கவிதைகள்...

558 views
Skip to first unread message

ஆதம்

unread,
Jul 24, 2010, 3:44:25 AM7/24/10
to Tamil2...@googlegroups.com, thamizh...@googlegroups.com, tamila...@googlegroups.com, panb...@googlegroups.com


மலருக்கே தெரியாமல்..!

மலருக்கே தெரியாமல்
மகரந்தத்திலுள்ள
தேனைக் கவரும் தேனீ போல…
எனக்கே தெரியாமல்
என் மனதைக்
கவர்ந்த தேனீ நீ..!
என் காதல் ராஜ்ஜியத்தின்
ராணித் தேனீ நீ..!


இரட்டைப் பிறவிகளா..?

உன் கொலுசும்...
புன்னகையும்...
இரட்டைப் பிறவிகளா
அன்பே..?
இரண்டும்
கலகலவென்று
சிரிக்கின்றனவே..!


நீ ஒரு நடமாடும்..!

கருவைரக் கண்கள்…
கோமேதகக் கன்னங்கள்…
செம்பவழ உதடுகள்…
வெண் முத்துப் பற்கள்…
மரகதச் சிரிப்புகள்...
என நீ ஒரு நடமாடும்
நவரத்தின பெண்
'நகை'க் கூடம்..!
அதில் என் கவிதைகள்
நாட்டியமாடும்..!

நீ தீட்டிய மையினால்...

அஞ்சன மை தீட்டிய
அழகு தேவதையே…
நீ தீட்டிய மையினால்
உன் கண் மயங்கியதோ..?
இல்லையோ..?
நான் மயங்கி விட்டேன்..!

நம் இருவரும் சேர்ந்து..!

நான் என்பது இனி
நானில்லை…
நீ என்பது இனி
நீயில்லை…
நான் என்பது இனி
நீயானாய்…
நீ என்பது இனி
நானானேன்..!
நம் இருவரும் சேர்ந்து
நாம் ஆனோம்..!
இனியேனும் புரிந்து கொள்
நாமிருவரும்
தனித் தனி ஆளில்லை என்று..!


மீண்டும் மீண்டும்..!

உன் அழகிய புன்னகை கூட
எனை அடியோடு
வெட்டி வீழ்த்துகிறது..!
அப்படி நான் ஆயிரம் முறை
அடியோடு வீழந்தாலும்...
அந்த வசீகரப் புன்னகைக்காகவே
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறேன்..!


உனைக் காணும் ஆர்வத்தில்..!

பூங்காவனத்தில்
நீ எனக்காக காத்திருந்து
தவிப்பது
பிடித்திருக்கிறது..!
அதற்காகவேனும்
சற்றுத் தாமதமாக
வர முயற்சிப்பேன்..!
ஆனால் உனைக் காணும்
ஆர்வத்தில்
வெகு சீக்கிரமாகவே
வந்து விடுகிறேன்..!
இதுதான் காதல் மயக்கமோ..?


என் இதய வீட்டிலும்..!

நீ வசிக்கும் வீட்டில்
மரப்பூக்கள் மட்டுமல்ல
மகிழ்ச்சிப் பூக்களும்
பூத்துச் சிரிக்கின்றன..!
அப்படியே
என் இதய வீட்டிலும்
வந்து வசித்து விடு அன்பே..!
அங்கே காதல் பூ
பூக்கட்டும்..!


உன் நெஞ்சணையில்..!

பஞ்சணையில் படுத்தால்
தூக்கம் வரவில்லை என்று
உன் நெஞ்சணையில் படுத்தேன்…
அது மலர்ப்படுக்கையில்
படுத்தது போலிருந்தது..!
அப்போதும் எனக்கு
தூக்கம் வரவில்லை பெண்ணே..?
எங்கே என்னுடல் பட்டு
உன்னுடைய மலர்ப் படுக்கை
வாடி விடுமோ என்ற பயத்தால்..?


என்றும் அழியாத..!

மேகக் கூட்டம் போன்றதுதான்
உறவும்… உடலும்..!
மின்னலைப் போன்றதுதான்
அழகும்… இளமையும்..!
மழையைப் போன்றதுதான்
மனசும்… மகிழ்ச்சியும்..!
ஆனால் என்றும் அழியாத
கதிரவனைப் போன்றதுதான்…
என் கவியும்… என் காதலும்..!

உன் வெட்கத்தில்..!

வெண்மேகத்தில்
மறைந்து மறைந்து
விளையாடும்
வெண்ணிலவைப் போல...
உன் வெட்கத்தில்
மறைந்து மறைந்து
விளையாடுகிறது...
உன் அழகான புன் சிரிப்பு ..!

என்னை என்ன செய்தாய்..?

