சினிமா சினிமா சினிமா

75 views
Skip to first unread message

V Ramesh

unread,
May 3, 2012, 5:42:28 AM5/3/12
to பண்புடன், nadpudan
காமேஷ் ஆசைக்கு ஏற்ப


குஞ்சளியன்- சின்ன(அ)கடைசி மச்சினன் (KUNJALIYAN)-மலையாள திரைப்படம்


குஞ்சளியன்- சின்ன(அ)கடைசி மச்சினன் (KUNJALIYAN)-மலையாள திரைப்படம்

Director: Saji Surendran
Producer: Tomichan Mulakupadom
Cast : Jayasurya, Ananya,Maniyan Pillai Raju,Vijayaragavan,Jagadeesh,Ashokan,Kalarenjini,Bindu Panicker,Geetha Vijayan,Thesnikhan,Reshmi boban

ஸ்கீரீன்ல டக்கு டக்குன்னு நீயூஸ் பேப்பரா வந்து வுழுது. எல்லா பேப்பர்லயும் ஒரே நீயூஸ்தான்.
துபாயின் பொருளாதாரம் சும்மா பரமபத பாம்புல சிக்குனமாதிரி சர்ர்ர்ர்ர்………….

துபாயின்னாலே பெரிய பிலிடிங்தானே, அதுல ஒரு ஆபிஸ், அதுல ஒரு ஷேக். அவரு பக்கத்துல யாரு? வேற யாரு ஒரு அல்லக்கை கொலயாளி சாரி மலயாளிதான்.
ஷேக் ஒரு ஃபைல மலையாளி கைல கொடுத்து, இந்த லிஸ்ட்ல உள்ளவங்கல பேக் டு தி பெவிலியன் அனுப்ப சொல்றார். லிஸ்ட்ட தொறந்து உள்ள பார்த்தா ஒரு பேரு மட்டும் நல்லா தெரியுது. அதுதான் ஹீரோ ஜெயசூர்யா(ஜயன்). ஜயனோட ஒட்டக மேய்க்கிற வேலை போய்டுது. ஒட்டக மேய்க்கிற வேலையே போய்டுச்சுன்னா? புரியுது துபாய் நிலைமை மோசம்தான். வேற வேலையும் கிடைக்காது, ஊருக்கு போனா கேவலப்படுத்துவாங்க. என்ன பன்றது? அப்பத்தான் அவரு நன்பர் ஐடியா கொடுக்கறாரு, என்ன்ன்னா?

துபாய்ல சோத்துக்கே லாட்டரி அடிக்குற உன்மைய சொல்லாம, துபாய்ல லாட்டரி அடிச்சு கோடிஸ்வரனா கேரளாவுக்கு வரதாக கடுதாசி போட்டுட்டு ஊருக்கு போறது.
ஊருல ஜயனோட காசுக்காக, அவனோட மூனு சேச்சிகளும் பர்த்தாக்களோட, ஊரு சனங்கலோட, அம்மாவனோட(மாமண்) வெயிட்டிங். அவங்கள ஜயன் எப்படி சமாளிச்சு வாழ்க்கையில் வெல்லுறார்ங்கிறது ஸ்டோரி.
மலையாள படன்னாலேமுக்கால்வாசி காமெடிதான், இந்த படத்துல காமெடிக்கான எல்லாமும் இருக்கு. ஜயன் பேந்த முழிக்க, ஊரும் சொந்தமும் பனத்துக்காக ஜயன் பின்னாடி அலைய ஒரெ காமெடிதான்.


அதே பஞ்சாயத்துல ஹீரோயின் அனன்யாவும் இருக்கார். அவரும் ஹீரோவோட உதவி தேடி வரார். ஆனால் அனன்யா கண்டுபுடிச்சுடுது. திடிரென ஹவலாகாரனுங்கனு சொல்லிக்கிட்டு வில்லன் குரூப் 60 கோடி கொடுத்துட்டு லாட்டரி சீட்ட கேட்குறானுங்க.
  அனன்யா முறை மாமன், வில்லன் குரூப், ஊரு காரங்க, சொந்த காரங்க எல்லாத்தயும் சமாளிச்சு, வில்லன் குரூப் நச்சு தொழிற்சாலைகிட்டருந்து கிராமத்தையும் காப்பாத்தி அனன்யா கூட ஜயன் சேருவதோட படம் பினிஷ்.

இதுல என்ன பிரச்சனைன்னா, இது மாதிரி 100 பட்த்துக்கும் மேலா மலையாளத்துல வந்தாச்சு. சோ படம் ரொம்ப போர். இந்த மலையாள படங்கலே இப்படித்தான் பெருசா ஏதோ பில்டப்பு பன்னி டொப்புன்னு உடைச்சுருவாங்க
நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/

V Ramesh

unread,
May 3, 2012, 5:44:04 AM5/3/12
to பண்புடன், nadpudan

நா இஷ்டம் தெலுங்கு படம் ( Naa Ishtam)

http://duraigowtham.blogspot.in/2012/04/naa-ishtam.html
நா இஷ்டம் தெலுங்கு படம் ( Naa Ishtam)

Director: Prakash Toleti

Cast: Rana Daggubati, Genelia D'Souza, Brahmanandam, Subbaraju and Ali

என்னடா இவன் கதைய மட்டும்தான் சொல்றான், டெக்னிக்கல் விசயம் ஒன்னும் சொல்ல மாட்டெங்குறான்னு திட்ட வேனாம் மக்கா, டெக்னிக்கல் விசயம்லாம் இப்போதைக்கு  நோ 
ஓகே கமிங் டூ நா இஷ்டம்...

ஓப்பன் பன்னினா, பெரிய ரெட்டை கோபுரம், மலை மேல பெரிய முருகன் கோவில்… கண்டுபுடிச்சுரிப்பீங்கலே…… யெஸ் அந்த மலேசியாதான்.
ஹீரோ ரானா, ஒன் நிமிட்……ஒன் டவுட்? த்ரீசாவுக்கும், நயந்தாராவுக்கும் லேட்டஸ்டா இவரு கூடத்தானே கிங்கிலி பிங்கிலி நீயுஸ் வந்துச்சு. ஓகே ஓகே பட்த்தை பார்ப்போம்.
ஹீரோயின் யாருன்னா லேட்டஸ்டா கல்யானம் கட்டிக்குசுல்ல, அந்த பொன்னு ஜெனிலியா அதான்…..
ஹீரோ எப்படின்னா, டப்பு டப்பு டப்புன்னு அலையறவரு. சீ.. சீ.. பிச்சைகாரன் இல்லைங்க. டப்புதான் முக்கியம்னு நினைக்கற, டப்புக்கு அப்பறந்தான் பாசம் பந்தம், காதல், நட்பு, மப்புன்னு நினைக்கிற இன்றைய சராசரி யூத்…
ஹீரோயினோட முன்கதை என்னனா, அவங்க வூட்டுல பாத்த மாப்பிள்ளைய புடிக்காம மலேசியாவுக்கு ஒண்டியா ஓடி வந்த பொன்னு. நான் கூடத்தான் காசு இருந்தா அமேரிக்காவுக்கே போவேன்னு நீங்க சொன்னா அது ராங்க்கு மக்கா, ஏன்னா மலேசியாவுலத்தானே அவங்க லவ்வர் இருக்கார் உங்க லவ்வர்? போய் அமிஞ்சிகரையில பாருங்க…

பிளைட்ட வுட்டு இறங்குன இந்த பொன்னு நேரா முருவன் கோயிலுக்கு போயி, போன திருவிழால தொலைச்சுட்டு போன புள்ளக்குட்டிய தேடுற மாதிரி லவ்வர தேடுது. லவ்வர தேடவேண்டிய எடமா அது. சோ ஜெனிலியா லவ்வர் நாட் அவைலபில். உலகம் ஃபுல்லா இருக்கற காலி பசங்க மலேசியாவுல மட்டும் இருக்க மாட்டாங்களா, அப்பறம் ஹீரோ யாருக்கிட்ட சண்டை போட்டு ஹீரோயினை காப்பாத்துவாரு. அதான் டைரக்டர் தெகிரியமா ஒரு பத்து பேரை களத்துல வுட்ருக்காரு. மலேசியாவுல எல்லாருக்கும் வேலை இருக்கு ஹீரோவ தவிர அதனால ஹீரோ போயி ஹீரோயினை காப்பாத்துராரு. லவ்வரு மட்டும் நோ கமிங்..

அம்மாயி மலேசியாவுலருந்து, ஹீரோவட உதவியால ஹீரோவும் கூடவே வர ஊருக்கு திரும்புது. இக்கட நாசர், பிரேமானந்தம் எல்லாகாரும் அம்மாயி மலேசியாவுக்கு போனதும், மலேசியாவுலருந்து வந்ததும் தெரியாம அம்மாயிக்கு கல்யான வேலை பார்க்குது. நம்ம எக்ஸ்ட்ரா பிட்டிங் ஹீரோவ பாத்ததும்தான் டவுட் வருது. தான் செலவு பன்னின பனத்த வாங்கிட்டு போக வேண்டி வெயிட்டிங் பன்ற ஹீரோவுக்கு ஜெனிலியா மேல அது வந்துடுது அதான் காதல்ல். 
ஜெனிலியாவோட மாப்பிள்ளை நல்லவன் இல்ல அதனால ஜெனி அம்மாவே ஹீரோட்ட காசு கொடுத்து ஜெனியையும் அனுப்புது. கரும்பு தின்ன கூலி.

கரும்பு தின்ன கூலிய வாங்கிட்டு, வில்லங்க கிட்டருந்து தப்பிச்சு ஜெனிய மலேசியா கூட்டிவறார். மலேசியா வந்த ஜெனி திரும்ப லவ்வர தேடுது. ஹீரோ ஜெனி லவ்வர பாத்துடரான் அதை ஜெனிக்கிட்ட மறைக்கிறான். ஏன்னா அவனுக்கும் ஜெனி மேல லவ்வு.

