சென்று வா மகளே... சென்று வா

133 views
Skip to first unread message

ஸ் பெ

unread,
Sep 26, 2014, 3:14:34 AM9/26/14
to panbudan

சென்று வா மகளே... சென்று வா.


18 ஆண்டு கால சரித்திரத்தின் இறுதிப்பக்கங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 27 செப்டம்பர் 2014 ஜெயலலிதா மற்றும் தமிழகத்தின் தலையெழுத்தி திருத்தி எழுதப்பட உள்ளது. 

பத்தி பத்தியாக எழுதப்பட வேண்டிய இந்த சரித்திரம், என்ன காரணத்தாலோ, ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய இந்த வரலாறு, பக்கம் பக்கமாக ஊடகங்கள் எழுத வேண்டும்.  ஆனால், கனத்த மவுனம் காக்கின்றன.



தலைமுறைகளைக் கடந்து நடக்கும் இவ்வழக்கின் விபரங்கள், இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கு தெரிந்திருக்காது.  அது இணையம் இல்லாத காலம்.  அதனால் அது குறித்த பல பதிவுகள் இல்லை.

ஜெயலலிதாவைப் போல ஒரு மோசமான ஆட்சியாளர் / அரசியல்வாதியை பார்க்கவே முடியாது.  கிட்டத்தட்ட ஹிட்லர் ஆட்சி போலத்தான் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நடத்தி வந்தார்.  

ராஜீவ் கொலைக்குப் பிறகு, தேர்தல் ஒரு மாத காலம் தள்ளி வைக்கப்பட்ட பிறகு, நடந்த தமிழக தேர்தலில், திமுக மீது ஏற்பட்ட கோபத்தின் காரணமாகவும், ராஜீவ் மரணத்தின் காரணமாக ஏற்பட்ட அனுதாப அலையின் காரணமாகவும், மிருக பலத்தோடு ஆட்சியைப் பிடித்தார் ஜெயலலிதா.   ஜெயலலிதா எப்படிப்பட்ட ஆணவம் மிகுந்தவர் என்பதை அப்போது தமிழ்நாடு கண்டது.  ஒரு ஆண்டு முடிவதற்குள்ளாகவே, ராஜீவ் அனுதாப அலையால் அதிமுக வெல்லவில்லை....  சொந்த பலத்தில்தான் வெற்றி பெற்றது என்று அறிவித்தார்.   தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் நடந்த கொள்ளைகளுக்கு காரணம் நரசிம்மராவ்தான்.  கைதானவர்கள் எல்லோரும் தெலுங்கு பேசுகிறார்கள், ஆகையால் அனைவரும் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் என்று சட்டப்பேரவையிலேயே அறிவித்தார்.

அதன் பிறகு, நாள்தோறும் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம், உள்ளிருப்பு போராட்டம், கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் என்று பல்வேறு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் ஜெயலலிதா.

மற்றொரு புறம், ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்த மதுசூதனன், எஸ்.டிசோமசுந்தரம் ஆகியோர், ஜெயலலிதாவின் மனம் குளிர அத்தனை அடாவடிகளிலும் ஈடுபட்டனர்.  

ஜெயலலிதா ஆட்சியின் தொடக்கமே, ஜெயலலிதா ஆட்சியை விமர்சித்த தராசு இதழின் இரண்டு ஊழியர்களின் படுகொலையில்தான். காவேரி பிரச்சினை காரணமாக, காங்கிரஸ் அரசு கர்நாடக அரசுக்கு ஆதரவாக இருந்தது என்பதால், அதன் அமைச்சர் ப.சிதம்பரத்தின் வாகனத்தை அதிமுகவின் 400 ரவுடிகள் தாக்கினர்.  அண்ணா பல்கலைக்கழகத்தில் மண்டல் பரிந்துரை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவேன் என்று அறிவித்தார் அதன் துணை வேந்தர் முனைவர் அனந்தகிருஷ்ணன்.  இரண்டு நாட்களில் மர்ம நபர்கள், அவர் வீட்டுக்குள் நுழைந்து அவரை தாக்க முனைந்தனர்.  அனந்த கிருஷ்ணன், வீட்டினுள் இருந்த அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டதால் தப்பித்தார்.  சமூக நீதி காத்த வீராங்கனையின் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றினாராம்.  அதற்குத்தான் இந்த தாக்குதல்.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி 50 சதவிகித இட ஒதுக்கீட்டை மட்டுமே பின்பற்ற வேண்டும், மாறாக தமிழக அரசு 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறது என்று வழக்கு தொடுத்தார் வழக்கறிஞர் கே.எஸ்.விஜயன்.   இதையடுத்து, இவர் மீது நடந்த கொடூர தாக்குதலில், விஜயனுக்கு, கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மூன்று மாதங்கள் படுக்கையில் இருந்தார்.   இதே போலத்தான் மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரத்தின் மீதும் கொடூரத் தாக்குதல் நடைபெற்றது. 

தொண்ணூறுகளில் வழக்கறிஞர் விஜயன்.

இது போன்ற தாக்குதல் வழக்குகள் அனைத்திலும், போலி குற்றவாளிகளை ஆஜர் படுத்தி, வழக்கின் விசாரணையை திசை திருப்புவதில், காவல்துறை மிக மிக முனைப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

திருத்துரைப்பூண்டி இந்தியக் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ பழனிச்சாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுவதாக புகார் கூறினார். மறு நாள், அவர் வீட்டிலேயே, மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர், கள்ளச்சாராயத்தை தேடி சோதனை நடத்தினர்.   

சட்டப்பேரவையில், அப்போதைய பாமக எம்எல்ஏ பண்ருட்டி ராமச்சந்திரன், ஆளுனர் உரைக்கு எதிராக எழுந்து, பேச முயன்றபோது, அப்போது சுயேட்சை எம்எல்ஏவாக இருந்த தாமரைக்கனியால் தாக்கப்பட்டார்.  

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஏ.ஆர்.லட்சுமணன், நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார்.  இந்த வழக்கு ஜெயலலிதாவுக்கு எதிராக செல்லும் என்பதை உணர்ந்த ஜெயலலிதா, காவல்துறையை வைத்து, ஏ.ஆர்.லட்சுமணனின் மருமகன் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்தார். 

ஜெயலலிதாதான் இப்படி அராஜகவாதியாக நடந்து கொள்கிறார் என்றால், ஒட்டு மொத்த நிர்வாகமும் அவருக்கு துணை போனது.  காவல்துறை அதிகாரிகள், அம்மா கட்டி விட்டு வரச் சொன்னால் வெட்டி விட்டு வந்தார்கள்.

அரசியல் எதிரிகள், அப்போது இருந்த ஆள்தூக்கி தடா சட்டத்தின் கீழ் சகட்டு மேனிக்கு கைது செய்யப்பட்டார்கள்.   ஏராளமான திமுகவினர்   விடுதலைப் புலிகளோடு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.    

வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் என்று அறிவித்த தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை ஏற்போர்ட்டில் இருந்து வெளியே வராமல் நான்கு மணி நேர வன்முறை.  சென்னை வந்து, தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்த சேஷனின் மீது மீண்டும் தாக்குதல்    என்று அநியாயங்களும், அக்கிரமங்களும், ஜெயலலிதா அரசின் அன்றாட வழக்கமாக இருந்தன. 

இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல நடந்த சம்பவம்தான் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலோகா மீதான ஆசிட் வீச்சு.

சதர்ன் பெட்ரோ கெமிக்கல் இன்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் - ஸ்பிக் என்ற நிறுவனத்தின் 26 சதவிகித பங்குகள், தமிழக அரசு நிறுவனமான, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் வசம் இருந்தது (டிட்கோ). ஸ்பிக் நிறுவனத்தின் நிறுவனர்களான, ஏ.சி முத்தையா செட்டியார் மற்றும் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் ஆகியோர், அரசு வசம் இருந்த பங்குகளை வாங்க வேண்டும் என்று கடும் முயற்சிகள் எடுத்தனர். 

அரசும் பங்குகளை விற்பதென்று முடிவெடுத்தது. ஆனால், என்ன விலைக்கு விற்பனை செய்வத என்பதில் கடும் சிக்கல் நீடித்தது.  டிட்கோ நிறுவனத்தின் தலைவராக சந்திரலேகா ஐஏஎஸ் இருந்தார். அப்போது தொழில் துறை செயலராக பி.சி.சிரியாக் இருந்தார்.

விற்பனை நடந்த அன்று சந்தை விலைக்கு விற்றிருந்தால், அரசின் பங்குகளுக்கு 40 கோடி ரூபாய் கிடைத்திருக்கும்.  ஆனால், அந்த பங்குகளை விலை குறைத்து விற்பனை செய்ய வேண்டும் இரண்டு செட்டியார்களும் விரும்பினர்.  செட்டியார்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதை விட, ஜெயலலிதாவுக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும் ?

24 ஜனவரி 1992 அன்று பங்குகளை செட்டியார்களுக்கு விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்த அன்று, ஒரு பங்கின் விலை 80.  அரசு விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்ட நாள் 23 மார்ச் 1992.  மார்ச் 1992 வாக்கில் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு ஸ்பிக் பங்கு, ரூபாய் 210 அளவுக்கு உயர்ந்தது. 

டிட்கோ தலைவரான சந்திரலேகா ஐஏஎஸ், 80 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார்.  ஜெயலலிதா நேரடியாக சந்திரலேகாவை தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்து, அது மோசமான உரையாடலாக மாறி, யார் அழகு என்ற ரீதியில் வளர்ந்ததாகவும், உரையாடலின் இறுதியில், முதலமைச்சராவதற்கு, தோற்றம் அடிப்படை என்றால், நானும் முதல்வராகியிருப்பேன் என்று சந்திரலேகா கூறியதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையடுத்து, இந்த விபரத்தை ஜெயலலிதா அப்போது அமைச்சராக இருந்த மதுசூதனனிடம், சந்திரலேகாவுக்கு தக்க பாடம் புகட்ட சொல்லி, மதுசூதனன், இதை திண்டுக்கல் சீனிவாசனிடம் சொல்லி, சீனிவாசன், இந்த பொறுப்பை தற்போது நத்தம் விஸ்வநாதன் என்று அழைக்கப்படும் விஸ்வநாதனிடம் கூறியதாகவும், நத்தம் விஸ்வநாதன் ஏற்பாடு செய்தபடியே, சுடலை என்கிற சுர்லா சந்திரலேகா மீது ஆசிட் ஊற்றியதாகவும் கூறப்படுகிறது. சிபிஐ விசாரணையில் சுர்லா மதுசூதனனின் பெயரை கூறியதன் அடிப்படையில் மதுசூதனனை கைது கூட செய்தது சிபிஐ இணைப்பு தமிழகத்தில் ஆசிட் கலாச்சாரத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது அந்த சம்பவமே.

சுப்ரமணியன் சுவாமியோடு சந்திரலேகா

சாதாரணமாக நெருப்பு லேசாக நம் மீது பட்டாலே துடி துடித்து விடுகிறோம்.  ஒரு அழகான ஐஏஎஸ் அதிகாரியின் முகத்தில் ஆசிட் வீசினால், அவர் எப்படி வேதனைப் பட்டிருப்பார் என்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.  

ஜெயலலிதாவை நேரடியாக தொடர்புப் படுத்த, நேரடியா எவ்வித சாட்சிகளும் இல்லையென்றாலும்,  சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு நடத்த யாருக்கும் காரணங்கள் இருக்க முடியாது.  அந்த வழக்கில் யார் பின்னணியில் இருந்தவர்கள் என்பது இறுதி வரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.     பண்டிட் சந்திரகாந்த் சொக்கா மோரே, அண்ணா துரை, சுனில் தாமோதர்     பாண்டவ் மற்றும் மஞ்சித் சிங் என்கிற பாலி ஆகியோர் குற்றவாளிகள் என்று பின்னாளில் விசாரணை நடத்திய சிபிஐ கண்டறிந்தது. 

