சைக்கோ கில்லர்ஸ்

243 views
Skip to first unread message

வில்லன்

unread,
Aug 18, 2009, 12:31:51 AM8/18/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல்

இந்தத் தலைப்பில் ஒரு தொடரை எழுதுகிறேன்’ என்று ஆர்வத்தில் சற்று அவசரப்பட்டு ஜூ.வி. ஆசிரியரிடம் ஒப்புக்கொண்டு ஜூ.வி. ஆசிரியரிடம் ஒப்புக்கொண்டு விட்டேனோ என்று, எழுத உட்கார்ந்தவுடன் தோன்றுகிறது!

வரலாறு சம்பந்தப்பட்ட எதை எழுத ஆரம்பிக்கும்போதும் மனம் ரொம்பத் தெளிவாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் துவங்கி, இந்த இடத்தில் முடிக்கலாம் என்று மூளை நேர்க்கோட்டில் சிந்திக்கும். 

தொடர் என்பது நதி மாதிரி! அதன் கூடவே கரையிலும் படகிலும் பயணிக்க முடியும். நான் தற்போது பயணிக்கப் போவதோ கடலில்.
முடிவில்லாத பெருங்கடல்!

 ஜில்லென்று காற்று வீசும் மெரீனா கடற்கரையை உடனே கற்பனை செய்துகொள்ளாதீர்கள். நான்... நானென்ன? நாம் பயணிக்கப்போகும் கடல் சற்று சிவப்பானது! சுறாக்களே பயந்து நடுங்கும் கொடூரமான, விசித்திரமான மிருகங்கள் நீந்தும் கடல் அது! ரத்தச் சுவை மிகுந்த வன்முறைக் கடல்! கொடூரமான, விசித்திரமான மிருகங்கள் நீந்தும் கடல் அது!

வாசகர்களே, உங்கள் எல்லோருக்குமே ‘உயிர்கள் அனைத்தும் கடலிலிருந்துதான் தோன்றின’ என்கிற உண்மை தெரிந்திருக்கும்.

ஆனால், அது நம் கண்ணுக்குத் தெரியும் ஒரே ஒரு கடல் அல்ல... இரண்டு கடல்கள் என்பது தெரியுமா? ஒன்று | உடலை உருவாக்கிய
வெளிப்படையான கடல். மற்றது மனதைத் தயாரித்த மறைமுகக் கடல்!

மனிதனின் மூளைக்குள் கொடூரமான ‘வன்முறை ஸெல்’களைப் படரவிட்டு, அவனை ஆக்கிரமித்த இந்த இன்னொரு கடலைப்பற்றி எழுதப்
போவதாகத்தான் ஆசிரியரிடம் ஒப்புக்கொண்டேன்.

பிறகு, அதற்காக நூலகங்களுக்கும் புத்தகக் கடைகளுக்கும் கிளம்பிச் சென்றபோதுதான், திகிலேற்படுத்தும் ஓர் உண்மை புரிந்தது. மனித
வன்முறையைப் பற்றிய புத்தகங்கள் அங்கே ஆயிரக்கணக்கில், ராணுவ வீரர்களைப் போல வரிசையாக அலமாரிகளில் அணிவகுத்து
என்னைப் பயமுறுத்தின!

தனிமனித வன்முறை பற்றியும் வன்முறைக்கான மனோதத்துவ காரணங்கள் பற்றியும் யுத்தங்களைப் பற்றியும் இனவெறி, மதவெறி
பற்றியும் தொடர் கொலைகாரர்களைப் பற்றியும் சர்வாதிகாரிகளைப் பற்றியும் எத்தனையெத்தனை புத்தகங்கள்! எதைப் படிப்பது... எதை
எழுதுவது... எதை விடுவது..?! சற்றுத் தலை சுற்றியது!

மனித இனத்தோடு வன்முறையும் வளர்ந்து, அரக்கரூபம் எடுத்த வரலாற்றை முழுவதுமாகப் படித்து முடிக்க, ஒரு மனித ஆயுள் போதாது.

இது சத்தியம்!

‘சரி, மிக மிக முக்கியமான சில புத்தகங்களை மட்டுமே தேர்ந்தெடுத்துப் படிப்போம்’ என்று முடிவு கட்டினேன்.
ஏற்கெனவே, கடந்த ஆண்டுகளில் (இப்படி ஒரு தொடர் எழுதப் போகிறோம் என்றே தெரியாமல்!) நான் படித்திருந்த புத்தகங்களும்
இருக்கவே இருக்கின்றன!

எழுதத் துவங்கியபோது, நான் முதலில் நினைத்துப் பார்த்தது | வாசகர்களைப் பற்றித்தான்! என்முன்னே வந்து நின்ற அவர்கள்
சொன்னது இதுதான்|

‘‘எங்களுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்தாக வேண்டும். எதையும் விட்டுவிடாதீர்கள். எதை விவரமாகச் சொல்ல வேண்டும், எதைச்
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். எதை எழுதினாலும் ‘ரம்பம்’ போட மாட்டீர்கள், போரடிக்காமல்
எழுதுவீர்கள் என்கிற நம்பிக்கை மட்டும் எங்களுக்கு உண்டு.
 
‘மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்’ என்று ஒட்டுமொத்தமாக ஒரு தலைப்புக்
கொடுத்துவிட்டீர்கள்! அந்தத் தலைப்பை, உங்கள் தொடர் மூலம் அழுத்தந்திருத்தமாக நிரூபிக்க வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு.

இதோ, நாங்கள் தயார்!’’

நல்லது! நம்மைச் சுற்றிலும் நிகழ்ந்து வரும் வன்முறைகளைப் பற்றிப் பல கோணங்களில் நீங்கள் படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள்!
மனிதர்கள் மேற்கொள்ளும் பல அக்கிரமங்களையும் கொடூரங் களையும் பற்றிப் படித்த பிறகு, உங்கள் மனதில் தோன்றும் ஒரு கேள்வி |

‘ஏன் மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்?’ என்பதாகத்தான் இருக்கும்.

சிம்பிளான, அதேசமயம் சிக்கலான இந்தக் கேள்விக்கான பதில்களைத்தான், என்னால் முடிந்தவரை இந்தத் தொடரில் விவரிக்கப்
போகிறேன்.

கூடவே, உங்களை எச்சரிக்கவும் வேண்டி யிருக்கிறது!..

எந்தவொரு விஷயத்திலும் சற்று ஆழமாகப் போய்ப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுகளும் அனுபவங்களும் சற்று வேறு
மாதிரியானவை. ‘உண்மை கசக்கும்’ என்பது நிஜமான வார்த்தை! நான் எழுதப்போவதும் கசப்பான உண்மைகள்தான். அதற்காக உங்களைத் தொய்வடையச் செய்யும் ‘பெஸ்ஸிமிஸ்டிக்’ ஆன ஒரு தொடர் இது இல்லை. 
 
கலவரப்படுத்துவதற்காக எழுதப்படும் தொடரும் அல்ல..!

ஒரு மனித உடலுக்குள் வளர்ந்துவிட்ட கட்டி ஒன்றை ‘ஸ்கேன்’ பண்ணிப் பார்த்து ஆராய்ச்சி செய்தால்தான், அதை
அகற்றுவதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.

மனிதனுக்குள்ளே, அவனுடைய மூளையில் ஒரு பாதாள அறையில் அமர்ந்திருக்கும் கொடூரமான மிருகம், இடியாப்பத்தை விட ரொம்பச்
சிக்கலானது.

சிலரிடம் கடைசிவரை அந்த மிருகம் வெறுமனே அமர்ந்துவிட்டு மரிப்பதும் உண்டு. சிலரிடம் அது அவ்வப்போது வெளிப்பட்டு தன்
கோரப் பற்களைக் காட்டி லேசாக உறுமுகிறது. சிலரிடம் அது அரக்கத்தனமாக விஸ்வரூபமெடுத்து ஆக்கிரமிப்பு செய்கிறது. அப்போது
மனிதன் முழுசாக அதன் கைப்பாவை ஆகிவிடுகிறான்!

அந்தப் பாதாள அறைக்குள் நாம் புகுந்து பார்த்துவிடுவோமா?
 
 எதையுமே நேரில் பார்த்து, எடை போட்டுவிட்டால் உண்மை புரிந்துவிடும்.
நம்மைச் சிந்திக்கவைத்துத் தெளிவு தரக்கூடியது உண்மை மட்டுமே!
 
 
இந்தியாவில் தேர்தல் வரும்போதுதான் கருத்துக் கணிப்பு, புள்ளிவிவரங்களுக்கெல்லாம் திடீர் மதிப்பு வரும். அமெரிக்காவுக்குப்
‘புள்ளிவிவர நாடு’ என்றுகூடப் பெயர் வைக்கலாம்! ‘தெருவில் நடந்தவாறு பாப்கார்ன் சாப்பிடுகிறவர்கள் எத்தனை பேர்?’ என்கிற
புள்ளிவிவரம்கூட அங்கே கிடைக்கும்! ஆகவே, மனித சமுதாயத்தைப் பற்றிய பல தகவல்களுக்கு நாம் அமெரிக்காவுக்குப் போக
வேண்டியிருக்கிறது.

பலவிதங்களில் மிகவும் முன்னேறிய ஜனநாயக வல்லரசாகத் திகழும் அமெரிக்காவுக்குள், அதன் ஜிகினா திரைகளையெல்லாம்விலக்கிக்கொண்டு போய்ப் பார்த்தால், பயத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தும் அளவுக்குச் சில அவலமான உண்மைகள் மேடைமீது
ஏறுகின்றன!

சாம்பிளுக்குச் சில இதோ...
 
 
(தொடரும்ம்ம்)
 
 
(மீண்டும் மனிதனுக்குள்ளே மிருகம், விட்டுப்போன ஆரம்ப அத்தியாயங்கள்)
 
 
(இதயபலகீனமானவர்கள், ரத்த கொத்திப்பு உள்ளவர்கள் நாளை இந்த இழையை பில்டர் போட்டுக்கொள்வது நல்லது)

சென்ஷி

unread,
Aug 18, 2009, 1:16:42 AM8/18/09
to panb...@googlegroups.com
சூப்பர் :-)))

2009/8/17 வில்லன் <oms...@gmail.com>



--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

தமிழன் வேணு

unread,
Aug 18, 2009, 6:38:59 AM8/18/09
to thamizh...@googlegroups.com, panb...@googlegroups.com

இரத்தக்கொதிப்பு, இருதயம் பலகீனமானவர்கள் சரி? பன்றிக்காய்ச்சல் உள்ளவர்கள் படிக்கலாமா?

தமிழன் வேணு

வில்லன்

unread,
Aug 18, 2009, 6:44:49 AM8/18/09
to panb...@googlegroups.com, thamizh...@googlegroups.com
பன்றி காய்சல் வந்தவர்களுக்கு  இந்த தொடரை படித்தால் விரைவில் குணமாகும்னு,
 
வராதவர்கள் படித்தால் இனி வரேவே வராதுனு  ஒரு போர்டு போட்டு வசூல் நடத்தினா
 
நல்ல கலெக்சன் கிடைக்கும், விரைவில் செட்டில் ஆகிடலாம்,
 

 
On 8/18/09, தமிழன் வேணு <venugopal...@gmail.com> wrote:

இரத்தக்கொதிப்பு, இருதயம் பலகீனமானவர்கள் சரி? பன்றிக்காய்ச்சல் உள்ளவர்கள் படிக்கலாமா?

தமிழன் வேணு

 
--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஸ்ரீ"

“யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே”

துரை.ந.உ

unread,
Aug 18, 2009, 6:47:57 AM8/18/09
to thamizh...@googlegroups.com, பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், திருவிளையாடல்
  வாழ்த்துக்கள் நண்பா
 
தொடருங்கள்

 
On 8/18/09, வில்லன் <oms...@gmail.com> wrote:
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்    : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்    : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்     : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

Vishnu Rajan

unread,
Aug 18, 2009, 8:40:56 AM8/18/09
to thamizh...@googlegroups.com, பண்புடன், தமிழமுதம்
தொடருங்கள் நண்பரே ..
ஆவலோடு இருக்கிறேன் உங்களை தொடர ....
 
விஷ்ணு ...

2009/8/18 வில்லன் <oms...@gmail.com>
--
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ...

" என் நினைவுகள் இருட்டினில் நடக்கின்றன .... துணையாக உன் மௌனம் மட்டும் ... "

என் எழுத்தோவியங்கள் : www.vishnukavithai.blogspot.com
என் கவிதை ; www.vishnu-vichu.blogspot.com
என் காதல் : www.vichu-vishnu.blogspot.com
என் வருத்தம் ; www.enathu-ennangal.blogspot.com
என் கடிதம் : www.vichuvichu.blogspot.com



வில்லன்

unread,
Aug 19, 2009, 12:54:05 AM8/19/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்

கடந்த இருபதாண்டுகளில் நாலு கோடி தனிப்பட்ட அமெரிக்கர்கள் வன்முறைக்கு இரையாகி இருக்கிறார்கள். இருபத்திரண்டு விநாடிகளுக்கு ஒருமுறை ஒரு அமெரிக்கராவது கத்தியால் குத்தப்பட்டோ, துப்பாக்கியால் சுடப்பட்டோ செத்துப் போகிறார்.

உலக மக்கள்தொகையில் அமெரிக்காவின் பங்கு ஐந்து சதவிகிதம். ஆனால், உலகெங்கும் திரியும் தொடர் கொலைகாரர்களில்  எழுபத்தைந்து சதவிகிதக் கொலைவெறியர்கள் வசிப்பது அமெரிக்காவில்தான்.
 
ஒரு ஆய்வரிக்கை தரும் தகவல்படி,

தற்போது சுமார் ஐந்நூறு சாடிஸ சீரியல் கொலைகாரர்கள் இன்னும் போலீஸ் கையில் பிடிபடாமல் அங்கே வளைய
வந்துகொண்டிருக்கிறார்கள்! அமெரிக்க போலீஸ், தங்கள் புத்திசாலித்தனத்தையெல்லாம் பயன்படுத்தித் தேடித் தேடி, ஒருவழியாகப் பிடித்துச் சிறைக்குள் தள்ளியிருப்பது நூற்றுஅறுபது கொலைவெறியர்களை மட்டுமே!

ஆயிரம் வசதிகள் இருந்தும், வன்முறைக்கு நடுவில் அச்சத்தோடு அமெரிக்கர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பயம் ஒரு ‘அப்ஸெஷனாக’ அங்கே தளும்பிக் கொண்டிருக்கிறது! ஹாலிவுட் சினிமாவிலும் இது எதிரொலிக்கிறது.
 
அங்கே தயாரிக்கப்படும் படங்களில் எட்டுக்கு ஒரு படத்தில் மிருகத்தனமான கற்பழிப்புக் காட்சி உண்டு! ஒரு அமெரிக்கச் சிறுவனுக்குப் பதினெட்டு வயதாவதற்குள், அவன் நாற்பதாயிரம் கொலைகளை டெலிவிஷனில் பார்க்கிறான்.

ஏன் அங்கே இப்படி?! ஏன் அங்கே இப்படி?! ஏன் அங்கே இப்படி?! ஏன் அங்கே இப்படி?!

இப்படிப்பட்ட புள்ளிவிவரங்கள் அமெரிக்காவிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும்தான் தயாரிக்கப்படுகின்றன என்பதால், மற்ற நாடுகளில் மனிதர்கள் சற்று மேம்பட்டவர்களாக இருப்பதாகத் திருப்திப் பட்டுக்கொள்ளத் தேவையில்லை!

வன்முறையின் அகோர அலைகள் அத்தனை உலக நாடுகளையும் சூழ்ந்துகொண்டிருக்கிறது. வன்முறை மனித இனம் முழுவதற்கும் பொதுவானது.

எல்லா நாடுகளிலும் தனிப்பட்ட (புலியைப் போல வலம்வரும்) கொலைகாரர்கள் உண்டு. கூட்டமாக இருக்கும்போது வந்து சேரும் கொலைவெறி வேறு வகை! உலகெங்கும் கொலைகார ஆட்சியாளர்களும் வந்துபோகிறார்கள். முதலில், தனிப்பட்ட ஓரிரு பயங்கர மனிதர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்.
 
ஒரு தனி மனிதன் எந்த அளவுக்கு வன்முறையில் ஈடுபடுவான்?! உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
 
சரி, நானே சொல்கிறேன்!

 
சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் ரொம்ப காலமாக போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி வந்த ஜெஃப்ரி டாமர் என்கிற கொலைகாரன், கடைசியில் ஒரு வழியாக போலீஸ் கையில் சிக்கிக் கொண்டான்.

தன்னந்தனியாகச் செயல்பட்ட டாமர், ஒரு சாடிஸ செக்ஸுவல் கொலைகாரன். யாராவது ஒரு அப்பாவிப் பெண்ணை (அல்லது இளைஞனை) போகிற போக்கில் தேர்ந்தெடுத்துக் கடத்திக்கொண்டு போய்ப் பல மணி நேரம் விதவிதமாகச் சித்ரவதை செய்து முடிவாக கழுத்தை நெரித்து தீர்த்துக் கட்டிய பிறகு, அந்த உடலோடு செக்ஸ் வைத்துக்கொள்வது டாமருக்கு ரொம்பப் பிடிக்கும்!

தி டாமர் பிடிபட்ட பிறகு, புறநகரில் மரங்கள் சூழ்ந்த பகுதியில் இருந்த அவனுடைய கச்சிதமான வீட்டுக்குள் போலீஸார் நுழைந்து சோதனை போட்டார்கள். வீட்டுக்குக் கீழே இருந்த ஒரு பாதாள அறைக்குள் நுழைந்து பார்த்த துணிவு மிகுந்த காவலதிகாரிகள் அனைவரின் நெற்றிகளும் சரேலென்று வியர்க்க ஆரம்பித்தது.
 
சிலர் வெளியில் ஓடிவந்து வாயிலெடுத்தார்கள்.

அங்கே அறை முழுவதும், வெட்டப்பட்ட கை, கால், தலைகள் சிதறிக் கிடந்தன. ஆஸிட் நிரப்பப்பட்ட ஒரு பெரிய ‘மீன்தொட்டிக்குள்’ அழுகிப்போன (தலை, கை|கால்கள் இல்லாத) உடல்கள் மெள்ள மிதந்து கொண்டிருந்தன.
 
ஃப்ரிஜ் ஒன்றுக்குள் வரிசையாகத் தலைகள் அடுக்கப்பட்டிருந்தன! இன்னொன்றில், ஐஸ் படர்ந்து வெளுத்துப் போன நாலைந்து இதயங்கள், கூடவே கச்சிதமாக வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆண் உறுப்புகள் (தன் செக்ஸ் பசிக்காக இளைஞர்களையும் டாமர் விட்டு வைக்கவில்லை!).

மனித உடல் பகுதிகளைக் காய்கறிகளைப் போல சாப்பாட்டிலும் பயன்படுத்தினான் டாமர்!

போலீஸ் விசாரணையில், அவன் சாவதானமாகச் சொன்னான் ‘வீட்டில் இடமில்லை. எலும்புகள் ரொம்பச் சேர்ந்துவிட்டது. ஆகவே,  அவற்றைச் சுத்தியலால் பொடியாக்கி, கிளிஞ்சல்களைப் போல மூட்டைகளில் கட்டி வைத்திருக்கிறேன்.
 
தலைகளை தனியே வெட்டி எடுத்துக் கொதிக்கும் நீரில் போட்டு, தோல்களை உரித்துத் துடைத்து, மண்டை ஓடுகளின்மீது சம்பந்தப்பட்டவரின் பெயர், வயது, கொலை செய்த தேதி போன்ற தகவல்களை எழுதி வைத்துவிடுவேன்!’

கோர்ட்டுக்கு டாமர் விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டபோது, கூடியிருந்த பெரும் கும்பலிலிருந்து ஒரு நிருபர் எட்டிப் பார்த்துக் குரூரமாக ஒரு கேள்வி கேட்டார்| ‘டாமர், மனித உடலில் சுவையான பகுதி எது?’

புஜம் என்று பதில் வந்தது!

வாசகர்களே! டாமர் பற்றி விரிவான தனிப் புத்தகமே உண்டு. டாமர் வசித்த வீட்டில், அந்த அறைக்குள் போலீஸ் கண்ட காட்சியை மட்டுமே, அதையும் சுருக்கமாகத்தான் இங்கே விவரித்திருக்கிறேன்.

சற்று நுணுக்கமான விவரிப்புக்குக் காரணம், நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்பியதுதான்!

டாமர் கொடூரமானவனா(BAD) அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவனா (MAD)?

‘இரண்டும்தான்!’ என்று கோபத்துடன் நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கிறது!

ஸாரி, ஒன்றைத்தான் நீங்கள் சொல்ல வேண்டும்.
 
ஏனெனில், அதை முடிவு கட்டினால்தான், நீதிபதி அவனுக்குத் தண்டனை வழங்க முடியும்!

ஒரு குற்றவாளி, தான் செய்த காரியத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். தான் குற்றம் செய்வதே தெரியாத அளவுக்கு அவனுடைய மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், மரண தண்டனை வழங்க முடியாது.

கொலை செய்யவேண்டும் என்கிற வெறி வந்துவிட்டால், அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என்றும் அந்தக் கட்டுப்பாடு அவனுடைய சக்திக்கு உட்பட்டதல்ல என்பதையும் மனோதத்துவ நிபுணர்கள் நிரூபித்தால்கூடப் போதும்...
 
மரண தண்டனை தரமுடியாது!

வில்லன்

unread,
Aug 21, 2009, 2:32:28 AM8/21/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்


திடீர் ஆவேசம் காரணமாக, விநாடியில் கத்தியை எடுத்து எதிரே இருப்பவரின் உடலுக்குள் செலுத்துவது வேறு. திட்டம் போட்டுக் காத்திருந்து ஒருவரைக் கொல்வது வேறு. அதுவே, மனநிலை பாதிக்கப்பட்டுக் கொலை செய்வது வேறு!

வாசகர்களுக்கு ஏற்படும் உணர்ச்சிகள் சட்டத்துக்குக் கிடையாது! மூளையை மட்டும் பயன்படுத்தி, அது தீவிரமாக ஆராய்ந்து நீதி வழங்கும்!

‘‘கொலைவெறி வந்தால், நம்மைப் போல அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. உடனே கொலையைச் செய்தாக வேண்டும். அதற்கு அவன் காரணமல்ல... டாமர் சிந்திக்க முடியாத, ஒரு உருண்டு முன்னேறும் கொலைகார ராணுவ டாங்கி மாதிரி!

அந்த டாங்கி தானாக முன்னேறி உயிர்களைக் குடிக்கிறது. டாமர் அதற்குப் பொறுப்பல்ல...’’ என்று குற்றவாளியின் சார்பில் வக்கீல் வாதிட்டார். கொலையின்போது படிப்படியாக டாமர் மேற்கொண்ட அணுகுமுறை, அவனது ரசனை மற்றும் ‘சாதாரண’ காலங்களில் அவன் மேற்கொண்ட அமைதியான வாழ்க்கை, அவனுடைய நகைச்சுவை உணர்வு இப்படிப் பல விஷயங்கள் டாமருக்கு எதிராகப் போனது!

‘‘டாமருக்குத் தரவேண்டியது ட்ரீட்மெண்ட் இல்லை... பனிஷ்மெண்ட்!’’ என்று ஜூரி ஏகமனதாகச் சொல்ல...

‘‘தொடர்ந்து பதினைந்து ஆயுள் தண்டனைகளை ஒருசேர அனுபவிக்க வேண்டும்...’’ என்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி (டாமர் வசித்த விஸ்கான்ஸின் மாநிலத்தில் மரண தண்டனை கிடையாது!).

சிறைப்பட்ட 950|வது நாளன்று ஒரு சக கைதி, ‘டாமருக்குத் தரப்பட வேண்டியது மரண தண்டனைதான்’ என்று முடிவு கட்டி, அவன் பாத்ரூமில் அசந்திருந்த சமயம் பார்த்து ஒரு இரும்புத் தடியால் டாமரை அடித்துக் கொன்றான்!

‘எங்களைப் போன்ற சாமானிய மனிதர்கள் வேறு. டாமர் போன்ற கொலை மிருகங்கள் வேறு... கொலை மிருகங்களையும் சாமானிய மனிதர்களையும் ஒரே தராசில் எடை போடாதீர்கள்!’ என்று வாசகர்கள் ஆட்சேபிக்கலாம். சற்றுப் பொறுமையாக இருங்கள்.

இதையெல்லாம் படித்துவிட்டு நீங்கள் சற்றுப் பதற்றமடைந்திருந்தால், நான் உங்கள்முன் வைக்கப்போகும் சில கேள்விகள், உங்களை மேலும் தர்மசங்கடப்படுத்தக்கூடும்!

உண்மைதான்! பெரும்பாலான உலக மக்கள் அன்றாட வாழ்க்கையை ரொம்பச் சாதாரணமாக, அமைதியாகத்தான் கழிக்கிறார்கள். அவர்கள் யாரும் திருடுவதில்லை, கற்பழிப்பதில்லை, கொலை செய்வதில்லை | அநேகமாகக் கடைசி மூச்சுவரை!

அப்படியென்றால் மனித இனத்தில் டாமர் போன்றவர்களின் கொலைகாரப் பிரிவு வேறு, அமைதியாக வாழும் நல்லவர்களின் பிரிவு வேறு என்று அடித்துச் சொல்ல முடியுமா?
 
சொல்லலாம்தான்... ஆனால், அது முழு உண்மையல்ல!

மனோதத்துவ நிபுணர்கள், ‘வன்முறையாளர்களுக்கும் சாமானியர்களுக்கும் உள்ள இடைவெளி ரொம்பச் சின்னது’ என்கிறார்கள். அதாவது,
 
குறிப்பிட்ட ஒரு குற்றத்தைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணமே துளிர் விடாத ஒரு மனிதனைக் காட்ட முடியாது!

சரி, உங்கள் கையருகே ஒரு பட்டன் இருக்கிறது. ரிமோட் கண்ட்ரோல்! அதை நீங்கள் அழுத்தினால், உங்களுக்குப் பிடிக்காத ஒரு நபர் இன்றிரவு (இயற்கையாக!) இறந்துபோவார் என்றால், அந்த பட்டனைப் பயன்படுத்துவீர்களா?

உங்களுக்குத் தொல்லை கொடுக்கும் மேலதிகாரி, மிரட்டும் கடன்காரர், பிடிக்காத தலைவர், துரோகம் செய்த ‘நண்பன்’, உங்கள் வீட்டுப்பெண்களைக் கிண்டல் செய்த ரௌடி...
 
இப்படி நீங்கள் வெறுக்கும் பலர் இருக்கக்கூடும்.
 
யோசித்துச் சொல்லுங்கள்..!

பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமை காக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. அதீதக் கோபத்தில்கூடக் கத்தியை எடுத்து ஒருவரைக் கொல்லும் அளவுக்கு நாம் போக மாட்டோம்தான்!

அதுவே, அன்றாட வாழ்க்கையில் பல்வேறுவிதமான வன்முறைகளில் நாம் நாட்டம் காட்டுகிறோம் என்பதும் உண்மை!

கொலையெல்லாம் செய்யாத ஒரு சாமானிய மனிதன்தான், மனைவியை சாடிஸத்தோடு துன்புறுத்துகிறான். வயதான தாய், தந்தையருக்குச் சாப்பாடு போடுகிற ஒரே காரணத்துக்காக, மறைமுகமாகப் பலவிதங்களில் அவர்களை வேலை வாங்குகிறான்.

மருமகள்களைக் கொடுமைப்படுத்தும் மாமியார்கள் எத்தனை பேர்?
 
வாயில்லாப் பூச்சியான கணவனின் தாயை ஏசித் துன்புறுத்தும் மருமகள்கள் எத்தனை பேர்?

உங்களைப் பிடிக்கவில்லை என்பதற்காகக் குரூரமாக நடத்தும் சாடிஸ மேலதிகாரிகள் உண்டா, இல்லையா?

குழந்தைகளைப் பணிக்கு அமர்த்தி, கேட்பாரில்லை என்பதற்காக அவர்களை அடித்துத் துன்புறுத்தும் முதலாளிகள் இருக்கிறார்களா, இல்லையா?

தன்னிடம் கல்வி கற்க வந்த சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்யும் ஆசிரியர்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?

கெட்ட எண்ணத்தோடு உங்களை ‘ஆட்கொள்ளும்’ போலிச் சாமியார்கள் எத்தனை பேர் உண்டு?!

(ஜூ.வி|யை வாரம் இருமுறை படிப்பவர்களான நீங்கள்),இந்த தொடரை தினமும் படிப்பவர்கள் நீங்கள்
 
சற்று நெஞ்சைத் தொட்டு மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்!

Naresh Kumar

unread,
Aug 21, 2009, 2:39:31 AM8/21/09
to panb...@googlegroups.com
மிகவும் சிந்திக்க வைக்கும் தொடர் வில்லன்....
 
தொடருங்கள்...
 
--
நரேஷ்
www.nareshin.wordpress.com

வில்லன்

unread,
Aug 24, 2009, 1:25:22 AM8/24/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்

எடுத்த எடுப்பிலேயே இந்தக் கேள்விகளை வாசகர்கள் முன், நான் வைப்பதற்குக் காரணம் பரபரப்புக்காக மட்டும் இந்தத் தொடரை நீங்கள் படிக்கக்கூடாது என்பதற்காகத்தான்!

எல்லா மனிதர்களுக்குள்ளேயும் இருண்ட பகுதிகள் உண்டு. அதற்குள்ளே புகுந்து பார்ப்பதை நாம் தவிர்த்தால், நம்மையே ஏமாற்றிக்கொள்கிறோம் என்று அர்த்தம்!

