என்னது அவங்க அப்பா தற்கொலை பண்ணிக்கிட்டாரா?”
“ஏன் அதிர்ச்சியாகறீங்க? அவங்க அப்பாதானே?”
“அது இல்லைங்க, அந்த கயிறு ஆடற சீன்ல நானும் அப்படித்தான் நினைச்சேன். நினைச்சேனா. அடுத்த சீன் வந்தது. வந்ததா. அதுல பார்த்தீங்கன்னா அவங்க அப்பா உயிரோட வாரான். அப்பாடின்னு எனக்கு அப்பதான் உசிரே வந்தது.”
“தப்புங்க, உசிரே போயிருக்கணும்.”
“அது படம் முடியும்போது நடந்ததுன்னு வைங்க.”
“சே, நான் அதைச் சொல்லலைங்க. அந்த கயிறு ஆடும்போது அவன் செத்தான்னு நினைச்சீங்களா? அதுவரைக்கும் சரி. அடுத்த சீன்ல அவன் ஏன் உயிரோட வர்றான்? அதுக்குப் பிறகும் ஏன் கயிறு ஆடிக்கிட்டே இருக்கு? ஏன்னா அவன் செத்த பொணமா நடமாடறான்னு அர்த்தம்.”
“அடக்கோராமையே.”
“இதுல என்னங்க கோராமை இருக்கு. கயிறு ஏன் ஆடிக்கிட்டே இருக்கு, வீட்டுல அதை யாருமே அவுத்து எறியலையான்னு தோணுனா நீங்க சாதாரணமா பார்க்கிறீங்கன்னு அர்த்தம். ஆனா பாருங்க, அந்த வீட்டுல கயிறே இல்லை. கயிறுன்றது உங்க கற்பனை.”
“ஐயையோ இது பேய்ப்படமா அப்ப?”
“விளையாடாதீங்க சார். உண்மைல உங்க மூலமா படத்தை இயக்குநர் பார்க்கிறார். உங்களுக்கு அவன் செத்துட்டான்னு தோணனும்னு சொல்ல வர்றார். ஆனா பாருங்க அவன் சாகலை. அதாவது படத்தைப் பொருத்தவரைக்கும் சாகலை.”
“புரியலைங்க சார்.”
“இல்லைங்க இது ஒரு உத்தி.”
“மொதல்ல குறியீடுன்னு சொன்னீங்களே, அது மாதிரியா சார்?”
“இல்லைங்க அது குறியீடு. இது உத்தி.”
“ஓ.”
“இப்ப புரியுதா! என்ன உத்தின்னா, படத்தை படமாவும் பார்க்கணும். நீங்களாவும் பார்க்கணும். படத்துல உங்களுக்கே இடம் தர்றது.”
“இல்லைங்க, எனக்கு நடிப்பெல்லாம் வராது.”
“இல்லைங்க, பார்வையாளனா இடம் தர்றது. இது ஒரு உத்தி.”
“அந்நியன் படம் பார்க்கும்போதே நான் இப்படி பார்க்கலையேங்க.”
“அந்நியனெல்லாம் கேக்கிற படம். இது பார்க்கிற படம்.”
“அப்புறம் எதுக்குங்க இந்த படத்துல ம்யூசிக், பாட்டு, வசனமெல்லாம்.”
“குட் கொஸின். உண்மைல சொல்லப்போனா நீங்க ம்யூசிக், பாட்டு, வசனத்தையெல்லாம் கூட பார்க்கணும்.”
“என்ன சார் பயமுறுத்துறீங்க.”
“ஐமீன், அப்ர்சவ் பண்ணனும்னு சொல்லவந்தேன்.”
“அப்சர்வேஷனா? என்னங்க இது பேஷண்ட்டை ஐசியூல சேர்த்திருக்கிற மாதிரி சொல்றீங்க. வெறும் படம்தானே இது.”
“என்னங்க வெறும் படம்னு சொல்லிட்டீங்க. படம் முழுக்க குறியீடு உத்தின்னு கலக்கியிருக்காங்க. பின்நவீனத்துவப் படம். சாதா படத்தை பார்க்கிற கண்ணோட இதையும் பார்க்காதீங்க.”
“காதையும் கழட்டிட்டு கண்ணையும் கழட்டிட்டு நான் என்னத்தைங்க பார்க்கிறது.”
“வித்தியாசமான கண் ஐ மீன் கண்ணோட்டத்தோட பாருங்க. உங்களையும் ஒரு பிரதிக்குள்ள வெச்சிப் பார்க்க வைக்கிற படம் தமிழ்ல இதுதான் முதல்ல வந்திருக்கு. அதான் உங்க குழப்பமே.”
“பின் நவீனத்துவப் படம்னு என்னவோ சொன்னீங்களே, அப்படி ஒரு படம் வந்திருக்கா?”
“அது படம் பேரு இல்லைங்க. அது ஒரு உத்திங்க.”
“அதுவுமா?”
“பின்ன, ஒரு படம்னா சும்மா இல்லைங்க.”
“நான் நெஜமாவே சும்மான்னு நினைச்சுட்டேங்க.”
“அப்படி நினைக்காதீங்க. நீங்க வெறும் 60 ரூபாய் கொடுத்து பார்த்துடறதால உங்களுக்கு அப்படி ஒரு நினைப்பு வருது. இதுவே 6000 ரூபாய் கொடுத்து பார்த்தா இப்படி தோணுமா, யோசிச்சு பாருங்க.”
“ஐயையோ ஒரு படத்துக்கு 6000மா? நினைக்கவே நடுங்குதே. படம் நல்லா இல்லைன்னாகூட நான்லாம் நல்லா இருக்குன்னுதான் சொல்வேங்க.”
“எக்ஸாட்லி.”
“இன்னொரு சீன்ல ஒரு டவுட் எனக்கு. கேக்கவே ஒரு மாதிரி இருக்கு. ஆனாலும் உங்ககிட்ட கேளுங்க.”
“குட் குட் கமான். படத்தை இப்படி பேசிப் பேசித்தான் பார்க்கணும்.”
“தாயோளி, எங்க வீட்ல படம் பார்க்கும்போது பேசாத பேசாதன்னே வளர்த்துட்டானுங்க.”
“கூல், சரி, உங்க டவுட்டை கேளுங்க.”
“படத்துல கடைசி சீன்ல எல்லாம் முடிஞ்ச பின்னாடி ஏங்க பொண்ணோட அப்பா அழற மாதிரி வருது? நெஜமாவே புரியலை. நான்கூட அவர் தயாரிப்பாளரோன்னு நினைச்சேன்.”
“இல்லைங்க, ஒரு படைப்பு முடியும்போதுதான் தொடங்கணும்.”
“என்னங்க இது, முடியும்போது முடிஞ்சாத்தான படம் முடியும். தொடர்ந்தா எப்பத்தான் படம் முடியும்.”
“யூ ஸீ, நீங்க அப்ப வேறாளாயிடறீங்க. நீங்க படத்துல இல்லை. வெளியில இருக்கிறீங்க. படம் என்னவோ திரைல முடிஞ்சிடுது. ஆனா உங்க மனசுல உங்களுக்கு நீங்களே எடுக்கிற படம் முடியறதே இல்லை.”
“நான் படம்லாம் எடுக்கிறதில்லைங்க.”
“நோ நோ, அதைச் சொல்லலை. உண்மைல ஒவ்வொருத்தன்குள்ளையும் ஒரு படம் இருக்கு. ஒரே படம்தான், ஆனா ஒவ்வொருத்தர்குள்ளையும் ஒவ்வொரு மாதிரி இருக்குன்றேன்.”
“புரியலைங்க, ஆனா கேக்க நல்லா இருக்கு.”
“புரியும். அவன் ஏன் அழறான்னு நீங்க யோசிக்கும்போது உங்களுக்கு பல காரணங்கள் வரலாம். இன்னொருத்தருக்கு இன்னும் பல காரணங்கள் வரலாம். அப்ப ஒவ்வொருத்தர் குள்ளையும் பல விதமா படம் தொடருது. அதுக்குத்தான் டைரக்டர் அப்படி அந்த சீனை வெச்சிருக்கார்.”
