கந்தர் சக்ஷ்டி கவசம்
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்
நெஞ்சிற் பதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்தோங்கும்
நிஷடையும் கைகூடும்
நிமலர் அருள் கந்தர் சக்ஷ்டி கவசந்தனை
அமரரிடர் தீர வமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி….
சஷ்டியை நோக்க சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி ஆட (2)
மையல் நடணஞ்செய்யும் மயில் வாகனனார்
கையில் வேலாலெனைக் காக்கவென்று வந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா வெண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹண பவனார் சடுதியில் வருக…
ரஹண பவச ரரரர
ரிஹண பவச ரிரிரிரி
விணபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிற நிற நிறென(2)
வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயுங் கிலியும் அடைவுடன் செளவும்
உய்யொளி செளவும் உயிரையும் கிலியும்
கிலியுஞ் செளவும் கிளரொளியையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சன்முகன் றீயும் தனியொளி யொவ்வும்
குன்டலி யாஞ்சிவ குகன்றினம் வருக…
ஆறுமுகமும் அணிமுடியாறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்நெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் (2)
ஈரறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகு உடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்ன பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணை முழந்தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகநக நகென
டிகுடிண டிகுடிகு டிகுகுன டிகுன
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடுகு டிகுடிகு டங்கு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து…
என்றனையாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென் (2)
உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
என்றலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க்கு உயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திரு பல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க (2)
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடறிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வடிவேல் காக்க
பனைத் தொடையிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழ்ந்தாள் கதிர்வேல் காக்க…
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பா னாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகறன்னில் வஜ்ரவேல் காக்க
அரையிரு தன்னில் அனையவேல் காக்க
ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீங்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க…
தாக்க தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும்
கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களை தொடரும் பிரம்ம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
என்னிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடி விழந்தோடிட…
ஆனை அடியினில் அரும் பாவைகளும்
பூனை மயிரும் பிளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
பாவைகளுடனே பல கலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் மஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூட தானைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் அலறி மதிகெட்டு ஓடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதிற் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகை சொக்கு…
குத்து குத்து கூர் வடிவேலால்
பற்று பற்று பகலவன் தனலெரி
தனலெரி தனலெரி தனலதுவாக
விடுவடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் எனைத் தொடர்ந்தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்து இறங்கும்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்பும் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்பு பித்தம்
சூலைக்ஷயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்…
எல்லாப் பிணியும் என்றனை கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாளரசரும் மகிழந்துற வாகவும்
உன்னை துதிக்க உன்திரு நாமம்
சரஹண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழெுாளி பவனே
பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமராவதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனிய வேல் முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா
கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா…
பழநி பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தில் மாமலையுறும் செங்கல்வராயா
சமராபுரி வாழ் சண்முகத் தரசே
பாரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனை பாட
எனைத்தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் ஆடினேன் ஆவீனன் பூதியை
தேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும்
மெத்தமெத்தாக வேலாயுதனார்
சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைகுரு வாழ்க
வாழ்க வாழ்க மலைகுறமகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்…
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தான்
பெற்றவ நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பின்ளையென்று அன்பாய்ப் பிரியம் அளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென்று அடியார் தழைத்திட வருள்செய்
கந்தர சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துட நாளும்
ஆசாரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடனொரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டி கவசம் இதனை
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறு உருக் கொண்டு…
ஓதியே ஜெபித்து உவந்து நீறணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலதர் உளுவர்
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெழுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாங் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியார் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்குரு சங்காரத்தடி
அறிந்தெனது உள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துணவாக
சூரபத்மாவைத் துணிந்தகை அதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்து அமுதளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத் தடுத் தாட்கொள்ள என்றனது உள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்ய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேலே போற்றி
உயர்கிரிக் கனக சபைக்கோ ஓர் அரசே
மயில் நடன மிடுவோய் மலரடி சரணம்
சரணஞ் சரணஞ் சரஹண பவஓம்
சரணஞ் சரணஞ் சண்முகா சரணம் (2)
--
ஏகத்துவம் என்பது இயற்கைக்கு எதிரானது. பன்மை வெளிப்பாடே இயற்கைக்கு
கந்தது.அப்படித்தான் உலகம் உள்ளது.
-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்
*Regards,*
Perumal Thevan, *
Theni, Tamil Nadu
*
*
*
*Mob: **
9047440542*
ap_the...@yahoo.co.in,
ap_th...@rediffmail.com,
*
http://perumalthevan.blogspot.com/*
https://www.facebook.com/apthevan<
https://www.facebook.com/apthevan?ref=tn_tnmn>