ஒவ்வொரு மனிதனும் தனக்குள் பதுங்கியிருக்கும் மிருகத்தைப் புரிந்து கொண்டால்தான் அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

வரலாற்றைச் சற்றே புரட்டிப் பார்க்கும்போதெல்லாம், நம்மைப் புறம் தள்ளிவிட்டு எத்தனை முறை அந்த மிருகம் கோரப் பற்களுடன் வெளியே பாய்ந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்! அந்தப் பாய்ச்சலால் உலகெங்கும் ஏற்பட்ட கொடூரமான சம்பவங்கள் எத்தனையெத்தனை என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்!

மனோதத்துவ மேதை ஸிக்மண்ட் ஃப்ராய்டு ‘எல்லா மனிதர்களுக்கு உள்ளேயும் வன்முறை உணர்வுகள்(
இருக்கிறது. எப்படிப்பட்டமோசமான குற்றத்தையும் செய்யத் தூண்டும் வெறி உணர்வு அவனுடைய ஆழ்மனதில்
தங்கியிருக்கிறது.
 
ஓரளவுக்கு அதைக் கட்டுப்படுத்துவது சமூகக் கட்டுப்பாடும், சமுதாய சட்டதிட்டங்களும், பின்விளைவுகளும், குற்ற உணர்வும்தான்!’ என்கிறார்.

மொத்தத்தில், நாம் நல்லவர்களும் அல்ல... கெட்டவர்களும்அல்ல! வெளியே மனிதன், உள்ளே மிருகம் இரண்டு சேர்ந்த கலவைதான் நாம்!

இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் முரண்டு பிடிப்பதில் அர்த்தமில்லை!
 
 
இந்த ‘மிருகம்’ எப்போது நம் மூளைக்குள் புகுந்து கொண்டது? பரிணாம வளர்ச்சியின் கட்டாயத்தின் பேரில் அது உள்ளே புகுந்து கொண்டதா? அல்லது, மனித மூளைக்குள் அந்த மிருகத்தை உருவாக்கக்கூடிய ரசாயனப் பொருள் ஏதேனும் இருக்கிறதா? அல்லது மூளைக்குள்ளே இயற்கை தயாரித்த மின்தொடர்புகளில்  தவிர்க்க முடியாத தவறு ஏதேனும் நிகழ்ந்து விட்டதா என்பதெல்லாம் நாம் ஆராயவேண்டிய விஷயம்!

அறிவாற்றல் மிகுந்த சிறந்த மனிதர்கள்கூட, மனிதனுக்குள்ளே இருக்கும் மிருகத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்!

மனம் திறந்ததொரு பேட்டியில் வி.ஐ.பி. ஒருவர் சொன்னார்|

‘‘என் கனவில், சில சமயங்களில் அழகிய பெண்கள் என்னை நெருங்கி வந்து கிளர்ச்சி ஏற்படுத்த முனைகிறார்கள். ‘பக்குவமடைந்த நான் இதற்கு இடம் தரலாமா?’ என்கிற உணர்வுதான் என்னைக் காக்கிறது.
 
சில சமயம், கனவில் யாரோ வந்து என்னை முரட்டுத்தனமாகத் தாக்குகிறார்கள். நானும் தற்காப்புக்காக அவரைக் குத்தி வீழ்த்தத் தயாராகிறேன். நான் செய்வது தவறு என்று உடனே எனக்குப் புரிகிறது. கூச்ச உணர்வுடன் என்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறேன்.
 
இப்படி இரண்டு வகை உணர்வுகளும் எனக்குள் போரிடுகின்றன...’’ இப்படிச் சொன்னவர் டென்ஸின் க்யோடா.

அதாவது, நம் வணக்கத்துக்குரிய தலாய்லாமா என்றால் உங்களுக்கு உடனே புரியும்!

ரொம்ப சிம்பிள்! வன்முறைக் கனவுகளும் பாலியல் கற்பனைகளும் எல்லா மனிதர்களுக்கும் உண்டு. அந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, உள்ளுக்குள்ளே திமிறிக் கிளம்பும் சாத்தானுடன் போரிட்டு ஜெயிப்பவர்கள் சிறந்த மனிதர்களாக உருவெடுக்கிறார்கள்.
 
தலாய்லாமா போன்றவர்களால் ஒருபடி மேலே போய் அந்தப் போர்க்களத்தில் அழகிய நந்தவனத்தைக்கூட படைக்க முடிகிறது!

ஒரு உச்சக்கட்ட குற்றமாக மனித சமுதாயத்தால் கருதப்படுவது கொலை!
 
இன்னொரு மனிதனின் உயிரைப் பறிப்பதை உலகின் எந்தப்பகுதியில் வசிக்கும் மனித இனமும் ஏற்றுக் கொண்டதில்லை. கொலைஎன்பது குற்றங்களுக்கெல்லாம் குற்றமாக நீதிமன்றங்களால் கருதப்படுகின்றன. மற்ற குற்றங்களையெல்லாம்விட கொலை, மனித சமுதாயத்தில் மிகவும் திகைப்பான முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
 
கொலை  மனிதனின் மனதில் அதிர்ச்சி, துயரம், கோபம் போன்ற பல உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.

எந்த மதமும் கொலையை ஏற்றுக் கொள்ளவில்லை. இறைவனின் கட்டளைகளில் முக்கியமானது, கொல்லாதே.

கொலை மனிதர்களிடையே மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்த இன்னொரு முக்கிய காரணம் ஒரு கொலைகாரன் நம் ஆழ்மனதில் தங்கியிருக்கும் மிருகத்தை நினைவூட்டுகிறான் என்கிறார்கள் மனோதத்துவ அறிஞர்கள்.

சாதாரண மனிதனின் மனதில் வந்து போகும் வன்முறைக் கனவை, கொலைகார மனிதன் வெளிப்படுத்தி, செயல்படுத்திக் காட்டுகிறான்!

இதுவே நமக்கும் கொலைகாரனுக்கும் உள்ள அந்த சின்Õ வித்தியாசம்! ஆகவேதான் கொலை (மற்ற உணர்ச்சிகளையும் சேர்த்து) மனிதர்களுக்கு ஒரு வித்தியாசமான ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.
 
குறைந்தபட்சம் கொலை நிகழும் இடத்துக்காவது நாம் மெனக்கெட்டு சென்று வெறித்துப் பார்க்கிறோம். கொலை நிகழ்ச்சி பத்திரிகைகளில் பெரிய தலைப்புச் செய்தி ஆகிறது. கொலைகாரனைப் பார்க்க நீதிமன்றத்தில் பெருங்கூட்டம் கூடுகிறது. கொலைகாரர்களை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெறுகின்றன!

வில்லன்

unread,
Aug 25, 2009, 1:37:48 AM8/25/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்


இத்தனைக்கும் கொலைகாரனுக்கு ஓநாய் போல ரத்தம் சொட்டும் கோரைப் பற்கள் இருக்கிறதா? அவனது கண்கள் வெறிபிடித்த வேங்கையை நினைவூட்டுகிறதா? அல்லது நம் புராண அரக்கர்களைப் போல அவன் கொடூரமாக வாட்டசாட்டமாக காட்சியளிக்கிறானா?

உண்மையில், கொலைகாரர்களை முதன்முறையாக சந்தித்து Ôபேட்டிÕ எடுக்கும் இளம் மனோதத்துவ மருத்துவர்களுக்கு, அந்தச் சந்திப்பு மிகுந்த வியப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக சீனியர் சைக்கியாட்ரிஸ்ட்டுகள் கூறுகிறார்கள்!

காரணம்  கொலைகாரன் நம்மைப் போன்ற ஒருவன்! இவ்வளவு அமைதியாக அமர்ந்திருக்கும் அவனால்கொடூரமாக ஐம்பது தொடர் கொலைகளை செய்ய முடிகிறது என்பதை இளம் சைக்கியாட்ரிஸ்ட்டுகளால்கூட நம்ப முடியவில்லை. எதைக் கேட்டாலும் புன்னகையோடு பதில் சொல்கிறான். கனிவோடு, மரியாதையுடன் நடந்து கொள்கிறான்.
 
பக்கத்து வீட்டுக்காரர், அலுவலகத்தில் நம்மோடு பணிபுரிபவர், பள்ளி ஆசிரியர் இப்படிப் பலர் இதே போலத்தான் மென்மையாகப் பழகுகிறார்கள். ஏன் இவனால் மட்டும் இப்படி?!

அந்த வன்முறை இடைவெளிÕ மிக மிக மெல்லியது என்பதுதான் காரணம்! நாம் அந்த இடைவெளியை தாண்டாமல் நிற்கிறோம்.

கொலைகாரன் தாண்டுகிறான்!

வெவ்வேறு விதமாக அதிர்ச்சியூட்டும் நூற்றுக்கணக்கான கொலைகாரர்களின் விதவிதமான அணுகுமுறை பற்றி மட்டுமே ஒரு பரபரப்பான தொடரை எழுத முடியும்! இது அப்படிப்பட்ட தொடர் அல்ல. ஆகவே இரண்டு பேரை மட்டுமே சற்று ஆழமாக அலசுவோம்.
 
ஒருவன் ஜெஃப்ரி டாமர். மற்றவன்  ஆண்ட்ரே சிக்காடிலோ!
 
எதிரும் புதிருமாக இருந்த இருபெரும் வல்லரசுகளான அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் பிறந்து வளர்ந்த இந்த இருவருமே சரிசமமாகக் கொடூரமானவர்கள்.

சிக்காடிலோவைப் பற்றி எழுதுவதற்குமுன்... 

ஆண்ட்ரே சிக்காடிலோ, மிகவும் எளிமையாக தோற்றமளிக்கும் ஒரு பள்ளி ஆசிரியர்(ன்!).

மூக்குக் கண்ணாடி, கண்ணியமான உடை, கையில்ப்ரீஃப்கேஸ்|சிக்காடிலோவை நூலகங் களில் அதிகம் பார்க்கலாம். குறிப்பாக, ரஷ்ய இலக்கியத்தில் நல்ல ஈடுபாடு உண்டு!

மாஸ்கோ நகருக்கு அறுநூறு மைல் தெற்கே உள்ள ரோஸ்டோவ் என்னும் ஊரில் வசித்த சிக்காடிலோவைப் பற்றி ஊர்மக்கள் யாருமே தப்பாகக் கற்பனை செய்ததில்லை.

ரோஸ்டோவ் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் வேறு பெற்றவன் சிக்காடிலோ. நாற்பத்திரண்டு வயதாகும் வரை அவன் யாரையும் கொலை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

பிறகு, ஒரே ஒரு கொலை!
 
ஒன்பது வயசு பெண் யெலீனாவிடம் நைஸாகப் பேச்சுக் கொடுத்து, புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்று
பாலியல் பலாத்காரம் செய்ய அவன் முயன்றபோது, அந்தச் சிறுமி சற்றுத் திமிறியிருக்கிறாள்...
அந்தச் சிறுமியின் கூச்சலை நிறுத்த வேண்டிக் கழுத்தை நெரித்துக் கொல்ல வேண்டியதாகப் போய்விட்டது. பிறகு சிக்காடிலோ அதற்காக ரொம்ப வருந்தினான்.

Ôசே... இனி இப்படி ஒரு தவறு செய்யக்கூடாதுÕ என்று தனக்குத்தானே சத்தியம் செய்துகொண்டான். அதைக் கேட்டு அவனுக்குள் இருந்த மிருகம் லேசாக புன்னகைத்திருக்க வேண்டும்!

ஆச்சரியம்! முன்னெச்சரிக்கையோடு, திட்டம் போட்டுச் செய்யாத கொலையாக இருந்தாலும், துப்புத் துலங்காததால் Ôயெலீனா கேஸை ரஷ்ய போலீஸ் மூடிவிட்டது.

இரண்டு ஆண்டுகள் சிக்காடிலோவுக்குள்ளே இருந்த மிருகம் கம்மென்றிருந்தது!

செப்டம்பர் 3|ம் தேதி, 1981. மாலை ஏழு மணி. லைப்ரரியிலிருந்து வெளிப்பட்ட சிக்காடிலோ, தன் காரில் ஏறிக்கொண்டான். மெள்ள காரை ஓட்டிச் சென்ற சிக்காடிலோவிடம் ஒரு பெருமூச்சும், கூடவே இனம் புரியாத கோபமும் தலைதூக்கியது.

Ôஏன் நான் இப்படி இருக்கிறேன்? என் ஆண்மை முழுவதும் போய்விட்டதா? மனைவி என்னைப் பார்த்து எகத்தாளமாகச் சிரிக்கிறாள். என்ன அவமானம் இது! என்கிற எண்ணங்கள் அவனுக்குள் அலைமோதின (இதெல்லாமே பிற்பாடு போலீஸிடம் அவன் நுணுக்கமாக விவரித்தது!).

ஸ்டீயரிங்மீது வெறுப்போடு தன் நெற்றியை ஒருமுறை மோதிக்கொண்டு நிமிர்ந்த சிக்காடிலோவின் பார்வை, அந்தப் பெண்ணின் மீது விழுந்தது. அவள் லாரிஸா கெசென்கோ. பதினேழு வயது நிரம்பிய பள்ளி மாணவி...

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், காரை நிறுத்தி இறங்கிய சிக்காடிலோ சுலபமாக அவளிடம் பேச்சுக் கொடுத்தான். பள்ளி ஆசிரியர் என்று தெரிந்தவுடன், அந்தப் பெண்ணும் நம்பிக்கையோடு பழகினாள்.

இருவரும் அருகேயிருந்த சூப்பர் மார்க்கெட் சென்று ஐஸ்க்ரீம் சாப்பிட்டார்கள். குளிர்பானம், சாக்லெட், பாப்கார்ன் வாங்கிக் கொண்டு வெளியேறினார்கள். கொஞ்ச தூரத்தில் இருந்த மரங்கள் அடர்ந்த தனிமையான பகுதிக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றான் அவன்.

அந்தப் பெண்ணைக் கொலை செய்கிற எண்ணமெல்லாம் அவனுக்கு அப்போது கிடையாது. Ôயாராவது பெண்ணொருத்தி தன்ஆண்மைக்குப் புத்துயிர் தருவாளா?  என்கிற தயக்கமான எதிர்பார்ப்பு மட்டும்தான் சிக்காடிலோவுக்கு இருந்தது.
 
   
 
சிகாடிலோ
 
 
(தொடரும்ம்)

காமேஷ்

unread,
Aug 26, 2009, 1:54:34 AM8/26/09
to thamizh...@googlegroups.com, பண்புடன், தமிழமுதம், முத்தமிழ்
வில்லன்,

லஞ்சிக்கு முன்னால போட்டா தானே படிக்க முடியும்.


~காமேஷ்~



2009/8/25 வில்லன் <oms...@gmail.com>
1E3.gif
1B2.gif

வில்லன்

unread,
Aug 26, 2009, 1:59:00 AM8/26/09
to thamizh...@googlegroups.com, பண்புடன், தமிழமுதம், முத்தமிழ்
ஐம் சாரி மறந்துட்டேன் இதோ இன்னும் சில நிமிடங்களில்

வில்லன்

unread,
Aug 26, 2009, 2:05:22 AM8/26/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்

மனித நடமாட்டம் இல்லாத இடம். திடீரென்று ஒரு பரபரப்பு ஏற்பட்டு அவன் உடல் நடுங்கியது. உள்ளுக்குள் மிருகம் உறுமியது. தன் சட்டையைக் கழற்றிப் போட்டு நிமிர்ந்த அவன் புஜங்கள் முறுக்கேறின. மிரண்டுபோன அந்தப் பெண் பின்வாங்கியவாறு, Ôஎன்ன இது? என்றாள் கலவரத்துடன்.

தோள்களைக் குறுக்கிக்கொண்டு சற்றுத் தளர்ந்த நடையுடன் கூட வந்த சிக்காடிலோ சரேலென்று நிமிர்ந்தவுடன்தான் அவனது ஆறடி உயரமும் வலுவான தேகமும் லாரிஸாவுக்குப் பயமூட்டியது.

ஓநாயைப் போல உறுமியவாறு அந்தப் பெண் மீது பாய்ந்தான் சிக்காடிலோ.

லாரிஸாவைக் கீழே தள்ளினான். அவள் அலற ஆரம்பித்தாள். திடுக்கிட்ட அவன் மொத்தமாக மண்ணை அள்ளி அவள் வாய்க்குள் திணித்து, அவள் கூக்குரலை நிறுத்தினான். அவள் துடிப்பதையும் நடுங்குவதையும் பார்த்தவுடன், திடீரென்று அவனது ஆண்மை விழித்துக்கொள்ளத் துவங்கியது!

சிக்காடிலோவுக்கு மகா ஆச்சரியம்... மனைவியோடு இருந்தபோதெல்லாம், இந்த சிலிர்ப்பான உணர்வு துளியும் அவனுக்கு ஏற்பட்டதில்லை. இப்போது தன்னைப் பற்றிய சந்தேகமெல்லாம் போய்... இதோ, வெறிபிடித்த மகிழ்ச்சியில் மூழ்கிக் கொண்டிருக்கிறான் அவன்!

அந்தப் பெண் இப்போது அவனுக்கு முழுசாக அடிமை! தன்னால் அவளை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்! கீழே கிடந்த அவளை இறுக அணைத்துச் சற்றுத் தூக்கி, அவள் உடலின் மேற்பகுதியெங்கும் பற்களால் கடித்துக் குதறித்தின்று...
 
பிறகு நிதானமாக கழுத்தை மெள்ள நெரித்துக் கொன்று... பீறிட்ட ரத்தத்தைக் குடித்தான் அவன். அந்தக் கணம் சிக்காடிலோ பரவசத்தின் உச்சத்துக்குப் போனான்!

குதறப்பட்ட அந்தப் பெண்ணின் உயிரற்ற உடல் கீழே கிடக்க, கழற்றிப் போட்டிருந்த அந்தப் பெண்ணின் உடைகளை வானத்தை நோக்கித் தூக்கியெறிந்தான் அவன். பிறகு, உன்மத்தத்துடன் அந்த உடலைச் சுற்றிப் பாடிக்கொண்டே நடனமாடினான்.

Ôஎன்னால் சாதிக்க முடியும். எனக்கு ஆண்மை வந்துவிட்டது! நான் உதவாக்கரை மனிதன் இல்லை. நான் ஜெயிப்பேன். யாரை வேண்டுமானாலும் கட்டளைக்குப் பணியவைக்க என்னால் முடியும்Õ என்று தரையில் மண்டியிட்டு, இரு கரங்களையும் வானை நோக்கி உயர்த்தி, சிவந்து போயிருந்த வாயால் ஆனந்தக் கூச்சலிட்டான் சிக்காடிலோ.

இந்தவிதக் கொலைவெறியையும் கொலைகாரர்களின் மனநிலையையும் பிறகு ஆராய வேண்டியிருப்பதால்தான் எல்லாவற்றையும் ஓரளவுக்காவது விளக்கமாக விவரிக்க வேண்டியிருக்கிறது.

அதே சமயம்... இப்படிப்பட்ட ஒரு ரத்தப் பசி கொண்ட கொடூர மிருகம் தங்களிடையே சாவதானமாக வளைய வருகிறது என்கிற உண்மை ஊர்மக்களுக்குக் கொஞ்சமும் தெரியாமல், அவன் எதிர்பட்டபோதெல்லாம் கனிவோடு விஷ் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

தினமும் நூலகங்களில் பணிவாக அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த சிக்காடிலோவை போலீஸும் சந்தேகப்படவில்லை!

ஒன்றல்ல, இரண்டல்ல... பன்னிரண்டு வருடங்களுக்கு போலீஸிடம் பிடிபடவில்லை ஆசிரியத் தோல் போர்த்திய அந்த வெறி கொண்ட ஓநாய்!

கடைசியில்... ஒரு சின்ன விஷயம் அவனை மாட்டிவிட்டது!

மனித ரத்தப் பசிகொண்ட சிக்காடிலோ தொடர்ந்து கொலைவெறியோடு செயல்பட ஆரம்பித்து, ஐந்தாண்டுகளுக்குப் பிறகே ரோஸ்டோவ் ஊர் மக்களுக்கு போலீஸ் வெளிப்படையான எச்சரிக்கை விடுத்தது. Ôஉங்களிடையே ஒரு பயங்கரமான கொலைகாரன் சாதாரணமாக வலம் வந்து கொண்டிருக்கிறான்.
 
அவனைப் பற்றிய அடையாளம்கூட இதுவரை தெரியாததால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கும்படி
கேட்டுக்கொள்கிறோம். இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் ஊர் மக்கள் கதிகலங்கிப் போனார்கள். அப்போது கம்யூனிஸ்ட் ஆட்சியாக இருப்பினும் (எந்த செய்தியையும் அடக்கி வாசிக்க வேண்டும்!)
 
எல்லாப் பத்திரிகைகளிலும் இது தலைப்புச் செய்தியாக வந்தது.
 
போலீஸ் மகா பொறுமையுடன் இரண்டு லட்சம் சந்தேக கேஸ்களைப் பிடித்து தீவிரமாக விசாரித்து ரத்தப் பரிசோதனைகூட செய்தது.
 
ஒன்பது வயது சிறுமி ஒருத்தியைக் கொன்றதற்காக 1978\ல் க்ராவ்சென்கோ என்பவனை போலீஸ் கைது செய்து, பிறகு நீதிமன்றம் அவனுக்கு மரண தண்டனை விதித்தது. அவன் இறப்பதற்குக் கடைசி நிமிடம் வரை Ôநான் நிரபராதிÕ என்று கதறிக்கொண்டிருந்தான்
 
(‘நான்தான் அந்தச் சிறுமி யெலீனாவை கொலை செய்தேன். என் முதல் கொலை அதுதான்!’ என்று பிற்பாடு சிக்காடிலோ ஒப்புக்கொண்டது வேறு விஷயம்!).

கொலைகள் தொடர்ந்தன..!

அந்த அப்பாவியைத் தொடர்ந்து இன்னொருவனை சந்தேகப்பட்டு கைது செய்து விசாரித்தது போலீஸ். பாவம், அந்த ஆள் அவமானப்பட்டுப் போய் தற்கொலை செய்துகொண்டான்.

கொலையாளி எங்கே மறைந்திருக்கிறான்?!

பிறகும் கொலைகள்..!

மக்கள் Ôகையாலாகாத காவல்துறைÕ என்று விமரிசிக்க ஆரம்பித்தார்கள். தர்மசங்கடப்பட்டுபோன போலீஸ், புகழ்பெற்ற மனோதத்துவ நிபுணர், டாக்டர் அலெக்ஸாண்டர் புகானோவ்ஸ்கி என்பவரின் உதவியை நாடியது.

தீவிர விசாரணைக்கும், ஆழ்ந்த சிந்தனைக்கும் பிறகு புகானோவ்ஸ்கி கொலைகாரனின் Ôகுணநலன்களைÕ  ஒரு பேப்பரில் எழுதி போலீஸிடம் கொடுத்தார். அதிலிருந்த முக்கிய விஷயங்கள் மட்டும் இதோ!

கொலைகாரன் இளைஞன் அல்ல. நாற்பது வயது நிரம்பியவன். அவனுடைய குழந்தைப் பருவம் மிகவும் கொடூரமாக இருந்திருக்கிறது. அன்பு என்பதே தெரியாமல் வளர்ந்தவன்.

அதீத தாழ்வு மனப்பான்மை உண்டு. செக்ஸ் பிரச்னைகள் இருக்கும். ஆண், பெண் இருவரோடும்
செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆர்வம் உண்டு. திருமணமானவன். மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பவன். ஸ்கூல் டீச்சராக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது!

இதை வைத்துக்கொண்டு நகர் முழுவதையும் மஃப்டியில் போலீஸ் கண்காணிக்க ஆரம்பித்தது.
 
ஒரு நாள்...

வில்லன்

unread,
Aug 27, 2009, 12:30:03 AM8/27/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்

பஸ் ஸ்டாப் அருகே ஒரு சிறுவன் கண்ணாடி அணிந்த, நடுத்தர வயதுள்ள ஒருவனோடு நடந்துபோய்க் கொண்டிருந்தான். இது சட்டென்று போலீஸ்காரர் ஒருவரின் பார்வையில் பட்டது. Ôஒருவேளை தந்தை, மகனாக இருக்குமோ?! பார்த்து விடுவோம்..Õ என்று அவர்களை மடக்கினார் அவர். Ôஇவர் என் அப்பா இல்லை, என் நண்பர். ஏன்? என்ன ஆச்சு?Õ என்றான் சிறுவன்!

சந்தேகத்தின் பேரில் சிக்காடிலோவை உடனே கைது செய்தார் அந்த போலீஸ்காரர். ஆனால், தாங்கள் தேடிக்கொண்டிருக்கும் கொலைகாரன் இவன்தானா என்று ஒன்பது நாட்கள் தொடர்ந்து விசாரித்தும் சிக்காடிலோ துளியும் அசைந்து கொடுக்கவில்லை.

Ôசந்தேகப்பட்டு இரண்டு அப்பாவிகளைக் கொன்றீர்கள். என்னையும் கொல்லுங்கள்!Õ என்று அவன் அழுததோடு சரி!பிறகு ஒரு போலீஸ் அதிகாரி, டாக்டர் புகானோவ்ஸ்கி கொலைகாரனைப் பற்றி ஊகித்து எழுதியிருந்த விஷயங்களை அவனுக்கு நிதானமாக படித்துக் காட்டினார். கவனத்துடன் அதைக் கேட்டுக்கொண்டிருந்த சிக்காடிலோ
 
திடீரென்று வாய்தவறி Ôஅட.. அப்படியே இவ்வளவு கரெக்டாக என்னை விவரித்திருக்கிறாரேÕ என்று சொல்லித் தொலைத்து \ மாட்டிக்கொண்டான்!

‘இதோ, இவனேதான்!’ சரேலென்று போலீஸ் எச்சரிக்கையானது. அதற்கு பிறகு போலீஸுக்கு ரொம்ப சிரமம் கொடுக்கவில்லை சிக்காடிலோ. ஒரு பெருமூச்சுடன், Ôசரி, எல்லாவற்றையும் சொல்கிறேன், கேளுங்கள்Õ என்று தன் கொலை வரலாறை சொல்ல ஆரம்பித்தான் அவன்.

மிகவும் பரிதாபமான, கொடூரமான குழந்தைப் பருவம் சிக்காடிலோவை திக்குமுக்காட வைத்திருக்கிறது. சிறுவயதில், சோவியத் ரஷ்யாவின் பகுதியான உக்ரேயினில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது நடந்த ஒரு பயங்கர சம்பவம்...
சிக்காடிலோவும் அவனுடைய பத்து வயது அண்ணனும் காட்டுப்பகுதியில் நடந்து வந்தபோது பஞ்சத்தில் தவித்த ஒரு கூட்டம்,

அவனுடைய அண்ணனைப் பிடித்துக் கொன்று, உடலை துண்டு துண்டாக்கி தீயில் வறுத்தெடுத்து சாவகாசமாக சாப்பிட்டக் காட்சியை, தப்பி ஓடுவதற்கு முன்பு நேரில் பார்த்தான் சிக்காடிலோ. அந்தக் குரூரமான காட்சி கடைசிவரை அவன் மனதை விட்டு அகலவில்லை.

அவனுடைய தந்தை போர்க்கைதியானார். வீட்டில் பட்டினி. அம்மாவின் அன்பு துளிக்கூட கிடைக்கவில்லை. தினமும் அவனைப் போட்டு அடித்தாள். ஊர் பெண்கள் அவனை ஏளனம் செய்தார்கள். திருமணத்துக்குப் பிறகு மனைவியும் அவனை மோசமாக நடத்தினாள்.

தொடர்ந்து ஒவ்வொரு இரவும் ஏசினாள்.

இரண்டு குழந்தைகளைப் பெற்றதோடு சரி.. பிறகு மனைவி மீது தாளாத வெறுப்பு சிக்காடிலோவுக்கு ஏற்பட்டது. கூடவே அவனுடைய ஆண்மை போய்விட்டது. தொழிற்சாலையொன்றில் வேலைக்குச் சேர்ந்த அவனை சக தொழிலாளர்களும், ஃபோர்மெனும் மிகவும் கேவலமாக நடத்தினார்கள். சிக்காடிலோவுக்கு தன்மீதும், சமூகத்தின் மீதும் இருந்த நம்பிக்கை அடியோடு போய்விட்டது. தன்னந்தனி ஆளாக ஆகிப்போனான் அவன்.

அதற்குப் பிறகுதான் குரூரமான செக்ஸ் கற்பனைகள்  அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தன.
 
ஒரு கனவுலகத்தில் வாழ ஆரம்பித்தான் அவன். ஒரு நரகத்தைத் தனக்கென்று மனதுக்குள் சிருஷ்டித்துக் கொண்டான். அந்த நரகத்துக்கு, சாத்தானைப்போல அவன்தான் சர்வ வல்லமை கொண்ட அதிபதி!
தன் கனவுகளை அவன் நிஜமாக்க ஆரம்பித்தது பிறகுதான். இரண்டு கொலைகளை செய்தவுடன், தான் பிறந்த காரணம், தன் வாழ்க்கையின் அர்த்தம் அவனுக்கு விளங்கிப்போனது.
 
கொலை.. கொலை.. தொடர்ந்து கொலைகள்!

சிக்காடிலோ பொய்யானதொரு தளர்ந்த நடையுடன் சென்று, புன்னகை யுடன் பேச்சுக் கொடுத்து அழைத்துச் சென்று (12 வருடங் களில்) குரூரமாக செய்த கொலைகளின் எண்ணிக்கை ஐம்பத்து மூன்று!

Ôஅக்கறையோடு தொழிற்சாலையிலும், பள்ளிக்கூடத்திலும் பணிபுரிந்தேன். வெளியிலும் சரி, வீட்டிலும் சரி என்னைக் கேவலமாக நடத்தினார்கள். கொலை செய்ய ஆரம்பித்த பிறகுதான் நான் புது மனிதனாக ஆனேன். பிறகு என்னால் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடிய வில்லை!Õ என்றான் சிக்காடிலோ கோர்ட்டில்.

