திரு சுப. உதயகுமார் அவர்களின் கடிதம்...

309 views
Skip to first unread message

ஸ் பெ

unread,
Nov 5, 2013, 1:43:47 PM11/5/13
to panbudan
ம.க.இ.க. தோழர்களுக்கு ஒரு திறந்த கடிதம் 

தோழர்களே, 

வணக்கம். அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பாக கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்துக்கு எதிராக இடிந்தகரை, கூடங்குளம் பகுதி மக்கள் ஆதரவுடன் 2011 ஆகஸ்ட் முதல் ஓர் உச்சமான போராட்டத்தை நாங்கள் தொடங்கி நடத்தி வருகிறோம். போராட்டம் தொடங்கி சுமார் மூன்று மாதங்கள் கழித்து உங்கள் இயக்கத்தைச் சார்ந்த ஒரு குழு இடிந்தகரைக்கு வந்து எங்களை சந்தித்தனர். உங்கள் இயக்கத்தைப் பற்றி, செயல்பாடுகள் பற்றி எங்களில் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், உங்கள் எண்ணங்களை, ஆலோசனைகளை நான் கவனமாகக் கேட்டேன், உங்களோடு ஒரு கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டேன். 

உங்களின் கொள்கைகளில், செயல்பாடுகளில் முழு உடன்பாடு இல்லையென்றாலும், நீங்கள் ஒரு மதவாத, சாதீய, பிற்போக்கு சக்தியல்ல என்பதன் அடிப்படையில் உங்களோடு தொடர்ந்து இணைப்பில் இருந்தேன். எங்கள் நிகழ்வுகளை உங்களுக்கு அறியத் தந்தேன். கூடங்குளம் போன்ற பிரச்சினைகள் ஓர் இயக்கத்துக்கோ, அல்லது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவுக்கோ மட்டுமே சொந்தமல்ல என்பதில் நானும், எங்கள் போராட்டக் குழுத் தோழர்களும் தெளிவாகவே இருந்து வருகிறோம். அந்த அடிப்படையில் உங்கள் இயக்கம் நடத்திய போராட்டங்களுக்கும் நாங்கள் ஆதரவாகவே செயல்பட்டோம். தூத்துக்குடியில் நீங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நானும், சில தோழர்களும் கலந்து கொண்டோம். 

பிப்ரவரி 11, 2012 அன்று கூடங்குளம் அணுமின் நிலைய முற்றுகைப் போராட்டம் ஒன்றை அறிவித்து, கூத்தங்குழி மக்களை சந்தித்து அந்தப் போராட்டத்துக்கு வரும்படி அழைத்தீர்கள். “உதயகுமார் சொன்னால்தான் வருவோம்” என்று அவர்கள் சொன்னதன் அடிப்படையில் ஒருநாள் இரவு இடிந்தகரைக்கு வந்து எங்களை சந்தித்து, கூத்தங்குழி மக்களை அனுப்பும்படி கேட்டுக் கொண்டீர்கள். ஏன் ஒரு குறிப்பிட்ட ஊர் மக்களை மட்டும் அழைக்கிறீர்கள், உங்களின் உண்மையான செயல் திட்டம் என்ன என்று விவாதித்த நாங்கள், இன்னொரு இயக்க நிகழ்வுக்கு நம் மக்களை அனுப்புவது சரியாக இருக்காது என்று தீர்மானித்தோம். இந்த நிலையில் கூடங்குளம் நண்பர்கள் ஒரு சிலரின் உதவியோடு எனக்கு எதிராக எங்கள் இயக்கத்துக்கு ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டீர்கள். கூடங்குளம் ஊருக்கு அடிக்கடிச் சென்று அங்குள்ள தோழர்களிடம் நிறையப் பேசி அவர்களை மசிய வைக்கும் வேலை தொடர்ந்து நடைபெற்றது. சனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட நான், அந்த நிலையிலும் உங்களை உதாசீனப்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாகவே இருந்தேன். 

மார்ச் 19, 2012 அன்று தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, கூடங்குளம், கூட்டப்புளி, செட்டிக்குளம் தோழர்களைக் கைது செய்தபோது, அவர்களைப் பிணையில் எடுப்பதற்கு உதவ முன் வந்தீர்கள். நெல்லையைச் சார்ந்த வேறு பல சார்பற்ற வழக்கறிஞர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்ததால், அவர்களையும் இணைத்துக் கொண்டு செயல்படும்படிக் கேட்டு, அந்தப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்தோம். தாங்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்று அவர்கள் ஆதங்கப்பட்ட நிலையிலும், உங்களோடு தொடர்ந்து செயல்பட்டோம் நாங்கள். ஆனால் உங்களின் “புதிய ஜனநாயகம்” இதழின் மார்ச் 2012 தலையங்கத்தில் இப்படி எழுதினீர்கள்: “புலிகள் பிரபாகரனைப் போல ஜெ உதவியுடன் வெற்றி பெற முடியுமென்று உதயக்குமார் நம்பச் சொல்கிறார். முள்ளிவாய்க்காலுக்கு நேர்ந்த முடிவு இடிந்தக்கரையிலும் ஏற்படக் கூடாது.” 

“ஜெ உதவியுடன் வெற்றி பெற முடியுமென்று” நான் எங்கேயும், எப்போதும் சொல்லவுமில்லை, அப்படி நம்பவுமில்லை, யாரையும் நம்பச் சொல்லவுமில்லை. தமிழக அரசியல் நிலை, யதார்த்தம், கட்சிகள், ஆளுமைகள் பற்றியெல்லாம் எனக்கு நன்றாகவேத் தெரியும். கூடங்குளம் திட்டம் மத்திய அரசின் திட்டம் என்பதாலும், மத்திய அரசையும், மாநில அரசையும் ஒரே நேரத்தில் எதிர்த்துப் போராடுவது கடினமென்பதாலும், சில நடைமுறை தந்திரங்களைக் கைக்கொண்டோமே தவிர எங்களை, மக்கள் போராட்டத்தை யாரிடமும் நாங்கள் அடகு வைக்கவில்லை. 

கைதானத் தோழர்களை பிணையில் எடுப்பதற்காக நாம் சேர்ந்து முயற்சிகள் மேற்கொண்டிருந்த நேரத்திலேயே, “கூடங்குளம் போராட்டத்தின் தலைமை சரியில்லை” என்ற கருத்தை ஏப்ரல் 21, 2012 அன்று திருநெல்வேலியில் நடந்த ஒரு கருத்தரங்கில் தெரிவித்தீர்கள். அதை ஒரு விமர்சனமாக கருதி உங்கள் மேல் கோபம் கொள்ளாமல், உங்கள் கருத்துரிமையாக எடுத்துக்கொண்டுக் கடந்து சென்றோம் நாங்கள். 

2012 மார்ச் மாதம் நானும், புஷ்பராயனும், இன்னும் சில தோழர்களும் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதத்தின் காரணமாக, எங்கள் மக்கள் குழுவோடு அரசு தரப்பு நடத்தியப் பேச்சுவார்த்தையில், கைதாகி சிறையில் இருப்பவர்கள் அனைவரையும் அரசு தரப்பில் எந்த ஆட்சேபணையும் இன்றி பிணையில் விடுவதற்கு முன்வந்தனர். அதற்கான செலவாக, உங்களுக்கு இடிந்தகரை மக்கள் ரூ.1,25,000 தந்தார்கள்; கூட்டப்புளி மக்கள் ரூ. 65,000 தந்தார்கள்; கூடங்குளம் நண்பர் ஒருவர் ரூ. 5,000 தந்தார். மொத்தம் ரூ. 1,95,000 தந்தோம். இதில் ரூ. 69,267-க்கானச் செலவு விபரங்களை தெளிவாக, முறையாக எழுதி என்னிடம் தந்தீர்கள்; நான் அந்த ஆவணத்தின் ஒரு நகலை இடிந்தகரை நிதிக் குழுவிடம் கொடுத்துவிட்டு, முதல் படியை பத்திரமாக வைத்திருக்கிறேன். 

நானோ, எனது தோழர்களோ வெளியாரிடம் ம.க.இ.க. தோழர்கள் வழக்குச் செலவுகளுக்கு இவ்வளவு பணம் வாங்கினார்கள் என்றோ, இவ்வளவு செலவு ஆயிற்று என்றோப் பேசியதே கிடையாது. அதற்கானத் தேவையும் எழவில்லை. ஆனால் நீங்கள் போகும் இடங்களில் எல்லாம் “ஒரு ரூபாய் கூட வாங்காமல், வழக்கு நடத்தினோம்” என்று ஒரு சுய விளம்பரத்தைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். இதைப் பற்றி சிலர் எங்களிடம் விசாரித்தபோதுதான், வழக்குச் செலவுகளுக்காக நாங்கள் ரூ. 1,95,000 கொடுத்தோம் என்று சொல்ல வேண்டியதாயிற்று. “எங்களுக்கானக் கட்டணம் எதுவும் வாங்கவில்லை, செலவுகளுக்கு மட்டும் காசு வாங்கினோம்” என்ற உண்மை விபரத்தை நீங்கள் சொல்லியிருக்கலாம். 

அக்டோபர் 9, 2013 அன்று இடிந்தகரைக்கு உங்கள் குழு ஒன்று வந்து, உங்களின் தாது மணல் போராட்டம் பற்றி சுமார் பத்து நிமிடம் என்னிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றீர்கள். அந்த மிகக் குறுகிய காலகட்டத்திலேயே உங்களில் ஒருவர் இடிந்தகரைக்கு வந்திருந்த ஜூனியர் விகடன் நிருபர், தம்பி மகா. தமிழ்ப்பிரபாகரனிடம் “இவர்களிடம் காசே வாங்காமல் நாங்கள் வழக்கு நடத்திக் கொடுத்தோம்” என்று சொல்லியிருக்கிறீர்கள். அவர் எங்களிடம் கேட்டார். சுமார் இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் உங்கள் சேவை பரப்புரையை நீங்கள் கைவிட்டபாடில்லை. இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே, இப்போது இந்த பணப் பிரச்சினை பற்றி இங்கே நான் குறிப்பிடுகிறேன். தயவு செய்து இனிமேல் “எங்களுக்கானக் கட்டணம் எதுவும் வாங்கவில்லை, வழக்குச் செலவுகளுக்கு மட்டும் ரூ. 1,95,000 வாங்கினோம்” என்ற உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் “காலத்தினாற் செய்த” உதவியை இதுவரை நாங்கள் காசால் அளக்கவுமில்லை, உதவியை மறக்கவும் மாட்டோம். தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள பல வழக்கறிஞர்கள் உங்களுக்கும், எங்களுக்கும் பணம் ஏதும் பெறாமல் உதவியதையும் நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும் (அவர்களையும் இணைத்துக் கொண்டு, போராட்டத்தின் வழக்கறிஞர்கள் குழுவை ஒருங்கிணையுங்கள் என்று நான் கேட்டுக் கொண்டபோது, முதலில் இணக்கம் தெரிவித்த நீங்கள், பின்னர் ஏதோ காரணத்தால் பதிலேதும் சொல்லாமல் விலகிச் சென்ற கதையை எல்லாம் இங்கேப் பேசி பலனில்லாததால், விட்டுவிடுகிறேன்). 

இந்த நிலையில் “புதிய ஜனநாயகம்” மே 2012 இதழில் “கூடங்குளம் போராட்டம்: அனுபவங்களும் படிப்பினைகளும்” என்ற கட்டுரையில் அபாண்டமானக் குற்றச்சாட்டுக்களை அடுக்கினீர்கள்: 

[1] “போராட்டங்களுக்கு அணிதிரண்ட மக்கள் மீது, அவர்களை வழிநடத்திய தலைமை மற்றும் முன்னணியாளர்கள் முழு நம்பிக்கை வைக்கவில்லை. அம்மக்களைப் பற்றிய குறை மதிப்பீடு கொண்டிருந்தார்கள்.” 

[2] “எத்தகைய எதிரிகளை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும் என்ற உண்மை அங்கு போராடும் மக்களிடம் சொல்லப்படவே இல்லை.” 

[3] “கூடங்குளம் திட்டம், ஆட்சியாளர்கள், அமெரிக்க-ரஷ்யா முதலிய மேலைநாடுகள், இந்திய ஆளும் வர்க்கங்கள் ஆகியோருக்கு எவ்வளவு முக்கியமானது; என்ன விலை கொடுத்தாவது, என்ன காரியம் செய்தாவது கூடங்குளம் திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்பதில் எவ்வளவு மூர்க்கமாகவும் உறுதியாகவும் அவர்கள் இருக்கிறார்கள் என்கிற விவரம் போராடும் மக்களைச் சென்றடையவே இல்லை.” 

[4] “பால்குடம் எடுப்பதும், பட்டினி கிடப்பதும் என்ற அமைதி வழியிலேயே, காந்திய வழியிலேயே போராடி வருவதாகத் திரும்பத் திரும்ப உதயக்குமார் முதலியவர்கள் மன்றாடினர்.” 

[5] “குறைந்தபட்சம் சிங்கூர், நந்திகிராமம் போராட்டங்களுக்கு திரண்டதைப்போன்று பரவலான மக்கள் ஆதரவைத் திரட்டியிருக்கவேண்டும்.” 

[6] “கூடங்குளம் போராட்ட முன்னணியாளர்கள் ஜெயலலிதா போன்ற பிழைப்புவாதக் கழிசடைகளின் மீது நம்பிக்கை வைக்கும்படி சொன்னார்கள். இப்போது அவர்கள் நம்ப வைத்து வஞ்சகம் செய்து விட்டதாகப் புலம்புகிறார்கள். ஆக, மக்கள், மக்கள் மட்டுமே நம்பிக்கைக்குரிய மகத்தான சக்தி என்ற கொள்கையில் ஊன்றி நிற்கும்போதுதான் இலட்சியத்தை எட்டமுடியும் என்பது கூடங்குளம் போராட்டங்கள் நமக்குக் கற்றுத் தரும் படிப்பினை.” 

எங்கள் மக்களைப் பற்றி எந்த மாதிரியான மதிப்பீடு நாங்கள் கொண்டிருக்கிறோம்; அவர்கள் எங்களை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்று எங்கள் மக்களிடமே நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே? எதற்காகப் போராடுகிறோம், யாரை எதிர்த்துப் போராடுகிறோம், அவர்களின் பலம் எத்தகையது என்றெல்லாம் உங்களுக்கு பாடமே எடுப்பார்களே எங்கள் மக்கள்? இடிந்தகரைக்கு வருகிற ஒவ்வொரு பத்திரிகையாளரும் இவை பற்றிய தகவல்களை எத்தனையோ முறை அருமையாகப் பதிவு செய்திருக்கிறார்களே? மேலும் உங்களின் 37 வருட புரட்சி வரலாற்றில் எந்த பரவலான மக்கள் ஆதரவையும் எந்தப் பிரச்சினைக்கும் திரட்டாத நீங்கள், எங்களுக்கு மக்கள் சக்தி பற்றியும், போராட்ட முறை பற்றியும் வகுப்பு எடுப்பது நகைச்சுவையாக இருக்கிறது. 

விசுவாமித்திரர் கோவிலுக்கு பால்குடம் எடுத்தது கூடங்குளத்தைச் சார்ந்த இந்து மக்களே தவிர, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமோ, போராடிக்கொண்டிருக்கும் பொதுமக்களோ அல்ல. நான் அந்த மக்களோடு விசுவாமித்திரர் கோவிலுக்குப் போனேன் அவர்களுடைய மத உணர்வுகளை அவமதிக்காமலிருப்பதற்காக; எங்கள் போராட்டம் எந்த ஒரு மதத்தையும் முன்னிறுத்துவது அல்ல என்று நிரூபிப்பதற்காக. மேலும் ‘பொருள் முதல்வாதம்’ மட்டுமே சமூக மாற்றத்துக்கான அடிப்படையாக முடியாது, மக்களின் கலாச்சாரம், பண்பாடு போன்றவையும் முக்கியமானவை என்று நம்புகிறவன் நான். 

“ஜெயலலிதா போன்ற பிழைப்புவாதக் கழிசடைகளின் மீது நம்பிக்கை வைக்கும்படி” நான்/நாங்கள் சொன்னது போலவும், “அவர்கள் நம்ப வைத்து வஞ்சகம் செய்து விட்டதாகப்” புலம்பியது போலவும் எழுதினீர்கள். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக எங்கள் எழுத்தோ, பேச்சோ ஏதாவது இருக்கிறதா உங்களிடம்? அல்லது இதுவும் ஓர் அடிப்படையற்ற புரட்சிகரக் குற்றச்சாட்டுதானா? 

மேற்கண்ட கட்டுரையில் ஒரு சுவாரசியமான தகவலை குறிப்பிட்டிருக்கிறீர்கள்: “கூடங்குளத்திலிருந்து வெகுதொலைவிலுள்ள சென்னை மக்களிடம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி போன்ற புரட்சிகர இயக்கங்கள் அணு சக்தி அணு உலை எதிர்ப்பு இயக்கத்தை எடுத்துச் சென்றபோது கூட முதலில் கடும் எதிர்ப்பையே கண்டார்கள். ஆனால், அவர்கள் பிரச்சார முயற்சியில் அழுந்தி நின்று இயக்கத்தைத் தொடர்ந்தபோது, ஆதரவு தருபவர்களாக மக்கள் மாறினர்.” அற்புதமானப் புரட்சியாக இருக்கிறதே? இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்? “அணு சக்தி அணு உலை எதிர்ப்பு இயக்கத்தை” எப்படி எடுத்துச் சென்றீர்கள்? என்னென்ன நிகழ்வுகள், எங்கெங்கு, எத்தனை முறை, எப்படியெல்லாம் நடத்தினீர்கள்? எந்தவிதமான “கடும் எதிர்ப்பை” எதிர்கொண்டீர்கள்? “அழுந்தி நின்று இயக்கத்தைத் தொடர்ந்த” வித்தை பற்றியும் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்? 

சிங்கூர், நந்திகிராமம் போல கூடங்குளம் போராட்டத்தை மாற்ற வேண்டும் என்று பல இடங்களில் உங்களில் சில தோழர்கள் பேசியிருக்கிறீர்கள். அப்படிப் பேசுவது, நம்புவது உங்கள் கருத்துரிமை. அதில் நான் தலையிட விரும்பவில்லை. ஒருமுறை உங்கள் கலைக்குழுவினர் இடிந்தகரை மேடையில் இதே கருத்தை வலியுறுத்திப் பாடினார்கள். இந்த வன்முறைக் கருத்துக்கு நான் உங்களிடம் எதிர்ப்பு தெரிவித்தபோது, “சும்மா ஒரு எழுச்சிக்காகவே அப்படிப் பாடினார்கள்” என்று விளக்கம் அளித்தீர்கள். உங்களின் புரட்சியையும், அதன் தீரத்தையும், உண்மைத் தன்மையையும் நான் அன்றைக்கு தெளிவாகப் புரிந்துகொண்டேன். 

கடந்த 2012 செப்டம்பர் மாதம் நாங்கள் கடலோரத்தில் நடத்திய அணுஉலை முற்றுகைப் போராட்டத்தின்போது முதல் நாளும், இரண்டாம் நாளும் பல்வேறு அமைப்பினர் பங்கு கொண்டதைப் போல நீங்களும் கலந்து கொண்டீர்கள். காவல்துறை தாக்குதலின்போது என்னையும், தோழர்கள் புஷ்பராயனையும், முகிலனையும் மக்கள் படகுகளில் ஏற்றி அப்புறப்படுத்தியபோது, மை.பா. நன்மாறன் (சேசுராசு), பங்குத்தந்தை செயக்குமார், மில்டன், கெபிஸ்டன் போன்றோர் இடிந்தகரையில் இருந்து போராட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டிய நிலை எழுந்தது. அவர்களுக்கு ஒத்தாசையாக நீங்களும் இருந்து உதவியதை எங்கள் மக்கள் மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். பின்னர் நாம் நேரில் சந்தித்தபோது, நான் எனது நன்றியைத் தெரிவித்தேன்; அதை மேடையிலும் அறிவித்தேன். ஆனால் நீங்கள் உங்களை மட்டுமே முன்னிறுத்தி ஒரு மாற்று வரலாற்றையே வடித்திருந்தீர்கள் உங்கள் இணையதளத்திலும் (“கூடங்குளம்: போர்க்குணம் கமழும் எழுச்சி – போராட்டத் தொகுப்பு” அக்டோபர் 8, 2012), உங்கள் இதழிலும் (புதிய ஜனநாயகம், அக்டோபர் 2012). 

பின்னர் நீண்ட நாட்களாக எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தோம் நாம். இந்நிலையில் அக்டோபர் 18, 2013 அன்று மதியம் எங்கள் போராட்டத் தலைவியர் திருமதி. சுந்தரி, திருமதி. சேவியர் அம்மா போன்றோரின் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தாது மணற்கொள்ளை சம்பந்தமாக விண்ணப்பம் ஒன்றைக் கொடுக்க திருநெல்வேலிக்குச் சென்றிருந்தார்கள். நீங்களும் அதேப் பிரச்சினை சம்பந்தமாக ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்குப் போயிருக்கிறீர்கள். உங்கள் புரட்சியை மட்டுமே நடத்துவதற்குப் பதிலாக, எங்கள் குழுவில் தலையிட்டு, வந்திருந்தப் போராளிகளில் ஒருசிலரைத் திசைதிருப்பி அங்கிருந்த பத்திரிகையாளர்களோடும், காவல்துறையினரோடும் மோதச் செய்து, அவர்களைக் கைது செய்ய வைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறீர்கள். எங்கள் போராளிகளின் தெளிவானப் பார்வையால், புரிதலால், செயல்பாட்டால் அவர்கள் தங்களை காத்துக் கொண்டார்கள். அழையா விருந்தாளிகளாக நீங்கள் உள்ளே நுழைந்து, தலைவராக எத்தனித்தது, தவறாக வழிநடத்தியது கண்டிக்கத் தகுந்தது. 

வழக்கம்போல உங்கள் இணைய தளத்தில் (“மணல் கொள்ளையர்களை எதிர்த்து நெல்லை கலெக்டர் அலுவலகம் முற்றுகை,” அக்டோபர் 21, 2013) வரலாறு ஒன்றை எழுதி, உலகுக்கே அணுசக்தியின் அழிவிலிருந்து உய்வடையும் வழி சொல்லிக் கொண்டிருக்கும் எங்கள் போராளிப் பெண்களை “ஆட்சியர் அலுவலக கட்டிடத்தினுள் அழைத்துச் சென்று அமரச் செய்து கோஷங்கள் எழுப்பச் செய்தோம்” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். “நேற்று நடந்த போராட்டத்தில் ம.உ.பா.மைய வழக்குரைஞர்கள் மக்களுடன் உறுதியாக களத்தில் நின்றது, வழிகாட்டியது மற்றொருமுறை ம.உ.பா.மையம் மக்களுடன் உறுதியாக முன்னணியில் நிற்கும் என்ற நம்பிக்கையை இடிந்தகரை உள்ளிட்ட கடலோர மக்களுக்கு ஏற்படுத்துவதாக அமைந்தது” என்று நீங்கள் எழுதியிருப்பது உங்களைப் பற்றி உங்களுக்கே ஒருவித சந்தேகம் இருப்பது போலவேப்படுகிறது. 

கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை, தாதுமணற் கொள்ளை பிரச்சினை பற்றியெல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்கும் கடலோர மக்கள் மத்தியிலேயே நீங்கள் தொடர்ந்து பரப்புரை செய்வது ஏன்? இந்தப் பிரச்சினைகள் பற்றி போதிய விழிப்புணர்வில்லாத உட்பகுதி மக்களை சந்தித்து அவர்களிடம் பரப்புரை செய்யலாமே? கடலோர ஊர்களிலுள்ள இளைஞர்களைப் பிடித்து, என்னைப்பற்றி, எங்கள் இயக்கத்தைப் பற்றி அவர்களிடம் தவறாகப் பேசி, மூளைச்சலவை செய்வது உண்மையிலேயே தேவைதானா? இக்கேள்விகளைக் கேட்பதற்காகத்தான் இக்கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன். 

நான் உங்களை இன்னும் தோழர்களாக, தோழமை இயக்கங்களாகத்தான் பார்க்கிறேன். ஆனால் ‘மக்களை நம்பாத, மதிக்காத, போராட்டம் நடத்தத் தெரியாத நீயும், புரட்சியாளர்களாகிய நாங்களும் எப்படி தோழர்களாக இயங்க முடியும்’ என்று நீங்கள் கேட்கலாம். என்னைப் பொறுத்தவரை, மக்களுக்காக, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடும் அனைவரும் தத்தம் அடிப்படைக் கொள்கைகளில், சித்தாந்தங்களில் சமரசமின்றி, ஒரு பொது வெளியை உருவாக்கி, ஒன்றாக நிற்பதும், சேர்ந்து உழைப்பதும் முக்கியம் என்று நினைக்கிறேன். அம்மாதிரியான இணக்கம் இயலாமற்போனால், நாகரிகமாகப் பிரிந்து தத்தம் வழிகளில் அந்த இலக்கை நோக்கி நடக்கலாம். ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பதும், குறை சொல்வதும், குற்றம் காண்பதும், தம்மை முன்னிலைப் படுத்துவதும், பிறரைப் பழிப்பதும் முதிர்ச்சியற்ற அணுகுமுறை என்றே நினைக்கிறேன். தமிழக அரசியலில், பொது வெளியில், இம்மாதிரியான நேர்மைக்கோ, நாகரிகத்திற்கோ, உரிமையோடு இடித்துரைக்கும் பண்புக்கோ மரியாதை கிடையாது என்பதையும் அறிவேன். “நடந்ததைக் கேட்டால், அடுத்தது பகைதான்” இங்கே. 

உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அறிவோ, ஆற்றலோ, அனுபவமோ எனக்கு இல்லையென்றாலும், என்னுள் தோன்றும் ஓரிரு கருத்துக்களைச் சொல்வதற்கு தயவு செய்து என்னை அனுமதியுங்கள். 

[1] நீங்கள் அனைவருமே மக்கள் பிரச்சினைகளில் அக்கறையுள்ளவர்கள், மக்களுக்காக உழைக்கும் உத்வேகம் உடையவர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சொல்லில் முழு உண்மையைப் பேணி, செயலில் முழு நேர்மையைக் கைக்கொண்டால், உங்கள் பணி இன்னும் சிறக்கும். 

[2] நீங்கள் பிறரோடு ஒன்றிணைந்து நடத்தும் போராட்டத்தில் தவறுகள் நடந்தால் பிறரைப் பழிப்பதும், சமூக மாற்றங்கள் நடந்தால் உங்களின் வெற்றியாகக் கொண்டாடுவதும், உங்களையே உயர்த்திப் பிடித்துக் கொள்வதும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமாகவேக் கொள்ளப்படும். 

[3] காக்கைக் கூட்டில் முட்டையிடும் குயில் போல, அடுத்தவர் நடத்தும் போராட்டத்தில் நுழைந்து புரட்சி செய்யாதீர்கள். ஒரு தலைமையில் ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருந்தால், அவர்களுடன் நின்று உதவுங்கள், அல்லது விலகிச் செல்லுங்கள். போராடும் மக்களிடையேப் போய் புதிய புரட்சியாளர்களைத் தேடுவது, உள்ளேபோய் நின்று குழிபறிப்பது, குழு அமைப்பது, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது – இவையெல்லாம் நேர்மையானப் புரட்சியல்ல. 

[4] “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்றியங்கும் ‘புரட்சி’ ஓர் அற்புதமான சொல், செயல். இது தமிழகத்தின் அரசியலிலும், மக்கள் இயக்கங்களிலும், சினிமாவிலும் படும்பாடு வேதனையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. நாமனைவருமாகச் சேர்ந்து இந்தச் சொல்லின், கோட்பாட்டின் மகத்துவத்தைக் காப்பாற்ற முயல்வோம். “கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் எவையென அறிவுமிலார்” நிறைந்து கிடக்கும் நம் நாட்டில், நம்மைப் போன்ற சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள் சேர்ந்து நிற்பதும், தேர்ந்து செயலாற்றுவதும் புரட்சியின் அடிப்படைத் தேவை. காந்திப் பெருமகனார் சொன்னது போல, நாம் காண விரும்பும் மாற்றத்தை நாமே வாழத் துவங்குவதுதானே கற்றுணர்ந்த நமது கடமை. 

அன்புடன், 

சுப. உதயகுமாரன் 
இடிந்தகரை 
அக்டோபர் 26, 2013 

(வேர்கள், நவம்பர் 2013 இதழில் வெளியிடப்பட்டது.)

--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ராம் காமேஸ்வரன்

unread,
Nov 5, 2013, 9:21:45 PM11/5/13
to panb...@googlegroups.com
///“ஜெயலலிதா போன்ற பிழைப்புவாதக் கழிசடைகளின் மீது நம்பிக்கை வைக்கும்படி” நான்/நாங்கள் சொன்னது போலவும், “அவர்கள் நம்ப வைத்து வஞ்சகம் செய்து விட்டதாகப்” புலம்பியது போலவும் எழுதினீர்கள். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக எங்கள் எழுத்தோ, பேச்சோ ஏதாவது இருக்கிறதா உங்களிடம்? அல்லது இதுவும் ஓர் அடிப்படையற்ற புரட்சிகரக் குற்றச்சாட்டுதானா? //

திரு. உதயகுமார் டிசம்பர் 18, 2011 ல் ஜெயலலிதாவிற்கு எழுதிய ஆங்கில மடல் இதோ. மேதகு முதல்வரை "உண்மையான மக்கள் தலைவி" என்று பாராட்டியதை மறந்துவிட்டாரே?
 
December 18, 2011
 
People’s Movement Against Nuclear Energy (PMANE)
Idinthakarai & P. O. 627 104
Tirunelveli District
Tamil Nadu
Phone: 98656 83735
 
The Honorable Chief Minister
Government of Tamil Nadu
Fort St. George
Chennai 600 009
Fax: 044-
 
 
Your Excellency Amma:
 
Greetings! The People’s Movement Against Nuclear Energy (PMANE) and hundreds of thousands of Tamil people from the coastal and farming villages in the southern districts of Tamil Nadu and the concerned Tamil people from all over our state would like to thank you wholeheartedly for your very thoughtful statement of December 17, 2011. We thank you, Your Excellency, for standing up to defend the rights and interests of our Tamil people and our progeny. You have proved once again, Your Excellency, that you are truly a people’s leader and not an externally imposed CEO.
 
The Prime Minister’s assertion that the first Koodankulam reactor will be operational “in a couple of weeks” simply betrays the fact the Tamil Nadu State Cabinet’s resolution to halt the work at the Koodankulam plants was never honored earnestly or implemented effectively. It is also very clear that the Central Government, the Department of Atomic Energy (DAE), the Nuclear Power Corporation of India Limited (NPCIL), and the Koodankulam Nuclear Power Project (KKNPP) authorities have all been working on the Koodankulam reactors secretly against the letter and spirit of the State Cabinet Resolution.
 
If the first Koodankulam reactor has to go operational “in a couple of weeks,” the nuclear authorities must have loaded the fuel rods into the reactor. In that case, the nuclear authorities have breached all the Atomic Energy Regulatory Board (AERB) rules and the various international regulations that mandate compulsory mock drills and evacuation exercises among the local people before loading the fuel rods. Throwing all these Indian and international rules and norms to the air and compromising the safety and security of the Tamil people, the Central Government as well as its nuclear departments has indeed perpetrated a crime against its own people.
 
Hundreds of thousands of Tamil people have been protesting against the KKNPP project for the past four months and the Prime Minister has shown his utter disregard for the protesting people and our democratic struggle. The way the Central Government has responded to the gruesome Tamil genocide in Sri Lanka, the Sri Lankan Navy’s killing of some 570 Tamil fishermen, Colombo’s illegal detention and torture of others, the 3-Tamils capital punishment issue, the Katcha Theevu issue, and the more recent requests of Your Excellency for financial and material help and for CISF security for the Mullaperiyar dam  causes concern and worry in our minds that the Tamil people are being systematically discriminated against in India.
 
The Prime Minister, who hardly said anything meaningful to the people of Tamil Nadu or India about the Koodankulam issue, has chosen to speak about it in Russia, one of his major business partners. Obviously, this attitude and approach to the issue gives rise to a suspicion if the Prime Minister is more interested in pleasing the rulers of Russia than the people of India, and in working for the welfare of multinational corporations and foreign countries rather than the wellbeing of Indian people.
 
In this time of national leadership crisis, Your Excellency, you stand out as the most caring and creative leader of the land. Just as you implemented many wonderful plans and projects such as the “rain harvesting scheme” during your earlier tenure, you may please carry out all the innovative alternative energy plans that you had outlined as soon as you took over the mantle of power a few months back. Your visionary leadership along with your original and resourceful plans will be a path breaker not just for our State but for the whole country. If you give a call, we, all the Tamil people, are ready and willing to replace the ordinary round bulbs with CFL bulbs in all our homes and offices. Whatever steps you take to rectify the energy deficiency of our State, we are all ready to help you and your people-oriented government in every possible way we can. As you stand for us, we will stand for you and your government.
 
May we request an opportunity to meet with you in the next couple of weeks in order to submit a copy of the report prepared by the PMANE’s expert team and to apprise you of the ground situation here in Koodankulam please.
 
Thanking you once again, Your Excellency, for your caring and visionary leadership, we send you our best personal regards and all peaceful wishes.
  
Cordially,
 
 S. P. Udayakumar, Ph.D.
Coordinator
People’s Movement Against Nuclear Energy
 
 Copies to:
 
The District Collector
Tirunelveli District
Tirunelveli
 
The Superintendent of Police
Tirunelveli District
Tirunelveli

ராம் காமேஸ்வரன்

unread,
Nov 6, 2013, 10:50:41 AM11/6/13
to panb...@googlegroups.com

சுப. உதயகுமாருக்கு மகஇக-வின் பதில்

in இதர கட்சிகள், தன்னார்வ நிறுவனங்கள், போராட்டத்தில் நாங்கள் by வினவு, November 6, 2013

உதயகுமாரின் கடிதத்தில் காணப்படும் ம.க.இ.க வுக்கு எதிரான அவதூறுகளும், கடலோர இளைஞர்களை “மூளைச்சலவை” செய்வதாக அவர் கூறும் குற்றச்சாட்டும், “வைகுண்டராசன் வலைப்பின்னல்” பற்றிய புதிய புரிதலை எங்களுக்குத் தருகின்றன.

நேற்று (5.11.2013) இரவு தனது முகநூல் பக்கத்தில் ம.க.இ.க. தோழர்களுக்கு “திறந்த கடிதம்” ஒன்றை கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.சுப.உதயகுமார் வெளியிட்டிருக்கிறார்.

2011 முதல் இன்றுவரை நிகழ்ந்தவை என்று பல சம்பவங்களைக் குறிப்பிட்டு, அவை குறித்த அவரது விமரிசனங்களையும் அதில் எழுதியிருக்கிறார். இத்தனை நாட்களுக்குப் பின்னர், இப்படியொரு கடிதத்தை அவர் இப்போது எழுதுவதற்கு என்ன காரணம்? அதையும் அக்கடிதத்திலேயே அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை, தாதுமணற் கொள்ளை பிரச்சினை பற்றியெல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்கும் கடலோர மக்கள் மத்தியிலேயே நீங்கள் தொடர்ந்து பரப்புரை செய்வது ஏன்? இந்தப் பிரச்சினைகள் பற்றி போதிய விழிப்புணர்வில்லாத உட்பகுதி மக்களை சந்தித்து அவர்களிடம் பரப்புரை செய்யலாமே? கடலோர ஊர்களிலுள்ள இளைஞர்களைப் பிடித்து, என்னைப்பற்றி, எங்கள் இயக்கத்தைப் பற்றி அவர்களிடம் தவறாகப் பேசி, மூளைச்சலவை செய்வது உண்மையிலேயே தேவைதானா? இக்கேள்விகளைக் கேட்பதற்காகத்தான் இக்கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன்.”

என்று குறிப்பிட்டுள்ளார்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்

கடந்த அக்டோபர் 9 ஆம் தேதியன்று தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் உதயகுமாரை இடிந்தகரையில் நேரில் சந்தித்திருக்கின்றனர். அக்டோபர் 12 ஆம் தேதி தூத்துக்குடியில் நடத்தவிருந்த பேரணி, பொதுக்கூட்டம் குறித்த துண்டறிக்கைகளைக் கொடுத்து, தாதுமணல் கொள்ளைக்கு எதிராக நாங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தைப் பற்றியும் விளக்கியிருக்கின்றனர். இச்சந்திப்பு பற்றி உதயகுமாரும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அன்று தாது மணல் கொள்ளை எதிர்ப்பியக்கத்தை வரவேற்று வழக்குரைஞர்களிடம் உதயகுமார் பேசியிருக்கிறார். ஆனால், தற்போது கடிதத்தில் வேறு குரலில் பேசுகிறார். சென்ற மாதம் வரை அவரை பல சந்தர்ப்பங்களில் நேரில் சந்தித்த தோழர்களிடம் பேசாத பல “பிரச்சினைகளை” இப்போது அவர் பட்டியலிட்டு அடுக்குகிறார்.

தாது மணல் கொள்ளை என்ற பிரச்சினை பற்றி அவரது நிலை என்ன? இதனை 16, அக், 2013 ஆனந்த விகடன் பேட்டியில் அவர் தெளிவாக கூறியிருக்கிறார்.

“தாதுமணல் கொள்ளையர்களின் அனுதாபிகள் எங்கள் ஊர்களில் இருக்கிறார்கள். அதைப் பேசினால், ஊர் மக்களிடையே பிளவு வரும்; சமுதாயப் பிரச்னைகள் எழும்… நாங்கள் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மட்டும்தான். அனைத்து தீய சக்திகளுக்கும் எதிரான மக்கள் இயக்கமல்ல ..”

என்று கூறி தாது மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டங்களை தங்களால் எடுக்க இயலாத காரணத்தை விளக்கியிருக்கிறார்.

அவரால் எடுக்க இயலாத தாது மணல் பிரச்சினையை ம.க.இ.க வும் அதன்  தோழமை அமைப்புகளும் எடுப்பது குறித்து நியாயமாக அவர் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். அவ்வாறின்றி, “கடலோர கிராமங்களில் வேலை செய்யாதீர்கள்” என்று ம.க.இ.க வுக்கு ஏன் அறிவுருத்துகிறார் என்று புரியவில்லை. தாது மணல் கொள்ளையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கடலோர மக்கள். போராட விரும்புகிறவர்களும் அவர்கள்தான்.

நாங்கள் கடலோர கிராமங்களிலிருந்து வெளியேற வேண்டுமென்று விரும்புகிறவர்கள் கனிம மணல் கொள்ளையர்கள் மட்டுமே என்று இதுகாறும் நாங்கள் எண்ணியிருந்தோம். உதயகுமாரின் கடிதத்தில் காணப்படும் ம.க.இ.க வுக்கு எதிரான அவதூறுகளும், கடலோர இளைஞர்களை “மூளைச்சலவை” செய்வதாக அவர் கூறும் குற்றச்சாட்டும், “வைகுண்டராசன் வலைப்பின்னல்” பற்றிய புதிய புரிதலை எங்களுக்குத் தருகின்றன.

அவரது கடிதத்தில் கூறியுள்ளவை அனைத்துக்கும் உடனே பதில் அளிக்கத் தேவையில்லை என்று கருதுகிறோம் – நிதி தொடர்பான அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டைத் தவிர. தனது கடிதத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் மீது உதயகுமார் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை தோழர் ராஜுவுக்குத் தெரிவித்தோம்.

அவர் இடிந்தகரை ஊர்க்கமிட்டிக்கும், இதில் தொடர்புள்ள மற்றவர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதன் நகலை இத்துடன் இணைத்திருக்கிறோம்.

இவண்,

காளியப்பன்,
மாநில இணைச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.

