Re: [பண்புடன்] Re: நோய்களை குணப்படுத்தும் கோவில் மரங்கள்

208 views
Skip to first unread message

வில்லன்

unread,
Oct 27, 2009, 5:29:26 AM10/27/09
to panb...@googlegroups.com
எனக்கும் இதே சந்தேகம்தான். 

2009/10/27 ezhil arasu <nan...@gmail.com>
நீங்கள் எப்படி இவ்வளவு விஷயங்களை பெறுகிறீர்கள்? இராப்பகலாக இணையத்திலேயே இருந்தாலொழிய இவ்வளவு விஷயங்கள் கிடைக்காது.



2009/10/27 செல்வன் <hol...@gmail.com>

நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி (CALOTROPIS PROCERA)

நவக்கிரக மரங்கள் - I எருக்கு CALOTROPIS GIGANTEA, RBR, ASCLEPIADACEAE

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் - பாடல் :

இலையார் தரசூலப் படையெம்
பெருமானாய்
நிலையார் மதில்மூன்று நீறாய்
விழவெய்த
சிலையான் எருக்கத்தம்
புலியீர்த் திகழ்கோயில்
கலையான் அடியேத்தக் கருதா
வினைதானே

எருக்கஞ் செடிகளில் பல வகைகள் உண்டு. அனைத்து வகைகளிலும் பூக்கள் இருக்கும். பால் வடியும், பார்ப்பதற்கு ஒரே விதமாய்த் தெரியும். ஆனால் அதில் வரும் மொட்டுக்கள், பூக்களின் நிறம், மணம், குணம் ஆகியவை மாறுபட்டு இருக்கும்.

வெள்ளை எருக்கன் செடிக்கு விசேஷ மருத்துவக் குணங்கள் இருக்கின்றன. வெள்ளைநிறப் பூக்கள்தான் ஈஸ்வரனுக்கு பூஜை செய்ய பயன்படுத்துவார்கள். இதனை ஆங்கிலத்தில் SWALLOW WORT, ARKA, CALOTROPIS PROCERA R.BR என்றும், உருதுவில் மதார், ஆக் என்றும் அழைப்பார்கள்.

சூரிய பகவானுக்கு உரிய நாள் ஞாயிற்றுக்கிழமை. இவரின் தேவியர் சாயா தேவி அம்மன், உஷா தேவி அம்மன் ஆவர். இவர் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சிவப்பு நிற ஆடை அணிந்து உலா வருவார்.

இவருக்கு தானியங்களில் கோதுமையும், நவரத்தினங்களில் மாணிக்கமும் உரியவை ஆகும்.

சூரிய பகவான் கிழக்கு திசையில் சிம்மராசியின் மீது ஆட்சி செய்கின்றான். சூரிய பகவானுக்கு, வெள்ளை எருக்கன் செடி உரியது ஆகும். எனவேதான் நவக்கிரக ஆலயங்களில் கீழ்க்காணும் முறைப்படி சூரியனை வணங்குகின்றனர்.

வேலூர் மாவட்டம் பொன்னை அருகில் உள்ள ஒட்டநேரி விநாயகபுரத்தில் அருள்மிகு நவக்கிரக கோட்டை ஆலயம் அமைந்து இருக்கின்றன. இந்த ஆலயத்தில் முறையாக சாயா தேவி, உஷா தேவி ஆகியோருடன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் அமர்ந்துள்ளார். சிவப்பு நிற ஆடை அணிந்து, கோபுர கலசத்தில் கோதுமைத் தானியம் நிரப்பி, நவரத்தினத்தில் மாணிக்கக்கல் பதித்து, கிழக்கு திசை நோக்கி, வெள்ளை எருக்கன் செடியை அருகில் நட்டு சிம்ம ராசியில் தினசரி பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலயத்தின் ஸ்தாபகர் திரு.வேலு சுவாமிஜி அவர்களிடம் இதைப்பற்றி விசாரித்தபோது, அவர் சொன்னார் : ”நான் ஒரு தாவரவியல் நிபுணர். வெள்ளை எருக்கன் செடிக்கு ஒரு தனி மகத்துவம் உண்டு. இதில் அதிக மருத்துவக் குணங்கள் இருக்கிறது.

