மீண்டும் சித்தர் பாடல்கள் +

54 views
Skip to first unread message

eswar sivakrishnan

unread,
Aug 25, 2012, 5:39:36 AM8/25/12
to பண்புடன்
அன்பர்களே இந்த இழையில் வாழ்வியல் நெறிகளை கூறும் சித்தர்பாடல்களையும், நீதிநெறி கூறும் பாடல்களையும் இடலாம் என்று இருக்கிறேன்,

முதலில் திருமந்திரப்பாடல்.

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே. 


--
http://svjeswar.blogspot.in/ 

"எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்க"
அன்பன்,
ஈஸ்வர்

Jaisankar Jaganathan

unread,
Aug 25, 2012, 5:47:07 AM8/25/12
to panb...@googlegroups.com
விளக்கத்தோட போடுங்க

பாலா பாலாஜி

unread,
Aug 25, 2012, 5:54:46 AM8/25/12
to panb...@googlegroups.com
எந்த கீரை பற்றிய பாடல்?

2012/8/25 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>
விளக்கத்தோட போடுங்க

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
Life is Short... Keep SMILING...

Balaji.R

eswar sivakrishnan

unread,
Aug 25, 2012, 6:40:08 AM8/25/12
to panb...@googlegroups.com
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே. 

அதிகாரம்-அறம் செய்வான் திறம்
நம்மாள் செய்யக்கூடிய அறங்களை கூறுகிறார்,
இறைவனை வழிபட எவ்வித பொருள்களும் இல்லை என்றாலும் ஒரு பச்சிலை வைத்து வணங்கினால் போதும்
இறைவழிபாட்டிற்கு இந்த முறையால் தான் வணங்க வேண்டும் என்பதில்லை இந்தப்பொருளைத்தான் இறைவற்கு சூட்ட வேண்டும் என்பதும் இல்லை. நமக்கு கிடைக்கும் ஒரு பசம் தளிர் கூடப்போதும்.
அடுத்து அறம் எது உயிர்களை ஓம்புதல் மற்ற உயிர்களுக்கு பாதுகாப்பாக மனிதன் இருக்க வேண்டும் உயிர்களுக்கு துன்பம் தரக்கூடாது அவைகளை ஆதரிக்க வேண்டும் ஜீவகாருண்யம் வேண்டும் என்பதால் பசுவுக்கு கொஞ்சம் புல். உண்ணப்புகும் போது பிறர்க்கு ஈந்து உண்டல் ஒரு நெறி மரபு இப்போதைக்கு தேவையானவர்களுக்கு அவர்கள் பசிப்பிணியைப்போக்க நம்மாள் ஆனதை செய்தல், ஒவ்வொரு முறை உண்ணும் போதும் மனதில் நிறைவு வேண்டும் என்பதாகவும் கொள்ளலாம். அடுத்து இவைகளில் எதை செய்ய முடியாவிட்டாலும், பிறர்க்கு ஒரு இனிய சொல்லையாவது கூறவேண்டும்,  மனம் கனிந்து கூறும் சொல் நம் அன்பின் வெளிப்பாடாக இருக்கும் பட்சத்தில்  அவ்வன்பு பெருகி உலகை நிறைக்கும். இவை எல்லாம் சாமானியனால் செய்ய இயலக்கூடியவைகளே, இயல்பானதும் கூட. சிலர் அதென்ன ஒரு கைப்பிடி என்று கேட்கலாம், வேறு ஒரு பாடலில் தவ்வி(அகப்பை) கொடுத்துண்மின் என்பார் கொடுப்பதற்கு எதற்கு அளவு இவை சாமானியர்களுக்கு கூறுவது அதனால் உங்களுக்கு முடிந்ததை செய்யுங்கள் என்வாறு எனக்கொள்ளல் வேண்டும்.

இது என் சிற்றிவிற்கு எட்டிய விளக்கம்,  இன்னும் நல்ல விளக்கத்தை வேண்டுகிறேன்.



2012/8/25 பாலா பாலாஜி <tami...@gmail.com>



--

Jaisankar Jaganathan

unread,
Aug 25, 2012, 6:43:43 AM8/25/12
to panb...@googlegroups.com
விளக்கதுக்கு நன்றி ஈஸ்வர்

பாலா பாலாஜி

unread,
Aug 25, 2012, 10:01:22 AM8/25/12
to panb...@googlegroups.com
நல்ல கருத்துக்கள்.. பாடிய சித்தர் யாரென்று தெரியுமா ?