________________________

அனுப்புநர்:

ராஜு, வழக்குரைஞர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
கை பேசி: 94432 60164

 பெறுநர்

ஊர் நலக்கமிட்டி, இடிந்தகரை
பங்குத்தந்தை, இடிந்தகரை
பங்குத்தந்தை சுசீலன்,  கூட்டப்புளி
சுந்தரலிங்கம், கூடங்குளம்
திரு.சுப.உதயகுமார்,ஒருங்கிணைப்பாளர், அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம், இடிந்தகரை.

ஐயா,

வணக்கம்.

நேற்று (5.11.2013) திரு சுப.உதயகுமார், இணையத்தில் தனது முகநூல் பக்கத்தில் எங்களது வழக்குரைஞர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில், பல தவறான தகவல்களை எழுதியிருக்கிறார். அதன் நகலை உங்களுக்கு இணைத்திருக்கிறேன். அதில் கண்டுள்ள எல்லா விசயங்களையும் உங்களிடம் எழுப்புவது என் நோக்கமல்ல. வழக்குகளுக்காக நாங்கள் பெற்ற தொகை பற்றி அவர் குறிப்பிட்டுள்ளவை உண்மைக்கு மாறானவை என்பதால், அவை குறித்து உங்கள் அனைவரின் கவனத்துக்கு கொண்டு வருவது அவசியம் என்று கருதுகிறேன்.

சங்கரன் கோயில் இடைத்தேர்தல்முடிந்த பின்னர், மார்ச் 19, 2012 அன்று ஜெயலலிதா அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. கூடங்குளத்தில் போராட்டக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உட்பட 11 பேர் முதலில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் வைக்கப்பட்டனர். இந்தக் கைதைக் கண்டித்து சாலை மறியல் செய்த பங்குத்தந்தை சுசீலன் உட்பட்ட கூட்டப்புளி மக்கள் 178 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டனர்.

இதனை ஒட்டி வள்ளியூர் நீதிமன்றம், நெல்லை நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றம் ஆகிய இடங்களில் சிறையில் இருப்பவர்களைப் பிணையில் எடுப்பது தொடர்பான பணிகளை நாங்கள் செய்தோம். 12 வெளியூர் வழக்குரைஞர்கள் சுமார் 15 நாட்கள் இந்த வேலைகளைச் செய்ய வேண்டியிருந்த காரணத்தினால், போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்ட நடைமுறைச் செலவுகள் குறிப்பிடத்தக்க அளவு ஆயின. இவையன்றி நீதிமன்றச் செலவுகள். குறிப்பாக மக்கள் மீது தேசத்துரோக குற்றத்தின் கீழ் வழக்கு போடப்பட்டிருந்ததாலும், அதனை அங்கீகரிக்கும் விதத்தில் நீதிமன்றம் நடந்து கொண்டதாலும்,  மூத்த வழக்குரைஞர் ஒருவரை அமர்த்த வேண்டியதாயிற்று. அவரை வெளியூரிலிருந்து அழைத்து வர வேண்டியிருந்த்தால் அதற்கு  குறிப்பிட்ட அளவு செலவிட வேண்டியதாயிற்று. அந்தச் செலவுகள் குறித்த உள்விவரங்கள் அனைத்தும் நாங்கள் உங்களிடம் கொடுத்துள்ள கணக்கில் உள்ளன.

இச்செலவுகளுக்காக கூட்டப்புளி பங்குத்தந்தை ராபின்சன் மற்றும் முக்கியஸ்தர்கள் வழியாக பல தவணைகளில் மொத்தம் ரூ. 65,000, மற்றும் கூடங்குளத்தில் கைதானோருக்காக அந்த ஊர் முன்னணியாளரிடமிருந்து ரூ.5000 ஆக மொத்தம் ரூ.70,000 பெற்றிருந்தோம். அதற்கான செலவு கணக்கை, உதயகுமாரிடமும், கூட்டப்புளி பங்குத்தந்தையிடமும், கூடங்குளம் சுந்தரலிங்கத்திடமும் ஆளுக்கொரு நகல் கொடுத்து விட்டோம்.

இதன் பின்னர் கூடங்குளம் மக்கள் மீது போடப்பட்ட ராஜத்துரோக வழக்குகளுக்கு எதிராக நாங்கள் நெல்லையில் நடத்திய கருத்தரங்கினை ஒட்டி ஏப்ரல், 21, 2012 அன்று இடிந்தகரை சென்றிருந்தபோது எமது வழக்குரைஞர்கள் சுமார் 50 பேரை மேடையில் அமரச் செய்து, “நமக்காக ஒருகாசு கூட கட்டணம் வாங்காமல் பணியாற்றிய வழக்குரைஞர்களுக்கு நன்றி கூறுவதாக” உதயகுமாரும் புஷ்பராயனும் மக்கள் மத்தியில் அறிவித்தனர்.

பின்னர் செப்டம்பர், 2012 இல் நடைபெற்ற கடலோர முற்றுகை, போலீசு தாக்குதல், கடலில் மனிதச் சங்கிலி, சகாயம் மரணம் ஆகியவை தொடர்பான பணிகளில் நாங்கள் உங்களோடு இணைந்து ஈடுபட்டோம். இவற்றைத் தொடர்ந்து இடிந்தகரை, கூடங்குளம் மக்கள் பலர் கைது செய்யப்பட்டனர். குண்டர் சட்டம் உள்ளிட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவ்வழக்குகள் எதையும் போராட்டக்குழு எங்களிடம் ஒப்படைக்கவில்லை.

“பிணையெடுப்பதில் காலதாமதமாகிறது” என்று கருதிய மக்கள் சிலர், “நீங்கள் வழக்கை நடத்துங்கள்” என்று எங்களைத் தொடர்பு கொண்டு தொலைபேசியில் கேட்டனர். “உதயகுமார் யாரிடம் வழக்கை ஒப்படைத்திருக்கிறாரோ அவர்கள்தான் செய்ய முடியும். எங்களிடம் வழக்கு தரப்படவில்லை” என்று அவ்வாறு கேட்டவர்களிடம் தெளிவுபடுத்திவிட்டோம். வழக்குகளை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர்களிடமும் வேறு சிலரிடமும் உதயகுமார் ஒப்படைத்திருப்பதாக பின்னர் கேள்விப்பட்டோம்.

இதற்குப் பின்னர் திடீரென்று ஒரு புது வதந்தி பரப்பப் பட்டது.  “உங்களுக்கு இரண்டு இலட்சத்துக்கு மேல் போராட்டக் கமிட்டி பணம் கொடுத்திருக்கிறதாமே” என்று வள்ளியூர், நெல்லை, நாகர்கோயில் நீதிமன்றங்களில் சில வழக்குரைஞர்கள் எங்கள் வழக்குரைஞர்களிடம் போகிற போக்கில் குறிப்பிட்டனர். யார் சொன்னார்கள், எப்போது சொன்னார்கள் என்ற ஆதாரம் இல்லாமல், ஒரு கிசு கிசு செய்தி போல இது பரப்பப் பட்டது.  எனவே இதனை மறுத்து, “நாங்கள் கட்டணம் வாங்காமல்தான் பணியாற்றினோம்” என்பதைக் கூறவேண்டியது அவசியமாயிற்று.

இப்படி ஒரு பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுவதாக கூட்டப்புளி, இடிந்தகரை ஊர்க்கமிட்டியைச் சேர்ந்தவர்களிடமும் கூடங்குளம் முன்னணியாளர்களிடமும் நாங்கள் அப்போதே சொல்லியிருக்கிறோம். “இப்படி கிளப்பி விடுவது யார்” என்று தாங்கள் உதயகுமாரிடமே கேட்டதாகவும், தான் அவ்வாறு கூறவில்லை என்று உதயகுமார் மறுத்ததாகவும் அவர்கள் எங்களுக்கு தெளிவு படுத்தினர். இந்த பொய்ப்பிரச்சாரம் பற்றி நாங்கள் முறையிட்டது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.

இப்பிரச்சினையை அரைகுறையாக விடக்கூடாது என்பதால், மே, 9 2013  அன்று இடிந்தகரையில் நேரடியாக உதயகுமாரிடமே நாங்கள் இது பற்றி கேட்டடோம். நாங்கள் வாங்கிய பணம், அதற்கான கணக்கு ஆகியவற்றின் நகலை மீண்டும் ஒருமுறை அவர் கையில் கொடுத்தோம். “இரண்டு இலட்சம் வாங்கியதாகவெல்லாம் யாரிடமும் நான் சொல்லவில்லை. அப்படி யாராவது சொன்னால், என்னிடம் அனுப்புங்கள். நான் விளக்குகிறேன்” என்று அவர் எங்களுக்குப் பதிலளித்தார்.

இப்போது தனது கடிதத்தில்,  மொத்தம் ரூ.1,95,000 கொடுத்தது போலவும் அதில் 1.25 லட்சம் ரூபாய் இடிந்தகரை மக்கள் எங்களுக்கு கொடுத்ததாகவும் உதயகுமார் எழுதியிருக்கிறார். மார்ச் 2012 நடைபெற்ற கைது தொடர்பான வழக்குகளைத்தான் நாங்கள் கையாண்டோம். அவை கூட்டப்புளி, கூடங்குளம் மக்கள் மீதான வழக்குகள். அதற்கான பணத்தைக் கொடுத்த அவர்களிடம் கணக்கும் கொடுத்துவிட்டோம்.

இடிந்தகரை மக்கள் மீதான வழக்குகள்- கைது என்பது கடலோர அணுஉலை முற்றுகைப் போராட்டத்துக்குப் பின்னர்தான். இந்த வழக்குகள் எதுவும் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதை ஏற்கெனவே தெளிவு படுத்திவிட்டோம். இடிந்தகரை மக்களிடமிருந்து 1.25 இலட்சம் நாங்கள் வாங்கியதாக உதயகுமார் கூறுகிறார். ஒருபைசா கூட நாங்கள் வாங்கவில்லை என்பதே உண்மை.

இடிந்தகரை, கூடங்குளம், கூட்டப்புளி மக்கள் அனைவரும் இந்தக் கணம் வரை எங்களுடன் நேசமாகத்தான் பழகுகிறார்கள். யாரும் இப்படி ஒரு கேள்வியை எங்களிடம் கேட்டதில்லை. அவ்வாறு இருக்கும்போது எங்களுக்கு எதிராக இப்படி ஒரு பொய்ப்பிரச்சாரம் செய்வதற்கு வேறு ஏதாவது ஒரு நோக்கம் இருக்கவேண்டும். அல்லது எங்கள் பெயரைச் சொல்லி 1.25 இலட்சம் ரூபாயை யாரோ கையாடல் செய்திருக்க வேண்டும்.

இவற்றில் எது உண்மையாக இருந்தாலும் அது மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.

எங்கள் மீது அடுக்கடுக்காகப் பொய்வழக்குகளைப் போடும் மிக மோசமான போலீசு அதிகாரிகளுக்குக் கூட, இப்படி ஒரு பொய்க்குற்றச்சாட்டை எங்கள் மீது சுமத்த மனம் வந்ததில்லை. வெளிநாட்டுப் பணம் வருவதாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டபோது, கண் கலங்கி குமுறியவர் உதயகுமார். அந்த வலி மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதை அவர் அறியாமலிருக்க வாய்ப்பில்லை.

எந்த இடிந்தகரை மக்களிடமிருந்து எங்களுக்கு 1.25 இலட்சம் பணம் கொடுக்கப்பட்டதாக உதயகுமார் கூறுகிறாரோ, அந்த இடிந்தகரை ஊர்க்கமிட்டிக்கும், கூட்டப்புளி பங்குத்தந்தை மற்றும் ஊர்க்கமிட்டியினருக்கும், கூடங்குளம் முன்னணியாளர்களுக்கும் என்னுடைய இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன்.

இடிந்தகரை மக்கள் முன்னால் உதயகுமார் கூறியிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு பகிரங்க விசாரணை நடத்தப்படவேண்டும். அதில் கூட்டப்புளி, கூடங்குளம் முன்னணியாளர்களும், போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க வேண்டும். இந்த வழக்குகளைக் கையாண்ட எமது வழக்குரைஞர்கள் அனைவரும் இடிந்தகரைக்கு வருவதற்குத் தயாராக இருக்கிறோம்.

தேதியை இடிந்தகரை ஊர்க்கமிட்டி தெரிவிக்கட்டும்.

நன்றி.

தமிழ்ப் பயணி

unread,
Nov 6, 2013, 11:29:24 AM11/6/13
to பண்புடன்

இப்போது தனது கடிதத்தில்,  மொத்தம் ரூ.1,95,000 கொடுத்தது போலவும் அதில் 1.25 லட்சம் ரூபாய் இடிந்தகரை மக்கள் எங்களுக்கு கொடுத்ததாகவும் உதயகுமார் எழுதியிருக்கிறார். மார்ச் 2012 நடைபெற்ற கைது தொடர்பான வழக்குகளைத்தான் நாங்கள் கையாண்டோம். அவை கூட்டப்புளி, கூடங்குளம் மக்கள் மீதான வழக்குகள். அதற்கான பணத்தைக் கொடுத்த அவர்களிடம் கணக்கும் கொடுத்துவிட்டோம்.

கூட்டப்புளி, கூடங்குளம் மக்கள் தாங்களாக ​நேரி​டையா மகஇக வினரிடம் பணம் ​கொடுத்திருப்பார்க​ளோ என்ற சந்​தேகம் வருகிறது.ஏ​னெனில் அதற்க்கான கணக்கு அந்த மக்களிடம் ​நேரி​டையாக ​கொடுக்க பட்டு விட்டதாக ​சொல்ல பட்டுள்ளது.

இடிந்தகரை மக்கள் மீதான வழக்குகள்- கைது என்பது கடலோர அணுஉலை முற்றுகைப் போராட்டத்துக்குப் பின்னர்தான். இந்த வழக்குகள் எதுவும் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதை ஏற்கெனவே தெளிவு படுத்திவிட்டோம். இடிந்தகரை மக்களிடமிருந்து 1.25 இலட்சம் நாங்கள் வாங்கியதாக உதயகுமார் கூறுகிறார். ஒருபைசா கூட நாங்கள் வாங்கவில்லை என்பதே உண்மை.

கூட்டப்புளி+கூடங்குளம்  Vs இடிந்த க​ரை என்று பிரிவு வருவதாக ​தோன்றுகிற​தே... கள நிலவரம் என்ன​வென்று ​தெரியவில்​லை​யே.


2013/11/6 ராம் காமேஸ்வரன் <ram.kam...@gmail.com>


சுப. உதயகுமாருக்கு மகஇக-வின் பதில்

in இதர கட்சிகள், தன்னார்வ நிறுவனங்கள், போராட்டத்தில் நாங்கள் by வினவு, November 6, 2013

உதயகுமாரின் கடிதத்தில் காணப்படும் ம.க.இ.க வுக்கு எதிரான அவதூறுகளும், கடலோர இளைஞர்களை “மூளைச்சலவை” செய்வதாக அவர் கூறும் குற்றச்சாட்டும், “வைகுண்டராசன் வலைப்பின்னல்” பற்றிய புதிய புரிதலை எங்களுக்குத் தருகின்றன.

நேற்று (5.11.2013) இரவு தனது முகநூல் பக்கத்தில் ம.க.இ.க. தோழர்களுக்கு “திறந்த கடிதம்” ஒன்றை கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.சுப.உதயகுமார் வெளியிட்டிருக்கிறார்.

--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
‘காமம் மனத்தில் நுழையும்போது அதன் நிழல்தான் மிகப் பெரிதாகத் தெரியும்’
- ​சோமன், விஷ்ணுபுரம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
Nov 16, 2013, 4:05:17 PM11/16/13
to panbudan
கேள்வி--பதில்:
இருட்டில் உழலும் தமிழினம் இனி என்ன செய்ய வேண்டும்?

[1] தமிழினத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலை என்ன?

ஈழ எழுத்தாளர் நிலாந்தன் 2005-ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை ஒன்றை ஓவியர் புகழேந்தி தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கட்டுரையின் வருங்காலம் பற்றிய சில அலசல்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்நாட்டில் உள்ள பெரிய கட்சிகளும், இடது சாரிகளும், ஈழத்தமிழர்களை கைவிட்டுவிட்டன. சக்தியற்ற சிறிய கட்சிகளும், சிற்றியக்கங்களும், தலித் இயக்கங்களும்தான் ஈழப் பிரச்சினையில் ஆர்வம் கொண்டுள்ளன. எனவே தமிழ்நாடு ஈழ மக்களின் பின்தளமாக இல்லை என்று டில்லி கொள்கை வகுப்பாளர்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர். “தனது உபகண்டப் பெருங்கலாச்சாரத்தின் ‘ஒரு கூறாகக்’ காணப்படுகின்ற; சிறிய ஆனால் புரிந்து கொள்ளக் கடினமான, வீரமிக்க ஒரு சனத்திரளைத் தொடர்ந்தும் வன்மத்தோடும் ‘பெரிய இந்தியா’ என்ற ஆணவத்தோடும் டில்லியிலுள்ள கொள்கை வகுப்பாளர்கள் அணுகமுயலும்” அரசியல் சூழலை அழகாகக் கோடிட்டுக் காட்டுகிறார் நிலாந்தன். சுருக்கமாகச் சொன்னால், தில்லியைப் பொறுத்தவரை, ஈழம் ஒரு பிரச்சினை அல்ல, தமிழகம் ஒரு பொருட்டேயல்ல.

[2] தமிழகத்தின் அரசியல் நிலைமை எப்படி இருக்கிறது?

தமிழினம் தமிழகத்திலுள்ள ஊழல்மிக்க, தன்னலவாத பெரிய கட்சிகளை, அவற்றின் தலைவர்களை உதறித் தள்ள வேண்டும். பெரும் ஊழல்களிலும், மோசமான வழக்குகளிலும் சிக்கி, திறமையான வழித்தோன்றல்களை உருவாக்கத் தவறி, எந்தவிதமான கொள்கைப் பிடிப்புமின்றி, வருங்கால இலக்குகளுமின்றி தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் அவர்களின் சாயம் வெளுக்கத் துவங்கிவிட்டது. டில்லி கொள்கை வகுப்பாளர்களின் கைகளில் சிக்கிய கைப்பாவைகள் போலவே அவர்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். வெறும் வாய்ப்பந்தல் போட்டே, நம் வாழ்வை அழித்தவர்கள் இவர்கள். பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் தமிழக அரசியலில் ஒரு பொருட்டேயல்ல என்பதுதான் உண்மை. 

தமிழகத்தில் உருப்பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் வெற்றுப்பேச்சும், வாய்ச்சொல் வீரமும், வெறுப்பு மற்றும் ஆணவம் கொப்பளிக்கும் பாசிச அணுகுமுறையும், உத்திகளற்ற செயல்பாடும் கொண்ட வலதுசாரி தமிழ்த் தேசியம் கறிக்கு உதவாது. முற்போக்குச் சிந்தனையும், முரணில்லாக் கொள்கைகளும், செம்பச்சை (Red Green) விழுமியமும் கொண்ட மிதவாத தமிழ்த் தேசியம்தான் மாற்று. சமூக நீதியும், சமத்துவமும் கோலோச்சும்; மக்கள் அறிவியலை, தக்க தொழிற்நுட்பத்தை, நீடித்த நிலைத்த வளர்ச்சியை, இயற்கை வாழ்வாதாரங்களைப் பேணும் கலப்புப் பொருளாதாரம் செழித்தோங்கும்; மனித உரிமைகளும், அடிப்படைச் சுதந்திரங்களும், மனித மாண்பும் தழைத்தோங்கும் ஏற்பாட்டைத்தான் செம்பச்சைக் (Red Green) கொள்கையாய் ஏற்கிறோம். தமிழ்த் தேசிய வேரூன்றி, மனிதநேய கிளைபரப்பி, ஒரு மரம்போல் வாழ மனங்கொள்வோம்.

[3] சிங்களப் பேரினவாதத்தின் நிலைப்பாடு என்ன?

சிங்களப் பேரினவாதம் தனக்கே உரிய நரித்தனத்தோடு சீனாவின் வலிமையை, தோழமையைக் காட்டி டில்லி கொள்கை வகுப்பாளர்களை தன்வயப்படுத்தி வைத்திருக்கிறது. சிங்கள வெறியர்கள் கடுகளவும் இந்தியாவை விரும்பவுமில்லை, நம்பவுமில்லை, மதிக்கவுமில்லை. இது இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்குப் புரியவில்லை. இந்தியாவைக் காட்டி சீனாவிடமிருந்தும், சீனாவைக் காட்டி இந்தியாவிடமிருந்தும் கறந்து கொண்டிருக்கிறார்கள் சிங்களவர்கள். இந்தியாவும் சீனாவும் ஒன்று சேரும் வாய்ப்போ, தன்னை இனம்கண்டு கொள்ளும் நிலையோ வராது என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரியும். ஈழத் தமிழர்களையும், தமிழ் மீனவர்களையும் தொடர்ந்து அச்சுறுத்துவார்கள்.

[4] அப்படியானால் தமிழினத்தின் நம்பிக்கை நட்சத்திரம்தான் எது?

பல ஐரோப்பிய நாடுகளில் குடியேறத் துவங்கிய ஈழத்து இளைஞர்களை நேரில் சந்தித்து, சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு 1987 ஏப்ரல் தேதியிட்ட “தமிழ் உலகம்” இதழில் “அன்னிய மண்ணில் அகதிகளாய்” எனும் தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுதினேன். “கடினமாக உழைத்து கண்ணியமாகவே இருப்பதனால், மேலை நாட்டு மக்கள் இவர்களிடம் வெறுப்புக் காட்டவோ அல்லது இவர்களை வேறுபடுத்திப் பார்ப்பதோ இல்லை. ...ஆனால் துரதிருஷ்டவசமாக ஒரு சீரான அரசியல் ரீதியில் இவர்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை” என்ற எனது ஆதங்கத்தை வெளியிட்டேன். ஆனால் இன்றைய நிலைமை பெருமளவு மாறிவிட்டிருக்கிறது. அதை இன்னும் மாற்ற வேண்டும்.

ஈழத் தமிழர்கள் ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற பகுதிகளில் காலூன்றி விட்டார்கள். ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகள் புலம்பெயர் தமிழர்களை ஓர் அரிய வாய்ப்பாகப் பார்க்கின்றனர். நிலாந்தன் துல்லியமாக அறிவிக்கிறார்: “உழைப்பார்வமும் படிப்பில் வெறியும் சேமிப்பில் வெறியுமுடைய விவேகமும் வீச்சுழியும் மிக்க ஒரு தனித்தினுசான புலம்பெயர் சனத்திரளைத் தன்வயப்படுத்துவதன் மூலம் இந்த [தெற்காசிய]ப் பிராந்தியத்தில் எதிர்காலத்தில் தமக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உருவாகிவருவதாக அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் நம்புகின்றன.” அமெரிக்காவிலுள்ள செல்வாக்குமிக்க ஐரிஷ், யூத சமூகங்களைப் போல, அரசியல் அபிப்பிராயங்களை உருவாக்கவல்ல, அரசியல் அழுத்தங்களைப் பிரயோகிக்கவல்ல ஒரு சனத்திரளாக ஈழத் தமிழர்கள் உருவாகலாம் என்றும் நினைக்கிறார் நிலாந்தன். புலம்பெயர் தமிழர்கள் நிச்சயமாக நமது நம்பிக்கை நட்சத்திரங்கள். அதே போல, உலகெங்கும் பரந்து வியாபித்திருக்கும் தமிழ் மக்கள் தமிழகத்தோடும், தமிழகம் அவர்களோடும் சமூக-பொருளாதார-அரசியல்-கலாச்சாரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதும், தொடர்வதும் மிகவும் அவசியம்.

[5] புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?

புலம்பெயர் தமிழர்கள் தங்களை இன்னும் இறுக்கமாக, இணக்கமாக கட்டமைத்துக் கொள்ளவேண்டும். தமிழீழத்திலும், தமிழகத்திலும், மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் போன்ற பிற நாடுகளிலுமுள்ள தமிழ் இளைஞர்கள் மேம்பாட்டுக்கு, முன்னேற்றத்துக்கு ஆவன அனைத்தும் செய்ய வேண்டும். திறமைமிக்க, பொருளாதார சக்தி கொண்ட, அரசியல் பின்புலமுள்ள ஒரு சர்வதேசக் குமுகமாக நாம் உருப்பெற உதவ வேண்டும். கனடியத் தமிழர் தேசிய அவை (National Council of Canadian Tamils), அமெரிக்காவில் இயங்கும் உலகத் தமிழர் அமைப்பு (World Tamil Organization), நாடு கடந்த தமிழீழ அரசு (Transnational Government of Tamil Eelam) போன்ற அமைப்புக்கள் இன்னும் பல்கிப் பெருக வேண்டும், பலம் பெற வேண்டும், படையணிகளாய் ஒன்றுதிரள வேண்டும்.

[6] சர்வதேச அரசியலை தமிழினம் எப்படி எதிர்கொள்வது?

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான அவநம்பிக்கை, பகைமை, போட்டி போன்றவற்றை பயன்படுத்தி மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, இந்தியாவோடு நெருங்கிக் கொண்டிருக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் “அகலாது, அணுகாது தீக்காய்வார் போல்” மேற்கத்திய நாடுகளிடம் நட்பு பாராட்டி இந்தியாவைக் கையாளவேண்டும். சீனா உரிமை கொண்டாடும் திபெத், தைவான் போன்ற பகுதிகளின் மக்களோடும், சீனாவை ஐயுறும் பிற தெற்காசிய நாடுகளோடும் நாம் தொடர்பைப் பேண வேண்டும். இந்தியப் பெருங்கடலைச் சுற்றி முத்து மாலை (String of Pearls) ஒன்றைக் கட்டியமைக்க சீனா முயலும்போது, அதில் ஒரு முத்தையாவது நம்மால் உடைத்துக்காட்ட முடியும் என்பதை உணரச் செய்ய வேண்டும். நாம் வல்லாதிக்கக் கனவுகள் கொண்ட குமுகமல்ல; ஆனால் யாருக்கும் அடிமையாக வாழவும் மாட்டோம்.

[7] தமிழினத்தின் அரசியல் இலக்கு என்ன?

நமது வாழ்வுக்காக, வாழ்வுரிமைகளுக்காக, வாழ்வாதாரங்களுக்காக, வருங்காலத்துக்காக, வரவிருக்கும் சந்ததிகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தையும், தமிழீழத்தையும் பெயர்த்து எடுத்துக்கொண்டு, ஆஸ்திரேலியாவுக்கு அந்தப்பக்கமா போகப் போகிறோம்? இல்லை! கேரள, கன்னட, ஆந்திர, சிங்கள மக்களருகேதான் வாழப்போகிறோம். அவர்கள் நம்மை மதித்து, விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் ஓரடி எடுத்துவைத்தால், நாம் இரண்டடி எடுத்துவைக்க அணியமாயிருக்கிறோம்.

[8] கேரள, கன்னட, ஆந்திர, சிங்கள மக்கள்தான் நமது பிரச்சினையா?

இல்லை. நமது முக்கிய பிரச்சினை நாமேதான். நமது சமூக—கலாச்சாரத் தளங்களில் பெரும் மாற்றங்கள் கொண்டுவந்தாக வேண்டும். யார் கொண்டு வருவது? எந்தப் புனிதரோ, தேவதூதரோ கொண்டுவரப் போவதில்லை. நாமேதான் கொண்டுவர வேண்டும். மொத்தத் தமிழினமும் மாறட்டும், நான் உடனே மாறிவிடுகிறேன் என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நிலைப்பாடு. நாம் ஒவ்வொருவரும் உடனே மாறினால், தமிழினம் ஒரே நாளில் மாறி விடும்.

[] சாதி, மத அடையாளங்களைப் புறந்தள்ளி, தமிழராய் நம்மை, நம்மவரை பார்க்கப் பழக வேண்டும். சிறுபான்மையினர், தலித் மக்கள் உரிமைகள், நலன் காக்கும் வழிவகை செய்ய வேண்டும்.
[] கல்வியறிவை, புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை, சமூக-அரசியல் விழிப்புணர்வை, சுற்றுச்சூழல் அறிவை வளர்க்க வேண்டும்.
[] பெண்களுக்கு கல்வியும், முக்கியத்துவமும், பாதுகாப்பும் கொடுத்து, குடும்பங்களை, சமூக உறவுகளைப் பேணியாக வேண்டும்.
[] தமிழ் ஆண்களை, தமிழ்க் குடும்பங்களை சிதைத்துக் கொண்டிருக்கும், மது அரக்கனை அழித்தேயாக வேண்டும்.
[] சினிமா, சின்னத்திரை போன்றவற்றைப் புறந்தள்ளி, நுண்கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
[] பணம் ஒன்றுதான் வாழ்க்கையின் குறிக்கோள், வெற்றியின் அளவுகோல் என்பதை விட்டொழிக்க வேண்டும்.
[] நமது வரலாறு, இலக்கியம், கலாச்சாரம், நிறைகுறைகள் பற்றித் தெரிந்து, எதிர்மறை எண்ணங்களை, அணுகுமுறைகளைக் கைவிட்டு, உயர்ந்த சிந்தனைகளை, மதிப்பீடுகளை, ஒற்றுமையை வளர்த்தெடுப்போம்.


சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
நவம்பர் 17, 2013
கார்த்திகை 1, 2044

ஸ் பெ

unread,
Dec 8, 2013, 7:39:24 AM12/8/13
to panbudan
குற்றச்சாட்டு [1]: தேசத் துரோகி!

இந்திய, தமிழக ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம் என்னையும், அணுசக்திக்கு எதிராகப் போராடிவரும் எனது தோழர்களையும் பலவாறாகப் பழித்து வருகிறது. எங்கள் மீது சுமத்தப்படும் முக்கியமான குற்றச்சாட்டு நாங்கள் தேசத் துரோகிகள்.

இதில் முக்கியமான கேள்வி: இங்கே தேசம் என்று குறிப்பிடப்படுவது எது? சாதி-மத வெறி பிடித்த, ஊழல் மிகுந்த, பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்லக்குத் தூக்கும், முதலாளித்துவ, மக்கள் விரோத, இயற்கையைக் கொல்லும், இயன்றதையெல்லாம் விற்றுப் பிழைக்கும் ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம்தான் தேசம் என்றால், ஆம், நான் தேசத் துரோகிதான். தேசத் துரோகியாக வாழ்வதற்குப் பெருமைப்படுகிறேன். சாவது வரை தேசத் துரோகியாகவே வாழ விரும்புகிறேன், வாழ்வேன்.

“கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் இவையென அறிவுமிலார்” என்று பாரதி கவலைப்படுகிற பாமர, சக்தியற்ற, சாமான்ய, சாதாரண மக்கள்தான் தேசம் என்றால், அவர்களுக்கெதிரான அமைப்பை தூக்கி எறியும் தேசத் துரோகியாக வாழ விரும்புகிறேன்.

எனது 21-வது வயதிலேயே இந்தியா எனும் தேசத்தின் பிரதிநிதியாக, தூதுவராக பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அடுத்த இருபது வருடங்களில் சுமார் 30 நாடுகளில் பல்வேறு பள்ளிக்கூடங்களில், பல்கலைக்கழகங்களில், அலுவலகங்களில், ஆன்றோர் கூடும் சபைகளில், ஐ.நா. மன்றத்தில், சான்றோர் சந்திக்கும் மாநாடுகளில், மக்கள் மன்றங்களில் இந்த தேசத்தின் பெயரை, பெருமையை, பெரும்புகழை உயர்த்திப் பிடித்திருக்கிறேன். என்னால் என் தேசம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த விதத்திலும் சிறுமையடைந்துவிடக் கூடாது, சிரிப்புக்கிடமாகிவிடக் கூடாது என்று கவனமாக, கடமை தவறாது, கண்ணியத்தோடு, கட்டுப்பாட்டோடு வாழ்ந்திருக்கிறேன்.

இன்று நம் மக்கள் தங்கள் வாழ்வை, வாழ்வாதாரங்களை, வருங்காலத்தை, வரவிருக்கும் சந்ததிகளை இழந்துவிடக் கூடாது என்று என் தோழர்களோடு எழுந்து நிற்கிறேன். எங்களுக்குத் தரப்படும் பட்டம்: தேசத் துரோகி! ஒரே ஒரு கேள்வி: எங்கள் தேசம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

ஸ் பெ

unread,
Dec 8, 2013, 7:40:11 AM12/8/13
to panbudan
குற்றச்சாட்டு [2]: அமெரிக்கக் கைக்கூலி

கடந்த 1989 முதல் 2001 வரை சுமார் 12 ஆண்டுகள் நான் கல்லூரி மாணவனாக, பல்கலைக்கழக விரிவுரையாளராக, ஆய்வாளராக, வருகைதரு பேராசிரியராக அமெரிக்காவிலே வாழ்ந்தேன், பணியாற்றினேன். இந்தியாவுக்குத் திரும்பிய பிறகும், ஆண்டுதோறும் கோடை காலத்தில் அங்கே சென்று வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினேன், இடிந்தகரைக்கு வரும் வரை.

நோட்ரே டேம் (Notre Dame) பல்கலைக்கழகத்தில் சர்வதேச சமாதானம் பற்றிய முதுகலை பட்டப்படிப்பு படிக்கும்போது, ஆசிரியர்களிடம் “வெறும் விழுமியங்களை மட்டும் படித்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம்; எங்களுக்கு யதார்த்த வழிமுறைகளும் தெரிந்திருக்க வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்து, மாணவர்களுக்குள் Political Action Committee (PAC) என ஒன்றைத் துவங்கலாம் என முன்மொழிந்து, எனது நெருங்கியத் தோழர்கள் சிலரோடு சேர்ந்து அதைத் துவக்கினேன். தென் அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா நடத்திய அராஜகங்கள், அச்சுறுத்தல்களுக்கு எதிராக சாலை மறியல் உட்பட பல போராட்டங்கள் நடத்தினோம். வறுமைக்கு எதிராக, வறுமையில் வாடும் மக்களின் வேதனைகளை அமெரிக்க மக்கள் கண்முன் நிறுத்த மூன்று நாட்கள் தண்ணீர்கூட குடிக்காமல் PAC குழுவினர் உண்ணாவிரதம் இருந்தோம்.

பின்னர் ஹவாய் (Hawai’i) பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்தேன். எங்கள் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர் அலுவலகத்தில் (International Students Center) வைத்து CIA (Central Intelligence Agency) எனும் கொடிய அமெரிக்க உளவுத்துறைக்கு ஆள்சேர்க்கும் முயற்சி நடந்தபோது, நானும் பல சர்வதேச மாணவர்களும் அந்த நடவடிக்கைக்கு எதிராக அந்த அலுவலகத்தின் முன்பாகவே, எங்கள் அதிகாரி ஜூன் நாட்டன் போராட்டம் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதையும் புறக்கணித்து முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (தந்தை) எங்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்தபோது, எனது வகுப்புத் தோழி சாரா கிலியட்டும் நானும் “அதிபரை கண்ணால் பார்க்க மாட்டோம்” என்று அறிவித்து, அவரது நிகழ்வு நடந்த ஜெஃபர்சன் ஹாலுக்கு (Jefferson Hall) முன்னர் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்தோம். அடுத்த நாள் நாளிதழ்களிலெல்லாம் முன்பக்கத்தில் எங்கள் படமும் போராட்டச் செய்தியும் வெளியாயின.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும், காலனி ஆதிக்கத்தும் எதிராக ஆணித்தரமான நிலைப்பாட்டை எடுத்து, தமது இறையாண்மைக்காக ஹவாய் பூர்வக்குடி மக்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள். அவர்களது போராட்டங்கள் பலவற்றில் நானும் பங்கேற்றேன்; ஒரு சாலையோரப் போராட்டத்தில் கலந்துகொண்டபோது, Honolulu Advertiser நாளிதழின் முன்பக்கத்தில் நான் பதாகையோடு நிற்கும் படத்தை பிரசுரித்து, வெளிநாட்டு மாணவர்கள்கூட உள்ளூர் மக்களை ஆதரிக்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டார்கள். போராடும் மக்களுக்கு ஆதரவாக முன்னணி நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதினேன். அதேபோல சில கோரிக்கைகளுக்காக ஹவாய் பல்கலைக்கழக ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்றுதிரண்டு போராடியபோது, அப்போதைய ஹவாய் மாநில ஆளுநர் திரு. பெஞ்சமின் கயட்டானோவுக்கு நான் எழுதிய திறந்த கடிதம் அங்குள்ள பத்திரிகைகளில் முழுவதுமாக வெளியிடப்பட்டது.

அமெரிக்க அரசுக்கும், அரசுத் துறைகளுக்கும் எதிராக பல பத்திரிகைகளில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளும், கடிதங்களும் எழுதியிருக்கிறேன். அமெரிக்கா ஈராக் நாட்டின் மீது படையெடுத்தபோது, எங்கள் பல்கலைக்கழக “அரசியல் அறிவியல்” துறையின் (Political Science Department) சிறப்புக் கூட்டம் ஒன்றைக் கூட்டி, பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகத் திரட்டி, நான் எழுதிய ஒரு கண்டனத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றச் செய்தேன். பிரான்சு நாடு பசிபிக் தீவுகளருகே அணுவாயுதப் பரிசோதனைகள் நடத்தியபோது, அதையும் அமெரிக்க அரசின் ஆதரவு நிலையையும் இயன்ற வழிகளிளெல்லாம் எதிர்த்தேன்.

நான் கற்பித்த வகுப்புக்களிலெல்லாம், பேசிய கருத்தரங்குகளிலெல்லாம், எழுதிய பத்திரிகைகளிலெல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, அமெரிக்க அரசுக்கு எதிராக, அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக, முதலாளித்துவத்துக்கு எதிராகத்தான் பேசியிருக்கிறேன், எழுதியிருக்கிறேன். என்னைப் பற்றி CIA, FBI (Federal Bureau of Investigation) போன்ற அமெரிக்க அரசின் உளவு நிறுவனங்கள் தகவல்கள் சேகரிப்பதாகக்கூட நண்பர்கள் என்னை எச்சரித்தனர். இதுதான் “அமெரிக்கக் கைக்கூலி”யான எனக்கும் “அமெரிக்கா”வுக்கும் உள்ள தொடர்பு.


சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
டிசம்பர் 3, 2013
151

ஸ் பெ

unread,
Dec 8, 2013, 7:41:16 AM12/8/13
to panbudan
குற்றச்சாட்டு [3]: வெளிநாட்டுப் பணம்

1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.

ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம். மிகமிகச் சிக்கனமாக வாழ்ந்தோம். பல்கலைக்கழக வாழ்வு முடிந்து, வேலைகளில் சேர்ந்த பிறகும் சிக்கனமாகவே வாழ்ந்தோம். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய நிலம் வாங்கினோம், கட்டிடங்கள் கட்டுவதற்கு காசு சேமித்தோம். எந்த அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, அறக்கட்டளைகளிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ எந்தப் பண உதவியும் பெறவில்லை.

எனது சுயமரியாதையை, கவுரவத்தை, கண்ணியத்தை நான் கண்ணெனப் போற்றுவதால் அமெரிக்கா முழுவதும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், தனிப்பட்டத் தேவைகளுக்காக யாரிடமும் எந்தப் பண உதவியோ, பொருளுதவியோ நான் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. இந்த நண்பர்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமும் இதுதான்.

2003-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று ஒரே ஒரு முறை ஹானலூலூ அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பள்ளி வாகனம் வாங்குவதற்கு வெறும் நான்கு லட்சம் ரூபாய் உதவி பெற்றேன். அதேபோல ஒரு தமிழக அறக்கட்டளை சில நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்போது மட்டும் சிறு உதவிகள் செய்தது. ஆண்டுதோறும் வரவு-செலவு தணிக்கை செய்து, அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் உரிய படிவங்களில் முறையாக கணக்குக் காண்பித்தேன்.