ஹீரோவுக்கு ஜெனி மேல லவ்வு, ஜெனி லவ்வரும் என்ரி, ஊருலருந்து வில்லன் குருப்பும் என்ரி. ஜெனி கூட யாரு சேர்ந்தா?

வேற யாரு ஹீரோதான்.. ஜெனி லவ்வரு(அவரே உட்டு கொட்த்தறார்), நாசர் குரூப், புருஸ்லி மாதிரி இருக்குற வில்லன் குரூப் எல்லாத்தையும் ஓரங்கட்டிட்டு காசு முக்கியம் இல்ல காதல்தான் முக்கியம்னு, ரானா ஜெனி கூட சேருவதுதான் கதை.
எம்மா சாமி கடைசில என்ன பன்றதுன்னு டைரக்டருக்கே தெரியல போல. ஒரே கன்ஃப்யூசன், நமக்கு ஒரே டென்சன். எப்படா படம் முடியும்னு….ஆயிடுச்சின்னா பாத்துக்கங்களேன்…


3 பொன்னுங்க வெத்தலையை இடுப்புல சொருகிட்டு ஒரு பாட்டு சூப்பர்.. பாருங்க

V Ramesh

unread,
May 3, 2012, 5:48:01 AM5/3/12
to பண்புடன், nadpudan
நந்தீஸ்வருடு ( Nandeeswarudu)- தெலுங்கு படம்…



Cast: Taraka ratna,  Rachana , Sheena Shahabadi , Jagapathi Babu, Suman, Sivaji Raja,Seetha, Ajay , Nagineedu, Benarjee, Rajiv Kanakala, Delhi Rajeshwari
Music : Parthasaradhi
Editor : K V Krishna Reddy
Story : Chinni Krishna
Screenplay :Anji Sreenu
Photography : Sudhakar Reddy
Direction : Sreenu Yarajala / Anji Srinu
Producer : Kota Gangadhar Reddy, Segu Ramesh Babu
Banner : SRB Art Productions
படம் ஆரம்பிக்குது….. டம் டம் டுமில், ஹே ஆய் ஊய் சம்பேஸ்தானு. வெயிட் வெயிட் மக்கா ஒன்னும் இல்ல இந்த ரவுடிங்க எப்பவுமே இப்படித்தான்…
அமைதி அமைதி….
மந்திரி டென்சனா இருக்காரு, போலிசூ பெரிய ஆபிசர( ஏட்டு இல்லைங்க வேற) பார்த்து,
ஏன்யா அந்த நந்துவ (நந்திஸ்வருடு) அடக்க முடியாதா அவனோட ஆட்டம் அதிகமா இருக்கேன்னு சவுண்டு உடறாரு(சவுண்டு உட்டாதான் தெலுகு படம்). அந்த போலீசு சொல்றாரு அய்யா அவன அடக்கனும்னா ஒரு டைனமைட் நோ நோ டைனமிக் ஆபிசரலாதான் முடிம்னு சொல்றாரு. அப்படின்னா என்னான்னு கேட்குது மந்திரி குருப்பு மந்திரி இங்கீபீசுல வீக்). அந்த டைனமிக்தான் ஜகபதி பாபு………..இவரு சாக்லேட்ட டீயில நனைச்சு சாப்புடற பயங்கரமான போலிச்சு. ஏற்கனவே ஒரு புள்ளதாச்சிய தீவிரவாதிங்க்கிட்டயிருந்து காப்பாத்தின மவராசந்தான் ஜகபதி. மந்திரி அவர நம்பி ஆந்திராவையே ஒப்படைகிறாரு டொட்டொடங்…
இனி யாரந்த நந்திஸ்வருடு…….ஹீரோதான்( தரங்க ரத்னா என்.டி.ஆர் பரம்பரை)

ஹீரோன்னா பாவுன்னாத்தானே இருக்கனும் ஆனா.. நமக்கு டவுட்டு வருது..அவரோட ச்டோரி கம்மிங்………………ஹீரோவட அம்மா சீதா, அப்பா சுமன். சீதன்னாலே பாவுன்னா பேமிலிதானே எல்லா படத்துலயும் சோ நல்லவருதான் ஹீரோ.. ஆனா ஏன் மந்திரி அப்டி சொன்னான். யோசிங்க மக்கா.
ஒரு பாவுன்னா (நல்ல) ஃபேமிலிலருந்து I.P.S. ஆகனுங்கற கனவோட படிக்க போறாரு நந்து. அவரோட லவ்வர் ரேடியோ ஜாக்கி. எல்லாம் நல்லா போகும்போது இந்த ரவுடிங்க தான் இடையில இடையில வந்துட்டு நாங்களும் படத்துல இருக்கோம்லங்கிராங்க……. பாபாதான் பெரிய ரவுடி அவனோட ஆளுங்கல்லாம் அப்பிரானிகளை கொல்றாங்க, கிழவிய ரேப் பன்றாங்க ச்டுப்பிடுஸ்..

இந்த பாபாவோட தம்பி, பயபுள்ள சும்மா இல்லாம ஹீரோகிட்ட போயி ஒரண்டை இழுக்குது, அவ்ரு சும்மா உடுவாரா அடிச்சு நாக் அவுட் (நாக்கை கட் பன்றது.) பன்னிடுறாரு. அவ்லோதான், அப்பறம் ஸ்டார்ட் ஆக்சன் கேமரா ரோலிங்தான்……
இதுல இன்னொரு வில்லன் வேற ஹீரோவட அப்பாவோட நெஞ்சுல மிதிச்சு என் பொன்ன ஹீரோக்கு கட்டிவைன்னு மிரட்டர்ரார். ஹீரோ என்ன பன்னுவார் லேசா ஒரு தட்டு தட்டுறார் அந்த வில்லனை, அதுக்கு போயி செயிலுல புடிச்சு போடுறாங்க.. நமக்கே பாவமா இருக்கு பாவம் செயிலுல ரொம்ப கஸ்டபடுறாரு. என்ன பன்றது நம்ம கலிஞர் மாதிரி யாரும் ஆந்திரால இல்ல போல கைதிக்கு கறி சோறு போட்டு காசு கொடுக்க. .

ஆந்திரா காவல்துறைக்கு ஒரு நல்ல போலீசு நட்டம்தான் அப்பறம் எப்புடி ஆந்திரா உருப்புடும்...
அப்பறம் ஹீரோ அவரு அம்மாவ அப்பா கைல ஒப்படச்சிட்டு நல்லப்புள்ளயா வேற வேலை தேடுறாரு. ஆனால் இந்த ரவுடிபயக உடமாட்டேங்கிராங்கலே. கிழவிய ரேப் பன்ற குரூப் ஹீரோவட நன்பன் அம்மாவ மயிர அறுத்து ஹீரோவ ஒரு கொலைகாரனா மாத்திபுடுராங்க (ஒரு கொலை). தென்..
அப்பறம் ஒரு சின்ன பையன் கைய வெட்டிட்டான் இன்னொரு வில்லன் அவனை போட்டு தள்றாரு(ரெண்டாவது கொலை) இனிமே நான் என்ன மாட்டேன் போங்க.. இப்படி ஒருத்தன் கிடைச்ச போதும் இந்த மொக்க மக்கள் ஏத்திவுட்டு ஏத்திவுட்டு பெரிய தாதாவ ஆக்கிடுவாங்க. இடையில ஹீரோயின் ஒன்லி ஃபார் டூயட்.. அப்பறம் ஹீரோயினுக்கு ஃபைட்டா கொடுப்பாங்க..
இந்த நல்லவரத்தான்(நந்திஸ்வரடு) வீனாபோன மந்திரி பேச்சை கேட்டு அடக்க வறார் மிஸ்டர் ஜகபதி. அடக்குனாறா?.
அடக்க வந்த ஜகபதி கம்னு இருக்க, ஹீரோ எல்லா ரவுடியையும் கொன்னு சாவடிக்கிறார். பின்ன ஹீரோவ ஜகபதி கொன்னுடறார்.
இருங்க இருங்க ஹீரோ செத்துட்டா படம் எப்படி ஓடும், ஹீரோ சாவல ஜகபதி சும்மாச்சுக்கும் டிராமா பன்னினாராம்.
பின்ன ஜகபதியும் நந்திஸ்வரடுவும் (நந்து மேல ஒரு FIR ம் இல்ல அதனால போலிசுல சேரலாமாம்) பீகாருக்கு I.P.S ஆபிசரா போராங்க.. அங்க போயி……..அங்க போயி….
 திரும்பவும் முதலருந்து படிங்க…

Asif Meeran AJ

unread,
May 3, 2012, 10:13:37 AM5/3/12
to panb...@googlegroups.com
மொக்கை படம்

இங்க தமிழ்ல இந்தப்படத்தை எழுதுனா வில்லங்கமா இருக்குமேன்னு யோசிச்சுத்தான் எழுதாம் விட்டேன்
ஆனாலும் பண்புடனுக்குள் குஞ்சளியன் வந்து விட்டார் :-)

V Ramesh

unread,
May 4, 2012, 2:54:23 AM5/4/12
to பண்புடன், nadpudan
அடடா இந்த மலையாளப்பட விமர்சனத்தை படிக்காம இங்கே போட்டுட்டேன்.. இப்படி கேவலமான விமர்சனம்ன்னு தெரியாம இங்கே இட்டமைக்கு மன்னிக்கவும்.. அனன்யாவை பார்த்ததுல இந்த கண்றாவிய கவனிக்கலை..



நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/5/3 V Ramesh <rames...@gmail.com>

ஸ் பெ

unread,
May 4, 2012, 8:15:36 AM5/4/12
to panb...@googlegroups.com
;((((((

2012/5/4 V Ramesh <rames...@gmail.com>

அடடா இந்த மலையாளப்பட விமர்சனத்தை படிக்காம இங்கே போட்டுட்டேன்.. இப்படி கேவலமான விமர்சனம்ன்னு தெரியாம இங்கே இட்டமைக்கு மன்னிக்கவும்..


--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன்; ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கவுரவம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

V Ramesh

unread,
Jun 13, 2012, 3:05:07 AM6/13/12
to பண்புடன், nadpudan, தமிழ் சிறகுகள்
சினிமா செய்திகள் அனைத்தும் இந்த இழையில்


சிம்பு உனக்கு எதற்கு வம்பு!

>> TUESDAY, JUNE 12, 2012

தனுஷை வம்புக்கு இழுப்பதே சிம்புவுக்கு வேலையாகிவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இவரின் வாலு படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. 

இப்படத்தின் அறிமுக டிரைலரில் சிம்புவைப் பார்த்து ஹன்சிகா, ஒரு சில பசங்கள பாக்க பாக்கத்தான் பிடிக்கும், ஆனா உன்ன மாறி பசங்கள பாத்த உடனே பிடிச்சிடும் என்று வசனம் பேசுகிறார். இது படிக்காதவன் படத்தில் தனுஷ், தமன்னாவை பார்த்து பேசும் படத்தின் டயலாக்கின் உல்டாவாகும். ஆனால் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, டைரக்டர் தான் அப்படி வைத்தார், நான் யாரையும் வம்புக்கு இழுக்கவில்லை என்று ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்தார் சிம்பு. 

இந்நிலையில் தனுஷை மீண்டும் வம்புக்கு இழுப்பது போன்று பேசியுள்ளார் சிம்பு. செல்வராகவன், பாலா போன்றோர்களின் படங்களின் நடிக்க விருப்பம் இல்லையா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, அவர்களின் படங்களில் நடிக்க நான் விரும்பமாட்டேன். அதுபோன்ற கதைகள் தனுஷூக்கு தான் செட் ஆகும். என் படங்கள் அனைத்தும் பொழுதுபோக்கு படங்களாக இருக்கும். எனக்கு தேசிய விருதோ, ஆஸ்காரோ தேவையில்லை. என் படங்கள் ஓடும் தியேட்டர்களில் கைதட்டலும், விசில் சத்தமும் கேட்டாலே போதும் என்று சிம்பு கூறியுள்ளார்.



Read more: http://dinaex.blogspot.com/2012/06/blog-post_12.html#ixzz1xeeTp4zg

V Ramesh

unread,
Jun 14, 2012, 4:52:14 AM6/14/12
to பண்புடன், nadpudan, தமிழ் சிறகுகள்

ராஜன்னா- தெலுங்கு சினிமா -கட்டாயம் பாக்க வேண்டியப் படம்

by வல்லத்தான்

நடிகர்கள்நாகார்ஜூனாசினேகாபேபி ஆனிஸ்வேதா மேனன்நாசர் மற்றும் பலர்……….
இயக்கம்விஜேயந்திர பிரசாத்.

1940 –50 ல் ஆந்திராவில் நடந்த உன்மை சம்பவம் தான் இந்த படத்தோட கதைஇதுலநாகர்ஜுனாதான் ராஜன்னா.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுருச்சு………..என்னது இந்தியாவுக்கு சுதந்திரம்கிடைச்சுடுச்சாஅப்படின்னு ஜெர்க் ஆக வேண்டாம்நம்ம அரசியல்வியாதிங்ககிட்டஇருந்து நமக்கு சுதந்திரம் கிடைக்க வாய்ப்பே இல்லைஇங்க சொல்ற சுதந்திரம்பிரிட்டீஷார் கிட்ட இருந்துஇந்தியாவுக்கே சுதந்திரம் கிடைச்சாலும் அந்திராவில் உள்ளஅடிலாபாத் மாவட்டத்துல உள்ள நெலகொண்டபள்ளி எனும் கிராமத்துக்கு மட்டும்சுதந்திரம் கிடைக்கலஏன்?

அந்த நெலகொண்டபள்ளி கிராமம்………மிஸ்டர் நிஜாம் மற்றும் தொரைசானிங்கர ஸ்வேதா சேச்சி அவர்களோட கட்டுபாட்டுல இருக்குஅந்த கிராமத்துல நம்ம சினேகாஆண்டி(கல்யானம் ஆயிட்டா ஆண்டிதானே…) ஒரு பெண் குழந்தைய கைல வச்சுக்கிட்டுதேம்பிக்கிட்டு இருக்குபின்னாடி பாத்தா……நிஜாமின் ஆளுங்க சினேகாவ தொரத்திக்கிட்டுவரானுங்கசினேகாவும் குழந்தைய ஆத்துல மிதக்கவிட்டுட்டு முதுகுல ஈட்டியாலகுத்துவாங்கி செத்துபோகுதுஇத மறைஞ்சிருந்து பாக்குற ஒரு பெரியவர் அந்தகுழந்தைய எடுத்து வளக்குறார்.

அந்த குழந்தைதான் பேபி ஆனி……..ரொம்ப ரொம்ப அழகான பொன்னு…..கருப்பாஇருந்தாலும் செம அழகுஅந்த சின்ன மூக்குத்தி ஆனிக்கு இன்னும் அழகுசெமயாநடிச்சுருக்கு………சான்ஸே இல்லை படத்துக்கு பெரிய பிளஸ் பாயிண்டே பேபிஆனிதான்…..

இந்த படம் கண்டிப்பா ஸ்வேதா சேச்சியோட வரலாற்றுல பொரிக்க வேண்டிய படம்.சும்மா மிரட்டியிருக்குதொரைசானி எனும் கேரக்டருதான் சேச்சிக்கு…..சேச்சிய கேக்காமாகிராமத்துக் கோழி கூட கூவ முடியாதுஅப்படி இருக்கும் போது…… விதி……….ஆனிக்குபாட்டுன்னா உசுரு..ஆனியும் விவரம் தெரியாம பாடி தொலைச்சுடுது.

ஆனியொட பாட்ட கேட்ட ஸ்வேதா சேச்சி…….காண்டாகி….கடுப்பாகுர சமயத்துலயே கண்டுபுடிச்சுது…..பேபி ஆனி ராஜன்னாவோட மகள் அப்படிங்கிரத…….கண்டுபுடிச்ச உடனே……பெரியவர கொன்னு…ஆனிய வீட்டுக்கு உள்ள போட்டு கொளுத்திடுது…….அங்க வர நாசர் ஆனிய காப்பாத்தி…….டெல்லிக்கு போய் பிரதமர் நேருவ பாத்து தொரசானி கொடுமைய சொல்லி சுதந்திரம் வாங்கி தர சொல்லிட்டு மயங்கி விழுந்துடுரார்..

ஆனி டெல்லிக்கு போனுச்சா…….நேருவ பாத்துச்சா………..நெடுகொண்டலபள்ளி கிராமத்துக்கு சுதந்திரம் கிடைச்சுச்சா………, தொரைசானி ஸ்வேதா சேச்சி….இதையெல்லாம் வேடிக்கை பாத்துச்சா இல்ல வெட்டி போட்டுச்சா .அப்படிங்கரதுதான் மீதீ கதை.

நாகார்ஜுனா கிட்டத்தட்ட ஒரு கெளரவ ரோலில்தான் வராரு, ஆனால்…அழிக்க முடியாத சுதந்திர வேட்கைய நடிப்புலயும், பாடும் பாடல்களிலயேயும் காமிச்சு செமயா பின்னி பெடலடுத்துருக்கார்.………வீர பாண்டிய கட்டபொம்மன் பத்தியெல்லாம் பேசிருக்காரு..

பிரிட்டீஷ் காரனுக்கிட்ட சுதந்திரம் வாங்கி தர முடிஞ்ச ராஜன்னாவால நம்ம நாட்டு பன்னாடைங்க கிட்ட இருந்து பாவப்பட்ட மக்களுக்கு சுதந்திரத்த வாங்கி தர முடியல….

ராஜான்னாவோட பாட்டும் நடிப்பும் பாக்குர நமக்கே ஒரு வெறிய உண்டாக்குது. பன்னாடைங்க எவனாவது மாட்டுனா செவுலுலயே ரெண்டு குடுக்கலாம் போல வெறியேத்துது.

படம் பூரா ஆக்ரமிச்சது பேபி ஆனிதான்....

படத்துக்கு பேரு ஆனியோட கேரக்டர் பேரான மல்லம்மா எனும் பேரைய வச்சுருக்கலாம். நாகார்ஜுனாவோட ரசிகர்களுக்காவும், படத்த வியாபாரம் பன்றதுக்குகாகவும் ராஜன்னான்னு வச்சுட்டாங்க போல.

ஆந்திராவில சில கிராமங்கல் இன்னும் சுதந்திரம் வாங்குன காலத்துல இருந்த மாதிரியே இருக்கதால………பெருசா செட்டிங்கல்லாம் போட வேண்டிய அவசியமே இல்லை, அந்த விதத்துல தயாரிப்பாளருக்கு செலவு மிச்சம்தான்…..

இசை, கீரவானி…….படத்துக்கு பெரிய பிளஸ் பின்னனி இசையும்……….மனச உருக்கும் பாடல்களும் என்பத மறுக்கவே முடியாது…

படம் ரெண்டு மனி 10 நிமிடம்தான் ஆனால் பெரிய படம் மாதிரி தோனுதுரது ஏன்னு தெரியலை. திரைக்கதைதான் பிரச்சனையா அப்படின்னா…….நோ… வே..ஒருவேளை ஆனியே படம் பூரா வரதா இருக்கலாம் இல்லன்னா….சுதந்திர வேட்கை நமக்கு தூரமா போயிட்டதலாயும்…..பன்னாடை அரசியல்வியாதிங்க கிட்ட இப்ப நாம வாழுற அடிமை வாழ்க்கையாவும் இருக்கலாம்.

