ஆண் பெண் குழந்தைகள் எப்படி பிறக்கின்றன?

4,187 views
Skip to first unread message

இனியவன்

unread,
Sep 11, 2012, 1:06:28 AM9/11/12
to panb...@googlegroups.com
உ.உ பற்றி பேசுவது மாம்சுக்கு பிடிக்கவில்லை என்பதால் அதை தவிர்த்து விட்டு ஆண்/பெண் குழந்தை பிறப்பு பற்றி மட்டும் ஒரு செய்தி சொல்கிறேன்.

பிறக்கப் போகும் குழந்தை ஆணா/பெண்ணா என்று அறிந்து கொள்ளும் மற்றும் வேண்டியவாறு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் ஆசை மனிதனுக்கு வெகு காலமாகவே உண்டு. இதை அறிவதற்கு பலப் பல வழிகளை வரலாறு முழுவதும் கடை பிடித்திருக்கிறார்கள். கூகிளில் தேடினால் பல்வேறு வழிமுறைகள் பற்றிய விபரங்களை அறியலாம்.

சமீபத்தில் ஒரு வலைப் பூவில் இந்த தலைப்பு பற்றி பதினேழு பாகங்கள் கொண்ட தொடர் ஒன்றை படித்தேன். மிக மிக சுவாரஸ்யமான, இயற்பியல் வேதியல் உயிரியல் மூரும் கலந்த அறிவியல் பார்வையோடு கூடிய அலசல். இறுதி பாகத்தில் மட்டும் விஞ்ஞானம் உறுதி செய்ய வேண்டிய விஷயம் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது என்று முமுடித்து விட்டார்.

விஞ்ஞானம் இப்படி ஒரு விஷயத்தை தான் நிரூபிக்க போகிறது என்று அவர் சொல்லும் தியரியை "உயிரும், உயிரின் பிரிவும்" என்ற தொடரை "சந்துருவின் வலைப்பூ" என்ற பிளாக்கில் விருப்பம் உள்ளவர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்..

பிளாக் படிக்க வசதி இல்லாதவர்களுக்காக கொஞ்சம் சாரம் மட்டும் இங்கு.
   
”சந்துருவின் பால் விதி”
”ஒரு குடும்பத்தில் ஆண்மைக்கும் பெண்மைக்கும் எப்பொழுதும் சமநிலையை நிலை நிறுத்தும் முறையில் தான் புதிய குழந்தையின் பாலினம் தீர்மானிக்கப் படுகிறது.”

உதாரணமாக ஒரு குழுவின் ஆண்,பெண் எண்ணிக்கைதான் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை தீர்மாணிக்கிறது. இது அவன் சார்ந்த குழுவின் தீர்மானம். அது தனி மனிதன் மீது அவனை அறியாமலே அவனது அறிவால் திணிக்கப்படுகிறது
மொத்த குழுவின் ஆண்,பெண் எண்ணிக்கை முதலில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தன்னை நெருங்கிச் (closer level) சுற்றியுள்ள குடும்பத்தின் ஆண்,பெண் எண்ணிக்கைக்கு அடுத்த இடமும், தன்னைச்சுற்றியுள்ள ஆண்,பெண் ஆளுமைக்கு மூண்றாமிடமும் கொடுத்து, அதற்கடுத்து தனது மனைவியின் ஆளுமை குணம் ஆகியவற்றிற்கு நான்காம் இடமும் கொடுத்து தேவையைக் கருதி பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் ஆண்களாலும், பெண்களாலும் தீர்மானிக்கப் படுகிறது.

இதில் ஒரு அமைப்பு என்பதை ,குடும்பமாகவோ, குழுவாகவோ, நகரமாகவோ, நாடாகவோ கருதிக் கொள்ளலாம். இதில் எல்லாவற்றிலும் அக்கறையோடு, ஈடுபாட்டோடு, அறிவோடு பங்கேற்பவன், மேற்க்கூறிய வரிசைப் படி முதலிடம் கொடுத்து தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை சரியாகத் தீர்மானிக்கிறான்.

நான் சொல்லும் கூற்றின் உண்மையை, உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலையில் பரிசோதித்துப் பாருங்கள் உண்மை விளங்கும்.

ஆண்மைக்கு அடையாளமான சீருடை அணிந்த காவலர்கள், ராணுவவீரர்கள், முறுக்கு மீசைக் காரர்கள், திருமணத்திற்கு முன்பே பிரபலமானவர்கள், தலைவர்கள் ஆகியோருக்கு முதலில் பிறக்கும் குழந்தை பெண் குழந்தைதான். 

பிரபலங்களின் குடும்பத்தை ஆராயும் போதும் இதனுடைய நம்பகத் தன்மையை அறிந்து கொள்ளலாம். காதல் இளவரசன் கமல்ஹாசனுக்கு இரண்டும் பெண்தான், 




காதல் மன்னனுக்கும் அதே, சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இரண்டும் பெண்தான், 



நேருவுக்கு ஒன்றாக இருந்தாலும் பெண்ணாகிவிட்டது., இந்திராகாந்திக்கு இரண்டும் ஆண் தான் (இப்பொழுது புரிந்திருக்குமே) அஜீத்துக்கு பெண்தான், 





விஜய்க்கு ஆண்தான்,



காரணம் நீங்க்ளே சொல்லுங்கள். நடிகர் திலகம் சிவாஜிக்கும் அதே!.