அநேகமாக எல்லா சிறுவர்களையும், சிறுமிகளையும் Ôபஸ் ஸ்டாப்பில்Õதான் தேர்ந்தெடுத்தான் சிக்காடிலோ. தனி இடத்துக்கு போனவுடன் மிருகம் விழித்துக்கொள்ளும். பிறகு சித்ரவதை.. கொலை!

எடுத்தவுடன் கொலை செய்வதைத் தவிர்த்தான் அவன். உடலெங்கும் கத்தியால் சரமாரியாக குத்திப் பிறகு கத்தியை தூக்கிப்போட்டுவிட்டு, பற்களையும் நகங்களையும் பயன்படுத்துவான்.

இரையின் கண்கள் அவனை டிஸ்டர்ப்Õ செய்தன. ஆகவே (உயிரோடு இருக்கும்போதே) கண்களை கத்தியால் தோண்டியெடுத்துப் பையில் போட்டுக்கொள்வான். பிறகு பீறிடும் ரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பான். அவன் முகமே ரத்தமயமாகிப் போனது. இறந்து கொண்டிருப்பவரின் நாக்கை இழுத்து வைத்து பல்லால் கடித்துக் குதறித் தின்பது அவனுக்கு ரொம்பப் பிடித்தது.
 
கடைசியாக கொஞ்சநஞ்சம் இருக்கும் உயிரையும் கழுத்தை நெரித்துப் போக்கிவிட்டு பிறகு அந்த உடல்மீது அமர்ந்து சாவதானமாக சுயஇன்பத்தில் ஈடுபடுவான். அவன் ஆண்மை சிலிர்த்துக்கொண்டது இம்மாதிரி சூழ்நிலையில் மட்டுமே!

கண்களை தோண்டுவது, நாக்கைக் கடிப்பது போன்ற செயல்களெல்லாம் தனித்தன்மையானது. கொலையாளியின் கையெழுத்து  என்று இதற்கு துப்பறியும் நிபுணர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள்! இதை வைத்து ஒரே ஆள்தான் எல்லா கொலைகளையும் செய்தானா என்று ஓரளவு கண்டுபிடிக்க முடியும்!

1992 அக்டோபர் 15. நீதிமன்றம் சிக்காடிலோவுக்கு மரண தண்டனை விதித்தது. நீதிபதி தீர்ப்பை படித்தபோது சற்றே (மனித இறைச்சி இல்லாததால்?) இளைத்துப் போயிருந்த சிக்காடிலோவின் ரியாக்ஷன் என்ன தெரியுமா? பக்கத்தில் இருக்கும் படத்தைப் பாருங்கள்!
 


வெளியே கூடியிருந்த கூட்டம் கோப வெறியில் இருந்தது. Ôஎங்களிடம் அந்த மிருகத்தை விட்டுவிடுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்!Õ என்று அவனை பீஸ்பீஸாக கிழித்துப் போடும் ஆத்திரத்துடன் மக்கள் கூச்சல் போட்டார்கள். போலீஸ் ஒரு மாதிரி அவனை பத்திரமாக சிறைக்கு அழைத்துச் சென்றபோது கூட்டத்தைப் பார்த்து சிக்காடிலோ,
 
உங்களில் யாராவது ஒருவர் என்னுடைய நிலைமையைப் பார்த்து பரிதாபப்படுகிறீர்களா? என்று எரிச்சலுடன் குரலை உயர்த்திக் கேட்டான்.

Ôபன்னிரண்டு வருஷம்.. ஐம்பத்து மூன்று கொலைகள்! இத்தனை காலம் கோட்டை விட்டுவிட்டு போலீஸ் இப்போது காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள ஒன்றுமில்லை என்று போலீஸ் மீது பாய்ந்தது கூட்டம். ஒருவழியாகக் கொலைகாரனைப் பிடித்த பிறகும் போலீஸுக்குக் கெட்ட பெயர்தான்!

1994 பிப்ரவரி 21. சிக்காடிலோவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அன்று அதிகாலை நீண்ட வராண்டா வழியாக அவனை நடக்கவைத்து மரண தண்டனைக்கான அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே நடுநாயகமாக மண்டியிட்டு அமர்ந்தான் அவன்.

ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா?Õ என்று கேட்டார் ஜெயில் அதிகாரி. நிமிர்ந்து சற்று யோசித்த சிக்காடிலோ, இறப்பதற்கு முன் ஒவ்வொருவரும் தங்கள் முத்திரையை உலகில் பதித்துவிட்டுப் போக வேண்டும். இல்லையென்றால், வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை! என்றான் சாவதானமாக.

சிக்காடிலோவின் பின்னந்தலையில் ஒரு Ôஆட்டோமேட்டிக்Õ துப்பாக்கியை வைத்து அழுத்தினார்கள். அதிலிருந்த சக்தி வாய்ந்த புல்லட், அவன் மூளையை சிதற அடித்தது.

வில்லன்

unread,
Aug 28, 2009, 1:10:42 AM8/28/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்


ஒரு சீரியல் கொலைகாரன் எப்படி உருவாகிறான்?
 
 பிறவிக் கொலைகாரன் என்று யாரும் கிடையாது! தப்பாக நினைக்காதீர்கள்.. உங்கள் பக்கத்து வீட்டிலோ, எதிர்வீட்டிலோ ஏன் உங்கள் உறவினர்களில் ஒருவரோகூட கொடூரமான தொடர் கொலைகாரர் ஆகக்கூடும்!
 
சில சூழ்நிலைகளை, பின்னணியை, குணநலன்களை வைத்து, கொலை செய்யக்கூடியவரை நாம் (ஓரளவுக்காவது!) கணிக்க முடியும்...

எப்படி..?!

டாமர், சிக்காடிலோ போன்றவர்களை வகைப்படுத்தி, இது போன்ற கொலைகாரர்களுக்கு Ôசீரியல் கில்லர்Õ என்று முதன்முதலில் பெயர் சூட்டியவர் புகழ்பெற்ற துப்பறியும் நிபுணர் ராபர்ட் ரெஸ்லர்.

70\களில் நியூயார்க் நகரை கதிகலங்கடித்த ஒரு கொலைகாரன் டேவிட் பெர்கோவிட்ஸ்.

அவன் காதில் Ôஸாம்Õ என்பவரின் குரல் அவ்வப்போது ஒலிக்கும் (அவன் வசிக்கும் தெருவில் Ôஸாம்Õ என்பவர் போன் பூத் வைத்திருந்தார் என்றாலும், அவன் மூளைக்குள் கேட்கும் குரலுக்கும் அவருக்கும் சம்பந்தம் கிடையாது!).
 
கிளம்பு என்று அந்தக் குரல் அவ்வப்போது டேவிட்டுக்கு ஆணையிடும்.
 
டேவிட் காதுக்குள் Ôஸாம்Õ இட்ட கட்டளை\ Ôகாதலர்களை எங்கு பார்த்தாலும் கொல்!Õ உடனே வெறித்தவிழிகளுடன் டேவிட் கிளம்புவான்.

நியூயார்க் பூங்காக்கள், தெருக்கள் எங்கேயாவது காருக்குள் காதல் ஜோடி தென்பட்டால் போதும், Ôஎக்ஸ்கியூஸ் மீ!Õ என்று ஒரு புன்னகையுடன் காரின் கதவுக் கண்ணாடியைத் தட்டுவான்.

கண்ணாடியை இறக்கியவுடன், டேவிட்டின் வலது கையில் உள்ள துப்பாக்கி வெளிப்படும். இருவரின் மூளையையும் சிதற அடித்துவிட்டு, தான்பாட்டுக்குப் போய்விடுவான். பல கொலைகளுக்குப் பிறகு, அவனை மடக்கிப் பிடித்தவர் ரெஸ்லர்.

சீரியல் கில்லர் என்று பெயர் சூட்டப்பட்ட முதல் ஆள் டேவிட்தான்!

அமெரிக்காவில் ஆண்டுதோறும் சீரியல் கில்லர்களிடம் மட்டும் சிக்கிக்கொண்டு கொலை செய்யப்படுபவர்கள் 3,500 பேருக்கு மேல்! என்கிறார் ரெஸ்லர்.

டாமர் போன்ற தொடர் கொலைகாரர்கள் வேறு. ஒரே சமயம் தொடர்ந்து பலரைக் கொல்பவர்கள் வேறு

டிசம்பர் 7, 1993\ல் ஒரு நாள் பெர்கூஸன் என்னும் 35 வயது ஆசாமி ரயில்வண்டியில் ஏறி பயணிகளைப் பார்த்து ஹலோ சொல்லிவிட்டுச் சரமாரியாகச் சுட்டதில் ஆறு பேர் இறந்தார்கள். டஜன்கணக்கில் படுகாயமடைந்தார்கள். அரை டஜன் போலீஸ் அவன்மீது விழுந்து அமுக்கிப் பிடித்துச் சுடுவதை நிறுத்தி அவனைக் கைது செய்தார்கள்.

ஹ்யூபர்ட்டி என்பவன் லாஸ்ஏஞ்சலீஸ் நகரில் மெக்டொனால்ட் ரெஸ்டாரண்ட்டுக்குள் நுழைந்து, ஒழிஞ்சு போங்கடா! என்று கர்ஜித்துவிட்டு, இருபத்து மூன்று அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றான்.

விட்மென் என்பவன் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில், ஒரு மணிக்கூண்டுமீது ஏறி நின்று கல்லூரி மைதானத்தில் பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டுமிருந்த பத்து மாணவ மாணவிகளைச் சுட்டுக் கொன்றான்.

சாதாரணமாக, இவர்கள் பலரைச் சுட்டுக் கொன்று விட்டுக் கடைசியில் தற்கொலையும் செய்துகொள்வார்கள். அல்லது போலீஸ் சூழ்ந்துகொண்டு, வேறுவழியில்லாமல் கொலைகாரனைச் சுட்டு வீழ்த்தும்.

இந்த வகைக் கொலைகளுக்குச் சக்தி வாய்ந்த, தொடர்ந்து சுடக்கூடிய துப்பாக்கி தேவை (ஆகவேதான், எப்போதாவது நம்ம ஊரில் இப்படி வெறிபிடித்து அப்பாவிகளைச் சுட்டுக் கொல்பவர் போலீஸ்காரராகவோ, ராணுவ வீரராகவோ இருக்கிறார்!).

இந்த வகைக் கொலைகாரர்களின் மனோதத்துவ நிலை சற்று மாறுபட்டது. திடீரென்று தாங்க முடியாத கோபம் வந்தால் நாம், தட்டு, டம்ளர், நாற்காலி, படங்களையெல்லாம் தூக்கிப் போட்டு உடைக்கிறோம், இல்லையா?
 
அதன் உச்சக்கட்டம்தான் இது!

இதற்குப் பின்னால் பெரிசாக திட்டமிடுதல் கிடையாது. நம்முடைய பிரச்னைகளுக்கும் சோகங்களுக்கும் காரணம் சமூகமே! என்கிற, அத்தனை மனிதர்களையும் எதிரிகளாக நினைத்துப் பழிவாங்க விரும்புவதும் இதோடுகூட சுயபச்சாதாபமும் சேருகிறது!

மனக்கட்டுப்பாடு உள்ளவர்கள், இதுபோன்ற சமயங் களில் மேஜையை ஓங்கிக் குத்துவதோடு நிறுத்திக் கொள்வார்கள்!
 
துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அப்பாவி மக்களைச் சுட்டு வீழ்த்தக் கிளம்புகிறவர்கள் மிகச் சிலரே!
 
உணர்வு ஒன்றுதான். அதன் அளவுதான் வேறு!

வில்லன்

unread,
Aug 31, 2009, 12:43:55 AM8/31/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்


சீரியல் கில்லர்களின் கதையே தனி. அவர் களுடைய கற்பனைகள் பயங்கரமானது. செக்ஸுக்கு முன்பு ஏற்படும் கிளுகிளுப்பான எதிர்பார்ப்பு ஒவ்வொரு கொலைக்கு முன்பும் அவர்களை ஆக்கிரமிக்கிறது!

பரிச்சயமில்லாத ஒருவரைத்தான் அவர்கள் கொலை செய்யத் தேர்ந்தெடுப்பார்கள். பிறகு பல நாட்கள் ÔஇரைÕயைப் பின்தொடர்ந்து கண்காணிப் பார்கள். பொறுத்திருந்து பதுங்கிப் பாய்ந்து கொல்கிற புத்திசாலி மிருகங்கள் இவர்கள்!

முப்பது கொலைகளைச் செய்த சீரியல் கில்லர் டெட்பண்டி. அத்தனை கொலைகளுக்கும் அவனுக்கு ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டன! இரைகளைத் தேர்ந்தெடுக்க, மெனக்கெட்டு வெவ்வேறு மாநிலங்களுக்குப் பயணித்தான் அவன்!

உலகக் கொலை வரலாற்றில் முதன்முதலில் Ôபயங்கரப் புகழ்Õ பெற்றவன் லண்டன் நகரில் வசித்த ஜாக் தி ரிப்பர்  Ôரிப்பர்Õ என்றால் Ôகிழித்துக் குதறுபவன்Õ என்று அர்த்தம். Ôஜாக்Õ என்பது போலீஸ் அவனுக்கு வைத்த புனைப்பெயர்!

அவன் தேர்ந்தெடுத்து (1888\ம் ஆண்டில்) கொலை செய்த அத்தனை பேரும் விலைமாதர்கள்! விலைமாதர்களால் அவனுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டிருக்குமா? அல்லது அவன் தாய் விலைமாதுவாக இருந்ததால் ஏற்பட்ட மனப் பாதிப்பா?

கடைசிவரை அவன் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், உண்மை தெரியாமலேயே போய்விட்டது. இன்று வலம்வரும் சீரியல்  கொலைகாரர்களுடன் ஒப்பிட்டால், ஜாக் தி ரிப்பர் ரொம்ப சாதாரணமானவன் என்று கூறலாம்!

ஜாக் தி ரிப்பர் செயல்பட்டது பத்து வாரங்களுக்குத்தான். கொலை செய்தது ஐந்து விலைமாதுக்களே! திடீரென்று அந்தக் கொலைகள் தானாக நின்றுவிட்டன!

அநேகமாக சீரியல் கில்லர்கள் தாங்கள் செய்யும் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில்லை. கொலைகளை நிறுத்தினால், அவர்களுடைய வாழ்க்கையில் வெறுமை சூழ்ந்துகொண்டு, அவர்களுடைய பர்சனாலிட்டி பொலபொலவென்று உதிர்ந்துவிடுவது போன்ற திகிலுணர்வு அவர்களுக்கு ஏற்பட்டுவிடும்!

அவர்களுடைய வாழ்க்கையை நிலைநிறுத்தி, மனஅமைதி ஏற்படுத்தித் தருவது \ கொலைகளே! இவர்களுக்கு, பாலுணர்வு போலத் திரும்பத் திரும்பக் கொலை செய்யும் வெறி தலைதூக்கும்!

வாஷிங்டன் நகரில் 1984\ல் ஒரு கொலைகாரன் (19மாதங்களில்) தொடர்ந்து 49 பெண்களை கொலை செய்தான். ஸ்பெஷல் போலீஸ் படை அமைத்து அவனைத் தேடினார்கள்.

போலீஸ் அவனைக் கண்டுபிடிக்க, பதினைந்து மில்லியன் டாலர் செலவழித்தும் ஆள் அகப்படவில்லை! திடீரென்று கொலைகள் தானாகவே நின்றுவிட்டன. என்ன ஆனது?!

Ôஅவனாகக் கொலை செய்வதை நிறுத்த வாய்ப்பே கிடையாது. ஒன்று \ அவன் வேறு ஏதாவது குற்றத்துக்காக சிறையிலடைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு \ விபத்து எதிலாவது அடிபட்டு அவன் செத்துப் போயிருக்க வேண்டும்!Õ என்றார்கள், போலீஸில் பணிபுரியும் மனோதத்துவ நிபுணர்கள்.

தொடர் கொலைகாரர்கள் கொல்வதற்கு முக்கிய காரணம் \ அந்தக் கொலை அவர்களுக்கு ஏற்படுத்தும் பரவச உணர்வுதான்! அந்த உணர்வு வெறும் உடலுறவு மூலமாக மட்டும் ஏற்படுவது அல்ல.

இரையைத் தேடி அவர்கள் மேற்கொள்ளும் வேட்டை, கைப்பற்றுதல், கடத்திச் சென்று சிறைப்படுத்திச் சித்ரவதை செய்தல், கடைசியாகக் கொலை! இவை அத்தனையுமே பரவசமானவை! பொறாமை, பணம், பழிதீர்த்தல், தனிப்பட்ட கோபம் எதுவும் இவர்களுக்குக் கிடையாது!

சில முரட்டுக் குழந்தைகள் Ôபார்பிÕ பொம்மையின் கை, கால்களைப் பிய்த்து, அதன் கண்களை பென்சிலால் குத்தியெடுத்து, தலையைச் சக்கர வட்டமாகத் திருப்பிச் சிதைத்து, சின்னாபின்னப்படுத்துவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்!

சீரியல் கொலைகாரர்களுக்கு, உயிருள்ள மனிதர்கள் பார்பி பொம்மை மாதிரி! கொலை செய்யப்படுபவர் பரிச்சயமில்லாத யாரோ என்பதால், கொலைகாரனுக்குத் தயக்க உணர்வு எதுவும் ஏற்படுவதில்லை. குற்ற உணர்வும் வருவதில்லை.

இரையைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து அவர்களுடைய செக்ஸ் உணர்வு கிளுகிளுக்க ஆரம்பிக்கிறது. கடைசியாகக் கொலை செய்யும் அந்த விநாடியில் உச்சக்கட்ட ஆர்கஸம் அவர்களுக்கு நிலைகொள்ளாத மகிழ்ச்சித் துடிப்பை ஏற்படுத்துகிறது!கொலைக்கு முன்வரை, எதிராளி(?!)யின் நடுக்கமும் பீதியும் அலறலும் கதறலும்தான் கொலைகாரர்களுக்கு அதீத மகிழ்ச்சி தரும் விஷயங்கள்.

ஒவ்வொரு கொலைகாரனுக்கும் தனிப்பட்ட அணுகுமுறை உண்டு. சிலருடைய அணுகுமுறைகள் உங்களை வியக்கவும் நடுங்கவும் வைக்கும்..!


இந்தத் தொடரைப் படிக்கும் வாசகர்களில் பெண்கள் எத்தனை சதவிகிதம் என்கிற புள்ளிவிவரம் என்னிடம் கிடையாது! !என்னைப் பொறுத்தவரை, முக்கியமாகப் பெண்களை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்தத் தொடரை
எழுதுகிறேன்!..

உலகெங்கும் (போர்களைத் தவிர்த்து) வன்முறைக்குப் பெருமளவு பலியாகிறவர்கள் பெண்கள்தான். பொதுவாகவே பெண்களுக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம்தான் என்றாலும், அந்த உணர்வைச் சற்றுத் தளரவிடும்போதெல்லாம் ஆபத்து அவர்களை எட்டிப்பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது.
 
அதற்காக ஒரேயடியாகப் பெண்கள் பதுங்கிப் பதுங்கி நடந்து செல்ல வேண்டும் என்று அர்த்தமல்ல! வன்முறை சூழ்ந்த உலகில் எச்சரிக்கை உணர்வு என்பது மிகவும் அவசியமான, குறைந்தபட்ச தற்காப்பு ஆயுதமாகும்!

வில்லன்

unread,
Sep 1, 2009, 1:32:43 AM9/1/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்


அந்த முப்பது வயதுப் பெண் சூப்பர் மார்க்கெட் சென்று, இரு பைகள் நிறைய காய்கறிகள் மற்றும் சில பொருட்களுடன் வீடு திரும்பினாள். அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டாவது மாடியில் அவளுடைய
அபார்ட்மெண்ட் இருக்கிறது. ஒரு மாடி ஏறியவுடன் சற்று மூச்சு வாங்கிக்கொள்ள, அந்த பெண் பையைக் கீழே வைத்துவிட்டு நிமிர்ந்தாள்.

அந்தப் பெண்ணைக் கடந்து மாடியேறிய ஓர் இளைஞன் திரும்பி இறங்கி வந்து Ôஹலோ!Õ என்றான். Ôநான் உதவட்டுமா? எந்த மாடி? என்றான். Ôபரவாயில்லைÕ என்று மறுத்தாள் அந்தப் பெண்.
 
மிகவும் டீசென்ட் ஆக உடை அணிந்து, பார்ப்பதற்கு லட்சணமாக இருந்த அந்த இளைஞன் புன்னகையுடன் Ôஆண்\பெண் யாராக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்வதில் தப்பில்லையே?Õ என்று
சொல்லிவிட்டு, ஒரு பையை உரிமையோடு எடுத்துக் கொண்டான்.

அவள் எச்சரிக்கையான பெண். யாரையும் நம்பமாட்டாள். Ôநான் பார்த்துக்கொள்கிறேன்Õ என்று சொல்லியும் அவன் கேட்பதாயில்லை.

அலுப்புடன் சரி என்றாள். இரண்டாவது மாடி வந்ததும் தாங்க்ஸ் என்று கையை நீட்டினாள். அவன் சிரித்துவிட்டு, இரண்டு கையிலும் பைகளை வைத்துக்கொண்டு எப்படிக் கதவைத் திறப்பீர்கள்?Õ என்றான்.
 
பையை கீழே வைத்துவிட்டு! என்று அவள் சொல்லி இருக்கலாம்தான். ரொம்ப அலட்டிக் கொள்வதாகத் தப்பாக நினைப்பானோ என்று நினைத்தும், நாகரிகம் கருதியும் தயக்கத்துடன் கதவைத் திறந்தாள் அவள். உள்ளே வந்து, பையைப் பணிவோடு ஓரமாக வைத்தவனிடம் Ôரொம்ப நன்றி!Õ என்றாள்.
 
வெல்கம் என்று புன்னகையோடு தலையசைத்துத் திரும்பிய அவன், சட்டென்று கதவை மூடித் தாளிட்டுத் திரும்பியபோது... அவன் முகத்தில் வெற்றி பூர்வமான வெறியும் காமமும் தெரிந்தது!

இதே ஸ்டைலில் பல பெண்களை (பல நாட்கள் கண்காணித்துவிட்டு) கற்பழித்துக் கொலை செய்த அவன், ஓர் அழகிய பயங்கர மிருகம்!

எந்தப் பெண்ணும் அவனிடம் தப்பியதில்லை. ஆனால், இந்தப் பெண் தப்பித்தாள்! சாதாரணமாக இதுபோன்ற சமயங்களில் கைகள் நடுங்கும், குரலெழும்பாது, கால்கள் தள்ளாடும்! கிச்சனுக்குள் போய் ஒரு கூர்மையான கத்தியாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அவன் திரும்பியபோது திடீரென்று பாய்ந்து, அவனைக் கீழே தள்ளிவிட்டு, வெளியே ஓடிப்போய்க் கதவை மூடி இழுத்துப் பிடித்துக்கொண்டு அவள் போட்ட அலறலில் பக்கத்து Ôஃப்ளாட்Õகளிலிருந்து பலர் ஒடிவர, அவன் மாட்டிக்கொண்டான்.

ஆம்! குறிப்பாகப் பெண்கள் உள்ளுணர்வுக்கு செவிசாய்ப்பது மிகவும் முக்கியம். உள்ளுணர்வு நோ சொல்லும்போது,
நாகரிகம் காரணமாக யெஸ் சொல்வது ஆபத்தில் கொண்டு விடலாம். 
 
ஆகவே, தனியாக நெருங்கிப் பேச்சுக் கொடுக்கும் அந்நியர் களிடம் பெண்கள் எச்சரிக்கையாகவும் சற்று கண்டிப்பாகவும் இருப்பதில் ஒரு தவறுமில்லை!

சிங்கம், புலி, ஒநாய், போன்ற விலங்குகள் எதிர்ப்பட்டால் நீங்கள் எவ்வளவு அச்சப்படுகிறீர்கள்?! அதுவே கங்காருவைப் பார்த்தால் பயம் ஏற்படுகிறதா?
 
எவ்வளவு சாதுவாக அது தோற்றமளிக்கிறது!
 
ஆனால், ஆஸ்திரேலியாவில் ஆண்டு தோறும் இருபது பேராவது கங்காரு  தாக்குவதால் சாகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
 
கங்காரு எப்போது தாக்கப்போகிறது என்பது, அதைப் புரிந்து கொண்டவர்களுக்குத்தான் தெரியும்!
 
இதோ, சில டிப்ஸ்!

1. கங்காரு எதிர்படும்போது அது உங்களைப் பார்த்து திடீரென்று சிரிப்பதுபோலப் பற்களைக்காட்டும்.அது சிரிப்பல்ல... எனக்குக் கூர்மையான பற்கள் இருக்கின்றன, உஷார்! என்று அர்த்தம்.

2. கங்காரு பலமுறை குனிந்து, தன் பைக்குள் தலையை நுழைத்துத் துழாவும். உங்களைப் பார்த்துப் பயந்து கூச்சப்படுகிறதுÕ என்று நினைப்பீர்கள். உண்மையில், பைக்குள் குட்டி இருக்கிறதா? என்று அது செக் பண்ணுகிறது (குட்டி இருக்கும்போது தாக்குதல் நடத்தாது!).

3. கங்காரு அடிக்கடி திரும்பிப் பின்பக்கம் பார்க்கும். உங்களிடம் இருந்து தப்பியோடுவதற்காக அப்படிப் பார்க்கிறது என்று தோன்றும்.
 
தவறு!
 
கங்காரு பலமாகத் தாக்குதல் நடத்திவிட்டு, படுவேகமாக ஓடிவிடும். ஓடுவதற்கு வசதியாகப் பின்னால் நிறைய இடம் இருக்கிறதா என்று அது பார்த்து வைத்துக்கொள்கிறது!

மைக் டைசன் கணக்கில் தாக்குதல் நடத்தும் பலம் கங்காருவுக்கு உண்டு! மனிதனின் கழுத்தை அது வாலால் அடித்தால் ஆள் அவுட்!

கை, கால் மீது கங்காரு விழுந்தால் எலும்பு முறிவு!

கங்காரு விஷயமே இப்படியிருக்க, உள்ளே மிருகத்துடன் வெளியே வளையவரும் மனிதனை எடை போடுவது எவ்வளவு சிக்கலான,சிரமமான விஷயம்!
 
(தொடரும்ம்)

காமேஷ்

unread,
Sep 1, 2009, 1:53:10 AM9/1/09
to thamizh...@googlegroups.com, பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், திருவிளையாடல், தமிழ்
கங்காருக்குள்ள ஒரு மிருகமா..

பார்த்தா சாதுவா இருக்கே..


~காமேஷ்~



2009/9/1 வில்லன் <oms...@gmail.com>

வில்லன்

unread,
Sep 7, 2009, 1:10:32 AM9/7/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்


சிகாகோ காவல்துறையில் ஒரு சோதனையில் டாக்டர், வழக்கறிஞர், பாதிரியார் போன்ற சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்களோடு பயங்கர கொலைகாரர்களையும் கலந்து வரிசையாக நிற்கவைத்து, புதிதாகப் பணியில் அமர்த்தப்பட்ட மனோதத்துவ மாணவ மாணவிகளை விட்டுக் கொலைகாரர்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை!

ரத்தம் என்பது இயற்கை உருவாக்கிய ஒரு பேராச்சரியம்!
 
உடலுக்குள்ளே ஓடும் ஜீவநதி அது. கடைசி மூச்சும், இதயத்துடிப்பும் நிற்கும் வரை உள்ளே இந்த நதி சளைக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது!

உடலுக்குள்ளே கிளைகள் விட்டுப் படர்ந்திருக்கும் ரத்தக் குழாய்களின் மொத்த நீளம் ஒரு லட்சம் மைல்கள். இது பூமியின் நான்கு மடங்கு சுற்றளவு!

மனித உடலிலுள்ள ரத்தம் (மற்றுமுள்ள திரவங்களைப்) பற்றிய ஆராய்ச்சிக்கு ஸராலஜி என்று பெயர். ÔஸரÕ என்கிற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது இது. ÔஸரÕ என்றால் ஓடுவது - என்று அர்த்தம்!

ரத்தத்துக்கு இரு Ôமுகங்கள்Õ உண்டு! ஒன்று | அது மருத்துவர்களுக்குக் காட்டும் (நமக்கு ஓரளவுக்குத் தெரிந்த) முகம். மற்றது போலீஸுக்குக் காட்டும் முகம்! இந்தத் தொடரில், ரத்தம் மிக முக்கியமாக பங்கேற்பதால், அதன் Ôஇரண்டாவது முகம்Õ பற்றி நாம்  கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது!

மருத்துவ சம்பந்தமாக மட்டும் அல்லாமல் போலீஸாரின் கோணத்திலும் ரத்தத்துக்கு நாமெல்லாரும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். எத்தனை கொலைகாரர்களைக் கண்டுபிடிக்க அது உதவியிருக்கிறது!

ஒவ்வொரு மனிதனின் எடையில் ஒன்பது சதவிகிதம் எடையுள்ள ரத்தம் அவன் உடலில் ஓடுகிறது. அதாவது நூறு கிலோ எடையுள்ள மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் எடை ஒன்பது கிலோ!கொலைகாரர்களுக்கு மிகுந்த பிரச்னை தருவது ரத்தம்!
 
கழுத்தை நெரித்துக் கொன்றால்கூட உடலுக்குள் உறைந்து நின்று போன ரத்தம் பல தகவல்களை போலீஸுக்குத் தெரியப்படுத்திவிடும்!

