நீ
கண்ணீர்த் துளிகளின்
கீரிடம் அணிந்து
புன்னகை என்னும்
அரியணையில்
அமர்ந்திருக்கிறாய்
*
உன் கிரணங்கள்
என் காட்டுக்குள்
ஊடுருவ முடியவில்லை
*
நீ விளையாடி
உடைப்பதற்காகவே
இதயங்கள்
படைக்கப்பட்டிருக்கின்றன
*
காதல் கவிதைகளைக்
கப்பல் செய்து
கண்ணீரில் விட்டுவிட்டேன்
*
என்னுயிரோ
உன்னிடத்தில்
உன்னுயிரோ
என்னிடத்தில்
மரணம் என்ன செய்யும்?
*
உன் கடிதம் வந்தது
திறக்காமலே
படித்து விட்டேன்
*
வயிற்றுக்காக
வாழ்ந்து
முகமிழந்து போனேன்
*
காதல் துயரமே!
வாழ்க
உன்னால்
மற்ற துயரங்களெல்லாம்
மறைந்துபோய்விட்டன
என்னைப் பிடிக்க
விதி
தன் தூண்டிலில் மாட்டிய
இரை நீ
*
இதுவும் அப்துல் ரஹ்மான் கவிதைகள்:
உன் பாதையும்
என் பாதையும்
வெவ்வேறாக இருக்கலாம்
ஆனால் அவை
ஒரே கையின்
ரேகைகள்
**
நீ
கண்ணீரை விட
ஆழமானவள் (ன்)
சோகத்தை விட
அழகானவள் (ன்)
**
பாவத்திற்கு கிடைத்த
மன்னிப்பை போல
நீ எனக்குக் கிடைத்தாய்
என்னை மறந்துவிட்டதாகச்
சொல்கிறாய்
பிறகு ஏன்
உன் கண்ணில் நீர்
ஒவ்வொரு மூச்சும்
உன்னை சந்திக்கப்
புறப்படுகிறது
ஏமாற்றத்தோடு
திரும்புகிறது
**
நான் உன் மூச்சு
என்னை நீ விட்டாலும்
மீண்டும்
வாங்கித்தான் ஆகவேண்டும்
**
உன் மௌனத்தில்
என் காயம் உறங்க
இடம் கொடு
**
நீ
சொல்ல முடியாத
சொல்
சொல்ல முடியாததைச்
சொல்லும் சொல்
**
உன் வேர்கள்
என் கண்ணீரை
தேடி வருகின்றன
**
தண்ணீர்த் தொட்டி
மீன்களைப்போல
உனக்குள்ளேயே
நீந்திக் கொண்டிருக்கின்றது
என் எண்ணங்கள்
**
உன் கண்ணில்
நான் செத்து
மிதக்கிறேன்
**
கூடு கட்டத்
தன் உதிர்ந்த இறகுகளையே
பொறுக்கும் பறவையைப் போல
நான் உன் நினைவுகளைப்
பொறுக்குகிறேன்
**
என்னை
என்னிடத்தில் ஒப்படைத்தாய்
என்னை வைத்துக்கொண்டு
என்ன செய்வது என்று
தெரியவில்லை எனக்கு
**
என் வாழ்க்கைப்
பயணத்திற்குக்
கட்டுச் சோறாய்
உன் நினைவுகள்
தாகத்திற்கு அருந்தக்
கண்ணீர்
**
நீ நதி
நான் உன்னில் விழுந்த
சருகு
நீ எங்கே கொண்டு போகிறாயோ
அங்கேதான்
நான் போகமுடியும்
**
ஆயுள் முழுவதும்
உனக்காகக்
காத்திருக்கத் தயார்
மரணம் போல்
நீ நிச்சயமாக வருவதாயிருந்தால்
**
உன்னிடம் நடந்து
காயங்களோடு
திரும்புகிறது மனம்
**
மனம்
பசித்து அழும்போது
உன் நினைவுகள்
அள்ளி எடுத்து
பாலூட்டுகிறது
**
உன் நினைவுகளும்
தொட முடியாத
தூரத்திற்கு
போகிறேன்
என் பூக்களில் நீ
வசவுகளை எழுதிகிறாய்
**
நீ நடந்த
பாதையில் நடந்தேன்
காலில் தைத்தது
இதயச் சில்