ஆனால், ஜெயலலிதாவின் கீழ் செயல்பட்ட மாநில காவல்துறை, சுடலைமுத்து என்கிற சுர்லாதான் இதில் குற்றவாளி என்று அவனை கைது செய்து 5 ஆண்டுகள் பிணையில்லாமல் சிறையில் இருந்தான். பின்னாளில், சுர்லாவுக்கு இதில் தொடர்பில்லை என்றனர்.  ஆனால், சுர்லாவோ, சிறையை விட்டு வெளியேறி விடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தான்.  வழக்கில் தொடர்பில்லை என்று சிபிஐ முடிவுக்கு வருவதற்கு முன்னதாகவே, அவன் வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணமூர்த்தியை நீதிமன்றத்துக்குள்ளாகவே தாக்க முயற்சி செய்தான். 

இந்த வழக்கில் இறுதி வரை யார் குற்றவாளி என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.  

காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து, எத்தனையோ போராட்டங்களை நடத்தினாலும், தனி நபராக இணைந்து, ஜெயலலிதா கண்ணில் விரலை விட்டு ஆட்டியது யாரென்றால் சுப்ரமணிய சுவாமிதான்.  திமுக பேரணிகள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினாலும், வழக்கு போட்டு, ஜெயலலிதாவை எரிச்சலின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றது சுப்ரமணிய சுவாமி மட்டுமே. 


30.05.1993 வரை, தமிழகத்தில் ஆளுனராக இருந்தவர், பீஷ்ம நாராயண் சிங். இவரை காங்கிரஸ் அரசாங்கம் நியமித்திருந்தாலும், இவரை வளைப்பது எப்படி என்ற கலையை கற்றிருந்தார் ஜெயலலிதா.   பீஷ்ம நாராயண் சிங்கின் "தேவைகளை" ஜெயலலிதாவின் தளபதிகள், கச்சிதமான நிறைவேற்றி வைத்தனர்.  அப்போது, வால்டர் தேவாரத்திடம் பணியாற்றிக் கொண்டிருந்த லாலி என்ற பெண் காவலர், பீஷ்ம நாராயண் சிங் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டார் என்பது, நீங்கள் புரிந்து கொள்ள ஏதுவாக கொடுக்கப்படும் க்ளு.

ஆளுனர் பீஷ்ம நாராயண் சிங்

காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுகவுக்கும் மோதல் முற்றுகிறது. ஜெயலலிதா காங்கிரஸ் கட்சியை வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.  ஒரு கட்டத்தில், சட்டப்பேரவையிலேயே, தமிழகத்தில் நடக்கும் நெடுஞ்சாலை கொள்ளைகளுக்குக் காரணம், மத்திய அரசுதான்.   தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, நரசிம்மராவ் இப்படி கொள்ளையர்களை அனுப்புகிறார்.  இதற்கு காரணம், பிடிபட்ட கொள்ளையர்கள் அனைவரும் தெலுங்கு பேசுகின்றனர் என்றார். 
இந்த விவகாரங்களையெல்லாம் அறிந்த நரசிம்மராவ், இனி பீஷ்ம நாராயண் சிங்கை தமிழகத்தில் வைத்திருந்தால், சுத்தப்படாது என்று முடிவு செய்து, பழுத்த அரசியல்வாதியான சென்னா ரெட்டியை மாநில ஆளுனராக 31 மே 1993ல் நியமிக்கிறார்.    பீஷ்ம நாராயண் சிங் இருந்தபோது, ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு தொடுக்க அனுமதி கேட்டு திமுக அளித்த விண்ணப்பத்தை நிராகரித்திருந்தார் பீஷ்ம நாராயண் சிங்.  
ஜெயலலிதாவுக்கு, சென்னா ரெட்டி எதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது.   சென்னா ரெட்டி வந்த நாள் முதலாகவே, தினந்தோறும் மோதல்தான். அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்களுக்காக அரசு அலுவலகத்தில் டைரி அச்சிடப்பட்டு வழங்கப்படும்.   அந்த டைரியின் முதல் பக்கத்தில் மாநில ஆளுனரின் படமும், இரண்டாவது பக்கத்தில், மாநில முதல்வரின் படமும் வைக்கப்படும்.  1994ம் ஆண்டு டைரியில் சென்னா ரெட்டியின் படத்தைப் பார்த்ததும் கோபப்பட்டு டைரியை விசிறியடித்தார் ஜெயலலிதா.   

அப்போதும் இருந்த ஜெயலலிதாவின் அடிமைகள், உடனடியாக அம்மாவின் மனம் கோபித்துக் கொண்டதே என்பதை உணர்ந்து உடனடியாக அத்தனை டைரிகளையும் அழித்தனர்.  ஜனவரி, மாதம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய டைரிகள், மே மாதம் வழங்கப்பட்டது வரலாறு. 

ஆளுனர் சென்னா ரெட்டி
அதன் பிறகு, சென்னா ரெட்டியை சந்தித்து, ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்க சுப்ரமணிய சுவாமி மனு அளித்தார். அந்த மனு மீது  ஆளுனர் சென்னா ரெட்டி, முட்டாள்கள் தினமான 1995ம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று, அனுமதி அளித்தார்.   அந்த அனுமதியை எதிர்த்து, 6 ஏப்ரல் 1995 அன்று, ஜெயலலிதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அவ்வழக்கு நீதிபதி சிவராஜ் பாட்டீல் முன்பு விசாரணைக்கு வருகிறது.. ஜெயலலிதாவுக்காக மூத்த வழக்கறிஞர் பராசரன் ஆஜரானார்.  சுப்ரமணிய சுவாமி தனக்காக தானே வாதாடுகிறார்.  வழக்கை விசாரித்த சிவராஜ் பாட்டீல், அரசியல் அமைப்புச் சட்ட விவாதங்கள் இதில் அடங்கியிருப்பதால், இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுகிறார். 

20 ஏப்ரல் 1995 அன்று இந்த வழக்கு நீதிபதி எம்.சீனிவாசன் மற்றும் எஸ்.எஸ்.சுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு வருகிறது.   ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பராசரன் வாதிடுகிறார்.  சுப்ரமணிய சுவாமி, அவரே வாதிடுகிறார்.  தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகிறார். வழக்கின் விசாரணை காலை 10.30 முதல் மாலை 4.30 வரை தொடர்ந்து நடைபெறுகிறது.  வழக்கு விசாரணை முடிந்ததும் தீர்ப்பை ஒத்தி வைக்கிறார் நீதிபதி.   மாலை 4.30 மணிக்கு, அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் முத்துக்கிருஷ்ணன், சுப்ரமணியன் சுவாமியின் காதில் ஏதோ சொல்லுகிறார்.  உடனே எழுந்த சுவாமி, தன் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், போலீசார், வாயிலில் காத்திருப்பதாகவும், தனக்கு முன்ஜாமீன் வழங்கும்படியும் கேட்கிறார். நீதிபதி சீனிவாசன் அரசு வழக்கறிஞரைப் பார்த்து விபரத்தை கேட்டதும், அவர் தனக்கு இது குறித்து எதுவுமே தெரியாது என்கிறார். நீதிபதி, நாளை காலை 10.30 மணி வரை உங்களை கைது செய்ய தடை விதிக்கிறேன் என்கிறார்.

மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில், சுப்ரமணிய சுவாமி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், ஒரு Political Pariah என்று பேசியால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இதையடுத்தே சுவாமியை கைது செய்ய, காவல்துறை நீதிமன்றம் வந்திருந்தது. 



Pariah என்ற ஆங்கிலச் சொல், தமிழில் உள்ள பறையர் என்ற சாதிப்பெயரில் இருந்தே தோன்றியது.  ஒதுக்கப்பட்டவர் என்ற பொருளில் இந்த சொல், ஆங்கில மொழியில் பதினெட்டாம் நூற்றாண்டு முதல் வழக்கத்தில் இருந்து வருகிறது.  தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக எத்தனையோ வன்கொடுமைகளை இழைக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்த ஜெயலலிதா, கொடியங்குளத்தில் தலித்துகளின் வீடுகளை காவல்துறையை விட்டு சூறையாடுவதை வேடிக்கை பார்த்த ஜெயலலிதா, சுப்ரமணியன் சுவாமி Political Pariah என்று சொன்னதற்காக, வழக்கு தொடுத்தார்.  அப்படியே சுப்ரமணியன் சுவாமி சாதி ரீதியாக அந்த வார்த்தையை பேசியிருந்தாலும் கூட, அதில் புகார் கொடுக்க வேண்டியது வேலுப்பிள்ளை பிரபாகரன்தானே தவிர, காவல்துறை அல்ல.  

நீதிமன்றத்தின் வெளியே சுவாமி வந்தபோது, அப்போது, மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த வால்டர் தேவாரம் மற்றும், மதுரை ஆணையர் ஆர்.என்.சவானி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் சுவாமியை கைது செய்ய காத்திருந்தனர்.  சுவாமியோடு வந்த 30 கமாண்டோக்களும் இருந்தனர்.  ஒரு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

வால்டர் தேவாரம்

சுவாமி வந்ததும், தேவாரம் உங்களை கைது செய்கிறேன் என்றார். சுவாமி, எனக்கு உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச், நாளை காலை 10.30 மணி வரை கைது செய்ய தடை விதித்திருக்கிறது என்றார்.  தேவாரம் உத்தரவின் நகலைக் கொடுங்கள் என்றார்.  சுவாமி இது வாய்மொழி உத்தரவு என்றார். நான் நம்ப மாட்டேன் உங்களை கைது செய்கிறேன் என்றார் தேவாரம்.   உடனே சுவாமி, நான் உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கிறது என்று சொல்கிறேன். நீங்கள் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கைது செய்வேன் என்கிறீர்கள்.   நெருப்போடு விளையாடுகிறீர்கள்.    இதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டும் என்கிறார்.

கொஞ்சம் தயங்கிய தேவாரம் மைக் மூலமாக, உயர்நீதிமன்றத்தினுள் இருந்த காவலரை அழைத்து, அரசு குற்றவியல் வழக்கறிஞரிடம் விபரம் கேட்டு சொல்லும்படி உத்தரவிட்டார்.  15 நிமிடங்கள் கழித்து, மைக்கில் அந்த காவலர், அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் பி.ஸ்ரீராமுலு, நீதிபதிகளின் தீர்ப்பை உறுதி செய்ததும், சுவாமியை செல்ல அனுமதித்தார். 

அங்கிருந்து நேராக தன் வீட்டுக்கு சென்ற சுவாமி, ஆளுனரை சந்திக்கப் போவதாக தெரிவித்தார்.  பத்திரிக்கையாளர்களும், அவர் பின்னாலேயே சென்றனர்.  ஆளுனர் மாளிகைக்கு சென்று, சென்னா ரெட்டியை சந்தித்த சுவாமி, மீண்டும் திரும்பி தன் வீட்டுக்கு வந்தார். சிறிது நேரம் கழித்து, முக்கிய டெவலப்மென்டுகள் இருப்பதாகவும், மீண்டும் ஆளுனரை சந்திக்கப் போவதாக அறிவித்து விட்டு கிளம்பினார். பத்திரிக்கையாளர்களும், அவர் பின்னாலேயே சென்றனர். ஹால்டா சந்திப்பு வந்ததும், சுவாமியின் கார், நிற்காமல் நேராக சென்றது. என்ன நடக்கிறது என்பதை உணரும் முன், சுவாமி, நேராக விமான நிலையம் சென்று, வாசலில் தயாராக போர்டிங் பாஸ் வைத்திருந்தவரிடம் அதை பெற்றுக் கொண்டு, எந்த லக்கேஜும் இல்லாமல், விமான நிலையத்தினுள் நுழைந்து, மும்பை செல்லும் விமான நிலையத்தில் ஏறினார்.