என்னை என்ன செய்தாய் பெண்ணே..?
ஒவ்வொருவருக்கும்
நாட்கள் செல்லச் செல்ல
வயது ஏறுமென்பார்கள்...
ஆனால் எனக்கோ
உன்னை சந்தித்ததிலிருந்து
வயது இறங்கிக் கொண்டே
போகிறதே..!

காத்திருக்கும் விழிகளில்..!

உனக்காக
காத்திருக்கும் விழிகளில் கூட
காதல் நிரம்பித்
தளும்பி வழிகிறதடி...
நீ இன்னும் வரவில்லை 
என்பதால்...
கண்ணீராய்..!

அழகான ராட்சஸி..!

உன்னுடைய அழகால்
என்னைத் தின்றது
மட்டுமின்றி...
என் பசியை...
என் உணர்வுகளை...
என் தூக்கத்தை...
என் துயரங்களை எல்லாம்
தின்று விட்டாய்..!
ஆதலால் உன்னை
அழகான ராட்சஸி
என்றழைப்பதில்
தவறேதுமிருப்பதாகத்
தோன்றவில்லையடி..!


அசராமல் எப்படியடி..?


கொஞ்சம் சிரிப்பு…
கொஞ்சம் தவிப்பு…
கொஞ்சம் மோகம்…
கொஞ்சம் தாகம்…
கொஞ்சம் செல்ல முறைப்பு…
கொஞ்சம் பொய்க் கோபம் என
அத்தனை பார்வைகளையும்
மொத்தமாய்க் கலந்து
உன் மேல் நான் வீசினால்..?
அத்தனையும் வாங்கிக் கொண்டு
அசராமல் எப்படியடி
அழகாய் அமர்ந்திருக்கிறாய்..!
இன்று நீ…
மொளன விரதமா என்ன..?

நீயோ நாற்பத்தைந்து கிலோ..?

'நீயோ நாற்பத்தைந்து கிலோ...
நானோ எழுபத்தைந்து கிலோ...
எப்படியடி என் எடையை
நீ தாங்குவாய் ..?' என்றதற்கு
'என் இதயம் எவ்வளவு
எடை இருக்குமென்று சொல்..?
என்று என்னிடமே
எதிர்க்கேள்வி கேட்டாய்..!
அதற்கு நானோ...
'முன்னூறு கிராம்' இருக்குமென்றேன்
'ம்ம்ம்... முன்னூறு கிராம்
எடையுள்ள என் இதயத்தில்
எழுபத்தைந்து கிலோ உள்ள
உன்னையே சுமக்கிறேனென்றால்...
நாற்பத்தைந்து கிலோ உள்ள
நான் உன்னை சுமக்க
மாட்டேனா என்ன..?'
என்று உன் அழகிய
அதரவாயிதழ் திறந்து
என்னையே அசரவைத்துவிட்டாயடி..!

எனக்காக எழுதப்பட்ட கவிதை..!

ன் கண்ணெனும் கேமரா
சிறை பிடித்த கவிதைகளில்
மாபெருங் கவிதை நீ..!
ஆதலால்தான்
என் கண்ணை விட்டு என்றும்
அகலாமல் இருக்கிறாய்..!
என் இதயமெனும் இதழ்
படித்தக் கவிதைகளில்
மாபெரும் இன்பக் கவிதை நீ..!
ஆதலால்தான்
என் இதயத்தை விட்டு என்றும்
விலகாமல் இருக்கிறாய்..!
புரிந்து கொண்டேன் பெண்ணே...
எனக்காக எழுதப்பட்ட கவிதை
நீ என்று..!

உன் திறமைகளை..!

தேவைகள் வரும்போதுதான்
திறமைகள் வெளிப்படும்
என்பார்கள்..!
உனக்குள்
திறமை ஏதுமில்லை
என்று அழுது
புலம்பாதே அன்பே..!
இரும்பாய் இருந்த
என்னைக் கூட
கரும்பாய் மாற்றிய
திறமை உன்னிலிருக்கிறது
என்பதை மறவாதே அன்பே..!
உன்னுள்ளும் ஆயிரம்
திறமைகள் உண்டென்பதை
மறவாதே...
மறந்தும் இராதே..!
உன்னுள்ளே நானிருக்கிறேன்
உன் திறமைகளை நானறிவேன்
வா பெண்ணே சாதிப்போம்
வாழ்க்கையில் நாம் இணைந்தபடி..!

என்னழகே உன்னழகை ...!

செங்காந்தள் மலரெடுத்து
உன் கருங்கூந்தலில் சூடி விட்டு...
செஞ்சாந்துப் பொட்டெடுத்து
உன் பிறை நெற்றியில் திலகமிட்டு...
வெண்காஞ்சிப் பட்டெடுத்து
உன் பொன்னுடலில் கட்டி விட்டு...
பொன் தாலிதனை யெடுத்து
உன் வெண்சங்குக் கழுத்தில் கட்டி விட்டு...
உனைப் பார்க்கிறேன்...
செங்கதிரோன் மறையும் வேளையில்
வெள்ளி நிலவு எழுவது போல்
என் முன்னே நிற்கின்றாய்...
என்னழகே உன்னழகை
என்னென்று சொல்வேன்...
ஏதென்று சொல்வேன்..!


