On May 22, 12:02 pm, Ganesh kumar <marava...@gmail.com> wrote:
> மரத்தடி மற்றும் ராயர் காப்பி கிளப் குழுவில் வே.சபாநாயகம் அவர்கள்
> சிறுகதைகளிலும் , நாவல்களிலும் தான் சிலாகித்த வரிகளை , *நான் ரசித்த உவமைகள்
> வருணனைகள்* என்ற தலைப்பில் ஒரு தொடராகஎழுதி வந்தார். அதிலிருந்து நான் ரசித்தவை
> .......
>
> 0
>
> வாய்க்குள் என்ன இருக்கிறது என்று எட்டிப் பார்ப்பது போன்ற மூக்கு. *- `
> காதலெனும் தீவினிலே`. - எஸ்.ஏ.பி.அண்ணாமலை*
> **
> 0
>
> இவன் 21 வயது இளைஞன். கறுத்து மெலிந்து பந்தல் போடாத பயத்தங் கொடிபோல உயரமாக
> இருப்பான். அசைந்து அசைந்து நடந்து வரும்போது காற்றிலே நடுவில் முறிந்து
> விடுவானோ என்ற அச்சம் ஏற்படும்.
> - *'பெரிய முள் இரண்டில் வந்தவுடன்' - அ.முத்துலிங்கம் *
> **
> 0
>
> ஆறில் நின்ற கடிகாரமுள் சட்டென்று ஒன்பதுக்கு நகர்ந்தது போல கிழவர் விறைப்பாக
> பக்கவாட்டில் திரும்பினார்.
> *- 'அங்க இப்ப என்ன நேரம்?' - அ.முத்துலிங்கம் *
>
> 0
>
> சுப்பிரமணியம் மாஸ்டர்தான் எங்களுக்கு பூமி சாஸ்திரம் எடுத்தவர். எவ்வளவு தான்
> உண்மையை நீட்டினாலும் இவருடைய உயரம் 5 அடி 3 அங்குலத் தைத் தாண்டாது. 20
> வயதானதும் இவர் உயரமாக வளர்வதை நிறுத்தி
> விட்டார்; ஆனால் அகலமாக வளர்வதை நிறுத்தவில்லை. வயது கூடக்கூட அகலமும் கூடியது.
> நான்
> பள்ளிக்கூடத்தை விடும் வரைக்கும் அவர் வகுப்பு வாசல்களுக்குள்ளால் வரும்படியான
> சைஸில்தான் இருந்தார்.
> *- 'நான் பாடகன் ஆனது'. - அ.முத்துலிங்கம் *
>
> 0
>
> பாலக்காட்டிலிருந்து கோடை விடுமுறைக்கு வந்திருந்த ஒன்றுவிட்ட பெரியப்பாவின்
> ஒரே சீமந்தப்புத்திரன், பர்மிடோஸ் மட்டும் அணிந்து கொண்டு, பிதுங்கி வழியும்
> இடுப்புச் சதைகளில் கைகளை வைத்தபடி, எருமை மாட்டைப்போல பால்கனியில்
> நின்றிருந்தான். கயிற்று நாடாவை உள்ளே போட வேண்டுமென்பதில் கூடக் கவனம்
> செல்லாததைப் போலக் காட்டிக் கொள்ளும் கம்ப்யூட்டர் மண்டை. பர்மிடாஸின் நாடா
> வேறு பாசக்கயிறு போல ஆடிப் பயமுறுத்திக் கொண்டிருந்தது.*- 'உயித்தெழுதல்' -
> விமலாதித்த மாமல்லன்*
>
> 0
>
> அப்பாவின் குரல் ரொம்ப மென்மையானது. அப்பாவைச் சந்தித்து விட்டுப் போன அவருடைய
> ரசிகர்களில் பலர், ஊருக்குப் போனதும் அப்பாவின் குரலைப் பாராட்டி எழுதாமல்
> இருந்ததில்லை. அவருடைய உள்ளங் கைகளைப் போலவே அவருடைய குரலில் சொல்ல முடியாத
> மிருது இருந்தது. அந்தக் குரலைக் கேட்டால், பூவால் காதைத் தொட்ட மாதிரி