உதாரணமாக ஒரு புதிதாக திருமணமான தம்பதியரில் மணமகன் ஆண்மையில் குறைவு அல்லது ஊனமாகவோ ,அவலட்சணமாகவோ இருந்து, மணப்பெண் அழகாக, திறமையாக அமைந்து விட்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அத்தனையும் ஆண் தான் என உறுதியாகக் கூறலாம். அல்லது முதலில் பிறக்கும் ஐந்து குழந்தைகள் ஆண் தான். இது ஒரு உதாரணம்தான் இதில் பலவகையான வாய்ப்புக்களை யோசித்துக் கொள்ளூங்கள். இதில் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 

மாறாக ஆண் தைரியமாக, கம்பீரமாக, அழகாக, சிவப்பாக, முறுக்கு மீசையுடன், ஏதோ ஒருவகையில் தலைமைப் பதவியில் இருந்து, பெண் சுமாராக இருந்தால் அனைத்தும் பெண் குழந்தைதான். 

பெண்மை என்றால் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று மாறுபட்ட (Negative Qualities) தன்மைகளை வைத்து சமப் (Nullify) படுத்துவதில்லை. ஆண்மையின் வலிமையை பெண்மையின் வலிமையால் சமப் படுத்துவதுதான் சமநிலை. பெண்களுக்கு, ஆண்கள் பார்த்து கொடுக்கும் அந்த 33% தான். ஆனால், இது குடும்பத்தில் அவர்களாகவே எடுத்துக் கொள்ளும் 50% உரிமையாகிவிட்டது. சில உதாரணங்களைத் தருகிறேன் மற்றவற்றை நீங்களே கணித்துக் கொள்ளலாம். அணத்துமே குழந்தை பெறுவதற்கு முன்பு உள்ள சூழ்நிலையை வைத்து கணிக்கப் பட வேண்டும்.

1) பொதுவாக காதலித்து, நன்பர்களால் (தோழிகளால் அல்ல) திருமணம் செய்து வைக்கப்படும் தம்பதியருக்கு முதல் குழந்தை பெண்தான்.

2) குடும்பத்தில் கல்யாணமான புதிதில் இருந்து தனது தம்பிமார்களை கூடவே வைத்திருப்பவனுக்கு அதிர்ஷ்டம்தான், பிறப்பது எல்லாமே பெண் பிள்ளைகள்தான். இந்த இடத்தில் எண்ணிக்கைக்கும், ஆண்மைக்கும் முக்கியத்துவம் (Double impact) தரப்படுகிறது. ஏனென்றால் ”தம்பியுடையான் படைக்கு அஞ்சான்”, அப்புறம் எப்படி மனைவிக்கு பயப்படுவான். ஆனால் மனைவியின் தம்பிகள் என்றால் கூட்டிக் கழித்துதான் சொல்லமுடியும் ஏனென்றால் இது எண்ணிக்கையை கூட்டினாலும் கணவனின் வலிமையை குறைக்கும் விஷயம்.

3) கணவன் சரியான சிடுமூஞ்சி என்று அவனைக் கண்டு பயப்படும் பெண்மணிக்கு அனைத்துமே பெண் குழந்தைகள்தான்

4) மனைவியைக் கண்டு ஏதோ ஒரு வகையில் பயப்படும் கோழைக்கு அத்தனையும் ஆண் பிள்ளைகள்தான்.

5) மனைவியை விட மிகவும் மிடுக்கான கணவனுக்கு பிறப்பதும் பெண் பிள்ளைதான்.

இங்கு குடும்பத்தில் ஆண்மை,பெண்மையை தீர்மானிக்கும் காரணிகளை அவற்றின் முக்கியத்துவம் கருதி வரிசையாக அமைத்துள்ளேன்.

1 குடும்பத்தில் ஆண், பெண் எண்ணிக்கை
2. பாலியல் ஈடுபாடு அல்லது அதில் திறன்
3. தைரியம்,
4. அழகு 
5. செல்வம், 
6. ஆளுமை, 
7. பாரம்பரியம்
8., வீரம்,
9., கோபம்,
10. புகழ்,
11. நடை,உடை,பாவனை, 
12. அறிவு,

பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை தீர்மானிக்க ஒரு தம்பதியர் இருவரும் கரு உற்பத்தியாகும் முன்னரே என்னுடைய சில கேள்விகளுக்கு உண்மையாக பதில் கூறினால் எளிதாக கண்டுபிடித்து விடலாம்.

இதை அறியாமல் மனிதன் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்க எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற வகையில் காரணம் தெரியாமல் போராடுகிறான் செலவழிக்கிறான். இதற்கான காரணம் தெரியாமல் மருந்துகளின் விற்பனை கோடிக் கணக்கில் நடை பெறுகிறது. ஜோதிடர்கள் பரிகாரங்களில் வாழ்கிறார்கள். இண்டர்நெட்டில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. பெண்கள் துன்புறத்தப் படுகிறார்கள். ஆண்கள் அற்பமாக சந்தோஷமடைகிறார்கள்.