ஒரு கொலைகாரன் கொலை யின்போது சிதறிய ரத்தத்தை மெனக்கெட்டு எவ்வளவு துப்புரவாக துடைத்து அகற்றப் பார்த்தாலும் அது பிடிவாதமாக எங்கேயாவது ஒளிந்து கொண்டு தன் எஜமானைக் கொலை செய்தவனை போலீஸில் காட்டிக் கொடுக்க போராடும்!
 
ரத்தம் அந்த அளவுக்கு மிகவும் விசுவாசமானது!

சென்ற நூற்றாண்டில் பிரான்ஸில் வசித்த கஸ்டாஃப் மேஸ் என்னும் புகழ் பெற்ற துப்பறியும் நிபுணர் ரத்தத்தின் விசுவாசத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தவர். 1869|ல் பாரிஸில் பியர் வாய்ர்போ என்பவனின் வீட்டில் நடந்த கொலைக்குப் பிறகு, கொலைகாரன் அந்த வீட்டை முழுக்கப் புதுப்பித்திருந்தான்!
 
அப்படியும் விடாமல் வீட்டை நுணுக்கமாக சோதனையிட்டார் மேஸ். தரையில் இரு Ôடைல்ஸ்Õ
இணையும் கோட்டுப் பகுதியில் ஊசி முனையளவு துவாரத்துக்குள் அவர் சற்று தண்ணீரை ஊற்றிப் பார்த்தபோது அது குட்டியாகக் கொப்பளித்தது. அந்த டைல்ஸை அகற்றியபோது உள்ளே ஒரு முற்றுப்புள்ளி அளவு ரத்தம் ஒளிந்து கொண்டிருந்தது.
 
அந்த டைல்ஸ் பகுதியை அப்படியே பெயர்த்தெடுத்துச் சென்று சோதித்து கொலையுண்டவரின் ரத்தம் அது என்று நிரூபித்தார் மேஸ்.
 
பிறகு கொலைகாரன் குற்றத்தை ஒப்புக் கொண்டான்!

ஒரு துளி ரத்தம் கிடைத்தால்கூடப் போதும். காவல்துறையில் உள்ள தடய நிபுணர்கள் அதை வைத்துக் கொண்டு படிப்படியாக துப்பறியத் தொடங்குவார்கள். முதலில் அது ரத்தம்தானா? எனில் அது மனித ரத்தமா? ஆணுடையதா, பெண்ணுடையதா? இறந்தவரின் வயது என்ன? ரத்த குரூப் என்ன? ஏதாவது நோய் உண்டா? என்ன மருந்துகள் உபயோகித்தார்? ரத்தம் சிந்தி எத்தனை மணிநேரம் ஆனது?...

போன்ற பல விஷயங்களை துளியூண்டு ரத்தத்தை வைத்துக் கொண்டு கண்டுபிடிக்க முடியும்!

சில சமயம் ரத்தத்தில் விரல் ரேகைகளும் பதிந்திருக்கலாம்! இறந்தவரின் நக இடுக்குகளில் கொலையாளியின் சதையும் ரத்தமும் ஒளிந்து கொண்டிருக்கலாம் | கொலைக்கு முன் இறந் தவர் போராடியிருந்தால்!
 
ரத்தம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் குறிப்பிட்ட இடத்தில் ரத்தம் சிந்தி, பிறகு அது துப்புரவாக துடைக்கப்பட்டிருக் கலாம் என்று போலீஸ் சந்தேகித்தால் காஸில் மேயர் என்னும் ஒரு சோதனையை மேற்கொள்வார்கள்.
 
அதாவது தரையில் ரத்தம் முழுக்கத் துடைக்கப் பட்டிருந்தாலும் பெனால்ஃப்தலீன் என்னும் கெமிக்கலைஅங்கே விட்டால், அந்த இடம் ரோஸ் கலராக மாறும்! ரத்தம் அங்கே சிந்தப்பட்டிருக்கிறது என்று தெரிந்துவிடும்!
 
சிந்திய ரத்தத்தையும் கத்திக் குத்துக் காயத்தையும் வைத்து எந்த வகை ஆயுதம் பயன்படுத்தப்பட்டது, எவ்வளவு உயரத்திலிருந்து ரத்தம் சிந்தியிருக்கிறது என்பதையெல்லாம் கண்டுபிடிக்க முடியும். கூரையில்கூட ரத்தத்துளிகள் இருக்கலாம்!
 
கொலையாளி ஒரு கோடாலியால் பல முறை உயரத் தூக்கி வெட்டும் போது ரத்தம் கூரைக்குப் பறக்கும்! ரத்தம் தகவல்களை அள்ளித் தரும் ஒரு பொக்கிஷம் என்று போலீஸார் சொல்வது நூறு சதவிகிதம் உண்மை!
 
(தொடரும்ம்ம்)

வில்லன்

unread,
Sep 8, 2009, 12:30:48 AM9/8/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்
முதன்முதலில் காயம்பட்டு ரத்தம் வெளியேறியதைப் பார்த்த மனிதன் எந்த அளவுக்கு கலவரப்பட்டுப் போயிருப்பான் என்பதை நம்மால் ஊகிக்க முடியும்! இப்போதும் தைரியமானÕ பலர் ரத்தத்தைப் பார்த்த மாத்திரத்தில் தடாலென்று மயக்கம் போட்டு விழுவதை வாசகர்கள் பார்த்திருக்கலாம்!

பண்டைய காலத்திலிருந்து ரத்தம் மனிதனைப் பல விதங்களில் ஈர்த்தது. ரத்தத்தைப் பற்றிய பல மூடநம்பிக்கைகள் இன்றளவும் உண்டு. ஒரு விலங்கின் ரத்தத்தைக் குடித்தால் அதன் ஆன்மா நம் உடலுக்குள்ளே போய்விடும் என்கிற நம்பிக்கை உலகெங்கும் உண்டு.

இந்தியா உட்பட, பல நாடுகளில் ஆடு, மாடுகளைப் பலி கொடுத்தவுடன் அதன் ரத்தத்தை பூசாரியும், பிறகு மற்றவர்களும் குடிப்பது தெரிந்த விஷயம்! நார்வேயில் வசிக்கும் பழங்குடி மக்கள் கரடியைக் கொன்று அதன் ரத்தத்தைக் குடித்தால் கரடியின் பலம் தங்களுக்கு வரும் என்று நம்புகிறார்கள்.
 
ஆப்பிரிக்காவில், மஸாய் இன மக்கள் சிங்கத்தைக் கொன்று அதன் ரத்தத்தைக் குழந்தை களின் உடல்
முழுவதும் தடவி விடுகிறார்கள்!

முதன் முதலில் கச்சித மான சிறு கப்பல்களைக் கட்டிய வைகிங்ஸ் இனத்தினரிடையே, எதிரிகளைக் கட்டி கப்பலுக்கு முன்னே படுக்க வைத்து, அவர்களை தரையோடு தரையாகத் தேய்த்தபடியே வெள்ளோட்டம் விட்டு, கடலை சிவப்பாக்குவது ஒரு சம்பிரதாயம்.
 
அதைப் பின்பற்றித்தான் இன்றும் கூட புதிய கப்பல்கள் கட்டி முடித்த பிறகு சிவந்த மது அடங்கிய பாட்டிலை (தேங்காய் மாதிரி) கப்பல் மீது வீசி உடைத்த பிறகே கப்பலை கடலுக்குள் இறக்குகிறார்கள்!

இதெல்லாம் சரி! உண்மையிலேயே ரத்தக் காட்டேரிகள் உண்டா?!

ருமானிய மொழியில் ட்ராகூல் என்றால், ரத்தவெறி பிடித்த சாத்தான் என்று அர்த்தம்! பதினைந்தாம் நூற்றாண்டில் கிழக்கு ஐரோப்பாவில் மக்களைச் சித்ரவதை செய்த ஒரு கொடுங்கோல் பிரபுவுக்கு மக்கள் ட்ராகூலா என்று பெயர் சூட்டினார்கள். பிற்பாடு, உலகெங்கும் இந்தப் பெயர் பரவிப் புகழ்பெற்று விட்டது!
 
இப்போது தமிழ்நாட்டில் ஒரு கொலைகாரன் ரத்தம் குடிப்பதை ஜூ.வி. நிருபர்கள் கண்டுபிடித்தாலும், அவன் ட்ராகூலாதான்!

ஜெர்மனியில் 1828|ம் ஆண்டிலேயே வெற்றிகரமாக ஒரு ட்ராகூலா நாடகம் போட்டார்கள். பிறகு, 1897|ம் ஆண்டில் ப்ராம் ஸ்டோக்கர்  என்பவர் கற்பனை கலந்து எழுதிய ட்ராகூலா புத்தகம் உலகப்புகழ் பெற்று, இன்றுவரை அந்தப் புத்தகத்தின் அடிப்படையில்தான் சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன!

ட்ராகூலா எப்படித் தோற்றமளிக்கும் என்பதையும் மிகுந்த கற்பனையோடு எழுத்தாளர்கள் முடிவு செய்தார்கள்! வெளிறிப் போன முகம், Ôஜில்Õலென்று உடல், நீண்ட கறுப்பு அங்கி! கதவு மூடி இருந்தால்கூடச் சாவித் துவாரம் வழியாக அறைக்குள்ளே ட்ராகூலா புகுந்துவிடும்.

அதன் உடல் அட்டை  மாதிரி! ரத்தம் கிடைக்காவிட்டால் Ôஎகிப்திய மம்மிÕ மாதிரி இளைத்துவிடும். ரத்தம் குடிக்கக் குடிக்கக் கும்மென்று பருமனாகும்!

கூர்மையான கோரைப் பற்கள், நீலநிற விழிகள் உண்டு (இதனால் ஒரு காலத்தில் நீலநிறக் கண்களைப் பார்த்து மக்கள் அஞ்சினார்கள்)

நமக்கெல்லாம் மூக்கில் இரு துவாரங்கள்  உண்டு. ட்ராகூலாவுக்கு ஒரே ஒரு துவாரம்தான்! இறந்துபோன பிறகுதான்
ட்ராகூலா ஆகமுடியும்!

ட்ராகூலாவுக்குச் சூரிய வெளிச்சம் ஆகாது. விடிவதற்குள் மனித இரையைத் தேடிப் பிடித்துக் கடித்து ரத்தம் குடித்துவிட்டுக் கல்லறைப் பெட்டிக்குள் சென்று படுத்துக் கொண்டுவிடும். சூரியன் வந்தால் செத்துப் போய்விடுமா? என்கிற கேள்வி அர்த்தமற்றது. செத்துப் போனவர்தானே ட்ராகூலா ஆகமுடியும்!
 
பின், ட்ராகூலாவை எப்படித் தீர்த்துக் கட்டுவது? முதலில் அது எந்தக் கல்லறைக்குள் இருக்கிறது என்பதை இடுகாட்டுக்குச் சென்று தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும்.

சென்ற நூற்றாண்டில் பூசாரிகள் உதவியுடன் ஒவ்வொரு கல்லறையாகத் தோண்டி ட்ராகூலாவைத் தேடிக் கண்டுபிடிப்பார்கள். உடனே தலையை வெட்டி எடுத்து, அதனுடைய கால்களுக்கு நடுவே தலையை வைத்துவிட்டால் ட்ராகூலா பிறகு எழுந்து வராது!
 
(கல்லறையில் இருப்பது ட்ராகூலா என்று எப்படித் தெரிந்துகொள்வது? ட்ராகூலா என்றால் அது எலும்புக் கூடாக மாறியிருக்காது!) ஊசியால் குத்தினால் ரத்தம் வரும்! ரத்த ஓட்டத்தை நிறுத்த ட்ராகூலாவின் இதயத்தைப் பிய்த்தெடுத்து, கொதிக்கும் எண்ணெயில் போட்டு எரித்துவிடுவார்கள்.

எல்லோருக்கும் தெரிந்த (சினிமா மூலம்) பிரபலமான ஒரு வழி | மரத்தால் செய்யப்பட்ட பெரிய ஆணியை, அதன் இதயத்துக்குள் செலுத்துவதுதான்!

காமேஷ்

unread,
Sep 8, 2009, 1:45:51 AM9/8/09
to thamizh...@googlegroups.com, பண்புடன், தமிழமுதம், முத்தமிழ்
ஹ ஹ ஹ
திருநெல்வேலிக்கே போய் அல்வா சாப்பிட்ட திருப்தி இருக்கு இந்த பதிவில் தான்.

ஆனா எங்க குல தெய்வம் ரத்தக்காட்டேரி தான்..



~காமேஷ்~



2009/9/8 வில்லன் <oms...@gmail.com>

வில்லன்

unread,
Sep 9, 2009, 6:44:11 AM9/9/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்


மொத்தத்தில், உலகெங்கும் மக்கள் ட்ராகூலாவை நம்ப விரும்பினார்கள்!

ஆனால், மனித ரத்தத்தைக் குடிப்பதற்காகவே கொலை செய்கிறவர்கள் நிச்சயம் உலகெங்கும் உண்டு! இந்த வகை கொலைகாரர்களுக்கு ரத்தம் அதீதமான பாலுணர்வை ஏற்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை. இவர்களுக்கும் சினிமா ட்ராகூலாவுக்கும் சம்பந்தம் கிடையாது!

சினிமாவில் ட்ராகூலா மென்மையாக அணைத்துக்கொண்டு, கழுத்தில் சுருக்கென்று தன் கோரைப் பல்லால் கடித்து, வழியும் ரத்தத்தைக் கச்சித மாகச் சுவைக்கும்! அதில் விபரீதமான ரொமான்ஸும் கலந்திருக்கிறது!

(நியூயார்க் நகரில் Ôவாம்ப் பயர் சோதனை ஆராய்ச்சி மையம்Õ ஒன்று உண்டு. அதன் தலைமை மருத்துவ ரான டாக்டர் ஸ்டீபன் ப்லான், பெண் களிடையே எடுத்த ஒரு விசித்திரமான கருத்துக் கணிப்பில் எண்பது சதவிகிதம் பெண்கள் Ôசந்தர்ப்பம் கிடைத்தால் வாம்ப்பயருடன் (குறிப்பாக ட்ராகூலாவுடன் ) உடலுறவு வைத்துக் கொள்வேன்Õ என்று குறிப்பிட்டார்கள்!).
 
நிஜத்தில் பீட்டர் கர்ட்டன், சிக்காடிலோ, டாமர் போன்றவர்கள் கொடூரமாகக் கொலை செய்து ரத்தம் குடித்தவர் களே!

நியூயார்க்கில் வசித்த, எல்லோரிடமும் மென்மை யாகப் பழகிய அறுபது வயது நிரம்பிய ஆல்பர்ட் ஃபிஷ் என்பவன் நூற்றுக் கும் மேற்பட்ட குழந்தை களைக் கடத்திச் சென்று கொன்று ரத்தத்தைக் குடித்தான். பிற்பாடு அவனுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது (66 வயதில் மின்சார நாற்காலியில் உட்கார வைத்துக் கொல்லப்பட்ட மிக வயதான கொலைகாரன் இவனே!).

ஒரு கொடூரமான தமாஷ் | எய்ட்ஸ் நோய் தலைதூக்கிய பிறகு கொலை செய்துவிட்டு ரத்தத்தைக் குடிப்பது சற்றுக் குறைந்து போயிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன!

பெரு நாட்டில் (1990|ல்) ஆக்டேவியோ ப்ளோரெஸ் என்பவன் ரத்தவெறி பிடித்த ஒரு கொலைகாரனாக மாறியிருக்க வேண்டும்! எய்ட்ஸ் பீதி அவனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றியது. மற்றவர் களைக் கொல்வதற்குப் பதில்,
 
அவன் தன்னுடைய உடலின் பல பாகங்களை ரேஸர் மூலம் அறுத்துக்கொண்டு, தன் ரத்தத்தைக் குடித்துக் குடித்து அனீமியா ஏற்பட்டு, (ரத்தத்தைக் குடித்தால் அது வயிற்றுக்குத்தான் போகும். ரத்தக் குழாயில் போய் சேராது!)
துவண்டு மயங்கி விழுந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
 
அங்கே அவனுக்கு அவசர சிகிச்சையும் பிறகு நீண்டகால மனோதத்துவ சிகிச்சையும் தரவேண்டி வந்தது!

‘ஹெமோ என்றால் ரத்தம். ஃபெடிஷ் என்பது, ஒரு பொருள் மீது பாலுணர்வு ஏற்படுகிற அளவுக்குத் தவிர்க்க முடியாத ஈர்ப்புக் கொள்வது!
 
இந்த மன நோய் உள்ளவர்கள் குறைந்தபட்சம் ரத்தத்தை வெறித்துப் பார்ப்பதிலாவது ஈடுபாடு காட்டுவார்கள்!

மெக்ஸிகோவில் ஒரு பெண் தன் ரத்தத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பாட்டிலில் சேர்த்து ஃப்ரிஜ்ஜில் வைத்து, தனக்கு மனச்சோர்வு (டிப்ரெஷன்) ஏற்படும் போதெல்லாம் அதை எடுத்து அணைத்துக்கொண்டு முகர்ந்தாள்! Ôரத்தம் எனக்கு அமைதி தருகிறதுÕ என்றாள் அவள்!

யு.எஸ்|ஸில் ஒரு இளைஞன் இறைச்சிக் கூடங்களுக் குச் சென்று கெஞ்சிக் கூத்தாடி ஆடு, மாடுகளின் ரத்தத்தைச் சுடச்சுட வாங்கிக் குடித்தான்
(பெட்ரோல் நிலையத்துக்குச் சென்று பெட்ரோலைச் சிலர் முகர்வது போலத்தான் இதுவும்!).

ரத்தத்தைக் குடிப்பதிலும், இறந்து போனவருடன் உடலுறவு வைத்துக் கொள்வதிலும் ஈடுபாடு காட்டு பவர்கள் உலகெங்கும் உண்டு!

பண்டைய எகிப்திய அரசகுலப் பெண்கள் இறந்தால், பல நாட்களுக்கு அவர்களுடைய உடல்களை அரண்மனை யிலேயே பாதுகாத்தார்கள். மம்மி தயாரிப்ப தற்காகப் பூசாரிகளிடம் உடலை அனுப்பினால், யாரேனும் மகாராணியின்
உடலோடு செக்ஸ் வைத்துக் கொள்வார்களோ என்ற பயம்தான் காரணம்!
 
ஆனால், குரூரமான இந்த நெக்ரோஃபிலியா என்னும் Ôபர்வெர்ஷன்Õ இன்றும் தொடர்கிறது என்பது உண்மை.

செக்ஸுக்கும் ரத்தத்துக்கும் சம்பந்தம் உண்டு! சிங்கம்கூட உடலுறவு கொள்ளும்போது, பெண் சிங்கத்தின் கழுத்தைக் கடிக்கும்!

மனிதர்களிடையே செக்ஸின்போது நகக்கீறல்கள் ஏற்படுவது சர்வசாதாரணம். அப்போது வலியும் தெரியாது! ரத்தம் கசியும் அந்த இடத்தை முத்தமிடுவதைக் காதலர்கள் விரும்புகிறார்கள்!

ரத்தத்துக்காகவே செக்ஸ், கொலை என்றெல்லாம் போகும்போதுதான், அது Ôபர்வெர்ஷன்Õ ஆகிறது! இந்த Ôபர்வெர்ஷÕனின் பின்னணியில் உள்ள காரணங்களை மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்!

அந்தக் காலத்திலேயே நம் பெரியோர்கள் மிக எளிமையாக, நச்சென்று எழுதிவைத்துவிட்டுப் போன
 
தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும்...
 
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
 
போன்ற பழமொழிகளை நினைத்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!
 
(தொடரும்ம்)

வில்லன்

unread,
Sep 10, 2009, 2:42:07 AM9/10/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்

நாமெல்லோரும் நல்லவர்கள், தப்புத் தண்டாவுக்குப் போக விரும்பாதவர்கள். ஆகவே அந்தப் பழமொழிகள் ஏதோ அன்றாட வாழ்க்கைக்காக, சிறுவயதிலிருந்தே அதிகாலையில் எழுந்திருப்பது, பல்தேய்த்துவிட்டு காபி அருந்துவது, குளித்துவிட்டே சாப்பிட அமர்வது போன்ற நல்ல பழக்கங் களைப் பின்பற்ற வேண்டும் என்பதற் காக மட்டுமே எழுதப்பட்டவை யாக இருக்கும் என்றே முடிவு கட்டுகிறோம்!

யோசித்துப் பார்த்தால், ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைவது குழந்தைப் பருவம்தான் என்பதை நெத்தியடியாகச் சொன்ன பழமொழிகள் அவை என்பது புரியும்!

சித்ரவதை செய்பவர்கள், சாடிஸ்ட்டுகள், சீரியல் கொலைகாரர்கள், தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்கிறவர்கள்.. இப்படி விதவிதமான வன்முறையாளர்களும் உருவெடுப்பது ஐந்து வயதுக்கு முன்னால்தான் என்பது உலகெங்கும் உள்ள எல்லா மனோதத்துவ ஆய்வாளர்களின் ஒட்டுமொத்தமான கருத்து!
 
ஐந்து அல்லது ஆறு வயதுக்குள்ளேயே ஒரு வன்முறையாளன் உருவாகத் தொடங்கிவிடுகிறான்.

மூளைக்குள்ளே இருக்கும் அந்த மிருகம், Ôஎனக்கு எதிர்காலம் உண்டு. இவனை நான் ஆட்டுவிக்க முடியும்!Õ என்று அப்போதே குரூர மகிழ்ச்சியுடன் சிரிக்க ஆரம்பிக்கிறது! அதேசமயம், வருங்காலத்தில் அந்தக் குழந்தை ஒரு முழுமையான, கொடூரமான கொலைகாரனாக ஆவதற்குப் பல அனுபவங்கள் தேவைப்படும் என்பதும் உண்மை!
 
நல்லகாலமாக, குறிப்பிட்ட சில விபரீதமான அனுபவங்கள் ஏற்படாமல் ஒரு குழந்தை தப்பிக்கலாம். அதனால், எதிர்காலத்தில் கொலைகாரனாக ஆகாமலும் போகலாம். இப்படிப்பட்ட குழந்தைகள்தான் அதிகம்!

குழந்தைகளை நாம் அலட்சியமாகக் கருதுகிறோம். பல வீடுகளில் குழந்தைகளின் கண்ணுக்கு எதிரே பல வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்த வன்முறை களெல்லாம் பெரியவர்களுக்கு சகஜமாகக்கூடப் போய்விடு கின்றன. ஆனால், குழந்தையின் மனம் ப்ளாட்டிங் பேப்பர் மாதிரி!
 
பார்க்கிற, அனுபவிக்கிற அத்தனை நிகழ்ச்சிகளும் குழந்தையின் மனதில் ஒட்டிக்கொள்கின்றன!
 
பிற்காலத்தில் மனிதனாக வளர்ந்த பிறகு அந்த அனுபவங்கள்தான் அவனுடைய அடிப்படை பர்சனாலிடியை நிர்ணயிக்கின்றன.

அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு நேர்கிற வேறுசில (ஓரிரு) நல்ல அனுபவங்கள் கூட பிற்பாடு வன்முறையாள னாகப் போக விடாமல் ஒரு மனிதனை திசை திருப்பலாம். மோசமான அனுபவங் களே சிறுவயது வாழ்க்கை என்று ஆகிவிட்டால் அது மிகவும் ஆபத்தானது.

ஒன்று நிச்சயம்! ஒரு குழந்தையின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பின்னணியில், வீட்டில் குழந்தையோடு நெருக்கமாக வாழும் பெரியவர்களின் நடத்தை அஸ்திவாரமாக அமைகிறது!

ஒரு முக்கியமான ஆராய்ச்சியில், பயங்கரமான முப்பத்தாறு கொலைகாரர்கள் வளர்ந்தவிதம் பற்றிய தகவல்களைச் சேகரித்தார்கள்.

அநேகமாக அத்தனை கொலைகாரர்களின் குழந்தைப்பருவமும் மிக மோசமானதாகவே இருந்தன. பாதிக்கு மேற்பட்ட கொலைகாரர்களின் சிறுவயதில், (பத்து அல்லது பன்னிரண்டு வயதில்) அப்பா குடும்பத்தை அநாதரவாக விட்டுப் போயிருப்பது தெரியவந்தது.

பொதுவாக நாமெல்லாம் தாய்க்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகிறோம்.
 
கூடவே தந்தையும் மிக முக்கியம்!
 
ஒருநல்ல அம்மா, நல்ல அப்பா இருவருமே குழந்தை வளர்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.

அப்பா என்கிறவர் மகனுக்கு ரோல் மாடல்Õ. வெளிஉலக பழக்க வழக்கங்களை ஒரு குழந்தை கற்றுக் கொள்வது அப்பாவைப்

பார்த்துதான். வீட்டில் Ôஅப்பாÕ என்கிற அந்த இடம் வெற்றிட மாகப் போய்விட்டால் அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாக ஆன பிறகும் அந்த பாதிப்புகள் தெரியும்!
 
அப்பாவே இல்லாமல் போய்விடுவதைவிட மோசமான அனுபவம் ஒன்றுண்டு.
 
அது மோசமான தந்தை வீட்டில் இருப்பது!
 
(தொடரும்ம்ம்)

வில்லன்

unread,
Sep 11, 2009, 1:12:11 AM9/11/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்

இரக்கமில்லாத, அன்பு காட்டாத, சிறந்த உதாரணமாக நடந்துகொள்ளாத, நல்ல பழக்கங்கள் எதுவுமில்லாத ஒரு வன்முறை தந்தை வீட்டில் இருப்பது தந்தையே இல்லாமல் இருப்பதைவிட மோசமானது!

முப்பத்துமூன்று சிறுவர்களைக் கொலை செய்த ஜான் கேஸி சிறுவயதில், தந்தையைப் பார்த்தாலே நடுங்கினான். குடித்துவிட்டு கொடூரமாக நடந்துகொண்ட அந்த அப்பா தன்னை, ஒரு கண்டிப்பான தந்தை என்று வேறு பெருமையாகச் சொல்லிக்கொண்டார்.

ஒவ்வொரு நாளும் கேஸியைப் பார்த்து, நீ எதற்கும் உருப்படாதவன் என்று ஏசிக்கொண்டே இருப்பது அவர் வழக்கம். சிறு தவறு செய்தால்கூட பெல்ட்Õடால் விளாசுவார் அந்த மனிதர். சிறுவன் கேஸியை உறவினர் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தினார்.அந்த உறவினரைப் பற்றி அப்பாவிடம் கேஸி சொல்லப்போக பெரியவர்களைப் பற்றி இப்படிப் பேசுகிறாயே.. உன் கற்பனை தறிகெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது என்று சொல்லி புரட்டியடித்தார் அப்பா.
 
கேஸியை அடிப்பதற்கு என்று தனியாக பெல்ட் ஒன்றை வாங்கிக்கொண்டு தந்தைவீட்டுக்கு வந்ததைப் பார்த்து அந்தச் சிறுவன் அச்சத்துடன் நடுங்கினான்.

இந்த பயம் காரணமாக கேஸிக்கு Ôவலிப்புநோய்Õகூட வந்தது. அப்போதும்கூட பையன் நடிப்பதாக நினைத்து அவனை எட்டி உதைத்தார் தந்தை. நீ செல்லம் கொடுக்கிறாய்! என்று சொல்லி மனைவியின் முடியைப் பற்றி சுவரில் மோதினார்.
 
மகனுக்கு பெண் உடை அணிவித்து இதுக்குத்தான்டா நீ லாயக்கு என்று சொல்லி, அப்படியே எதிர்க்கடைக்குப் போய் சிகரெட் வாங்கி வரச் செய்தார். கூனிக்குறுகித் துவண்டு போனான் கேஸி. அதேசமயம்... அவனுக்குள்ளே இருந்த மிருகம் தொடர்ந்து சிலிர்த்துக் கொண்டே இருந்தது!

சிறுவயதில் ஏற்படும் மோசமான அனுபவங்கள் விரைவிலேயே பலவிதங் களில் வெளிப்பட ஆரம்பித்து, கடைசியில் மொத்தமாக மிகுந்த வன்முறைச் சிதறல் களோடு வெடிக்கிறது!

வன்முறை நிறைந்த சூழ்நிலையில் வளரும் குழந்தைகளிடம் மூன்று முக்கியமான குணங்களைக் கண்காணித்துக் கண்டுபிடிக்கலாம். இந்தக் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிவார்கள். அடுத்து நெருப்புப் பற்ற வைப்பதை ரசிப்பார்கள்! முதலில் காகிதம், சணல் என்றுதான் ஆரம்பிக்கும்.
 
பிறகு பெரியஅளவில் தீயைப் பார்க்க ஆசைப்பட்டு அதற்கான நடவடிக்கையில் இறங்குவார்கள்!

மூன்றாவதாக நாய், பூனை போன்ற விலங்குகளைச் சித்ரவதை செய்வதில் இன்பம் காணுவார்கள். அவற்றை வெகுநேரம் துடிக்க வைத்து பிறகு கொன்று, பரவசம் அடைவார்கள்.

ஜெஃப்ரி டாமர் சிறுவனாக இருந்தபோது முயல், அணில், ஓணான் போன்ற சிறு விலங்குகளைப் பிடிப்பதற்காகவே அருகில் உள்ள காட்டுக்குள் மணிக்கணக்கில் அலைவான்!

ஸ்டாம்ப் சேகரிப்பு மாதிரி பூனை, அணில், முயல் உடற்பகுதிகளை துண்டு துண்டாக்கிச் சேகரித்து விதவிதமான ஜாடிகளில் வைத்திருந்தான் சிறுவன் டாமர். அவன் வசித்த தெருவில் ஒரு நாய் காரில் அடிபட்டுச் செத்துப்போனது. இரவு அங்கு ஒரு கத்தியுடன் போய் அந்த நாயின் தலையை மட்டும் வெட்டி வீட்டுக்கு எடுத்துச்சென்று ஒரு குச்சியில் செருகி வைத்தான் அவன்.
 
