திசை மாறிய இசைப்புயல்

128 views
Skip to first unread message

Ganesh kumar

unread,
Jul 1, 2011, 11:18:18 PM7/1/11
to பண்புடன்

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரையுலகில் ஒரு புயலாய் உருவெடுத்தவர் ஏ.ஆர்.ரகுமான். இப்படி ஒரு புயல் உருவாகத் தேவையான காலநிலை அப்போது இருந்தது. ‘ரோஜா’ படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பரவலாய் ஒலித்தபோதும் கூட இளையராஜாவின் இசைத் தாலாட்டில் சொக்கிப் போயிருந்த பலரும் அந்தப் படத்தின் இசையை எப்போதாவது ஒரு படத்தில் நிகழ்ந்து மறையும் அதிசயம் என்றே கூறினர். ஆனால் அந்த அதிசயம் தொடர்ந்தது. ‘ரோஜா’ படத்தின் இசை, தமிழ் மட்டுமின்றி இந்தியத் திரையிசையே அடுத்த சில ஆண்டுகளுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

ரோஜாவில் நடந்த அதே போன்ற சம்பவம் எழுபதுகளின் தொடக்கத்தில் நடந்தது. ‘அன்னக்கிளி’ எனும் திரைப்படத்தில் பண்ணைப் புரத்தில் இருந்து வந்த ராசைய்யா எனும் இளைஞனின் இசையைக் கேட்ட ரசிகர்களுக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. தன்னுடைய அடுத்தடுத்த சில படங்களின் மூலம் அன்னக்கிளியில் நடந்தது ஒருபட அதிசயம் இல்லை என்பதைப் புரிய வைத்தான் அந்த இளைஞன். ஒரு புதிய திரையிசை வரலாற்றின் தொடக்கமாகவே ‘அன்னக்கிளி’ அமைந்தது. ஆனால் ‘அன்னக்கிளி’யில் தொடங்கிய இசைப்பயணத்துக்கும் ‘ரோஜா’வில் தொடங்கிய இசைப்பயணத்துக்கும் வேறுபாடுகள் உண்டு. இளையராஜா தன்னுடைய இலக்காகக் கொண்டிருந்தது தமிழ்த் திரையிசையை மட்டும்தான். பின்னாளில் அவருடைய பாடல்கள் இந்தி உட்பட இந்தியாவின் பிற மொழிப்படங்கள் பலவற்றில் நகலெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இளையராஜாவுக்கும் இந்தியத் திரையிசை மீதான ஆர்வம் உண்டானது. ஆனால் அது அவருடைய குருதியில் ஊறிய இசை மரபுக்கும், அவருடைய மனநிலைக்கும் ஒத்திசைவானதாக இல்லாமற் போனதால் அந்த முயற்சிகளைக் கைவிட்டார். அது தமிழ் சினிமா ரசிகர்களின் பெரும்பாக்கியமாக அமைந்தது.

எண்பதுகளில் இருந்து தொண்ணூறுகளின் தொடக்கம் வரை ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகள் இளையராஜாவின் இசை மழையில் தமிழ் மக்கள் திகட்டத் திகட்ட நனைந்தனர். இக்கால கட்டத்தில் திரையுலகமே இளையராஜாவின் காலடியில் கிடந்தது என்பதே உண்மை. படத்துக்கு அவருடைய இசை கிடைத்துவிட்டாலே படத்தின் வெற்றி உறுதி செய்யப்படும் அளவுக்கு உயர்ந்த நிலையில் அவர் இருந்தார். ஒரு ஆண்டின் பிரபலமான பாடல்களைப் பட்டியலிட்டால் அதில் எண்பது சதவீதம் அவருடைய பாடல்களாகவே இருந்தன. இக்காலத்தில் சக இசையமைப்பாளர்களாயிருந்த சங்கர்கணேஷ், டி.ராஜேந்தர், சந்திரபோஸ், தேவேந்திரன், அம்சலேகா, எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா போன்றவர்களால் இவருடைய உயரத்தை நினைத்துப் பார்க்கக் கூட முடியாத தூரத்தில் இருந்தார். மோகன், ராமராஜன், பிரபு போன்ற நடிகர்கள் சினிமாவில் நீடித்திருந்ததே ராஜாவின் இசையால்தான். ஆர்.சுந்தரராஜன், ஆர்.வி.உதயகுமார், கஸ்தூரிராஜா, பி.வாசு போன்ற இயக்குனர்களும் ராஜாவின் இசையால் உருவானவர்கள்தான். பாரதிராஜா, கே.பாலச்சந்தர், மணிரத்னம், பாலு மகேந்திரா, மகேந்திரன், பாக்கியராஜ் போன்றவர்களை இந்த வரிசையில் சேர்க்க முடியாது என்றாலும், அவர்களின் வெற்றிகளுக்குப் பக்கபலமாக ராஜாவின் இசை இருந்ததை மறுக்க முடியாது.

‘அன்னக்கிளி’யில் இளையராஜா கொண்டு வந்தது மிகப்பெரிய மாற்றம். அதற்கு முன் இருந்த திரை இசை மரபுகளை உடைத்தெறிந்து பட்டி தொட்டியெங்கும் பரவிய புதுவிதமான இசையை அந்தப் படத்தில் இசை ரசிகர்கள் அனுபவித்தனர். அப்படத்தில் ராஜாவின் இசையில் தனித்தன்மையாக விளங்கியது மன உணர்வுகளை மீட்டக்கூடிய தரமான இசைக் கோர்ப்பு. ‘ரோஜா’வில் ரகுமான் செய்ததும் மிகப்பெரிய மாற்றம்தான். ரசிகர்களுக்கு அந்தப் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் புதுமையான விருந்தாக அமைந்தது. ஆனால் ‘அன்னக்கிளி’யின் இசையைக் கடந்து செல்லக்கூடிய, அதை விடவும் தரமான இசையைத் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் இளையராஜாவால் கொடுக்க முடிந்தது. ரகுமானால் அது முடியாமல் போனது. இதில்தான் ராஜாவுக்கும் ரகுமானுக்குமிடையிலான வேறுபாடு அடங்கியிருக்கிறது. இன்னமும் ‘ரோஜா’ படத்தின் இசையைக் கடந்து செல்லக் கூடிய தரமான இசையை ரகுமான் தரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ரகுமானின் இசையில் குறிப்பிடத்தகுந்த அம்சமே ஒலி ஆளுகைதான். அவருடைய பல பாடல்களின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்தது சத்தங்களில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள்தான். அந்த வகையில் பார்த்தால் ‘புது வெள்ளை மழை’ பாடலுக்கு இணையான உயர்ந்த ஒலி ஆளுகை உள்ள ஒரு பாடலை அதற்குப் பின் அவருடைய இசையில் கேட்க வாய்ப்பில்லாமலே போய்விட்டது. ரகுமானின் இசை வரலாறு பதினாறு ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்தப் பதினாறு ஆண்டுகளை முற்பாதி, பிற்பாதி என்று பிரித்தால் முதல் எட்டாண்டுகளை விட, அடுத்த எட்டாண்டுகளில் அவருடைய புகழ் உச்சத்தை தொட்டது. இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை யாரும் போகாத உயரங்களுக்கு அவர் சென்றார். தேசிய அளவிலும், உலக அளவிலும் உயர்ந்த பல விருதுகள் அவர் முன் குவிந்தன. ஆனால் தமிழ் சினிமாவில் அவருடைய இசையின் தரமும், தாக்கமும் இதற்கு நேரெதிர் நிலையில் இருந்தன.

முதல் எட்டாண்டுகளில் ரகுமான் இசையமைத்த தமிழ்ப் பாடல்களுடன் ஒப்பிட்டால் அடுத்த எட்டாண்டுகளில் அவர் தந்த பாடல்கள் புகழ் பெறவில்லை என்றே சொல்லலாம். ஒலித் தொழில் நுட்பத்தில் உலகத்தரமான இசையை அவரால் பின் பாதியில் தர முடிந்தாலும், அந்த ஒலிகளை நிர்வகிப்பதிலும், இசையைக் கோர்ப்பதிலும் அவர் பெருமளவு சறுக்கியிருக்கிறார். அதே சமயம் பாடல்கள்தான் புகழ் அடையவில்லையே தவிர, அவருடைய புகழ் வளர்ந்துள்ளது. அவர் இசையமைக்கும் ஒவ்வொரு படத்துக்கும் எதிர்பார்ப்பு கூடிக் கொண்டேதான் வந்துள்ளது. ஏமாற்றமும்தான். இந்தக் கட்டுரைக்காக ரகுமான் இசையமைத்த பாடல்களில் பிடித்த பாடல்களை வரிசைப்படுத்தும் படி ஏறத்தாழ நூறு பேரிடம் கேள்வி நிரல் தயாரித்துக் கொடுத்து அவற்றை நிரப்பி வாங்கினேன். (படித்தவர், படிக்காதவர், இளைஞர், முதியோர், ஆண், பெண், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர் என்று பலதரப்பட்ட மனிதர்களையும் இதில் உள்ளடக்கியிருந்தேன்.) அவர்களால் அதிகம் குறிப்பிடப்பட்ட பாடல்களில் பெரும்பாலானவை சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் ரகுமான் இசையமைத்தவை. (மிக அதிகமாக குறிப்பிடப்பட்டிருந்த பாடல் ‘புது வெள்ளை மழை.’)