மேலும் இதில் தப்பான கருதுகோளில் சில ஆண்கள் பெருமிதம் வேறு கொள்கிறார்கள். ”ஆம்பளை சிங்கம் நான், எனக்கு ஒரு சிங்கக் குட்டிதான் (அதாவது ஆண் பிள்ளை) பிறக்கும்” என்று சந்துருவின் பாலின் விதி அறியாமல் வீரம் பேசுவார்கள்.

ஒரு குடும்பத்தில் ஆண்மை, பெண்மை இவற்றின் சமநிலையை நிலை நிறுத்தும் வகையில்தான் அடுத்து பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் தீர்மானிக்கப் படுகிறது என்பதுதான் ”சந்துருவின் பால் விதி”. Chandru's rule of gender determination..)
இதன் கிளைத் தேற்றங்கள் பலவாறாக உள்ளது அவற்றில் ஒன்றுதான்

பெண் பிள்ளைகள் பெற்றவன் தான் உண்மையிலே ஆண்மை மிக்கவன்.
இது போல் கிளைத் தேற்றங்கள் நிறையச் சொல்லலாம்.

ஆகவே ஒரு பெண் பிள்ளையைப் பெற்று வளர்த்து உங்களை ஒரு ஆண்மகன் என நிரூபித்துக் கொள்ளுங்கள். 

சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு ஏற்றவாறு தேவைப்படும் மாற்றங்கள், ஜீனில் பதியப்படுகிறது என்பதுதான் பரிணாமத்தின் விளக்கம். 

உதாரணமாக அடுத்த தலைமுறையிலிருந்து ஆண்கள்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இந்த தலைமுறையினர் தீர்மானிக்க முடியாது. ஆனால் தேவைபடும் பொழுது பல தலைமுறை இடைவெளியில் மாற்றிக்கொள்ள முடியும். ஆண்களே கோபப்படாதீர்கள், இந்த மாற்றம் நீங்களும் மனது வைத்தால் தான் நடக்கும். அல்லது பெண்கள் தற்பொழுதுள்ள நிலைமையை தீவிரமாக எதிர்த்தால் மாற்று வழி பிறக்கும்.

ஆண்களே இன்னும் உங்களுக்கு சாதகமான விஷயம் ஒன்றும் உள்ளது. நான் தனிப்பட்ட விதத்தில் சேகரித்த தகவல் இது தான். பெரும்பாலான பெண்கள் அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் அதிலும் பெண்ணாகத் தான் பிறக்க ஆசைப் படுகிறார்கள். அதிலும் என் மனைவிக்கோ நான்தான் கணவனாக வேண்டுமாம். (இன்றைய நிலவரப்படி. இந்த டீல் எனக்கும் பிடிச்சிருக்கு)

ஆண்களின் கர்ப்பம் மூலம் தான் இனிமேல் மனித இனம் பூமியில் நிலைத்திருக்க முடியும் என்ற அழுத்தமான தேவையும், ஆழ்மண உணர்வோடு இருபாலரும் குறைந்தபட்சம் 5000 தலைமுறை வாழ்ந்தால், சூழ்நிலையும் அந்தமாதிரி அமைந்து விட்டால் ஆண்களுக்கு கர்ப்பம் அல்லது மாற்று வழி உறுதிதான். 

இது ஒவ்வொரு தலைமுறையும் சம்பந்தபட்ட விஷயம். தகவலின் முக்கியத்துவம், தன்மை ஆகியவை குறையாமல் அடுத்த தலைமுறைக்கு மரபணு மூலம் எடுத்து செல்லும் விதத்திலும், சூழ்நிலைக்கு தகுந்தவாறும் தான் மாற்றம் அமையும். ஏனென்றால் ஒவ்வொரு தலைமுறையிலும், 1) மரபணுவில் தகவலும், 2) செய்யப்பட்ட மாற்றமும், 3) தகவல் குறித்து செய்யப்பட வேண்டிய மாற்றமும் மிகமிகச் சிறிய அளவில் தான் பதியப்பட்டு, மேம்படுத்தப் படுகிறது. சூழ்நிலையில் அக்கறை மற்றும் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைமுறைக்குத்தான் மாற்றத்திற்கான அதிக பங்களிப்பு இருக்கிறது.

இவை அனைத்திற்கும் காரணமான எலக்ட்ரானின் எட்டை எட்டிவிட்டால் கிட்டிடும் சமநிலை நோக்கிய பயணத்தின் இடையே வேதியலில் சமநிலை (Equalibrium in chemical Equations) இயற்பியலில் சமநிலை (Rest state) நீரோட்டத்தின் சமநிலைக்கான ஆறுகளின் ஓட்டம், குடும்பத்தில் ஆண்,பெண் சமநிலை, Gender Equality in a system of Family), என்று எங்கும் சமநிலையை விரும்பும் எலக்ட்ரான்கள் அத்தனைக்கும் என்றுதான் முக்தி கிட்டுமோ?.


--
என்றென்றும் ப்ரியங்களுடன்,
இனியவன்.
[யாதும் ஊரே. யாவரும் கேளிர். ஒன்றே குலம். ஒருவனே தேவன் ]

Thevan

unread,
Sep 11, 2012, 1:08:47 AM9/11/12
to panb...@googlegroups.com
அருமை தொடருங்கள். 

