லட்டு: காமெடியை முன்னிறுத்தும் சர்வதேச அரசியல்

53 views
Skip to first unread message

senshe senshe

unread,
Feb 10, 2013, 2:11:01 AM2/10/13
to panb...@googlegroups.com

லட்டு: காமெடியை முன்னிறுத்தும் சர்வதேச அரசியல்



1

தமிழ்த்திரைப்பட உலகில் தற்போது பரபரப்பாக முன்வைக்கப்படும் கேள்வி: ‘உங்களிடம் காமெடி சப்ஜெக்ட் இருக்கிறதா?’

நிலைமை அப்படி ஆகிவிட்டது. கோலிவுட்டின் சூப்பர்ஸ்டார்கள் நடித்த ஹை பட்ஜெட் படங்கள் எல்லாம் மாபெரும் தோல்வியைத் தழுவ, புதுமுகநடிகர்களும் பவர்ஸ்டார்களும் நடித்த மிகமிக லோ பட்ஜெட் படங்கள் பிரம்மாண்டமான வெற்றியாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த மாபெரும் வெற்றி வாகைக்குப்பின்னால் கண்சிமிட்டுவது அபத்தமான நகைச்சுவைகளும் கலாய்ப்புகளும் கொண்ட காமெடி.

‘தரத்திலும் தொழில்நுட்பத்திலும் காட்சியமைப்புகளிலும் உலகப்படங்களுக்கு இணையாகத் தமிழ்ப் படங்கள் விளங்குகின்றன..’ என்று பீற்றிக் கொண்டிருந்த இயக்குனத்திலகங்கள் பீதியில் உறைந்து போய்க்கிடக்கிறார்கள்.

இந்த உலகத்தரமிக்க தமிழ்த்திரைப்படப் பாரம்பரியம், காமெடி என்னும் மையத்தை நோக்கி எப்படி நகர்ந்தது, அதற்கான சூழல் தன்னை எவ்வாறு வடிவமைத்துக் கொண்டது என்பதை, திரைப்படத்துறை கடந்து வந்த ஒவ்வொரு காலகட்டத்தையும் முன்வைத்து விரிவாகப் பார்க்கலாம்.

முதலில், காமெடி - ஹ்யூமர் - என்கிற ஆங்கிலச் சொற்களின் தமிழ்ப்பதமாக நகைச்சுவை, நையாண்டி, அங்கதம்.. என்றெல்லாம் வகை பிரிக்கலாம். சங்க இலக்கியத்தில் கலித்தொகையில் வரும் பெருந்திணையில் குறளன் - குறளி (குள்ளன் - குள்ளி) பேசிக் கொள்ளும் சில பாடல்களில் நகைச்சுவை இழைந்தோடும். 

‘நீயும் தவறு இலை நின்னைப்புறங்கடைப் போதரவிட்ட நுமரும் தவறு இலர் நிறையழி கொல்யானை நீர்க்குவிட்டாங்குப் பறையறைந்து அல்லது சொல்லற்க என்னா இறையே தவறு உடையான்’ (கலித்தொகை 56 குறிஞ்சிக் கலி 20)

(நீ வெளியே வந்ததோ உன் பெற்றோர் அனுப்பியதோ தவறில்லை. மதங்கொண்ட யானையை நீர்நிலைக்குக் கொண்டு செல்லும் போது பறையறிவிப்பது போல அறிவிப்புச் செய்யாத அரசனே தவறுடையவன்’ என்ற தலைவன் கூற்று, மதங்கொண்ட யானையாய் தலைவியைக் காணும் நகைச்சுவை.)

நகைச்சுவையின் இந்திய செவ்விலக்கிய மரபில் பீர்பால், தெனாலிராமன் போன்றோர் அரசு அதிகாரம் போன்றவைகளை கிண்டலான தொனியில் அங்கதமாக்கினார்கள். பரமார்த்தகுருவும் சீடர்களும் வாழ்வியல் கூறுகளில் பொதிந்து கிடக்கும் அபத்தங்களை எள்ளி நகையாடினார்கள். உலகளாவிய சூஃபிய மரபில் வரும் முல்லா நஸ்ருதீன் தத்துவத்தேட்டங்களின் பின்னணியில் வாழ்வியல் அபத்தங்களை நையாண்டியாக்கினார்.

செர்வாண்டிஸ் எழுதிய உலகப்புகழ்மிக்க ‘டான் க்விக்ஸோட்’ என்னும் ஸ்பானியமொழிப் புதினம், உலகம் முழுமைக்குமான ஒரு அங்கதக்காவியமாக இன்றுவரை திகழ்கிறது. பெர்னாட் ஷாவின் சமூக அங்கதம் கொண்ட நையாண்டிக் கட்டுரைகள் உலகப்பிரசித்தம்.

திரைப்படங்களில் சார்லி சாப்ளின் தான் இந்தவகை சமூக அங்கதத்திற்கு அசலான முன்னோடி. இவரது சகநடிப்புக் கலைஞரான பஸ்டர் கீட்டன் போன்றவர்களும் மௌனப்படக்காலத்தில் இந்தச் சமூக அங்கத்ததை மிக அழகாகக் காட்சிப்படுத்தியவர்கள். ‘மாடர்ன் டைம்ஸ்’ படத்தில் ஒரு தெழிற்சாலையில் போல்டுகளை முறுகேற்றும் வேலை செய்யும் ஒரு தொழிலாளி, எப்படி ஒரு இயந்திரமாக மாறிப்போகிறான் என்பதை அபாரமான நையாண்டியுடன் முன்வைத்திருப்பார் சாப்ளின். இவரது சமூக நையாண்டி உலகளாவிய விஷயங்களை விமர்சிப்பது என்றால், அதற்குப்பின்வந்த ஹாலிவுட் கலைஞரான மெல் புரூக்ஸ், அதுவரையிலான உலக வரலாற்றையே சமூக அங்கதமாக மாற்றினார். அவரது ‘ஹிஸ்டரி ஆப் தி வேல்டு’ படம் இந்த வகையில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது. 

