தமிழ்நாட்டுப் பழமொழிகள்

521 views
Skip to first unread message

Asif Meeran AJ

unread,
Jun 20, 2010, 9:29:22 AM6/20/10
to பண்புடன்
வேறொரு குழுமத்தில் நண்பர் இப்னு ஹம்துன் இட்ட பதிவை இங்கே முன்வைக்கிறேன் பண்புடனில் இதற்கெல்லாம் அவசியமில்லை என்று நினைத்து பதிவிடாத அவரை வன்மையாகக் கண்டிக்கிறேன்
***********************

வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் (வசெந்தம்) குழுமத்தில் நண்பர் சீ.ந.ராஜா எடுத்துவைத்த தமிழ்நாட்டு பழமொழிகள்:
 
ஒரு ஆவணச் சேமிப்பின் எண்ணத்தில் இங்கு பதிகிறேன்.
 
தமிழ்நாட்டுப் பழமொழிகள் 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
அசையாத மணி அடிக்காது
அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.
அமைதி சாந்தத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.
அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
அன்பே கடவுள்.
அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.
அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.
அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.
அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.
அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.
அதிக ஓய்வு அதிக வேதனை.
அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.
அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.
அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.
அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.
அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.
அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.
அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
அறவால் உணரும்போது அனுமானம் எதற்கு?
அன்பாக் பேசுபவருக்கு அந்நியர் இல்லை.
அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.
அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.
அரசனும் அன்னைக்கு மகனே.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.
அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்
அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!
அஞ்சியவனைப் பேய் அடிக்கும்.
அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.
அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.

ஆடிப்பட்டம் தேடி விதை.
ஆழம் தெரியாமல் காலை விடாதே!
ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்!
ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.
ஆயுள் நீடிக்க உணவைக் குறை.
ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல், ஆவணி முழுசாரல்.
ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.
ஆடே எரு; ஆரியமே வெள்ளாமை.
ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல.
ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை.
ஆறுவது சினம்.
ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.
ஆபத்திற்கு பயந்து ஆற்றிலே விழுந்தது போல.
ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து மேல்.
ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
ஆலை விழுது தாங்கியது போல.
ஆடு பகை குட்டி உறவா?
ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.
ஆடி ஓய்ந்த பம்பரம் போல.
ஆரம்பத்தில் சூரத்துவம்.
ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.
ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும்.
ஆபத்தினைக் கடந்தால் ஆண்டவனே மறந்து போகும்.
ஆற்றுநீர் பித்தம் போக்கும்
குளத்து நீர் வாதம் போக்கும்
சோற்றுநீர் எல்லாம் போக்கும்
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை.

இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.
இளமையில் கல்.
இளங்கன்று பயமறியாது.
இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.
இளமையில் கல். முதுமையில் காக்கும்.
இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.
இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.
இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.
இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.
இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
இறங்கு பொழுதில் மருந்து குடி.
இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.
இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?
இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.
இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.
இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.
இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.
இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள்.
இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.
இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.
இடுக்கன் வருங்கால் நகுக.
 
ஈ.

ஈகைக்கு எல்லை எதுவுமே இல்லை.
ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.

உழுத நிலத்தில் பயிரிடு.
உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.
உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.
உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.
உழைத்து உண்பதே உணவு.
உப்பிட்டவரை உள்ளவும் நினை.
உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு

ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது.
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.
ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.
ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.

எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு, எதிரே வந்த நாயை அடிச்சானாம்.
எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்லை. எட்டி எட்டிப் பார்த்தவனுகு எட்டுப் பணியாரம்.
எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.
எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகம், சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க விட்டுப் போகுமே விக்கல்.
எந்த விரலைக கடித்தாலும் வலி இருக்கும்.
எறும்புக்கு பனித் துளியே வெள்ளம்.
எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.
எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.
எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.
எலி வேட்டைக்குத் தவில் வேண்டுமா?
எண்ணம்போல் வாழ்வு.
எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

ஏணியைச் செங்குத்தாக வைப்பவன் எளிதில் பின்பக்கம் விழுவான்.
ஏழை சொல் அம்பலம் ஏறாது.
ஏழைக்கு ஒரு வியாதி; பணக்காரனுக்கு நூறு.
ஏகாந்தம் என்பது இறைவனுக்கே பொருந்தும்.
ஏழைக்கு ஒருபோதும் வாக்குக் கொடுக்காதே; பணக்காரனுக்கு ஒருபோதும் கடன் படாதே!
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.

ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி.
ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா?
 
ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் நுழைந்தானாம்.
ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.
ஒரு கையால் இறைத்து இரு கைகளால் வார வேண்டும்.
ஒட்டகத்தின் மேல் உள்ளவனுக்கு முதுகு கூன் இல்லை.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
ஒரு கை தட்டினால் ஓசை எழாது.
ஒழுக்கம் விழுப்பம் தரும்.
ஒவ்வொரு நாளையும் உனது சிறந்த நாளாய் எண்ணு.
ஓரே குஞ்சு உள்ள கோழி ஓயாமல் கொக்கரிக்கும்.
ஒத்தடம் அரை வைத்தியம்.
ஒரு சொல் கோபத்தைக் கிளறுகிறது அல்லது அன்பைக் கிளறுகிறது.
ஒருவர் பொறுமை இருவர் நட்பு.

ஓநாயிடம் அன்பு செலுத்தாதே! அது ஆட்டிற்குச் செய்யும் கேடு.
ஓடைகளை நிரப்புவது மழைதான். பனித்துளிகள் அல்ல.
ஓடிப் பழகிய கால் நிற்காது.
ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் வேண்டும்.

கண்ணுக்கு இமை பகையா?
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.
கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
கவலைகள் குறைந்தால் கனவுகள் குறையும்.
கனவுகள் குறைந்தால் பேச்சுக்கள் குறையும்.
பேச்சுக்கள் குறைந்தால் குற்றங்கள் குறையும்.
கடவுளுக்கு பயந்து வாழ்க்கை நடத்து.
கடுக்காய் நூறு தாய்க்குச் சமம்.
கடுங்காற்று மழைக்கூட்டும்.
கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.
கண்ணீரை விட விரைவில் காய்வது எதுவும் இல்லை.
கல்யாணம் பண்ணிப் பார். வீட்டைக் கட்டிப்பார்.
கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.
கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.
கஞ்சித் தண்ணிக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.
கஞ்சன் ஒற்றைக் கண்ணன்; பேராசைக்காரன் குருடன்.
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்.
கஞ்சி வார்க்க ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.
கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
கல்வி விரும்பு.
கலைகளுக்கெல்லாம் அடிப்படை கலப்பை.
கனவில் குடிக்கும் பாலை தகரக் குவளையில் குடித்தால் என்ன தங்கக்கோப்பையில் குடித்தாலென்ன?
கணக்கு எழுதாதன் நிலைமை.
கழுதை புரண்ட இடம் மாதிரி.
கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
கடன் இல்லாச் சோறு கவளமாயினும் போதும்.
கடலில் கரைத்த பெருங்காயம் போல.
கடல் தாண்ட மனமுண்டு; கால்வாயைத் தாண்ட மனமில்லை.
கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
கடல் நீர் இருந்தென்ன? காஞ்சிரை பழுத்தென்ன?
கடல் மீனுக்கு நீந்தவா கற்றுத்தர வேண்டும்.
கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.
 
கா

காலம் போகும் வார்த்தை நிற்கும்.
கால் அடிப்பட்ட நாயும், காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவாது.
கால் இல்லாதவன் கடலைத் தாண்டுவானா?
கார்த்திகை கன மழை.
கார்த்திகை நண்டுக்கு கரண்டி நெய்.
கார்த்திகை கண்டு களம் இடு.
கார்த்திகைப் பிறையைக் கண்டவுடன் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு.
காணிச் சோம்பல் கோடி நட்டம்.
காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல.
காற்றுக்குச் சாய்கிற நாணல் தான் காலத்துக்கும் நிலைக்கும்.
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
காலிப் பெட்டிகளைப் பூட்ட வேண்டியதில்லை.
காலைச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது.
காலடி வைக்கும்போதே நீரானால் கடலைத் தாண்டுவது எப்படி?
காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி.
கார்த்திகை கார் கடை விலை; தை சம்பா தலை விலை.
கார்த்திகைப் பனியைப் பாராதே. கட்டி ஓட்டடா ஏர் மாட்டை
கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய் வழியும்.
கார்த்திகை கால் கோடை.
கார்த்திகை மாதம் கையிலே, மார்கழி மாதம் மடியிலே.
கி

கிணற்றைப் பனி நீரால் நிரப்ப முடியாது.
கிட்டப் போயின் முட்டப் பகை.
கிட்டாதாயின் வெட்டென மற.
கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல.
கிணற்றுக்கு அழகு தண்ணீர், பெண்ணுக்கு அழகு திலகம்.
கீ

