பண்பாளர்களுக்கு வணக்கம்.
நண்பர் ராஜசங்கர் பல முறை காயகல்பம் பற்றி சொல்லச் சொல்லி கேட்டிருந்தார். ஆனாலும், அதை பற்றி எழுத எனக்கு சில தயக்கங்கள் இருந்தன.
1. நான் காயகல்பம் செய்முறை பயிற்சியில் கலந்து கொண்டது சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது கேட்ட விளக்கங்களை இப்போது சிறிதும் பிழை இன்றி அப்படியே எடுத்துச் சொல்லும் திறமை எனக்கு இருக்கிறதா என்ற சந்தேகம்.
2. காயகல்பம் செய்முறை பயிற்சியில் கலந்து கொள்பவர்களிடம் ஒரு உறுதிமொழி எழுதி வாங்குவார்கள். அந்த செய்முறையை மன்றத்தின் அனுமதி இன்றி யாருக்கும் சொல்லித் தர மாட்டேன் என்று. அதற்கு வணிக ரீதியான காரணங்கள் ஏதுமில்லை. முழுமையான அறிதல் இல்லாதவர்கள் ஆர்வக் கோளாறில் அரைகுறையாக சொல்லிக் கொடுத்து அதை செய்பவர்களுக்கு ஏதும் உடல்நல பாதிப்பு வந்து விடக் கூடாதே என்பதற்காக. சோ, நான் பயிற்சியை பற்றிய அறிமுகம் மட்டுமே தர முடியும். எப்படி செய்வது என சொல்ல இயலாது.
3. காயகல்பம் பற்றி ராஜசங்கரை தவிர வேறு யாரும் கேட்டிருந்தால் முன்பே எழுதியிருப்பேனோ என்னவோ. அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்பவர்களுக்கு உடனே சொல்லித் தர மனம் விழையும். குற்றம் குறைகளை கண்டுபிடித்து கிழித்து தோரணம் கட்டி தொங்க விடும் நக்கீரர் வழித் தோன்றலிடம் விவாதிக்கும் அளவுக்கு நான் வொர்த் இல்லையே என்ற பயமும்.
எனினும், இப்போது காயகல்பம் பற்றிய தவறான நம்பிக்கைகளை தெளிவு படுத்தி விடுவதற்காகவேனும் ஒரு அறிமுகம் கொடுத்து விடலாம் என்ற எண்ணத்தில் இதை துவக்குகிறேன்.
காயகல்பம் என்ற பெயரைக் கேட்டதும் நிறைய பேருக்கு வாலிப வயோதிக அன்பர்கள் - தங்க பஸ்பம், சிட்டுக் குருவி லேகியம், பீம புஷ்டி லேகியம் போன்ற - மதன காம விசயத்திற்கு சாப்பிடும் லேகியங்களில் ஒன்று என்ற எண்ணம வந்தால் ஆச்சரியம் இல்லை. ஆனால், sorry friends, இது லேகியம் ஏதுமில்லை. இது ஒரு உடற்பயிற்சி.
இதை வேதாத்திரி அவர்கள் கண்டு பிடித்தார் என்று சொல்வது கூட ஒரு வகையில் தவறான ஸ்டேட்மென்ட் தான். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே நமது சித்தர்கள் இந்த பயிற்சியை செய்து வந்திருக்கிறார்கள். அது குறித்து பாடல்களில் சொல்லியும் இருக்கிறார்கள். ஆனால், அப்பாடல்கள் கடுந்தமிழில் இருந்ததால் சாதாரணர்கள் அதை புரிந்து கொண்டு அப் பயிற்சியை செய்ய முடியவில்லை. வேதாத்திரி ஒரு ஹோமியோபதி மருத்துவம் அறிந்தவராக இருந்ததால் அந்த பாடல்களில் சொல்லப் பட்டதை தனக்கு தெரிந்த உடற்கூறு அறிவுடன் பொருத்திப் பார்த்து, பரிசோதனைகள் செய்து, அதன் உண்மை விளக்கங்கள் அறிந்து செய்முறையை வடிவமைத்து கொடுத்தார். அவ்வளவு தான்.
அவ்வை தன்னுடைய விநாயகர் அகவலில் காயகல்பம் குறித்து சொல்லியிருப்பதை பார்க்கலாம்.
சீதக் களபச்
செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை
பாடப்
பொன் அரை ஞாணும்
பூந்துகில் ஆடையும்
வண்ண மருங்கில்
வளர்ந்து அழகு எறிப்பப்
...
குண்டலி அதனில்
கூடிய அசபை
விண்டெழு மந்திரம்
வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு
கனலைக்
காலால் எழுப்பும்
கருத்துஅறி வித்தே
...
சித்தன் சிவவாக்கியன் காயகல்பம் குறித்து சொல்லியிருப்பதை பார்க்கலாம்.
உருத்தரித்த நாடியில் ஓடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே.
நமது சித்தர் பரம்பரை செய்து பயன்கண்ட ஒரு பயிற்சி இது. இதில் பலன்கள் ஏதும் கிடைத்தால் அப்பெருமை நம் சித்தர்களை சேரும். இப் பயிற்சியால் குறைகள் ஏதும் நிகழ்ந்தால் அது வேதாத்திரியின் பொறுப்பு. J
சரி. இது என்ன பயிற்சி? இதை எதற்கு செய்ய வேண்டும்? இதை செய்வதால் என்ன பலன்கள்?
அதை விளக்குவதற்கு முன், அதில் தொடர்புடைய வேறு சில விஷயங்கள் குறித்து முதலில் சொல்லியாக வேண்டும். உங்களுடைய தற்போதைய நம்பிக்கைகளோடு அவை முரண்படலாம். எனவே, இந்த கட்டுரையை படித்து முடிக்கும் வரை, தற்காலிகமாக உங்கள் நம்பிக்கைகளை துறக்க துணிய வேண்டுமாய் வேண்டுகோள் விடுக்கிறேன். படித்து முடித்த பின் உங்கள் பழைய நம்பிக்கைகளுக்கு திரும்பி விடலாம். நோ இஸ்யுஸ்.
இக்கட்டுரை மூன்று அல்லது நான்கு பாகங்களாய் வரும். உங்கள் சந்தேகங்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அனைத்து பாகங்களும் முடிந்த பிறகு எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லலாம். (இப்போதே கேள்வி கேட்க துடிப்பவர்கள் ரமேசின் "மனவளக்கலை" இழையில் காயகல்பம் குறித்த கேள்வி என்று தலைப்பிட்டு கேளுங்கள்)
O.K. The first ingredient of the recipe “KAYA PALPA”…
1. 1. SCSPF - …
To be continued…
--
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
மன்னிக்கணும் இனியவன். இதை தனிமடலாக தொடரலாம்ன்னு நினைக்கிறேன். பொதுவில் வேண்டாம்..எதை தின்னா பித்தம் தெளியும்ன்னு நினைச்சுட்டு இருக்கிறவங்க கண்ணில் இது பட்டு பின் விளைவுகள் வேணாம்..நீங்க சொன்ன முதல் 2 பாயிண்ட் போதும் ஏன் தொடர வேண்டாம் என்பதற்கு....
அன்போடு
மோர்சுப்ரா
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
திரு இனியவன் அவர்களே மிக அருமையான முயற்சி
இந்த மாதிரி அரைகுறை புரிதலுக்கு எல்லாம் பதில் சொல்றதை விட நான் போய் வீணா போன பில்லா-2 அப்டேட்ஸ் படிக்கலாம்.. டாடா பை பை..
எதாவது ஒரு விஷயத்தின் மீது கண்மூடித்தனமான ஈர்ப்பு இருக்கும்போது அடுத்தவர் சிறு எதிர்க்கருத்தை வைக்கும்போது கூட மனம் மிகவும் புண்படும்.
--
ஏதோ ட்ரை பண்ணுறீங்க.. ஆனா முடியலை.. மோருக்கிட்டே அடிக்கடி இந்த மாதிரி சொல்லி விலகி போயிருக்கேன்.. இது புதுசு இல்லேப்பா.. இது எல்லாம் ஜாலியா போவும்..
எதாவது ஒரு விஷயத்தின் மீது கண்மூடித்தனமான ஈர்ப்பு இருக்கும்போது அடுத்தவர் சிறு எதிர்க்கருத்தை வைக்கும்போது கூட மனம் மிகவும் புண்படும்.
ஒரு நல்ல மனுசனை காயப்படித்திட்டியே மோரு !
அப்ப ஆயுர்வேதம், சித்தமருத்துவம், யுனானி எல்லாம்?
இருக்கு. ஒன்னா ரெண்டா. ஆனா என்னன்னு சொல்ல மாட்டேன், வெளிக்காட்டிக்க மாட்டேன். :)
--
அப்ப ஆயுர்வேதம், சித்தமருத்துவம், யுனானி எல்லாம்?
ஒளிவு மறைவுங்கிறது இல்லே காரணம்.. இனியவன் முதல் பாயிண்ட் படிங்க.. அவரே சொல்லிட்டார் எனக்கு தெளிவா சொல்ல முடியும் என்ற நம்பிக்கை இல்லைன்னு.. அப்புறம் எதுக்கு ? நானும் விளக்காமல் இருக்க காரணம் என்னாலையும் தெளிவாக விளக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை.
ஏற்கனவே ஆர்வக்கோளாறுல பள்ளியில் ஒரு நண்பனை இழுத்து போட்டு அவனுக்கு விளக்க தெரியாம விளக்கி அவனுக்கு கடைசியில் ஞாபகசக்தி அதிகமாகும்ங்கிறது மட்டும் புரிஞ்சு, பரீட்சை சமயத்தில் படிக்காம தவம் மட்டும் பண்ணி இருக்க.. ஞாபக சக்தின்னா என்னன்னு புரிஞ்சுக்கிட்டான்னு தெரியலை.. புத்தகத்தில் இருப்பதெல்லாம் தானா நினைவுக்கு வந்திடும்ன்னு ஏதோ மந்திரம்ன்னு நினைச்சிட்டான் போலிருக்கு. கடைசியில் அவன் பெயிலானதுக்கு அவங்க அம்மா அப்பாக்கிட்டே நான் திட்டு வாங்கி...... யப்பா தேவையா இதெல்லாம்.. அதுக்கு தான் வேணாங்கிறேன்..
உடனே வந்து உடற்பயிற்சி யோக எல்லாம் ஒரு பிராடுன்னு சொல்லுறதுக்கு முன்னாடி நான் எஸ்கேப்..
ஹோமியோபதி டுபாக்கூர்ன்னு சொன்னாரே அந்த மாதிரி யோகா மற்றும் உடற்பயிற்சிகளையும் சொல்லிடுவாரோ என்று கிண்டலாக சொன்னது.
சென்னையிலே எங்கே இருக்கு இது. எவ்ளோ பீஸ்...