“அவர் தயாரிப்பாளரோன்னு நினைச்சதை யோசிச்சா எனக்கே கேவலமா இருக்கு சார். எனக்கெல்லாம் பத்தாது சார். சரி சார், நீங்க யோசிச்சீங்களா சார், உங்களுக்கு என்ன என்ன காரணம்லாம் வந்தது?”
“ஸாரிங்க, நான் ரொம்ப வேலையா இருந்துட்டேன், யோசிக்கலை, ஆனா காரணம் இருக்கும்னு மட்டும் யோசிச்சிக்கிட்டேன். நீங்க சும்மாதானே இருக்கீங்க, யோசிச்சுப் பாருங்க.”
“ஆமா சார், நான்லாம் ரொம்ப வளரணும். இது தெரியாம பகடி படத்தை மொக்கைன்னு சொல்லிட்டேன். திரும்பப் போய் நல்லா இருக்குன்னு சொல்லவும் வெக்கமா இருக்கு.”
“நோ நோ, இதெல்லாம் இலக்கிய உலகத்தில் சாதாரணம்.”
“ஓ அப்படி ஒரு உலகம் இருக்கா சார். என்னை நினைச்சு எனக்கே கேவலமா இருக்கு சார்.”
“ஒரு படைப்பை முதல்ல நல்லா இல்லைன்னு சொல்லிட்டு, பின்னாடி அதுதான் உலகத் தரம்னு சொல்றதெல்லாம் இங்கே சகஜம். அதை மீள் பார்வை பண்ணனும். அவ்ளோதான்.”
“ஓ மீள் பார்வை இல்ல? நான் இன்னொரு தடவை பார்க்கணும்னு நினைச்சுக்கிட்டேன். படைப்பு இல்ல? சே, நான் படம்னு நினைச்சுட்டேன்.”
“வருத்தப்படாதீங்க. எல்லாம் சரியா வரும். மொத்தத்துல பகடி ஒரு உலகத் திரைப்படம்.”
“உலகத் திரைப்படமா? டைரக்டர் இதையாவது படத்துல சொல்லிருக்கலாம். நான் ஏதோ குன்னத்தூர் பொட்டைல இருக்கிற ஒருத்தன்ல கல்லுப்பட்டில இருக்கிற பொண்ணுக்காக ஆங்கிலேய அதிகாரியை எதிர்க்கான்னு நினைச்சுட்டேன்.”
“உலகத் திரைப்படம்னு சொல்லமாட்டாங்க. நாம்தான் அதை உலகத் திரைப்படம்னு புரிஞ்சிக்கணும். ஏற்கெனவே சொன்னேனே, ஒரு படம் அது படம் அதோட அது உங்க படம்னு.”
“ஆமா, சொன்னீங்கள்ல. உலக திரைப்படம்னா என்ன சார்.”
“உலகத் திரைப்படம்னா… வெல்… வாட் ஐ கேன் ஸே இஸ்… வெல். ஐ கேன் ஸே இட் அ வேர்ல்ட் மூவி. பிரிஸைஸ்லி வேர்ல்ட் சினிமா”
“வேல்ர்ட் சினிமான்னா?”
“வாட் டூ சே, யெஸ், எக்ஸாட்லி, வேர்ல்ட் கிளாஸ் சினிமா.”
“ஓ. நான் உலக திரைப்படமெல்லாம் பார்த்ததில்லைன்றதால எனக்கு சட்டுன்னு பிடிபடலை. இப்ப கொஞ்சம் பிடிபட்ட மாதிரி இருக்கு.”
“ஒரு படம் உலகத் திரைப்படமான்னு சொல்றதுக்கு நீங்க உலகத் திரைப்படமே பார்த்திருக்கவேண்டியதில்லைன்றதுதான் இதுல இருக்கிற ஐரனி.”
“ஓ ஐரனி. நாம இன்னும் நிறைய பேசணும் சார்.”
“பேசலாம் இல்லை பிரதர், விவாதிக்கணும். விவாதம். சரியா சொல்லணும், சரியா?”
“சரிங்க, நாம விவாதிப்போம்.”
“சரிங்க, இன்னொரு நாள் பார்ப்போம்.”
.
.
.
“என்ன சார் எப்படி இருக்கீங்க.”
“நீங்க சொன்னதெல்லாம் மனசுல வெச்சுக்கிட்டு நேத்தும் ஒரு படம் பார்த்தீங்க.”
“ப்ரில்லியண்ட். என்ன படம்.”
“மகுடின்னு ஒண்ணு வந்திருக்கே அது.”
“ஓ அதுவா, செம மொக்கையாச்சே.”
“அப்படித்தாங்க நானும் நினைச்சேன். ஆனா விடலை. கண்ணை மூடி கொஞ்ச நேரம், காதைப் பொத்தி கொஞ்ச நேரம், யோசிச்சுக்கிட்டே கொஞ்ச நேரம், படம் போனதே தெரியலைங்க. சட்டுன்னு முடிஞ்சிட்டு. செம விறுவிறுப்பு.”
“அடச்சே, அது செம மொக்கை படங்க. அதுல என்ன இருக்குன்னு சொல்றீங்க?”
“என்ன சார் இது. வில்லன் ஹீரோவை அடிக்கிறான். ஹீரோ தோத்துடறான். முந்தாநாள் வரை எனக்கும் இது சப்புன்னுதான் இருந்திருக்கும். ஆனா நீங்கதான் சார் ஒரு படத்தை பார்க்கச் சொல்லிக்கொடுத்தீங்க. தெய்வம் சார் நீங்க. ஹீரோ சேரிலேர்ந்து வர்றான். வில்லன் சிட்டி. சிட்டிக்காரன் சேரியை அடிக்கிறானான்னு யோசிச்சேன் பாருங்க, என் ரத்தமெல்லாம் பொங்கிட்டு. டைரக்டரை நினைச்சுக்கிட்டு ஒரு புல்லரிப்போட அப்படியே கையைத் தட்டுனேன் பாருங்க. பக்கத்துல இருக்கிறவனெல்லாம் மெர்சலாயிட்டான். நல்லவேளை, ஒண்ணு ரெண்டு பேர்தான் இருந்தான்னு வைங்க.”
“இல்லைங்க, இது நீங்களா யோசிக்கிறது. இதுல என்ன குறியீடு இருக்கின்றீங்க.”
“ஆமாங்க, சட்டுன்னு அந்த வார்த்தை ஞாபகத்துக்கு வரலை. குறியீடு. மனசுல வெச்சிக்கணும். என்னா குறியீடு இல்லை?!”
“இல்லைங்க, இதுல குறியீடே இல்லை. எல்லாப் படத்துலயும்தான இப்படி வருது?”
“ஏன், எல்லாப் படத்துலயும் குறியீடு வரக்கூடாதா சார்?”
“அப்படீன்னா அது கிளிஷே.”
“அது யாரு கிளிஷே? அதை நீங்க அன்னைக்கு சொல்லலியே.”
“இல்லைங்க, அது வேற சங்கதி. ஆனா இந்த மகுடி மரண மொக்கைங்க. பகடி மாதிரி வராது.”
“ஏன் அப்படி சொல்றீங்க?”
“இல்லைங்க, நீங்க அந்தப் படத்தோட டைரக்டர் யாருன்னு பார்த்துட்டுதான் குறியீடா கிளிஷேவான்னு பார்க்கணும்.”
“ஓ அப்படி வேற இருக்கா?”
“ஆமா, நீங்க நாளைக்கு வாங்க, நான் ஒரு லிஸ்ட் தர்றேன், அவங்க படத்துல மட்டும் நீங்க குறியீடு உத்தி பின்நவீனத்துவம் பார்த்தா போதும். மத்த படங்களெல்லாம் கிளிஷே.”
“இது கொஞ்சம் பெட்டரா இருக்குங்க.”