இவற்றையெல்லாம் தன்னைச் சுற்றி பரப்பி வைத்துக்கொண்டு பிறகு சுயஇன்பம் மேற்கொள்வதில் அந்தச் சிறுவனுக்கு மிகவும் விருப்பம் இருந்தது.

ஏதோ மேற்படிப்புÕ மாதிரி டாமர் மனிதத் தலைகளைத் தேடிப் போனது பிற்பாடுதான்!


சாடிஸம் மிகுந்த கொலை காரர்கள், மனித ரத்தம் குடிப்ப வர்களெல்லாம் உலகின் ஏதோ ஒரு மூலையில் உள்ள மிகச் சிலரே.

எழுதுவதற்கு எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்க, மெனக் கெட்டு இப்படி மனநிலை பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய பயங்கரமான தொடர் ஒன்றை நீங்கள் எழுதத்தான் வேண்டுமா?Õ என்கிற ரீதியில் சில சென்ஸிடிவ் வாசகர்கள் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்!

வாசகர்கள் அவசரப் படவேண்டாம். பரபரப் புக்காக இந்தத் தொடரை நான் எழுதவில்லை என்பது, நான் எழுதிய முன்னுரையை மீண்டும்படித்தாலே புரியும்!

இரண்டாவதாக, இந்தச் சில வாசகர்கள் நினைப்பது போலப் பயங்கரமான, குரூர மான வன்முறைச் செயல் களைச் செய்பவர்கள், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் தானா?!

கொடூரமாகத் தொடர்ந்து பாலியல் கொலைகளைச் செய்பவர்களில் மூன்று சதவிகிதத்தினர்தான் மனநிலை பாதிக்கப் பட்டவர்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன!

அதாவது, நூறு கொலை காரர்களில் 97 பேருக்குக் கொலை என்றால் என்ன? நாம் செய்வது சரியா, தவறா? என்பதையெல்லாம் அலசிப் பார்க்கத் தெரியும்.
 
தாங்கள் செய்கிற தவறு புரிந்தும்கூட அவர்களால் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை!

வில்லன்

unread,
Sep 14, 2009, 1:04:16 AM9/14/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்

தனிப்பட்ட கொலைகள் என்றில்லை... ஜெர்மனியில் ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில் கொலை செய்யப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை

ஒரு கோடிக்கும்மேல்! அரசு ஆணையை மேற்கொண்டு இந்த அப்பாவி மக்களை நேரடியாகச் சித்ரவதை செய்து தீர்த்துக் கட்டிய ஆயிரக்கணக்கான அதிகாரிகள், நம்மைப் போன்ற சராசரி மனிதர்களே! மனநோயாளிகள் அல்ல!

ஒவ்வொரு நாளும் ஏதோ அலுவலகம் போவது போலக் கிளம்பிச் சென்று, பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று நூற்றுக்கணக்கானவர்களை வரிசையாக நிற்க வைத்துச் சுட்டுக் கொன்றுவிட்டு, சாவதானமாக வீடு திரும்பிய அந்த அதிகாரிகள், பிறகுகுடும்பத் தோடு இசை நிகழ்ச்சிக்குப் போனார்கள்.
 
தன் குழந்தைகளைக் கொஞ்சினார்கள், பெற்றோரைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று படுக்க வைத்தார்கள்.. சர்ச்சுக்குப் போனார்கள், குழந்தைகளைத் தூங்க வைக்க ஈசாப்புக் கதைகள் சொன்னார்கள்.

கூடவே, மறுநாள் காலையில் இன்னுமொரு நூறு பேரைச் சுடுவதற்காகத் துப்பாக்கியைத் துடைத்துச் சுத்தம் செய்தும் வைத்தார்கள்!

இது எப்படி முடிகிறது? எப்படி இப்படிப்பட்டவர்களால் ஒரே சமயத்தில், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இரண்டு வாழ்க்கைகள் வாழ முடிகிறது?!

பௌதிக விதி மாதிரிதான் இதுவும்! தீயசக்தியை உருவாக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. அந்த மிருகம் நம்கூடவே இருக்கத்தான் செய்யும். ஆனால், (எனர்ஜியைÕப் போல) அதைக் கட்டுப்படுத்தித் திசை திருப்பிவிட முடியும்!
 
அந்தச் சக்திக்கு மாற்று வடிவம் கொடுத்து அதை உருப்படியாகவும் உபயோகிக்கலாம். அழிவுக்கும் பயன்படுத்தலாம். அணுசக்தி மாதிரியேதான்!

மனிதனுக்குள் மிருகத்தைச் சமாளிக்க மூன்று வழிகள் உண்டு புரிந்துகொள்ளுதல், கட்டுப்படுத்துதல், திசைதிருப்புதல் 
 
இதில் முதலாவதாகச் சொல்லப்படும் புரிந்துகொள்ளுதல் மிகவும் முக்கியமானது.

பைபிளில் உள்ள அற்புதமான ஒரு வாசகம் (ஜான் 7:28) | உண்மையை நீ அறிவாய். உண்மை உனக்குச் சுதந்திரம் வாங்கித் தரும்!

துரதிர்ஷ்டவசமாக, உண்மையைப் புரிந்து கொள்ள நாம் விரும்புவதில்லை!

ராபின்சன் ஜெஃபர்ஸ் என்னும் அமெரிக்கக் கவிஞர் அலுப்புடன் சொன்னதுபோல, முக்கால்வாசி மனிதர்கள் புலி இருக்கும் கூண்டுக்குள்கூட இறங்கத் தயார். ஆனால், உண்மையை நேருக்கு நேர் சந்திக்கத் தயாரில்லை!

இந்தத் தொடர், மனநோயாளி களைப் பற்றியது அல்ல. சராசரி மனிதர்கள் எந்தளவுக்குக் கொடூரமான வன்முறை யாளர்களாக ஆகமுடியும் என்பதை விவரிக்கும் தொடர் இது!
 
ஒரே ஒரு உதாரணத்தின் மூலம் இதை நான் விளக்க முடியும்!

டாக்டர் ஸ்டான்லி மில் க்ராம் என்னும் புகழ்பெற்ற மனோதத்துவ டாக்டர், ஒரு சோதனைக்கு ஏற்பாடு செய்தார்.
கண்ணாடி தடுப்புச் சுவர் உள்ள அறையொன்றில் இந்தப் பக்கம் படித்த, பண்புள்ள பத்துப் பேர், அந்தப் பக்கம் பத்துப் பேர் இருக்க வைக்கப்பட்டார்கள்.
 
அந்தப் பக்கத் தில் ஒருவருக்கு இந்தப் பக்கமுள்ள ஒருவர் (பொது அறிவு சம்பந்தமான) கேள்விகள் கேட்க
வேண்டும். மற்றவர் பதில் சொல்லத் தயங்கி னாலோ, விழித்தாலோ, இந்தப் பக்கம் உள்ளவர் ஒரு பட்டனை அழுத்தலாம்.
 
உடனே மற்றவருக்கு மெலிதாக ஷாக் அடிக்கும்! அதை இவர் பார்க்க முடியும்.

கேள்வி கேட்பவர்களுக்கு முன் வைக்கப்பட்ட ஒரு மீட்டரில் ஷாக் அளவு தெரியும். மற்றவர்கள் தப்பான பதில்கள் சொல்லச் சொல்ல, ஷாக் அளவை அதிகரிக்கலாம் என்றும் இவர்களுக்குச் சொல்லப்பட்டது!

கேள்விகள் கேட்கப்பட, மறுபக்கம் உள்ளவர்கள் தயங்க... இவர்கள் ஷாக் அளவை அதிகப் படுத்தினார்கள். உடனே மற்றவர்கள் துடித்தார்கள், அலறினார்கள்...மீட்டரில் ரொம்ப அதிக ஷாக் ஆபத்து ஏற்படலாம் என்று ஒரு எச்சரிக்கையும் இருந்தது.
 
வெகுவிரைவில் எல்லாருமே அந்த அதிக அளவு ஷாக்கை தர ஆரம்பித்தார்கள். மற்றவர்கள் உடனே பதில் சொல்லாவிட்டால், வெறியோடு பட்டனை அழுத்த ஆரம்பித்தார்கள்.

மற்றவர்கள் கதறக்கதற மேலும் மேலும் போட்டி போட்டுக்கொண்டு ஷாக் அளவை அதிகப்படுத்தினார்கள்!

கடைசியில் ஷாக் தரும் கருவிகளை இவர்கள் கையிலிருந்து டாக்டர்கள் ஓடிவந்து பறித்துக் கொண்டார்கள்!

உண்மையில் ஷாக் தரப்படவில்லை. கண்ணாடி அறையின் மறுபக்கம் அமர்ந்தவர்கள் நன்கு நடிக்கத் தெரிந்தவர்கள். அவர்கள் முன்னிலையிலும் மீட்டர் உண்டு. ஷாக் அளவு அவர்களுக்கும் தெரியும்! அதற்கேற்ப துடிப்பது போல, கதறுவது போல அந்த வாலண்டியர்கள் நடித்தார்கள் என்பது வேறு விஷயம்!

வாசகர்களே! இப்போது புரிகிறதா?!

நமக்கு அனுமதி தரப்பட்டு விட்டது. தாராளமாக ஷாக் தரலாம். யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்Õ என்கிற சூழ்நிலை ஏற்பட்டவுடன், எங்கிருந்து இந்த படித்த, பண்பான நல்ல மனிதர்களுக்கு அவ்வளவு கொடூர மனப்பான்மை வந்தது?
 
 
(தொடரும்ம்ம்ம்)

வில்லன்

unread,
Sep 15, 2009, 3:24:01 AM9/15/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்

இந்த வன்முறைத்தனம்தான் ஐந்து வயதிலேயே மூளைக்குள்ளே துளிர்விடத் தொடங்கிவிடுகிறது!
 
அதற்காக, படுக்கையில் சிறுநீர் கழிக்கிற, காகிதங்களுக்குத் தீ வைக்கிற, எறும்பின் கால்களைப் பிய்த்துப் போட்டு, அது நொண்டியவாறு நடப்பதை ரசிக்கிற அத்தனை குழந்தைகளும் எதிர்காலத்தில் கொடூரமான கொலைகாரர்களாகி விடுவார்கள் என்று ஓரேடியாக எடுத்துக்கொண்டு பயப்படத் தேவையில்லை!

இப்படிப்பட்ட பெரும்பான்மையான குழந்தைகள் படித்துப் பட்டம் பெற்று, பெரிய நிறுவனங்களில் மேலதிகாரிகளாகக்கூட ஆகக்கூடும்!

ஏன்.. இந்தக் குழந்தைகளில் ஒருவர் வருங்காலத்தில் ஒரு நாட்டுக்குத் தலைவராகக்கூட ஆகலாம்! ஆனால், குழந்தைப் பருவத்தில் மனரீதியாகப் பாதிப்படைந்தவர்கள்தான் இந்த மனிதர்கள் என்பதும் உண்மை.

இவர்களுடைய மூளைக்குள் வசிக்கும் ருசி கண்ட ஒரு மிருகம் இப்போதைக்கு எப்படியோ கட்டுப் பாட்டுக்குள் இருக்கிறது என்பதும் தர்மசங்கடமான உண்மை.

ஏனெனில் \ பூனை, முயல் போன்ற விலங்கினங்களை சித்ரவதை செய்வது, சாடிஸம் மிகுந்த வன்முறைச் செயல். நெருப்புப் பற்றவைக்கக் காரணம் குழந்தையின் மனதில் அழிவை ரசிக்கும் மனோபாவம் இருப்பதால்!

படுக்கையில் சிறுநீர் கழிப்பதுகூட மனோரீதியில் ஏதோ பிரச்னை மற்றும் குழப்பம் இருப்பதால்தான்!

இந்த அடிப்படையான Ôவன்முறை மனோபாவம்Õ குழந்தை பெரியவனான பிறகும் தொடர்ந்து உள்ளே இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். பிற்காலத்தில், அது வெளிப்படுமா? எப்போது, எந்த வகையில் வெளிப்படும் என்பதுதான் திகிலான கேள்விக்குறி!

எந்த ஒரு உயிரினத்துக்கும் உணவு தேவை. அது மனிதனுக்குள்ளே இருக்கும் மிருகத்துக்கும் பொருந்தும்!

உலகெங்கும் உள்ள மனோதத்துவ ஆராய்ச்சிக் கூடங்களில் Ôவன்முறை தலைதூக்கிச் சீறிப் பாயக் காரணமாக உள்ள உந்துசக்தி என்ன? என்பதற்கு விடைதேடும் ஆராய்ச்சிகள் இன்றளவும் நடந்து வருகின்றன.

ஒரு மனிதன் பிறக்கும்போதே வன்முறையாளனாகப் பிறக்கிறானா, அல்லது சூழ்நிலை மட்டும்தான் அவனை அப்படி ஆக்குகிறதா என்கிற Ôபட்டிமன்றம்Õ இன்னும் முடிவுக்கு வரவில்லை!

ஆனால், வன்முறைக்கு ÔஉரமாகÕத் திகழ்பவை எவை என்கிற கருத்தில் மனோதத்துவ நிபுணர்களிடையே ஒற்றுமை உண்டு!

1. வறுமை?

பெரும்பாலான வன்முறையாளர்கள் வறுமையான குடும்பத்திலிருந்து வருபவர்களே. வறுமை என்பது கோபத்தையும் வன்முறையான எண்ணங்களையும் தூண்டிவிடக்கூடும்தான். அதேசமயம், வறுமையான சூழ்நிலைதான் ஒரு கொலைகாரனை உருவாக்குகிறது என்கிற முடிவுக்கு வருவது அபத்தமானது.
 
எத்தனையோ பொருளாதார சிரமங்கள் வந்தாலும்கூட, தவறான வழிக்குப் போகாதவர்கள், நேர்மையாக வாழ்கிறவர்கள் உலகில் ஏராளமாக உண்டு. மிகக்குறைந்த ஊதியத்துக்காக தன்னை வருத்திக்கொண்டு நேர்மையாக உழைக்கும் சாமான்யர்கள்தான் எத்தனை பேர்!
 
அதேசமயம், இருபத்தெட்டு இளைஞர்களை பாலியல் உறவுக்கு உட்படுத்தி பிறகு அவர்களைக் குரூரமாகக் கொலை செய்த (கலிபோர்னியாவில் வசித்த) பாட்ரிக் கீர்னி லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய ஒரு
Ôஏரோஸ்பேஸ்Õ இன்ஜினீயர்.
 
ப்ளாரிடாவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் ஒய்ல்டர் பதினோறு இளம்பெண்களை கடத்திச் சென்று கொன்றான். செக்ஸ் வெறியனான இவன் சொகுசான பங்களாவில் வசித்த கோடீஸ்வர தொழிலதிபர்!

2. குழந்தைப் பருவத்தில் பாலியல் பலாத்காரம் நிகழ்வது?

இந்தச் சோகமான அனுபவம் பெரிய அளவில் குழந்தையைப் பிற்காலத்தில் பாதிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. குழந்தைக்கு சமுதாயத்தின் மீது வெறுப்பும், ஆழ்மனதில் இனம்புரியாத ஆத்திரமும் ஏற்படுத்துகிற பரிதாபகரமான இந்த அனுபவம் உலகெங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
 
கேஸி, டெட்பண்டி, சிகாடில்லோ, டாமர் போன்ற வெறிபிடித்த கொலைகாரர்கள் அவர்களுடைய சிறுவயதில்
பலவிதங்களில் சித்ரவதைகளையும், பாலியல் பலாத்காரத்தையும் அனுபவித்தவர்களே.
 
இப்படிப்பட்ட அனுபவங்கள் ஒரு குழந்தையை நிச்சயமாக பிற்காலத்தில் கொலை வெறியனாக ஆக்கும் என்று சொல்ல முடியாது. அமெரிக்காவில் டி.வி. Ôடாக் ஷோÕவின் மகாராணி என்று கருதப்படும் ஓப்ரா வின்ஃப்ரே பக்குவமான ஒரு லட்சியப் பெண்மணியாகத் திகழ்கிறார்.
 
சிறுவயதில் அவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டவரே! நமக்குத் தெரியாத, பல சாதனைப் பெண்களும் ஆண்களும் சிறுவயதில் இந்தக் கொடூரத்தை அனுபவித்தவர்களாக இருக்கக்கூடும்.
 
ஏனெனில் குழந்தைகளை எல்லாவிதங்களிலும் துன்புறுத்துவது உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அன்றாடம் நிகழ்கிற ஒரு மௌனமான கொடுமை!
 
(தொடரும்ம்)

வில்லன்

unread,
Sep 16, 2009, 1:20:58 AM9/16/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்

3. மீடியாவில் வன்முறை?

பத்திரிகைகள், டி.வி. மற்றும் சினிமாவில் காட்டப்படும் வன்முறை பலருக்கு கொலை வெறி ஏற்படுத்தக் காரணமாக இருக்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் நிறையவே கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை?

பத்திரிகைகளும் சினிமாவும் வன்முறையாளர்களை உருவாக்கும் என்பது உண்மையானால் உலகெங்கும் உள்ள கொலைகாரர்கள் மற்றும் செக்ஸ் வெறியர்களின் எண்ணிக்கை, யாராலும் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகமாகப் போயிருக்கும்.

சினிமாவில் வரும் வன்முறை, ரசிகர்களுக்கு ஒரு வடிகால் என்று வேண்டுமானால் சொல்லலாம்! தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் அந்த வன்முறை மனிதர்களைத் தொடர்ந்து ஆக்ரமிக்கும் என்பதை மனோதத்துவ நிபுணர்கள் ஒப்புக்கொள்ள வில்லை.

1977|ம் ஆண்டு ப்ளாரிடா மாநிலத்தில் (யு.எஸ்.) பதினைந்து வயது நிரம்பிய ஸமோரா என்னும் இளைஞன் அவனுடைய பக்கத்து வீட்டில் வசித்த ஒரு மூதாட்டியைக் கொலை செய்தான். கோர்ட்டில் அவன் கைதியாகக் கூண்டில் நின்றபோது, டி.வி. சினிமாக்களில், வயலண்ட் ஆன காட்சிகளை தொடர்ந்து பார்த்ததால் எனக்கு அந்த கொலை வெறி ஏற்பட்டதுÕ என்று காரணம் சொன்னான்.

உண்மைதான்! ஸமோராவுக்கு டி.வி. சினிமா அடிக்ஷன் ரொம்பவே உண்டுÕ என்று அவனுடைய வக்கீலும் வாதிட்டார். மனோதத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட, கொலைவெறி ஏற்பட அவை காரணமில்லை என்று வெற்றிகரமாக அவர்கள் வாதிட்டார்கள். நீதிபதியும் ஒப்புக்கொண்டு தண்டனையைக் குறைத்தார்!

ஆனால் ஒன்று! சமுதாயத்தில் நிலவும் வன்முறை சினிமா இயக்குநர்களைக் கவர்ந்து சில படங்களை உருவாக்க வைத்திருக்கிறது.

ஹிட்ச்காக்கின் சைக்கோ படத்தில் வரும் கொலைகாரனுக்கு மாடல் எட் கெய்ன் என்கிற நிஜ கொலைகாரன்தான்! சைலன்ஸ் ஆஃப் தி லேம்பில் வரும் கொலைகாரன் Ôடெட் பண்டிÕயை வைத்து உருவாக்கப்பட்ட காரெக்டர்!
 
டெட்பண்டி, தன் கையில் எலும்புமுறிவு ஏற்பட்டது போல கட்டு கட்டிக்கொண்டு, இரவு நேரத்தில் இளம்பெண் யாராவது தனியாக அந்தப் பக்கம் வரும் சமயம் பார்த்து, வேனுக்குள் ஒரு பெட்டியை வைக்கச் சிரமப்படுவதுபோல நடிப்பான்.
 
உதவ வரும் பெண் வேனுக்கு அருகில் குனியும்போது,அவளை உள்ளே தள்ளி, தன் கை கட்டுக்குள் நுழைத்து வைத்திருக்கும் இரும்புத்தடியை உருவி அவள் மண்டையில் அடித்து மயக்கமுறச்செய்து...
 
பிறகு அந்தப் பெண்ணின் கதி அவ்வளவுதான்!

4. பச்சையான படங்கள் உள்ள செக்ஸ் புத்தகங்கள்

டெட் பண்டியேகூட கோர்ட்டில் நடந்த விசாரணையில் Ôபோர்னோஃக்ராபி புத்தகங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!Õ என்று ஒப்புக்கொண்டான். ஆனால் அதுதான் தன்னைக் கொலை செய்யத் தூண்டியது என்று அவன் சொல்லவில்லை.

இப்படிப்பட்ட செக்ஸ் புத்தகங்களைப் பார்த்துப் பார்த்துப் பிறகு சுயஇன்பம் மேற்கொள்பவர்கள் நிறையப்பேர் இருக்கக்கூடும். பலர் புத்தகங்களால் உந்தப்பட்டு விலை மாதுவைத் தேடிப்போகலாம்!
 
அதற்காக இத்தகைய புத்தகங்கள் கொலை செய்யத் தூண்டுகின்றன என்று சொல்ல முடியாது!Õ என்பதே மனோதத்துவ டாக்டர்களின் கருத்து.
 
ஒரு கொலைகாரன் பெண்ணொருத்தியைக் கொலை செய்த பிறகு படங்களடங்கிய ஒரு Ôபோர்னோÕ புத்தகத்தில் ஒய்யாரமாக படுத்துக் கொண்டிருந்த பெண்ணைப் போலவே அவள் உடலை இருத்தி விட்டுச் சென்றதுண்டு!

அதாவது, கொலைகாரனுக்கு எக்ஸ்ட்ரா கற்பனைகள் தர, செக்ஸ் புத்தகங்கள் சில சமயம் உதவக்கூடும்!

5. பிறப்பு

சில ஆண்டுகளுக்கு முன், மனிதனின் ஜெனடிக் அமைப்பில் கூடுதலாக ஒரு க்ரோமோஸோம் இருந்தாலும், அதீத டெஸ்ட்ரோஸ்டோன் ஹார்மோன் அவனிடம் தளும்பினாலும் வன்முறை தூண்ட படலாம் என்கிற கருத்து முன்வைக்கப்பட்டது.
 
நல்ல காலமாக, வன்முறைக்கு மிக முக்கியக் காரணம் இதுதான் என்கிற வாதத்தை மனோதத்துவ அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (பல காரணங்களில் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது வேறு விஷயம்!) தவிர, இது உண்மையென்றால் முதலிலேயே அதைக் கண்டுபிடித்து வருங்காலக் கொலைகாரர்களைக் கருக்கலைப்பு செய்து, உலகில் கொலைகாரர்களே இல்லாமல் செய்துவிட முடியும்!

6. மனநிலை பாதிப்பு?

இதுபற்றி முன்பே இந்தத் தொடரில் சொல்லியாகிவிட்டது! கொலைகார வன்முறையாளர்களில் மூன்று சதவிகிதத்தினர் தான் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்!

7. மாதவிடாய்க்கு முன்புவரும் கோபம்
 
இது பெண்களுக்கு மட்டுமே பொருந்துகிற விஷயம்! ஒரு கோபக்காரப் பெண் இரும்புத் தடியால் ஒரு போலீஸ் அதிகாரியை புரட்டி அடித்து விட்டாள். இத்தனையும் காரை நிறுத்தி லைசென்ஸ் காண்பிக்கச் சொன்ன சாதாரண காரணத்துக்காக!
 
பிறகு கோர்ட்டில் தன் ஆவேசத்துக்கு மாதவிடாய் கோளாறுதான்  காரணம், அதனால்தான் திடீரென்று கோபவெறி ஏற்பட்டுவிட்டது என்று வாதிட்டாள்.

சைகாலஜிஸ்ட்டுகளைக் கலந்தாலோசித்துவிட்டு அவள் வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டார்!
 
(உலகில் பெண் கொலைகாரர்களின் எண்ணிக்கை ரொம்பக் குறைவு! அப்படியென்றால் பெண்களுக்குள்ளே உள்ள மிருகம் வித்தியாசமானதா? அதுபற்றிப் பிற்பாடு!)
 
(தொடரும்ம்ம்)

வில்லன்

unread,
Sep 17, 2009, 12:43:18 AM9/17/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்

8. இரத்தத்தில் ஏறுமாறான சர்க்கரை அளவு?

1978&ம் ஆண்டில் நடந்த ஒரு வழக்கில் கொலைகாரன் தன் ஆவேசத்துக்குக் காரணமாகச் சொன்னது கொழுப்புச்சக்தி(!) நிறைய உள்ள ஃபாஸ்ட் ஃபுட்ஸ். கோபம் ஏற்படப் பல காரணங் களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொண்டு நீதிபதி அவனுடைய தண்டனைக் காலத்தைச் சற்றுக் குறைத்ததும் நடந்தது!

பீட்ஸா, பர்கர், ஐஸ்க்ரீம், கேக் போன்றவைகளை நிறையக் கபளீகரம் செய்வதால் கொலை உணர்வு ஏற்படும் என்றால்... இன்றைய நாளில் தெருக்குத் தெரு கொலைகாரர்கள் வலம் வருவார்கள்!
 
நினைக்கவே பயமாக இருக்கிறது!

ஆகவே கொலைகாரன் ஆவதற்கு இதுதான் காரணம்Õ என்று எதையுமே குறிப்பிட்டுச்சொல்ல முடியாது என்பதுதான் உண்மை!

மோசமானதொரு வன்முறையாளனாக மாற எக்குத்தப்பாகப் பல காரணங்கள் கூட்டணி அமைக்கவேண்டும்! கொலை மட்டுமே வன்முறைச் செயல்இல்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது.
 
அதுதவிர வன்முறை மிருகம்விளைவிக்கும் மற்ற கொடூரமான செயல்கள்தான் எத்தனையெத்தனை!

தமிழ்நாடு முழுவதும், மிகப்பரவலாக நடக்கும் ஒரு வன்முறைச் செயல் உண்டு. சமூகமும், காவல்துறையும் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால்,மனோதத்துவ ரீதியில் அந்த வன்முறைக்கான காரணங்களை அலசினால், பயங்கரமாக இருக்கும்...!

இன்னொரு கொலை ஒன்றுண்டு!
 
நம் ஊரில் தெருவுக்குத் தெரு அதை நீங்கள் பார்க்கலாம். உயிரைப் போக்கடிக்காமல், ரத்தம் சிந்தாமல் மனதளவில் நிகழ்த்தப் படும் மறைமுகக் கொலை இது!
 
இந்த வன்முறைக்குப் பலியாகிறவர்கள், 99 சதவிகிதம் பெண்களே!

அதாவது, ஒரு பெண் எங்கு சென்றாலும் அவளைப் பின் தொடர்ந்து சென்று திகிலூட்டுவது!  ஒரு பெண்ணின் மனதில் மிகுந்த அச்சத்தையும், மனவேதனையையும் ஏற்படுத்துகிறது. அவளுடைய தன்னம்பிக்கையையும் மன அமைதியையும் அடியோடு குலைக்கிற செயல் இது.

இந்த மிருகங்கள் நேரடி யாக வந்து ஒரு பெண்ணைத் துன்புறுத்தவும் மாட்டார்கள். ஆகவே, போலீஸுக்குப் போகலாமா வேண்டாமா என்று ஒரு பெண்ணால் முடிவுக்கு வரமுடியாத நிலை!

அதேசமயம், ஒரு பெண்ணின் கோணத்திலிருந்து சற்று கற்பனை செய்து பாருங்கள்!
 
காலையில் வீட்டைவிட்டு படி இறங்கியவுடனேயே ‘அவன்’ எங்காவது இருக்கிறானா என்கிற பீதி ஆக்கிரமிக்கும். நிமிர்ந்து பார்த்தால் பெட்டிக்கடை வாசலில்,
 
அதோ அவன்!

பஸ்ஸுக்குள்ளும் அவன் ஏறிக் கொள்வான். கும்பலில் திடீரென்று நிமிர்ந்தால், மிக அருகில் குரூரப் புன்னகையுடன் நிற்பான். ஆபீஸுக்குப் போனால் டெலிபோன் மணி அவ்வப்போது அடிக்கும். வீடு திரும்பும்போதும் பஸ் ஸ்டாப்பில் காத்திருப்பான்.
 
இந்த மிருகங்கள் உங்களைப்பற்றிய (டெலிபோன் நம்பர், பிறந்தநாள், படிக்கும் புத்தகங்கள்..) எல்லா விவரங்களையும் சாமர்த்தியமாகத் தெரிந்து வைத்துக்கொள்வார்கள்!

நீங்கள் தாண்டிச் செல்லும் போது மெல்லிய குரலில் ‘ஹாப்பி பர்த்டே’ என்று சொல்வார்கள். வீட்டில் இரவு 10.30 மணிக்கு போன் அடிக்கும். குரலைத் தாழ்த்தி விகடன் படிச்சாச்சா?’ என்பார்கள். ‘
 
ராஸ்கல்...’ என்று நீங்கள் ஏதேனும் திட்டினாலும் மெல்லிய சிரிப்புச் சத்தம்தான் கேட்கும்!

இந்த வகை ‘ஸ்லோமோஷன்’ துன்புறுத்துதல், பெண்ணின் நிம்மதியை அடியோடு சிதைத்துவிடுகிறது. அலுவலகத்தில் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது.
 
மற்ற சிநேகிதிகள் ‘வேண்டாம் வம்பு’ என்று உங்களை மெள்ள தவிர்க்கத் துவங்குவார்கள்.