> இருக்கும். -* 'அண்டை வீட்டார்'. - வண்ணநிலவன்*
>
> 0
>
> நசுநசுவென்று அழுகுணித் தூறல் சிணுங்கிக் கொண்டிருந்தது. ரஸ்தாப் பரப்பு
> எங்கும் தண்ணீர் தெளித்துவிட்டது போலிருந்தது. அது வேர்வையில் குளித்தது
> போலுமிருந்தது. சிறிது தொலைவுக்கு ஒன்றாக நின்ற எலெக்டிரிக் கம்பங்களில்
> ஒளிப்பூ பூத்துத் தொங்கியது. நசுநசுத் தூற்றல் அற்புதப் பூச்சிகள் போல் மினு
> மினுத்தது. விளக்குகளின் கண்ணீர்த் திவலைகள் போலுமிருந்தது. - *'கொலைகாரன்'. -
> வல்லிக்கண்ணன்*
>
> 0
>
> தன் எண்ணற்ற குச்சிக்கைகளிலும் ஆயிரமாயிரம் இலைகளை ஏந்தி வானவீதியைப் பெருக்க
> முயல்வது போல்
> சதா சலசலத்து நிற்கும் ஆலமரம்...... - *'அலை மோது கடல் ஓரத்தில்' நாவல் -
> வல்லிக்கண்ணன்*
> **
> 0
>
> காதலித்த பிறகு அயர்ச்சி வருகிறதோ இல்லையோ திருமணம் என்பதற்குப் பிறகு ஒரு
> அயர்ச்சி வரத்தான் செய்கிறது. அது அயர்ச்சி இல்லை. இனி என்ன என்ற கேள்வி.
> கூத்து முடிந்து இல்லத்துக்குத் திரும்பும் போது கூத்து பாதியும், வீடு
> பாதியுமாய் நினைவிலிருக்குமே அதைப் போன்ற ஒரு அதிசயம். - *'கிருஷ்ண அர்ஜுனன்'
> நாவல். - பாலகுமாரன்*
>
> 0
>
> நாணுவய்யரின் கையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.அவரது வலது கைவிரல்களை அவருடைய
> கையிலே காண வேண்டுமென்பதில்லை. பையன்களுடைய கன்னங்களில் ஐந்து விரல்களையும்,
> ரேகைகள் உட்பட, விளக்கமாகக் காணலாம்.
> இவ்வளவு திறமையுடன் கையை உபயோகிக்கும் நாணுவய்யருக்குப் பட்டாளத்துச்
> சிப்பாயின் சம்பளத்துக்குக் கொஞ்சம் குறைவு. இருபது ரூபாய்க்குள்
> அடக்கம். - *'வாத்தியார்
> நாணுவய்யர்' - வ.ரா*
>
> 0
>
> சுகுமாரி என்றது எங்க வீட்டுக்காரி. சுகுமாரி என்ற பெயரைச் சுருக்கி 'சுக்கு'
> என்று நான் அவளைக் கூப்பிடுகிறது. பேருக் கேத்தாப்போல் அவள் கொஞ்சம் காரமாகவே
> இருப்பாள். அவள் வீட்டிற்கு வந்தது முதல் அவள் சொல்லுகிற
> பேச்சை நான் கேட்கிறது என்கிறதே தவிர நான் சொல்லுவதை அவள் கேட்கிறது என்பது
> என்னவோ கிடையாது.
> -* 'மூக்குத்திருகு' - எஸ்.வி.வி*
>
> 0
>
> எட்டு நாய்கள், ஒன்பது ஓநாய்கள், இருபத்தைந்து குள்ள நரிகள், மூன்று சிங்கங்-
> கள், நான்கு புலிகள், ஐம்பது குரங்குகள் எல்லாம் சேர்ந்து ஒரே சமயத்தில்
> 'பீபில்ஸ் பார்க்கில்' ஊளையிட ஆரம்பித்தால் எப்படி இருக்குமோ அப்படியிருந்தது
> நம் வீடு. காரணம் காலையில் மணி ஏழாகியும் பால்காரன் இன்னும் வரவில்லை. -
> *'பால்காரன்'.