கடந்த பத்தாண்டுகளில் இன்று வரை எங்கள் பள்ளியில் எந்தப் பெற்றோரிடமும் கட்டிட நிதி கொடுங்கள், நன்கொடை தாருங்கள் என்று கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. ஐம்பது ரூபாய் பொருளை வாங்கி 100 ரூபாய்க்கு குழந்தைகளிடம் விற்றதுமில்லை. வெளிநாடுகளில் கற்பிக்கும்போதும், சொத்துக்களிலிருந்தும் கிடைக்கும் எங்கள் வருமானத்தின் பெரும்பகுதியைப் பள்ளியிலேயே செலவு செய்கிறோம்.

அமெரிக்காவிலிருந்தும், ஸ்கேண்டிநேவிய நாடுகளிலிருந்தும் கோடி கோடியாக பணம் வருகிறது என்று என் மீது குற்றஞ்சாட்டிய மத்திய அமைச்சர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் நோட்டீஸ் கிடைத்ததும் “நான் அப்படி சொல்லவேயில்லை” என்று ஓடிப் போனார். நோட்டீஸை பெற்றுக் கொண்ட பிரதமர், அதன் பிறகு இந்தப் பிரச்சினை குறித்துப் பேசவேயில்லை.

மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளும், தமிழக சிபிசிஐடி அதிகாரிகளும் எங்கள் வீட்டுக்கே வந்து சோதனை நடத்தி, வேண்டிய ஆவணங்களைப் பெற்றுச் சென்றார்கள். ஆனாலும் எனது வங்கிக் கணக்குகளும், எங்கள் பள்ளியை நடத்தும் அறக்கட்டளை வங்கிக் கணக்கும் இன்னும் முடக்கப்பட்டேயிருக்கின்றன. 2011 ஆகஸ்ட் முதல் இடிந்தகரை மக்கள் எனக்கு உணவும், உறையுளும் தருகின்றனர். சிறு செலவுகளுக்கு மனைவியும், அம்மாவும் காசு தருகின்றனர்.


சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
டிசம்பர் 4, 2013

ஸ் பெ

unread,
Dec 8, 2013, 7:41:39 AM12/8/13
to panbudan
குற்றச்சாட்டு [4]: தேசத்தின்மீது போர் தொடுத்தோம்

தேசத்தை ரஷ்யாவிடமும், அமெரிக்காவிடமும், பிரான்சு நாட்டிடமும், ஏனையோரிடமும் ஒரு திருட்டுக் கூட்டம் பெரும் கமிஷனுக்காக விற்பதைத் தட்டிக்கேட்கிறோம். “விஞ்ஞானம், வளர்ச்சி, முன்னேற்றம்” என்ற பெயர்களில் பாமர மக்களின் வாழ்வில் விசத்தைக் கலப்பதை, நடுத்தர மக்களை ஏமாற்றுவதைக் கேள்வி கேட்கிறோம். இந்தத் திருடர்களின் குழந்தைகள் பிரதமராகவும், முதல்வராகவும் வருவதற்காக நமது குழந்தைகளின் வாழ்வை அழிக்கும் அரசக் கொள்கைகளை, திட்டங்களை எதிர்த்து நிற்கிறோம். தனியார் சொத்துக்களுக்கோ, பொது சொத்துக்களுக்கோ எந்தவித சேதமும் விளைவிக்காமல், யாரையும் துன்புறுத்தாமல், கொல்லாமல், எங்களையே வருத்திக் கொண்டு, எத்தனையோ இழப்புக்களைத் தாங்கிக்கொண்டு, இந்த தேசத்தின் நலனுக்காக, இந்த தேசத்தின் எதிர்காலத்துக்காகப் பாடுபடுவது போர் தொடுப்பது என்றால்...

மக்கள் பணத்தை லட்சம் கோடிகள் என்று தினமும் கொள்ளையடிப்பது, சொத்துக்கள் வாங்கிச் சேர்ப்பது, சுகபோகமாக வாழ்வது, அவை சம்பந்தப்பட்ட விசாரணை வரும்போது கோப்புக்களை எல்லாம் அழிப்பது, வரி ஏய்ப்பு செய்வது, வழக்குகளை இழுத்தடிப்பது, ஏழை மக்களை இயன்ற வழிகளிலெல்லாம் சுரண்டுவது தேசத் தொண்டா?

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். நீங்கள் இந்த தேசத்தின் மீது “போர் தொடுக்க” விரும்புகிறீர்களா? அல்லது “தேசத் தொண்டாற்ற” விரும்புகிறீர்களா?


சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
டிசம்பர் 6, 2013

ஸ் பெ

unread,
Dec 8, 2013, 7:42:03 AM12/8/13
to panbudan
குற்றச்சாட்டு [5]: கொல்வதற்கு முயற்சி செய்தோம்

உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், உதவாத அதிகார வர்க்கத்துக்கு ஆதரவாகவும் வேலை செய்யும் ஒரு சிலரை கொல்வதற்கு முயற்சி செய்தோம் என்று மேற்படி நபர்களின் பொய்யானக் குற்றச்சாட்டின் அடிப்படையில், என் மீதும், தோழர்கள் மீதும் “கொலை முயற்சி” வழக்குகள் சில பதிவு செய்யப்பட்டுள்ளன. தூக்குத் தண்டனை காட்டுமிராண்டித் தனமான தண்டனை என்றும், தனிமனித உயிரைப் பறிக்க அரசுக்குக்கூட அதிகாரம் இல்லை என்றும் போராடுகிறவர்கள் நாங்கள். கால்நடைகள், காக்கைக் குருவிகள் மீதெல்லாம் அணுஉலைக் கதிர்வீச்சின் தாக்கம் குறித்துக் கவலைப்படுகிறவர்கள் நாங்கள். ‘இம்’மென்றால் கொன்று விடு, ஏனென்றால் ‘தீர்த்துக் கட்டு’ என்றாகிக் கொண்டிருக்கும் ஆபத்தான நமது சமூக நோய்க்கு, ஆல்பெர்ட் ஷ்வைட்செரின் (Albert Schweitzer) விழுமியமான “உயிர் வணங்கும் கல்வி”தான் (‘Reverence for Life’ Education) மருந்து என்று எழுதியும், பேசியும் வருகிறவன் நான். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா?


சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
டிசம்பர் 7, 2013

ஸ் பெ

unread,
Dec 8, 2013, 7:44:20 AM12/8/13
to panbudan
இடிந்தகரையில் நிமிர்ந்த நிலையில்...
பாகம் - 1


சுப. உதயகுமாரன்
இடிந்தகரை, நவம்பர் 30, 2013

இடிந்தகரைப் போராட்டத்தில் இனி என்ன? “இரண்டாயிரம் மக்கள் நடத்தும் போராட்டம்,” “தனிமைப்படுத்தப்பட்ட ஓர் ஒற்றை மனிதரின் போராட்டம்” என்றெல்லாம் முகமற்ற, முகவரியற்ற காங்கிரசுக்காரர்களால் விமர்சிக்கப்படும் நமது மாபெரும் போராட்டத்தின் அடுத்தக் கட்டம் என்ன? முதலில், இந்த “ஆடுகளம்” பற்றிய அடிப்படைத் தகவல்களிலிருந்து ஆரம்பிப்போம்:

நாம் யார்?

நாம் யார் என நமக்குத் தெரியும். சாதாரண உண்மையான, உழைத்து வாழும் மீனவர்கள், விவசாயிகள், சிறுபான்மையினர், தலித் மக்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறோம். தமிழமெங்குமுள்ள கற்றுணர்ந்தோர், கருத்துத் தெளிவுடையோர் பலரும் நம்மை ஆதரிக்கின்றனர். கூடவே அண்டை மாநிலமான கேரளத்திலும் இந்தியாவின் பல பகுதிகளிலும், உலகெங்குமுள்ள பலரும் நம்மை ஆதரிக்கின்றனர். எண்ணிக்கையில் நாம் பெரும்பாலானவர்களாக இருந்தாலும், நாம் யார், எவர் என்பதே நமக்குத் தெரியாது. காரணம் நாம் உலகெங்கும் பரந்து கிடக்கிறோம்; நமக்குள் பரந்துபட்ட ஒருங்கிணைப்பு எதுவும் கிடையாது. நமக்கு அதிகார பலம், பணபலம், இராணுவ பலம், ஊடக பலம் எதுவுமில்லை. நம்முடைய பலம் மாந்தநேயமும், மக்கள் அறமும், மென்முறைப் போராட்டமும்தான்.

நமக்கு என்ன வேண்டும்?

நம்முடைய வாழ்வுரிமைகள், வாழ்வாதார உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், போற்றப்பட வேண்டும். நமது மண்ணும், பயிரும், கடலும், கடல் வளமும், நீரும், காற்றும், வளங்களும், வருங்காலமும், வரவிருக்கும் சந்ததிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியப் பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இவர்களிடம் கமிஷன் பெற்று வாழும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கோடி கோடியாய் கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொடுப்பதற்காக, நாமும், நம் பிள்ளைகளும் வஞ்சிக்கப்படக் கூடாது. நாம் அடிமைகளாக்கப்படக் கூடாது. வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் ஆபத்தான அணுக்கழிவை உருவாக்கும் அணுமின் நிலையங்கள் போன்ற திட்டங்களை நம் தலைகளில் கட்டக்கூடாது. கேரளத்தில் கட்ட முடியாத அணுமின் நிலையத்தை, கர்நாடகாவில் புதைக்க முடியாத அணுக்கழிவை தமிழர்கள் தலையில் சுமத்தக்கூடாது.

நாம் என்ன செய்திருக்கிறோம்?

கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டபோவதாக அறிவித்த காலகட்டத்திலிருந்தே, திட்டத்தைப் பற்றி எந்தத் தகவலும் தராமல், மக்கள் கருத்தைக் கேட்காமல், எதேச்சாதிகாரமாக புகுத்தப்படும்போது மக்கள் புழுங்கினார்கள். அப்போது நடந்த செர்னோபில் விபத்தைச் சுட்டிக்காட்டி பல்வேறு இயக்கங்கள், தலைவர்கள், போராளிகள் இந்தத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள். கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரையில் திரு. ஒய். டேவிட் அவர்கள் தலைமையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் துவங்கப்பட்டது முதல், நமது எதிர்ப்பும், பரப்புரையும் தொடர்ந்து நடந்தன. 2011 ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு வீரியமான, உச்சக்கட்டப் போராட்டத்தை நடத்தி இடிந்தகரையை மையமாகக் கொண்டு நடத்தி வருகிறோம்.

தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அணுசக்திப் பிரச்சினையில் ஒரு நிலைப்பாடு எடுக்க வைத்திருக்கிறோம். இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோதுகூட இந்த நாட்டில் எழாத ஒரு பரந்துபட்ட விவாதத்தை சாத்தியமாக்கியிருக்கிறோம். சாதி, மத பேதங்களுக்கு இடமளிக்காமல், தமிழர் எனும் அடையாளத்தை மையப்படுத்தி, அதே நேரம் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற பிற மாநிலங்களிலிருந்து வரும் மக்களையும் அரவணைத்துக் கொண்டு, துளியளவும் வன்முறை இல்லாமல் 835 நாட்களாக இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். பெண்களை, இளைஞர்களை, குழந்தைகளை முன்னிலைப்படுத்திப் போராடுகிறோம். மறு காலனி ஆதிக்கத்துக்கு (re-colonization) எதிராக, உலகமயமாக்கலுக்கு (globalization) எதிராக, ஹை-டெக் அணுசக்தி எதிர்காலத்தை உருவாக்குகிறோம் என்ற பெயரில் சாமான்ய மக்களின் வாழ்வாதாரங்களை, வாழ்வுரிமைகளை பணக்காரர்களின், பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்துக்காக அழிப்பதற்கு எதிராக தீரத்துடன் போராடுகிறோம். இந்திய சனநாயகத்தைக் காப்பாற்றவும், அடிப்படை உரிமைகளைக் காக்கவும் எழுந்து நிற்கிறோம். அணுசக்தியற்ற தமிழகம், இந்தியா, தெற்காசியா, உலகம் என்ற கனவுகளோடு இயங்குகிறோம்.

எதிரணியினர் யார்?

தமிழக அரசு,
தமிழக அரசின் காவல்துறை, உளவுத் துறைகள்,
இந்திய அரசு மற்றும் அதன் பிரமாண்டமான கட்டமைப்பு,
இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர பாதுகாப்புப் படை,
மத்திய உளவுத் துறைகள்,
அணுசக்தித் துறை மற்றும் அதன் ஏராளமான அமைப்புக்கள்,
இந்தியப் பெருமுதலாளிகள், நிறுவனங்கள்,
ரஷ்ய அரசு, ரஷ்ய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உளவுத் துறைகள்,
அமெரிக்க அரசு, அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உளவுத் துறைகள்,
பிரான்சு அரசு, பிரான்சின் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உளவுத் துறைகள்,
ஆஸ்திரேலிய அரசு, ஆஸ்திரேலிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உளவுத் துறைகள்,
இந்தியாவோடு அணு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டிருக்கும் ஜப்பான், பிரிட்டன், கஸக்ஸ்தான், நமீபியா போன்ற நாடுகளின் அரசுகள், அவர்களின் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உளவுத் துறைகள்,
அகில உலக அணுசக்தி தொழில்துறை (global nuclear industry),
ஐ.நா. சபை (UN) மற்றும் அதன் சர்வதேச அணுசக்தி முகமை (International Atomic Energy Agency) முதலானவை.

அவர்களுக்கு என்ன வேண்டும்?

பணம், ஏராளமான பணம், இன்னும் அதிகமான பணம்,
எரிசக்தி, ஏராளமான எரிசக்தி, இன்னும் அதிகமான எரிசக்தி,
அணுகுண்டு, ஏராளமான அணுகுண்டு, இன்னும் அதிகமான அணுகுண்டு,
அதிகாரம், ஏராளமான அதிகாரம், இன்னும் அதிகமான அதிகாரம்,
பணம், ஏராளமான பணம், இன்னும் அதிகமான பணம்.

அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?

அவர்களுக்கு ஏதுவான, தோதுவான ஒரு கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சமூக-பொருளாதார-அரசியல் அதிகாரத்தை கையில் குவித்து வைத்திருக்கிறார்கள். மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்கிறார்கள். ஏராளமாக கடன் வாங்குகிறார்கள். ஊடகங்களை மிரட்டி அடிமைப்படுத்தி, அல்லது லஞ்சமளித்து அமைதிப்படுத்துகிறார்கள்; அல்லது அவர்களுக்கேற்றவாறு ஊடகங்களைப் பேச வைக்கிறார்கள். நமக்காக, நம்து வளர்ச்சிக்காக அல்லும் பகலும் உழைப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, தங்கள் லாபத்தை, களவை, கமிஷனை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

தொடரும்....

ஸ் பெ

unread,
Dec 8, 2013, 7:45:02 AM12/8/13
to panbudan
இடிந்தகரையில் நிமிர்ந்த நிலையில்...
பாகம் - 2


சுப. உதயகுமாரன்
இடிந்தகரை, நவம்பர் 30, 2013

எதிரணியினரோடு நேரடி சந்திப்பும், கருத்துப் பரிமாற்றமும்

கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் முதல் ஓர் உச்சக்கட்டப் போராட்டத்தை நாம் நடத்தி வருகிறோம். அன்று முதல் இன்று வரை போராடும் மக்களின் உணர்வுகளை, ஈடுபாடுகளை, தேவைகளை, விருப்பங்களை, அச்சங்களை, ஆசைகளை யாரும் உண்மையாகக் கேட்டதோ, கரிசனையுடன் பரிசீலித்ததோ, ஆழமாகப் புரிந்துகொண்டதோ கிடையாது. உள்ளூர் அதிகாரிகளான மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் போன்றோர் மேலிருந்து வரும் கட்டளைகளை எந்தக் கேள்வியுமின்றி அப்படியே அமுல்படுத்தும் அடிமைகளாகவே செயல்படுகின்றனர். அப்படித்தான் செயல்பட முடியும், செயல்பட வேண்டும் என்பது அரசின் எழுதப்படாத விதி. மனசாட்சியுள்ள அதிகாரிகள்கூட தன்னிச்சையாக இயங்க முடியாது.

மத்திய இணை அமைச்சரும், அணுசக்தி கழகத்தின் உறுப்பினருமான திரு. வி. நாராயணசாமி செப்டம்பர் 20, 2011 அன்று இடிந்தகரைக்கு நேரில் வந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர்களை சந்தித்துச் சென்றார். “மக்களுக்காக மின்சாரமா, மின்சாரத்துக்காக மக்களா என்று போராளிகள் கேட்கிறார்கள்; மக்களுக்காகத்தான் மின்சாரம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை” என்ற தொனியில் பேசிச் சென்றவர், இடிந்தகரையை விட்டு வெளியேச் சென்றதும் மக்களுக்கு எதிராகப் பேசினார்.

கடந்த செப்டம்பர் 21, 2011 அன்று தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களை சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் பேசினோம். அதிகார வர்க்கத்தின் ஒரு பிரதிநிதியோடு அவ்வளவு நீண்ட நேரம், சுதந்திரமாக, உண்மையாக ஒரு கருத்துப் பரிமாற்றம் நடந்தது என்றால், அது இந்த சந்திப்பு மட்டும்தான். ஒரு தகராறுப் பேச்சுவார்த்தையில் என்னென்ன நடக்க வேண்டுமோ அது அப்போது நடந்தது. கூடங்குளம் அணுஉலையை மூட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். அது முற்றுப்பெறும் நிலையில் இருக்கும் மத்திய அரசின் திட்டம், என்னால் பெரிதாக எதுவும் செய்ய இயலாது என்று முதல்வர் சுட்டிக்காட்டினார். பணிகளை நிறுத்திவைக்கக் கோரி அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றுகிறோம், பிரதமரை சந்திக்க ஏற்பாடுகள் செய்து தருகிறோம் என்று உறுதியளித்தார் முதல்வர். நாங்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அறிவித்து ஊருக்குப்போய் மக்களிடம் பேசிவிட்டு நிறுத்திவிடுகிறோம் என்று வாக்களித்தோம்.

தமிழக அரசின் முயற்சியில், முன்னெடுப்பில் பிரதமரை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அக்டோபர் 7, 2011 அன்று பிரதமரை சந்தித்தோம். கூட்டம் நடந்த அறைக்கு பிரதமர் வரும்போது வீட்டின் உள்ளேயிருந்து அவரோடு தேசிய பாதுகாப்புச் செயலாளர் சிவசங்கர் மேனன், அறிவியல் ஆலோசகர் சிதம்பரம், இந்திய அணுமின் கழகத் தலைவர் எஸ்.கே. ஜெயின் போன்றோர் வந்தனர். நாடகம் அரங்கேறியது. நாங்களும் நடித்தோம், ஊர் திரும்பினோம். ஆனால் நிலைமை மாறவில்லை. பேச்சுவார்த்தை முடிந்து அன்று மாலை தில்லி விமான நிலையம் போவதற்கு முன்பே, மத்திய அரசின் மக்கள் விரோத நிலை அம்பலமாகியது.

“கூடங்குளம் உலகிலேயே உன்னதமான அணுஉலை; ஒன்றும் செய்யாது; பயப்பட வேண்டாம்; பார்த்துக் கொள்ளலாம்; விஞ்ஞானிகள் நல்லவர்கள்; அவர்களை நம்ப வேண்டும்” என்றெல்லாம் நமக்கு எடுத்துச் சொல்லப்பட்டதே தவிர, எதுவும் செய்யப்படவில்லை. அரச விஞ்ஞானிகள், அரசவைக் கோமாளிகள், சிறப்பேதுமற்ற சில சினிமா நடிகர்கள், மற்றும் பிற சில்லறைகளை வைத்து மக்களுக்கு உறுதிமொழிகள் அழிக்கப்பட்டனவே தவிர உருப்படியாக எதுவும் செய்யப்படவில்லை. அணுமின் நிலையத்தில் ஒரு விபத்து நடந்தால் தங்களை எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டும் என ஒரு பேரிடர் பயிற்சி கூட இன்றுவரை இப்பகுதி மக்களுக்குத் தரப்படவில்லை. மாறாக “வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது,” “அமெரிக்க கைக்கூலிகள்” என்றெல்லாம் ஏராளமான பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.

உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் அக்டோபர் 13, 2011 அன்று “உங்களில் ஒருத்தியாக இருப்பேன்” என்று முதல்வர் உறுதியளித்தார். 2011 டிசம்பர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் “ஓரிரு வாரங்களில் கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கும்” என்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அறிவித்தபோது அதை உடனடியாகத் தட்டிக்கேட்டார் முதல்வர். சோனியா காந்தியின் தலைமையிலான காங்கிரசுக் கட்சியும், பேசாமடந்தைகளை வைத்து அவர் நடத்தும் மத்திய அரசும் தமிழக முதல்வருக்கு நெருக்கடிகள் கொடுத்து, மிரட்டியிருக்க வேண்டும். முதல்வர் தனது நிலைப்பாட்டை மாற்றினார். 2012 மார்ச் மாதம் 18-ம் நாள் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்ததும், தமிழக அரசும் நம்மை வெளிப்படையாக எதிர்த்தது.

எளிய பாதையில் எதிர்த்து நின்றோம்

சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் நான்கு அம்சங்களான உண்மையோடு, பொறுமையோடு, உறுதியோடு, அன்போடுப் போராடினோம். மக்களைத் திரட்டி திட்டத்தை எதிர்த்தால் ஒருவேளை மக்கள் விருப்பங்களுக்கு, உணர்வுகளுக்கு மதிப்பளித்து பெரும்பான்மையான நாடுகள் வெறுத்து ஒதுக்கும் அணுசக்தித் திட்டத்தை கைவிட்டுவிட மாட்டார்களா என்று ஆசைப்பட்டோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை தள்ளிவைத்து, உடல்களை வருத்தி, வேலைகளை இழந்து, பொருளாதார இழப்புக்களை ஏற்றுக்கொண்டு, வழக்குகளையும், அடக்குமுறைகளையும் சந்தித்துக் களமாடினோம். அந்நிய நாடுகளின் அரசுகளுக்காக, அவர்களின் பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதற்காக, அந்நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, எங்கள் உயிர்களை, வளங்களை, வருங்கால சந்ததிகளை காவு கொடுக்காதீர்கள் என்று கோரிக்கை வைத்தோம். 

மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களின் அரசு என்றால் மக்கள் சொல்வதைத்தானே செய்ய வேண்டும், மக்கள் கேட்பதைத்தானேக் கொடுக்க வேண்டும்? மக்களாட்சி நடைபெறுகிற நாடு என்றால், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், முதல்வர், பிரதமர் போன்றோர் மக்களை நேரில் வந்து சந்தித்து, அவர்கள் கருத்துக்களைக் கேட்டு, ஈடுபாடுகளை அறிந்து, நிலைப்பாட்டைத் தெரிந்துகொண்டிருக்க வேண்டாமா? ஒரு கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருக்க வேண்டாமா? மக்கள் கருத்துக்களை அக்கறையோடு பரிசீலித்து, தாங்கள் என்னென்ன செய்ய முன்வருகிறோம் என்று அறிவித்திருக்க வேண்டாமா? முனைவர் முத்துநாயகம் குழு அமைக்கப்பட்டபோது, “எங்கள் ஊர்களுக்கு வாருங்கள், வந்து எங்கள் மக்களோடுப் பேசுங்கள்” என்று வலியுறுத்தினோம். “அப்படி செய்வதற்கு எங்களுக்கு அனுமதி இல்லை” என்றனர். முனைவர் இனியன் தலைமையில் தமிழக அரசு ஒரு குழு அமைத்தபோதும், இதே கோரிக்கையை முன்வைத்தோம். ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையைகூட அரசு தமிழக மக்களோடு பகிர்ந்துகொள்ளவில்லை. 

சர்ச்சைக்கிடமான பல ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து கூடங்குளம் அணுஉலைக்கு உபகரணங்களும், உதிரிப் பாகங்களும் வாங்கப்பட்டிருப்பதை, விதிமுறை மீறல்கள் நடந்திருப்பதை, பல கேள்விகளுக்கு பதிலேதும் சொல்லப்படாமலிருப்பதை, மக்களுக்குப் பேரிடர் பயிற்சிகள் கொடுக்காமலிருப்பதை – என பல பிரச்சினைகளை அறிவியல், சட்டவியல், அரசியல் தளங்களில் பணியாற்றி அம்பலப்படுத்தினோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை கண்கொத்திப் பாம்பாக அவதானித்து, மக்களுக்கு அரசுகளும், அணுசக்தித் துறையும் தராத தகவல்களை அறியத் தந்தோம். ஆனால் அரசுகளைப் பொறுத்தவரை, போராட்டங்களில் மக்கள் வெற்றி பெறக்கூடாது என்பதிலே மிகத் தெளிவாக, உறுதியாக இருக்கிறார்கள். “எங்களுக்கு எதிராகப் பேசாதே, நாங்கள் சொல்வதைக் கேட்டு நட” என்பதுதான் அவர்கள் நிலைப்பாடாக இருக்கிறது.

தொடரும்....

ஸ் பெ

unread,
Dec 8, 2013, 7:45:53 AM12/8/13
to panbudan
இடிந்தகரையில் நிமிர்ந்த நிலையில்...
பாகம் - 3 (இறுதி)


சுப. உதயகுமாரன்
இடிந்தகரை, டிசம்பர் 4, 2013

கடின பாதையில் பயணம் செய்வோம்

எளிய பாதை அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், கடின பாதையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. “அடிக்கிற வழியில் போகவில்லையென்றால், போகிற வழியில் அடிப்போம்” என்பார்கள். மக்கள் போராட்டம் அடிக்கிற வழியில் வெற்றியை நோக்கிப் போகவில்லை. அதற்காக அது போகிற தோல்வி வழியில் அடித்துக் கொண்டிருக்க முடியாது. “மாடுகளை மாற்றுவோம், சாலைகளை சரி செய்வோம், பின்னர் அடிக்கிற வழியில் போகவைப்போம்” என்பதுதான் நமக்கு உள்ள ஒரே வழி இப்போது. இது மிகக் கடினமான வழிதான். குறுகிய கால--மக்கள் திரள்—நேரடி--கள நடவடிக்கைகளுடன் நீண்ட கால--கருத்துத் திரள்—மறைமுக—அரசியல் நடவடிக்கைகளையும் கையிலெடுக்க வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் பற்றி மட்டுமல்லாது, அணுசக்திக் கொள்கை, எரிசக்திக் கொள்கை, தொழிற் கொள்கை, வளர்ச்சிக் கொள்கை எனப் பரந்துபட்ட கொள்கை அளவிலும், கோட்பாடுகள் அளவிலும், அரசியல் தளத்திலும் இயங்க வேண்டும். அதிக நேரத்தையும், அதிக கவனத்தையும், அதிக சக்தியையும், அதிக உழப்பையும் தர அணியமாக வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுவது மலை ஏறுவது போல. துவக்கம் எளிதானது, ஆனால் தொடர்வது கடினமானது. அடிவாரத்தில் ஆழமாக சுவாசிக்கலாம், ஆனால் உயரப் போகுந்தோறும் ஆசுவாசமாக சுவாசிப்பது இயலாது போகும். ஏறுவது சுலபம், ஆனால் இறங்குவது கடினம்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பல கோளாறுகளும், குளறுபடிகளும் இருப்பதாகத்தான் கேள்விப்படுகிறோம். அது நொண்டிக் கொண்டிருப்பதாகத்தான் செய்திகள் வருகின்றன. ஆனால் அதிகாரமுள்ளவர்கள் சொல்லும் பொய்கள் உண்மையாகிவிடுவதால், நாம் சொல்லும் உண்மைகள் பொய்யாகவேப் பார்க்கப்படுகின்றன. மாஸ்கோ நகரிலுள்ள ஆட்டம்இன்ஃபோ (AtomInfo) எனப்படும் அணுசக்தி ஆய்வு மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் யுவாரோவ் (Alexander Uvarov) சொல்கிறார், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஒவ்வொரு நிலையிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வுகள் செய்யப்பட வேண்டும், குற்றங்குறைகள் களையப்படவேண்டும், எனவே வர்த்தகரீதியில் மின்சாரம் தயாரிக்க ஒரு வருடமோ அதற்கும் மேலாகவோ ஆகலாம் என்று. அத்தைக்கு மீசை முளைத்தால்தானே சித்தப்பா ஆவார்?

இந்திய அணுசக்தித் துறை நாட்டு மக்களிடம் எந்தத் தகவலும் சொல்வதில்லை; உண்மை பேசுவதில்லை; திறந்தவெளித்தன்மையோ, பொறுப்புணர்வோ கிடையாது; சனநாயகப்பண்புகள் அறவே கிடையாது. இந்தியாவை மாறி மாறி ஆளுகின்ற காங்கிரசு கட்சியும், பா.ஜ.க.வும் பல லட்சம் கோடி பணம் புரளும் அணுசக்தி கனவுலகத்துக்கே நம்மை இட்டுச்செல்ல விரும்புகின்றனர். இந்தியாவிலுள்ள பிற தேசியக் கட்சிகள், பிராந்தியக் கட்சிகள் அனைத்தும் கனமாகக் கமிஷன் கிடைப்பதால் கவலையோ, கரிசனமோ இன்றி கையைக்கட்டிக் கொண்டு வாளாவிருக்கின்றனர்.

இந்த நிலையில் நாம் என்னென்ன செய்ய முடியும்?

[1] தொடர்ந்து போராடுவோம்:
குறுகிய கால--மக்கள் திரள்—நேரடி--கள நடவடிக்கைகளைத் தொடர வேண்டும். வெற்றி-தோல்வியைப் பற்றி கவலைப்படக் கூடாது. பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுவது போல வெற்றி வீடு தேடி வரும் என்று கருதக்கூடாது. இன்றைய தோல்வி நாளைய வெற்றி என்று உறுதியாக எண்ணிக் கொண்டு ஒரு கரும யோகியாகவே செயல்பட வேண்டும். “கற்பி, ஒன்று சேர், போராடு (Educate, Organize, Agitate)!” எனும் புரட்சியாளர் அம்பேத்கர் மந்திரத்தை மனதிற்கொண்டு முன்னேறுவோம்.

[2] மக்களுக்குத் தோள்கொடுப்போம்:
அரசுக்கு, அதிகார வர்க்கத்துக்கு எதிராகப் போராடுகிற அதே வேளையில், மக்களுக்கு, பாதிப்புக்குள்ளாகிறவர்களுக்கு ஆதரவாகவும் இயங்க வேண்டும் நாம். இங்கே நமது மந்திரம்: “காத்துக் கொள், அணியமாக்கு, தொடர்ந்து செல் (Protect, Prepare, Proceed)” என்பதாகத்தானிருக்க முடியும்.

[3] காத்துக் கொள்வோம்:
[i] மக்களை, பிற உயிர்களை காத்துக் கொள்வதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அவ்வப்போது காற்று, நீர், கடல் வழி வெளியேறும் கழிவுகளை, கசிவுகளை, கதிர்வீச்சை அவதானிக்கத் தேவைப்படும் கருவிகளோடு, மக்களைக் காக்கும் “அவதானிப்பு நிலையங்கள்” (Monitoring Stations) ஆங்காங்கே நிறுவப்பட வேண்டும். 

[ii] அணுமின் நிலையம் முறையாக செயல்படத் துவங்கும்போது மக்களை, பிற உயிர்களை பல்வேறு நோய்கள் தாக்கும் வாய்ப்பு உள்ளது. அந்த நேரத்தில் ஒப்பீடு செய்து பார்ப்பதற்கு, இந்த நிலையம் இயங்கத் துவங்குவதற்கு முன்பிருந்த சுற்றுச்சூழல், மக்கள் உடல்நலம் பற்றி நாம் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். இம்மாதிரியானத் தரவுகளை (Baseline Data) நாம் சேர்த்து பாதுகாத்து வைக்க வேண்டும்.

[4] அணியமாக்குவோம்:
[i] கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய தகவல்களை, செய்திகளை, சங்கதிகளை, சங்கடங்களை, கோளாறுகளையெல்லாம் சேகரிக்கும், தொகுக்கும், தொடர்புபடுத்தும், ஆய்வுகளுக்கு உதவும், மக்களுக்கு அறியத்தரும் ஓர் “ஆவணக் காப்பகம் மற்றும் தகவல் மையம்” (Documentation and Information Centre) ஏற்படுத்தப்பட வேண்டும்.

[ii] கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடக்கும், நடக்கவிருக்கும் நிகழ்வுகளை புரிந்து கொள்ளவும், செய்திகளை மக்களுக்கு முறையாகக் கொண்டு செல்லவும் உதவும் வகையில் அவ்வப்போது ஊடகத் தோழர்களுக்கும், செயல்பாட்டாளர்களுக்கும், சமூக சேவகர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், ஏனையோருக்கும் “ஊடகப் பயிற்சி மற்றும் தகவல் முகாம்கள்” (Media Training and Information Campaign) நடத்தப்பட வேண்டும்.

[iii] இந்திய ஆளும் வர்க்கம் மிகப் பெருமளவில் அணுமின்சாரம் தயாரிக்கத் திட்டமிடும்போது, கல்வியறிவற்ற, காரண காரியங்கள் எதுவும் அறியாத நமது மக்களுக்கு அணுமின் நிலையங்கள், அணுவாயுதங்கள், யுரேனியச் சுரங்கங்கள், கதிர்வீச்சுக் கழிவுகள், அணுமின் நிலையங்களை செயலிழக்கச்செய்தல் போன்றவை பற்றியெல்லாம் நாம் சொல்லிக் கொடுத்தாக வேண்டும். 

மத்திய, மாநில அரசுகள் இந்தப் பணிகளை செவ்வனேச் செய்ய மாட்டார்கள். ஏற்கனவே அணுசக்தித் துறையின் செயல்பாடுகள் முழுவதுமாக மூடிமறைக்கப்படுகின்றன. துணுக்குத் தகவல்களையும், அரைகுறை உண்மைகளையும், அப்பட்டமானப் பொய்களையும் பேசும் இந்தத் துறைக்கு திறந்தவெளித் தன்மையோ, பொறுப்புணர்வோ, சனநாயகப் பண்புகளோ அறவே கிடையாது. இவர்கள் எதிர்ப்பை சகித்துக் கொள்ளாதவர்கள், எதிரிகளை அழிக்கத் துடிப்பவர்கள், பயத்தின் உதவியோடு மக்களைக் கட்டுப்படுத்த முனைகிறவர்கள்.

இலாப வெறியோடு அலையும் பன்னாட்டு நிறுவனங்களும், இரகசியத் தன்மையோடு இயங்கும் அரச இயந்திரமும், எதேச்சாதிகாரப் போக்கு கொண்ட அணுசக்தித் துறையும் கைகோர்த்தால், பாமர மக்கள் பாழுங்கிணற்றுக்குள் தள்ளப்படுவார்கள். இந்த முதலாளித்துவ-அரசத்துவ-அணுத்துவக் கலவை மீனவர், தலித், சிறுபான்மையினர் போன்ற விளிம்புநிலை மக்களை வீழ்த்தி அழித்துவிடும்.

எனவே அணுசக்தித் தொடர்பான தொழிற்சாலைகள் கடலோர மக்களின் வாழ்வுரிமை, வாழ்வாதார உரிமைகள் மீதும், உட்பகுதி மக்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து உரிமைகள் மீதும் ஏற்படுத்தும் தாக்கங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாலைகள் அருகே வாழும் விளிம்புநிலை மக்களின் பொருளாதார, உணவு, ஊட்டச்சத்துத் தணிக்கை (economic, food and nutrition audits) அவ்வப்போது நடத்தப்பட வேண்டும். இந்த ஆபத்தான பகுதிகளில் வாழும் குழந்தைகள், பெண்கள், ஆண்கள், கால்நடைகள், வனவிலங்குகள், பறவைகள், மரம் செடி கொடிகள், பயிர்கள் போன்றவற்றின் மீதான கதிர்வீச்சுத் தாக்கங்கள், நோய்வாய்ப்படுதல், பாதுகாப்புக் குறைகள் போன்றவற்றைத் தொடர்ந்து ஆய்வுசெய்து, அவதானித்துக் காத்துக்கொள்ள வேண்டும்.

இம்மாதிரி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அறிவியலாளர்களும், மீன்வள நிபுணர்களும், விவசாயிகளும், ஊட்டச்சத்து விற்பன்னர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் அணியமாக இருந்தாலும், தேவையானத் தகவல்களை சேகரிக்க, ஆவணப்படுத்த, அணுவிசை எதிர்ப்பு குழுக்களுக்குக் கொடுத்து உதவ ஆய்வு மையங்கள் தேவைப்படுகின்றன. அணு இயற்பியல் (Nuclear Physics), அணுப் பொருளாதாரம் (Nuclear Economics), அணு அரசியல் (Nuclear Politics) போன்ற நுண்ணறிவு விடயங்களை சாதாரண மக்களும் தெரிந்து, புரிந்துகொள்ளும் வகையில் தகவல்களை சேகரித்து, இந்தியாவின் முக்கிய மொழிகளில் மொழிபெயர்த்து, துண்டறிக்கைகளாக, சிறு வெளியீடுகளாக, புத்தகங்களாக வெளியிட வேண்டும். இன்னோரன்ன வேலைகளைச் செய்ய “அணுசக்தி கண்காணிப்பகங்கள்” (Nuclear Energy Watch Services, NEWS) தொடங்கப்பட வேண்டும்.

[5] தொடர்ந்து செல்வோம்:
இடிந்தகரையில் நடப்பது கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு மட்டும் எதிரான போராட்டமல்ல. இது கல்பாக்கம் அணுமின் நிலையங்கள் மற்றும் அங்கே நடக்கும் விரிவாக்கத்தை எதிர்க்கும் போராட்டம். தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் அமைக்கப்படும் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அகில இந்திய அணுக்கழிவுக் கிட்டங்கியாகப் போகும் சதியை எதிர்க்கும் போராட்டம். தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் கிராமத்திலுள்ள அணுவாற்றல் எரிசக்தி மையத்தின் (Nuclear Fuel Complex) சிர்க்கோனியம் ஆலையை (Zirconium Complex) மூடச் சொல்லும் போராட்டம். உலக நாடுகள் அனைத்தும் அணுவாயுதங்களை அழிக்கக்கோரும் போராட்டம். ஒட்டுமொத்த அணுசக்திக்கு எதிரானப் போராட்டம். இந்தியாவின் தவறான எரிசக்தி கொள்கைக்கு எதிரானப் போராட்டம். அணுசக்தியற்ற தமிழகம், இந்தியா, தெற்காசியா, உலகம் போன்றவற்றை உருவாக்குவது இடிந்தகரை மக்களும், கடலோர மக்களும், கடற்கரையோர மக்களும், போராட்டக் குழுவிலுள்ளோரும் மட்டுமேக் கவலைப்படக்கூடிய விடயமல்ல. இது ஒரு பரந்துபட்ட, நீண்டகாலப் போராட்டம்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் பதினைந்து பேர் கொண்ட போராட்டக்குழுவும், இடிந்தகரை எனும் ஒரு சிறிய கிராமமும், எங்கள் பகுதி மீனவ மக்களும், விவசாயிகளுமாக சுமார் 850 நாட்கள் இந்தப் போராட்டத்தை இழுத்து வந்திருக்கிறோம். இனி தமிழகமெங்குமுள்ள சமூக, அரசியல் செயல்பாட்டாளர்கள் இதை ஏற்று நடத்த முன்வரவேண்டும். மேலே குறிப்பிட்டது போல, நீண்ட கால--கருத்துத் திரள்—மறைமுக—அரசியல் நடவடிக்கைகளை நாம் அனைவருமாக மேற்கொண்டாக வேண்டும்.