தெலுங்கு படத்துல வில்லனா வர எல்லாருமே சுதந்திர போராட்ட வீர்ர்களா அப்படி இல்லன்னா நல்லவங்கலா நடிச்சுருக்கது பாக்கர நமக்கு வித்தியாசமா நல்லா இருக்கு. சின்ன சின்ன கேரக்டருங்க கூட தனிச்சு தெரியர அளவுக்கு திரைக்கதை செமயா இருக்கு. சின்ன சின்ன லாஜிக் மிஸ்டேக்ஸ் இருந்தாலும்….சுதந்திர வேட்கைக்கு முன்னாடி அதெல்லாம்………..நம்ம பக்கத்துலயே வரது இல்லை.

என்னை விட்டா இன்னும் 10 பக்கத்துக்கு இந்த படத்தப்பத்தி எழுதிக்கிட்டே இருப்பேன்…இந்த படம் கண்டிப்பா பாக்க வேண்டிய படம்…..நிறைய விருதுகளை வாங்குன படம்…..தியேட்டருல முடியலைன்னா டிவிடிலயாவது பாருங்க…….கண்டிப்பா உங்களுக்கும் புடிக்கும்……….புடிக்கலைன்னா பின்னுட்டத்துல வந்து திட்டுங்க….

சுதந்திர வேட்கை எனும் தீ…….எப்போதும் அனைந்து விடுவதில்லை……அது எங்கேயாவது, அடிமைப்பட்ட யார் நெஞ்சிலாவது, அதற்கான தேவை இருக்கர இடத்துல எப்போதும் எரிந்து கொண்டுதான் இருக்கும்….

sk natarajan

unread,
Jun 14, 2012, 12:53:22 PM6/14/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், nadpudan
உங்கள் விமர்சனத்திற்க்காகவே இந்த படத்தை பார்க்க வேண்டும் போல உள்ளது 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/6/14 V Ramesh <rames...@gmail.com>

sk natarajan

unread,
Jun 14, 2012, 12:53:56 PM6/14/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், nadpudan
ஒரு  போட்டி இருந்தால் தானே சினிமா உலகில் தாக்குப் பிடிக்க முடியும்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/6/13 V Ramesh <rames...@gmail.com>
சினிமா செய்திகள் அனைத்தும் இந்த இழையில்


தனுஷை வம்புக்கு இழுப்பதே சிம்புவுக்கு வேலையாகிவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இவரின் வாலு படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. 


V Ramesh

unread,
Jul 6, 2012, 9:09:13 AM7/6/12
to பண்புடன், nadpudan, தமிழ் சிறகுகள்

நான் ஈ - சிங்கிளாக வந்த சிங்கம்

எப்பவுமே விமர்சனம் எழுதுறதுக்காக படம் பாக்கணும்னா முதல் காட்சி தான் போவேன். ஆனா போன வாரமே என் வூட்டம்மா "இந்தப் படத்துக்கு என்னையும் அழைச்சிக்கிட்டு போகணும் இல்லைனா அவ்வளவுதான்" அப்படின்னு மிரட்டி வச்சிருந்தாங்க. அதான் வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து என்ர அம்மணியை அழைச்சிக்கிட்டு தியேட்டருக்கு போக வேண்டியதாயிட்டது.

ஷை படம் தெலுகுல வந்தப்பவே நான் ராஜமெளலிக்கு பரம ரசிகனாகி விட்டேன். அதன் பிறகு அவரது படம் என்றால் முடிந்த வரை முதல் காட்சி தான். சத்ரபதி, விக்ரமருக்குடு (தமிழ்ல சிறுத்தை), யமதொங்கா, மகதீரா, மரியாதை ராமண்ணா வரை எல்லாப்படமும் முதல் காட்சி பார்த்து விடுவேன்.

படம் தெலுகில் வெளியாகும் அன்றே தமிழிலும் வெளியாவதால் தமிழிலேயே பார்த்து விடலாம் என்று முடிவெடுத்து ராக்கிக்கு சென்றோம். பிரபல தமிழ் நடிகர் இல்லை, பிரபல தமிழ் இயக்குனர் இல்லை இருந்தாலும் திரையரங்கு 80 சதவீதம் நிறைந்திருந்ததது படத்தின் டிரைலர் ஏற்படுத்தியிருந்த எதிர்ப்பார்ப்பினால் தான்.

படத்தின் கதை என்ன? நாம் ஒண்ணும் படம் பார்த்து தான் கதையை தெரிஞ்சிக்கணும் அப்படின்னுலாம் ஒன்னுமில்லை. டிரைலரிலேயே தெரிந்து விட்டது. நானியும் சமந்தாவும் காதலர்கள். வில்லனான சுதீப் நானியைக் கொன்று காதலை பிரிக்கிறார். நானி ஈயாக மறுஜென்மம் எடுத்து வந்து சுதீப்பை எப்படி பழிவாங்குகிறார் என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் ஹீரோவாக நடித்திருக்கும் நானி உண்மையில் அழகாக இருக்கிறார். ஹான்ட்சம் என்ற வார்த்தைக்கு உரிய உடல்வாகு. நடிக்கத்தான் ஸ்கோப் கம்மியாக இருக்கிறது. படம் துவங்கிய அரை மணி நேரத்திற்குள் செத்து விடுகிறார்.

ஹீரோயின் சமந்தா, பாப்பா மாஸ்கோவின் காவிரி படத்தில் பூத்த பூ போல் அப்படி ஒரு ப்ரெஷ்ஷாக இருந்தார். இப்பொழுது சப்பிப்போட்ட மாங்கொட்டை போல் இருக்கிறார். ஏகப்பட்ட படம் அதற்குரிய கமிட்மெண்ட்ஸ். அதுவும் தெலுகில் என்றால் அதற்குரிய விலையை கொடுத்து தானே ஆக வேண்டும்.

வில்லனாக சுதீப் படத்திற்கென அவர் தனியாக நடிக்க வேண்டியதில்லை. செலிபரிட்டி கிரிக்கெட் லீக்கில் எப்படி இருந்தாரோ அப்படியே படத்திலும் வந்து போகிறார். கன்னடத்தில் வசூல் மன்னன் தமிழிலும் தெலுகிலும் மார்க்கெட்டை எதிர்பார்த்து காலை நுழைத்திருக்கிறார். இந்தப் படத்தை விசிட்டிங் கார்டாக வைத்து தான் அடுத்தடுத்து வாய்ப்பு தேட வேண்டும்.

படம் நன்றாக இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. படத்தில் லாஜிக் என்ற ஒரு வஸ்துவை மறந்து விட்டு படத்துடன் மக்கள் ஒன்றி விடுகின்றனர். அந்த ஈயின் பழி வாங்கும் நடவடிக்கை ஒவ்வொன்றுக்கும் விசில் சத்தம் பறக்கிறது.

உண்மையில் கிராபிக்ஸ் என்பது என்னவெனில் அது படத்தில் இருப்பதே தெரியக்கூடாது. படத்தில் காட்சிகளுடன் இயல்பாக வர வேண்டும். அது சரியாக வந்திருப்பது தான் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கும்.

படத்தின் பாடல்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன. படமாக்கப்பட்ட விதமும் கூட. சந்தானம் ஒரே காட்சியில் படத்தில் வந்து விட்டு இறுதியில் படம் முடிந்த பின் இன்னொரு காட்சியிலும் வருகிறார். படத்தின் மார்க்கெட்டிங்கிற்காக நுழைக்கப்பட்டிருக்கிறார்.

படத்தை குடும்பத்துடன், குழந்தைகளுடன் பார்த்து மகிழ்ந்து விட்டு வரலாம். சகுனிக்கு பல மடங்கு தேவலாம்.

நான் ஈ - சிங்கிளாக வந்த சிங்கம்

ஆரூர் மூனா செந்தில்


sk natarajan

unread,
Jul 6, 2012, 9:18:14 AM7/6/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், nadpudan
தரமான படம் என்று ஆருடம் சொல்லியுள்ளீர்கள்
படத்தை  பார்த்துவிட வேண்டியது தான்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/7/6 V Ramesh <rames...@gmail.com>

V Ramesh

unread,
Jul 9, 2012, 7:09:21 AM7/9/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், nadpudan
சகுனி படு மொக்கை.. போயிடாதீங்க அப்படி இப்படின்னு வந்த அறிவுரைங்களையும் தாண்டி நேத்து படம் பார்த்தேன். தேவையில்லாம பயமுறுத்தி இருக்கங்க.. படம் ஒரு முறை பாக்குற மாதிரி நல்லாவே இருக்கு.

படத்துல மெசேஜ் இல்ல.. மைதா கோதுமை மாவு இல்லை... யாரும் கடைசி வரைக்கும் நடந்துட்டு மட்டும் இல்லை.. புள்ளி விவரம் சொல்லப்படலை.. சந்தானம் காமெடி ரசிக்கிற மாதிரி இருக்கு.

கதாநாயகி சரியில்லைன்னு இயக்குனருக்கே தெரிஞ்சுருக்கு போலிருக்கு.. அதான்  பாட்டுக்கு மட்டும் வந்திட்டு போயிடறாங்க.. மொத்தமா அம்மணி ஒரு 20 நிமிசம் இருக்கும் அதுவே அதிகம்.

மொத்தத்தில் சாதாரண மசாலா மாஸ் படங்களில் கொஞ்சம் மசாலா கம்மிய போட்ட படம். கண்டிப்பா 1 தடவை பாக்கலாம்.