இந்த மாற்றத்துக்கு காரணம் தமிழ் சினிமாவிலிருந்து அவர் படிப்படியாக விலகிச் சென்றிருப்பதுதான். அவரைப் பொறுத்தவரை வளர்ச்சி என்பதை மாநில அளவிலிருந்து தேசிய அளவுக்கும், தேசிய அளவிலிருந்து உலக அளவுக்குமானதாகப் புரிந்து கொண்டு அவ்வாறான திசையில்தான் பயணித்துள்ளார். முற்பாதிக் காலத்தில் தன்னுடைய இசைத் திறனையும் உழைப்பையும் தமிழ் சினிமாவுக்காக வழங்கிய அவர் பிற்பாதியில் அதிலிருந்து தவறியுள்ளார். ‘ரங்கீலா’, ‘லகான்’ போன்ற படங்களின் வெற்றிக்குப் பின்னர் அவருடைய பார்வை இந்தி சினிமாவின் மீது திரும்பியது. இந்தி சினிமாவிலும் உச்சநிலையை அடைந்த பின்னர் அவருடைய பார்வை உலக சினிமாவின் (உலக சினிமா என்று இங்கு சுட்டுவது ஹாலிவுட் சினிமா என்று புரிந்து கொள்ளவும்.) பக்கம் பாய்ந்தது. அதன் பலனாக இந்தியர்களைக் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் படமான ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைக் கையில் பிடித்துக் கொண்டு வந்தார். தமிழனாக அவருடைய சாதனைக்காக பெருமைப்படுவதா, இல்லை தமிழ் சினிமாவில் இருந்து அவருடைய இசை இன்னும் விலகிப் போய் விடுமே என்று வருத்தப்படுவதா என்று குழப்பமாயிருந்தது.

முதலில் வடக்கு நோக்கி நகர்ந்த அவருடைய இசை, தற்போது மேற்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் இளையராஜாவுக்குப் பின் மிகப்பெரும் இசை ஆளுமையாக உருவெடுத்திருக்க வேண்டிய ரகுமான், தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறார். இளையராஜாவின் சிறந்த பாடல்களாக குறைந்தது ஆயிரம் பாடல்களையாவது பட்டியலிட முடியும். ஆனால் பதினாறு ஆண்டுகளில் ரகுமான் இசையமைத்தவற்றில் சிறந்த பாடல்களைப் பட்டியலிட்டால் அதிகபட்சம் நூறைத் தாண்டாது. குறைந்த அளவு படங்களுக்கு மட்டுமே இசையமைத்து ஏமாற்றம் தந்தவர், பிற்பாதிக் காலத்தில் குறைந்த அளவே உழைப்பையும், அக்கறையையும் தந்து மேலும் ஏமாற்றமளித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் ரகுமானின் இசை எந்த அளவுக்கு நீர்த்துப் போயுள்ளது என்பதற்கு அவருடைய சமீபத்திய படங்களே நல்ல உதாரணம். அவர் இசையமைத்த ‘பாபா’, ‘தெனாலி’, ‘சிவாஜி’, ‘உதயா’, ‘கண்களால் கைது செய்’, ‘எந்திரன்’, ‘சக்கரக்கட்டி’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘ராவணன்’ போன்ற படங்களின் இசையுடன் ‘ரோஜா’, ‘திருடா திருடா’, ‘டூயட்’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘இருவர்’, ‘காதலன்’, ‘காதல் தேசம்’, ‘இந்தியன்’, ‘காதலர் தினம்’ போன்ற படங்களின் இசையை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை புரியும்.

படித்த மேல்தட்டு வர்க்கத்தினரால் கொண்டாடப்பட்ட ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் பாடல்கள் பெரும்பான்மைப் பிரிவைச் சேர்ந்த மக்களிடம் சென்று சேரவே இல்லை. கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டு மக்களைப் பெரிதும் கவர்ந்த பாடல்களில் பெரும்பாலானவை ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ் போன்றவர்கள் இசையமைத்தவை. இவற்றில் ரகுமான் இசையமைத்த பாடல்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இது போன்ற ஏமாற்றங்களை ஏ.ஆர்.ரகுமான் இனியும் தரக்கூடாது. திசைமாறிச் சென்றுவிட்ட இசைப் புயல், மீண்டும் திரும்பி தமிழ்நாட்டில் ஒரு தென்றலாகவாவது தவழ வேண்டும்.

Ganesh kumar

unread,
Jul 1, 2011, 11:19:13 PM7/1/11
to பண்புடன்

sk natarajan

unread,
Jul 1, 2011, 11:25:40 PM7/1/11
to panb...@googlegroups.com
அருமையாக  , அலசி ஆராய்ந்து எழுதப் பாட்ட கட்டுரை
கணேஷ் குமார்  அவர்களுக்கு வாழ்த்துகள்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/7/2 Ganesh kumar <mara...@gmail.com>

செல்வன்

unread,
Jul 2, 2011, 12:44:43 AM7/2/11
to panb...@googlegroups.com


2011/7/1 Ganesh kumar <mara...@gmail.com>

‘பாபா’, ‘தெனாலி’, ‘சிவாஜி’, ‘உதயா’, ‘கண்களால் கைது செய்’, ‘எந்திரன்’, ‘சக்கரக்கட்டி’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘ராவணன்’ போன்ற படங்களின் இசையுடன் ‘ரோஜா’, ‘திருடா திருடா’, ‘டூயட்’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘இருவர்’, ‘காதலன்’, ‘காதல் தேசம்’, ‘இந்தியன்’, ‘காதலர் தினம்’ போன்ற படங்களின் இசையை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை புரியும்.


பாபா, தெனாலி, எந்திரன், சிவாஜி எல்லாமே ஹிட்டுதான்

முந்தி ராஜாவும் ரகுமானும் தேவாவும் மாத்திரம் இருந்தார்கள். அப்ப ராஜாவின் செல்வாக்கு குறைய துவங்கிய நேரம். அதனால் போட்டி இல்லாமல் ரகுமானின் பாட்டு நல்லா ஹிட் ஆச்சு. இப்ப நிறைய பேர் வந்துவிட்டார்கள்.

ரகுமான் எங்கே வருமானம் அதிகமா வருதோ அங்கே சென்று சம்பாதிப்பது நல்லது. நாம் எல்லோரும் வாய்ப்பு கிடைத்தால் வெளிநாடு போய் சம்பாதிக்கிறோம்.ரகுமானும் சம்பாதிச்சு நல்லா இருக்கட்டுமே?
--
செல்வன்

"தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக" என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"- செல்வன்


www.holyox.blogspot.com

Ganesh kumar

unread,
Jul 2, 2011, 2:34:58 AM7/2/11
to panb...@googlegroups.com
2011/7/2 sk natarajan <sknatar...@gmail.com>

அருமையாக  , அலசி ஆராய்ந்து எழுதப் பாட்ட கட்டுரை
கணேஷ் குமார்  அவர்களுக்கு வாழ்த்துகள்

 

சாகி நடராஜன் சார்

கட்டுரையை நான் எழுதவில்லை , கீற்று தளத்திலிலிருந்து எடுத்த கட்டுரை இது.

Omprakash

unread,
Jul 2, 2011, 2:35:27 AM7/2/11
to panb...@googlegroups.com
ரகுமானின் இசை ஒரு தப்பினருக்கு மட்டும்தான் கிம சிறப்பானதாக தோன்றுகிறது, “ beat, lyrics,sound effect, bgm,backround score"  இது எல்லாம் ‘90 களுக்கு முன்னால் சக மனிதர்கள் சொல்லி கேட்டிருக்க வாய்ப்பில்லை. இசையை ஒரு ஆடம்பர பொருளாக தோன்ற செய்தது ரகுமானின் கைய்கர்யம்.
 
இன்னோர் முக்கியமான ஒன்று பாடல்களில் எளிமை என்பது சுத்தாம இல்லாம போச்சு. ஒரு SPB,சித்ராவை  தனது சாதாரண குழுவை வைத்து இளையராஜா தந்த இசையை நாம ரகுமான் கிட்ட எதிர்பார்க்க முடியாது. வாயில நுழையாதது பாட்டு வரி மட்டும் இல்லை பாடும் பாடகரின் பேரும்தான்.

2011/7/2 செல்வன் <hol...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.
கடலினைத் தாவும் குரவும்-வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,
சூத்திர னுக்கொரு நீதி-தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடு மாயின்-அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.

Ganesh kumar

unread,
Jul 2, 2011, 2:44:16 AM7/2/11
to panb...@googlegroups.com
2011/7/2 செல்வன் <hol...@gmail.com>
2011/7/1 Ganesh kumar <mara...@gmail.com>
‘பாபா’, ‘தெனாலி’, ‘சிவாஜி’, ‘உதயா’, ‘கண்களால் கைது செய்’, ‘எந்திரன்’, ‘சக்கரக்கட்டி’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘ராவணன்’ போன்ற படங்களின் இசையுடன் ‘ரோஜா’, ‘திருடா திருடா’, ‘டூயட்’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘இருவர்’, ‘காதலன்’, ‘காதல் தேசம்’, ‘இந்தியன்’, ‘காதலர் தினம்’ போன்ற படங்களின் இசையை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை புரியும்.