எரிசக்தி, அணுசக்தி போன்ற கொள்கைகளை மாற்றுவதற்கு அரசியல் மற்றும் அரசக் கொள்கை ஆதரவுத் தேடல்கள் (Political and Policy Lobbying) நடத்த வேண்டும். வாசிக்கும், வளமாக சிந்திக்கும், வாதிக்கும் மக்கள் மத்தியில் அரசியல் மற்றும் அரசக் கொள்கைகள் பற்றிய விவாதம் நடத்துவதற்காக “முகநூல் நாடாளுமன்றம்” என்ற ஓர் அரசியல் நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறோம். இடிந்தகரை போராட்டத்தின் காரணமாக அணுசக்திக்கு எதிராக நிலைப்பாடு எடுத்திருக்கும் அரசியல் கட்சிகள் அரசியல் தளத்தில் கருத்துப் பரப்பல் முதல் தேர்தல் பிரச்சினையாக்குவது வரை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

நாடாளுமன்றத் தேர்தல் வரவிருப்பதால், அனைத்து அணுசக்தித் திட்டங்களைப் பற்றிய ஒரு பரந்துபட்ட தேசிய விவாதம் நடத்துவோம். நாடெங்கும் நிறுவப்படவிருக்கும் திட்டங்கள் பற்றிய கீழ்க்காணும் அறிக்கைகளை ஆங்கிலம், இந்தி, மற்றும் உள்ளூர் மொழிகளில் தயாரித்து வழங்குவோம்:
• சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை (Environmental Impact Assessment),
• தல ஆய்வறிக்கை (Site Evaluation Report),
• பாதுகாப்பு ஆய்வறிக்கை (Safety Analysis Report),
• பேரிடர் தயாரிப்புத் திட்டம் (Emergency Preparedness Plan),
• உலைகளின் தொழில் ஆற்றுகை மதிப்பீடு (Concerned Reactor’s Performance Report),
• இழப்பீடு அறிக்கை (Liability Regimes).

இந்திய தேசம் முழுவதும் இந்த அறிக்கைகளை, அணுசக்தித் திட்டங்களின் அபாரமான செலவை; உணவு இழப்பு, ஊட்டச் சத்து இழப்பு மற்றும் நோய்வாய்ப்படுதல் போன்ற மறைமுக விலைகளை; அணுக்கழிவு மேலாண்மைக்கும், செயலிழக்கச்செய்யவும் ஆகும் செலவுகளை; பாதுகாப்புப் பிரச்சினைகளை எல்லாம் விவாதிப்போம். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியாவை அணுசக்திமயமாக்க வேண்டுமா என்று அனைவரையும் கேட்போம். பெரும்பாலானோர் “ஆமாம்” என்று பதிலிறுத்தால், அப்படியேச் செய்வோம்.

ஆனால் மக்கள் கருத்துக்களை அறியாது, அவர்களுக்கு எந்தத் தகவலும் கொடுக்காது, இந்திய ஆட்சியாளர்கள் தங்களின் கமிஷனுக்காக, இந்திய அறிவியலாளர்கள் தங்களின் சுகபோக வாழ்வுக்காக, இந்திய முதலாளிகள் தங்கள் லாபத்துக்காக ஒட்டு மொத்த மக்களையும் ஒரு பேராபத்துக்குள் தள்ள நாம் அனுமதிக்கக்கூடாது.

நம்மைப் பொறுத்தவரை, தொடங்கியதைத் தொடர்வோம். துணிச்சலுடன் நிற்போம். நமது குழந்தைகளுக்கு, பேரக் குழந்தைகளுக்கு எந்தவிதமான தமிழகத்தை, இந்தியாவை, உலகத்தை விட்டுச் செல்ல வேண்டும் என மக்களே முடிவெடுக்கட்டும்!
XXXX

ஸ் பெ

unread,
Dec 8, 2013, 2:41:56 PM12/8/13
to panbudan
குற்றச்சாட்டு [6]: வெடிகுண்டு வீசினோம்

என் மீதும், என் தோழர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள இன்னுமொருக் குற்றச்சாட்டு நாட்டு வெடிகுண்டு வீசினோம் என்பது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடத் துவங்கியதிலிருந்தே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டக் கடலோர கிராமங்களுக்கு எண்ணற்ற முறை சென்று வந்திருக்கிறேன். ஆந்திரா, அசாம், மேகாலயா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் என தீவிரவாதப் பிரச்சினைகள் தலைவிரித்தாடும் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். எத்தனையோ கிராமங்களில் ஏராளமான வீடுகளுக்குச் சென்று, எண்ணற்ற நண்பர்களை சந்தித்திருக்கிறேன். 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இடிந்தகரை, கூத்தங்குழி மக்களோடு வாழ்ந்து வருகிறேன். இன்றுவரை நாட்டு வெடிகுண்டை நான் ஒருமுறைகூட கண்ணால் பார்த்ததுமில்லை, கையால் தொட்டதுமில்லை.

உலக சமாதானம் பற்றி படித்தவன் நான்; உலக சமாதானம் பற்றி பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கிறவன் நான். குண்டு போடுவதற்கும், கொலை செய்வதற்கும் பயிற்சி தருகிறவன் அல்ல. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் யுனெஸ்கோ கூரியர் (Unesco Courier) எனும் இதழில் ஓர் இத்தாலி நாட்டுச் சிறுமி எழுதியிருந்த ஆங்கிலக் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது:
போர் விமானங்களில் 
குண்டுகளுக்குப் பதிலாக 
ரொட்டிகளை ஏற்றுங்கள்.
ஏழைக் குழந்தைகள் வாழும்
எல்லா இடங்களின் மீதும்
இந்த குண்டுகளைப் போடுவோம்!

ஆம்! இந்த குண்டை எங்கும் எறிவோமேத் தவிர, அந்த குண்டை அறவேத் தொடமாட்டோம்!


சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
டிசம்பர் 9, 2013

ஸ் பெ

unread,
Dec 9, 2013, 12:56:20 PM12/9/13
to panbudan
ற்றச்சாட்டு [7]: கொல்வதற்கு சதித்திட்டம் போட்டோம்

ஆமாம்!
சாதியைக் கொல்வதற்கு,
மத வெறியைக் கொல்வதற்கு,
சமூக மடமைகளைக் கொல்வதற்கு,
பெண்ணடிமைத்தனத்தைக் கொல்வதற்கு,
ஏழ்மை, வறுமையைக் கொல்வதற்கு,
ஏற்கத்தகாத திட்டங்களைக் கொல்வதற்கு,
இனவெறியைக் கொல்வதற்கு,
லஞ்ச லாவண்யத்தைக் கொல்வதற்கு,
முதலாளித்துவத்தைக் கொல்வதற்கு,
ஏகாதிபத்தியங்களைக் கொல்வதற்கு...
சதித்திட்டம் போட்டோம்,
போட்டுக் கொண்டிருக்கிறோம்,
இன்னும் போடுவோம்...
ஆனால்
மனிதர்களையோ, பிற உயிர்களையோ
கொல்வதற்காக சதி செய்ததில்லை.

ஸ் பெ

unread,
Dec 10, 2013, 1:50:10 PM12/10/13
to panbudan
அரசியலுக்கு வா, கட்சித் துவங்கு, தேர்தலில் நில்!

எதிர்மறை உணர்வுகளோடு துவண்டுபோய்க் கிடந்த நம் நாட்டில், திடீரென ஓர் அரசியல் நம்பிக்கையும், உற்சாகமும் பீறிட்டுக் கிளம்பியிருக்கின்றன. அதற்கு காரணம், தோழர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தன்னம்பிக்கை, மூன்று முறை முதல்வராக இருந்தவரோடு மோதி முறியடித்த தைரியம், சாதாரண மக்களுக்கு அவரதுக் கட்சியின் வெற்றி கொடுக்கும் அசாதாரண நம்பிக்கை போன்றவைதான்.

இந்த புதிய உற்சாகத்தால், நேற்றிலிருந்து ஏராளமான குறுஞ்செய்திகளும், மின்னஞ்சல்களும், முகநூல் தகவல்களும், தொலைபேசி அழைப்புக்களும் வந்த வண்ணமுள்ளன. “அரசியலுக்கு வா, கட்சித் துவங்கு, தேர்தலில் நில்” என்றெல்லாம் பலரும் கடுமையான அழுத்தம் கொடுக்கிறார்கள். ஆனால் திடுதிப்பென்று முடிவு எடுக்கும் விடயங்களல்ல இவை. "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு" என்பதுதான் வள்ளுவம்.

என்னைப் பொறுத்தவரை நான் தெளிவாக, உறுதியாக இருக்கிறேன்:

[1] கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோர மக்களின், உட்பகுதி மக்களின் வேலைக்காரன் நான். எனக்கும், என் தோழர்களுக்கும் அவர்கள் முழு நம்பிக்கையோடு ஒரு வேலை தந்திருக்கிறார்கள். “இதனை இதனால் இவ[ர்] முடிக்கும் என்றாய்ந்து அதனை அவ[ர்]கண் விடல்” என்றுத் தெளிந்து ஒரு பெரும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். அது கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடுவது.

[2] நான் அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இயங்குகிறேன். என்னுடன் பணியாற்றுகிறவர்களின், எங்கள் மக்களின், ஒப்புதலின்றி, ஒத்துழைப்பின்றி என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது, கூடாது.

[3] எங்களுடைய இந்த மக்கள் பணியில் அனைத்துத் தரப்பு மக்களின், இயக்கங்களின், கட்சிகளின் ஆதரவைக் கோரிப் பெற்றிருக்கிறோம். இந்தியாவின் பல பகுதிகளிலுள்ள ஏராளமான நண்பர்கள் பல்வேறு வழிகளில் எங்களுக்கு, மக்களுக்கு உதவி வருகிறார்கள்.

[4] மேற்குறிப்பிட்ட மக்கள், தோழர்கள் அத்தனை பேரின் உழைப்பை, உணர்வுகளை, அர்ப்பணிப்பை, தியாகத்தை உதாசீனப்படுத்திவிட்டு, உதறித் தள்ளிவிட்டு, நான்/நாங்கள் இன்னொரு வேலையில் குதிக்க முடியாது, கூடாது.

[5] கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பல குளறுபடிகள், கோளாறுகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றத்திலும், தில்லி உயர்நீதி மன்றத்திலும் வழக்குகள் நடத்திக் கொண்டிருக்கிறோம். கூடங்குளம் திட்டத்தில் நடக்கும் பல மோசடிகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எதிர்வரும் டிசம்பர் 21, 2013 அன்று “அணுத் தீமையற்ற தமிழக நாள்” எனும் நிகழ்வை அனுசரிக்கிறோம். சனவரி 4-5, 2014 நாட்களில் “இந்தியாவை அணுக் காலனியாக்குவதை எதிர்கொள்வது எப்படி?” என்பது பற்றிய தேசிய மாநாட்டை இடிந்தகரையில் நடத்துகிறோம். மக்களோடு நின்று போராடிக் கொண்டிருக்கிறோம். 

[6] இந்த நிலையில் நாங்கள் அரசியல் களத்துக்குள் குதிப்பதைவிட, அரசியல் களத்தை எங்களுக்கு சாதகமாக்க முடியுமா என்றுப் பார்ப்பதுதான் உசிதமானது. எனவே தமிழகத்திலுள்ள கட்சிகளை, மக்கள் இயக்கங்களை “ஆபத்தான ஆறு, ஆதரவான நூறு” என்று வகைப்படுத்தி, ஆதரவானவர்களை ஒன்று திரட்டி, எங்களுக்காக அரசியல் செய்ய, தேர்தலில் சேர்ந்துப் போட்டியிட, எங்கள் குறிக்கோளை அடைய உதவுங்கள் என்றுக் கேட்கிறோம், சில முயற்சிகள் எடுக்கிறோம்.

[7] அதற்கான வாய்ப்புக்கள் கைகூடினால், மகிழ்ந்து ஏற்றுக்கொள்வோம். அந்த கட்சிகளுக்கு, இயக்கங்களுக்கு ஆதரவளிப்போம், அவர்களின் வெற்றிக்காக உழைப்போம். ஒருசில வாரங்களில் அல்லது மாதங்களில் அரசியல் நிலைமை தெளிவாகத் தெரியவரும்.

[8] ஒருவேளை அனைவரும் தன்னலத்தை மட்டுமே கருத்திற் கொண்டு, தமிழ் மக்களை தவிக்கவிட்டுச் சென்றால்? கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை பற்றிப் பேச மறுத்தால்? “அணுத் தீமையற்ற தமிழகம்” உருவாக்குவதற்கு உதவத் தவறினால்?

போராடும் மக்களோடு, சமுதாயத் தலைவர்களோடு, ஆதரவாளர்களோடு, தமிழ் மக்களோடு கலந்தாலோசித்து, என்ன செய்யலாம் என்று முடிவெடுப்போம். அது உங்களையும் இணைத்துக் கொண்ட, சனநாயகம் தோய்ந்த, திறந்தவெளித்தன்மை கொண்ட ஒரு கூட்டு முடிவாகத்தானிருக்கும்.

வணக்கம்.


சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
டிசம்பர் 10, 2013
(மனித உரிமை நாள்)

ஸ் பெ

unread,
Dec 14, 2013, 3:40:06 AM12/14/13
to panbudan
ஓரின சேர்க்கை? ஓர் இனச் சேர்க்கை? நாடு முழுவதும் திருட்டும், கொள்ளையும், கொலையும் நடந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் முதல் பஞ்சாயத்து உறுப்பினர் வரை திட்டமிட்டு திருடிக் கொண்டிருக்கிறான். மக்கள் பாதுகாப்பில்லாமலும், கண்ணியமில்லாமலும், விலைவாசியின் கொடுமையாலும் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்காக, உள்ளூர் முதலாளிகளுக்காக மரபணுமாற்ற விதை, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என பற்பல சதிகள் படையெடுத்து வருகின்றன. 'எரிசக்தி சுதந்திரம்' என்ற பெயரில் அணுசக்தி ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டு நாடு முழுவதும் நரகக்குழிகள் அமைக்கப்படுகின்றன. உலகமயம், இயந்திரமயம், இராணுவமயம் என்று மக்களும், இயற்கையும் திட்டமிட்டு அழிக்கப்படுகிறார்கள். சுதந்திரம், இறையாண்மை, குடியரசு என்பதெல்லாம் பேச்சளவுக்குக்கூட இன்றி அடிமைத்தனம் ஆளத் துவங்கிவிட்டது. கூடங்குளம், கல்பாக்கம், தேவாரம், கெய்ல், மீதேன், காவிரி...என்று தமிழினம் திட்டமிட்டு வஞ்சிக்கப்படும், துன்புறுத்தப்படும் நிலையில்... இங்கே பெரிய பிரச்சினை ஓரின சேர்க்கையாம். கலாச்சார பாசிஸ்டுகளும், மத வெறியர்களும், மடையர்களும் வரிந்துகட்டிக் கொண்டு "இயற்கைக்கு" வக்காலத்து வாங்குகின்றனர். படுக்கை அறைக்குள்ளும், பிரார்த்தனை அறைக்குள்ளும் என்ன நடக்க வேண்டும் என்பதை தனி மனிதன், குடும்பம் தீர்மானித்துக் கொள்ளட்டும், தோழர்களே! நாம் ஆளும்வர்க்கத்தின் அதிகார சதிக்குள் வீழ்ந்துவிடாமல், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மாற்றம் கொண்டு வரமுடியுமா என்று எத்தனிப்போம். ஓர் இனச் சேர்க்கைக்காக நாம் முயன்று கொண்டிருக்கும்போது, ஓரினச் சேர்க்கை பற்றி கவலைப்படவேண்டாம்!

ஸ் பெ

unread,
Dec 26, 2013, 12:03:14 PM12/26/13
to panbudan
நாளிதழ்களின் நிர்வாகங்களுக்கு...

நாளிதழ்களில் கொடூரமான, கோரமான புகைப்படங்களை பிரசுரிப்பதை ஆசிரியர்களும், நிர்வாகங்களும் தயவு செய்து தடுத்து நிறுத்துங்கள். இன்று ஒரு நாளிதழில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட ஒரு பிணத்தினுடைய படமும், லாரியிலிருந்து இறக்கப்படும் இன்னொரு பிணத்தின் படமும் வெளிவந்துள்ளன. ஏற்கெனவே உயிருக்கு விலை இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கும் சமூகத்தில், இம்மாதிரி படங்களைத் தொடர்ந்து பார்க்கும்போது மக்கள் மனதில் ஒருவித மனோதத்துவ மரத்துப் போகும் தன்மை (psychological numbness) ஏற்படும். மனித உயிரின் விலை இன்னும் மலிவாகிப் போகும். செய்தியை மக்கள் தெரிந்து கொள்ள உதவுங்கள்; ஆனால் கோரமான படங்கள் எங்களுக்கு வேண்டாம்.

ஸ் பெ

unread,
Dec 26, 2013, 12:08:54 PM12/26/13
to panbudan

கனவுத் தமிழகம்-1

[இப்போது 2025-ஆம் ஆண்டு. நாம் கனவு கண்டது போல, தமிழகம் மக்களுக்கானதாக மாற்றப்பட்டிருக்கிறது. இங்கே பல்வேறு அமைப்புக்கள், ஏற்பாடுகள், செய்முறைகள், செயல்பாடுகள் முற்றிலுமாக மாற்றியமைக்கப் பட்டிருக்கின்றன. ஊழல்வாதிகள், கொள்ளைக்காரர்களுக்கு பதிலாக மக்கள், மக்களின் தேவைகள் முன்னிலைப்படுத்தப் படுகின்றன. இந்த கனவுத் தமிழகத்தில் வாழத் துவங்குவோம். 'எங்கோப் போகிறோம்' என்று இருட்டில் கிடந்து உழல்வதைவிட, 'எங்கேப் போகிறோம்' என்பது தெரிந்து அந்த மனக்கண் ஒளியுடன் பயணிப்பது சிறப்பல்லவா?]

2025. அனைத்து வட்டாட்சித் தலைநகர்களிலும் (Taluk Headquarters) “ஒருங்கிணைந்த அரசு அலுவலகம்” ஒன்று நவீன தகவல்-தொடர்பு, கணினி வசதிகளுடன் திறக்கப்பட்டிருக்கிறது. ‘யாரையாவது தெரியுமா,’ ‘எவ்வளவு காசு லஞ்சம் கொடுக்க வேண்டும்’ என்ற எந்தவிதமான கவலையோ, குழப்பமோ, பயமோ இன்றி மன நிம்மதியோடு, மனித கண்ணியத்தோடு அங்கேப் போகலாம். உள்ளே நுழைந்ததும் வரிசைச் சீட்டு (டோக்கன்) வழங்கும் இயந்திரத்திலிருந்து ஓர் எண்ணைப் பெற்றுக்கொண்டு காத்திருப்போம்.

நமது எண் அழைக்கப்பட்டதும், அழைக்கப்படும் சேவை முகப்புக்குப் (கவுண்டருக்கு) போவோம். சிறப்புப் பயிற்சி பெற்ற, துடிப்பான, இனிய இளைஞர் ஒருவர் இன்முகத்தோடுப் பேசுவார்:

“வணக்கம், அம்மா. உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்?”

“வணக்கம். எனதுப் பேரக் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வேண்டும்.”

“சரி. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தையும் சேர்த்துத் தாருங்கள். நூறு ரூபாய் கட்டணம் உண்டு.”
“நன்றி. கட்டணத்தை எந்த வங்கியில் கட்ட வேண்டும்? அல்லது கருவூலத்துக்குப் போய் செலான் (chalan) கட்ட வேண்டுமா?”

“அதெல்லாம் அந்தக் காலம், அம்மா. இப்போது நீங்கள் எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே பணமாகக் காட்டலாம். உடனே ரசீது தந்து விடுவோம். மக்களை அலைய விடக்கூடாது, அல்லல்படுத்தக் கூடாது என்று முறைகள் மாற்றப்பட்டுவிட்டன.”

“ஓ! அற்புதம். இதோ விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து விட்டேன். ஆவணங்களையும் தருகிறேன்.”

“ஒரு நிமிடம் காத்திருங்கள்.”

[திரும்பி வருகிறார்] “உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் நகல் எடுத்து கணினியில் ஏற்றிவிட்டேன். இது உங்கள் கட்டணத்துக்கான பற்றுச்சீட்டு.(ரசீது). சரியாக மூன்று நாள் கழித்து வந்து இதைக் காட்டி உங்கள் பேத்தியின் பிறப்பு சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை இன்று மாலையே வேண்டுமென்றால், அதிகமாக நூறு ரூபாய் கட்டிப் பெற்றுக்கொள்ளலாம். போய் வாருங்கள். வேறு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா நான்?

“மிகவும் நன்றி அம்மா. பெரிய உதவி செய்திருக்கிறீர்கள்.”

“ஒருங்கிணைந்த அரசு அலுவலகத்தில்” பிறப்புச் சான்றிதழ் முதல் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வரை எளிதாக, விரைவாக, பிக்கல் பிடுங்கலின்றி பெற்றுக் கொள்ள முடியும். அனைத்துத் துறை அலுவலகங்களையும் இந்த அலுவலகத்துடன் நேர்த்தியாக இணைத்து, ஆவணங்கள் உடனடியாக சரிபார்க்கப்படுகின்றன, தகவல்கள் திரட்டப்படுகின்றன, வேலை கச்சிதமாக முடிக்கப்படுகிறது. இங்கே லஞ்சம், ஊழல் கிடையாது. தள்ளி விடுவது, தாமதப்படுத்துவது, திட்டுவது, துன்புறுத்துவது, மன உளைச்சல் ஏற்படுத்துவது எதுவுமே கிடையாது. மக்களுக்காக நடத்தப்படும் அரசு என்பதால், மக்களின் மாண்பும், மனநலமும், கண்ணியமும் கண்ணெனப் போற்றப்படுகின்றன.[]

ஸ் பெ

unread,
Dec 26, 2013, 12:09:20 PM12/26/13
to panbudan

கனவுத் தமிழகம்-2

2025. மக்கள் நெருக்கமும், அடர்த்தியும் மிகுந்த நம் நாட்டில், இடநெருக்கடியும், நெரிசலும் நிறைந்த தெருக்களில், சாலைகளில் வாழ்க்கையை சிக்கல்களுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் அனைத்து தலைவர்கள் சிலைகளையும் அப்புறப்படுத்தி, மாவட்டத் தலைநகரங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறோம். கட்சிக் கொடிக்கம்பங்கள், நினைவுத் தூண்கள், அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. இந்த நாடு இனிமேல் மக்களுக்கான நாடு. கட்சிகளுக்கான, கட்சித்தலைவர்களுக்கான நாடல்ல.

ஸ் பெ

unread,
Dec 26, 2013, 12:09:44 PM12/26/13
to panbudan

கனவுத் தமிழகம்-3

2025. தமிழகத்தின் நெடுஞ்சாலைகள், நகர்ப்புறச் சாலைகள், முக்கியமான கிராமப்புறச் சாலைகள் எல்லாம் நில ஆய்வாளர்களால் அளக்கப்பட்டு, ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டுவிட்டன. ஆக்கிரமித்திருந்தவர் வசதியில்லாத ஏழையாக இருந்தால் மட்டும், அவருக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

சாலைகளின் இரு மருங்கிலும் குறைந்தபட்சம் ஐந்தடி அகலத்தில் நடைபாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதியவர்கள், குழந்தைகள் போன்றோர் பாதுகாப்பாக நடந்து செல்வதற்கும், மாற்றுத் திறனாளிகள் தங்கள் சிறப்பு வாகனங்களை ஓட்டிச் செல்வதற்கும் ஏதுவாக இவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

சாலைகளில் நெரிசலைத் தவிர்க்க ஆங்காங்கே மூவர்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கு வாகன நிறுத்துமிடங்கள், கிளைச் சாலைகள், பழுதுபார்க்குமிடங்கள், பயணிகள் ஓய்வுப் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் நினைத்த இடத்தில் வாகனங்களை நிறுத்திவைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி நிறுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சாலைப் போக்குவரத்தை கண்போல கண்காணிக்க சிறப்பு காவல்துறை அமைக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பயிற்சி, எட்டு மணி நேர வேலை நாள், அதிக ஊதியம், நேர்மை, கண்ணியம் போன்ற அம்சங்களோடு இளைஞர்கள் இந்தப் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். கோபதாபமின்றி, பாரபட்சமின்றி, நடுநிலை தவறாது தங்கள் கடமையை அவர்கள் செய்கிறார்கள். நவீன கருவிகள் வைத்திருக்கும் அவர்கள் உங்கள் ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு, காப்பீடு போன்ற தகவல்களை கண நேரத்தில் பெற்றுவிடுகிறார்கள். உங்கள் குற்றத்திற்கேற்ற தண்டனை சீட்டைத் தந்து, அதற்கேற்ற புள்ளிகளை உங்கள் ஓட்டுனர் உரிமத்தில் பதிவு செய்கிறார்கள். புள்ளிகள் அதிகமாகும்போது நீங்கள் செலுத்தவேண்டிய காப்பீட்டுத் தொகை அதிகமாகும். இந்த இளம் அதிகாரிகள் யாருக்கும் தயவு காட்டுவதில்லை. அவர்களிடம் லஞ்சம் கொடுக்க முயற்சித்தால், தண்டனை இன்னும் அதிகமாகும். ஓட்டுனர் உரிமம் நீக்கப்படும்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், உயிரிழப்பு நேர்ந்தால், அது கொலை வழக்காக பதிவு செய்யப்படுகிறது. கொலைக்குற்றத்துக்கான உச்சபட்ச தண்டனை நீதிமன்றத்தால் வழங்கப்படுகிறது.

ஸ் பெ

unread,
Dec 26, 2013, 12:10:12 PM12/26/13
to panbudan
கனவுத் தமிழகம்-4

[இப்போது 2025-ஆம் ஆண்டு. நாம் கனவு கண்டது போல, தமிழகம் மக்களுக்கானதாக மாற்றப்பட்டிருக்கிறது. இங்கே பல்வேறு அமைப்புக்கள், ஏற்பாடுகள், செய்முறைகள், செயல்பாடுகள் முற்றிலுமாக மாற்றியமைக்கப் பட்டிருக்கின்றன. ஊழல்வாதிகள், கொள்ளைக்காரர்களுக்கு பதிலாக மக்களும், மக்களின் இன்றியமையாத் தேவைகளும் முன்னிலைப்படுத்தப் படுகின்றன. இந்த கனவுத் தமிழகத்தில் வாழத் துவங்குவோம். 'எங்கோப் போகிறோம்' என்று இருட்டில் கிடந்து உழல்வதைவிட, 'எங்கேப் போகிறோம்' என்பது தெரிந்து அந்த மனக்கண் ஒளியுடன் பயணிப்பது சிறப்பல்லவா?]

தெருவெங்கும், சாலையெங்கும் நிறைந்திருந்த அரசு மற்றும் தனியார் மதுக்கடைகள் முற்றிலுமாக மூடப்பட்டுவிட்டன. பொது இடங்களில் மது அருந்துவது மிகவும் கண்டிப்பாக தடை செய்யப்பட்டிருக்கிறது. உணவகங்களிலோ, கடைகளிலோ, தனியார் பார்களிலோ மது விற்பது, குடிப்பது கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளச் சாராயம் காய்ச்சுவது, விற்பது கடுமையாகத் தண்டிக்கப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவோர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அதற்குரிய தண்டனை வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

(லாட்டரி சீட்டுக்கள் போல) வெளி மாநிலங்களிலிருந்தோ, வெளிநாடுகளிலிருந்தோ இரகசியமாக மதுவை வாங்கி வந்து, வெளியாருக்கு எந்தவிதத் தொந்திரவும் இல்லாமல் வீடுகளுக்குள் அமர்ந்து அமைதியாகக் குடிப்பவர்களை அரசு கண்டுகொள்ளாமல் விடும். ஆனால் வீட்டிலுள்ள பெண்கள், குழந்தைகள் உட்பட பிறருக்குத் தொந்திரவு செய்தாலோ, குடிப்பது பற்றிய புகார்கள் வந்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் குடி நோயிலிருந்து மீளும் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு கட்டணம் பெற்று சிகிச்சை அளிக்கப்படும். தொடர்ந்து குடி வழக்குகளில் சிக்குவோர் கட்டாய சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

ஸ் பெ

unread,
Dec 26, 2013, 12:10:57 PM12/26/13
to panbudan
கனவுத் தமிழகம்-5
இலவசம் இல்லை!

2025! தமிழர்களின் சுயமரியாதையை சிதறடிக்கும், சொந்தக் காலில் நிற்கும் தன்னம்பிக்கையை சீர்குலைக்கும், மக்களை உடல் வளைத்து, பல்லிளித்து, கையேந்தி நிற்க வைக்கும் இலவசத் திட்டங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. அவர்களின் வரிப் பணத்தை பயன்படுத்தியே அவர்களைப் பிச்சைக்காரர்கள் ஆக்குவது கூடாது என்று குடிமைச் சமூகத்திலும், அரசியல் சமூகத்திலும் விழிப்புணர்வு உருவாக்கப்பட்டுள்ளது. மதிய உணவு கொடுத்தால் குழந்தைகள் பள்ளிக்கு வருவார்கள் என்று பெருந்தலைவர் காமராசர் கொண்டு வந்தத் திட்டத்தை அப்படியே வைத்துக்கொண்டு, ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாமல், மதிய உணவோடு முட்டை தருகிறோம், முளைப்பயிறு தருகிறோம் என்று மக்களை ஏமாற்றுவது தவறு என்ற பொதுப்புத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. அரசு யாருக்கும் எதுவும் இலவசமாகக் கொடுப்பதில்லை இப்போது.

தமிழகத்தின் விவசாய-தொழில் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட்டு; சேவைத் துறை உள்ளிட்ட பல்வேறு வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டு; லஞ்சமும், ஊழலும், திருட்டும் ஒழிக்கப்பட்டு; ஒட்டுமொத்த பொருளாதாரமும் மேம்படுத்தப்பட்டு; மக்களின் வாங்கும் திறன் உயர்த்தப்பட்டு; ஆரோக்கியமான சமூக-பொருளாதார-அரசியல் சூழல் நிகழ்வதால் இலவசங்களுக்குத் தேவையில்லாமல் போய்விட்டது. சமூகத்தின் அடிமட்டத்தில் இன்னும் ஏழ்மையில், வறுமையில் உழலும் மக்களுக்கு இலவசமாக காசோ, பொருளோ கொடுக்காமல், பொதுச் சமூகத்துக்கு மிகவும் தேவைப்படும் சேவைத்துறைகளான தூய்மை, போக்குவரத்து, பாதுகாப்பு போன்றவற்றில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கி அவர்களின் கண்ணியமும், சார்பின்மையும் போற்றப்படுகின்றன. அவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு தொழிற்கல்வி வாய்ப்புக்களும், வேலைத் திட்டங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஸ் பெ

unread,
Dec 26, 2013, 12:11:31 PM12/26/13
to panbudan


கனவுத் தமிழகம் - 6
பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு

2025! அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், மருத்துவமனைகளிலும், கடைத்தெருக்களிலும், பிற நிறுவனங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு கண்ணியமானப் பணிச்சூழலும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்கான நடத்தை விதிமுறைகளும், புகார் தெரிவிக்கும் வழிமுறைகளும், விசாரணை செயல்முறைகளும் தெளிவாக வகுக்கப்பட்டு, எல்லா நிறுவனங்களிலும் புகார் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகளின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களிலும் இம்மாதிரி “பெண்கள் பாதுகாப்பு அதிகாரிகள்” விவரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வழக்குகள் விரைவாக, முறையாக, பெண்களின் மரியாதைக்கும், நல்வாழ்வுக்கும் குந்தகம் ஏற்படாத வகையில் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள்.

பாலியல் வன்கொடுமைகள் புரியும் மதகுருமார்களின் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர்களது அசையும், அசையா சொத்துக்கள் அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள். தண்டனைக் காலம் முடிந்தபிறகு, தங்களின் மத நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கவோ, நடத்தவோ அவர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படுவதில்லை.

அரைகுறை ஆடைகளுடனும், அனாவசியமான உடல் சேர்க்கைகளுடனும் தயாரிக்கப்படும் காட்சிகள் நிறைந்த திரைப்படங்கள், தொடர் நாடகங்கள், விளம்பரங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. வயது முதிர்ந்தோருக்கான ஆபாசப் படங்கள் கடைகளில் விற்பதற்கு, கைப்பேசிகளில் பரப்புவதற்கு, பொது இடங்களில் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் பலவந்தமாகச் சென்று காவல்துறை சோதனையிடாது என்றாலும், பிரச்சினை வீதிக்கு வந்தால், பிறருக்குத் துன்பம் விளைவிப்பதாக புகார் எழுந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சமூக விரோத திரைப்பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர்-நடிகைகளும் தமது வியாபார நோக்கத்திற்காக, பண வெறிக்காக பெண்களை, குழந்தைகளை அசிங்கமாக சித்தரிப்பதைத் தடுக்கும்பொருட்டு தரமிக்க, தற்சார்பு கொண்ட தணிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தணிக்கைக் குழுவின் பரிந்துரைகளை மீறுவோர் பாலியல் வழக்கில் கைது செய்யப்படுகிறார்கள். நாளிதழ்களிலும், பிற பத்திரிகைகளிலும் அருவருப்பான ஆபாசமான பெண்கள், ஆண்கள் படம் வெளியிடப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பேச்சு/எழுத்து/கருத்துச் சுதந்திரம் என்பது சமூகத்தின் நேர்பாதியான பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் அழித்துவிடக் கூடாது எனும் அரசியல் நிலை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலை கலாச்சார பாசிசமாக மாறிவிடக்கூடாது என்பதாலும், மக்களின் பாலியல் தெரிவு/சுதந்திரம் போற்றப்படவேண்டும் என்பதாலும், பரஸ்பர சம்மதத்தோடு நடக்கும் வயதுவந்தோர் பாலியல் உறவுகளில் அரசு தலையிடுவதில்லை. பிரச்சினைகள் எழுந்தால், புகார்கள் வந்தால், பாலியல் சட்டதிட்டங்கள்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உண்டுறை விடுதிகளில் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்துவதும், பெண்களை மட்டும் வழக்குகளில் சிக்கவைப்பதும், சீரழிப்பதும் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது. ஏதாவது ஆபத்தில் சிக்கி ஒரு பெண்ணோ, ஆணோ, அல்லது விடுதி உரிமையாளரோ புகார் செய்தாலொழிய, காவல்துறை தனிமனித சுதந்திரத்தில் தலையிட வேண்டியதில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாலியல் தொழில் புரிவோருக்கு சிறப்பு கேளிக்கைப் பகுதிகள் (Special Entertainment Zones) உருவாக்கப்பட்டு, அந்தத் தொழிலில் ஈடுபடுவோருக்கு அரசின் அடையாள அட்டையும், பாதுகாப்பும், இலவச மருத்துவ பரிசோதனையும், புனர்நிர்மாண வாய்ப்புக்களும் வழங்கப்படுகின்றன. முறைப்படுத்தப்படாது, ஆபத்தான வழிகளில் இந்தத் தொழில் நடத்தப்பட்டதால், அந்தப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முறைகேடுகளும், வழக்குகளும், லஞ்சமும், ஊழலும், நோய்களும் பரவின. முறைப்படுத்தப்பட்டு, பாதுகாப்போடு பாலியல் தொழில் நடக்கும்போது, பொது சமூகத்திலுள்ள பேராவல் கொண்ட ஆண்களுக்கு வடிகாலும், பெண்களுக்கு பாதுகாப்பும் கிடைக்கின்றன.

ஒட்டுமொத்த சமூகத்தின் ஒழுக்கத்துக்கும், கண்ணியத்துக்கும் வழிவகை செய்ய பள்ளிகளில், கல்லூரிகளில், பணியிடங்களில் பாலியல் கல்வி (Sex Education), அறநெறிக் கல்வி (Moral Education) போன்றவை கற்பிக்கப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன. பொது வாழ்க்கைக்கு வரும் மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், கலாச்சாரத் தலைவர்கள் போன்றோர் தனிமனித ஒழுக்கத்துடன், உயரிய கோட்பாடுகளுடன் வாழ எதிர்பார்க்கப்படுகின்றனர். தவறுவோர் தண்டிக்கப்பட்டு, ஒட்டுமொத்த சமுதாயத்தாலும் புறக்கணிக்கப்படுகின்றனர். இம்மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளாலும், முன்னேற்பாடுகளாலும், குழந்தைகள் பாலியல் கொடுமை, இளைஞர்களின் கூடாநட்பு, பதின்பருவ கர்ப்பம், ஒருதலைக் காதல், ஆசிட் வீச்சு, அழித்தொழித்தல், கள்ள உறவு போன்ற சமூகப் பிரச்சினைகள் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் சொன்ன, “Morality cannot be legislated but behavior can be regulated” (ஒழுக்கம் சட்டமாக்கப்பட முடியாது, ஆனால் நடத்தை ஒழுங்குபடுத்தப்பட முடியும்) எனும் கருத்தே தாரக மந்திரமாக போற்றப்படுகிறது.

சுப.உதயகுமாரன்
இடிந்தகரை
டிசம்பர் 20, 2013

ஸ் பெ

unread,
Dec 26, 2013, 12:12:13 PM12/26/13
to panbudan
கனவுத் தமிழகம் – 7
மாசற்றச் சூழல்

2025! தமிழகம் முழுவதுமுள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பிற வழிபாட்டுத்தலங்கள் அனைத்திலும் ஊருக்கேக் கேட்கும்படி சத்தமாக பாடல்களை, பிரார்த்தனைகளை ஒலிபரப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. அதே போல தனியார் இல்ல நிகழ்வுகளிலும், பொதுப் பண்டிகைக் கொண்டாட்டங்களிலும் சத்தமாக பாடல்கள் ஒலிபரப்பக்கூடாது என்கிற விதி கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. நோயாளிகள், முதியவர்கள்,குழந்தைகள் என உடல் வலிமையற்றோரை ஆழமாக பாதிக்கும் ஒலிமாசு (Noise Pollution) ஒரு மிகப் பெரும் தனிமனித உரிமை மீறல் என்று கொள்ளப்படுகிறது. கூம்பு வடிவக் குழாய் கொலைக் கருவி என்று கருதப்படுகிறது. பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் பாடல்கள் ஒலிபரப்புவது, திரைப்படங்கள் காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. விரும்புவோருக்கு உரிய தலை ஒலிப்பான்கள் (headsets) கொடுத்து, சத்தம் விரும்பாதவர் அமைதியாகப் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கு ஒலிமாசு ஏற்படாத விதத்தில், ஒவ்வொரு மாநகராட்சியும், நகராட்சியும், ஊராட்சியும் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் நடத்துவதற்கென ஊருக்கு வெளியே ஒரு சில இடங்களைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்றன. முன்பதிவு செய்து, உரிய கட்டணத்தைக் கட்டிவிட்டு, அந்த இடங்களில் கூட்டங்கள், கச்சேரிகள், சிறப்புப் பிரார்த்தனைகள் போன்ற நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கப்படுகிறது.

ஒலிமாசு போலவே ஒளிமாசும் (Brightness Pollution) கட்டுப்படுத்தப்படுகிறது. இரவு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, பிரம்மாண்டமான ஒளிவிளக்குகளை, அலங்கார விளக்குகளை ஒளிர விடுவது பொதுமக்களின் ஓய்வுக்கும் உறக்கத்துக்கும் இடையூறாகக் கருதப்பட்டு தடை செய்யப்பட்டிருக்கிறது. நகரங்களிலோ, கிராமப் புறங்களிலோ எங்கும் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது, விளம்பரங்கள் எழுதக் கூடாது என்று விழி மாசுச் (Visual Pollution) சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாநகராட்சியும், நகராட்சியும், ஊராட்சியும் அதற்கென வரையறுத்திருக்கும் இடங்களில், சுவர்களில் மட்டுமே உரிய கட்டணம் கட்டிவிட்டு சுவரொட்டிகள் ஒட்ட முடியும், விளம்பரங்கள் எழுத முடியும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மீறுவோர் மீது அபராதமும், சிறைவாசமும் சுமத்தப்படுகின்றன.

பொது இடங்களைக் கழிப்பறையாக பயன்படுத்துவது, வீட்டுக் குப்பைகளை பொதுவெளியில் கொட்டுவது, சாக்கடைகளை பராமரிக்காமல் விடுவது, இன்னபிற வழிகளில் துர்நாற்றம் எழச் செய்வது நாற்ற மாசு (Odor Pollution) ஏற்படுத்தும் குற்றமாகவும், கண்ணியமற்ற செயலாகவும் பார்க்கப்பட்டு உரிய தண்டனை விதிக்கப்படுகிறது.