இந்த கேள்விக்கு பதில் சொல்லாம இந்த இழையை வளர்த்தால் அப்புறம் நான் சில்லித்தனமா எதாவது செய்வேன்...
--
பி.கு: திருமணத்திற்கு தயாராகும் பிரமச்சாரிகள் காயகல்பம் செய்தால் நல்லது என்று சொன்னார்கள். இனியன் மேலும் இது பற்றி வந்து விளக்குவார் என நம்புவோம்.
அன்போடு
மோர்சுப்ரா
நீரும் இதுக்குத்தான் போனீரா? :-)))
T.N. Arulanandhan (Secretary),
The World Community Service Centre,
26, IInd Seaward Street, Valmiki Nagar,
Thiruvanmiyur, Chennai – 600 041. TN - India.
Phone: 044 – 24411692. Fax: 044 – 24456269.
E-mail: gense...@vethathiri.org
E-mail: chenna...@vethathiri.org
அப்புறம் இதை ஓப்பன் ஸ்பேஸிலும் செய்யக்கூடாது. இல்லாட்டி யாரையும் பாதிக்காம நான் பால்கனியில் செஞ்சிருவேன்.

காயகல்பம் பகுதி ஒன்று
காயகல்பம் பயிற்சியில் தொடர்புடைய சில விசயங்களை முதலில் பார்க்க இருக்கிறோம்.
1. 1. சுத்தவெளி/வெட்டவெளி/சிவம் ( Call it whatever you like)
சன் டிவியில் டாப் டென் மூவிசில் சொல்வது போல, இந்த விஷயத்தை பற்றி எனது முந்தைய இழைகளில் தேவைக்கு மேலேயே அலசி விட்டோம். இருந்தாலும் இந்த கட்டுரையை முதலில் படிப்பவர்களுக்கு வசதியாக ஒரு தொடர்ச்சிக்காக இதை மீண்டும் இங்கே சொல்வது அவசியமாகிறது.
இதை எழுதும் எனக்கே போராக இருக்கிறது என்றால், படிக்கும் உங்களுக்கு எப்படி இருக்கும் என்ற கவலை வருகிறது. J இதைப் பற்றி ஏற்கனவே அறிந்தவர்கள் நேரடியாக இரண்டாம் தலைப்பிற்கு ஸ்கிப்பி விடுங்கள்.
இந்த உலகம் எப்படி உண்டானது என்ற கேள்விக்கு மதங்கள் ரொம்ப காலமாக “இறைவன் என்ற ஒரு சக்தியால் படைக்கப் பட்டது” என்று பதில் சொல்லி வந்தன. விஞ்ஞானம் வளர வளர தியரி ஆஃப் கிரியேசன் என்பது பின் தள்ளப் பட்டு தியரி ஆஃப் எவல்யூஷன் முன்னிலை பெற்றது. இன் பேக்ட், பிக் பேங் என்ற பெருவெடிப்பு நிகழ்ந்த முதல் மூன்று வினாடிகளுக்கு பிறகு துவங்கி, இப்போது இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை என்ன நிகழ்ந்தது? எப்படி நிகழ்ந்தது? என்பதற்கு விஞ்ஞானம் துல்லியமான விளக்கங்கள் வைத்திருக்கிறது.ஆனால், ஏன் இந்த பிரபஞ்சம் தோன்ற வேண்டும் என்பதற்கும், பிக்பேங்-கிற்கு முன்னாள் என்ன என்பதற்கும் வின்ஞானத்திடம் தற்பொழுது விடை இல்லை.
சரி. பதினான்கு பில்லியன் வருடங்களுக்கு முன் நிகழ்ந்த பிக்பேங்-கிற்கு முன்னாள் என்ன என்ற கேள்விக்கு லாஜிகல் ரீசனிங்கில் “சிவம்” என்று ஒரு விடை வருகிறது.
இந்த சிவம் என்பது பூரணம், பேராற்றல், பேரறிவு என்ற மூன்று குணங்கள் கொண்ட ஒரு கருமை நிற பாய்ம(all penetrable fluid like substance) பொருள்.
அது தனது அளப்பரிய அழுத்தம் என்னும் ஆற்றலால் எல்லையற்ற தனது வடிவத்தின் ஒரு உத்தேச மையத்தை நெருக்கிக் கொண்டே இருக்கிறது. அதன் விளைவு... நாம் பார்க்கப் போகும் இரண்டாம் தலைப்பின் தோற்றம்.
2. வேதான்
சாதாரனர்களுக்கு உலகின் மிகச் சிறிய பொருள் அணு என்பது வரை தெரியும். கொஞ்சம் விபரம் அறிந்தோர்களுக்கு அணுவின் உட்பொருள்களான, புரோட்டான், எலக்ட்ரான், நியூக்ளியஸ் என்பவை தெரியும். மனிதன் அறிந்த மிகச் சிறிய அலகு (கி.மீ, செ.மீ, மி.மீ போன்ற நீளம் குறித்த அலகு) எது என்பது தெரியுமா?
அது "பிளான்க் டிஸ்டன்ஸ்". குவாண்டம் பிசிக்சில் பயன்படுவது.
In physics, the Planck length, denoted ℓP, is a unit of length, equal to 1.616199(97)×10−35 metres.
இதே போன்ற சிறிய அலகுகள் நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. கம்பன் ஓரிடத்தில் "அணுவை சதகூறிட்ட கோணிலும் உளான்" என்கிறார். அவர் சொல்லும் அணுவும, நமது அணுவும ஒன்றா தெரியவில்லை.
ஆனால், நமது சித்தர்கள் "பரமாணு" என்று ஒரு விஷயம் சொல்கிறார்கள். அது எத்தனை சிறியது?
ஒரு பசுவின் ரோமத்தை எடுத்து அதன் கனத்தின் அளவு குறுக்கில் ஒரு துண்டு வெட்டி அந்த துண்டை நூறு துண்டுகளாக்கி அதிலிருந்து ஒன்றை எடுத்து பின் அதை ஒரு லட்சம் துண்டுகளாக ஆக்கினால் அதில் கிடைக்கும் ஒரு துண்டின் நீளமே ஒரு பரமாணுவின் நீளம்.
இவ்வளவு சிறிய அளவை யாரும் அளந்து சரி பார்க்க முடியாது. :-) எளிய விளக்கம் என்னவென்றால், அதனிலும் சிறிய ஒரு அளவு கிடையாது. அந்த அளவுக்கு சிறியதான ஒரு விஷயம் இந்த பரமாணு. இது எப்படி தோன்றுகிறது?
கல்பகோடி ஆண்டுகளாய் தனது பேரழுத்தத்தால் தன்னை தானே நெருக்கிக் கொண்டிருந்த சிவம் ஒரு சுபயோக சுபதினத்தில் தனது மையத்தில் "மடித்துக்" கொண்டது. (நமக்கெல்லாம் இடுப்பில் சுளுக்கிக் கொள்கிறது அல்லவா? அது போல). J
இரு பரிமாணத்தில் ஒரு பொருளின் மீது 360 டிகிரியில் விசையை செலுத்தலாம். இது பரிமாணம் அற்ற வெட்டவெளியில் தோன்றிய மடிப்பு. அதன் சகல பக்கங்களிலும் மீண்டும் சிவத்தின் அழுத்தம் செயல்பட அந்த மடிப்பு சுழல ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் அழுத்தத்தால் சூழப்பட்டு நெருக்கப்படும் மடிப்பு அளவில் சுருங்கிக் கொண்டே வருகிறது. ஒரு சமயத்தில் அது முற்றிலும் கரைந்து சிவம் மட்டுமே மிஞ்ச வேண்டும். ஆனாலும் மிக மிக மிக சுருங்கி அதற்கு மேல் சுருங்க இயலாது என்ற நுண்ணிய நிலை வரும் போது ஒரு வினோதமான விஷயம் அதை தடை செய்கிறது.
அது அந்த மடிப்பின் சுழற்சிக்குள் சிறைப் பட்ட சிவம். இது எப்படி என்றால் காற்று ஊதப்பட்ட ஒரு பலூனை கற்பனை செய்யுங்கள். வெளியிலும் காற்று. பலூனுக்கு உள்ளேயும் காற்று. இரண்டையும் பிரிப்பது ஒரு மெல்லிய ரப்பர் படலம். அது போல் வெளியிலும் சிவம். உள்ளிலும் சிவம். இடையில் ஒரு சுழல் இயக்கம்.
அந்த இயக்கம் ஒரு பொருளா என்றால் இல்லை. அது வெறும் இயக்கம் மட்டுமே. இதை புரிந்து கொள்ள கடலில் தோன்றும் அலைகளை பாருங்கள். கடலலை என்பது ஒரு தனிப்பட்ட பொருளல்ல. அது கடல் நீரின் ஒரு இயக்க நிலை.
அப்படி உள்ளுக்குள் சிவத்தை சிறை வைத்திருக்கும் ஒரு நுண்ணிய குறுகிய தற்சுழல் இயக்கம் பரமாணு என்றும் வேதான் என்றும், விண் என்றும் அறியப்படுகிறது.
3. காந்தம்
ஒவ்வொரு வேதான் என்னும் தற்சுழல் இயக்கமும் தனது இருப்பிடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட எல்லை வரை ஒரு விளைவை ஏற்படுத்துகிறது. அது என்னவென்றால்,
தெருவில் கத்தி சாணை பிடிப்பதை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? ஒரு சுழலும் கல்லின் மீது கத்தியை வைத்து அழுத்தும் போது பொறிகள் பறக்கும்.
அது போல் நிலையாய் இருக்கும் சிவத்தின் மீது தற்சுழல் இயக்கம் வேதான் உரசும் போது பொறிகள் தோன்ற அவை சிவத்தின் அழுத்தம் தாளாமல் குறுகிய நேரத்தில் கரைந்து மறைகின்றன. (இங்கு பொறிகள் என்பது உதாரணமே. நீங்கள் நெருப்பு பொறிகளை கற்பனை செய்து கொள்ளாதீர்கள்)
இப்படி பொறிகள் தோன்றி மறையும் நிகழ்வு ஒரு தொடர் இயக்கமாக இருப்பதால் எப்போதும் வேதானை சுற்றி ஒரு சிறிய எல்லை வரை ஒருவித ஆற்றல் களம் அமைகிறது. அந்த ஆற்றலின் பெயரே காந்தம்.