பாபா, தெனாலி, எந்திரன், சிவாஜி எல்லாமே ஹிட்டுதான்

 

 
ஏ.ஆர்.ரகுமானின் ஆரம்ப காலப் படங்களை ஒப்பிடுகையில் புதிய படங்களின் இசைத் தரம் குறைவாகவே இருக்கிறது என்பதே பெரும்பாலானோர் அபிப்ராயமாக இருக்கக்கூடும்.
 
இதே போல் தான் யுவனுக்கும் காதல் கொண்டேன் , நந்தா ,புன்னகைப் பூவே ...படப் பாடல்களில் இருந்த இனிமை தற்போதைய படப்பாடல்களில் இல்லை.
 
 
கார்த்திக்ராஜா இசையமைத்ததில் ஒருபடம் தான் உருப்படியாக இருக்கும். அது டும் டும் டும் . இந்தப் படத்திற்குக் கூட யுவன் உதவிசெய்திருக்கலாம் என்று பேச்சிருக்கிறது
 

Omprakash

unread,
Jul 2, 2011, 2:48:21 AM7/2/11
to panb...@googlegroups.com
கார்த்திக் ராஜா குடத்தில் இட்ட விளக்கு, சரியான break கிடைக்கல.

2011/7/2 Ganesh kumar <mara...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Ganesh kumar

unread,
Jul 2, 2011, 2:52:11 AM7/2/11
to panb...@googlegroups.com

முந்தி ராஜாவும் ரகுமானும் தேவாவும் மாத்திரம் இருந்தார்கள்.
 
தேவா தனது சகோதரர்கள் சபேஷ் - முரளி துணையுடன் நிறைய படங்களுக்கு இசையமைத்தார். 

வில்லன் .

unread,
Jul 2, 2011, 2:59:14 AM7/2/11
to panb...@googlegroups.com
ஏ ஆர் ரஹ்மான் - யுவன் இருவரும் அன்பீட்டபிள் சூப்பர் ஸ்டார்ஸ்.

2011/7/2 Ganesh kumar <mara...@gmail.com>


 
ஏ.ஆர்.ரகுமானின் ஆரம்ப காலப் படங்களை ஒப்பிடுகையில் புதிய படங்களின் இசைத் தரம் குறைவாகவே இருக்கிறது என்பதே பெரும்பாலானோர் அபிப்ராயமாக இருக்கக்கூடும்.

நிச்சயமாய் இல்லை. தலைமுறை இடைவெளியினால் ஏற்படும் ஒரு மாயத்தோற்றமே அது. விண்ணைத் தாண்டி வருவாயா ஏ ஆர் ரஹ்மானின் இசை பயணத்தில் ஒரு மைல் கல் தான். 
 
இதே போல் தான் யுவனுக்கும் காதல் கொண்டேன் , நந்தா ,புன்னகைப் பூவே ...படப் பாடல்களில் இருந்த இனிமை தற்போதைய படப்பாடல்களில் இல்லை.

ஆரண்யகாண்டத்தின் பேக்கிரவுண்ட் ஸ்கோர் உலகதரத்தில் இருக்கிறது. 
 
 
கார்த்திக்ராஜா இசையமைத்ததில் ஒருபடம் தான் உருப்படியாக இருக்கும். அது டும் டும் டும் . இந்தப் படத்திற்குக் கூட யுவன் உதவிசெய்திருக்கலாம் என்று பேச்சிருக்கிறது
 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
இப்படிக்கு

     "ஸ்ரீ" 

இது என்ன கடவுளே! 
புரியாது கடவுளே!
ஒவ்வொரு நாளும் விடியல்
கண் பார்த்தால் அது புதையல்!

செல்வன்

unread,
Jul 2, 2011, 3:00:51 AM7/2/11
to panb...@googlegroups.com


2011/7/2 Omprakash <vi.omp...@gmail.com>

ரகுமானின் இசை ஒரு தப்பினருக்கு மட்டும்தான் கிம சிறப்பானதாக தோன்றுகிறது, “ beat, lyrics,sound effect, bgm,backround score"  இது எல்லாம் ‘90 களுக்கு முன்னால் சக மனிதர்கள் சொல்லி கேட்டிருக்க வாய்ப்பில்லை. இசையை ஒரு ஆடம்பர பொருளாக தோன்ற செய்தது ரகுமானின் கைய்கர்யம்.
 
இன்னோர் முக்கியமான ஒன்று பாடல்களில் எளிமை என்பது சுத்தாம இல்லாம போச்சு. ஒரு SPB,சித்ராவை  தனது சாதாரண குழுவை வைத்து இளையராஜா தந்த இசையை நாம ரகுமான் கிட்ட எதிர்பார்க்க முடியாது. வாயில நுழையாதது பாட்டு வரி மட்டும் இல்லை பாடும் பாடகரின் பேரும்தான்.



ராஜா ஸ்டைல் தனி.ரகுமான் ஸ்டைல் தனி. தேவாவின் ஸ்டைல் தனி. இசையில் நிறைய வெரைட்டி இருப்பது நல்லதுதான்

B.SHANMUGAM

unread,
Jul 2, 2011, 3:02:35 AM7/2/11
to panb...@googlegroups.com
யுவனின் பருத்தி வீரன் படத்தில் 'வரும் ஊரறோம் பாடலில் வாசிக்கப்படும் நாதஸ்வரம் இசை இளையராஜா படத்தில் வருவதுதான் ......

2011/7/2 வில்லன் . <vom...@gmail.com>

Ganesh kumar

unread,
Jul 2, 2011, 3:03:49 AM7/2/11
to panb...@googlegroups.com


2011/7/2 Omprakash <vi.omp...@gmail.com>

கார்த்திக் ராஜா குடத்தில் இட்ட விளக்கு, சரியான break கிடைக்கல.

 
 
 
கார்த்திக்ராஜா தனது 13 வயதில் இந்தப் பாடலுக்கு கி-போர்ட் வாசித்தாராம் .
 

வில்லன் .

unread,
Jul 2, 2011, 3:07:50 AM7/2/11
to panb...@googlegroups.com
இசையமைப்பாளர்களில் நன்றாக பாடவும் செய்பவர்களில்

ஏ ஆர் முதன்மையானவர்...

அடுத்து யுவன், ஜிவி பிரகாஷ்.

2011/7/2 Ganesh kumar <mara...@gmail.com>


B.SHANMUGAM

unread,
Jul 2, 2011, 3:08:57 AM7/2/11
to panb...@googlegroups.com
தேவாவை விட்டுடீங்களே ஜெ,

2011/7/2 வில்லன் . <vom...@gmail.com>
இசையமைப்பாளர்களில் நன்றாக பாடவும் செய்பவர்களில்
--

Ganesh kumar

unread,
Jul 2, 2011, 3:24:06 AM7/2/11
to பண்புடன்

எண்பதுகளில் இருந்து தொண்ணூறுகளின் தொடக்கம் வரை ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகள் இளையராஜாவின் இசை மழையில் தமிழ் மக்கள் திகட்டத் திகட்ட நனைந்தனர்.

 

டிவிட்டரில் கானாபிரபா (ரேடியோஸ்பதி புகழ்) வி.குமார் இசையமைத்த பாடல்கள் அடங்கிய குறுந்தட்டு ஒன்று கிடைத்ததாக எழுதியிருந்தார் . இவர் இளையராஜா வரவிற்கு முன்னால் கலக்கிக் கொண்டிருந்தவர் . அடுத்த தலைமுறைக்கு இவரைப் பற்றித் தெரியாமல் கூட போகும் வாய்ப்பிருக்கிறது.குமாரின் மனைவி ஸ்வர்ணா ஒரு நல்ல பாடகி. 

Ganesh kumar

unread,
Jul 2, 2011, 3:25:01 AM7/2/11
to panb...@googlegroups.com
2011/7/2 வில்லன் . <vom...@gmail.com>
இசையமைப்பாளர்களில் நன்றாக பாடவும் செய்பவர்களில்

ஏ ஆர் முதன்மையானவர்...

அடுத்து யுவன், ஜிவி பிரகாஷ்.
 
 
இளையராஜாதான் எப்பவுமே பஸ்ட்டு ,
ஏ.ஆர் சிறந்த பாடகர் என்பது எனக்கு புதிய செய்தி :P 

B.SHANMUGAM

unread,
Jul 2, 2011, 3:27:42 AM7/2/11
to panb...@googlegroups.com
அட ரகுமான் நல்லா பாடுவாருங்க !!!!!!!


2011/7/2 Ganesh kumar <mara...@gmail.com>

--

வில்லன் .

unread,
Jul 2, 2011, 3:47:00 AM7/2/11
to panb...@googlegroups.com
தேவா, இளையராஜா, எம் எஸ் வி, கண்டசாலா, கிட்டப்பா, எம் கே டி எல்லாம் பாஸ்ட் டென்ஸ்.