“நவ் யூ அர் கிளியர் ஐ கெஸ்.”
“ஆமாங்க.”
“இப்படியே பார்த்துப் பழகிட்டீங்க நீங்க என்னைவிடப் பெரியாளாயிடுவீங்க.”
“ரொம்ப சந்தோஷம் சார், ரொம்ப தேங்க்ஸ். லிஸ்ட்டை மறந்துடாதீங்க ப்ளீஸ்.”
[ஆப்த நண்பர் ஒருவர் கடல் திரைப்படத்தைப் பற்றிப் பேசும்போது, சாத்தான் தலைகீழாகத் தொங்கும்போது தேவன் தலைகீழாகத் தெரிகிறார் என்று எழுதியிருந்தார். அதை இன்னொரு ஆப்த நண்பரும் சிலாகித்திருந்தார். அப்போது ஏற்பட்ட கடும் மனநெருக்கடியின்போது எழுதியது இது. அந்த இரு நண்பர்களுக்கும் இதை அர்ப்பணிக்கிறேன். :>]
February 22, 2013
எட்டாண்டுகளுக்கு முன்பு மலையாளத்திரையுலகின் பிதாமகர் என்று சொல்லத்தக்க நடிகர்-இயக்குநர் ஒருவர் என்னிடம் சொன்னார். ‘மலையாள சினிமாவின் தொடக்கப்புள்ளிகள் மூன்று நாடார்கள். மூவருமே உங்கள் ஊர்க்காரர்கள். நீ மலையாள சினிமாவின் நாற்றங்காலில் இருந்து வந்திருக்கிறாய்…’
அவர் குறிப்பிட்டது ஜெ.சி.டானியல் நாடார், சுந்தர்ராஜ் நாடார், சத்யநேசன் நாடார் என்ற நடிகர் சத்யன். மூவரும் உறவினர்கள் என்பதும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்பதும் இன்னும் ஆச்சரியம்.

சத்யன்
1893ல் குமரிமாவட்டத்தில் அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தவர் ஜெ.சி.டானியேல். செல்வந்த நாடார் குடும்பத்தில் பிறந்தவர். அவரது அப்பா ஒரு அலோபதி மருத்துவர். நாகர்கோயிலில் உயர்நிலைப்படிப்பை முடித்து திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் இளங்கலைப்படிப்பை முடித்தார். அப்போது திருவனந்தபுரத்தில் காபிட்டால் என்ற திரையரங்கில் ஊமைப்படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவற்றில் மனம் ஈடுபட்ட அவர் திரைப்படக்கலையைப் படிப்பதற்காக சென்னைக்குச்சென்றார்.
ஆனால் சென்னை ஸ்டுடியோக்களுக்குள் அவரை அனுமதிக்கவில்லை. ஆகவே அங்கிருந்து மும்பைக்குச் சென்றார். மும்பையில் வெவ்வேறு படப்பிடிப்புநிலையங்களில் டானியேல் உதவியாளராகப் பணியாற்றினார். மெதுவாகத் திரைக்கலையைக் கற்றுத்தேர்ந்தார்.

ஜெ.சி.டானியேல் முதுமையில்
டானியேல் திருவனந்தபுரம் பேட்டை பகுதியில் ஒரு ஸ்டுடியோவை ஆரம்பித்தார். பனச்சமூடு பகுதியில் அவருக்குத் தாய்வழிச்சொத்தாகக் கிடைத்த நூறு ஏக்கர் தென்னந்தோப்பை விற்று இந்த ஸ்டுடியோவை அமைத்தார். திருவிதாங்கூர் நேஷனல் ஸ்டுடியோஸ் அங்கே அமைந்தது. அதுதான் கேரள மண்ணின் முதல் திரைப்படத் தயாரிப்பரங்கு.
டானியேலுக்கு எல்லாமே சவால்களாக இருந்தன. முக்கியமாகத் தொழில்நுட்பப் பயிற்சி உள்ள ஊழியர்கள் அமையவில்லை. அவர்களை சென்னையிலிருந்தும் மும்பையில் இருந்தும் கொண்டுவரவேண்டியிருந்தது. படப்பிடிப்பு நிபுணர்கள் லண்டனில் இருந்து வந்தனர். அவர் நினைத்ததைவிட ஆறுமடங்கு அதிகமாக செலவு இழுத்தது. ஆனால் பிடிவாதக்காரரான டானியேல் படநிறுவனத்தை முழுமையாக்கிப் படத்தையும் எடுத்துமுடித்தார்
நான்குலட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட ஊமைப்படமான விகதகுமாரன் கேரளத்தின் முதல்படம். கேரள வாழ்க்கையைக் காட்டிய முதல் படம் அதுவே. 1928இல் ஆரம்பித்த படப்பிடிப்பு முடிந்து 1930 அக்டோபர் 23 ஆம் தேதி திருவனந்தபுரம் காப்பிட்டோல் அரங்கிலும் நாகர்கோயில் பயோனியர் அரங்கிலும் படம் வெளியாகியது.
விகதகுமாரன் அல்லது The Lost child என்பது படத்தின் தலைப்பு. முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஒன்றை பூதநாதன் என்ற வில்லன் திருடிக்கொண்டு கொழும்பு சென்றுவிடுகிறான். அங்கே அந்தக்குழந்தையை ஒரு திருடனாக வளர்க்கிறான். திருடப்பட்ட சிறுவனின் தங்கை சரோஜம் அழகிய இளம்பெண்ணாக வளர்கிறாள். அவளை அந்த ஊருக்கு வரும் இளைஞன் சந்திரகுமார் காதலிக்கிறான்
மேல்படிப்புக்காக லண்டன் செல்லும் சந்திரகுமார் வழியில் கொழும்புவில் இறங்கும்போது பூதநாதனின் ஆட்களால் கொள்ளையடிக்கப்படுகிறான். பொருட்களை இழந்து கொழும்புவில் வேலைதேடி அலையும்போது காணாமல்போன இளைஞனான அவன் சந்திக்கிறான். இருவரும் சேர்ந்து பூதநாதனிடமிருந்து தப்புகிறார்கள். ஊர் திரும்பும் சந்திரகுமார் சரோஜத்தைக் காண்கிறான். அந்த இளைஞனின் முதுகில் உள்ள மச்சத்தைக்கொண்டு அது தன் அண்ணன் தான் என்று அறிகிறாள் சரோஜம். அவன் அம்மா வந்து கண்ணீருடன் மகனைக் கட்டிப்பிடிக்கிறாள்
அப்போது பூதநாதன் அங்கே வருகிறான். கடுமையான சண்டை நடக்கிறது. பூதநாதனை சந்திரகுமார் அடித்து வீழ்த்துகிறான். பூதநாதன் தப்பி ஓட சந்திரகுமாரும் சரோஜமும் மணம்செய்துகொள்கிறார்கள். படம் மங்கலமாக முடிகிறது. இதுதான் விகதகுமாரனின் கதை
இதில் சந்திரகுமார் ஆக டானியேலே நடித்திருந்தார். கதையும் அவருடையதே. இயக்கியதும் டானியேல்தான். படப்பிடிப்பு திருவனந்தபுரத்திலும் கொழும்புவிலும் நடந்தது. டானியேல் அக்காலத்தில் முறையாக அடிமுறை கற்றவர். ஆகவே படத்தில் நான்கு கம்புச்சண்டைக்காட்சிகளும் ஒரு கைச்சண்டையும் இடம்பெற்றிருந்தன.

விகதகுமாரனில் ஒரு காட்சி
படத்தின் கதைநாயகியாக நடிக்க அக்காலத்தில் பெண்கள் தயாராகவில்லை. நாயகிக்காக மும்பையில் இருந்து கொண்டுவந்த பெண்ணுக்குக் கேரளப்பெண்ணாக நடிக்கத்தெரியவில்லை. ஆகவே டானியேல் ரோசம்மா என்ற ஒரு புலையர் சாதிப்பெண்ணைக் கண்டடைந்தார். அவள் ஏற்கனவே மேடைகளில் குறவன் குறத்தி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தவள். அவளை நாயகியாக நடிக்கவைத்தார். அவளுக்கு ரோசி என்று பெயர் சூட்டினார்.
