மாநாட்டு கவியரங்கத்தில் "நனைந்தார்' கருணாநிதி

24 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jun 25, 2010, 12:16:54 PM6/25/10
to தமிழமுதம், பண்புடன்
மாநாட்டு கவியரங்கத்தில் "நனைந்தார்' கருணாநிதி : மூன்றரை மணி நேரம் விடாது பொழிந்தது "மழை'
ஜூன் 25,2010,15:51
1diggdigg
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள், இஞ்சிக்குடி சுப்ரமணியம் குழுவினரின் மங்கல இசையுடன் இன்று காலை 9.00 மணிக்கு துவங்கின. முதல் நிகழ்ச்சியாக, "கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக் கூட்டம்' என்ற தலைப்பிலான கவியரங்கம், கவிஞர் வைரமுத்து தலைமையில் நடந்தது. கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், நெல்லை ஜெயந்தா, தமிழச்சி தங்கபாண்டியன், மரபின் மைந்தன் முத்தையா, பேராசிரியர் கருணநிதி, விவேகா, நா.முத்துக்குமார், கயல்விழி ஆகியோர் பங்கேற்றனர்.

பார்வையாளர் அரங்கில், முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியின் முதல் நிகழ்ச்சி என்பதால், அரங்கில் பல ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். "யாரை அழைத்து வந்து கவியரங்கத்தை தொடங்கி வைப்பேன்...?' என்ற கவிதை வரிகளுடன் ஈரோடு தமிழன்பன், கவியரங்கத்தை துவக்கி வைத்தார்.

"கலைஞர் என்பது
தாயின் ஆண்பால் பெயர்.
அவர் வேட்டி கட்டுகிறார்,
ஆனால், அவர் இதயம் எப்போதும்
கசங்காத புடவையோடு தான்...
அவரது கபால களஞ்சியத்தில்
ஆண் எண்ணங்களை விட,
ஈரப்பெண் எண்ணங்களே அதிகம்.
இல்லாவிட்டால் கோபாலபுரம் வீட்டை
கொடையாக தரமுடியுமா?
அந்த அவ்வையார் காலத்தில்
இவர் இருந்திருந்தால்,
அதியமான் ஏமாந்திருப்பான்.
அவனுடைய சங்கப்பாடலுக்கு எல்லாம்
இவர் சபாநாயகர் ஆகியிருப்பார்...' என, முதல்வர் மீது தமிழன்பனின் கவிமழை பொழிய, அரங்கம் அதிர கரவோசை எழுந்தது. அடுத்து, கவியரங்கத்துக்கு தலைமை வகித்த வைரமுத்து முழங்கினார். "பாப்பநாயக்கன்பாளையத்திலுள்ள டீ கடையில் நின்றிருந்தேன்...' என துவங்கி, தமிழச்சிக்கும் தனக்கும் இடையே நடந்ததாக கற்பனை கவிதை உரையாடலை அடுக்கி, பலரையும் தன்வசம் ஈர்த்தார்.

அடுத்ததாக, கவிஞர் விவேகா பேசினார். எதுகை மோனையில் முதல்வரை புகழ்ந்துபாடிய இவர்...
"சென்னைக்கு தெற்கே உள்ள
திருக்குவளையின் தான்,
தமிழுக்கு கிழக்கு பிறந்தது...'
எனத் துவங்கி, முதல்வர் கருணாநிதியை ராஜதந்திரி, முந்திரி, பாதிரி, ஒரு மாதிரி என அடுக்கிக்கொண்டே போனார். இவரது பேச்சின் போது, அரங்கில் இருந்தோரில் பலரும் நெளிந்தனர். காரணம், இவருக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்பு, "சமத்துவம் பூக்க... கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக்கூட்டம்' என்பது; ஆனால், தலைப்புக்கு பெரும்பாலும் தொடர்பில்லாமலே இறுதிவரை நேரத்தை கரைத்து முடித்தார்.