உன் கண்ணோடு உறவாடும்...


கண்ணாடி அணிந்த உன்
முகத்தைப் பார்த்தேன்..!
நிலவிற்கு கண்ணாடியா
என அதிசயித்துப் போனேன்..!
அடி என் அமுதழகே..!
அழகான என் கண்ணழகே..!
உன் கண்ணாடியாகவேனும்
நான் இருந்திருக்கக் கூடாதா..?
தினமும் உன்னோடு இருப்பது மட்டுமின்றி
உன் கண்ணோடு உறவாடும்
பாக்கியமாவது கிட்டியிருக்குமே..!
நான் என்ன செய்வேன்...
நான் என்ன செய்வேன்..?

என்றென்றும் ரசிகன்..!

கொடியிடை ஆட்டி…
நடை உடை மாற்றி…
ஊர் முன்னே ஆடுவதுதான்
நடனமென்பது
அக்காலம் பெண்ணே..!
இந்தப் போலியான
நாகரீக உலகிலும்…
எனக்குப் பிடித்தாற்ப் போல்
எளிமையாய் உடையணிந்து…
அமைதியாய்
எனை நோக்கி நடந்து வருகையில்
இதுதான் உண்மையான...
நளினமான...
நடனமென்பேன்..!
இதற்கு நான் என்றென்றும்
ரசிகனென்பேன்..!   

உன் நிழல் போலத்தான்..!


நீ நடந்தால்...
உன்னுடனேயே நடக்கும்..!
நீ சிரித்தால்...
உன்னுடனேயே சிரிக்கும்..!
நீ அழுதால்...
உன்னுடனேயே அழும்..!
உன் நிழல் போலத்தான் அன்பே...
என்னுடைய காதலும்..!


நீ உதிர்க்கும் புன்னகை போல...!

ஒற்றையாய் நிற்கும்
அந்த ரோஜா மலர்..!
கொட்டும் உறை பனியில்
விடிய விடிய நனைந்த படி
இருந்தாலும்...
அதிகாலையில்
கதிரவனைக் கண்டதும்
அம்மலர் புன்னகைத்தபடியே
உற்சாகமாய்ப் பூ பூக்கும்...
எனைப் பார்த்ததும்
உன் முகம் மகிழ்ச்சியில் பூத்தபடி
நீ உதிர்க்கும் புன்னகை போல...!

உன் மயக்கம்..!

உன் அதர வாய் திறந்து
அன்பாய் என்னை
நீயும் அழைக்கும் போது…
என் உயிரும் உருகி வழிகிறது...
உனக்குள் புதைய நினைக்கிறது..!
செல்லமாய் நீ எனை அடித்து
விளையாடும் போது...
என் கரமோ
உன்னை அணைக்கத் துடிக்கிறது...
உன் கன்னத்தைக்
கிள்ள நினைக்கிறது..!
குறும்பாய் நீயும் சிரித்திடும் போது...
உன் கன்னக்குழியின்
அழகைப் பார்த்து
என் உள்ளமும்
மகிழ்ச்சியில் விரிகிறது...
உன்னோடு ஊடல்
கொள்ள விழைகிறது..!
உன் வெட்கச் சிவப்பை
பார்த்தத்திலிருந்து...
அடிக்கடி உனை வெட்கப்பட
வைக்கத் தோணுகிறது...
உன் வெட்கத்தில்
திளைக்கத் தோணுகிறது..!
போதும் பெண்ணே உன் மயக்கம்...
எனை ஏற்றுக் கொள்வதில்
ஏன் தயக்கம்..?

சத்தமில்லா யுத்தமொன்றை..!

உன் வேல் விழிகளால்...
என் விழிகளுடன்
சத்தமில்லா யுத்தமொன்றை
செய்துவிட்டுப் போனவளே…
அந்த யுத்தத்தில்...
நான் அடியோடு வீழ்ந்து விட்டேன்..!
போர்க்கைதியாக அல்ல…
உன் மடியில்
காதல் கைதியாக..!

நீ எந்தன் காதலியானால்..!