4. பௌதிகங்கள்
சிவகளத்தில் வேதானின் தோற்றங்கள் ஒரு தொடர் நிகழ்வாக நடக்க கோடி கோடியாய் வேதான்கள் நிறைந்து சக்திகளம் ஒன்று உருவாகியது. அதில் வேதான்களின் 'வயதிற்கு' ஏற்ப அதன் சுழல் வேகத்தில் வேறுபாடு ஏற்பட ஒரு வேதான் இன்னொரு வேதானை நெருங்கி அதனோடு இணைந்து சுழல துவங்கியது. இது எப்படி என்றால் பூமி தானும் சுழன்று கொண்டு சூரியனோடும் சேர்ந்து சுற்றுவது போல். இரண்டு சுழல் இயக்கங்கள் ஒன்றை ஒன்று குறிப்பிட்ட தூரத்தில் விலக்கியும் வைக்கும். இரண்டு பம்பரங்களை சுற்றி விட்டு ஒன்றை ஒன்று தொடும்படி நெருக்கிப் பாருங்கள்.
இப்படி விலகியும் அதே சமயம் சேர்ந்தும் இயங்குகிற கூட்டு இயக்கம் நமது அணுவுக்கான மூலப் பொருளாக உருப் பெறுகின்றன. இந்த மூலகங்கள் சேர்ந்து அணுக்களாகி அணுக்களின் சேர்க்கை பௌதிகங்கள் ஆகிறது.
உதாரணம், ஒரு புரோட்டானும், ஒரு எலக்ட்ரானும் இருந்தால் அது ஹைட்ரஜன் என்னும் வாயு அணு. எட்டு புரோட்டானும், எட்டு எலக்ட்ரானும் இருந்தால் அது ஆக்சிஜன் என்னும் வாயு அணு. இரண்டு ஹைட்ரஜன் அணுவும ஒரு ஆக்சிஜன் அணுவும இணைந்தால் அது நீர் என்னும் பௌதிகம். இதில் புரோட்டானும், எலக்ட்ரானும் வேதான்களின் கூட்டு இயக்கங்கள்.
இப்படியாக வெறும் வேதான் என்னும் சுழல் இயக்கம் விண் எனவும், அடுத்து தோன்றிய பௌதிகம் காற்று எனவும், அடுத்து அழுத்தக் காற்று(வெப்பம்), அடுத்து நீர், அடுத்து நிலம் எனவும் பெயர் பெறுகிறது.
ஒவ்வொரு வேதானை சுற்றியும் ஒரு காந்த களம் இருக்கும் என்று பார்த்தோம். வேதான்கள் அணுக்களாக, பௌதிகமாக சேர்ந்து இயங்கும் போதும் அதில் இருக்கும் மொத்த வேதான்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வலிமை கொண்ட காந்த களமாக அந்த கூட்டு இயக்கத்தை சுற்றி அமையும். அந்த வகையில் காற்றுக்கு ஒரு காந்தக் களம் உண்டு. நீருக்கு, நெருப்புக்கு, நிலத்தில் நாம் கண்டு வைத்திருக்கும் 118 தனிமங்கள் வரை எல்லாவற்றுக்கும் ஒரு கா.க உண்டு.
இதில் ஒரு பொருளில் தோன்றும் காந்தம் மற்ற பௌதிகங்களோடு தொடர்பு கொள்ளும் போது அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணம், என்ற விளைவுகளை தருகிறது.
5. உயிர்
அடுத்த பகுதியில் ...
மிச்சம் எப்ப வருது ?
காயகல்பம் பகுதி இரண்டு
5. உயிர்
முதல் நான்கு தலைப்புகளை மறு வாசிப்பு செய்து பார்த்ததில் சப்ஜெக்ட் கொஞ்சம் ட்ரையாக தெரிந்தது. அறிவியலை சுவையாக சொல்வது ஒரு கலை. சுஜாதா அதில் மன்னாதி மன்னன. சமுத்ரா ஒரு மன்னன். ம்ஹ்ஹ்ம். நானெல்லாம் ஒரு பச்சா.
இந்த தலைப்பில் அங்கங்கே சற்று கதை போல சொல்ல முயற்சிக்கிறேன். வாசகர்கள் கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு என்னிடமிருந்து கககபோ (கருத்தை கச்சிதமாய் கவ்விக்கொண்டீர் போங்கள்) என்று பாராட்டு பெறுவீராக.
நடிகர் நடிகைகளின் பேட்டிகளில் தவறாமல் இப்படி ஒரு பதிலை பார்க்கலாம், “நான் நடிக்க வந்ததே ஒரு விபத்து தாங்க”. J
அது போல் உலகில் உயிர் தோன்றியது ஒரு தற்செயல் விபத்தினால் தான் என்பது தெரிந்தால் நமக்கெல்லாம் ஆச்சரியம் வரலாம்.
ஜெமினி திரைப்படத்தில் கதாநாயகன் விக்ரமையும், வில்லன் கலாபவன் மணியையும் ஒரே செல்லில் சிறை வைப்பார்கள். இருவரும் அடித்துக் கொண்டு மடியட்டும் என்று. அவர்களோ புத்திசாலித்தனமாக தமக்குள் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சிறையை விட்டு எஸ்ஆவார்கள். அது போல்,
(Pure vethaan ) தனி வேதான் விண்ணும், நிலம், நீர், வெப்பம், காற்று என்ற மற்ற நான்கு பௌதிகங்களான வேதான் தொகுப்புகளும், ஒற்றுமையாய் ஒரு குளோசுடு கண்டெயினரில் இருக்க முடியாத தன்மை உள்ளவை. உதாரணம், நீரும், நெருப்பும் சேர்த்து வைத்தால் ஏதாவது ஒன்று தான் மிச்சமாகும். அது எந்த பௌதிகம் அளவில், வலிவில் பெரியதோ அதற்கு ஏற்ப இருக்கும்.
ஆனால் பாருங்கள், எல்லா கிரகங்களும் நட்சத்திரங்களும் சுபப் பார்வை பார்த்த ஒரு நன்னாளில், சுப முகூர்த்த வேளையில், பூமி என்ற கிரகத்தின் ஓரிடத்தில் இந்த ஐந்து பௌதிகங்களும் ஒரு குறிப்பிட்ட அளவுகளில் ஒரு குளோசுடு கண்டெயினரில் சிறைப் பட்டன. அந்த கு.க ஆக நிலம் என்னும் பௌதிகம் அமைந்தது. மற்ற நான்கு பௌதிகங்களும் அதற்குள் சிறை இருந்தன. ஆனால், எந்த முரண்பாடுகளும் இன்றி, ஹார்மணியாக தத்தமது சுழல் இயக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தன. அது தான் ஒரு செல் உயிரி அமீபா தோன்றிய அதிசயம்.
அதிசயம் அதோடு நிற்கவில்லை. அமினோ ஆசிட், புரோட்டீன், ஆர்என்ஏ, டிஎன்ஏ, செல் மியுடேசன், இனப்பெருக்கம், ஓர் அறிவின் உணர்தல், பரிணாமப் பிழை, பல அறிவு உயிகளின் தோற்றம் என்று பலப் பல அதிசயங்களுக்கு அந்த அமீபாவின் தோற்றம் பிள்ளையார் சுழி போட்டது. அதையெல்லாம் விளக்கப் புகுந்தால் நான்கு பாகங்கள் போதாது. தேவைப் படுவதை மட்டும் குறிப்பிட்டு விட்டு ஒரு ஜெயன்ட் லீப் எடுத்து மனிதனுக்கு வந்து விடலாம்.
அமீபாவுக்குள் இருந்த தனி வேதான்கள் அதன் உயிர் ஆனது. மற்ற பௌதிகங்கள் (வேதான் கூட்டுகள்) அதன் பரு உடலானது. இப்போது அந்த அமீபா தனக்குள் தோராயமாக ஒரு நூறு வேதான்களை மொத்தமாக கொண்டிருந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு உதாரணம் மட்டுமே. அதில்,
தனி வேதான்கள் – 10
நிலம் என்னும் வேதான் தொகுப்பில் – 30
நீர் என்னும் வேதான் தொகுப்பில் - 25
காற்று என்னும் வேதான் தொகுப்பில் - 15
வெப்பம் என்னும் வேதான் தொகுப்பில் – 20
ஆக மொத்தம் நூறு வேதான்கள் .
கேரம் போர்டில் காய்களை அடுக்கும் போது கவனித்திருக்கிறீர்களா? எல்லா காய்களும் ஒட்டிக கொண்டிருந்தாலும் அவற்றுக்கு இடையில் இடைவெளி இருக்கும். அது போல் இந்த நூறு வேதான்களுக்கு இடையில் உள்ள வெற்றிடங்களில் நமது சிவம் இருக்கிறார். ஏற்கனவே ஒவ்வொரு வேதானுக்கு மத்தியிலும் இருக்கிறார். இப்படி கலெக்டிவாக அந்த அமீபாவுக்குள் இருக்கும் சிவம் அதன் அறிவாக இயங்குகிறார்.
என்னாது? அமீபாவுக்கு அறிவா? என்னய்யா கதை இது என கேள்வி வருகிறதா? தாவரங்களுக்கு தொடு உணர்வு உண்டு என்பதை படித்திருப்பீர்கள். அது தான் அதன் ஓரறிவு.
அமீபாவுக்குள் இருக்கும் தனி வேதான்களாகிய அதன் உயிர் அதன் உடலுக்குள் ஒரு மையம் ஏற்படுத்திக் கொண்டு அதன் உடலை சுற்றி வருகிறது. மேலும், அதன் சுழற்சியால் காந்த களத்தை ஏற்படுத்த அந்த காந்தமும் அமீபாவின் உடலில் ஏற்கனவே அமைந்த உயிர் மையத்தை தானும் மையமாக அமைத்துக் கொண்டு அமீபாவின் உடலை சுற்றுகிறது.
அந்த இரண்டு சுழற்சிகளும் மையம் கொண்ட குறிப்பிட்ட உடல் மையப் பகுதியில் (Genetic center) இருந்த பரு உடல் மூலக் கூறுகளில் இந்த நிகழ்வு அடிப்படை காந்த அலைப் பதிவுகளை தோற்றுவித் தது. இந்த பதிவுகளைப் பெற்ற மூலக்கூறுகளே காலத்தால் அறிவியல் துறையில் DNA என்று அழைக்கப்படலாயின. இந்த நிகழ்வு இத்தோடு நின்று விடவில்லை. காலம் செல்லச் செல்ல புதிய அலை பதிவுகள் அந்த ஒரு செல் உயிரியின் கரு மையத்தில் சேர ஆரம்பித்த்து.
அமீபா முதன் முதலில் ஒரு நீர் நிலையில் தான் தோன்றியிருக்க வேண்டும். நீர் நிலம் சார்ந்த பகுதிகளில் அது நகர்ந்த பொழுது சில இயற்கை நிகழ்வுகள் அந்த உயிரியை பாதித்தன. தன்னுடைய எடையை தானே தூக்கி நகர இயலாத நிலை, நிலம்-நீர் பரப்புகளில் நகர்ந்த போது உருவான உராய்வு விசை, தான் நகர்ந்த அந்த நீரோட்டத்தின் வேகம் மற்றும் திசை, அதீத வெப்ப நீரோட்டங்களில் நகர வேண்டிய சூழ்நிலை, நிலச்சரிவு -நில அதிர்வு போன்ற இயற்கை நிகழ்வுகள், மற்றும் இன்னும் பல காரணிகள் இவற்றால் அந்த ஒரு செல் உயிரியின் உடல் சில நேரங்களில் இரண்டாக பிளவுபட்டது.