> - எஸ்.வி.வி*
> **
> 0
>
> யோசிக்கிறது நாய் வளக்குற மாதிரி. நாயோட சங்கிலி நம்ம கையிலே இருக்கணும். நம்ம
> பிடியிலே இருக்கணும்.அது நம்ம கால்ல மாட்டிக்கிட்டு அது பின்னாலே நாம
> ஓடக்கூடாது -* 'சங்கிலி - ஜெயந்தன்*
> **
> 0
>
> எந்த மிருகமும் தான் தின்பதற்கு மேல் தன் இரையை எந்தக் கேவலமும் செய்வதில்லை.
> மனிதன் மிருகத்திடமிருந்து பரிணாமம் பெற்றவன் என்பதை விடக் கேவலமான பொய் இருக்க
> முடியாது என்று மனம் குமைகிறது.
> *- 'மாரம்மா'. - ஜெயந்தன்*
> **
> 0
>
> அருணகிரிக்குச் சற்று பெரிய சரீரம். கனத்த சரீரம். அவர் பக்கத்தில் உட்காரும்
> போது அவன் சற்றுத் தள்ளித்தான் உட்காரவேண்டும். அருணகிரியின் சரீர ஆக்கிரமிப்பு
> ஒரு காரணம். இன்னொன்று அவர் உரக்கப் பேசினால் சப்தம் அவரிடமிருந்தா அல்லது கார்
> இஞ்சினிலிருந்தா என்று சொல்வது கஷ்டம். கார் இஞ்சினில் ஏதாவது தகராறு இருந்து
> சப்தம் வந்து, அந்த சப்தம் அவரிடமிருந்து வந்ததாக நினைத்துக் கொண்டுவிட்டால்
> விபத்து ஏற்படுவதற்கான சாத்யக்கூறு உண்டு. அவர் உரக்கப் பேசும்போது குரலை
> அப்படி ஏன் கனைக்கிறாரென்பது தான் அவனுக்குப் புரியவில்லை.
> *- 'இறுதிக் கடிதம்'. - இந்திரா பார்த்தசாரதி*
>
> 0
>
> கொம்புச் சீப்பை எடுத்துப் 'பறட் பறட்' டென்று தலை வாரினான். கோவிலுக்குப்
> போவதால் திருநீறு பூசினால் நல்லதோ என்று அவனுக்குத் தோன்றியது. சந்தேகத் தின்
> பலனைச் சாமிக்கு அளித்து மூலையில் தொங்கிய தேங்காய்ச் சிரட்டைக்
> கப்பரையிலிருந்து திருநீற்றை அள்ளிப் பூசினான். - *'ஆசையெனும் நாய்கள்'.-
> நாஞ்சில்நாடன்*
> **
> 0
>
> தெரு முற்றங்களில் தெளிபடுகிற சாணித் தண்ணீரின் சளசளப்பு, உழப் போகிற
> மாட்டுக்குத் தண்ணீர் வைக்கின்றதால் எழும்பும் உலோக வாளிகளின் கிணுக்காரம்,
> 'கடக் கடக்' என்று வட்டக் கொம்புகளைப் பிணைத்துக் கொண்டு செல்லச் சண்டை போடும்
> எருமைக் கடாக்கள், கழுநீர்ப் தொட்டிக்குள் முகத்தை முக்கி மூச்சு விட்டுக் 'கட
> கட'வெனச் சத்த மெழுப்பும் எருமைக் கன்று, சம்பாத் தவிட்டின் ரேகைகள் கண்
> மட்டத்துக்கு வட்டம் போட நாடி மயிர்களிலிருந்து தண்ணீர்
> சொட்ட மேலுதட்டை உயர்த்தி இழுத்து 'ங்றீங்ங்....'என்று குரலெழுப்பும் தாய்
> எருமையின் பின் புறத்தை முகர்ந்து பார்த்து நக்குகின்ற இரண்டு பல் கிடாக்
> கன்று, "சவத்துப் பய சாதிக்கு ஒரு வகுதரவு கெடையாது!" என்று கிடாக்கன்றின்
> புட்டியில் அழிசன் கம்பால் சாத்துகிற செல்லையா- இதையெல்லாம் மௌனமாய்க்
> கவனித்துக் கொண்டு கட்டிலில் கிடந்து புரண்டான் சிதம்பரம். -* 'தேடல்'. .-
> நாஞ்சில்நாடன்*
> **
> 0
>
> அந்தக் காலத்தில் குலசேகரம் தாண்டினால் உச்சிப் பொழுதில் கூட நின்ற யானை
> மறையும் இருட்டு. அதற்கப்பால் மூளியலங்காரி கண்ணீர் போல முப்பது நாளும் மழை.