கீரைத்தோட்டமே மருந்துப் பெட்டி
கு

குமரி தனியாகப் போனாலும் கொட்டாவி தனியாகப் போகாது.
குருடனுக்கு ஒரே மதி.
குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல.
குருட்டுக் கழுதைக்கு இருட்டைப் பற்றி பயமில்லை.
குப்பை உயர்ந்தது, கோபுரம் தாழ்ந்தது.
குதிரையும் கழுதையும் ஒன்றா?
குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்து.
குதிரை இருப்பறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
குடி குடியைக் கெடுக்கும்.
குத்தி வடிந்தாலும் சம்பா; குப்பையிலே போட்டாலும் தங்கம்.
குயிலும் குரலும் மயிலும் அழகும் போல.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
கூ

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
கூழானாலும் குளித்துக் குடி.
கூட்டு வியாபாரம் குடுமிப்பிடி.
கூலிப் படை வெட்டுமா?
கூத்தாடி கிழக்கே பார்ப்பாள்; கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.
கெ

கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை
கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?
கெடுவான் கேடு நினைப்பான்.
கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.
கெடுப்பதும் வாயால், படிப்பதும் வாயால்.
கை

கை காய்ந்தால் கமுகு காய்க்கும்.
கை பட்டால் கண்ணாடி.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
கொ

கொடிக்கு காய் பாரமா?
கொடாக் கண்டன் விடாக் கண்டன்.
கோ

கோழைக் கட்டுக்குக் கோவைக் கிழங்கு.
கோபத்தைத் தடுக்கத் தூதுவளைக் கீரை.
கோணல் இல்லாத தென்னை மரத்தையும் விவாத்ததில் சளைக்கும பெண்ணையும் காண்பது அரிது.
கோமளவல்லிக்கு ஒரு மொழி
கோளாறுகாரிக்குப் பல மொழி
கோபத்திற்குக் கண்ணில்லை.
கௌ

கௌரவம் கொடு; கௌரவம் கிடைக்கும்.
 

சகோதரனைப் போன்ற நண்பனுமில்லை
சகோதரனைப் போன்ற எதிரியும் இல்லை.
சத்தியத்தின் மறுபெயர் மனசாட்சி
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
 
சா

சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்.
 
சி

சிறுதுளி பெருவெள்ளம்.
சிறு புண்ணையும், ஏழை உறவினனையும் அலட்சியம் செய்யாதே.
சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
சித்திரை எள்ளைச்சிதறி விதை.
சித்திரை என்றால் சிறுப்பதும் இல்லை
பங்குனி என்றால் பருப்பதும் இல்லை
வைகாசி என்றால் வளர்வதும் இல்லை
சித்திரைப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்.
சித்திரை, ஐப்பசி பகல்-இரவு சமம்.
சித்திரை மழை செல்ல மழை.
சீ

சீரைத் தேடின் ஏரைத்தேடு
 
சு

சுக்கு கண்ட இடமெல்லாம் பிள்ளை பெற முடியுமா?
சுட்ட எண்ணயைத் தொடாதே; வறுத்த பயிற்றை விடாதே!
சுக்கைப் போல மருந்தில்லை.
சுப்பிரமணியரைப் போல் தெய்வமில்லை.
சுத்தம் சோறு போடும்.
சுற்றம் சூழ வாழ்
சுற்றம் பாரக்கின் குற்றமில்லை.
சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்.
சூ

சூடு கண்ட பூனை அடுப்பண்டை போகாது.
சூடத்தில் கொறடு போட்டால் கம்பிலே கழுதை மேயும்.
சூதும் வாதும் வேதனை செய்யும்
 
செ

செயல்தான் மிகச்சுருக்கமான பதில்
செருப்புள்ள காலுக்கு பூமியெல்லாம் தோல் விரிப்பு.
செருப்புக்குத் தக்கவாறு காலைத் தறிப்பதா?
 
சே

சேற்றுக்குள் கல் வீசினால் உன்முகம்தான் சேறாகும்.
சேற்றில் முளைத்த செந்தாமரை
 
சோ

சோம்பேறிக்குத் தானம் செய்யாதே.
சோம்பித் திரியேல.
சோற்றில் பூசணிக்காயை மறைப்பதா?

தண்ணீரில் கிடக்கும் தவளை, தண்ணியைக் குடிச்சதைக் கண்டது யாரு? குடியாததை கண்டது யாரு?
தண்ணீரே உணவுகளின் அரசன்.
தங்கத்திற்குச் சோதனை நெருப்பு!
பெண்ணிற்குச் சோதனை தங்கம்!
மனிதனுக்கச் சோதனை பெண்!
தரித்திரம் நெருப்பால் செய்த ஆடை
தண்ணீரில் அடி பிடிக்கிறது.
தலை பகை, வால் உறவா?
தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அணைக்கும்.
தலைக்குத் தலை பெரிய தனம்.
தன் தப்பு பிறருக்குச் சத்து
தன் உயிர்போல் மண் உயிர் நினை.
தனக்கென்றால் பிள்ளையும் களை வெட்டும்.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
தன்னைத்தானே வெல்பன், உலகின் தலை சிறத வீரனாவான்.
தன் கையே தனக்கு உதவி.
தர்மம் தலை காக்கும்.
தர்மம் கொடுத்ததும், புசித்ததும்தான் ஒருவனுகுச் சொந்தம்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
தா

தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.
தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை.
தாய்க்கு உதவாதவன் யாருக்க உதவுவான்.
தாய், தந்தை தவிர எதையும் வாங்கலாம்.
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
தானே தவறி விழுபவன் அழுவதில்லை.
தாமரை இலைத் தண்ணீர்போல தவிக்கிறான்.
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.
தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
தாய் கஞ்சிக்கு அழுதாளாம். மகள் இஞ்சிக்கு அழுதாளாம்.
தி

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.
திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள் மன்னிக்கப்படாத பாவங்கள்.
தீ

தீய வாழ்க்கையே ஒரு வகையில் மரணம்தான்.
தீமையைக் காண்பதைவிடக் குருடாயிருப்பது மேல்.
து

துறவிக்கு வேந்தன் துரும்பு.
தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
துள்ளுகிற மாடுபொதி சுமக்கும்.
தும்மை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பதா?
துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.
துணிந்தவனுக்குத் துக்கமில்லை; அழுதவனுக்கு வெட்கமில்லை.
தூ

தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.
தூண்டில்காரனுக்கு மிதப்பு மேலே கண்.
தூங்குகிறவர் சாவதில்லை, வீங்கினவர் பிழைப்பதில்லை.
தூங்கின பிள்ளை பிழைத்தாலும் ஏங்கின பிள்ளை பிழைக்காது.
தூங்காதவனே நீங்காதவன்.
தூரமிருந்தால் சேர உறவு.
 
தெ

தென்னாலிராமன் பூனை வளர்த்தது போல.
தெவிட்டாத கனி பிள்ளை, தெவிட்டாத பானம் தண்ணீர்.
தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
தெண்டத்துக்கு அகப்படும், பிண்டத்துக்கு அகப்படாது.
தென்றல் அடிக்கிற காற்றே என் இறுக்கத்தைச் சற்றே ஆற்றே?
தெற்கு வெறித்தால் தேசம் வெறிக்கும்.
 
தை

தையல் சொல் கேளேல்.
தை பிறந்தால் வழி பிறக்கும்.
தொ

தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆட்டும் கை.

பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
பணம் பத்தும் செய்யும்.
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
பணம் உள்ளவனுக்கு அச்சம்;
பணம் இல்லாதவனுக்கு வருத்தம்.
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்.
பசித்துப் புசி, வியர்த்துக் குளி.
பலர் முகர்ந்த மலரில் மணம் இருக்காது.
பல் போனால் சொல் போச்சு.
பல் இருந்தால் தவளையும் கடிக்கும்.
பணக்கார்ர்கள் பார்வை மங்கலாகத் தெரியும்.
பங்குனி மாதம் பதர் கொள்.
பங்குனி மாதம் பந்தலைத் தேடு.
பங்குனி பனி பால் வார்த்து மெழுகியது போல்.
படுக்க படுக்க பாயும் பகை.
பந்திக்கு முந்து, படைக்கு மருந்து.
பழமொழி பொய்த்தால் பால் பால் புளிக்கும்.
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
பணிவற்ற மனைவி பகைவர்க்கு ஈடாவாள்.
பணம் பாதாளம் வரை பாயும்.
பா

பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.
பாம்பு உங்களை நேசிக்கிறதென்று அதைக்கழுத்தில் சுற்றிக் கொள்ளாதே!
பி

பிறரிடம் எந்தக் குணத்தை வெறுக்கிறாயோ அந்தக் குணம் உன்னை அடையவிடாதே!
பிறர் கவலை உன் தூக்கத்தைக் கெடுக்காது.
பிச்சை புகினும் கற்கை நன்றே!
பிணியற்ற வாழ்வே பேரின்பம்.
பிறருக்கு நீ கொடுப்பது பிச்சை; நீ பெறுவது பேரின்பம்.
பு

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
புலியின் குகைக்குள் நுழையாமல் புலிக்குட்டிகளை எடுத்துக்கொள்ள முடியாது.
புலி இருந்த காட்டில் பூனை இருக்கவும்
சிங்கம் இருந்த குகையில் நரி இருக்கவும்
யானை ஏறியவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே!
புத்தகமும் நண்பர்களும் நிறைவாகவும் நல்லதாகவும் இருக்க வேண்டும்.
புத்திசாலிகள் பழமொழியை உண்டாக்குகிறார்கள்; முட்டாள்கள் அவற்றைத் திரும்பச் சொல்கிறார்கள்.
புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்;
முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்.
பூ

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
பூனைக்கு பிறந்தது எலி பிடிக்கும்.
பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு?
பூ விற்ற கடையில் புல் விற்கவும்;
பெ

பெண் கையில் கொடுத்த பணம் தங்காது
ஆண் கையில் கொடுத்த குழந்தை வாழாது.
பெண் என்றால் பேயும் இரங்கும்.
பெருமைக்குச் சோறு கட்டி புறக்கடையில் அவிழ்த்தானாம்.
பெண்ணிற்குப் பொட்டிட்டுப் பார்.
சுவருக்கு மண்ணிட்டுப் பார்
பெண்ணிற்குத் தெரிந்த இரகசியம் ஊரெல்லாம் பரவிய அம்பலம்.
பொ

பொன், பெண், மண் ஆகியவை சண்டையின் மூலகாரணங்கள்,
பொன் வைக்கும் இடத்தில் பூவை வைத்தப்பார்.
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை;
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை;
பொன்னாங்கண்ணிக்குப் புளியிட்டு ஆக்கினால் உண்ணாத பெண்ணும் ஓர் உழக்கு உண்ணும்.
பொறுமை கடலினும் பெரிது.
பொறுத்தார் பூமி ஆள்வார்.
பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது.
பொல்லாத காலத்துக்குப் புடவையும் பாம்பாகும்.
போ

போகும்போது புளியமரத்தடியில் போ
வரும்போது வேப்பமரத்தடியல் வா.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்.
நரியோடு சேர்ந்த சேவல் நன்மை அடையாது.
நன்றி மறவேல்.
நன்றி கொன்றார்க்கு உய்வில்லை.
நம்பிக்கையே ஏழையின் எதிர்காலம்.
நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால் உன் கோழிகளைக் கவனி.
நன்மைக்கு நன்மை செய்
தீமைக்கு நன்மையே செய்
நல்ல புத்தகங்களைச் சேர்த்து வைத்திருப்பவன்
நிறைய நண்பர்களைச் சேர்த்து வைத்துள்ளான்.
நம்பிக்கையும் துணிவும் வெற்றி மகுடத்தின் இரு வைரங்கள்.
நா

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை
நாளை என்பது நட்டாற்று ஓடம்.
நாளை என்று ஒருநாள் உண்டா?
நாதன் ஆட்டம் திருப்பதியில் தெரியும்.
நாடு முழுவதும் கூழானாலும் ஏழைக்குக் கரண்டி அளவுதான்.
நாளும் அதிகாலையில் நீராடு.
நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகுமா?
நி

நிலையாமை ஒன்றே நிலையானது.
நீ

நீலிக்கு கண்ணீர் இமையிலே.
நீ வாழ்வின் முற்பகுதியில் வெற்றி கண்டுவிடு.
நீ எதையும் விழுங்க முடியும்; உன்னை எது விழுங்க முடியும் என்பதை நீ எண்ணிப்பார்.
நெ

நெருப்பிலே தப்பி வந்தவன் வெயிலில் வாடமாட்டான்.
நெருப்பென்றால் வாய் வந்து விடாது.
நொ

நொறுங்கத் தின்றால் நூறு வயது.
நொண்டிக்குச் சறுக்கினதே சாக்கு.
நோ

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

மனம் போல வாழ்வு
மனம் ஒரு குரங்கு
மற்றவர்களை மகிழ்விப்பதே உண்மையான மகிழ்ச்சி
மகிழ்ச்சி ஒரு மனிதனின் பலத்தில் பாதி.
மனைவி வீட்டின் ஆபரணம்.
மனைவி சொல்லே மந்திரம்.
மனிதனுக்கு மரியாதை; மலருக்கு நறுமணம்
மனித நேயம் வளர்ப்பதே மதம்.
மருந்தேயானாலும் விருந்தோடு உண்க.
மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான்.
மதியாதார் வாசல் மிதியாதே!
மனசாட்சியை ஏமாற்றாதே!
மனைவியைத் தேர்ந்தெடுக்கும்போது கிழவனின் பார்வை வேண்டும்; குதிரையைத் தேர்ந்தெடுக்கும்போது இளைஞனின் பார்வை வேண்டும்.
மந்திரம் கால்; மதி முக்கால்.
மலர்ந்த முகம் மலிவான உணவையும் அறுசுவை ஆக்கிவிடும்.
மனிதன் ஒரு மனைவியைப் பெற முடியாதபோது துறவியாகிறான்.
மனிதனின் அழகு அவன் நாக்கு.
மா

மாடு காணாமல் போனவனுக்கு மணியோசை கேட்டுக் கண்டே இருக்கும்.
மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே!
மாசி பங்குனியில் கரும்பு ஆறு!
மாதா, பிதா, குரு, தெய்வம்.
மி

மின்னுவதெல்லாம் பொன்னல்ல
மீ

மீன் குஞ்சுக்கு நீந்தப் பழக்க வேண்டுமா?
மு

முறையான நடத்தை மிகச் சிறந்த மருந்து.
முதலில் கேட்டுக்கொள்; பிறகு பேசு
முன் வைத்த காலை பின் வைக்காதே!
முயன்றால் முடியாதது இல்லை.
முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.
முயற்சி திருவினையாக்கும்.
மூ

 
மூடநம்பிக்கைக்கு மருந்தில்லை.
மூன்றாவது பெண் பிறந்தால் முற்றமெல்லாம் பொன்.
மூடிய கைகளுடன் மனிதன் உலகிற்கு வருகிறான்; திறந்த கைகளுடன் அதைவிட்டுப் போகிறான்.
மை

மை விழியாள் மலர விழித்தால் மண்டபத்து ராஜாக்கள் பெண்டாள வருவார்களாம்!

வட்டியோடு முதலும் போச்சு.
வளைகிற முள் நுழையாது.
வயிற்றுப் பாம்புக்குக் கடுகும் வளைப் பாம்பிற்கும் வெந்நீடும் இடு.
வளமான பூமியில் வேளாண்மை செய்தால் நிலையாகத் திருமணம் நீ செய்த கொள்ளலாம்.
வருமானம் என்பது செருப்பு அளவு குறைந்தால் கடிக்கும் அதிகரித்தால் நடப்பது கஷ்டம்.
வலியுள்ள இடத்தில் மனிதன் கைவைத்துப் பார்க்கிறான்.
வண்டி வந்தால் வழி உண்டாகும்.
வளர்த்த கடா மார்பில் பாய்வது போல.
வா

வாய் உள்ளவன் உள்ளே.
  வாழைப்பழம் கொண்டு வந்தவன் வெளியே!
வானம் சுருங்கில் தானம் சுருங்கும்.
வாக்குறுதி என்பதும் ஒருவகைக் கடனே.
வாயைக் கேட்டுத்தான் வயிறு சாப்பிட வேண்டும்.
வாழ்ந்த மகள் வந்தால் வர்ணத் தடுக்கு. கெட்ட மகள் வந்தால் கிழிந்த தடுக்கு.
வாழ்க்கையில் இரு பகுதிகள் உண்டு.
கடந்த காலம் ஒரு கனவு
வருங்காலம் ஒரு பெருமூச்சு
வாய் அரை வைத்தியன்.
வாழும் வீட்டிற்கு ஒரு கன்னிப் பெண்
  வைக்கோற் படப்பிற்கு ஒரு கன்றுக்குட்டி.
வி

வித்தாரக் கள்ளி விறகு கொண்டு போனாளாம் கற்றாழை முள் கொத்தோடு ஏறியதாம்
விரலுக்கேற்ற வீக்கம்.
விளையும் பயிர் முளையிலே தெரியும்
வீ

