மாறாத விடியலின் அழகும் வீசும் காற்றும் (கவிதை) வித்யாசாகர்!

17 views
Skip to first unread message

வித்யாசாகர்

unread,
Nov 24, 2021, 1:09:29 AM11/24/21
to தமிழ் சிறகுகள், மின்தமிழ், தென்றல், பண்புடன், தமிழ் அமுதம், தமிழுலகம், வல்லமை

மாறாத விடியலின் அழகும் வீசும் காற்றும்... 


விளக்குகள் அணைந்தாலென்ன

விடியல் இயல்புதானே

காத்திரு;

 

நட்சத்திரங்கள் தோன்றாவிட்டாலென்ன

விட்டில் பூச்சு ஒன்று வரும்

காத்திரு;

 

கற்றது வேறானாலென்ன

அறிவு உன்னுடையது தானே

காத்திரு;

 

யார்விட்டுப் போனாலென்ன

உயிர் உண்டுதானே

காத்திரு;

 

உலகம் எப்படி இருந்தாலென்ன

நீ உன்னை மாற்ற ஒரு காலம் வரும்

காத்திரு;

 

யாரால் எது செய்யமுடியா விட்டாலும்

உன்னால் எல்லாம் முடியும்

காத்திரு;

 

நம்பிக்கைதான் வாழ்க்கை

நம்பு, நம்பிக்கையோடு எழுந்து

இந்த உலகம் பார்

யாரோ போனாலும் யாரோ வருகிறார்கள்

ஏதோ போனாலும் ஏதோ வருகிறது

போனது கிடைப்பதுமில்லை

வருவது நிற்பதுமில்லை;

பிறகேன் வருத்தம் ?

 

எல்லாம் மாறும், நம்பியிரு

பூக்கள் நிறைந்த காடுகளில்

ஒரு மலர் உதிர்வதும்

ஒரு மலர் பூப்பதும் இயல்பு எனில்

எல்லாம் மாறுவதும் கூட

இயற்கையின் இயல்புதானே?

 

பிறகு நீயென்ன? நானென்ன?

போவதை விடு

வாழ்வதை எண்ணிக் காத்திரு;

 

இருக்கும் காலம் அத்தனையும்

உயிர் மிக்கவை,

இந்த உலகம் உயிர்கள் வானம் பூமி மழை கடல்

காற்று சூரியன் நிலா காடு அத்தனையும் உயிர் மிக்கவை

அவையெல்லாம் உனக்காகக் காத்திருக்கிறது

 

நீ தான்

ஏதோ ஒன்றிற்காக மட்டுமே மயங்கி

காத்திருந்து பிரிந்து ஒடுங்கி

ஒன்றிற்காக மட்டுமே அழுது

ஒன்றிற்காக மட்டுமே சாகிறாய்

ஒன்று போனால், எல்லாம் போனதாய் முடிகிறாய்;

 

சற்று யோசி;

சாதல் பிழையன்று

தனித்து வலித்து சாதல்

சரியுமன்று;

வாழ்ந்துக்காட்டப் பிறந்தவர்கள் நாம்

வாழ்தலே விதி, வாழ்தலே வரம்;

 

சரி சரி; விடு

நிறைய யோசிக்காதே

நீ உயிர்த்திருக்க

உள்ளிழுக்கும் காற்று இந்த பிரபஞ்சம் வரை

நிறைந்தேயிருக்கிறது; போ

 

மிச்சமிருக்கும் நாட்களையேனும்

மகிழ்வோடு வாழ்ந்துவிடு!!

------------------------------------------------------------

வித்யாசாகர்

வித்யாசாகர்

unread,
Nov 24, 2021, 10:40:09 PM11/24/21
to S. Jayabarathan, vallamai, தமிழுலகம், தமிழ் அமுதம், தமிழ் சிறகுகள், தென்றல், பண்புடன், மின்தமிழ்
வாழ்க ஐயா. தங்களின் கவிதை அழகு. நன்றி.

வித்யாசாகர்

On Thu, 25 Nov 2021 at 2:43 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
வானம் எனக்கும் போதி மரம்
வைர முத்துவின் ஞான ரதம்
வையம் நமக்கோர் ஆதி வரம்
வள்ளுவம் நமக்கு வாழ்வு அறம்.

பாராட்டுகள்.

