சமுத்ரா பக்கங்கள்

99 views
Skip to first unread message

இனியவன்

unread,
Sep 18, 2012, 7:36:59 AM9/18/12
to panb...@googlegroups.com
சமுத்ரா பக்கங்கள்

வலைப்பூக்களை படிக்கும் வாய்ப்பு எங்களுக்கு இல்லை என்று சொல்பவர்களுக்காக...

சமுத்ரா - வின் வலைப்பூவிலிருந்து சில பதிவுகளை இங்கு பதிகிறேன்.

யூ வில் ஷ்யூர்லி என்ஜாய் திஸ். ஐ ப்ராமிஸ்.

--
என்றென்றும் ப்ரியங்களுடன்,
இனியவன்.
[யாதும் ஊரே. யாவரும் கேளிர். ஒன்றே குலம். ஒருவனே தேவன் ]

இனியவன்

unread,
Sep 18, 2012, 7:38:19 AM9/18/12
to panb...@googlegroups.com

கலைடாஸ்கோப்-72

லைடாஸ்கோப்-72 * உங்களை வரவேற்கிறது

X

பாடல்களை சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ள அந்தக் காலத்தில் அந்தாதிகளை எழுதினார்கள் . அதாவது ஒரு செய்யுள் முடியும் சொல்லை முதலாவதாக வைத்துக் கொண்டு அடுத்த செய்யுளை ஆரம்பிப்பது. கடைசி பாடலின் 
கடைசி சொல்லை முதல் பாடலின் முதல்சொல்லோடு ஒரு மாலை போல கட்டி முடிப்பது.புகழ் பெற்ற சில அந்தாதிகள் கம்பரின் சரஸ்வதி அந்தாதி,அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி போன்றவை.

மயிலே குயிலே என்று காதலியை மட்டும் அல்ல இறைவியையும் வர்ணிக்கலாம் . கம்பர் இவ்வாறு பாடுகிறார்.

மயிலேமடப் பிடியே கொடியே இளமான் பிணையே
குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூர் இருட்கோர்
வெயிலே நிலவெ
ழு மேனி மின்னே இனிவேறு தவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற்பாதங்களே


மனக் கூர் இருட்கோர் வெயிலே! என்ன ஒரு பிரயோகம்...இருளுக்கு அவள் வெயிலாம்! (வெய்யில் என்பது தவறு வெயில் என்பதே சரி) .அடுத்த பாடல் பாதங்கள் என்று ஆரம்பிக்கிறது.(பாதாம்புயத்திற் பணிவார் தமக்கு)

இவரும் தன் இறைவியை கிளி என்கிறார். அபிராமி பட்டர் கொஞ்சம் பெருத்தன கருத்தன என்றெல்லாம் naughty -ஆகப் பாடி இருக்கிறார். அதை விட்டு விடுவோம்.

கிளியே கிளை
ர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே!
 
(அடுத்த பாடல் அதிசயம் என்று தொடங்கும்)

ஒளிரும் ஒளிக்கு இடமே
! கொஞ்சம் இயற்பியல் வருவது போல இருக்கிறது (ஆரம்பிச்சுட்டான்யா!) ஒளி எப்படிப் பரவுகிறது? 
ஒளிக்கு இடம் தருவது எது?என்று விஞ்ஞானிகள் குழம்பி வருகிறார்கள். வெளியின் ஐந்தாவது பரிமாணத்தில் பரவலாம் என்று யோசித்து வருகிறார்கள். ஒருவேளை கடவுள் தான் ஒளிக்கு ஊடகமோ?

எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே! ஒன்றும் இல்லாததும் எல்லாமுமாக இருப்பதும் கடவுள்! வெளிமுதல் பூதங்கள் என்பதை வெளி முதலான பஞ்ச பூதங்கள் அல்லது வெளியை முதலாய்க் கொண்டு உதித்த பூதங்கள் என்றும் கொள்ளலாம். பூதங்கள் எல்லாம் ஒன்றுமற்ற வெளியில் இருந்தே பிறந்தன என்கிறாரோ ?

அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே! -பக்தன் எந்த அளவோ பகவானும் அந்த அளவு. எந்த மாத்ரமுன எவ்வரு தலசின அந்த மாத்ரமே நீவு!நீ கடவுளை கல்யாண ப்ரோக்கராகப் பார்த்தால் அவன் கல்யாண ப்ரோக்கர் தான் என்ன செய்வது? என்கிறார் அன்னமாச்சாரியார்.

சரி.

அபிராமியின் குண்டலம் நிலவு போல பெரிதாய் ஒளிர்ந்தது என்றால் அப்போது அவளின் காது எவ்வளவு பெரிதாய் இருக்க வேண்டும்? அவள் எவ்வளவு பெரியவளாய் இருக்க வேண்டும்? அப்படிப்பட்ட ஒரு உருவம் அறிவியல் ரீதியில் சாத்தியமா?

சின்ன வயதில் பாட்டி பாட்டு சொல்லித் தருவாள்:-

எழுதிக்கோ. மருகேலரா ஒ ராகவா...
.
..
சூர்ய சுதாகர லோசனா..

அக்கா இடையில் வந்து ' பாட்டி , ஒரு நிமிஷம், உண்மையிலேயே பகவானோட கண்ணு சூரியன் சந்திரன் மாதிரி இருக்குமா?'என்பாள்.

பாட்டி 'அதெல்லாம் ஒரு உபமானம் டி ' என்பாள்.

'அதெப்படி?? சந்திரன் சூரியனை விட ரொம்ப சின்னது...ஒரு கண்ணு பெருசா ஒரு கண்ணு சிறுசா இருந்தா நல்லாருக்குமா?'

'இங்கேயிருந்து பார்கறப்ப ரெண்டும் ஒரே சைசில் தானே இருக்கு'

'போ பாட்டி உனக்கு சயின்சே தெரியலை'

'அதில்லைடி,,, இதுக்கெல்லாம் நேரடி அர்த்தம் எடுத்துக்கக்கூடாது..சூரியன் சந்திரன் போன்ற கண்ணு அப்படீன்னா பகவான் ஒரே சமயத்துல பக்தர்கள் மேல சந்திரன் போல இதமாகவும் அதே சமயம் ராட்சசர்களுக்கு சுட்டெரிக்கும் சூரியன் போலவும்
இருப்பான்' ன்னு அர்த்தம் பண்ணிக்கணும்...

பாட்டியின் இந்த அறிவுக்குக் காரணம் அவள் வயது. 

XX

வயதாகிறதே என்ற கவலை பட்டினத்தாரில் இருந்து பக்கத்து வீட்டு பத்மநாபன் மாமா வரை எல்லாரையும் ஆட்டிப் படைத்துள்ளது.

வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்து இருகண்கள் இருண்டு
வயதுமுதிர்ந்து 
நரைதிரை வந்து
வாதவிரோத 
குரோதம் அடைந்து -என்று பட்டினத்தாருக்கு தத்துவார்த்த கவலைகள் என்றால் பத்மநாபன் மாமாவுக்கு ரிட்டையர் ஆனதும் பென்சன் கிடையாதே,,எப்படி காலம் தள்ளுவது? என்ற கவலை ....சரி.

மனித உடலின் வடிவமைப்பின்படி அது தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளவேண்டும் என்கிறார்கள் வி
ஞ்ஞானிகள். வயதாவதற்கு உயிரியல் காரணங்கள் எதுவும் இல்லையாம். பின்னே நமக்கு ஏன் வயதாகிறது? இயற்கையின் வஞ்சனைகளில் இதுவும் ஒன்று. வயதாகி செத்துப் போ என்ற செய்தி நம் ஜீன்களிலேயே எழுதப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்து வருகிறார்கள். உயிரியல்விஞ்ஞானிகள். எந்திரன் ரஜினிகாந்த் போல எப்போதும் இளமையாக இருக்கும் சிலரிடம் ஜீன் ஆராய்சிகள் செய்து வருகிறார்கள். Aging ஜீன்களைத் தேடும் வேலை கடற்கரை மணலுக்கிடையே கடுகைத் தேடுவது போல என்கிறார்கள். (அதானே? சுலபமாக வைத்தால் மனிதன் அதைக் கண்டுபிடித்து ஹிரண்யகசிபு போல அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விடுவான்!) .

வயதாவதற்கு பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கை Free radical கொள்கை. இதன்படி நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமாக கருதப்படும் ஆக்ஸிஜனே நமக்கு எமனாக மாறி நம்மை தாத்தா பாட்டி ஆக்குகிறது.அமுதமே விஷம்! இரும்பு துருப்பிடிப்பது போல வெள்ளி கறுத்துப் போவது போல ஆக்சிஜனால் நம் செல்கள் மெல்ல மெல்ல சேதாரம் அடைகின்றன. அதாவது நம் செல்களிலும் துருப்பிடிக்கிறது.

எனவே சில 
விஞ்ஞானிகள் ஆழமாக மூச்சு விடுவது சிறந்தது அல்ல என்கிறார்கள். உள்ளே செல்லும் ஆக்சிஜன் நமக்கு நல்லது செய்து கொண்டே சைக்கிள் கேப்பில் free radical என்ற ஒன்றை உருவாக்கி விடுகிறது.இவை தங்களுடைய எலக்ட்ரான் தேவையை பூர்த்தி செய்ய பக்கத்தில் சிவனே என்று இருக்கும் செல்களை தொந்தரவு செய்கின்றன. படிப்படியாக எலக்ட்ரான்களை இழக்கும் செல்கள் தங்கள் கட்டமைப்பை இழந்து மறுபடியும் புணரமைக்கமுடியாதபடி சேதமடைந்து விடுகின்றன. சில நேரங்களில் செல்களே Free radicals ஆக மாறி மற்ற செல்களை சேர்த்துக் கொண்டு கண்டபடி வளர்ந்து புற்றுநோயாக உருவாகிறது.antioxidant களை உட்கொள்வதன் மூலம் வயதாவதை ஓரளவு தாமதம் செய்யலாம். வைட்டமின் ஏ, ஈ, மற்றும் சி இவைகளில் இது இருக்கிறது.டீ கூட ஆண்டி ஆக்சிடன்ட் என்கிறார்கள்.சரி.

பக்கத்து வீட்டு மாமாவுக்கும் மாமிக்கும் ஒரே வயதில் தான் கல்யாணம் நடந்தது. இப்போது மாமி இன்னும் மினுமினுப்பாக இருக்க மாமா வத்திப் போன கொத்தவரங்காய் போல ஆகி விட்டாரே என்று கேட்டால் அதற்கு பெண்களின் உடம்பில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.எனவே மாதவிலக்கு நிற்கும் வரை பெண்கள் வேகமாக வயதாவதில் இருந்து இயற்கையாகவே காக்க
ப்படுகிறார்கள். (சந்ததிகளை தன் உடம்பில் வைத்து உருவாக்கித் தருவதால் பெண்களுக்கு இயற்கையே கொடுத்த சலுகை! ஆண்களைப் பார்த்து அஸ்கு புஸ்கு, நீ சும்மா ஆரம்பிச்சு தானே வைத்தாய்? என்கிறது இயற்கை) ஆண்களோ கல்யாணம் ஆன மறுநாளில் இருந்தே அப்பா ஆவதற்கு தயார் ஆகிறார்களோ இல்லையோ 'அங்கிள்' ஆவதற்குத் தயார் ஆகி விடுகிறார்கள்.

இன்னொரு ஆச்சரியமான தகவல்: அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பவர்கள் நீண்ட நாள் வாழ்வார்களா
ம். மணிக்கொருதரம் பிரிஜ்ஜை திறந்து எதையாவது கொறித்துக் கொண்டே இருக்கும் போது உங்கள் இஞ்சின் அதிக வெப்பத்தை வெளியிடுகிறது. இந்த வெப்பமே உங்கள் செல்களை அரித்து விடுகிறது. ஆக்சிஜன் நன்றாக எரிந்து மேலும் அதிக free radicals ஐ தோற்றுவிக்கிறது.சில பேர் உயிர்வாழ்வதே சாப்பாட்டுக்கு தான். இப்படி பட்டினி கிடந்து நீண்ட நாள் வாழத்தான் வேண்டுமா? பஜ்ஜி போண்டா வடை மிக்சர் ஜிலேபி மைசூர்பா இதெல்லாம் சாப்பிடாமல் தொண்ணூறு வயது வரை இருந்தென்ன லாபம் என்பார்கள்.

தண்டவாளத்தில் அடுக்கிய காசுகளை ரயில் எவ்வாறு சிதைக்கிறதோ அப்படி காலம் நம்மை சிதைத்து விடுகிறது என்பார் சுஜாதா.
..
... 
கால ரயிலோட நாமெல்லாம் காசானோம்
வாலிபம் போய் ஆச்சே வயசு!


- தத்துவக் கவிதைகளிலும் அழகு தமிழ்!