2011/7/2 Ganesh kumar <mara...@gmail.com>


Omprakash

unread,
Jul 2, 2011, 4:29:53 AM7/2/11
to panb...@googlegroups.com

ரகுமான் ஒரு இசையில் தேவையில்லாத அலங்காரத்தை சேர்த்துவிடுகிறார். ராஜாவிடம் அது கிடையாது. புதுப்புது voice talant ன்னு சொல்லி கண்டவனை எல்லாம் இளையராஜ பாட வைப்பதில்லை. ஹரிகரனே கூட இளையராஜா ரொம்ப லேட்டாதான் பாட வைத்தார்.

வில்லன் .

unread,
Jul 2, 2011, 4:36:38 AM7/2/11
to panb...@googlegroups.com
அது ஒரு பாணி....

அது அதிகமாக பலரால் விரும்பப்படுவதும் கூட...

2011/7/2 Omprakash <vi.omp...@gmail.com>

ரகுமான் ஒரு இசையில் தேவையில்லாத அலங்காரத்தை சேர்த்துவிடுகிறார். ராஜாவிடம் அது கிடையாது. புதுப்புது voice talant ன்னு சொல்லி கண்டவனை எல்லாம் இளையராஜ பாட வைப்பதில்லை. ஹரிகரனே கூட இளையராஜா ரொம்ப லேட்டாதான் பாட வைத்தார்.

Jayaprakash N

unread,
Jul 2, 2011, 5:37:43 AM7/2/11
to panb...@googlegroups.com
பருத்திவீரனில் "அறியாத வயசு" பாடலிலும், கற்றது தமிழில் , " பறவையே எங்கிருக்கிறாய்" பாடலிலும் இன்னும் சுருதி குறையாமல் பாடி ப்ரெசென்ட் டென்ஸில் இன்னும் இளையராஜா  நிற்கிறார்.

With Lots OF Love,
JP



2011/7/2 வில்லன் . <vom...@gmail.com>
தேவா, இளையராஜா, எம் எஸ் வி, கண்டசாலா, கிட்டப்பா, எம் கே டி எல்லாம் பாஸ்ட் டென்ஸ்.



Jayaprakash N

unread,
Jul 2, 2011, 5:40:30 AM7/2/11
to panb...@googlegroups.com
விண்ணை தாண்டி வருவாயா வில் கிளைமாக்சில், பாதி கழுத்து அருந்த கோழி கத்துவது போல் ஒரு பாட்டு வருமே, அவர் என்னதான் சொல்ல வருகிறார் என்று கேட்டு சொன்னால் தேவலை.

Ganesh kumar

unread,
Jul 2, 2011, 5:59:09 AM7/2/11
to panb...@googlegroups.com
2011/7/2 வில்லன் . <vom...@gmail.com>
அது ஒரு பாணி....

அது அதிகமாக பலரால் விரும்பப்படுவதும் கூட...

 
 
இவரைப் பாடகியாக அறிமுகப்படுத்தியவர் ஏ.ஆர். தான் . வில்லன் இவர் யார் என்று சரியாகக் கூறிவிட்டால் ஏ.ஆர். சிறந்த பாடகர் என்பதை 20 % ஒப்புக்கொள்கிறேன். :P
gg.jpg

வில்லன் .

unread,
Jul 2, 2011, 6:02:33 AM7/2/11
to panb...@googlegroups.com
கொஞ்சம் நிலவு திருடா திருடா அனுபமா 

2011/7/2 Ganesh kumar <mara...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Ganesh kumar

unread,
Jul 2, 2011, 6:05:00 AM7/2/11
to panb...@googlegroups.com
essu , pakki 80 % ku niraiya kElvi irukku

வில்லன் .

unread,
Jul 2, 2011, 6:10:15 AM7/2/11
to panb...@googlegroups.com
அவ்வ்வ். 

எதா இருந்தாலும் கூகிளாண்டவர்கிட்ட கேட்டா பதில் சொல்ற மாதிரி கேளுங்க

2011/7/2 Ganesh kumar <mara...@gmail.com>

essu , pakki 80 % ku niraiya kElvi irukku


2011/7/2 வில்லன் . <vom...@gmail.com>
கொஞ்சம் நிலவு திருடா திருடா அனுபமா 

2011/7/2 Ganesh kumar <mara...@gmail.com>
2011/7/2 வில்லன் . <vom...@gmail.com>
அது ஒரு பாணி....


வில்லன் .

unread,
Jul 3, 2011, 6:55:12 AM7/3/11
to panb...@googlegroups.com
http://www.ilayarajahits.in

இளையராஜா படத்து பாடல் வரிகளும் பாடலும் இங்கே இருக்கிறது. 

எனக்கு யூ ட்யூப்ல பாட்டு கேட்பதற்கு பதில் இதில் கேட்பது சுலபமானதாக இருக்கிறது.


2011/7/2 Ganesh kumar <mara...@gmail.com>


2011/7/2 வில்லன் . <vom...@gmail.com>
இசையமைப்பாளர்களில் நன்றாக பாடவும் செய்பவர்களில்

ஏ ஆர் முதன்மையானவர்...

அடுத்து யுவன், ஜிவி பிரகாஷ்.
 
 
--

வில்லன் .

unread,
Jul 3, 2011, 6:59:39 AM7/3/11
to panb...@googlegroups.com
பல தளங்களில் பாடலாசிரியர்கள் பெயர் இருப்பது இல்லை.

பாடலாசிரியர்களை யாருமே மதிக்க மாட்டேன்றாய்ங்களே.

என் இனிய பொன் நிலாவே எழுதியவர் கங்கை அமரன்.

மூன்றாம் தலைமுறையினருக்கு கங்கை அமரன் யார்னே தெரியாது.

இரண்டாம் தலைமுறையினருக்கு கங்கை அமரன் ஓரங்க சீரங்க முத்தின மாங்கா என பாடல் எழுதும் ஒரு பி க்ரேடு பாடலாசிரியர்.



2011/7/3 வில்லன் . <vom...@gmail.com>

மரவண்டு

unread,
Jul 4, 2011, 2:58:21 AM7/4/11
to பண்புடன்

On Jul 3, 3:59 pm, வில்லன் . <vom...@gmail.com> wrote:
> பல தளங்களில் பாடலாசிரியர்கள் பெயர் இருப்பது இல்லை.
>
> பாடலாசிரியர்களை யாருமே மதிக்க மாட்டேன்றாய்ங்களே.
>

இளசுவின் நிறைய படங்களுக்கு அவருடைய இளவல் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

சிறு பொன்மணி அசையும் ..
இந்த மான் உந்தன் சொந்த மான் ...

80 களில் மலேசியா பாடிய பல குத்துப் பாட்டுகளை எழுதியவரும் இவரே.கொஞ்சிக்
கொஞ்சிப் பாடும் கேரளத்துப் பைங்கிளி ஒன்றை இவரோடு சேர்த்து வைத்துப்
பேசினார்களாம் , கேள்விப்பட்ட பைங்கிளியின் முகம் செங்கனலாய்ச் சிவந்து
போய் பறந்து விட்டதாம் கேரளத்திற்கு.

மரவண்டு

unread,
Jul 4, 2011, 8:50:37 AM7/4/11
to பண்புடன்
On Jul 3, 3:55 pm, வில்லன் . <vom...@gmail.com> wrote:
> http://www.ilayarajahits.in
>
> இளையராஜா படத்து பாடல் வரிகளும் பாடலும் இங்கே இருக்கிறது.


தளத்திற்கு நன்றி வில்லன் , நல்ல முயற்சி

0

செந்தூரப் பூவே செந்தூரப் பூவே பாடலைக் கேட்டால் பாரதி ராஜா இளையராஜா ,
ஜானகி இந்த மூவர் தானே ஞாபகத்திற்கு வருவார்கள்.
இந்தப் பாடலை எழுதியவர் கங்கை அமரன் என்று எத்தனை பேருக்குத் தெரியும் ?

0

கங்கை அமரன் பாடலாசிரியாராக இருந்து , பின் இசையமைப்பாளராக உருமாறி பிறகு
இயக்குநராக அவதாரம் எடுத்தார். இயக்குநர் துறைக்குத் தாவாமல்
இசையமைப்பாளராகவே தொடர்ந்திருந்தால் இளையராஜாவிற்குப் போட்டியாகக் கூட
வளர்ந்திருப்பார்.

0

VS நரசிம்மன் , கங்கை அமரன் போன்றோர் இளையராஜாவிற்கு பல படங்களில்
இசையமைப்பில் உதவியிருக்கிறார்கள்.
மதுரை வீரன் எங்க சாமி - இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரனே,
ஆனால் வியாபார யுக்திக்காக இளையராஜா என்று பெயர் அடித்து பாடல்களை
வெளியிட்டார்கள்.

