நான் 1984-ல் பாலிடெக்னிக்கில் படிக்கும் பொழுது, ஹாஸ்டல் டே அன்று, இதை உல்டா பண்ணி ஒரு நாடகம் போட்டார்கள், நவீன சிலப்பதிகாரம் என்ற பெயரில்.
அதில் மகாராணியின் கால்குலேட்டர் காணாமல் போவதாகவும், உங்கள் கால்குலேட்டரில் என்ன பேட்டரி உபயோகித்தீர்கள் என்று கேட்டபோது, மகாராணி நிப்போ என்று பதில் சொல்ல, அரச சபையில் கால்குலேட்டரை உடைக்க, அதிலிருந்து எவரெடி பேட்டரி வரும்.
நீங்கள் வேணுமானால், மகாராணியின் லேப்டாப் காணாமல் போவதாகவும், என்ன ஆப்பரேடிங் சிஸ்டம் உபயோகித்தீர்கள் என்று கேட்க, மகாராணி விஸ்டா என்று சொல்ல, லேப்டாப்பை ஆன் செய்ய அதில் எக்ஸ்.பி. இருப்பது போல் உல்டா செய்யலாமே!
சும்மா தமாஷுக்கு, கோச்சுக்காதீங்க!
--
ப்ரியத்துடன்,
கோகுல்