ஆனால் இந்தக்கால கட்டத்தில் வந்த லாரல் ஹார்டி என்னும் இரட்டையர்களின் வருகை நகைச்சுவைத் தன்மையின் தரத்தை வெகுவாகக் கீழிறக்கியது. கொணஷ்டைகளும் சேட்டைகளும் கொண்ட உடல்மொழி, கிச்சுகிச்சுத் தன்மை கொண்ட வெற்று அபத்தங்கள் என்று வெகுஜனமக்களின் நகைச்சுவை ரசனையை மேலும் மேலும் மடத்தனமாக மாற்றித் தள்ளினர். (இதற்கடுத்த காலகட்டத்தில் வந்த ஜெர்ரி லூயிஸ் சாப்ளினின் மைய இழையைத் தவறவிட்டவர்)

இந்தக் காலப்போக்கில் இந்த நகைச்சுவை அம்சம் இரண்டாகப் பிளந்தது. சமூக அங்கதங்களை எள்ளி நகையாடும் அழகியல் கொண்ட நகைச்சுவை நையாண்டிகள். மற்றொன்று, கோமாளித்தனமான பார்வை கொண்ட கிச்சுச்சிச்சு மூட்டும் நகைச்சுவை அபத்தங்கள்.

தமிழின் நவீன இலக்கியத்தில் சமூக அவலங்களை அங்கதமாக்கினார் புதுமைப்பித்தன். அதைவெறும் அபத்தமாகவும் மேலோட்டமான வெற்றுப்பார்வையுடனும் கிச்சுக்கிச்சு மூட்டினார்கள் எஸ்.வி.வி. மற்றும் கடுகு, நாடோடி போன்றோர்.

தமிழ் சினிமாவில் இந்தக்காலகட்டத்தில் எம்ஆர்ராதாவின் சமூப அங்கதங்கள் திராவிடச்சிந்தனைகளின் பின்புலத்தில் வெளிவந்து பெரிதும் பேசப்பட்டன. அவர் நாடக அரங்கத்தின் பின்னணியில் வந்தவராதலால் காட்சிகளை விடவும் உரையாடல்களே முக்கியத்துவம் பெற்றன.

தமிழ் சினிமாவின் மரபான நகைச்சுவை அம்சம் நவீனமயப்பட்டது சந்திரபாபு, நாகேஷ் போன்றவர்களின் காலகட்டங்களிலிருந்துதான் என்று சொல்லலாம். சாப்ளினின் உடல்மொழியைப்பின்பற்றி சமூக அவலங்களைச் சாடியவர் சந்திரபாபு. ஹாலிவுட் காமெடி நடிகர் ஜெர்ரி லூயிஸைப் பின்பற்றி வந்த நாகேஷ் தனது உடல்மொழியில் நடன அடவுகளைப் புகுத்திப் புதுமையாக்கினார். சோ, அரசியல் அவலத்தைத் தனது நகைச்சுவை பாணியாக மாற்றினார்.

1970 களிலிருந்து பரபரப்பாக இயங்கிய இந்தக்காலகட்டங்கள் முக்கியமானவை. மரபு வழிப்பட்ட தமிழ்த்திரைப்படப் போக்கிலிருந்து விலகி நவீன திரைப்படங்களை நோக்கி நகரத்துவங்கின. இந்தச் சூழலைச் சுருக்கமாக ஒரு வசதிகருதி 3 காலகட்டங்களாகப் பிரிக்கலாம்.

ஆண்பெண் உறவில் எழும் உளவியல் சிக்கல்களில் கருக்கொண்ட முக்கோணக் காதல் கதைகளை முன்வைத்து புதுமையான திரைப்படப்பார்வைகளுக்கும் காட்சிகளுக்கும் முன் கை எடுத்தவர் ஸ்ரீதர்.

இதன் அடுத்த கட்டமாக வந்த பாலச்சந்தரின் படங்கள் நகரம் சார்ந்த நாகரிக மனிதனின் காதல் மற்றும் உளவியல் கூறுகளைப் புதுமையான கோணத்தில் பரிசீலித்தது.
அடுத்த காலகட்டம் மிகமுக்கியமானது. மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா என்ற மூன்று திரை ஆளுமைகள் தமிழ்த்திரைப்படங்களில் நிலவிவந்த போக்கை முழுவதுமாக மாற்றியமைத்தார்கள். கன்னடமொழியின் கலைப்பட இயக்குனரான புட்டண்ணா கனகலிடம் உதவியாளராக இருந்து வெளியே வந்த பாரதிராஜாவின் வருகை மிகத் தீவிரமும் பாய்ச்சலும் ஆவேசமும் கொண்டது. அதுவரை கதாநாயகநடிகர்கள் கைக்குள் வைத்திருந்த அதிகாரத்தை உடைத்துத் தள்ளி இயக்குன அதிகாரத்தை வடிவமைத்தவர். (தேவராஜ்மோகனின் ஒருசில முயற்சிகளையும் இங்கு குறிப்பிடலாம்.)