விமானம் கிளம்ப இன்னும் 30 நிமிடங்கள் இருந்தன.  செய்தியறிந்த ஜெயலலிதா ருத்ர தாண்டவம் ஆடினார். என்ன ஆனாலும் சரி. சுவாமியை விமானத்துக்குள் ஏறி கைது செய்யுங்கள் என்றார்.  அப்போது சென்னை மாநகர ஆணையர் ராஜகோபாலன்.  டிஜிபியாக ஸ்ரீபால் இருந்தார். இருவரும், விமான நிலைய வாயில் வரைதான் தமிழக காவல்துறையின் கட்டுப்பாடு.  விமான நிலையத்தின் உள்ளே மத்திய அரசின் கட்டுப்பாடு. விமான நிலையத்தில் ஏறுவதில்லை என்று முடிவெடுத்தனர். 

மறுநாள் காலை, புதிய டிஜிபி மற்றும் புதிய ஆணையர்.   ஆளுனரைப் பார்க்க சென்ற சுவாமி, ஆளுனர் மாளிகையில் இருந்து மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சவாணை தொடர்பு கொண்டு, விபரத்தை சொல்லுகிறார்.   சவாண், உடனடியாக டெல்லி வருமாறும், டெல்லி விமானம் உடனடியாக இல்லாத காரணத்தால், மும்பை சென்று, அங்கிருந்து டெல்லி வருமாறும் கூறுகிறார்.   அதன்படி, மும்பை சென்ற சுவாமி, தமிழக காவல்துறையிடமிருந்து தப்பிக்க, நேராக பால் தாக்கரே இல்லத்தில் சென்று, தங்கி விட்டு, அங்கிருந்து டெல்லி சென்றார்.



டெல்லியில் 10.30 மணி முடிந்ததும் சுவாமியை கைது செய்யலாம் என்று தமிழக காவல்துறை காந்திருந்தது.  9 மணிக்கே உச்சநீதிமன்றத்தினுள் சென்ற சுவாமி தலைமை நீதிபதி அகமாதியை அவர் அறையில் சந்தித்து விபரங்களை தெரிவிக்கிறார்.   அகமாதி 10.30 மணிக்கு நீதிமன்றத்தினுள் வந்து கூறுமாறு கூறியதன் அடிப்படையில் அவ்வாறே செய்கிறார் சுவாமி. வழக்கின் விபரங்களை கேட்ட அகமாதி சிரித்து விட்டு, இந்தியாவில் எந்த மூலையில் அவர் கைது செய்யப்பட்டாலும், 100 ரூபாய்க்கான சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, உத்தரவின் நகலையும் உடனே வழங்க உத்தரவிடுகிறார்.  வெற்றிக் களிப்போடு வெளியேறினார் சுவாமி.

இந்த வழக்கின் தீர்ப்பு 27 ஏப்ரல் அன்று வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்தன.  சென்னா ரெட்டி வழக்கு தொடுக்க கொடுக்க இருந்த அனுமதி சரி என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று அறிந்ததும் 26 அன்று சட்டசபையில் ஒரு அடிமையை விட்டு கேள்வி கேட்க வைத்தார் ஜெயலலிதா. அவரும் அப்படியே கேட்டார். உடனே ஜெயலலிதா, நான் ஆளுனரை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறேன் என்றால், கடந்த முறை ஆளுனரை சந்தித்தபோது, என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று கூசாமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.  இதுதான் ஜெயலலிதா.



தனக்கு எதிராக தீர்ப்பு வர இருக்கிறது என்று தெரிந்ததும் அதற்கு காரணமான சென்னா ரெட்டியை அவமானப்படுத்துகிறாராம்.   இந்த சம்பவத்தையும், தற்போது சொத்துக் குவிப்பு வழக்கின் புகார்தாரரான சுப்ரமணியன் சுவாமியின் மீது ஜெயலலிதா தொடர்ந்துள்ள 5 அவதூறு வழக்குகளையும் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.  தெளிவு பிறக்கும். 

நீதிபதி எம்.ஸ்ரீனிவாசன்
அதன் பின் நீதிபதி என்.சீனிவாசன் ஆளுனர் அளித்த அனுமதி செல்லும் என்று தீர்ப்பளித்ததும், உச்சநீதிமன்றம் சென்று தடை பெற்றார் ஜெயலலிதா.   அந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு, இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பது ஒரு சோகமான வரலாறு.

பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சருக்கு எதிராக ஆளுனர் ஊழல் வழக்கு தொடுக்க அனுமதி கொடுத்த முதல் நபர் ஜெயலலிதா என்று வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் இடம் பிடித்தார் ஜெயலலிதா. இதற்கு முன், இதே போல மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் ஏ.ஆர்.அந்துலேவுக்கு எதிராக அம்மாநில ஆளுனர் அனுமதி அளிக்க இருந்தார்.  ஆனால் அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே, பதவியை ராஜினாமா செய்தார் அந்துலே. ஊழல் பேர்வழியாக இருந்தாலும், அந்துலே பொதுமக்கள் கருத்துக்கு மரியாதை கொடுத்தார்.   

ஆனால் ஜெயலலிதா ? 

இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்பது தெரிந்தும், நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து, அதற்காக ஒரு புதிய வழக்கை வாங்கிய அறிவாளிதான் ஜெயலலிதா.

இந்த வழக்கு குறித்து பேசிய ஒரு மூத்த பத்திரிக்கையாளர் கூறுகையில் "18 ஆண்டுகளாக இந்திய நீதித்துறையை ஜெயலலிதா கற்பழித்துள்ளார். இது போல ஒரு வழக்கை இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் இழுத்தடித்தது கிடையாது. வழக்கறிஞரின் மாமனாருக்கு உடல் நிலை சரியில்லை என்பதையெல்லாம் காரணம் காட்டி வாய்தா கேட்டனர். நீண்ட தாமதத்துக்குப் பிறகு, இவ்வழக்கின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பச்சாபுராவை கதற வைத்தனர்.  மனம் நொந்த அவர், கடந்த ஆறு மாதங்களாக இவ்வழக்கில் ஒரு முன்னேற்றமும் இல்லை. நான் இந்த நீதிமன்றத்தில் தனியாக எந்த வேலையும் இல்லாமல் அமர்ந்திருக்கிறேன். ஏறக்குறைய தனிமைச் சிறையில் இருப்பது போல உணர்கிறேன் என்று அவர் மனம் நொந்து புலம்பினார்.

அடுத்ததாக இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா மீது கர்நாடக லோக் ஆயுக்தாவில் பொய்யான ஒரு வழக்கை தாக்கல் செய்து, அவரை மனம் நோகச் செய்து, ராஜினாமா செய்ய வைத்தனர்.  60 ரூபாய் ஊதியம் பெற்ற ஒருவருக்கு 66 கோடி ரூபாய் எப்படி வந்தது என்ற மிக மிக எளிமையான வழக்கு இது. ஆனால், 18 வருடங்களாக இந்த வழக்கை இழுத்தடிக்க ஒரு அரசியல்வாதியால் முடிகிறது என்பது, இந்தியாவின் மிகப்பெரிய சாபக்கேடு." என்ற அவர் மேலும், "தனது நண்பர்கள் ஒவ்வொருவராக எதிரியாக்கியதன் மூலம், ஜெயலலிதா தன்னுடைய மரண வேட்கையை வெளிப்படுத்துகிறார்.  90 வயதிலும் கருணாநிதிக்கு இன்னும் மூன்று முறை முதல்வராக வேண்டும், கட்சியையும் தமிழகத்தையும் ஆள வேண்டும் என்ற வேட்கை உள்ளது.  ஆனால், ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா தன்னுடைய மரண வேட்கையைத்தான் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்" என்றார்.

அவர் கூறியது உண்மை என்று உணர்த்தும் வண்ணமே ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஜெயலலிதாவோடு, ஒட்டி உறவாட விரும்பும் பல்வேறு பார்ப்பனீய சக்திகள் பிஜேபி முழுக்க நிறைந்துள்ளன. ஆனால், எந்த விதமான அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாத ஒரு மிக மிக சாதாரணமான உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஒரே கட்சியான பிஜேபியின் வேட்பாளர்களை கடத்துவது, கட்சி மாறச் செய்வது, வேட்பு மனுக்களை வாபஸ் பெறச் செய்வது என்ற தனது நடவடிக்கைகளின் மூலம், ஜெயலலிதா தனது மரண வேட்கையையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

எப்படியாவது ஜெயலலிதாவுக்கு உதவலாம் என்று நினைப்பவர்களைக் கூட, வம்பாக சண்டை இழுத்து எதிரியாக்குகிறார்.    

நாளை சிறை என்ற அச்சுறுத்தல் இருக்கையில் உலகில் எந்த அரசியல்வாதியாவது,  மின் கட்டணத்தை 20 சதவிகிதம் உயர்த்துவானா ? இது ஜெயலலிதாவின் மன நிலையையும், சாடிசத் தன்மையையுமே உணர்த்துகிறது.  இப்படிப்பட்ட ஒரு மன நிலை உடையவர் தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி செய்தால், அதனால், தமிழக மக்கள் அடைய உள்ள துன்பங்கள் ஒன்றிரண்டு அல்ல.

இந்த கட்டுரையும், இது போல பல்வேறு விபரங்களும், தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கைகளிலும், தீர்ப்பு நாள் அறிவிக்கப்பட்டது முதல், வெளி வந்திருக்க வேண்டும்.  இன்றைய தலைமுறைக்கு இந்த விபரங்கள் சுத்தமாக தெரியாது.  ஆனால், ஜுனியர் விகடனைத் தவிர்த்து ஒரு ஊடகம் கூட இது குறித்து எழுதாமல் கள்ள மவுனம் சாதிக்கின்றன.  
அந்த பத்திரிக்கையாளர் இது குறித்து கூறுகையில், "இந்த வழக்கில் ஜெயலலிதா விடுதலையானால் கூட என்னால் சகித்துக் கொள்ள முடியும்.  அப்படி விடுதலை ஆனால் மைக்கேல் குன்ஹாவைக் கூட மன்னிப்பேன்.   ஆனால், இந்த சோரம் போன ஊடகங்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன். பக்கம் பக்கமாக எழுதப்பட வேண்டிய ஒரு விஷயத்தை இந்த ஊடகங்கள் திட்டமிட்டு மூடி மறைக்கின்றன.   

ஜெயலலிதாவின் வழக்கு குறித்து எழுதாவிட்டால் ஜெயலலிதா காப்பாற்றப்படுவார் என்பது போன்ற பொய்யான நம்பிக்கையின் அடிப்படையில் இந்த ஊடகங்கள் மவுனம் காக்கின்றன.  ஜெயலலிதாவின் 91 ஆட்சியிலும், 2001 ஆட்சியிலும், பல்வேறு ஊழல்கள் வெளி வந்ததற்கான ஒரே காரணம் ஊடகங்களின் அற்புதமான பணிதான்.   ஆனால், 2011 ஆட்சியில் ஊடகங்கள் மிக மிக மோசமான துரோகத்தை தமிழகத்துக்கு செய்து கொண்டிருக்கின்றன.  ஊடகங்களின் மவுனம், இந்த ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து"  என்றார்.

அரசியல்வாதிகளின் ஊழல்களை கூட மன்னித்து விடலாம். ஆனால் ஐஏஎஸ் அதிகாரியின் முகத்தில் ஆசிட்டை ஊற்றுவதும், மகாமகக் குளத்தில் தோழியோடு குளிப்பதற்காக, நெரிசலில் 50க்கும் மேற்பட்டடவர்களை நெரிசலில் சாக வைப்பதும் ஏற்றுக் கொள்ள முடியுமா ?  அந்த மகாமகக் குளத்தில் உங்கள் பெற்றோரும், என் பெற்றோரும் இறந்திருக்கக் கூடும்தானே..... ?   இதற்கெல்லாம் தண்டனை வேண்டாமா.... ?  அதுதான் சொத்துக் குவிப்பு வழக்கு.  

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.