படம் வெளியான முதல்நாளே பெரும் எதிர்ப்பைச்சந்தித்தது. படத்தில் ஒரு புலையப்பெண் நாயர்பெண் போல உடையும் நகைகளும் அணிந்து நடிப்பதைக் கண்டு நாயர்களும் நம்பூதிரிகளும் கொதித்தெழுந்தார்கள். விகதகுமாரன் வெளியீட்டுக்கு வந்திருந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் மள்ளூர் கோபித்துக்கொண்டு அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்தார். கேரளம் முழுக்க முதல்நாளே படம் நிறுத்தப்பட்டுவிட்டது.
பெரும் நஷ்டத்தைச் சந்தித்த டானியேல் கடன்காரர்களுக்குப் பதில் சொல்லமுடியாமல் மதுரைக்குத் தப்பி ஓடினார். அங்கே யாருக்கும்தெரியாமல் வாழ்ந்தார். அப்போது பல்மருத்துவம் கற்றுத் தேர்வெழுதி வென்று மருத்துவராக ஆனார். காரைக்குடியில் மருத்துவராகப் பணியாற்றினார். மீண்டும் வாழ்க்கை சீரடைந்தது
அப்போது அவரிடம் பல்மருத்துவம் செய்வதற்காக வந்த பிரபல நடிகர் பி.யூ.சின்னப்பா டானியேலை திரைப்படத்துறைக்கு வருமாறு அழைத்தார். வற்புறுத்தி சென்னைக்குக் கொண்டுசென்றார். ஆனால் அங்கே சின்னப்பாவைச்சுற்றி இருந்த ஒரு கும்பலும் சின்னப்பாவும் சேர்ந்துகொண்டு டானியேலின் மொத்தப்பணத்தையும் பிடுங்கிக்கொண்டு துரத்தியடித்தனர். அதே கும்பல் பின்னாளில் சின்னப்பாவையும் அனாதையாகத் துரத்தியடித்தது.
இரண்டுவருடம் நாடோடியாக அலைந்தபின் டானியேல் மனைவியிடம் வந்துசேர்ந்தார். அவரது மனைவி பெயர் ஜேனட். அவருக்கு நான்கு மகன்கள். அகஸ்தீஸ்வரத்திலும் நாகர்கோயிலிலும் டானியேல் பல்மருத்துவராகப் பணியாற்றினார். பிள்ளைகள் வெளியூருக்குப் பணிக்குச்சென்றார்கள். குடிப்பழக்கமிருந்தமையால் மிச்சமிருந்த பணத்தையும் இழந்து கடைசிக்காலத்தில் வறுமையால் மிகவும் வாடினார்.
அப்போது டானியேல் கேரள அரசின் நலிந்த திரைக்கலைஞர்களுக்கான பென்ஷனுக்காக விண்ணப்பம் செய்தார். அவர் எடுத்தபடம் மலையாளப்படம் அல்ல என்றும், அவர் கேரளத்தில் வாழ்கிறார் என்றும் சொல்லி அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. திட்டமிட்டு அவரை நிராகரித்தவர் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான மலையாற்றூர் ராமகிருஷ்ணன். அது முழுக்கமுழுக்க சாதிப்பற்றின் விளைவு. முதல் மலையாளப் படம் என்று சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம் எடுத்த பாலன் என்ற படத்தையே அதுவரையிலான வரலாறு சுட்டிக்காட்டிவந்தது. சுந்தரம் அய்யர், ராமகிருஷ்ணனும் அய்யர். அந்த வரலாறு மாற்றப்படுவதை மலையாற்றூர் ராமகிருஷ்ணன் விரும்பவில்லை.
டானியேலைப்பற்றி கேள்விப்பட்டு அவரைப்பற்றித் தொடர்ந்து எழுதி அவர்தான் மலையாள சினிமாவின் முதல்வர் என்பதை நிறுவப் பாடுபட்டவர் இதழாளரும் எழுத்தாளருமான சேலங்கோட்டு கோபாலகிருஷ்ணன் என்பவர். பாடலாசிரியர் வயலார் ராமவர்மாவும் முன் முயற்சி எடுத்துக்கொண்டார். ஆனால் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் பதவியில் இருக்கும் வரை எதுவும் நடக்கவில்லை. விகதகுமாரனின் பிரதி அழிந்துவிட்டது. டானியேலிடம் இருந்தது அந்தப்படத்தின் சில புகைப்படங்களும் விளம்பரப்பிரசுரங்களும் மட்டும்தான். அவற்றை மலையாற்றூர் ஏற்றுக்கொள்ளவில்லை.
1975இல் டானியேல் தன் 78 ஆவது வயதில் ஆதரவற்ற முதியவராகக் காலமானார். அதற்கு அடுத்தவருடம் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் பதவி விலகியபின் கேரள அரசின் கவனத்துக்கு டானியேலின் வரலாற்றைக் கொண்டு செல்லமுடிந்தது. அப்போது பதவிக்கு வந்த ஏ.கே.ஆண்டனியின் அரசு டானியேலின் விதவையான ஜேனட்டுக்கு ஓய்வூதியம் அளிக்க ஆணையிட்டது. டானியேலின் பங்களிப்பு வரலாற்றிலும் இடம்பெற்றது.
1992இல் கேரள அரசின் திரைப்பட வளர்ச்சி நிறுவனம் அளிக்கும் வாழ்நாள் சாதனைக்கான திரைவிருதுக்கு ஜெ.சி.டானியேல் விருது என்று பெயரிடப்பட்டது. டானியேல் இன்று மலையாளத் திரையின் முதல்வராக, பிதாமகராக வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார்.

சுந்தர் ராஜின் மார்த்தாண்டவர்மாவில் ஒரு காட்சி
ஏ.சுந்தர்ராஜின் கதையும் வேறல்ல. அவர் 1933இல் மலையாளத்தின் முதல்பேசும்படமான மார்த்தாண்ட வர்மாவை எடுத்தார். வி.வி.ராவ் படத்தை இயக்கினார். ராஜேஸ்வரி ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்காக அக்காலத்தில் இரண்டு லட்சம் ரூபாய் செலவில் சுந்தர்ராஜ் இந்தப்படத்தை எடுத்தார். இதுவும் ஒரேஒரு நாள்தான் ஓடியது. இப்படத்தின் கதை சி.வி.ராமன்பிள்ளை எழுதியது என்றும் உரியமுறையில் அனுமதிபெறாமல் படம் எடுக்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டிப் படத்துக்கு எதிராக அந்நாவலை வெளியிட்ட நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது. தடைபெற்றுப் படப்பெட்டிகளைக் கைப்பற்றியது. நொடித்துப்போன சுந்தர்ராஜ் ஊரைவிட்டு ஓடினார். நாகர்கோயிலில் முதியவயதில் கைவிடப்பட்டவராக இறந்தார்.
நல்லவேளையாக மார்த்தாண்டவர்மாவின் பிரதி சேலங்கோட்டு கோபாலகிருஷ்ணனால் மீட்கப்பட்டது. பதிப்பகம் மூடப்பட்டபின் அந்தத் திரைப்படப்பிரதி அவர்களின் கிடங்கில் கைவிடப்பட்டுக் கிடந்தது. சுந்தர்ராஜுக்குத் தன் படத்தின் மதிப்பு தெரிந்திருந்தமையால் நாற்பதுவருடங்களுக்குமேல் அவர் வருடம்தோறும் வந்து அந்த ஃபிலிமை சுத்தம்செய்து கொடுத்துவிட்டு செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். ஆகவே படம் பெரும்பாலும் தப்பித்தது.
