பட்டுக்கோட்டையார் பாடல்கள்

180 views
Skip to first unread message

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 22, 2012, 11:29:58 AM4/22/12
to பண்புடன்

வாய்ச்சொல் வீரர்

    மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தா
    மாற்றமில்லேடா ராஜா-எம்
    மனசிலே பட்டதை வௌியிலே சொல்றேன்
    வந்ததுவரட்டும் போடா-சில ( மனு )

    உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும்
    ஒலகம் இதுதாண்டா-ராஜா
    ஒலகம் இதுதாண்டா
    உள்ளத் துணிவோட பொய் சொல்லுவோர்க்கு
    உல்லாச புரிதாண்டா-இது
    உல்லாச புரிதாண்டா... ( மனு )

    வசதியிருக்கிறவன் தரமாட்டான்-அவனை
    வயிறுபசிக்கிறவன் விடமாட்டான் ( வசதி )

    வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
    வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான் (மனு)

    பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
    பயணம் போறேண்டா-நான்
    பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
    பயணம் போறேண்டா ( மனு )

    ஒரு சிறுவன்: அங்கே நானும் வாரேண்டா...
    வௌியே படிக்க வேண்டியது நெறய இருக்கு
    படிச்சிட்டு வாரேண்டா-சிலர்
    படிக்க மறந்தது நெறய இருக்கு
    படிச்சிட்டு வாரேண்டா.... ( மனு )

    எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
    உழுது ஒளச்சு சோறும் போடுறான்..
    எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
    நல்லா நாட்டைக் கூறு போடுகிறான்-இவன்
    சோறு போடுகிறான்-அவன்
    கூறு போடுறான்.

    [கண் திறந்தது,1959]


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**


ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 22, 2012, 12:06:22 PM4/22/12
to பண்புடன்

இதயத்தை திருடியவள்

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ
    இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே (என்)

    கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே-உன்னைக்
    காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே (கண்)

    கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே-உன்
    காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே (என்)

    கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே-ஒரு
    கள்ளியிடம் இருக்குதுடி வெண்ணிலாவே-அந்த
    வல்லிதனை நீயறிவாய் வெண்ணிலாவே-அதை
    வாங்கி வந்து தந்துவிடு வெண்ணிலாவே! (என்)

    கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே....
    கொஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே-நீ
    கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே
    அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே-இது
    அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே-இது (அவள்)

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ
    இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
    இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே!

R.Venugopalan

unread,
Apr 22, 2012, 12:19:06 PM4/22/12
to panb...@googlegroups.com

கையிலே வாங்கினேன் பையிலே போடல்லே

       காசுபோன இடம் தெரியல்லே-என்

காதலி பாப்பா காரணம் கேப்பா

       ஏது சொல்லுவதென்றும் புரியல்லே

       ஏழைக்குக் காலம் சரியில்லே

 

மாசம் முப்பது நாளும் ஒளைச்சு

       வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு

காசை வாங்கினாக் கடன்காரனெல்லாம்

       கணக்கு நோட்டோட நிக்குறான் வந்து

       எனக்கு உனக்குன்னு பிய்க்குறான்

 

சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா

பட்டினியால் பாடுபட்டா

கட்டுக்கட்டா நோட்டுச்சேருது

கெட்டிக்காரன் பொட்டியிலே-அது

குட்டியும் போடுது வட்டியிலே

 

 

விதவிதமாய்த் துணிகள் இருக்கு

விலையைக் கேட்டா நடுக்கம் வருது

வகைவகையா நகைகள் இருக்கு

மடியைப் பார்த்தா மயக்கம் வருது

எதையெதையோ வாங்கணுமின்னு

எண்ணமிருக்கு வழியில்லே- இதை

எண்ணாமலிருக்கவும் முடியல்லே

 