இதே நிலமை தான் அடுத்த தலைமுறைக்கும் நீடிக்கிறது.யுவன்,ப்ரேம்ஜி

0
கங்கை அமரன் இசையமைத்த சில படங்கள்
----------------------------------------------------------------------------------
சட்டம்
வாழ்வே மாயம்
சுவர் இல்லாத சித்திரங்கள்
எங ஊர் ராசாத்தி
வெளிச்சத்துக்கு வாங்க
மருதாணி
னாளெல்லம் பெளர்ணமி
என் தங்கச்சி படிச்சவ
பிள்ளைக்காகக
இனி ஒரு சுதந்திரம்
சின்னத் தம்பி பெரிய தம்பி
மதுமலர்
சாவி
அத்தை மக ரத்தினமே

0

கங்கை அமரன் இயக்கிய சில படங்கள்
-----------------------------------------------------------------------

கோழிகூவுது
கரகாட்டக் காரன்
எங்க ஊரு பாட்டுக்காரன்
வில்லுப் பாட்டுக்காரன்
கோயில் காளை
செண்பகமே செண்பகமே
வெள்ளைப் புறா ஒன்று
சின்னவர்
கும்பக் கரை தங்கையா


நந்தா

unread,
Jul 4, 2011, 9:10:07 AM7/4/11
to panb...@googlegroups.com
கோழி கூவுது - ஏதோ மோகம், ஏதோ தாகம்...

பெண்: தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு
தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு

ஆண்: பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்க்கு மூர்ச்சையாச்சு
பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்க்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காமதேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே

ஆண்: பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து

பெண்: அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
விடியச் சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது

மரவண்டு உசுப்பேத்தி விட்டுட்டீங்க. ச்சே என்ன பாட்டுய்யா... :)

Naresh Kumar

unread,
Jul 4, 2011, 9:34:54 AM7/4/11
to panb...@googlegroups.com
நண்பர் மகேந்திரனிடமிருந்து...

இது இவ்வளவு கஷ்டமாகவா இருக்கும்? அனுபவிப்பவர்கள் எல்லாம் மிகுந்த சந்தோஷத்துடன் வளைய வருகிறார்களே.. எனக்கு மட்டும் ஏன் இத்தனை சிரமமாயிருக்கிறது? யாரிடம் சொல்வது? எப்படி சொல்வது? சொன்னால் என்ன சொல்வார்கள்? அவனுக்கும் இப்படிதான் இருக்குமா? எப்படி அறிவது? முன்பெல்லாம் நான் இப்படியில்லையே... எங்கிருந்து வந்தது இது?

இத்தனை கேள்விகளையும் இரண்டே வரிகளில் வெளிப்படுத்தமுடியுமா? முடிந்திருக்கிறதே...

"நேத்துவர நெனைக்கலியே... ஆசவித மொளைக்கலியே..." என்று அவள் பாடும்போது எனக்கும் கூட காதலித்தால் என்ன என்று தோன்றும்.

காமம் வந்தால் அது காதலில்லை என்பதெல்லாம் அப்பட்டமான பொய். அதை நிஜப்படுத்த வேண்டுமென்றால் காலம் முழுதும் என் வீட்டு பூனையையும், நாய்குட்டியையும் தான் நான் காதலிக்க வேண்டியதாயிருக்கும். முதல் காதல் தோன்றும் போதே அதன் பின்னால் காமம் ஒளிந்து நின்று என்னை கண்டுபிடி என்று கெக்கலிக்கும். இருவருமே கண்ணைக்கட்டி கொண்டு ஆடும்போது யார் யாரை கண்டுபிடிப்பது? தகுந்த நேரம் வரும்போது அதுவாகவே தன்னை வெளிக்காட்டிகொள்ளும்...

அப்படியான வெளிப்பாடு தான் இந்த பாடல்..

1982 ல் வெளியான "கோழி கூவுது" படத்திலிடம் பெற்ற ஒரு அற்புதமான பாடல். "ஏதோ மோகம்... ஏதோ தாகம்..."

பாடலின் துவக்கத்தில் வயலின், குழலோசைகளுக்கு பின் வரும் நீரின் ஓசை கேட்கும் போதெல்லாம் ததும்பி வழியும் மோகத்தின் ஓசை போலவே இருக்கும். ஜானகியின் அதி அற்புதக்குரலுக்கு ஈடு கொடுத்திருப்பவர் கிருஷ்ணசந்தர் என்றொரு மலையாள தேசத்தவர். ஒய்.ஜி.மகேந்திரனுடன் பல படங்களில் இணையாக நடித்த வனிதா (இப்போது தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடித்து வருகிறார்) என்பவரின் கணவர்.

மல்டி ட்ராக் என்றொரு முறை அறிமுகத்துக்கு வந்தபோது, ராஜாவின் புதுமுயற்சி ஒன்று எதிர்பார்க்கவியலாத முறையில் இப்பாடலில் கையாளப்பட்டது. பாடல் துவக்கம் முதல் ஜானகியின் குரலைத்தொடர்ந்து வரும் சேர்ந்திசைக்குரல்கள் அனைத்துமே ஜானகியே பாடியிருப்பார். அதாவது பாடலில் ஒலிக்கும் பெண்குரல்கள் எல்லாமே ஜானகியினுடையது. நம்ப முடியவில்லை அல்லவா? அடுத்தமுறை கவனித்துப்பாருங்கள்.

பாடலின் மிகப்பெரிய பலம் வைரமுத்து. பொங்கி பிரவாகமாக வெளிப்படும் மோகத்தை விளக்க இதைவிட தெளிவாய் இன்னொரு பாடல் எழுத முடியுமா? மோகத்தின் வண்ணம் சிகப்பென்றும், தகிக்கும் வெப்பமுடையதென்றும் சொல்பவர்கள் இந்தப்பாடலில் தோற்றுப்போவீர்கள். நடுங்கவைக்கும் குளிர்ச்சியான மோகத்தின் நீலநிற மறுபக்கம் இந்த பாடல்.

பெண்ணின் உணர்வுகள் எப்போதுமே ரகசியமானவை, மாறாக ஓங்கி ஒலிப்பது ஆணினுடையது. அதை அப்படியே பிரதிபலிக்கும் பாடலின் சரணம். "தாழம்பூவு ஈரமாச்சு.. தலையில் சூடும் நேரமாச்சு.." என்று அவள் தன் வீட்டின் இருள் சூழ்ந்த மூலையில் பதுங்கும் போது, "பார்வையால நூறு பேச்சு.. வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு.." என்று அவன் வயல்வெளிகளில் பறையறிவித்துக்கொண்டே ஓடுவான்... இறுதியாக "போதும் போதும் காமதேவனே" என்று பணிவான்.



சுரேஷ் மற்றும் மறைந்த நடிகை விஜி இருவருக்கும் இது அறிமுகப்படம். ஊருக்கு தபால் காரராக வரும் சுரேஷ், கடிதம் கொடுப்பதைத்தவிர எல்லாம் செய்திருப்பார். பாடலின் உணர்வு சற்றும் கெடாதவகையில், புரியாதவருக்கு சற்றே விரசமாய் படமாக்கப்பட்டிருக்கும்.

துவக்கத்தில் ஈரநிலத்தில் வரிசையாய் விதை ஊன்றும் ஒரு கையை காண்பிக்கும்போதே நம் மனசுக்குள் அது முளைத்துவிடும். காதலின் தவிப்பு அலைக்கழிக்க, இயல்பாய் இருக்க வெகு பிரயத்தனப்படும் சுரேஷ், திருநீறு எல்லாம் அணிந்து காய்ச்சல் வந்தது போல் இருப்பார். விஜியோ பாவாடை தாவணியில் அபரிமிதமான அழகோடு கட்டிலில் குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பார். இன்னும் பார்த்தால் மட்டுமே புலப்படும் அழகான விஷயங்கள் பாடல் முழுக்க இருக்கும்.

எல்லா இடத்திலும் ஜானகி, "ஆசவித" என்பதை "ஆஸவித" என்று பாடியிருப்பது கொள்ளை அழகு. இரண்டு சரணங்களிலும் இறுதியில் "விடியச்சொல்லி கோழிகூவுதே.. இன்பவேளையில் நெஞ்சு தாவுதே" என்று பல்லவியோடு இணைந்து கொள்வது அக்மார்க் ராஜாவின் முத்திரை. இறுதிப்பல்லவி முடியுமிடத்தில் "வனக்கிளியே" என்பதை இருவரும் மாறி மாறி பாடி முடித்திருப்பார்கள். ராஜாவின் ரசிகர்களின் பட்டியலில் இந்தப்பாடல் கண்டிப்பாக தவிர்க்க முடியாத ஒன்று... கேட்டுப்பாருங்கள்...

ஏதோ மோகம்... ஏதோ தாகம்...
நேத்துவர நினைக்கலியே ஆசவித மொளைக்கலியே
சேதி என்ன... வனக்கிளியே...

தாழம்பூவு ஈரமாச்சு... தலையில் சூடும் நேரமாச்சு...
சூடுகண்டு ஈரமூச்சு... தோளைசுட்டு காயமாச்சு...
பார்வையால நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காமதேவனே
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே...

பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து...
தொட்டபாகம் தொட்டுப்பாத்து சாய்வதென்ன கண்கள் பூத்து...
அக்கம் பக்கம் சுத்திப்பாத்து தலைக்குமேல தண்ணி ஊத்து...
விடியச்சொல்லி கோழி கூவுதே,
இன்பவேளையில் நெஞ்சு தாவுதே...

ஏதோ மோகம்... ஏதோ தாகம்..
நேத்துவர நினைக்கலியே ஆசவித மொளைக்கலியே
சேதி என்ன... வனக்கிளியே... 