Arumbanavan A

unread,
Sep 11, 2012, 1:09:21 AM9/11/12
to panb...@googlegroups.com

ஹே சிங்கம் களம் ஏறங்கிடுச்சு...



2012/9/11 இனியவன் <mail2...@gmail.com>

--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

eswar sivakrishnan

unread,
Sep 11, 2012, 1:12:35 AM9/11/12
to panb...@googlegroups.com
ஜீன் முலம் தேவையான பாலினத்தை உருவாக்கும் முறை வெற்றி வெற்று உள்ளது, இயற்கையாக அப்படி பாலினத்தை தமக்குப்பிடித்தமானதாக்க முடியும் என்றாலோ இப்படி இருந்தால் இந்தக்குழந்தை பிறக்கும் என்றாலோ பக்குவப்படாத நம் சமுதாயத்திற்கு அதனால் கேடுமட்டுமே உண்டாகும். 
கோணங்கள் பல இந்த நோக்கையும் தெரிந்து கொள்கிறோம் போடுங்கள்...


2012/9/11 Thevan <apth...@gmail.com>
அருமை தொடருங்கள். 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
http://svjeswar.blogspot.in/ 

"எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்க"
அன்பன்,
ஈஸ்வர்

பாலா பாலாஜி

unread,
Sep 11, 2012, 1:12:55 AM9/11/12
to panb...@googlegroups.com
//ஆகவே ஒரு பெண் பிள்ளையைப் பெற்று வளர்த்து உங்களை ஒரு ஆண்மகன் என நிரூபித்துக் கொள்ளுங்கள். //


சூப்பர்ப்பு......
 



--
Life is Short... Keep SMILING...

Balaji.R

துரை.ந.உ

unread,
Sep 11, 2012, 1:16:50 AM9/11/12
to panb...@googlegroups.com
தலைப்பிள்ளை ஆணென்பார் தப்பினால் பெண்ணென்பார்;
வாய்ப்பந்தல் கண்டால் ஒதுங்கு 

:)))))))))))))

2012/9/11 இனியவன் <mail2...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

Arumbanavan A

unread,
Sep 11, 2012, 1:30:59 AM9/11/12
to panb...@googlegroups.com

உங்களுக்கு பெண் குழந்தை போல....



2012/9/11 பாலா பாலாஜி <tami...@gmail.com>
//ஆகவே ஒரு பெண் பிள்ளையைப் பெற்று வளர்த்து உங்களை ஒரு ஆண்மகன் என நிரூபித்துக் கொள்ளுங்கள். //


சூப்பர்ப்பு......
 



--


--

Arumbanavan A

unread,
Sep 11, 2012, 1:33:11 AM9/11/12
to panb...@googlegroups.com

என்னா நீங்க இப்புடி பொசுக்குன்னு முடிச்சுட்டீங்க..

உங்கள ரெண்டு இடத்துல்ல குத்திக்காட்டி இருக்கார்.

நீங்க அவர கத்தி எடுத்துட்டு போய் குத்த வேண்டாம்.



2012/9/11 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
தலைப்பிள்ளை ஆணென்பார் தப்பினால் பெண்ணென்பார்;
வாய்ப்பந்தல் கண்டால் ஒதுங்கு 

:)))))))))))))


--

பாலா பாலாஜி

unread,
Sep 11, 2012, 1:36:50 AM9/11/12
to panb...@googlegroups.com
ஆமாம் குறும்பு.. உங்களுக்கு தெரியாதா? எல்லாருக்கும் தெரியுமே... 

Arumbanavan A

unread,
Sep 11, 2012, 1:38:55 AM9/11/12
to panb...@googlegroups.com

இப்ப தான் தெரியும்....



2012/9/11 பாலா பாலாஜி <tami...@gmail.com>
ஆமாம் குறும்பு.. உங்களுக்கு தெரியாதா? எல்லாருக்கும் தெரியுமே... 


--

இனியவன்

unread,
Sep 11, 2012, 1:53:30 AM9/11/12
to panb...@googlegroups.com
பொதுவாக மனிதனுக்கு அறிவு வந்த நாளிலிருந்து பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிவதற்கு என்றைக்குமே ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்தது. பொதுவாக மக்கள் எப்படி அறிந்தனர் என்பதையும் தமிழர்களிடம் அதற்கான வழிமுறைகள் என்ன இருந்தது என்பதையும் காண்போம்.

1) கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றின் அளவை வைத்து, பெரு வயிறு என்றால் பெண் என்றும் சிறு வயிறு என்றால் ஆண் என்றும் கூறுவர்.மேலும் சிலர் முடி, நகம் இவைகளின் வளர்ச்சியை வைத்தும் சொல்வர்.

2) கர்ப்பிணிப் பெண்கள் உட்கார்ந்த பிறகு எழும் போது, பெரும்பாலும் வலது கையை ஊன்றி எழுகிறார் என்றால் ஆண் என்றும் இடது கை என்றால் பெண் என்றும் கூறுவர்.