கழிவு மாசும் (Waste Pollution) கண்டிப்புடன் கையாளப்படுகிறது. அணுமின் நிலையங்கள் போன்றவற்றிலிருந்து வெளிவரும் கழிவுகளைக் கையாளும் திறன் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கே இல்லாததால், அவை உருவாகாமலேப் பார்த்துக் கொள்ளப்படுகிறது. அதேபோல நெகிழிப் பைகள் உற்பத்தி முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. உணவகங்களிலிருந்து, மருத்துவமனைகளிலிருந்து, தொழிற்சாலைகளிலிருந்து, இதுபோன்ற தொழில் நிறுவனங்களிலிருந்து வெளியாகும் கழிவுகளைக் குறைப்பதற்கும், அவற்றை முறையாக மேலாண்மை செய்வதற்கும் பாதுகாப்பான, நேர்மையான, கடுமையான வழிகள் தேர்வுசெய்யப்பட்டு, மிகவும் கண்டிப்புடன் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (Pollution Control Board) காசுக்கட்டுப்பாட்டு வாரியமாக செயல்படாது, உண்மையிலேயே மக்கள் நலன், இயற்கை நலன் காக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமாக இயங்குகிறது.

ஒலிமாசு, விழிமாசு, நாற்ற மாசு, கழிவு மாசு போன்றவை ஏற்படாமல் சமூகத்தைத் தூய்மையானதாக, உயர்வானதாகப் பாதுகாப்பது, பராமரிப்பது பற்றி பள்ளிகளில், கல்லூரிகளில், பணியிடங்களில், ஒட்டுமொத்த சமூகத்தில் அறிவுறுத்தப்படுகிறது.


சுப.உதயகுமாரன்
இடிந்தகரை
டிசம்பர் 21, 2013

ஸ் பெ

unread,
Dec 26, 2013, 12:12:46 PM12/26/13
to panbudan
கனவுத் தமிழகம் – 8
காவல் துறை

2025! ஆட்சி அதிகாரத்திலுள்ளோரின் “ஏவல் துறையாக” அன்றி, பணமும் புகழும் உடையோரின் பக்கம் தாவும் “தாவல் துறையாக” அன்றி, பொய்யும் புளுகும் எழுதும் “நாவல் துறையாக” அன்றி, மக்களை, சமூக அமைதியை, நீதியைக் காக்கும் உண்மையான “காவல் துறையாக” செயல்படுகிறது.

நீதி மன்றங்களோடும், சிறைத் துறையோடும் காவல் துறைக்குள்ள தொடர்புகள் புனரமைக்கப்பட்டு, இவை மூன்றின் செயல்பாடுகளும் நெறிமுறைப்படுத்தப்பட்டுள்ளன. காவல் துறையில் வந்தபின் காப்பது மட்டுமின்றி, வருமுன்னர்க் காப்பதும் வலியுறுத்தப்படுகிறது. சட்டம்—ஒழுங்கைக் (Law and Order) காப்பது என்ற கோணத்திலிருந்து செயல்பட்டுவந்த காவல் துறை, இப்போது மக்கள்—கண்ணியத்தைப் (People and Dignity) போற்றுவது என்றப் பார்வையோடு செயல்படுகிறது. 

தன்னையே மதித்து நடக்கும், தனது கண்ணியத்துக்கும் கவுரவத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும், தனது கடமையை உணர்ந்து பணியாற்றும் இளம் அதிகாரிகளால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருக்கிறது காவல் துறை. தங்கள் தேவைகளை, உரிமைகளை சங்கம் அமைத்துக் கேட்டுப் பெறுவதற்கான அதிகாரம் பிற அரசு ஊழியர்களைப் போல இவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

உயிரைப் பணயம் வைத்து வேலைப் பார்க்கும் துறை என்பதாலும், யாரிடமும் எந்தப் பண உதவியும் இவர்கள் எதிர்பார்க்கக்கூடாது என்பதாலும், கை நிறையச் சம்பளமும், பிற ஊக்கங்களும் கொடுக்கப்படுகின்றன. மன அழுத்தம் ஏற்படுத்தும் வேலை என்பதால், எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்பது உறுதியாக அமுல்படுத்தப்படுகிறது. காலை, மாலை, இரவு நேர வேலை என்று எட்டு மணி நேரம் கொண்ட மூன்று பிரிவாக வேலைநாள் பிரிக்கப்பட்டு, காவலர்கள் வேலை செய்கின்றனர்.

இவர்கள் நிறைவாக, திறமையாக வேலை செய்வதற்கு மகிழ்வான குடும்பம் முக்கியம் என்பதால், குடும்பத்தினரோடுத் தங்கியிருக்க காவல் துறை அதிகாரிகள் ஊக்குவிக்கப் படுகின்றனர். அதற்கு வேண்டிய உதவிகளும் செய்யப்படுகின்றன. அவர்கள் வருடத்துக்கொரு முறை குடும்பத்தோடு சுற்றுலா சென்றுவர உதவிகள் செய்யப்படுகின்றன.

காவல் துறை அதிகாரிகளின் வேலையை, வாழ்க்கையை எளிதாக்கும் பேச்சுக்கள் மற்றும் காட்சிகள் போன்றவற்றை பதிவு செய்யும் கருவிகளும், நவீன தகவல்தொடர்பு சாதனங்களும், கணினி போன்ற உபகரணங்களும், போதுமான நான்கு சக்கர வாகனங்களும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன. அனைத்து காவல் துறை அதிகாரிகளும் வாகனங்கள் ஓட்டுகின்றனர், கணினியை இயக்குகின்றனர், நவீன உபகரணங்களைக் கையாளுகின்றனர்.

காவல் நிலையங்களிலெல்லாம் நூலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. காவலர்களுக்கு சட்டக் கல்வி, தகராறு தீர்க்கும் (Conflict Resolution) பயிற்சி, குற்றவியல் நடப்புக்கள், மனஅழுத்தம் நீக்கும் (Stress Relief) பயிற்சிகள், ஆற்றுப்படுத்துதல் (Counseling), கோப மேலாண்மை (Anger Management) போன்ற பயிற்சிகள் அவ்வப்போது வழங்கப்படுகின்றன. 

மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகளின் எடுபிடியாக இந்தத் துறை செயல்படக்கூடாது என்பதால், தன்னாட்சி உரிமையோடு, சுதந்திரமாக இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அரசியல் கட்சி பிரமுகர்களோ, சமூக அந்தஸ்து கொண்டவர்களோ காவல் துறை செயல்பாட்டில் தலையிட அனுமதிக்கப்படுவதில்லை. 

காவல் துறை அதிகாரிகள் கண்டவனிடமெல்லாம் கையேந்தி நிற்பவராக அன்றி, காக்கிச்சட்டைப் போட்ட அராஜகவாதியாக அன்றி, கண்டிப்பும் பாசமும் கொண்ட ஓர் அப்பாவைப் போன்று செயல்படுகிறார். மக்களிடம் அளவுக்கதிகமாக நெருங்கிப் பழகும் பால்ய நண்பன் போன்றில்லாமலும், அன்பேதுமின்றி அரக்கத்தனத்தோடு விலகி நிற்கும் தொடர்பற்றவன் போலில்லாமலும் “அகலாது அணுகாது தீக்காய்வார் போல்” பணி செய்கின்றனர் காவல் துறை அதிகாரிகள்.

காவல் துறை அதிகாரிகள் மக்களை மக்களாக மதிக்கவும், நடத்தவும் பணிக்கப்பட்டிருக்கிறார்கள். நல்லவர்களை நியாயமாகவும், மோசமானவர்களை மனித உரிமை மீறலின்றி நடத்தவும் பணிக்கப்பட்டிருக்கிறார்கள். காவல் துறை அதிகாரிகள் பண்பான மொழி பேசவும், ஒழுக்கமான நடத்தை கொண்டிருக்கவும், நியாயமாக நடந்து கொள்ளவும் பணிக்கப்பட்டிருக்கிறார்கள். சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. தவறு செய்யும் அதிகாரிகள் மீது புகார் தெரிவிக்கவும், விசாரணை நடத்தவும், விரைவாக தண்டிக்கவும் நேர்மையான சிறந்த வழி வகைகள் செய்யப்பட்டிருக்கின்றன.


சுப.உதயகுமாரன்
இடிந்தகரை
டிசம்பர் 24, 2013

ஸ் பெ

unread,
Dec 26, 2013, 12:13:20 PM12/26/13
to panbudan

கனவுத் தமிழகம் – 9
மருத்துவத் துறை

2025! நாடெங்கும் உள்ள அரசு மருத்துவ மனைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றன. அங்கேப் பணிபுரியும் மருத்துவர், தாதியர் போன்ற ஊழியர்களோடு புதிய பணி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவ மனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவமனை நடத்தவோ, அல்லது கட்டண மருத்துவச் சேவை செய்யவோக் கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. அரசு மருத்துவ மனை மருந்துகளை, உபகரணங்களை தவறாக பயன்படுத்துவது பெரும் குற்றமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தனியார் மருத்துவ மனைகள் நடத்துபவர்கள் முறையான அரசு அனுமதிகள் வாங்கியிருக்க வேண்டும். அடிப்படை உபகரணங்களோ, பரிசோதனை வசதிகளோ எதுவுமின்றி, பெட்டிக் கடைகளில் எல்லாம் மருத்துவ மனைகள், ஆலோசனை மையங்கள் நடத்துவதை அரசு அனுமதிப்பதில்லை. ஓர் ஆசிரியர் தனியாக ‘டியூஷன்’ வகுப்பு நடத்துவது போல, அடிப்படை வசதிகளற்ற தனியார் மருத்துவ ஆலோசனை மையத்தை எடுத்துக் கொள்ள முடியாது; மக்களின் உயிர்கள் மீது விசப்பரீட்சை நடத்துவதை அனுமதிக்க முடியாது.

தவறான, முறைகேடான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நுகர்வோர் நீதிமன்றங்கள் வழியாக வழக்குத் தொடர்ந்தால், அதை எதிர்கொள்ளும் வகையில் தனியார் மருத்துவர்கள் முறையான காப்பீடு செய்திருக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. அதே போல, அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் அண்மைக்கால மருத்துவத் துறை முன்னேற்றங்களை, நுணுக்கங்களை, மருந்துகளை, சிகிச்சைகளைத் தெரிந்து கொள்ளும் விதத்தில் மருத்துவத் துறை ஆண்டு தோறும் கட்டாய சிறப்புப் பயிற்சிகளையும், தேர்வுகளையும் நடத்துகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் இவற்றை முறையாகத் தேர்ந்து, தங்களின் உரிமங்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள வேண்டப்படுகிறார்கள்.

நோயின் தன்மை, நோய் வராமல்/பரவாமல்/பெரிதாகாமல் தடுப்பது பற்றியெல்லாம் மருத்துவர்கள் பேச வேண்டும் என்று பணிக்கப்படுகிறார்கள். மருத்துவர்கள் நோயாளிகளிடம் நோய் மற்றும் சிகிச்சை பற்றிய முழுத் தகவல்களைச் சொல்லி, அவர்களின் முழு சம்மதத்துடன் மட்டுமே சிகிச்சை கொடுக்க வேண்டும். அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் முறைப்படி ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று கோரப்படுகிறது. நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்குகள் வரும்போது, அவற்றை சமாளிக்க இந்த ஆவணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அரசின் அங்கீகாரம் பெறாத புதிய மருந்துகளை வெறும் லாப நோக்கோடு கமிஷனுக்காக மருத்துவர்கள் நோயாளிகளை உட்கொள்ளச் செய்வது கொலைக் குற்றமாகக் கருதப்படுகிறது. நோயாளிகளின் அனுமதியின்றி அவர்களுக்கு ஆபத்தான மருந்துகளைக் கொடுப்பதும், பரிசோதனை செய்யாமல் ஆபத்தான ஊசி மருந்துகளைப் போடுவதும் கொலைக் குற்றமாகக் கருதப்படுகிறது. மருந்துக் கடைகளோடும், பரிசோதனை நிலையங்களோடும் தொடர்பு வைத்துக் கொண்டு, கமிஷனுக்காக தேவையற்ற சிகிச்சைக் கொடுப்பது பெரும் குற்றமாகக் கொள்ளப்படுகிறது. 

கண் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதா போன்ற மாற்று மருத்துவர்கள், பிசியோ தெரபிஸ்ட் உள்ளிட்ட அனைவரும் மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். போலி மருத்துவர்கள் கொலைகாரர்களாகக் கருதப்பட்டு, மிகக் கடுமையாக ஒடுக்கப்படுகின்றனர்.

மருந்துக் கடைகளுக்கும், பரிசோதனை நிலையங்களுக்கும் கடுமையான தரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதி பெறாத மருந்துகள், இருந்தாலோ, விற்றாலோ கொலைக் குற்றம் சுமத்தப்படுகிறது. மருத்துவரின் சீட்டு இன்றி மருந்து விற்பது, மருந்தக ஊழியர்களே சிகிச்சையும், மருந்தும் கொடுப்பது பெரும் குற்றங்களாகக் கொள்ளப்படுகின்றன. அதுபோல கண் கண்ணாடிக் கடைகளில், கல்வித் தகுதியற்றவர்கள் கண் பரிசோதனை செய்யக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது.


சுப.உதயகுமாரன்
இடிந்தகரை
டிசம்பர் 26, 2013

ஸ் பெ

unread,
Dec 26, 2013, 12:13:50 PM12/26/13
to panbudan

கனவுத் தமிழகம் – 10
பொதுச் சுகாதாரம்

2025! ஊராட்சிகளும், நகராட்சிகளும், மாநகராட்சிகளும் ஆங்காங்கே கழிப்பறைகள் கட்டி உன்னதமாக நிர்வகிக்கின்றன. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும், பேருந்து நிலையம், பேரங்காடி போன்ற பொது நிறுவனங்களும் பாதுகாப்பான, சுத்தமான, தரமிக்கக் கழிப்பறைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகின்றன. வீட்டிலிருந்து வெளியே செல்லும் பெண்கள் திரும்ப வீட்டுக்கு வந்த பின்னர்தான் கழிப்பறையை பயன்படுத்த இயலும் என்ற நிலை முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது.

போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, போதுமான நவீன உலர் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு, திறந்தவெளியில் மலங்கழிப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் மக்களின் கண்ணியம் காக்கப்பட்டு, பொதுச் சுகாதாரமும் உடல்நலமும் பேணப்படுகின்றன. தொடர்வண்டிகளிலும் (ரயில்களிலும்) கழிப்பறைகள் நவீன மயமாக்கப்பட்டு, தண்டவாளங்களும், தொடர்வண்டி நிலையங்களும் சுகாதாரமானவையாக இருக்கின்றன. 

வீடுகளிலிருந்தும், தொழிற்பேட்டைகளிலிருந்தும் வெளிவரும் மக்கும் மற்றும் மக்காத கழிவுகளைத் தனித்தனியாக ஊராட்சிகளும், நகராட்சிகளும், மாநகராட்சிகளும் வாரம்தோறும் சேகரித்து, மறு சுழற்சி செய்கின்றன, அல்லது மாசற்ற வழிகளில் அழிக்கின்றன.

ஊராட்சிகளும், நகராட்சிகளும், மாநகராட்சிகளும் கழிவு நீர் மேலாண்மையில் திறம்படச் செயல்படுகின்றன. ஒரு வலைப்பின்னல் போல சாக்கடைகள் அனைத்தும் இணைக்கப்பட்டு, கழிவு நீர் மொத்தமாக சேகரிக்கப்பட்டு, சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்தமாக்கப்பட்டு, விவசாயத்திலும், பொது கழிப்பறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவமனை மற்றும் பல்வகை ஆலைக் கழிவு நீர் பாதுகாப்பாக கொட்டப்படுகின்றன.

மழை நீர் ஒரு சொட்டுக்கூட வீணாகாத வகையில் பொதுமக்களாலும், பொதுத் துறைகளாலும், உள்ளாட்சி அமைப்புக்களாலும் சேகரிக்கப்படுகிறது. குளங்கள், ஆறுகள், குடிநீர்த் தேக்கங்கள் போன்றவற்றின் தண்ணீர் மாதிரிகள் அவ்வப்போது எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன; பொதுச் சுகாதாரத்துக்கு பங்கம் விளைவிக்கும் தகவல்கள் உடனுக்குடன் மக்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றன.

மாடுகள், பன்றிகள் போன்ற கால்நடைகள் பொது இடங்களில், சாலைகளில் வளர்க்கப்பட்டாலோ, அலைந்து திரிந்தாலோ அவை உடனே பிடிக்கப்பட்டு ஏலத்தில் விற்கப்படுகின்றன. கழிப்பறை மற்றும் சாக்கடை சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

நெகிழிப் பைகள் மற்றும் பாட்டில்கள், பொருட்களைப் பொதிந்திருக்கும் மக்காத உறைகள் போன்றவை உற்பத்தி செய்வது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. பால், பழரசம், தண்ணீர் போன்றவை காகிதப் பைகளில் விற்கப்படுகின்றன. கடைகளில் காகிதப் பைகளும், சணல் மற்றும் துணிப்பைகளும் பயன்படுத்தப்படுகின்றன. 

அரசு மருத்துவ மனைகளிலும், சுகாதார நிலையங்களிலும் பல்வேறு நோய்கள் பற்றிய துண்டறிக்கைகள், தகவல் அட்டைகள் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.

திடக்கழிவு மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, பொதுச் சுகாதாரம், நோய் தடுப்பு போன்றவை பற்றிய அறிவு மற்றும் தகவல்கள் பள்ளிகளில், கல்லூரிகளில், பணியிடங்களில் தரப்படுகின்றன. 


சுப.உதயகுமாரன்
இடிந்தகரை
டிசம்பர் 26, 2013

ஸ் பெ

unread,
Dec 28, 2013, 8:58:52 PM12/28/13
to panbudan
கனவுத் தமிழகம் – 11
மன நலம்

2025! அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் தகுதிவாய்ந்த மனநல மருத்துவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். மனநல மருத்துவர்களை சந்திப்பது, பேசுவது, அறிவுரைகள் கேட்பது, ஆற்றுப்படுத்திக் கொள்வது தவறானதோ, கேவலமானதோ அல்ல எனும் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மனநல மருத்துவம் தெரிந்த சமூக சேவகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறது. இதனால் தேர்வு பயம், பருவமடையும் பெண் குழந்தைகளின் பிரச்சினைகள், ஆண் குழந்தைகளின் மனக் குழப்பங்கள், காதல் பிரச்சினைகள், தகராறுகள் போன்றவை திறமையாக நிர்வகிக்கப்பட்டு, இளைஞர்களின் மன உளைச்சல், தற்கொலைகள், கொலைகள் போன்றவை மிக மிக அரிதாக்கப்பட்டுவிட்டன.

ஓட்டுனர்கள், காவல் துறையினர் என பல்வேறு துறையினர் அவ்வப்போது மனநல அறிவுரைகள், உதவிகள் பெற்றுக்கொள்ள துறை ரீதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மன அமைதி மற்றும் ஒருமைப்பாடு போற்றும் யோகா, டாய் சீ, கராத்தே, குங்ஃபூ, தியானம், மூச்சுப் பயிற்சிகள் போன்றவை கல்வி நிலையங்களில், பணியிடங்களில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

திருமணம் செய்து கொள்வோர், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர், பணி ஓய்வு பெறுவோர், குடும்ப உறுப்பினர்களை இழந்து/பிரிந்து துன்புறுவோர், வாழ்க்கைத் துணையை இழந்து அவதியுறுவோர், ஆதரவற்றோர் எனப் பல்வேறு தரப்பு மக்களின் பல்வேறு வாழ்க்கைச் சூழலுக்குத் தேவையான அறிவுரைகள், வழிமுறைகள் சொல்லும் அரசின் உரிமம் பெற்ற சமூக சேவகர்கள் ஆங்காங்கே கட்டணச் சேவை செய்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகளிலும் இந்தச் சேவை இலவசமாக அளிக்கப்படுகிறது. சமூக நலத்துறை ஊழியர்கள் தேர்ந்த கிராமப்புற ஆண்களுக்கும், பெண்களுக்கும் பயிற்சி அளிக்கின்றனர். சமூக ஆதரவளிக்கும் பாரம்பரிய உறவுகள், நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் உயிரூட்டப்படுகின்றன.

கல்வித் தகுதியோ, திறமையோ, அனுபவமோ, உண்மையோ எதுவுமின்றி மனநலச் சேவைகளை சமூகத்தில் செய்து வந்த போலி மருத்துவர்கள், போலி வழக்கறிஞர்கள், போலி ஆன்மீகவாதிகள், கள்ளச் சாமியார்கள், ஜோதிடர்கள், பணம் பறிக்கும் பல்வேறு யோக/சிகிச்சை மையங்கள் கடுமையான நடவடிக்கைகளால் அடக்கி ஒடுக்கப்பட்டுவிட்டனர். உடல் நலத்தையும், ஆன்ம நலத்தையும் போன்று மக்களின் மனநலமும் முக்கியமானதாகப் போற்றப்படுகிறது.


சுப.உதயகுமாரன்
இடிந்தகரை
டிசம்பர் 28, 2013

ஸ் பெ

unread,
Dec 29, 2013, 3:56:37 AM12/29/13
to panbudan
December 29, 2013

S. P. Udayakumar
Parish Priest’s Bungalow
Idinthakarai 627 104
Tamil Nadu

Mr. Arvind Kejriwal
Chief Minister of Delhi
New Delhi
(Through Senior Advocate Mr. Prashanth Bhushan)

Dear Arvindji:

Congratulations on your assuming charge as the Chief Minister of Delhi. This is a landmark political event of our times. Your victory has made the entire country feel hopeful about our politics and futures. Your win has kindled a new political energy all over the country. In a country where mostly unfavorable and undesirable elements run around as “leaders” and “ministers,” we are happy to have you and your team as a fresh breath of our political life. We wish you all the very best.

Please consider the following to enhance transparency, accountability and popular participation in your administration:

[1] Please tell the people of Delhi that you are their servant and as such they should call you by name or with the suffix ‘ji’ and definitely not as “Honorable Chief Minister” and other such alienating salutations.

[2] Please don’t let the people make a messiah out of you, touch your feet and seek your blessings etc. As a man of principle, I know, you will let our people respect and cherish their own dignity.

[3] Please talk to the people of Delhi over TV and radio at least for 10 minutes every Sunday and tell them what you had done over the past 7 days and what you plan to do in the next 7 days. That will keep the people abreast of recent developments and they will certainly appreciate being informed of all your activities and actions.

[4] Please meet the press at least once a month and answer their questions openly and honestly. Both the media, one of the pillars of democracy, and the people themselves would appreciate hearing your heart on various issues of public interest.

[5] When you are about to take an important decision on a policy matter or a development project, please write a column in the newspapers and magazines and explain why you take that decision and how the ordinary people of your state would benefit from that decision. And do invite people’s feedback, comments and even criticism. Such an open debate and honest consideration of people’s thoughts and feelings will add to the credibility of your government.

[6] Please have your office staff read all the newspapers and magazines and collect all the “letters to the editor,” op-ed pieces and editorials and send them to the relevant departments and concerned officials for immediate attention and/or follow-up action. This practice has died down in the recent times and must be retrieved.

[7] Please abolish the “Constituency Development Fund” that is being allotted to the MLAs if such a practice exists in the Delhi government. This Fund is another source of corruption and malpractices.

[8] Turning to a more specific problem, please take efforts to ban unauthorized and unwanted men sitting next to the conductor and/or driver in the Delhi public buses as they often happen to be hassles and threats for the passengers and their safe journey.

[9] Though I appreciate your efforts to help the autorickshaw drivers of Delhi, please do a criminal profiling of all the taxi and autorickshaw drivers of Delhi to enhance public safety and help the drivers to cope with job-related stress and ‘road rage’ etc.

[10] And finally, here is something you already know and cherish: “I will give you a Talisman. Whenever you are in doubt, or when the self becomes too much with you, apply the following test: Recall the face of the poorest and the weakest man whom you may have seen and ask yourself if the step you contemplate is going to be of any use to him. Will he gain anything by it? Will it restore him to a control over his own life and destiny? In other words, will it lead to Swaraj? For the hungry and spiritually starving millions? Then you will find your doubts, and your self melting away.”

Wishing you and your team all the very best, I send you my best personal regards and all peaceful wishes.

Cordially,

S. P. Udayakumar.

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
Dec 29, 2013, 9:21:31 AM12/29/13
to panb...@googlegroups.com

இது புதுவையில் நூறு சதவீதம் நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டதுது.  விண்ணப்பம் கொடுத்து ₹5 கட்டணம் செலுத்தினால் பெரும்பான்மையான இடங்களில் உடனே பிறப்பு ,இறப்பு சான்றிதழ் கொடுத்து விடுவார்கள். சில இடங்களில் அதிகபட்சமாக இரண்டு நாள் ஆகலாம்.

தவிர இப்போது அங்கீகரிக்கப்பட்ட சேவை மைய ங்கள் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் அதில் நாம் விரும்பிய நேரத்தில் இவை பெற்றுக்கொள்ளும் வசதி வெகு விரைவில் வரவிருக்கிறது.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

ஸ் பெ

unread,
Jan 9, 2014, 1:26:24 PM1/9/14
to panbudan
இடிந்தகரைக் கடிதம் – 1/2014 போராட்டத்தின் அடுத்தக் கட்டம் அரசியலா? வணக்கம். தரமற்ற உபகரணங்களுடனும், பல்வேறுக் குளறுபடிகளுடனும் கட்டப்பட்டிருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக துவக்கக் காலத்திலிருந்தேப் போராடி வருகிறோம். கடந்த 2011 செப்டெம்பர் முதல், இன்றோடு 878 நாட்களாக, ஓர் உச்சகட்ட போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். மக்களுக்கான வெற்றி ஒன்றைத் தவிர வேறு எந்த குறிக்கோள்களும், எதிர்பார்ப்புக்களும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரான எனக்கோ, அல்லது குழு நண்பர்களுக்கோ இருந்ததில்லை. பதவிகளையோ, பட்டங்களையோ, பணத்தையோ, பரிசுகளையோ எதிர்பார்த்து நாங்கள் இங்கே இடிந்தகரைக்கு வரவில்லை. சுமார் இரண்டரை ஆண்டுகளாக மனைவியின் அரவணைப்பின்றி, குழந்தைகளின் குதூகலமின்றி, பெற்றோரின் பாசமின்றி, நாங்கள் வசித்திருந்த வீடுகளின் சுகங்களின்றி பரிதவித்துக் கொண்டிருக்கிறோம். தேசத் துரோகிகள், அமெரிக்கக் கைக்கூலிகள், தீவிரவாதிகள், கோடி கோடியாக பணம் பெறுகிறவர்கள் என்றெல்லாம் பல்வேறு அவதூறுகளை, கடுகளவும் உண்மையற்றக் குற்றச்சாட்டுக்களை சுமந்து கொண்டிருக்கிறோம். வாழ்வில் இழந்தவற்றை திரும்பப் பெறுவதே கேள்விக்குள்ளாகி இருக்கும் நிலையில், எங்கள் மீது 360க்கும் அதிகமான கொடும் வழக்குகளை பொய்யாக சுமத்தி, எங்களைக் கைது செய்து, சிறையில் அடைக்க செல்வி. ஜெயலலிதா அவர்களின் அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. இந்திய மக்களுக்கு எந்தத் தகவலும் கொடுக்காது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையூட்டுக் கொடுத்து, அமெரிக்கர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் ஒருதலைப்பட்சமான இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை கொல்லைப்புறம் வழியாகக் கொண்டுவந்தார் மன்மோகன் சிங். அதுதான் தனது பத்தாண்டு கால ஆட்சியின் மகத்தான சாதனை என்று சொல்லும் பிரதமர் எங்களை அமெரிக்கக் கைக்கூலி என்று குற்றம் சுமத்துகிறார். நானோ, நண்பர்களோ அரசியலில் குதிப்பதற்காக இங்கே வரவில்லை. பிறர் மீது ஆளுமை செலுத்தித்தான் என்னைப் பற்றி நன்றாக உணர முடியும் என்று நினைக்கிறவனல்ல நான். பெண்களை சதைப் பிண்டங்களாக பார்க்கிறவனல்ல. பணத்தைப் பொறுத்தவரை, “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்று நினைக்கிறவன். மண் சொத்தைவிட மனிதச் சொத்தேப் பெரிதானது என்று வாழ்கிறவன். எனவேதான் எனக்கு சாதியும், மதமும், ஊரும், தொழிலும் ஒரு பொருட்டாக இருக்கவேயில்லை. “இந்தி ஒழிக, தமிழ் வாழ்க” எனும் கதவொட்டிகளை ஒட்டித் திரிந்த குழந்தைப் பருவம் முதல் பொது வாழ்வில் ஈடுபாடு இருந்தாலும், இப்போதிருப்பது போன்று குடும்பத்தையே விட்டுவிட்டு, 24 மணி நேரமும் சந்திப்புக்களும், கூட்டங்களும், நெருக்கடியும், மன அழுத்தமுமாக வாழ விரும்பியதில்லை. இந்த வாழ்க்கை முறையை சாவது வரை ஏற்றுக் கொள், சம்பளமாக நிறைய அவதூறுகளும், அசிங்கங்களும், அருவருப்புக்களும், அடக்குமுறைகளும் அள்ளித் தருவோம் என்று பலர் வலியுறுத்தும்போது, திகைத்து நிற்கிறேன். பகட்டுக்களும், படாடோபங்களும், அதிரடிகளும், ஆரவாரங்களும் பிடிக்காத நான் இவை மட்டுமே நிரம்பியிருக்கும் அரசியல் களத்தில் எப்படி தாக்குப் பிடிப்பேன் என்று சிந்திக்கிறேன். சிறு தகுதிகளும், திறமைகளும் மட்டுமே கொண்ட என்னை, தேவதூதனாக சிலர் பார்க்கும்போது, பேசும்போது உண்மையிலேயே உள்ளுக்குள் அஞ்சுகிறேன், படபடப்படைகிறேன். தமிழகத்தின் “ஆபத்தான ஆறு” கட்சிகளும் எங்கள் மக்களையும், போராட்டத்தையும் புறக்கணித்த நிலையில், “ஆதரவான நூறு” இயக்கங்கள் கைகொடுத்து உதவின. ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளின், அவற்றின் தலைவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அவர்களும் “ஆபத்தான ஆறு” பேரோடு கைகோர்த்துக் கொண்டு, எங்களை கைவிட்டுவிடும் நிலை காணப்படுகிறது. தேர்தலில் போட்டியிடாத சில கட்சிகள் எங்களைத் தொடர்ந்து ஆதரித்தாலும், எங்கள் நிலை பலவீனமாகவே இருக்கிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு, சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற இடது சாரிக் கட்சிகள், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளுக்கு நாங்கள் கடிதம் எழுதினோம். மக்கள் அதிகமாக, அடர்த்தியாக வாழும் நமது நாட்டுக்கு அணுசக்தி ஏற்றதல்ல; கூடங்குளம் அணுமின் நிலையம் ஊழலும், கோளாறும் மிகுந்தது என்பதால் அதையும் மூடுவதற்கு உதவுங்கள் என்று கேட்டுக் கொண்டோம். இன்றுவரை யாரிடம் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை. இந்த நிலையில் எங்கள் போராட்டத்தின் அடுத்தக் கட்டம் பற்றிய முடிவை நாங்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். “நாற்பதும் வேண்டும்” என்று நாயாக அலையும் தமிழக அரசியல் கட்சிகள், தமிழ் மக்களை அழிக்கும் ஆபத்தான திட்டங்களை நிறுத்த முயற்சிக்கவில்லை. தமக்கு பதவி உயர்வும், பணமும், குடும்பத்துக்கு அதிகாரமும் வேண்டி நிற்கும் அரசியல்வாதிகள், தமிழருக்கு வேண்டியதை செய்து கொடுக்க முன்வரவில்லை. இந்நிலையில் அரவிந்த் கேஜ்ரிவாலும், பிரசாந்த் பூஷனும் எங்களுக்கு “காலத்தினாற் செய்த” நன்றிகளை மனதிற் கொண்டு, அணுசக்திக்கு எதிராக நிற்கும் அவர்களின் கரங்களை பலப்படுத்துவதுதான் சிறந்ததாக இருக்கும் என்று சிலர் அறிவுரைக்கிறார்கள். எங்கள் போராட்டத்தை அரசியல் தளத்துக்குக் கொண்டு போவதுதான், ஒரே வழி என்பது அவர்கள் வாதம். பெருந்தலைவர் காமராசர் பக்தர்களான தாத்தா, பாட்டி, அம்மா, மற்றும் தி.மு.க. வெறியரான அப்பா மத்தியில் பிறந்தவன் நான். குடியரசு, விடுதலை, உண்மை, திராவிட நாடு, காஞ்சி போன்ற திராவிட அரசியல் இதழ்கள் படித்து வளர்ந்தவன். கம்யூனிஸ்ட் அமைப்புத்தான் அற்புதமானது என்று கனவுகண்டு, 1981 முதல் 1987 வரை எத்தியோப்பியாவில் மெங்கிஸ்து ஹைலமரியம் என்பவரின் சர்வாதிகார ஸ்டாலினிஸ்ட் ஆட்சியைப் பார்த்து, மனம் மாறியவன். கம்யூனிஸ்ட் சாயம் வெளுத்துப் போனதால், நான் ஒரு காந்தீய சோஷலிஸ்ட் என்று என்னை கருதத் துவங்கினேன். 1990 முதல் 1996 வரை கடினமாகப் படித்து அரசியலில் முனைவர் பட்டம் பெற்றேன். இந்துத்துவா அமைப்புக்கள் எப்படி இந்திய தேசிய வரலாற்றை தங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி எழுதுகிறார்கள் என்பது குறித்துத்தான் நான் ஆய்வு செய்தேன். அப்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஹெச்.வி. சேஷாத்ரி அந்த இயக்கத்தின் “ஆர்கனைசர்” பத்திரிகையில் 1987-ஆம் ஆண்டு பெப்ருவரி-மார்ச் மாதங்களில் எழுதிய ஒரு கட்டுரைத் தொடர் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தி கிராமத்தில் அன்னா ஹசாரே நிறுவியிருந்த “இராமராஜ்யம்” பற்றிய கட்டுரைகள் அவை. அந்த “உன்னத” சமூகத்தின் அடிப்படையே ஊருக்கு நடுவேக் கட்டப்பட்டிருந்த கோவில்தான் என்றார் ஹசாரே. கோவிலுக்கு ஏன் இந்த முக்கியத்துவம் கொடுத்தீர்கள் என்று சேஷாத்ரி கேட்டதற்கு ஹசாரே ஓர் அனுபவத்தைச் சொன்னார். எங்கள் கிராமத்துக்கு வந்த ஓர் ஐ‌.ஏ‌.எஸ். அதிகாரி 90,000 ரூபாயை வைத்து பள்ளிக்கூடத்தில் ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு பதிலாக, இப்படி கோவிலைக் கட்டியிருக்கிறீர்களே என்று கேள்வி கேட்டார். பதில் எதுவும் பேசாத ஹசாரே, அவரை விடுதி அருகேயிருந்த பழத்தோட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே மதிற்சுவர் ஏதுமில்லை, பூட்டு இல்லை, காவல்காரர் இல்லை, ஆனாலும் ஒரு பழம்கூடத் திருடப்படவில்லை. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஐ‌.ஏ‌.எஸ். அதிகாரியிடம், இம்மாதிரியான உயர் ஒழுக்கத்தை வெறும் பள்ளிக்கூடங்களால் மட்டுமே சாதிக்க முடியாது, கடவுள் பக்தியால்தான் அடைய முடியும் என்று ஹசாரே சொன்னார். பூரண மதுவிலக்கு, தீண்டாமை மறுப்பு, புகைப்பிடிக்காமை போன்ற நல்ல விடயங்களைச் செய்தாலும், ஹசாரே சீர்திருத்தத்தின் ஆபத்தான இரண்டு அம்சங்களை நான் குறிப்பிட்டுக் காட்டியிருந்தேன். “எங்கள் கிராமத்தில் ஜெயின மதத்தவர், புத்த மதத்தவர் போன்றோர் வாழ்ந்தாலும், முஸ்லீம்களோ, கிறித்தவர்களோ கிடையாது” என்று ஹசாரே சேஷாத்ரியிடம் பெருமையாகச் சொன்னார். அதேபோல, கிராமத்தில் விவசாயம், கல்வி வளர்ச்சிக்காக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பல இருந்தாலும், எந்தத் தேர்தலும் நடத்தப்படுவதில்லை. பஞ்சாயத்து தலைவர்கூட போட்டியின்றிதான் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றார் ஹசாரே. இந்த சிறுபான்மை விரோத, எதேச்சாதிகார ஆர்.எஸ்.எஸ். தாக்கத்தைச் சாடியே ஆய்வுக் கட்டுரையில் எழுதியிருந்தேன். இவை போன்ற காரணங்களால், 2011-ம் ஆண்டு பிற்பகுதியில் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான போராட்டம் துவங்கியபோது, அது என்னைப் பெரிதாகக் கவரவில்லை. அவரோடிருந்த அரவிந்த் கேஜ்ரிவால் 2012 செப்டெம்பர் மாதம் எங்கள் போராட்டத்தின் முக்கியக் கட்டத்தில் இடிந்தகரைக்கும், கூத்தங்குழிக்கும் வந்து ஆதரவு தெரிவித்தார். தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும், நாங்கள் அதில் சேர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். எங்கள் போராட்டம் உச்சத்தில் இருந்ததாலும், பல தமிழக அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருந்ததாலும், நாங்கள் அந்த அழைப்பைப் பெரிதாக எடுக்கவில்லை. இந்தியில் பெயர் வைப்பீர்கள், ஊழல் பற்றி மட்டுமேப் பேசுவீர்கள், தமிழ்த் தேசியம் விரும்பமாட்டீர்கள் என்றெல்லாம் சில பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டினோம். புது தில்லி தேர்தலின்போது, எங்கள் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஆதரவை ஆம் ஆத்மிக்குத் தெரிவித்தோம். தேர்தல் வெற்றிக்குப் பின்னர், அட்மிரல் ராமதாசும், யோகேந்திர யாதவும் பேசினார்கள். எங்கள் நிலையை விளக்கிச் சொன்னேன். பின்னர் டிசம்பர் 29, 2013 அன்று பிரசாந்த் பூஷன் இடிந்தகரைக்கு நேரில் வந்து சந்தித்துப் பேசினார். அவரிடமும் எங்கள் நிலையைச் சொன்னோம். பின்னர் சனவரி 6, 2014 அன்று ஆம் ஆத்மி கட்சித் தோழர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, ஐந்து நிபந்தனைகளை தெரிவித்திருக்கிறோம்: [1] தங்கள் கட்சியின் அணுசக்திக் கொள்கையை முறையாக அறிவிக்க வேண்டும். [2] தமிழகத்தில் “சாதாரண மக்கள் கட்சி” என்று பெயரிட்டு AAP எனும் துணைப் பெயரை பயன்படுத்துவோம். [3] தமிழ் ஈழம், தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதல், கடற்கரை கபளீகரம், தாதுமணற் கொள்ளை, நதிநீர்ப் பங்கீடு, சமூக நீதி, சிறுபான்மையினர் உரிமை போன்றப் பிரச்சினைகள் எங்களுக்கு முக்கியமானவை. இப்பிரச்சினைகளில் எங்கள் உணர்வுகளும், ஈடுபாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். கட்சியின் தமிழகக் கிளைக்கு சுயாட்சி அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளின் மாநில அலுவலகங்களில் ஒரு நாற்காலியை நகர்த்திப் போடுவதென்றாலும் தில்லியிடம் அனுமதி பெறும் அவலம் சா.ம.க.வில் இருக்கக் கூடாது. [4] தமிழகப் பொறுப்பாளரான திருமதி. கிறிஸ்டி சாமியோடு பணியாற்ற அணியமாய் இருந்தாலும், எங்கள் போராட்டக்காரர்கள் சா.ம.க. பொறுப்புக்களில் இணைத்துக் கொள்ளப்படவேண்டும் (கட்சிக்குள் இன்னொரு குழுவும் இயங்கிக் கொண்டிருப்பதை இப்போது அறிகிறோம்). [5] தமிழகத்தில் தேர்தல் யுக்திகள் வகுக்கும்போது, தமிழ்த் தேசியம் பேசும், சிறுபான்மையினர் நலம் நாடும் எங்கள் ஆதரவுக் கட்சிகளையும் ஒரு கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும். ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். போராடும் மக்கள் அனுமதி அளித்தால் மட்டுமே அரசியலில் இறங்குவதும், தேர்தலில் குதிப்பதும் என்று மிகத் தெளிவாக, உறுதியாகச் சொல்லியிருக்கிறோம். இடிந்தகரை ஊர் நிர்வாகக் குழு, எங்கள் பகுதி மக்கள், சமுதாயத் தலைவர்கள், ஆதரவுக் குழுக்கள், ஆதரவுக் கட்சிகள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, அனைவரும் உடன்பட்டாலே மேற்கொண்டுத் தொடர்வது என்று முடிவு செய்திருக்கிறோம். ஒரு நல்ல முடிவினை எடுக்க நீங்களும் உதவ வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். சுப. உதயகுமாரன் இடிந்தகரை சனவரி 9, 2014

ஸ் பெ

unread,
Jan 24, 2014, 10:25:11 AM1/24/14
to panbudan

· 
  • January 24, 2014

    Dr. S. P. Udayakumar, Ph.D.
    Coordinator
    People’s Movement Against Nuclear Energy

  • Parish Priest’s Bungalow
    Idinthakarai 627 104
    Tamil Nadu

  • The Chief Election Commissioner
    Election Commission of India
    Nirvachan Sadan
    Ashoka Road
    New Delhi-110001 

    Dear Sir:

    Greetings! May I bring to your kind attention an undemocratic and insidious practice that is being followed by some of the political parties in Tamil Nadu against the letter and spirit of the Indian Constitution and our democratic heritage.