2012/8/25 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>
விளக்கதுக்கு நன்றி ஈஸ்வர்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Jaisankar Jaganathan

unread,
Aug 25, 2012, 10:11:11 AM8/25/12
to panb...@googlegroups.com
பாலாஜி
இது திருமூலர் திருமந்திரம்

பாடினவர் திருமூலர்

Thevan

unread,
Aug 25, 2012, 10:17:00 AM8/25/12
to panb...@googlegroups.com
// அன்பர்களே இந்த இழையில் வாழ்வியல் நெறிகளை கூறும் சித்தர்பாடல்களையும், நீதிநெறி கூறும் பாடல்களையும் இடலாம் என்று இருக்கிறேன்,//

அருமையான பணி தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..

eswar sivakrishnan

unread,
Aug 28, 2012, 12:13:48 AM8/28/12
to panb...@googlegroups.com
ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே. 

நல்லவர் தீயவர் பேதம் பாராமல் அறம் செய்க, பிறர்பாரத்திருக்க உண்ணற்க, தேடிவைத்தபொருளை பூதம்போல் காத்து பயனற்றதாக்க வேண்டாம், விருந்தினர் வரும் முன் விரைந்து  உண்ணற்க, காக்கை கரைந்து அழைத்து உண்ணும். 
ஒரு பொருளை கொடுக்கும் போது நல்லவர் கெட்டவர் என ஆராயத்தேவையில்லை, பொருளை தமக்கு  கீழனவர்களுக்கு கொடுப்பது ஈகை, ,ஒத்தவர்களுக்கு தருவது தானம்,  இரப்போர்க்கு  இட்டு உண்ணுதல், தானும் அமர்ந்து உடன் உண்டு உண்ணத்தக்கவர்கள் விருந்தினர் அவர்களுக்கு உபச்சாரம்மும் பொருளும் தருதல் மரபு அவர் வந்தபோது மகிழ்ந்து இன்சொல்பேசி உண்டல் இது விருந்தோம்பல். முன்னோர்கள் சேர்த்த பொருளையும் தாம் ஈட்டிய பொருளையும் கட்டிக்காத்து இராமல் ககாகம் தன் இனத்தவரை அழைத்து உண்ணுவது போல் தம் சுற்றத்தைரை போற்றுதல் வேண்டும், சுற்றத்தார் நம்மை விட உயர்ந்தோராக, ஒப்பாகார, கீழோராக இருக்கலாம் எனினும் அவர்களை அணைத்து மாறுபாடுகாட்டாமல் உபசரிக்க வேண்டும்.






2012/8/25 Thevan <apth...@gmail.com>
// அன்பர்களே இந்த இழையில் வாழ்வியல் நெறிகளை கூறும் சித்தர்பாடல்களையும், நீதிநெறி கூறும் பாடல்களையும் இடலாம் என்று இருக்கிறேன்,//

அருமையான பணி தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

பாலா பாலாஜி

unread,
Aug 28, 2012, 12:44:14 AM8/28/12
to panb...@googlegroups.com
காகம் தன் இனத்தவரை அழைத்து உண்ணும் என்பது உண்மையா? எனக்கு தெரிந்து சிக்கன் மட்டன் மற்றும் கறிகடைகளில் கீழே விழும் துண்டுகளை தூக்கிக்கொண்டு தூரமாக பறந்து போய்விடுகிறது அல்லது உயரமான மின் கம்பம், கட்டிடம் மேலே சென்று உட்கார்ந்து கொள்கிறது. 

2012/8/28 eswar sivakrishnan <easw...@gmail.com>



--

eswar sivakrishnan

unread,
Aug 28, 2012, 12:50:54 AM8/28/12
to panb...@googlegroups.com
கூட்டித்தின் அல்லது ஓட்டித்தின் என்பார்கள், ஒரு பிஸ்கட்ட இருந்தா நாம மட்டும் சாப்பிடலாம் ஆனா யாரும் பார்த்துக் கொண்டு இருக்க்கூடாது, பார்க்க வைத்து உண்ணக்கூடாது, ஆளுக்கு ஒரு பிஸ்கட் இருந்தால் பகிர்ந்து உண்ணலாம், 

ஒரு எலும்புத்துண்டை வைத்து காக்கா காத்தி தன் குடும்பத்தில் சண்டைக்கு வவிவகுக்காது! 