போலீஸில் முறையிட்டால், அவர்களுக்கு இருக்கும் ஆயிரம் பிரச்னைகளுக்கு நடுவே ‘இது ஒருபெரிய விஷயமாம்மா?’ என்று அலட்சியம் காட்டக்கூடும். போலீஸுக்கு போன விஷயமும் ‘அவனுக்கு’த் தெரியாமல் இருக்காது.
 
மறுநாள் உங்கள் கூடவே நடந்துவந்து,

போலீஸுக்கு போகிறாயா?.. உன் முகத்தில் ஆசிட் அடிக்க வேண்டியதுதான்!’ என்று மிரட்டலாம். கடைசியில் உச்சகட்ட மன அழுத்தத்துக்கு போய்விடும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

ஒரு பெண்ணைத்தான் ஆண் துரத்த வேண்டும் என்றில்லை!
 
ஒரு ஆண் (ஹோமா செக்ஷுவலாக இருக்கும் பட்சத்தில்) இன்னொரு ஆணைத் துரத்தலாம்! 

வில்லன்

unread,
Sep 18, 2009, 12:57:49 AM9/18/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்


ஒரு பெண் ஆணைத் துரத்துவதும் நடக்கிறது (மேலை நாடுகளில் இது அதிகம்!).
 
குழந்தைகளைப் பின்தொடர்பவர்கள் உண்டு. ஒரு சிறுவன் இன்னொரு சிறுவனை அல்லது சிறுமியை தினமும் பின்தொடர்ந்து பயமுறுத்தக்கூடும்! (இது கொஞ்சம் ஓவர் என்கிறீர்களா?).

நான் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தபோது என்னைவிட பெரிய பையன் ஒருவன் என்னைப் பின்தொடர்ந்ததுண்டு.
பள்ளிக்கூடத்துக்குப் போனாலே அவன் எங்கேயாவது இருக்கிறானா என்று பயத்துடன் பார்ப்பேன். திடீரென்று ஒரு வகுப்பிலிருந்து வெளியே வந்து என்னைப் பார்த்து குரூரமாக புன்னகைப்பான்.
 
இடைவேளையில் குடிநீருக்கு க்யூ நிற்கும்போது திரும்பிப் பார்த்தால், எனக்குப் பின்னால் நெருக்கமாக அவன்\என்னையே முறைத்தபடி!

பிறகு எங்கு என்னைப் பார்த்தாலும் மெள்ள தலையில் ஒரு குட்டு வைத்துவிட்டு போக ஆரம்பித்தான். ஒருமுறை பள்ளியில் மேட்டூர் அணைக்கு எக்ஸ்கர்ஷன் போனார்கள். நானும் அதில் கலந்துகொண்டேன். ‘அப்பாடா’ என்றிருந் தது! சேலம் ரயில் நிலையத்தில் இறங்கி நிமிர்ந்தால், பிளாட்பாரத்தில் அவன்!
 
எக்ஸ்கர்ஷனில் அவனும் வந்திருக்கிறான்! வெறுத்துபோய் விட்டது. என்னைவிட பலசாலியாக வேறு
இருந்தான் அவன். சண்டையும் போட முடியாது!

சேலத்திலிருந்து மேட்டூர் போன வழியெங்கும் தொடர்ந்து என் தலையில் குட்டிக்கொண்டே வந்தான். எக்ஸ்கர்ஷனில் நான் அழுததுதான் அதிகம்!

பிற்பாடு, இதனாலேயே (10&ம் வகுப்பிலிருந்து) திருவல்லிக்கேணி அருகிலுள்ள குப்பங்களில் உள்ள இளைஞர்களை நான் நண்பர்களாக்கிக் கொண்டேன். எதற்கும் பயப்படாத, முரட்டுத்தனமான அந்த இளைஞர்கள் என் மீது மிகுந்த நட்பு உணர்வு கொண்டார்கள்.
 
என்னைத் துன்புறுத்திய பையனை (இரண்டு ஆண்டுகள் கழித்து!) மெரீனாவில் மடக்கி புரட்டியடித்தார்கள். அந்த தர்ம
அடியில் நானும் கலந்துகொண்டு ஒரு வழியாக அவனைப் பழிதீர்த்தேன்!

‘சிறுவர்கள் கூடவா இப்படித் துரத்தித் துன்புறுத்துவார்கள்? என்று புருவம் உயர்த்தும் சில வாசகர்களுக்காக எனக்கு நிகழ்ந்த இந்த அனுபவத்தைச் சேர்த்துக்கொண்டிருக்கிறேன்!

மிகப்பெரிய அளவில் இந்தப் பின்தொடரும் துன்புறுத்தலுக்கு ஆளாகிறவர்கள் பெண்கள்தான். 16வயதிலிருந்து 45 வயது வரை உள்ள பெண்களுக்கு இந்த அனுபவம் அதிகம் நிகழ்கிறது என்கிறது புள்ளிவிவரம்!

ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் அவளைப் பின்தொடர்வதை அவ்வளவு பெரிய தப்பாக நாம் எடுத்துக்கொள்வதில்லை. பெண்ணை ஆண் தொடர்வது இயற்கையான செயல்தானே என்றுகூட சமாதானம் செய்பவர்கள் உண்டு.
 
பண்டைய காலத்திருந்து ஒரு ஆணின் மனதுக்குள் இருக்கும் ‘மிருகம்’ இது! கற்காலத்தில் பெண்ணை ஆண் அப்படித்தான் தொடர்ந்து சென்று கைப்பற்றி இழுத்துச் சென்று உடலுறவு கொண்டான்.
 
இது ஆழ்மனதில் நம் மனதுக்குள் தங்கியிருக்க வேண்டும்!

அமெரிக்காவில் மட்டும், ஓராண்டில் இப்படிப் பெண்களை பின்தொடர்ந்து பிரச்னை செய்ததாக இரண்டு லட்சம் பேரை போலீஸ் எச்சரித்து விட்டிருக்கிறது! நம் நாட்டில் நிச்சயமாக கோடிக்கணக்கில் இந்தவகை ‘மிருகங்கள்’ இருக்க வேண்டும்!

பின் தொடர்வதற்கும் வயசுக்கும் சம்பந்தமில்லை!
 
நியூயார்க்கில் அறுபத்து மூன்று வயதான ஸோல் வாக்ட்லர் என்பவர் தன்னை விவாகரத்து செய்த மாஜி மனைவியை பின் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் துன்புறுத்தினார். ‘உன் மகளை கடத்தப் போகிறேன்
(இவருக்கும் மகள்தான்!) என்று தொடர்ந்து போனில் எச்சரிக்கை செய்வதும்,
 
மனைவி எங்கு சென்றாலும் இரண்டடி பின்னால் அவளைத் திட்டிக்கொண்டே நடப்பதும் அவர் வழக்கம். ‘மகளை கடத்தப் போகிறேன்’ என்று மிரட்டியதும்தான் போலீஸில் அந்தப் பெண் புகார் செய்தார்.
 
வாக்ட்லர் கைது செய்யப்பட்டார். பிறகு அவருக்கு 15 மாதம் சிறைத்தண்டனையும், 30,000 டாலர் (அந்தப் பெண்ணுக்குத்
தரச்சொல்லி) அபராதமும் விதிக்கப்பட்டது.
 
வாக்ட்லர் அந்த மாதம்தான் ‘ரிட்டையர்’ ஆன அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி!

சில பெண்கள், வருடக் கணக்கில் தன்னை ‘ஃபாலோ’ பண்ணுபவனைப் பற்றி வீட்டில்கூட சொல்ல மாட்டார்கள். இது பெரிய தவறு!

‘ஒருவன் அதிகபட்சம் ஐந்தாண்டுகள்தான் ஒரு பெண்ணை பின் தொடர்வான்.
 
அதற்குப் பிறகு அடுத்த கட்டமாக ஏதாவது விதத்தில் நிச்சயமாக அந்தப் பெண்ணுக்கு அவனிடமிருந்து ஆபத்து ஏற்படும்’ என்பது மனோதத்துவ நிபுணர்கள் கருத்து.

வில்லன்

unread,
Sep 23, 2009, 12:02:12 AM9/23/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்

டேவிட் சேப்மேன் என்னும் இளைஞன் தொடர்ந்து சில வருடங் களுக்கு ‘பீட்டில்ஸ்’ இசைக்குழுவைச் சேர்ந்த ஜான் லெனன் எங்கு சென்றாலும் கூடவே ‘ஃபாலோ’ செய்தான்.

‘நீ மட்டும் புகழடையலாமா? நானும் உன்னைச் சுட்டுக் கொன்றுவிட்டுப் புகழ்பெறுகிறேன் பார்!’ என்கிற மனப்பான்மையும் சேப்மேனிடம் இருந்தது.

கடைசியில் நடைபாதையில் வைத்து ஜான் லெனனை சுட்டுக் கொன்றான் அந்த வெறியன்.

பிரபலமானவர்களுக்கு இந்தப் பிரச்னை நிறைய உண்டு. மார்லன் பிராண்டோ, எலிசபெத் டெய்லர், அமிதாப், ரஜினி, கமல் போன்றவர்களுக்கு அவ்வளவு பிரச்னை வராது (அவர்களைச் சுற்றி ஒரு அரண் விழுந்து விடுவதாலும், நாலு இடங்களில் அவர்களைச் சுலபமாக பார்க்க முடியாததாலும் அவர்கள் தப்பிக்கிறார்கள்.
 
ஒரு சமயம் மார்லன் பிராண்டோவை ஒரு புகைப்படக்காரர் எங்கு சென்றாலும் தொடர்ந்தார். திடீரென்று திரும்பி வந்த பிராண்டோ ஓங்கிவிட்ட குத்தில் புகைப்படக்காரரின் மூக்கு உடைந்துவிட்டது!).

ஒருபடி கீழே இருப்பவர் களுக்குத்தான் பிரச்னை! குறிப்பாக டி.வி&யில் தோன்றும் நடிகை களுக்கும், செய்தி வாசிப்பவர் களுக்கும் இப்படிப்பட்ட ‘வெறி ரசிகர்கள்’ இருக்கலாம்.

டி.வி&யில் காமிரா பார்த்து அவர்கள் பேசுவதை ஏதோ தன்னைப் பார்த்துப் பேசுவதாக இவர்கள் நினைப்பார்கள். பொது இடத்தில் அவர்கள் தென்பட்டால் வலியச் சென்று பேச்சுக்கொடுப் பார்கள். இந்தப் பெண்களும் தன்னைப் பற்றி நல்லபடியாக எல்லாரும் நினைக்க வேண்டும் என்பதற்காக மிகவும் கனிவாக உரையாடுவார்கள்.
 
ரசிகரின் பெயரை விசாரிப்பார்கள். Ôசரிதான், அந்த பெண்ணுக்கு ஏதோ தன் மீது ஒரு ஈடுபாடு இருக்கிறதுÕ என்கிற முடிவுக்கு ‘ரசிகர்’ வரக்கூடும். பிறகு தினமும் ஒரு காதல் கடிதம் எழுதுவது போன்ற பல பிரச்னைகள் பின்தொடரும்!

ஆகவே, ‘யார் எவர் என்று தெரியாமல் ஒருவரிடம் அதீத கனிவாக இருப்பதை பிரபல மானவர்கள் தவிர்ப்பது நல்லது’ என்று மனோதத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்!

இப்படிப் பெண்களை வெறுமனே தொடர்ந்து சென்று மறைமுகமாகத் துன்புறுத்தி இன்பம் காணும் மனிதர்களுக்கு உள்ளே வசிக்கும் ‘மிருகம்’ எந்த அளவுக்கு ஒரு மனிதனைத் தூண்டும்? இந்த வகை மிருகங்கள் எத்தனை வகை உண்டு? இவர்களிடமிருந்து தப்பிக்க எந்த வழிகளைப் பின்பற்றுவது?

இந்தக் கேள்விகளைத் தவிர, இன்னொரு கேள்வியும் உண்டு!
 
அது உங்கள் வீட்டுக்குள்ளேயே இந்த மிருகம் வசிக்கிறதா?

ஆமாம்!
 
இப்படி ஓர் மிருகத்தையே சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு திருமணம் செய்துகொண்டு விடும் அப்பாவிப் பெண்களும் உண்டு!

இந்த இதழில் நான் எழுதுகிற தகவல்கள் சிலருடைய மனதில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இங்கே விவரிக்கவிருக்கும் மனித மிருகங்கள் வாசகர்களுக்கு அவ்வளவு ‘அந்நியமாக’ இருக்காது என்பதும் ஒரு காரணம்! இந்த வகை மனிதர்கள் இல்லாத நாடே கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
உலகெங்கும் நிச்சயமாக கோடிக்கணக்கான பெண்கள் இவர்களுக்கு இரையாகி மௌனமாக பல சித்ரவதைகளை
நெடுங்காலமாக அனுபவிக்கிறார்கள். ஒரு பிரத்யேகமான கொடூரமான சிறை இது. அதிலிருந்து தப்பிக்கும் பெண்கள் மிகச் சிலரே!

நான் குறிப்பிடுவது ஒரு குரூரமான சாடிஸ ஆணுக்கு வாழ்க்கைப்படுவது. (உண்மையில் இது வாழ்க்கையில்லை \ நரகம்!)மேலைநாடுகளில் திருமணத்துக்கு முன்பு ‘காதலிக்கும் காலம்’ என்கிற ஒரு அத்தியாயம் உண்டு. நம் நாட்டில் அந்த அத்தியாயம் அவ்வளவாகக் கிடையாது.
 
இங்கே பெற்றோரே பெண்ணை ஒரு மிருகத்துக்கு திருமணம் செய்துவைத்து விடுவதுண்டு!

ஆகவே, நம்மூரில் பெண்ணை மயக்கி அவளைக் காதல் வலையில் வீழ்த்திப் பிறகு மணந்துகொள்கிற கில்லாடித்தனம் ஆணுக்கு அவ்வளவு அவசியப்படுவதில்லை! பெற்றோர் பார்த்து திருமணம் செய்த உடனேயே கணவன் என்னும் மிருகம் நேரடியாக சுயரூபத்தைக் காட்ட முடியும்!

உலகெங்கும் உள்ள இந்த சாடிஸ கணவர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு சங்கமே ஆரம்பிக்கலாம்! அந்த அளவுக்கு இவர்கள் எல்லோருமே ஒரே மாதிரியானவர்கள். கற்பனை சக்தி சற்று அதிகமுள்ளவர்களுடைய அணுகுமுறையில் குரூரமும் அதிகமாக இருக்கும் என்பதுதான் வித்தியாசம்!

எப்படிப்பட்ட பெண்கள் இந்தக் கொடுமையில் சிக்குகிறார்கள்?

சென்ஷி

unread,
Sep 23, 2009, 12:07:54 AM9/23/09
to panb...@googlegroups.com
:-(

தொகுப்பாய் தந்தமைக்கு மிக்க நன்றி வில்லன்.....

2009/9/22 வில்லன் <oms...@gmail.com>



--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

வில்லன்

unread,
Sep 23, 2009, 12:10:56 AM9/23/09
to panb...@googlegroups.com
என்னங்க சோகம்.
 
தொகுப்பாய் தந்தது ஒரு குத்தமா. இன்னும் முடியலை அதுக்குள்ளே தந்தமைக்குனா எப்படி?
 
நிறுத்த சொல்றியளா.......

 

சென்ஷி

unread,
Sep 23, 2009, 12:34:11 AM9/23/09
to panb...@googlegroups.com
இன்னும் முடியலையா. அப்போ சரி! :)

(எப்பவும் போடற தொடரும்ம்ம்ம்ம்ம்.. போடாம விட்டதும் முடிஞ்சுடுச்சு போலன்னு நினைச்சுட்டேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்)

வில்லன்

unread,
Sep 23, 2009, 12:38:05 AM9/23/09
to panb...@googlegroups.com
நாலு ம்ம்ம்ம் போடலை, ஆனா தொடரும்ம்னு 2ம் போட்டிருக்கேனே,
 
கவிதையை மட்டும் பின்நவினத்துவமா இருக்கட்டும், பின்னூட்டத்தையுமா பின்நவீனத்தை புகுத்துவீங்க
 
 
On 9/23/09, சென்ஷி <senshe...@gmail.com> wrote:
இன்னும் முடியலையா. அப்போ சரி! :)

(எப்பவும் போடற தொடரும்ம்ம்ம்ம்ம்.. போடாம விட்டதும் முடிஞ்சுடுச்சு போலன்னு நினைச்சுட்டேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்)

சென்ஷி

unread,
Sep 23, 2009, 12:42:03 AM9/23/09
to panb...@googlegroups.com
2ம் வச்சு தொடரும் போட்டிருக்கீங்களா.... எங்கே எங்கே!?

2009/9/22 வில்லன் <oms...@gmail.com>
நாலு ம்ம்ம்ம் போடலை, ஆனா தொடரும்ம்னு 2ம் போட்டிருக்கேனே,

வில்லன்

unread,
Sep 23, 2009, 12:54:11 AM9/23/09
to panb...@googlegroups.com
கடவுளே கணபதீ................

On 9/23/09, சென்ஷி <senshe...@gmail.com> wrote:
2ம் வச்சு தொடரும் போட்டிருக்கீங்களா.... எங்கே எங்கே!?


வில்லன்

unread,
Sep 24, 2009, 1:40:51 AM9/24/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்

இளமை, சற்றே தாழ்வு மனப்பான்மை, உலக அனுபவமில்லாமை, கொஞ்சம் அப்பாவித்தனம், முடிவு எடுப்பதில் தடுமாற்றம், அண்மையில் மனரீதியாக ஏற்பட்ட ஏதாவது பாதிப்பு, ஏற்கெனவே சின்னதாக ஒரு காதல்தோல்வி&  மேற்கண்ட விஷயங்களில் சில இருந்தால்கூடப் போதும். சுலபமாக இந்தப் பெண்கள் வலையில் வீழ்ந்து விடுவார்கள்!
 
இவர்களை தங்களிடம் சிக்க வைக்கும் ‘பசுத்தோல் போர்த்திய ஓநாய்கள்’ அதற்காக பெரிய நாடகமே ஆடி மயக்குவார்கள்.

துணிச்சலான, சுதந்திரமான பெண்களை இவர்கள் நெருங்க மாட்டார்கள். சுலபத்தில் நம்புகிற, அப்பாவித்தனமான பெண்கள் யார் என்பதை இவர்களால் கண்டுபிடிக்க முடியும். (இந்த வகைப் பெண்களுக்கு மற்றவரை அப்பாவித்தனமாக சார்ந்திருக்கும் குணநலன் இருக்கும்)

முதலில் மயக்கும் படலம்! ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தவுடன், அவளிடம் மிகுந்த அன்புடனும் கரிசனத்துடனும் இந்த மிருகங்கள் நடந்துகொள்வார்கள். தொடர்ந்து வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள் வாங்கித் தருவார்கள். அந்தப் பெண்ணுக்காகக் காத்திருப்பார்கள். கையில் பூங்கொத்து இருக்கும்!

இந்தக் ‘காதல்’ என்கிற பாலம் இருக்கிறதே.. அதற்குக் கீழே நிறைய குப்பைகளைத் தள்ள முடியும்! பாலத்தின் மேலிருந்து பார்த்தால் எதுவும் தெரியாது!

திருமணம் ஆன பிறகு மெள்ளமெள்ள கணவனின் சுயரூபம் வெளியே தெரியும். முக்கியமானது செக்ஸ்! பாவம், அந்தப் பெண் கற்பனை செய்து வைத்திருந்த பாலியல் வாழ்க்கை வேறு மாதிரியானதாக, ‘ரொமான்டிக்’ ஆக இருந்திருக்கும். இங்கே சில புது அனுபவங்களை அவள் சந்திக்க ஆரம்பிப்பாள்!
 
‘என் விருப்பத்தை நிறைவேற்ற மாட்டாயா? இதில் எந்தத் தப்புமில்லை!’ என்று எடுத்துச் சொல்லி
இயற்கைக்கும், வழக்கத்துக்கும் மாறான செக்ஸ் அணுகுமுறைகளுக்கு உடன்பட வைப்பான் கணவன். சம்பிரதாயமான உடலுறவில் அவனுக்கு விருப்பம் அதிகம் இருக்காது.
 
அவள் தன் சுயமதிப்பை இழக்கும்படியான வெவ்வேறு விதங்களில் உடலுறவு கொள்வான். இதில் மனைவிக்கு விருப்பம் இருக்கிறதா என்று கனிவுடன் கேட்பதெல்லாம் இருக்காது. இதனால் அந்தப் பெண்ணுக்கு சுயகௌரவம்
குறைந்துவிடும்.
 
ஆரம்பத்தில் இந்த வகை ‘பர்வெர்ஷ’னுக்கெல்லாம் உடன்பட்ட பிறகு, அணைத்துக்கொண்டு ‘தேங்க்ஸ்’ சொல்வான்.
போகப்போக இதெல்லாம் நின்றுவிடும். ‘இனி நான் விரும்பியதை நீ செய்தாக வேண்டும்’ என்கிற உத்தரவுதான்!

பிறகு பெற்றோர், உறவினருடன் மனைவிக்கு உள்ள தொடர்புகளை அவன் துண்டிப்பான். கணவனுக்குத் தெரியாமல் எதையுமே செய்ய முடியாது. ‘
 
இவர் என்ன டைப்’ என்கிற முடிவுக்கு வரமுடியாமல், குழப்பத்துடனும், அவமானத்துடனும் (பெற்றோரிடம் சொல்லாமல்) கணவனுடன் ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக்கொண்டு வாழ ஆரம்பிப்பாள் அந்தப் பெண்!
 
(தொடரும்ம்ம்)

வில்லன்

unread,
Sep 25, 2009, 1:19:51 AM9/25/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்
லாஸ் ஏஞ்சலீஸில் ஒரு இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் பணியிலிருந்த ஆனி என்கிற பெண்ணை லைல் என்கிறவன் இப்படித்தான் மயக்கித் திருமணம் செய்துகொண்டான். (நம்மூரிலும் ஆயிரக்கணக்கில் ‘ஆனி’க்கள் இருப்பார்கள். சந்தேகமே வேண்டாம்!)
 
லைல் மீது ஆனி அப்பாவித்தனமான காதல் வெறிகொண்டு கடைசியில் அவனுக்கு அடிமையாக, கைப்பாவையாக ஆனாள். மெள்ள மெள்ள ஆனியை மது குடிக்க வைத்தான் லைல். பிறகு போதைப் பொருளுக்குப் பழக்கினான்.
 
அவளிடம் மென்மையாக நடந்துகொள்வதெல்லாம் அடியோடு போய்விட்டது. பசுத்தோலையெல்லாம் தூக்கிப்போட்டுவிட்ட முழு ஓநாயுடன் வாழ்க்கை நடத்த
வேண்டிய நிலை அவளுக்கு வந்துவிட்டது!
 
ஆனியை சங்கிலியாலும், கயிறுகளாலும் பிணைத்து விதவிதமாக சித்ரவதை செய்ய ஆரம்பித்தான் லைல். ‘பெண்களுக்கு பின்புறம் பெரிசாக இருக்க வேண்டும். அதுதான் எனக்குப் பிடிக்கும்!’ என்றான் அவன்.
 
அவள் அவனுக்காக ஏராளமான கொழுப்பு உணவு வகைகளையும், ஐஸ்க்ரீமையும் வாங்கித் தின்றாள். அவ்வப்போது அவள் பின்புறத்தை ‘டேப்’ கொண்டு வந்து அளந்து ‘குட்! இது
போதாது!’ என்பான்!
 
ஆனி பருமனாக ஆனாள். அவளுடைய சுயமதிப்பு அடியோடு போய்விட்டது. பிறகு அவன் பிரம்பு ஒன்றை வாங்கி வந்தான். அவளைக் கட்டிப்போட்டு தினமும் பின்புறத்தை அடித்து விளாசினான் அவன். உடனே ஆயின்மெண்ட்டும் தடவி விடுவான்!
 
லைலை நிர்வாணமாக்கி சங்கிலிகளால் பிணைத்து போட்டோக்கள் எடுத்துக்கொண்டான். ஒரு நோட்புத்தகத்தில் ‘நான் உனக்கு அடிமை. நீதான் எனக்கு எல்லாம். நீ சொல்கிற எதற்கும் கீழ்ப்படிவேன்!’ என்று ஆயிரம் முறை அவளை எழுத வைத்தான்.
 
இதற்குள் பிரம்பு முனை தேய்ந்து விரிசல் விட்டுவிட்டது! உடனே புது பிரம்பு வாங்கி வந்தான்.
 
மனைவியோடு நேர்முக செக்ஸ் அடியோடு நின்றுவிட்டது. தினமும் விதவிதமான ‘பர்வெர்ஷன்’கள்தான். அவளுடைய பின்புறம் வழியாக டார்ச்லைட், உருளையான நீண்ட மரக்கட்டை இவற்றை நுழைத்து அப்படியே இருக்கச் சொல்லி போட்டோ
எடுத்துக்கொண்டான்.
 
உச்சகட்டமாக ஒரு பீரோவுக்குள் அவளைச் சங்கிலியால் பிணைத்து கவிழ்த்து உட்கார வைத்து இரு நண்பர்களை அழைத்து வந்து அவளுடன் உடலுறவு கொள்ளச் செய்தான். பீரோவைத் திறந்தால் அவள் பின்புறம் மட்டுமே தெரியும். முகம் தெரியாது!
 
லைல் காட்டிய கொடூரமும், சாடிஸமும் தறிகெட்டுப்போய் விட்டது. கூடவே, தான் ஒரு வெறிப்பிடித்த ஓநாய் என்பது வெளி உலகுக்குத் தெரியாத அளவுக்கு சர்வசாதாரணமாக நடந்துகொண்டான் அவன்.
 
முழுமையான அடிமையாகப் போய்விட்டால் அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் சிரமம். மனோதத்துவ ரீதியில் சாடிஸம் என்பது பழகிவிடும்! ஆகவே, அந்த நிலையில் கூட, ‘இப்போதும் அவரைத்தான் காதலிக்கிறேன்!’ என்று ஒரு பெண் சொன்னால் ஆச்சரியப்படத்
தேவையில்லை!
 
கடைசியில் அந்தப் பெண்ணுக்கு மனப்பிரமைகள் வர ஆரம்பித்தன  அடுத்தகட்டமாகத் தன்னைக் கணவன் கொலை செய்யப்போகிறான் என்று கற்பனை செய்தாள் அவள். அந்தப் பிரமையே அவளை ஒருவிதத்தில் காப்பாற்றியது!
 
ஒருநாள் தன்னை அடிக்கப் பயன்படுத்திய பிரம்பு, போட்டோக்களை தூக்கிக்கொண்டு தப்பி ஓடினாள் ஆனி. அவள் நிலைமையைப் பார்த்து பெற்றோர் துடித்து திகைத்துப் போனார்கள்.
 
லைலைக் கைது செய்தது போலீஸ். கோர்ட்டில் வேறுவிதமாக பிரச்னை வெடித்தது! அவனுக்கெதிரே சாட்சிக் கூண்டில் நிற்கவே பயந்தாள்
 
லைல். ‘அவன் கண்களை என்னால் சந்திக்க முடியாது!’ என்று அவள் சொன்னபோது அவளுடைய உடல் பதறியது. ‘என் விரல்கள் நடுங்காமலிருக்க ஏதாவது கரடிப்பொம்மை அல்லது தலையணை தர முடியுமா.. அதை அணைத்துக்கொண்டு சாட்சி சொல்கிறேன்..’ என்றாள் ஆனி பரிதாபமாக.
 
நீதிபதி அதற்கு அனுமதி தந்தார்! கோர்ட்டில் வழக்கறிஞர்கள்கூட கண்கலங்கினார்கள்.
 
ஒருவழியாக, கணவன் என்ற பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய அந்த மிருகத்துக்கு நீண்ட கால சிறைத்தண்டனை கிடைத்தது!

வில்லன்

unread,
Sep 29, 2009, 12:37:50 AM9/29/09
to பண்புடன், தமிழமுதம், முத்தமிழ், தென்றல், திருவிளையாடல், தமிழ்
பல காரணங்களால், மனைவி என்பவள் துணிவோடு வெளியே வந்து போலீஸில் புகார் கொடுக்கத் தவறுவதால் இப்படிப்பட்ட கொடூரமான மனிதர்கள் மாட்டிக்கொள்ளாமல் ஒவ்வொரு ஊரிலும் வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பசி, பாலுணர்வு, பயம், பளீரிடும் கோபம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளின் தலைமைச் செயலகமான நடுமைய மூளை லிம்பிக் பகுதி மட்டுமே துடிப்போடு இயங்க, அதேசமயம் முன் மூளைப்பகுதி  நல்லவிதமாக வளர்ச்சியடையாமல் போனால், அந்த மனிதன் மிருக வெறியோடு வாழ்வானா?

ஒரேயடியாக அப்படி எதிர்பார்க்க முடியாது! அந்தப் பாதிப்பு உள்ளவர்கள் உணர்ச்சிகளின் கைப்பாவையாக இருப்பார்கள் என்றாலும், அவர்கள் எல்லோரும் கொலை வெறியர்களாக இருப்பதில்லை என்கிற உண்மை சோதனைகள் மூலம் தெரிய வர.. இது விஞ்ஞானிகளை
நெருடியது!

அதாவது, முன் மூளைப் பகுதி வளராத சிலர் மந்தபுத்தியுடன், நினைத்ததை உடனே செய்கிற குணமுடையவர் களாக இருந்தார்களே தவிர, கொலைகார புத்தி கொண்டவர்களாக இல்லை! சிலர்தான் அப்படி!

அப்படியென்றால் மனிதனின் வன்முறைக் குணத்துக்கு வேறு என்னதான் காரணம்?!

ஹார்மோன்ஸ்?

மூளைக்குள் ஹார்மோன்ஸ் அளவு ஏறுமாறாக இருந்தாலும் மனிதனிடம் வன்முறை தூண்டப்படுகிறது!

