காமேஷ்
unread,Nov 10, 2009, 8:30:48 AM11/10/09Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to தமிழமுதம், minTamil, முத்தமிழ், tamil2friends, பண்புடன், palsuvai, vishalam's page
வேலூர்: வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம் சந்திரபுரத்தில்
அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரம் திறப்பு விழா நேற்று நடந்தது. சட்டத்துறை
அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். மத்திய இணை அமைச்சர்
ஜெகத்ரட்சகன், டி.ஜி.பி. ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர்
ராஜேந்திரன் வரவேற்றார். சமத்துவபுரம், பெரியார் சிலை ஆகியவற்றை
துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், ரூ.236 கோடியே 90
லட்சத்து 25 ஆயிரம் நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து
அவர் பேசியதாவது:
முந்தைய தி.மு.க ஆட்சியின்போது முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 145
இடங்களில் சமத்துவபுரங்கள் தொடங்கப்பட்டது. அதன்பிறகு ஆட்சிக்கு
வந்தவர்கள், இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டார்கள்.
சமத்துவபுரங்களில் பராமரிப்பு பணிகளையும் கைவிட்டனர். கடந்த 2006ல்
மீண்டும் திமுக அரசு அமைந்தபிறகு சமத்துவபுரங்களை பராமரிக்க ரூ.14 கோடியே
50 லட்சம் ஒதுக்கப்பட்டது. பெரியார் 95 ஆண்டுகள் வாழ்ந்ததன் நினைவாக
மேலும் 95 சமத்துவபுரங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவற்றில், இந்த ஆண்டு டிசம்பருக்குள் 29 சமத்துவபுரம் அமைக்க
திட்டமிடப்பட்டு, இப்போது திறக்கப்பட்டிருப்பது 11வது சமத்துவபுரமாகும்.
மீதி 18 சமத்துவபுரங் களும் வரும் டிசம்பருக்குள் திறக்கப்படும்.
சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் முழு அளவில் வெற்றி பெறவில்லை.
குழந்தை பிறந்ததும் ஆண், பெண் என்றுதான் அடையாளம் காட்டுகிறோம். அது
வளர்ந்த பிறகுதான் இந்த சாதி, அந்த சாதி என்பது தெரிய வருகிறது. சாதிகளை
மறந்து அனைவரையும் மனிதனாக பார்க்க வேண்டும். அந்த உன்னத நிலை
சமுதாயத்தில் உருவாக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் 12, 612 பேருக்கும் அரசின் நலத்திட்ட
உதவிகளை தானே வழங்கினார். இதன்பின்னர், வேலூர் வந்த துணை முதல்வர்
மு.க.ஸ்டாலின், ரூ.28 கோடியில் கட்டப்பட்ட ஆயுதப்படை போலீசாருக்கான
குடியிருப்புகளை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், டி.ஜி.பி ஜெயின்,
கூடுதல் டி.ஜி.பி ராதாகிருஷ்ணன் உட்பட உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
http://www.dinakaran.com/daily/thamilagam/tn301.asp
~காமேஷ்~
சமத்துவபுரங்கள் என்றால் என்ன ? .. இதெல்லாம் எங்கே இருக்கு.. நான் பார்த்ததே இல்லியே.
இங்கே எந்த ஊர் மக்கள் வசிப்பாங்க.