3) மசக்கையின் போது (கர்ப்பகாலத்தில்) இனிப்பை அதிகம் விரும்பினால் ஆண் என்றும், புளிப்பை அதிகம் விரும்பிச் சாப்பிட்டால் பெண் என்றும் கூறுவர்.மேலும் கர்ப்பமாக உள்ள ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் அளவு, விரும்பும் உணவு வகைகள், இன்னும் பலவகையான வழிகளில் அவள் பெறப்போகும் குழந்தையினை பற்றிக் கூறலாம் என்றும் கூறுவர்.
கர்ப்பிணியின் நாடித்துடிப்பை வைத்து அப்பெண் பிள்ளை பெறும் நேரத்தையும், இரட்டைக் குழந்தையா அல்லது ஒரு குழந்தையா என்றும் கூறுவர், பெண்ணின் உடலின் நிறம் முகமாற்றங்களையும் வைத்து பெண் பெறப்போகும் குழந்தையானது ஆணா? பெண்ணா? குழந்தையின் உடல் நிறம், குணம், உடல்நிலை போன்றவற்றை அறிந்து கொள்ளலாம் என்றும் கூறுவர்.

4) ஒரு கண்ணாடிக் குடுவையில் இரண்டு தேக்கரண்டி ட்ரானோ உப்புடன் கர்ப்பிணியின் (காலையில் எடுக்கும்) சிறுநீரை கவனமுடன் கலக்க வேண்டும் . புகையுடன் கூடிய ஒரு வீரியமான வேதியல் வினை நடக்கும். அவ்வினை முடிந்த பின்னர் அதில் தெளிந்து நிற்கும் திரவம் கரும்பழுப்பு நிறத்தில் இருந்தால் ஆண் என்றும் நிறத்தில் மாற்றமில்லை என்றால் பெண் என்றும் அறியலாம். 


5) மல்லாக்கப் படுத்த நிலையில் கர்ப்பிணியின் தொப்புளில் விளக்கெண்னெய் ஊற்றி எந்தப் பக்கம் வழிகிறது என்பதை வைத்தும் கூறுவர். 

6)வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பு 140 க்கு மேல் இருந்தால் பெண் என்றும் குறைவாக இருந்தால் ஆண் என்றும் அறிவர்.


7)டவுசர்கள் ) அல்லது டிவைனர்கள் என்று அழைக்கப் படுபவர்களால் ஒரு முறை கையாளப் படுகிறது. ஆறுபடத்தில், சூர்யா ”ஐந்து கிலோ அரிசி வாங்கி பஞ்சு பஞ்சா வேக வைத்து பொதைச்ச இடம் தெரியலேயே” என்று பாடிக் கொண்டே அந்த ”தண்ணி’ உள்ள இடத்தை கண்டுபிடிப்பதற்காக கையில் குச்சியை வைத்துக் கொண்டு சுற்றுவார். அந்த குச்சியைத்தான் டவுசிங் குச்சி என்பார்கள்.


நம்மூரில் தண்ணீருக்கு போர் போடுவதற்கு அவர்கள் உதவி இன்னும் நாடப் படுகிறது. அது போல் ஊசல் குண்டு வைத்தும் தொலைந்து போன பொருட்களை கண்டுபிடிப்பர். இந்த முறையில் ஜெர்மணியில் பரந்து விரிந்து கிடக்கும் கடலில் ஒரு தொலைந்த கப்பலை கண்டுபிடித்து கொடுத்தவரும் உண்டு. 


ஊசல் அல்லது பெண்டுலம் கொண்டு அறியும் முறை. கர்ப்பிணியின் வயிற்றின் மீது ஒரு மெல்லிய செயினில் தொங்கவிடப் பட்ட மோதிரத்தின் அசைவைக் கொண்டு ஆணா, பெண்னா என அறிந்தனர். பெண்டுலம் மாதிரி ஆடினால் ஆண் என்றும் சுற்றினால் பெண் என்றும் கூறுவர். பெண்ணின் மணிக்கட்டிற்கு மேல் வைத்தும் கூட செய்து பார்ப்பர்.

கர்ப்பகாலம் 10 அல்லது 20 நாட்கள் தள்ளிப் போனால் பெண் என்றும் அறிவர்

8)சீன அட்டவணை முறையும் உள்ளது அதனுடைய விளக்கத்தை கீழ்க்கண்ட தளங்களில் சென்று அறியலாம்.




இது வரை குறிபிட்டவை அணைத்தும் கருத்தரித்த பின் கண்டறியப் பயன்படும் முறைகள். ஆனால் மேற்க் கூறப்பட்ட முறைகளில் எந்த விதமான அறிவியல் ஆதாரமும் இல்லை என வல்லுனர்கள் மறுத்துள்ளனர்.

கருத்தரிக்கும் முன்பே என்ன குழந்தை என்பதை தீர்மாணிக்க முடியுமா? 

