ஒரு வாரம் முன் ஷைலஜா அக்கா சாட்டில் வந்து காலை வணக்க மடலில் கபிலர் பாடலில் கூறிய அழகிய 99 தமிழ் மலர்களை போடலலமேனு சொல்லி தமிழ் செம்மொழி மாநாட்டில் வெளியிடப்பட்ட தமிழ் மலர்களின் தொகுப்பினை கொண்ட புகைபடம் அனுப்பி வெய்தார்.
நான் அந்த படங்களை காலை வணக்கம் மடலில் போடலாம் என்று யோசிக்கும்போதுதான் நினைவுக்கு வந்தது, நான் போடும் காலை வணக்க மடலை அமொரிக்காவில் அர்னால்ட், ஜப்பானில் ஜாக்கிசான் போல உலகத்தில் பல பேர் பார்கிறார்களே (”யாரப்பா அது ஒவர் மொக்கை உடம்புக்கு ஆகாதுனு சொல்றது”) அவர்கள் அந்த மலர்களை பார்த்து சாட்டில், போனில் விளக்கம் கேட்பார்களே என்று தோன்றியது, நாம் இருக்கும் இந்த பிஸியான வேளையில் தனி தனியாக விளக்கம் கொடுக்க முடியாது எனவே தனி இழையில் இந்த மலர்களை பற்றி போடுவோம் என முடிவு செய்து இந்த இழையினை ஆரம்பிக்கிறேன்.
முதலில் இந்த இழை தொடங்க யோசிக்க வெய்த ஷைலஜா அக்காவிற்க்கு என் முதல் நன்றியை சொல்லிட்டு அந்த 99 மலர்களின் பெயரை இங்கே போடுகிறேன்.
தொடந்து வரும் மடல்களில் அந்த மலர்களின் படங்களையும் அவற்றை பற்றிய சிறு குறிப்புகளும் போட போகிறேன். இப்படி எல்லாம் எழுதியதால் இது எல்லாம் நான் சொந்தமா எழுதபோறேனு யாரும் நினைக்க வேண்டாம். அங்கே, இங்கேனு படிச்சி அதைதான் இங்கே போட போறேன்.
தமிழ் மலர்களை பாடிய கபிலர் 2ம் நூற்றாண்டை சேர்ந்த புலவர் ஆவார், சங்க இலக்கிய பாடல்களில் அதிக எண்ணிகையில் பாடல்களை இயற்றியவர்.
இவர் அகத்திணைகள் பலவற்றைப் பாடும் திறமுடையவராயினும் குறிஞ்சித் திணை பற்றி பாடுவதில் தேர்ந்தவர். கலித்தொகையில் குறிஞ்சிக்கலி, பத்து பாட்டில் குறிஞ்சிப்பாட்டு குறிஞ்சித் திணை பற்றிய நூறு பாடல்களை பாடியதோடு, இத்திணைபற்றி அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலும் மிகுதியான பாடல்களைப் பாடியுள்ளதால் குறிஞ்சி பாடிய கபிலர் என்றே இவரைக் கூறலாம்.
கபிலர் வேள்பாரியின் உற்ற நண்பராக விளங்கினார். அவன்பால் மட்டுமின்றி அவனது பறம்பு மலையினிடத்தும் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார். பாரி பற்றிய இவரது பாடல்கள், இவரது சால்பையும் பாரியின் வள்ளல் தன்மையையும் தமிழகத்தே என்றென்றும் நிலைக்கச் செய்தவை. இவர், மூவேந்தரும் வஞ்சகமாக பாரியை கொன்றது கண்டு உள்ளம் வெதும்பி வெதும்பி பாடிய செய்யுட்கள், கற்போரை துயரக்கடலுள் சேர்த்துவன ஆகும்.
பாரிக்கு பின் பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை இருவருக்கும் நல்வாழ்வு அமைக்க இவர் அடைந்த துயரங்கள் பல. பாரியின் மகள் இருவரையும் தம் மக்களாக கருதித் அவர்களை காத்து தக்க முறையில் திருமணம் செய்வித்தார்.
இப்படி தமிழுக்கும், நட்புக்கும், அடையாளமாக வாழ்ந்த பாரி, கபிலர் மகள்கள் பெயரான அங்கவை, சங்கவை பெயரைதான் நகைசுவை என்ற பெயரில் மக்களை நமுட்டு சிரிப்பு சிரிக்க வெய்த்த பெருமை ஒரு தமிழ் சினிமாவிற்க்கு உண்டு.
தன் கடமை முடிந்தபின் இறந்து போன தன் நண்பன் பாரியிடம் சென்று சேர உண்ணவிரதம் இருந்து உயிர் நீத்தார் கபிலர்.
அழகிய தமிழ் மலர்களின் அணிவகுப்பு நாளை முதல் தொடங்கும்.தமிழ் மலர்களை பாடிய கபிலர் பற்றி சிறுகுறிப்பு