சுந்தர்ராஜின் படமும் சாதிவெறியால்தான் தடுக்கப்பட்டது என்பது இன்று தெரிகிறது. அவர் எடுத்தது சி.வி.ராமன்பிள்ளையின் கதையை அல்ல. அன்று கேரளநாட்டார்வழக்கில் பிரபலமாக இருந்த மார்த்தாண்டவர்மாவின் தொன்மத்தைத்தான். அந்த தொன்மத்திற்கு சி.வி.ராமன்பிள்ளை உரிமைகொண்டாட முடியாது. ஆனால் அதை அன்றைய நீதிமன்றம் கருத்தில்கொள்ளவில்லை.
மலையாற்றூர் ராமகிருஷ்ணன் டானியேலை அங்கீகரிக்க மறுத்தது அவர் எடுத்தபடம் கிடைக்கவில்லை என்பதற்காக. ஆனால் மார்த்தாண்டவர்மா கிடைத்தபோதும் அதை அவர் கண்டுகொள்ள மறுத்தார். படத்தை பூனா ஃபிலிம் ஆர்கைவ்ஸ் வாங்கச்செய்வதில் சேலங்கோட்டு கோபாலகிருஷ்ணன் வெற்றிபெற்றார்
மூன்றாவது நாடாரான சத்யன் முதல் இருவருக்கு மாறாகத் திரைப்படத்தில் பெரும் வெற்றி பெற்றார். மலையாளத்திரையுலகின் அரசன் என்று அறியப்பட்டார். ‘சத்யனின் சிம்மாசனம்’ என்ற சொல்லாட்சியே மலையாளத்தில் உள்ளது. ஒரு நடிகர் நன்றாக நடித்தால் அவர் அந்த சிம்மாசனத்தில் சற்று நேரம் அமர்ந்திருந்தார் என்று சொல்வார்கள்.
*

ஜே.சி.டானியேலின் வாழ்க்கையைப்பற்றி சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் எழுதிய நூல், ஆர்.கோபாலகிருஷ்ணன் எடுத்த ஆவணப்படம் , ரோசியைப்பற்றி வினு ஆரகாம் எழுதிய ‘ நஷ்டநாயிகா’ என்னும் நாவல் ஆகியவற்றின் அடிப்படையில் கமல் திரைக்கதை எழுதி இயக்கிய ‘செல்லுலோய்ட்’ ஜெ..சி.டானியேலுக்கு மிக ஆத்மார்த்தமாக அளிக்கப்பட்ட மகத்தான நன்றியறிவிப்பு எனலாம்.
சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் [ஸ்ரீனிவாசன்] தற்செயலாக டானியேலைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தேடிச்சென்று அகஸ்தீஸ்வரத்தில் சந்திக்கிறார். மனக்கசப்படைந்து இருக்கும் டானியேல் முதலில் அவரை சந்திக்க விரும்புவதில்லை. மரியாதையுடன் திருப்பியனுப்புகிறார். சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் அவரது மனைவி ஜேனட்டிடம் ஒரு நீண்ட பேட்டி எடுக்கிறார். ஜேனட் அந்தப்படம் எடுக்கும்போது கூடவே இருந்தவர்
பேட்டி பிரசுரமானதை வாசித்துக்கேட்ட டானியேல் கோபாலகிருஷ்ணனை வரச்சொல்லிக் கடிதமனுப்புகிறார். தன்னுடைய திரைமுயற்சியைப்பற்றி விரிவாகச் சொல்கிறார். ஜேனட்டும் அவரும் உற்சாகமான இளமையுடன் திருவிதாங்கூர் நேஷனல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்கள். நடிக்க ஆளில்லாமல் ரோசம்மாவைக் கண்டுபிடித்து அவளுக்குப்பயிற்சி கொடுத்து நடிக்கச்செய்கிறார்கள். அவள் பெயரை ரோசி என்று மாற்றுகிறார்கள்.
படம் வெளியானபோது சாதிவெறியர்களின் கடும் எதிர்ப்பு உருவாகிறது. படம் நிறுத்தப்படுகிறது. டானியேல் கடனாளியாக மதுரைக்குச்செல்கிறார். ரோசியின் வீட்டை எரித்து அவள் தந்தையைக் கடுமையாகத் தாக்குகிறார்கள் உயர்சாதியினர். தப்பி ஓடி இருளில் மறைகிறாள் ரோசி.[ ரோசி அதன்பின் செய்திகளில் வரவே இல்லை. அவளை ஒரு லாரி ஓட்டுநர் சாலையில் கண்டெடுத்து மணம் புரிந்துகொண்டதாகவும் 1970 வரை நாகர்கோயிலில் வாழ்ந்ததாகவும் ஒரு பேச்சு உண்டு]
மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி அவள் நடித்த படத்தைப்பார்க்க திரையரங்கில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. தன் முகம் திரையில் தெரிவதை அவள் பார்க்கவேஇல்லை. அன்றைய இரவில் மறைந்த அவள் பின்னர் வெளிவரவும் இல்லை. இந்த உண்மைக்கதையில் இருக்கும் வரலாற்றுசோகம் படத்தில் அற்புதமாகப் பதிவாகியிருக்கிறது.
டானியேலை வெளிச்சத்துக்குக் கொண்டுவர சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் முயல்கிறார். வறுமையில் வாடும் டானியேலுக்கு ஒரு பென்ஷனாவது வாங்கிக்கொடுக்கலாமென நினைக்கிறார். ஆனால் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் அதை எல்லாவகையிலும் தடுக்கிறார். மலையாற்றூர் ராமகிருஷ்ணன் இப்படத்தில் பெயர்சொல்லப்பட்டு நேரடியாகக் குற்றம் சாட்டப்படுகிறார். ‘நீங்களும் அய்யர் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரும் அய்யர்…அதுதான் இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் இல்லையா?’ என சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் நேரடியாகக் கேட்பதுபோலவே படத்தில் காட்சி இருக்கிறது
இடதுசாரியாக இருந்த மலையாற்றூரின் சாதிய நோக்கு முன்னரே சிலரால் சொல்லப்பட்டுவிட்டதுதான். சேலங்காட்டு கோபாலகிருஷ்ணனின் நூல் நாற்பதாண்டுகளுக்கு முன்னரே அதை நிறுவியும் விட்டது. ஆனால் சினிமா என்ற மாபெரும் ஊடகத்தின்மூலம் கேரளத்தின் முக்கியமான எழுத்தாளராகிய மலையாற்றூர் முழுமையாகவே அழிக்கப்பட்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும். இனி அவரது எந்தப்படைப்பும் இயல்பான வாசிப்பைப் பெறமுடியாது. வருத்தமான விஷயம்தான் , ஆனால் வரலாறு ஈவிரக்கமற்றது.இனி எஞ்சிய நாள் முழுக்க டானியேல் ஒளியையும் மலையாற்றூர் இருளையும் பெறுவார்கள்!
டானியேல் அனாதையாக இறக்கிறார். அவர் இறந்தபின் அவர் அங்கீகரிக்கப்படுகிறார். அவரது தந்தையைப்பற்றிய ஆவணப்பட வெளியீட்டுவிழாவில் அவரது கடைசி மகன் ஹாரீஸ்நாடார் மேடையேறுகிறார். அந்த நாள் வரை அவர் தன் தந்தையைப் பொறுப்பில்லாத ஊதாரி என்று வெறுத்துவந்ததாகவும் அந்தமேடையில்தான் அவர் எப்படிப்பட்ட மாமனிதர் என்று தெரியவந்ததாகவும் ஹாரீஸ் சொல்கிறார்.
அந்தப்படச்சுருளை இளமையில் தீவைத்துக் கொளுத்தியவர் ஹாரீஸ்தான். ஆனால் அதற்காக வருந்தினாலும் டானியேல் மகனின் கோபத்தைப் புரிந்துகொள்கிறார். ஒருபோதும் அதை தன் மகன் அழித்தான் என்று அவர் சொல்லவில்லை. பல நிருபர்கள் கேட்டும்கூட அது அழிந்துவிட்டது என்று மட்டுமே சொன்னார், மகன் தீவைத்ததைச் சொல்லி அதை வரலாறாக ஆக்கவில்லை. அவர் புறக்கணிக்கப்பட்டதும் அங்கீகாரமில்லாமல் இறந்ததும் அந்தப் படம் அழிந்தமையால்தான்.
