வா வா வா (இசைப் பாடல்) | அண்ணாகண்ணன்

13 views
Skip to first unread message

AnnaKannan K

unread,
Aug 15, 2022, 7:44:56 AM8/15/22
to Vallamai, சந்தவசந்தம், மின்தமிழ், தமிழ் மன்றம், panbudan
அண்ணாகண்ணன் இயற்றிய பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார் கான பிரம்மம் கிருஷ்ணகுமார். உடன் பாடியுள்ளவர், ஷ்ரேயா கிருஷ்ணகுமார். பவழ விழாக் காணும் சுதந்திர இந்தியாவின் புகழ், பாரெங்கும் ஓங்குக. விடுதலைத் திருநாள் வாழ்த்துகள்.

https://youtu.be/qusK6Z6aDEM வாவாவா வலது காலெடுத்து வலிமை மேலெடுத்து வாய்ப்பைக் கண்டெடுத்து வாழ்வை முன்னெடுத்து வாவாவா புதுமை வடிவெடுத்து செம்மை முடிவெடுத்து நேர்மை வழியெடுத்து நீதிச் சுடரெடுத்து வாவாவா துணிந்து அடியெடுத்து தெளிந்த நிலையெடுத்து முனைந்து தரம்குவித்து பணிந்து கரம்குவித்து வாவாவா வியர்வைச் சாறெடுத்து வெற்றி நூறடித்து நிஜத்தை ஏறெடுத்து நல்ல பேரெடுத்து வாவாவா தோளில் பொறுப்பெடுத்து தொண்டில் சிறப்பெடுத்து இன்றில் பிறப்பெடுத்து இளமைத் துடிப்பெடுத்து வாவாவா புலியே பொற்றாமரையே பொலிவே பொன்மயிலே புவியின் புத்தமுதே புத்தம்புது பாரதமே வாவாவா


Reply all
Reply to author
Forward
0 new messages