இவரது உதவியாளரான பாக்யராஜின் திரைப்படப்பிரவேசம், தமிழ்சினிமாவை மரபான போக்கிலிருந்து மீட்டெடுத்து நவீன திரைப்பட அலையாக உருவாக்கிய கலாபூர்வமான தன்மையை, முழுமுற்றாகக் காலிசெய்து, வளர்ச்சியை நோக்கிப் பயணப்படிருந்த தமிழ்த்திரைப்படக்கலையின் வீழ்ச்சிக்கு அடிகோலியது.

2

இந்த மாதம் ‘கும்கி’ படம் பற்றி எழுத இருந்தேன். கும்கி என்பது யானைகளில் ஒரு இனம் என்பது போலப்படத்தில் சித்திரித்திருப்பது தவறானது. ஒரு சாதாரண யானையை அதன் குட்டிப்பருவத்திலிருந்தே காட்டுக் கொம்பன் யானைகளை விரட்டுவதற்காக அரசங்கத்தால் பயிற்சி கொடுத்து பழக்கப்படுத்தப்படும் யானை. இந்த யானையை அரசாங்கம்தான் வைத்திருக்கும். தனியாரிடம் இருக்காது. இது போல படத்தில் பல்வேறு காட்சிகள் தவறாகவும் பழங்குடி மக்களுக்கு எதிராகவும் இருக்கிறது. ஒரு விரிவான ஆய்வுப்பார்வையில் இக்கதையை அணுகியிருந்தால் புத்தம் புதிய கதைக்களத்துடன் கூடிய ஒரு அபாரமான படம் கிடைத்திருந்திருக்கும். யானைகளைக் கொல்ல ஒரு போதும் பழங்குடி மக்கள் விரும்புவதில்லை. காதலுக்குப் பெரியளவில் எதிரானவர்கள் அல்ல என்பதை பழங்குடிமக்களிடம் வாழ்ந்து பழங்குடிப் பெண்ணையே காதலித்துத் திருமணம் செய்து கொண்ட வெரியர் எல்வினின் நூல்களைப் படிக்கும்போது உணரலாம். யானையின் வழித்தடங்களை அழித்த பன்னாட்டுக் குழுமங்களின் அரசியல், பரம்பரையான பயிரிடும் முறைகளை அழித்தது, அவர்களது பண்பாட்டுப்புள்ளிகளும் விலங்குகளும் ஒன்றிணையும் தருணங்கள் போன்றவற்றிலெல்லாம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆய்வுப்பார்வையோ, பழங்குடிமக்களின் பழக்க வழக்கங்கள் பற்றிய பிரக்ஞையோ எதுமின்றி முழுக்க முழுக்க மேலோட்டமான கோடம்பாக்கத்துப் பார்வையில் அணுகியிருப்பதால் வந்த வினை இது. இதுபற்றிய விவரப்புரிதல் குறைபாட்டடுடன் இருந்ததால் நேர்ந்த தவறுகள் அவை. 

அதுவும் படத்தில் வருகின்ற இசை வடிவத்தைப் பற்றி விரிவாகத்தான் பேச வேண்டும். நான் சமீபத்தில் சென்னை மியூசியம் தியேட்டரில் பார்த்த கே.எஸ்.ராஜேந்திரன் இயக்கிய ‘மேக்பெத்’ என்னும் நவீன நாடகம் நினைவுக்கு வருகிறது.

அரங்கில் மேக்பெத் மன்னனின் அகக் காட்சிகளாக யட்சிகளும் பேய்களும் வரும்போதெல்லாம் பின்னணியில் உறுமி என்னும் இசைக் கருவியின் ராகம் ஒலிக்கிறது. மிக அற்புதமான அழகியல் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ராகம் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவான நாயக்கர்களுக்கே உரித்தான இசைவடிவம். அவர்களது திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கும் சடங்குகளுக்கும் பயன்படுத்தப்படும் இந்த ராகம் நாடகத்தில் மிக அழகியல் குரூரமாக, பொதுப்புத்தியில் பதிந்துள்ள இழிவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவர்களது வாழ்வியலில் உள்ளும் புறமுமாக இழைந்தோடும் இந்தச் சடங்குராகம், இந்த நாடகத்தில் யட்சிகளும் பேய்களும் வரும்போதெல்லாம் ஒலிக்கும்போது அதன் வாழ்வியல் உயிரோட்டம் அழிந்து கொச்சைப்படுத்தப்படுகிறது அதன் பாரம்பரியம். அந்த ராகத்தைப்பற்றியோ, அதன் பின்புலம் பற்றியோ தெரிந்திருந்தால் இப்படி ஒரு அவலம் நடந்திருக்காது. அந்தமாதிரியான பேய்கள் நடமாடும்போது ஒலிப்பதற்கென்றே உள்ள ராகம் உடுக்கைதான். அதன் அமானுஷ்யமான ஒலி பீதியுடன் கூடிய அழகியலை உருவாக்கியிருக்கும்.       

ஒரு விரிவான விமர்சனத்தின் மூலம் கும்கி இயக்குனரை நெறிப்படுத்த முடியும். ஏனெனில் இவரது அக்கறை புத்தம்புதிய கதைக்களங்களின் மீதும் நவீனக் கதை சொல்லல் மீதும் சவால் கொள்கிறது. 

