ஒழுக்கம் என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நியதிகளைக் கொண்டுள்ளனர், அது அவரவர் உடல்,மனம், சூழ்நிலை சார்ந்தது!
பொதுவான நியதி என்று பார்த்தால், பலருடன் பாலியல் தொடர்பு வைத்திருப்பது ஒழுக்கக்கேடாக கருதப்படுகிறது! அன்று முதல் இன்றுவரை ஆண்களே இந்த தவறை அதிகம் செய்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை! ஆனால் பெண்கள் ஆண்கள் அளவிற்கு இல்லை, பெண்களில் ஒழுங்கீனமானவ்ர்கள் குறைவு, ஆனால் சமீபகாலமாக அதிகரித்துவருகிறார்கள் அதை நியாப்படுத்துவத்ற்கு பெண்கள் ஒன்றும் அடிமை இல்லை, ஆணுக்குச்சமமாக நாங்களும் தவறு செய்வோம் என்று பெண்ணியத்தை காரணமாக்குகிறார்கள்!
உதராணத்திற்கு மும்பை, சென்னை,பெங்களூரு, போன்ற பெருநகரங்களில் சனிக்கிழமை இரவு பார்ட்டியில் மது அருத்திவிட்டு யாருடன், என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் தவறான பாதையில் செல்பவர்களை நினைத்து எழுதியது இந்த வரிகள்!
ஆடைகள் என்பதும் அவரவர் விருப்பம்தான், சபை நாகரீகம் என்று ஒன்று இருக்கிறதே! அது இல்லாவிட்டடால் நிர்வாணமாக கூட யாரும் வரலாம், ஜீன்ஸ், டி.சர்ட் அணிவதை எல்லாம் ஆபாசம் என்று சொல்ல முடியாது!
ஆனால் கால் பங்கு மார்பகம் முக்கால் பங்கு தொடை ஆடைக்கு வெளியே தெரியுமளவிற்கு அணிவது என்னைப் பொறுத்தவரை ஆபாசமே, சமீபத்தில் மதுரையில் கோவிலுக்கு சென்று வரிசையில் நின்றிருந்தபோது, அங்கு சென்னையை சேர்ந்த ஒரு கல்லூரியின் mba மாணவர்கள் சுற்றுலா வந்திருந்தனர், அதில் சில பெண்கள் இறுக்கமான மிக மிக மெல்லிய, கழுத்து மிக இறக்கமாய் ,கை இல்லாத பணியன் மாதிரி உடை அணிந்திருந்தனர்! கோவிலுக்கு வந்திருந்தவர்களின் பலரது கவனம் அவர்கள் மேல்தான் இருந்தது, சிலர் கோபத்தோடு பார்த்தனர், சிலர் ஜொள்லோடு பார்த்தனர், கோவிலுக்கு வரும்போது நாகரீகமாக உடையணியும் பக்குவம் வேண்டாமா? என நாம் கேட்டால் , உன்னை யார் அதை எல்லாம் பார்க்க சொன்னது, ஆணாதிக்கத்தால் பெண்ணை ஒடுக்குகிறீர்கள் என்று சொல்லும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்காக எழுதப்பட்டதே இந்த வரிகள்!
எழுத்து என்பது சுதந்திரம் வாய்ந்தது, அதில் யாரும் யாரையும் நீ இப்படித்தான் எழுதவேண்டும் இப்படி எழுதக்கூடாது என்று கட்டுப்படுத்த முடியாது, பாலியல் குறித்தும், அந்தரங்கம் குறித்தும் ஆண்களும் பெண்களும் நிறையவே கவிதை எழுதுகிறார்கள், அதில் எழுதும் கொச்சையான வார்த்தைகள் கவிதைக்கு மிக அவசியமாக இருக்கும்போது ஆபாசமாகவோ அருவருப்பாகவோ தோன்றாது, ஆனால் கவிதைக்கு அவசியமின்றி சில வார்த்தைகளை திணிக்கும்போது அது ஆபாசமாகிவிடுகிறது! அது ஆண் எழுதினாலும் சரி, பெண் எழுதினாலும் சரி எல்லாம் ஒன்றுதான்.
இன்று நிறைய பெண்கள் நன்றாக கவிதை எழுதுகிறார்கள், அதில் சிலர் சதா பாலியல் அந்தரங்கம் என்றே எழுதுகிறார்கள்! அதில் சில கவிதைகள் அவசியமற்ற வார்த்தைகளால் மிக கொச்சையாக இருப்பதாக, சொன்னாலோ, வேண்டுகோள் வைத்தாலோ, உடனே நான் பெண் என்பதால் என்னை அடக்கப்பார்க்கிறீர்கள், பெண்ணியத்தை காப்பாற்றுவேன் என் சொல்லும் சில பெண் கவிஞர்கள்( மிக மிக குறைவு) இருக்கிறார்கள், அவர்களை நினைத்து எழுதப்பட்டதே இந்த வரிகள்!