அடுத்து "ஆதிக்கம்...' என்ற தலைப்பில் பேசிய பேராசிரியர் கருணாநிதி, முதல்வரை பார்த்து... "அய்யா, நீங்கள் நடந்து வரும் போது இருவர் மீது கைவைத்து வருகிறீர்கள். இதற்கு காரணம், அகவையல்ல (வயது); தம்பிகளின் இதயங்களையெல்லாம் உங்கள் இதயத்தில் சுமப்பதினால் பாதம் தாங்காமல், இருவர் தோள் மீது கைவைத்து வருகிறீர்கள்...' என்றார். மேலும், "தமிழர்களே... பொங்கலுக்கு கரும்பை வைத்து கும்பிடுகிறீர்கள் இனிமேல், தலைவர் தலைவைத்து படுத்த இரும்புத் தண்டவாளத்தையும் கும்பிடுங்கள்...' என்றார்.

அடுத்து, "பகுத்தறிவு தழைக்க...' என்ற தலைப்பில் நா. முத்துக்குமார் பேசினார். "சமதர்மம்...' என்ற தலைப்பில் கயல்விழியை பேச அழைத்த வைரமுத்து, "கலைஞர் வீட்டுச் சொத்து' என வர்ணித்தார். மேலும், "யாருக்கு கிட்டும் இந்த வாய்ப்பு? தாத்தா தலையாட்ட, பாட்டி தாலாட்ட, அம்மா பாராட்ட, சித்தப்பா சீராட்ட... பாடவா பெண்ணே' என்றழைத்தார்; பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கரவொலி.

"அடையாளம் மீட்க...' என்ற தலைப்பில் மரபின் மைந்தன் முத்தையா கவிதை வாசிக்கையில், செம்மொழி மாநாடு முன்னிட்டு கோவையில் நடந்துள்ள வளர்ச்சிப் பணிகளை பாராட்டி, புகழ்ந்தார்.

"எத்தனை வேகமாய் எல்லாம் நடந்தது?
மண்ணெடுத்தார் மாலையிலே
தார் தெளித்தார் இரவினிலே
காலையில் கண் விழுத்து பார்க்கையிலே
கண்ணாடி போல மின்னியது சாலை.
சறுக்கிவிட்ட பள்ளங்கள் சமச்சீராய் ஆனது
வழுக்கிவிட்ட சாலையிலே வாகனங்கள் போகிறது
வெறிச்சோடி கிடந்த வீதி சந்துகளும்
குளித்து தலைமுழுகி கலகலப்பாக இருக்கிறது.
 துணைமுதல்வர் வந்து வந்து
 தூண்டிவிட்ட காரணத்தால்
இணையில்லா வெளிச்சத்தில்
ஜொலிக்கிறது எங்கள் கோவை...' என்றார்.
கொங்கு தமிழில், பொங்கிய இவரது கவிதையை கேட்டு அரங்கமே கரவோசையில் ஆழ்ந்தது.

அடுத்து, "தன்மானம் காக்க...' என்ற தலைப்பில் நெல்லை ஜெயந்தா, "தாய்த்தமிழ் வளர்க்க...' என்ற தலைப்பில் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கவிதை வாசித்தனர். மூன்றரை மணி நேரம் முழங்கிய கவியிடி முழக்கத்தை, முதல்வர், துணைமுதல்வர் உள்ளிட்டோர் ரசித்து கேட்டனர். மாநாட்டு பந்தலுக்குள் இருந்தாலும் கவிதை மழையில் நனைந்த பல ஆயிரம் பேர், வெயிலில் உலர்ந்து திரும்ப சிறிது இடைவேளை கிடைத்ததாக கருதி, பட்டிமன்றம் துவங்கிய நேரத்தில் பரபரப்பாக வெளியேறினர்.