V Ramesh

unread,
Jul 9, 2012, 11:49:11 AM7/9/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், nadpudan
யாரும் இந்த படத்தை பார்த்துட்டீங்களா ?
இந்த நான் ஈ படத்தை எல்லாருமே நல்லா இருக்குன்னு சொல்லுறாங்க. .அதிசயமா நெகட்டிவா  ஒரு விமர்சனம் கூட படிக்கலை.. இந்த இயக்குனர் தொடர்ச்சியாக 8,9 ஹிட் மூவி கொடுத்திருக்காராமே.. சில விமர்சனங்கள் சுட்டிகள். படம் பார்க்க ஆவல் அதிகமாகிட்டே போவுதே


கேபிள் சங்கர் விமர்சனம்
http://www.cablesankaronline.com/2012/07/eega.html

உண்மைத்தமிழன் விமர்சனம்..

http://truetamilans.blogspot.com/2012/07/blog-post.html

ஹாஜா மொஹைதீன்

unread,
Jul 9, 2012, 11:53:19 AM7/9/12
to panb...@googlegroups.com, nadp...@googlegroups.com
அந்த டைரக்டரை பத்தி விரிவா இங்கே எழுதி இருக்காங்க 

ராட்சஷன்

from யுவகிருஷ்ணா by யுவகிருஷ்ணா

இந்தளவுக்கு நெஞ்சை நாக்கால் தடவ வேண்டுமா என்ற கேள்வி இந்தக் கட்டுரையை படித்து முடித்ததும் எழாது. ஏனெனில் கமர்ஷியல் சினிமாவை சுவாசிப்பவர்கள் அனைவரும் தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி குறித்து மாதக் கணக்கில் அலுப்பில்லாமல் பேசவே செய்வார்கள்.

உலகிலேயே தொடர்ந்து 3வது  ஹாட்ரிக் வெற்றியை சுவைக்கப் போகிறவர், இவர் மட்டும்தான். அதனால்தான் விலை போகக் கூடிய நட்சத்திரங்கள் இல்லாத போதும் இவர் இயக்கி வரும் ‘ஈகா’ தெலுங்கு படத்துக்கு ரூ.30 கோடி வரை செலவிட்டிருக்கிறார்கள்.

எப்படியும் ‘ஈகா’வின் தமிழ் வடிவமான ‘நான் ஈ’ குறித்து அப்படம் வெளியாகும் தருணத்தில் இதே ‘தினகரன் வெள்ளி மலரி’ல் செய்தி வரத்தான் போகிறது. ஸோ, படம் குறித்த விவரங்களை அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது ஓவர் டூ ராஜமவுலி.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரெய்ச்சூரில் பிறந்த இவர், வளர்ந்தது, படித்தது எல்லாம் ராஜமுந்திரி அருகிலுள்ள கோவூரில். ஆனால், கல்லூரி படிப்பை முடிக்கவில்லை. அப்பா, விஜயேந்திர பிரசாத், தெலுங்கு படங்களுக்கு கதாசிரியராக இருந்ததால் இயல்பாகவே சினிமா மீது இவருக்கு நாட்டம் பிறந்தது. குழந்தை நட்சத்திரமாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார். 1985ல் பூஜை போடப்பட்ட ‘லார்ட் கிருஷ்ணா’ படத்துக்கு இவரது அப்பாதான் கதாசிரியர். இயக்கம், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் தந்தையும் இவரது மாமாவுமான ஷிவதத்தா. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் படம் நின்று விட்டது. 
பின்னர் ஒரு வருடம் வரை படத்தொகுப்பாளர் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்விடம் உதவியாளராக பணிபுரிந்து விட்டு ஏவிஎம் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் சில காலம் வேலை பார்த்தார். அதன் பிறகு தன் அப்பாவிடமே 7 வருடங்கள் வரை உதவியாளராக இருந்தார். இந்த காலகட்டங்களில் சென்னையில்தான் ராஜமவுலி வசித்தார்.

அப்பாவுடன் சேர்ந்து சினிமாக்களுக்கு கதை எழுத ஆரம்பித்த இவர், தன் அப்பாவின் சார்பாக பல இயக்குநர்களிடம் கதை சொல்லியிருக்கிறார். அவை தெலுங்கில் திரைப்படமாகவும் வெளி வந்திருக்கின்றன. ஆனால், இவர் மனதில் உருவான கற்பனையின் எல்லையைக் கூட அப்படங்கள் தொடவில்லை.

இந்த வருத்தமே வெறியான போது சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க இவரது குடும்பம் முடிவு செய்தது. இவரது அப்பாதான் இயக்கம். ஆனால், ‘அர்த்தாங்கி’ என்னும் அந்தப் படம் மாபெரும் தோல்வியை தழுவியது. கழுத்தை நெறிக்கும் அளவுக்கு கடன் சுமை. இதை அடைக்க வேண்டுமென்றால் ராப்பகலாக உழைக்க வேண்டும். அதற்கு சென்னையை விட, ஹைதராபாத்தான் சரியான இடம்.

எனவே, ஹைதராபாத்துக்கு இவரது குடும்பம் இடம் பெயர்ந்தது. கங்காராஜு தனது இரண்டாவது படத்தை இயக்க அப்போது முயற்சித்துக் கொண்டிருந்தார். அவரிடம் உதவியாளராக சேர்ந்தார். ஆனால், அந்தப் படம் தொடக்கத்திலேயே நின்றுவிட்டது. இதன் பின்னர், பழம்பெரும் தெலுங்கு இயக்குநரான கே.ராகவேந்திரராவ்விடம் கடைசி உதவியாளராக சேர்ந்தார். அப்போது சின்னத்திரை தொடர்களை அதிகமும் கே.ராகவேந்திரராவ் இயக்கி வந்த நேரம். ‘சாந்தி நிவாசம்’ உட்பட எண்ணற்ற மெகா தொடர்களில் உதவி இயக்குநராக, ஷெட்யூல் டைரக்டராக, செகண்ட் யூனிட் இயக்குநராக பணிபுரிந்தார். இவரது அசுர உழைப்பை பார்த்து ராகவேந்திரராவ் சூட்டிய பெயர்தான், ‘ராட்சஷன்’.
என்றாலும் சீனியர் உதவியாளர்களுக்கு கிடைத்த மரியாதையும், அங்கீகாரமும் இவருக்கு கே.ராகவேந்திரராவ்விடம் கிடைக்கவில்லை. மெல்ல மெல்ல சினிமா தயாரித்ததால் ஏற்பட்ட கடன் அடைந்தது.

இந்தநேரத்தில்தான் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக அறிமுகமாகும் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ படத்தை கே.ராகவேந்திரராவ், எழுதி தயாரித்தார். உண்மையில் அவரது ஃபர்ஸ்ட் அசிஸ்ட்டெண்ட் ஆன வர முடாபள்ளிதான், இப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் இயக்கி வந்த சின்னத்திரை தொடர் ஒன்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததால், சினிமா வாய்ப்பு ராஜமவுலிக்கு கிடைத்தது.

கதை, திரைக்கதை, வசனம் உட்பட சகலத்திலும் இவரது பங்களிப்பு இருந்தது. ஆனாலும் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’, கே.ராகவேந்திரராவ் பெயரை தாங்கியே வந்தது. அத்துடன் டைரக்ஷன் மேற்பார்வை என்றும் அவர் பெயர் பொறிக்கப்பட்டது. இதனால் படம் பம்பர் ஹிட் அடித்தபோதும், ராஜமவுலிக்கு எந்த கிரெடிட்டும் கிடைக்கவில்லை.

ஆனால், கே.ராகவேந்திரராவுக்கு இவரது திறமையும், அசுர உழைப்பும் புரிந்தது. தனது மகன் சூர்ய பிரகாஷை வைத்து ஃபேன்டஸி படம் ஒன்றை இயக்க இவரை ஒப்பந்தம் செய்தார். போறாத வேளை... சூர்ய பிரகாஷ் நடித்த முதல் படமான ‘நீத்தோ’ அட்டர் ப்ளாப். எனவே உருவாக்கத்திலேயே ராஜமவுலியின் இரண்டாவது வாய்ப்பு நசுங்கியது.
ஊரெல்லாம் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ படத்தை கே.ராகவேந்திரராவ், இயக்கியதாக பேச்சிருந்ததால் இவரை நம்பி படம் தர யாரும் முன்வரவில்லை. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வாய்ப்புக்காக போராடினார்.

அந்த சமயத்தில்தான் ‘விஎம்சி பேனர்’ என்னும் தயாரிப்பு நிறுவனம், ஜூனியர் என்டிஆரை வைத்து ‘கொரடு’ என்னும் படத்தை தொடங்கியிருந்தது. ஆனால், படம் வளரவில்லை. பின்னர் உதயசங்கர் இயக்கத்தில் அதே புராஜக்டை ஆரம்பித்தார்கள். அதுவும் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் வழியாக தயாரிப்பாளரை சந்தித்து ஒரு கதையை சொன்னார், ராஜமவுலி. அனைவருக்கும் அந்த நெரேஷன் பிடித்திருந்தது. அப்படி உருவான படம்தான், பல ரிக்கார்டுகளை முறியடித்த ‘சிம்மாத்ரி’. உண்மையில் பி.கோபால் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பதாக இருந்த சப்ஜெக்ட் அது.

இந்தப் பட வெற்றிக்கு பிறகுதான் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ படத்தை ராஜமவுலி இயக்கினார் என்பதையே உலகம் ஒப்புக் கொண்டது! மூன்றாவதாக இந்தியாவில் யாருக்குமே அறிமுகமாகாத ரெக்பி விளையாட்டை மையமாக வைத்து ‘சை’ படத்தை இயக்கினார். படம் ஹிட் என்பதுடன் உலகளவில் ரெக்பி விளையாட்டை துல்லியமாக காண்பித்த மூன்றே படங்களில் இதுவே முதன்மையானது என்ற பெருமையையும் பெற்றது.