முரட்டுத்தனமும், முன்கோபமும், உள்ளவர்களின் மூளையில் டெஸ்ட்டோஸ்டரோன் ஹார்மோன் அதிகம் சுரப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பல துறைகளில் பணிபுரிபவர்களை வரவழைத்து பெரிய அளவில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், மிக அதிகமான அளவில் மூளைக்குள் டெஸ்ட்டோஸ்டரோன் சுரப்பது எப்படிப்பட்ட மனிதர்களுக்கு என்பது தெரியவந்தது. 

அவர்கள்  வழக்கறிஞர்கள்! மிகக் குறைச்சலான அளவு ஹார்மோன் இருந்தது யோகா டீச்சர்களிடமும், மதபோதகர்களிடமும்!

ஆகமொத்தத்தில், வன்முறைக்கான ஒரு குறிப்பிட்ட காரணத்தை இதுவரை எந்த விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. ஒருவன் பிற்காலத்தில் கொலைகாரனாகப் போகிறான் என்பதையோ, மென்மை யாகச் சிரித்துப் பேசும் ஒருவன் நாட்டுக்குத் தலைவனான பிறகு கொடூரமான சர்வதிகாரியாக மாறப் போகிறான் என்பதையோ முன்கூட்டியே சொல்ல முடியாது!

அதோ, தொட்டிலில் புன்னகையோடு படுத்திருக்கும் அழகிய குழந்தை பிற்காலத்தில் வக்கிரமான சாடிஸ்ட் ஆகுமா, அல்லது பக்குவமடைந்த ஞானியாக ஆகுமா? முதலிலேயே இதை விஞ்ஞானப்பூர்வமாகக் கண்டுபிடிக்க முடியுமா? 

ஊகூம்!

மூளை அந்த அளவுக்கு விசித்திரமான ஒரு ஆச்சர்யம்! ஆனால், பல விஷயங்கள் ஒரு சரியான விகிதத்தில் கலந்தால், மூளைக்குள் வன்முறை பிறக்கிறது! யாருக்கு எது என்ன சதவிகிதம் தேவைப்படும் என்பதைச் சொல்வது முடியாத காரியம். 

மனிதனுக்குள்ளே இருக்கும் மிருகத்தைத் தூண்டிவிட்டு, வெறியோடு பாயச் செய்யும் ‘உந்துசக்தி’ \ ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கிறது!

ரத்த வெறியன் சிக்காடிலோ முதல் கொலை செய்தபோது, அவன் வயது 44. பிறகு, பன்னிரண்டு வருஷங்களில் (ஏதோ இழந்த வருடங்களை ஈடுசெய்வது போல) 52 சிறுவர்களையும் சிறுமிகளையும் அவசர வெறியுடன் மடமடவென்று கொன்று ரத்தம் குடித்தான் அவன்!

44 வயதில் ‘கொலை செய்ய ஆரம்பி’ என்று அவனுக்கு ஆணையிட்டது எந்த சக்தி?

ஜெஃப்ரி டாமரை எடுத்துக்கொண்டால், அவன் கடத்திக் கொண்டு வந்த ஆண் அல்லது பெண்ணை நிர்வாணமாக்கிப் படுக்க வைத்துக்கட்டிப் போடுவான். பிறகு தானும் நெருக்கமாக படுத்துக்கொண்டு ‘இரை’யை அணைத்தவாறு, அந்த உடலின் கதகதப்பை ரசிப்பான். 

கூடவே, மார்புப் பகுதியில் காதை வைத்துக்கொள்வான். ‘லப்டப்’ என்னும் இதயத்துடிப்பு காதில் கேட்கக் கேட்க, அவனுக்குள் உள்ள மிருகம் சிலிர்த்துக்கொள்ளும். உடனே கொலைவெறி துவங்கும். பிறகு சித்ரவதை கடைசியாகக் கொலை.

ஒருவனின் இதயத்துடிப்பும் உடலின் கதகதப்பும் டாமருக்குக் கொலைவெறி ஏற்படுத்தியது எப்படி?

‘வன்முறையாளன் உருவாவது எப்படி?

சென்ஷி

unread,
Sep 29, 2009, 12:48:07 AM9/29/09
to panb...@googlegroups.com
ப்ப்படுபயங்கரமா இருக்குதுப்ப்பா :-(

2009/9/28 வில்லன் <oms...@gmail.com>

வில்லன்

unread,
Sep 30, 2009, 1:09:52 AM9/30/09
to தமிழ், பண்புடன், முத்தமிழ், தமிழமுதம், தென்றல், திருவிளையாடல்
‘வன்முறையாளன் உருவாவது எப்படி?’ என்கிற கேள்விக்கு புகழ்பெற்ற அமெரிக்க மனோதத்துவ டாக்டர் பார்க் எலியட் டையட்ஸ் கச்சிதமாக ஒரு பதில் தந்தார்.

 ‘வன்முறைக்கான சரியான ஜீன்களும் சரியில்லாத பெற்றோரும் இணைந்தால் போதும்

‘இன்னொரு டெட்பண்டி, டாமர், கேஸி, சிக்காடிலோ போன்ற கொலைகாரர்களை விஞ்ஞானப்பூர்வமாகத் திட்டமிட்டு உருவாக்க என்னவெல்லாம் வேண்டும்?’ என்று ஒரு கருத்தரங்கில் அவரிடம் கேட்கப்பட்டது.

‘மனைவியையும் குழந்தைகளையும் கெட்ட வார்த்தைகளால் திட்டித் தாக்குகிற, வன்முறை நிறைந்த தந்தை தேவை. ஹிஸ்டிரியாவும், குடிப்பழக்கமும், முன் கோபமும் உள்ள அம்மாவும் தேவை. குழந்தையை அம்மா மிக மோசமாக நடத்த வேண்டும்.

 12 வயதுவரை மகனை, அம்மா தன் பக்கத்தில் படுக்க வைத்துக்கொள்ள வேண்டும்.செக்ஷுவலாக மகனைத் தூண்டிவிட்டுப் பிறகு அதைக் குற்றம் என்று சொல்லி, அவனைக் கட்டிப்போட்டு பிரம்பால் விளாச வேண்டும். அம்மாவுக்குக் கள்ளக் காதலர்கள் இருக்க வேண்டும்.

மகன் எதிரிலேயே அவர்களுடன் உடலுறவு கொள்வது, மகனை நீலப்படங்களைப் பார்க்க அனுமதிப்பது, நல்ல நண்பர்கள் அவனுக்கு இல்லாதது....

தவிர.. மூளையின் முன்பகுதி வளர்ச்சியடையாமை, அதீத டெஸ்ட்டோஸ்டரோன் சுரத்தல்.. இத்தனை களேபரமான விஷயங்களும் குறிப்பிட்ட விகிதத்தில் ஒன்றுசேர்ந்தால், அநேகமாக 99 சதவிகிதம் சிறுவனின் மூளைக்குள் வன்முறைக்கான வெடிமருந்து முழுமை அடைந்து தீப்பற்றிக்கொண்டு, ஒரு சீரியல் கொலைகாரன் உருவெடுப்பான்!’’ என்றார் டாக்டர் டையட்ஸ்.

ஏதோ டி.வி. சமையல் நிகழ்ச்சியில் கொஞ்சம் சீரகம், கொஞ்சம் பூண்டு, ஒரு தேக்கரண்டி நெய்.. என்று ‘ரெஸிபி’ சொல்வதுபோல டாக்டர் விளக்கம் சொல்ல, கேள்வி கேட்டவர்கள் வெறுத்துப்போய் உட்கார்ந்துவிட்டார்கள். ஆனால், உண்மை அதுதான்!

சரி, பெண்களுக்கும் இந்த அனுபவங்கள் மூளைக்குள் நிகழ்கிறதா? பெண் வன்முறையாளர்களின் அணுகுமுறை எப்படி அமையும்?

உதாரணமாக, பெண் களில் சாடிஸ சீரியல் கொலைகாரர்கள் ஏன் இல்லை?!

பல வாசகர்களின் மனதுக்குள் இந்தக் கேள்விகள் எழாமல் இருந்திருக்காது!

புள்ளிவிவரப்படி, சீரியல் கொலைகாரர் களில் ஐந்து சதவிகிதம்தான் பெண்கள்!

மூளை, அதனுள் உள்ள லிம்பிக் பகுதி, அமிக்டலா.. எல்லாமே ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. இருப்பினும், ஏன் பெண்களில் சீரியல் கில்லர்கள்Õ உருவாகவில்லை?!

கள்ளக்காதல், பணம், பொறாமை போன்ற காரணங்களுக்காகத் திட்டம் போட்டுக் கொலை செய்யும் பெண்கள் உண்டு. ஆனால் கொலை செய்வதில் ஆர்வம், பரவசமெல்லாம் பெண்களுக்கு இருப்பதில்லை!

அமெரிக்காவில், அறுபத்துநான்கு வயதான டொராத்தி ப்யூண்டா என்னும் பெண்மணி, தன் வீட்டு மாடியை வயதான, தனித்துவிடப்பட்ட பெண்களுக்கு வாடகைக்கு விட்டு, பிறகு அவர்களை விஷம் கொடுத்துக் கொன்றாள்| பணம் மற்றும் நகைகளுக்காக 1988|ல் (இப்படி ஒன்பது கொலைகள் செய்ததற்காக) டொராத்திக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.

ஆண்களுக்கு முரட்டுத்தனத்தையும் வெறியையும்  ஏற்படுத்தும் டெஸ்ட்டோஸ்டரோன் ஹார்மோனின் கிளர்ச்சி பெண்களிடம் கிடையாது. அது சற்றுப் பிரத்யேகமான ஆண் ஹார்மோன்!

ஆனால், அமெரிக்காவைப் பரபரப்புக்குள்ளாக்கிய ஒரு பெண் சீரியல் கொலைகாரி உண்டு! அவள் | அய்லீன் கரோல் வூர்னோஸ்!

சிறுவயதில் அநாதரவாக விடப்பட்ட வூர்னோஸ், பிற்பாடு விலைமாதுவாக ஆனாள். ஃப்ளாரிடாவில் இரவு நேரத்தில், காரில் வரும்நடுத்தர வயது ஆண்களிடம் லிஃப்ட் கேட்டு, அவர்களுடைய காமப்பசியைத் தீர்த்துப் பணம் வாங்கிக்கொள்வது அவள் தொழில்.

ஓரிரவு வூர்னோஸை காரில் அழைத்துச் சென்ற ஒருவன், அவளிடம் மிகவும் முரட்டுத்தனமாக, சாடிஸத்துடன் நடந்துகொண்டான். கோபம் கொண்ட வூர்னோஸ், அவனுடைய கைத்துப்பாக்கியைப் பறித்து, அவனைச் சுட்டுக் கொன்றாள்.

பிறகு, நான் எதற்காக மெனக்கெட்டு இந்த ஆண் ஓநாய்களின் ஆசையைப் பூர்த்தி செய்து பணம் சம்பாதிக்க வேண்டும்? ஜஸ்ட் லைக் தட்.. சுட்டுத் தள்ளிவிட்டுப் பணம், வாட்ச், செயினையெல்லாம் எடுத்துக்கொண்டு நான்பாட்டுக்குப் போகலாமே?!Õ என்கிற எண்ணம் அவளுக்குத் தோன்றியது!

முதல் கொலைக்காக போலீஸிடம் அவள் சிக்கவில்லை. அது அவளுக்குக் கூடுதல் துணிச்சலைத் தந்தது! வூர்னோஸ் சீரியல்

கொலைகாரியாக மாறினாள். மனதில் இச்சையைத் தேக்கிக்கொண்டு காரில் வந்த பல ஆண்கள், அவளிடம் சிக்கி உயிரிழந்தார்கள். ஏழு கொலைகளுக்குப் பிறகு போலீஸிடம் மாட்டிக் கொண்ட அவளுக்கு, நீதிபதி மரண தண்டனை விதித்தார். 

ஃப்ளாரிடா மாநிலத்தில், மின்சார நாற்காலியில் இருத்தி வைக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் பெண் சீரியல் கொலைகாரி வூர்னோஸ்தான்!

(தற்போது அவளுடைய வாழ்க்கை  படமாகத் தயாரிக்கப்பட்டு, வூர்னோஸாக அதில் நடித்த சார்லீஸ் தெரான் என்கிற நடிகை சிறந்த நடிப்புக்காக ஆஸ்கர் விருது பெற்றார். விரைவில் சென்னைக்கு ’ வரவிருக்கிறது!)

வூர்னோஸ் செய்த கொலைகள் செக்ஸுக்காகவோ, ஆர்வத்துக்காகவே, பரவசத்துக்காகவோ இல்லை என்பதை வாசகர்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள்!

வில்லன்

unread,
Oct 5, 2009, 12:24:35 AM10/5/09
to தமிழ், பண்புடன், முத்தமிழ், தமிழமுதம், தென்றல், திருவிளையாடல்
ஒரு ஆண் தன்னந்தனியாக, கொலைவெறியோடு செயல்படுவது வேறு! சில நேரங்களில் கொலைவெறியும் கவர்ச்சியும் இணையும்போது அந்த ஆண், ஒரு கூட்டத்தைத் தன் கைப்பிடியில் கொண்டுவரக்கூடும்!

என்ன சொன்னாலும் கேட்கிற, அடிமைப் புத்தி உள்ள ஒரு கூட்டம் அவனிடம் சிக்கிக்கொண்டால், அதன் விளைவுகள்... 

அது ஒரு வித்தியாசமான பயங்கரம்..!

நவம்பர் 18, 1978.. அமெரிக்காவின் தென்கோடியில் உள்ள கயானாவைச் சேர்ந்த ‘ஜோன்ஸ் டவுன்’ என்கிற பகுதியில் சுமார் ஆயிரம் பக்தர்கள் கூடியிருக்கிறார்கள். உயரமான மேடை.. ஒலிப்பெருக்கியில் பக்திமயமான இசை..

திடீரென்று பக்தர்கள் பரவசமாக கூக்குரல் எழுப்ப, அதோ, மேடைமீது தோன்றுகிறார் ரெவரெண்ட் ஜேம்ஸ் வாரன் ஜோன்ஸ். இசை பணிவோடு நிறுத்தப்படுகிறது.

காற்றைக் கிழித்துக்கொண்டு எதிரொலிக்கும் கம்பீரமான குரலில் ஜேம்ஸ்.. அதாவது, ஜிம் ஜோன்ஸ் முழங்குகிறார்.

‘என் அருமைக் குழந்தைகளே! இந்த உலகைப் பொறுத்தவரையில், இதுவே நமது கடைசி சந்திப்பு!
நாம் எல்லோரும் இறக்கப் போகிறோம். வேறுவழி இல்லை! நாம் உயிர்த் தியாகம் செய்யாவிட்டால், விளைவுகள் விபரீதமாகப் போய்விடும்!

வெளியிலிருந்து நெருங்கிக் கொண்டிருக்கும் தீய சக்திகள் நம்மை அழிக்க முடிவெடுத்துவிட்டன. அவற்றிடம் சிக்கப்போகிறோமா அல்லது இறைவனிடம் சரணடையப் போகிறோமா?

நான் உங்கள்மீது வைத்திருக்கும் அதே அன்பு என்னிடமும் உங்களுக்கு இருப்பது உண்மையானால், என்னோடு உயிர் துறக்கத் தயாராகுங்கள்! கவலை வேண்டாம். இது இறைவனின் கட்டளை! நாளை நாம் அனைவரும் மீண்டும் உயிர்த்தெழுவோம். சொர்க்க லோகமான ஒரு புதிய உலகத்தில் நாம் மீண்டும் சந்திப்போம். நாளை நமது! பக்தர்களே! என்னோடு வருவீர்களா?Õ | உருக்கமாக, ஆவேசமாக ஜிம் ஜோன்ஸ் கேள்வி எழுப்ப,

 ‘வருவோம், வருவோம்..!’ என்று கூட்டம் இடியோசை போல முழங்குகிறது. அதைத் தொடர்ந்து..

சயனைடு விஷம் கலக்கப்பட்ட மினரல் தண்ணீர் அடங்கிய பெரிய ‘ட்ரம்’களை சிஷ்யர்கள் கொண்டுவந்து நிறுத்துகிறார் கள். அதில் லெமன் ஜூஸ் கலக்கப்பட்டது. ‘இந்த பானத்தைக் குடித்த, சில நிமிடங் களில் நீங்கள் இறந்துவிடுவீர்கள். 

ஆகவே, கட்டுப்பாட்டுடன், குடும்பம் குடும்பமாக க்யூ வரிசையில் வந்து பானத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். முதலில் குழந்தைகள்!’ ஒலிப்பெருக்கியில் ஜிம் ஜோன்ஸ் ஆணையிடுகிறார். வரிசையாக வந்து, முதலில் குழந்தைகளுக்கு பெற்றோர் விஷக் குடிநீரைப் புகட்டிவிடு கிறார்கள்.

கைக்குழந்தைகளின் வாயைப் பிரித்து, சிரிஞ்ச் மூலம் நர்ஸ்கள் சயனைடு விஷத்தைப் பீய்ச்சுகிறார்கள். சில சிறுவர்கள் முரண்டுபிடிக்கிறார்கள். சிஷ்யகோடிகள் பலவந்தமாக அவர்களைப் பிடித்துக்கொண்டு, விஷத்தைக் குடிக்க வைக்கிறார்கள். கடைசி நிமிடத்தில் மரண பயம் காரணமாகத் தப்பிக்கப் பார்க்கும் சிலர், துப்பாக்கி முனையில் குடிக்க வைக்கப்படுகிறார்கள். 

ஒரு வழியாக ஜிம் ஜோன்ஸின் திருநாமத்தைக் குரல் நடுங்க உச்சரித்தவாறு, அமைதியாகவே அத்தனை பேரும் விஷம் குடிக்க.. ‘ட்ரம்’கள் அகற்றப்படுகின்றன.

சில நிமிடங்களில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தள்ளாட ஆரம்பிக்க, தலைமை சிஷ்யர்கள் அவர்களைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று, அகன்ற புல்தரையில் வரிசையாகப் படுக்க வைக்கிறார்கள். பிறகு ஓரமாக நின்று, சிஷ்யர்கள் குவளையில் விஷம் எடுத்து
சாவதானமாகக் குடிக்கிறார்கள்.

‘எல்லோரும் கைகோத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் பக்கத்தில் இருக்கும் உங்கள் சகோதரனை, சகோதரியை அரவணைத்துக் கொள்ளுங்கள். முடிவு நெருங்கிவிட்டது. புதிய ஆரம்பம் துவங்கி விட்டது!’  கிறீச்சிடுகிறார் ஜிம் ஜோன்ஸ்.

படுத்திருந்த அத்தனை பேரின் உடல்களும் துடிக்கின்றன. ‘என்ன இது?’ என்பதுபோல எல்லோருடைய மூக்கு, வாய் வழியாக சிவந்த ரத்தம் எட்டிப் பார்க்கிறது. 

பிறகு.. மரண அமைதி..! சூரியன் தொலைவிருக்கும் மலைகளுக்குப் பின்னே மறைகிறான். மெள்ள இருள் சூழ்கிறது

வில்லன்

unread,
Oct 6, 2009, 12:57:35 AM10/6/09
to தமிழ், பண்புடன், முத்தமிழ், தமிழமுதம், தென்றல், திருவிளையாடல்
முயற்சி செய்தேன்.. முடிந்த வரை முயற்சி செய்தேன்..’ என்று உரக்கக் குரலெழுப்பிய ஜிம் ஜோன்ஸ் வானத்தை அண்ணாந்து பார்த்து, ‘அம்மா.. அம்மா..!’ என்று அலறுகிறார்.

மறுவிநாடிÔடுமீல் என்ற சத்தம். தன் நெற்றிப்பொட்டில், ஜிம் ஜோன்ஸ் வைத்திருந்த கைத்துப்பாக்கி இயங்குகிறது. மூளை சிதற, சரிந்து விழுந்த ஜிம் ஜோன்ஸின் உயிர் பிரிகிறது!

சற்று முன்கூட்டியே தகவல் போய், ஹெலிகாப்டர்களில் போலீஸ் அந்த இடத்துக்கு விரைந்தும்.. காலம் கடந்துவிட்டது. அவர்கள் வானிலிருந்து பார்த்தபோது, பசுமையான பரந்த வெளியில் உடல்கள் இறைந்துகிடந்தன. கவர்ச்சி மிகுந்த ஒரு போலி சாமியார், பக்தகோடிகளை உச்சக்கட்ட மாக எந்த அளவுக்கு அடிமைகளாக இயக்க முடியும் என்பதற்கு ஜிம் ஜோன்ஸ் ஓர் உதாரணம்!

நம் நாட்டுக்கு இணையாக, அமெரிக்காவில் சுமார் 2,500 ‘பக்தி’ இயக்கங்கள் (CULTS) உண்டு! அவற்றில் பல விபரீதமானவை!

CULTS என்பது இப்போது கெட்ட வார்த்தையாக ஆகிவிட்டது! உண்மையில் CULTS என்றால், ஒரு புதிய மதம் அல்லது தத்துவத்தை உருவாக்கிக்கொண்டு இயங்கும் ஒரு கூட்டம். அநேகமாக இதற்கு தனிநபர் ஒருவர் கவர்ச்சிமிகுந்த தலைவராக அல்லது குருவாக இருப்பார். 

அதாவது, தனிநபர் வழிபாடுதான் இது .இதுபோன்ற மத இயக்கங் களின் தலைவனாக இருப்பவர் களுக்கு வயது ஒரு பொருட்டாகக் கருதப்படுவதில்லை. அவர் தக்கனூண்டு பையனாகவும் இருக்கலாம், தாடிக் கிழவனாக வும் இருக்கலாம்! நாட்டில் பொருளாதாரப் பிரச்னைகளும், மக்களிடையே ஒருவிதத் தவிப்பும் மன உளைச்ச லும் அதிகமாகும் காலங்களில் இப்படிப்பட்ட புதிய மத இயக்கங்கள் தோன்றும்!

மனிதன் ஒரு சமூக விலங்கினம் (சோஷியல் அனிமல்). தனிமையும், நண்பர்கள் இல்லாமையும் அவனைப் பைத்தியம் பிடிக்க வைத்துவிடுகிறது. அதுபோன்ற தருணங்களில், புதிய ‘மதத்தலைவர்’ அல்லது போலிச் சாமியாரின் வலையில் அவன் சுலபமாக விழ நேர்கிறது. அவர் அவனை அரவணைத் துக் கொள்ளும்போது, அவனுக்கு ‘அப்பாடா’ என்றிருக் கிறது. இனிமேல் ‘நிம்மதி  என்கிற
உணர்வு!

மெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் வாக்கோ என்கிற பகுதியில் ‘ஆசிரமம்’ அமைத்தவர் டேவிட் கொரேஷ். அவருக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தீவிர விசுவாச சிஷ்யர்கள் உருவானார்கள். அவர்களில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த வழக்கறிஞர்களிலிருந்து டாக்டர்கள், நர்ஸ்கள், கம்ப்யூட்டர் நிபுணர்கள், தச்சுத் தொழிலாளிகள் வரை உண்டு! 

கொரேஷ் மென்மையாக மணிக்கணக்கில் உரை நிகழ்த்துவார். அவருடைய உரைகள் சுமார் 15 மணிநேரம் தொடரும்! சிஷ்யர்கள் கேட்டே தீர வேண்டும்!

தன்னைக் ‘கடவுள்’ என்றே சொல்லிக்கொண்டார் கொரேஷ். அதே சமயம் கடவுள் தன்னிடம் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார் (மனச் சிதைவு நோயாளிகளுக்கும் இந்த அனுபவம் உண்டு!)! 15 மணி நேரம் என்னத்தைப் பேசுவது?

உலகம் (விரைவில்) அழிவதற்குமுன் என்னவெல்லாம் பயங்கரங்கள் நடக்கும் என்பதும், தன்னால் எப்படி எல்லாம் பக்தர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பதும் தான் அவரது உரைகளின் மையக் கருத்தாக இருக்கும்! கற்பனை சக்தியும், கவர்ச்சி யான குரலும் அவரது முக்கிய ஆயுதங்கள்!

மெள்ள மெள்ள நிஜ ஆயுதங்களையும் சேகரிக்க ஆரம்பித்தார் கொரேஷ். அவரது இயக்கத்துக்கு ‘டாவிடியன்ஸ்’ என்று பெயர் வைத்தார். 

ஒரு கோட்டைக்குள் அவர் தலைமையின்கீழ் நூற்றுக்கணக்கில் மிகத் தீவிரமான சிஷ்யர்கள் அவரைப் பாதுகாத்தார்கள். யாரும் முரண்டும் பிடிக்க முடியாது. மிகப்பெரிய அளவில் ‘அடியாள் படை’ துப்பாக்கிகளோடு ரோந்து சுற்றியது!

கொரேஷ் இயக்கத்தினர் லைசென்ஸ் இல்லாமல் சக்திவாய்ந்த துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் வைத்திருந்ததால், அமெரிக்க போலீஸ் அந்த இடத்தை முற்றுகையிட்டது. உள்ளேயிருந்து வெறிபிடித்த சில சிஷ்யர்கள் திடீரென்று துப்பாக்கிகளால் சுட.. நான்கு போலீஸார் செத்து
விழுந்தார்கள். 

திகைத்துபோன போலீஸுக்குக் கோபம் தலைக்கேற, போலீஸ் தலைமையதிகாரிகள் ‘அட்டாக்!’ என்று கர்ஜித்தார்கள். ஆனால், உள்ளே சுலபத்தில் நுழைய முடியவில்லை. அந்த அளவுக்கு கொரேஷின் தற்காப்பு நடவடிக்கைகள் பலமாக இருந்தன!

உள்ளே, நூற்றுக்கணக்கானவர்கள் கொரேஷ் ஆணைக்குக் கட்டுப்பட்டு, துப்பாக்கிகளை ஏந்திப் போருக்குத் தயாரானார்கள்.

‘இதையெல்லாம் நான் எதிர்பார்த்தேன்! அரசாங்கம் நம்மை அழிக்க முனைந்து விட்டது. நம்மில் ஒருவர்கூட அவர்களிடம் சிக்காமல் சொர்க்கம் போக வேண்டும். புதிய யுகத்துக்காகத் தயாராகுங்கள்!’ என்று முழங்கிய கொரெஷ், பைபிளிலிருந்து பாடல்களை உரக்கப் படிக்க ஆரம்பித்தார். 

அந்தக் கோட்டையின் மாடியில் நாலாபுறமும் அணிவகுத்த சிஷ்யர்கள், பரவச உணர்வோடும் ஆவேசத்துடனும் துப்பாக்கிகளை நீட்டி போலீஸைக் குறிபார்த்தார்கள்.

ஐம்பத்தோரு நாள் முற்றுகைக்குப் பிறகு போலீஸ் படையினர், டாங்கிகளைப் பயன்படுத்திக் கோட்டைச் சுவர்களின் மீது துளைகள் போட்டு, மயக்க வாயுவை உள்ளே ரப்பர் குழாய்கள் மூலம் பீய்ச்சினார்கள்! பிறகு என்ன நடந்ததென்று தெரியவில்லை.

திடீரென கோட்டையிலிருந்து தீச்சுவாலைகள் கிளம்பின. கொரெஷ் ஆணைக்குக் கட்டுப்பட்டு, சிஷ்யர்களும் அடிமைக் குடும்பங்களுமே உள்ளே தீ வைத்துக்கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

 குபுகுபுவென்று எரிந்த தீயில் நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்து கரிக்கட்டைகளானார்கள்!

வில்லன்

unread,
Oct 7, 2009, 1:01:29 AM10/7/09
to தமிழ், பண்புடன், முத்தமிழ், தமிழமுதம், தென்றல், திருவிளையாடல்
ஜிம் ஜோன்ஸ், கொரேஷ் \ இவர்களுக்குள் இருந்த மிருகம் வேறுமாதிரியானது. மயக்கி, தன்வசப்படுத்தி, கடைசியில் உயிர்க்குடிக்கும் மிருகம்!

இவர்களுக்கு எப்படி ஆயிரக் கணக்கான அடிமைகள் கிடைத் திருக்கிறார்கள்? என்னதான் அப்படி ஒரு கவர்ச்சி இவர்களுக்கு இருக்கிறது?!

இதைக் கொஞ்சம் தெரிந்து கொண்டால், நம்மை இப்படிப் பட்டவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம், இல்லையா?!

எந்தவொரு மனிதனுக்கும் இக்கட்டான சூழ்நிலை என்பது ஏற்படாமல் இருக்காது. எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்? என்கிற பதற்றத்தில் தவிக்கும் தருணம் பார்த்து ஒரு தட்டுத் தட்டினால் நீங்களும் நானும்கூட ஒரு போலியான பக்தி இயக்கத்தில் விழுந்துவிட வாய்ப்புண்டு!

இப்படி விழக்கூடியவர்கள்  எங்கேயெல்லாம் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க, இயக்கத் தலைவர் (அல்லது சாமியார்!) தெருத்தெருவாக, வீடுவீடாக அலைய முடியாது. ஆகவே, அவருக்கு ஒரு விரிவான நெட்வொர்க் தேவைப்படுகிறது!

இயக்கத்துக்காகப் பக்தர்களை வலைவீசிப் பிடித்துவர, விசுவாசமான சிஷ்யர் படை வேண்டும். இந்தப் படையை உருவாக்குவதுதான் சாமியாரின் முக்கியமான வேலை. அவர் மெனக்கெடுவது அந்த ஆரம்பக் கட்டத்தில்தான்!

முதலில் ஐந்தாறு பேர்களுடன்தான் இப்படிப்பட்ட இயக்கங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கும். இந்தச்சிறு கூட்டம் ஓவர்டைம் போட்டு வேலை செய்யும். இவர்களுடைய இலக்கு மத்தியதர வகுப்பு, அலுவலகங்கள், 

பிறகு.. முக்கியமாகக் கல்லூரிகள்!