                                                                                                                        - நமது நிருபர் -

--
செல்வன்

www.holyox.blogspot.com

அதிகாரத்தை எடுத்து கொள்ள தான் முடியும்.கேட்டு வாங்கி பெற இயலாது.அதிகாரத்தை கேட்டு பெறாமல் தானாக கையில் எடுப்பதன் பெயரே விடுதலை ஆகும்- க்ளோரியா ஸ்டெய்னிம்

ஆசாத்

unread,
Jun 25, 2010, 9:47:52 PM6/25/10
to பண்புடன்
> என்ற தலைப்பில் கயல்விழியை பேச அழைத்த வைரமுத்து, "கலைஞர்
> வீட்டுச் சொத்து' என வர்ணித்தார். மேலும், "யாருக்கு கிட்டும் இந்த வாய்ப்பு?
> தாத்தா தலையாட்ட, பாட்டி தாலாட்ட, அம்மா பாராட்ட, சித்தப்பா சீராட்ட... பாடவா
> பெண்ணே' என்றழைத்தார்; பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கரவொலி.

கவிதை பாட அழைத்தார். பேச அல்ல. தினமணி நிருபர்...Please take a note.

Lackluster performance - இதுக்கு அழகான தமிழ் வார்த்த ஆராச்சும்
சொல்லுங்க சார். கயல்விழியின் கவிதைக்கு டைம்ஸ் ஆஃப் இண்டியாவுல
இப்படித்தான் கேப்ஷன் குடுத்திருக்காய்ங்க. கயல்விழி கவிதையை
மனப்பாடமாகச் சொன்னார் என்பது தவிர சிறப்பாகக் குறிப்பிட வேறெதுவும்
இல்லை.

வைரம் வழமை போல் ‘ஏ தமிழே’தான்!

விவேகா, நான் ரசிக்கும் நா.மு., தமிழச்சி தங்கபாண்டியன் எல்லாரும் கவிதை
வாசித்ததுகூட lukewarm recitation என்பதாகவே எனது பார்வைக்குப்பட்டது.

செல்வன்

unread,
Jun 26, 2010, 2:17:44 AM6/26/10
to tamizh...@googlegroups.com, பண்புடன்
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் `கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக் கூட்டம்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. அப்போது வைரமுத்து படித்த கவிதை:

''மேற்கு தொடர்ச்சி மலை மேகங்களே, நீங்கள் அங்கிருந்தே கை தட்டுகள்
தரையில் கை தட்ட தமிழர்கள் [^] இருக்கிறார்கள்

ஏ ஆகாயமே! உன் நட்சத்திரங்கள் காணோமென்று இரவோடு முறையிடாதே
எல்லாம் கொடிசியா அரங்கத்தில் கூடி விட்டன

நாமெல்லாம் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்
யாருக்கு?.
முத்தமிழறிஞரே மூத்த முதலமைச்சரே.
செம்மொழி தங்கமே, எங்கள் செல்லச் சிங்கமே
தாய்த் தமிழ் நாட்டில் உட்கார்ந்து கவி கேட்க ஒரு லட்சம் பேர். இருந்து கவி கேட்க இரு லட்சம் செவிகள்

உங்கள் உயரத்தை நீங்களே தாண்டுகிறீர்கள்
வள்ளுவர் கோட்டம் வனைந்தீர்கள்
அன்னை தமிழ் நாடே அண்ணாந்து பார்த்தது
வள்ளுவர் சிலை வடித்தீர்கள், அனைத்து இந்தியாவும் அண்ணாந்து பார்த்தது
செம்மொழி மாநாடு கண்டீர்கள், அனைத்து உலகமே உங்களை அண்ணாந்து பார்க்கிறது

எங்கள் பாட்டாளியை உள்ளத்தில் வைத்துள்ளது போல் உங்கள் கூட்டணியை உள்ளங்கையில் வைத்துள்ளீர்கள் உங்கள் உள்ளங்கை விரிந்தால்
சூரியன் குவிந்தால் கூட்டணி கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்டவர் நீங்கள்