இந்தப் படத்தின் போதுதான் தனது ஒளிப்பதிவாளரை ராஜமவுலி கண்டு பிடித்தார். அவர்தான், செந்தில்குமார். ஆந்திராவில் செட்டில் ஆன தமிழ் குடும்பத்தை சேர்ந்த அவர், பூனே திரைப்படக் கல்லூரியில் படித்தவர். ‘அய்தே’ அவரது முதல் படம்.

ராஜமவுலியின் தொடர் வெற்றிக்கு காரணம், டீம் ஒர்க்தான். ஆரம்பத்தில் யாரிடம் உதவியாளராக இருந்தாரோ அந்த கோத்தகிரி வெங்கடேஸ்வரராவ்தான் இன்று வரை இவரது அனைத்து படங்களுக்கும் படத்தொகுப்பாளர். இசை, எம்.எம்.கீரவாணி என்கிற மரகதமணி. கலை ஆர்.ரவீந்தர். ஒளிப்பதிவு, செந்தில்குமார். இந்த காம்பினேஷனை இவர் மாற்றியதேயில்லை.

ப்ரீ புரொடக்ஷன் நிலையிலேயே தனது குழுவுடன் அமர்ந்து காட்சிகள் அனைத்துக்கும் ஷாட் பிரித்து விடுவார். எந்தெந்த ஷாட்டுக்கு என்னென்ன கேமரா, லென்ஸ் வேண்டும், ஜிம்மி ஜிப்பா அல்லது சாதாரண கேமராவா; ஆர்ட் டைரக்டர் என்ன செய்ய வேண்டும்; எந்த இடத்தில் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் தர வேண்டும்... என சகல விஷயங்களையும் அந்தந்த இலாக்காவுடன் பேசி தீர்மானித்து விடுவார். இதனால் இவரது குழுவை சேர்ந்த அனைவருக்கும் அனைத்தும் அத்துப்படி ஆகிவிடும்.

சமயங்களில் இவரது குழுவுக்குள் சண்டை வருவதும் உண்டு. ‘எமதொங்கா’வில் அப்படி கலை இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் முட்டி மோதிக் கொண்டார்கள். எமலோகம் செட்டை அற்புதமாக ஆர்.ரவீந்தர் போட்டிருந்தார். ஆனால், செந்தில்குமார் டல் லைட்டிங் கொடுத்திருந்தார். இப்படி செய்தால் ரசிகனுக்கு, தான் அமைத்த செட் போய் சேராது என்பது ரவீந்தரின் வாதம். பிரகாசமான லைட்டிங் கொடுத்தால் ஷேடோ விழும் என்பது செந்தில்குமாரின் நியாயம். அப்போது பலூன் லைட்டிங் நடைமுறைக்கு வரவில்லை. இந்த வாக்குவாதத்தை அடுத்துதான் அந்த டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டது. யெஸ், வீட்டில் எரியும் பல்புகளை செந்தில்குமார் கூடுதலாக பயன்படுத்தினார். இதனால் நகைகளும் ‘டால்’ அடித்தன. ரவீந்தரின் உழைப்பும் ரசிகர்களுக்கு தெரிந்தது. ஷேடோவும் விழவில்லை.

இப்படி ராஜமவுலி கொடுத்த சுதந்திரத்தால் வளர்ந்ததால்தான் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், இந்தியாவின் டாப் மோஸ்ட் சிஜி பட ஒளிப்பதிவாளராக கொண்டாடப்படுகிறார். ‘எமதொங்கா’, ‘அருந்ததி’, ‘மகதீரா’ என அவர் பேர் சொல்லும் படைப்புகள் ஏராளம்.

அந்தவகையில் ‘ஈகா’வும் சரிபாதி சிஜி ஒர்க் உள்ள படம்தான். சொல்லப் போனால் ராஜமவுலியின் கனவுப் படம் இது. ஆனால், இந்தக் கனவை உடனடியாக இவர் நடைமுறைப்படுத்தவில்லை.

தனது நான்காவது படமான ‘சத்ரபதி’யில் முதல்முறையாக சோதனை அடிப்படையில் சிஜி ஒர்க்கை பயன்படுத்தினார். சுறாவுடன் நாயகன் பிரபாஸ் சண்டை போடும் காட்சி அது. திரையில் அது சரியாக வரவில்லை. அன்றைய தொழில்நுட்பம் அந்தளவுக்குதான் இந்தியாவில் அறிமுகமாகி இருந்தது என சமாதானம் அடைந்திருக்கலாம்.

அப்படி தேற்றிக் கொள்ள ராஜமவுலி விரும்பவில்லை. ஆர்ட் டைரக்டரில் ஆரம்பித்து, ஒளிப்பதிவாளர் வரை சகலரும் நவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். கல்லூரி மாணவன் போல் தானும் கசடற கற்றார். அதற்கான பலனை தனது அடுத்தப் படமான ‘எமதொங்கா’வில் அறுவடை செய்தார்.

எமனது அரண்மனை அந்தரத்தில் தொங்கும். முகப்பு எருமை முகத்துடன் கம்பீரமாக இருக்கும். குறிப்பாக பாசக் கயிறை பறிகொடுத்த எமன் (மோகன் பாபு), மீண்டும் அக்கயிற்றை ஜூனியர் என்டிஆரிடமிருந்து கைப்பற்றியதும் அந்த எருமை முகம் சிலிர்த்து எழும். அட்டகாசமான சிஜி ஒர்க் அது. குறிப்பாக மறைந்த என்டிஆர் தனது பேரனுடன் டான்ஸ் ஆடும் காட்சி... செம.

இதனையடுத்து ‘விக்கிரமார்க்குடு’வை இயக்கினார். பம்பர் ஹிட். பின்னர் ‘மகதீரா’வை பிரமாண்டமாக இயக்கினார். படம், ஆல் டைம் ரிக்கார்ட். தான்,உட்பட, தனது குழுவை சேர்ந்த அனைவரும் தயாராகி விட்டார்கள். இனி கனவுப்படமான ‘ஈகா’வுக்கு போகலாம் என முடிவு செய்தார். ஆனால், இதுவரை மாஸ் நடிகர்களின் படங்களைதான் இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். ‘ஈகா’வுக்கு பெரிய நட்சத்திரங்கள் தேவையில்லை. சின்ன நட்சத்திரங்கள் போதும். எனில், அதிகம் அறியப்படாத நடிகர்களை வைத்து தன்னால் வெற்றிப் படத்தை கொடுக்க முடியுமா? பரிசோதிக்க முடிவு செய்தார். காமெடியன் சுனிலை கதையின் நாயகனாக்கி ‘மரியாத ராமண்ணா’வை இயக்கினார். படம், ப்ளாக் பஸ்டர்.

ரைட். இனி, ‘ஈகா’தான் என்று களத்தில் இறங்கி விட்டார். நாயகனும், நாயகியும் காதலிக்கிறார்கள். இது வில்லனுக்கு பிடிக்கவில்லை. எனவே நாயகனை கொன்று விடுகிறான். இறந்த நாயகன் ஈயாக பிறக்கிறான். வில்லனை பழி வாங்குகிறான். இதுதான் ‘ஈகா’வின் கதை. ஆனால், ஈயின் மொத்த ஆயுட்காலமே 21நாட்கள்தான். அதற்குள் சர்வ வல்லமை படைத்த மனிதனை அதனால் எப்படி பழி வாங்க முடியும்? இதைத்தான் பரபரப்பான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்.

ஆக்ஷன் காட்சிகளும், படம் முழுக்க நூலாக ஓடும் சென்டிமெண்ட்டும், வலுவான ப்ளாஷ்பேக்கும் ராஜமவுலியின் அடையாளங்கள். இந்த ஏரியாவில் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை. குறிப்பாக இன்டர்வெல் ப்ளாக் பவர் ஃபுல்லாக இருக்கும். சுருக்கமாக சொல்வதெனில் மாஸ் படங்களிலும் ஃபெர்பக்ஷனை கொண்டு வர முடியும் என்று காட்டியவர், இவர்தான். அதனால்தான் ‘தேவ் டி’ படம் வழியாக உலகெங்கும் புகழ் பெற்ற அனுராக் காஷ்யப், ‘ஈகா’வின் டிரெய்லரை எவரெஸ்ட் உயரத்துக்கு தனது டுவிட்டர் தளத்தில் புகழ்ந்திருக்கிறார்.

நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தும் திரையுலகில் டெக்னீஷியன்களுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ராஜமவுலியின் ‘ஈகா’வுக்காக இந்தியாவே ரத்தின கம்பளம் விரித்து காத்திருக்கிறது. ஒரு கலைஞனுக்கு கிடைத்திருக்கும் உச்சபட்ச மரியாதை இது.
 
ஒன்று மட்டும் நிச்சயம். ஜூன் மாதம் இந்திய பாக்ஸ் ஆபீஸ் அதிரப் போகிறது. சாதாரண ஈ, ஒட்டு மொத்த திரையுலகையும் புரட்டிப் போடப் போகிறது. அனைத்து ஸ்டார் நடிகர்களையும் விட, இயக்குநரே உயர்ந்தவர் என்பது நிரூபணமாகப் போகிறது.

சந்தேகமேயில்லை. எஸ்.எஸ்.ராஜமவுலி என்பது இன்று வெறும் பெயரல்ல. அது, இந்திய மாஸ் சினிமாவின் விலை மதிப்பற்ற பிராண்ட் நேம்.

- கே.என்.சிவராமன்

(நன்றி : தினகரன் வெள்ளிமலர் 
27.04.2012)

என்றென்றும் அன்புடன்
அபு ஜைனப் (ஹாஜா மொஹைதீன்)

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422



2012/7/9 V Ramesh <rames...@gmail.com>

Raja sankar

unread,
Jul 9, 2012, 12:01:31 PM7/9/12
to panb...@googlegroups.com
சினிமாவில் டெக்னீஷியன்களுக்கு மரியாதையா? இந்தியாவிலா? அதான் மழை பெய்யாமல் போய்விட்டதோ?