எழுத்திற்கும் சபை நாகரீகம் இருக்கிறது! ஒருவர் தொடர்ந்து ஆபாச கதைகளை எழுதி நம் குழுமத்தில் வெளியிட்டால் நம் குழும உறுப்பினர்கள் அதை கண்டிப்பது சரிதானே!
உதாரணத்திற்கு கீழே உள்ள இந்த கவிதையை படியுங்கள், என்னைப்பொறுத்தவரை தேவையின்றி திணிக்கப்பட கொச்சை வார்த்தைகளால் இது அருவருப்பான கவிதை! உங்கள் பார்வை எப்படியோ எனக்கு தெரியாது!
http://ulaginazhagiyamuthalpenn.blogspot.in/2010/01/blog-post.htmlபெண்களின் உரிமைக்கு பலம் சேர்க்கும் வகையில் பல சட்டங்கள் அவர்களுக்கு சாதகமாக உள்ளது வரவேற்கப்படவேண்டிய விசயம்தான்! இன்றைய சூழலில் நீதிமன்றத்தில் உள்ள விவாகரத்து வழக்குகளில் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக 75% வழக்குகளில் ஆண்கள் காரணமாகவே இருப்பதாக வைத்துக்கொள்வோம், மீதமுள்ள 25% வழக்குகளில் பெண்கள்தான் முக்கிய காராணமாக இருகிறார்கள், அவ்வகை வழக்குகளில் பெண்கள் சட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆண்களையும் அவர்களின் குடும்பங்களையும் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கிவிடுகிறார்கள்! அவர்களை நினைத்து எழுதப்பட்டதே இந்த வரிகள்!
இதற்கு உதாரணமாக பல கதைகளை சொல்லலாம் அவ்வளவு இருக்கிறது! உதாரணத்திற்கு இரு கதைகள்
மதுரையை சேர்ந்த எனது நண்பன் ஒரு பெண்னை காதலித்தான், இவன் கல்லூரியில் படிக்கும்போது அவன் பள்ளியில் படித்தான், இவன் வேலைக்கும் செல்லும்போது அவள் கல்லூரியி படித்தாள்,அவள் மிகவும் அழகாக நிறமாக இருப்பாள், அவளும் காதலித்தாள், இருவரும் ஏழ்மைகுடும்பம்தான்.இருவரும் காதல் வானில் சிறகடித்துப்பறந்தனர்!(ரூம் போட்டு). அவள் கல்லூரி முடித்தபோது நண்பன் சென்னைக்கு வேலைக்குச்சென்றுவிட்டான், அந்த நேரத்தில் காதல் விசயம் தெரிந்து அப்பெண்ணின் பெற்றோர் அப்பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர், பெண்ணின் அழகைப் பார்த்த பணக்கார மாப்பிள்ளை ஒருவர்(பெரிய மில் முதலாளியின் மகன்) திருமணத்திற்கு சம்மதிக்க, அப்பெண்ணோ வீட்டில் சரி என்று சொல்லிவிட்டு நண்பனிடம் எனக்கு மாப்பிள்ளை ப்டிக்கவில்லை உன்னுடன் ஓடி வருகிறேன் ஏற்பாடுகளை செய் என்று சொல்ல இவனும் ஏற்பாடுகளைச் செய்ய, திடீரென்று சில நாட்கள் பேசவில்லை! போன் நெஅம்பர் மாறிவிட்டது அப்பெண்ணின் தோழியிடம் விசாரித்ததில், திருமணம் நிச்சயமாகிவிட்டதென்ற தகவ்ல் தெரியவர, இவன் மனம் ஒடிந்துபோனான், சில நாட்களால் அழுதுகொண்டிருந்தான், ஒரு மாதம் தொடர்பே இல்லாமல் இருந்ததும் அதன் பாதிப்பு இவனுக்கு சற்றே குறைந்திருந்த நேரத்தில் அவளிடமிருந்து மீண்டும் போன்,