--

http://savukku2.blogspot.in/2014/09/blog-post_25.html?m=1

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

துரை.ந.உ

unread,
Sep 26, 2014, 3:21:02 AM9/26/14
to பண்புடன்
சுசாவை ஹீரோவாக்கும் முயற்சி இது :)))

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

ஸ் பெ

unread,
Oct 17, 2014, 1:47:52 PM10/17/14
to panbudan

மாற்றத்தைத் தவிர மாறாதது ஜெயலலிதா மட்டுமே.

1991-1996 ஜெயலலிதா ஆட்சி குறித்துசென்று வா மகளே சென்று வா என்ற கட்டுரையில் விரிவாக அலசினோம்அதில்விடுபட்ட சில பகுதிகளை பார்த்து விட்டு 2001 ஜெயலலிதா ஆட்சியை அலசுவோம்.


சுப்ரமணியன் சுவாமிக்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏன் ஏற்பட்டது என்பது பலருக்கு புரியாத புதிராக இருக்கிறதுசாதி அடிப்படையிலும்மத அடிப்படையிலும்மதம் சார்ந்த நம்பிக்கைகள் அடிப்படையிலும்இருவரும் ஒத்திசைந்தகருத்துடையவர்கள்..... பிறகு ஏன் மோதல் ?

இதற்கு ஒரு சுவையான பின்னணி இருக்கிறது. 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு195 சீட்டுகளை வெல்கிறது.  ஆனால்வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தள் கூட்டடணிவெறும் 140 சீட்டுகள் மட்டுமேபெற்றது.  ஆனால்ராஜீவ் ஏனோஆட்சியில் அமருவதை தவிர்த்து எதிர்க்கட்சியாக அமர்ந்தார்இடது சாரிகள் மற்றும்பிஜேபியின் 52 எம்.பிக்களின் ஆதரவோடுவிபி சிங் பிரதமரானார்ரதயாத்திரையை தடுத்த காரணத்தால்பிஜேபிஆதரவை வாபஸ் பெறவும்விபி.சிங் அரசு கவிழ்ந்தது.

முன்னாள் பிரதமர் சந்திரசேகர்

வெறும் 55 எம்.பிக்களை வைத்துக் கொண்டுகாங்கிரஸ் கட்சியின் 195 எம்.பிக்கள் ஆதரவோடு ஆட்சியமைத்தார்சந்திரசேகர்.  அந்த சந்திரசேகர் அரசில் வர்த்தகம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியன் சுவாமி.அப்போதுஜெயலலிதாவின் ஒரே குறிக்கோள்தமிழகத்தில் நடக்கும் கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பதுஇதுபற்றி சுப்ரமணிய சுவாமியிடம் பேசுகிறார் ஜெயலலிதாசுவாமியும் அதற்கு சம்மதிக்கிறார்.  கருணாநிதிஅரசை நான் டிஸ்மிஸ் செய்ய வைக்கிறேன்பதிலுக்கு எனக்கு ஒரு எம்.பி பதவி வேண்டும் என்று கேட்கிறார்.   அதற்குசம்மதித்த ஜெயலலிதாஎனக்கு தேர்தல் செலவுக்கு பணம் இல்லை.  அதனால் செலவுக்கு பணம் வாங்கித் தர வேண்டும்என்று மற்றொரு கோரிக்கையையும் ஜெயலலிதா வைக்கிறார். வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த சுவாமிக்கு இதுஒன்றும் பெரிய விஷயம் இல்லை.  அஷோக் லெய்லேன்ட் மற்றும் இன்னும் சில நிறுவனங்களிடமிருந்துஜெயலலிதாவின் தேர்தல் செலவுக்காக 10 கோடி பெற்றுத் தருகிறார்.


ஜனவரி மூன்றாம் வாரத்தில் சென்னையில் நடந்த ஒரு உலகத் திரைப்பட விழாவை துவக்கி வைக்க வந்த அப்போதையமத்திய உள்துறை இணை அமைச்சர் சுபோத் காந்த் சஹாயிடம்பத்திரிக்கையாளர்கள் திமுக ஆட்சி டிஸ்மிஸ்செய்யப்படுமா? என்று கேட்டதற்குஅப்படி ஒரு எண்ணம் மத்திய அரசிடம் இல்லை என்றார்அப்படிச் சொல்லிவிட்டுஅதற்கு அடுத்த வாரத்திலேயேஅதாவது 1991, ஜனவரி 31-ம் தேதிதிமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டதுஅதுவும் அன்றைய தமிழக ஆளுனர் பர்னாலாவிடம் அறிக்கை பெறாமலேயே டிஸ்மிஸ் செய்யப்பட்டதுஅதன்பிறகு ஜூன் 15-ம்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டதுஇடையில் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி.தி.மு..வும் காங்கிரஸும் கூட்டணிஅமைத்தனஆனால்தேர்தலுக்கு முன்னதாகமே 21 அன்று ராஜீவ் இறந்து போகிறார்.  சுவாமிதான் அளித்த வாக்கைகாப்பாற்றினார்ஆனால்ஜெயலலிதா சுவாமிக்கு வாக்களித்தபடிஎம்.பி சீட் தரவில்லை.  தேர்தல் முடிந்து,ஜெயலலிதாவை சந்தித்த சுவாமிஎம்.பி சீட்தான் தரவில்லைதான் அளித்த பணத்தை திருப்பித் தரும்படி கேட்கிறார்எனக்கு பணம் கொடுத்தது அஷோக் லெய்லேன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள்அவர்கள் கேட்டால் நான் தருகிறேன்உங்களிடம் தர முடியாது என்று கூறி அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார்.  பணத்தையும் பறிகொடுத்துஎம்.பி சீட்டும்கிடைக்காத ஆத்திரத்தில் இருந்த சுவாமிஓடு மீன் ஓட உறுமீனுக்காக காத்திருக்கிறார்.   1992,மே 19 அன்றுசந்திரலேகாவின் மீது ஆசிட் ஊற்றப்படுகிறது.


சந்திரலேகாவோடு சுவாமி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.  சந்திரலேகாவை இஸ்ரேல் அழைத்துச்சென்றுநவீன ப்ளாஸ்டிக்சர்ஜரி மூலம்அவரின் ஆசிட் காயங்களை சரி செய்ய சுவாமி உதவுகிறார்.

நவம்பர் 1992-ம் ஆண்டுதற்போது அப்போல்லோ மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள சிந்தூரி ஹோட்டலில்சந்திரலேகாவை பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய சுவாமிஇந்த தாக்குதலுக்கு முழுக் காரணமும்ஜெயலலிதாதான் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்.   அதிர்ந்து போகிறது தமிழகம்அது வரைஅதிகாரிகள்மட்டத்தில் இந்த விபரங்கள் அரசல் புரசலாக பேசப்பட்டுக் கொண்டிருந்தாலும்வெளிப்படையாக சுவாமி இப்படிஅறிவித்தபோதுஊடகங்களில் அது பெரிய செய்தியாக வெளியிடப்பட்டது.

அடுத்ததாக, 1993-ம் ஆண்டுஜெயலலிதா மீது புதிய ஊழல் குற்றச்சாட்டை சுமத்துகிறார் சுவாமி.  ஜெயலலிதாவும்சசிகலாவும்ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தில் பங்குதாரர்கள் மற்றும் உரிமையாளர்கள்.   அப்படி இருக்கையில் அரசுநிறுவனமானதமிழ்நாடு பாடநூல் நிறுவனத்துக்கு ஜெயா பப்ளிகேஷன்ஸ் எப்படி பாடநூல் அச்சிட்டுத் தர முடியும்இதுலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் என்று புகாரை தெரிவிக்கிறார்

ஜெயலலிதாவை இது மேலும் மேலும் எரிச்சலாக்குகிறது.  அப்போது உளவுத்துறை தலைவராக இருந்தஅலெக்சாண்டரிடம் ஆலோசனை கேட்கிறார்அலெக்சாண்டர்இந்த ஆள் உயிரோடு இருக்கும் வரை பிரச்சினைதான்இந்த ஆள் கதையை முடித்து விடுவோம்என்று ஆலோசனை கூறுகிறார்.  அதற்கான திட்டத்தையும் கூறுகிறார்சுப்ரமணிய சுவாமியை ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்துசென்னை சென்ட்ரல் சிறையில் அடைத்து விடுவோம்.அதன்பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி, அவரை அப்படியே எதிரில் உள்ள அரசு பொதுமருத்துவமனைக்கு மாற்றி விடலாம்அங்கே டாக்டர்கள் இவர் கதையை முடித்து விடுவார்கள் என்று ஆலோசனைகூறுகிறார்

சமீபத்தில் அதிமுக அடிமைகள் சங்கத்தில் சேர்ந்த 
முன்னாள் டிஜிபி அலெக்சாண்டர்
இந்த ஆலோசனையின் பின்னணியில்தான்சுவாமி மீது "இன்டர்நேஷனல் பறைய்யாஎன்று விடுதலைப் புலிகள்தலைவர் பிரபாகரனை ஒரு கூட்டத்தில் பேசியதற்காக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்கு போடப்பட்டதுஅந்தவழக்கில் சுவாமியை கைது செய்ய பகீரதப் பிரயத்தனம் எடுக்கப்பட்டது குறித்து விரிவாக பழைய கட்டுரையில்பார்த்தீர்கள்.  இறுதியாக விமான நிலையத்தில் நுழைந்து சுவாமியை கைது செய்ய வேண்டும் என்று முயற்சிநடந்தபோதுஅதைத் தடுத்தது அன்றைய டிஜிபி ஸ்ரீபால்தான்நான் சொன்னேன் என்று முதல்வரிடம் சொல்லுங்கள்.  சுவாமி கைது செய்யப்படக்கூடாது என்று உத்தரவிடுகிறார்.  இறுதியாக சுவாமி தப்பிச் சென்றதும்ஸ்ரீபால் மாற்றப்பட்டு,அவர் இடத்துக்கு வைகுந்த் டிஜிபியாக நியமிக்கப்படுகிறார்.

முன்னாள் டிஜிபி வைகுந்த்
வைகுந்தை அழைத்த ஜெயலலிதாஅலெக்சாண்டரின் திட்டத்தைச் சொல்லிசுவாமியை எப்படியாவது கைதுசெய்யவேண்டும் என்று கூறுகிறார்இதைக் கேட்டு வெலவெலத்துப் போய்ஜெயலலிதாவை தலைக்கு மேலே கையெடுத்துகும்பிட்ட வைகுந்த்ஏற்கனவே தமிழகத்தில் நடந்த சந்திரலோகா ஆசிட் வீச்சுவழக்கறிஞர் சண்முகசுந்தரம் மீதானதாக்குதல்விஜயன் மீதான தாக்குதல் ஆகியவற்றில் உங்கள் பெயர்தான் அடிபடுகிறதுமூன்று வழக்குகளுமே சி.பி.விசாரணையில் உள்ளது.   அந்த விசாரணை எந்த திசைக்கு செல்லும் என்பது தெரியாது.   இந்த மூவரும் சாதாரணநபர்கள்ஆனால் சுப்ரமணியன் சுவாமி இந்தியாவில் இருந்து உலகம் முழுக்க தொடர்புகள் உள்ள பிரபலமான நபர்அவருக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால்நான் மட்டுமல்லநீங்களும் சிறை செல்ல நேரிடும்என்னால் இந்த காரியத்தைசெய்ய முடியாதுஎனக்கு இந்த டிஜிபி பதவியே வேண்டாம் என்று கூறுகிறார்.

அதற்குப் பிறகுதான் ஜெயலலிதாவுக்கு அலெக்சாண்டர் மீது லேசாக சந்தேகம் ஏற்படுகிறது.   இதையடுத்து உளவுத்துறைதலைவராக இருந்த அலெக்சாண்டரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்க உத்தரவிடுகிறார்.