Fakhrudeen இப்னு ஹம்துன்

unread,
Jul 4, 2011, 11:48:58 AM7/4/11
to panb...@googlegroups.com
'பாக்யராஜ்' பற்றி பேச வைத்த மெளன கீதங்களுக்கும் கங்கை அமரன் தான் இசை (என்று நினைக்கிறேன் )

டைட்டிலிலேயே இளையராஜாவிடமிருந்து இசைக்கருவிகளை க.அமரன் எடுத்து வருவது போல் காட்டியிருப்பார்கள். 


2011/7/4 மரவண்டு <mara...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com

பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com


தன்னை அறிதலும் தக்கபடி வாழ்தலும்
தேடலில் எல்லாம் தலை.


Gokul Kumaran

unread,
Jul 4, 2011, 1:04:30 PM7/4/11
to panb...@googlegroups.com
கங்கை அமரன் தான்.

குமுதத்தில் இந்தப் படம் தொடர்கதையாக வந்த போது முழுதும் படித்தவன் நான்.

2011/7/4 Fakhrudeen இப்னு ஹம்துன் <fakhru...@gmail.com>

'பாக்யராஜ்' பற்றி பேச வைத்த மெளன கீதங்களுக்கும் கங்கை அமரன் தான் இசை (என்று நினைக்கிறேன் )

டைட்டிலிலேயே இளையராஜாவிடமிருந்து இசைக்கருவிகளை க.அமரன் எடுத்து வருவது போல் காட்டியிருப்பார்கள். 

--
Gokul Kumaran

மரவண்டு

unread,
Jul 5, 2011, 1:57:31 AM7/5/11
to பண்புடன்

On Jul 4, 8:48 pm, Fakhrudeen இப்னு ஹம்துன் <fakhrudee...@gmail.com>
wrote:


> 'பாக்யராஜ்' பற்றி பேச வைத்த மெளன கீதங்களுக்கும் கங்கை அமரன் தான் இசை (என்று
> நினைக்கிறேன் )
>
> டைட்டிலிலேயே இளையராஜாவிடமிருந்து இசைக்கருவிகளை க.அமரன் எடுத்து வருவது போல்
> காட்டியிருப்பார்கள்.


நன்றி கோகுல் பக்ருதீன்
மூக்குத்தி பூமேலே பாட்டு , ரேடியோல எத்தனை வாட்டி கேட்டுருப்போம்

மரவண்டு

unread,
Jul 5, 2011, 2:00:40 AM7/5/11
to பண்புடன்
> கோழி கூவுது - ஏதோ மோகம், ஏதோ தாகம்

On Jul 4, 6:34 pm, Naresh Kumar <meetn...@gmail.com> wrote:
> நண்பர் மகேந்திரனிடமிருந்து...
>
>


நன்றி நரேஷ் நந்தா

இந்தப் பாடலின் மூலம் இளையராஜா பல இசை மேதைகளின் அங்கீகாரத்தைப்
பெற்றார். நிசப்தமான வேளையில் ஒரு பூவெடுத்து வைக்கணும் பின்னால பாடலைக்
கேட்டுப் பாருங்கள். இளையராஜா ஞானியா இல்லையா என்று தெரிந்து விடும்.

0

இன்று பொதிகை தொலைக் காட்சியில் ஷாஜி நேர்காணல் ஒளிபரப்பானது. இசைத்
திருட்டைப் பற்றி என்ன நினைக்கிறிர்கள் என்ற கேள்விக்கு ,
எந்த ஒரு பாடலையும் 100 % தனித்துவமான பாடல் என்று சொல்லிவிட முடியாது.
ஒரு பாடலில் இருந்து கிடைக்கும் Influence இல் தான் அடுத்த பாடல்
கிடைக்கிறது. சில வேளைகளில் அது அப்பட்டமான காப்பியாகத் தெரிகிறது என்று
கூறினார்.

0

இசை தழுவல்கள் திருடல்கள் பற்றி இந்தக் குழுவில் பேசிக்கொள்கிறார்கள்.
http://launch.dir.groups.yahoo.com/group/i2fs/messages/1?l=1

Imsai Arasi

unread,
Jul 5, 2011, 12:25:28 PM7/5/11
to panb...@googlegroups.com
என் நண்பர் அளித்த லிங்கில் சில தமிழ் பாடல் திருடு பற்றி இருக்கிறது:
 
என்னால் MSV மற்றும் கண்டசாலா போன்றவர்கள் கூட திருடி இருப்பார்கள் என்று நினைத்து கூட பார்க்கமுடியவில்லை... சாம்பிளுக்கு:

கண்டுபிடிக்காத வரை எல்லோரும் யோகியவாந்தான் போல்ல.... :-)

அரசி...

2011/7/5 மரவண்டு mara...@gmail.com



இன்று பொதிகை தொலைக் காட்சியில் ஷாஜி நேர்காணல் ஒளிபரப்பானது. இசைத்
திருட்டைப் பற்றி என்ன நினைக்கிறிர்கள் என்ற கேள்விக்கு ,
எந்த ஒரு பாடலையும் 100 % தனித்துவமான பாடல் என்று சொல்லிவிட முடியாது.
ஒரு பாடலில் இருந்து கிடைக்கும் Influence இல் தான் அடுத்த பாடல்
கிடைக்கிறது. சில வேளைகளில் அது அப்பட்டமான காப்பியாகத் தெரிகிறது என்று
கூறினார்.

0

--

Imsai Arasi

unread,
Jul 5, 2011, 6:22:49 PM7/5/11
to panb...@googlegroups.com
இது யாருங்க... ஜென்சி-யா?

2011/7/4 மரவண்டு <mara...@gmail.com>



80 களில் மலேசியா பாடிய பல குத்துப் பாட்டுகளை எழுதியவரும் இவரே.கொஞ்சிக்
கொஞ்சிப் பாடும் கேரளத்துப் பைங்கிளி ஒன்றை இவரோடு சேர்த்து வைத்துப்
பேசினார்களாம் , கேள்விப்பட்ட பைங்கிளியின் முகம் செங்கனலாய்ச் சிவந்து
போய் பறந்து விட்டதாம் கேரளத்திற்கு.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com

பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Imsai Arasi

unread,
Jul 5, 2011, 6:28:11 PM7/5/11
to panb...@googlegroups.com
சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில் வரும் 'காதல் வைபோகமே' என்ற பாட்டு மிகவும் பிடித்த பாட்டு... இளையராஜா தான் இசைஅமைப்பாளர் என்று நினைத்தேன்... சமிபத்தில் அந்த படத்தை பார்க்கும் போதுதான் இசை கங்கை அமரன் என்று தெரிந்தது...!


2011/7/4 மரவண்டு <mara...@gmail.com>

மரவண்டு

unread,
Jul 6, 2011, 1:46:01 AM7/6/11
to பண்புடன்

On Jul 6, 3:22 am, Imsai Arasi <imsaiaras...@gmail.com> wrote:
> இது யாருங்க... ஜென்சி-யா?
>

S

வில்லன் .

unread,
Jul 10, 2011, 2:17:36 AM7/10/11
to panb...@googlegroups.com

சில பழைய தமிழ்ப் பாடல்கள்…

 June 9th, 2011

சில சின்ன சின்ன விஷயங்களை ஃபேஸ்புக்கில் எழுதுவது சுலபமாக இருக்கிறது.  நமது வாசகர் வட்டத்தின் ஃபேஸ்புக்கில் சேராதவர்கள் என் எழுத்தில் சிலவற்றை இழக்கிறார்கள் என்று நிச்சயமாகச் சொல்வேன். சமீபத்தில் அரபி இசைக் கலைஞர்கள் சிலரைப் பற்றி வாசகர் வட்டத்தின் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன்.  அப்போது எனக்குப் பிடிக்கும் என்ற எண்ணத்தில்.ஒரு நண்பர் ஒரு தமிழ்ப் பாடலுக்கு லிங்க் கொடுத்திருந்தார். உடனே அதைப் பார்த்து விட்டு மற்றொரு நண்பர், “சே, ஏன் இந்த ஆபாசமான பாடலை எல்லாம் இங்கே கொண்டு வருகிறீர்கள்?” என்று காமெண்ட் அடித்திருந்தார். அதாவது, என்னைக் கிண்டல் செய்கிறாராம்.