என்னை மன்னித்துவிடு ,மப்பிள்ளையுடன் போனில் பேசியதில் அவன் மிக மோசமானவனாக இருப்பன் போல , அதிக ஆபசமாக பேசுகிறான், என்று சொல்லி அழுதிருக்கிறாள், அவள் மாப்பிள்ளையோடு பேசும்போது confrence call கொடுத்து அவன் பேசுவதை இவன் கேட்கும்படி செய்திருக்கிறாள்!, பிறகு இவனிடம் நான் உன்னையே திருமணம் செய்கிறேன் என்று அழுதிருக்கிறாள், இவனும் காதல் மயக்கத்தில், எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டுமென்று நினைத்து, இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை அந்த மாப்பிள்ளைக்கு அனுப்ப திருமணம் நின்று விட்டது, அதற்கு பிறகு அவள் பேசவில்லை போன் நம்பரும் மாறிவிட்டது! என்ன ஏது என்று தெரியாமல் இவன் தவிக்க, திடீரென்று நண்பனுடைய வீட்டு வாசலில் மகளிர் போலிஸ் வேன், ஈவ் டீசிங், பாலியல் தொந்தரவு, என பல புகார்கள் அப்பெண்ணும் அப்பெண்ணின் பெற்றோர்களும் சேர்ந்து கொடுத்ததால், கைது செய்ய வந்தோம் என்று சொல்ல அவன் சென்னையில் இருப்பதால், அவன் வரும் நீங்கள் ஸ்டேசனுக்கு வாருங்கள் என்று சொல்லி நண்பனின் பெற்றோர்களை அழைத்து சென்றுவிட்டார்கள், உடனே இரவு அவன் புறப்பட்டு மறுநால் காலை வரும் வரை அவன் பெற்றோர்களை விட வில்லை! அந்த செக்சன், இந்த செக்சன், அன்று பல பெண்ணுக்கு சாதமான பல சட்டங்களை சொல்லி முதலில் மிரட்டியவர்கள் இவன், அப்பெண்ணின் காதல் கடிதங்கள் வாழ்த்துமடல்கள்,சேர்ந்து எடுத்த மேலும் பல புகைப்படங்கள் மற்றும் வக்கீலோடு வந்ததும் சமரசம் பேசியிருக்கிறார்கள், பிறகு இவர்கள் காதல் சம்பந்தப்பட்ட அவன் வீட்டில் இருந்த அனைத்தையும் வாங்கிவைத்துவிட்டு, இருவருக்கும் இடையில் இனி எந்த தொடர்பும் இருக்காது என நண்பனிடம் மட்டும் எழுதிவாங்கி வைத்துவிட்டு அனுப்பிவிட்டார்கள்! ஸ்டேசனுக்க வந்த பெண்ணிடம் இவன் பேச முயற்சித்தும் அவள் பேசாமல் சென்று விட்டாள்!
உடனே வளுக்கு வேறு இடத்திலும், சமீபத்தில் இவனுக்கு வேறு இடத்திலும் திருமணமாகிவிட்டது! இன்று வரை அந்த காதலின் வலி மறைந்துவிட்டாலும் என்னால் என் பெற்றோர்கள், ஒரு நாள்முழுக்க காவல் நிலையத்தில் இருக்கும்படி ஆகிவிட்டதே என்று புலம்புவான்!
மதுரையை சேர்ந்த உறவினர் நண்பர் ஒருவருக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தது! பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்ப்பவர், ஒரு நண்பர் கொஞ்சம் இளகிய மனம் உடையவர்! பெண்ணோ சற்று கடுமையான மனம் கொண்டவர், திருமணமான ஒருவாரத்தில் அப்பெண்ணின் ஊருக்கே தனிக்குடித்தனமாக வந்தால்தான் இருப்பேன் உன் பெற்ரோர்களுடன் இருக்கமுடியாது எனச்சொல்லிவிட, இவனும் சரி பரவாயில்லை என்று அப்பெண்ணின் ஊருக்கே (கோவை) வேலை மாறி சென்றுவிட்டான், இருவரும் அவ்வப்போது சண்டையிட்டுக்கொள்வார்கள், அப்பெண் வேலைக்குச்செல்லவில்லை செல்ல விருப்பமும் இல்லை, ஒரு ஆண்குழந்தை பிறந்தது, இரண்டுவயதும் ஆனது! சண்டைகள் தொடர்ந்தன, சண்டைக்கு காரணம் பணம் மட்டுமே! வாங்கும் சம்பளத்தை அப்படியே மனவியிடம் கொடுக்க வேண்டுமாம் அப்பெண்ணின் கையில், அவள் சொன்னதுபோலவே சில மாதங்கள் முதலில் கொடுத்துப்பார்த்தான், அப்பணத்தில் பெரும்பகுதியை இவர்கள் வீட்டருகிலேயே இருக்கும் அப்பெண்ணின் பெற்றோருக்கு செலவு செய்துவிடும் மனைவியின் குணம் பிடிக்காமல் பிறகு பாதிசம்பளத்தை மட்டும் கொடுத்து வந்தான்!