சி. ஜெயபாரதன்



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAMOBGCehjd38zVTT2hSsOp20YixYFx1yAOy2rMGorLmAUYTHWw%40mail.gmail.com.
--
Sent from iPhone

வித்யாசாகர்

unread,
Nov 25, 2021, 7:27:41 AM11/25/21
to S. Jayabarathan, vallamai, தமிழுலகம், தமிழ் அமுதம், தமிழ் சிறகுகள், தென்றல், பண்புடன், மின்தமிழ்
ஏன்மொ? பிற மொழி அறிந்தால்; எழுதினால்; நான்கு நல்லதை பிறருக்கும் பழக்கினால் நன்றே. ஆனால், தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மட்டுமே எழுத தெரியும் மீதி சில (நான்கைந்து) மொழிகள் பேசுவேன். எழுத வராது. 

என்றாலும் எல்லாம், வாழ்க்கை கற்றுத் தந்த பாடம். உயிரிலிருந்து வந்ததும் நாலு பாட்டன் தலைமுறை மொழியும் எங்களுக்கு தமிழ் தான். தமிழும் தமிழ்நிலமுமே எங்களுக்கு வாழ்க்கை, பிறப்பு, இன்ன பிற எல்லாம்.

வித்யாசாகர்

On Thu, 25 Nov 2021 at 3:18 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

இதைத் தெலுங்கில் எழுதுங்கள். நன்றி

சி. ஜெயபாரதன்


image.png

என் பயணத்தின் முடிவு

சி. ஜெயபாரதன், கனடா


முடக்கு வாத நோய் வதைத்து
மடக்கும் போது,
நடக்க முடியாது கால்கள்
பின்னித்
தடுமாறும் போது,
படுக்கை மெத்தை முள்ளாய்
குத்தும் போது,
படுத்தவன் மீண்டும்
எழுந்து நிற்க இயலாத போது,
வாழ நினைத்த போதும்
வாழ முடியாத போது,
  எழுத முனையும் கவிதை தனைக் கை
  நழுவ விட்ட போது,
  வரைய வந்த வானவில் கண்ணீர்
  மறைத்த போது,
இறுதி இயலாமை
உறுதி.
னித்துப் போய் தவிக்கும்
மனத்துக்குத் 
தெரிவது, மீளாத
ஒரே பாதை !
பயணத்தின் முடிவு
விடுதலை !

==============
--
Sent from iPhone

N. Ganesan

unread,
Nov 26, 2021, 9:26:12 AM11/26/21
to vallamai, பண்புடன், housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
On Wed, Nov 24, 2021 at 12:09 AM வித்யாசாகர் <vidhyas...@gmail.com> wrote:
நட்சத்திரங்கள் தோன்றாவிட்டாலென்ன

> விட்டில் பூச்சு ஒன்று வரும்

> காத்திரு;

அன்பின் வித்தியாசாகர்,

உங்கள் கவிதையில் “பூச்சு” என்பது “பூச்சி” என்ற பொருளில் இருப்பது சிறப்பு. உங்கள் வீட்டிலும், பகுதியிலும் “பூச்சு” என்ற சொல் பயன்பாட்டில் உள்ளதா? எந்தெந்த ஊர்களில் இந்த மிகப்பழைய சொல் ஆகிய “பூச்சு” இன்னமும் பயன்படுத்துகிறார்கள் எனப் பார்க்கவேண்டும். இது மிகப்பழைய சொல். பூமி, விலங்கு தாவரங்களைப் பூசிக்கொண்டு (=தழுவிக்கொண்டு) வாழ்தலால், பூச்சு (அ) பூச்சி எனப் பெயர்.

கண்களைப் பூசி விளையாடும் எளிய விளையாட்டு ’கண்ணாம்பூச்சு’ (கண்+அம்+பூச்சு) ஆகும். https://ta.wikisource.org/wiki/பக்கம்:கல்வி_உளவியல்_கோட்பாடுகள்.pdf/221 இன்று கண்ணாமூச்சி என்கிறோம்.  http://saamaaniyan.blogspot.com/2015/07/blog-post_18.html

அப்பூச்சி காட்டுதல்: தன் நிழல் தரையில் பூச்சும். அந்த நிழல் தோய்தலைப் பிடித்துத் தா எனக் குழந்தை கூறும். அப்பூச்சி காட்டுதல் என்பது குழந்தை விளையாட்டுகளில் ஒன்று. சின்னக் குழந்தை கண்ணன் தன் நிழலைக் காட்டி அதனைப் பிடித்துத் தா என அடம் பிடிப்பது போலப் பாவனை செய்துகொண்டு பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார்.அவரது காலத்தில் இதுபோன்றதொரு விளையாட்டு தமிழரிடையே பழக்கத்தில் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் குழந்தைகளுக்கு அதன் நிழலைக் காட்டிப் பூதம் எனக் கூறிப் பயமுறுத்தலாயினர். https://ta.wikipedia.org/wiki/அப்பூச்சி_காட்டுதல்