அந்தக் குறிப்பிட்ட பாடல்: ’கங்கைக் கரைத் தோட்டம், கன்னிப் பெண்கள் கூட்டம்.’  ’வானம்பாடி’ என்ற திரைப்படத்தில் பி. சுசிலா பாடிய பாடல்.  நடிப்பு, அந்தக் காலத்திய என் கனவுக் கன்னி தேவிகா.  தேவிகாவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவருடைய மகள் கனகாவின் ஞாபகமும் வரும்.  என்ன செய்வது, கனவு என்றாலே கொடுங்கனவும் தொடர்ந்து தானே ஆக வேண்டும்? தேவிகாவுக்கு இணையான அழகு கொண்ட ஒரு நடிகையை அப்போதிருந்து தேடிக் கொண்டிருந்தேன்.  மாதுரி தீட்சித் வந்தார்.  அதன் பிறகும் தேடினேன்.  இப்போது ப்ரியங்கா சோப்ரா.  இந்த இருவரைத் தவிர தேவிகாவை நெருங்கக் கூடிய அழகிகள் யாரும் இல்லை.  (என்னுடைய ஜெர்மன் மொழிபெயர்ப்பாளருக்கு ப்ரியங்கா சோப்ராவுக்கு இருப்பதைப் போலவே சற்று எடுப்பான பற்கள். டென் டௌனிங்கில் வைத்துச் சொன்னேன், கைகளால் வாயை பொத்தியபடி சிரித்தார்.  ”ஏன் இப்படி?” என்றேன்.  பலரும் இந்தப் பல்வரிசையைக் கேலி செய்கிறார்கள் என்றார்.  அட, ரசனை கெட்ட மூதிகளே என்று நினைத்துக் கொண்டேன்.  தேவிகா, மாதுரி தீட்சித், ப்ரியங்கா சோப்ரா மூவரின் பல்வரிசையும் ஒரே மாதிரி இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? இன்னொரு விஷயம்: டென் டௌனிங் என்றதும் மறுபடியும் சிலம்பமா என்று கேட்காதீர்கள்.  ஒரே ஒரு அவுன்ஸ் சிவப்பு ஒயினை நான்கு மணி நேரம் வைத்து அருந்தினேன்.  அதில் ஒன்றும் சிரமம் இருக்கவில்லை.  ஆனால் அம்மணி தீவிர சைவம் என்பதால் உணவு ஒன்றுதான் சிரமமாக இருந்தது. சரி, எனக்குப் பிடித்த ஸலாத்-ஐயாவது சாப்பிடலாம் என்று ஆர்டர் கொடுத்தேன். ”வெங்காயம் இல்லாமல்” என்று சொல்லத் தவறவில்லை.  ஜெர்மன் தொடர்பு உள்ளவர்களுக்கு வெங்காயம், பூண்டு எல்லாம் ஆகாது.  ஜெர்மனியில் பூண்டு ரசம் சாப்பிட நேர்ந்தால், ஒன்றுக்கு இரண்டு முறை பல் தேய்த்த பிறகுதான் வெளியே கிளம்புவேன்.  அப்படிச் செய்யாமல் போனால் ஜெர்மன்காரர்கள் ஒருமாதிரி நம்மை விரோதமாக முறைப்பார்கள்.

அதனால்தான் ”வெங்காயம் இல்லாமல்” என்றேன்.  ஆனால் பரிசாரகர் வெங்காயம் போட்டே கொண்டு வந்தார்.  அதனால் அதைத் திருப்பிக் கொடுத்து விட்டு வெங்காயம் இல்லாமல் புதிதாக நறுக்கிக் கொடுங்கள் என்றேன். வெள்ளரிக் காய், கேரட், தக்காளி மூன்றும் புதிதாக நறுக்கப்பட்டு வந்தது.  எடுத்து சாப்பிட்டால் அதிலும் வெங்காய மணம்.  (சீ, சீ, நாற்றம்…) வெங்காயத்தை நறுக்கிய அதே கத்தியால் கேரட்டை நறுக்கினால் நாறாமல் என்ன செய்யும்?

வானம்பாடி சிவாஜி நடித்த படம்.  இசை, கே.வி. மகாதேவன்.  ஆனால் அதே ஆண்டுதான் (1963) எம்ஜியாரின் ஆனந்த ஜோதியும் வந்திருந்தது.  அந்தப் படத்திலும் கனவுக் கன்னி தேவிகாதான் ஹீரோயின்.  இசை, விஸ்வநாதன் ராமமூர்த்தி.  அப்போதைய படங்களில் இடம் பெறும் அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமையும்.  வானம்பாடி பாடல்களை கவனியுங்கள்.

அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்; பி. சுசிலா.

ஆண்கவியை வெல்ல வந்த பெண்கவியே வருக.  சுசிலா, டி.எம்.எஸ்.

ஊமைப் பெண் ஒரு கனவு கண்டாள்; அதை உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்; சுசிலா.

ஏட்டில் எழுதி வைத்தேன், எழுதியதை சொல்லி வைத்தேன்.  கேட்டவளைக் காணோமடா; தூக்கிச் சென்ற இடம் ஏதடா. டி.எம்.எஸ்., ஈஸ்வரியின் பின்னணிக் குரல்.

கங்கைக் கரைத் தோட்டம்; சுசிலா.

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும். டி.எம்.எஸ்.

தூக்கணாங் குருவிக் கூடு. சுசிலா.

யாரடி வந்தார், என்னடி சொன்னார், ஏனடி இந்த உல்லாசம்.  எல்.ஆர். ஈஸ்வரி.

நில், கவனி, புறப்படு.  ஏ.எல். ராகவன், கமலா.

இந்த ஒன்பது பாடல்களில் கடைசிப் பாடலைத் தவிர மற்ற அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்கள்.  பழைய படங்களில் இது ஒரு விசேஷம்.  எல்லா பாடல்களுமே பிரமாதமாக இருக்கும்.  (உதாரணம், கர்ணன்). மேற்கண்ட பாடல்களில் தூக்கணாங் குருவிக் கூடு என்ற பாடலில் சுசிலாவின் குரலில் துள்ளும் உல்லாசத்தைக் கவனியுங்கள்.  ஆனால் அறுபதுகளில் கே.வி. மகாதேவனையும் மிஞ்சும் வகையில் இசை அமைத்தார்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்.  ஆனந்த ஜோதி ஒரு உதாரணம்.  இதில் இடம்பெறும் மற்ற பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் இரண்டு அற்புதமான பாடல்கள் வானம்பாடியையும் தாண்டிப் போய் விட்டது.  நினைக்கத் தெரிந்த மனமே, பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே (அட, 1963-இலேயே மனுஷ்ய புத்திரன் பற்றி எழுதி விட்டாரே கண்ணதாசன்!) என்ற இரண்டு பாடல்களே போதும்.  ஒருமுறை அந்த எக்ஸ் நண்பர் (இயக்குனர்) “நினைக்கத் தெரிந்த மனமே என்ற ஒரு பாடலுக்கு முன்னால் இளையராஜாவின் அத்தனை பாடல்களையும் வைத்தால் கூட ஈடாகாது” என்றார். ஆனால் ராஜாவைப் பார்த்தால் “ஞானி… பீத்தோவனே உங்கள் பக்கத்தில் வர முடியாது” என்று கண்ணீர் மல்கக் கதறியபடி அவர் காலில் விழுந்து விடுவார்.  சரி, அது போகட்டும்.  பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த அந்தப் பாடலை இதை எழுதும் போது கூட பத்து இருபது முறை திரும்பத் திரும்பக் கேட்டேன்.

பின்வரும் லிங்கில் பழைய பாடல்கள் உள்ளன:

http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBOLD000203&lang=en

நான் பலமுறை எழுதியிருக்கிறேன்.  தமிழ் சினிமா இசையில் இளையராஜாவை ஒரு திருப்பு முனையாக வைத்துக் கொண்டால் அவருக்கு முந்தைய இசையமைப்பாளர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.  அவர்களில் ஒருவர் கே.வி. மகாதேவன்.  வானம்பாடி  1963-இல் வெளிவந்தது.  அப்போது எனக்குப் பத்து வயது.  அப்போதைய சிறுவர்கள் ஒன்று எம்ஜியார் ரசிகனாக இருக்க வேண்டும்; அல்லது, சிவாஜி ரசிகனாக இருக்க வேண்டும்.  இதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி கிடையாது.  சிவாஜி ரசிக சிகாமணிகள் கம்மியாகவே இருப்பார்கள். நான் எம்ஜியார் ரசிகன்.  என்றாலும் சிவாஜி நடித்த படப் பாடல்களை விரும்பிக் கேட்பேன்.

ஆனால் தமிழ் சினிமா இசையமைப்பாளர்களிலேயே எனக்கு ஆகப் பிடித்தவர் ஜி. ராமநாதன் தான். அவர் ஒரு இசைச் சக்ரவர்த்தி.  இதே பட்டத்தையே அவருக்குக் கொடுத்திருந்தார்கள்.  அவர் கே.வி. மகாதேவனின் இசையமைப்பில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.  எஜமான் பெற்ற செல்வமே.  படம்: அல்லி பெற்ற பிள்ளை.  (இந்தப் பாடலை யாராவது தேடி எடுத்து ஃபேஸ்புக்கில் போட முடியுமா?) இது பற்றி என் நண்பர் R.P. ராஜநாயஹம் எழுதியிருக்கிறார். http://rprajanayahem.blogspot.com/2008_09_01_archive.html

மரவண்டு

unread,
Jul 11, 2011, 2:11:20 AM7/11/11
to பண்புடன்
>
> ஆனால் தமிழ் சினிமா இசையமைப்பாளர்களிலேயே எனக்கு ஆகப் பிடித்தவர் ஜி. ராமநாதன்
> தான். அவர் ஒரு இசைச் சக்ரவர்த்தி.  இதே பட்டத்தையே அவருக்குக்
> கொடுத்திருந்தார்கள்.  அவர் கே.வி. மகாதேவனின் இசையமைப்பில் ஒரு பாடலைப்
> பாடியிருக்கிறார்.  எஜமான் பெற்ற செல்வமே.  படம்: அல்லி பெற்ற பிள்ளை.  (இந்தப்
> பாடலை யாராவது தேடி எடுத்து ஃபேஸ்புக்கில் போட முடியுமா?) இது பற்றி என் நண்பர்
> R.P. ராஜநாயஹம் எழுதியிருக்கிறார்.http://rprajanayahem.blogspot.com/2008_09_01_archive.html

இந்தப் பாட்டு என்கிட்ட இருக்கும்னு நினைக்கிறேன் , தேடிப் பாத்து
அனுப்புறேன்
பொன்முடி படத்துலயும் GR ஒரு பாட்டு பாடியிருக்கார். நீலவானம் நிலவும்
போலே..