அந்த உரையாடல்கள் ஜெயலலிதாவிடம் போட்டுக் காண்பிக்கப்பட்டபோது அதிர்ந்து போகிறார் ஜெயலலிதா.  அந்தஅத்தனை உரையாடல்களும்சரச சல்லாபம் தொடர்பான உரையாடல்கள்.   நம்மை வகையாக மாட்டிவிட திட்டம்போட்டு விட்டுஇந்த நபர் தொலைபேசியில் சல்லாபத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாரே என்று கடும் கோபமடைந்தஜெயலலிதாஉடனடியாக அலெக்சாண்டரை மாற்ற உத்தரவிடுகிறார்யாரோ ஒரு அதிகாரி சொன்னான் என்பதைக்கேட்டுதன்னை எதிர்த்தவர்களை கொலை செய்யும் அளவுக்குப் போனவர் ஜெயலலிதாஅதற்கு அவர் எப்போதும்தயங்கியதே இல்லை.

1991-1996 காலகட்டத்தில் கொலை-கொள்ளை என்ற பழிபாவங்களுக்கு அஞ்சாத ஜெயலலிதா, 96க்குப் பின்மாற்றம்அடைந்தார் என்று நம்பித்தான் 2001ல் மக்கள் வாக்களித்தார்கள்.  அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருந்தது

இதன் நடுவே, 1999-ல் ஒரு சம்பவம் நடந்தது. 14 மார்ச் 1999-ல் ஜெயலலிதாவின் கணக்கு வழக்குகளை பார்த்து வந்தஆடிட்டரான ராஜசேகரை ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் செருப்பாலும் கட்டையாலும் தாக்கினர்.   இணைப்புசசிகலாவின் உறவினரான மகாதேவன் ஒரு கட்டையை எடுத்துத் தாக்கினார்.  இதில் கடுமையான காயமடைந்தராஜசேகர் காவல்துறையில் புகார் அளிக்கிறார்.   

ஜெயலலிதாசசிகலா மற்றும் மகாதேவன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படுகிறது.   இந்த வழக்குசிபி.சிஐடி விசாரணைக்கு மாற்றப்படுகிறது.   இது செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாகி விடக்கூடாதே என்பதற்காக,மறுநாள் சட்டப்பேரவையில் ஒரு பெரிய நாடகத்தை அரங்கேற்றினார் ஜெயலலிதா.   சட்டப்பேரவையின் பட்ஜெட்கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோதுகாரணமே இல்லாமல்தாமரைக்கனி எம்எல்ஏஅமைச்சர் வீரபாண்டிஆறுமுகத்தின் முகத்திலேயே குத்தினார்இணைப்பு.  சிபி.சிஐடியில் அந்த வழக்கை அப்போது விசாரித்தவர்,முத்துக்கருப்பன்.     அவர் எப்படி சிறப்பாக விசாரணை நடத்தினாரோஅதற்குக் கிடைத்த பரிசுதான்ஐஜியாகஇருந்தவரைசென்னை மாநகர ஆணையராக்கியது.

1991 ஜெயலலிதா ஆட்சியைக் கூட நான் மன்னிப்பேன்ஆனால் 2001 ஜெயலலிதா ஆட்சியை நான் மன்னிக்கவே மாட்டேன்என்றார் ஒரு மூத்த பத்திரிக்கையாளர்.  திட்டமிட்டுஜனநாயகத்தின் ஒவ்வொரு அமைப்புகளையும் சிதைத்தார்ஜெயலலிதா.

2000 பிப்ரவரியில் கொடநாடு ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார்.   அக்டோபர் 2000த்தில் டான்சிவழக்கில் தண்டிக்கப்பட்டார்.   இந்தத் தீர்ப்புகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்ஜெயலலிதா.   அந்த மேல் முறையீட்டை விசாரித்த மலை சுப்ரமணியம் என்ற நீதிபதி,  குழப்பமான ஒரு தீர்ப்பைஅளித்தார்.   ஆனாலும்என்னால் தண்டனையை நிறுத்தி வைக்க இயலாது என்றார்.

இரண்டு தொகுதிகளுக்கு மேல் மனுத் தாக்கல் செய்யக்கூடாது என்ற விதி இருந்தும்வேண்டுமென்றே நான்குதொகுதிகளில் மனுத்தாக்கல் செய்தார்.  ஏனென்றால் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் ஜெயலலிதாவின் வேட்புமனுநிராகரிக்கப்பட்டது என்று யாரும் நினைத்து விடக்கூடாதாம்இப்படி அற்பத்தனமாக நான்கு வேட்புமனுக்களை தாக்கல்செய்துநான்கு வேட்பு மனுக்களும்நிராகரிக்கப்பட்டன.  இதற்காக தனியாக ஒரு வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கிறார்ஜெயலலிதா.

பாட்டாளி மக்கள் கட்சிஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள்காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநிலகாங்கிரஸ் என்று ஒரு பெரிய கூட்டணியை அமைத்தார் ஜெயலலிதாஇந்தக் கூட்டணிநிறைவேற வேண்டும் என்பதற்காக மூப்பனாரின் வீட்டுக்கே சென்று பேசினார்ஜெயலலிதா.  1996ம் ஆண்டு தேர்தலில்ஊழல் எதிர்ப்பு என்ற காரணத்தின்அடிப்படையில்தமிழ் மாநில காங்கிரஸை தோற்றுவித்த மூப்பனார்ஜெயலலிதாவோடுகூட்டணி சேர்ந்ததற்கு, "கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை ஏற்கனவே மக்கள் தண்டித்துவிட்டார்கள்என்ற காரணத்தைச் சொன்னார்.

தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி  பெற்றது.   அந்த தேர்தல் முடிவுகள்,விஜய் டிவியில் அலசப்பட்டுக் கொண்டிருந்தன.  அப்போதெல்லாம் விஜய் டிவியில்செய்திகள் வரும்.   அந்த விவாதத்தில் மூத்த பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலனிடம்ஜெயலலிதா மாறியிருக்கிறாரா என்று கேட்கப்பட்டது.    ஜெயலலிதா தன் கட்சியை நடத்தி வருவதைப் பார்க்கையில்,அவர் சற்றும் திருந்தியதாகத் தெரியவில்லை என்றார்.  ஒரே வாரத்தில்அந்த டிஎன்.கோபாலன் மற்றபத்திரிக்கையாளர்களோடு சென்னை தலைமைச்செயலகத்தின் முன்பு மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன்
14 மே 2001 அன்று காலை 11 மணிக்கு ஜெயலலிதா ஆளுனர் பாத்திமா பீவியை சந்தித்தார்.   ஆளுனர் மாளிகையிலிருந்துஜெயலலிதா வாகனம் வெளியேறுவதற்கு முன்பாகவேகவர்னரின் பிஆர்ஓ, 12 மணிக்கு பதவிப் பிரமாணம் என்றுகூறினார்.   ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளிஎம்.எல்.ஏவாக இல்லாதவர்இவருக்கு பதவிப்பிரமாணம்செய்து வைக்கலாமா என்று சட்ட அறிஞர்களை கலந்தாலோசிக்கிறேன் என்று ஒரு சம்பிரதாயத்துக்குக் கூட பாத்திமா பீவிஅறிவிக்கவில்லை.  சில நிமிடங்களில் பதவிப்பிரமாணம் என்று முடிவெடுத்தார்.

பின்னாளில் காங்கிரஸை சேர்ந்த ஒரு மூத்த அரசியல்வாதி சொன்னது என்னவென்றால்நவம்பர் 2000ம் ஆண்டிலேயேபாத்திமா பீவியோடு ஜெயலலிதா தொடர்பு ஏற்படுத்தி விட்டார் என்பதே.  பாத்திமா பீவியின் பினாமி ஒருவருக்காக,கொடநாட்டில் ஒரு எஸ்டேட் வாங்கித் தரப்பட்டது என்றும்அதையொட்டியேஜெயலலிதாவின் அடிவருடியாக பாத்திமாபீவி செயல்பட்டார் என்றும் கூறினார் அவர்

இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியும், 
முன்னாள் தமிழக ஆளுனருமான பாத்திமா பீவி
ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே தன் அராஜகத்தை தொடங்கினார் ஜெயலலிதா.   இரண்டு ஊழல் வழக்குகளில்தண்டிக்கப்பட்டுஜெயலலிதாவின் அரசியல் முடிந்து விட்டது என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்த வேளையில்,அபரிமிதமான மெஜாரிட்டியோடு மீண்டும் ஆட்சியைப் பிடித்தால்ஏற்கனவே ஆணவம் பிடித்த ஜெயலலிதாவுக்கு ஏற்படும்அகந்தையை சொல்லவும் வேண்டுமோ.....

சட்டசபைக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயேகருணாநிதிஅரசு கஜானாவை காலி செய்து விட்டார் என்றார்கஜானாதுடைத்து வைத்தது போல இருக்கிறது என்றார்.    கருணாநிதி நான் கஜானாவை காலி செய்யவில்லைஅத்தனையும்அரிசியாக அரசு கிடங்குகளில் இருக்கிறது என்றார்.   விடுவாரா ஜெயலலிதா ?   அத்தனை அரிசியும் புழுத்துப் போனஅரிசி என்றார்.   உடனே அதிமுக அடிமை அமைச்சர்கள்புழு நெளியும் அரிசியை எடுத்து வந்து சட்டப்பேரவையில்காண்பித்தனர்.

தலைமைச் செயலகம் முன்பு மறியலில் ஈடுபட்டு தடியடி படும் பத்திரிக்கையாளர்கள்
 திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிநேராக அரசுஉணவுக் கிடங்குக்குள் சென்றார்.  சன் டிவிசெய்தியாளர் சுரேஷ் மற்றும்கேமராமேனோடுகிடங்குக்குள் சென்றுஅரிசியை சேம்பிள் எடுத்து,தொலைக்காட்சியிலும்பத்திரிக்கையாளர்கள்முன்னிலையிலும் காண்பித்தார்.  வந்ததே கோபம்ஜெயலலிதாவுக்கு.  அரசு அலுவலகத்தில் அத்து மீறிநுழைந்ததாகபொன்முடி மீதும்சன் டிவிசெய்தியாளர் சுரேஷ் மீதும் வழக்கு.  இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.   

இதை எதிர்த்து பத்திரிக்கையாளர்கள் அனைவரும்தலைமைச் செயலகம் முன்பு சாலை மறியலில்ஈடுபட்டனர்.  ஆனால் ஜெயலலிதா அசரவில்லைதனது தாக்குதல்களை தொடர்ந்து கொண்டே இருந்தார்.

அரசு கிடங்குகளில் இருந்த அத்தனை அரிசியும் புழுத்த அரிசி என்று நிரூபிக்க வேண்டுமல்லவா... ?  தமிழகம் முழுக்கலஞ்ச ஒழிப்பத் துறை அதிகாரிகள் அத்தனை அரசு கிடங்குகளிலும்  சோதனை நடத்த உத்தரவிடப்பட்டனர்.  ஒருவாரமாகஇரவு பகலாக சோதனைகள் நடந்தது.   கிடங்குகளில் இருக்கும் அத்தனை அரிசியும் புழுத்த அரிசி என்றுநிரூபிக்க வேண்டும்.   கிடங்குகளில் இடமின்மை காரணமாகசில இடங்களில் ஈரத்தின் காரணமாக சில மூட்டைகளில்அரிசி சேதமடைந்திருந்தது.  எடை குறைவுசில அரிசி மூட்டைகள் ஈரப்பதத்தோடு இருந்தது என்றுஅறிக்கைஅளிக்கப்பட்டதுதமிழகம் முழுவதும் இருந்து வரப்பெற்ற அறிக்கைகள் தொகுக்கப்பட்டுஅரசுக்கு அனுப்பப்பட்டன.  இந்தஅறிக்கைகளை அனுப்புவதற்காகலஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர்களும்அதிகாரிகளும்இரவு முழுவதும் பணியாற்றினர்.அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்டந்தோறும் 25 விரிவான விசாரணை (Detailed Enquiry) பதிவு செய்யஉத்தரவிட்டார் ஜெயலலிதா.  அதன்படிவிசாரணை மேற்கொள்ளப்பட்டது.  விசாரணையின் முடிவில்அரசுக்குஎவ்விதமான நஷ்டமும் இல்லை என்ற அறிக்கை அளிக்கப்பட்டது

ஜெயலலிதா பதவியேற்றதும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் பி.பி.நெயில்வால்.   இவர்நியமிக்கப்பட்டு ஒரு சில வாரங்களில் மாற்றப்பட்டு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.  இவரை அடுத்துலஞ்ச ஒழிப்புத்துறைஇயக்குநராக நியமிக்கப்பட்டவர் வி.கே.ராஜகோபாலன்.   