கண்ணுக்கு அழகாப் பொண்ணைப் படைச்சான்

பொண்ணுக்குத் துணையா ஆணைப் படைச்சான்

ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்

உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்

என்னைப் போலவே பலரையும் படைச்சு-அண்ணே

இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்

ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்



--

நாஞ்சில் வேணு



Omprakash

unread,
Apr 23, 2012, 1:36:26 AM4/23/12
to panb...@googlegroups.com
இன்னொரு பாட்டு இருக்கே ”புள்ளிமான் புலிக்கு சொந்தம்” என்கிற மாதிரி பாட்டு தொடங்கும்...

eswar sivakrishnan

unread,
Apr 23, 2012, 8:08:50 AM4/23/12
to panb...@googlegroups.com
குட்டியாடு தப்பி வந்தால்
 குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ள நரி மாட்டி கிட்டா
கொறவனுக்குச் சொந்தம்
தட்டுகெட்ட மனிதர்கண்ணில்
பட்ட தெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமடா
கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா
ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால்
அதோடே சொந்தம் மாறுமடா தாலை
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
கணக்குத் தீர்ந்திடும் சொந்தமடா
............................
......................
பாடல் நீளும் படம் பாசவலை, எம்கேராதா நடித்தது, குரல் இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமன்.
சட்டப்படிபார்க்ப்போனால் என்ன எட்டடி ஆறடி தானே என்றால் என் மனைவி பட்டுக்கோட்டையார் கொஞ்சம் உயரம் அதனால்  அவருக்கு எட்டடி பத்தாது என்றேன்..... போட்டிக்கு அவன் இருந்திருக்குனும்யா என கவியரசு கூறுவாராம், பத்தொன்பது வயதில் பாட்டெவுத வந்தவர் இருபத்தொன்பதாம் அகவையில் மறைந்தது தமிழுக்கு நட்டமே, அவரைப்போல் எளிமையாக பொதுவுடமையை கூறியவர் யார்.........

2012/4/23 Omprakash <vi.omp...@gmail.com>
இன்னொரு பாட்டு இருக்கே ”புள்ளிமான் புலிக்கு சொந்தம்” என்கிற மாதிரி பாட்டு தொடங்கும்...

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
http://www.subadhinam.com
http://www.ootytours.in/

"எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்க"
அன்பன்,
ஈஸ்வர்

V Ramesh

unread,
Apr 23, 2012, 8:33:16 AM4/23/12
to panb...@googlegroups.com
இவர் பாடல்களில் ஒண்ணு

சின்ன குடி நாத்தனார் சில்லறைய மாத்துனார்.
 குண்டுசட்டி போற வழியில் குடும்ப பூரா ஏத்துனார்

இப்படின்னு ஒரு பாடல் வரும்.. படல் வரிகள் சம்பந்தமே இல்லாம இருக்கும். இந்த பாடல் யாரும் கேட்டிருக்கீங்களா ? என்ன படம் ? எந்த சூழ்நிலையில் இந்த பாடல் வரும்ன்னு தெரியுமா ? ரொம்ப நாளா எந்த சூழ்நிலையில் இந்த பாடல் வரும்ன்னு மண்டைய பிச்சுட்டு இருக்கேன்.


அடுத்து பட்டுக்கோட்டையார் பாடல்களில் எனக்கு பிடிச்சது இது.


நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/4/23 eswar sivakrishnan <easw...@gmail.com>

eswar sivakrishnan

unread,
Apr 24, 2012, 1:00:41 AM4/24/12
to panb...@googlegroups.com
ஆரவள்ளி படத்தில் நகைச்சுவையாக இடம் பெற்றப்பாடல், ஆரவள்ளியிடம் சிறைப்பட்ட மன்னர்களிடையே கலகலப்பாக்கும் பாடல்.....
 இப்பாடலில் ஏ.கருணாநிதி நட்த்திருப்பார், இதேபடத்தில் பழக்கம் ில்லாத கழுதைகிட்ட பார்த்துக்கறக்கனும் பாலை எனும் நையாண்டிப்பாடலும் இடம் பெற்றிருக்கும்.
மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்த படம் காதாநாயகன் ஈஸ்வர், காதாநாயகி மைனாவதி, வில்லி ஜி,வரலஷ்மி...