இந்த பிளவு படுதல் என்ற நிகழ்வு அந்த ஒரு செல் உயிரியின் உடலின் எந்த மூலக் கூறு கூட்டத்தில் ஏற்பட்டதோ அந்த மூலக் கூறு கூட்டத்திலிருந்து 'பிளவு படுதல் என்னும் நிகழ்வை ஏந்திய காந்த அலைகள்' மேல் எழும்பின. அந்த அலைகள் சுத்த வெளியின் துல்லிய சம தள சீர்மை ஆற்றலினால் மையம் நோக்கி நகர்ந்து கருமையத்தின் அலை பதிவு களுடன் இணைந்து புதிய அலை பதிவுகளாக பரிணாமித்தன.
மேலும் அந்த ஒரு செல் உயிரியின் கரு மையம் ஒத்த காரணிகள் எப்பொழுதெல்லாம் தென்பட்டதோ அப்பொழுதெல்லாம் இந்த புதிய அலை பதிவுகளை தன்னிச்சையாக வெளிப் படுத்தியது. இந்த நிகழ்வே ஒரு செல் உயிரி தன்னை தானே பிளந்து கொண்டு இன்னொரு உயிரியை தோற்றுவிக்க காரணமானது. இதையே நாம் உயிரியலில் 'இனப்பெருக்கம்' என்று அழைக்கின்றோம். இப்படித்தான் பரிணாமத் தொடரில் முதல் இனப் பெருக்கம் ஏற்பட்டது.
இன்னொரு முக்கியமான விசயமும் இங்கேயே துவங்கியது. நூறு வேதான்களோடு ஏகாந்தமாக காற்றிலும், நீரிலும் திரிந்து கொண்டிருந்த அமீபா சில காலத்தில் எவரெடி பாட்டரி விளம்பரத்தில் வரும் லோக்கல் பாட்டரி போட்ட கார் போல சார்ஜ் இழந்து டல்லானது. என்னடான்னு பாத்தா அது கிட்ட இருந்த நூறு வேதான்களில் ஒரு பத்து வேதான்கள் “எங்க ஆயுசு முடிஞ்சதுப்பா. நாங்க போறோம். டாட்டா. பை பை” என்று சொல்லி விட்டு சட்டென்று சிவத்தில் கரைந்து மறைந்து விட்டன.
திரும்பவும் ஒரு பத்து வேதான்கள் கிடைத்தால் தான் முன்னைப் போல சுறுசுறுப்பாய் திரிய முடியும். என்னடா செய்வது என்று அமீபா கவலைப் பட்டுக் கொண்டு இருந்த போது அதன் உள்ளிருந்த மற்ற பவுதிகங்கள் ”கவலைப் படாதப்பா. எங்க சொந்தக்காரங்க வெளிய இருக்காங்க. அவங்க கிட்ட கொஞ்ஜம் வேதான் கடன் கேட்டு பார்க்கலாம்” – என்று சொல்லி முயற்சியில் இறங்க அதில் காற்றும், வெப்பமும் வெற்றி பெற்று எப்படியோ மாய்மாலம் பண்ணி கொஞ்சம் வேதான்களை உள்ளே கடத்தி விட்டன. இந்த நிகழ்ச்சியையும் அமீபா தன் காந்த களத்தில் நாம் டைரி எழுதுவது போல் எழுதி வைத்துக் கொண்டது.
இதை தான் பின்னாளில் நாம் பள்ளிக் கூடங்களில் ”தாவரங்கள் சூரிய ஒளியில் இருந்து வெப்பத்தையும், காற்றிலிருந்து கார்பன் டை ஆக்சைடும் எடுத்து பச்சயம் என்று தமது உணவை தயாரித்துக் கொள்கின்றன” – என்று பாடமாய் படித்தோம்.
6. வான் காந்தம் சீவ காந்தம் வேறுபாடு.
பிரபஞ்சத்தில் சிவம் ஒன்று மட்டும் தான் பொருள். மற்ற எல்லாமே இயக்கங்கள் தான். வேதான் ஒரு இயக்கம். அணுவின் மூலப் பொருள்கள் வேதான் கூட்டு இயக்கங்கள், அணுவும் இயக்கம். அணுக்களால் ஆக்கப் பட்ட பருப் பொருட்கள் அனைத்தும் ஒரு இயக்கத் தொகுப்புகள். ஆனால், நாம் அவற்றை பொருள்கள் என்று நினைத்துக் கொள்கிறோம்.
இதையே வள்ளுவர் பொருள் அல்லவற்றை பொருளாய் எண்ணும் மயக்கம் கொண்டது மனிதப் பிறப்பு என்றார். பாரதி “நிற்பதுவும், நடப்பதுவும், பறப்பதுவும்” தோற்ற மயக்கங்கள் என்றார்.
நாம் காணும் அனைத்து பொருள்களும் வேதான் கூட்டங்கள். பருப் பொருட்களில் உள்ள வேதான்களும் தமது சுழற்சியால் காந்தக் களத்தை தோற்றுவிக்கின்றன என்று பார்த்தோம். சோ, உயிர்களை தவிற பிற ஜடப் பொருட்கள், பவுதிகங்கள் அனைத்தும் தோற்றுவிக்கின்ற காந்தம் கலெக்டிவாக வான் காந்தம் எனப் படுகிறது.
அதுவே, உயிர்களுக்குள் உள்ள வேதான்கள் தோற்றுவிக்கும் காந்தம் சீவ காந்தம் எனப் படுகிறது. இரண்டு வகை காந்தங்களின் குணங்களும் ஒன்றே. ஆனால், தன்மை மாறுபடும். ஏனென்றால் காந்தத்தின் தன்மை அதில் பதிவாகும் பதிவுகளைக் கொண்டு அமைகிறது.
காந்தம் அலை வடிவம் கொண்டது. அலைகளுக்கு ஐந்து குணங்கள் உண்டு. அவை மோதுதல், சிதறுதல், பிரதிபலித்தல், ஊடுறுவுதல், ஊடாடுதல். என்பன.இப்போது சர்க்கரை என்ற ஒரு பொருளை எடுத்துக் கொண்டால், அதன் தன்மை இனிப்பு. அது தான் இனிப்பான ஒரு விசயம் என்பதை தனது காந்தக் களத்தில் எழுதி வைத்திருக்கிறது. அதே போல், பால் என்பது தனக்கான சுவையை தனது கா.களத்தில் எழுதி வைத்திருக்கிறது. இவை இரண்டையும் ஒன்று சேர்க்கும் போது சர்க்கரை பாலில் கரைந்து விட்டாலும், அதன் அனைத்து மூலக் கூறுகளையும் certain ப்ராசஸ் மூலம் நாம் பாலிலிருந்து நீக்க முடியும். அப்படி நீக்கினாலும் அப்போதும் அந்த பால் இனிக்கும். எப்படி என்றால் சர்க்கரையின் காந்தம் பாலின் காந்த்த்தோடு சேரும் போது தன்னிடமிருந்த பதிவுகளை எல்லாம் பாலின் காந்தக் களத்தில் பதிவு செய்கிறது. அது பாலையும் இனிப்புள்ளதாக மாற்றுகிறது.
உயிர்கள் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிவது எல்லாம் தன்னிடம் இருக்கும் காந்தத்தை செலவு செய்து தான். இப்போது நாம் அந்த பாலை ஒரு பூனைக்கு குடிக்கத் தந்தால், அந்த பூனையின் உடலில் உள்ள சீவகாந்தம் பாலின் காந்த்தோடு தொடர்பு கொள்கையில் அது இனிப்பான பாலா அல்லது இனிப்பில்லாத பாலா என்பதை ஏற்கனவே தனது கா.களத்தில் பதிவுகள் இருந்தால் அதனோடு ஒப்பிட்டு அறியும்.
அதற்காக அது தன்னிடமுள்ள ஜீவகாந்த ஆற்றலை கொஞ்சம் செலவு செய்ய வேண்டியிருக்கும். சாப்பிட்டு விட்டு கேட்கும். என்ன பாஸ், இனிப்பு பால் குடுக்கிறீங்க? ஆபீசுல பிரமோசனா இல்ல கேர்ள் பிரண்டு உம்மா குடுத்தாளா இன்னைக்குன்னு!
காந்த தத்துவம் ஒரு கடல். அதை பத்து வரிகளில் அல்ல, பத்து பக்கங்களில் கூட முழுமையாய் புரிய வைக்க முடியாது. சோ, வேறு சந்தர்ப்பத்தில் விரிவாய்….
மூன்றாம் பாகத்தில் தொடர்வோம்....
குறிப்பு: இந்த மூன்று பாகங்களையும் படிக்காமல் நேரடியாக நான்காம் பாகம் படித்தாலும் செய்தி புரியும். இவை ஒரு தகவலுக்காகவே.
காயகல்பம் பகுதி இரண்டு
இந்த இழையின் தொடர்ச்சியை எதிர்பார்த்து ஒரு ஜீவன் காத்திருந்து இருக்கிறது மகிழ்ச்சி தருகிறது. J
தொடர் தாமதமானதற்கு கீழே உள்ள மூன்றில் ஒன்று தான் காரணம். உங்களுக்கு பிடித்ததை தெரிவு செய்து கொள்ளலாம்.
1. சகுனி படத்தின் வரவினால் பில்லா இரண்டு வெளியீட்டை தள்ளி வைத்தது போல, அண்ணாச்சியின் வரவு ஏற்படுத்தும் உத்வேகங்களும், அமளி துமளியும் அடங்கட்டும். ஒரு வாரம் சென்று தொடர்வோம். அப்போது தான் கவனிப்பு இருக்கும் – என்று இடைவெளி விடப் பட்டது.
2. வைரஸ் காய்ச்சல் வந்து ஒரு வாரம் எதையும் சிந்திக்கும், எழுதும் திறனின்றி கிடந்தது.
3.
முதல் பாகம் மறு வாசிக்க
மொக்கையாக இருக்கிறதே என்று இரண்டாம் பாகம் கொஞ்சம் காமிக் - காக எழுதிப்
பார்த்தால் அது முன்னதைவிட ரொம்ப மொக்கையாக தெரிந்தது. நான் “எழுத்துக்கெல்லாம்” சரிப்பட
மாட்டேன் என்ற உண்மை தெரிந்த பின் “என்னத்தை எழுத” என்ற
விரக்தியில் விட்டு விட்டேன். 
“வெறும் அறிமுகம் தானே. பொருள் பிழை இன்றி தகவலை மட்டும் சரியாக சொல்லி முடித்து விடு” - என்று உள்ளுக்குள் இருந்து ஒரு குரல் உந்திக் கொண்டே இருப்பதால்...