    The ruling AIADMK in Tamil Nadu asked its cadres to apply for party ticket during December 19-27, 2013 by paying Rs. 25,000 per application at the party headquarters. The party received a total of 4,537 applications from candidates seeking tickets to contest in all the 40 Lok Sabha constituencies in Tamil Nadu and Puducherry and made a whopping sum of Rs. 11.34 crores as profit. 

    Another major party in Tamil Nadu, the DMK, has asked its cadres to pay Rs. 25,000 as fee for general constituencies and Rs. 10,000 for reserved constituencies along with the application fee of Rs. 1,000 to apply for party ticket. 

    Yet another party in Tamil Nadu, the DMDK, has begun selling application forms from January 23, 2014 at the party headquarters in Chennai and the application forms cost Rs 20,000 and Rs 10,000 for general and reserved constituencies, respectively. 

    It is also reliably learnt that the DMK asks its prospective candidates to deposit Rs. 4 crores in the party office before he or she is considered seriously for the party ticket. Similarly, the DMDK is said to be demanding hundreds of crores of rupees as bribe to join hands with one of the major coalitions that are being put together by the various political parties in Tamil Nadu.

    All these money transactions, horse trading and business-like ‘mergers and acquisitions’ make us lose faith in the very democratic precepts and practices of our country. Hence may I request you to order a probe into these money delaings of the various political parties in Tamil Nadu and save our democratic heritage please.

    Looking forward to your immediate action, I send you my best personal regards and all peaceful wishes,

    Cordially,

    S. P. Udaykumar, Ph.D.

    Copy to:

    The Tamil Nadu State Election Commissioner
    Tamil Nadu State Election Commission
    208/2 Jawaharlal Nehru Road
    Opp. CMBT
    Arumbakkam
    Chennai 600 016

ஸ் பெ

unread,
Feb 16, 2014, 1:31:54 PM2/16/14
to panbudan
இடிந்தகரைக் கடிதம் – 3/2014
அரசியல் மனக்குழப்பங்கள்

எனது 54 வருட வாழ்க்கையில் இப்படி ஒரு மனக்குழப்பம் நான் அடைந்ததேயில்லை. தேர்தல் அரசியலுக்கு வரப் பிடிக்கவில்லை, ஆனால் அணுஉலைப் பிரச்சினையை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டுபோக தேர்தல் அரசியலுக்கு வராமல் வேறு வழியுமில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான பண பலமோ, படை பலமோ, அரசியல் பின்புலமோ எதுவுமில்லை. ஆனால் போட்டியிட்டுத்தான் போராட்டத்தையும், போராடும் மக்களையும் காத்துக்கொள்ள முடியும் என்ற இக்கட்டான நிலை. தேர்தலில் நின்று தோற்றால், “இவன் போராட்ட ஆதரவு இவ்வளவுதான்” என்று ஏளனம் செய்ய, இளக்காரமாய் பேச ஏராளமானோர் காத்திருக்கின்றனர். போராட்டத்தை, பொதுவாழ்வை, முடிந்தால் மொத்தக் கதையையே முடித்து, முற்றுப் புள்ளிவைக்க பலர் முனைந்து நிற்கின்றார்.

கொள்ளையடிப்போரை, குடும்பத்துக்காக உழைப்போரை, கொள்கைகளில்லாதோரை தலைவராக ஏற்றுக்கொண்டு எதையும் செய்யத் துணியும் விசுவாசத் தொண்டர்களாய் வீர உலா வருவோரிடம் “கூடங்குளமா, கூட வரப் பணமா” என்றால், பணம்தான் என்பர். “கெயிலா குவாட்டாரா” என்றால், குவாட்டர்தான் என்று கும்பிட்டு நிற்பர். “மீத்தேனா, உனக்கும் கொஞ்சம் தேனா” என்றால், எனக்கும் கொஞ்சம் தேன்தானென்பர். இந்தச் சூழலில் “எதை நம்பி தேர்தல் அரசியலில் இறங்குகிறீர்கள்?” என்று கேள்வி கேட்கும் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. என்னையும், என் தோழர்களையும் நம்பி போராட்டக் களத்தில் குதித்து, ஏராளமான தியாகங்கள் செய்து, சுமார் 350 வழக்குகளை வாங்கிச் சுமந்து கொண்டிருக்கும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களை கரையேற்றிவிடும் பெரும் பொறுப்பு என்னை ஆழமாக சிந்திக்க வைக்கிறது.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரானப் போராட்டத்தை அ.தி.மு.க. அரசும், காங்கிரசு அரசும், பிற பெரியக் கட்சிகளும் கண்டுகொள்ளாத நிலையில், என்ன செய்வது என்கிற விடை தெரியாத கேள்வியோடு அல்லாடிக் கொண்டிருக்கிறோம். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு கட்சி வெற்றி பெற்றாலும் சரி, அல்லது பா.ஜ.க. அரசு அமைத்தாலும் சரி, கூடங்குளம் திட்டத்தை அமுல்படுத்துவார்கள், விரிவாக்கம் செய்வார்கள். எனவே நாம் ஒரு மாற்று அரசியலை கையிலெடுத்து, மாற்றான கட்சி ஒன்றை ஆதரித்து, மாறுபட்ட ஒரு யதார்த்தத்தை நமக்கு உருவாக்கிக்கொள்ள முயலுவோமே என்று கோரிக்கை வைக்கிறார்கள். 

இறைமை என்பது கோவில் கருவறைக்குள் கடவுள் சிலையாக தனிமைப்படுத்தப்பட்டு, அன்னியப்படுத்தப்பட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ளது. கோவிலை நிர்வகிக்கும் தாதா தர்மகர்த்தாக்களும், அவர்களின் குடும்பத்தினரும் அங்கே ஆதிக்கம் செலுத்துகின்றனர். மந்திரம் சொல்லிப் பிழைக்கும் சாஸ்திரிகளும், சன்னியாசிகளும், பூசாரிகளும் தர்மகர்த்தாக்களை அனுசரித்து, தங்கள் வயிற்றைக் கழுவுகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களைப் பிடித்து அபிஷேகம் செய்யவைத்து, தமக்குக் கிடைப்பதை எடுத்துக் கொண்டு கோவில் நிர்வாக அமைப்பை தக்க வைத்துக்கொள்ள கடைநிலை குருக்கள் ஓயாது உழைக்கின்றனர்.

இதே போலத்தான் “அதிகாரம்” எனும் “அரசியல் சக்தி” நாடாளுமன்றக் கோவிலுக்குள் தனிமைப்படுத்தப்பட்டு, அன்னியப்படுத்தப்பட்டு பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது. டாடாக்களும், பிர்லாக்களும், அம்பானிகளும், மிட்டல்களும், பன்னாட்டு நிறுவனங்களும் தர்மகர்த்தாக்களாய் அங்கே ஆதிக்கம் செலுத்துகின்றனர். கதர்களும், காவிகளும், காம்ரேடுகளும், கழகங்களும் அங்கே பூசாரி வேலை செய்கின்றனர். எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் அபிஷேகத்துக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் குருக்கள் போன்றவர்கள்தான். இந்த குருக்களில் ஒருவராகி நாம் எந்த சமூக-பொருளாதார-அரசியல்-கலாச்சார மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என்பதுதான் உண்மை.

ஆனாலும் “தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது”
என்று வள்ளுவர் சொன்னது போல, தனக்குவமை இல்லாத அரசியல் சக்தியை அடையாத பட்சத்தில், வாழ்க்கைப் பிரச்சினைகளை மாற்றுவது அரிது என்பது தெளிவு. அந்த அதிகாரம் இல்லாத மீனவர்கள், மாணவர்கள், விவசாயிகள், ஆதிவாசிகள், தலித் மக்கள், பெண்கள், சிறுபான்மையோர் என யாரும் தங்களுக்கு வேண்டிய எதையும் சாதிக்க முடியாது என்பதுதான் உண்மையான நிலை.

கூடங்குளம் அணுஉலைப் பிரச்சினையில் தேசியக் கட்சிகள் மக்கள் விரோத நிலையைத்தான் எடுக்கிறார்கள். குறிப்பாக, தமிழகத்தை, தமிழ் நாட்டைப் பொருத்தவரை, இது மிகவும் உண்மை. அதிக அணுசக்தி வேண்டும், கூடுதல் அணுவாயுதங்கள் வேண்டும் என்பது பா.ஜ,க.வின் முற்பிறவியான ஜனசங்க் கட்சி காலத்திலிருந்தே “சங் பரிவார்” கொண்டிருக்கும் கொள்கை. கொள்ளையடிப்பதையும், வெளிநாட்டினருக்கு நாட்டை விற்பதையும் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் காங்கிரசும் அணுசக்தி, அணுவாயுதக் காமத்தில் சிக்கிக் கிடக்கிறது. கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை கர்நாடக மாநிலம் கோலாரில் புதைக்க விட மாட்டோம் என்பதில் காங்கிரசும், பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் மிக உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார்கள். கேரளாவில் அணுமின் நிலையம் போன்ற எந்த அழிவுத் திட்டம் அமைப்பதாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட் கட்சிகள் தெளிவாக நின்று எதிர்க்கிறார்கள். சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணமூல் காங்கிரசு போன்ற கட்சிகளிடம் அணுசக்திப் பிரச்சினையில் ஒரு நிலைப்பாடு எடுங்கள் என்று மன்றாடினாலும், எந்தவிதமான பயனும் இல்லை.

தமிழகக் கட்சிகளைப் பொறுத்தவரை, தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அதிகாரம் பெறுவதிலும், தங்கள் ஊழல் சாம்ராஜ்யங்களை, ஆதிக்க அரண்மனைகளை தக்க வைப்பதிலும் குறியாக இருக்கிறார்கள். தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு சுயநலவாதம், சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம்தான் அடிப்படைக் கொள்கைகள். இவர்களில் பெரும்பாலோர் ஏழை எளிய மக்களுக்காக அரசியல் நடத்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்பாவி மக்களிடமிருந்து தங்களுக்கான வாக்குகளைப் பெறுவது ஒன்றே இவர்களின் இலக்கு என்பதும் புரிகிறது. தி.மு.க.—அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை யார் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை, அவர்களுக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி வேண்டும், தில்லியிலே அதிகாரம் வேண்டும், அமைச்சர் பதவிகள் வேண்டும், ஏராளமானப் பணம் வேண்டும். அங்கே ஈழத்தமிழர் பாசமோ, இங்குள்ள தமிழர்மீது அன்போ எதுவும் கிடையாது.

தேர்தல் அரசியலில் பங்கேற்கும் ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகளும், பா.ம.க.வும், மனிதநேய மக்கள் கட்சியும் நமது போராட்டத்திற்கு பல்வேறு வழிகளில் உதவினார்கள்; உறுதுணையாக இருந்தார்கள். அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ம.தி.மு.க. அண்மையில் ஓர் அருமையான ஆதரவு அறிக்கை வெளியிட்டது. அது போல ம.ம.க.வும் ஆதரவான ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்கள். மீண்டும் ஒருமுறை இந்தக் கட்சிகளுக்கும், கட்சி தலைவர்களுக்கும், நமக்கு ஆதரவளித்துவரும் பிற கட்சிகளுக்கும் நாம் நமது அன்பான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மேற்குறிப்பிட்ட கட்சிகள் தற்போது அணுஉலைக்கு ஆதரவான கட்சிகளோடு கூட்டணி வைத்துக்கொண்டிருப்பதால் பேச முடியாமல் இருக்கிறார்கள். கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் நமது பிரச்சினையை அவர்களால் சேர்த்துக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. இந்த நிலையில் நமது பிரச்சினையை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

தமிழகக் கட்சிகளையும், இயக்கங்களையும் “ஆபத்தான ஆறு, ஆதரவான நூறு” என வகைப்படுத்தி, நமக்கென நின்ற கட்சிகளை கைகோர்த்து நிற்கச் சொன்னோம் நாடாளுமன்றத் தேர்தலில். ஐந்து முறை இடிந்தகரையில் பல்வேறு கூட்டங்கள் நடத்தினோம், முயற்சிகள் எடுத்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எனவேதான் நமக்கு ஆதரவளிக்கும் எளிய மக்கள் கட்சியை (ஆம் ஆத்மி கட்சியை) நாம் ஏறெடுத்துப் பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம். 

அது ஒரு வட இந்தியக் கட்சி என்பதும், அவர்கள் தமிழ்நாட்டுப் பிரச்சினைகள் பற்றிய ஆழமான புரிதல் இல்லாதவர்கள் என்பதும் உண்மைதான். கூடங்குளம், கல்பாக்கம், தேவாரம், மீதேன், கெயில் போன்ற தமிழர் விரோதத் திட்டங்களை தடுத்து நிறுத்த, காவிரி நதிநீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, ஹொகனேக்கல் பிரச்சினை, இராமேசுவரம் மீனவர் பாதுகாப்புப் பிரச்சினை போன்றவற்றில் தமிழர் நலம் காக்க, காங்கிரசு, பா.ஜ.க. தவிர்த்த அரசு டில்லியில் வேண்டும்; எளிய மக்கள் கட்சி (AAP)தான் ஒரே வழியாகத் தெரிகிறது. நாடாளுமன்றத்தில் ஓரளவு கணிசமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பார்கள் என நம்பலாம். நமக்காகக் குரல் கொடுக்குமாறு வற்புறுத்தலாம்.

தமிழர்களாகிய நாம் உணர்ச்சிவசப்பட்டு வீரவசனம் பேசினால் மட்டும் போதாது, நாசூக்காக செயல்பட்டு நமக்காகக் காரியங்கள் நடத்திக் கொள்ளும் சாதுரியத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின்போது, காங்கிரசு கட்சியின் அரசு இலங்கை அரசுக்கு உதவி செய்தது; பா.ஜ.க. பாராமுகமாக இருந்தது. ஏ. கே. அந்தோணி, சிவசங்கர் மேனன், எம். கே. நாராயணன், சதீஷ் நம்பியார், விஜய் நம்பியார் என நமக்கு வேண்டாதவர்கள் ஆக்கிரமித்திருந்த இடங்களில் ஒரு தமிழன் இருந்திருந்தால், ஈழப் படுகொலையின்போது நம் மக்களுக்கு நாம் கொஞ்சமாவது உதவியிருக்கலாம். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அய்யாவுக்குப் பின்னாலும், அம்மாவுக்குப் பின்னாலும் ஒளிந்து கொண்டிருந்தார்கள், இப்போதும் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். தமிழர்களுக்கு உடனடியாக, அவசரமாக நாடெங்கும், நாட்டின் தலைநகரெங்கும் நண்பர்கள் தேவைப்படுகிறார்கள். கூடங்குளம், கல்பாக்கம், தேவாரம், மீதேன், கெயில் போன்ற தமிழர் விரோத திட்டங்களைத் தடுத்து நிறுத்த நாம் மட்டும் இங்கே தனித்து நின்றுப் போராடி பலனில்லை. 

இந்தி(ய) ஏகாதிபத்தியத்துக்கு அடிமையாகிவிட்டான் பார், நம்மையும் அடிமைப்படுத்தப் பார்க்கிறான் பார் என்றெல்லாம் குற்றஞ்சாட்டுகிறவர்கள் வேறு ஏதாவது உருப்படியானத் திட்டம் இருந்தால் சொல்லுங்கள்; இங்குள்ள அரசியல் தலைவர்கள் எல்லாம் ஒன்றாக நின்று தமிழர்களுக்காகப் போராடுவதாய் இருந்தால் உடனேத் தெரிவியுங்கள். நாங்கள் உறுதியாக உடன்படுகிறோம்.

இல்லையெனில்...
வாருங்கள் எளியோரே, வந்திடுங்கள் இளையோரே!
வகையாய் நடத்திடுவோம் தமிழகத்தில் முழுப் புரட்சி!!
வணக்கம்!

சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
பிப்ரவரி 14, 2014

Prakash Sugumaran

unread,
Feb 16, 2014, 2:32:53 PM2/16/14
to Panbudan
போராட்டக் களத்தில், முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாது என்பது அவருக்கு தெரியாதா ?


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/

ஸ் பெ

unread,
Feb 16, 2014, 2:49:55 PM2/16/14
to panbudan
போராட்டத்தில் இருந்து விலகுகிறோம் என சொல்லி இருக்கிறாரா அவர்?


2014-02-16 20:32 GMT+01:00 Prakash Sugumaran <praka...@gmail.com>:
போராட்டக் களத்தில், முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாது என்பது அவருக்கு தெரியாதா ?




ஸ் பெ

unread,
Mar 16, 2014, 12:37:01 PM3/16/14
to panbudan

Udayakumaran Predicts Your Future

[1] Deciding Your Future
உங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்க
http://youtu.be/UbFjK0ybGi8

எதிர்காலம் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் நமக்கு இயற்கையாகவே அதிகம். ஜாதகம், ஜோதிடம், கைரேகை, எண் கணிதம், குறி கேட்டல் என பல வழிகளில் வருங்காலம் பற்றி தெரிந்துகொள்ள முயல்கிறோம். முதல் முறையாக வாக்களிப்பவர்கள், இளைஞர்கள், மாணவ மாணவிகள் போன்றோர் உங்கள் எதிர்காலத்தை நீங்களே அமைத்துக்கொள்ளும் ஓர் உன்னதமான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கிறது.

[2] The East-West / North-South Divide
கிழக்கு-மேற்கு / வடக்கு-தெற்கு பிரிவு
http://youtu.be/opIDRqCzXC0

பொதுவுடமை கிழக்கு – முதலாளிய மேற்கு என்று பிரிந்துகிடந்த நமது உலகம், இன்று பணக்கார வடக்கு – பாவப்பட்ட தெற்கு என்று பிளவுபட்டிருக்கிறது. இந்த அமைப்புத்தான் நமது நாட்டின் இன்றைய அரசியல் பின்புலத்தை அமைத்துத் தருகிறது.

[3] The Square of Swaraj
தன்னாட்சி சதுரம்
http://youtu.be/CBczTFfLwaI

ஒரு நாட்டை உருவாக்கி வழிநடத்த மக்கள், அரசு, பொருள், சர்வதேச சமூகத்தின் அங்கீகாரம் எனும் நான்கு தேவைகள் இருக்கின்றன. இவற்றை ஒருங்கிணைத்து நமக்கென ஒரு நல்வாழ்வை அமைத்துக் கொள்வதுதான் அரசியல்.

ராம் காமேஸ்வரன்

unread,
Mar 18, 2014, 1:15:04 PM3/18/14
to panb...@googlegroups.com

கன்னியாகுமரி தொகுதி வாக்காளர் தோழர்களே!

உங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக என்னை நீங்கள் தேர்வு செய்தால், நீண்ட நெடுங்காலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் நமது மாவட்டத்தில் சமச்சீரான வளர்ச்சிக்கு கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

[1] பொதுமக்கள் நலம்:
• சாதி, மத நல்லிணக்கத்தைப் போற்றுவேன்.
• ஆபத்தான கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடுவேன். மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மரபுசாரா இயற்கை மின்பூங்காக்கள் அம...ைத்து மக்களின் மின்சாரப் பிரச்சினைக்குத் தீர்வு தேடுவேன்.
• தனியார் மற்றும் அரசு தாது மணற்கொள்ளையைத் தடுப்பேன்.
• கல் குவாரிகளை மூடுவதோடு, நில வணிக மாஃபியாக்களை எதிர்ப்பேன்.
• மலைகளை, மரங்களை அழித்து பெரியக் கட்டிடங்களை நிறுவி அமைக்கப்படும் தனியார் நிறுவனங்களைத் தடுத்து இயற்கை வளம் காப்பேன்.
• லஞ்ச ஊழலை ஒழிக்க என்னாலியன்ற அனைத்தும் செய்வேன்.
• பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர், குமரி மாவட்டத்து மலையாள மக்கள் போன்றோருக்கு சமூக நீதி கிடைத்திட உழைப்பேன். நாஞ்சில்நாடு வெள்ளாளர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க உதவுவேன்.
• அக்கம்பக்கம் குழுக்கள் அமைத்து மக்களுக்கு தன்னாட்சி கிடைக்கப் பாடுபடுவேன்.
• ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக மக்களின் முக்கியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன்.

[2] போக்குவரத்து:
• மாவட்டமெங்கும் சாலைகளைச் சீராக்கி, பாதுகாப்பான நடைபாதைகள் அமைத்து, பாதசாரிகளின், வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வேன்.
• பொதுப் பேருந்துகளின் தரத்தை, பாதுகாப்பை மேம்படுத்துவேன்.
• மோசமான நிலையில் இருக்கும் சுசீந்திரம் பாலத்திற்கு பதிலாக மாற்றுப் பாலம் அமைப்பேன்.
• கன்னியாகுமரி-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புக்களை அகற்றி சாலை விரிவாக்கத்துக்கு உதவுவேன்.
• கன்னியாகுமரி பகுதியில் சிறு விமான தளம் அமைப்பேன்.
• குமரி ரயில்வேயை மதுரை டிவிஷன் கீழ் கொண்டுவந்து, இருவழி ரயில் பாதை அமைப்பேன்.
• கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் வரை கடல் வழியாக நீர்வழிப் போக்குவரத்துக்கு ஆவன செய்வேன்.
• காலையிலும், மாலையிலும் பள்ளி மாணவருக்கென சிறப்புப் பேருந்துகள் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இயக்க ஆவன செய்வேன்.

[3] பொதுச் சுகாதாரம், உடல் நலம்:
• மாவட்டமெங்கும் இலவசக் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துவேன்.
• ஒலி மாசை முற்றிலுமாகத் தடை செய்வேன்.
• நெகிழிப் பைகள், நெகிழிப் பொருட்களை ஒழிப்பேன்.
• குப்பைகள் சேகரித்தல், திடக்கழிவு மேலாண்மைக்கான ஏற்பாடுகள் செய்வேன்.
• தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, ரசாயனங்களைப் பிரித்தெடுத்து, வினியோக அமைப்புகளை திருத்தியமைத்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகிப்பேன். ஏழைகளுக்கு பஞ்சாயத்து அலுவலகங்களில் குடிநீர் வழங்கிட ஆவன செய்வேன்.
• காற்றை மாசுபடுத்தும் ஆலைகள், தொழிற்சாலைகள் தொடங்குவதைத் தடை செய்வேன்.
• ஆரம்ப சுகாதார நிலையங்களை, அரசு மருத்துவமனைகளை தரமுயர்த்தி, உயர்தர மருத்துவ சிகிச்சைகள் ஏழை எளியோருக்கும் கிடைக்க ஆவன செய்வேன்.
• மாவட்டத்தின் மையப் பகுதியில் உயர்தர புற்றுநோய் மருத்துவமனை அமைப்பேன்.

[4] கல்வி, வேலை வாய்ப்பு:
• மார்ஷல் நேசமணி பெயரில் குழித்துறைப் பகுதியில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பேன்.
• திருமதி. லூர்தம்மாள் சைமன் பெயரில் மணக்குடியில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பேன்.
• திரு. எஸ். துரைசாமி பெயரில் கொட்டில்பாடு பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பேன்.
• தோழர் ஜீவா பெயரில் பூதப்பாண்டி பகுதியில் விவசாயம், தென்னை, வாழை, ரப்பர், தோட்டக்கலை, வனவளம் போன்ற ஆராய்ச்சிப் பிரிவுகளைக் கொண்ட ஒரு விவசாயக் கல்லூரி தொடங்குவேன்.
• திரு. தாணுலிங்கனார் பெயரில் மருந்துவாழ் மலைப் பகுதியில் மருத்துவ மூலிகைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பேன். அழிந்து வரும் மூலிகைகளைக் காத்து, பாரம்பரியமிக்க நமது சித்த வைத்தியத்திற்கு புத்துயிரூட்டி, இயற்கை வைத்தியத்தைப் பாதுகாப்பேன்.
• தியாகி சிதம்பரநாதன் பெயரில் நீண்டகரைப் பகுதியில் சட்டக் கல்லூரி அமைக்க ஆவன செய்வேன்.
• கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் & திருமதி மதுரம் பெயரில் இசைக் கல்லூரி ஒன்றை நிறுவவும் முற்சிப்பேன்.
• சதாவதானி செய்குத்தம்பி பாவலர் பெயரில் மாவட்டத்தின் அனைத்து மக்களுக்கும் பயன்படும் உயர்தர நவீன ஆய்வு நூலகம் ஒன்றை அழகியமண்டபம் பகுதியில் அமைப்பேன்.
• சிறுபான்மையினர் பயன்பெறும் மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் IAS, IPS பயிற்சி மையம் அமைப்பேன்.
• ஐ.டி. தொழிற்நுட்பப் பூங்கா தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்வேன்.
• காற்றாலை மின்உற்பத்தி அதிகமாக நடக்கும் ஆரல்வாய்மொழி பகுதியில், மாற்று வழி மின்சாரம் தொடர்பான தொழிற்பேட்டை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பேன்.

[5] மீனவர் நலம்:
• கடல் மீதும் கடற்கரை மீதுமுள்ள மீனவ மக்களின் பாரம்பரிய உரிமைகளைக் காப்பேன்.
• ஆபத்துக்குள்ளாகும் மீனவருக்கு உடனடியாக உதவ கன்னியாகுமரி மற்றும் குளச்சலில் ஹெலிகாப்டர் தளமும், விசைப்படகுத் தளமும் அமைப்பேன்.
• கடலுணவுத் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்வேன்.
• ஆங்காங்கே மீன் பதப்படுத்தும், பாதுகாக்கும் நிலையங்கள் அமைப்பேன்.
• குளச்சல் மீன்பிடித் துறைமுகம் வேகமாக அமைக்க உதவுவேன்.
• கல்வி, வேலை வாய்ப்பில் மீனவர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவேன்.
• மீன் வளத்துறை வேலைகளில் மீனவர்களுக்கே முன்னுரிமை என்று வலியுறுத்துவேன்.
• உறுதியற்ற வீடுகளை அகற்றிவிட்டு உறுதியான வீடுகளும், குடியிருப்புகளும் கட்டித் தருவேன்.
• குமரி மீனவர்களிடம் கேரள அரசு ஆண்டுதோறும் வசூலிக்கும் ரூ. 60,000 சேமநிதியை நீக்கக் கோருவேன்.

[6] விவசாயிகள் நலம்:
• விவசாயத்தைக் காத்து உணவு உற்பத்தியைப் பெருக்குவேன்.
• விவசாயிகளின் விளை பொருட்களை நகரின் மையப்பகுதிகளில் சந்தைப்படுத்த ஏற்பாடு செய்வேன்.
• விளை நிலங்களை வீட்டு நிலங்களாக, தொழிற்பேட்டைகளாக மாற்றுவதைத் தடுப்பேன்.
• தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பட்டா விளைநிலங்களையும், குடியிருப்புப் பகுதிகளையும் தனியார் காடுகள் என்று வகைப்படுத்துவதை ரத்து செய்வேன்.
• 2006 வன உரிமைச் சட்டம் காணி மக்கள் போன்ற ஆதிவாசிகளுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கும் நில உரிமைகளை மீட்டுத் தருவேன்.
• கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயப் பகுதிகளையும் பட்டா நிலங்களையும் பாதுகாப்பேன். விவசாய நிலங்கள் விலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்படுவதைத் தடுப்பேன்.
• ஆகாயத் தாமரைகளை அகற்றி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்துவேன்.
• மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளையும் ஆழப்படுத்துவேன்.
• முடங்கிக் கிடக்கும் நெய்யாறு இடதுகரை கால்வாய்க்குப் பதிலாக சிற்றாறு-II நீர்த்தேக்கத்திலிருந்து புதிய கால்வாய் அமைப்பேன்.
• திருப்பதிசாரம் விவசாய விரிவாக்க மையத்தை பாரம்பரிய விதைகளைக் காக்கும், இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையமாக மாற்றுவேன். மரபணு மாற்ற விதைகளைக் கடுமையாக எதிர்ப்பேன்.
• தேன் உற்பத்தி செய்யும் தொழிலை உயர்த்தும் விதமாக, மார்த்தாண்டத்தில் தேன் ஆராய்ச்சி நிலையம் அமைப்பேன்.
• ரப்பர் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை களியல் பகுதியில் அமைத்து, ரப்பருக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து, ரப்பர் விவசாயிகளைக் காப்பேன்.
• தோவாளையில் மலர் ஏற்றுமதி மையம் அமைப்பேன்.

[7] வர்த்தகர், தொழிலாளர், பெண்கள் நலம்:
• சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டைத் தடுப்பேன்.
• கட்டிடத் தொழிலாளர்கள் நலம் பேணும் வாரியம் மற்றும் அவர்களுக்கானப் பள்ளிகள் அமைக்க ஆவன செய்வேன்.
• வெளிநாடுகளில் வேலை செய்யும் குமரி மாவட்டத்தவர் வசதிக்காக பாஸ்போட் மையம், வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் அரசு நிறுவனத்தின் பிரிவு, அவர்கள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் நாகர்கோவிலில் அமைப்பேன்.
• அமைப்புசாரா தொழிலாளர் நலம் பேண வழிவகை செய்வேன்.
• பெண்களுக்கும் சம ஊதியம் கிடைக்க ஆவன செய்வேன்.
• சுய உதவி குழுக்களிலுள்ள பெண்களுக்கு சிறு தொழில் பயிற்சி மூலம் வேலைவாய்ப்பு மற்றும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கொள்முதல் நிலையங்கள், விற்பனை மையங்கள் அமைக்க உதவுவேன்.
• கிராமப்புறப் பெண்களுக்கு கணினிப் பயிற்சி வழங்க ஆவன செய்வேன்.
• மாற்றுத்திறனாளிகளின் சமூக-பொருளாதார, அரசியல் விடுதலைக்கானப் போராட்டத்தில் அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து உதவுவேன்.

[8] சுற்றுலா மேம்பாடு:
• சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி, மக்களுக்கான வசதிகளைப் பெருக்கி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரித்து, சுற்றுலாச் சேவையை விருத்தி செய்வேன்.
• கன்னியாகுமரி, சொத்தவிளை, திற்பரப்பு போன்ற சுற்றுலாத் தலங்களில் தேர்ச்சி பெற்ற உயிர்காப்போர் (Life Guards) நியமிப்பேன்.
• கொட்டாரம் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் அமைப்பேன்.
• குளச்சல் போர் வெற்றித்தூணை இந்திய அரசு வரலாற்றுச் சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பேன்.

என்னைத் தொடர்பு கொள்ள:
சுப. உதயகுமார், 42/27 இசங்கன்விளை மணி வீதி, பறக்கை ரோடு சந்திப்பு, கோட்டார், நாகர்கோவில் 629 002, கன்னியாகுமரி மாவட்டம்; Email: spuday...@gmail.com; skype: spudayakumar; Facebook: spudayakumaran; Twitter: spudayakumar.

ராம் காமேஸ்வரன்

unread,
Mar 18, 2014, 1:28:59 PM3/18/14
to panb...@googlegroups.com

On Tuesday, March 18, 2014 1:15:04 PM UTC-4, ராம் காமேஸ்வரன் wrote:

//கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடுவேன்//

ஒரு எம்.பி யால் அணு உலையை மூட முடியுமா? அதற்குறிய அதிகாரம் அந்த பதவிக்கு இருக்கிறதா?
மாங்கா மக்கள் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்து கெஜ்ரிவால்  பிரதமராக ஆனால் ஒரு வேளை நடக்கலாம். 

Asif Meeran AJ

unread,
Mar 18, 2014, 11:29:05 PM3/18/14
to பண்புடன்
ஒரு எம்.பி யால் அணு உலையை மூட முடியுமா? அதற்குறிய அதிகாரம் அந்த பதவிக்கு இருக்கிறதா?
மாங்கா மக்கள் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்து கெஜ்ரிவால்  பிரதமராக ஆனால் ஒரு வேளை நடக்கலாம். 

ஆளும் கட்சி எம்பிக்களால கூட அவங்க தொகுதில ஓடுற கழிவுநீர் கால்வாயைக் கூட மூட முடியாது
அணு உலை??? கெஜ்ரிவாலே பிரதமாரானாலும் நடக்காது அது.
உதயகுமார் கொஞ்ச,ம் உணர்ச்சிவசப்பாட்டுவிட்டார்தான்​​

Prakash Sugumaran

unread,
Mar 19, 2014, 11:11:39 AM3/19/14
to Panbudan
மிளகாய் தூள் வீசலாம், அரை நிர்வாணப் போராட்டம் நடத்தலாம்.. இதுபோல எத்தனையோ வழிகளில் எதிர்ப்பை பதிவு செய்யலாம். நடவடிக்கை உள்ளதோ இல்லையோ கவனத்தை ஈர்க்கலாமே. குறைந்தபட்சம் போராட்டக்குழு மீதான வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தலாம்.

உலகளாவிய மாபியா கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய பார்லிமெண்டில் தென்னிந்திய குரலை ஒலிக்கலாம்.


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Ahamed Zubair A

unread,
Mar 19, 2014, 11:31:29 AM3/19/14
to பண்புடன்
எது.... இந்த சு.சாமி கோர்ட்டுக்கு வந்தப்போ அதிமுக மகளிரணி பண்ண போராட்டம் மாதிரியா???

ராம் காமேஸ்வரன்

unread,
Mar 19, 2014, 4:41:00 PM3/19/14
to panb...@googlegroups.com

அரசியலே வேண்டாம் என ஒதுங்கி இருந்தவரை சமூகச்சூழல் அதில் ஈடுபட வைத்து விட்டது – உதயகுமார் மனைவி !!

f38251d1-02b0-49ae-aafc-a34fbb4b0af4_S_secvpfநாகர்கோவில், கோட்டார், இசங்கன்விளையைச் சேர்ந்தவர் உதயகுமார்.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பிரபலம் ஆனவர். இடிந்தகரை கடற்கரை கிராமத்தில் பல மாதங்களாக தங்கியிருந்து போராடி வருகிறார்.

சமீபத்தில் இப்போராட்டக் குழுவினர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர். இவர்களில் உதயகுமார் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இவருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட புஷ்பராயன் தூத்துக்குடியிலும், மைபா ஜேசுராஜ் நெல்லை தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

இவர்களில் உதயகுமாரின் மனைவி மீரா நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:–

எனது கணவர் உதயகுமார் அரசியல் அறிவியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பல்வேறு வெளி நாடுகளில் வேலை பார்த்து உள்ளார். அவரது குடும்பம் அரசியல் பாரம்பரியம் மிக்கது. கணவரின் தந்தை பரமார்த்தலிங்கம் தி.மு.க.வின் நீண்டகால உறுப்பினர்.

எனவே நான் உதயகுமாரை திருமணம் செய்யும் முன்பு அவர் அரசியலில் ஈடுபடக் கூடாது என வாக்குறுதி கேட்டேன். அவரும் எனக்கு அந்த உறுதிமொழியை தந்ததால் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

இருந்தாலும் உதயகுமாருக்கு மக்கள் பிரச்சினைகளில் எப்போதும் ஆர்வம் இருக்கும். அதன் காரணமாகவே கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதற்காக குடும்பத்தை மறந்து அங்கேயே தங்கவும் செய்தார். பல மாதங்கள் நடந்த இந்த போராட்டம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது படையெடுத்து பார்த்திருக்கிறோம். ஆனால் எனது கணவர் மீது இந்த நாடு பல முனைகளிலும் நெருக்கடி கொடுத்து போரிட்டது. அதை முழு மூச்சாக அவர், எதிர்த்து நின்றார்.

இருந்தும் கோரிக்கைகளை வென்று எடுக்க இயலாத நிலையே காணப்பட்டது. அப்போதுதான் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி புரட்சியில் ஈடுபட்டு அரசியலில் குதித்து ஆட்சியிலும் கால் பதித்தது.

அவர்களின் முயற்சியும் வேகமும் அந்த கட்சியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது.

கூடங்குளம் போராட்டத்தை வென்றெடுக்க அரசியல் களம் தேவை என்பதாலும் சூழ்நிலை நெருக்கடியாலும் ஆம் ஆத்மி கட்சியில் இணையும் நிலை ஏற்பட்டது. இப்போது தேர்தலிலும் ஈடுபடும் நிலை உருவாகி விட்டது. இந்த அரசியல் களத்திலும் என் கணவர் வெற்றி பெறுவார். எந்த நெருக்கடிகளையும் சந்தித்து சாதித்து காட்டுவார் என உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வருகிற 29–ந்தேதி உதயகுமார் நாகர்கோவிலில் வேட்பு மனுதாக்கல் செய்வார் என தெரிகிறது. அன்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அல்லது பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண் இவர்களில் யாராவது ஒருவர் நாகர்கோவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதயகுமார் மீது கூடங்குளம் போராட்டம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே அவர், நாகர்கோவிலுக்கு மனு தாக்கல் செய்ய வரும்போது கைது செய்யப்படலாம் என்று கூறப்படுவதால் ஆம் ஆத்மி கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Asif Meeran AJ

unread,
Mar 19, 2014, 11:29:24 PM3/19/14
to பண்புடன்
கவன ஈர்ப்பைக் கொண்டு வருவார் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை
தனது போராட்டத்தை இன்னும் தீவிரமாக முன்னெடுப்பார் என்பதிலும்
ஐயமில்லை
ஆனால் அணு உலையை மூடுவேன் என்று வாக்குறுதி அளித்திருப்பதுதான்
சுசாமி மாதிரி இருக்குன்னு சொல்ல வந்தேன்

​​
உலகளாவிய மாபியா கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய பார்லிமெண்டில் தென்னிந்திய குரலை ஒலிக்கலாம்.