வீணை கோணினும் நாதம் கோணுமா?
வெ

வெட்கப்பட்டுக் கொண்டிருப்பவன் உலகை அனுபவிக்க முடியாது.
வே

வேலையில்லாதிருத்தல் ஆயிரம் நோய்களைக் கொண்டுவரும்

துரை.ந.உ

unread,
Jun 20, 2010, 9:39:46 AM6/20/10
to panb...@googlegroups.com
அத்தனையும் கரு
 
அருமை அருமை
 
நன்றி இருவருக்கும்

 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

ச.பிரேம்குமார்

unread,
Jun 20, 2010, 12:04:35 PM6/20/10
to panb...@googlegroups.com

அற்புதமான பொக்கிஷமிது. பகிர்ந்தமைக்கு நன்றி

stalin felix

unread,
Jun 20, 2010, 1:11:08 PM6/20/10
to panb...@googlegroups.com
waw :))



--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/


sk natarajan

unread,
Jun 20, 2010, 1:39:01 PM6/20/10
to panb...@googlegroups.com
அத்தனையும்  அற்புதம்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/


2010/6/20 Asif Meeran AJ <asifm...@gmail.com>

இப்னு ஹம்துன்

unread,
Jun 20, 2010, 3:09:32 PM6/20/10
to panb...@googlegroups.com
2010/6/20 Asif Meeran AJ <asifm...@gmail.com>
வேறொரு குழுமத்தில் நண்பர் இப்னு ஹம்துன் இட்ட பதிவை இங்கே முன்வைக்கிறேன் பண்புடனில் இதற்கெல்லாம் அவசியமில்லை என்று நினைத்து பதிவிடாத அவரை வன்மையாகக் கண்டிக்கிறேன்
 
அன்பு அண்ணாச்சி,
பண்புடனில் இந்த இடுகையை எடுத்துவைக்காததற்கு வருந்துகிறேன்.  குறிப்பான காரணங்கள் ஏதுமில்லை. மறதி தான்.
 
இணையத்தில் நேரம் வாய்க்கையில் மட்டும்  உலவுவதால் பண்புடனுக்கு அனுப்ப மறந்திருப்பேன் போல. ஆனால், மார்ச் 29ல் இடத்தவறியதை ஜூன் 20ல் வந்து கண்டிக்காமல் நீங்களாவது கொஞ்சம் சுறுசுறுப்பாக முன்கூட்டியே கண்டித்திருக்கலாம். :)))

sadayan sabu

unread,
Jun 21, 2010, 12:05:20 AM6/21/10
to panb...@googlegroups.com
எடுத்துப் போட்ட அண்ணாச்சிக்கு பாராட்டுகள்

Kavitha .

unread,
Jun 21, 2010, 12:18:17 AM6/21/10
to panb...@googlegroups.com
பழமொழிகளின் தொகுப்பு அருமையாக உள்ளது

மிகவும் நன்றி

2010/6/20 Asif Meeran AJ <asifm...@gmail.com>
வேறொரு குழுமத்தில் நண்பர் இப்னு ஹம்துன் இட்ட பதிவை இங்கே முன்வைக்கிறேன் பண்புடனில் இதற்கெல்லாம் அவசியமில்லை என்று நினைத்து பதிவிடாத அவரை வன்மையாகக் கண்டிக்கிறேன்

--

Asif Meeran AJ

unread,
Jun 21, 2010, 2:11:16 AM6/21/10
to panb...@googlegroups.com
 இணையத்தில் நேரம் வாய்க்கையில் மட்டும்  உலவுவதால் பண்புடனுக்கு அனுப்ப மறந்திருப்பேன் போல. ஆனால், மார்ச் 29ல் இடத்தவறியதை ஜூன் 20ல் வந்து கண்டிக்காமல் நீங்களாவது கொஞ்சம் சுறுசுறுப்பாக முன்கூட்டியே கண்டித்திருக்கலாம். :)))

என்னைப்பத்தித் தெரிஞ்சிருந்தா இப்படிச் சொல்லியிருக்க மாட்டீங்க இப்னு
நம்ம பசங்க கிட்ட கேளூங்க.. 2011 ஜூன்ல போட வேண்டிய விசயத்தை 2010லேயே போட்ட அண்ணாச்சி வால்கன்னு தொடங்கிடுவானுங்க :-))

சென்ஷி

unread,
Jun 21, 2010, 2:15:43 AM6/21/10
to panb...@googlegroups.com
மொக்கை போடக்கூடாதுன்னு கட்டுப்ப்ப்ப்ப்ப்பாடா இருக்கேன் அண்ணாச்சி :((

2010/6/21 Asif Meeran AJ <asifm...@gmail.com>

 இணையத்தில் நேரம் வாய்க்கையில் மட்டும்  உலவுவதால் பண்புடனுக்கு அனுப்ப மறந்திருப்பேன் போல. ஆனால், மார்ச் 29ல் இடத்தவறியதை ஜூன் 20ல் வந்து கண்டிக்காமல் நீங்களாவது கொஞ்சம் சுறுசுறுப்பாக முன்கூட்டியே கண்டித்திருக்கலாம். :)))

என்னைப்பத்தித் தெரிஞ்சிருந்தா இப்படிச் சொல்லியிருக்க மாட்டீங்க இப்னு
நம்ம பசங்க கிட்ட கேளூங்க.. 2011 ஜூன்ல போட வேண்டிய விசயத்தை 2010லேயே போட்ட அண்ணாச்சி வால்கன்னு தொடங்கிடுவானுங்க :-))

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

ஜோசப் பி. கே

unread,
Jun 21, 2010, 2:38:37 AM6/21/10
to panb...@googlegroups.com
அண்ணாச்சி, வால்க, வால்க
2010/6/21 Asif Meeran AJ <asifm...@gmail.com>
என்னைப்பத்தித் தெரிஞ்சிருந்தா இப்படிச் சொல்லியிருக்க மாட்டீங்க இப்னு
நம்ம பசங்க கிட்ட கேளூங்க.. 2011 ஜூன்ல போட வேண்டிய விசயத்தை 2010லேயே போட்ட அண்ணாச்சி வால்கன்னு தொடங்கிடுவானுங்க :-))





--
அன்புடன்
ஜோசப் பி. கே

----------------------------------------------------------------------------------
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை யாடியே போற்றும் பொருள்கேளாய்:

பெற்றம்மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
-----------------------------------------------------------------------------------

ஆசாத்

unread,
Jun 21, 2010, 7:46:48 AM6/21/10
to பண்புடன்
> அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.

சாபத்தா திஸ் நாட் த ப்ரேஸ்...

’அறுக்கமாட்டான் இடுப்புல’

அது எதுக்குன்னா அறுக்கறவன் ஒரு அருவாத்தான் கொணாருவான், அறுக்கமாட்டான்
அம்பது அருவாளக் கட்டிக்குனு பிலிம் காட்டுவான்.

sadayan sabu

unread,
Jun 21, 2010, 11:53:54 PM6/21/10
to panb...@googlegroups.com
அத்தனை பழமொழிகளையும் விட்டு ஒரே ஒரு பழமொழியை மட்டும் எடுத்துப் போட்டதை புரிந்து கொண்டு விளக்கம் தந்த ஆசாத்
 
ஆப் பஹூத் சமஜ்தார் ஆத்மி ஹே

2010/6/21 ஆசாத் <banu...@gmail.com>

நந்தா

unread,
Jun 22, 2010, 2:38:33 AM6/22/10
to panb...@googlegroups.com
மிகவும் அவசியமான ஒன்று. நன்றி இப்னு ஹம்துன்.

நந்தா.

Asif Meeran AJ

unread,
Jun 22, 2010, 2:43:44 AM6/22/10
to panb...@googlegroups.com
நீங்க புது உறுப்பினரா?
அறிமுகம் செய்து கொள்ளுங்கள்

stalin felix

unread,
Jun 23, 2010, 7:02:49 AM6/23/10
to panb...@googlegroups.com
அவரு பழைய உறுப்பினர் தான் அண்ணாச்சி... அவரு வந்தா மே....................................................... 
அதனால ஆண்டுக்கு ஒரு வாட்டி தான் வருவாரு :)))

2010/6/22 Asif Meeran AJ <asifm...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/


நந்தா

unread,
Jun 23, 2010, 7:30:30 AM6/23/10
to panb...@googlegroups.com
ஒரு பெரிய கடப்பாறையை புடுங்கிட்டிருக்கேன் அண்ணாச்சி. :(

Kandavel Rajan

unread,
Jun 23, 2010, 2:25:22 PM6/23/10
to panb...@googlegroups.com
பழமொழி விளக்கம்
மிந்தமிழ் குழுமத்திலிருந்து.....