இன்று டேமேஜர் முக்கியமான வேலைகள் ஏதும் தராவிட்டால், மீதம் இரண்டு பகுதிகளையும் பதிந்து விடுகிறேன்.
நன்றி.
என்னாச்சி இந்த இழை??
--
3. முதல் பாகம் மறு வாசிக்க மொக்கையாக இருக்கிறதே என்று இரண்டாம் பாகம் கொஞ்சம் காமிக் - காக எழுதிப் பார்த்தால்
//2. வைரஸ் காய்ச்சல் வந்து ஒரு வாரம் எதையும் சிந்திக்கும், எழுதும் திறனின்றி கிடந்தது.//
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
//2. வைரஸ் காய்ச்சல் வந்து ஒரு வாரம் எதையும் சிந்திக்கும், எழுதும் திறனின்றி கிடந்தது.//
உடல்நலத்தை பார்த்துக்கொள்ளவும் இனியவன் ஜி.
சுவர் இருந்தால் தான் பாக்ஸிங் பழக முடியும்.
காயகல்பம் பகுதி மூன்று
7. மனிதன்
உடல், உயிர், விந்துநாதம், ஜீவகாந்தம், மனம், இவை ஐந்தும் ஒரு சேர இயங்கும் அமைப்பே மனிதன் ஆகும்.
மனிதனின் பரு உடல் கோடிக்கணக்கான செல்கள் என்னும் சிற்றரைகளால் கட்டப்பட்டது. இயற்கை ஒரு அற்புதமான ஆர்க்கிடெக்ட். அற்புதமான மெக்கானிக்கல் இஞ்சினீயர். பரிணாமத்தில் தான் கற்று வந்த ஒவ்வொரு பாடத்திற்கும் ஏற்ப உயிர்களின் அமைப்பை செதுக்கிக் கொண்டே வந்தது.
அழுத்தத்தை உணர்வதற்கு தோலை கருவியாக்கியது. சுவையை உணர்வதற்கு நாவை கருவியாக்கியது. ஒலியை உணர்வதற்கு காதுகளை கருவியாக்கியது. ஒளியை உணர்வதற்கு கண்களை கருவியாக்கியது. வாசனையை உணர்வதற்கு நாசியை கருவியாக்கியது. மனம் என்ற ஒன்றையும் சேர்த்து பரிணாமத்தின் உச்ச கட்ட சிறப்பான மனிதன் என்ற உயிரையும் செதுக்கி முடித்தது இயற்கை.
இந்த உறுப்புகள் வழியே காந்தத்தை செலவு செய்து மனதினால் உணர்வுகளை பெறுகிறான் மனிதன். இதில் ஒரு irony என்னவென்றால் மனம் என்பதுவும் காந்தமே. காந்தம் மனமாக மாறுவது ஒரு சுவாரஸ்யமான மாற்றம். அதை விவரிக்க இங்கு இடமில்லை. அது தனியே.
உடல் கோடிக்கணக்கான செல்களால் கட்டப்பட்ட்து என்று பார்த்தோம். அவை அனைத்தையும் இணைத்து வைப்பது எது? ஜீவகாந்தம் தான். உடலின் செல்களுக்கு கவர்ச்சி, விலக்கம் என்ற இரண்டு தன்மைகள் கொண்டு ஒன்றை விட்டு ஒன்று பிரியாது ஒட்டி வைத்திருக்கிறது.
அமீபாவின் உதாரணத்தில் அதற்கு நூறு வேதான்களை கணக்கிட்டோம். அது போல், மனித உடலில் மொத்தம் எத்தனை வேதான்கள் இருக்கும்? டிரில்லியன்ஸ் அண்டு டிரில்லியன்ஸ் கணக்கில் இருக்கும். கணக்கீட்டுக்கு வசதியாக அதை குறைத்து ஒரு உதாரணம் பார்க்கலாம்.
உயிர் ஆற்றல் என்னும் தனி வேதான்கள் – 100
தோல், சதை, எலும்பு போன்ற நிலம் வேதான் தொகுப்பில் – 300
நிண நீர், ரத்தம் போன்ற நீர் என்னும் வேதான் தொகுப்பில் - 250
சுவாசக் காற்று என்னும் வேதான் தொகுப்பில் - 150
உடல் வெப்பம் என்னும் வேதான் தொகுப்பில் – 200
ஆக மொத்தம் ஆயிரம் வேதான்கள் .
இந்த ஆயிரம் வேதான்கள் சேர்ந்து ஒரு வேதான் பத்து யூனிட் வீதம் மொத்தம் பத்தாயிரம் யூனிட் காந்தம் உற்பத்தி செய்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு பகுதி உடல் செல் இயக்கங்களுக்கு (Metabolic routine) செலவாகும். மற்றொரு பகுதி மூளையின் செல்கள் வழியே மன இயக்கத்திற்கு செலவாகும்.
நமது நாட்டு பொருளாதார அமைப்பில் மாநிலங்கள் வரி வருவாய் உற்பத்தி செய்து மத்திய அரசுக்கு கொடுத்து விட்டு பிறகு திட்டக் கமிஷனிடம், மாநில செலவு மற்றும் வளர்ச்சிக்கு ஒதுக்கீடு கேட்பது போல்,
நமது உடலில் உயிர் சக்தியை தவிர மற்ற வேதான் தொகுப்புகளால் உற்பத்தி செய்யப் படும் காந்தம் மீண்டும் அவற்றின் சொந்த செலவுகளுக்கே பெருமளவு உபயோகப் பட்டு விடுகிறது. உருப் படியாக காந்தம் சேமிக்க முடியும் என்றால் அது உயிர் ஆற்றல் உற்பத்தி செய்யும் காந்தம் மட்டுமே.
நமது உடலை ஒரு குடும்பமாக கற்பனை செய்தால், அறிவு தான் தகப்பன் (அ) குடும்ப தலைவன். உயிர் சக்தியாகிய வேதான்கள் சம்பாதிக்கும் வேலை மட்டும் செய்கிற ஒழுக்கமான பிள்ளை. அதுவும் 60X60X24X365X100 நான்ஸ்டாப்பாக சம்பாதித்துக் கொண்டே இருக்கும் நல்ல பிள்ளை.
மனம் என்பது செலவு மட்டும் செய்யும் ஊதாரிப் பிள்ளை. புலன்கள் வழி காந்தத்தை வாரி இறைத்து வீணடிப்பார். ஒவ்வொரு நாளும் காலை விழித்ததும், அப்பா ஊ.பிள்ளையை கூப்பிட்டு சொல்கிறார். “பாருப்பா. நமக்கு ஒருநாள் காந்தம் வருமானம் 10000 unit. உன்னோட ஸ்பெண்டிங் லிமிட் அதுக்குள்ளே இருப்பது போல் பார்த்துக்கோ” என்று. என்ன செய்ய? டோட்டல் ஸ்பெண்டிங் பவர் மனதிடம் தான் உள்ளது.
ஒரு நாள் முழுவதும், காலையில் காப்பி குடிப்பதில் தொடங்கி இரவு இளையராஜா பாடலை கேட்டுக் கொண்டே உறங்க செல்வது வரை ஒவ்வொரு வேலைக்கும், (எண்ணம, பேச்சு, செயல்கள் என எல்லா உடல், மன இயக்கங்களுக்கும் சேர்த்து) கொஞ்சம் கொஞ்சமாக காந்தம் செலவாகிக் கொண்டே வரும். உடல் உள் உறுப்புகளின் செயல்பாட்டுக்கு தேவைப் படும் அடிப்படை அளவுக்கு இருப்பு இறங்கி வரும் போது அப்பா மனதிடம் சொல்வார். ”சற்றே அடங்கு பிள்ளாய்!”. இப்படி சொல்லி விட்டு உடலை ரெஸ்ட் மோடுக்கு கொண்டு போய் விடுவார். மனம் “உறங்கத்” தொடங்கும்.
ஒரு நிமிடம் பாஸ்... உடலை நடத்துவதற்கு கலோரிகள் என்னும் சக்தி தானே தேவைப் படும் என்று படித்திருக்கிறோம் என நீங்கள் நினைக்கலாம்.
யூ சீ.
4 + 4 = 8. இது ஒரு உண்மை. 4 என்பது (2+2). So,
(2+2) + (2+2) = 8 என்பதும் உண்மை. 2 என்பது (1+1). So,
(1+1)+(1+1)+(1+1)+(1+1) என்பதும் உண்மை.
ஒரு நாளைக்கு நமது உடலை நடத்த புரோட்டீன், கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின், மினரல்ஸ் குறிப்பிட்ட அளவுகளில் தேவை என்பது நமக்கு தெரியும். இந்த அட்டவணையை பாருங்கள். இது ஒரு சராசரி ஆளுக்கு RDA. (Recommended daily allowance)
இந்த தேவையை நிறைவு செய்ய நாம் உணவு உட்கொள்கிறோம். நாம் உண்ணும உணவு என்னென்ன மாற்றங்கள் அடைகிறது என்பதை நாம் ஒருபோதும் யோசித்திருக்க மாட்டோம்.
உண்ணும உணவு ஆனது - ரசம், ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் (ஆணுக்கு விந்து, பெண்ணுக்கு நாதம்) என்று ஏழு மாற்றங்கள் அடைகிறது.
இந்த சுக்கிலம் என்பது மிக மிக மதிப்பு வாய்ந்த ஒரு விஷயம். இயற்கை மனிதனின் பிறப்பையும் இறப்பையும் கூட இதனுடனேயே இணைத்து வைத்திருக்கிறது. ஒரு உடலில் சுக்கிலத்தின் அளவையும், தரத்தையும் பொறுத்து தான் அவ் வுடலின் ஆரோக்கியம் அமையும். என்னுடைய கல்லூரிக் காலத்தின் போது நண்பன் ஒருவன் லாட்ஜ் வைத்தியரிடம் போய் விட்டு வந்து சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. “ மச்சி! ஒரு சொட்டு ஊறுவதற்கு ஒரு லிட்டர் ரத்தம் தேவைப் படுமாம்டா. கணக்கு வழக்கு இல்லாமல் கீழ கொட்டிக் கிட்டு இருக்கோமேடா!”
ஓவர் எக்சாகரேசன். ஆனாலும், அதன் முக்கியத்துவம் அறியாது மக்கள் வீணடிக்கின்றனர் என்பது மட்டும் உண்மை. அவ்வை ஒரு பாடலில்,
ஆன முதலில் அதிகம் செலவானால்,
மானம் அழிந்து போன திசை
எல்லோர்க்கும் கள்ளனாய், ஏழு பிறப்பும் தீயனாய்
நல்லோர்க்கும் பொல்லனாம் நாடு. என்கிறார்.
