On Sep 13, 8:12 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/9/13 Kamalam Devi <kamalam.onl...@yahoo.com>:
>
> > வெள்ளந்தி என்றால் என்ன? பூச்சி, பறவைகளின் பெயரா?
> > உடனே யாராவது சொல்லுங்களேன்.தெரிந்து கொள்ளாவிட்டால்,
> > மிகவும் கவலையாக இருக்கிறது.
> > கமலம்
>
> வெள்ளந்தி என்றால் வெகுளியாக என்று பொருள்.
> நீங்க ரொம்ப innocent என்கிறார். ஏதோ வெள்ளெலி என்று நினைத்துவிடாதீர்கள் ;-)
>
> க.>
rih text, plain textக்குத் தமிழ் என்ன என்று யோசித்தேன்.
கூகுள் குழுவுக்கு ப்லெய்ன் டெக்ஸ்டாக அனுப்புங்க என்று சொல்கிறோமே.
தில்லை மீனாட்சிசுந்தர சாஸ்திரிக்கு அவ்வாறு நீங்கள் எழுதிய ஞாபகம்.
-----
ரிச் டெக்ஸ்ட் = செழியுரை (அலங்காரம் மிக்க செழிப்பான உரை).
ப்லெயின் டெக்ஸ்ட் = வெள்ளுரை ( வெள்ளைப்பா என்றால் எளிய பா,
வெளிப்படையான உரை, வெளியுரை = வெள்ளுரை அல்லது வெள்ளை உரை).
வெள்ளை என்றால் நிறத்தை மாத்திரம் குறிப்பதல்ல. வெள்ளை உள்ளம் =
வெள்ளந்தி.
அதுபோலே,
செழியுரை (= செழிய உரை, rich text)
வெள்ளுரை (= வெள்ளை உரை, plain text)
நா. கணேசன்
--------------------------------------------------------------------------------
49. வெள்ளைச்சொல் veḷḷai-c-col : (page 3801)
வெள்ளைச்சொல் veḷḷai-c-col
, n. < id. + சொல்³. 1. Common, plain word; எளிய சொல். (W.) 2. Vulgar
word; நாகரிகமற்ற சொல். Colloq.
--------------------------------------------------------------------------------
50. வெள்ளைத்தமிழ் veḷḷai-t-tamiḻ : (page 3801)
வெள்ளைத்தமிழ் veḷḷai-t-tamiḻ
, n. < id. +. Simple, plain Tamil; எளிய நடையிலமைந்த தமிழ். (W.)
வெள்ளைத்தனம் veḷḷai-t-taṉam
, n.
--------------------------------------------------------------------------------
51. வெள்ளைப்பேச்சு veḷḷai-p-pēccu : (page 3802)
வெள்ளைப்பேச்சு veḷḷai-p-pēccu
, n. < id. +. 1. Plain speech; வெளிப்படையான வார்த்தை. 2. Guileless
speech; கபடமில்லாத பேச்சு.