1.சல்லித் தனம்: ஒரு வரையறை,
2. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.
3. பெண்களிடை இரகசியம் நிற்காது
4. ஆறிலும் சாவு நூறிலும் சாவு,
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

சல்லியன் ஒரு மகாரதன். உடற்கட்டுடன் திகழ்ந்த ஒரு புகழ்பெற்ற போர்த்தளபதி. பாண்டுவின் மனைவி மாதுரியின் தமையன். பாரதப் போரினில் பாண்டவரின் தாய்மாமன்(நகுல சகாதேவகளுக்கு சொந்தத் தாய்மாமன்) தன் பெரும் படையுடன் பாண்டவருக்கு உதவிக் கரம் கொடுக்க வந்து கொண்டிருதான்.

எவருக்கும் அசைந்து கொடுக்காத மலையனைய வீரமும் அருள்சார்ந்த கருணை உள்ளமும் கொண்டவன். அறத்தின் வழி நிற்பவன். யதேச்சதிகாரமும் சூதும் வஞ்சனையும் கொண்ட கௌரவ கூட்டத்தினை அழிப்பதும் பாண்டவர்க்கு பக்கபலமாயிருந்து வாகைசூடுவதும் நல் நெறியினைக் கடைப்பிடிப்பதும் நோக்கமாக வேகமாக வந்துகொண்டிருந்தான்.

இடர் ஒன்று பேருருக்கொண்டு இடம் பெயர்ந்து தன்னை அழிக்க முற்பட்டு வருவதை ஒற்றர்கள் வாயிலாக அறிந்த துரியோதனன் அவசர ஆலோசனைக் குழுவினைக் கூட்டினான்.  கதிகலங்கவைக்க வரும், கண்ணெதிரில் தோன்றும் கூற்றுவனை வீழ்த்த திட்டம் ஒன்றை சகுனி வகுத்துத் தந்தான். திகைப்பூண்டை மிதித்தவன் எண்ணம் சிதறி மாற்று வழி செல்வதைப்போல் வழியில் சல்லியனைச் சந்தித்து ராஜ உபசாரங்கள் செய்ய உயர் அதிகாரிகளை அனுப்பி, மலர் தூவி முகமன் கூறி வரவேற்று, தங்குவதற்கு நெடுகிலும் இடம் அளித்து, பூம்பொழில் உருவாக்கி, அரசு மரியாதையுடன் ஆங்காங்கே மாமன் அமர்ந்து உல்லாசமாக பொழுது போக்கத் தக்க கவலையற்ற ஒரு விசேட சூழலையைப் பலவந்தமாகத்  திணித்து, அளவிறந்த பக்தியும் அன்பும் கொண்டவனாக சேவைகள் செய்ய வைத்தான் துரியோதனன்.. சல்லியன் மனதில் சேவை இயற்றுவோர் எவர் எனத் தெரியாதவாறு நடந்துகொண்டான். ’பாண்டவர்கள் தாம்  பெயர் சொல்லாமலேயே பவ்யமாக, இத்துணை சாதுரியமாக வரவேற்கிறார்கள்’ என்று நினைத்துக் கொண்டிருந்த சல்லியனுக்குப் பின்னர் தெரிய வந்தது வஞ்சக துரியோதனன் தன்னை அடுத்துக் கெடுத்துவிட்டான் என்பதை.

  உளமாறத் தந்த வரவேற்பினைக் கண்டு மகிழ்ந்து உபசாரம் செய்தோருக்கு பக்க பலமாக இருப்பதாக  வாக்களித்தவனுக்கு நிலை தடுமாற ஆரம்பித்தது. உதவி பெற உரிமையுடையோரை எதிரி ஓரங்கட்டிவிட்டான். வாக்கினைக் காக்கத் தன்னைத் தியாகம் செய்யுமாறு நிர்பந்தம் உண்டாக்கிவிட்டான் என்பதை உணர்ந்து வேறு வழி  இல்லாமல் தன் படைகளை பாண்டவர்க்கு அளித்து தான் மட்டும் கௌரவர் பக்கம் இருக்கவேண்டிய கட்டாயம் உருவாகியதை . மனம் விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை எனினும் சதியாலோசனையால் தன்னைப் படையினின்றும் பாண்டவரினின்றும் பிரித்த துரியோதனனின் வஞ்சம் நெஞ்சை குமுற வைத்தது.

இயல்பாகவே   கர்ணனின் மீது வெறுப்புக் கொண்ட சல்லியனை, போர்ப்பேரவையும் விழியிழந்த மூத்த அரசனும்  விரும்பி வேண்டிக்கொண்டதாலும், கர்ணனுக்கு உற்ற துணையாக, தக்க வழிகாட்டியாக பொறுப்பேற்கும் தகுதி சல்லியனத் தவிர வேறு எவருக்கும் இல்லை என்பதாகப் பலரும் பலபடப் பேசியதாலும், இறுதியில் கர்ணனுக்கு தேரோட்டியாக  களமிரங்க வேண்டா வெறுப்பாக சல்லியன் அமர்ந்தான். தேரோட்டியாக வந்தாலும் தன்னிலும் மிதமானவனுக்கு- தரம் புரியாதவனுக்கு ஒத்துழைக்க உள்ளம் கூசினான்.

கர்ணனிடன் குந்தி பெற்ற வரத்தால் ஒருமுறை தவிர்த்து மறுமுறை நாகாஸ்திரம் பயன்படுத்தக்கூடாது எனவும் அர்ச்சுனனைத் தவிற வேறு பாண்டவரைத் தாக்கக் கூடாது எனவும் கர்ணனின் கைகள் கட்டப் பட்டிருந்தன.இச்செய்தி பிறர் அறியாதவை.

தக்க தருணம் எனக்கருதி நாகாஸ்திரத்தைஅர்ச்சுனனின் தலையை இலக்காக வைத்து கர்ணன் தொடுக்க துவங்கும் போது சல்லியன் அர்ச்சுனனின் மார்பினை இலக்காக்கிக் கொள்ளுமாறு அறிவுரை பகன்றான்.

எனக்கு எல்லாம் தெரியும் நீ உனக்கு இட்ட பணியைமட்டும் செய்தால் போதும் என சினந்தான் கர்ணன்.

நடந்தது என்ன நாகாஸ்த்திரம் சீறிப் பாய்ந்து வருங்கால் கண்ணன் அர்ச்சுனனைக்காக்க தேர்த் தட்டினைக் கால் பெருவிரலால் அழுத்தியபோது  தலையைக் கொய்ய வந்த  அஸ்திரம் தலைப்பாகையைக் கிழித்துக்  கீழே உருட்டியது.தலைகொய்யப்படவேண்டிய நிலையில் தலைப்பாகை அழிந்தது.


எனவேதான் இந்தச் செய்தியைச் சொல்ல வந்த பழமொழி,”தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு” என்பதாகும்.

  சல்லியன் கர்ணனின் செய்கைக்கு சினந்து மறுமுறையும் நாகாஸ்திரத்தைத் தொடுத்து அர்ச்சுனனை இருகூறாக்கக் கூறினான். கர்ணனிடம் கோரிய வரம் மறுபிரயோகத்தைத்  தடுத்தது என்பதையும் கண்ணனின் சங்கல்பம் அர்ச்சுனனை எப்படியும் காக்கும் என்பதையும் மனதில் கொண்டு சல்லியனின் வார்த்தைக்கு செவிகொடுக்காது இருந்த கர்ணனை தூஷித்து கடும் வார்த்தைகள் பேசி எதிரியை அழிக்காமைக்குக் காரணம் கேட்டான் சல்லியன்.

ஏதும் சரியான பதில் பேசாமலும், மகாரதன் ஆன தன் வார்த்தைகளுக்கு மதிப்புத்தந்து செவி சாய்க்காமலும் தன்போக்கில் இருக்கும் கர்ணனைவிட்டு விலக நினைத்தான் சல்லியன்.. ஆனாலும், உலகம் என்ன பேசிப் பழிக்கும் என்பதையும் தன்னைப்  பொறுப்பேற்க வைத்தோர்க்கு என்ன காரணம் காட்டமுடியும் என்பதையும் நினைந்து மனம் குமைந்தான்.

இந்நிலையில் வாளாவிருந்த சால்லியன் தேரில் அமர்ந்திருக்க தேரின் சக்கரம் ஒரு குழியில் இறங்கியது. அந்தச் சக்கரத்தை வெளியே இழுத்தெடுத்து விரைந்து அர்ச்சுனன் இருக்கும் இடத்தில் நெருங்கிச் செல்லுமாறு கர்ணன் பதைத்துக் கூறினான். வெறுப்பின் உச்சத்தில் கொதித்துக் கொண்டிருந்த சல்லியன்,
” சுயபுத்தியுமில்லை; சொல்புத்தியும் எடுபடவில்லை. உன்னுடன் நான் இருந்தும் நீ தோல்வியடைவதைக் கண்டால் உலகம் என்னை ஏளனம் செய்யும்; உனக்கு சரி எனப்பட்டதை நீ செய்கிறாய்;. என் வயதுக்கும் அனுபவ முதிர்ச்சிக்கும் உன்னிடம் தேரோட்டியாக உடன்பட்டு நான் வந்தது என் இழிந்த நிலையாகும். மேலும் உன்னுடன் இருக்க என் மனம் இசையவில்லை. உன்னைவிட்டு நான் இந்தக் கணமே விலகுகிறேன்” என்று கூறிவிட்டுத் தேரினின்றும் குதித்துக் கீழிறங்கி வெளியேறினான். தவித்த வேளையில் தன்னை தனியேவிட்டு விலகும் சல்லியனை அற்பமாக மனதில் கொண்டு தானே கீழ்இறங்கி சக்கரத்தை வெளியிழுக்க ஆரம்பித்தான் கர்ணன்..