உடல் முழுதும் சுற்றிக் கொண்டிருக்கும் ரத்தம் இதயத்துக்கு வந்து சுத்திகரித்துக் கொண்டு ஆக்சிஜன் பெற்றுக் கொண்டு உற்சாகமாக மீண்டும் சுற்றை துவங்குவது போல, உடல் முழுதும் சுற்றிக் கொண்டிருக்கும் உயிர் சக்தியான வேதான்கள் ஜெனடிக் மையத்தில் இருக்கும் சுக்கிலத்தில் தம்மை ஒரு முறை நனைத்துக் கொண்டு மீண்டும் உற்சாகமாக சுற்றை துவங்குகிறது என்ற விபரம் சித்தர்கள் அறிந்திருந்தனர்.
சோ, அதிக சுக்கிலம். அதிக ஆரோக்கியம். ஆனாலும், நாம் நினைத்த அளவுக்கெல்லாம் சுக்கிலத்தை உடலில் ஸ்டாக் வைத்துக் கொள்ள முடியாது. வித்துக் கலம் என்பது ஒரு வாட்டர் டேங் மாதிரி. ஒவ்வொரு நாள் உணவின் மூலமும் உற்பத்தி ஆகும் சுக்கிலம் அதில் சேர்ந்து கொண்டே வரும். கலம் நிரம்பி விட்டால் ஓவர்புளோ வால்வ் தன்னால் திறந்து கொள்ளும். மிகுதியான சுக்கிலம் வெளியேற்ற வேகம் கொண்டு காராசேவையோ, ஈரக் கனவு மூலமோ உடல் விட்டு வெளியேறி விடும்.
பிறகு எப்படித்தான் அந்த பொக்கிசத்தை வீணடிக்காமல் உபயோகிப்பது?
There comes Sidda’s “KAYAKALPA”
8. முதுமை, நோய், மரணம்.
பூமி தன்னைத் தானே ஆயிரம் மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பது நாம் அறிவோம். அதன் சுழற்சியால் அதன் மேற்பரப்பில் உள்ள பொருட்களை தனது மையத்தை நோக்கி இழுக்கிறது. நமது உடலில் கனத்த அணுக்கள் பூமியின் மையம் நோக்கி இழுக்கப் படுகிறது. அதே சமயம் எடை குறைவான உயிர் ஆற்றல் உடலை விட்டு விசிறி அடிக்கப் பட்டு மேலே தள்ளப் பட்டுக் கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் உயிர் சக்தியின் விலகல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. உயிர் ஆற்றலின் விலகலையே முதுமையாய் உணர்கிறோம்.
உயிர் ஆற்றல் செறிவு பெற்ற உடல் வயதானாலும் இளமையாய் இருக்கும். உயிர் ஆற்றல் செறிவு குறைந்த உடல் இளைய வயதிலும் முதுமை தோற்றம் காட்டும்.
ஒவ்வொரு நாளும் தளர்வு அடைந்து கொண்டே செல்லும் நரம்புகளும் முதுமைக்கு இன்னொரு காரணம். நரம்புகள் இழுத்துக் கட்டிய வில்நாண் போல் உறுதியாய் இருந்தால் பாரதியின் “ உள்ளம வேண்டியபடி செல்லும் உடல்” – கிடைக்கும்.
உடல் ஜீவ காந்தத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வும், அதன் ஓட்டத்தில் ஏற்படும் குழப்பமும் உடலின் மற்ற மூன்று ஓட்டங்களையும் (ரத்த ஓட்டம, வெப்ப ஓட்டம, காற்று ஓட்டம) பாதிக்கும். அந்த பாதிப்பையே நோய் என்று உணர்கிறோம்.
உடலில் காந்தம் திணிவு பெற்று இருந்து, அதன் ஓட்டத்தில் எந்த குழப்பமும் ஏற்படாது இருந்தால், உடல் செல் அடுக்குகள் சீராக இருக்கும். ரத்த ஓட்டம, வெப்ப ஓட்டம, காற்று ஓட்டம முறையாய் நடந்து உடலுக்கும் உயிருக்கும் ஒரு ஹார்மநியான ஆரோக்கிய உணர்வு கிடக்கும். அதற்கு காந்தத்தை முறையாய் பராமரிக்க உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம ஆகியவற்றில் அளவும், முறையும் காக்க வேண்டும்.
உடலில் உயிர் சக்தியை பிடித்து நிறுத்தி வைப்பது சுக்கிலம் தான். வித்துக் கலயம் உடைந்து விந்து நாத திரவம் உடலை விட்டு முழுமையாய் வெளியேறினால், வேதான்களை உடலில் நிறுத்தி வைக்கும் நிகழ்வு நடக்காமல் வேதான்கள் உடல் என்ற எல்லையை விட்டு வெளியேறுவதை மரணம் என்கிறோம்.
உயிர் தாங்கியான வித்துவை போதிய அளவு கெட்டிப்படச் செய்து விட்டால், உயிரை உடலிலேயே நிரந்தரமாக தங்கி விடச் செய்ய முடியும். வாழ்ந்தது போதும் என்ற மன நிறைவு வரும் போது, உடல் இயக்கத்தையும், மன இயக்கத்தையும் நிறுத்தி விடலாம். அந்த வித்தையை சித்தர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதுவே ஜீவ சமாதி ஆகுதல் என்பார்கள். பழனியில் போகர் அத்தகைய ஜீவசமாதி அடைந்த ஒரு சித்தர் என்கிறார்கள்.
காயகல்பம் பகுதி நான்கு
9. காயகல்ப பயிற்சியும், பலன்களும்.
இந்த சுக்கிலம் என்பது மிக மிக மதிப்பு வாய்ந்த ஒரு விஷயம். இயற்கை மனிதனின் பிறப்பையும் இறப்பையும் கூட இதனுடனேயே இணைத்து வைத்திருக்கிறது. ஒரு உடலில் சுக்கிலத்தின் அளவையும், தரத்தையும் பொறுத்து தான் அவ் வுடலின் ஆரோக்கியம் அமையும். என்னுடைய கல்லூரிக் காலத்தின் போது நண்பன் ஒருவன் லாட்ஜ் வைத்தியரிடம் போய் விட்டு வந்து சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. “ மச்சி! ஒரு சொட்டு ஊறுவதற்கு ஒரு லிட்டர் ரத்தம் தேவைப் படுமாம்டா. கணக்கு வழக்கு இல்லாமல் கீழ கொட்டிக் கிட்டு இருக்கோமேடா!”
வித்துவை போதிய அளவு கெட்டிப்படச் செய்து விட்டால், உயிரை உடலிலேயே நிரந்தரமாக தங்கி விடச் செய்ய முடியும். வாழ்ந்தது போதும் என்ற மன நிறைவு வரும் போது, உடல் இயக்கத்தையும், மன இயக்கத்தையும் நிறுத்தி விடலாம்.
---
Sent via Epic Browser
தகவல் தவறுன்னு நினைக்கிறேன்.
எப்படி என்று சொன்னால் நலம். :-)
வசந்த் டி.வியில டாக்டர் காமராஜோட இரகசியக் கேள்விகள் ப்ரோகிராமை தொடர்ந்து பார்க்கிறேன்...
வசந்த் டி.வியில டாக்டர் காமராஜோட இரகசியக் கேள்விகள் ப்ரோகிராமை தொடர்ந்து பார்க்கிறேன்... போனவாரம் கிட்டதட்ட 2 நாட்கள் இதைப்பற்றிதான் பேசினாரு. கொஞ்சம் டீடெயிலா பேசினாரு. அதை இங்க எழுதினா விவகாரமாயிடும். அதே நேரம் நான் சொல்ற விந்துவும் நீங்க சொல்ற விந்துவும் ஒரே விந்துதானான்னு தெரியல. ஏன்னா நான் சொல்ற விந்து மாபுக்குக்கீழேயிருந்து தொடைக்கு மேல்வரைதான் பயணம் செய்யும். அதாவது உற்பத்தியாகுற இடத்தச் சொன்னேன். மற்றபடி உடல்பூராவும் சுற்றி வந்து உற்பத்தியாகுறமாதிரி அந்த நிகழ்சியில சொல்லல. ஒருவேளை அந்த சப்ஜெக்ட்டை ஆழமா படிச்சா நீங்க சொல்றது சரியா இருக்கலாம்.
அதே நேரம் நான் சொல்ற விந்துவும் நீங்க சொல்ற விந்துவும் ஒரே விந்துதானான்னு தெரியல.
வசந்த் டி.வியில டாக்டர் காமராஜோட இரகசியக் கேள்விகள் ப்ரோகிராமை தொடர்ந்து பார்க்கிறேன்...
இந்த காயகல்பம் மேலும் வேதாத்திரியின் கொள்கைகள் மீதும் வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டே இதில் இருந்து தான் ஆரம்பிக்குது. :-)
இனியவன் முடிக்கட்டும். பேச வேண்டியது நிறைய இருக்குது.
--
அதே நேரம் நான் சொல்ற விந்துவும் நீங்க சொல்ற விந்துவும் ஒரே விந்துதானான்னு தெரியல.
ஆண்டவா ....
அதிக விந்து வெளியேற்றினால் நோய் வரும் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதும் இதுவரை நிருபிக்கப் படாத ஒன்று. இதை இங்கு குறிப்பிடக் காரணம் மதம் அல்லது மதம் சம்மந்தப்பட்டவர்களின் மருத்துவம் தங்களிடம் வருபவர்களை அடிமையாக்குவதே, கலவியலினால் அவர்களுக்கு குற்றவுணர்வை உண்டாக்கி நிறைய கற்பனைக் கதைகளைச் சொல்லி, தங்களை பாவியாக் கருதும் நிலைக்கு கொண்டுச் செல்வதேயாகும். ஆனால் எந்த அறிவியலும் மேற்படிச் சொன்னதை இதுவரை நிருபிக்கவில்லை. இதுக்குமேல எதையாவது எழுதினா மட்டுறுத்துனர் சாட்டையை கையிலெடுத்திருவார்... ஜூட்டேய் :))
அப்போ டிவில அந்த பழனி வைத்தியர் அழாத குறையா வேண்டு கோள் வைக்கிறாரே!
இருந்தாலும் அடுத்த பதிவுவரை பொறுத்திருந்து பார்க்கலாம். அவரு என்ன சொல்ல வர்றாருன்னு தெரியாம நான் அவசரப்படக் கூடாதில்லையா. அதுக்காகத்தான் முன்கூட்டியே முன்ஜாமின் வாங்கி வச்சிருக்கேன் :))
முன் ஜாமீன் வாங்க வேண்டாமின்னு தான் நான் ஏதும் சொல்லல. :-))
| 9:07 PM (4 minutes ago) ![]() | ![]() ![]() | ||
| ||||
உங்களுக்கு தான் சீரியசாவே பேச வரலையே அப்புறம் எதுக்கு டிரை பண்ணறீங்க. :-)
நான் உம்மை வம்புக்கு இழுக்க ரொம்ப நேரம் ஆகாது..... அது காமெடிக்கு சொல்றது :))
சாரி பிரண்ட்ஸ், பணிச் சுமை நெறிப்பதால், இந்த பாகத்தை மட்டும் வேறொரு தளத்திலிருந்து சுட்டு காப்பி பேஸ்ட்டி இருக்கிறேன். உங்கள் கேள்விகள், சந்தேகங்களின் போது எனது விளக்கங்களை தொடர்கிறேன். நன்றி.