இந்தியாவிலே மருத்துவர்கள், பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் என யாரும் மதிக்கப்படமாட்டார்கள்.

அரசியல்வாதிகள், நடிக நடிகர்கள், புரட்சியாளர்கள், எழுத்தாளர்கள் என வெட்டி சீன் ஆட்கள் மட்டுமே மதிக்கப்படுவார்கள்.

ராஜசங்கர்
(Rajasankar)

2012/7/9 ஹாஜா மொஹைதீன் <princ...@gmail.com>

VJagadeesh

unread,
Jul 9, 2012, 12:07:32 PM7/9/12
to panb...@googlegroups.com
கோ டு கூகுள் பண்புடன் பேஜ்... தேர் யூ வில் பைண்ட் எடிட் மை மெம்பர் ஷிப்...

கிளிக் அன்சஸ்கிரைப் ப்ரம் திஸ்(பண்புடன்) க்ரூப்...

2012/7/9 Raja sankar <errajasa...@gmail.com>

ஸ் பெ

unread,
Jul 9, 2012, 12:08:56 PM7/9/12
to panb...@googlegroups.com
;))))))))))))))))))))))))))

2012/7/9 VJagadeesh <vom...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------

Raja sankar

unread,
Jul 9, 2012, 12:21:46 PM7/9/12
to panb...@googlegroups.com
இந்த மகாதீரா படத்தோட கதையத்தான் என்னோடது அதை சுட்டுட்டாங்க என சொல்லி ஒருத்தர் கேஸெல்லாம் போட்டு ஜெயிக்க முடியாம தற்கொலை பண்ணிக்கிட்டாரு இல்லையா?

ஏதோ எப் எம் இல் வேல செஞ்சுக்கிட்டு இருந்தாருன்னும் நினைக்கறேன்.

ராஜசங்கர்
(Rajasankar)



2012/7/9 ஹாஜா மொஹைதீன் <princ...@gmail.com>

ஹாஜா மொஹைதீன்

unread,
Jul 9, 2012, 1:02:19 PM7/9/12
to panb...@googlegroups.com

ஆமாம்  இவரை பற்றி உண்மை தமிழன் எழுதி இருந்தது இப்போது தான் ஞாபகம் வந்தது 


கோபாலண்ணே..! ஏண்ணே.. இப்படி..?

27-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



இந்தப் புகைப்படத்தில் இருக்கும் சினிமா கதாசிரியர்,  இணை இயக்குநர், அண்ணன் காந்தி கோபால் இந்த நேரத்தில் உயிரற்ற சடலமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் மார்ச்சுவரியில் படுக்க வைக்கப்பட்டிருக்கிறார்..!

எப்போதும் சிரித்த முகம்.. வாயைத் திறந்தால் கொட்டுகின்ற காமெடி ஷொட்டுகள்.. “இவருக்கெல்லாம் முருகன் கஷ்டத்தையே கொடுக்க மாட்டானா..? எப்படி நக்கல் விட்டுக்கிட்டே இருக்காரு..” என்று எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்திய குணமுடையவர்..

"சரவணா.. உம்முன்னு இருக்காத மூதேவி..! கொஞ்சம் சிரிச்சுத் தொலை.. கஷ்டம் வந்தாலும் தூசி தட்டினாப்புல லேசுல விடுடா.. மனசு விட்டுச் சிரி.. எல்லாம் சரியாப் போயிரும்.." என்று பார்க்கும்போதெல்லாம் அட்வைஸை அள்ளி வீசுவார்..!

எப்போதும் முரட்டு கதரில் வெள்ளை சட்டை. ஆனால் இதற்குக் கொஞ்சமும் பொருந்தா ஜீன்ஸ் பேண்ட். இதுதான் அண்ணனின் இத்தனை வருட கால யூனிபார்ம்..! தமிழ்ச் சினிமாவுலகில் 20 வருட அனுபவமுள்ளவர். பல 'பகீர்' கதைகளையும், சில 'சிலிர்ப்பான' உண்மைக் கதைகளையும் இவர் சொல்கின்றவிதமே நம்மைக் கொன்றெடுக்கும்.

தமிழ்ச் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்களின் தொடர்ச்சியான வால் போல் இருந்த காரணத்தினால், பல பிரிவுகளுக்கும், சேர்க்கைகளுக்கும் இவரே சாட்சியாக இருந்திருக்கிறார்.. அத்தனையையும் இவர் மூலமாகக் கேட்டதில் இருந்தே அண்ணனின் மேல் ஒரு மிகப் பெரும் மரியாதை..!

“ஏண்ணே.. இதையெல்லாம் புத்தகமா எழுதினா என்ன அண்ணே..? இல்லாட்டி ஏதாவது ஒரு பத்திரிகைல தொடர் கட்டுரையா எழுதலாமே?” என்று எத்தனையோ முறை கேட்டுவிட்டேன்.. “இல்ல சரவணா.. அது ரொம்பத் தப்பு.. எல்லா இடத்துலேயும் இது மாதிரி அத்தனையும் நடக்கத்தான் செய்யும். நம்மளை நம்பி கூப்பிட்டு சோறு போட்டு, தொழில் கத்துக் கொடுத்து, கூடவே வைச்சிருந்து பார்த்துக்குறாங்கன்னா அந்த நம்பிக்கையை மனிதர்களின் பலவீனத்துக்காக கெடுக்கக் கூடாது. அப்புறம் நம்மளை கெடுக்க ஒருத்தன் தானா வந்து சேருவான்.. வேணாம் விட்ரு..” என்று அலட்சியமாகச் சொல்லுவார்..!

கே.பாக்யராஜிடம் பல வருடங்கள் அசோஸியட் இயக்குநர்..! அவருடைய கடைசிப் படத்துக்குப் பின்பு கேப்டன் விஜயகாந்தின் கடைக்கண் பார்வையில் இருந்தவர்தொடர்ந்து 'மின்பிம்பங்களி்ன்' 'நையாண்டி தர்பாரு'க்கு காமெடி டிராக் எழுதினார்அப்படியே  'வீட்டுக்குவீடு லூட்டி'க்கும் எழுத்தாளர் கூடவே இயக்குநரும் ஆனார்சின்னி ஜெயந்தை வைத்து ஒரு வருடத்திற்கு ராஜ் டிவியில் 'காமெடி தர்பார்' நடத்தினார்..! கடைசியாக தற்போதுவரையிலும் ஹலோ எஃப்.எம்.மின் அசைக்க முடியாத கதாநாயகனாக இருந்தவர்அங்கே'அஞ்சலி அபார்ட்மெண்ட்டின்' நாடகத்திற்கு கதைதிரைக்கதைஇயக்கம் செய்து அதில் மேனேஜர் மாதவனாக நடித்தும் கொண்டிருந்தார்..!

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'மகாதீரா' என்ற திரைப்படத்தின் உண்மையான கதாசிரியர் இவர்தான்..! சினிமா பாணியில் இவரிடம் கதையை வாங்கிவிட்டுவழக்கம்போல பட்டை நாமம் போட்டுவிட்டார்கள்திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும்பெப்ஸியிலும் புகார்கொடுத்து 3 வருடங்களாகக் காத்துக் கொண்டிருந்தார்ஒன்றும் நடக்கவில்லை..!

"விதி விட்டது போன்னு போக வேண்டியதுதான் சரவணா..! வாழ்க்கை முழுக்க பிச்சை போட வேண்டியவன்.. மொத்தமா ஒரே நாள்ல ஒருத்தனுக்குப் போட்டேன்னு நினைச்சுக்குறேன்.." என்று சென்ற மாதம் என் அலுவலகத்திற்கு வந்திருந்தபோது எனக்கே ஆறுதல்சொல்லிவிட்டுப் போனார்..! இதோ இன்றைக்கு அந்தத் திரைப்படம் 'மாவீரன்' என்ற பெயரில் தமிழில் வெளியாகும் அதே தினத்தில், தனது உயிரை முடித்துக் கொண்டிருக்கிறார்..!

தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் நமக்கே இத்தனை கோபம் வரும்போது, அவருடைய குருநாதர் பாக்யராஜே, அதே 'மகாதீரா' படத்தின் தமிழ் டப்பிங் படத்துக்கு வசனம் எழுதிக் கொடுத்திருக்கிறார் என்பதையும் மிக இயல்பாக தாங்கிக் கொண்டார். “மனுஷங்க அப்படித்தான் சரவணா.. விடு.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும்ல்ல. எனக்கு என் பிரச்சினை.. அவருக்கு அவர் பிரச்சினை.. எல்லாரும் வாழ்க்கைல எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க..” என்று கேஷூவலாக அதனைத் தாண்டிச் சென்றவர்..!

இப்போதும் ஹலோ எஃப்.எம். வானொலி ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்கள். “அவரா ஸார்..? ஏன் ஸார்..? அவர் புரோகிராம்தான் ஸார் இங்க டாப்பு. அந்த நகைச்சுவையை விரும்பும் வானொலி நேயர்களின் எண்ணிக்கை மாதாமாதம் எகிறிக் கொண்டே போகிறது என்று சந்தோஷத்தில் இருக்கிறோம்.. அவர் ஏன் இப்படி..?” என்கிறார்கள்..!

எப்போதும் ஹாஸ்ய உணர்வுடன் வாழ்க்கையை உணர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தவர், இன்றைக்கு என்ன நினைத்தாரோ.. தனது மனைவியுடன் நீண்ட காலமாக இருந்த மனஸ்தாபத்தில் இப்படிச் செய்துவிட்டார்..!

