ஆணும் பெண்ணும் சமம்

9 views
Skip to first unread message

செல்வன்

unread,
Dec 5, 2020, 3:32:15 PM12/5/20
to செல்வன்
சமத்துவம்

பெண்ணை விட ஆண் மேலானவன் என்றால் நீங்கள் ஒரு முட்டாள்

ஆணும் பெண்ணும் சமம் என்றால் நீங்கள் மானுட இயல்பை மறுக்கும் வரட்டு சித்தாந்தவாதி

ஆணை விட பெண் மேலானவர் என்பதை உணர்ந்தால் நீங்கள் யதார்த்தவாதி

எதுவும் மிகைப்படுத்த, வெறும் புகழ்ச்சிக்கு எல்லாம் சொல்லவில்லை. உண்மைதான்

தற்கொலை, குற்றம், கொலை, வன்முறை, கெட்ட வழக்கம், வறுமை, சிறைவாசம்....அனைத்திலும் முதலிடத்தில் இருப்பது ஆண்கள்.


ஆட்சி அதிகாரத்திலும் ஆண்கள் தானே முதலிடம் என கேட்கலாம்.

ஆனால் அவர்களை கூர்ந்து கவனித்தால் அவர்களின் வெற்றிக்கு பின்னே மிக ஸ்மார்ட் ஆன ஒரு பெண் இருந்திருப்பது தெரியும்.

ஒரு பெண்ணால் மேலே உயர்த்திவிடபடும் ஆணுக்கு சமமாக மற்ற ஆண்,பெண் யாராலும் உயரமுடிவது இல்லை.

மனைவியின் ஒத்துழைப்பை பெறாத கணவன், கல்யாணம் ஆகாத பேச்சிலர் ஆண், பெண்...இருவராலும் மனைவியின் முழு ஒத்துழைப்பு பெற்று மேலே உயரும் கணவனுடன் போட்டியிட முடிவது இல்லை. பின் தங்கி விடுகிறார்கள்.

இருவர் அடங்கிய டீம், ஒருவரை தாண்டி மேலே செல்வது இயல்பானதே.

கணவனின் முழு ஒத்துழைப்பை பெற்று மேலே உயரும் பெண் இருந்தால் அவரும் அதே உயரத்தை அடைவார்

ஆனால் அத்தகைய ஸ்மார்ட் ஆண ஆண்கள் எண்ணிக்கை உலகில் மிக அரிதாக இருப்பதால் தான் ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

இதை ஆணாதிக்கம் என தவறாக புரிந்துகொள்கிறோம்...

மனைவியின் காதலை அடைந்து, வாழ்க்கையில் தன்னை தூக்கிவிட அவரது முழு ஒத்துழைப்பையும் பெறுவது ஒரு சூப்பர் பவர்

அதை அடைந்த ஆண்கள் உயரங்களை தொடுவதை அதனால் தன் தடுக்கமுடியாமல் இருக்கிறது
--

செல்வன்

BHUVANESWARI. P.M.

unread,
Oct 19, 2021, 7:03:14 AMOct 19
to பண்புடன்
Reply all
Reply to author
Forward
0 new messages