ஆனால், சமீபத்தில் காமெடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் திரைப்படத்துறையை எந்த ரீதியிலும் நெறிப்படுத்த இயலாது. பாக்யராஜை முன்வைத்து இதைஅணுகலாம்:

புட்டண்ணா கனகலின் பள்ளியிலிருந்து வெளியே வந்த பாரதிராஜா, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள் என்று ஒரு மாற்றுத் திரைப்படப் போக்கை உருவாக்கிக் கொண்டிருந்தார். அதே போன்ற சிந்தனையோட்டத்துடன் தங்களது Genere களில் பாலு மகேந்திராவும் மகேந்திரனும் செயல்பட்டுக் கொண்டிருக்க, தமிழ்த்திரைப்பட உலகம் ஆரோக்கியமாகவும், நவீனமாகவும், மாற்றுத்திரைப்படப்பாதையில் நடைபோட ஆரம்பித்தது. வெகுஜன ரசனையையும் கலாபூர்வமான ரசனையையும் இணைக்கும் ஒரு பாதையை மிகவும் நுட்பமாகவும் கவனத்துடனும் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

அந்தக்கட்டத்தில்தான் பாக்யராஜின் மேடைநாடகத்தன்மை கொண்ட படங்கள் வரத்துவங்கின. உள்ளூர்த் திருவிழாக்களில் மேடைநாடகம் போடும் அன்றைய கலாச்சாரப்பின்னணியிலிருந்து வந்த அவரது எண்ண ஓட்டங்கள் முழுக்க முழுக்க மேடைநாடகங்களில் கவனம் பெறும் அபத்தமான காமெடிகளிலும் வசனங்களிலும் சென்டிமெண்ட்காட்சிகளிலும் சுற்றிச்சுற்றி வந்தன. சினிமா என்பது காட்சிகளால் பேசப்படும் மொழி என்ற படிமத்தைச் சிதைத்து வசனங்களால் நிரப்பினார்.

கதை என்பது ஒரு பெரிய பிரமாதமான விஷயமில்லை, கதை சொல்வதற்குத் தனியாக ஒருவர் தேவையில்லை, சகலமும் நானே என்கிற கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் என்கிற அடைமொழியை ஆரம்பித்து வைத்து, சினிமாபற்றிய கலைப்பிரக்ஞையோ, உலகசினிமாக் கோட்பாடுகள் பற்றிய அவதானிப்போ எதுவுமே தேவையில்லாமல் ஒரு சாமான்யனால் கூட படம் இயக்கமுடியும் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியதில் பட்டி தொட்டியெல்லாம் பற்றிக் கொண்டது பெருந்தீ. உள்ளூர் திருவிழா மேடை நாடக டைரக்ஷன்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகவும், வெகுஜன ரசிகர்களுக்கு மாபெரும் இயக்குனர் சிகரமாகவும் மாறினார்.

அதுவரையிலிருந்த படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் காமெடி நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்த சூழலை மாற்றி ஹீரோவே காமெடி செய்யும் சூழலை உருவாக்கினார். காமெடி நடிகர் செய்யும் காமெடி மிக கோமாளித்தனமாகவும், ஹீரோ செய்யும் காமெடி கலாய்ப்பாகவும் வித்தியாசப் படுத்தி அதை ஜனரஞ்சக வெற்றி பார்முலாவாக்கினார். சமூகஅவலம், சமூகஅங்கதம் நையாண்டி போன்ற எல்லாப்பார்வைகளையும் அழித்தொழித்து கேலி கிண்டல் கலாய்ப்பு ஜாலி என்று ஒட்டு மொத்தமாக காமெடி என்கிற ஒரே பார்வைக்குள் நிலை நிறுத்தினார். இந்த அழிச்சாட்டியத்தில் தமிழனுக்கு black comedy என்கிற இருண்மையான நகைச்சுவை, அவலச்சுவை நிரம்பிய அங்கதங்கள் அறிமுகமாகாமலேயே போய்விட்டது.

சமுக வெளியின் பொதுப்புத்தியில் இயங்கும் மிகக் கேவலமான அறுதப்பழசான சிந்தனைகளை மீண்டும் பட்டை தீட்டி சீவிச் சிங்கார்த்து வெளியிட்டார். ஆணாதிக்கத்திமிரும், பெண்களை போகப்பொருளாகச்சித்தரிக்கும் தன்மையும், சின்ன வீடாக உருவகப்படுத்தும் பொதுப்புத்தியும் கொண்டவை. அந்தக்காலகட்டத்திலிருந்த வெகுஜன ஆண்களின் வக்கிரமான சிந்தனைகளுக்கு இவரது கதைகள் அல்வா.

தங்களது மனைவியை அழைத்துக் கொண்டுபோய் பாக்யராஜின் படம் காட்டி, சமூக ஒழுக்கம் என்றால் என்ன? மனைவியின் ஸ்தானம் என்ன? பொறுப்பு என்ன.. என்பது போன்ற மனித வாழ்வியலின் மகத்தான் கேள்விகளுக்கு விடைகூறியிருக்கும் காட்சிகளைத் தரிசிக்க வைத்து ‘நல்வழிப்’ படுத்துவார்கள் கணவன்மார்கள். பல பெண்களுடன் கள்ள உறவு வைத்திருக்கும் தனது கணவனை வழிபாடு செய்யும் பெண்,  தமிழ்ப் பண்பாடு போன்ற பிம்பங்கள் அதுவரை உருவாகியிருந்த தமிழின் மாற்று சினிமாப் பார்வையை அடியோடு உருக்குலைத்தன. முருங்கைக்காய் என்கிற மருத்துவகுணம் கொண்ட காய்கறியை பாலியல் வீரியத்துக்கான குறியீடாக உருவாக்கிக் கிளுகிளுப்பேற்றினார். 