மேடையில் ஹாரீஸ் அப்படிப் படத்தை அழித்தவன் தானே என்கிறார். கண்ணீருடன் தன் தந்தையை அப்போது வெறுத்ததாகவும் இப்போது புரிந்துகொள்வதாகவும் சொல்கிறார். படம் மகனின் கண்ணீரில் முடிகிறது. அது மலையாள சினிமாவில் இன்றிருக்கும் அனைவரின் கண்ணீரும்தான். அனைவருமே டானியேலின் பிள்ளைகள் அல்லவா?
டானியேலாகவும் ஹாரீஸாகவும் பிரிதிவிராஜ் அற்புதமாக நடித்திருக்கிறார். ஒருவேளை அவரது திரைவாழ்க்கையின் மிகச்சிறந்த படம் இதுவாகத்தான் இருக்கும். இளமையில் கற்றறிந்த இளைஞனாக உற்சாகமும் துருதுருப்புமாக இருக்கும் டானியேல், பின் நொடித்துப்போய்க் கலங்கும் டானியேல், மீண்டு எழும் டாக்டர் டானியேல், கடைசியில் கைவிடப்பட்டு அனாதையாக சாகும் முதிய டானியேல். ஒவ்வொரு முகமும் மிகையற்ற கச்சிதம்.
டானியேலின் மனைவி ஜேனட் ஆக மம்தா மோகன்தாஸ் அழகாக நடித்திருக்கிறார். மற்ற சிறு கதாபாத்திரங்கள் எல்லாமே கச்சிதம். வயலார் ராமவர்மாவாக நடிப்பவரும் சரி மலையாற்றூராக நடிப்பவரும் சரி அப்படியே அவர்களின் சாயலில் இருக்கிறார்கள்.
படத்தின் மிகச்சிறந்த இன்னொரு நடிப்பு ரோசியாக நடிக்கும் புதுமுகம் சாந்த்னி. இந்த வரலாற்றுப்படத்தின் உணர்ச்சிமிக்க ஓர் அத்தியாயம் ரோசியின் வாழ்க்கை. தீண்டாமை உச்சத்தில் இருந்த காலகட்டத்தைச்சேர்ந்த புலையப்பெண் அவள். நகைகளோ நல்ல உடைகளோ அவளால் கனவில் கூட அடைய முடியாதவை. சட்டென்று அவை எல்லாமே அவளைத்தேடிவருகின்றன. தனக்களிக்கப்பட்ட உடைகளை உடைமாற்றும் அறையில் இருளில் நின்று மார்போடு அணைத்து அழும் ரோசி ஒரு மகத்தான கதாபாத்திரம்
சினிமா நவீன உலகம். அங்கே தீண்டாமை இல்லை. அங்கே ரோசி ஒரு நடிகை. ஆனால் ரோசியால் அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நாற்காலியில் அமர முடியவில்லை. ஏன் சோறுகூட சாப்பிடமுடியவில்லை- கஞ்சி போதும் என்கிறாள். மெல்லமெல்ல அவள் அதற்குள் வந்து சேரும்போது படம் முடிகிறது. கனவு கலைகிறது. ரோசிக்கு ஊதியம் வழங்கி அவளை அனுப்பும்போது ஜேனெட் அவளுக்கு அவளுடைய உடைகளை அளிக்கிறாள். நாயர்பெண்ணாக வாழ்ந்த ரோசி புலையப்பெண்ணாக மீண்டும் மாறிக் கண்ணீருடன் விடைபெறுகிறாள். கனவு நினைவில் எஞ்சியிருப்பதுபோல அந்த உடை கையில் இருக்கிறது
தன்னுடைய சினிமாவைப்பார்க்க காபிடோல் திரையரங்குக்குச் செல்கிறாள் ரோசி. அவளை வற்புறுத்திக் கூட்டிவந்தவர் டானியேல்தான். ஆனால் தலைமைதாங்க வந்த வழக்கறிஞர் மள்ளூர் கோபித்துக்கொள்ளவே ரோசி உள்ளே விடப்படவில்லை. தன் முகத்தைத் திரையில் பார்க்கும் அதிருஷ்டம் அவளுக்குக் கிடைக்கவில்லை. அன்றிரவே வீடு கொளுத்தப்பட்டு அவள் துரத்தியடிக்கப்படுகிறாள். சினிமா என்னும் கனவு, தொழில்நுட்பம் உருவாக்கிய மாபெரும் மாற்று யதார்த்தம், அழிகிறது.
அழியவில்லை, அந்த வரலாற்றுக்கணத்தில் அது பிறக்கிறது என்று காட்டுகிறார் கமல். நுணுக்கமான இயக்கம் கொண்ட படம் இது. ஒவ்வொரு காட்சியிலும் செலுத்தப்பட்டிருக்கும் கவனம் குறியீட்டு ரீதியாக மேலும் மேலும் வாசிக்கப்படவேண்டியது.
உதாரணமாகத் திரைப்படத்திற்குள் நிகழும் யதார்த்தமும் வெளியே உள்ள சமூக யதார்த்தமும் தலைகீழாக இருப்பதைக் காட்டும் காட்சிகளைச் சுட்டிக்காட்டலாம். ’இப்போது ஏன் குத்துவிளக்கு, இது பகல் அல்லவா?’ என்கிறார் ஒருவர் படப்பிடிப்பின் போது. ‘சினிமாவுக்குள் இது இரவு’ என்கிறார் தொழில்நுட்பம் தெரிந்தவர். அங்கே புலையப்பெண் உயர்சாதிப்பெண்ணாக வந்து நிற்கிறாள். இங்கே அந்த ஆச்சரியம் தாளாமல் தவிக்கிறார்கள் பிறர்.

டானியேல் முதல்முறையாக ஃபிலிமைக் காணும் காட்சி அதை முழுமைசெய்கிறது. எல்லாக் காட்சியும் அதற்குள் தலைகீழாக இருக்கிறது. அவரது முகம் மலர்கிறது. ஆம், அவர் தான் கண்ட சமூக யதார்த்தத்தைத் தன் கலைக்குள் தலைகீழாக ஆக்கிவிட்டிருக்கிறார்.
அப்பாவின் நினைவுக்கூட்டத்துக்காக வரும் ஹாரீஸ் நாடார் வெளியே மோகன்லாலின் மசாலாப்படம் வெளியான அன்று பெட்டியுடன் நடனமிடும் ரசிகர் கும்பலைக் கண்டு திகைத்து பின் மெல்ல புன்முறுவல் செய்யும் காட்சி அதைப்போல மிக கவித்துவமானது.
படத்தின் அப்பட்டத்தன்மை மலையாளசினிமாவுக்கே உரியது. எல்லா வரலாற்றுமாந்தர்களும் குறைநிறைகளுடன் அப்படியே வருகிறார்கள். ‘தெரியாமல் முன்னோடியாக ஆகிவிட்டேன்…மன்னிக்கணும் மன்னிக்கணும்’ என்று நோய்ப்படுக்கையில் கைகூப்பும் சுந்தர்ராஜ் ஓர் எல்லை. மறுபக்கம் பி.யூ.சின்னப்பா ஒரு ஏமாற்றுப்பேர்வழியாக வருகிறார்.
மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு மிகச்சிறந்த கலை இயக்கம் அமைந்திருக்கிறது. 1930 முதல் 1980 வரையிலான காலம் சரியாகவும் அழகாகவும் காட்சிக்குள் வந்திருந்தது. கலை இயக்குநர் . இந்தப்படத்தின் சிறப்பான அம்சம் இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான வேணுவின் அற்புதமான ஒளிப்பதிவு. காலங்கள் வழியாக உணர்வுகள் வழியாக ஒழுகிச்செல்லும் அனுபவத்தை அளிக்கிறது இது.