இந்த விஷயத்தில் ஷீட்டில்ஸ் சுற்றி வளைத்து என்னுடைய கூற்றுக்கு சற்று அருகில் வருகிறார்.அவர் என்ன சொல்கிறார் என்பதை இந்த வளைத்தளங்களுக்குச் சென்று பாருங்கள்.கலவி முறையில் சில மாற்றங்களைச் செய்து வேண்டிய குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்



கலவியின் காலத்தை தேர்ந்தெடுத்து எந்த குழந்தை வேண்டுமோ அந்த குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் எனறும் சிலர் கூறுவர். சந்திரன் இருக்கும் ராசியைக் கொண்டு ஆணா பெண்ணா எனக் கூறுவதும் உண்டு.

9) ஆண் ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தணுசு, கும்பம் ஆகியவற்றில் சந்திரன் இருக்கும் போது கலந்து கருத்தரித்தால் ஆண் குழந்தை என்றும், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவற்றில் சந்திரன் இருக்கும் போது கலந்து கருத்தரித்தால் பெண் குழந்தை என்றும் கூறுவர்.

10) மாதவிலக்கு நாளிலிருந்து ஒற்றைப் படை நாட்களில் கலந்தால் ஆண் என்றும் இரட்டைப்படை நாட்களில் கலந்தால் பெண் என்றும் கூறுவர் 

11) வாஸ்து சாஸ்திரப்படி படுக்கை அறை, கட்டில் அமைத்து ஆணாகவோ பெண்ணாகவோ பெற்றுக் கொள்ளலாம் என்றும் சிலர் கூறுவர். http://www.astrosuper.com/2011/05/blog-post_19.html

12) நமது சித்தர்கள் என்ன சொல்லியுள்ளனர் எனப் பார்ப்போம்.பொதுவாக சித்தர்களின் கூற்றுக்கள் பிரதானமாக வாசியோகத்தைப் பின்பற்றியதாக இருக்கும். சுவாசத்தை கட்டுப் படுத்துவதுதான் வாசியோகமாகும். இட கலை – இடது நாசியினுள்ளே செல்லும் காற்று. இதுவே சந்திர நாடி என்பர். பிங்கலை – வலது நாசியினுள்ளே செல்லும் மூச்சு. இதைச் சூரியநாடி என்பர்,. சித்தர்கள் கலவிக்காலத்தில் எந்த நாடி ஒடுகிறதோ அதைப் பொறுத்து குழந்தை அமையும் என்பார்கள் சாதாரண மனிதர்களால் மூச்சு ஒட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. அது தன்னிச்சையாக ஒருநேரம் பிங்கலையும் ஒருநேரம் இடகலையும் ஓடும். நீங்கள் அதை சோதனை செய்து பார்க்கலாம். எந்த மூச்சு ஓடுகிறது என்று மூக்கின் துவாரத்தின் கீழ் கையை அல்லது விரலை வைத்துப் பார்த்தால் தெரியும்.


சித்தர்கள் கூற்றின்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒடும் மூச்சைப் பொறுத்து கலவி வைத்துக் கொள்ளவேண்டும். வலது பக்கம் ஓடினால் பெண், இடது பக்கம் ஒடினால் ஆண் என்றும், இருபக்கமும் குழப்பத்துடன் ஓடினால் கூண், குருடு அலி என்றும் கூறுவர். பெண்ணின் இரைப்பை, மற்றும் பெருங்குடல் இவற்றில் இருக்கும் அளவின் தன்மையைப் பொறுத்தும் எந்த மாதிரி குழந்தை என்று கூட சொல்கிறார்களாம். உங்களுக்கு ஆர்வமும் நேரமும் இருந்தால் இந்த தளங்களுக்கு சென்று பாருங்கள். பிராணாயாமம் செய்தால் சூரிய, சந்திர மூச்சுகளை கட்டுப் படுத்தலாம்.


அகத்தியர், திருமூலர், சரகர் போன்றோரின் வைத்திய மற்றும் கலை நூல்களிலிருந்து பிறப்பானது நிர்ணியிக்ககூடிய ஒன்றாக, மாற்றக்கூடியதாகவும் நிரூபிக்கப்படுகிறது. பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்றும் வயதையும், குணப்பண்புகளையும் எவ்வாறு நிர்ணயிப்பது என்று திருமூலர் வைத்தியசாரம் தெளிவாக உணர்த்துகிறது மனிதனின் உடலில் ஓடுகின்ற நாடிகளான வாதம், பித்தம், கபம் {சிலோத்துமம்} என்ற மூன்று முக்கிய நாடிகளிலிருந்து மனிதனின் உடலில் ஏற்படும் நோய் முதலான அனைத்து மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடியும். அதில் மகப்பேறுவும் உண்டு

eswar sivakrishnan

unread,
Sep 11, 2012, 4:11:56 AM9/11/12
to panb...@googlegroups.com

ஒரு ராஜாவிற்கு ரொம்நாளா குழந்தையே இல்லை அவர் செய்யாத வைத்தியம் இல்லை, சுற்றாத கோவில்கள் இல்லை  என்று துவங்கும்  கதைகள்  நினைவிற்கு வருகின்றன, வாரிசு இல்லாமல் அவதிப்பட்ட மந்னர்கள் பட்டியல் மிக நீளம், அதுவும் நம் சித்தர்கள் இருந்த தமிழகத்தில்.
 ஒரு காலத்திய நமபிக்கைகள் வேறுகாலத்தில் மாறுபடலாம், இப்போதைய அறிவியல் யுகத்தில் கூட புத்திரப்பேறு இல்லாமல் வாடுகிற்ரகள் அப்படி இருக்க ஆண்,பெண்  குழவிக்கு தனியாக கலவி எந்பதெல்லாம் ்ப்படியே  ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்ன இந்தமாதிரி சிந்தனைகள் நம் நாட்டில் இருந்திருக்கின்றன இதனால் இப்படி ஆகலாம் என ஆராயந்து பார்ததிருப்பதற்கு மகிழலாம்.