அந்த நிமிடத்திற்கு முன்பாக தனது ஈமச்சடங்கிற்கு வேண்டிய பணத்தினை தனது நண்பர் ஒருவரிடத்தில் கொடுத்து வைத்திருக்கிறார். தனது மகள்கள் பெயரில் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்திருக்கிறார்.. தனது மகள்களுக்கான அடுத்த வருடத்துக்கான ஸ்கூல் பீஸ் முழுவதையும் இப்போதே கொண்டு போய் கட்டியிருக்கிறார்..! இத்தனைக்கும் மூத்த மகளின் வயது 7. இரண்டாவது மகளின் வயது 3. இளம் தளிர்கள்..! எப்படி விட்டுவிட்டுப் போக மனது வந்ததோ தெரியவில்லை..!

மனைவியை வெளியே அனுப்பிவிட்டு அவர் திரும்பி வருவதற்குள் தன் உயிரைத் தானே தூக்கிட்டு போக்கியிருக்கிறார். இதை இன்னமும் நிறைய கோடம்பாக்க நண்பர்கள் நம்ப முடியாத அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.. “அவனாவது தொங்கறதாவது..?”என்கிறார்கள்..! ஆனால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருக்கும் அவரது உடல் அதுதான் உண்மை என்கிறது..!

கோபாலண்ணே.. ஏண்ணே இப்படி..?


Read more: http://truetamilans.blogspot.com/2011/05/blog-post_714.html#ixzz2094dUbiA
என்றென்றும் அன்புடன்
அபு ஜைனப் (ஹாஜா மொஹைதீன்)

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422



2012/7/9 Raja sankar <errajasa...@gmail.com>

Raja sankar

unread,
Jul 9, 2012, 9:38:33 PM7/9/12
to panb...@googlegroups.com

சினிமா உலகம் என்னைக்கும் திருந்த போறதில்லை. இந்த மாதிரி அடுத்தவன் கதையை சுட்டு படம் எடுத்தா ஹாட்ரிக் வெற்றி என்ன நூறு வெற்றி கூட கொடுக்கலாம். ஆனா அப்பவும் ஏமாளிகள் வந்துட்டே தான் இருப்பாங்க.

ராஜசங்கர்
(Rajasankar)

2012/7/9 ஹாஜா மொஹைதீன் <princ...@gmail.com>

V Ramesh

unread,
Jul 12, 2012, 6:01:56 AM7/12/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், nadpudan



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது சினிமாக்காரர்களுக்கு புதிதல்ல. இன்று காலை 12 மணிக்கு தீர்மானித்து சாயந்தரம் 6 மணிக்கு பத்திரிகையாளர்களை அவசரம், அவசரமாக சந்தித்த மாற்றான் படத்தின் டீம் இதைத்தான் செய்தது..! இத்தனை அவசரமாக இவர்கள் பிரஸ்ஸை சந்திக்க வேண்டியதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை..! ஒருவேளை நமது அண்ணன் முத்துராமலிங்கம் எழுதிய இந்தப் பதிவுதானோ என்ற ஐயமும் பிரஸ் உலகத்திற்குள் எழுந்திருக்கிறது..!




கதாநாயகன் சூர்யாவுக்கு முன்பாகவே தயாரிப்பாளர்கள் கல்பாத்தி பிரதர்ஸ் சகிதம் பிரசாத் லேப்புக்கு வந்துவிட்ட இயக்குநர் கே.வி.ஆனந்திடம் அனைத்து டிவிக்காரர்களும் பைட் கேட்க, “நிகழ்ச்சியை முடிச்சிட்டு தர்றனே.. அத்தோட நீங்களும் டீஸரை பார்த்துட்டீங்கன்னா கேக்குறதுக்கு ஏதாவது தோணும்ல்ல..?” என்று நயமாகப் பேசி மறுத்தார்.

டிரெயிலர் ஒரு முறைக்கு, மூன்று முறை ஒளிபரப்பப்பட்டது. தெலுங்கில்  ப்ரியாமணி நடித்து வரும் சாருலதா போன்று இரட்டையர்களாக தோளோடு ஒட்டியவர்களாக சில இடங்களில் தெரிகிறார்கள். ஆனால் எப்படித்தான் சண்டைக் காட்சியில் நடிப்பதுபோல எடுத்தார்கள் என்று தெரியவில்லை..! இது ரொம்பவே ரிஸ்க்குதான்..! 

எப்படியும் இன்றைக்கு தன்னை பிறாண்டி எடுப்பார்கள் என்பதை உணர்ந்தே வந்திருந்த கே.வி.ஆனந்த்,. இந்தக் கதை பிறந்த கதையை வெகு சுவாரசியமாகச் சொன்னார். அதுவே மிகப் பெரிய கதையாக இருந்தது. சிவாஜி படத்தின் ஷூட்டிங்கின்போது தாய்லாந்து நாட்டு பத்திரிகையொன்றில் ஒட்டிப் பிறந்து அப்போது இளமை வயதில் இருந்த இரட்டையர்களைப் பற்றிய செய்தியைப் படித்தாராம். அதனை அப்போதே சூர்யாவிடம் சொல்லி பகிர்ந்து கொண்டாராம்.. “இதை பேஸ்ஸா வைச்சு ஒரு படம் செய்யணும்”னு சூர்யாவிடம் இவர் சொல்ல.. சூர்யா கேட்டுக் கொண்டதோடு சரி. மூச்சுவிடலையாம்.. 

இது மாதிரியான இரட்டை கேரக்டரில் நடிப்பது ரொம்பவே கஷ்டம். அதுனால நாமளா போய் கேக்க வேணாம். அவரா வந்தா எடுக்கலாம் என்ற நினைப்பில் ஓரமாய் இருந்த கே.வி.ஆனந்தை இழுத்துப் பிடித்து தெருவில் விட்டவர் சூர்யாதானாம்..! “சூர்யா மாட்டேன்னு சொல்லியிருந்தா, இந்த பிராஜெக்ட்டை தொட்டிருக்கவே மாட்டேன்..” என்றார் ஆனந்த். சூர்யா மிகவும் கஷ்டப்பட்டு நடிச்சிருக்காருன்னு சொல்லி “இரட்டை கதாபாத்திரங்கள்.. வேறு வேறு மேக்கப், டிரெஸ்ஸிங்ன்னு.. கஷ்டமான சிச்சுவேஷன்ஸ்.. இதுல ஸ்டண்ட் சீன்ஸ்லாம் இருந்துச்சு.. ஒருத்தர் ஆக்சன் செய்யும்போது இன்னொருத்தரோட ஆக்சனை ஞாபகம் வைச்சிருந்து திரும்பி அதையே செய்யணும்.. சூர்யா மாதிரி டெடிகேஷன் பெர்ஸனால மட்டும்தான் அது முடியும்..” என்று வழக்கம்போல புகழ்ந்து தள்ளினார் ஆனந்த்.

கேள்வி கேட்கும் படலம் துவங்கியவுடன் கே.வி.ஆனந்த் நினைத்த மாதிரியே முதல் கேள்வியே படத்தின் காப்பி பற்றித்தான் பறந்து வந்தது. உறுதியாக மறுத்தார் ஆனந்த். “அலோன் படத்துக்கும் இதுக்கும் துளி கூட சம்பந்தமில்லை..” என்றார். பின்பு மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது, “இது பற்றி இணையத்துல நியூஸ் வந்த பின்னாடி அந்தப் படத்தையும் நான் பார்த்தேன். அதுக்கும், இதுக்கும் ஒரு சீன்கூட ஒற்றுமையில்லை..” என்று மறுபடியும் ஆணித்தரமாக மறுத்தார். அப்படியும் விடாமல் பத்திரிகையாளர்கள் துளைத்தெடுக்க, “அந்தப் படத்தோட பேஸ்மெண்ட் மட்டும் ஒரு வேளை என் படத்துல ஒண்ணா இருக்கலாம்னு நினைக்கிறேன்..” என்று மூன்றாவது ஸ்டேட்மெண்ட்டையும் விட்டார். இதற்கடுத்தும் தொடர்ந்து கேள்விகள் அலோன் படத்தைப் பற்றியும் காப்பி பற்றியும் வர, “விட்ரலாமே.. எதுக்கு திருப்பித் திருப்பி அதையே பேசணும்..?” என்று அலுத்துப் போய் சொன்னார்.

படத்தின் டிரெயிலரை பார்த்தால் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் செய்யும் அலம்பல்களும், சேட்டைகளுமாகத்தான் இருக்கிறது..! அலோன் படத்தின் பேஸ்மெண்ட்டுடன் தமிழ்ச் சினிமாவின் சூத்திரத்தின்படி, கே.வி.ஆனந்தின் இயக்கத்தில், சூர்யாவின் சிரிப்பு நடிப்பில், சுபா இரட்டையர்களின் தமிழுக்கேற்றபடியான சூப்பரான திரைக்கதையில் செப்டம்பரில் வெளிவர இருக்கிறது இப்படம்.

“கிளைமாக்ஸ் சீன்கூட இன்னும் எடுக்கலைங்க..” என்று சூர்யா சொல்ல, கே.வி.ஆனந்தோ “ஒரு பாட்டு சீன் மட்டும்தான் எடுக்கலை..” என்று திருப்பித் திருப்பிச் சொல்லி சமாளித்தது ஏன் என்றுதான் தெரியவில்லை..!



எப்படியோ இயக்குநர் ஆனந்தின் இந்த சமாளிப்பு பதில்களைத் தாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து இணையத்தின் முன் அமர்ந்தால் அலோன் இல்லை. Stuck on you  என்ற ஹாலிவுட் படத்தின் போஸ்டர்கூட இந்தப் படத்திற்காகக் காப்பியடிக்கப்பட்டிருக்கிறது என்கிற புதுச் செய்தியும் வர.. அடப் போங்கப்பா… இவங்களுக்கு அரசியல்வியாதிகளே பரவாயில்லைன்னு சொல்லணும் போலத் தோணுது..!
Reply all
Reply to author
Forward
0 new messages