XXX

தமிழில் கோவை தமிழ், திருநெல்வேலி தமிழ், மதுரைத் தமிழ், சென்னை செந்தமிழ் என்று இருப்பது போல சமயத்தமிழ் என்றும் இருக்கிறது போல.கீழே உள்ளவை மூன்று வெவ்வேறு சமயத்துக்கு உண்டான தமிழ்கள்:

"பாபியான துரியோதனன் திரௌபதியை ஸ்த்ரீஹரணம் செய்து சபைக்கு அழைத்துவரும்படி ஆணையிட்டான். சேவகன் சென்று அவள் தான் அகத்துக்கு விலக்காய் இருக்கிறேன் என்றியம்பியதையும் சட்டை செய்யாது அவளை பலவந்தமாய் சபைக்கு கொணர்ந்தான். சபையில்
திரௌபதி பெரியோர்களை பார்த்து நமஸ்கரித்து ஹே பண்டிதர்களே பீஷ்மரே த்ரோணரே உங்கள் கண்முன்பே உங்கள் புத்ரி போலிருக்கும் மாதொருத்திக்கு அபமானம் நேர்கையில் அதைக் கண்டும் வாளாயிருக்க வேணும் என்று உங்கள் சாஸ்திரங்கள் இயம்புகின்றவோ என்று வினவினாள். இப்போது பாபியான துச்சாதனன் அவள் வஸ்திரங்களைப் பற்றிக் களையலானான். மனுஷ்யர்களால் தனக்கினி உபகாரம் இல்லை என்றுணர்ந்த அப்புனித நாரி மேலே நோக்கி அச்சுதனை ஸ்துதி செய்யலுற்றாள் .ஹே கோபாலா, ஜகத் ரட்சகா, பக்த வத்சலா, ஹரே, அபலை எனக்கு நேர்ந்த இந்த அபமானத்தை நீயே அகற்றியருளல் வேண்டும் பிரபோ என்று பல விதங்களில் ஸ்துதித்து பின் கைகளிரண்டையும் சிரமேல் உயர்த்தி கோவிந்தா என்னு மூர்சையில் விழலானாள். அப்போது சபையிற் தோன்றிய ஸ்ரீயப் பதியான பகவான் தன் கருணையினால் திரௌபதிக்கு விதவிதமாக வஸ்திரங்கள் தொடர்ந்து வரும்படிக்குப் பணித்தார். வஸ்திரங்களை உரிய சக்தி அற்றுப் போய் துச்சாதனன் மூர்ச்சித்து விழுந்தான். சபையில் இருந்தோர்கள் மற்றும் பாண்டவர்கள் ஹே கிருஷ்ண ஹே மாதவ என்று பலவிதங்களிலும் பகவானை நமஸ்கரித்தனர்"

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப் பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.
எபேசியர் 2:8-9

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
பேதுரு 1:3

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை 
விளங்கப்பண்ணுகிறார் .
ரோமர் 5:8



‘அவளும், அவளுடைய சமுதாயத்தினரும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன். அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான். ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை’ வானங்களிலும்,பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும், இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீஙகள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா? ‘ 



இன்னும் அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர்; அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். “இன்னும் கொடுரமானதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது தான் நரக) நெருப்பு; அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான்; மேலும்: அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது” என்று (நபியே!) நீர் கூறுவீராக

XXXX 

கூறு நண்பனே,
இசை உனக்கு இனிக்காது என்கிறாய்
இலக்கியங்கள் என்றாலே
அலர்ஜி என்கிறாய்
புத்தகங்களைப் புரட்டும்
பழக்கமே இல்லை என்றாய்
கவிதைக்கும் உனக்கும்
காத தூரம் என்கிறாய்
குழந்தைகளுடன் விளையாட்டு
காலவிரயம் என்கிறாய்
-பிறகு
தினந்தினமும்
அவசர வாழ்வில்
அடிபட்டு துவண்ட மனதை
எப்படித்தான்
ஆசுவாசம் செய்வாய்?


* என் பிம்பம் எங்கோ
எதிரொளித்துக் கொண்டே இருக்கிறது
நான் அறியாமலேயே
தூரத்து காரின் கன்னாடியிலேயோ
சாலையில் தேங்கியிருக்கும் மழை நீரிலேயோ
சைக்கிள் காரன் கொண்டுசெல்லும்
சில்வர் பாத்திரத்திலோ
பாப்பாவின் உடையில் இருக்கும்
குட்டிக் குட்டி 
கண்ணாடிகளிலேயோ
தொலைவில் உள்ள கட்டிடத்தின்
தூங்கும் ஜன்னலிலோ
நான் அறியாமலேயே
என் பிம்பம் எங்கோ
எதிரொளித்துக் கொண்டே இருக்கிறது
எப்படியோ

XXXXX 


எப்படி கடவுளை சிரிக்க வைப்பது? அவரிடம் உங்கள் எதிர்கால திட்டங்களைக் கூறுங்கள் - உட்டி ஆலன்

உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி. காலம் பறக்கிறது. உங்களுக்கு ஒரு நல்ல செய்தி..நீங்கள் தான் அதன் பைலட் - மைக்கேல் ஆட்சலர்

விளையாட்டை விளையாடுபவர்களை விட அதன் பார்வையா
ர்களே அதைத் தெளிவாகப் பார்க்கிறார்கள் - சீனப் பழமொழி

எல்லாரும் ஒருவிதத்தில் நிலாவைப் போன்றவர்கள். தங்கள் இருண்ட பக்கத்தை யாருக்கும் காட்டாமல் வைத்திருக்கிறார்கள் - மார்க் ட்வைன்

வாழ்வை விட மரணமே பொதுவானது. ஏனென்றால் எல்லாரும் சாகிறார்கள். ஆனால் எல்லாரும் வாழ்வதில்லை - சார்ஸ்

எங்கே செல்கிறோம் என்ற இலக்கு இல்லாதவர்கள் பாதை தவறுவதே இல்லை - ஹெர்ப் கோஹென்

பூனைகளுடன் கழித்த நேரங்கள் ஒருபொழுதும் வீணாக்கப்படுவதில்லை - கோலேட்

புத்திசாலி ஒரு பிரச்சனையை தீர்க்கிறான். ஞானியோ அதை விட்டு விலகி இருக்கிறான் -ஐன்ஸ்டீன்

நாம் நம் பாவங்களால் தண்டிக்கப்படுகிறோம். பாவங்களுக்காக அல்ல - 
ஹபார்ட் ,எல்பர்ட்

XXXXXX

எல்பர்ட் ஆஸ்பத்திரி ஒன்றில் கண் விழித்தான்.

அங்கே வந்த டாக்டர் அவனைப் பார்த்து ' எல்பர்ட், குட் மார்னிங்.உனக்கு நான் ஒரு கெட்ட செய்தி மற்றும் ஒரு நல்ல செய்தி சொல்ல வேண்டும்.எதனை முதலில் சொல்லட்டும் ? என்று கேட்டார்.

கலவரமடைந்த எல்பர்ட் "கெட்ட செய்தியை முதலில் சொல்லுங்க டாக்டர்" என்றான்.

"உன் கால்கள் இரண்டையும் ஆபரேஷன் செய்து எடுத்து விட்டோம்"

"ஓ மை காட்! அப்படியானால் நல்ல செய்தி?"

"பக்கத்து படுக்கையில் இருப்பவர் உன் ஷூ-க்களை விலைக்கு வாங்க விரும்புகிறார்"


ஓஷோ சொல்கிறார் : சிரிப்பு என்பது தெய்வீகத்தின் பாடல்.

தமிழ்ப் பயணி

unread,
Sep 18, 2012, 8:25:27 AM9/18/12
to panb...@googlegroups.com
பக்கத்து வீட்டு மாமாவுக்கும் மாமிக்கும் ஒரே வயதில் தான் கல்யாணம் நடந்தது. இப்போது மாமி இன்னும் மினுமினுப்பாக இருக்க மாமா வத்திப் போன கொத்தவரங்காய் போல ஆகி விட்டாரே என்று கேட்டால் அதற்கு பெண்களின் உடம்பில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.எனவே மாதவிலக்கு நிற்கும் வரை பெண்கள் வேகமாக வயதாவதில் இருந்து இயற்கையாகவே காக்கப்படுகிறார்கள். (சந்ததிகளை தன் உடம்பில் வைத்து உருவாக்கித் தருவதால் பெண்களுக்கு இயற்கையே கொடுத்த சலுகை! ஆண்களைப் பார்த்து அஸ்கு புஸ்கு, நீ சும்மா ஆரம்பிச்சு தானே வைத்தாய்? என்கிறது இயற்கை) ஆண்களோ கல்யாணம் ஆன மறுநாளில் இருந்தே அப்பா ஆவதற்கு தயார் ஆகிறார்களோ இல்லையோ 'அங்கிள்' ஆவதற்குத் தயார் ஆகி விடுகிறார்கள்.

ஏனுங்க சந்ததி ​பெருக்கத்திற்க்கு ​தே​வையான கிளர்ச்சி​யை எதிர் தரப்பிற்க்கு தர​வேண்டி கூட மினுமினுப்பாக இருக்கலாம் அல்லவா?
 
இன்னொரு ஆச்சரியமான தகவல்: அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பவர்கள் நீண்ட நாள் வாழ்வார்களாம். மணிக்கொருதரம் பிரிஜ்ஜை திறந்து எதையாவது கொறித்துக் கொண்டே இருக்கும் போது உங்கள் இஞ்சின் அதிக வெப்பத்தை வெளியிடுகிறது. இந்த வெப்பமே உங்கள் செல்களை அரித்து விடுகிறது. ஆக்சிஜன் நன்றாக எரிந்து மேலும் அதிக free radicals ஐ தோற்றுவிக்கிறது.சில பேர் உயிர்வாழ்வதே சாப்பாட்டுக்கு தான். இப்படி பட்டினி கிடந்து நீண்ட நாள் வாழத்தான் வேண்டுமா? பஜ்ஜி போண்டா வடை மிக்சர் ஜிலேபி மைசூர்பா இதெல்லாம் சாப்பிடாமல் தொண்ணூறு வயது வரை இருந்தென்ன லாபம் என்பார்கள்.

அளவாக சாப்பிட்டால் வளமுடன் வாழலாம் என்று புரியுது.

2012/9/18 இனியவன் <mail2...@gmail.com>

கலைடாஸ்கோப்-72

லைடாஸ்கோப்-72 * உங்களை வரவேற்கிறது

X



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி



இனியவன்

unread,
Sep 18, 2012, 8:30:20 AM9/18/12
to panb...@googlegroups.com

பிரஜா வாணி-1 தாயைப் பிரசவிப்பவள்!

(தாய்மை அடையாத பெண்ணின் குரல்)


என் கருப்பையில் ஒரு
மகவு வந்து அமரும் என்று
என் மனப்பையில் ஒரு
கனவு வந்து அமர்ந்தது...

அது
இன்று நேற்றல்ல

சிறுமி என்ற
சிற்றுடை நீக்கி நான்
பெண்ணான நாளில்-
என் கருமுட்டைகள்
காலம் கனிந்து
எமக்கு உயிர் தா உயிர் தா என்று
உரக்கக் கதறி
உயிர் விட்டு வெடித்த ஒரு
பொன்னான நாளில்...

ஆனால் ஏனோ
என்
மார்பை உரச ஒரு
தாலி வந்து அமர்ந்த பின்னும்-என்
வயிறை உரச ஒரு
வாரிசு வந்து அமரவில்லை...
முத்தம் விளக்க ஒரு
மணாளன் இருந்த போதும்
என்
மூன்று நாள்
ரத்தம் விலக்க
ஒரு
ரத்தினம் வாய்க்கவில்லை....

யாராவது சொல்லுங்கள்,
உள்ளுக்குள் ஓர்
உயிரை சுமக்கும் சுகம் எவ்வாறு இருக்கும்?
ஆயிரம் தேவதைகளால்
ஆசிர்வதிக்கப் பட்டது போன்றா?
மலை மேல் மலர்ந்த மூலிகைப் பூக்கள்
ஒரு சேர நம்
தலை மேல் விழுந்தது போன்றா?
சொர்கத்தின் நதி ஒன்று
பக்கத்தில் பாய்வது போன்றா?
அமுதக் கலசம் ஒன்று நம்
அடிவயிற்றில் அமர்ந்திருப்பது போன்றா?

மலரைப் படைத்த
மகேசன் ஏனோ அதற்கு
மகரந்தம் மறுத்தான்...
கருவை சுமக்கும் வயிறை ஏனோ
கவலையை சுமக்க
சபித்தான்....

போட்ட விதை
பூமி துளைக்கவில்லை என்று-
உழவன் அழுதால்-அவன்
உள்ளம் தேற்ற
உறவுகள் உண்டு
தான் ஒரு மலடி என்று
மண் அழுதால் அதன்
கண் துடைக்க ஒரு
கரம் தான் எங்குண்டு??

மடி கனக்காததால்
இன்று என்
மனம் கனக்கிறது
இணைந்த மறு நாளே
இன்பச் செய்தி கேட்கும்
அவசர உறவுகளுக்கிடையே
என்
அடிமனம் அழுகிறது

ஜன்ய ராகம் இல்லை
என்ற ஒரே காரணத்தால்
இந்த
தேனுகா
பாடப்படாது நிராகரிக்கப்பட்டது...

என் குழந்தை படுத்து ஏற்படும்
மடி ஈரம்...
மார்பை முட்டிப்
பாலுண்ணும் போது
மெலிதாய்க் கேட்கும் மோகன ராகம்...
பிஞ்சுக் கரங்களின்
தொடுதலில் விளையும்
தாய்மையின் இன்பம்...
இவையெல்லாம் ஏழை எனக்கு
எட்டாத கனியா?
மாரைப் படைத்து
பாலை மறுத்த இறைவா
இது என்
மாயப் பிறவியின் வினையா?

அய்யா இறைவா
காற்று தூங்கவா என்
கருப்பையை வைத்தாய்
அதற்குள்
உயிர் நுழையாமல் எந்த
ஊசி கொண்டு தைத்தாய்??


பேறு வலி என்னைப்
புறக்கணித்து விட்டதால்
வேறு வலிகள் என்னை
வாடகைக்கு எடுத்தன...

பேறு வலியாவது -பிள்ளை ஒன்று
பிறக்கும் மட்டும்
எந்தன் இதயத்தின் வலிகளோ
இனி நான் இறக்கும் மட்டும்!


என் குழந்தைக்காய் நான்
எழுதிய
தாலாட்டு வரிகள்எனக்கு
ஒப்பாரியாய் மாறி என்
உயிரைக் குடித்தன...

என்
உறவுகளே!
உடன் பிறவா சகோதரியரே!
பத்து மாதம் மூச்சடக்கி
பனிக்குடத்தில் முத்தொன்று எடுத்த
தாய்க்குலங்களே ! இறுதியாக ஒன்று மட்டும்!
திங்கள் நிகர்த்த சிசுவொன்று


என்னைத் தீண்டாததால் நான்
தீண்டத்தகாதவள் அல்ல..
பாவை மகவொன்று என்னைப்
புறக்கணித்ததால் நான் ஒரு
பாவி மகள் அல்ல..