இவ்வாறு ஆபத்துக் காலத்தில் காக்கக் கடமைப் பட்டவர்கள் வழியிருந்தும், வாய்ப்பு அறிந்தும் செயற்படாமல் விலகிச் செல்லும் இயல்பபினை சல்லியன் பெயரால் “சல்லித்தனம்” என வறையறை செய்யப்பட்டு புழக்கத்தில் வந்தது.

ஆயுதத்தைத் தொடாமல் சக்கரத்தை முண்டிமுயன்று தூக்கி வெளிக்கொணரும் கருத்துடன் கர்ணன் இருக்கையில் எதிரிகள் பல திக்கிலும் தாக்கினர்; குற்றுயிரும் குலையுமாக கர்ணன் மலை சாய்ந்ததெனச் சாய்ந்தான்.

கர்ணனிடம் தந்த வாக்குறுதிப்படி குந்திவந்து மகனே என்று மடியில் கிடத்தி வாய்விட்டு உலகறியத் தன்மகன்தான் கர்ணன் என்பதைப் பறைசாற்றினாள். வாயடைத்து நின்ற பாண்டவர் குந்தியைப் பணிந்து உண்மை அறிந்து கர்ணன் தன் மூத்த சகோதரன் என்பதைத் தெரிந்தவுடன் மிகவும்   மனம் நொந்தனர்.

தருமன், “தாயே நீங்கள் கர்ணனை முன்னமேயே உங்கள் மகன் என்று அறிவீர்களா? என்னிடம் நீங்கள் கூறியிருந்தால் அண்னனின் வழிகாட்டலில் இந்தப் போரின் போக்கே மாறியிருந்திருக்குமே! எங்களைத் தர்மசங்கடமான நிலையில் தத்தளிக்க வைத்துவிட்டீர்களே? இதுபோன்று எத்தனை உண்மைகள் இரகசியமாகக் காத்து வைக்கப்பட்டனவோ!?  தாயே மறைத்துவிடும் அளவுக்கு நாங்கள் பாபிகளாகிவிட்டோம். உங்களுக்கெ இந்நிலை என்றால் பிற பெண்டிரைச் சொல்ல ஏதுமில்லை.இன்று முதல் பெண்டிரிடம் இரகசியங்கள் தங்கக் கூடாது, என்ற நிபந்தனை விதிக்கிறேன் ” என்றான்.

கர்ணனுடைய பலம்வாய்ந்த உறவும் தங்களுக்கு கிடைத்திருந்தால் மிக எளிதில் எதிரிகளை முற்றிலும் முறியடித்திருக்கலாம். மாறாக அன்னையின் வயிற்றில் எங்களோடு பிறந்த மூத்தவனை என் கையினால்  அயர்ந்த நேரத்தில் அழிக்க நான், உடன் பிறந்த  தம்பியே அறியாமையால் காரணமானேனே என அர்ச்சுனன் எண்னினான்.


அப்போது கர்ணனைப் பற்றி கண்ணன் கூறுகையில், இந்திரன் கவசகுண்டலத்தைப் பறித்தான்; குந்தி வரம் கேட்டு அவனுடைய வீரத்தைக் குறைத்தாள். துரியன் அன்பைக் காட்டித் தீமையை வளர்த்தான்; சகுனி எதிர்வகையில் கொண்டு செலுத்தினான்.  சல்லியன் உடன் இருந்து கைவிட்டான். எது எவ்வாறாயினிம் பாண்டவருடன் சேர்ந்த ஆறாவது பாண்டவராகக் கர்ணன்  இருந்தாலும் சரி, கௌரவருடன் நூற்றுவரில் ஒருவனாக இருந்தாலும் கர்ணனுக்கு மரணமே விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று கண்னன் விளக்கம் தந்து விதிவலிது என போதித்தான்; ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்ற பழமொழி அங்கு உதயமாயிற்று.
-=-=-=-=-=-=-=-=-=-=-=


  மரியாதை நிமித்தம் தன் அரண்மனைக்கு வருகை தந்த கௌரவர் தலைவன் முற்றத்தில் நீர்போன்று தோற்றமளித்த மாய அமைப்பில் முழங்கால்வரை உடையை உயர்த்திக்கொண்டு கடக்க முயலுகையில் உப்பரிகையில் இருந்த துரௌபதி பரிகாசப் புன்னகை செய்யவும், அகஸ்மாத்தாய் அதைப் பார்க்க நேர்ந்த துரியோதனன் கேளிக்கையாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொள்ளாமல் நெஞ்சில் ஒரு முள் பாய்ந்தாற்போல் வன்மம் கொண்டு பாண்டவரை எவ்வித்தாலாவது அழிக்கவும் பதிலுக்குப் பதில் அவளைப் பழிதீர்க்கவும் உறுதிகொண்டான்.

எளிய சிறிய ஒரு செயல் அரசையே கவிழ்க்கும் நிலைக்கு உருவெடுத்தது.அந்தப் பெண்ணின் சிரிப்பு ஆயிற்று.
பெண் சிரிச்சாப் போச்சு; புகையிலை விரித்தாற்போச்சு. பழமொழி உருவாகியது.
புகையிலையின் ஒரு வடிவம் கருப்பட்டியுடன் சேர்த்து வாயில் மெல்லும் பழக்கம். விரித்து வெகு நேரம் திறந்ததிருந்தால் வீரியம் கெடும் என உண்டவர்கள் தின்றவர்கள் சொல்லிப் போனார்கள்.

-=-=-=-
கண்ணால் கண்டதும் பொய் காதால் கேட்டதும் பொய்.

கதிரவன் உதித்து மாலையில் அடைகிறான். கண்னால் காணும் காட்சி பொய். நடப்பது வேறு செயல். பூமி சுழல ஆதவன் நிலைத்து நிற்கிறான்

நண்பகல்
கர்ணனும் துரியோதனனும் உப்பரிகையில் வெளி மாடத்தில் நின்று உரையாடிக் கொண்டிருக்கின்ற வேளையில் கண்ணபிரான் தூரத்தே வந்து கொண்டிருப்பதையும் எதிர்ப்புறத்திலிருந்து வந்த அஸ்வத்தாமனுடன் சந்தித்துப் பேசுவதையும் கண்டனர்.
பேசுவதைத் தவிர்த்துவிட்டு கண்ணனையும் து.அஸ்வத்தாமனையும் வைத்த விழி வாங்காமல் பார்த்தனர்; என்ன காரணத்தால் சந்திக்கின்றனர்? என்ன பேசத் தலைப்பட்டனர்? என்பதை அறிந்துகொள்ள இயலாத அளவு தூரத்தே அவர்கள் சந்திப்பு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

கண்ணன் கையை மேலே தூக்கிக் காட்டினான். அஸ்வத்தாமனும் மேலே பார்த்தான். உடன் அஸ்வத்தாமன் கீழே குனிந்து கண்னனின் கையினைத் தொட்டான். இதுதான் தொலைவிலிருந்து துரியனும் கர்ணனும்  கண்ட காட்சி.

கர்ணன் துரியனுக்கு தான் கண்ட காட்சியைப் பற்றி தன் அனுமானத்தை விளக்கமாக அளித்தான்.
”கண்ணன் எப்போதும் ஒரு சார்பு மிக்கவன். பாண்டவருக்காக மட்டுமே உதவும் கள்ள நோக்கம் கொண்டவன். வருகின்ற பாரதப் போரினில் நமது தரப்பு நல்லவர்களைப் பாண்டவர்கள் பக்கம் ஈர்க்க முயன்று வருகிறான். அஸ்வத்தாமனும் கள்ளன் கிருட்டினனின் மாய வலையில் வீழ்ந்துவிட்டான் என்றே  கருத இடமிருக்கின்றது.  பூமி சாட்சியாக, சூரியன் சாட்சியாகப் பாண்டவர்க்கே உதவுவேன்  என்று கண்ணனின் கையில் அடித்து சத்தியம் செய்துள்ளான்”. கர்ணன் பேசப் பேச துரியனின் கன்நெஞ்சில் உளிபாய்ந்து இறங்கினால் போல் வன்மமும் காழ்ப்பும் உருவாயிற்று.