சிம்ம ராசி கொண்டவர்களின் நோயைக் குணமாக்குகின்றது. நவரக்கிரகத்தின் நன்மைகள் பெறவும், கெடுதல்களை அகற்றவும், வெள்ளை எருக்கன் செடி பயன்படுகிறது. அம்மனுக்கும், சூரிய பகவானுக்கும் பூஜைக்கு இந்த செடியைத்தான் பயன்படுத்துகின்றோம்” என்றார்.

‘அதர்வண’ வேதத்தில் எருக்கஞ்செடியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. இது ருத்ரருடன் தொடர்பு கொண்டு உள்ளதால் “புனித செடி” என்று கூறப்படுகிறது.

“அக்கினி புராணம்” என்னும் நூலில் எருக்கன் இலைகளை மன்னர் அணிந்து சென்றால் வெற்றி நிச்சயம் என்று கூறப்படுகிறது. நரபலி, சதி போன்றவற்றில் பழங்காலத்தில் பயன்படுத்தப்படும் ஒன்பது மரங்களில் எருக்கனும் ஒன்றாகும்.

சிவபெருமானை விடியற்காலையில் பூஜிக்க பயன்படும் பூக்களில், எருக்கம் பூக்களும் ஒன்று என “சிவமஞ்சரி” என்ற நூலில் கூறப்படுகிறது.

“நாரத புராணா” என்ற நூலில் சிவபெருமானுக்கு எருக்கம் பால் வைத்து நிவேதனம் செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. கிராமங்களில் அரக்கம்மா, அரக்கேஸ்வரி, அர்க்காமுர்ஸடா ஆகிய பெண் தெய்வங்களுக்கும் இதனைப் படைக்கின்றார்கள்.

மே, ஜுன் மாதங்களில் வெயிலின் கடுமை தாங்க முடியாமல் செடி, கொடிகள் மடிந்து கொண்டிருக்கும் நிலையில் எருக்கஞ்செடி முழு அளவில் வளரும். இந்தச் செடி நம் நாட்டில் அனைத்து பாகங்களிலும், சாலை ஓரங்களிலும் தானாகவே வளரும். இது ஒன்றரை மீட்டர் முதல் 2 மீட்டர் வரை உயரமாக வளரும். இந்தக் செடியின் இலைகளின் மீது தூசு படிந்திருப்பதைப் போல் பச்சை நிறத்தில் வெள்ளை நிறம் காணப்படும்.

சிறிய பூக்கள், காய்களின் வடிவில் இருக்கும். அதை விரல்களால் அழுத்தினால் உடைந்துவிடும். இதனுள் விதைகள் இருக்கும். இதன் இலைகள், பூக்கள், தண்டு, வேர் அனைத்து பாகங்களிலும் பால் இருக்கும். அவைகளையும் உடைத்தால் பால் வடியும்.

எருக்கஞ்செடிகள் அனைத்து பாகங்களும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உடலின் உஷ்ணத்தை அதிகரிக்கும்.

இலைகளின் மருத்துவ குணங்கள் :

* சிலருக்கு முகம் அழகாக இருக்கும். ஆனால், பல் அசிங்கமாக இருக்கும். முத்துப் போன்ற பற்களில் மஞ்சள்நிறக் கரைகள் படிந்து முகத்தின் அழகையே கெடுத்துவிடும். இதைப் போக்கி பற்களை பளபளப்பாக்கிட எருக்கு இலைகளை நிழலில் உலர வைத்து அத்துடன் மிளகு சம அளவில் சேர்த்து, அரைத்து பவுடராக்கிக் கொள்ள வேண்டும். இதைப் பல் பொடியாக, பல்லில் தேய்த்தால் கரைகள் நீங்கும்.

* இலைகளை நல்லெண்ணெயில் கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டிய எண்ணெயை மூட்டு வலி, மூட்டு வாதம், இடுப்பு வலி, தொண்டை நரம்பு வலி ஆகியவற்றுக்கு வலியுள்ள பாகத்தில் பூசினால் குணமாகும்.

* இலைகளை எரித்து, அதன் புகையை முகர்ந்தால் - வாய் வழியாகச் சுவாசித்தால், மார்ப்புச்சளி வெளியேறும். ஆஸ்துமா, இருமல் கட்டுப்படும்.

* இலைகளை நல்லெண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொள்வார்கள். பக்கவாதம் நீங்கிட இதைத் தடவி மசாஜ் செய்வார்கள்.