**
உன் இதயத்திற்குள் நுழைய
வழி பார்க்கிறேன்
ஊசியில் காதைத் தேடும்
பார்வை மங்கிய
கிழட்டுத் தையல்காரணைப்போல
**
பல் பிடுங்கிய பாம்பாய்
என்னை
உன் பெட்டிக்குள்
வைத்திருக்கிறாய்
நீ விரும்பும் போது
மகுடி ஊதி
ஆட வைக்கிறாய்
பிரிந்து போகின்றவளே
நீ திரும்பிப் பார்க்காவிட்டாலும்
உன் இதயம்
திரும்பிப்பார்கிறது
**
நீ பலவீனமானவள்
ஆனால்
உன் ஆயுதங்கள்
பயங்கரமானவை
**
என் உடைந்த கனவுகளால்
உன் வீட்டைக்கட்டிக்கொள்
உன் இதயத்தில்
எரியும் நெருப்பால்
உன் விளக்கை ஏற்றிக்கொள்
உன் நினைவு வருமுன்
வந்துவிடு
**
நான்
எங்கே சென்றாலும்
அது உன் சபையாகவே
இருக்கிறது
கூட்டவோ குறைக்கவோ
தேவையில்லை
நீ எல்லா வகையிலும்
சரியாக இருக்கிறாய்
**
இந்தக் கவிதைகள்
பழைய காயங்களைத்
திறக்கின்றன
சந்திப்பு
உன் ஆடை
பிரிவு
உன் நிர்வானம்
கண்ணைவிட்டு
நீ புறப்படுவது போல
உன்னை விட்டு
நான் புறப்படுகிறேன்
**
இந்த இழையில் எல்லோரும் தங்களுக்கு பிடித்த கவிக்கோ ஐயாவின் கவிதைகளை இட்டால் நன்று
அன்புடன்
என் சுரேஷ்
On 13/10/2008, Gokul Kumaran <gokul...@gmail.com> wrote:
> *இதுவும் அப்துல் ரஹ்மான் கவிதைகள்:*
>
>
> **
>
> *உன் பாதையும்
> என் பாதையும்
> வெவ்வேறாக இருக்கலாம்
> ஆனால் அவை
> ஒரே கையின்
> ரேகைகள்
> *
>
> ***
> *
>
> *நீ
> கண்ணீரை விட
> ஆழமானவள் (ன்)
> சோகத்தை விட
> அழகானவள் (ன்)
> *
>
> ***
> *
>
> *பாவத்திற்கு கிடைத்த
> மன்னிப்பை போல
> நீ எனக்குக் கிடைத்தாய்
> *
>
> *என்னை மறந்துவிட்டதாகச்
> சொல்கிறாய்
> பிறகு ஏன்
> உன் கண்ணில் நீர்
> *
>
> *ஒவ்வொரு மூச்சும்
> உன்னை சந்திக்கப்
> புறப்படுகிறது
> ஏமாற்றத்தோடு
> திரும்புகிறது
> *
>
> ***
> *
>
> *நான் உன் மூச்சு
> என்னை நீ விட்டாலும்
> மீண்டும்
> வாங்கித்தான் ஆகவேண்டும்
> *
>
> ***
> *
>
> *உன் மௌனத்தில்
> என் காயம் உறங்க
> இடம் கொடு
> *
>
> ***
> *
>
> *நீ
> சொல்ல முடியாத
> சொல்
> சொல்ல முடியாததைச்
> சொல்லும் சொல்
> *
>
> ***
> *
>
> *உன் வேர்கள்
> என் கண்ணீரை
> தேடி வருகின்றன
> *
>
> ***
> *
>
> *தண்ணீர்த் தொட்டி
> மீன்களைப்போல
> உனக்குள்ளேயே
> நீந்திக் கொண்டிருக்கின்றது
> என் எண்ணங்கள்
> *
>
> ***
> *
>
> *உன் கண்ணில்
> நான் செத்து
> மிதக்கிறேன்
> *
>
> ***
> *
>
> *கூடு கட்டத்
> தன் உதிர்ந்த இறகுகளையே
> பொறுக்கும் பறவையைப் போல
> நான் உன் நினைவுகளைப்
> பொறுக்குகிறேன்