 
2012/4/23 V Ramesh <rames...@gmail.com>

காமேஷ்

unread,
Apr 24, 2012, 3:35:04 AM4/24/12
to panb...@googlegroups.com
ஒரு காலத்தில எங்க வீட்ல வெறும் பட்டுக்கோட்டையார் பாடல்கள் தான்
எங்க அண்ணாத்த கேப்பாரு...கேட்டு கேட்டு கேசட்டும்.. எங்க காது சவ்வும் கிழிஞ்சி போச்சி...





2012/4/22 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

eswar sivakrishnan

unread,
Apr 24, 2012, 4:12:58 AM4/24/12
to panb...@googlegroups.com
பொருளோடு பண் இசைந்த பாடல்களை காலத்தின்  பழமைகருதி கேட்க மறுக்கிறோம், ஒயினும், தமிழ்ப்படப்பாடல்களும் ஒன்று பழையவைகளே சுவையும் மதிப்பும் மிக்கவை!!!!!!!!!!!
------------
இரைசலான இக்கால இ(ஓ)சையை கேட்கத்தான் என்னால் முடிவதில்லை.................

2012/4/24 காமேஷ் <kame...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

V Ramesh

unread,
Apr 24, 2012, 6:18:10 AM4/24/12
to panb...@googlegroups.com
சரி உங்க தாத்தாவும் இதை தானே உங்க காலத்திலே சொல்லி இருப்பாரு...

 
நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/4/24 eswar sivakrishnan <easw...@gmail.com>

eswar sivakrishnan

unread,
Apr 24, 2012, 7:14:54 AM4/24/12
to panb...@googlegroups.com
தாத்தா இருந்திருந்தால் சொல்லி இருக்கலாமோ என்னவோ, ஆனால் பழமைகருதி மட்டும் கருத்தும், பொருட்சொறிவும்  சொல்லழகும் நிறைந்த பாடல்களை புறம்தள்ளி அதை கேட்காமல் இன்றைய காட்டாற்று வெள்ளமாக ஓடிமறைவதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் இளைஞர்களின் மனோபாவத்தை ஏற்க முடியவில்லை..........
ஒரு பாடல் மனதிற்கு அமைதி தருகிறது மற்றொன்று மனதிற்கு போதை ஊட்டுகிறது ஒன்று சிந்திக்கவைக்கிறது மற்றொன்று சிறங்கவைத்து தடுமாறவைக்கிறது, காலமாற்றம் தான் காரணம் இன்றைய வேகமான உலகிற்கு இது தேவை இது தான் இயல்பு என்று கூறினாலும், வாழையிலையில் பரிமாறப்பட்ட அறுசுவை உண்டிக்கும், பஸ்புட்டிற்கும் வேறுபாடுகள் உள்ளனவே......... 
------------------
தாத்தாவின் தாத்தா காலத்திய பாடல்களையும் விரும்பிக் கேட்கிறேன் பொருளும் மனதைக்கவரும் இசையும் ஆண்மை மிளிரும் குரலும் ஈர்த்ததால்......
பொருள் தெரியாததால் தான் சங்கப்பாடல்களை படிக்கமுடியாதவர்களால் புறம்தள்ளப்படுகின்றன கசக்கவும் செய்கின்றன, திரைஇசைக்கும் அது பொருந்தும், நயம் மிக்க பாடல்களை விடுத்து மரபு மீறிய நேரிடையான பொருளை மட்டும் காட்டும் அல்லது ஏதோ படிமம் உள்ளதாக கூறும் புதுக்கவிதைகளை மட்டும் ரசிப்பதைப்போன்றதே இது......
இவ்விடயத்தில் என்ககுப் பொருமை இல்லை எனப் பெருமையாக கூறிக்கொள்வோரும் உளர்.....
2012/4/24 V Ramesh <rames...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
Reply all
Reply to author
Forward
0 new messages