உங்கள் காப்பீட்டு திட்டத்தில் உழவன் சேர்ந்தான்
உழைப்பாளி சேர்ந்தான்
அன்னத்தாய் சேர்ந்தாள்
பொன்னுத்தாய் சேர்ந்தாள் இன்னும் சேராத ஒரே தாய் தமிழ்த் தாய்
உன் திட்டம் தெரியும் எனக்கு
காப்பீட்டு திட்டத்தில் தமிழ் தாயை சேர்க்கத்தானே இந்த தடபுடல் மாநாடு
கலைஞர் கனவு கண்டால் தமிழ்நாடு [^] முதல் நாடு.

நீங்கள் பெருங்கவிஞர், நானுமொரு கவிஞன்
ஜனநாயக தர்மத்தில் அமெரிக்க ஜனாதிபதி இரு முறை தான்
மேற்கு வங்கத்தின் செந்தலைவன் ஐந்து முறை தான் தமிழ்நாட்டை ஆறாம் முறையும் ஆளப்போகிறவர் நீங்கள் மட்டும் தான்
ஆறுக்கும் உங்களுக்கும் அதிசய ஒற்றுமை
நீங்கள் பிறந்த மண்ணை செழிக்க செய்வது-ஆறு காவிரி ஆறு
உங்கள் தந்தை முத்துவேலர் எண்ணிப்பார்த்தால் எழுத்துகள் ஆறு
முதலெழுத்தோடு சேர்த்தால்-உங்கள் முழுப் பெயரின் மொத்த எழுத்து ஆறு
நீங்கள் பிறந்த மாதம் ஆறு. பெற்ற பிள்ளைகள் ஆறு
அரசாளப் போவதும் ஆறு. இது வரலாறு
வயது தடுக்கிறதே என்று நீங்கள் வருந்தாதீர்கள்
தளபதியிடம் சொல்லி காப்பீட்டு திட்டத்தில் கட்டாயம் சேர்த்து விடுகிறோம்

வீடு கொடுத்தீர்கள். வீடென்றால் அது என்ன வெறும் வீடா?
தாயென்ற ஒரு தெய்வம் தடம் போட்ட வீடு
அண்ணா உணவருந்த இடம் போட்ட வீடு
தியாகத்தால் உழைப்பால் நீ புடம் போட்ட வீடு
ஆண்ட பெரு வீட்டை அறப்பணிக்கு தந்தீரே
ஒரு வகையில் வள்ளுவனை மிஞ்சினீர்கள்.

மாநாடு கூட்டுவதற்கு பெருத்த நிலம் பல உண்டு
கோவையை போல ஒரு பொருத்த நிலம் உண்டா?
ஐவகை நிலமும் கூடிக் கிடந்து கும்மி கொட்டும் ஊரல்லவோ கோவை

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி
இங்கே குறிஞ்சி உண்டா? உண்டு.
ஆனைமலை ஒன்று அருலிருப்பதால் முல்லை உண்டா? உண்டு.
காடும் காடு சார்ந்த இடமும் முல்லை.
நீலகிரி சிகரங்கள் முகில் கொண்ட எப்போதும்முக்காடுபோடுவதால் காடுண்டு-அதனால் முல்லையுண்டு.

மருதமுண்டா? உண்டு.
ஒரு மலையே இங்கு மருதமென்று நிற்பதனால் மருதமுண்டு.
நெய்தல் உண்டா?. உண்டு.
நெசவுக்கு தலைநகரம்-இங்கு நெய்தல் இல்லாமலா?
பாலை இல்லையே என்று பார்க்கிறீரா?. பாலை உண்டு நோக்குமிடந்தோறும் நூற்பாலை உள்ளதால் பாலையும் உண்டு.
நெய்தல் உண்டு. கோவைக்கு கடல் உண்டா?
இல்லை.. கடல் இல்லா ஊருக்கு கடல் கொண்டு வரத்தானோ கலைஞர் இனக்கடல் திரட்டி ஜனக்கடல் கூட்டினார்?