நடந்தது தான்  என்ன?

கண்ணனும் து.அஸ்வத்தாமனும் எதேச்சையாகச் சந்தித்தனர். என்ன கடும் வெயிலில் கால் நடையாக கிளம்பிவிட்டீர்கள் என்று கேட்டவனிடம், கண்ணன் ஆம்! அஸ்வத்தாமா! இன்று வெயில் மிகவும் ’சுள்’ என்று எரிக்கின்றது என்று கூறிக்கொண்டே தலைக்கு உயரே ஒளிரும் ஆதவனைப் பார்த்தான். அஸ்வத்தாமனும் பார்த்தான். அப்போது கண்னன் கையினின்றும் ஒரு கனையாழி கழன்று தரையில் விழுந்தது. அதனைக் கவனித்த அஸ்வத்தாமன் எடுத்து கண்னணன் கையில் கொடுத்தான். அவரவர் பணிக்கு அவரவர் பிரிந்து சென்றனர். இங்கே கண்ணால் கண்டது ஒன்று. அவர்களின் கருத்தும் பேச்சும் பொய்.
-=-=-=-=-=
  சாபம் பெற்ற போது மகிழ்ந்தான் இராமயணத்தில் தசரதன் .

சிரவணன் காவடியின் இரு தட்டுகளில் விழிபொய்த்த பெற்றோரைச் சுமந்து தீர்த்த யாத்திரைக்கு எடுத்துச் சென்றவன் கூரம்பு தைக்க துடிதுடித்து வீழ்ந்தான், தசரதனின் கணைக்கு இரையாகித் தன் நிலை குலைந்தான். யானை நீர் குடிக்கின்றது எனக் காதால் கேட்ட ஒலிக்கு இலக்காகி வாய்குவிந்த கலையத்தில் உள்புகும் நீரின் ஓசையில் பாணம் தைத்தான். அன்பு மகன் வீழ்ந்தான் அலறலுடன் மரண ஓலத்தில். தசரதனின் மனம் பதைத்து நினைத்தது ஒன்றிருக்க நடந்தது வேறு ஒன்றாக இருக்க.  சிரவணனை விரைந்து சென்று நேரில் கண்டபோது இளம் பாலகனை அவசியமின்றி குறையொன்றும் இல்லாதவனைக் குற்றுயிருடன் பார்த்த தசரதன் நெருப்பில் வீழ்ந்த புழுவைப்போல் உணர்ந்து செய்வதறியாது பாபச் சுமை பற்றிய தன் இழிசெயலைஎண்ணிப் பாலகனிடம் உண்மையில் நிகழ்ந்தது என்னவெனக்கூறி தன் பிழையைப் பொறுக்குமாறு வேண்டினான். அந்த நிலையிலும் தன் பெற்றோரின் தாகம் தணிக்க விரைந்து தண்ணீர் கொண்டு கொடுக்குமாறு தசரதனிடம் அவன் மரண வேண்டுகோள் வைத்துப் புகழுடம்பு எய்தினான். கையிலே நீர்க் குவளை ஏந்தி கை சோர மெய் சோர  தளர் நடையுடன் சென்று காலை ஓசையில் மகனை ஆசிர்வதித்து புளகம் எய்திய தந்தையும் தாயையும் கை நீட்டிக் குவளை நீரைக் கேட்டு தாகவிடாய் தீர்த்து”என்ன சிரவணா! ஏன் மௌனமாக இருக்கிறாய் மகனே? என விழியிழந்த மாமேதைகள் இருவர் கேட்டபோது எப்படி இவர்களிடம் உங்கள் கொழுகொம்பை உடைத்தெறிந்தேன் என்று சொல்வேன் என்று மேலும் துடித்தான்.” பயமும் ஆதங்கமும் மீதூர பெரிய இதயங்கள் முனகிப் பேசும் தசரதன் வாயிலாக உண்மை அறிந்தபோது, ‘இறந்த எங்கள் பிள்ளையோடு எங்களையும் ஒரு சேர அனுப்பிவிடு’ என்று பேசும் துன்பம் துய்க்கும் தம்பதியரின் கால்களைப் பிடித்துக்கொண்டு என்னை உங்கள் மகனாக்குங்கள். செய்த தவறை மன்னித்து என்னுடன் வாருங்கள் தொடர்ந்து உங்கள் தீர்த்த யாத்திரைக்கு நான் பொறுப்பேற்ரு அனைத்து வசதிகளும் செய்கிறேன் என்ற தசரதனிடம் அவர்கள் உடன் வருவதற்கு எங்கள் உயிர் எங்கள் உடலில் இன்னும் சில நேரமே நிற்கும்.  குழவிக் கூட்டில் கல் எறிந்த மன்னனே நீயும் புத்திர சோகம் என்பதைக் கண்டறிவாயாக! எனச் சாபமிட்டு புகழுடம்பெய்தினர். பெரியோர் இருவரையும், அன்பே உருவான ஒரு தீர்க்க தரிசி மைந்தனையும் ஒருசேர அழித்த வேதனையிலும் ஒருமகிழ்ச்சி ரேகைப் புனிதர்கள் வாயினின்றும் உதிர்ந்த சொற்கள் அடிப்படையில் இனித்தன. பலவாறாகப் புகழ்பெற்றிருந்தாலும் இதுவரை புத்திரபாக்கியம் பற்றி விடைகிடைக்காதபோது ஒரு இளஞ்சூரியன் உதிக்கிறான் என்ற உத்தம வாக்கு சித்திக்கும் என்ற அனுபவ உண்மையில் மகிழ்ந்தான். அதன் பின்னர் தொடர்ந்து நிற்கும் தூமகேதுவான சாபம் நிறம் தெரியாமல் நின்றதும் அவன் உணரத்தான் செய்தான்.

-=-=
மகாபாரதத்தில்.

துரோணரின் அம்பு மழையில், அஸ்திரப் பிரயோகத்தில் பிரளயம் போல் போர்க்களம் தென்பட்டது. கற்றுக்கொடுத்த குரு, அரச பரம்பரை வழுத்தும் உன்னத புருஷர், ஆவேசத்தில் துரியோதனின் விஷமச்சொற்களால் மனம் புண்பட்டு இரண்டில் ஒன்று- வாழ்வு அன்றேல் சாவு என்று கடும்போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. அட்டகாசமான மதயானைகள் பேரிரைச்சலுடன்  மோதும் பிளிறல் போர்க்களத்தில் கேட்க்கும் போதே இரு புறங்களிலும் மட மட வென போர் வீரர்கள் மாய்ந்தனர். அசாத்திய வெறியுடன் துரோணர் முன்னேறி பெரும் பெரும் ரதர்களை துடைத்துத் தள்ளினார். அவருக்குமுன்னர் ஒரு வெட்ட வெளி வட்டம் தொடர்ந்து பின் நோக்கிச் சென்றுகொண்டே இருக்க துரோணரின் ரதம் அதனை ஊடுருவிப் பாய்ந்து எண்ணவொண்ணா சேதாரங்களை விளைவித்தது. ஆங்கு ஒரு ஒலி காதுகளில் விழுந்தது,”அஸ்வத்தாமன் இறந்தான்” குலக்கொழுந்து ஒரே ஒரு வழித் தோன்றல், சர்வ வல்லமையுடையவன், சாவுக்கு அஞ்சாத மாவீரன் அவ்வளவு சுலபமாக மரித்துவிடமாட்டான் என்று அவரது உள்ளம் பேசினாலும், சந்தேகமும் பயமும் துக்கமும் ஒருசேர அவரைச் சிதைக்க ஆரம்பித்தன. “தர்மா! இந்தச் செய்தி உண்மையா?” என விளித்த குருவின் குரலுக்கு மறு மொழியாக அஸ்வத்தாமன் என்ற யானை இறந்துபட்டது” என்றான் தருமன். மாயனின் பாஞ்சஸன்யம் பகுதியில் ஒலிக்க யானை இறந்தது என்ற சொற்றொடர் காதுகளுக்குப் புலப்படாமல் நலிந்து  போயிற்று. இமயம் சரிந்தது போன்று துரோணர் கவனம் திரிகையில் தாக்கப்பட்டு வீழ்ந்தார்.