தமிழீழ தேசிய மலரான காந்தள் மலர் கார்த்திகைத் திங்களில் மலருவதால் இதற்க்கு கார்த்திகை மலர் எனவும் ஒரு பெயர் உண்டு. இது தமிழீழம் தவிர இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இதன் தாவரவியற் பெயர்: லில்லி ஆசியே குளோரி லில்லி, இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும். இதை மேலாண்மை பொருந்திய மலராகக் கருதுகிறார்கள்.
இப்படி மருத்துவ உபயோகம் இருந்தாலும் நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளின் நஞ்சாகும், சிறிதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2...@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website: http://Tamil2Friends.com
1. காந்தள் மலர்
இது நல்லாயிருக்கே ...இதுதான் முதல் பூவா / மடலா ? ஸ்டார் போட்டாச்சுநன்றி ஜோ சார்.
2. ஆம்பல்

ஆம்பல் அல்லது அல்லி என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.
3. அனிச்சம்

முகர்ந்ததும் வாடிவிடும் என்று இலக்கியத்தில் கருதப்பட்ட மலர் இது. இதை ஒரு கற்பனை மலர் என்றும் சொல்லுவர். இந்த மலரை விருந்தினருடன் ஒப்பிட்டு வள்ளுவரும்,
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. (குறள் எண்: 90)
குறள் இயற்றியுள்ளார், (அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.) இந்த மலருக்கு நாகமல்லி என்ற வேறு பெயரும் உண்டு.
4. குவளை

பெண்களின் கண்களுக்கு உவமையாக ( இலக்கியங்களில் ) கூறப்பட்ட ஒரு வகை கருநீல நிறப் பூ. இதன் உருவம் அல்லி மலரை போல் இருக்கும்.
5. குறிஞ்சி

குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது. குறிஞ்சிச் செடிகள் புதர்வகையைச் சேர்ந்தவை. ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா என்பது அவற்றின் தாவரவியல் பெயர் ஆகும். இந்த குறிஞ்சிக்குடும்பத்தில் ஏறக்குறைய 200 வகைச் செடிகள் காணக்கிடைக்கின்றன. அவை அத்தனையும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றிலும் 150 வகைகள் வரையில் இந்தியநாட்டில், மட்டுமே காணப்படுகின்றன. இன்னும் குறிப்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட வகைகள் மேற்கு தொடர்ச்சிமலைகள், நீலகிரி, மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே வளர்கின்றன.
நீலக்குறிச்சி மலர்ச்செடிகள் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளர்கின்றன. உயரம் 30 முதல் 60 செ.மீ. வரையில் இருக்கும். பிரகாசமான அதன் ஊதாபூக்கள் கோயில் மணிகளின் உருவம் கொண்டவை.தென்னிந்தியாவின் உயரமான சிகரமாகிய கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆனைமுடிச் சிகரத்தி“ நாற்புறமும் அமைந்துள்ள பிரதேசத்தில் அமைந்துள்ளது "இரோவிகுலம் தேசியபூங்கா'. அந்த இடம் இந்த ஊதாக்குறிஞ்சிச்செடிகள் செழித்த வளருவதற்கு ஏற்ற பாதுகாப்பான இடமாகக்கருதப்படுகிறது. என்றாலும், கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாகத்தென்னிந்திய மலைப்பகுதிகளில் இந்த எழில்மிகு ஊதாக்குறிஞ்சி செடிகளின் வளர்ச்சி மெல்லமெல்லக் குறைந்துவிட்டது.
கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில் வளரும் இச்செடி, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கும். பொதுவாக 30 முதல் 60 செ.மீ. உயரம் வரை வளரும் இது, இதற்கேற்ற தட்பவெட்ப சூழ்நிலை இருந்தால் 180 செ.மீ. உயரம் வரையிலும் வளரும்.
1994 ஆம் ஆண்டில் பூத்த இச்செடி, பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்திலும், கேரளாவிலும் 2006 ஆம் ஆண்டில் பூத்தது.
6. வெட்சி