உலகளாவிய மாபியா கும்பலின் கட்டுப்பாட்டில்... மன்னிக்கணூம் இப்படி வெளிப்ப்டையா அநாகரிகமாக சொல்லக்கூடாது இதை இந்திய ஜனநாயகம்னு நாகரிகமா சொல்லணும்​​

செல்வன்

unread,
Mar 19, 2014, 11:39:46 PM3/19/14
to பண்புடன்

2014-03-19 22:29 GMT-05:00 Asif Meeran AJ <asifm...@gmail.com>:
கவன ஈர்ப்பைக் கொண்டு வருவார் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை
தனது போராட்டத்தை இன்னும் தீவிரமாக முன்னெடுப்பார் என்பதிலும்
ஐயமில்லை
ஆனால் அணு உலையை மூடுவேன் என்று வாக்குறுதி அளித்திருப்பதுதான்
சுசாமி மாதிரி இருக்குன்னு சொல்ல வந்தேன்

Inline image 1


--
செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)



ராம் காமேஸ்வரன்

unread,
Mar 24, 2014, 4:15:04 PM3/24/14
to panb...@googlegroups.com
எனது தேர்தல் வாக்குறுதிகள்

எனது தேர்தல் வாக்குறுதி துண்டறிக்கையைப் படித்தவர்கள் சிலர் இவையெல்லாம் சாத்தியமா, நிதி ஆதாரத்துக்கு என்ன செய்வீர்கள், ஐந்து வருடங்களில் இவற்றையெல்லாம் எப்படி செய்து முடிப்பீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். அவர்களில் பலர் பா.ஜ.க.வினர் என்பதும், அவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

எனது பதில் இதோ:

[1] "மனமுண்டானால் மார்க்கமுண்டு" என...்று நினைக்கிறவன் நான்.

[2] அனைத்துத் திட்டங்களையும் நானே இழுத்துப்போட்டுச் செய்வதென்றால் நிச்சயம் நடக்காது. எனவே ஒவ்வொரு திட்டத்துக்கும் தனித்தனியாக ஐந்து ஆண்களும், ஐந்து பெண்களும் கொண்ட ஒரு செயல்திட்டக் குழு (Task Force) உருவாக்குவேன். அந்த குறிப்பிட்டத் திட்டத்துக்கான முழுப் பொறுப்பை அவர்களிடம் கொடுத்து, அவ்வப்போது எனக்கு முன்னேற்ற அறிக்கை (Progress Report) தரச் சொல்வேன். எனது தலையீடு, உதவி தேவை என்றால் உடனடியாக என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்வேன். இந்த கூட்டுமுயற்சி நிச்சயம் பலிக்கும்.

[3] மக்கள் எனக்குத் தரும் அதிகாரத்தை பயன்படுத்தி அரசிடம் உரிய அனுமதிகள், உதவிகள் வாங்குவேன்.

[4] நாடாளுமன்றத் தொகுதி வளர்ச்சி நிதியை (நமது அம்மாக்களும், மனைவியரும் குடும்ப பட்ஜெட் போட்டு, திட்டமிட்டு கவனமாக செலவு செய்வது போல) பத்து பேர் குழுவின் உதவியோடு நேர்த்தியாக பயன்படுத்துவேன்.

[5] அரசின் பணத்தை, உதவிகளை மட்டும் நம்பிக்கொண்டிராமல், பொதுமக்கள் பங்களிப்பையும் கேட்டுப் பெறுவேன். தேவைப்பட்டால், மக்களோடு மக்களாக ரோட்டில் இறங்கி பிச்சை எடுப்பதற்கும் தயாராகயிருப்பேன்.

[6] வெளிநாடுகளில் வேலை பார்க்கும் குமரி மாவட்டத் தோழர்களின் உதவிகளையும், நேர்மையான தனியார் நிறுவனங்களின் உதவிகளையும் கேட்டுப் பெறுவேன். தங்கள் பணம் திருடப்படாமல் மக்களுக்கு, இளைய தலைமுறைக்கு, எதிர்கால சந்ததிகளுக்கு பயன்படுகிறது என்பது தெரிந்தால், உதவிகள் செய்வதற்கு பலரும் அணியமாகவே இருக்கிறார்கள்.

[7] செயல்திட்டக் குழுவும், நானும் திருட்டும், ஊழலும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம். இயலும்போதேல்லாம் நானே நேரில் சென்று மேலாண்மை செய்வேன்.

[8] எனது உடலுழைப்பு, நேரம், சக்தி, அதிகாரம் அனைத்தையும் மற்றும் என்னாலியன்ற சிறிய அளவு பணத்தையும் எனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற உண்மையாக, உறுதியாக பயன்படுத்துவேன்.

சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
மார்ச் 25, 2014
See More


Asif Meeran AJ

unread,
Mar 24, 2014, 11:12:01 PM3/24/14
to பண்புடன்

வெளிநாடுகளில் வேலை பார்க்கும் குமரி மாவட்டத் தோழர்களின் உதவிகளையும், நேர்மையான தனியார் நிறுவனங்களின் உதவிகளையும் கேட்டுப் பெறுவேன். 

ஸ்டாலினுக்கு செலவு இருக்கு​​

ஸ் பெ

unread,
Mar 24, 2014, 11:25:52 PM3/24/14
to panbudan
அண்ணாச்சி, அப்படி ஒரு சூழ்நிலையில் கண்டிப்பாக செய்வேன்... 


2014-03-25 4:12 GMT+01:00 Asif Meeran AJ <asifm...@gmail.com>:

ஸ்டாலினுக்கு செலவு இருக்கு​​




ராம் காமேஸ்வரன்

unread,
Mar 25, 2014, 9:22:46 AM3/25/14
to panb...@googlegroups.com
//தேவைப்பட்டால், மக்களோடு மக்களாக ரோட்டில் இறங்கி பிச்சை எடுப்பதற்கும் தயாராகயிருப்பேன்.//
 
அதுக்கு முன்னாடி பாயிண்டை பார்த்தால், தெருப் பிச்சைக்குப் பின்னால் தான் வெளிநாட்டு உதவி கேட்பார் போலத் தெரியுது.

காலப் பறவை

unread,
Mar 26, 2014, 5:38:23 PM3/26/14
to பண்புடன்

--

 
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்

-----------------------------------------------------------------------------------------------------


-----------------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
Apr 8, 2014, 12:48:36 PM4/8/14
to panbudan

மோடி அலை அல்ல. மோசடி அலை : உதயக்குமார் நேர்காணல்

APRIL 8, 2014 BY SAVUKKU 8 COMMENTS

Fb-Button

ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இடிந்தகரையை விட்டு வெளியே வந்துள்ளார் உதயக்குமார். சென்னைக்கு வந்திருந்த அவரை சவுக்கு சார்பாக எடுத்த நேர்காணல்.

அரசியலில் இருந்து முழுமையாக விலகி இருந்த அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு தற்போது ஆம் ஆத்மி கட்சியில் இணைய வேண்டிய கட்டாயம் என்ன? வழக்குகளில் இருந்து விடுதலை பெறுவதற்கான உத்தியா ?

_MG_4324 (Large)அணு உலைக்கு எதிரான போராட்டத்தைத் நாங்கள் தொடங்கும்போது எந்தக் காரணம் கொண்டும் அரசியலுக்கு வரமாட்டோம் என்று உறுதி அளித்து இருந்தோம். போராட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்றது. அப்போது தேசியக் கட்சிகள், மற்ற மாநிலங்களில் செயல்படும் கட்சிகள் என ஏறத்தாழ இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் எழுதி, தேசிய அணுசக்திக் கொள்கை நாடு முழுவதும் விவாதிக்கப்பட வேண்டும். வெளிப்படைத் தன்மை வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தோம். ஆனால், எந்தக் கட்சியிடம் இருந்தும் எங்களுக்கு பதில் வரவில்லை. கடிதம் கிடைத்தது என்று கூட எங்களுக்குப் பதில் வரவில்லை.

தமிழகத்தில் எங்களை ஆதரித்த விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் மீது நாங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தோம். அணு உலை விவகாரத்தில் அவர்கள் ஒரு போதும் எந்த சமரசமும் செய்து கொள்ளமாட்டார்கள் என்று நம்பினோம். ஆனால், தேர்தல் நெருங்கியதும் எங்களை விட்டுவிட்டு, எங்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகளோடு அவர்கள் உடன்பாடு செய்து கொண்டார்கள். நாங்கள் தனித்துவிடப்பட்டோம்.

ஒரே இடத்தில் முடக்கப்பட்டோம். போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்துச் செல்வது என்று தெரியவில்லை. மீண்டும் ஒரு பெரிய கிளர்ச்சியை நடத்தி, கைதாகி சிறைக்குப் போகலாம்.

ஆனால், அதனால் என்ன நேர்ந்துவிடும் ? இடிந்தகரைக்குள் போலீஸ் நுழைந்து போராட்டப் பந்தலை பிரித்துப் போட்டுவிட்டு போய்விடும். இதுநாள் வரை எங்கள் மக்கள் போராடிய போராட்டம், செய்த தியாகம், எதுவும் வெளி உலகிற்கு தெரியாமல் போய்விடும். இதைப் பற்றி எங்கள் மக்களோடு நாங்கள் விவாதித்து, இந்தப் போராட்டத்தை அரசியல் தளத்திற்கு கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.

அந்த நேரத்தில்தான், டிசம்பர் 28 அரவிந்த கெஜ்ரிவால் முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். அதற்கு மறுநாள் பிரஷாந்த் பூஷன் அவராகவே எங்களை வந்து சந்தித்து அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பு பற்றி எங்கள் மக்களிடம் விவாதித்தோம். ஐந்து நிபந்தனைகள் விதிப்பது என்று முடிவு செய்தோம். அவற்றை ஏற்றுக் கொள்வதாக ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எழுத்துப்பூர்வமாக பதில் அனுப்பினார்கள். அந்தப் பதிலையும் எங்கள் மக்கள் முன்னால் வைத்து விவாதித்தோம். அதன்பிறகு, அதில் அறுதிப்பெரும்பான்மை மக்களின் முடிவின்படி நாங்கள் எளிய மக்கள் கட்சியில் இணைந்தோம்.

அந்த முடிவுதான் இன்றுவரை எங்களை உயிர்ப்புடன் வைத்துள்ளது. அந்த முடிவை எடுத்திருக்காவிட்டால், என்றோ நாங்கள் நீர்த்துப் போய் இருப்போம். நீங்கள் எல்லாம் எங்களை முழுக்க மறந்திருப்பீர்கள். இந்த முடிவால் எங்கள் மக்களுக்கு கிளைப் பயன்களும் கிடைத்துள்ளன. போராடிக் கொண்டு இருக்கும் மக்களுக்கு போராட்டக் களத்தில் இருந்து தற்காலிக விடுதலை கிடைத்துள்ளது.

எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளுக்குப் பயந்து கொண்டு, நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று விமர்சிப்பவர்கள் ஒன்றை உணர வேண்டும். எங்கள் கொள்கைக்கு நேர் முரணாக நிற்கக்கூடிய ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் கால்களில் போய் நாங்கள் விழுந்துவிடவில்லை. நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல், இயங்கிக் கொண்டு இருக்கக்கூடிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு மாற்றாக செயல்படக்கூடிய ஒரு கட்சியில் எங்களை இணைத்துக் கொண்டுள்ளோம். இதில் எந்தத் தவறும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இதற்காக நிறைய பணம் கைமாறியதாக ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதே?

அணு உலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது எங்களுக்கு எத்தனை கோடிகள் விலை வைக்கப்பட்டன என்பது உங்களுக்குத் தெரியாது. நான் விரும்பும் நாட்டில் சகல வசதிகளுடன் குடும்பத்தோடு குடியேற்றுவதற்கு எனக்கு தூது அனுப்பப்பட்டது. அதற்கு இணங்காத நாங்களா பணத்திற்கு இப்போது இணங்கிவிடப்போகிறோம். ஆம் ஆத்மி கட்சி இதுவரை எங்களுக்கு பணம் எதுவும்

கொடுக்கவில்லை. இனிமேல் கொடுப்போம் என்றும் சொல்லவில்லை. நாங்களும் பணம் பற்றி எதுவும் கேட்கவும் இல்லை.

கூடங்குளம் அணு உலைப் போராட்டம் குறித்து பற்றி ஆம் ஆத்மியின் நிலைப்பாடு . அவர்கள் உங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களா ?

நாங்கள் விதித்த 5 நிபந்தனைகளில் இந்தக் கேள்வியைத்தான் முதல் நிபந்தனையாக வைத்திருந்தோம். அதற்கு எழுத்துப்பூர்வமாக அவர்கள் அளித்த பதில், “உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பும் சம்மதமும் இல்லாமல் அணுசக்தி திட்டம் உள்பட எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் நோக்கமும்” என்பது. எங்களுடைய போராட்டத்தை முழுமையாக அங்கீகரிப்பதாக உறுதியளித்தார்கள். எங்களுக்கும் அதில் திருப்தி. ஏனென்றால், நாங்கள் கூடங்குளம் அணு உலையை மட்டும் எதிர்க்கவில்லை. கல்பாக்கம் அனல் மின்நிலையம், தேனி தேவாரம் நியூட்ரினோ திட்டம், மதுரை வடபழஞ்சி, மீத்தேன், கெயில் என அனைத்தையும் எதிர்க்கிறோம். இந்தியாவின் அணு சக்தி கொள்கை பற்றி நாடு முழுவதும் பரந்துபட்ட விவாதம் நடத்தி அதன்பிறகுதான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் கொள்கையும். அதையே அவர்களும் உறுதியளித்தார்கள்.

அணு உலைப் போராட்டத்தில் ஜாதி, மதம் கடந்து உங்கள் பின்னால் மக்கள் இருந்தனர். மாற்றுக் கட்சிக்காரர்களும் உங்களை ஆதரித்தார்கள். தற்போது நீங்கள் ஆம் ஆத்மியில் சேர்ந்து ஒரு கட்சி சார்புடையவராக மாறி இருப்பது அந்த மக்களுக்கு செய்த ஓர துரோகம் இல்லையா?

கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், பி.ஜே.பி, தி.மு.க, அதிமுக போன்ற கட்சிகளோ அந்தக் கட்சிகளுடைய தொண்டர்களோ எங்களுடைய போராட்டத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. அவர்கள் போராட்டப் பந்தல் பக்கம் கூட ஒதுங்கவில்லை. ஆனால், மாநிலக்கட்சிகளான பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க.,வினர் எங்களை ஆதரித்தனர். ஆனால், அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அணு உலையை ஆதரிக்கக்கூடிய தி.மு.க.வுடனும், ம.தி.மு.க. மற்றும் பா.ம.க. அணு உலையை ஆதரிக்கக்கூடிய பி.ஜே.பி.யுடனும் கைகோர்த்துவிட்டனர். இதை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியும். மேலும், மற்றக் கட்சிக்காரர்கள் யாரையும் நாங்கள் இழுத்துப் போகவில்லை. எங்களோடு தோளோடு தோள் நின்ற மக்கள், அவர்கள் போராட்டத்தை யார் ஆதரிப்பார்களோ அவர்கள் பக்கம் வந்துள்ளனர். இதுவும் நான் தனியொருவனாக எடுத்த முடிவல்ல. ஜனநாயகப்பூர்வமான முறையில், சமுதாயத் தலைவர்களை ஒன்றுகூட்டி, எங்கள் மக்களோடு ஆலோசித்து எடுத்த முடிவு தான்.

எளிய மக்கள் கட்சியின் வேட்பாளரான உதயக்குமார் எளியவர் அல்ல… அவருக்கு ஏழு கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளதே…. ?

எளிய மக்கள் கட்சி என்பதன் அர்த்தம் எளிய மக்களுக்காக நிற்கிற கட்சி என்பதுதான். அந்தக் கட்சியின் கொள்கையைப் ஏற்றுக் கொண்டவர்கள் அதில் சேர்ந்து பணியாற்றலாம். அவர்கள் படித்தவர், ஏழை, பணக்காரர் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எளியமக்கள் கட்சி என்பதால், அதன் உறுப்பினர்களும் நிர்வாகிகளும் சைக்கிள் வைத்திருக்கக்கூடாது, நல்ல ஆடைகள் உடுத்தி இருக்கக்கூடாது, வீடு வைத்திருக்கக்கூடாது என்றெல்லாம் அர்த்தம் இல்லை.

ஏழு கோடி ரூபாய் சொத்து….

இந்த சொத்துக்கள் எனது பரம்பரை சொத்துக்கள். நான் இப்போது சம்பாதித்தவை கிடையாது. அந்த சொத்துக்களை நான் குறைத்து மதிப்பிட்டு மனுத் தாக்கல் செய்திருக்க முடியும். தற்போது சொத்துக் கணக்கை தாக்கல் செய்த பல வேட்பாளர்கள் சந்தை மதிப்பை விட குறைத்தே காட்டியிருக்கிறார்கள். ஆனால், நான் அந்த சொத்துக்களின் இன்றைய சந்தை மதிப்பை அப்படியே தாக்கல் செய்துள்ளேன். வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு, மத்திய புலனாய்வுத் துறை என்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அத்தனை துறைகளும், என்னை எப்படியாவது சிக்க வைக்க முடியுமா என்ற கடந்த மூன்று ஆண்டுகளாக விசாரித்து வந்துள்ளனர். ஆனால், நான் சட்டவிரோதமாக எந்த காரியத்தையும் செய்ததாக அவர்களால் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. நானும் போராட்டக் குழுவினரும் உண்ணாவிரதம் இருந்தபோதே, நாங்கள் சாப்பிட்டு விட்டு உண்ணாவிரதம் இருக்கிறோம் என்று பொய்ப்பிரச்சாரம் செய்தனர். அது போலத்தான் என் மீது தற்போது தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டும்.

ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ், பி.ஜே.பி.க்கு மாற்று என்று சொல்கிறீர்கள் ? ஆனால், ஆம் ஆத்மி கட்சி பல்வேறு விஷயங்களில் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வில்லையே ?

ஆம் ஆத்மி கட்சி தொடக்க நிலையில் இருக்கிற கட்சி. அதன் கொள்கைகள் இன்னும் முழுமையாக வரையறுக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், ஆண்டாண்டு காலமாக இந்தியாவில் இருக்கிற மற்றக் கட்சிகளுக்கு எல்லாம் தெளிவான கொள்கை ஒன்று உள்ளதாக நீங்களாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள். இன்று இந்தியாவில் இருக்கக்கூடிய எந்தக் கட்சிக்காரனையாவது அழைத்து அவருடைய கட்சியின் கொள்கை பற்றிப் பேசச் சொல்லுங்கள் பார்க்கலாம். தலைவர்களுக்கே தங்கள் கட்சியின் கொள்கை என்னவென்று தெரியாத காலம் இது. அண்ணா நாமம் வாழ்க என்பது ஒரு கட்சியின் கொள்கை. அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்பது மற்றொரு கட்சியின் கொள்கை. இயன்றதைச் செய்வோம் இல்லாதவருக்கே என்ற கோஷம் ஒரு கட்சிக்கு. இதெல்லாம் கொள்கைகளா?

ஆனால், இந்தக் கட்சிகளோடு ஒப்பிடும் போது, ஆம் ஆத்மி ஒரு குழந்தை. குழந்தை இப்போதே ஏன் மாரத்தானில் ஓடமாட்டேன் என்கிறது என்று கூச்சல் போடுவது சரியல்ல. அது தவழ வேண்டும். நடை பழக வேண்டும். அதன்பிறகு தான் ஓடும். தற்போது ஆம் ஆத்மியில் கொள்கைகள் குறித்த விவாதம் நடைபெறுகிறது. அதில் எங்களுடைய பங்களிப்பும் இருக்கிறது. குறிப்பாக மீனவர் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, நதி நீர் இணைப்பு, சமூக நீதி, சிறுபான்மையினர் உரிமை, தாது மணல் கொள்ளை உள்ளிட்ட விஷயங்களில் கட்சி ஒரு நிலைப்பாடு எடுக்கும்போது எங்களின் கருத்துக்களை கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று நாங்கள் சொல்லி இருக்கிறோம். கொள்கை வகுப்பதை பொறுத்தவரை அதற்கு இன்னும் பத்து வருடங்கள்கூட ஆகலாம்.

உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

வெற்றி வாய்ப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதற்காகவோ அல்லது தோற்றுவிடுவோம் என்ற அச்சத்திலோ நான் தேர்தலில் போட்டியிடவில்லை. பொருளாதாரக் கொள்கை, ராணுவக் கொள்கை, அணுசக்திக் கொள்கை என தேசியக் கொள்கைகள் அனைத்திலும் ஒரு தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது. ஏனென்றால், இந்தக் கொள்கை முடிவுகளை எடுப்பதில் இதுவரை ஆட்சியில் இருந்த காங்கிரஸும் பி.ஜே.பி.யும் முற்றிலுமாக தோற்றுவிட்டன. இப்போது ஒரு மாற்று தேவை. அந்த மாற்றை நாங்கள் முன்வைக்கிறோம். அதற்கு ஆதரவாக நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன். இந்த நாட்டை மீண்டும் பழைய அரசியல் வியாபாரிகளிடமே கொடுத்து உங்களின் எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வையும் நசுக்கப்போகிறீர்களா? அல்லது மாற்று அரசியலுக்காக விளைந்து நிற்கிற எங்களை ஆதரிக்கப்போகிறீர்களா? என்ற கேள்வியை முன்வைத்து நான் போட்டியிடுகிறேன். இதன் முடிவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கும்போது தெரிந்து கொள்ளலாம்.

கோடிக்கணக்கில் வாரி இறைக்கும் பெரிய கட்சிகளுக்கு மத்தியில் நீங்கள் தேர்தல் செலவுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

IMG_5220 (Custom)

மக்களிடம் வரி பிரிக்கிறோம். வேட்பாளர் என்ற முறையில் நான் சற்று கணிசமான தொகையை செலவழிக்கிறேன். அதற்கு கூடுதலாக நான் ஒரு பைசா செலவு செய்யமாட்டேன் என்பதையும் கட்சிக்கு தெளிவுபடுத்தி இருக்கிறேன். எனக்கு சொத்துக்கள் இருப்பது உண்மைதான். ஆனால், அந்த சொத்துக்கள் தினம்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டித் தரக்கூடிய சொத்துக்கள் அல்ல. எனக்கு 54 வயதாகிவிட்டது. இந்த நேரத்தில் என்னிடம் இருக்கும் சொத்துக்களை எல்லாம் விற்று தேர்தலில் போட்டியிட்டு அதன்பிறகு நான் விற்ற சொத்துக்களைவிட பலமடங்கு திருடி வாங்கும் திட்டமும் எனக்குக் கிடையாது. என்னால் எதை சமாளிக்க முடியுமோ அதை நான் செலவழிக்கிறேன்.

விளம்பரம் மற்றும் பிரச்சாரங்களில் மற்றக் கட்சிகளுடன் எங்களால் நிச்சயமாக போட்டியிட முடியாது. நாங்கள் மக்கள் கூடும் இடங்களில் பேசப்போகிறோம். முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்களைப் போய் சந்திக்கிறோம். அவர்களுக்கு மாற்று அரசியல் பற்றி புரியவைத்துப் பேசுகிறோம். அவர்களும் நன்றாகப் புரிந்து கொள்கிறார்கள். அது ஒரு உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளாக இருக்கிறது. வர்த்தகர்கள், மீனவர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்களைச் சந்தித்து அவர்கள் தொடர்பான பிரச்சினைகளையும் பேசுகிறோம்.

உச்ச நீதிமன்றம் சொன்னதுபோல், உங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படவில்லையே. இதில் தமிழக அரசின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழக அரசின் ஏமாற்று வேலை. உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் மே 6ம் தேதி தீர்ப்புச் சொல்லும்போது அத்தனை வழக்குகளையும் அணு உலை தொடர்பாக அந்த மக்களின் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும் என்று தீர்ப்புச் சொன்னது. அப்படியில்லாமல் 248 வழக்குகளை மட்டும் வாபஸ் வாங்க வேண்டும் என்று சொல்லவில்லை. தமிழக அரசு எங்களை கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக நடத்தும் ஒரு நாடகம். ஆனால், மீதமிருக்கும் நூற்றிச் சொச்சம் வழக்குகளைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. அதில் எங்களுக்குத் தூக்குத்தண்டனை கிடைக்கும் என்றால் கிடைத்து விட்டுப் போகட்டும்.

ஆம் ஆத்மி கட்சியில் வட இந்திய அடையாளங்கள் நிறைய இருக்கின்றன. தமிழகத்தில் எடுபடுமா? இல்லை இங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு ஏதேனும் மாற்றங்கள் கொண்டு வரப்படுமா?

தமிழகத்தில் எளிய மக்கள் தலைப்பாகை கட்டுகிறார்கள். நானும் அதையே விரும்புகிறேன். அவர்கள் தற்போது பயன்படுத்தும் குல்லாய் நமக்கு அந்நியமாக இருக்கிறது. நான் அது பற்றி அவர்களிடம் பேசி வருகிறேன். அதுபோல், தனிப்பட்ட நபரை முன்நிறுத்துவது, வட இந்திய சிந்தாந்தத்தை முன்னிறுத்துவது கூடாது என்று இங்குள்ளவர்களிடம் வலியுறுத்தி வருகிறேன். இதுபோல், சிற்சில மாற்றங்களை கொண்டுவருவது குறித்து பேசி வருகிறேன். துடைப்பம் சின்னத்தைப் பொறுத்தவரை அது அப்படியே இருக்கட்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமும். குப்பைகளை அப்புறப்படுத்தும் ஆயுதம் அல்லவா அது.

மோடி அலை மற்றும் வலுவாக அமைந்துள்ள பாரதிய ஜனதாக் கூட்டணி பற்றி?

அது மோடி அலை அல்ல. மோசடி அலை. நான் பார்த்தவரை மோடி அலையும் இல்லை. வலையும் இல்லை. நிறைய பணம் வைத்திருக்கிறார்கள். அதைப்போட்டு பாப்புலாரிட்டி உருவாக்குகிறார்கள். பாரதிய ஜனதாக் கட்சியில் இருக்கும் தே.மு.தி.க.வின் அரசியல், பா.ம.க., ம.தி.மு.க.வின் அரசியலை எல்லாம் தமிழக மக்கள்

ஏற்கனவே நன்கு அறிந்தவர்கள். இனியும் அவர்களிடம் ஏமாற மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
Jun 11, 2014, 4:01:30 PM6/11/14
to panbudan

சிறையோ, சாவோ, எதுவோ வரட்டும்!

இந்திய உளவுத் துறை (IB) பிரதமர் அலுவலகத்துக்கு ஓர் அறிக்கை கொடுத்திருக்கிறார்களாம். அதாவது தொண்டு நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கிறார்கள், வளர்ச்சித் திட்டங்களுக்கு குறுக்கே நிற்கிறார்கள், மதமாற்றத்துக்கு வழி வகுக்கிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டியிருக்கிறார்களாம். இரண்டு இடங்களில் எனது பெயரைக் குறிப்பிட்டு, அமெரிக்காவில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தோடு எனக்குத் தொடர்பு இருந்ததாகவும், நான் அவர்களுக்கு தொடர்ந்து அறிக்கை சமர்ப்பித்ததாகவும் தவறாக எழுதியிருக்கிறார்கள். ஓஹையோ மாநில பல்கலைக்கழகத்தில் (Ohio State University, Columbus, OH) இயங்கிய கிர்வான் ஆய்வு நிலையத்தின் (Kirwan Institute for the Study of Race and Ethnicity) சர்வதேச ஆய்வு வல்லுனராக (Research Fellow) நான் பணி புரிந்தேன். இந்தியாவிலிருந்தபடியே உலகமயமாதல், இன வேறுபாடுகள், சிறுபான்மை அரசியல், பிரிக்ஸ் அமைப்பு போன்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொடுத்தேன். இந்தியாவின் அணுசக்தி பற்றியோ, வளர்ச்சி பற்றியோ நாங்கள் எந்த ஆய்வும் செய்யவில்லை.

நான் அமெரிக்காவில் 1997 முதல் 2001 வரை மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் Institute on Race and Poverty, University of Minnesota எனும் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதன் தலைவராக செயல்பட்ட பேராசிரியர் ஜான் பவல் கிர்வான் ஆய்வு நிலையத்தின் தலைவராகப் பொறுப்பு ஏற்றபோது, என்னை அவரது புதிய முயற்சிக்கு உதவும்படிக் கேட்டுக் கொண்டார். வேலை செய்த நேரத்துக்கு ஏற்ற மாதிரி சம்பளம் கொடுத்தார்கள். ஆனால் IB ஆட்கள் வேறுமாதிரி திரித்து கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல ஜெர்மனி நாட்டைச் சார்ந்த ராய்னர் தனது மடிக்கணினியில் இந்தியாவின் அணுசக்தி நிறுவனங்களை ஒரு வரைபடத்தில் குறித்து வைத்திருந்தாராம், அதை நான் உட்பட பலருக்கு அனுப்பிக் கொடுத்தாராம். இப்படியெல்லாம் IB தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். இவர் ஹிப்பி போன்று உலகம் சுற்றித் திரிபவர். நாகர்கோவிலில் சந்தித்த பிறகு, எங்கள் நிகழ்வுக்கு வருவார். வேறு எந்தத் தொடர்பும் இருந்தது இல்லை. பிப்ருவரி 27, 2012 அன்று இந்தியாவை விட்டு அவர் வெளியேற்றப்பட்டபோதே நான் கேட்டேன். அவர் தவறு செய்திருந்தால் ஏன் நடவடிக்கை எடுக்காமல் அவசரம் அவசரமாக வெளியேற்றுகிறீர்கள் என்று. இப்போது புதிய கதை சொல்லுகிறார்கள்.

உளவுத் துறையும், மத்திய அரசும் ஒரு சில விடயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்:

[1] சாதாரண மக்களான மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும், மற்றவர்களுக்கும் சிந்திக்கவும், சீர்தூக்கிப் பார்க்கவும் தெரியும். தங்கள் மண்ணில் ஓர் அழிவுத் திட்டம் வரும்போது, அதை எதிர்த்து ஒரு நிலைப்பாடு எடுக்கவும் அவர்களுக்குத் தெரியும்.

[2] அந்த சக்தியற்ற மக்களின் மண்ணையும், நீரையும், காற்றையும், உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பையும், வருங்காலத்தையும் மீட்பதற்காக எங்களில் சிலர் எழுந்து நிற்கும்போது, எங்களை அந்நிய நாட்டின் கைக்கூலிகள், கடத்தல்காரர்கள், ஹவாலாப் பேர்வழிகள் என்று கொச்சைப்படுத்துவது மிகவும் தவறு. இந்த மக்களையும், இந்த நாட்டையும் நேசிப்பதால்தான் நாங்கள் இதனைச் செய்கிறோம்.

[3] நேர்மையான, பொறுப்பான, சட்டத்தை மதிக்கும் எங்களை இப்படி அசிங்கப்படுத்தினால், அது நமது இளைஞர்களுக்கு தவறான செய்தியைக் கொடுக்கும்; அவர்கள் வன்முறையிலும், தீவிரவாதத்திலும் நம்பிக்கை கொள்ளச் செய்யும்.

உளவுத் துறையின் இந்த பாசிச நோக்கும், போக்கும் என்னைப் போன்ற தனிநபர்கள், குழுக்கள், மக்கள் இயக்கங்கள், சிறுபான்மையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான முன்னேற்பாடுகள் என்று நினைக்கிறேன். எனது பெயரைக் குறிப்பிட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதால் எனது உயிருக்கும், எனது குடும்பத்தார் பாதுகாப்புக்கும் ஊறு விளையுமோ என்று அஞ்சுகிறேன்.

நான் நேர்மையானவன், வெளிநாடுகளிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டுப் போராடவில்லை என்று எத்தனயோ முறை சொல்லிவிட்டேன். சீதாப்பிராட்டிப் போல தீயிலாக் குதிக்க முடியும் இனி? பாரதியார் சொல்வது போல, “சிந்தையொன்று இனியிலை, எது சேரினும் நலமெனத் தெளிந்துவிட்டேன்.”

சிறையோ, சாவோ, எதுவோ வரட்டும்!

சுப. உதயகுமாரன்

நாகர்கோவில்
யூன் 11, 2014

Naresh Kumar

unread,
Jun 12, 2014, 2:42:59 AM6/12/14
to பண்புடன்
ஐ பி யின் ரிப்போர்ட் உதயகுமாரை மட்டும் குறி வைக்க வில்லை. கிரீன்பீஸ் நிறுவனத்தையும் குறிவைத்துள்ளது! 

நாட்டின் பொருளாதரத்திற்கு முட்டுக்கட்டை என்று வார்னிங் குரல் எழுப்பியிருக்கிறது... 

தியாகு

unread,
Jun 12, 2014, 3:08:23 AM6/12/14
to பண்புடன்
//1] சாதாரண மக்களான மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும், மற்றவர்களுக்கும் சிந்திக்கவும், சீர்தூக்கிப் பார்க்கவும் தெரியும். தங்கள் மண்ணில் ஓர் அழிவுத் திட்டம் வரும்போது, அதை எதிர்த்து ஒரு நிலைப்பாடு எடுக்கவும் அவர்களுக்குத் தெரியும்.//

but they can think their own life only the NGO must give alternative solution to the electricity demand unless stop the project


2014-06-12 12:12 GMT+05:30 Naresh Kumar <meet...@gmail.com>:
ஐ பி யின் ரிப்போர்ட் உதயகுமாரை மட்டும் குறி வைக்க வில்லை. கிரீன்பீஸ் நிறுவனத்தையும் குறிவைத்துள்ளது! 

நாட்டின் பொருளாதரத்திற்கு முட்டுக்கட்டை என்று வார்னிங் குரல் எழுப்பியிருக்கிறது... 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
தியாகு

-

ஸ் பெ

unread,
Oct 10, 2014, 5:13:42 PM10/10/14
to panbudan

திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்...

அக்டோபர் 10, 2014

முனைவர் சுப. உதயகுமாரன்


நாகர்கோவில்

திரு. ரஜினிகாந்த் அவர்கள்
போயஸ் கார்டன், சென்னை

அன்பார்ந்த ஐயா:

வணக்கம். எனது பெயர் சுப. உதயகுமாரன்; நான் ஒரு சமூகப் போராளி. தாங்கள் நடித்த பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும் போன்ற திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். தாங்கள் ஒரு நல்ல மனிதர், ஆன்மீக ஈடுபாடு கொண்டவர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தாங்கள் நேரடி அரசியலில் ஈடுபடவிருப்பதாகவும், அது குறித்து தங்கள் ரசிகர் மன்றத் தோழர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. ஓர் இந்தியக் குடிமகன் என்ற முறையில் தேர்தல் அரசியலில் ஈடுபடவும், அதற்கான ஆயத்தங்கள் செய்துகொள்ளவும் தங்களுக்கு முழு உரிமை இருக்கிறது.

ஆனாலும் தமிழகத்தின் வாக்காளர் என்ற முறையில் எனது சொந்தக் கருத்துக்கள் சிலவற்றை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

தங்கள் சொந்த மாநிலமான கர்நாடகத்திலிருந்து வேலை நிமித்தம் இங்கே தமிழகத்துக்கு வந்தீர்கள். கடினமாக உழைத்து ஓர் உயர்ந்த நிலையையும் அடைந்தீர்கள். தங்கள் நடிப்பை தமிழக இளைஞர்கள் விரும்பி, தங்களை ஆதரித்து மாபெரும் வெற்றிபெறச் செய்தனர். கேளிக்கையும், வேடிக்கையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இந்த உறவை மாற்றியமைத்து தமிழ் மக்களை வழிநடத்துவதற்கும், வருங்காலத்தை அமைத்துக் கொடுப்பதற்குமான அனுமதியாக தாங்கள் பார்க்கக்கூடாது.

திரைப்படத்துறையினர் தமிழக அரசியலில் புகுந்து, அசிங்கத்தையும், அவலத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். தமிழக அரசியல் அறிந்த அனைவரும் இதனை ஆமோதிப்பார்கள். நடிகர் அரசியல்வாதிகளையும், அரசியல் நடிகர்களையும் ஒட்டுமொத்தமாக விரட்டினாலொழிய தமிழினத்துக்கு விடிவு கிடையாது எனக்கொண்டு, கோடம்பாக்கத்துக்கும் கோட்டைக்குமான தொடர்பை அறுத்தெறிய என் போன்ற பலர் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும்போது, தாங்கள் பொதுவாழ்வுக்கு வருவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகிறது.

தமிழ் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து கொழுத்துவிட்டு, மாநிலத்தின் பிரச்சினைகள் எதையும் கண்டுகொள்ளாது, எந்தப் பிரச்சினையிலும் ஒரு நிலைப்பாடு எடுக்காது, தங்கள் சுயநலன்களை மட்டுமேப் பேணிக்கொண்டு, தமிழ் மக்களின் முதுகுகளில் ஏறி அரசியல் அதிகாரமும் பெற்று மக்களைத் தொடர்ந்து ஏய்த்துக் கொண்டிருக்கும் சினிமாத் துறையே தமிழினத்தின் முதல் எதிரி என்று நான் உறுதியாக நினைக்கிறேன். தங்கள் விடயத்திலும் இது உண்மை என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

தமிழகப் பொதுவாழ்வில் இந்தத் துறையினரின் ஆதிக்கம் முடிவுக்கு வராதா என்று நாங்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தங்களின் அரசியல் வருகை தமிழ் மக்களை பெரும்புயலாகத் தூக்கிச் செல்லாது என்றாலும், ஒரு பின்னடைவை ஏற்படுத்தலாம். பாரதீய ஜனசங்க காலத்திலிருந்தே முயன்றும், தமிழகத்தில் ஒரு கல்லைக்கூட அசைக்கமுடியாத ஒரு மதவாதக் கட்சி தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் சில அரசியல் மாற்றங்களை பயன்படுத்தி தங்கள் தோளில் ஏறி கரைசேர விரும்புகிறது. அதேபோல வாழ்நாள் முழுவதும் தாங்களுக்காக உழைத்து தங்கள் வாழ்க்கையை இழந்துநிற்கும் ரசிகர்கள், தங்களால் ஓர் அரசியல் முக்கியத்துவம் வராதா, அதிகாரம் கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கின்றனர். இவர்கள் எல்லோருமே தமக்கு ஓர் அரசியல் வாழ்வை ஏற்படுத்திக்கொள்ள தங்களை பயன்படுத்தப் பார்க்கின்றனர்.

இதனால் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை தாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கர்நாடகத்தில் காலூன்றியிருக்கும் பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தில் எத்தனை தலைமுறையானாலும் தலைதூக்காது. செல்லாக்காசான இந்தக் கட்சியில் சேர்ந்து தாங்கள் எங்கேயும் போய்ச்சேர முடியாது. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரையும், அதன் காரணமாக இந்தியா முழுவதும் பெற்றிருக்கும் “சூப்பர் ஸ்டார்” எனும் புகழையும் இழந்து விடுவீர்கள். தங்களின் இனப் பின்புலம் கேள்விக்குள்ளாக்கப்படும். இந்தியர் ஒருவரை மணந்து, இந்தியாவை தாயகமாக ஏற்று, இந்தி மொழியினை சரளமாகப் பேசி, இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்ட பிறகும், திருமதி சோனியா காந்தி இந்திய தலைமைப் பொறுப்பை ஏற்பதை பெரும்பாலான இந்தியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதே போல, கன்னடத்துக்காரரான தாங்கள், தமிழகத்துக்கு தலைவராவதை தமிழர்கள் பலர் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

இதனை இனவெறி என்று தாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. நடிகர் ராஜ்குமார் விவகாரம் முதல் எத்தனையோ பிரச்சினைகளில் தாங்கள் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகள், நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய தாங்கள் தமிழ் மக்கள் இன்னல் களைய எதுவும் செய்யாத நிலை என பல விடயங்கள் மக்களால் பேசப்படும், அலசப்படும். இம்மாதிரியான பல கேள்விகளுக்கு தாங்கள் பதில் சொல்ல வேண்டிவரும்.