தொப்புள் -
கொடி ஏந்தாத மகவை என்
மடியாவது ஏந்தட்டும் தாருங்கள்!
மார்பில் சீரம் சுரக்கா விடினும்
நெஞ்சில்
ஈரம் சுரக்கும் என்று இனி மேல் அறியுங்கள்..

கரு அமரும்
அறை காலி என்பதால்
என்னை அரைப்பெண் என்று
நாவில் அரைப்பதை விடுங்கள்!

உங்கள் மகவு
கண்ணனாக இருக்கலாம்-ஆனால்
நான் ஒன்றும்
பூதனி அல்லதயங்காமல் கொடுங்கள்!


ஆம்
பெற்றவளுக்கு ஒரு பிள்ளை..
பெறாதவளுக்கு பல பிள்ளை..

உங்கள் மகவை இனிமேல்
உரிமையாய்த் தாருங்கள்!

ஏனென்றால்
என் வயிறு ஒரு குழந்தையை
பிரசவிக்காவிடிலும்-
நான் கொஞ்சும்
ஒவ்வொரு குழந்தைக்கும்
என் இதயம்
ஒரு தாயைப் பிரசவிக்கிறது....


சமுத்ரா


Arumbanavan A

unread,
Sep 18, 2012, 8:34:07 AM9/18/12
to panb...@googlegroups.com
அப்புடி ஆகலைன்னா விலகுகிறேன் நு எழுதி குடுத்துட்டு போயிர்ரீன்களா..

யூ வில் ஷ்யூர்லி என்ஜாய் திஸ். ஐ ப்ராமிஸ்.

2012/9/18 இனியவன் <mail2...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

இனியவன்

unread,
Sep 18, 2012, 10:45:28 PM9/18/12
to panb...@googlegroups.com
உன் பேரை தப்பா செலக்ட் பண்ணிட்ட.
குறும்பானவன்-ன்னு வச்சிருக்கணும் நீ.
:-)))

2012/9/18 Arumbanavan A <arumb...@gmail.com>

அப்புடி ஆகலைன்னா விலகுகிறேன் நு எழுதி குடுத்துட்டு போயிர்ரீன்களா..
-- 

துரை.ந.உ

unread,
Sep 19, 2012, 12:47:27 AM9/19/12
to panb...@googlegroups.com
mmm  நடத்துங்க நடத்துங்க 

2012/9/19 இனியவன் <mail2...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

Arumbanavan A

unread,
Sep 19, 2012, 3:39:19 AM9/19/12
to panb...@googlegroups.com
நான் அந்த பேருக்கு copyright  வாங்கி இருக்கேன் 10 ,௦௦௦ ருபாய் குடுத்து
அந்த பணத்த இப்ப அனுப்புங்க உடனே மாத்திடுவோம்.

2012/9/19 இனியவன் <mail2...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Ramesh Murugan

unread,
Sep 20, 2012, 8:16:31 AM9/20/12
to panb...@googlegroups.com
இனியவன்,
சமுத்திராவோட பதிவை தேதிவாரியாக காப்பி & பேஸ்ட் பண்ணுவிங்கன்னு
நினைச்சேன்... அதிலும் 18+??? :)

நடத்துங்க நடத்துங்க... பின்தொடர்றோம்..


--
என்றும் அன்புடன்,

ரமேஷ்

---

Sent via Epic Browser

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
Sep 20, 2012, 9:22:08 AM9/20/12
to panb...@googlegroups.com

வெல்கம்...:-)

இனியவன்

unread,
Sep 20, 2012, 10:35:09 PM9/20/12
to panb...@googlegroups.com
:-)))

வெல்கம் பேக். லீவு முடிஞ்சி வேலைக்கு திரும்பியாச்சா?

2012/9/20 Ramesh Murugan <rames...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'

கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்


இணைய இதழ்  : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.


இனியவன்

unread,
Sep 20, 2012, 10:35:51 PM9/20/12
to panb...@googlegroups.com
லைடாஸ்கோப் என்ற தொடருக்கு உங்களை வரவேற்கிறேன்...

ஒரு சின்ன முன்னுரை
====================

'கலைடாஸ்கோப்' பலதரப்பட்ட விஷயங்களின் கலவையாக இருக்கும் ...நம் எழுத்தின் மூலம்பலதரப்பட்ட, வெவ்வேறு ரசனை கொண்ட வாசகர்களைக் கவர வேண்டும் என்பதில்எல்லாருக்கும் விருப்பம் தான்..ஏனென்றால் ஜோக்குகளை மட்டும் படித்து ரசிக்கும் கூட்டம்இங்கே இருக்கிறது. சிலர் கவிதைகளை மட்டும் தேடிப் பிடித்து படிக்கிறார்கள்.சிலர் அரசியல்இல்லை என்றால் பதிவுகளைப் படிப்பதே இல்லை..அறிவியலைப் பற்றி எழுதினால் 'நன்றாகஇருக்கிறது' என்று சொல்லும் நிறைய பேர் அதே பதிவர் ஒரு கவிதை எழுதினால் எதோ அவர்செய்யக் கூடாத ஒன்றை செய்து விட்டது போல நினைக்கிறார்கள்..ஆம் அறிவியலும்கவிதையும் ஒரு விதத்தில் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமான விஷயங்கள் தான்..ஜே.ஜே.தாம்சன் எலக்ட்ரானை கண்டுபிடித்து விட்டு லேபை விட்டு வெளியில் ஓடி வந்து "பொன்சுமக்காமல் மின் சுமந்த ஒரு மங்கையைக் கண்டேன்..அவள் அணுவினும் சிறியவள்அணுவைசதா சுற்றிக்கொண்டு திரிபவள்' என்றெல்லாம் கவிதை பாடினால் அது ஏற்புடையதாகஇருக்காதுதான்.. என்னதான் சொன்னாலும் LIFE IS எ MIX OF CONTRADICTING THINGSஇல்லையா?இனி முதல் பகுதி....


கொஞ்சம் இலக்கியம்
===================

நகைச்சுவை என்பது தமிழர்களின் வாழ்வுடன் ஒன்றிக் கலந்த ஒரு விஷயம். இது நாமெல்லாம்பெருமைப்படவேண்டிய விஷயமும் கூட..பெங்களூருவில் அலுவலகத்தில் உடன் பணிபுரியும்கன்னடத்துக்காரர் ஒருவர் "உங்கள் நகைச்சுவை உணர்வை நினைத்தால் பொறாமையாகஇருக்கிறது" என்றார்..இப்படிப்பட்ட அருமையான ஓர் உணர்வை இன்றைய திரைப்படங்களில்ரொம்பவும் கொச்சைப்படுத்துகிறோமோ என்று தோன்றுகிறது. 'பன்னி வாயா' 'நாற வாயா' என்றுவிளிப்பதும்,இரட்டை அர்த்தங்களில் பேசுவதும் தான் நகைச்சுவை என்று நினைக்கும் சிலர்'காளமேகப்' புலவரின் பாடல்களை ஒரு தமிழ் அகராதியின் துணையுடன் படிப்பது நல்லது.

விநாயகர் சதுர்த்தி முடிந்து வீதியில் வகை வகையாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் வரும்போது நாம் என்ன செய்வோம்? வெளியில் நின்று வேடிக்கை பார்ப்போம்.பக்கத்தில் வந்ததும்போய் காணிக்கை போட்டு விபூசி பூசிக் கொள்வோம்...ஆனால் காளமேகப் புலவர் விநாயகர்வீதியில் ஊர்வலம் வருவதைப் பார்த்து விட்டு எப்படி ஜோக் அடிக்கிறார் பாருங்கள்..இதுவெறுமனே ஜோக் அல்ல..இதை 'நிந்தாஸ்துதி' என்பார்கள்...அதாவது இகழ்வது போல புகழ்வது..

மூப்பான் மழுவும் முராரிதிருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோமாப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை ஐயோ
எலி இழுத்துப் போகின்றது ,ஏன்

ஓகே..புரியாதவர்கள் இந்த விளக்கத்தைப் படிக்கவும். புரிந்தவர்கள் அடுத்த பகுதிக்குப்போகலாம்..

"பரமசிவன் கையில் ஏந்தும் மழுவும், திருமால் கையில் இருக்கும் சுதர்சனமும், யமன் கையில்ஏந்தும் கதையும் எங்காவது காணாமல் போய் விட்டதா என்ன? இவ்வளவு பேர் இருந்தும்மிகுந்த வலிமை கொண்ட இந்த மதயானையை ஒரு பெருச்சாளி இழுத்துக்கொண்டு போகிறதுபாருங்கள்..."- இதைப் படித்ததும் நாம் இன்று சொல்லிக் கொண்டிருக்கும் 'கடி' ஜோக்குகளையும்நினைத்துக் கொள்ளுங்கள்..

கொஞ்சம் இசை
==============

நீங்கள் கர்நாடகாவில் இருந்தால் நிச்சயம் 'பாவ கீதே' (bhaava geethe ) என்ற ஒன்றைக்கேட்டிருப்பீர்கள். அப்படியென்றால் 'இசையமைக்கப்பட்ட கவிதை..'தமிழ்நாட்டில்இப்படியெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒன்று, மிகக் கடினமான கர்நாடக இசைதமிழில் இருக்கிறது;அடுத்து இன்னொரு extreme ஆன சினிமா குத்துப் பாட்டுக்கு கீழிறங்கி வந்துவிடுகிறோம் நாம். இவை இரண்டுக்கும் நடுவில் சாதாரண வாழ்க்கையின் அன்பு, கோபம்,காதல், பிரிவு, நட்பு,பாசம் போன்ற உணர்சிகளைப் பிரதிபலிக்கும் மெல்லிசைப் பாடல்கள்இவை..இந்த 'பாவ கீதே' என்பது கர்நாடகத்திற்கு மட்டும் உரிய ஒரு பெருமை. புகழ் பெற்றகன்னடக் கவிஞ
ர் 'குவெம்பு' நிறைய பாவ கீதைகள் இயற்றியிருக்கிறார். 
உணர்ச்சிப் பூர்வமான கவிதைகள் இவை..உதாரணமாக சில

"தனுவு நின்னது
"ராயரு பந்தரு மாவன மனேகே
"ஒந்து முன்ஜாவினலி"

சின்னக் கண்ணன் வெண்ணை திருடி விட்டு தன் அம்மாவிடம் "அம்மா கடவுள்(?) சத்தியமாகநான் வெண்ணை திருடவில்லை " என்று பொய் சத்தியம் செய்து மன்றாடும் "அம்மா நானுதேவராணே " என்ற பாடல் மிக அருமை..எல்லாரும் வேண்டுமென்றே அவன் வாயில்வெண்ணையைத் திணித்து விட்டார்களாம். மேலும், அவ்வளவு உயரத்தில் இருக்கும்வெண்ணையை தன் பிஞ்சுக் கைகளால் எப்படி எடுப்பேன் என்று கேட்கிறான்கண்ணன்..இறுதியில் "கண்ணா, நீ பொய் சொல்வது கூட அழகு தான்" என்று அவனைஅணைத்துக் கொள்கிறாள் யசோதா.

கொஞ்சம் கோபம்
===============

'ரியாலிடி ஷோ' 
களின் ---தனத்திற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது. புகழ்பெற்ற(?) சேனல் ஒன்று நடத்தி வரும் ஒரு ரியாலிடி ஷோவில் நகரத்து இளைஞர்கள் காட்டுக்கு சென்று ஆதிவாசிகள் போல வாழ வேண்டுமாம்..இந்த சானல் இருப்பது முந்தைய பகுதியில் நம்மால் புகழப்பட்ட 'கர்நாடகா'வில் தான். அந்த ஷோவில் வரும் ஒரு காட்சி (போட்டி) சொல்வதற்கே அருவருப்பாக இருக்கிறது. .(வெஜிடேரியன்கள் அடுத்த பகுதிக்கு தாவவும்..)கொல்லப்பட்ட பன்றியின் உடல்கள் ஒரு நீண்ட குச்சியில் மாட்டி தலைகீழாக தொங்கவிடப்பட்டிருக்கும். அதை கை பின்னால் கட்டப்பட்ட வீரர்கள் (?) பற்களால் கடித்து வாயை மட்டும் உபயோகித்து குறிப்பிட்ட நேரத்திற்குள் இறைச்சியை ஒரு தட்டில் சேகரிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் யார் அதிக இறைச்சியை சேகரிக்கிரார்களோ அவன் தான் 'ஹீரோ' ..

நீங்கள் விளையாடுவதற்கு வேறு எதுவும் கிடைக்கவில்லையா? அப்பாவி பன்றிகளைத் தவிர? ஏன் இதற்கு எதிராக யாருமே அங்கே குரல் எழுப்பவில்லை? இது தான் வீரமா? நம்
இளைஞர்கள் எப்படியெல்லாம் 'ரியாலிடி ஷோ' க்களின் மூலம் முட்டாளாக்கப்பட்டு வருகிறார்கள் என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. கொடுமை என்னவென்றால்இளைஞர்கள் பன்றி 'சாதனை' நிகழ்த்தும் போது பின்னால் இருந்து யுவதிகள் சிலர் 'கம் ஆன்' 'கம் ஆன்' என்று கத்துவதும் ,குறைந்த அளவு பன்றியைக் கடித்த 'loser ' என்னவோவாழ்க்கையையே இழந்தது போல 'போஸ்' கொடுப்பதும் தான். திருந்துங்கப்பா!

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு.
===============================

தேர்தல் ஆணையம் ஓட்டுப் போட்டவர்களுக்கு ரசீது கொடுக்கலாம் என்று யோசித்துவருகிறதாம்..(ஹையா ஜாலி!) நம் நாட்டுக்கு இது இப்போது ரொம்ப முக்கியம் தான்..இதைநிறைவேற்றுவதன் மூலம் நம் நாட்டை வல்லரசாக மாற்ற அரசியல்வாதிகள் பாடுபடுவதால்அவர்களை வாயார வாழ்த்துவோம்..

கொஞ்சம் இரங்கல்
===================
 

காமெடி நடிகை 'ஷோபனா' தற்கொலை செய்து கொண்டு விட்டாராம்.. சன் டிவி.யில் வரும்'மீண்டும் மீண்டும் சிரிப்பு' 'சூப்பர் டென்' போன்ற நகைச்சுவை நிகழ்சிகளில் இவரைப்பார்த்திருக்கலாம்..அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்..