இடைப்பட்ட 3 ஆண்டுகளில் ஒரு முறை கூட நண்பனின் பெற்றோர்களைப்பார்க்க அப்பெண் வருவதில்லை! அவர்கள்தான் இங்கு வந்து மகனையும் பேரனையும் பார்த்துவிட்டு செல்வார்கள்! பிறகு அப்பெண்ணின் பெற்றோர்கள் ஏதவது சொல்லி கொடுத்து தூண்டிவிட அதை சொல்லி அப்பெண் சண்டையிட , இருவருக்குமிடையே விரிசல் அதிகமாகி ஒரு நாள் கோபத்தில் உங்களால்தான் எங்களுக்குள் சண்டை என்று மாமனாரை கோபத்தோடு திட்ட, அவர் இவனை அடித்துவிட இவனும் பதிலுக்கு அவரை அடித்துவிட சண்டை பெரிதாகி இவன் கிளம்பி மதுரைக்கு வந்துவிட்டான், அடுத்த சில நாளில் இவனைத்தேடி போலீஸ் வந்தது, வரதட்சனை கேட்டு அடித்தார், நண்பர்கள் முன்னிலையில் என்னை பாலியல் உறவுக்கு அனுகினார் என அடுக்கடுகான குற்றசாட்டுகள்!
என் மேல் என் மனைவி எப்படி இப்படி ஒரு குற்றச்சாட்டை சொன்னாள் என்று அதிர்ந்து போனானாம், அங்கு சென்று பார்த்தால் மனைவி, மாமனார் இருவரும் போலீஸ் உதவியுடன், இனி நாங்கள் சொல்வதை கேட்பதாக இருந்தாள் இந்த வழக்கை முடித்துக்கொள்ளலாம், இல்லை என்றால் பெண்களுக்க்கு சாதகமான வழக்குகளில் நீ தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்கள்! பிறகு இவனது உறவினர் ஒருவர் காவல்துறையில் உயர் பதவியில் உள்ளவர்கள் மூலமாக சில மாதமாக அங்கும் இங்கும் அலைந்து இனி என்ன ஆனாலும் சரி என்று விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டான், அவர்கள் அதற்கும் சம்மதிக்க்கவில்லை!
வழக்கு நிலுவையில் ஒரு ஆண்டாக இருந்தது, இடையில் அவன் தன் குழந்தையை பார்க்க கூட அவர்கள் அனுமதிக்கவில்லை! இந்த சூழ்நிலையில் இவனுக்கு பிரபல நிறுவனம் ஒன்றில் 35 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வெளிமாநிலத்தில் வேலை கிடைத்தது! அடுத்த சில மாதங்களில் . தினமும் காதல் காலந்த sms, மனைவியிடமிருந்து வர ஆரம்பித்தது, பிறகு தொடர்ந்தன போன் கால்கள் , ஆனாலும் இப்போது இவன் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டான், என்மீது இப்படி ஒரு குற்றம் சொன்னவளுடன் எப்படி வாழமுடியுமென்று, பிறகு பல நண்பர்கள், பெற்றோர்கள், எல்லோரும் சேர்ந்து "நீங்கள் செய்யும் தவறுக்கு அந்த குழந்தை என்ன செய்யும் , அதற்காக பார்" என வற்புறுத்த, அவனும் மனம் மாறி பிறகு ஒன்று சேர்ந்து இப்போது நன்றாக இருக்கிறார்கள், இருவரும் ஒன்றுசேர்ந்ததும் அவன் கேட்ட முதல் கேள்வி" என் என்மேல் இப்படி ஒருபுகாரை கொடுத்தாய்" என்று கேட்டானாம், அதற்கு வக்கீலும், மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த மகளிர் நல ஆலோசகர் ஒருவரும், இப்படி எல்லாம் புகார் கொடுத்தால்தான் ஆண்கள் பயந்துபோய் நம் வழிக்குவருவார்கள் என்று ஆலோசனை சொன்னதால், அப்படி புகார் கொடுத்ததாகவும் சொல்லியிருக்கிறார் அவன் மனைவி!
விளக்கம் போதுமென்று நினைக்கிறேன், கவிதையை மீண்டும் ஒரு முறை படியுங்கள், நான் பொதுவாக பெண்களையோ, பெண்ணியம் பேசுபவர்களையோ குறை சொல்லவில்லை, மிக மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ள மேற்சொன்ன சில பெண்களையும், பெண்ணியம் பேசுபவர்களையும் பற்றி மட்டுமே எழுதப்பட்ட கவிதை இது