வெண்ணிலவில் வீடு கட்டி
என் பெண்ணிலவே
உனைக் கூட்டிச் சென்று
விண்மீன்களே அசரும்படி...
உன் விரல்களைப் பற்றிக்கொண்டு
வானவீதியில் உலா வருவேன்..!
வண்ண மயில் இறகினிலே   
வாகாக மெத்தை செய்து...
பெண்மயிலே அதில் உன்னை
தூங்க வைப்பேன்..!
வெண்மேகத்தின் மழைத்துளிகளை
அருவியாக்கி
பொன் மயிலே உனை
குளிக்க வைப்பேன்..!
அதிகாலைக் கதிரவனை
அழைத்து வந்து
உன் கார்மேகக் கூந்தலை
காய வைப்பேன்..!
இவையத்தனையும் செய்ய
என்னால் முடியும்
நீ எந்தன் காதலியானால்..!

நிலா வீட்டில்..!


‘நீயும் நானும் சேர்ந்து வாழ
ஏற்றதொரு இடம்'
வேண்டுமென்றாய்..!
நம் காதலைப்போல்
அங்கெப்போதும்
பிரகாசம் வேண்டுமென்றாய்..!
இருக்கிறது அப்படி ஓர் இடம்..!
அது இந்திர லோகமல்ல
சந்திர லோகம் என்றேன்..!
'அமாவாசை வருமடா..?
அப்போது என் செய்வாய்
என் அன்பே' என்றாய்..!
அடி அசட்டுப் பெண்ணே...
நிலவிற்கு ஏது…
வளர் பிறை..? தேய் பிறை..?
அது என்றும் முழு நிலவுதான்..!
பூமியிலிருப்பவர்களுக்கு மட்டுமே
அது அமாவாசையாகத் தெரியும்
நாம்தான் நீலா வீட்டில்
வசிக்கப் போகிறோமே…
அதற்க்கேது அமாவாசை..?

சந்தித்துக் கொள்ளும் போது..?


உன்னை சந்திக்கும் போது
நிறைய பேச வேண்டும்
என்ற நினைப்போடு
உனை சந்திக்க வருவேன்..!
நானும் உன்னுடன்
நிறைய பேசவேண்டுமடா
என்றபடி நீயும் வருவாய்..!
நாமிருவரும்
சந்தித்துக் கொள்ளும் போது
நாம்மால் வாய் திறந்து
பேச முடிவதில்லை..!
உனை உன் வெட்கம்
பேச விடாமல் செய்து விட…
எனை உன்னழகு
பேச விடாமல் செய்து விட்டதடி…
நான் என்ன செய்வேன்..!

என்னோடு நீ செய்த பயணம்..!


நேற்றைய பொழுது
என்னோடு நீ செய்த பயணம்...
என்னுள் இன்பத்தை
மட்டுமன்று பெண்ணே..!
என் இதயத்துள்
இனிப்பையும் ஊட்டியது..!
நீ என்னோடு
பேசிக் களித்த நிமிடங்களும்...
சீண்டி விளையாடிய தருணங்களும்...
செல்லமாய் அடித்த நிகழ்வுகளும்...
என்னோடு கைகோர்த்து
நடந்த நடையழகும்...
என் கையில் கல்வெட்டாய்
உன் காதலை பதிவுசெய்த
எழுத்தழகும்...
எனை முழுவதுமாய்
ஆட் கொண்டு விட்டன..!
அன்பிற்கினியவளே...
மீண்டுமொரு அதே
நாளிற்காக ஏங்குகிறேன்..!
தேங்குகிறேன்...!
உன்னிடம் மன்றாடுகிறேன்..!
வா என்னோடு...
மீண்டுமொரு வசந்தகால பயணத்திற்கு..!



பேசவே முடியவில்லையடா..!


உன்னிடம் என்னால்
பேசவே முடியவில்லையடா..!
எப்படிப் பேசினாலும்
உன் பேச்சால்
எனை மடக்கி விடுகிறாய்..!
என பொய்க் கோபம் காட்டும்
என் பொன் மணியே...
என்னதான் நானுனை
பேச்சினில் மடக்கினாலும்...
எனை உன் ஓரேயொரு
ஓற்றைப் பார்வை மடக்கி விடுகிறதே..!
அதற்கு முன்பு என் பேச்சொன்றும்
பிரமாதமில்லையடி..!

இதழ்கள் என்றாலே..!


இதழ்கள் என்றாலே
எனக்கு என்றுமே
புத்துணர்ச்சிதான்..!
எழுத்துக்களைப் படிக்கத் தரும்
இதழ்களானாலும் சரி..!
அந்த எழுத்துக்களைப்
படித்துத் தரும்
உன் இதழ்களானாலும் சரி..!

என்றும் அன்புடன்
ஆதம்...


சுட்ட இடம்: http://tamilkkavithai.blogspot.com/2010_06_01_archive.html

--
ஆதம்
சிறகுகள் கிடைத்தவுடன் பறப்பதல்ல நட்பு...
சிலுவை கிடைத்தாலும் சுமப்பதே நட்பு...
Reply all
Reply to author
Forward
0 new messages