ஒரு ஜோக்
===========
முல்லா நசுருதீன் நன்றாகக் குடித்திருந்தார். கண்ட்ரோலை முழுவதும் இழந்து விட்டிருந்தார்.வீட்டுக்கு போவதாக நினைத்துக் கொண்டு ஒரு மிருகக் காட்சி சாலைக்கு சென்று விட்டார்.ஒரு காண்டா மிருகத்தின் முன்னே போய் நின்றார்..மெல்ல தலையை உயர்த்தி அதைப் பார்த்து" கோபப்படாதே, கத்தாதே, நான் எல்லாத்தையும் சொல்லிர்றேன்" என்று அசடு வழிந்தார்...


ஒரு ஓஷோ 'Quote '
===================
விழிப்புணர்வு உங்களிடம் இல்லையென்றால் நீங்கள் அறுபது வருடம் வாழ்கிறீர்களா, எழுபது
வருடம் வாழ்கிறீர்களா, நூறு வயது வாழ்கிறீர்களா என்பது பொருட்டே இல்லை. ஆனால்விழிப்புணர்வுடன் நீங்கள் இருந்தால் ஒரே ஒரு கணம் மட்டுமே போதுமானது.

~சமுத்ரா

இனியவன்

unread,
Oct 3, 2012, 3:33:49 AM10/3/12
to panb...@googlegroups.com

கலைடாஸ்கோப்-73

லைடாஸ்கோப்-73  உங்களை வரவேற்கிறது

*


பெங்களூருவில் வெயில் வாட்டுகிறது. Typical Summer போல!மழை மேகங்கள் கருணை காட்ட மறந்து விட்டன போலும்.பாவிகள் அதிகமாகி விட்டால் எப்படி மழைபொழியும்? என்கிறார் ஒருவர்.பூமியின் அழிவுகாலம் நெருங்கி விட்டது என்கிறார் இன்னொருவர்.மழைமேகங்கள் பூமியில் உள்ள பாவிகளை கணக்குப் பார்த்துக்கொண்டு இருக்குமா என்று தெரியவில்லை. எப்படியோ நாம் இயற்கையை பலவிதங்களிலும் துன்புறுத்துவதால் அதன் சமநிலை பாதிக்கப்பட்டு இப்படியெல்லாம் நடக்கிறது போலும். அடுத்த மாதம் வானத்தைப் பொத்துக் கொண்டு பொழிந்து ஊரெல்லாம் முழுகுமோ என்னவோ?


-முதலிலேயே தண்ணீர் கொடுக்க மூக்கால் அழும் கர்நாடகா இப்போது எங்களுக்கே தண்ணீர் இல்லை; எனவே காவேரி நீரை மறந்து விடவும் என்று கூறி விட்டது. இதை ஆபீசில் சொன்னால் கன்னடக்காரர்கள் சிலர் வேண்டுமென்றால் நாங்கள் 'கழுவிய' நீரை உங்களுக்கு விடுகிறோம்; தாராளமாக பிடித்துக் கொள்ளுங்கள் என்று வம்பு பேசுகிறார்கள் :-(
 
Rain oh Rain
When will thy come to wash my pain? 
Rain oh Rain
I have been in tears all day
Rain oh Rain
Please do not go far away
Rain oh Rain
Release thy fresh water upon me
Rain oh Rain
Melt the ice and make me chill
Rain oh Rain
Wet the earth and make it plant bloom
Rain oh Rain
Let thy freshness embrace the earth
Rain oh Rain
Make me happy and filled with joy
Rain oh Rain
For thy presence i wait. 


மழையே மழையே மழையே-நீ 
வந்தால் மறைந்திடும் வலியே!
நாளெலாம் எனக்குத் துயரே-எனை
நாடாமல் போவதோ உயரே!

புதியநீரைப் பெருக்குவாய்-நீ
பனியை எல்லாம் உருக்குவாய்
பூமியை நீதான் அரவணைப்பாய்-புல்
பூண்டை எல்லாம் உயிர்ப்பிப்பாய்

நீ வந்தால் நானும் மகிழ்ந்திடுவேன்-நீ
வரும் வரை நானும் காத்திருப்பேன்

Rain rain go away-க்கு இது better தானே?




கன்னடத்தில் 'முங்காரு மளே ' என்றொரு திரைப்படம் வந்தது.முழுவதும் 
மழைச்சாரலில் குடகில் எடுக்கப்பட்ட திரைப்படம் அது. மழை தான் சூழ்நிலையை எத்தனை  'ரொமாண்டிக்' ஆக மாற்றி விடுகிறது?முங்காரு மளே வில் ஒரு ரொமாண்டிக் ஆன பாடல்.



ಮುಂಗಾರು ಮಳೆಯೇ ಏನು ನಿನ್ನ ಹನಿಗಳ ಲೀಲೆ 
முங்காரு மளெயே  -ஏனு நின்ன ஹனிகள  லீலே
-என் பருவ மழையே! என்ன உந்தன் துளிகளின் லீலை

ನಿನ್ನ ಮುಗಿಲ ಸಾಲೆ- ಧರೆಯ ಕೊರಳ ಪ್ರೇಮದ ಮಾಲೆ
நின்ன முகில சாலே -தரெய கொரள  பிரேமத மாலே 
-உந்தன் முகிலின் சாலை- புவியின் தோளில் காதலின் மாலை 

ಸುರಿವ ಒಲುಮೆಯಾ ಜಡಿ ಮಳೆಗೆ ಪ್ರೀತಿ ಮೂಡಿದೆ
சுரிவ ஒளுமெயா ஜடிமளேகே ப்ரீதி மூடிதே 
-பெருகும் உணர்வின் பெருமழை தன்னில் காதல் மலர்ந்ததோ 

ಯಾವ ಚಿಪ್ಪಿನಲ್ಲಿ ಯಾವ ಹನಿಯು ಮುತ್ತಾಗುವುದೋ
ಒಲವು ಎಲ್ಲಿ ಕುದಿಯೋದಿಯುವುದೋ ತಿಳಿಯಲಾಗಿದೆ
யாவ சிப்பினல்லி யாவ ஹனியு முத்தாகுவுதோ
ஒலவு எல்லி குடியொடியுவுதோ திளியலாகிதே
-எந்த சிப்பியுள்ளே எந்த துளியும் முத்தாகிடுமோ
காதல் எங்கு துளிர்விடுகிறதோ தெரிவதில்லையே

ಭುವಿ ಕೆನ್ನೆ ತುಂಬಾ ಮುಗಿಲು ಸುರಿದ ಮುದ್ದಿನ ಗುರುತು 
ನನ್ನ ಎದೆಯ ತುಂಬಾ ಅವಳು ಬಂದ ಹೆಜ್ಜೆಯ ಕುರುತು
ಹೆಜ್ಜೆ ಗೆಜ್ಜೆಯಾ ಸವಿಸದ್ದು -ಪ್ರೇಮ ನಾದವೋ
புவி கென்னே தும்பா முகிலு சுரித முத்தின குருது 
நன்ன எதய தும்பா அவளு பந்த ஹெஜ்ஜெய குருது
ஹெஜ்ஜே கெஜ்ஜெயா சவிசத்து பிரேம நாதவோ 

-புவியின் கன்னமெங்கும் மேகம் சிந்தும் துளிகளின் முத்தம்
எந்தன் இதயமெங்கும் அவள் தந்த நினைவுகள் சுற்றும்
பாத கொலுசு காதலின் சத்தம் இனிய கீதமோ
ಎದೆ ಮುಗಿಲಿನಲ್ಲಿ ರಂಗು ಚೆಲ್ಲಿ ನಿಂತಳು ಅವಳು
ಬರೆದು ಹೆಸರ ಕಾಮನಬಿಲ್ಲು -ಏನು ಮೋಡಿಯೋ !

எதே முகிலினல்லி ரங்கு செல்லி நிந்தளு அவளு  
பரெது ஹெசர காமனபில்லு ஏனு மோடியோ

-இதய மேகமெங்கும் இறைத்து நின்ற இனியவள் வண்ணம்
எழுதுகின்ற வானவில் போலும் என்ன மாயமோ?! 

-சரி , மழை வந்துவிட்டால் சனியன் மழை நேரம்கெட்ட நேரத்தில் வந்து விட்டது என்று அலுத்துக் கொள்கிறோம்.பிறகு அது எப்படி வரும்? வீட்டுக்கு வந்த விருந்தினர் ஒருவரைப் பார்த்து ஏன் தான் வந்தாரோ என்று அலுத்துக்
கொண்டால் அவர் மீண்டும் வருவாரா? - அடுத்த தடவையாவது மழையைத் திட்டாமல் இருப்போம்! -கறுப்புக் கொடி காட்டி யாரும் குடைபிடிக்க வேண்டாம்!

மழைத் துளியல்ல, சோர்வின் வடுக்களைச்
அழுத்தித் துடைக்க
மேகப் பருத்தி நெய்து
இறக்கும்
மழைத் துணி -என்கிறார் ஒரு கவிஞர்.(இங்கே)

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

-என்று வள்ளுவர் சொன்னபடி எங்கே பஞ்சம் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. மழை பொய்த்துவிட்டது என்ற சாக்கு நம் அரசியல்வாதிகளுக்கு கிடைத்து விடும். அரிசி விலை வேறு வானத்துக்கு ஏறிக் கொண்டிருக்கிறது

வாரி மணலை அள்ளிடுவோம்
வனப்புடை மரங்களை வெட்டிடுவோம்
கார்பனை வானில் நிறைத்திடுவோம்
கடலினில் அழுக்குகள் சேர்த்திடுவோம்
மாரியை பின்னர் வைதிடுவோம்
மழையின் கடவுளை சபித்திடுவோம்
சீரிய வேள்விகள் செய்திடுவோம்
சிந்திப்பதையும் மறந்து விட்டோம்!


வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய்
கண்மழை விழும்போது எதில் என்னைக் காப்பாய்?

-செய்வதையை எல்லாம் செய்து விட்டு பின்னர் யாகம் செய்தால் மழை வருமா? இல்லை அமிர்தவர்ஷிணி பாடினால்தான் மழை வருமா?




வழக்கமாக மன்னர்களைப் புகழும் போது மாரிபோல் வாரி வழங்குவான் என்பார்கள்.. அனால் இங்கே ஒருவர் தம் மன்னனைப் போல (சோழன்) மழை கருணையுடன் வாரி வழங்குகிறது என்கிறார்.(சிலப்பதிகாரம்)

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேனின்று தான் சுரத்தலான்!

இந்த உல்டா உவமையை ஆண்டாளும் பிரயோகிக்கிறாள்:

பொதுவாக வில்லில் இருந்து அம்புகள் மழைபோல கிளம்பின என்பார்கள். அம்பு மழை! ஆண்டாள் கண்ணன் கையில் இருக்கும் சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து வெளிப்படும் அம்புகள் போல பொழி என்று சொல்கிறாள் மழையை!

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் !

மாணிக்கவாசகர் கூட:
முன்னி, அவள் நமக்கு முன்சுரக்கும் இன் அருளே
என்னப் பொழியாய், மழை ஏல் ஓர் எம்பாவாய்!- என்கிறார்.




காதலில் இரண்டு இதயங்கள் கலப்பதற்கு மழையும் மண்ணும் கலப்பதை புலவர்கள் உதாரணம் சொல்வார்கள்:

ஈர் மண் செய்கை நீர் படு பசுங்கலம்
பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம்
பொருள்மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே!

-ஈர மண்ணில் அப்போது தான் செய்துவைத்த மண்பாண்டத்தின் மீது மழைபெய்தால் அவை எப்படிக் கரைந்து ஒன்றுடன் ஒன்று கலக்குமோ அப்படி என் நெஞ்சம் காதலியுடன் கலந்தது என்கிறார் ஒருவர்.

அப்போதெல்லாம் பொருள் சம்பாதிக்க வெளியே செல்லும் தலைவன் ,மழைக் காலம் தொடங்கியதும் தவறாமல் வந்து விடுவேன் என்று தலைவியிடம் சொல்வான். மழையும் தவறாமல் அந்தந்த பருவத்தில் பெய்யும். ...இப்போதெல்லாம் எப்போது மழை பெய்யும் என்று கணிப்பது பெரும்பாடாக உள்ளது. குளிர்காலத்தில் மழை வருகிறது ..பருவமழை பொய்த்து விடுகிறது...அப்படி ஒரு தலைவன் சொல்லி சென்று விடுகிறான். மழையும் வந்து விட்டது. தலைவி வருந்துகிறாள்; தோழி "அடியே , இது சும்மானாச்சும் டம்மி மழை.பருவமழை அல்ல..முட்டாள்மேகங்கள் தவறாக கடல்நீரை குடித்து விட்டு வேளைகெட்ட வேளையில் பெய்கின்றன.எனவே மழைக்காலம் இன்னும் வரவில்லை. நீ வருந்தாதே என்று தேற்றுகிறாள்.

மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மா மழை 
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல.... 

-மறந்தாவது மழை பொழியாதா என்று ஏங்க  வேண்டியிருக்கிறது இப்போது!முட்டாள் மேகங்கள் இப்போது மிகவும் புத்திசாலி ஆகி விட்டன என்று தோன்றுகிறது.



நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பார் ஔவையார். நல்லவர் யாராவது வாய்க்கு வந்த படி உளறினால் மழை பொழியும் என்று தப்பர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது. நல்லவர் ஒருவர் 'இருந்தாலே' போதும். அப்படியென்றால் நாமெல்லாம் நல்லவர்கள் இல்லையா? கணவனைத் தவிர வேறு தெய்வத்தைத் தொழாத பெண்கள் இருந்தால் தான் மழை பெய்யெனப் பெய்யுமா?'பேக்கு மாதிரி டி.வி யைப் பாத்துக்கிட்டு உட்காந்திருக்காதீங்க .துணியெல்லாம் மடிச்சு வைங்க..நான் கோயிலுக்குப் போயிட்டு வரேன் என்று கணவனைப் பணிக்கும் நாரீமணிகள் சொன்னால் மழைவராதா?