காயகல்பம் பகுதி நான்கு
9. காயகல்ப பயிற்சியும், பலன்களும்.
காயகல்பம் ஆயுள் காக்கும் ஒரு அற்புதப் பயிற்சி. நம்மை என்றும் இளமையுடன் வைத்து இருப்பதுடன், நாம் விரும்பும் வரை நம் ஆயுளை நீட்டிக்கவும் உதவுகிறது. சித்தர்கள் சொல்வார்களே மரணமில்லா பெருவாழ்வு, காயகல்ப பயிற்சியினை கர்மமே கண்ணாக செய்தால் சாத்தியம். காயகல்பம் பயின்றால் நிச்சயம் உங்கள் முகம் பளபளக்கும்,முக ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று உறுதி அளிக்கிறார்கள் மனவளக் கலை மன்றத்தின் பேராசிரியர்கள்.
இன்று கல்யாணம் ஆனவர்களுக்கும்
சரி...கல்யாணம் ஆகாதவர்களுக்கும் சரி பொதுவான சவால் பாலியல் உணர்ச்சிகள்.
கல்யாணம் ஆகாதவர்களுக்கு
தூண்டுதல் சில தவறான செயல்களுக்கு அடிக்கோள்கிறது. கல்யாணம் ஆனவர்களுக்கும் பல
நேரம் முழுமையான ஈடுபாடின்மை, ( Pre Ejaculation & Post Ejaculation ) போன்று வேறு ஏதேதோ குறைபாடுகளோ வருகிறது.
பாலுணர்வு இயற்கையான தூண்டுதல்.
அதனை இயற்கையாகவே நெறிப்படுத்த முடியும்.அத்தகைய யோகப் பயிற்சி தான் காயகல்பம்
யோகம்.
காயகல்பம் என்பது எல்லோரும்
மருந்தென நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அது மருந்து அல்ல,ஒரு உடற்பயிற்சி. நம் தமிழ் நாட்டில் வாழ்ந்து,தற்போது சூக்குமாக உலவிக் கொண்டிருக்கும் சித்தர்களின்
அற்புத பயிற்சி.
இதன் அடிப்படை என்ன ?
நம் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது.
உடலைப் பகுத்துக் கொண்டே வந்தால் செல்கள் தான் அதன் நுண்ணிய பகுதி. செல்கள்
அணுக்களின் தொகுப்பு. இந்த அணுக்களில் ஒரு சுழற்சி நடைபெற்று கொண்டே இருக்கிறது.
அந்த சுழற்சியின் மூலமே உடல் எங்கும் ஜீவகாந்தம் என்ற சக்தி பரவுகிறது.
வயதாக வயதாக இந்த சுழற்சியின் வேகம் குறையும்.அப்போது ஜீவகாந்த உற்பத்தி குறையும்.
இதனால் நரம்பு மற்றும் தோல்களில் ஒரு தளர்ச்சி ஏற்படுகிறது. இதுவே வயோதிகத்திற்கு
காரணமாக அமைகிறது. இந்த தளர்ச்சியை சமன் படுத்தவேண்டும்.
எப்படி ?
மிருதங்கம் என்ற ஒரு இசைக்கருவி
இருக்கிறது. அதன் மேல் நார்களால் கட்டப்பட்டு இருக்கும்.வாசிக்க வாசிக்க நார்களில்
தளர்ச்சி ஏற்படும்.அப்போது என்ன செய்வார்கள், அந்த நார்களை
இறுக்குவார்கள். அவ்வாறு இறுக்கிய பின்னர் மீண்டும் மிருதங்கத்தில் ஒலி பிரமாதமாக
வரும்.
மிருதங்கம் போன்று நம் நாடி
நரம்புகளின் தளர்ச்சியை முறுக்கேற்றவேண்டும்.அது இயற்கையாக இருக்கவேண்டும். என்ன
செய்யலாம் என்று சித்தர்கள் ஆராய்ந்தனர். குதிரை போன்ற அதிவேக மிருகங்களை கூர்ந்து
கவனித்த போது, அவர்களுக்கு ஒரு
சூட்சுமம் புலப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த காயகல்பம் என்ற பயிற்சியை
வடிவமைத்தனர்.
இப்பயிற்சி இளம் வயதிலேயே ஆன்மிக
வாழ்வில் ஈடுபடுபவர்கள் மத்தியில் மட்டும் கட்டாயமாக்கப்பட்டு பயிலப்பட்டு வந்தது.
நாளடைவில் அவர்களும் பின்பற்றாமல் மற்றவர்களுக்கும் சொல்லித் தராமல் கிடப்பில்
போட்டனர்.
பழங்கால ஓலைச்சுவடிகளை ஆராய்ந்த
யோகிராஜ் வேதாத்ரி மகரிஷி இதன் நுட்பங்களை ஆராய்ந்து இப்பயிற்சியை உயிர்பித்து
எளிமைபடுத்தினார். அவரது ஐம்பதாவது வயதில் கண்டறிந்த அவர் சுமார் இருபது ஆண்டுகள்
இதனை தனியே பழகி,இதில் உள்ள உண்மை நிலை
உணர்ந்து பின்னர் மக்களுக்கு கற்பித்தார்.
ஏழ்மையான நெசவாளர் குடும்பத்தில்
பிறந்த வேதாத்ரிக்கு ஐம்பது வயதிலேயே வயோதிகம் தாண்டவமாடத் தொடங்கிவிட்டது. கண்கள்
ஒட்டி கிடுகிடுவேன இருந்தார். இப்பயிற்சியை பழக தொடங்கிய நாள்முதல் வேதாத்ரி
மகரிஷியின் கண்களிலும், தோல்களிலும்ஒரு
பிரகாசம் வரத்தொடங்கியது.அவருக்குள் ஒரு உற்சாகம் எப்பொழுதும் இயங்கி கொண்டே
இருந்தது. வயோதிகம் என்பது ஒரு பொருட்டல்ல என்பது போல துள்ளித் திரிந்தார்.எழுபது
முதல் எண்பது வயதிற்குள் 27 முறை அமெரிக்க
பறந்திருக்கிறார்.தொண்ணூற்றி ஆறு வயதிலும் முகத்தில் ஒரு சிறு சுருக்கம் இல்லை.
மனவளக்கலையை முழுமையாக்கி பல்கலைக் கழகப் பாடமாக்கும் வரை பூமியில் வாழ்ந்தார்.
சமாதி அடையும் முன் குறிப்பால்
கூறி, சொன்னது சொன்னபடி இப்பூவுலக வாழ்வை துறந்தார். அதாவது
அவர் வந்த கடமையை அவர் முடிக்கும்வரை அவர் மரணத்தை நெருங்க விடவில்லை. காயகல்பம்
மரணத்தை தள்ளிப் போட செய்யும் ஒரு ஆற்றல் மிகு யோகம்.
இப்பயிற்சியை ஆராய்ந்த
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியின் அறுவை சிகிச்சைப் பிரிவு துறைத்தலைவர்
க.ஆனந்த நாராயணன், இதன் இயக்க கூறுகளை
அறிவியல் பூர்வமாக ஒப்புக்கொண்டு முன்மொழிந்துள்ளார்.
காயகல்பம் அறிவியல் பூர்வமான ஒரு
ஆன்மிக யோகப் பயிற்சி.
நாம் உண்ணும் உணவு ஏழு தாதுக்களாக
அதாவது இரசம், இரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,மஜ்ஜை,மற்றும் சுக்கிலம் என்ற வித்துவாக மாறுகிறது என்பதை நாம்
அறிவோம்.அவ்வாறு மாறும் ஏழாவது தாது சுக்கிலம்.இதனை வீணாக்காமல் உயிர்சக்தியாக
மாற்றி மீண்டும் மூளைக்கே திருப்பும் போது வயோதீகம் தள்ளிப் போகிறது, இளமை மீட்கப்படுகிறது என்பதை உணர்ந்தனர்.இதன்
அடிப்படையில் காயகல்ப பயிற்சியை வடிவமைத்தனர்.
காயக்கல்பத்தில் இரண்டு விதமான
பயிற்சிகள் உள்ளன ஒன்று அஸ்வினி முத்திரை என்ற நரம்பூக்கப் பயிற்சி,இரண்டு ஓஜஸ் என்ற மூச்சுப் பயிற்சி. இதனை காலையில்
மூன்று நிலைகளில்.மாலையில் இரண்டு நிலைகளில் செய்ய வேண்டும். வெறும் ஆறு நிமிடம்
தினம் ஒதுக்கினால் போது உங்கள் ஆயுள் நீட்டிப்பு சாத்தியம்.
சரி கல்யாணம் ஆனவர்களுக்கு என்ன
பலன் பார்ப்போம்.
இல்லறவாழ்வில் ஈடுபடும் போது இந்த
சுக்கிலம் கழிக்கப்படுவது இயல்பு.எனினும் குழந்தைப் பிறக்கவேண்டுமானால் அதனை உயிர்
அணுக்களோடு வெளியாற்றலாம், குழந்தைவேண்டாம் என்று
முடிவு செய்த சூழலில் இயற்கையாகவே அதன் உயிர்சக்தியை ஆற்றல் பதங்களாக மாற்றி உடல்
முழுவது பரவசெய்து, பிறகு சுக்கிலத்தை
வெளியேற்றி இயற்கையாகவே கருத்தரிப்பை தவிர்க்கும் நுட்பமும் காயகல்பத்தில்
முடியும். இதனால இல்லறவாழ்வில் எந்த வித குறைபாடும் ஏற்படாது.
இங்கு ஒரு நுட்பம் இருக்கிறது.
அதனை பயன்படுத்தும் போது இயற்கையாகவே பிள்ளைப் பேற்றை கவலையின்றி தள்ளிப் போடலாம்.
சில பெண்களுக்கு காப்பர் – டி உடலுக்கு ஒத்துக்
கொள்வதில்லை. கருத்தடை மாத்திரைகளால் பக்கவிளைவுகள் வரும் வாய்ப்புகளும்
தவிர்க்கப் படுகின்றது.
இல்லற வாழ்வில் ஈடுபடும் போது
ஏற்படும் வெளியேறும் குறைபாடுகள், அதாவது Pre Mature
edaculation போன்ற பிரச்சனைகள்
படிபடியாக நீங்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்
சரியாகும். பாலிஸிஸ் ஓவரியன் சிண்ரோம் ( Polysis Ovarian Syndrome ) போன்ற பிரச்சனைகள் தீர்வதாக ஆராய்ச்சிகள் மூலம்
நிருபணமாகியுள்ளது.