> புலி போட்ட மீதத்தை நரி தின்கிற காடு. தரை தெரியாமல் செடிப் படப்பு. வானம்
> தெரியாமல் இலைப் படப்பு. வழியாக மூத்தபட்டன் பூணூல் போல ஒரு ஒத்தையடிப் பாதை.
> அது பேச்சிமடி தாண்டி, பெருஞ்சாணி மலை தாண்டி, நெடு மங்காடு சுரம் தாண்டி அனந்த
> பத்மநாபன் பாதங்களில் முடிகிறது. காட்டுமிருகத் தின் நகமும், காணிக்காரன்
> காலுமல்லாமல், நாட்டுவாசியின் வாசம்கூடப் படாத பேச்சியின் ராச்சியம் அது.
> *- 'படுகை' - ஜெயமோகன்*
> **
> 0
> **
> பள்ளிக்கூடத்து வாத்தியார் எத்தும் குத்துமாய் முளைத்த பல் வரிசையில் வேப்பங்
> குச்சால் 'உழவு' போட்டுக் கொண்டு கிணற்றுக்குக் குளிக்கப் போய்க்
> கொண்டிருந்தார். *'பெட்டை'. - பூமணி*
>
> 0
>
> மண்சுவரின் கீறலில் தயாராகச் செருகி வைத்திருந்த கோழித்தூவியை எடுத்து நுனியில்
> மட்டும் கொஞ்சம் இருக்கும்படியாகப் பிடுங்கி அதை வாய்க்குள் வைத்து ஒரு சூம்பு
> சூம்பி காதுக்குள் விட்டு அலகைச் சாய்த்தபடி வாயைக் கொஞ்சம் வலித்துக் கொண்டு
> 'குடுகுடு' என்று குடைவதில் எங்கேயும் இல்லாத சொகம் கிழவனுக்கு. அடுத்த
> காதுக்கு மாற்றிக் கொள்கிறான். - *'மாற்றம்".- பூமணி*
> **
> 0
>
> அவனுக்கு சிரிப்பாணி வந்தது. பழைய துணிக் கிழிசல் மாதிரி வாயை அகலித்துச்
> சிரித்ததும் மேல் தாடையில் கோரைப் பல்லுக்குத் துணையாக ஒன்று சேர்த்து இரண்டு
> போயிருந்தததால் அந்த இடத்தில் துப்புரவாகக் கொருவாய் விழுந்திருப்பது
> தெரிந்தது. - *'கசிவு'..- பூமணி*
> **
> 0
>
> குட்டியைத் தேடும் செம்மறியாட்டுச் சத்தம் மாதிரி அவர் குரலிலே ஒரு காரல்
> தன்மை. மேலுதட்டுக்குக் கட்டுப்படாத முன் பற்கள் இரண்டு அவர் சிரிக்கும்
> போதெல்லாம் யானைத் தந்தம் போல எட்டிப் பார்ப்பதற்கு வாய்ப்பைப் பயன்
> படுத்திக் கொண்டன. - *'அடமானம்'. - பூமணி*
> **
> 0
>
> அன்றைக்கு ஊருணிக் கரையில் நடந்து அவன் வேதக் கோயிலைக் கடக்கும் போது உள்ளூர்
> வாத்தியார் ஒரு பெரிய காறலோடு வெளியே தலையைக் காட்டி வாயிலுள்ள எச்சிலை எல்லாம்
> அன்றைக்கே கணக்குத் தீர்த்தது போல ஒரு
> குமியாகத் துப்பி விட்டு, "என்ன ராமசாமி, யூனியனுக்குப் போய்ட்டு வாராப்புலயா?"
