கே.கு 1: நான் விஜயகாந்த் ரசிகன் அல்ல.கேப்டன் கட்சியைச் சார்ந்தவனும் அல்ல.
கே.கு 2: குருவி பார்த்த பாதிப்பில் - பண்புடனில் படித்துவிட்டும் மீறிய பாதிப்பில்
அரசாங்கம் பார்த்ததில் எழுதிய பாதிப்பு இது.
கே.கு 3 (இது விஜயகாந்துக்கு ) : தி.விசிடியில் தான் இந்த படம் பார்த்தேன்.மன்னிக்கவும்.
புத்திசாலிகள் எந்த வலைப்பக்க இறக்கம் என்பதை மறைத்து அடித்திருக்கிறார்கள்.
அவ்வளவு பயம் உங்களுக்கு
-------------------------------
பலபேர் பலவிதமாக எச்சரித்தும்,அச்சமூட்டி அறிவிப்புகள் செய்தும் அறை நண்பர்களில்
ஒருவன் கேப்டனின் கேட(ண)யதாரிகளில் ஒருவன் என்பதால் அரசாங்கம் படத்தை
பார்க்கும் வாய்ப்பு நேரிட்டது. (விதியை யாரால் மாற்ற இயலும்..)
பயந்து கொண்டே பார்க்கத் தொடங்கினாலும் இயக்குனர் மாதேஷின் சாமர்த்தியத்தால்
கேப்டனின் வருகை சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு பின்னரே நிகழ்கிறது.இந்திய
நாட்டின் அறிவாளிகளையும்-மாமேதைகளையும் கொல்வதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை
முடக்கிவிட முடியும் என (எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா) திட்டமிட்டு அவர்களை
வரிசைப்பட கொல்வதில் தொடங்குகிறது படம். காவல்துறை பயிற்சி நிலைய அதிகாரியாக
(கிரிமினாலிஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்) வரும் கேப்டனுக்கு வழக்கம் போல் இதைக் கண்டு
பிடிக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. (ஒரே ஒருவராலதான் அதை கண்டுபிடிக்கும் - ஒரு போலீஸ்
அதிகாரி சொல்ல உடனே அமைச்சர் யார் அவர் என கேட்க நாம் விஜயகாந்தை நினைத்திருக்க
வருவது பிஜுமேனன் - இதுவும் கேப்டன் திரைக்கதையில் புரட்சியே எனக் கொள்க ).அவர் காது
கேட்காத வங்கி ஊழியை - கதாநாயகியை காதலிக்கிறார்.இதுவும் புரட்சி எனக் கொள்க)
இப்படியாக தொடங்கும் படம் குற்றவாளியைத் தேடி கனடாவிற்கு செல்வதில் தொடர்கிறது.
அங்கு பார்த்தால் பிஜுமேனன் தான் குற்றவாளி.. ஆஹா என்ன ஓர் சஸ்பென்ஸ் என நாம்
வியப்பதற்குள் இன்னொரு புரட்சி நடக்கிறது. அது இந்த பிஜுமேனன் அல்ல.வேறு பிஜுமேனன்
(டபுள் ஆக்ட்னு சொல்லித் தொலையேன்பா என்ன் குழப்பறே என நீங்கள் திட்டுவது கேட்கிறது)
அங்கு கனடா பெண் போலீஸ் அதிகாரியுடன் துப்பறிந்து உண்மைகளை கொண்டுவருகிறார்
கேப்டன் (ஆமாம் அதற்கு ஏன் அரசாங்கம் என்று தலைப்பு.. ? படத்தில் தெரியாத கேள்விகளில்
இதுவும் ஒன்று)
வழக்கமாக சிங்கம் போல் கர்ஜிக்கும் கேப்டன் நிறைய இடங்களில் அடக்கி வாசித்திருக்கிறார்
என்பதே படம் பார்ப்போர்க்கு பெரிய ஆறுதல். புள்ளி விவரக்கணக்குகள் ஏதும் இல்லை
என்பது இன்னம் ஆறுதல்.ஒரே ஒரு முறை பின்னங்காலால் உதைக்கிறார் சண்டையில்...
(ஜென்மப் புத்தி செரு... )..
கதையில் கேப்டனை விட திரைக்கதை அமைத்த விதத்தில் காட்சிகளை நகர்த்தும் விதத்தில்
மாதேஷே அரசாங்கம் நடத்தியிருக்கிறார். பார்த்த தி.விசிடியில் 27 சதவீதம் திரையே தெரிவதால்
ஒளிப்பதிவு நுணுக்கங்களைப் பற்றி சொல்ல இயலவில்லை.
குருவி விஜய்க்கு போக இருந்த ஆஸ்கார் விருது அரசாங்கம் படத்துக்கு விஜயகாந்துக்கு போகிறது
என்ற ரீதியில் எழுதியிருந்த அண்ணன் செல்வேந்திரனை கடுமையாக கண்டிக்கிறேன்.அந்த வாய்ப்பு
விஜய்க்கே இன்னும் இருக்கிறது.ஏனெனில் சில பல நல்ல காட்சிகள் - எதிர்பாராத திருப்பங்கள்
அடக்கி வாசித்தல் என்ற தன் குணநலனுக்கு எதிராக கேப்டன் போராடியிருப்பதால் அந்த ஆஸ்கார்
பரிசு வாய்ப்பை இழக்கிறார்.
அரசாங்கம் - மோசமில்லாத ஜனநாடகம்.
--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.