இது போன்ற திரைக்கதையின் அரிய கண்டுபிடிப்புகளைப் பார்த்து வாய்பிளந்து போன அன்றைய ஊடகங்கள் திரைக்கதையின் தந்தை என்று புகழாரம் சூட்டின. அதே கட்டத்தில் பாக்யா என்கிற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். சக பத்திரிக்கையாளனை விமர்சனம் செய்யக்கூடாது என்ற எழுதப்படாத விதியின் பிரகாரம் இவரது கோமாளித்தனமான காமெடிகளை வீரதீர சாகசக்கதைகளாக மாற்றினார்கள். உலகசினிமா பற்றிய கலைப்பிரக்ஞையோ, உலகப்புகழ்மிக்க ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் நடிப்புக் கோட்பாடுகளோ, கில்லஸ் டெல்யூஸின் சினிமா கோட்பாடுகளோ தமிழின் வெகுஜனதளத்தில் பேசப்படவேயில்லாமல் போனதும் இதற்கு ஒரு காரணம். அந்தக்கட்டத்தில் பாபுலர் வெகுஜனசினிமாக்களைப்பற்றிப் பேசுவது கேவலமான விஷயம் என்பது போன்ற பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டிருந்தன. விஷயம் அறிந்த கலைஞானம் மிக்கவர்கள், உலகசினிமா ஆர்வலர்கள், தீவிரமான கலைஞர்கள், கலைக் கோட்பாட்டாளர்கள், விமர்சகர்கள் வாயைமூடிக்கொண்டிருந்தனர். அதனால் இந்தச்சூழல் பாக்யராஜ் காட்டில் பலத்த மழையாக மாறியது. அவர் தமிழ்சினிமாவின் சித்தப்பா பெரியப்பா என்ற  ஏணிகளில் ஏறிக் கொண்டேயிருந்தார்.

இவரது பள்ளியிலிருந்து வெளிவந்த பாண்டியராஜன் இந்தக் காமெடியை மேலும் பெரிதாக்கினார். இந்தக் காமெடியை வைத்து வெள்ளிவிழா டைரக்டரானார் இன்னொருவர்.
அந்தக்காலகட்டத்தில் மறுமலர்ச்சி இயக்குனர் என்று புகழப்பட்ட குருநாதர் பாரதிராஜாவின் ‘நிழல்கள்’     படம் வெளிவந்து படுதோல்வியடைந்ததும், பாக்யராஜின் காமெடி பார்முலா மட்டும்தான் வெற்றிக்கான பார்முலா என்று கோடம்பாக்கமே கதிகலங்கியது.

அன்றைய ம.க.இ.க. போன்ற முற்போக்குக் குழுவில் செயல்பட்ட மணிவண்ணனின் கதையாக்கத்துடன் சர்வதேசப்படங்களுக்கு இணையான விதத்தில் அற்புதமான கலைத்தன்மை கொண்ட அந்தப்படத்தின் தோல்வி என்பது, பாக்யராஜின் காமெடித்தன்மைகள் ஆக்கிரமித்திருந்த சூழலே காரணம்.

அதற்குப்பின்னால் வந்த தலைமுறையினர் மணிரத்னம் கமல்ஹாசன் போன்றோரில் தொடங்கி அமீர், பாலா, சேரன், ராதாமோகன், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் சட்டென்று பெயர் ஞாபகம் வராத இன்னும் பல்வேறு இளம் இயக்குனர்கள் (இவர்கள் மீது விமர்சனம் இருந்தாலும் இவர்களது படங்கள் பேசப்படும் மைய இழை என்பது முக்கியமானது) பலவருடங்களாகப் போராடி மீண்டும் ஒரு தரமான மாற்றுச்சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது.

இந்தச்சூழவின் பின்னணியில்தான் மீண்டும் பாக்யராஜின் கோமாளித்தனமான காமெடிப்படமான ‘இன்று போய் நாளை வா’ வை ‘லட்டாக’ மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள்.  

3         

உலகமயமாக்களின் பின்புலத்தில் இன்றைய சர்வதேசத்தன்மை ஒவ்வொரு துறையையும் அதனுடைய தீவிரத்தன்மைகளை லகுவாக்கி ஜாலியாக மேலோட்டமான பார்வைகளாக மாற்ற ஆரம்பித்திருக்கிறது. ஏனெனில் தீவிரத்தன்மையோ, தொலைநோக்குத்தேடலோ, வாழ்வியல் சிக்கல்களில் எதிர்கொள்ளும் புரட்சிகரச்சிந்தனைகளோ  தங்களது அதிகார ஆளுகைகளுக்கு எதிராக மாறக்கூடியவை என்று கணிக்கிறது. மக்களை ஒரு ஜாலியான கலகலப்பான மனோநிலையிலேயே வைத்திருக்க வேண்டும். அரசுக்கு எதிராக யோசிப்பது, ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விமர்சனம் செய்வது, அதிகாரத்தின் பல்வேறு கண்ணிகளை இனங்காட்டுவது, சர்வதேச வலைப்பின்னலின் நுண்ணரசியலை சுட்டிக்காட்டுவது போன்ற தீவிரத்தன்மைகளுக்கெல்லாம் இடம் கொடுத்தால் தங்களுக்குப் பெரும் ஆபத்தாகிவிடும் என்று அதிகாரவர்க்கம் கருதுகிறது. காலங்காலமாய் இத்தகைய சிந்தனைகளை மழுங்கடிக்க, பொழுதுபோக்கு நிகழ்வுகள், பொதுப்புத்தியில் ஊறித்திளைத்துள்ள மேலோட்டமான காமெடிகள் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி வருவதை நாம் உணரலாம். அதுவும் கலை இலக்கியத்துறையில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் கருத்துக்களை நீர்த்துப்போகச் செய்வதற்காக பலதளங்களில், பலவழிகளில், பலநிகழ்வுகளாக முன் வைக்கப்படுகிறது.