> என்று ஒரு இழுப்பு இழுத்தார்.
> *- 'வயிறுகள்' - பூமணி*
> **
> 0
>
> அவர் கைக்குள் முடங்கிக் கிடந்த துணிப் பையை நீட்டிய போது புறங்கையில், வெயில்
> பட்ட நாங்கூழ்ப் புழுக்களாய் நரம்புச் சுருள் அலாக்காகத் தெரிந்தது.
> -*'விளைச்சல்'.-
> பூமணி*
> **
> 0
>
> புளித்துப் போன பழங்காடியின் வாசனை பட்டதுமே முகத்தைச் சுளித்து, வெளி மூச்சு
> விடும் காளை மாட்டைப் போல, அவன் முகத்தைச் சுளித்துக் கொண்டான். *-`விரக்தி`. -
> தொ.மு.சி.ரகுநாதன்*
> **
> 0
>
> நிர்மலா கன்னிதான். புதுப் பாத்திரமானாலும் உபயோகிக்காவிட்டால் களிம்பேறி
> விடுகிறதல்லவா? அது மாதிரி அவள் சரீரம் மினுமினுப்பு இழந்து, மாலைச் சந்தைக்கு
> வரும் காய்கறி போல வாட்டம் கண்டிருந்தது.
> *- `திரிசங்கு சொர்க்கம்`.- தொ.மு.சி.ரகுநாதன்*
> **
> 0
>
> காலத்தைக் கையைப் பிடித்து நிறுத்திக் கனிந்த காதலுடன் தழுவினாலும் , அது
> நகர்ந்து சென்று கொண்டேதான் இருக்கும். - *'பிரபஞ்ச கானம்'. - மௌனி'*
> **
> 0
>
> புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும். அதுவும் இப்பொழுது மழையில்
> நனைந்து ஈரத்தில் நின்று நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களும் பாதங்களும்
> சிலிர்த்து நீலம் பாரித்துப் போய் , பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு
> ஒட்டிக்கொண்டு சின்ன உருவமாய்க் குளிரில் குறுகி ஓர் அம்மன் சிலை மாதிரி அவள்
> நிற்கையில் அப்படியே
> கையில் தூக்கிக் கொண்டு போய்விடலாம் போலக்கூடத் தோன்றும்.
> -*'அக்கினிப்பிரவேசம்' கதையில். - ஜெயகாந்தன்
> *
>
> 0
>
> கனகலிங்கத்தின் உள்ளம் வெள்ளைதான்; ஆனால் உடலின் நிறம் கறுப்பு. அளவுக்கு மீறிய
> உயரம்; ஆனால் ஆஜானுபாகு அல்ல. அவனை அழகன் என்ற் சொல்ல முடியாது; ஆனால்
> அவலட்சணம் என்றும் சொல்வதற்கில்லை. காற்றுபுகாத துருத்தியைப் போல அவன் உடம்பு
> எப்பொழுது பார்த்தாலும் எலும்பும் தோலுமாக இருக்கும். பார்த்தவுடனே அவன்
> `சாதாரண ஆள்` என்று சொல்லிவிடலாம். அடியில் ஒரு நாலு முழ வேட்டி மேலே ஒரு
> ஜிப்பா-இரண்டும்
> வெகு நாட்களாக சலவைத் தொழிலாளியின் முகத்தைக் காணாதவை போலிருக்கும். வயதிற்கு
> ஏற்றாற்போல் அவனுக்கு அமைந்திருந்தது ஒன்றே ஒன்றுதான் - அதுதான் சம்பளம்.