புதிய இயக்குநர் பொறுப்பேற்றதும்பழைய வழக்குகள் அத்தனையையும் ஆய்வு செய்தார்.    பல வழக்குகள்விசாரணைமுடிந்து இறுதி அறிக்கை ஒப்புதலுக்காக இருந்தன.  அவற்றில் ஜெயலலிதா மீதான வழக்குகளும் அடக்கம்.   புலனாய்வுஅதிகாரிநீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் இருக்கிறது என்று அறிக்கைஅளித்திருக்கிறார்.  ஒரு நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி என்ன செய்ய வேண்டும்?  ஒப்புதல்தானே அளிக்க வே0ண்டும்அதைத்தான் செய்தார் வி.கே.ராஜகோபாலன்.   வந்ததே கோபம் ஜெயலலிதாவுக்குஉடனடியாக வி.கே.ராஜகோபாலனைபோயஸ் தோட்டத்துக்கு அழைத்தார்.  போயஸ் தோட்டம் சென்ற ராஜகோபாலன்உள்ளே அழைக்கப்படவில்லை.வெளியிலேயே காரில் அமர்ந்தபடி இருந்தார்.   அவர் காரில் காத்திருப்பதைசிசிடிவியில் பார்த்த ஜெயலலிதாஏன்அவரு காரை விட்டு இறங்க மாட்டாரா ?  காரை விட்டு இறங்கி நிற்கச் சொல்லுங்கள் என்றார்.  வேறு வழியின்றிகாரைவிட்டு இறங்கிகாரில் கை வைத்தபடி இரண்டு மணி நேரம் காத்திருந்தார் ராஜகோபாலன்அதன் பிறகு உள்ளேஅழைக்கப்பட்டாராஅல்லது திருப்பி அனுப்பப்பட்டாரா என்பது நினைவில்லைவந்த வேகத்தில் விருப்ப ஓய்வு எழுதிக்கொடுத்தார்.  

வழக்கமாக லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு உயர் அதிகாரியை நியமிப்பதென்றால்அவர் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் இருக்கிறாரா.... அவர் மீது வேறு புகார்கள் உள்ளனவா என்பதையெல்லாம் பார்த்த பிறகேநியமிப்பார்கள்.   இது 1964ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு.

திலகவதி ஐபிஎஸ்
ஆனால் ஜெயலலிதாதிலகவதியை இயக்குநராக நியமித்தார்.  திலகவதி மீது 1988ம் ஆண்டு மற்றும் 1994ல் இரண்டுவிசாரணைகள் லஞ்ச ஒழிப்புத் துறையில் நடைபெற்றன.   நியமித்ததோடு அல்லாமல்தமிழகத்தில் உள்ள அனைத்துமகளிர் காவல்நிலையங்கள் அனைத்துக்கும் திலகவதிதான் பொறுப்பு என்று கூடுதல் பொறுப்பையும் வழங்கினார்.  அனைத்து காவல் நிலையங்களும், திலகவதியின் கதைத் தொகுப்பான "திலகவதி கதைகள்"  என்ற இரண்டு தொகுதி நூல்களையும் ஐந்து செட்டுகள் விற்க வேண்டும் என்று உத்தரவிட்டார் திலகவதி.   அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்த பொதுமக்கள், வேறு வழியின்றி, அந்த கருமத்தை வாங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். அதன் பின்பு திலகவதிலஞ்ச ஒழிப்புத் துறையிலேயே ஊழலில் ஈடுபட்டுஅவர் மீது ரகசியவிசாரணை நடத்தப்பட்டுஅவரது டிஜிபி பதவி உயர்வு தாமதப்படுத்தப்பட்டுஅவரை இறுதியாக ஜாபர் சேட்காப்பாற்றினார்

இப்படி ஜனநாயகத்தின் ஒவ்வொரு தூணையும்சிதிலமடையச் செய்தார் ஜெயலலிதாஇப்போது நாம் பார்த்தது ஒருதுளிதான்.   மீதமுள்ள விவகாரங்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

ஸ் பெ

unread,
Oct 19, 2014, 3:18:22 AM10/19/14
to panbudan

மாற்றத்தைத் தவிர மாறாதது ஜெயலலிதா மட்டுமே - பாகம் 2




 ஜுன் 30, 2001. இந்த நாளை தமிழகம் மறந்திருக்க முடியாது. திமுக தலைவர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நாள் அது. 

தி.மு.க.ஆட்சியில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் இரவோடு இரவாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. திமுக தலைவர் விசாரணைக்கு அப்பாற்பட்டவரோ, விசாரிக்கப்படக் கூடாதவரோ கிடையாது. ஆனால், 1996-ல் ஜெயலலிதாவை கைது செய்வதற்கு முன், திமுக அரசு,எப்படி முழுமையான பூர்வாங்க விசாரணையை முறையாக நடத்தி, அதன் பிறகு, ஜெயலலிதாவை கைது செய்ததோ, அப்படியல்லவா அதைச்செய்திருக்க வேண்டும்? ஆனால், அதைவிட்டுவிட்டு இரவோடு இரவாகப் போய், வலுக்கட்டாயமாக கருணாநிதியைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? பழிவாங்கும் உணர்ச்சிதான். அதைத்தவிர ஜெயலலிதாவிற்கு அதில் வேறு காரணம் இருக்கவே முடியாது. 



ஊழல் செய்ததால் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா, தனது கைதுக்கு காரணம் கருணாநிதிதான் என்று உறுதியாக நம்பினார். ஜெயலலிதா சிறையிலிருந்து வெளியில் வந்ததும், மதுரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியபோது, என்னை 27 நாட்கள் சிறையில் வைத்த கருணாநிதியை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று வெளிப்படையாகவே பேசினார். ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உள்ள ஜெயலலிதாவுக்கு,அவரின் எதிரியை பழிவாங்கிவிட்டு, குருவாயூர் கோவிலுக்கு யானையை தானமாக கொடுத்தால் நீண்ட ஆயுளோடு வாழலாம்... எதிரிகள் அழிவார்கள்... என்று சொன்னதன் அடிப்படையிலேயே இரவோடு இரவாக கருணாநிதியை கைது செய்ய உத்தரவிட்டார் என்பது அப்போது பரவலாக பேசப்பட்டது. 

கருணாநிதியின் கைது, ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும் வகையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. சென்னை மாநகர ஆணையாளராக இருந்த முத்துக்கருப்பன், சி.பி.சி.ஐ.டி.யின் டிஐஜி முகமது அலி, டி.ஜி.பி.ரவீந்திரநாத் ஆகியோருக்கு மட்டுமே தெரியும். கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரியாக திமுக ஆட்சி காலத்தில் இருந்த ஜாபர் சேட் அப்போது போக்குவரத்து இணை ஆணையர். அவர்தான் கருணாநிதி செல்லும் வழிகளையெல்லாம் ரூட் போட்டுக் கொடுத்தார். மைலாப்பூர் காவல் நிலையத்தில் அமர்ந்து, அந்த கைது நடவடிக்கையை மேற்பார்வை செய்ததே ஜாபர் சேட்தான். ஆனால், இந்த ஜாபர் சேட்டையை முழுமையாக நம்பி 2006-ல் தி.மு.க.தலைவர் கருணாநிதி பல்வேறு தவறுகளை இழைத்தது தனிக்கதை.

முகம்மது அலி

 கருணாநிதியின் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட முக்கிய அதிகாரிகள் ஒருவர் கூட நிம்மதியாக இல்லை. முகம்மது அலி முத்திரைத்தாள் மோசடிவழக்கில் சிறை சென்றார். முத்துக்கருப்பன் ஜெயலலிதா ஆட்சியிலேயே பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். ரவீந்திரநாத்தும் ஜெயலலிதா ஆட்சியிலேயே பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். 


அடுத்த மாதமே, மு.க.ஸ்டாலினுக்கு ஏழு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக, வாக்குமூலம் அளிக்கும்படி, ஸ்டாலினின் நண்பர் ரமேஷ் நாராயணன் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டார். இந்த ஆபரேஷனையும் முன்னின்று செயல்படுத்தியது சென்னை மாநகர காவல்துறைதான். 15 ஜுலை 2001அன்று ரமேஷ், அவரது மனைவி காஞ்சனா, மூன்று மகள்கள், மோனிஷா, சர்மிளா மற்றும் 11 மாதக் குழந்தை டிங்கு ஆகியோர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். ஸ்டாலினுக்கு எதிராக சாட்சி சொல்லாவிட்டால், ஹெராயின் வழக்கில் கைது செய்யப்படுவாய் என்றுமிரட்டப்பட்டதாலேயே குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார் ரமேஷ். 

ரமேஷின் அச்சம் அர்த்தமில்லாதது கிடையாது. எந்த வளர்ப்பு மகனின் திருமணத்துக்காக 100 கோடியை செலவழித்தாரோ, அதே வளர்ப்பு மகனை, ஹெராயின் வழக்கில் சிறையில் அடைத்தவர் ஜெயலலிதா. முதலில் சுதாகரன் வீட்டிலிருந்து 16 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறை, மெல்ல மெல்ல அதைப் 16 கிராம் என்று மாற்றினார்கள். 

கருணாநிதியின் கைதைக் கண்டித்தும், காவல்துறை அராஜகங்களைக் கண்டித்தும், திமுக பேரணி நடத்துவது என்று, ஜுலை 27 அன்று நடந்த திமுக பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.   இதை  அந்தப் பேரணிக்கு அனுமதி மறுத்து, பல்வேறு வழிகளில் அலைக்கழித்தது. இருப்பினும் இறுதியில் அனுமதி வழங்கப்பட்டு, பேரணி சென்னை மெரினாவை அடைந்தபோது, வன்முறை வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் இறந்தனர்.   பத்திரிக்கையாளர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர்.  இந்து புகைப்படக் கலைஞர் மூர்த்தி, எக்ஸ்பிரஸ் புகைப்படக்கலைஞர் பி.ஏ.ராஜு, ஸீ டிவி கேமராமேன் மணீஷ் தனானி, அவர் உதவியாளர் ஏசைய்யா, விகடன் புகைப்படக் கலைஞர் விவேகானந்தன், நக்கீரன் நிருபர் பிரகாஷ் மற்றும் புகைப்படக்கலைஞர் சம்பத், தினமலர் நிருபர் அருட்செல்வம் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.  
காயமடைந்த நிருபர் ஏசைய்யா
கடற்கரையில் அயோத்திக்குப்பம் அருகே, ஆயுதங்களோடு காத்துக் கொண்டிருந்த ரவுடிகள், திமுகவினரை, உருட்டுக்கட்டைகளாலும், கத்திகளாலும் கடுமையாக தாக்கினர்.    திமுக இந்த வன்முறை திட்டமிட்டு நடந்தது என்றது.  அதிமுக தலைவி ஜெயலலிதாவும், மாநகர ஆணையாளர் முத்துக் கருப்பனும், திமுகதான் வன்முறைக்குக் காரணம் என்றனர்.  ஜெயலலிதா, விஷயத்தை மூடி மறைக்க ஓய்வுபெற்ற நீதிபதி பக்தவச்சலம் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தார்.   

மூத்த பத்திதிக்கையாளர் பகவான் சிங் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டி வழக்க தொடுத்தார்.  அந்த வழக்கை விசாரணை செய்த, நீதிபதி கனகராஜ், அரசு, நியாயமான முறையில் விசாரணை நடத்தி வருவதால், சிபிஐ விசாரணைக்கு அவசியமில்லை என்று தீர்ப்பளித்தார்.