> *
>
> ***
> *
>
> *என்னை
> என்னிடத்தில் ஒப்படைத்தாய்
> என்னை வைத்துக்கொண்டு
> என்ன செய்வது என்று
> தெரியவில்லை எனக்கு
> *
>
> ***
> *
>
> *என் வாழ்க்கைப்
> பயணத்திற்குக்
> கட்டுச் சோறாய்
> உன் நினைவுகள்
> தாகத்திற்கு அருந்தக்
> கண்ணீர்
> *
>
> ***
> *
>
> *நீ நதி
> நான் உன்னில் விழுந்த
> சருகு
> நீ எங்கே கொண்டு போகிறாயோ
> அங்கேதான்
> நான் போகமுடியும்
> *
>
> ***
> *
>
> *ஆயுள் முழுவதும்
> உனக்காகக்
> காத்திருக்கத் தயார்
> மரணம் போல்
> நீ நிச்சயமாக வருவதாயிருந்தால்
> *
>
> ***
> *
>
> *உன்னிடம் நடந்து
> காயங்களோடு
> திரும்புகிறது மனம்
> *
>
> ***
> *
>
> *மனம்
> பசித்து அழும்போது
> உன் நினைவுகள்
> அள்ளி எடுத்து
> பாலூட்டுகிறது
> *
>
> ***
> *
>
> *உன் நினைவுகளும்
> தொட முடியாத
> தூரத்திற்கு
> போகிறேன்
> *
>
> *என் பூக்களில் நீ
> வசவுகளை எழுதிகிறாய்
> *
>
> ***
> *
>
> *நீ நடந்த
> பாதையில் நடந்தேன்
> காலில் தைத்தது
> இதயச் சில்
> *
>
> ***
> *
>
> *உன் இதயத்திற்குள் நுழைய
> வழி பார்க்கிறேன்
> ஊசியில் காதைத் தேடும்
> பார்வை மங்கிய
> கிழட்டுத் தையல்காரணைப்போல
> *
>
> ***
> *
>
> *பல் பிடுங்கிய பாம்பாய்
> என்னை
> உன் பெட்டிக்குள்
> வைத்திருக்கிறாய்
> நீ விரும்பும் போது
> மகுடி ஊதி
> ஆட வைக்கிறாய்
> *
>
> *பிரிந்து போகின்றவளே
> நீ திரும்பிப் பார்க்காவிட்டாலும்
> உன் இதயம்
> திரும்பிப்பார்கிறது
> *
>
> ***
> *
>
> *நீ பலவீனமானவள்
> ஆனால்
> உன் ஆயுதங்கள்
> பயங்கரமானவை
> *
>
> ***
> *
>
> *என் உடைந்த கனவுகளால்
> உன் வீட்டைக்கட்டிக்கொள்
> உன் இதயத்தில்
> எரியும் நெருப்பால்
> உன் விளக்கை ஏற்றிக்கொள்
> *
>
> *உன் நினைவு வருமுன்
> வந்துவிடு
> *
>
> ***
> *
>
> *நான்
> எங்கே சென்றாலும்
> அது உன் சபையாகவே
> இருக்கிறது
> *
>
> *கூட்டவோ குறைக்கவோ
> தேவையில்லை
> நீ எல்லா வகையிலும்
> சரியாக இருக்கிறாய்
> *
>
> ***
> *
>
> *இந்தக் கவிதைகள்
> பழைய காயங்களைத்
> திறக்கின்றன
> *
>
> *சந்திப்பு
> உன் ஆடை
> பிரிவு
> உன் நிர்வானம்
> *
>
> *கண்ணைவிட்டு
> நீ புறப்படுவது போல
> உன்னை விட்டு
> நான் புறப்படுகிறேன்
> *
>
> ***
> *
> *உன் நினைவுகள்
> என் சிதை
> அதில் எரிந்து கொண்டேயிருப்பது
> என் வாழ்க்கை
>
>
> --
> ப்ரியத்துடன்,
> கோகுல்
> *
>
> >
>
அன்புடன்
என் சுரேஷ்