> அவனுக்கு வயதும் முப்பது; சம்பளமும் ரூபாய் முப்பது!- ஆனால் வயதை கணக்கிட்டு
> அவனுடைய முதலாளி அவனுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்பதை இங்கே நான்
> சொல்லிவிட வேண்டும். - ' *பாலும் பாவையும் ' நாவல். -விந்தன்*
>
> 0
>
> அப்போது தான் அவள் கூடத்திலிருந்த கண்ணாடியின் முன்னால் நின்று முகத்தில்
> பௌடரைப் பூசிக் கொண்டிருந்தாள்.அந்தச் சமயத்தில் அவளைப் பார்க்கும்போது
> சமையலறைக்குத் திருடச் சென்ற கறுப்புப் பூனை, சாம்பலைப் பட்டதும் படாததுமாகப்
> பூசிக் கொண்டு எதிரே வருவது போலிருந்தது.
> - *'சித்தப்பா' கதை - விந்தன்*
>
> 0
>
> கவிஞர் பெருமான் 'நமக்குத் தொழில் கவிதை' என்று தமக்குத் தாமே வரித்துக் கொண்டு
> விட்டதால், காசுக்கும் அவருக்கும் காணாத தூரமாக இருந்து வந்தது. எனவே. இட்டிலி-
> மசால் வடைக் கடையை நம்பி அன்னாரின் இல்லாள் இல்லறத்தை இனிதே நடத்தி வரலாயினள்.
> -* 'கவிஞர் ஒன்பாற் சுவையார்'. - விந்தன்*
>
> 0
>
> அந்த நகர தேவதையின் வாய்தான் என்னை ஆகர்ஷித்தது. போரிட்டுப் பெருச்சாளியை
> வென்று ரத்ததில் தோய்ந்த நாயின் வாய் போல் இருந்தது அந்த வாய். கொஞ்சம்
> அதிகமாகவே உதட்டுச் சாயம் பூசி விட்டதால்!. தலை மயிரைத் தாறுமாறாக முள்
> வேலியைப் போன்று கோணலும் மாணலுமாய் வெட்டிக் கொண்டிருந்தது. அது அணிந்த கவுன்,
> அதன்
> உடலமைப்பின் லட்சணக்குறைவை வெளியிட்டது. பல யந்திரங்களின் உறுப்புகளை நன்றாய்க்
> கோத்துச் செய்யப்பட்ட உருவம் போல் இருந்தது அது- மொத்தத்தில் அழகு என்பதற்காக
> அந்த தேவதையை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாது. - `*போதையும் போதமும்`. -
> எம்.வி.வெங்கட்ராம்*
> **
> 0
>
> பாலக்காட்டுப் பெண்ணின் அழகு உண்மையிலேயே பிரமாதந்தான். சிவப்பு மேனியில் ஒரு
> ரோஜா நிறச்சேலை. அடர்ந்த புருவங்கள்- மிகப் பெரிய முட்டைக் கண்கள் மைவட்டத்தில்
> ஜொலித்தன. சுவரில் அடிபட்டுத் திரும்பும் பந்துபோல் அவள் மார்பகங்கள்
> திமிறிக்குதித்தன. உதட்டில் பளபள வென்று செம்மை வளைவினிடையே மோகனப் பல்வரிசை
> சிரிப்பினிடையே பிரகாசித்தது. - *`எக்ஸெண்ட்ரிக்`. - கிருஷ்ணன் நம்பி*
>
> 0
>
> வெற்றிலையைக் குதப்பியபடி வீட்டு முன்வாசல் திண்ணையில் ஈசிச்சேரில்
> சம்மணங்கட்டி உட்கார்ந்திருந்த பண்ணையார்மாமா தம் மடியின் மேல் வீற்றிருந்த
> வெற்றிலைச் செல்லத்தைத் திறந்து ஒரு குத்துப் புகையிலையை எடுத்து அண்ணாந்து
> வாயில் செருகிவிட்டு, ஒரு கனைப்பு கனைத்தார். `ஞங் ஞங்` என்று அசை போட்டார்.
> வாய்
> அப்படியும் இப்படியும் அசிங்கமாய்க் கேலிச் சித்திரம் போல் கோணிற்று. இரண்டு
> மூன்று தரம் நாக்கை வெளித் துருத்தி மேல் நோக்கி வளைத்து சிவப்பு பார்த்தார்.