திரைப்படங்கள் ஒவ்வொன்றையும் ஒரு ’ஃபிலிம் பிரேம்’ என்று உவமிக்கலாம். சமகாலம் என்பது அந்த புரஜக்டரின் ஒளிச்சட்டம். அந்தச் சதுரத்தின் வழியாக அவை வேகமாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. கணநேரம் மட்டுமே அவற்றின் ஆயுள். தன்னைக் காட்சியாக விரித்ததுமே அடுத்ததற்கு இடம் விட்டு அவை மறைகின்றன. ஆனால் அவற்றில் ஆயிரத்தில் ஒன்று நிரந்தரம் பெறுகிறது. விளக்கொளியில் எப்போதுமிருக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் ஒன்று இது.
மரணப்படுக்கையில் டானியேல் கிடக்கிறார். மார்பைத் தடவிக்கொடுக்கிறார் ஜேனெட். எதிர்ச்சுவரில் இரவின் ஒளியில் நிழல்கள் ஆடுகின்றன. அதை ஒரு சினிமாவாகப் பார்த்துக்கொண்டே இறக்கிறார் டானியேல். அந்த ஒரு காட்சி மலையாள சினிமா உள்ளவரை அழியாமலிருக்கும்.
![]()
படம் பார்த்தபின் இயக்குநர் கமலிடம் தொலைபேசியில் பேசினேன். ’உங்கள் கருத்துக்காக எதிர்பார்த்திருந்தேன்’ என்று சொன்னார். ’ஒரு குமரிமாவட்டத்தினனாகப் பெருமைப்படுகிறேன். நன்றி சொல்கிறேன்’ என்று சொன்னேன்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
நான் சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். சென்னைஅடையார் பிலிம் இன்ஸ்டிட்டில் 1972-ல் சேர்ந்தேன். 1975-ல் படிப்பை முடித்தேன். ருத்ரய்யா என் வகுப்புத் தோழர். அவர் எங்கள் ஊருக்கு அருகில் தலைவாசலைச் சேர்ந்தவர். அவரது டிப்ளமோ படத்துக்கு நான்தான் காமிரா. படிப்பை முடித்த பின் டெல்லி தூர்தர்ஷனில் கொஞ்ச நாள் வேலைபார்த்தேன். பின் சென்னைக்கு திரும்பி வந்து இங்கே தூர்தர்ஷனில் சேர்ந்தேன். ருத்ரய்யாவும் அங்கே பணியாற்றினார். 78-ல் சேலத்தில் இருந்து ஒரு ப்ரொட்யூசர் வந்திருந்தார்.
தி.ஜானகிராமனின் அம்மா வந்தாளை படமாக எடுக்க நினைத்தோம். கமல் நடிப்பதாக இருந்து அது பின்னர் கைவிடப்பட்டது. இதற்கிடையில் ருத்ரய்யாதான் அவள் அப்படித்தான் படத்துக்கான் கருவினைச் சொன்னார். சோம சுந்தேரேஷ்வர் (ராஜேஷ்வர்) என்கிற எங்கள் திரைப்படக் கல்லூரி நண்பர் அதற்கு ஒன்லைன் தயார் செய்தார். அதை அனந்துவிடம் கொடுத்தோம். திரைக்கதையை ராஜேஷ்வர் எழுத பெரும்பாலும் வசனங்களை அனந்து எழுதினார். மீதியை வண்ணநிலவன் எழுதினார்.பாடல்களையும்அவரையேஎழுதச்சொன்னோம். அவர்மறுத்துவிட்டார்.
அப்போது வளர்ந்து வரும் நடிகையாக இருந்த படாபட் ஜெயலட்சுமியை தெரிவு செய்தோம். அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால் கமல் பிஸியாக இருந்தார். அவர் எப்போது ஓய்வாக இருக்கிறாரோ அப்போது தான் நாங்கள் படமெடுக்க முடியும் என்கிற நிலை. எங்களால் தேதிகளைக் கூற முடியாததால் படாபட் ஜெயலட்சுமியை நடிக்க வைக்க முடியவில்லை.
ஸ்ரீப்ரியாவை நடிக்க வைக்கலாம் என்று கமல் கூறினார். அப்போது அவரது ஆட்டுக்கார அலமேலு மிகபெரிய ஹிட். அவரே போன் செய்து ஸ்ரீப்ரியாவிடன் எங்களைக் கதைசொல்ல அனுப்பினார். நானும் ருத்ரய்யாவும் சென்றோம். அவர்ஒப்புக்கொண்டார். சம்பளம்எப்படிஎன்றோம். சொல்லிஅனுப்புகிறேன்என்றார். மேடம்ஒருலட்சரூபாய்வாங்குகிறார். இப்படத்துக்கு 30,000 ரூபாய்கொடுத்தால்போதும்என்றுதகவல்வந்தது. ஒப்புக்கொண்டோம். கமல்தான் இளையராஜாவையும் இப்படத்துக்கு புக் செய்தார். இது மட்டுமல்ல படத்துக்காக பலவிஷயங்களை கமல்தான் செய்தார்.
இப்படத்துக்கு கமலுடன் ரஜினியையும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று அனந்து சொன்னார். அனந்து, கமல் ரஜினியுடன் நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் சென்றார். அங்கேயே பேசி ரஜினியும் சம்மதித்தார். யாருக்கும் நாங்கள் அட்வான்ஸ் கொடுக்கவில்லை. பூஜை போட்டோம். அப்போதெல்லாம் இசையமைப்பாளர்கள் பட ஆபீசுக்கே வருவார்கள். ஆழ்வார்ப் பேட்டையில் அலுவலகம் போட்டிருந்தோம். எங்கள் அலுவலகத்தில் பேன் கிடையாது. மறுநாள் இளையராஜா வரப்போகிறார் என்பதால் முதல் நாள் மாலையே பேன் வாங்கிமாட்டினோம். ஆனால் இளையராஜா வந்தபோது மின்சாரம் இல்லாமல் போய்விட்டது.
மூன்று பாடல்கள் கம்போசிங். கண்ணதாசனை வைத்து பாடல்கள் எழுதலாம் என்று தீர்மானித்தோம். எங்கள் அலுவலகத்துக்குப் பக்கமே கண்ணதாசன் நடத்திய கவிதா ஹோட்டல். அங்குதான் கவிஞர் இருப்பார். இசையமைப்பாளர்கள் அங்கே செல்வார்கள். அங்கே இளையராஜா வேறு ஒரு பாடல் கம்போசிங்கிற்காக வருகிறேன். அங்கேயே வந்து விடுங்கள் என்றார். நடந்தே சென்றோம்.
பிரம்பு நாற்காலியில் பனியன் போட்டுக் கொண்டு கவிஞர் அமர்ந்திருந்தார். அவரிடம் வசந்தகாலக் கோலங்கள்.. வானில் விழுந்த கோடுகள் பாட்டு போல எங்களுக்கு வேண்டும் என்றோம். அவர் ஒரு 20 பல்லவிகளை எங்களுக்குச் சொன்னார். எதுவுமே பிடிக்க வில்லை. எங்களுக்கு முழு திருப்தி இல்லையென்றாலும் ‘வாழ்க்கை ஓடம் செல்ல’ பல்லவியைத் தேர்ந்தெடுத்தோம். பாட்டெழுதிக் கொடுத்தார். படம் வெளியாகி ப்ளாப் ஆனதும் இப்படி ஒரு அபசகுனமான பாட்டை முதலில் எழுதினால் இப்படித்தான் ஆகும் என்று கூடச் சொன்னார்கள்.