முகநூல், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களைத் திறந்துவிட்டு தீவிரத்தன்மை கொண்ட மதிப்பீடுகளை செயல்பாடுகளை கிண்டலாக மாற்றும் தன்மையை விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று. (இந்த ஊடகங்களில் சீரியஸான விஷயங்களும் செயல்பாடுகளும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை மிகக் குறைச்சல்.) இந்த ஊடகங்களின் வாயிலாக எந்த விஷயம் குறித்தும் ஒரு ஜாலியான மனோபாவத்தை உருவாக்குதல், உலகெங்கும் கேலியாக கலாய்ப்புகளைக் கட்டமைத்தல், உலகப்புகழ்பெற்ற இலக்கிய வடிவங்களின் நுல்களையும் படங்களையும் மலினமானவைகளுடன் பொருத்திக் கலாய்த்தல், புரட்சிகரமான விஷயங்களையும் கருத்துக்களையும் கிண்டலான கருத்துக்களால் ஓரங்கட்டுதல் போன்ற கட்டமைப்புகளைத் திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறது சர்வதேச அரசியல். அது ஏற்படுத்திய பாணியை, நீரோட்டத்தை அப்படியே பின்பற்றி மிகமிகப் பெரும்பான்மையானோர் அதே ரீதியில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் அதிகாரவர்க்கம் எதிர்பார்த்தது.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேசத்திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் திரைப்படங்கள் மிக அபூர்வமான கலைத்தன்மை கொண்டதாகவும், புத்தம்புதிய புவிசார் வாழ்வியலை அறிமுகப்படுத்துவது போன்றவைகளாகவும், மிகநுட்பமாக வாழ்வியல் அம்சங்களின் சிக்கல்களைப்பற்றிப் பேசுவதாகவும் அமைந்திருக்கும். சமீபகாலங்களில் இந்தப்பார்வையின் வடிவம் மாறிக் கொண்டேயிருக்கிறது.

இந்தவருடம் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட ஈரான் படத்தைப் பற்றிப்பார்க்கலாம்: Rambod Javan இயக்கிய No Men Allowed படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கொண்டது. ஆண் வாசமே அறியாத பெண்கள் மேல்நிலைப் பள்ளி. நாயகி அதன் இளம் தலைமை ஆசிரியை. அந்தப் பள்ளியில் ஆசிரியராக ஒற்றை ஆண்மகனாக நாயகன் நுழைகிறார். அவர் உள்ளே நுழைந்ததும் பள்ளியே கலகலப்பாகிறது. தலைமை ஆசிரியை காதலிக்கும் முயற்சி தனியாக நடக்கிறது. இவை அனைத்தையும் நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறார். ஈரானில் உள்ள பாலின சமத்துவமின்மையை நையாண்டியாக வெளிப்படுத்தி இருப்பதும் இப்படத்தின் சிறப்பு.

ஈரானில் அரசு, அதிகாரம், ஒடுக்குறைகள் இதனூடான வாழ்வியல் சிக்கல்களை முன்வைத்து கடந்த வருடங்களில் உலகம் முழுமைக்கும் பேசப்பட்ட படங்கள் ஈரானை முதலிடத்தில் வைத்துக் கொண்டாடின. ஆனால் அந்த எதிர்க்குரல் அதிகார வர்க்கத்திற்குப் பெரிய தலைவலி.

அதேபோல அர்ஜெண்டினாப் படமான Sebastián Borensztein இயக்கிய Chinese Take-away. சீனாவைச் சேர்ந்த ஒருவரும் ஸ்பெயினைச் சேர்ந்த மற்றொருவருமாக வேறுவேறு பின்னணி கொண்ட இரண்டு பேர் சந்திக்க நேர்கிறது. இருவரும் மொழியால் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடியாத நிலை. அதேசமயத்தில், இருவரும் ஒருவரையொருவர் சார்ந்து இருக்க வேண்டிய நிலை. இதை வைத்து நகைச்சுவைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள் 2011-ம் ஆண்டில் அர்ஜெண்டினாவில் மிகப் பெரிய வசூல் வெற்றி பெற்றபடம் இது. 

சதா புரட்சிக்கான ஆயத்தங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கும் லத்தீன் அமெரிக்கநாடுதான் அர்ஜெண்டினா. 

அதேபோல சர்வதேசத்திரைப்படங்களில் முதலிடம் வகிக்கும் கொரியப்படங்களின் போக்கும் காமெடிக்கு மாற ஆரம்பித்திருக்கிறது. Kim Joo-ho இயக்கத்தில் வெளிவந்துள்ள The Grand Heist படம் செமத்தியான காமெடிப்படம். 18 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதைத்தளம். அரண்மனையில் இருக்கும் ஒரு பொருளை 11 திருடர்கள் சேர்ந்து திருட முயற்சிக்கும் அபத்தக்காட்சிகள்.

மேலும் சீனப்படங்கள் உலகத்திரைப்படங்களில் முக்கியப்பங்கு வகிப்பவை. இந்த வருடம் 62 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட Doze Niu இயக்கிய படமான Love, காதலும் சதியும் பின்னிப்பிணைந்து ஒரு ரெமாண்டிக் காமெடியாக மாறியிருக்கிறது.