செரினா பானு
இதையடுத்து மதுரையில் சசிகலாவின் கணவரோடு (??) நெருக்கமானவர் என்று அறியப்பட்ட செரினா என்பவர் கஞ்சா சாக்லேட்டுகள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் நடத்திய சோதனையில் அவர் வீட்டில் 1.40 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. ஒரு சாதாரண செரினாவின் ஜாமீன் மனுவில், மேஜிஸ்திரேட் கோர்டடில், கபில்சிபல் எப்படி வந்து வாதாடினார் என்பது விளங்காத மர்மம். 


ஜெயலலிதா அரசு ஊழியர் சங்க கட்டிடத்தை 
திறந்து வைத்தபோது வைக்கப்பட்ட பலகை
 27 ஜுலை 2001, அன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கட்டிடத்தை திறந்து வைத்துப் பேசினார் ஜெயலலிதா. அதிமுகவோடு, சிபிஎம் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றிருந்ததால், புளங்காகிதத்தில் இருந்தனர் தோழர்கள். முதல்வரே நமது சங்கக் கட்டிடத்தை திறந்து வைக்க வருகிறாரே என்று ஆனந்தத்தில் திளைத்தனர். ஆனால், கூட்டம் முடியும் வரைக்கூட அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. 

அப்படி ஒரு அணுகுண்டைக் கூட்டத்தில் பேசும்போதே தூக்கிப்போட்டார் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் வெறும் மூன்று சதவிகிதம் மட்டும் இருக்கும் உங்களுக்காக (அரசு ஊழியர்களுக்காக) நான் அரசு வருவாயில் 94 சதவிகிதத்தை செலவு செய்கிறேன். இதனால் மக்கள்திட்டங்களுக்கு செலவிட முடியாத நிலையில் உள்ளேன். மக்கள் திட்டங்களுக்கு செலவிட நிதி இல்லாத காரணத்தால் சில சிக்கன நடவடிக்கைகளை எடுக்க உள்ளேன் என்றார். திருமண வீட்டில் இழவு விழுந்ததப் போல் அதிர்ந்து போனார்கள் தோழர்கள். அதன்பிறகு பல்வேறு சோதனைகளை அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை அவர்கள் அப்போது அறியவில்லை. 

15 ஆயிரம் குடும்பங்களைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், ஒரே நாளில் 15 ஆயிரம் சாலைப்பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினார் ஜெயலலிதா.அந்த 15 ஆயிரம் தொழிலாளர்கள் விட்ட சாபம்தான் குன்ஹா வடிவத்தில் ஜெயலலிதாவை அலைக்கழிக்கிறது. போக்குவரத்துத் துறை, ஆவின் மற்றும் குடிமைப் பொருள் வழங்குத்துறை ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அது வரை ஆண்டுக்கு 20 சதவிகிதம் போனஸாக பெற்று வந்தனர். அரசின் சிக்கன நடவடிக்கை காரணமாக இனி அவ்வளவு போனஸ் தர இயலாது. வெறும் 8.33 சதகிகிதம் மட்டுமே போனஸ் என்று அறிவித்தது. 

அதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, 12 நவம்பர் 2011 முதல்போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அந்த வேலை நிறுத்தத்தை உடைக்க அற்பத்தனமாக பலவேலைகளில் ஈடுபட்டார் ஜெயலலிதா. புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர், போராடிய தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கிராமங்களில் ஓடிய மினி பஸ்கள் நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. தொழிலாளர்கள் மீது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. 17 நாட்களுக்குப் பிறகு அந்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. அந்த 17 நாட்களில் அரசு சந்தித்த இழப்பு 136 கோடி. ஆனால் 20 சதவிகித போனஸ் வழங்கினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் செலவு 60 கோடி. இப்படிப்பட்ட வறட்டுத்தனமான பிடிவாதம் பிடித்தவர்தான் ஜெயலலிதா. அதோடு அவர் ஒய்ந்துவிடவில்லை. 

அரசு ஊழியர்கள் மீது அடுத்தடுத்த தாக்குதலை தொடுத்துக் கொண்டே இருந்தார். பண்டிகை கால முன்பணம் ரத்து, சரண் விடுப்புச் சலுகை ரத்து, போனஸ் ரத்து, சொந்த சேமிப்பு நிதியிலிருந்து கடன் பெறுவதற்கு கட்டுப்பாடு என்று தொடர்ந்து அரசு ஊழியர்கள் ஜெயலலிதாவின் ஆட்சியில் பழிவாங்கப்பட்டு அல்லோலகல்லோலப்பட்டனர்.. பால் விலை, மின்சாரக்கட்டணம், பேருந்துக் கட்டணம், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை என அனைத்தின் விலையும் உயர்த்தப்பட்டன. மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பார்க்கச் செல்வோருக்கு கட்டணம் விதிக்கப்பட்டது. கோயில்களில் செருப்புகளுக்கு கட்டணம் விதிக்கப்பட்டது. விவசாயிகளின் இலவச மின்சாரம் நிறுத்தப்பட்டது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச புடவை வேட்டியை கொடுக்கவில்லை. 5 ஆயிரத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களின் ரேஷன் அட்டைகளில் எச் முத்திரை குத்தி அவர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்களின் இலவச பஸ் பாஸ் தடை செய்யப்பட்டது. இப்படி அடுத்தடுத்து மக்கள் விரோத நடவடிக்கைகளில் அகமகிழ்வோடு ஈடுபட்டார் ஜெயலலிதா. 

அரசு ஊழியர்களின் ஓய்வுகாலப் பலன்களிலும் கை வைத்தார் ஜெயலலிதா. ஓய்வூதியம் பெறத் தகுதிகாலத்தை 30 ஆண்டுகளில் இருந்து 33ஆண்டுகளாக உயர்த்தினார். ஓய்வு காலத்தில் வழங்கப்படும் பல்வேறு பலன்களில் கை வைத்தார். தமிழகம் முழுக்க உள்ள அத்தனை அரசு ஊழியர்களிடமும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, 27 ஜனவரி 2002ல் ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. இந்த வேலை நிறுத்தத்துக்கு பலத்த ஆதரவு இருந்தது.                 

அரசு ஊழியர் சங்கத் தலைவர் என்.எல்.ஸ்ரீதரன்

7 பிப்ரவரி 2002 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டது. ஆண்டிப்பட்டி தொகுதியில் எப்போது வேண்டுமானாலும் நடக்க உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கட்டாயம் ஜெயலலிதாவுக்கு இருந்ததால், நிதியமைச்சர் சங்கப் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில், படிப்படியாக சலுகைகள் மீண்டும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியின் அடிப்படையில் எந்தச் சலுகைகளும் வழங்கப்படவில்லை. இதையடுத்து மீண்டும் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவெடுத்து, 23 அக்டோபர் 2002 முதல் வேலை நிறுத்தம் தொடங்கியது. காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பெருமளவில் கலந்துகொண்டனர். 

காவல்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் எப்போதும் ஒரு இணக்கம் இருக்கும். ஆனால், இந்தவேலை நிறுத்தத்தின் போது, கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட இந்தச் சங்கங்களின் தலைவர்கள் வீடுகளில் புகுந்த காவல்துறையினர், சங்கத் தலைவர்களின் மனைவிகளையும், மகள்களையும் விபச்சார வழக்கில் கைது செய்வோம் என்று அச்சுறுத்தினர். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தபோது, வேலை நிறுத்தத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கும் என்று இறுமாப்பாக அறிவித்தார் ஜெயலலிதா. வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மீது எஸ்மா, டெஸ்மா உள்ளிட்ட அனைத்து சட்டங்களும் பாயும் என்றார் ஜெயலலிதா. பிறகு மனம் மாறிய ஜெயலலிதா, சங்கங்களின் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் இறுதியில், எவ்விதமான பழிவாங்கும் நடவடிக்கைகளும் இருக்காது என்று ஒப்பந்தமானது. சலுகைகள், படிப்படியாக வழங்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டன. ஆனால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினார் ஜெயலலிதா. 

இதையடுத்து, மீண்டும் 2 ஜுலை 2003 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டது. 27 ஜுன் 2003 அன்று மீண்டும் நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் ஜெயலலிதா. அந்த பேச்சுவார்த்தையில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. வேலை நிறுத்தத்துக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக, நள்ளிரவில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் அனைவரும் 30 ஜுன் 2003 அன்று இரவு கைது செய்யப்பட்டனர். 2 ஜுலை 2003 முதல் தொடங்குவதாக இருந்த வேலை நிறுத்தம், 1 ஜுலை அன்றே தொடங்கியது. இந்த வேலைநிறுத்தத்தை காவல்துறையின் உதவியோடு அடக்க முனைந்தார் ஜெயலலிதா. அரசு ஊழியர்கள் கூட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது. கைக்குழந்தையோடு பெண்கள் கைது செய்யப்பட்டனர். பணிக்குத் திரும்பாத பெண் ஊழியர்கள் விபச்சார வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என்று வெளிப்படையாகவே மிரட்டப்பட்டனர். அரசுக் குடியிருப்புகளில் புகுந்த காவல்துறை, இன்று இரவே வீட்டைக் காலி செய்யுங்கள் என்று மிரட்டியது. 

டெஸ்மா சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, ‘அரசு ஊழியர்களுக்கான பணி நீக்க ஆணையை தனித்தனியாக தர வேண்டியதில்லை.அலுவலகத்தின் நோட்டீஸ் போர்டில் ஒட்டினால் போதும்’ என்று மாற்றம் கொண்டு வந்தார் ஜெயலலிதா. 04 ஜுலை 2003 அன்று சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு, ஏப்ரல் மாதம் 2003 முதல் பின்தேதியிட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு அலுவலகத்தில் உள்ள அத்தனை பேரின்பெயர்களையும் வருகைப்பதிவேட்டில் இருந்து எடுத்து, அதை டைப் அடித்து நோட்டீஸ் போர்டில் ஒட்டினார்கள். வேலை நீக்க உத்தரவை பார்த்த பல அரசு ஊழியர்கள் கதறினார்கள். அழுதார்கள். மீண்டும் பணிக்கு திரும்புகிறோம் என்று மன்றாடினார்கள். ஆனால், எந்த அதிகாரியும் அவர்களின் கதறலுக்கு செவி சாய்ப்பதாக இல்லை. நோட்டீஸ் போர்டில் பெயர் இருந்தால் அப்படியே திரும்பிச் செல்லுங்கள் என்றனர். வேலை நிறுத்த விவகாரம் நீதிமன்றம் போனது. இந்திய வரலாற்றிலேயே கடைந்தெடுத்த ஊழல் பேர்வழியாக இருந்த நீதிபதி பி.டி.தினகரன் முன்னிலையில், அவர் வீட்டில் சிறப்பு விசாரணையாக இவ்வழக்கு நடைபெற்றது. 6 ஜூலை 2003 மாலை 6 மணியளவில், இந்த விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின் இறுதியில், வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றால், பணி நீக்க உத்தரவுக்கு தடை பிறப்பிப்பதாக கூறினார் தினகரன். அதன்படி, சங்கத் தலைவர்களிடம் எழுத்து பூர்வமான உறுதிமொழியைப் பெற்று, கைது செய்யப்பட்ட அனைவருக்கும் விடுதலை மற்றும் அவர்களின் பணி நீக்க உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