கல்லூரிகளில் ஜமாவோடு சேராமல், தனியாக வளையவரும் மாணவராகப் பார்த்து ஒரு சிஷ்யர் அறிமுகம் செய்துகொள்வார். பிறகு, நாலைந்து சிஷ்யர்கள் அவரைச் சந்தித்துத் தனியாக அழைத்துச் சென்று, டிபன் எல்லாம் வாங்கிக் கொடுத்து, அந்த மாணவரைப் பற்றியும் அவருடைய எண்ண ஓட்டங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வார்கள்.

இயக்கத் தலைவரிடம் அந்த மாணவரை அழைத்துக்கொண்டு போய்விட்டால் போதும்.. அதுவே பாதி வெற்றி! பிறகு, ஒரு வாரம் கேம்ப் என்பார்கள். அதில் கலந்து கொண்டால், போதும். மாணவர் ஒரு புதிய சிஷ்யராக மாறிவிடுவார்!

அந்த மாணவருக்கு இனி ஒரு பிரத்யேக அடையாளம் கிடைத்து விடுகிறது! நாம் எல்லோருமே க்ரூப் ஆக்டிவிடி எதிலாவது சேரப் பிரியப்படுகிறோம். அந்த ஆக்டிவிடிக்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனிப்பது போன்ற பணிகள் தரப்பட்டால், மாணவர் பெருமித உணர்ச்சி அடைந்துவிடுவார்!

சில ஆண்டுகள் கழித்துப் பார்த்தால், இப்படிப்பட்ட இயக்கங்களில் ஆயிரக்கணக்கில் தீவிர பக்தர்கள் அலைமோதுவார்கள். ஆசிரமம் (அரண்மனை!) அமைக்கும் பணியெல்லாம் பிறகு துவங்கிவடும்!

தனிமையில் தவிப்பு, பெற்றோர் அன்பு அவ்வளவாக இல்லாமை, பெண்களிடம் பழகுவதில் கூச்சம், தாழ்வு மனப்பான்மை.. இந்தப் பாதிப்பெல்லாம் உள்ள இளைஞர்கள் திடீரென்று ஒரு கட்டுப்பாடான கூட்டத்தில் முக்கியமானவராக நடத்தப்படுவது சாதாரண விஷயமல்ல!

போனஸாக, இரவுநேர பக்தி நடனங்களில் பெண்களோடும் நெருக்கமாக ஆடக்கூடிய வாய்ப்புகளையும் இயக்கம் ஏற்படுத்தித் தரும். மொத்தத்தில், வெளி உலகத்தைவிட, இந்த Ôஉலகம்Õ மிகுந்த நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியதாக அமையும். மாணவர் அந்த இயக்கத்தில் Ôஆயுள் மெம்பர்Õ மாதிரி ஐக்கியமாகிவிடுவார்!

ஜிம்ஜோன்ஸ் ஸான்ஃப்ரான்ஸிஸ்கோவில் ஒரு சிறு அறையில் தினமும் சில சிஷ்யர்களோடு கூடுவார். பிறகு, ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் புடைசூழ, தனியே தீவு போன்ற (நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் கொண்ட) கயானா காட்டுக்குச் சென்று, தன் சாம்ராஜ்யத்தை அமைத்தார்!

கொரேஷ் பிரபலமான பிறகு டெக்ஸாஸில் எழுபத்தேழு ஏக்கர் கொண்ட ஒரு தனிமையான இடத்தை லட்சக்கணக்கான டாலர்கள் கொடுத்து வாங்கினார்!

நாம் கடவுளை ஒளிமயமாக, அற்புதமான சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதாகத்தான் கற்பனை செய்துகொள்கிறோம். கடவுள் எளிமையாக இல்லையே என்கிற சந்தேகம், பொறாமை உணர்வெல்லாம் நமக்கு ஏற்படுவதில்லை!

அதேபோலத்தான் இயக்கத் தலைவரும் மதிக்கப்படுகிறார்
. கொரேஷ், அவரது கோட்டை உச்சியில் சொகுசான பெரிய அறை ஒன்றைத்தனக்காக அமைத்துக்கொண்டார்.

நவீன எலெக்ட்ரானிக் சாதனங்கள், ஏ.ஸி., அங்கிருந்து எல்லா இடங்களையும் நோட்டம் விட நுட்பமான காமிராக்கள், ஜகூஸி குளியல் தொட்டி.. எல்லாம் அங்கே உண்டு!

தோட்டத்தில் பயிரிடுவது, மலர்ச்செடிகள் பொருத்துவது, பெருக்குவது போன்ற வேலைகளில் வியர்வை சொட்ட ஈடுபடுகிறவர்கள் பக்தர்களே!

வில்லன்

unread,
Oct 8, 2009, 12:26:26 AM10/8/09
to தமிழ், பண்புடன், முத்தமிழ், தமிழமுதம், தென்றல், திருவிளையாடல்
(இதய பலகீனர்கள், பயன்ந்த சுபாவம் உடையவர்கள் இன்று மட்டும் இதை படிக்காமலே போயிடுங்க, எனக்கே ஒரு மாதிரியா இருக்கு இன்றைய கட்டுரை)


ஓரளவுக்கு நல்ல முறையில் துவங்கும் சிuறீt|கள்கூடப் போகப் போகக் கெட்டுப்போய்ச் சீரழியக்கூடும்| குறிப்பாக, அதன் தலைவருக்குக் கிறுக்குப் பிடித்தால்! பக்தகோடிகள் பெருகப் பெருக, தலைவர் தன்னை நிஜமாகவே கடவுள் என்று நினைக்க ஆரம்பிப்பார்

உண்மையில் இவர் சாமான்ய மனிதர்தான் என்பதால், கடவுளிடம் நாம் எதிர்பார்க்கும் கருணை, கனிவு, அன்பு எல்லாம் இவருக்கு இருக்காது!

போகப்போக தலைவருக்கு சர்வாதிகார மனப்பான்மை வந்துவிடும். மேன்மையான லட்சியங்கள் என்கிற போர்வைக்குள்ளே தலைவன் என்கிற தனிமனிதனின் பேராசை, பண ஆசை, செக்ஸ் ஆசை மூன்றும் தலைதூக்கும்.

முற்றிலும் மூளைச்சலவை செய்யப்பட்ட பெண்சிஷ்யைகள் தேமேனென்று இயக்கத் தலைவரின் பாலியல் தேவைகளுக்கு இரையாகி, ஏதோ இறைவனிடம் உடலுறவுகொண்ட பரவசத்தை அடைவார்கள்!

கொரேஷ், ஜிம்ஜோன்ஸ் இருவரும் வக்கிரமான செக்ஸ் விளையாட்டுகளில் ஈடுபட்டனர். 12 வயதான பெண்குழந்தைகளைக்கூட விட்டு வைக்கவில்லை கொரேஷ். பல பக்தைகள் அவனால் கர்ப்பமுற்றார்கள். ‘ஆசிரமத்தில் வளைய வந்த முக்கால்வாசிக் குழந்தைகள் அவருடையதே!

ஜோன்ஸ் பை செக்சுவல் அதாவது ஆண், பெண் இருவரிடமும் செக்ஸ் வைத்துக்கொள்பவர். பக்தர்களின் மனைவிகளுடன் உடலுறவு கொள்வதில் இருவரும் விருப்பம் காட்டினார்கள். ‘பாவங்களிலிருந்து விடுபட்டுப் பரிசுத்தம் அடைய நேரடியான வழி இது!’ என்றார்கள் இருவரும்!

சில சமயங்களில் வந்து சேரும் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகள், இயக்கத் தலைவருக்கு பிரச்னையாக அமைவார்கள். குழந்தைகளுக்கு அடிமைத்தனம் இருக்காது. முரண்டு பிடிப்பது, தலைவருக்குப் பணியாமல் இருப்பது.. இதெல்லாம் தர்மசங்கடமான பிரச்னைகள்!

ஆகவே குழந்தைகளுக்கு கொரேஷ், ஜிம்ஜோன்ஸ் இருவருமே கடுமையான தண்டனைகள் தந்தார்கள். பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை ஒரு டின்னுக்குள் பூட்டிவைப்பது இவர்கள் வழக்கம்!

கடைசியில் முழு அடிமைகளாக ஆகி, எளிமையான உணவையே உண்டு இளைத்துப் போய் சிறைப்பட்ட நாடோடிகளைப் போல, வெறித்த பார்வையுடன் ஆசிரமக் கோட்டைக்குள் வளைய வரும் பக்தர்கள் ‘விஷத்தைக் குடி’ என்று தலைவன் ஆணையிட்டவுடன் அதைக் குடிப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது?!

சீரழிவதற்குப் பெரிய இயக்கம் என்று ஒன்று தேவையில்லை. வீட்டுக்குள்ளேயே ‘சாத்தானை வழிபடுகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு விசித்திரமாகவும் விபரீதமாகவும் வாழும் குடும்பங்கள் உண்டு!

ஒரு தொழில் நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருக்கும் 34 வயது (பெயர் சொல்லப்படாத) பெண்மணி மனோதத்துவ மாநாடு ஒன்றில் கண்ணீருடன் வெளிப்படையாக விவரித்த நிகழ்ச்சி இது |

அந்தப் பெண்ணின் குடும்பம் சாத்தான் வழிபாடு என்ற பெயரில் கொடூரமான, விசித்திரமான, வக்கிரமான சடங்குகளைப் பின்பற்றியது. பாட்டனார்தான் எல்லாவற்றையும் துவக்கிவைத்த தலைவர்.

சிறுமியாக இருந்தபோது அவளை பாட்டனார், தந்தை, சித்தப்பா மூவரும் பாலியல் பலாத்காரம் செய்தனர்  திரும்பத் திரும்ப அவளுக்கு இரண்டு வயதான போது இளைஞன் ஒருவனுக்கு ‘சாத்தான்’ முன்பு திருமணம் செய்வித்தார்கள்.

அந்த இளைஞனும் திருமணமானதிலிருந்து சிறுமியிடம் செக்ஸ் வைத்துக்கொண்டான். சிறுமிக்கு 13 வயதில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இரட்டைக் குழந்தைகளின் தலைகளையும் அரிவாளால் வெட்டி (சாத்தானுக்காக) பலிகொடுத்தார் பாட்டனார்.

பிறகு அவள் கர்ப்பமுற்றபோது ஆறாவது மாதத்திலேயே கருவை செயற்கையாக வெளிவரச் செய்து, அந்த கருக்களை பூஜைக்குப் பிறகு வெட்டித் துண்டு துண்டாக்கி குடும்பத்தினர் சமைத்து உண்டனர்!

சில வருடங்களுக்குப் பிறகு அந்தப் பெண் மறுபடி கர்ப்பம் அடைந்தாள். ‘இதுதான் கடைசி என்று சாத்தான் ஆணையிட்டுவிட்டார்’ என்று சொல்லிய பாட்டனாரும் தந்தையும் அவளை ஓரிரவில் பின்னாலிருந்த மாட்டுத்தொழுவத்துக்குத் தூக்கிச் சென்று படுக்கவைத்து கட்டிப் போட்டனர்.

பிறகு, கைகளில் தீப்பந்தங்கள் ஏந்தியவாறு சுற்றி வந்து குடும்பத்தினரும், உறவினர்களும் நடனமாடினார்கள். வெறியோடு நடனமாடி நிறுத்திய பாட்டனார் சில மந்திரங்களை உரக்க உச்சரித்துவிட்டு, நீண்ட கத்தி ஒன்றை எடுத்து, அவளுடைய பிறப்பு உறுப்பில் வேகமாகப் பாய்ச்சினார். ரத்தம் பீறிட பயங்கரமாக அலறிய அந்தப் பெண் மயக்கமுற்றாள்.

பல வருடங்கள் கழித்து, எப்படியோ தப்பித்துப் பிற்பாடு நல்லவேலையில் அமர்ந்த அந்தப் பெண்மணி தன் கதையைச் சொன்னவுடன் மாநாட்டில் பெரிய மௌனம் நிலவியது. பல பிரதிநிதிகள் அதிர்ச்சியோடு விசும்ப ஆரம்பித்தார்கள்.

ஆகவே, வீட்டுக்குள்ளேயும் உறவினர்களிடமும்கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது.

(தொடரும்ம்ம்ம்)

வில்லன்

unread,
Oct 9, 2009, 12:21:51 AM10/9/09
to தமிழ், பண்புடன், முத்தமிழ், தமிழமுதம், தென்றல், திருவிளையாடல்
மனிதன், தனக்கென்று இறைவனால் தரப்பட்ட மூளையைக் கழற்றி, அதை இன்னொருவனிடம் ஒப்படைத்து, அவனைத் தன் சார்பில் சிந்திக்க வைப்பதென்பது அவமானகரமான செயல்.

தன்னிடம் இருக்கும் அறிவை, கல்வித்திறனை மற்றவருடன் பகிர்ந்துகொண்டு, மற்றவரையும் அறிவாளியாக்க முனைவதுதான் ஒரு குருவின், ஒரு தலைவனின் கடமை.

மாறாக, மூளைச்சலவை செய்து பகுத்தறிவைப் பறித்துக்கொண்டு, அடிமைகளை உருவாக்குபவன் எந்த விதத்திலும் மேன்மையானவன் இல்லை! ஜிம் ஜோன்ஸும் கொரேஷும் செய்தது இதைத்தான். இவர்களிடம் அடைக்கலமடைந்த ஆயிரக்கணக்கான வர்கள் பரிதாபமானதொரு வீழ்ச்சியைத் தான் அடைந்தார்கள்.

எகிப்திய பாரோ மன்னர்கள் பிரமிடுகளைக் கட்டப் பல்லாயிரக்கணக்கான அடிமைகளைப் பயன்படுத்தி வருத்தியதைவிட மோசமான சாதனையை இந்த இயக்கத் தலைவர்கள் செய்கிறார்கள்!

அதாவது, பிரமிடு கட்டிய அடிமைகளுக்கு Ôதாங்கள் அடிமைகள்Õ என்பதாவது தெரியும்! இவர்களோ, நாளைக்கே தங்கள் தலைவன் சொர்க்கலோகத்துக்கு அழைத்துக் கொண்டு போகப் போகிறான் என்று அப்பாவித்தனமாக நம்புகிற அளவுக்கு மூளைச்சலவை செய்யப்பட்ட பரிதாப ஜென்மங்கள்!

இப்படிப்பட்ட இயக்கங்களுக்கு தலைவனாக இருப்பவனின் Ôகுணநலன்களைÕப் பொறுத்தே இயக்கத்தின் செயல்பாடுகளும் அமைகிறது.

பணவெறி, சர்வாதிகார மனப்பான்மை, செக்ஸ் வெறியோடு உச்சகட்டமாக கொலைவெறியும் தலைவனிடம் குடிகொண்டுவிட்டால் கேட்கவே வேண்டாம்!

சார்லஸ் மேன்ஸன் ஒரு கச்சிதமான உதாரணம்!

சாதாரணமாக சீரியல் கில்லர்கள் தனித்தே இயங்குவார்கள். சில சமயங்களில் இரண்டு அல்லது மூன்று பேர் இணைந்து கொலை, கற்பழிப்பில் ஈடுபடுவதுண்டு.

ஜோஸப் மற்றும் மைக்கேல் காலிஞ்சர் கூட்டாக இணைந்து பல கொலைகள் செய்தார்கள். மைக்கேல், ஜோஸப்பின் மகன்! 

பதினோரு பேரைக் கற்பழித்துக் கொடூரமாகக் கொலை செய்த சீரியல் கொலைகாரன் ஹென்றி லூகாஸ், ஓடீஸ் டூல் என்கிற இளைஞனோடு இணைந்தே அத்தனை கொடூரங்களையும் செயல்படுத்தினான். இருவரும் ஹோமோசெக்ஷுவல் தோழர்கள்!

இருவர் அல்லது மூவராகக் கொலைகாரர்கள் இணையும்போது, அதில் சில Ôப்ளஸ் பாயிண்ட்Õடுகள் உண்டு. Ôஎப்படியெல்லாம் சித்ரவதை செய்யலாம்Õ என்று கலந்தாலோசிக்கவும் புதுமையான கொலைத் திட்டங்களுக்கு ஐடியாக்கள் தரவும் மற்றவர்கள் பயன்படலாம்!

இருப்பினும், ஒரு கொலைகாரன் இன்னொரு கொலைகாரனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு நிம்மதியாகத் தூங்கமுடியாது! அதனால்தான் சீரியல் கொலைகாரர்களில் ஜோடியாக இயங்குபவர்கள் இருபத்தைந்து சதவிகிதத்தினரே!

விபரீதமான CULT|களின் தலைவர்களை அல்லது தலைமைச் சாமியார்களின் பின்னணியைப் பற்றிப் பத்திரிகைகள்கூடத் தீவிரமாகத் துப்பறிவதில்லை! ஒரு இயக்கம் விபரீதமாக விசுவரூபம் எடுத்த பிறகுதான் செய்திகள் வர ஆரம்பிக்கின்றன!

சார்லஸ் மேன்ஸனையே எடுத்துக் கொண்டால், அவன்மீது நூற்றுக்கணக்கான சிஷ்யர்களும் சிஷ்யைகளும் ஒரு ஆவேசமான காதல் கொண்டிருந்தார்கள். அவன் சொல்வதை மயங்கிய விழிகளுடன் உடனே செய்து முடிக்கும் அடிமைகள் அவர்கள்!

அமெரிக்காவில், டிசம்பர் மாதம் பிறந்த (1934) மேன்ஸன், தன்னை ÔயேசுÕ என்று பிரகடனப்படுத்திக் கொண்டான். பிற்பாடு, சிறைச்சாலை பதிவேட்டில்கூட Ôசார்லஸ் மேன்ஸன் (அல்லது) யேசு கிறிஸ்துÕ என்றுதான் கையெழுத்துப் போட்டான் அவன்!

மேன்ஸனின் வாழ்க்கை வரலாற்றைப் பிற்பாடு போலீஸ் புரட்டிப் பார்த்தபோது தெரியவந்த தகவல்கள் திகைப்பூட்டின...

மேன்ஸனின் அம்மா ஒரு விலைமாது. தன் அப்பா யார் என்பது மேன்ஸனுக்குத் தெரியாது. சிறுவயதில் வறுமை காரணமாகப் பல உறவினர்களின் வீடுகளில் வசித்து, அஙகுமிங்குமாகப் பந்தாடப்பட்டான் மேன்ஸன்.

பிறகு, மீண்டும் அம்மாவிடம் அவனைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போனார்கள். அம்மா, மகனை அருகில் வைத்துக்கொண்டே தொழிலில் ஈடுபட்டாள். சில கஸ்டமர்கள், துருதுருவென்றிருந்த மகனையும் படுக்கைக்குத் தூக்கிச் சென்று பயன்படுத்திக் கொண்டார்கள்.

பன்னிரண்டு வயதுக்குள் மேன்ஸன் அடியோடு சீரழிந்து போனான். பலமுறை வன்முறைகளில் ஈடுபட்டுச் சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டான்.

(சார்லஸ் மேன்ஸனைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இன்றும்கூட மேன்ஸனை கடவுளாக கருதி வழிபடும் ரகசியக் கூட்டங்கள் உண்டு. மேன்ஸனைப் பின்பற்றியவர்கள் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களே! இவர்கள் எல்லோருமே பெற்றோர், கல்வி, சமுதாயத்தை வெறுத்து வெளியே வந்தவர்கள். மேன்ஸன் ஆவேசமான, வன்முறை மிகுந்த கவிதைகள் வேறு எழுதி, அதற்குத் தானே இசையும் அமைத்தான்! அவற்றின் ஒலிநாடாக்கள் ரகசியமாக ஆயிரக்கணக்கில் விற்றன!)



வில்லன்

unread,
Oct 9, 2009, 7:58:55 AM10/9/09
to தமிழ், பண்புடன், முத்தமிழ், தமிழமுதம், தென்றல், திருவிளையாடல்
மேன்ஸனை அழைத்துக்கொண்டு, தினமும் பாருக்குச் சென்று குடிப்பது அம்மாவின் வழக்கம். ஒரு நாள் அவள் கையில் பணமில்லாததால், பாரில் பணிபுரிந்த (குழந்தையில்லாத) ஒரு பெண்ணிடம் மேன்ஸனைக் கொடுத்துவிட்டு, எனக்கு ஒரு பாட்டில் ரம் வேண்டும். அதற்குப் பதிலாக இவனை வைத்துக்கொள்Õ என்றாள் தாய்!

ஒரு வாரம் கழித்துப் பையனைக் காணோம் என்று தேடி அலைந்த மேன்ஸனின் தாய்மாமன், சிறுவனைக் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தார். மீண்டும் அம்மாவிடம்! இப்போது அவள் லெஸ்பியனாகவும் மாறியிருந்தாள்!

படிக்காமல், மூலையில் அமர்ந்து, கண்ணெதிரே அம்மாவின் பாலியல் தொடர்புகளைப் பார்த்துக் கொண்டிருந்த மேன்ஸனைப் பற்றி லேசாகக் கவலைப்பட்ட அம்மா, ஒரு சர்ச் நடத்தி வந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளியில் அவனை சேர்த்துவிட்டுப் போனாள்.

அம்மாவை கடைசியாக மேன்ஸன் பார்த்தது அப்போதுதான்!

சர்ச்சிலும் கொடுமைகள் தொடர்ந்தன. சின்னக் குற்றங்களுக்குக்கூட சவுக்கால் விளாசப்பட்டான் மேன்ஸன். குறிப்பாக, படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காகப் பலமுறை சவுக்கடி வாங்கினான் அவன்.

அங்கிருந்து ஒரு நாள் தப்பிச்சென்ற மேன்ஸனின் உள்ளத்தில் வெறியும் முரட்டுத்தனமும் குடிகொண்டது. பிறகு, திருடியதற்காக சிறையில் அடைக்கப் பட்டான். சிறையில் ஏற்பட்ட அனுபவங்கள் அவனைக் கடைந் தெடுத்த வன்முறையாள னாக்கியது!

காவலதிகாரிகள், ஜெயிலர்கள், மற்ற கைதிகள் என்று அங்கே பலரும் ஹோமோசெக்ஸ் வெறியர்களாக இருந்தார்கள். மேன்ஸனின் கவர்ச்சியான தோற்றம், அவர்கள் எல்லோரையும் கவர்ந்தது!

குறிப்பாக, தலைமை ஜெயில் அதிகாரி ரொம்ப சாடிஸ்ட் ஆக இருந்தான். ஒரு முரட்டுக் கைதியை விட்டு மேன்ஸனை சித்ரவதை செய்யச் சொல்லி, வலி தாங்காமல் மேன்ஸன் அலறும்போது, சிறுவனின் முகத்தருகே அமர்ந்து சுயஇன்பம் அனுபவிப்பது அந்த அதிகாரிக்குப் பிடித்திருந்தது!

விடுதலையானவுடன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான் மேன்ஸன். ஒரு குழந்தையும் பிறந்தது. திருந்தி வாழலாம் என்று நினைத்த மேன்ஸன் மீது பொய் கேஸ் போட்டு, ஏழாண்டு சிறையில் தள்ளியது போலீஸ். இந்த முறை வெளியே வந்தபோது, மனைவி ஒரு லாரி டிரைவருடன் ஓடிப்போயிருந்தாள்!

அப்போது அமெரிக்காவில் போதை வஸ்து பிரபலமாகி இருந்தது. முதன்முறையாக அதை உபயோகிக்க ஆரம்பித்தான் மேன்ஸன்.

ஓரிரவு  போதையுடன் ஆவேசம் வந்தது போல, ஒரு பாரில் தன் கவிதையை உரக்கப் பாடியவாறு நடனமாடி, கடைசியில் மயக்கமாக மேடையில் விழுந்தவுடனே... மேன்ஸனுக்கு வலிப்பு வந்துவிட்டது!

இதைப்பார்த்த இளைஞர் கூட்டம் பயங்கரமாக அப்ளாஸுடன் அவனைச் சூழ்ந்துகொண்டு உதவினார்கள். மேன்ஸனின் கவர்ச்சி, அவனது பேச்சு, வாதத்திறமை, விபரீதமான தத்துவங்கள்... இளைஞர்களை வியக்கவைத்தது!

பிறகு, மேன்ஸனின் Ôஹெல்ட்டர் ஸ்கெல்ட்டர்Õ என்கிற இயக்கம் பிறந்தது. ஏராளமான இளைஞர்களும் பெண்களும் அவனைத் தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள்.

வீட்டைவிட்டு ஓடிவந்த பல இளம்பெண்கள் நேரே செல்வது மேன்ஸனிடம்தான்! Ôமேன்ஸன் இசைக்குழுÕ ஒன்றும் துவக்கப்பட்டது. இரண்டு பெரிய வேன்கள் வாங்கி, அதில் நாடோடிகளைப் போல மேன்ஸன் இயக்கத்தினர் ஊர் ஊராகச் சென்றனர்.

Ôசொகுசாக வாழ்கிறவர்களும் பணக்காரர்களும் சினிமாக்காரர்களும் சமுதாயத்தின் விரோதிகள். நச்சுப் பாம்புகளைப் போல அவர்களை அடித்துக் கொல்ல வேண்டும். இளைய தலைமுறையான நீங்கள்தான் அதைச் சாதிக்க வேண்டும்Õ என்று ஆணை பிறப்பித்தான் மேன்ஸன்.

அதிலிருந்து, போகிற இடமெல்லாம் ஒதுக்குப்புற பங்களாக்களில் நுழைந்து, வசதியான குடும்பங்களை வெட்டித் தள்ளினார்கள் மேன்ஸனின் சிஷ்யர்கள்!

உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் போலான்ஸ்கியின் காதல் மனைவி மகா அழகியான ஷெரோன் டேட். பிரபல சினிமா நடிகையான அவர் தன் ஆண், பெண் நண்பர்களுடன் கலிபோர்னியாவில், ஹாலிவுட் அருகே புறநகரில் தன் வீட்டில் பெரிய பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருந்த போது (போலான்ஸ்கி வெளிநாட்டில் ஷூட்டிங்கில் இருந்தார்!), சார்லஸ் மேன்ஸன் அந்த வீட்டைக் குறிவைத்தான்...

அவனது கூட்டத்தினர் இரவில் நுழைந்து, அத்தனை பேரையும் கொடூரமாகக் கொன்று, உடல்களை வரிசையாகத் தொங்கவிட்டார்கள். 

அமெரிக்காவை அதிரவைத்த கொலைகள் அவை! மேன்ஸன் போலீஸிடம் சிக்கியதும் அதற்குப் பிறகுதான்!

இன்று எழுபது வயதாகும் சார்லஸ் மேன்ஸன், சிறையில் Ôகடைசிவரை ஆயுள் தண்டனைÕயை அனுபவித்துக்கொண்டிருக்கிறான்! இன்னமும் அவனது சிஷ்யர்களும் சிஷ்யைகளும் வெளியே நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்...

மூளைச்சலவையில் இதுதான் பிரச்னை... மீண்டுவருவது சிரமம்!


(முற்றும்)

சென்ஷி

unread,
Oct 9, 2009, 11:40:38 PM10/9/09
to panb...@googlegroups.com
பகிர்விற்கு நன்றி வில்லன். குழுமத்துல தொடர்ந்து வாசித்து வந்த முதல் தொடர் இதுதான்னு நினைக்கறேன்.!

அடுத்து என்ன தொடர் வரப்போகுது.. காத்திருக்கோம். உடனே ரெடி ஆகி வாங்க

2009/10/9 வில்லன் <oms...@gmail.com>

stalin felix

unread,
Oct 9, 2009, 11:47:21 PM10/9/09
to panb...@googlegroups.com
உங்களால் புத்தகத்தை வாங்கி படித்து விட்டேன். நன்றி வில்லன்.

2009/10/10 சென்ஷி <senshe...@gmail.com>



--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/

செல்வன்

unread,
Oct 9, 2009, 11:53:36 PM10/9/09
to panb...@googlegroups.com
நன்றி வில்லன்.இதை முந்தியே ஜூனியர் விகடனில் படித்த போதும் மீண்டும் படிக்க சுவாரசியமாக இருந்தது

2009/10/9 stalin felix <stalinf...@gmail.com>



--
செல்வன்

www.holyox.tk

"Any woman who chooses to behave like a full human being should be warned that the armies of the status quo will treat her as something of a dirty joke. That's their natural and first weapon. She will need her sisterhood"

-- Gloria Steinem

Naresh Kumar

unread,
Oct 10, 2009, 12:38:05 AM10/10/09
to panb...@googlegroups.com
பகிர்விற்கு நன்றி வில்லன்.....

மிக சுவராசியமாக இருந்தது....
--
நரேஷ்
www.nareshin.wordpress.com

வில்லன்

unread,
Oct 10, 2009, 12:31:07 PM10/10/09
to panb...@googlegroups.com, தென்றல், முத்தமிழ், தமிழ், தமிழமுதம்

மிக்க நன்றி என்று ஒவ்வொருத்தருக்கும் பதில் போட்டு ரிப்ளைஸ் அதிகம் பண்ற எண்ணம் எனக்க்கு எப்போதும் இருந்ததில்லை,

அதனால் படித்து என்னையும் மதனையும் பாராட்டிய எல்லாருக்கும் மிக்க நன்றி,

படித்தும் பாராட்டாத எல்லாருக்கும் மிக மிக நன்றி.

படிக்காமலே போன எல்லாருக்கும் மிக மிக மிக நன்றிகள்.

அடுத்த தொடர் என்று எதிர்பார்ப்பவர்கள் எல்லாருக்கும் விரைவில் எதாச்சும் பிடிஎபை கிடைச்சதும்

தொடர்வேன் என்று உறுதியளிக்கிறேன்

Reply all
Reply to author
Forward
0 new messages