ஆக மக்களை ஒரு ஜாலியான மூடிலேயே வைத்திருப்பதற்காக ஒரு விரிவான நெட்ஒர்க்கைக் கடட்மைக்கிறது சர்வதேச அரசியல்.

இந்தக் காமெடியைக் கொண்டாடும் தமிழ்த்திரைப்படத்தின் அரசியலை விளக்கமாகப் பார்க்கலாம்:

கதை பற்றியோ, அல்லது கலை பற்றியோ எவ்விதமான பிரக்ஞையும் விஷயஞானமும் இல்லாமலும், சர்வதேசத்திரைப்படச்சூழல், அதுகுறித்த தொலைநோக்குக் கண்ணோட்டம், சிந்தனைகள், வெண்டைக்காய், புடலங்காய் எதுவுமில்லாமலும், வெறும் முருங்கைக்காயை மாத்திரமே வைத்துக் கொண்டு யாராவது ஒரு டைரக்ஷனிடம் உதவியாளராய்ச் சேர்ந்து தொழில் கற்றுக் கொண்டால் போதும். அடுத்த சிலவருடங்களில் அவர் தமிழின் மாபெரும் இயக்குனத்திலகமாக மாறிவிடுகிறார்.

இப்படி ஜாலியான ஒரு சூழலை, உலகப்படங்கள், அகிராகுரோசவா, சினிமா கோட்பாடு என்றெல்லாம் பயமுறுத்தியதால், உலக டிவிடிகளைப் பார்த்துக் கதைகளும், காட்சியமைப்புகளும் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த எரிச்சல் தற்போது காமெடிப்படங்களின் வெற்றியில் குதித்துக் கும்மாளமிடுகின்றது.

ஆமாம். தமிழ்படம் எடுப்பதற்குக் கதை கத்தரிக்காயெல்லாம் தேவையில்லை. அதற்காக மண்டையை உடைத்துக் கொண்டு, உலக இலக்கியம் பேசும் எழுத்தாளர்களை அழைத்து பவ்வியமாகக் கதை கேட்டு, பிறகு அவர்களை நைசாக ஆதாரமில்லாமல் ஏமாற்றிக் கழட்டி விட்டுவிட்டு, படம் வெளியான பிறகு அவர்கள் ஏதாவது வழக்குப் போட்டவிடுவார்களோ எனப் பயந்து... இந்தக்கருமமெல்லாம் தேவையில்லை. ஜாலியான காமெடி போதும்.

யார் வேண்டுமானாலும் ஒரு படத்தை எடுத்து நாலுகாசு பார்க்கமுடியும் என்றால் அதற்கு ஒரே மூலதனம் காமெடிதான். நகைச்சுவைப்படம் எடுப்பதும் கஷ்டமாக காரியம்தான் என்று நீங்கள் விவாதிக்கலாம். ஆனால் இந்தத்திலகங்கள் எடுக்கும் படங்கள் நகைச்சுவைப்படங்கள் அல்ல. மொக்கையான காமெடிப்படங்கள். எதற்கெடுத்தாலும் கெக்கே பிக்கே என்று சிரிக்க வேண்டியது. ரசிகன் சிரிக்கவில்லையென்றால், காமெடி வசனத்துடன் குசு விடுவது போல ஒரு இசைத்துணுக்கைச் சேர்த்துவிட்டால் போதும், விழுந்து விழுந்து சிரிக்கிறான் தமிழ்ரசிகசிகாமணி. ஈஸியாக ஜெயித்துவிடலாம்.

ஆக, சர்வதேச அரசியல் காமெடியை முன்னிறுத்துவதன் பின்னணி அப்படியென்றால், தமிழ்த்திரைப்பட அரசியலின் பின்னணி இப்படி!

‘லட்டு’ படத்தில் மூன்று பேர் சேர்ந்து ஒரு பெண்ணை டாவடிக்கும் காட்சிகளை அப்படியேவா திருடுவார்கள்? குறைந்த பட்ச தற்கால விஷுவல் சென்ஸ் கூடக்கிடையாதா இயக்குனருக்கு?

ஒரு மனிதனை மிகக் கேவலமாகக் கிண்டல் செய்தது கூட ஒரு புகழாக, ஒரு அதிகாரமாக மாறும் சூழல் இது. நடிப்பின் அட்சரம் கூட விளங்காத பவர்ஸ்டார் என்பவரின் சேட்டைகள், கோவை சரளாவின் கேவலமாகன உரையாடல் உச்சரிப்பு, பவர்ஸ்டாரைக்கலாய்த்து காலிசெய்ய அழைத்துவந்தால் நம்மையே காலிசெய்துவிடுவார் போலிருக்கிறதே என்ற சிந்தனைகளுடன் தட்டுத்தடுமாறி நடிக்கும் சந்தானம் என்று படம் மொக்கைக் காமெடியாக இருக்கிறது.

அதுவும் கமல்ஹாசன் போன்ற ஒரு கலைஞனின் கலைச்செயல்பாடுகளை கலாய்ப்பு என்கிற பெயரில் மிகக் கேவலமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியமைப்புகள் இதுவரையிலான தமிழ்திரைக்கலையின் மீது ஏற்படுத்தும் அவமானத்தன்மை கொண்டவை.

படத்தில் இறுதியாக பவரைப் பார்த்து சந்தானம் பேசும் வசனம்: “நான் காமெடியன்னு தெரிஞ்சி வாழ்ந்துட்டிருக்கேன்.. ஆனா நீ காமெடியன்னு தெரியாமலேயே காமெடியனா வாழ்ந்திட்டிருக்கே பாரு, அதுதான் பெரிய காமெடி...”