> உதட்டைக் குவித்து, வளைத்து வளைத்து நாக்கைக் குடைந்து ·பிர் ·பிர்ரென்று
> முகத்துக்கு எதிரே தூவானம் தெறித்தார். *-`போட்டி`.கிருஷ்ணன் நம்பி*
>
> 0
>
> தெரியாமலா நாணப்ப நாயக்கர் அப்பிடிச் செய்யிறார்! அவர் ஒண்ணும் பைத்தார மனுசன்
> இல்லை. நல்ல வசதியானவர். உட்காரும்போது- அது எந்த இடமானாலும் சரி- விசேச வீடோ,
> ஊர்ப் பொதுகூட்டமோ, கம்மாய்க்கரையோ எங்கானாலும் சரி- உடம்பு தரையிலே படுமே தவிர
> உட்காரும் தரைக்கும் உடம்புக்கும் மத்திய்¢ல் வேட்டி இருக்காது. வேட்டியை மேலே
> சுருட்டிக்கிடுவார்.தரையில் வேட்டி பட்டால் புழுதியும் அழுக்கும் ஆயிரும்.
> வேட்டி நைஞ்சும் போகுமா,கஞ்சப்பத்தி, ஈயாப்பத்தி என்று யார் எவர் கேலி
> செய்தாலும் சரிதான். `போங்கடா பேய்ப்பய புள்ளைகளா` என்று சொல்லிவிடுவார். அவர்
> குனியும் போது வெட்கப்படாமல் - வேட்டியை மடித்துக் கட்டியிருந்தா- தூக்கி
> விட்டுக்கொள்வார்.*-`வேட்டி` -கி.ராஜநாராயணன்*
>
> 0
>
> மாடுகளுக்குத் தண்ணீர் காட்ட ஆரம்பித்தார். மனுஷர்களில் உள்ளது போலவே
> மாடுகளிலும் புத்திகெட்டதும் உண்டும்! என்ன நொறநாட்டியம் பண்ணுகிறதுகள் இந்த
> மாடுகள். கலக்கி விட்டோம், குடிச்சோம் என்று உண்டுமா? சனியன்; ஒரு மாடு உப்பைப்
> போட்டுக் கலக்கி விட்டால்தான் குடிக்கும். ஒரு மாட்டுக்கு ஊரலோடு காடித்தண்ணீர்
> விடவேண்டும். ஒரு
> மாட்டுக்குத் தவிடு. ஒரு மாட்டுக்குத் தனீ பருத்தி விதைப்பால். இன்னொரு
> மாட்டுக்குப் புண்ணாக்கும் ஊரல் கலந்த விதைத் தொக்கு கட்டியாக. மற்றதுக்கு
> அதோடு கம்மஞ்சோறு கலந்து பிசைந்து வைக்க வேண்டும். அதிலும் இந்தப் பால் மாடு
> இருக்கே `ரொம்பச் செல்லம்`; பால் கொடுக்கிறோம் என்கிற மேட்டிமை அதுக்கு ரொம்ப.
> - *`வேலை... வேலையே வாழ்க்கை`. - கி.ராஜநாராயணன்*
>
> 0
>
> வித்யா ஐந்தடி நாலு அங்குலம். 54.5 கேஜி. நட்ட நடுவே வகிடெடுத்து அதிகம்
> அடர்த்தியில்லாத ஆனால் சற்று நீளமான தலைமயிர். நிறைய நெற்றி. எப்போதும்
> சின்னதாகத்தான் பொட்டிடுவாள். பெரிதாகப் பொட்டிட்டால் ஏதோ தாசித்தனம் வந்து
> விடுவதாக நினைப்பு! கழுத்து சற்று நீளமானதுதான். பூசிவிட்டாற்போல் புஷ்டி.
> சின்ன மார்பகங்கள். பதிந்த இலைபோல வயிறு. ஓர் ஓட்டக்காரியின் கை கால்கள்.