* இலைகளின் சாற்றை கடுமையான தோல்நோய் நீங்க பூசுவார்கள்.

* உலர்ந்த எருக்கம் இலைகளைப் பவுடராக்கி, அடிபட்ட காயங்கள், புண் அழுகிப்போன சதையின் மீது தூவி கட்டுக்கட்டுவார்கள். அதனால் விரைவில் குணமடையும்.

* இதன் இலைகள், பூக்கள், வேர், பட்டைகள், எண்ணெய் அனைத்துமே நச்சுக் கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தது.

மொட்டுகளின் மருத்துவ குணங்கள்

* எருக்கம் மொட்டுக்கள், சுத்தமான தேன், பசு நெய் - மூன்றையும் சேர்த்து அரைத்து இதை ஆண்குறியின் தண்டின் மேல் பாகத்தில் பூசினால் விரைப்பு தன்மை அதிகரிக்கும். எண்ணையைப் பூசிய பிறகு ஆண்குறியின் மீது ஆமணக்கு இலையைக் கட்ட வேண்டும்.

* வியர்வையுடனும், நடுக்கத்துடனும் குளிர் ஜுரம் ஏற்படும். அது குறித்த நேரத்தில் தான் வரும். ஜுரம் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எருக்கம் மொட்டு ஒன்றை எடுத்து வெல்லத்தில் வைத்து சாப்பிட்டால் மலேரியா ஜுரம் நீங்கும்.

* இதன் மொட்டுக்கள், சுக்கு, ஓமம், கறுப்பு உப்பு ஆகிய பொருட்களையும் மெல்லியதாக பொடியாக்கி, சிறிது தண்ணீர் கலந்து, பட்டாணி அளவிற்கு மாத்திரைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். தினசரி 2 மாத்திரைகள் வீதம் 2 வேளைகள் சாப்பிட்டு வந்தால் அஜீரணம், பசியின்மை, கேஸ்டிரபுள், உப்புசம் ஆகியவை நீங்கி வயிற்றுக்கும் சக்தி தரும்.

பூக்களின் மருத்துவ குணங்கள்

* எருக்கம் செடிகளையும், பூக்களையும் எரித்து அதன் சாம்பலை ஆஸ்துமா, மார்புச்சளி நீங்கிட அரிசி அளவிற்குத் தருவார்கள்.

* காலரா, வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் ஏற்பட்டு உடல் வெகு சீக்கிரம் பலவீனமடைந்து விடும். இந்நிலையில் 2 எருக்கம் பூக்களை வாயில் போட்டு நன்றாக மென்றால் சுய நினைவு திரும்பும்.

வேரின் மேல் தோல், மிளகு - இரண்டையும் சம அளவில் இடித்துப் பொடியாக்கி அதை இஞ்சிச்சாற்றில் இரண்டு மணி நேரம் வரை அரைக்க வேண்டும. பின் அதைப் பட்டாணி அளவுக்கு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் கொண்டு வாந்தி, பேதி, காலரா குணமாக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை 1 மாத்திரை வீதம் சாப்பிடலாம்.

பாலின் மருத்துவ குணங்கள் :

* மூக்கடைப்பு, மண்டைச் சளி, ஒற்றைத் தலைவலி, தும்மல் ஆகியவை நீங்கிட எருக்கம் பாலை, மூக்குப் பொடியாகப் பயன்படுத்தலாம். மாடடுச் சாணியில் செய்யப்பட்ட வரட்டி (எருமட்டை)யை எரித்து அதன் சாம்பலை எருக்கம் பாலில் ஊறவைத்து உலர வைக்க வேண்டும். அதை அரைத்து மூக்குப் பொடியாக முகர்ந்தால் தும்மல் ஏற்பட்டு மண்டைச் சளி நீங்கும்.

* வண்டுக்கடி, படை, சொரி, சிரங்கு மற்றும் நாள்பட்ட தோல் வியாதிகள் இருக்குமிடத்தில் எருக்கம் பாலைப் பூச வேண்டும். அங்கு எரிச்சலாக இருக்கும். ஆனால் சிலருக்கு ஒரே முறை பூசினாலே குணமாகி விடும். குணம் தெரியவில்லை என்றால் சில நாட்கள் மீண்டும் பூச வேண்டும்.

