Naresh Kumar
unread,Apr 23, 2008, 9:07:29 AM4/23/08Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to பண்புடன்
மக்கள் வெள்ளமும், இசை மழையும் ஒன்றிணைந்தால் எப்படியிருக்கும்?
ஞாயிற்றுக் கிழமை (20.04.08) மாலை 6.30 மணியளவில் சென்னை செயிண்ட் ஜான்ஸ்
பள்ளி மைதானதில் இருந்திருந்தால் அதை உணர்ந்திருக்கலாம்.
ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஏ. ஆர். ரகுமானின் சென்னை நிகழ்ச்சியைப்
பற்றி பயங்கர எதிர்பார்ப்பு, விளம்பரம் இருந்தன. 10 நாட்கள் கொடுப்பதாக
இருந்த டிக்கட்கள் எல்லாம் 2 நாளிலேயே கொடுத்து முடித்திருந்தனர்.
ரகுமானின் பயங்கர விசிறியான, விளம்பரத்துறையில் வேலை செய்யும் என்
நண்பனின் உதவியால் டிக்கட் கிடைத்திருந்தது. 6.30க்கு நிகழ்ச்சி
ஆரம்பம்னு சொல்லியிருக்காங்க, நின்னுக்கிட்டு பாக்கறமாதிரி டிக்கட்தான்
எல்லாருக்கும் கொடுத்திருக்காங்க, அதனால 5.30க்கலாம் அங்க இருக்கற மாதிரி
போயிரலாம்னு என் நண்பன் எச்சரித்திருந்தான். அப்படியும் அடிச்சு புடிச்சு
போகும் போது மணி 6 ஆகியிருந்தது. பயங்கர கூட்டம். நாங்களும் கூட்டத்தோட
கூட்டமா போயி நின்னுக்கிட்டோம். இசை மழையில் நனையும் முன்னரே வியர்வை
மழையில் நனைய ஆரம்பித்திருந்தோம். ஏறக்குறைய சரியான நேரத்தில்
நிகழ்ச்சியை ஆரம்பித்து விட்டதால் அந்தளவு தெரிய வில்லை.
ரகுமான் மேடையில் தோன்றியவுடன் பலத்த ஆரவாரம். கடந்த இரண்டு வருடங்களாக
இத்தகைய ஆரவாரத்தை தான் கேட்கவேயில்லை என ரகுமானே கூறினார். முதல் பாட்டை
ரகுமான் பாட வரிசையாக சங்கர் மகாதேவன், ஹரிஹரன், கார்த்திக், மதுஸ்ரீ,
நித்யஸ்ரீ, நரேஷ் ஐயர், ஜாவத் அலி என்று ஒவ்வொருவராக பட்டையை கிளப்ப
ஆரம்பித்தனர்.
முன்பே வா பாடல் பாடப் போறாங்க என்றவுடன் ஸ்ரேயா கோசல்
வந்துருக்காங்களான்னு ஆர்வமாக நிமிர்ந்தால் சின்மயிதான் பாடுவாங்கன்னு
தெரிஞ்சவுடனே ச்சேன்னு ஆகிடுச்சு. நித்தி மோகன்ன்னு ஒரு பாடகி, தமிழில்
பாடியதில்லைன்னு நினைக்கிறேன், என்னமோ ஒரு இந்தி பாட்டு பாடினார், என்ன
பாட்டுன்னு புரியாட்டியும் அவர் பாடுவதை பெரிய திரையில் காட்டும் போது
அவர் பாடும் அழகை, முக பாவனையை ரசித்துப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்னு
தோன்றியது. அந்தளவு அவர் லயித்துப் பாடினார். கடைசி வரையில் அவர் அந்த
ஒரு பாடல்தான் பாடினார்.
சங்கமம் முதல் அழகிய தமிழ் மகன் வரை பாடல்கள் பாடப் பட்டன. அழகிய தமிழ்
மகனில் 'உன்னால் முடியம் வாடா' பாடலை ரகுமான் பாடிய போது, விஜய் இல்லாமல்
இந்த பாடலை கேட்க எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று தோன்றியது.
,வராக நதிக்கரையோரம், பாடலை சங்கர் மகாதேவன் பாடும் போது, கூட்டத்தையும்
பாட வைத்தது மிக அற்புதமாக இருந்தது. பொதுவா வியர்வை சிந்தி உழைக்கனும்னு
சொல்லுவாங்க. ஆனா நான் வியர்வை சிந்தரதேயில்லை, ஏன்னா ஏசி அறையில்
இருந்தே மியுசிக் போட்டுக் கொடுக்கறதுனால வியர்வை சிந்தரதேயில்லை. ஆனா
இன்னிக்கி நாம எல்லாரும் வியர்வை சிந்தி இந்த நிகழ்ச்சியை படைக்கிறோம்னு
ரகுமான் சொன்னப்ப பலத்த கரகோஷம். அந்தளவு வியர்த்துக் கொட்டியது.
சிறிது அமைதியாக போய் கொண்டிருந்த நிகழ்ச்சியில் நித்யஸ்ரீயின் பாடல்
பெரிய திருப்பம். கர்நாடக சந்கீததில் ஆரம்பித்து ஜீன்சின் 'கண்ணோடு
காண்பதெல்லாம். பாடிய போதும், பின் தொடர்ந்து பீட் சாங்காக போட்டுத்
தாக்கும் போதும் கூட்டம் பயங்கர ஆரவாரம் செய்தது. இவர்களெல்லாம் பத்தாது
என்று சிவமணி வேறு தனியாக அழிச்சாட்டியம் பண்ணினார். சூட்கேஸ், 20 லி
வாட்டர் கேன் போன்ற பொருட்களிலிருந்து இசை என அவர் அழிச்சாட்டியம், நம்ம
அண்ணாச்சிக்கு இணையாக போய் கொண்டிருந்தது.
நிகழ்ச்சியில் என்னைக் கவர்ந்த இன்னொரு விஷயம் வயது, பால் பேதமின்றி
குடும்பம் சிகிதமாக, நண்பர்கள் சகிதமாக அனைவரும் ஆரவாரதோடு ஆடி ரசித்த
விதம் மிக அருமை.
நிகழ்ச்சியில் சற்றே எனக்கு பிடிக்காத விஷயம் பாதி பாடல்கள் இந்தியில்
இருந்தன. ஆரம்பத்திலாவது பரவாயில்லை, ரங் தே பசந்தி, தில் சே, ஜோதா
அக்பர் போன்ற தெரிந்த இந்தி பாடல்களைப் பாடினார்கள். ஆனால் கடைசி
கட்டங்களில் ஹரிஹரன் யாருக்கும் புரியாது கஜல் பாடல்களை அதுவும் மிக
மெதுவான பாடல்களை பாட ஆரம்பிக்க மூன்றரை மணி நேரம் நின்று கொண்டிருந்த
போது தெரியாத கால் வலி, முதுகு வலியெல்லாம் தெரிய ஆரம்பித்தது. ஒருவேளை
50,000 க்கும் மேற்பட்டோர் ரசித்த நிகழ்ச்சியிலிருந்து கூட்டம் ஒன்றாக
வெளியேறினால் பயங்கர நெரிசல் ஏற்படும் என்பதற்காக இந்த வழியோ என்னவோ?
ஆனால் நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது எனக்கும் என் நண்பனுக்கும்
வாயிலிருந்து வெறும் காத்துதான் வந்தது. வார்ததைகள் வராத அளவு தொண்டை
பாதிக்கப் பட்டிருந்தது.