ஒற்றைப்படை இரட்டைப்படை, இடம் வலம் எல்லாம் பெண்குழந்தை வேண்டாம் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கே.(அது வேலை செய்யது என்னினும்)
அத்தகைய எண்ணம் இன்னும் நம் சமூகத்தில் தொடர்வது தான் கவலைக்குரியது.


2012/9/11 இனியவன் <mail2...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

காமேஷ்

unread,
Sep 11, 2012, 5:17:15 AM9/11/12
to panb...@googlegroups.com
 
தேவையான் குழந்தையை பெத்துக்கும்  அறிவு மட்டும் கிடைச்சிட்டா ஒவ்வொரு அரசாங்கமும்
அதுக்கு தேவையான ஆணையோ, பெண்ணையோ ஆள் வச்சி பெத்துக்கும்.




2012/9/11 இனியவன் <mail2...@gmail.com>
உ.உ பற்றி பேசுவது மாம்சுக்கு பிடிக்கவில்லை என்பதால் அதை தவிர்த்து விட்டு ஆண்/பெண் குழந்தை பிறப்பு பற்றி மட்டும் ஒரு செய்தி சொல்கிறேன்.
 

Prakash Sugumaran

unread,
Sep 11, 2012, 5:51:28 PM9/11/12
to panb...@googlegroups.com
//ஆண்மைக்கு அடையாளமான சீருடை அணிந்த காவலர்கள், ராணுவவீரர்கள், முறுக்கு மீசைக் காரர்கள், திருமணத்திற்கு முன்பே பிரபலமானவர்கள், தலைவர்கள் ஆகியோருக்கு முதலில் பிறக்கும் குழந்தை பெண் குழந்தைதான். பிரபலங்களின் குடும்பத்தை ஆராயும் போதும் இதனுடைய நம்பகத் தன்மையை அறிந்து கொள்ளலாம். காதல் இளவரசன் கமல்ஹாசனுக்கு இரண்டும் பெண்தான், காதல் மன்னனுக்கும் அதே, சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இரண்டும் பெண்தான், நேருவுக்கு ஒன்றாக இருந்தாலும் பெண்ணாகிவிட்டது., இந்திராகாந்திக்கு இரண்டும் ஆண் தான் (இப்பொழுது புரிந்திருக்குமே) அஜீத்துக்கு பெண்தான், விஜய்க்கு ஆண்தான்//
 
வாஸ்து சாஸ்திரம் எதுவும் இதில வரலையா ??


 
2012/9/11 காமேஷ் <kame...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/

sivaasokan

unread,
Sep 12, 2012, 3:12:08 AM9/12/12
to panb...@googlegroups.com


யோக முறையிலும் பிற முறையிலும் ஆண் அல்லது பெண் குழந்தையை பெறுவதற்கான வழிகள் உள்ளன. அவை அனைவராலும் கடைபிடிக்க முடிந்தவை அல்லது நம்பகமானவை அல்ல. குழந்தை பிறப்பு வளர்ச்சி பற்றிய அறிவியல், உளவியல், தத்துவவியல், சூழ்னிலையியல் இவற்றை ஓரளவேனும் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். ஆண் வேண்டும் பெண் வேண்டும் என்பதை விடக் கிடைப்பதை ஏற்றுக் கொண்டு ஆண், பெண் இருவரையும் சமமாகப் பாவிப்பதே வேண்டியதும் எளிதானதும் ஆகும். இயற்கையில் வேறுபாடு இல்லை என்று சொல்லக் கூடியவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுடன் விவாதிக்க நான் வரவில்லை. உண்டா இல்லையா என்று தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் இவைகளுடன் பழகி அறிந்து கொள்ளலாம்.ஜெனிடிகல் என்ஜினியரிங் அல்லாத முறையிலும் மரபியலை மேம்படுத்த முடியும்.

ஒருவரின் மனோ நிலை ஜீன்களில் வேலை செய்யக் கூடியது.நீங்கள் ஒரு இசை நிகழ்ச்கிக்கு சென்று வந்து அந்த ஆக்கிரமிப்பில் கூடி ஒரு குழந்தை உருவானால் அது சங்கீத மேதையாக உருவாக அதிக வாய்ப்புகள் உண்டு. ஏன் என்றால் சங்கீத ஜீன்கள் ஓங்கியவையாக அந்த குழந்தைக்கு இருக்கும். இப்படியே ஒவ்வொன்றும். நீங்கள் ஒரு காமம் மிகுந்த திரைப்படத்தைப் பார்த்து வந்து ஒரு குழந்தையை உருவாக்கினால் அது காமாந்தகனாக் இருக்க அதிக வாய்ப்பு உண்டு. ஆக உங்கள் குழந்தைகளின் நிறை குறைகளுக்கு நீங்களே பெரிதும் காரணமானவர். மேலும் உறவினர், நண்பர், ஆசிரியர், சமூகச் சூழல், படிக்கும் புத்தகங்கள் யாவும் ஒருவை உருவாக்கும் காரணிகள்.