* உலர்ந்த எருக்கம் பாலை நரம்புத் தளர்ச்சிக்கு டானிக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

* எருக்கம் பால் சுட்டெரிக்கும் மருத்துவ குணத்தை உடையதாகும். தலை வழுக்கை, குஷ்டம், சொரி, சிரங்கு மற்றும் மூலத்தின் மருக்களின் மீது பாலைத் தடவினால் அவை குணமாகும்.

* எருக்கம் செடியின் பாலை, தொழு நோயாளிகளின் அழுகிய புண்கள் நீங்கிட பூசுவார்கள்.

* எருக்கம் பால் தலைப் பொடுகு, படை, மூட்டு வலிகள், மூட்டு வீக்கம், மூல நோய்க்கு மருந்தாகப் பயனளிக்கிறது.

* முடி தேவை இல்லாத இடத்தில் எருக்கம் பாலைப் பூசுவார்கள். தேனுடன் எருக்கம் பாலைக் கலந்து பல் வலியைப் போக்க பூசுவார்கள். அரிசி அளவு உலர்ந்த எருக்கம் பூக்கள் குஷ்ட நோயைக் குணப்படுத்த பயன்படுத்துவார்கள்.

* எருக்கம் பாலை பாம்பு விஷத்தை முறிக்கப் பயன்படுத்துவார்கள்.

வேரின் மருத்துவ குணங்கள் :

* எருக்கம் வேரை எடுத்து அதன் கரியை நல்லெண்ணெயில் கொதிக்க வைத்து, தொழுநோய் தோலின் மீது பூசுவார்கள்.

* ஆண்களுடன் உடல் உறவு கொள்வதால் உண்டாகும் நோய்கள் குணம் பெறவும் இந்தச் செடியைப் பயன்படுத்துகின்றார்கள்.

இதே போல் விபச்சாரிகளையும், தேவதாசிகளையும், அன்னியப் பெண்களையும் அனுபவித்துக் கொண்டு இருக்கும் ஆண்களுக்கு வெட்டை நோயில் இருந்து பாதுகாப்பு பெற வெள்ளை எருக்கன் செடியைப் பயன்படுத்துவர்.

தயாரிக்கப்பட்ட மருந்துகள்

மேற்கண்ட மருந்துகளைத் தயாரிக்க முடியாதவர்கள் பிரபல யுனானி மருந்துக் கம்பெனிகளால் தயாரித்து யுனானி நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படும் கீழ்க்காணும் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.

* ஹப்பே காதரி, ஹப்பே குலே ஆக், ஹப்பே வஜவுல் முஃபாசில் இவைகளில் ஏதேனும் ஒன்றை வாங்கி சாப்பிட்டால் மூட்டு வலி, சளி நீங்கும்.
* ஆண்மை சக்தியை அதிகரிக்க குஷ்தாயே சாந்தி பயன்படுத்தலாம்.
* வெட்டை நோயைக் குணமாக்க குஷ்தாயே நீலா தோத்தா சாப்பிடலாம்.
* இரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி நீங்கிட குஷ்தாயே ஃபவுலாத் தரலாம்.
* மஞ்சள் காமாலை நீங்கிட குஷ்தாயே குப்சுல் ஹதீஸ் சாப்பிடலாம்.
* அஜீரணம் கேஸ்டிரபிள் நீங்கிட ஹப்பே மதார் சாப்பிடலாம்.
* ஆஸ்துமா குணம் பெற ஹப்பே ஜீக்குந்நஃப்ஸ் சாப்பிடலாம்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோயில்கள்

திருஎருக்கத்தம்புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. வெள்ளெருக்கு, எருக்கத்தம் புலியூரில் விழாக்காலங்களில் வெள்ளெருக்கம் பூவால் பூசிக்கப்படுகிறது. திருக்கானாட்டு முள்ளூரில் வெள்ளெருக்குடன் அத்தியும் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

கடலூர் மாவட்டம் எருக்காத்தம் புலியூர் உள்ள குமாரசாமி கோவிலில் சிவபெருமானுக்கு விசேஷமாக வெள்ளை எருக்கஞ்செடியையும், பூக்களையும் சேர்த்தே வணங்குகின்றார்கள்.