சோவின் தம்பி அம்பியின் பள்ளியில் முதல் இரண்டு நாட்கள் இந்த பாட்டை எடுத்தோம். அடுத்து ஸ்ரீப்ரியா படப்பிடிப்பு. அவர் முதல் நாள் சேர் கொண்டு வந்திருந்தார். ஆனால் எங்கள் படப் பிடிப்பு விதமோ வழக்கத்தில் இருந்து வேறுபட்டு இருந்தது. அங்கே யாருக்கும் சேர் இல்லை. அவர் புரிந்து கொண்டு மறுநாள் முதல் சேர் கொண்டு வரவில்லை. எங்களுடனே அவரும் தரையில் அமர்ந்து கொண்டார். சாப்பாடும் நாங்கள் ஆழ்வார்ப் பேட்டையில் ஒரு மெஸ்ஸில் சாப்பிடுவோம். அங்கிருந்து தான் உணவு வரும். லோ பட்ஜெட் படம். சுமாரான சாப்பாடு தான். அதைத் தான் கமல் உள்பட எல்லோரும் சாப்பிட்டார்கள்.
ரஜினி, கமல், நடிகர்கள் என்ன ஆடை அணிந்து படப்பிடிப்புக்கு வருகிறார்களோ அதுதான் அவர்களுக்கு அன்று ஆடை. ஆடை வடிவமைப்பாளர் என்று யாரும் இல்லை. மேக்கப்பும் இல்லை. எங்களுக்கு எப்போது என்ன எடுப்போம் என்றே தெரியாது. திடீரென்று போன்வரும். இன்னிக்கு கமல் ப்ரீயாக இருக்கிறார். எதாவது காட்சி எடுக்கலாமே என்று. உடனே மற்ற நடிகர்கள் யார் ப்ரியாக இருக்கிறார்கள் என்று பார்த்துஅவர்களைஅழைத்துஅனந்துசாரிடம்டயலாக்வாங்கி, லொகேஷன் பார்த்து படம் எடுப்போம். கமல்சார்வீடு, எங்கஅலுவலகம், ஸ்ரீபிரியா வீடு இப்படித்தான் படம் எடுத்தோம்.
நானும்சரி, ருத்ரய்யாவும் சரியாரிடமும் உதவி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கவில்லை. இளங்கன்று பயமறியாது என்பது போல துணிச்சலாக எடுத்தோம். நேரம் மிகவும் குறைவு. டிரைபாடில் வைத்து படம் பிடிக்க நேரம் ஆகும் என்பதால் பல காட்சிகளை நான் காமிராவை கையில் வைத்தே எடுத்தேன். நேரம் சேமிப்பதற்காக கட் பண்ணி எடுக்க வேண்டிய பல சீன்களை ஒரே ஷாட்டில் எடுத்தோம். ஸ்ரீப்ரியா, கமல் இருவருமே ரீடேக்கே போகமாட்டார்கள். ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்து விடுவார்கள். மொத்த படமுமே 27000 அடியில் எடுத்தோம். கமலோ, ஸ்ரீப்ரியாவோ டப்பிங்கில் கூட ஒரே ஒரு முறை லூப்பைப் பார்ப்பார்கள். அப்படியே பேசிவிடுவார்கள்.
படம் தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனை ஆகிவிட்டது. ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா, இளையராஜா கூட்டணியில் ஸ்ரீதர் தயாரிப்பில் அப்போது வெளியாகி இருந்த இளமை ஊஞ்சலாடுகிறது படம் நன்றாக ஓடியதால் எங்கள் படம் மீதும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. விநியோகஸ்தர்கள் கொடுத்த பணத்தை வைத்தே படம் எடுத்துவிட்டோம்.
படம் முடிந்து விநியோகஸ்தர்களுக்கு போட்டுக் காட்டினோம். அன்று தான் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள். படம் பார்த்தவுடன் அனைவர் முகத்திலும் சவக்களை! ரேட் குறைவாகத்தான் விற்றிருந்தோம். எனவே அனைவரும் பிரிண்டுகளை வாங்கிக் கொண்டார்கள். ஆனால் நல்ல தியேட்டர்களில் வெளியிடவில்லை. இப்படம் 1978 தீபாவளிக்குரிலீஸ். 12 படங்கள்ரிலீசாகின. கமலுக்குமூன்றுபடம். ரஜினிக்குமூன்றுபடம். ஆனந்தவிகடன் விமர்சனத்தில் எங்கள் படத்துக்குத்தான் குறைவான மார்க்.நூற்றுக்கு 28 மார்க்.
படம்வெளியானதும் மோசமான எதிர்வினை. சில இடங்களில் தியேட்டர் நாற்காலிகளை ரசிகர்கள் உடைத்ததாகத் தகவல். இரண்டே வாரத்தில் தமிழ்நாடு முழுக்க படம் தியேட்டர்களை விட்டு எடுக்கப்பட்டு விட்டது. படம் ஓடவில்லை. நாங்கள்தோற்று விட்டோம் என்று நினைத்த போது ஓர் அதிசயம் நடந்தது. புகழ்பெற்றஇயக்குநர்மிருணாள்சென்சென்னைக்குவந்துதங்கினார். ஓர் இரவு எதாவது படம் பார்க்கலாமேஎன்றுஅவள்அப்படித்தான்படத்தைதியேட்டரில்பார்த்திருக்கிறார். மறுநாளேஅவர்தான்தங்கியிருந்தஓட்டலுக்குபத்திரிகையாளர்களைவரவழைத்துபடம்மிகவும்அற்புதமாகஉள்ளது. ஏன்நீங்கள்நல்லபடத்தைஆதரிப்பதில்லைஎன்றுபுகழ்ந்துபேட்டிகொடுத்தார். பத்திரிகைகள் அவர்பேட்டியைவெளியிட்டதுடன்ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, ருத்ரய்யாபேட்டிகளையும்வெளியிட்டன.
படம் ஓட ஆரம்பித்துவிட்டது. சென்னை, கோவை, திருச்சி, மதுரைபோன்றஇடங்களில் 100 நாள் ஓடியது. இதற்குதமிழகஅரசின்மூன்றுவிருதுகள்கிடைத்தன. எனக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும் கிடைத்தது. இதன் பின்னணியில் ஒரு சுவாரசியம் உள்ளது. அது 20 ஆண்டுகள் கழித்துத்தான் எனக்குத் தெரிந்தது. அந்த விருதுக் குழுவில் இடம் பெற்றிருந்த சாருஹாசன் என்னிடம் சொன்னார். அப்போது கறுப்பு வெள்ளைப்படமாக இருந்தததால் ஒளிப்பதிவுக்கான சிறந்த படங்களைத் தேர்வு செய்யும் நடுவரான மார்கஸ் பாட்லேயிடம் அவள் அப்படித்தான் படத்தைப் போட்டுக் காட்டவில்லையாம். வண்ணப் படங்களை மட்டும் திரையிட்டுக் காட்டி ஸ்ரீதரின் அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தைப் அவர் தெரிவும் செய்துவிட்டார். சிறந்த இயக்கத்துக்கான படங்களைத் தேர்வு செய்யும் போது எதேச்சையாக மார்க்ஸ் பாட்லே வந்திருக்கிறார். அப்போது எங்கள் படத்தைப் பார்த்திருக்கிறார். அதில் ஒளிப்பதிவு அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. இதற்குத் தான் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கொடுக்கவேண்டும் என்று கூறிவிட்டார். ஏற்கெனவே ஒருவரைத் தெரிவு செய்து விட்டதால் அந்த ஆண்டு முதல் முதலாக இரண்டு விருது கொடுத்தார்கள். ஒன்று சிறந்த வண்ணப்பட ஒளிப்பதிவுக்காக; இன்னொன்று கருப்பு வெள்ளைக்காக எனக்கு.
(தொகுப்பு: முத்துமாறன்)
அந்திமழை ஏப்ரல்’2013 மாத இதழில் வெளியான சிறப்பு கட்டுரை
அவள் அப்படித்தான் ப







--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilpayani?hl=en-GB.
எவ்வளவு சிறுபான்மை சமூகமாக இருந்தாலும் அவங்கவங்க மொழியை உயர்த்திப்பிடிக்கணும்னு இருக்காங்களே... நல்ல விஷயம்...
(அஷ்ரிதா ஷெட்டி துளுவா... பயனுள்ள் தகவல்)
--