மரவண்டு

unread,
Jul 11, 2011, 2:43:34 AM7/11/11
to பண்புடன்
சுகா மூங்கில் மூச்சு தொடரில் அங்கிங்கு இசைக்குழுவைப் பற்றி
எழுதியிருந்தார்.2000 வரை எங்கள் ஊர் ஆடித் திருவிழாவில் வருடம் தவறாமல்
இந்தக் குழுவினரது கச்சேரி இடம்பெற்று வந்தது . கச்சேரி 8 மணிக்கு
என்றாலும் ஆறு மணிக்கே சென்று அரிசிச் சாக்கை விரித்து வைத்து
வந்துவிடுவேன் , குறுக்கு நோகும் போது கால் நீட்டிப் படுத்துக் கொண்டே
கச்சேரி பார்க்கும் செளகரியம் இதில் கிட்டும். பழைய பாடல்களுக்கு சிரச்
சிலம்பம்(நன்றி வாலி) சுத்தி ரசிக்கும் பெருசுகள் பத்து பதினைந்து
பாட்களுக்குப் பிறகு தூக்கத்தில் சிறைச்சிலம்பம் செய்வார்கள். அங்கிங்கு
இசைக்குழுவினர் லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில்
பிரபலமடைந்த பிறகு சிற்றூர்களுக்கு கச்சேரி செய்வதை நிறுத்திக்
கொண்டார்கள் போல் தெரிகிறது.

சங்கர் கணேஷ் இசையில் ஏஎம் ராஜா ஜிக்கி தம்பதியினர் பாடிய செந்தாமரையே
செந்தேன் இதழே(புகுந்த வீடு) பாடலை எக்கோவில் பதிந்து கேட்டது இன்னமும்
நினைவிருக்கிறது.

Ganesh kumar

unread,
Jul 11, 2011, 11:54:00 PM7/11/11
to panb...@googlegroups.com
அந்தக்
> காலத்திய என் கனவுக் கன்னி தேவிகா. தேவிகாவைப் பற்றி


முக்தா சீனிவாசன் இயக்கிய முதல் படமான முதாலாளி(1957) படத்தின் மூலமாக
தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது இந்த ஆந்திரத்துப் பைங்கிளி.
இந்தப் படத்தில் இடம்பெற்ற
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே என்ற பாடல் இசை ரசிகர்களுக்கு விருந்து.

0

தேவிகாவின் கணவர் எஸ்.எஸ். தேவதாஸ் இயக்கிய வெகுளிப்பெண் (1971) படத்தை
வாங்க வினியோகஸ்தர்கள் யாரும் முன் வரவில்லை. உடனே, தேவிகா தானே அந்தப்
படத்தை வெளியிட்டார், படம் 100 நாட்கள் ஓடி தேசிய விருதும் பெற்றது.
இந்தப் படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலா தேவிகாவின் தங்கையாக
(வெகுளிப்பெண்ணாக) நடித்தார்.

0

பி.எஸ்.வீரப்பா தயாரித்த ஆனந்த ஜோதி படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக
நடித்தார். சிவாஜியுடன் அதிக படங்கள் நடித்துள்ளார்.
அன்புக்கரங்கள் , அன்னை இல்லம் , நீல வானம் , பழனி , கர்ணன், ஆண்டவன்
கட்டளை , சாந்தி , சத்யம் , குலமகள் ராதை , முரடன் முத்து , பந்த பாசம் ,
பலே பாண்டியா

0

ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான நெஞ்சில் ஓர் ஆலயமும் , சுமைதாங்கியிம்
தேவிகாவின் நடிப்புத் திறனுக்குக் களமான விளங்கின.

Ganesh kumar

unread,
Jul 12, 2011, 12:09:05 AM7/12/11
to panb...@googlegroups.com
>
> வானம்பாடி சிவாஜி நடித்த படம். இசை, கே.வி. மகாதேவன்.

இந்தப் படத்தில் நடித்தவர் சிவாஜி அல்ல , எஸ்.எஸ். ஆர் , கண்ணதாசனின் சொந்தப் படம்

Gokul Kumaran

unread,
Jul 12, 2011, 12:10:20 AM7/12/11
to Panbudan

You missed out "Thiruvilaiyadal" :)

--
Gokul Kumaran

0

0

0

VJagadeesh

unread,
Jul 12, 2011, 12:14:15 AM7/12/11
to panb...@googlegroups.com
அது இந்த காலத்து ஐட்டம் சாங் மாதிரிதானே. ஒரே ஒரு பாட்டுக்கு வந்ததெல்லாம் நடிப்பாகுமா

Ganesh kumar

unread,
Jul 12, 2011, 11:06:15 PM7/12/11
to பண்புடன்


வில்லன்

எஜமான் பெற்ற செல்வமே. படம்: அல்லி பெற்ற பிள்ளை.

இந்தப் பாடலை தனிமடலில் அனுப்பியுள்ளேன்

VJagadeesh

unread,
Jul 13, 2011, 12:12:03 AM7/13/11
to panb...@googlegroups.com
தலைக்கு அனுப்பி வச்சிடறேன், டாங்க்ஸ்

-----Original Message-----
From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Ganesh kumar
Sent: Wednesday, July 13, 2011 8:36 AM
To: பண்புடன்
Subject: Re: [பண்புடன்] Re: திசை மாறிய இசைப்புயல்

ebi

unread,
Jul 21, 2011, 6:27:11 AM7/21/11
to பண்புடன்
this is not the original version brother. copied from keetru.com. to
read the original go to this link

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15303:2011-06-24-10-00-32&catid=10:cine-news&Itemid=130


On Jul 2, 8:25 am, sk natarajan <sknatarajan...@gmail.com> wrote:
> அருமையாக  , அலசி ஆராய்ந்து எழுதப் பாட்ட கட்டுரை
> கணேஷ் குமார்  அவர்களுக்கு வாழ்த்துகள்
>
> என்றும் அன்புடன்
> சா.கி.நடராஜன்.
> கவிதை    :  தமிழ் சுவாசம்http://tamizhswasam.blogspot.com/<http://tamizhswasam.blogspot.com/>
>
> *குழுமம்    :*  தமிழ்
> சிறகுகள்<http://groups.google.com/group/tamizhsiragugal?hl=ta>
>  http://groups.google.com/group/tamizhsiragugal
>
> ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
> அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்
>
> 2011/7/2 Ganesh kumar <marava...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரையுலகில் ஒரு புயலாய் உருவெடுத்தவர்
> > ஏ.ஆர்.ரகுமான். இப்படி ஒரு புயல் உருவாகத் தேவையான காலநிலை அப்போது இருந்தது.
> > ‘ரோஜா’ படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பரவலாய் ஒலித்தபோதும் கூட
> > இளையராஜாவின் இசைத் தாலாட்டில் சொக்கிப் போயிருந்த பலரும் அந்தப் படத்தின்
> > இசையை எப்போதாவது ஒரு படத்தில் நிகழ்ந்து மறையும் அதிசயம் என்றே கூறினர்.

ஸ் பெ

unread,
Jul 21, 2011, 6:40:52 AM7/21/11
to panb...@googlegroups.com


---------- Forwarded message ----------
From: Ganesh kumar <mara...@gmail.com>
Date: 2011/7/2
Subject: Re: [பண்புடன்] திசை மாறிய இசைப்புயல்
To: panb...@googlegroups.com

2011/7/2 sk natarajan <sknatar...@gmail.com>

அருமையாக  , அலசி ஆராய்ந்து எழுதப் பாட்ட கட்டுரை
கணேஷ் குமார்  அவர்களுக்கு வாழ்த்துகள்


சாகி நடராஜன் சார்

கட்டுரையை நான் எழுதவில்லை , கீற்று தளத்திலிலிருந்து எடுத்த கட்டுரை இது.



2011/7/21 ebi <ebi2...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்

வரலாற்றுக்குள்ளே தேடு. அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் உண்மைகளை விடுதலை செய்.
விடுதலை பெற்ற உண்மைகள் உன்னை விடுதலை செய்யும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

VJagadeesh

unread,
Jul 21, 2011, 6:39:53 AM7/21/11
to panb...@googlegroups.com

இப்படி சுட்டியை கவனிக்காம பாராட்டி பிரச்சனையில மாட்டிவுடப்பார்க்கிறாரே சாகி அய்யா

Reply all
Reply to author
Forward
0 new messages