சங்க இலக்கியம்

நல்லவும், தீயவும் அல்லவாய் உள்ள எருக்கு மலரைத் தரும் புதர்ச் செடிக்குச் சங்க இலக்கியங்களில், புறநானூற்றில் கபிலர் இடந்தருகின்றார். இது நீல எருக்கு, வெள்ளெருக்கு என இரு வகைப்படும். இது எங்கும் வளரும் வெளிர், நீல எருக்கு. இதில் வெள்ளெருக்க மலரைச் சடையில் சூடியவர் சிவபெருமான் என்பர் கம்பர்.

சங்க இலக்கியப் பெயராக எருக்கு என்றே குறிக்கப்படுகிறது. கபிலர் புறநானூற்றில் எருக்கம் புதர்ச்செடிக்கு ஓர் இடம் வைத்துள்ளார். பூக்களில் நல்லனவும், தீயனவும் உள்ளன. புல்லிய இலை(கெடுமனத்தால்) உடைய எருக்கம் பூவையும் கடவுளர் ஏற்றுப் போற்றுவது போன்று, பாரிவள்ளல் தன்னிடம் வரும் அறிவற்ற எளியவரையும் வரவேற்றுப் பரிசளிப்பதைக் கடமையாகக் கொண்டவர் என்பதைப் பாடுகின்றார்.

இது கொத்தாகப் பூக்கும் என்பதால் ‘குவியினார் எருக்கு’ என்றார் புலவர். மலரில் ஐந்து புறவிதழ்கள் விரிந்தும், அகவிதழ்கள் ஐந்து பட்டையாக ஒட்டிய அகவிதழ்களின் முனை மொட்டையாகவும் அழகாகவும் காட்சி தரும். இதனைக் குவிந்த முகிழ் என்பர் புலவர்.

“குறுமுகிழ் எருக்கங் கண்ணி” என நற்றிணையிலும், “குவிமுகிழ் எருக்கங்கண்ணியும்” என குறுந்தொகையிலும் வரும் பாடல் வரிகளால் இதனைக் காணலாம். எருக்கு இரு வகையானது. வெள்ளிய நிறமுடைய பூக்களை உடையது வெள்ளெருக்கு ஆகும். இது குறைவாகவே காணப்படும். இதனைச் சிவபெருமானின் சடையில் உள்ள பூவாகக் காண்கிறார் கம்பர்.

இம்மலர் நறுமணம் அண்டாதது எனவும், மணமற்றது எனவும் புலவர்கள் மறைமுகமாகக் கூறுவர். உதாரணமாக, தொல்காப்பிய உரையின் மேற்கோளாகக் காட்டப்படும் பாடலைப் பார்ப்போம்.

பரத்தை வீட்டிலிருந்து மீளும் தலைவன், மணமிக்க குவளைப் பூமாலையைச் சூடிவந்தான். தெருவில் எருக்கம் பூவை வைத்து விளையாடிய குழந்தையும் உள்ளே வந்தது. குவளைக் கண்ணி சூடிய தலைவனைப் பரத்தை தழுவியதால் அதனை ஏற்காமல் மகன் சூடியிருந்த எருக்கு நன்றென அவனைத் தழுவினாளாம். அதையே, “ஒல்லேம் குவளை புலா அல் மருங்கின் புல்லெருக்கங்கண்ணி நறிது” என தொல்காப்பியம் சுட்டுகிறது.

மேலும் செந்தாவரையர், அதியன் விண்ணத்தனார் ஆகியோரும் இதுபற்றிப் பாடியுள்ளார். வாட்போக்கிக் கலம்பகம் எனும் நூலிலும் குறிக்கப்பட்டுள்ளது. இச்செடியில் உண்டாகும் பால்கொடிது. ஆனால், மருந்துக்குப் பயன்படுகிறது. வெள்ளெருக்கின் நாரை எடுத்து குழந்தைகட்கு அரைஞாண் கயிறுபோல் கட்டுவர் என சங்க இலக்கியக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

சூரியன்

கஞ்சனூரை அடுத்த 2 கி.மீ. தொலைவில் உள்ளது..

(தொடரும்)

--
செல்வன்

www.holyox.tk

"In my heart, I think a woman has two choices: either she's a feminist or a masochist."

—Gloria Steinem








--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

     "ஸ்ரீ"

“யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே”
Reply all
Reply to author
Forward
0 new messages