இனி மழையை அழைக்க சில கவிதைகள்:

கவிதை நோட்டு,
பேனா, ஜன்னலோர நாற்காலி
ஒருகோப்பைத் தேநீர் எல்லாம் ரெடி
இனி
மழை பெய்வதுதான் பாக்கி!


மழையே
இன்னும் கொஞ்சம் நின்று பெய்
குடைக்குள் என் காதலி!

இந்த மழை ரொம்ப மோசம்
இறங்கி நடக்கும் போது பலமாகவும்
ஒதுங்கி நிற்கும் போது
சன்னமாகவும் பெய்கிறது!



நீ
எனக்கு மட்டுமே
பெய்யும் மழை! 



மழையும் காதலியும் ஒன்று
போன பின்னும் வாசம் மிச்சம் இருக்கிறது!
மழையும் காதலியும் ஒன்று
என் வீட்டு மலர்களை மலரச் செய்வதில்
மழையும் காதலியும் 
ஒன்று-என்
மனநிலையை ரம்மியமாக்குவதில்..

மழையும் காதலியும் ஒன்று
எதிர்பார்க்கையில் வருவதே இல்லை


ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து மழைபெய்யக் காத்திருப்போம்!
 
ஓஷோ ஜோக் இல்லாமல் எப்படி முடிப்பது?ஒரு
 ஓஷோ ஜோக்.

இந்தியன் ஒருவன் முன் கடவுள் தோன்றி ஒருநாள் 'உனக்கு என்ன வேண்டும் மகனே?' என்றார்.
 

அவன் 'எனக்கு நிறைய பால் வேண்டும்; அதை வைத்து நான் வியாபாரம் செய்து முன்னேற வேண்டும்' என்றான்.
 

'அப்படியே ஆகுக'
 

சிலநாட்கள் கழித்து மீண்டும் கடவுள் அவன் முன் தோன்றி 'நான் கொடுத்த பாலெல்லாம் எப்படி இருக்கிறது?'
 

"சூப்பர் கடவுளே , கொஞ்சம் 
டேஸ்ட் செய்து பாருங்கள்."

பாலைக் குடித்த கடவுள் 'நன்று மகனே, வேறெதுவும் வேண்டுமா' ?என்றார் 



'எட்டு ரூபாய் ஐம்பது காசு'..'நீங்கள் குடித்த பாலுக்கு'...
 



ஓஷோ: கடவுளே வந்தாலும் மனிதன் அவருடன் பிசினஸ் செய்வான். 

Ramesh Murugan

unread,
Oct 3, 2012, 9:06:12 AM10/3/12
to panb...@googlegroups.com
இது நல்லா இருக்குது.

முங்காரு மழேங்கிறது பேசி பேசியே ஒரு முயலை சாகடிக்கிற படம்தானே??? :)

2012/10/3 இனியவன் <mail2...@gmail.com>

//அப்போதெல்லாம் பொருள் சம்பாதிக்க வெளியே செல்லும் தலைவன் ,மழைக் காலம் தொடங்கியதும் தவறாமல் வந்து விடுவேன் என்று தலைவியிடம் சொல்வான். மழையும் தவறாமல் அந்தந்த பருவத்தில் பெய்யும். ...இப்போதெல்லாம் எப்போது மழை பெய்யும் என்று கணிப்பது பெரும்பாடாக உள்ளது. குளிர்காலத்தில் மழை வருகிறது ..பருவமழை பொய்த்து விடுகிறது...அப்படி ஒரு தலைவன் சொல்லி சென்று விடுகிறான். மழையும் வந்து விட்டது. தலைவி வருந்துகிறாள்; தோழி "அடியே , இது சும்மானாச்சும் டம்மி மழை.பருவமழை அல்ல..முட்டாள்மேகங்கள் தவறாக கடல்நீரை குடித்து விட்டு வேளைகெட்ட வேளையில் பெய்கின்றன.எனவே மழைக்காலம் இன்னும் வரவில்லை. நீ வருந்தாதே என்று தேற்றுகிறாள்.


மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மா மழை 
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல.... 

-மறந்தாவது மழை பொழியாதா என்று ஏங்க  வேண்டியிருக்கிறது இப்போது!முட்டாள் மேகங்கள் இப்போது மிகவும் புத்திசாலி ஆகி விட்டன என்று தோன்றுகிறது.//

இனியவன்

unread,
Oct 23, 2012, 9:19:18 AM10/23/12
to panb...@googlegroups.com
தேநீர்ப்பேச்சு- (மார்கழி ஸ்பெஷல்)
ருக்மிணி மாமி : வாங்க மாமி, என்ன சௌக்யமா? என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்.

பட்டு மாமி: நீங்க தான் சிக்கவே மாட்டீங்கறீங்க..நேத்து சாயந்திரம் கூட வந்திருந்தேன்.. நீங்க எங்கேயோ போயிருக்கறதா உங்க பேரன் சொன்னான்.நாளைக்கு விசாகா ஹரி காலட்சேபம் இருக்கு. அதுக்கு வரேளான்னு கேட்கத்தான் வந்திருந்தேன்.

ருக்மிணி மாமிஅப்படியா? சரி போலாம்.நேத்து அமெரிக்காவுல இருந்து இவரோட அக்கா வந்திருந்தா இல்ல.காமாட்சி ஹால்ல கேசவப்ரேமி சுவாமிகளோட திருப்பாவை சொற்பொழிவு இருந்துது. அதான் கூட்டிப் போயிருந்தேன்.

.மாமி: அவர் நல்லாப் பேசுவாராச்சே..அவர் இஞ்சினியரா இருந்து சன்யாசம் வாங்கிண்டவர் தானே?...சொற்பொழிவு எப்படி இருந்தது?

ரு.மாமி: வித்தியாசமா சுவாரஸ்யமா இருந்தது. இதோ அவர் இந்த ரெகார்டர்ல கூட போட்டுட்டு வந்திருக்கார். போடறேன் ..கேட்கறேளா?

.மாமி: தாராளமா. நேர்ல தான் கேட்க முடியலை..இங்கேயாவது கேட்போம்..

[ரெக்கார்டர் ஆன் செய்யப்படுகிறது]

ஹரி ஓம்..

இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே


தமிழ் இலக்கியத்துல பெண்களோட பங்கு ஏனோ மிகவும் குறைவாகவே இருக்கு. பெண் அப்படீன்னா காலாகாலத்துல கல்யாணம் கட்டிக் கொடுத்து குழந்தை குட்டி பெற்றுக் கொண்டு, கணவனுக்கு சமைத்துப் போட்டுக் கொண்டு,கைங்கர்யம் பண்ணிக்கொண்டு ஒரு மிஷின் மாதிரி இருக்கணும் அப்படீன்னு அந்தக் காலத்துல ,ஏன் இந்தக் காலத்துலயும், நிறைய பேர் நினைச்சதால 'கழுதை இவளுக்கு என்ன இலக்கியம், கருமாந்திரம்' எல்லாம் வேண்டிக்கிடக்கு அப்படீன்னு பெண்கள் கவிபாடுவதை வன்மையா எதிர்த்தாங்க; ஒரு பெண் கவிதை பாடினால் அவளை ஏதோ புரட்சிக்காரி மாதிரி பார்த்தாங்க; பார்க்கறாங்க.

ஆனால் அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்துலையும் சமுதாயம் பெண்ணுக்கு எழுதிய அத்தனை அடிமைத்தனமான வரையறைகளையும் மீறி 'பெண் என்றால் பெற்றோர் கைகாட்டும் நரனுக்கு கழுத்தை நீட்டி, தன் வாழ்க்கையை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைத்துக்கொள்ளும் உணர்சிகளற்ற பிராணி அல்ல ' என்று பறைசாற்றி புரட்சி செய்தவள் ஆண்டாள். பக்திக்கு மட்டும் ஆண்டாள் இலக்கணம் இல்லை. புரட்சிக்கும் அவள் ஒரு எடுத்துக்காட்டு. அவள் அருளிச் செய்த திருப்பாவையை ஏதோ அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய விதத்துல அலசலாம். சபா எனக்கு கொடுத்திருக்கிற நேரத்துல முப்பது பாடலையும் ஒவ்வொன்னா பாக்கறது அசாத்தியம். எனவேதிருப்பாவை-ங்கற முத்து மாலையில் ஆங்காங்கே ஒளிரும் வைரங்களை மட்டும் பார்க்கலாம்.


சரி. நாம அத்வைதத்த எடுத்துட்டாலும், த்வைதமா இருந்தாலும், விசிஷ்டா
த்வைதமா இருந்தாலும் ஒரு ஜீவனுக்கு இறுதி இலக்கு பரமாத்மா தான்.இதுல 'செகண்ட் தாட்' டே கிடையாது. ஆனா என்ன, ஒரு ஜீவாத்மா எப்படி, எந்த சூழ்நிலைல, என்ன வழிமுறை ல பரமாத்மாவை அடையும்-கறதுல ஒவ்வொரு மார்க்கமும் வேறுபடறது.

இங்கே இருக்கற நிறைய பேர் கணிதம் படிச்சிருப்பீங்க என்ற நம்பிக்கைல சொல்றேன்.மத்வாசார்யாரின் த்வைத மார்க்கம் கொஞ்சம் ஸ்ட்ரிட். சங்கரரின் அத்வைத மார்கத்துல பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு சதுரத்தின் பக்கத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு மாதிரி. அதாவது பக்கத்தை மிகச் சரியாக நாலு மடங்கு செய்தால் அதன் சுற்றளவு வந்து விடும். நான்கு என்பது ஒரு RATIONAL நம்பர்..எந்த Ambiguity -யும் கிடையாது.

ஆனால் 
த்வைத மார்க்கத்தில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு வட்டத்தின்விட்டத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு போன்றது.விட்டத்தை பை (pi)மடங்கு பண்ணாதான் அதன் சுற்றளவு வரும். ஆனால் நீங்க படிச்சிருப்பீங்க பை என்ற நம்பர் ஒரு Irrational number என்று.அதாவது அதை இரண்டு முழு எண்களின் விகிதமாக எழுத முடியாது. இருபத்து இரண்டு பை ஏழு அப்படீங்கறது ஒரு approximation தான். ஆனால் பை என்ற இந்த விகிதம் முடிவில்லாமல் அனந்தமாகப் போய்க்கொண்டே இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். மூணு புள்ளி ஒண்ணு நாலு அப்படீன்னு எழுதி அதற்குப் பிறகு கோடி கோடி இலக்கங்கள் போட்டாலும் பை என்ற எண் முடிவு பெறாது. எனவே வட்டத்தின் சுற்றளவை இது சரியாக அதன் விட்டத்தைப் போல இத்தனை மடங்கு அப்படீன்னு உறுதியா சொல்லவே முடியாது. விட்டத்தின் எல்லை அதன் சுற்றளவு தான். சுற்றளவு என்பது ஒரு முழுமையான எண். வட்டத்தின் விட்டமும் ஒரு முழுமையான எண். ஆனால் இவை இரண்டின் விகிதம் ஒரு முற்றுப்பெறாத எண்.விட்டம் தான் ஜீவாத்மா சுற்றளவு தான் பரமாத்மா என்று எடுத்துக் கொண்டால் பரமாத்மா ஜீவாத்மாவின் இலக்கு என்றாலும் அது ஜீவனின் இத்தனையாவது படிநிலை என்று உறுதியாக சொல்ல முடியாது. விட்டத்தின் ஏதோ ஒரு முடிவிலி மடங்கில் சரியாக வட்டத்தின் சுற்றளவு வரலாம்.ஆனால் எத்தனை துல்லியமாக கணக்குப் போட்டாலும் பையை கோடி தசம ஸ்தானம் வரை எடுத்துக் கொண்டாலும் விட்டத்தின் மடங்குக்கும் சுற்றளவுக்கும் ஒரு சிறிய மைன்யூட் வேறுபாடு இருந்து கொண்டே தான் இருக்கும்.அதே போல ஜீவனின் இலக்கு பரமாத்மா என்று சொன்னாலும் பரமாத்வை அடைய (பரமாத்மாவாக மாற) ஜீவாத்மா எண்ணிலாத,கணக்கற்ற படிகளை கடக்க வேண்டி இருக்கிறது. ஒரு ஜீவன் சாதனைகளை செய்து படிப்படியாக எவ்வளவு தான் முன்னேறினாலும் அது சுற்றளவை நெருங்கலாமே தவிர சுற்றளவாக மாற முடியாது.த்வைதம் ஸ்ரீமன் நாராயணனை சுற்றளவாக நிர்ணயம் செய்கிறது. உலகின் எண்ணிறைந்த ஜீவன்கள் தான் வட்டத்தின் எண்ணிறைந்த விட்டங்கள். விட்டம் சுற்றளவாக மாற எண்ணிறைந்த முடிவிலியான படிநிலைகளைக் கடக்க வேண்டும். இதை தான் அவர்கள் தாரதம்யம் என்று அழகாகச் சொல்கிறார்கள். அதாவது ஒரு ஜீவாத்மா பரமாத்மாவாக முழுவதும் மாறி விடுவதை , எப்படி கணிதம் விட்டம் சுற்றளவாக மாறி விடுவதை தடை செய்கிறதோ , அப்படி த்வைதத்தின் பஞ்சபேததத்துவம் தடை செய்கிறது. விட்டம் சுற்றளவா மாறுது அப்படீன்னா பை அப்படீங்கறது ஒரு Rational நம்பர் அப்படீன்னு ஆயிரும்.கணிதத்தின் முக்கிய எண்ணான பையின் அழகே அது கணிக்க முடியாமல் irrational ஆக இருப்பது தான். எனவே ஜீவன் மற்றும் பரமாத்வாவின் உறவும் இப்படி நிச்சயமற்று Irrational ஆக இருக்கிறது என்கிறார் மத்வாச்சாரியார்.

ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு பற்றிய சமன்பாடுகளிலும் இந்த பை அப்படீங்கற நம்பர் வருது. அப்படீன்னா நம்மால் பிரபஞ்சத்தில் எதையும் இது இதன் இத்தனை மடங்கு அப்படீன்னு சொல்ல முடியாது. எதிலும் ஒரு நிச்சயமின்மை இருக்கவே செய்யும். இதை தான் மத்வாச்சாரியார் பஞ்சபேதம் , அதாவது சமமின்மை என்கிறார். ஒரு ஜடப்பொருளும் ஜீவாத்மாவும் பேதப்பட்டது, ஏன் ஒரு ஜீவன் இன்னொன்றில் இருந்து பேதப்பட்டது. ஒரு ஜீவன் பரமாத்மாவிடம் இருந்து பேதப்பட்டது. என்கிறார்.சங்கரர் மாதிரி சி இஸ் ஈக்குவல் டு ஃபோர்  (C= 4a)அப்படீன்னு சொல்லிட்டா, பரமாத்வா ஜீவனின் இத்தனையாவது படி அப்படீன்னு சொல்லிட்டா நாம பரமாத்மாவை வரையறை செய்து ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ள அடைச்சுட்ட மாதிரி இருக்கும். ஆனால் வேதாந்தம் பரமாத்மாவை நி-சீமா , எல்லையற்றவன், வரம்பு வரையறை அற்றவன் என்று சொல்கிறது.

எனவே மத்வாச்சாரியார் ரொம்ப சைன்டிபிக்-கா சி இஸ் ஈக்குவல் டு பை டி அப்படீங்கறார். ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா திரிகோணமிதில சைன் மற்றும் காஸ் மதிப்புகளை கண்டுபிடிக்கும் 'டைலர்' சீரீஸை அப்பவே கண்டுபிடித்தவர் மத்வாசாரியார்.அவர் ஒரு பெரிய கணிதவியல் மேதை கூட .அவர் எவ்வளவு அழகா தன் சித்தாந்தத்தை கணிதத்தில் இருந்து, கணிதத்தின் ஒரு அழகான எண்ணில் இருந்து எடுத்திருக்கார் என்பது அற்புதம்.

சரி இங்க விசிஷ்டாத்வைதம் ,அதாவது ஆண்டாள் போன்ற ஆழ்வார்களின் நெறி என்ன அப்படீன்னா பரமாத்மா என்பது வட்டம் போல மாயத்தோற்றம் காட்டும் ஒரு சதுரம் என்பது. இந்த மார்க்கம் த்வைதம் மற்றும் அத்வைதம் இரண்டையும் ஓரளவு ஒத்துக்கொள்கிறது. அரிஸ்டாடிலின் கோல்டன் மீன் (Golden Mean)அப்படீன்னு சொல்வாங்களே அது மாதிரி .ஒரேயடியாக ஒரு ஜீவனிடம் நீ தான் பரமாத்மா அப்படீன்னு சொல்ல முடியாது. அவனுக்கு மிதப்பு வந்து விடும். அதே போல உன்னால் எத்தனை சாதனை செய்தாலும் பரமாத்மாவாக எப்போதும் மாற முடியாது என்று சொன்னால் அவன் மனமுடைந்து விரக்தியாகி விடுவான்.எனவே நீ அஞ்ஞானத்தில் இருக்கும் வரை பரம்பொருள் உனக்கு ஒரு குழப்ப வட்டம். நீ ஞானம் பெற்றால் அது உனக்கு ஒரு தெளிந்த சதுரம் என்று சொல்கிறது இந்த நெறி.அதாவது வெளியே குப்பன், சுப்பன், கந்தன், கண்ணன் என்று பலபேர்களில் அழைக்கப்படுபவர்கள் பஸ்ஸில் ஏறியதும் கண்டக்டருக்கு 'டிக்கெட்' ஆக மாறி விடுவது போல.

சரி இதெல்லாம் வேதாந்தம்.கடவுளை அடைய இது ஒரு மார்க்கம். வே ஆப் தி ஹெட்! ஆனால் இன்னொரு மார்க்கம் இருக்கிறது .உணர்வுப்பூர்வமாக அணுகுவது. வே ஆப் தி ஹார்ட்! ஆண்டாள்
த்வைதமா, அத்வைதமா , இரண்டுக்கும் நடுவிலா என்ற பேச்சே வேண்டாம். என் இலக்கு என்ன என்பது எனக்கு முக்கியம் அல்ல. நான் பரமாத்வாவின் பக்தை. நான் பரமாத்வானின் பக்தன். அவனை எண்ணும் போது எனக்கு புளகாங்கிதம் அடைந்து கண்ணீர் வருகிறது. ஜென்ம ஜென்மத்துக்கும் இதுவே போதும்.அவன் நாமத்தின் சுவையே போதும். அவன் பக்தியின் ஆனந்தமே போதும் என்கிறது பக்தி மார்க்கம்.

இதனால் தான் ஒரு ஆழ்வார் 'அச்சுவை தரினும் வேண்டேன் அரங்கமா நகருளானேஎன்று பாடுகிறார். அதாவது ஆழ்வார்கள் தாங்கள் முக்தி அடைந்து பரமாத்மாவாக அல்லது நித்தியசூரிகளாக மாறிவிட விரும்பவில்லை என்ற 
விசிஷ்டாத்வைத 'சப்போர்ட்டை' ஆங்காங்கே வெளிப்படுத்துகிறார்கள்.ஆண்டாளும் எற்றைக்கும் ஏழு ழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமேஆவோம் என்கிறாள்.ஏழேழ் பிறவி என்றால் ஏழு பிறவி அதற்குப் பின் முக்தி என்று அர்த்தம் அல்ல. இனிமேல் எழுகின்ற பிறவிகள் எல்லாம் நாம் ஜீவாத்மாக்களாகவே இருந்து உன்னைப் பாடுவோம் என்ற மனப்பான்மை.இன்று ஒரு நாள் எங்களுக்கு மகிழ்வளித்து எமக்கு மோக்ஷமளித்தாலும் , அது தேவையில்லை கோவிந்தா என்று இற்றைப்பறை கொள்வான்அன்றுகாண் கோவிந்தா என்கிறாள் ஆண்டாள்.

கடைசிக்கு முந்திய இருபத்தி ஒன்பதாவது பாசுரத்தில் இதைதான் சொல்கிறாள் ஆண்டாள். நாம் காரணம் இல்லாமல் ,காலையில் ரொம்ப சீக்கிரம் எழுந்திரிக்க மாட்டோம்.ஏதோ ஒரு கல்யாணம் காட்சி என்றாலோ, இன்டர்வியூ இருந்தாலோ, பிரயாணம் செய்ய வேண்டி இருந்தாலோ தான் காலையில் சீக்கிரம் எழுந்து கொள்வோம். அதுவும் இது மார்கழி மாசம் வேறு. குளிர் காலம்பற அஞ்சு மணிக்கு உடலைத் துளைக்கும்.பல்லெல்லாம் டைப் ரைட்டிங்குல ஹையர் கிரேடு பாஸ் பண்ண லெவலுக்கு நடுங்கும்.இன்னும் கொஞ்சம் இழுத்துப் போத்திக்கிட்டு படுத்துக்குவோம்;என்ன குடியா முழுகிப்போயிடப் போறது ? என்று நினைப்போம்.வி
ஞ்ஞானிகள் சில பேர் பூமி வெப்பத்துல அழிஞ்சு போகும்கறா.எனக்கு என்னவோ நாம் எல்லாரும் குளிர்ல தான் கைலாசம் போவோம்னு தோணறது.

பகவான் 'மாதங்களில் நான் மார்கழிஅப்படீன்னு ஏன் சொன்னார்னா 'இந்த ஆள் மே மாசம் புழுக்கம் தாங்காம காலையில அஞ்சரை மணிக்கு எழுந்துக்கறதுல எந்த விஷயமும் இல்லை. மார்கழி மாசம் நடுங்கும் குளிர்ல எழுந்துண்டு குளிச்சிட்டு கோயிலுக்கு வர்ற உண்மையான பக்தன் யாரு'அப்படீன்னு கண்டுபிடிக்க தான் அப்படி பொடிவச்சு சொல்லியிருக்கான். ஆனாலும் சிலர் பேர் கோயிலில் கிடைக்கும் வெண்பொங்கல் புளியோதரைக்காகவே காலம்பற சீக்கிரம் எழுந்திருக்கரா. சரி அவா எல்லாம் பலகாரத்துலையே பகவானைப் பார்க்க பழகிண்டுட்டா போலும்.

எனவே ஆண்டாள் சொல்கிறாள், "கிருஷ்ணா, நாங்க இத்தனை காலையில் குளிரில் எழுந்து வந்து உன்னை சேவிக்கிறோம் என்றால் சும்மா இல்லை; எங்கள் கோரிக்கையைக் கேள் என்கிறாள். கோரிக்கை என்ன? ஆண்டாள் 'எனக்கு மாதம் நாற்பதாயிரம் சம்பாதிக்கிற , கார் , 2BHK வீடுவைத்திருக்கிறபார்க்க ஹேன்ட்சம் -ஆனகொளுத்த பேங்க் பேலன்ஸ் இருக்கிற,H1B இருக்கிறமாப்பிள்ளை வேண்டும்என்றா கேட்கிறாள்?இல்லையே

"எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் 
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் "

-கிருஷ்ணா ! "நாங்கள் இனிவரும் பிறவிகளில் உனக்கே அடிமை செய்து கொண்டிருக்கும் வரம் கொடு என்று தான் கேட்கிறாள். மேலும் உன்னைத் தவிர எம் மனத்தில் எழும் ஆசைகளையெல்லாம் மாற்றி உன்னையே மனம் விரும்பும்படி செய்" என்கிறாள். என்ன ஒரு பக்குவப்பட்ட பெண் பாருங்கள் ஆண்டாள்!

[ஸ்வாமிகள் பாடுகிறார்ராகம்மத்யமாவதி]

"சிற்றம் சிறுகாலே வந்துன்னை சேவித்துன்
....
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்"

என்னடா இது முதல்பாட்டே மத்யமாவதியில் பாடுகிறார் என்று நினைக்கவேண்டாம். மத்யமாவதி என்றால் மத்யத்தில் அதாவது கச்சேரிக்கு இடையில் பாடும் ராகம் என்றுதான் அர்த்தம். அதாவது கச்சேரி கொஞ்சம் போர் அடித்தால் இதுமாதிரி கொஞ்சம் ஸ்பீடான ராகங்களைப் பாடி தூங்குபவர்களை எழுப்பலாம் என்றுதான்.கச்சேரிக்கு கடைசியில் எழுப்பி என்ன பிரயோஜனம்? எப்படியிருந்தாலும் கச்சேரி முடிந்ததும் எல்லாரும் கீரைவடை சாப்பிடும் ஆசையில் அவர்களே எழுந்து கொள்வார்கள்.

ஆண்டாள் பக்குவப்பட்ட பெண் மட்டும் அல்ல. புத்திசாலியும் கூட தான். அந்தக் காலத்துப் பெண்களை 'மழை எப்படிப் பெய்கிறது?என்று கேட்டால் பூமியில் உள்ள பதிவிரதைகளின் பதிபக்திக்கு மெச்சி வருணன் மழை தருகிறான் என்று தான் சொல்வார்கள்.ஆண்டாள் எத்தனை அழகாக , அறிவியல் ரீதியாக, மழை பெய்வதை வர்ணிக்கிறாள் என்று பாருங்கள்: -



[ஸ்வாமிகள் பாடுகிறார்ராகம்வராளி]

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து(ப்)
பாழிய் அம் தோளுடை பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலார் எம்பாவாய்

அடியவர்களுக்கு எல்லாமே கண்ணன்தான். உண்ணும் சோறு தின்னும் வெற்றிலை கூட கண்ணன்தான். பாரதியார் கூட 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா உந்தன் கரியநிறம் தோன்றுதடாநந்தலாலா' என்று பாடுகிறார்.ஆண்டாளுக்கு மழை பெய்வதைப் பார்த்தவுடன் கண்ணன் ஞாபகம் வந்து விட்டது.

'கர்ணனுக்குப் பின் கொடை இல்லை கார்த்திகைக்குப் பின் மழை இல்லை' என்பதெல்லாம் பின்னால் வந்த வசனம்;அப்போதெல்லாம் மார்கழியில் கூட மழைபெய்யும் போலிருக்கிறது.அவள் சொல்கிறாள்: மேகமே, போ, போய் கடல் நீரை அள்ளு.அதிர்ந்து மேலே ஏறு!கண்ணனின் உருவம் போல கறுத்துப்போ! பின் அவன் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம் போல் மின்னலடி.அவன் கரத்து பாஞ்சஜன்யம் போல முழங்கி இடியோசை செய். அவன் கையில் இருக்கும் கோதண்ட வில்லில் இருந்து புறப்படும் அம்புகள் போல சீறி மழைபொழி! என்கிறாள்.

பொதுவாக போர்களை வர்ணிக்கையில் அம்புகள் மழையாகப் பொழிந்தன என்பார்கள். இங்கே ஆண்டாள் உல்டாவாக கண்ணனின் வில்லம்புகள் போல மழை பொழியட்டும் என்கிறாள்.அதாவது விஷ்ணுவின் அம்புகள் எப்போதும் நன்மைக்காகத்தான் வில்லில் இருந்து புறப்படும்.மேலும் எப்போது தேவையோ அப்போதுதான் திருமால் தன் வில்லில் நாண் பூட்டுவார்.அடுத்து ஹரியின் அம்புகள் காரியம் ஆனதும் திரும்ப அவர் கைக்கே வந்துசேரும். இதே போல மேகமே உன் அம்பாகிய மழையையும் நீ உலகை அழிக்கப்பெய்யாமல் வாழ்விக்கப் பெய், வாழ உலகினில்பெய்திடாய்!எப்போது தேவையோ அப்போது பெய் என்கிறாள். அம்புகள் திரும்ப சென்று விடுவது போல மழையும் பூமியில் பெய்து ஆவியாகி பின் மேகத்துக்கே சென்று விடும் என்ற அறிவியல் உண்மையையும் சொல்லாமல் சொல்கிறாள்.