செம்மொழியாமே செம்மொழி சிவப்பு மொழியோ என்று கேலி பேசும் ஒரு கீழ்க் கூட்டம்
நேற்று ஒரு தாயொருத்தியை பார்த்தேன்
மாநாடு பார்க்கவா என்றேன்
என் மகன் பார்க்க என்றாள்
ஏன் என்றேன்
என் மகுடத்தில் செம்மொழி என்ற மாணிக்கம் சூட்டிய மகனுக்கு நனைந்த கண்ணோடு நன்றி சொல்ல என்றாள்

இவ்வாறு கவிதை பாடினார் வைரமுத்து.

சென்ஷி

unread,
Jun 26, 2010, 2:22:32 AM6/26/10
to panb...@googlegroups.com
செம்மொழியாம் தமிழ்ல செம்மொழி மாநாடு கஷ்டப்பட்டு சொந்தக்காசுல நடத்தறவரைப் பத்தி ரெண்டு வார்த்தை புகழ்ந்து பாராட்டினா தப்பா..?

2010/6/26 செல்வன் <hol...@gmail.com>

Kavitha .

unread,
Jun 26, 2010, 2:32:43 AM6/26/10
to panb...@googlegroups.com


2010/6/25 செல்வன் <hol...@gmail.com>

மாநாட்டு கவியரங்கத்தில் "நனைந்தார்' கருணாநிதி : மூன்றரை மணி நேரம் விடாது பொழிந்தது "மழை'
ஜூன் 25,2010,15:51
1diggdigg
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள், இஞ்சிக்குடி சுப்ரமணியம் குழுவினரின் மங்கல இசையுடன் இன்று காலை 9.00 மணிக்கு துவங்கின. முதல் நிகழ்ச்சியாக, "கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக் கூட்டம்' என்ற தலைப்பிலான கவியரங்கம், கவிஞர் வைரமுத்து தலைமையில் நடந்தது. கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், நெல்லை ஜெயந்தா, தமிழச்சி தங்கபாண்டியன், மரபின் மைந்தன் முத்தையா, பேராசிரியர் கருணநிதி, விவேகா, நா.முத்துக்குமார், கயல்விழி ஆகியோர் பங்கேற்றனர்.

பார்வையாளர் அரங்கில், முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியின் முதல் நிகழ்ச்சி என்பதால், அரங்கில் பல ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். "யாரை அழைத்து வந்து கவியரங்கத்தை தொடங்கி வைப்பேன்...?' என்ற கவிதை வரிகளுடன் ஈரோடு தமிழன்பன், கவியரங்கத்தை துவக்கி வைத்தார்.

"கலைஞர் என்பது
தாயின் ஆண்பால் பெயர்.
அவர் வேட்டி கட்டுகிறார்,
ஆனால், அவர் இதயம் எப்போதும்
கசங்காத புடவையோடு தான்...
அவரது கபால களஞ்சியத்தில்
ஆண் எண்ணங்களை விட,
ஈரப்பெண் எண்ணங்களே அதிகம்.
இல்லாவிட்டால் கோபாலபுரம் வீட்டை
கொடையாக தரமுடியுமா?
அந்த அவ்வையார் காலத்தில்
இவர் இருந்திருந்தால்,
அதியமான் ஏமாந்திருப்பான்.
அவனுடைய சங்கப்பாடலுக்கு எல்லாம்
இவர் சபாநாயகர் ஆகியிருப்பார்...'
 
சீவி சிங்காரம் பண்ணி பூ முடிச்சு
பொட்டுவச்சு தேரில் ஊர்வலம்
போயிருக்கலாமே
 
அழகா எழுதியிருக்காங்களே கவிதையை!!
Reply all
Reply to author
Forward
0 new messages