அபிமன்யு கற்பத்தில் இருக்கும் போது கற்றான் என்பதன் அடிப்படையில் சில ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. குழந்தை கற்பத்தில இருக்கும் போது தந்தை அதனுடன் பேசுவது, வயிற்றில் காதை வைத்து அதன் அசைவுகளைக் கவனிப்பது, குழந்தைக்கு நல்ல ஆக்சிஜன் கிடைக்குமாறு சுவாசப் பயிற்சி செய்வது போன்றவை செய்து, ஒரு குழந்தையை 14 மாதங்களில் செய்தித்தாளைப் படிக்க வைத்தனர்.

ஒரு குழந்தையை உருவாக்க எனக்கு உரிமை இருக்கிறதா? அது இந்த பூமியில் நிகரமாகத் துன்பம்தானே அனுபவிக்கிறது. அதற்கு நான் காரணமாக இருக்கலாமா என்று கேள்வி கேட்டு மயிலாடுதுறையில் ஒரு கிறித்துவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

 

Thevan

unread,
Sep 12, 2012, 4:22:43 AM9/12/12
to panb...@googlegroups.com
// அதற்கு நான் காரணமாக இருக்கலாமா என்று கேள்வி கேட்டு மயிலாடுதுறையில் ஒரு கிறித்துவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.// 

ஆச்சரியமே. 
உண்மையில் எல்லா மதங்களும் மோட்சத்தை பற்றி போதிப்பதாக இருந்தால், இதையே செய்ய வேண்டும். 

குழந்தைகளை பெற்றெடுத்து பின்னர் அவர்களுக்கு எல்லாவற்றையும் செய்து, ஞானத்தை புகட்டி அவர்கள் இறைவனடி சேர்வார்களா இல்லையா என்று தெரியாமல் இருப்பதை விட, குழந்தைகளே பெற்றுக் கொள்ளாமல் இருந்தால் மனிதன் பிறக்க வேண்டிய நிலையே இருக்காது. பிறவிப் பெருங்கடலை கடக்கும் கடினத்தை எதிர்கால சமுதாயத்திற்கு கொடுக்காமல் நிறுத்தி விடலாம். 

Ramesh Murugan

unread,
Feb 23, 2013, 6:43:33 AM2/23/13
to panb...@googlegroups.com
பாஸ்,
ஆணோட விந்துவிலுள்ள உயிரணுவில் மொத்தம் 21 குரோமோசோம்கள் இருக்குதாம். அதே மாதிரி பெண்ணுக்கும். இந்த மொத்த 42ல் 40 குரோமோசோம்கள் உடல் வடிவமைப்பு, பரம்பரை நோய்களை அடுத்த சந்ததிக்கு கடத்துமாம். மீதியுள்ள ஆண் மற்றும் பெண்ணின் 2 குரோமோசோம்கள் XX = பெண், XY = ஆண் என்கிற ரீதியில் குழந்தை பிறக்குமாம்.

இதுல யாருக்கு வேட்கை அதிகம் குறைவு என்பதெல்லாம் கணக்கில் வராது.

உபயம்: டாக்டர். காமராஜ்.

2013/2/23 balakrishnan arunachalam <balakri...@gmail.com>

   
    ஆம் ஆணின் வேட்கை அதிகம் எனில் -  பெண்குழந்தை
             பெண்ணின் வேட்கை அதிகம் எனில் - ஆண் குழந்தை

//
--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

Kandavel Rajan

unread,
Feb 23, 2013, 12:43:48 PM2/23/13
to panbudan
2013/2/23 Ramesh Murugan <rames...@gmail.com>
பாஸ்,
ஆணோட விந்துவிலுள்ள உயிரணுவில் மொத்தம் 21 குரோமோசோம்கள் இருக்குதாம்.


ரமேஷ், 21 இல்லை ..

அது 23 .....

:-)))

Human cells have 23 pairs of chromosomes (22 pairs of autosomes and one pair of sex chromosomes), giving a total of 46 per cell.

http://en.wikipedia.org/wiki/Chromosome

--
அமைதியே வலிமை. அன்பே அமைதியின் வெளிப்பாடு.
அன்பின் வெளிப்பாடு அடக்கம். -பாலகுமாரன்


நட்புடன்,
கந்தவேல் ராஜன் ச.

Ramesh Murugan

unread,
Feb 23, 2013, 1:04:19 PM2/23/13
to panb...@googlegroups.com
சாரி :))
வயசாயிடிச்சில்லையா... அதான் ஞாபக மறதி அதிகமாயிடிச்சி :))

2013/2/23 Kandavel Rajan <kandav...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

Jaisankar Jaganathan

unread,
Feb 24, 2013, 1:51:53 AM2/24/13
to panb...@googlegroups.com
எல்லா குழந்தையும் ஹாஸ்பிட்டல்ல தான் பிறக்குது
Reply all
Reply to author
Forward
0 new messages