கருமுட்டை கோளாறுகள் நீங்கி, குழந்தை பாக்கியம் எளிதில் கிடைக்க உதவுகிறது.
எல்லாருக்கும் அறிவார்ந்த
பிள்ளைகள் பிறக்கவேண்டும் என்ற ஆவல் இருக்கும். நமது பழக்க வழக்கங்கள்
மூன்றுவிதமான பதிவுகளால் தீர்மானிக்கப்படுகிறது. ஒன்று சஞ்சிதம் – நம் முன்னோர்களிடம் இருந்து வரும் பதிவுகள். இரண்டு
ஆகாமியம் –
நாம் பிறப்பெடுத்தது முதல்
இன்றுவரை நாம் பழக்க வழக்கத்தால் வந்த பதிவுகள், மூன்று – பிராப்தம் – ஆகாமியமும் , சஞ்சிதமும் கலந்து
தரும் விளைவுகள்.
வித்து அணு நீர்ம நிலையில்
இருக்கும்போது, தவறான வினைப்பதிவுகள்
அதுனூடே இருக்கும். அது கெட்டிப்படும் போது, அத்தகைய தீயப்பதிவுகள்
அகன்று வலிமையான வித்துக்கள் மட்டுமே மிஞ்சும். காயக்கல்பம் பயிலும்போது வித்து
வலிமைபெற்று அழகான, அறிவான, துறுதுறுப்பான குழந்தை பிறக்கின்றன.
அடுத்ததாக இயற்கையான குழந்தைப்
பேறு. எப்படி ஹிப்னோபர்த்திங்கில் இயற்கையான பிள்ளைபேறு சாத்தியமோ அதே போல, காயக்கல்பம் பயின்ற பெண்களுக்கும் சிசேரியன்
தவிர்க்கப்படுகிறது.
சரி கல்யாணம் ஆகாதவர்களுக்கும்
என்ன நன்மை.?
எங்களுக்கு தானே பாஸ், நிறையப் பிரச்சனை என்கிறீர்களா ?
உங்களுக்கு ஒரே பிரச்சனைதான்.
அதுதான் பாலியல் தூண்டுதல். சுய இன்பம் .
திருமணம ஆகும்வரை உங்கள்
உயிர்சக்தியை சேமிக்க காயகல்பம் ஒரு வரப்பிரசாதம். சுக்கிலம் நிறையும் போது தான்,அது உடலில் தூண்டுதலை அதிகரிக்கச் செய்து, சுய இன்பம் போன்ற செயல்களுக்கு வழிகோளுகிறது.
காயகல்பம் செய்யும் போது இப்படி
நிரம்பும் உயிர் சக்தி ஒஜஸ் என்ற பதங்களாக மாற்றப்பட்டு உடல் சக்தியாக
மாற்றபடுகிறது. இதனால் இத்தகைய தூண்டுதல்கள் கட்டுப் பாட்டில் இருக்கும். இளைய
வயதில் திசை மாறுதல் நிகழாது. நமீதாவும் நயன்தாரவும் கனவில் வந்து டான்ஸ் ஆட
கூப்பிட்டாலும் தைரியமாக போய் ஆடலாம்.
கனவில் ஆடும்
நாட்டியத்திற்கெல்லாம் நிஜத்தில் உள்ளாடை நனையாது.யாருக்கு ஐ லவ் யூ சொல்லலாம் ? யார் ஐ லவ் யூ சொன்னாலும் பட்டாம் பூச்சி பறக்காது.
அறிவு மட்டுமே முன்னின்று முடிவெடுக்கும். உடலுக்கு இடம் தராது.
உள்ளுணர்வு தவறான நடவடிக்கைக்கு
தூண்டுதல் தராது.
ஓஜஸ் பதம் மூளையில் நிறையும் போது
ஆரோக்கியம் மேம்படும். நினைவு சக்தி அதிகரிக்கும்.படிக்கும்பாடம் விரைவில் மனதில்
பதியும். படிக்கும் வேகம் அதிகரிக்கும். எப்போதும் உடலில் ஒருவித இன்பநிலை
குறுகுறுவென ஓடிக்கொண்டிருக்கும். முகப்பருக்கள் fail and lovely இல்லாமலே உங்களுக்கு குட் பை சொல்லும்.
வாரம் ஒருமுறை அழகு நிலையம்
செல்லாமலே ஒருவித பளபளப்பு உங்களின் முகத்தில் பிரகாசிக்கும்.
நாடி நரம்புகளின் தளர்ச்சிகள்
கட்டுபடுத்தப் பட்டு இளமை முறுக்கு எப்போதும் உடலில் இருக்கும். இன்னும் பலபல நன்மைகள் உங்களுள்
குடி கொள்ளும்.
இப்பயிற்சியின் யுக்திகள் மிக மிக
எளிமையானது. எனினும் நேரில ஒரு ஆசிரியர் வழிகாட்டுதலுடன் மட்டுமே பழகவேண்டும்.
நீங்கள் காயகல்பம் கற்க விரும்பினால் உங்கள் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தின்
முகவரி அறிய ( www.vethathiri.org ) தொடர்பு கொள்ளவும்.
நாம் உண்ணும் உணவு ஏழு தாதுக்களாக அதாவது இரசம், இரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,மஜ்ஜை,மற்றும் சுக்கிலம் என்ற வித்துவாக மாறுகிறது என்பதை நாம் அறிவோம்.அவ்வாறு மாறும் ஏழாவது தாது சுக்கிலம்.இதனை வீணாக்காமல் உயிர்சக்தியாக மாற்றி மீண்டும் மூளைக்கே திருப்பும் போது வயோதீகம் தள்ளிப் போகிறது, இளமை மீட்கப்படுகிறது என்பதை உணர்ந்தனர்.இதன் அடிப்படையில் காயகல்ப பயிற்சியை வடிவமைத்தனர்.
சரி கல்யாணம் ஆனவர்களுக்கு என்ன பலன் பார்ப்போம்.
இல்லறவாழ்வில் ஈடுபடும் போது இந்த சுக்கிலம் கழிக்கப்படுவது இயல்பு.எனினும் குழந்தைப் பிறக்கவேண்டுமானால் அதனை உயிர் அணுக்களோடு வெளியாற்றலாம், குழந்தைவேண்டாம் என்று முடிவு செய்த சூழலில் இயற்கையாகவே அதன் உயிர்சக்தியை ஆற்றல் பதங்களாக மாற்றி உடல் முழுவது பரவசெய்து, பிறகு சுக்கிலத்தை வெளியேற்றி இயற்கையாகவே கருத்தரிப்பை தவிர்க்கும் நுட்பமும் காயகல்பத்தில் முடியும். இதனால இல்லறவாழ்வில் எந்த வித குறைபாடும் ஏற்படாது.
எல்லாருக்கும் அறிவார்ந்த பிள்ளைகள் பிறக்கவேண்டும் என்ற ஆவல் இருக்கும். நமது பழக்க வழக்கங்கள் மூன்றுவிதமான பதிவுகளால் தீர்மானிக்கப்படுகிறது. ஒன்று சஞ்சிதம் – நம் முன்னோர்களிடம் இருந்து வரும் பதிவுகள். இரண்டு ஆகாமியம் – நாம் பிறப்பெடுத்தது முதல் இன்றுவரை நாம் பழக்க வழக்கத்தால் வந்த பதிவுகள், மூன்று – பிராப்தம் – ஆகாமியமும் , சஞ்சிதமும் கலந்து தரும் விளைவுகள்.
வித்து அணு நீர்ம நிலையில் இருக்கும்போது, தவறான வினைப்பதிவுகள் அதுனூடே இருக்கும். அது கெட்டிப்படும் போது, அத்தகைய தீயப்பதிவுகள் அகன்று வலிமையான வித்துக்கள் மட்டுமே மிஞ்சும். காயக்கல்பம் பயிலும்போது வித்து வலிமைபெற்று அழகான, அறிவான, துறுதுறுப்பான குழந்தை பிறக்கின்றன.
சரி கல்யாணம் ஆகாதவர்களுக்கும் என்ன நன்மை.?
உங்களுக்கு ஒரே பிரச்சனைதான். அதுதான் பாலியல் தூண்டுதல். சுய இன்பம் .
திருமணம ஆகும்வரை உங்கள் உயிர்சக்தியை சேமிக்க காயகல்பம் ஒரு வரப்பிரசாதம். சுக்கிலம் நிறையும் போது தான்,அது உடலில் தூண்டுதலை அதிகரிக்கச் செய்து, சுய இன்பம் போன்ற செயல்களுக்கு வழிகோளுகிறது.
காயகல்பம் செய்யும் போது இப்படி நிரம்பும் உயிர் சக்தி ஒஜஸ் என்ற பதங்களாக மாற்றப்பட்டு உடல் சக்தியாக மாற்றபடுகிறது. இதனால் இத்தகைய தூண்டுதல்கள் கட்டுப் பாட்டில் இருக்கும். இளைய வயதில் திசை மாறுதல் நிகழாது. நமீதாவும் நயன்தாரவும் கனவில் வந்து டான்ஸ் ஆட கூப்பிட்டாலும் தைரியமாக போய் ஆடலாம்.
கனவில் ஆடும் நாட்டியத்திற்கெல்லாம் நிஜத்தில் உள்ளாடை நனையாது.யாருக்கு ஐ லவ் யூ சொல்லலாம் ? யார் ஐ லவ் யூ சொன்னாலும் பட்டாம் பூச்சி பறக்காது. அறிவு மட்டுமே முன்னின்று முடிவெடுக்கும். உடலுக்கு இடம் தராது.
உள்ளுணர்வு தவறான நடவடிக்கைக்கு தூண்டுதல் தராது.
ஓஜஸ் பதம் மூளையில் நிறையும் போது ஆரோக்கியம் மேம்படும். நினைவு சக்தி அதிகரிக்கும்.படிக்கும்பாடம் விரைவில் மனதில் பதியும். படிக்கும் வேகம் அதிகரிக்கும். எப்போதும் உடலில் ஒருவித இன்பநிலை குறுகுறுவென ஓடிக்கொண்டிருக்கும். முகப்பருக்கள் fail and lovely இல்லாமலே உங்களுக்கு குட் பை சொல்லும்.
வாரம் ஒருமுறை அழகு நிலையம் செல்லாமலே ஒருவித பளபளப்பு உங்களின் முகத்தில் பிரகாசிக்கும்.
நாடி நரம்புகளின் தளர்ச்சிகள் கட்டுபடுத்தப் பட்டு இளமை முறுக்கு எப்போதும் உடலில் இருக்கும். இன்னும் பலபல நன்மைகள் உங்களுள் குடி கொள்ளும்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com