அப்போது உளவுத்துறை டிஜிபியாக இருந்தவர் கே.நடராஜன். நிதித்துறைச் செயலாளர் நாராயணன். தலைமைச் செயலகத்தில் இதையொட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நடராஜனிடம், நீதிபதி பி.டி.தினகரனின் தடை உத்தரவு தெரிவிக்கப்பட்டது. "என்ன இது..... முட்டாள்த்தனமான தீர்ப்பாக இருக்கிறதே.... முட்டாள் மாதிரி நீதிபதிகள் தீர்ப்பளித்தால் நாம் எப்படி சும்மா இருப்பது? உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும்" என்று கூறி, இரவோடு இரவாக, அப்போது அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த என்.ஆர்.சந்திரனை எழுப்பி மேல் முறையீடுசெய்ய அறிவுறுத்தினார் நடராஜன். அந்தக் கூட்டம் முடிந்ததும் ஒரு இளம் அதிகாரியை தன்னுடைய காரிலேயே வரச்சொல்லி உத்தரவிட்டார் நடராஜன். அந்த இளம் அதிகாரியின் நண்பர் தலைமைச் செயலகத்தில் வேலை பார்க்கிறார். அவரது மனைவி நள்ளிரவு 12 மணிக்கு, அந்த இளம் அதிகாரியை அழைத்து "அண்ணா, அவரை அரெஸ்ட் பண்ணிக் கூட்டிட்டுப் போராங்கண்ணா... ஏதாவது பண்ணுங்கண்ணா" என்று ஏழு மாத கர்ப்பத்தோடு கதறுகிறார். அந்த இளம் அதிகாரி காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் அவரால் என்ன செய்ய முடியும்? கையறு நிலையில், வேதனையை மென்று விழுங்கியபடிஇருந்தார். 1.76 லட்சம் ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்தது சரியே என்று, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்து விட்டு, காரில் டிஜிபி அலுவலகம் திரும்பிய உளவுப்பிரிவு டிஜிபி நடராஜன் என்ன பேசிக்கொண்டு வந்தார் தெரியுமா? "நேத்து சாமி படம் பாத்தேன். அதுல விவேக் என்னமா கலக்கியிருக்கான் தெரியுமா? எட்டு போடச் சொன்னா 11 போட்டுக் காட்றேன் பாரு ன்னு கலக்கியிருக்கான். செம்ம ஜோக்கு" என்று 1.76லட்சம் ஊழியர்களின் குடும்பத்தை தெருவில் நிறுத்திவிட்டு, ஜோக்கடித்துக் கொண்டு வந்தார். இப்படிப்பட்ட அயோக்கிய அதிகாரிகளை நம்பித்தான்அன்று அரசாங்கம் நடத்தி வந்தார் ஜெயலலிதா. 

இறந்துபோன வீரப்பன் உடலை வைத்து 
என்கவுன்டர் நடத்தியது இந்த விஜயக்குமார்தான்
இவர் ஒரு பக்கம் என்றால், சென்னை மாநகர ஆணையாளராக இருந்த விஜயக்குமார் இன்னொரு திருவாத்தான். புரட்சித் தலைவியின் மனதைக்குளிர வைக்க வேண்டும் என்பதற்காக, சென்னை நகரில் மட்டும் 2500 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. அரசு அலுவலகங்களில் உள்ள வருகைப் பதிவேட்டை எடுத்து, அதில் உள்ளவர்களின் பெயர்கள் அப்படியே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டன. 12கான்ஸ்டபிள்கள், இரவு பகலாக டைப் மிஷினைப் பயன்படுத்தி எப்.ஐ.ஆர். தயாரித்தனர். விஜயக்குமார் சொல்லி விட்டார் என்றதும், இந்த எப்.ஐ.ஆர்.களை சிரமேற்கொண்டு இரவு முழுவதும் அமர்ந்து தயாரித்தவர், அப்போதைய மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. 

ஆயுதப்படை காவலர்கள், சென்னை ஷெனாய் நகர், அண்ணா நகர், பட்டினப்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர் குடியிருப்புகளில் புகுந்து வேட்டையாடினார்கள். பி.டி.தினகரன் விதித்த தடை உத்தரவை எதிர்த்து, அரசு இரவோடு இரவாக ஜெயலலிதா அரசாங்கம் மேல் முறையீடு செய்தது. தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி கோவிந்தராஜன் அடங்கிய அமர்வு, வீட்டிலேயே அமர்ந்து, எதிர்த்தரப்பை ஒரு வார்த்தை கேட்காமல், பி.டி.தினகரன் தீர்ப்புக்கு தடை விதித்தது. 7 ஜுலை 2003 முதல் 11 ஜுலை 2003 வரை, இந்த வழக்கின் விசாரணை, சுபாஷன் ரெட்டி அமர்வு முன்னிலையில் நடந்தது. விசாரணையின் இறுதியில், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், தங்கள் பணி நீக்க உத்தரவுக்கு எதிராகத் தனித்தனியாக வழக்கு தொடுக்கலாம் என்று தீர்ப்பளித்தனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சி.ஐ.டி.யு. தலைவர் டி.கே.ரங்கராஜன் மற்றும் தொழிலாளர் முற்போக்கு பேரவையின் தலைவர் செ.குப்புசாமி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் முன்னிலையில் விசாரணை நடந்தது.விசாரணையின் இறுதியில் 6072 பேரைத் தவிர்த்து, மற்றவர்கள், பணிக்குத் திரும்பலாம் என்ற உத்தரவை அவர் பிறப்பித்தார். 

இந்த 6072 பேர்களை வேலைக்கு சேர்க்கலாமா? வேண்டாமா? என்பதை விசாரிக்க மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு விசாரித்து முடிவு செய்யும் என்றும் அவர் தன் உத்தரவில் குறிப்பிட்டார். அந்த விசாரணையை நடத்தியவர்கள் நீதிபதி சம்பத், நீதிபதி தங்கவேல், மற்றும் நீதிபதி மலை சுப்ரமணியம். 

ஓய்வு பெற்ற நீதிபதிகளின் நடத்தையைநான் விவரிப்பதை விட பாரதியார் பாடல் வரிகளால் விவரிப்பது பொருத்தமாக இருக்கும். 

"வாலைக்குழைத்து வரும் நாய்தான் 
அது மனிதர்க்குத் தோழனடி பாப்பா" 

இந்த இடத்தில் மனிதர்க்கு என்பதை ஆட்சியாளருக்கு என்று மாற்றிப் படித்தால் சரியான பொருள் வரும். மூன்று நீதிபதிகளும் விசாரணையை கண் துடைப்பாகவே நடத்தினர். மூன்று நீதிபதிகளுக்குள்ளும் கடும் போட்டி. எதில் போட்டி என்று குழம்பாதீர்கள்... அரசாங்கத்தின் பணி நீக்கம் சரியென்று பரிந்துரை செய்து, ஜெயலலிதாவிடம் யார் நல்லபெயர் வாங்குவது என்பதில்தான் அவர்களுக்குள் அத்தனை போட்டி. 

மூன்று நீதிபதிகளும், தனித்தனியாக தங்கள் பரிந்துரைகளை வெளியிட்டனர். 6072 ஊழியர்களில் வெறும் 75 ஊழியர்கள் மட்டுமே தண்டனையிலிருந்து தப்பித்தனர். சம்பத் மற்றும் மலை சுப்ரமணியன் டிசம்பர் 26 அன்றும், தங்கவேல் டிசம்பர் 31 அன்றும் தங்கள் பரிந்துரைகளை வெளியிட்டனர். நடவடிக்கை எடுக்கப்பட்ட ஊழியர்களில் 412 பேரின் டிஸ்மிஸ் உத்தரவு செல்லும் என்றும், பலருக்கு ஊதிய உயர்வு நிறுத்தம், பதவி உயர்வு ரத்து என்பன உள்ளிட்ட பல்வேறு தண்டனைகளையும் சேர்த்து பரிந்துரைத்தனர் 

இந்த நீதிபதிகள். டிஸ்மிஸ் செய்யப்பட்ட 1,70,241 ஊழியர்களில் 6072 பேரை தனியாக கட்டம் கட்டி, அவர்களில் 5715 பேர்களின் வழக்குகளை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு ஊழியருக்கும் தலா 5 அல்லது பத்து நிமிடங்கள் ஒதுக்கி, அவர்களின் தலையெழுத்தை தீர்மானித்தார்கள். 

இந்த நீதிபதிகள் தீர்ப்பெழுதிய லட்சணத்தை ஒரு சில உதாரணங்களின் மூலம் பார்ப்போம். தனராஜ், ராதாகிருஷ்ணன், சித்தைய்யன், வாசுதேவன்,தங்கராஜ் மற்றும் ராசைய்யன் ஆகியோர் வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முன்னதாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் நாங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கெடுக்கவில்லை, அதற்கு முன்னதாகவே கைது செய்யப்பட்டோம் என்று கூறியதை ஏற்காமல், டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். ஆதிதிராவிடர் நலத் துறையில் பிரிவு அலுவலராக பணியாற்றிய சரோஜினி என்பவர், உடல் நலம் சரியில்லாமல் மார்பகப் புற்றுநோய் சிகிச்சை எடுத்து வந்தார். அவர் விடுப்பில் இருந்தார் என்ற ஆவணங்களை பரிசீலிக்காமல், அவரை டிஸ்மிஸ் செய்தனர். தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் ஊழியர், தான் மருத்துவ விடுப்பில் இருந்ததற்கான மருத்துவ சான்றிதழை அளித்தார். ஆனால், சான்றளித்த மருத்துவரே டிஸ்மிஸ் செய்யப்பட்டுவிட்டதால், அவருடைய சான்று செல்லாது என்று கூறி அவரையும் டிஸ்மிஸ் செய்தனர். ஆனால், அதே மருத்துவர் வழங்கிய மருத்துவ சான்றிதழின் அடிப்படையில், மற்றொரு பெண் ஊழியரை வேலைக்கு ஏற்றுக் கொண்டனர். 

ஒரு புறம் இப்படி விசாரணை நடந்து கொண்டிருக்கையில், மற்றொரு புறம், வேலை வாய்ப்பகம் மூலம், மாதம் 5 ஆயிரம் தொகுப்பூதியத்துக்கு பட்டதாரிகள் தலைமைச் செயலக வேலைக்கு எடுக்கப்பட்டனர். தலைமைச் செயலகமே காலியாக இருந்தது. அரசு அலுவலகம் என்றால் என்னவென்றே தெரியாமல், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். இந்த சூழலில்தான், தண்டனை முடிந்து, ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். அப்போது, ஏற்கனவே எடுத்த தற்காலிக, தொகுப்பூதிய பணியாளர்களை என்ன செய்வது என்ற சிக்கல் ஒரு பக்கம் உருவானது. 

அப்போது அரசுடைமையாக்கப்பட்ட டாஸ்மாக் நிறுவனத்தில், படித்த பட்டதாரிகள் நியமிக்கப்பட்டனர். பட்டதாரிகளை சாராயம் விற்க நியமித்த ஒரே நிர்வாகி ஜெயலலிதாதான். அந்த பட்டதாரிகளும், டாஸ்மாக்கில் கிடைக்கும் கூடுதல் வருவாயை மனதில் கொண்டு, 5 ஆயிரம் ஊதியத்தை மனமுவந்து ஏற்றுக் கொண்டு, எவ்விதமான உரிமைகளும் இல்லாமல் இன்று வரை பணியாற்றிக் கொண்டு வருகின்றனர். 

நிதி நிலைமையை சீர்ப்படுத்தப் போகிறேன் என்று சிக்கன நடவடிக்கைகளை கடுமையான வழிகளில் மேற்கொண்ட அதே ஜெயலலிதாதான், 2004ம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பின்னால் மண்டியிட்டு, அத்தனை சலுகைகளையும் அரசு ஊழியர்களுக்கு மீட்டுக் கொடுத்தார். புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சியின் பெருமைகளை, அடுத்த பகுதியிலும் பார்ப்போம். 

Srimoorthy S

unread,
Oct 19, 2014, 3:51:49 AM10/19/14
to பண்புடன்
என்னா கிழி.....

sadayan sabu

unread,
Oct 19, 2014, 4:51:35 AM10/19/14
to panbudan

பொற்கிழி கொடுப்போமா

Srimoorthy S

unread,
Oct 19, 2014, 5:31:26 AM10/19/14
to பண்புடன்
ரகஷ்யமா கொடுங்க.... பொற்கிழிகொடுத்தது வெளிய தெரிஞ்சது, நம்மளை கிழிச்சிடுவாங்க
Reply all
Reply to author
Forward
0 new messages