2012/8/28 பாலா பாலாஜி <tami...@gmail.com>

பாலா பாலாஜி

unread,
Aug 28, 2012, 1:03:17 AM8/28/12
to panb...@googlegroups.com
இது என் சொந்த கருத்து மற்றும் நான் கண்ணால் கண்டது. காக்கா உணவை கண்டவுடன் கண்டபடி கத்துவதால் தான் பிற காக்கைகளும் அவ்விடம் வந்து சேர்கின்றன. மற்றபடி சிறிய உணவுத்துண்டு எனில் மற்ற காக்கைகளை முந்திக்கொண்டு லபக்கென்று விழுங்கி விடுகிறது. பெரிய உணவுத்துண்டு கிடைத்தால் தூக்கிக்கொண்டு தூரமாக எஸ்கேப் ஆகிவிடுகிறது. சாதம் போன்ற தூக்க முடியாத உணவுகளை மட்டும் போனால் போகிறது என்று பகிர்ந்து உண்கிறது. அதிலும் சற்று பலவீனமான காக்கைகள் தூர நின்று வேடிக்கை பார்ப்பதையும் பார்க்கலாம்.

2012/8/28 eswar sivakrishnan <easw...@gmail.com>
கூட்டித்தின் அல்லது ஓட்டித்தின் என்பார்கள், ஒரு பிஸ்கட்ட இருந்தா நாம மட்டும் சாப்பிடலாம் ஆனா யாரும் பார்த்துக் கொண்டு இருக்க்கூடாது, பார்க்க வைத்து உண்ணக்கூடாது, ஆளுக்கு ஒரு பிஸ்கட் இருந்தால் பகிர்ந்து உண்ணலாம், 

ஒரு எலும்புத்துண்டை வைத்து காக்கா காத்தி தன் குடும்பத்தில் சண்டைக்ஹைகு வவிவகுக்காது! 

eswar sivakrishnan

unread,
Aug 28, 2012, 1:31:03 AM8/28/12
to panb...@googlegroups.com
உண்மையும் கூட, அதிகமாக உணவைக்காண்டால் மட்டுமே காக்கைகள் கரைந்து ஒன்று கூடி உண்ணும், காக்கைகள் பயத்தால் தன் கூட்டத்தை அழைத்து உண்ணுகின்றன, நீங்கள் சொன்னமாதிரி பலகீனமானவைகள் ஒதுங்கி இருப்பதுபோல் இருந்தாலும் அவைகளை அவ் விரட்டுவதில்லை, தகுதி உள்ளது தப்பிப்பிழ்க்கும் அல்லவா, அவற்றிடையே குடும்பத்தகராறு வரும் அதுவும் பிறன்மனை விரும்பினால் மட்டுமே, காக்கைகள் இயல்பிலேயே புத்திசாலிகள் நெளிவு சுளிவு கொண்டவை. எங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக காலை மதியம் உணவு வைப்பதால் பல தலைமுறைக்காக்கைகளைக் கண்டிருக்கிறேன் நம்முடன் நெருங்கிப்பழகினாலும் ஜாக்கிரதை உணர்வுடனேயே இருக்கும், கையில் இருந்து உணவு வாங்கிச்செல்லும் காக்கைகளும் உண்டு கதவைத்தட்டும்காக்கைகளும் உண்டு.

பூனைக்குவைக்கும் பால குடித்து பூனையுடன் மட்டும் அல்லாது எங்கள் வீட்டு நாயுடன் ஒரேதட்டில் உண்டு எங்களைப்பிந் தொடர்ந்து ஊட்டிவரை வந்த காக்கையும் உண்டு. பார்த்துப்பழகுட அவனுங்க மனசப்பயலுக என்ற எச்சரிக்கை எப்போதும் காக்கைகளுக்கு இருப்பதை பார்த்திருக்கிறேன்.

காக்கைகள் உறவினர்களைப்போல துன்பக்கல் விழுந்தால் கூட்டம் சிதறிப்போகும். துன்ப இருளில் நிழலும் உடன்வரா.

எனினும் அழைத்து உண்பதில் எப்போதும் மனநிறைவு, அந்த சுய நலத்திற்காகவேணும் கூடி உண்ணலாம்.
Reply all
Reply to author
Forward
0 new messages