பட்டின‌த்தாரும், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டமும் !

315 views
Skip to first unread message

Athiyaman Karur R

unread,
Nov 7, 2008, 2:27:06 AM11/7/08
to சிவகுமார் மா
நாப்பிளக்க பொய்பேசி நவநிதியம் நாளும் தேடி
நலமில்லா நாரியரைக் கூடி,
பூப் பிளந்து புலபுலவென, கலகலவெனவரும்
புற்றுஈசல் போல பிள்ளைகளைப் பெறுவீர்
காப்பதற்க்கும் வழியறியீர், கைவிடவும் மாட்டீர்
ஆப்பசைத்த குரங்குதன் நிலை பட்டீரோ.

-பட்டின‌த்தார்.

thamizhanvenu

unread,
Nov 11, 2008, 7:47:26 AM11/11/08
to பண்புடன்
அதியமான் அவர்களே!

ஒரு வரி விடுபட்டிருக்கிறது.

'கவர் பிளந்து மரத்துளையில் கால் நுழைத்துக்கொண்டே..'

நாப்பிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலமொன்றுமில்லாதோர் நாரியரைக் கூடி
பூப்பிளக்க வெளிவரும் புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப்
புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்!

கவர் பிளந்து மரத்துளையில் கால் நுழைத்துக்கொண்டே.

(ஆப்பசைத்த குரங்குதன் நிலை பட்டீரோ.)

அல்ல அல்ல!

ஆப்பதனில் அகப்பட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டுள்ளீரே!

நாப்பிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலமொன்றுமில்லாதோர் நாரியரைக் கூடி
பூப்பிளக்க வெளிவரும் புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்!
கவர் பிளந்து மரத்துளையில் கால் நுழைத்துக்கொண்டே.
ஆப்பதனில் அகப்பட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டுள்ளீரே!

நானும் தங்களைப் போலவே பட்டினத்தாரின் பரம ரசிகன். விடுபட்டுப்போன இந்த
வரிகளை நினைவூட்டியதற்குப் பரிசாக, அதியமான் அவர்களே, கரூரிலிருந்து ஒரு
நெல்லிக்கனியை அனுப்புவீர்களா?

தமிழன் வேணு

On Nov 7, 12:27 pm, "Athiyaman Karur R" <ath...@gmail.com> wrote:
> நாப்பிளக்க நவநிதியம் நாளும் தேடி

HAROON RASHEED

unread,
Nov 11, 2008, 8:12:38 AM11/11/08
to panb...@googlegroups.com
இந்த பாடல் சொல்வது குடும்பக் கட்டுப்பாட்டினைப் பற்றியல்ல ....
மோட்சம் மொகித்தலையும் யோகி ஒருவரின் (குடும்ப வாழ்வு சலித்துப் போன ஒருவரின்) புலம்பல்
விடுங்கள் ... 
நட்ட கல்லை சுற்றிவந்து நாலு புட்பம் சாத்தியே
முன முனென்று நம நமேன்று சொல்லும் மந்திரம் ஏதடா
நாதன் உள்ளிருக்கையிலே
என்று இவர் போலவே சிவா வாக்கியார் என்பாரும் பற்றுள்ள வாழ்க்கையினை வெறுத்து பலப் பல பாடல்கள் பாடிவிட்டு போய்விட்டார்கள்
எதற்குத்தான் ரசிகர்கள் இல்லை ....? 

Athiyaman Karur R

unread,
Nov 11, 2008, 9:13:09 AM11/11/08
to panb...@googlegroups.com
சும்மா ஜாலியா ஒரு தலைப்பு வச்சா, அதுக்கு இத்தன சீரியசான‌ பதில்களா ?
:))))

தமிழன் வேணு

unread,
Nov 12, 2008, 12:08:27 AM11/12/08
to பண்புடன்
அதியமான் அவர்களே!

யாரும் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்தப் பாடலை நிச்சயம் குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரத்துக்குக் கூட
எடுத்துக் கொள்ளலாம். சிவவாக்கியர் தொடங்கி கடுவெளி சித்தர் வரைக்கும்
பதினெட்டு சித்தர்களின் பாடல்களையும் எடுத்துக்கொண்டு கொஞ்சம் புருவத்தை
நெரித்துப் படித்தால் ஒரு ஒற்றுமை தெரியும். அவர்கள் ஒரு விதத்தில்
escapists - சொந்த வாழ்க்கையின் சுமைகளைத் தாங்க முடியாமல் தப்பித்துக்
கொள்ள ஆன்மீகத்தை ஒரு மார்க்கமாக எடுத்துக் கொண்டார்கள் என்று கூட
வாதாடலாம்.