பூச்சு = பூசும்/தோயும் நிழல். நிழலைக் காட்டி மிரட்டுதல், பூச்சுமிரட்டு/பூச்சிமிரட்டு என்பர்.  கண்ணன் (அப்)பூச்சிகாட்டுகிறான் என்ற பெரியாழ்வார் பாசுரத்துக்கு சங்கு சக்ராயுதங்களைக் காட்டி பூச்சிகாட்டுகிறான் என்ற பொருளும் உண்டு. http://acharya.org/mag/sr/sr049.pdf பூச்சி-காட்டு pūcci-kāṭṭu- v. tr. id.+. To frighten children by distortions of face or grimaces;
பயங்காட்டுதல். பூச்சிக்காட்டித் திரியும் புத்தியென்ன (கொண்டல்விடு. 66).

பெரியாழ்வாரின் அருமையான பத்து பாசுரங்கள் கண்ணன் பூச்சிகாட்டுதலைப் பாடுகின்றன.

சின்னக் கண்ணன் அப்பூச்சி காட்டல்:
https://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=75&Itemid=61
அம்+பூச்சு (நிழல் என்னும் பொருள் இங்கே) = அப்பூச்சி.

---------------

பூச்சு - பூச்சி என்ற பொருளில்

உங்கள் கவிதையில் “பூச்சு” என்பது “பூச்சி” என்ற பொருளில் இருப்பது சிறப்பு. உங்கள் வீட்டிலும், பகுதியிலும் “பூச்சு” என்ற சொல் பயன்பாட்டில் உள்ளதா? எந்தெந்த ஊர்களில் இந்த மிகப்பழைய சொல் ஆகிய “பூச்சு” இன்னமும் பயன்படுத்துகிறார்கள் எனப் பார்க்கவேண்டும். இது மிகப்பழைய சொல். பூமி, விலங்கு தாவரங்களைப் பூசிக்கொண்டு (=தழுவிக்கொண்டு) வாழ்தலால், பூச்சு (அ) பூச்சி எனப் பெயர்.

(1) 🌳 கடும் சவாலாக விளங்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சு விரட்டிகள் தயாரிப்பு முறைகள், தெளிப்பு முறைகள்!
🌳 கத்திரியில் பூச்சு கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது
https://www.vivasayaseithigal.com/2021/02/24/தமிழர்வேளாண்நாட்காட்டி/

(2) கம்பளிப் பூச்சு கடித்தல்: http://tamilhealthyhome.blogspot.com/2017/04/blog-post_11.html

(3) (Genesis 1:14-18) Likely, fireflies flew about the garden, their cold light flashing on and off like little lamps.
(ஆதியாகமம் 1:14–18) மின்மினிப் பூச்சுகள் தோட்டத்தைச் சுற்றி சிறிய தீபம் போல இடையிடையே குளிர்ச்சியான ஒளியை வீசிக்கொண்டு பறந்தன.

(4) தம்பலப்பூச்சி (மூதாய் < முதை நிலத்தில் வாழ்வது) வெல்வெட் பூச்சி ஆகிவிட்டது. ஆனால், ஆயிரம் ஆண்டுக்கு முன்னால், இதன் பெயர்
பட்டுப்பூச்சு (திவ்வியப் பிரபந்த உரைகளில்). பட்டுப்பூச்சு = பட்டுப்பூச்சி. (this is rain-mite, not silkworm).

பூச்சி என்ற பொருளில் “பூச்சு” எனும் சொல்லாட்சிகள் பதிவுசெய்யப்பட வேண்டும்.

நா. கணேசன்


--

வித்யாசாகர்

unread,
Nov 26, 2021, 10:55:54 AM11/26/21
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, பண்புடன்
வாழ்க ஐயா. பூச்சு எனும் சொல் இன்னும் முழுதாக வழக்கொழிந்திடாது ஆங்காங்கே பயன்படுத்தப்படுகிறது. 

எனது படைப்புக்களின் எண்ணற்ற இடத்தில் அழகிய தமிழ்ச்சொற்களை கையாளுவதுண்டு. இந்த பதிவில் குறிப்பாக அது தட்டச்சுப் பிழை ஐயா.

வளைதளங்களில் பூச்சி என்று திருத்தியுள்ளேன். நன்றி ஐயா, வாழிய நலம்🌷

வித்யாசாகர்
--
Sent from iPhone
Reply all
Reply to author
Forward
0 new messages