திருப்பாவை முப்பது பாட்டுக்கும் அரியக்குடி இசையமைத்து எம்.எல்.வி அவர்கள் பாடியிருப்பதை நீங்கள் கேட்டிருக்கக்கூடும்.பாட்டுக்குப் பொருத்தமான ராகங்கள். உதாரணமாக 'ஓங்கி உலகளந்தஉத்தமன் பேர் பாடி' வீரரசம் நிரம்பிய ஆரபியில் பாடப்படுகிறது. ஓங்கி ஒருகாலில் உலகை அளந்தது உண்மையில் வீர சாகசம் அல்லவா?

மாரிமலை மு
ழைஞ்சில் பாடலில் ஆண்டாள் "மழைக்குப் பயந்து குகையில் அடைபட்டுக் கிடக்கும் சிங்கம் மழைக்காலம் முடிந்ததும் எப்படி கண்களில் தீப்பறக்க ,பிடரி மயிரை சிலுப்பிக்கொண்டு , கர்ஜனை செய்தபடி கம்பீரமாக வெளிவருமோ அப்படி எங்களுக்கு காட்சிதா" என்று சொல்கிறாள். இந்தப் பாடலுக்கு அரியக்குடி பிலஹரி ராகம் தந்திருக்கிறார். சிங்கம் என்றால் இங்கே நரசிம்மரைக் கற்பனை செய்யலாம். நரசிம்மருக்கு மிகவும் உகந்த ராகம் பிலஹரி.

எத்தனை பொருத்தம் பாருங்கள். மேலும் குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் என்ற பாடலில்

[ஸ்வாமிகள் பாடுகிறார்ராகம் :சஹானா]

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி(க்)
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

இது கண்ணனும் அவன் நாயகியும் ஏகாந்தத்தில் இருக்கும் போது பாடுவது.இதை நாம்

[ஸ்வாமிகள் பாடுகிறார்ராகம்அடானா ]

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல்

என்று அடாணாவில் அடிக்கவருவது போல பாட முடியுமா? இருவரும் அலறி அடித்துக் கொண்டு என்னமோ ஏதோ என்று எழுந்து விடமாட்டார்களா?அந்த ஏகாந்த சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு சாந்தமான ஸ்ருங்கார ரசம் ததும்பும் ராகத்தில் தான் பாட வேண்டும். ஆண்டாள் இந்த பாடலை குத்து விளக்கெரிய என்று ஆரம்பிக்கிறாள். காதலுக்கு நிறைய வெளிச்சமும் ஆகாது. இருட்டும் ஆகாது. இந்தக் காலத்தில் கேண்டில் லைட் டின்னர் என்று ஏதோ சொல்கிறார்களே. அதுமாதிரி ஒரு மிஞ்சிய வெளிச்சம் சூழ்நிலையை ரொமாண்டிக் ஆக மாற்றிவிடும்.அதுமாதிரி குத்துவிளக்கின் சிற்றொளியில் இருவரும் ஏகாந்தமாக பஞ்சணை மேல் காதல் மேலிட படுத்திருந்தார்கள் என்று சஹானாவில் பாடும் போதே உங்களுக்கும் காதல் உணர்வு மேலிடும்.சன்யாசிக் கழுதைக்கு ஸ்ருங்கார ரசம் பற்றி என்ன பேச்சு என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.பட்டினத்தார் சொல்வது போல நானும் ஒரு காலத்தில் சம்சாரக் கழுதையாக இருந்ததால் தான் சொல்கிறேன்.

இத்தனை பொருத்தமாக பாடல்களுக்கு ராகம் போட்டவர் ஏன் ஆழி மழைக்கண்ணாவுக்கு மட்டும்அமிர்தவர்ஷினியில் போடாமல் வராளியில் போட்டார் என்று தெரியவில்லை. பொதுவாக வராளியை குரு சிஷ்யர்களுக்கு சொல்லித்தர மாட்டார். அதே மாதிரி ஆண்டாள் மழைபெய்யும் ரகசியத்தை தன் மக்குத்தோழிகளுக்கு சொல்லித்தர விரும்பவில்லையோ என்னவோ?

வாழ்க்கையில் தாழ்ந்த விஷயங்களுக்கு ஆசைப்படுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அது கிடைத்து விட்டாலும் மன நிம்மதி ஏற்படுவதில்லை.அதே சமயம் உயர்ந்த விஷயங்களுக்கு ஆசைப்படுபவர்கள் இன்னொரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த விஷயம் கிடைக்காவிட்டாலும் அதற்கு முயற்சியாவது செய்தோமே என்ற ஆழ்ந்த ஒரு ஆத்மத் திருப்தி கிடைத்து விடுகிறது . இதை தான் வள்ளுவர் சொல்றார்:

"கான முயல்எய்த அம்பினில் யானை 
பிழைத்தவேல் ஏந்தல் இனிது"

-காட்டுக்கு வேட்டையாடப் போறோம். ஒரு சின்ன முயலை அம்பு எய்தி பிடிக்கறதில் என்ன பெருமை இருக்கிறது? யானையை குறிவைக்கணும் .யானை கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை;யானையை குறி வைக்கணும். நம்முடைய லட்சியம் உயர்ந்ததா இருக்கணும்.இந்தக் காலத்துல யானையோ முயலோ எதைக் குறிவைச்சாலும் புடிச்சு உள்ள போட்டுடுவா. அது வேற விஷயம்.

நாம எல்லாம் முயலின் பின்னாடியே ஓடிண்டு இருக்கோம்.பணம் என்கின்ற முயல், பதவி, பட்டம், பெருமை என்கின்ற முயல்
சமூக அந்தஸ்து, புகழ் என்கின்ற முயல்களின் பின்னே ஓடி நம் வாழ்க்கையை வீணடிக்கிறோம்.ஆனால் அந்த முயல் கிடைத்து விட்டாலும் பெரிதாக ஒண்ணும் நடந்து விடுவதில்லை. பணத்துக்காக கனவு காண்பவனுக்கு குறைந்த பட்சம் நாளை நன்றாக இருப்போம் என்ற நம்பிக்கையாவது இருக்கிறது.ஆனால் பணம் புகழ் இது எல்லாம் கிடைத்து விட்டவனுக்கோ அதில் ஒண்ணுமே இல்லை,நாம மோசம் போயிட்டோம் என்ற விரக்தி தான் மிஞ்சுகிறது.




ஆண்டாள் போன்ற அடியார்களோ முயலின் பின்னே அலைவதை விட்டு விட்டு யானையை பற்றிக் கொண்டவர்கள். யானை என்றால் சாதாரண யானையா?இல்லை. கஜேந்திரன் என்ற யானையை ரட்சித்த யானை.குவாலய பீடம் என்ற யானையை வென்று அடக்கிய யானை. இருகை வேழத்துராகவன் என்று இரண்டு கையுடைய யானை என்று கம்பரால் போற்றப்படும் யானை.சாமஜ வரகமனா என்று யானை போன்ற கம்பீரமான நடை கொண்டவன் என்று தியாகராஜரால் வர்ணிக்கப்படும் யானை.கம்பர் சொல்வது போல யானை தன் காலைப் பற்றியவர்களை தன் தலைக்கு மேலே தூக்கி வைக்கும்.வீரத்தில் யானையை நிகர்த்த ராமனும் தன் சரணங்களைப் பற்றியவர்களை உயர்வாகக் கொண்டாடுவான். ராமன் மட்டும் தான் யானையை நிகர்த்தவனா?கண்ணனும் யானையை ஒத்த 
வீரமும் கம்பீரமும் கொண்டவன் தான். இதை ஆண்டாளே சொல்கிறாள் கேளுங்கள்

[சுவாமிகள் பாடுகிறார்ராகம் சாவேரி]

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் 
நந்தேகாபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவி(ப்)
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட 
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

மதநீரை உடைய களிறு போன்ற கண்ணனைப் பிள்ளையாகப் படைத்த நந்தகோபன் என்கிறாள் ஆண்டாள். கண்ணன் தந்தை நந்தகோபன் ஓடாத தோள்வலியன் என்கிறாள்.போரில் புறமுதுகு காட்டி ஓடாதவன்.அப்படிப்பட்ட வீரனின் மகன் வீரனாகத்தான் இருப்பான் ; கண்ணன் மாவீரன் என்று சொல்லாமல் சொல்கிறாள்; கந்தம் கமழும் குழலி! வாசனை கொண்ட கூந்தல் ..இந்த இடத்திலே ஒன்றைக் கவனிக்க வேண்டும். பாவை நோன்பு நோற்ற போது பெண்கள் 'மையிட்டுஎழுதோம் மலரிட்டு நாம் முடியோம்' என்ற சங்கல்பம் எடுத்துக் கொள்கிறார்கள்.அப்படியானால் உள்ளே இருக்கும் பெண் அந்த விதியை மீறி யாருக்கும் தெரியாமல் இரவு வாசனை மலர் சூட்டிக் கொண்டாளா என்று கேட்டால் அவள் கூந்தல் இயற்கையிலேயே மணக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. பெண்கள் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்ற திருவிளையாடல் காலத்து வழக்கை ஆண்டாள் இங்கே நிரூபிக்கிறாள் போலும் .

ஆண்டாள் மட்டும் அல்ல, ஆயர்பாடியில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் தன்னை கண்ணனுக்கு மனைவியாகவும் நந்தகோபருக்கு மருமகளாகவும் பாவித்துக் கொள்கிறார்கள்.அவளைக் கூப்பிடும் போது ஆண்டாள் 'நந்தகோபர் மருமகளே' என்றே விளிக்கிறாள்.
மீராவைப் போல 'கண்ணன் எனக்குமட்டும் தான்' 'மேரே தோ கிரிதர கோபாலா' என்று Possessive ஆக நினைக்காமல் ஆண்டாள், அவன் எல்லாருக்கும் நாயகன் என்ற பெருந்தன்மையில் பாடுகிறாள்.கோழி கூவியது என்றால் உள்ளே இருப்பவள் அது சாமக் கோழியாக இருக்கும் ;இன்னும் பொழுது விடியவில்லை என்று நினைத்துக் கொள்வாளோ என்று பார் மாதவிப் பந்தல் குயில்கள் எல்லாம் கூவின;விடிந்து நேரம் ஆகி விட்டது பார் என்கிறார்கள் தோழிகள்.உள்ளே இருப்பவள் சின்னப் பிள்ளை போல ஒரு பந்தை வைத்துக் கொண்டு தூங்குகிறாளாம். இந்தக் காலத்துப் பெண் பிள்ளைகள் teddy bear என்ற கரடி பொம்மையை வைத்துக்கொண்டு தூங்குவதைப் போல.இன்னும் விளையாட்டுப் பெண்ணாகவே இருக்கிறாயே! எழுந்திரு, விளையாட்டை விட்டுவிட்டு நாம் முக்தியடையும் வழியைப் பார்க்கலாம் என்று அர்த்தம்.

ஆகவே ஆண்டாள் போன்ற அடியார்கள் சிறிய சிறிய குறிக்கோள்களைப் பற்றிக் கொள்ளாமல் 'பற்றுக பற்றற்றான் பற்றினைஎன்பது போல உயர்ந்த குறிக்கோளான பகவானையே பற்றுகிறார்கள்.ஒரு பெண், பெரிய இடத்துப் பையனை விரும்பி திருமணம் செய்து கொண்டால் அவளது தோழிகள் 'பரவாயில்லை, பிடிச்சது தான் பிடிச்சே, நல்ல புளியன்கொம்பாய் பிடிச்சிருக்கே' என்று கேலி செய்வார்கள்.ஆனால் ஆண்டாளோ இருப்பதிலேயே பெரிய இடத்துப் பையனைப் பிடித்திருக்கிறாள். சந்தனக் கொம்பைப் பிடித்திருக்கிறாள்; இந்தப் பிறவியில் ஒரு நரனைத் திருமணம் செய்து கொண்டு இந்தப் பிறவியின் பயனை நிறைவேற்றுவதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது? நம் இறுதிக் குறிக்கோளான , எல்லாப் பிறவிகளின் பயனான பரமாத்மாவை காலம் தாழ்த்தாமல் இப்போதே பிடித்துக் கொண்டு விடலாம் என்று புத்திசாலித்தனமாக நினைக்கிறாள் ஆண்டாள்.ஒரு கட்டடத்துக்கு படிப்படியாக ஏறிப் போகாமல் லிப்டில் போகிறோமே அது மாதிரி!



ஆண் பிள்ளைகள் திருப்பாவை பாடினால் 'என்ன இது பெண் பிள்ளைமாதிரி பாடிக் கொண்டு' என்று சொல்லாதீர்கள். இந்த திருப்பாவை வெறுமனே ஒரு பெண் ஓர் ஆணை நினைத்துப் பாடுவது அல்ல. ஒரு ஜீவன் பரமாத்மாவை நோக்கிப் பாடுவது. எல்லா ஜீவாத்மாக்களுக்கும்,ஆணுக்கும்,பெண்ணுக்கும் நாயகன் அவன் ஒருவன் தான்.எல்லா ஜீவன்களும் ஆத்மரீதியாகப் பெண்கள் தான். மீராவின் வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று சொல்லப்படுவதுண்டு. ஒரு சாமியார் தன் வாழ்வில் பெண்களையே பார்ப்பதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டு வாழ்ந்து வந்தாராம். அவரது கிராமத்துக்கு ஒருமுறை வருகை தந்த பக்த மீரா அவரது சீடர்கள் தடுத்தும் கூட நிற்காமல் அவர் வீட்டுக்குள் நுழைந்து விட்டாளாம் . தவறுதலாக மீராவைப் பார்த்து விட்ட அவர் 'அய்யோ, என் சத்தியம் தவறி விட்டதே, என் தவம் முறிந்து விட்டதே' என்று புலம்பி அவள்மேல் கோபப்பட்டாராம். அவரைப் பார்த்து மீரா ,"நீங்கள் கிருஷ்ணாவின் பக்தராக இருந்து கொண்டு இன்னும் உங்களை ஆண் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா, நான் பிரபஞ்சத்தில் உள்ள ஒரே ஆண்மகன் கிருஷ்ணன் மட்டும் தான் என்றல்லவா நினைத்தேன்" என்கிறாள். இதைக் கேட்ட அவர் மனம் மாறி மீராவின் காலில் விழுகிறார். பரமாத்மாவுடன் பக்தி கொள்ளும் சாதுக்கள் அவர்கள் ஆண்களாக இருந்தாலும் நாயகி மனோபாவத்துக்கு மாறி விடுகிறார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் இந்த நாயகி பாவத்துக்கு எந்த அளவு தன்னை அர்ப்பணித்தார் என்றால் அபரிமிதமான பக்தியில் தனக்கு மாதவிலக்கு வருவதை அவர் உணர்ந்தாராம்!