அவர்கள் பாடல்களில் உள்ள எளிமை, எது ஆன்மிகம் என்று குழம்புபவர்களுக்கு
சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளதால் தான் அவர்களுக்கும் ரசிகர்கள்
இருக்கிறார்கள். ரஜினியின் ரசிகர்கள் எல்லாருமே சிகரெட்டைத் தூக்கிப்
போட்டு வாயில் பிடித்துக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம்
எப்படியில்லையோ, அதே போல பட்டினத்தாரின் ரசிகர்களும் அவரைப் போல
வாழ்க்கையை எதிர்மறையான கண்ணோட்டத்தோடு அணுக வேண்டும் என்கிற கட்டாயமும்
இல்லை.

ஆனால் யாக்கை நிலையாமை, ஜீவகாருண்யம், ஈகை போன்ற உயர்ந்த கருத்துக்களும்
அவர்களது பாடல்களில் நிரம்பவே உண்டு. நண்பர் ஹரூன் ரஷீத்
சுட்டிக்காட்டியுள்ளது போல சிவ வாக்கிய சித்தரின் பாடல்களில் உருவ
வழிபாடு, மூட நம்பிக்கைகள் போன்றவற்றை இடித்துக் காட்டும் பாடல்களும்
உண்டு. பாம்பாட்டி சித்தரின் பாடல்களில் ஒரு மெல்லிய நக்கல் இழையோடும்.
படிப்பதால் பாதகம் ஏதுமில்லை.

அது போகட்டும், நெல்லிக்கனியை எப்போது அனுப்புவதாக உத்தேசம்?

தமிழன் வேணு

On Nov 11, 7:13 pm, "Athiyaman Karur R" <ath...@gmail.com> wrote:
> சும்மா ஜாலியா ஒரு தலைப்பு வச்சா, அதுக்கு இத்தன சீரியசான‌ பதில்களா ?
> :))))
>
> On 11/11/08, HAROON RASHEED <haroon...@gmail.com> wrote:
>
>
>
> > இந்த பாடல் சொல்வது குடும்பக் கட்டுப்பாட்டினைப் பற்றியல்ல ....
> > மோட்சம் மொகித்தலையும் யோகி ஒருவரின் (குடும்ப வாழ்வு சலித்துப் போன ஒருவரின்)
> > புலம்பல்
> > விடுங்கள் ...
> > நட்ட கல்லை சுற்றிவந்து நாலு புட்பம் சாத்தியே
> > முன முனென்று நம நமேன்று சொல்லும் மந்திரம் ஏதடா
> > நாதன் உள்ளிருக்கையிலே
> > என்று இவர் போலவே சிவா வாக்கியார் என்பாரும் பற்றுள்ள வாழ்க்கையினை வெறுத்து
> > பலப் பல பாடல்கள் பாடிவிட்டு போய்விட்டார்கள்
> > எதற்குத்தான் ரசிகர்கள் இல்லை ....?- Hide quoted text -
>
> - Show quoted text -

Athiyaman Karur R

unread,
Nov 12, 2008, 12:19:10 AM11/12/08
to panb...@googlegroups.com

தமிழன் வேணு அவர்களே,

இதோ எம் (virtual) நெல்லிக்கனி. சுவைத்து இன்புறுக :

பு. பொன்னுசாமி

unread,
Nov 12, 2008, 5:37:58 AM11/12/08
to panb...@googlegroups.com


//

சொந்த வாழ்க்கையின் சுமைகளைத் தாங்க முடியாமல் தப்பித்துக் கொள்ள ஆன்மீகத்தை ஒரு மார்க்கமாக எடுத்துக் கொண்டார்கள் என்று கூட வாதாடலாம்.
//


அட! எவ்வளவு உண்மை!

பிரம்மச்சாரியாக இருந்து கொண்டு சம்சாரிக்கு அறிவுரை.


பு. பொன்னுசாமி
Reply all
Reply to author
Forward
0 new messages