காதால் கேட்டதும் பொய் ஆயிற்று.
-=-=-=-=
வல்லான் வகுத்ததே வாய்க்கால்.
-=-
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

வியாசர் எழுதிய மகாபாரதத்தில் காலப்போக்கில் இடைச் செருகலாக நிறையக் கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் ஒரு கருத்து உண்டு. அப்படி வரும் கதைகளில் அரவாணிகளைப்பற்றி செய்திகள் உண்டு. திரௌபதிக்கு ஒரு சகோதரி இருந்தாள். அவள் பெயர் சிகண்டி. பெண்ணாக இருந்தபோதும், ஆண் மாதிரி நினைத்து சிகண்டியை வளர்த்தனர் பெற்றோர். இளவரசன் போன்று உடை அணிவித்து, போர்ப் பயிற்சியும் கொடுத்தார்கள். கிட்டத்தட்டஆணாகவே வளர்க்கப்பட்ட       சிகண்டிக்கு கடைசியில் ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள். உண்மை வெளிப்பட்டுவிடும் என்று பயந்து முதலிரவு சமயத்தில் ஓடிவிட, யாரோ ஒரு கந்தர்வன் தனது ஆண் தன்மையை சிகண்டிக்குக் கொடுத்ததாக ஒரு கதையில் இருக்கிறது. பகவான் கிருஷ்ணர்தான் சிகண்டி மீது பரிதாபப் ப்ட்டு அறுவை சிகிச்சை செய்யவைத்து ஆணாக மாற்றியதாகவும் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. கதையில் உண்மை இருக்கின்றதோ இல்லையோ அரவாணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் பழக்கம் அப்போதே இருந்தது என்பதை உணரமுடிகிறது.
    குருக்ஷேத்திரப் போர் ஆரம்பிக்கவேண்டிய நேரம் பஞ்ச பாண்டவர்களில் சகாதேவன், ஜோதிடக் கலையில் தேர்ச்சி பெற்றவன். அவன்,"முப்பத்தி இரண்டு லக்ஷணங்களும் பொருந்திய ஒரு ஆண்மகனை அவனது பரிபூர்ண விருப்பத்துடன் களப்பலி கொடுத்துவிட்டு யுத்தத்தை ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்" என்று உரைத்தான்.

    பாண்டவர் தரப்பில் பார்த்தால், மூன்றே மூன்று பேர்தான் இப்படி சர்வ லட்சணங்களும் பொருந்தியவர்களாக இருந்தனர்.
ஒருத்தர் கிருஷ்ணர்... போருக்கு ஆணிவேர். வியூகங்களை வகுத்துத் தரும் பகவானை பலியிட முடியாது. இன்னொருத்தர் அர்ஜுனன். பாண்டவர் படைக்குத் தளபதியே அவன்தான். அவனைப் பலியிட்டுவிட்டுப் போர்நடத்த முடியாது. இவர்களன்றி மூன்றாவது நபர் அரவான். அர்ஜுனனுக்கும், நாக கன்னிகைக்கும் பிறந்த மகன். அவனைக் கண்டு பேச கிருஷ்ணர் எழுந்து புறப்பட்டார்.

    மதியம் நல்ல சுட்டெரிக்கும் வெயில். ஒரு மலைப்பாங்கான இடத்தில் தனிவழியே கிருஷ்ணன் வந்து கொண்டிருந்தார். அங்கு திடீரென கர்ஜனை போன்று ஒரு குரல் கேட்டது.

" மாமா! நலமா?. உங்களைத்தான் காண வேண்டும் என நினைத்திருந்தேன்." அரவான் பளிச்சென ஒரு குகையிலிருந்து வெளிப்பட்டான்.

"ஆச்சரியம்!ஆச்சரியம்! உன்னை நாடித்தான் நான் வந்து கொண்டிருக்கின்றேன்" கிருஷ்ணன் கூறினார்.

"ஒருவாராக பாரதப் போரை நிர்ணயித்துவிட்டீர்களே மாமா! என் தோள்கள் தினவெடுக்கின்றன. நான் யாருடன் மோதவேண்டும்?" அதற்கு முன்னர் பாரதப்போரை ஏன் நடத்த விரும்புகின்றீர்கள் என்ற காரணத்தை உங்கள் வாயால் நான் தெரிந்துகொள்ள  ஆசைப்படுகிறேன் மாமா?"  அரவானின் கேள்விக்கு பகவான்    கிருஷ்ணர்  சிரித்தார்.
    
    "' ஏன், தேவரகஸியார்த்தங்கள்' உனக்கும் புலப்பட்டிருக்க வேண்டுமே அரவான்?"

    "அதிருக்கட்டும், மாமா! நீங்கள் என்னை நாடிவந்த   விவரத்தைக் கூறினால் மிக்க மகிழ்ச்சி கொள்வேன்."

    "உன் விருப்பம் அறிந்து சுத்த வீரனான உன்னை களபலியாக்க விழைகிறேன். அதற்குத் தகுதிபெற்றவரில் நீ சிறந்தவன்." நிஷ்காமிய கர்மத்தை அனுஷ்டிப்பவன் உன்னைத் தவிற வேறு யார் இதற்குத் தகுதி பெற்றவர்?" பகவான் கூறினார்.

    "மாமா! உங்களது வாக்கில் இந்தப் பேறு பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? சங்கல்பம் உங்களுடையது நான் நிறைவேற்றக் கடமைப் பட்டவன். தங்கள் சித்தம் என் பாக்கியம்."  அரவான் கள பலியாக ஒப்புக் கொண்டான்.

    "சரி. இன்னமும் செய்து முடிக்கப்பட வேண்டிய திட்டங்கள் நிறைய உள்ளன. நான் வருகிறேன்" கிருஷ்ண பகவான் கூறினார்.

    "ஆனால், எனக்கு தங்களிடமிருந்து வரம் ஒன்று பெறத் தடையுளதோ மாமா?" கேட்டான் அரவான்.

    "மிக்க நல்லது. கேள் மகனே!" பகவான்.

    " களபலியாக்கப்பட்ட பின்னர் என் சிரசினைத்  தாங்கும்  வாள் எல்லோராலும் பார்க்கப்படவேண்டும். என் கண்களிலே ஜீவன் இருக்கவேண்டும். பாரதப் போர் முடிவடையும் வரை நான் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்க அருள்புரியவேண்டும்." அரவானின் வேண்டு கோளை ஏற்று பகவான் ஆசீர்வதித்து அருள்புரிந்தார்.

    பதினெண் தினங்கள் போர் தொடர்ந்து யுத்த பூமி செம்மை நிறமாய் உதிரப் போர்வை போர்த்து பிணக்குவியலாய்க் காட்சியளித்தது. பூமிபாரம் குறைந்தாற்போல் எங்கும் மயானான அமைதியினைப் போக்கும் இறப்போரின் கூக்குரல்களும் முனகலும் அழுகையும் மிருகங்களின் பேரொலியும் கேட்டன. முக்கியப் பங்கு வகிக்கும் ஆட்டநாயகன் இப்போரில் யாவர்? எவரின் பேராற்றல் இப்போரினை இறுதியாக முடித்தது? என்பது போன்ற சர்ச்சை பாண்டவர்கள் மத்தியிலும் ஏற்பட்டது. கண்ணனை நடுவராகவைத்து இந்தப் போரின் நடு நாயகம், வெற்றியின் காவலன் என யாரைக் கொள்ளலாம் எனத் தெரிந்துகொள்ளத் தீர்மானித்தனர்.
கண்ணனிடம் கேட்டபோது, அவர் சொன்னார்,
    
     "நான் பார்த்தனுக்கு சாரதியாக இருந்தேன்.  என் முழுக்கவனமும் அவனையும் அவனைத் தாக்கியவர்களைப் பற்றியும் மட்டுமே இருந்தது. எனவே முழுமையையும் பார்த்த ஒருவரால் தான் இதற்கு சரியான முகாந்திரம் கூறமுடியும். எனவே கண்விழித்துக் காணும் பாக்கியம் பெற்ற களபலியான சிரேட்டன் அரவானுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அவனைக் கேட்கலாம்" என்று தன் கருத்தினைப் பகவான் மெதுவாக முன்வைத்தார்.

    அதிவீர பராக்கிரம வீரர் பெருமக்கள் அரவானின் சிரசின் பக்கம் அழைத்து வரப்பட்டு, பகவானிடம் கேட்கப் பட்ட அந்தக் கேள்வியை அவனிடம் கூறினர். அர்த புஷ்டியாய் அச்சிரசு பலங் கொண்டமட்டும் சிரித்து, " இப்பாரதப் போரில் பங்கு பெற்றோர் பலர். அவரவர் அஸ்திரப் பிரயோகம் அவர்களின் ஆசானின் ஆசிகளுடன் அரங்கேற்றம் பெற்றன. விடுவிக்கப் பட்ட அஸ்திரங்கள் கண்ணுக்குப் புலனாகவில்லை. சக்கரம் ஒன்று ஆடி ஓடி சுழன்றுகொண்டிருக்க, ஒவ்வொரு ஜீவனாக அதை நெருங்கி அதனதன் கபாலத்தை சக்கரத்தில் ஏந்திக்கொண்டிருப்பதைத் தான் .



--
அன்போடு அன்புமயமாக இருக்கிற விதத்தில் ஆவேசமில்லை.ஆவேசமில்லாதபோது துக்கமுமில்லை.


நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச
Reply all
Reply to author
Forward
0 new messages