சிவப்பு அல்லது வெள்ளை அல்லது மஞ்சள் நிறங்களில் சிறிதளவு தேனுடன் கொண்ட பூக்கள், சம்ஸ்க்ருதத்தில் இதனை பிந்துக அல்லது பாதலி என்று சொல்படும் ஒரு மருத்துமலர் ஆகும். இது மேக சூடு, சுர ரோகம், நீர்வேட்கை ஆகியவைகளை போக்கும், இளைப்பகற்றும்.
வெட்சிப்பூ மேக வழல் விட்டோடும் வாசனையாம்
அடசி வழி யாயுயிர் கொள்ளா ரணங்கே -எச்சுஞ்
சுரமுடனே தாகந் தொலைக்கும் உலகில்
விரைவாய் இளைப்பகற்றும் விள (அகத்தியர் குண பாடம் )
பூவை -வெள்ளாட்டுபாலி ல் கொடுக்க வெள்ளை தீரும்
பூவை குடிநீராக்கி குடிக்க சுரம் தீரும்
பூவை நெய்விட்டு வதக்கி சீரகம், சிறுநாகபூவுடன் உண்ண நீர் வேட்கை போகும்
வேரை-திப்பிலயுடன் கொடுக்க -கழிச்சல் நிற்கும்
வேரை புண்ணில் போட புண் சீக்கிரம் ஆறும்

சிவப்பு அல்லது செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறப் பூக்கள் கொண்ட பனிக்காலத்தில் மலரும் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படும் பூ ( Plumbago rosea ) இது அக்கினி என்றழைக்கப்படும் மலர்; மற்றும் கமலாக்கினி, காடாக்கினி, தீபாக்கினி ஆகிய வகைகள் ஆயுர்வேததில் கூறப்படுகின்றன.
முக்கனிகளில் ஒன்றாகக் கருதப்படும், முதலில் புளிப்பாகவும் கனிந்த பின் இனிப்பாகவும் இருக்கும் மாம்பழத்தைத் தரும் பூ. இதனை தேமாம்பூ; ஆம்பிரம்; மாம்பூ என அழைப்பர்.

குன்றிமணி என அழைக்கப்படும் விதைகளை உடைய கொடியின் மலர், அழகிய வெளிர் சிவப்பு மலர் கொண்டது. இந்த கொடியின் காய் வெடிக்கும்போது வெளிப்படும் மணிகள் கருப்பு சிவப்பாய் இருக்கும், இது விஷ தன்மை கொண்டது என கருதபடுகிறது.

புதர் தாவரம் ஆகிய மூங்கிலின் மலர் பெயர்தான் உந்தூழ் எனப்படும், இதில் ஆண்டுக்கு ஒரு முறை மலரும் ஒரு மலரும், எப்பொழுது மலரும் என்று தெரியாத ஒரு மலரும் உண்டு.
11. கூவிளம்

சிவனுக்கு உகந்த வில்வ மலரின் மற்ற பெயர்தான் கூவிளம் மலர் ஆகும். தூய வெள்ளையும் கொஞ்சம் கலந்த நிறம் கொண்டது. இதன் மரத்தில் இருக்கும் பழமானது மருத்துவ குணம் கொண்டதாகம்.
12. எறுழம்பூ
செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்து மரவகை பூ. இந்த பூவினை பற்றி அதிகம் விவரம் தெரியவில்லை, தெரிந்தவர்கள் பகிரலாமே
13. சுள்ளி

கருங்காலி மரத்தின் மலர், உறுதி வாய்ந்த மரத்தின் அழகிய மலர்தான் இந்த சுள்ளி மலர்.
14. கூவிரம்
மலையில் வளரக்கூடிய மரத்தின் மலர் ஆகும், இந்த மலரும் அதிகம் அறியபடுவில்லை.
15. வடவனம்
ஆல மரத்தின் கனியின் காணமுடியாத மலர் இது, ஆனால் சிலர் இந்த மலர் பூப்பதே இல்லை என்றும், சிலர் விழுதுக்குள் மலரும் என்றும் சொல்லுவார்கள். ஆனால் பூ இல்லாமல் காய் வரவாய்ப்பு இல்லை என்பதுதான் சரியாக இருக்கும்.