எனவே பரமாத்மாவை விழைவது தான் ஒரு ஜீவனுக்கு அழகு; ஒரு ஜீவனுக்கு உண்மையான ஆனந்தம்.அதுதான் பிரம்மானந்தம்.

[ஸ்வாமிகள் பாடுகிறார்

"அரவிந்தமுன ஜுசி பிரம்மானந்த மனுபவிஞ்சுவா 
ரெந்தரோ மஹானுபாவுலு
அந்தரிகி வந்தனமுலு "

ஆனந்தம் என்றதும் எனக்கு ஆனந்த பைரவி நினைவுக்கு வருகிறது.

[ஸ்வாமிகள் பாடுகிறார்ராகம் ஆனந்த பைரவி]

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!



ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். ஆண்டாள் ஒரு பாசுரத்தில் கூட மணி ஐந்து ஆகி விட்டது, அஞ்சே முக்கால் ஆகி விட்டது ஆறு ஆகி விட்டது என்று சொல்லி தோழிகளை எழுப்புவதில்லை.இயற்கையின் விடியல் அறிகுறிகளை சொல்லி தான் எழுப்புகிறாள். இது, அந்தக் காலத்தில் எல்லாரும் மெஷின்களை நம்பாமல் இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழ்ந்தார்கள் என்று காட்டுகிறது . நாமோ இன்று கடிகாரத்தையும் காலண்டரையும் நம்பி வாழ்கிறோம். இயற்கை நமக்கு சொல்லும் அறிகுறிகளை நாம் கவனிபப்தே இல்லை. இயற்கையின் கடிகாரமும் நம் உடலின் கடிகாரமும் ஒன்றிணைந்தால்தான் நாம் நோயில்லாத வாழ்க்கை வாழமுடியும்.

'உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்' என்கிறாள் . எங்கள் புழக்கடை என்று சொல்லவில்லை. விடிந்து விட்டது. அதன் அறிகுறிகளை நீயே கண்கொண்டு பார். சந்திரனின் ஒளியில் மகிழ்ந்திருக்கும் ஆம்பல் சூரியன் வருகிறான் என்று தெரிந்ததும் கூம்பி விட்டது பார் என்கிறாள். வெண்ணிற பற்களைக் கொண்ட தவ யோகிகள் காலை நேர சங்கு ஊத கோயிலுக்குப் புறப்பட்டு விட்டனர் பார் என்கிறாள்.யாருக்கு பல் வெண்மையாக இருக்கும்? எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கு தான். அதைத் தான் ஆண்டாள் குறிப்பால் சொல்கிறாள். இன்று நாம் என்ன தான் காலையில் COLGATE WHITENING எல்லாம் போட்டு பல் விளக்கினாலும் காபி, டீ , பான்பராக், வெற்றிலை பாக்கு என்று போட்டுக் கொண்டே இருந்தால் பல் எங்கே வெண்மையாக இருக்கும்?

சரி.

மனிதன் எப்போதும் இரட்டை நாக்கு உடையவன். நேற்று ஒன்று சொன்னால் அதற்கு நேர்மாறாக இன்று வேறொன்று சொல்பவன். அந்தப் பெண் முந்தாநாள் சொன்னாளாம் "நாளைக்கு பார்உங்களுக்கு எல்லாம் முன்னால் எழுந்து கொண்டு நான் வந்து உங்கள் வீட்டுக் கதவைத்தட்டுகிறேன் பார்' என்று. ஆனால்,இன்றோ இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குகிறாளாம்.நாமும் இப்படி தான். நாளையில் இருந்து சிகரெட் பிடிப்பதை அடியோடு விட்டுவிடுகிறேன் பார் என்கிறோம். ஆனால் நாளை மீண்டும் அதையே செய்கிறோம். சரி இன்று ஒன்றே ஒன்று புகைப்போம் என்று சமாதானம் வேறு சொல்லிக் கொள்கிறோம். நாளையில் இருந்து கோபப்பட மாட்டேன் என்று சத்தியம் செய்கிறோம்.ஆனால் மறுநாள் அதையே செய்கிறோம்.அதை தான் ஆண்டால் வாயால்முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ என்கிறாள்; மாற்றி மாற்றிப் பேசாதே என்கிறாள்..

பகவான் ஒருத்தன் தான் சொன்ன சொல் தவறாதவன். வாக்கு மாறாதவன், 'சம்பவாமி யுகே யுகே' என்று சொன்னால் அவன் அதில் இருந்து மாற மாட்டான். அதுதான் தியாகராஜர் சொல்கிறார் :-உன் பேச்சுகளையே, உன் வார்த்தைகளையே நான் சித்தாந்தமாக கொண்டிருக்கிறேன் ராமா.. நீ வார்த்தை தவறாதவன் ஆயிற்றே, அதனான் உன் வார்த்தைகளே என் உயிர் என்கிறார்.

[ஸ்வாமிகள் பாடுகிறார் .ராகம் :கமாஸ்]

வாதாத்மஜா துல செந்தனே
வர்ணிஞ்சின நீ பலுகுலெல்லா
சீதாபதே நா மனசுனா சித்தாந்தமனி உன்னானுனா 
சீதாபதே ...


சரி. த்யாகராஜர் ராமனை இப்படி புகழ்ந்து விட்டு கிருஷ்ணன் சமயத்துக்கு தகுந்தபடி மாற்றி மாற்றி பேசுவான் என்கிறார்.

[ஸ்வாமிகள் பாடுகிறார் .ராகம் :ஆரபி ]

கோபிஜன மனோரத மொசங்கலேகனே
கேலியு ஜேசே வாடு

சமயானிகி தகு மாடலாடெனே 

அது சும்மா விளையாட்டு. ஆனால் கிருஷ்ணனும் வார்த்தை தவறாதவன் தான்.


-தொடரும்


-- 
என்றென்றும் ப்ரியங்களுடன்,
இனியவன்.
[யாதும் ஊரே. யாவரும் கேளிர். ஒன்றே குலம். ஒருவனே தேவன் ]

Arumbanavan A

unread,
Oct 24, 2012, 12:56:51 AM10/24/12
to panb...@googlegroups.com
இனியவன் அய்யா உங்களுக்கு எல்லாமே அப்புடியே அமையுதே அது எப்புடி........ 

2012/10/23 இனியவன் <mail2...@gmail.com>
--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

இனியவன்

unread,
Oct 26, 2012, 7:58:45 AM10/26/12
to panb...@googlegroups.com

THURSDAY, OCTOBER 25, 2012

அப்பா...


-  சமுத்ரா - 

"
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி" , 
 
"தந்தை தாய் இருந்தால்" ...

-இப்படி உணர்ச்சிப் பூர்வமான கவிதைகளில் தந்தைக்கே முதலிடம். இதை சொல்வதற்கு இப்போது காரணம் இருக்கிறது.07 -10 -2012 ,ஞாயிறு 
அன்று அப்பா எங்களை எல்லாம் பிரிந்து வைகுண்டப் ப்ராப்தி அடைந்து விட்டார். நீண்ட நாட்களாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தார்.மருத்துவம் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம். கடைசியில் தன் இறுதி மருந்தை (ultimate medicine ) அப்பா எடுத்துக்கொண்டு தன் துன்பங்களில் இருந்து நிரந்தர விடுதலை பெற்றுவிட்டார்.

நம்மிடம் ஒரு பொருளைக் கொடுத்து அதனுடன் உறவு ஏற்படுத்தி , அளவளாவச் செய்து , அன்பு செலுத்த வைத்து  பின் திடீரென்று ஒரு நாள் நம்மிடம் இருந்து அதை வெடுக்கெனப்
பிடுங்கிக் கொண்டால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்டது தான் மரணம். நாம் தான் நம் அப்பா நம் அம்மா நம் மனைவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இயற்கையோ 'இவர் என்னுடையவர்' என்று கருணையின்றி ஒருநாள் தன் வசம் எடுத்துக்கொண்டு விடுகிறது. ஓஷோவின் புத்தகங்களை அதிகம் படித்ததால் அப்பாவின் மரணம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.'மரணம் என்பது வாழ்வின் மலர்தல்', 
மரணம் ஒரு கொண்டாட்டமாக வேண்டும் என்கிறார் ஓஷோ.

குழந்தை எங்கிருந்து வருகிறது என்பதும் இறந்தவர் எங்கே போகிறார் என்பதும் இன்னும் மர்ம முடிச்சுகள் தான். 

இறந்தவுடன் யமலோகம் என்று சும்மா சொல்லிவிட்டாலும் ஜீவன் அங்கே யாத்திரையாக நடந்து செல்ல ஒரு வருடம் ஆகிறது என்கிறது கருட புராணம்.ஒவ்வொரு மாதமும் புத்திரன் அளிக்கும் மாசிக பிண்டத்தை உண்டு அது படிப்படியாகக் கடக்கிறதாம். போகிற
வழியில் ஜீவனுக்கு வழி தெரிய வேண்டி இங்கே தீப தானம்,குளிர் அடிக்காதிருக்க இங்கே கம்பளி தானம் , தாக சாந்தி நீங்க உதுகும்ப தானம். வைதரணி நதியைக் கடக்க இங்கே கோதானம் முதலியவை செய்தல் வேண்டுமாம். இவையெல்லாம் சுத்த ஹம்பக்  என்று
நினைக்கத் தோன்றினாலும் இறந்தவர்கள் பெயரை சொல்லியாவது மனிதனை தானம் செய்விக்கத் தூண்டும் உத்திகள் தான் இவை.என்ன, இந்தத் தானத்தை எல்லாம் சுமோ வீரர்கள் போல வயிறை வளர்த்து வைத்திருக்கும் ப்ரோகிதர்களுக்குக் கொடுக்காமல் உண்மையிலேயே
கஷ்டப்படும் ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

ஒருவர் இறந்து விட்டால் 'அடடா அவர் இருந்த போது இன்னும்  நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கலாமே?"என்ற ஆதங்கம் தோன்றுவது இயல்பு தான். ஆனால் இறந்து விட்ட ஒருவருக்காக நாம் என்ன செய்ய முடியும்? அது நம் கூண்டை விட்டு அகன்று விட்ட, இனிமேல் எப்போதும் திரும்பி வராத பறவை.என்னதான் தத்துவம் பேசினாலும் நமக்கு நெருக்கமான ஒருவரது இழப்பு நம்மை எப்படி நிலைகுலைய வைத்து விடுகிறது? 

அப்பேர்ப்பட்ட பட்டினத்தாரே 

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் 
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் -செய்ய 
இருகைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி

என்று கதறுகிறார். அன்னையின் மரணத்தைப் பார்ப்பதே கொடுமை என்றால் பெற்ற மகனின் மரணத்தைப் பார்க்கும் கொடுமை வந்துவிட்டது பாட்டிக்கு.என்ன செய்வது?

அப்பாவின் மரணத்திற்கு  பட்டினத்தார் செய்யுள் எழுதியதாய்த்  தெரியவில்லை...நாம் எழுதி விடுவோம்...

மன்மதனோ மாதவனோ மன்னனும் தானோஇவன்
என்மகனோ என்றுமிக இன்புற்று -தன்மனதில்
களிப்புடன் நான் பிறக்கையிலே கையேந்தும் தந்தைக்கோ
குளிப்பாட்டி சடங்கு செய்வேன்!

தோள்மீதும் மார்மீதும் தூக்கி எனைசுமந்து
மாளாமல் அனுதினமும் அரவணைத்து- ஆளாக்கப்
பள்ளிக்குப் போயமர்த்தும் தந்தைக்கோ இன்றுயான்
கொள்ளிதனைக் கையேந்து வேன்.

கேட்ட பொழுதிலெல்லாம் காசுதந்து என்னிதயம்
வேட்டதெல்லாம் அன்புடனே விளைவித்து -நாட்டமுடன்
அள்ளி அரவணைத்த அத்தனுக்கோ இன்றுயான்
எள்ளெடுத்து  இறைத்திடுவேன்

உள்ளுடலின்  கருப்பைதனில் உளமார சுமந்திட்ட 
நல்லகத்தாள் அன்னைதனை மிஞ்சிடவே -உள்ளமெனும்
கருப்பையில் எனையிருத்தி காலமெல்லாம் சுமந்தவர்
க்கோ
தருப்பையை விரலேந்து வேன்.

நானுலகில் உதித்திடவே உயிரளித்து என்னிடத்தில்
தேனொழுகும் தண்மொழிகள்  உரைத்திட்டு -நான்விரும்பும்
பண்டமெல்லாம் எனக்களித்த பாசமிகு தந்தைக்கோ
பிண்டமதைப் பரிமாறு வேன்.

அறிவெல்லாம் எனக்களித்து அரவணைத்து யான்கொண்ட
குறையெல்லாம் கருதாமல் காத்திருந்து -பரிவுடனே
வாத்சல்யம் காட்டியிவ
ண் வாழ்ந்திருந்த அப்பனுக்கோ
தீச்சட்டி கரமேந்து வேன்.

நடைகொடுத்தாய் நாலும் கொடுத்தாய் நான்வாழ நல்லோர்
படை கொடுத்தாய் பாயதனில் பணிந்து நின்பதத்தில்
உடைகொடுத்த  உயிரன்னை உவந்தணிந்த தாலிக்கும் 

விடைகொடுத்தாய் பாவியிங்கே விழைந்திடவும்  வேறுளதோ!

வாசகர்கள் சமுத்ரா அப்பாவின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கவும்.


-- 
Reply all
Reply to author
Forward
0 new messages