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, மலேசியாவில் தமிழர்கள் மத்தியில் பேசிய நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் தமிழர்களுக்கு இப்படி அறிவுரைத்தார்: “நீங்கப் பாக்குறீங்க. அக்ட் நல்லா செய்றோம். சந்தோசப்பட்டுக்கிட்டுப் போங்கோ. கோவிலுக்குள் போறீங்கோ, சாமியைக் கும்பிடுங்கோ, மரியாதையா வெளியே வாங்கோ. சாமிகிட்டேயே உக்காந்துக்கிட்டு குடும்பம் நடத்தாதீங்க. நல்லாருக்காது. அதேமாதிரி எங்களப் பார்த்தா அபிப்பிராயம், நல்லாருக்குன்னு சொல்லிட்டுப் போயிடணும். அதனால நாங்கதான் பெரிசுண்ணும், காலம்பூரா எங்களையேவா நெனச்சுக்கிட்டு இருக்கிறது.” இந்த அறிவுரை தங்கள் ரசிகர்களுக்கும், பெரும்பான்மையான தமிழகத் தமிழர்களுக்கும் பொருந்தும்.

சினிமாக்காரர்கள் தலைவராவது பற்றி, எம். ஆர். ராதா அவர்கள் இப்படிச் சொன்னார்: “உங்களுடைய பணத்தாலே முன்னேறியக் கூட்டம் சினிமாக்காரர்கள். நீங்கள்தான் எங்களுக்குத் தலைவர்கள். அதை விட்டுட்டு எங்களை தலைவராக்கிட்டு ரொம்பப் பேரு இருக்காங்க. அந்த நிலைமை மக்களுக்கு வரக்கூடாது.” இதையும் மீறி ஒரு நடிகர் தலைவராக விரும்பினால், ராதா அவர்கள் அறிவுரைத்தார்: “ஜெயிலுக்குப் போய்ட்டு அப்புறம் அரசியலுக்கு வரணும். அரசியல் நடத்துறதா இருந்தா மொதல்ல ஜெயிலுங்கிற காலேஜில போய் படிக்கணும்.”

தங்கள் வாழ்வாதாரங்களைக் காக்கவும், வாழ்வுரிமைகளை மீட்கவும், வருங்காலத்தைப் பேணவும் தமிழகமெங்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஏதாவது ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டு எங்களோடு ஜெயிலுக்கு வாருங்கள். சேர்ந்து படிப்போம். பட்டறிவும், பாங்கான தகுதிகளும் பெற்ற பிறகு, அரசியலுக்கு வாருங்கள். தங்களை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் சினிமாப் புகழை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, பல்லக்குத்தூக்கிகள் துணையோடு தலைவராக எத்தனித்தால், தங்களை கீழேத் தள்ள என்னாலான அனைத்தையும் செய்ய நான் உறுதி பூணுகிறேன். தங்களின் பிரபலம், பணபலம், படைபலத்தில் ஒரு விழுக்காடுகூட எனக்குக் கிடையாதுதான். ஆனால் தமிழன் எனும் செருக்கும், தமிழினம் காக்க விரும்பும் அடிவயிற்று நெருப்பும் நிறையவே இருக்கின்றன.

தங்கள் அன்புள்ள,

Ahamed Zubair A

unread,
Oct 10, 2014, 5:56:29 PM10/10/14
to பண்புடன்

:))))))

Comedy....

அத்தைக்கு மீசை முளைக்கட்டும்...

R.VENUGOPALAN

unread,
Oct 11, 2014, 1:46:26 AM10/11/14
to பண்புடன்
2014-10-11 3:26 GMT+05:30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:

:))))))

Comedy....

அத்தைக்கு மீசை முளைக்கட்டும்...



எனக்குத் தெரிஞ்சு நிறைய அத்தைங்க மீசையோட இருக்காங்க. மஞ்சள் தேய்ச்சுக் குளிச்சாத்தானே...? :-)

Jaisankar Jaganathan

unread,
Oct 11, 2014, 1:47:24 AM10/11/14
to panb...@googlegroups.com
//எனக்குத் தெரிஞ்சு நிறைய அத்தைங்க மீசையோட இருக்காங்க. மஞ்சள் தேய்ச்சுக் குளிச்சாத்தானே...? :-)//

மீசை முடி இருக்குறது உங்களூக்கு எப்படி தெரியும்? கிட்ட போய் பாத்தீஙக்ளா சேட்டை

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

R.VENUGOPALAN

unread,
Oct 11, 2014, 1:54:39 AM10/11/14
to பண்புடன்
2014-10-11 11:17 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
//எனக்குத் தெரிஞ்சு நிறைய அத்தைங்க மீசையோட இருக்காங்க. மஞ்சள் தேய்ச்சுக் குளிச்சாத்தானே...? :-)//

மீசை முடி இருக்குறது உங்களூக்கு எப்படி தெரியும்? கிட்ட போய் பாத்தீஙக்ளா சேட்டை

முடி இருக்கிறதை தூரத்துலேருந்தும் பார்க்கலாம். மூளை இருக்கான்னுதான் பக்கத்துலே இருந்தும் புரிஞ்சுக்க முடியாது. 

Jaisankar Jaganathan

unread,
Oct 11, 2014, 1:56:17 AM10/11/14
to panb...@googlegroups.com
ஆத்தாடி. என்னா இது? கண்ணாடிய பாத்தா தெரியுமே சேட்டை. உங்க உருவம். அ 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

Ahamed Zubair A

unread,
Oct 11, 2014, 2:22:19 AM10/11/14
to பண்புடன்
Mr. Jai,

I don't understand... What is going through your mind.... Better take some rest... Please keep away from internet..

Regards,
Ahamed Zubair 

Jaisankar Jaganathan

unread,
Oct 11, 2014, 2:25:11 AM10/11/14
to panb...@googlegroups.com
நன்றி. சுபைர் அவர்களே. இன்றிலிருந்து ரெஸ்ட். இன்னும் கொஞ்ச நாளைக்கு ரீடராக இருக்கிறேன்

ஹாஜா மொஹைதீன்

unread,
Oct 11, 2014, 6:06:01 AM10/11/14
to panb...@googlegroups.com

2014-10-11 9:25 GMT+03:00 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
நன்றி. சுபைர் அவர்களே. இன்றிலிருந்து ரெஸ்ட். இன்னும் கொஞ்ச நாளைக்கு ரீடராக இருக்கிறேன்

​no chance ​


என்றென்றும் அன்புடன்
அபு அப்துல்லாஹ் (ஹாஜா மொஹைதீன்)

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422

துரை.ந.உ

unread,
Oct 11, 2014, 6:16:50 AM10/11/14
to பண்புடன்
உண்மைல்யே உமக்கு ஏதோ உளவியல் சிக்கல் இருக்கு ஜெய்... இப்பவே கவனிச்சா (எல்லாருக்கும்) நல்லது ...

# உமக்கும் அப்படித்தான்னு பதில் வரப்போகுதுன்னு தெரிஞ்சும் ..உம்ம நலனுக்காகப் போட்ட பதில் )

 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

ஹாஜா மொஹைதீன்

unread,
Oct 11, 2014, 6:18:44 AM10/11/14
to panb...@googlegroups.com

2014-10-11 13:16 GMT+03:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
# உமக்கும் அப்படித்தான்னு பதில் வரப்போகுதுன்னு தெரிஞ்சும் ..உம்ம நலனுக்காகப் போட்ட பதில் )

Jaisankar Jaganathan

unread,
Oct 11, 2014, 6:23:55 AM10/11/14
to panb...@googlegroups.com
அண்ணே

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை துரை அண்ணே. என் குழும நண்பர்கள்(பண்புடன் தவிர்த்து) எல்லாம் வெறும் மொக்கை. அதே ஞாபகத்தில் இதிலும் பதில் போட்டுடுறேன்

ஸ் பெ

unread,
Oct 17, 2014, 2:17:49 AM10/17/14
to panbudan

ஆம் ஆத்மியும் நானும்

சுப. உதயகுமாரன்
நாகர்கோவில்

அக்டோபர் 16, 2014

ஆம் ஆத்மி கட்சியோடான எனது உறவை மாற்றியமைத்திருக்கிறேன். செப்டம்பர் 19, 2014 அன்று நெல்லை மாவட்டம் காவல்கிணறைச் சார்ந்த தம்பி ஸ்டீபன் அமிர்தராஜ் மற்றும் பிகார் நண்பர் குமார் சுந்தரத்தோடு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களை தில்லியிலுள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினேன். தமிழகத்திலும், கேரளத்திலும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க வேலைகளை முனைப்புடன் செய்து கொண்டிருப்பதால் கட்சிப் பொறுப்புக்களை என்னால் ஏற்க முடியாது. அதுபோல இவ்விரண்டு மாநிலங்களிலும் பல தரப்பு மக்களோடு இணைந்து வேலை செய்ய வேண்டியிருப்பதால், ஒரு கட்சியோடு என்னை அடையாளப்படுத்திக் கொள்வது உகந்ததல்ல எனும் நிலையையும் விளக்கிச் சொன்னேன்.

ஆம் ஆத்மி கட்சி இந்தியாவின் அணுசக்திக் கொள்கை பற்றி ஒரு தெளிவான, வெளிப்படையான நிலையை எடுக்கவில்லை, கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை இந்தப் பிரச்சினை குறித்து எதுவும் சொல்லவில்லை எனும் எனது ஆதங்கங்களைப் பதிவு செய்தேன். இருவருமாக மனந்திறந்து நடத்திய ஒரு விவாதத்துக்குப் பிறகு, தமிழகத்திலும், கேரளத்திலும் நான் சுதந்திரமாக இயங்குவது என்றும், தில்லி சட்டமன்றத் தேர்தல் நடக்கும்போது நான் கட்சிக்காக என்னாலான வேலைகளைச் செய்வதாகவும் ஒத்துக் கொண்டோம்.

ஆம் ஆத்மியோடான உறவை ஒட்டுமொத்தமாக அறுத்துக்கொள்ள விரும்பாததற்கு பல காரணங்கள் இருகின்றன. மதவாத பாரதீய ஜனதா கட்சிக்கும், ஊழல்வாத காங்கிரசு கட்சிக்கும் இந்திய அளவிலே ஒரு மாற்று தேவைப்படுகிறது என்று உறுதியாக நம்புகிறேன். தோழர் திருமாவளவன், தோழர் கணேசமூர்த்தி போன்றோர் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில் தில்லியிலே நமக்குத் தோழர்கள் வேண்டும் என்பதை உணர்கிறேன். கூடங்குளம், கல்பாக்கம், நியூட்ரினோ, மீத்தேன், கெயில், காவிரி, முல்லைப் பெரியார் உள்ளிட்ட அனைத்து தமிழர் பிரச்சினைகளும் தில்லியிலே முடிவு செய்யப்படுவதால், நாம் தனிமைப்பட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறேன். கேரளத்தையும் தமிழகத்தோடு இணைத்துக் கொள்வதற்கு காரணம் கூடங்குளம், நியூட்ரினோ பிரச்சினைகளில் அவர்கள் நம்மை ஆதரிப்பதால்தான். இம்மாதிரியான ஒத்துழைப்பின் மூலம், கேரளாவோடான பிற சிக்கல்களில் நியாயமான தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று கருதுவதால்தான்.

அரசியலில் முனைவர் பட்டம் பெற்று, கிரேக்க அரசியல் முதல் கட்டுடைப்பு (deconstruction) விழுமியம் வரை பயின்ற நான் ஓர் அரசியல் கட்சியில் சேர்ந்து, அவர்களின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, நடவடிக்கைகளுக்குத் தலைவணங்கி, தலைவர்களுக்கு ‘ஜே’ போட்டு அரசியல்வாதியாய் நடப்பேன், தேர்தலில் நிற்பேன், வீடு வீடாக வாக்கு சேகரிப்பேன் என்றெல்லாம் நான் கற்பனைசெய்ததுகூடக் கிடையாது. என்னை ஒரு பசுமைச் சிந்தனையாளன், தமிழ்த்தேசியன், சமத்துவவாதி, மனிதநேயன் என்று நினைத்துக்கொண்டிருக்கும் நான், கொள்கைகளில் தெளிவில்லாத ஆம் ஆத்மி கட்சியில் எப்படி நிலைத்திருக்க முடியும் என்ற குழப்பம் மனதில் ஓடிக்கொண்டேதான் இருந்தது. கேப்டன் கோபிநாத்தும், மீரா சான்யாலும் அங்கம் வகிக்கும் கட்சியில் நானும் எப்படி இயங்குவது என்று குழப்பமாக இருந்தது. ஆனாலும் மேதா பட்கர், தயாமணி பர்லா, சோனி சோரி, ரச்னா டிங்க்ரா, அனிதா பிரதாப், அலோக் அகர்வால் போன்ற போராளித் தோழர்களுடன் இணைந்து நின்றது ஒருவித மகிழ்ச்சியைத் தந்தது.

ஆம் ஆத்மி கட்சியோடு இணைந்து பயணிக்க தீர்மானித்தது குறித்த சில முக்கிய நிகழ்வுகளை இங்கே அட்டவணையிடுகிறேன்:

[1] செப்டம்பர் 2012
தமிழக அரசின், காவல் துறையின் மிகப் பெரிய அடக்குமுறைக்கு நாங்கள் ஆளானபோது அரவிந்த் கேஜ்ரிவால் இடிந்தகரைக்கு வந்தார்; தன்னந்தனியாக கூடங்குளம் காவல் நிலையம் சென்று எங்கள் மீதான வழக்குகள் பற்றி விசாரித்தார்; நாங்கள் ஏன் சரணடைய வேண்டும் என்று கேள்வி கேட்டார்.

[2] நவம்பர் 27, 2013
மதவாத, ஊழல் கட்சிகளான காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் மாற்றாக புது தில்லி மாநிலத் தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சிக்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்தது. இந்தியா ஒரு புதிய விடியலுக்காக ஏங்கி நிற்கும் வேளையில், நமக்கு புது கனவுகளும், புது பார்வைகளும், புது கருத்துக்களும், புது அணுகுமுறைகளும், புது தலைமையும் தேவைப்படுகின்றன. இந்த புது விடயம் புது தில்லியிலிருந்து துவங்கட்டும் என்று வாழ்த்தினோம்.

[3] டிசம்பர் 10, 2013
கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவான தமிழக அரசியல் கட்சிகளை நாடாளுமன்றத் தேர்தலில் கைகோர்த்து நிற்கவைக்க நாங்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில், டிசம்பர் 1௦, 2௦13 அன்று பிரசாந்த் பூஷண் இடிந்தகரைக்கு வந்து எங்களை ஆம் ஆத்மி கட்சியில் சேரும்படி அழைத்தார். அன்றைய தினமே எங்களின் நெல்லை நகர ஆதரவுக் குழுவையும், வேறு சில நண்பர்களையும் இணைத்துக் கொண்டு போராட்டக் குழுவினர் கலந்தாலோசித்தோம். ஐந்து நிபந்தனைகளைக் குறிப்பிட்டு அந்தக் கட்சி தலைமைக்கு ஒரு கடிதம் எழுதுவது என்று தீர்மானித்தோம்.

[4] சனவரி 6, 2014
ஆம் ஆத்மி கட்சியினரின் அழைப்பைப் பற்றியும், எங்கள் நிபந்தனைகள் பற்றியெல்லாம் போராட்டக் குழுவினரும், தோழர் சுந்தர்ராஜன், வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், தோழர் அரிமாவளவன் ஆகியோர் விவாதித்து ஒரு கடிதம் எழுதினோம். கட்சி அணுசக்திக் கொள்கை பற்றிய தங்கள் நிலையினைத் தெரிவிக்க வேண்டும்; கட்சிக்கு தமிழ் பெயர் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்; தமிழ் ஈழம், தமிழ் மீனவர் மீதான தாக்குதல், கடற்கரை கபளீகரம், தாதுமணற் கொள்ளை, சமூக நீதி, சிறுபான்மையினர் உரிமைகள் போன்ற தமிழகம் தொடர்பான பிரச்சினைகளில் எங்கள் உணர்வுகளைக் கேட்டுத்தான் முடிவுகள் எடுக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தோம்.

[5] சனவரி 12, 2014
இடிந்தகரையில் சமுதாயத் தலைவர்கள் கூட்டம் நடத்தினோம். இரண்டரை ஆண்டுகளாக அறவழியில் போராடி, அதிகார வர்க்கம் பெரிதாகக் கண்டுகொள்ளாத நிலையில், அரசியல் தளத்திற்குச் சென்றேனும் ஒரு விடிவை உருவாக்க இயலுமா என்று போராடிய மக்களும், நாங்களும் சிந்தித்தோம்.

[6] சனவரி 26, 2014
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோரம் மற்றும் உள்ளூர் சமுதாயத் தலைவர்கள் கூட்டம் இடிந்தகரையில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. சுமார் 2௦௦ பேர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களையும், தங்கள் ஊர் மக்களின் கருத்துக்களையும் தெரிவித்தனர். தென்தமிழக மக்களும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமும் சேர்ந்து நடத்திவரும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை அரசியல் தளத்துக்கு நகர்த்துவது என்றும், ஆம் ஆத்மியுடன் பேச்சு நடத்துவதும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு நகர்வையும், முடிவையும் போராட்டக் குழுவில், இடிந்தகரை ஊர் நிர்வாகக் குழுவில், பெண்கள் குழுமத்தில், இளைஞர்கள் மத்தியில், ஒட்டுமொத்த சமுதாயக் கூடுகையில் விவரித்து, விவாதித்து, விரிவாகப் பேசித்தான் முடிவெடுத்தோம். முழுக்க முழுக்க திறந்தவெளித் தன்மையுடன், சனநாயகப் பண்புடன், மக்கள் நலத்தை முன்னிறுத்தியே இயங்கினோம். பற்பல கூட்டங்கள், நீண்ட விவாதங்கள், கருத்து வேறுபாடுகள், குழப்பங்கள் என இந்த காலகட்டம் எளிதானதாகவோ, இனிமையானதாகவோ இருக்கவில்லை. தேர்தலில் சுயேச்சையாக நின்று குறைவான வாக்குகள் பெற்றால், போராட்டத்துக்கு பின்னடைவு ஏற்படும் என்று அஞ்சினோம். ஆம் ஆத்மியின் தில்லி வெற்றி; ஊழலுக்கும், நிர்வாகத் திறமையின்மைக்கும் எதிராக இந்திய மக்கள் எழுந்து நின்ற நிலை; போராட்டத்தை இடிந்தகரையிலிருந்து வெளியே எடுத்துச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்; நாங்கள் ஊரை விட்டு வெளியே வரவேண்டியத் தேவை – என பல விடயங்களை சிந்தித்துப் பார்த்தோம். கூடங்குளம் அணுஉலைப் பிரச்சினை தில்லியிலே முடிவு செய்யப்படுவது. தொங்கு பாராளுமன்றம் அமைந்து ஆம் ஆத்மி கட்சிக்கு 3௦-40 எம்.பி.க்கள் கிடைத்துவிட்டால் அதை பயன்படுத்தி நம் மக்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளலாமே என்ற ஆசையும் இருந்தது.

[7] பிப்ரவரி 12, 2014
“வேறு கட்சிகளோடு கூட்டணி அமைத்துக் கொள்ள இயலாது” எனக் குறிப்பிட்ட ஆம் ஆத்மி கட்சி, இதர நான்கு நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தது. பின்னர் இடிந்தகரை மக்கள், சமுதாயத் தலைவர்கள் போன்றோரோடு பலமுறை மிக விரிவாக விவாதித்துத்தான் ஆம் ஆத்மி கட்சியில் சேருவது என்றும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது என்றும் தீர்மானித்தோம்.

[8] மார்ச் 29, 2014
இடிந்தகரையிலிருந்து வெளியே வந்த அன்றைய தினமே தேர்தல் பரப்புரைத் துவங்கினோம். போதிய நேரமின்றி, பணமின்றி, தொண்டர்களின்றி, அனுபவமின்றி ஏப்ரல் மாதம் மூன்று வாரங்கள் தேர்தலுக்காகக் கடுமையாக உழைத்தோம். கூடங்குளம் அணுமின் நிலையைப் பிரச்சினையை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் சென்றோம்.

[9] யூலை 4, 2014
தோழர்கள் மை.பா., தயாமணி பர்லா, மு. பாஸ்கர், ஸ்டீபன் அமிர்தராஜ் போன்றவர்களோடு அரவிந்த் கேஜ்ரிவாலை அவர் வீட்டில் சந்தித்தேன். மனீஷ் சிசோடியா, அஷுதோஷ், சஞ்சய் சிங் போன்றோர் அவருடன் இருந்தனர். அரவிந்த் என்னைப் பார்த்து “தமிழகத்தில் கட்சியைத் தலைமையேற்று நடத்துங்கள்” என்று கேட்டுக் கொண்டார். மரியாதைக்காக ‘சரி’ என்று சொல்லிவிட்டு, முதலில் இதைப் பரிசீலனை செய்யுங்கள் என்று சொல்லி ஏற்கனவே தயாரித்துக் கொண்டுபோயிருந்த கோரிக்கை மனுவை அனைவரிடமும் கொடுத்தேன். அதில் கீழ்க்காணும் கேள்விகள் உட்பட பல கேள்விகள் கேட்டிருந்தேன்:

[] இராஜீவ் காந்தி கொலைவழக்குக் கைதிகளுக்கு எதிராக அரவிந்த் கருத்துத் தெரிவித்து, அதை நான் உட்பட பலர் எதிர்த்த பிறகும், கட்சியின் தில்லி தலைமை எந்த விளக்கமும் அளிக்காதது ஏன்?

[] கட்சியின் உயர்மட்ட அரசியல் விவகாரக் குழுவிலிருக்கும் இந்தி மொழி பேசுகிற ஒன்பது ஆண்கள் மட்டுமே கட்சி மற்றும் நாடு தொடர்பான முடிவுகளை எடுக்கிறீர்கள்; தென்னிந்தியாவிலிருந்தும், வடகிழக்குப் பிரதேசத்திலிருந்தும் உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளாதது ஏன்?

[] காங்கிரஸ், பி.ஜே.பி. கட்சிகள் போல அனைத்து முடிவுகளும் தில்லியிலே எடுக்கப்பட்டு, மாநிலங்களில் உள்ளவர்கள் தில்லி எசமானர்களுக்கும், இந்தி ஏகாதிபத்தியத்திற்கும் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு; மாநில அமைப்புக்களுக்கு தன்னதிகாரம் வழங்க வேண்டும்.

[] தமிழக அரசியல் பிற மாநிலங்களிலிருந்து வேறுபட்டது; இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாடெங்கும் பி.ஜே.பி. வெற்றி பெற்றபோது, இங்கே அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றதிலிருந்து இதை உணரலாம். அதனால்தான் கட்சிக்கு தமிழ்ப் பெயர் வேண்டுமேன்றோம். தில்லி ஏற்றுக் கொண்டாலும், தமிழகக் கிளை அதை பயன்படுத்தவில்லை.

அரவிந்த் உட்பட அனைவரும் மனுவை வாங்கிக் கொண்டாலும் யாரும் அதைப் படிக்கவுமில்லை, பார்க்கவுமில்லை என்பதை நான் கவனித்தேன். அடுத்த இரண்டு நாட்கள் நாடாளுமன்ற வேட்பாளர்கள் கூட்டம் தில்லியில் நடந்தது. முழுக்க முழுக்க இந்தியில் நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில் “இந்தியில் மட்டுமே பேசாதீர்கள், ஆங்கிலத்திலும் பேசுங்கள்” என்று தமிழக வேட்பாளர்கள் அனைவரும் இணைந்து ஒரு மினிப் போராட்டமே நடத்தினோம். நான் கொடுத்திருந்த மனு பற்றியோ, அதிலுள்ள விடயங்கள் பற்றியோ ஏதாவது விவாதம் வரும் என்று காத்திருந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பச்சைத் தமிழ்த் தேசிய அரசியல்

மதவாத பாரதீய ஜனதாவுக்கும், ஊழல்மிக்க காங்கிரசுக்கும், மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு தேசியக் கட்சி வேண்டும் என்று நான் உறுதியாக நினைக்கிறேன். அந்த அளவில் ஏழை எளிய மக்களின் அரசியல் ஆசாபாசங்களுக்கும், தேவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க விரும்பும் ஆம் ஆத்மி கட்சி வாழட்டும், வளரட்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் தமிழக நிலைமைகளை அறியாத, புரியாத, தெரிந்துகொள்ள விரும்பாத தில்லி தலைவர்களுக்கு காவடித் தூக்க நான் விரும்பவில்லை. தமிழர் பிரச்சினைகளை உண்மையாக, உணர்வுபூர்வமாக அணுகாத ஒரு கட்சி தமிழகத்தில் காலூன்ற உதவிய வரலாற்றுப் பிழையையும் நான் செய்ய விரும்பவில்லை. அரசியல்வாதி ஆவதோ, தலைவராவதோ எனது நோக்கமோ, விருப்பமோ அல்ல.

இந்த நேரத்தில் தேர்தலின்போது பல வழிகளில் எனக்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். கடினமான பொருளாதார நெருக்கடியில் குடும்பம் உழன்று கொண்டிருந்த நிலையிலும், நானும் எனது மனைவியும் குடும்பத்தாரும் பல லட்சம் ரூபாய்களை எனக்காகவும், கட்சிக்காகவும் தேர்தலில் செலவிட்டோம். கட்சிக்கும், உதவிய தோழர்களுக்கும் விசுவாசமாகவே இருந்தேன். கட்சித் தலைமையோடு தொடர்பில் இருந்து, தில்லி சென்றபோதெல்லாம் தலைவர்களைச் சென்று சந்தித்து, எனது கருத்துக்களை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தேன். அனைத்து வழிகளிலும் முட்டிமோதி பார்த்துவிட்டுத்தான், இப்போது இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்.

அடுத்து என்ன செய்வது என்ற ஒரு கேள்வி எழுகிறது. தமிழகத்தில் தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை, வாழ்வுரிமைகளை, வருங்காலத்தை பேணிக்கொள்ளும் பச்சைத் தமிழ்த் தேசிய உணர்வினை, அரசியலை வளர்த்தெடுக்க என்னாலியன்ற சின்னச்சின்ன வேலைகளைச் செய்யவேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருக்கிறது. இது குறித்த புத்தகம் ஒன்றை விரைவில் வெளியிடவிருக்கிறேன். டி. எஸ். இலியட் எனும் அமெரிக்கக் கவிஞர் சொல்வதுபோல, “For good or ill, let the wheel turn!” (வரப்போவது நல்லதோ நாசமோ, சக்கரம் சுழலட்டும்). உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால், நல்லதே நடக்கும்! வணக்கம்!


ஸ் பெ

unread,
Jan 28, 2015, 1:09:42 PM1/28/15
to panbudan
S.p. Udayakumar

இனம் கண்டு கொள்வீர், தோழர்களே!

[1] யார் அமெரிக்கக் கைக்கூலி?
நாங்கள் அமெரிக்காக்காரனிடம் பணம் வாங்கி போராட்டம் நடத்துகிறோம், அமெரிக்காக்காரனுக்காக வேலை செய்கிறோம் என்றெல்லாம் காங்கிரசுத் திருடர்களும், காவி பாசிஸ்டுகளும் கொக்கரித்தார்களே? இன்று ஒருவர் 'பாரக், பராக், பாரக் பராக்' என்று குதூகலிக்கிறாரே, குத்தாட்டம் போடுகிறாரே? ஒரு தாயும் சேயும் வரிசை கட்டி வந்து ஒபாமா காலில் விழுந்து வணங்கி மகிழ்கிறார்களே? யார் அமெரிக்கக் கைக்கூலி?

[2] யார் தேசத் துரோகி?
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு போன்ற நாடுகளிடமிருந்து ஆபத்தான, அதிகவிலை கொண்ட அணுஉலைகளை வாங்காதே, எம் மக்களை அழிவில் சிக்க வைக்காதே என்று போராடிய எங்களை தேசத்துரோகிகள் என்று குற்றம் சாட்டினார்களே காங்கிரசுத் திருடர்களும், காவி பாசிஸ்டுகளும்? இப்போது அணுசக்தி பற்றி "ஒபாமாவிடம் எல்லாம் பேசிவிட்டோம், உங்களிடம் எதுவும் சொல்ல மாட்டோம்" என்று ரோம் லேடி அரசு செய்ததையே ராம் மோடி அரசும் செய்கிறதே? யார் தேசத் துரோகி?

[3] யார் நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்?
வெறும் 500 ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினால்கூட இழப்பீடு, காப்பீடு கேட்டுப்பெறும் நமது நாட்டில், இவ்வளவு செலவு மிகுந்த அணுஉலைக்கு ஏன் இழப்பீடு வாங்கவில்லை என்று கேட்டதால் நாட்டைக் காட்டிக்கொடுக்கிறோம் என்று கதறினார்களே காங்கிரசுத் திருடர்களும், காவி பாசிஸ்டுகளும்? இன்று "இழப்பீடு வேண்டாம், நாங்களே இன்சுரன்ஸ் ஏற்பாடு செய்துகொள்கிறோம்;" "விபத்து நடந்தால் விற்ற நீங்கள் பொறுப்பல்ல, இயக்கிய நாங்களே பொறுப்பு" என்றெல்லாம் மழுப்பி, மயக்கி இந்திய இழப்பீடுச் சட்டத்தையே ஒபாமாவிடம் அடகு வைக்கிறார்களே? யார் நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்?

[4] யார் தேசத்தின்மீது போர் தொடுப்பவர்?
"இந்திய மக்களின் உயிருக்கும் விலை இருக்கிறது, எங்களுக்கு உரிய மரியாதையைக் கொடு" என்று அறவழியில் போராடிய எங்கள் மீது தேசத்தின்மீது போர் தொடுக்கிறோம் என்று வழக்கு போட்டார்களே? இன்று இந்திய நலன்களை ஒட்டுமொத்தமாகக் காவு கொடுக்கிறார்களே காவி பாசிஸ்டுகள்? அமைதியாய் நின்று ஆமோதிக்கிறார்களே காங்கிரசுத் திருடர்கள்? யார் தேசத்தின்மீது போர் தொடுப்பவர்?

காங்கிரசுத் திருடர்களும், காவி பாசிஸ்டுகளும் ஒண்ணு,
இதை அறியாத இந்திய மக்கள் வாயிலே ஈர மண்ணு!

Khaleel Ahmed

unread,
Jan 29, 2015, 1:34:31 AM1/29/15
to panb...@googlegroups.com
பவர் பிளாண்ட் குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மாவட்ட ஆட்சியர் அளித்த பதில்...

25/12/2014 அன்று நான் வைத்த புகாருக்கு (எண் 2014/813289/CI) The unit has obtained Environmental Clearance from the MoEF on 31.05.2010. The unit has also obtained Consent to Establishment from TamilNadu Pollution COntrol Board on 14.06.2011 and the consent is extended up to 01.07.2015. The unit has also completed 85% of Construction work. Hence TNPCB cannot stop the construction work என்று மாவட்ட ஆட்சியர் இடமிருந்து பதில் வந்தது. ஆனால், NGT எனப்படும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வேறு விதமாக அமைந்துள்ளது. தீர்ப்பின் நகலை பார்க்க... http://greentribunal.gov.in/Writereaddata/Downloads/50-2012(PB-I)(APL)-10-11-2014.pdf


எனவே, இந்த அனல் மின் நிலையத்தை தடை செய்ய மாண்புமிகு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--------------------------------------
கருத்து முரண்பாடுகளை களைவோம்! களமிறங்கி செயலாற்ற ஒன்றிணைவோம்!!
சமூகப் பிணிகளை நீக்குவதே நம் சமூகப் பணிகளாக இருக்கட்டும்!!!

குவைத்திலிருந்து... 
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

அலைபேசி / 
வாட்ஸ்அப் / வைபர் / 
டெலிகிராம்
(+965) 
66 64 14 34 / 
97 87 24 82
முகநூல் (Facebook): 
http://www.facebook.com/khaleelbaaqavee
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
நேரலை (Ustream): http://www.ustream.tv/channel/ktic-live

--

ஸ் பெ

unread,
Feb 20, 2018, 3:45:19 PM2/20/18
to panbudan

"குங்குமம் என்பதை நானறிவேன், அது மஞ்சள் போல வெண்மையாய் இருக்கும்" என்கிறது இந்திய அணுசக்தித் துறை.

இந்திய அணுசக்தித் துறைக்கு அணுக்கழிவு சேகரிப்பு நிலையம் (AFR) மற்றும் ஆழ்நிலக் கிடங்கு (DGR) போன்றவை அமைக்கும் தொழிற்நுட்பம் தெரியாதாம். எனவே கூடங்குளத்தில் இவற்றைக் கட்டுவதற்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் கால அவகாசம் வேண்டுமாம்.

அணுக்கழிவை கண்ணாடிப் பந்தாக உருட்டி வீட்டு வரவேற்பறையில் வைக்கும் தொழிற்நுட்பம் எங்களுக்குத் தெரியும் என்று எஸ். கே. ஜெயின் என்கிறவர் பிரதமர் மன்மோகன்சிங் முன்னிலையில் புருடா விட்டாரே? பேசா மடந்தை அதை அப்படியே ஏற்றுக்கொண்டாரே?

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடக்கும் பொய்கள், பித்தலாட்டங்கள், கோளாறுகள், குளறுபடிகள் உலகில் வேறு எந்த நாட்டிலும் நடக்காது, நடக்க விடவும் மாட்டார்கள். இடி அமீனின் உகாண்டாவில்கூட மனித உயிர்களுக்கு கொஞ்சம் விலையும், மரியாதையும் இருந்தது. தமிழர் உயிர்கள் அவர்களுக்கு மயிர்கள். இனி தானைத் தலைவர்கள் கமலும், ரஜினியும் நம்மைக் காப்பார்கள்.


ஸ் பெ

unread,
Feb 25, 2018, 11:44:39 AM2/25/18
to panbudan

எலும்பு திருட்டு குற்றச்சாட்டு - பச்சைத் தமிழகம் கட்சி கண்டனம், கோரிக்கை அறிக்கை

காஞ்சிபுரம் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் உள்ள "செயின்ட் ஜோசப்" கருணை இல்லத்தில், ஏராளமான ஆதரவற்ற முதியவர்கள், நல்வுள்ளங்களின் நன்கொடையால், பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கு கடந்த 3 மாதத்தில் 300க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. சராசரியாக 3 பேர்
நாள்தோறும் மரணமடைவதாக கருணை இல்லத்தின் நிர்வாகி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரியும் நிலையில், எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் இருக்ககூடும் என்று வருகிற தகவல்கள் கலக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த இல்லத்தில் ஆதரவற்ற முதியோர்கள், தமிழக தெருக்களில் இருந்து உதவுகிறோம் என்ற பெயரில் அழைத்துவரப்பட்டுள்ளார்கள். பொது மக்களிடம் நன்கொடை பெற்றே இல்லம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அழைத்து வரப்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் விருப்பம் இன்றியே அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பணத்திற்காக அவர்களின் உறுப்புகள் கடத்தப்படுவதாகவும், அவர்களின் உடல் அழுகிய பிறகு எழும்புகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முதியவர்கள் இயற்கை மரணமடைகின்றனரா அல்லது அவர்களின் எலும்புகளுக்காக கொல்லப்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுப்பபட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, அந்த சர்ச்சைக்குரிய கருணை இல்லத்தில் மாவட்ட நிர்வாகம் காவல்துறையினர் மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. மக்களுக்கு இதன் மூலம் உண்மை விரைவில் தெரியவரும் என்று நம்புகிறோம். மானுடவியலுக்கு எதிரான இந்த செயலை, பச்சைத் தமிழகம் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.

மேலும், 1985ல் இந்திய அரசு எலும்பு ஏற்றுமதியை தடை செய்தப் போதும், மருந்து ஆராய்ச்சி, பயிற்சிக்கு தேவைப்படும் எலும்புகள் உலகளவில் இந்திய கள்ள சந்தையில் இருந்தே செல்கிறது என்பதையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். இதனடிப்படையில், இந்த நடவடிக்கைகளை ஒரு இல்லத்தில் நடந்த செயல் என்று மட்டும் விசாரித்திடாமல், விசாரனையை 
தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான முதியோர் இல்லங்களுக்கும் விரிவுப்படுத்திட வேண்டும்.

மேலும், எலும்பு திருட்டு என்றளவில் சுருங்கிடாமல், உறுப்புகள் திருட்டு என்ற கோணத்திலும் அணுகி, உடனடியாக தமிழக முழுவதும் உள்ள அனைத்து கருணை இல்லங்களையும் விசாரித்து, முறைப்படுத்திட வேண்டும்.

உறுப்பு, எலும்பு கள்ள சந்தையை அறிந்திட, தடுத்திட, போர் கால அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளையும், மருத்துவ கல்லூரிகளையும் விசாரனை வலையத்துக்குள் கொண்டு வரவேண்டும். உறுப்பு தானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், எலும்பு பரிவர்த்தனைகளை உடனடியாக விசாரித்திட வேண்டும்.

இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து, தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு, தவறு செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விசாரனையை தமிழகம் முழுவதும் கருணை இல்லங்கள், மருத்துவமனை, கல்லூரிகளுக்கு, விரிவுப்படுத்திட வேண்டும் என்று பச்சைத் தமிழகம் கட்சி கேட்டுக் கொள்கிறது.

சுப.உதயகுமாரன்,
தலைவர், 
பச்சைத் தமிழகம் கட்சி.
25.02.2018

தொடர்புக்கு,
பா.ச.பாலசிங்
9962897070

ஸ் பெ

unread,
Mar 7, 2018, 4:09:50 PM3/7/18
to panbudan

சுப.உதயகுமாரனிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் நடந்தது என்ன?

அணு உலை எதிர்ப்பாளரான சுப.உதயகுமாரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணையின்போது வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளனர். 

உதயகுமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு உலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அணு உலைக்கு எதிராக மக்கள் இயக்கம் சார்பாக இரு வருடங்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக சுப.உதயகுமாரன் செயல்பட்டார். அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற உதயகுமாரன் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் மீது காவல்துறையினர் நூற்றுக்கும் அதிகமான வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில், குமரி மாவட்டத்தில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைய இருப்பதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அந்தப் போராட்டங்களிலும் சுப.உதயகுமாரன் பங்கேற்றுப் போராடி வருகிறார். அதனால் அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அமலாக்கத்துறை சார்பாக சம்மன் அனுப்பப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை குறித்த விசாரணைக்கு வருமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. அதனை ஏற்று மார்ச் 6-ம் தேதி சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. 

இது குறித்து சுப.உதயகுமாரனிடம் கேட்டதற்கு, ‘’எனக்கு சம்மன் கிடைத்ததும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் எனது வங்கிக் கணக்கு, ஆடிட் ஸ்டேட்மென்ட் உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆஜரானேன். என்னிடம் சில கேள்விகளைக் கொடுத்து எழுத்துப் பூர்வமாக பதில் எழுதுமாறு கேட்டுக்கொண்டார்கள். அதன் பின்னர், என்னிடம் விசாரணை நடந்தது. அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் அளித்தேன். 

என்னிடம் ஒரு அதிகாரி, ’நீங்கள் ஏன் எப்போதும் அரசுக்கு எதிரான போராட்டங்களை மட்டுமே முன்னெடுக்கிறீர்கள்?’ என்று கேட்டார். நான் அவரிடம், அரசுக்கு எதிராக மட்டும் அல்லாமல் மக்கள் நலனுக்கு எதிரான தனியார் நிறுவங்களுக்கு எதிராகவும் போராடி வந்துள்ளேன். குறிப்பாக, ஸ்டெரிலைட் நிறுவனம், டி.சி.டபிள்யூ., வைகுண்டராஜனின் தாது மணல் ஆலைகள் உள்ளிட்டவைக்கு   எதிராவும் கூட போராடி இருக்கிறேன் என்பதை எடுத்துச் சொன்னேன். 

இந்த விசாரணையின் பின்னணியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கிறார். குமரியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைப்பதற்கு வலுக்கும் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் அவர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி எனக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமலாக்கத் துறையினரை ஏவிவிட்டுள்ளார். என்னிடம் தவறு இல்லாததால் நான் எந்த விசாரணைக்கும் பயப்படவில்லை’’ என்றார். 

Reply all
Reply to author
Forward
0 new messages