> மூக்கு கொஞ்சம் எகிப்தியத்தனத்துடன் நேராக, மிக நேராக...அந்தக் கீழுதட்டில் ஓர்
> அழுத்தம் - பிறப்பதற்கு முன் யாரோ கடைசி நிமிஷத்தில் `பச்` என்று ஓர் அழுத்து
> அழுத்தி அனுப்பி வைத்தாற்போல........ - `*பெண் இயந்திரம்`.- சுஜாதா*
>
> 0
>
> கண்கள் எங்கோ பாதாளத்தில் கிடக்கின்றன. குச்சி குச்சியாக, நரைத்து ஒடிந்து
> சிலும்பிய கூந்தல் - சகிக்காத இரட்டைப் பின்னல் - பிழிந்த எலுமிச்சை மூடி போல
> ரத்தம் சப்பிய முகத்தில் மூக்குத் தொளையிலும், காதுத் தொளையிலும்
> ஈர்க்குத் துண்டுகள் நீட்டிக் கொண்டிருகின்றன. எலும்பு முட்டிய கழுத்தில் தொள
> தொளப்பான ஆஸ்பத்திரிச் சட்டைக்கு மேல் பிசுக்கேறிக் கறுத்த தாலிச் சரடு.
> - '*பவுடர்'
> குறுநாவல்.-ராஜம் கிருஷ்ணன்*
>
> 0
>
> அவளைப் பார்த்ததும் திகைத்தாள் லட்சுமி. பிரம்மதேவன் மனம் போனபடி கை மண்ணை
> உருட்டி அப்பி, ஒரு
> நவீனபாணி சிற்பம் உருவாக்கினாற் போல கரணை கரணையாக, கோர்வை இல்லாத அவலங்கள்.
> இரட்டை மண்டையில்
> நரையில்லை; ஆனால் மண்டை தெரியும் கூந்தல். நெற்றியில் பெரிதாக கருஞ்சிவப்பு
> ஒட்டுப் பொட்டு. இந்தக் கருப்பு முகத்துக்கு இவ்வளவுதான் அழகு செய்ய முடியும்
> என்றது வெள்ளைக்கல் தோடு; பேசரி. கழுத்தில் பருமனாக விழித்துப்
> பார்க்கும் தாலி........... இவளைக் கல்யாணம் செய்து கொண்டவன் யாரோ! - *'நேத்திர
> தரிசனம்' கதை - ராஜம் கிருஷ்ணன்*
>
> 0
>
> அந்தக் குவார்ட்டர்ஸ் வீட்டுக்கு முன் செல்லப்பா நிற்கையில் உள்ளே வரவிடாமல்
> தடுப்பதுபோல ஒரு நார்க்கட்டில் குறுக்குவாட்டில் நிறுத்தப் பட்டிருந்தது. அதன்
> கால்கள் நான்கும் முட்டவரும் கொம்புகள் போன்று ஒரு ஆயத்ததுடன் இருந்தன.
> -*'தற்காத்தல்'. - வண்ணதாசன்
> *
>
> 0
>
> லாந்தர் விளக்கின் ஒளியில் அவர் முகம் நன்றாகத் தெரிந்தது. நார் பிய்க்காத
> தேங்காயைப் போல் அவர் முகம் இருந்தது.
> *- 'திண்ணைப் பேர்வழி'. - ந.பிச்சமூர்த்தி*
>
> 0
>
> ஒதுக்குப் புறம்பான பாறை ஓரத்தில் பாம்பு படுத்துக் கொண்டு காற்றையும்
> வெயிலையும் குடித்துக் கொண்டிருந்தது. மிகவும் அழகான நல்ல பாம்பு. மின்னல்
> கோட்டினால் கோதுமையை வரைந்தது போல உடம்பெல்லாம் இருந்தது. செம்போத்தி
> கொண்டையைப் போல் விரியவும் சுருங்கவும் சக்தி கொண்ட அமைப்பு; விரிந்தால் படம்,
> சுருங்கினால்தலை!
> படத்தில், கறுப்பு மாலையை மாட்டியது போன்ற நாமம். இவ்வளவு அழகு தனக்கு ஏன்
> அமைந்தது என்று பாம்புக்கே தெரியவில்லை. - *'பாம்பின் கோபம்'. -
> ந.பிச்சமூர்த்தி*
>
> 0