அதேபோல இதைக் கொண்டாடும் தமிழ்த்திரை உலகினர் தாங்கள் யாரென்று தெரியாமலேயே கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப்படத்தின் வெற்றி மறுபடியும் தமிழ்த்திரைப்பட உலகின் மாற்று முயற்சிகளைப் பின்னோக்கித் தள்ளியிருக்கிறது.


(தீராநதி - பிப்ரவரி 2013)


--
- senshe

Ramesh Murugan

unread,
Feb 10, 2013, 2:47:06 AM2/10/13
to panb...@googlegroups.com
நல்ல கட்டுரை. ஆனா கட்டுரையின் முற்பாதியில் காமெடியர்களை வாழ்த்திய கட்டுரை ஆசிரியர் பிற்பாதியில் கவுண்டமணியை திட்ட மறந்துவிட்டார். பழியை எல்லாம் இயக்குனர்கள் மேல போட்டுட்டார். 1980களுக்குபின் நேராக 2010க்கு வந்துவிட்டார்.

பாக்கியராஜின் பெண்ணடிமைத்தன, நாடகத்தன்மை கொண்ட சினிமா விமர்சிக்கப்பட வேண்டியதுதான். ஆனாலும் அந்த காலகட்டத்தில் அதற்கான தேவையும் இருந்தது. எஸ்.வி சேகர், பாண்டியராஜன், பார்த்திபனை இந்த இடத்தில் உள்ளிளுக்க வேண்டியதில்லை என்றாலும் தமிழ் சினிமாவை உலகத்தரத்துக்கு இழுத்துவந்த மற்ற இயக்குனர்களின் படங்களில் காமெடிக்கு அதிக வறட்சி இருந்தது என்பதை கட்டுரை ஆசிரியர் ஒப்புக்கவில்லை.

லட்டு தின்ன ஆசையா ஒரு அபத்தம் என்பது மறுப்பதற்கில்லை. மேலும் ஸ்ரீனிவாசனோ அல்லது சந்தானமோ இதே ரூட்டில் சென்றால் அதிகநாள் தாக்குபிடிக்க முடியாது என்பதும் யதார்த்தம்.


2013/2/10 senshe senshe <me.s...@gmail.com>

--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

senshe senshe

unread,
Feb 10, 2013, 2:51:41 AM2/10/13
to panb...@googlegroups.com
ரமேஷ் முருகன்,

கவுண்டமணியின் பிற்கால நகைச்சுவையின் பின்னுள்ள அரசியல் முக்கியமானதாகப் படுகிறது.  சுகுணாதிவாகர் இதை தனது பதிவில் எழுதி இருப்பார்.

//. ஆனாலும் அந்த காலகட்டத்தில் அதற்கான தேவையும் இருந்தது//

இதில் தேவை என்று குறிப்பிடுவதன் அர்த்தம் என்ன?


// தமிழ் சினிமாவை உலகத்தரத்துக்கு இழுத்துவந்த மற்ற இயக்குனர்களின் படங்களில் காமெடிக்கு அதிக வறட்சி இருந்தது என்பதை கட்டுரை ஆசிரியர் ஒப்புக்கவில்லை. //

அங்கு நகைச்சுவை தேவைப்படவில்லையென்றும் நாம் கொள்ளமுடியும்.

Ramesh Murugan

unread,
Feb 10, 2013, 3:14:02 AM2/10/13
to panb...@googlegroups.com

2013/2/10 senshe senshe <me.s...@gmail.com>

ரமேஷ் முருகன்,

கவுண்டமணியின் பிற்கால நகைச்சுவையின் பின்னுள்ள அரசியல் முக்கியமானதாகப் படுகிறது.  சுகுணாதிவாகர் இதை தனது பதிவில் எழுதி இருப்பார்.

கவுண்டமணியின் மிகச் சில காமெடிகளே அரசியலையும், அபத்தங்களையும் கிண்டல் செய்ற மாதிரி இருக்கும். மற்றவையெல்லாம் எந்த வகையில சேர்க்கிறது.
 

//. ஆனாலும் அந்த காலகட்டத்தில் அதற்கான தேவையும் இருந்தது//

இதில் தேவை என்று குறிப்பிடுவதன் அர்த்தம் என்ன?

பாரதிராஜா, மகேந்திரன், பாலச்சந்தர் படங்கள் எல்லாம் எதாவது சீரியசான் கான்செப்போடே இருந்தது. காமெடியர்கள் மட்டும் காமெடி செய்வார்கள். கதாநாயகன் என்றாலே ஒரு தவறும் செய்யக்கூடாத நல்லவனாக இருக்க வேண்டும். 70 களுக்கு முந்தைய படங்கள் எல்லாம் கட்டுக்கோப்பான குடும்ப அமைப்பைக் கொண்ட படங்களாக இருந்தது. ஆனா யதார்த்தத்தில் குடும்ப அமைப்பில், ஊடல்களில், தாம்பத்ய வாழ்கையில் இருக்கும் சின்ன சின்ன காமெடி, தவறுகள், அதற்கான சப்பைகட்டுகள் என பாக்கியராஜின் படங்கள் அனைத்தும் யதார்த்த வாழ்வுடன் ஒத்துப்போறதாக இருந்ததால் மக்களிடம் அமோக வரவேற்கைப் பெற்றது.

பாக்கியராஜ் சமூகம் சார்ந்த படங்களை எடுக்கவில்லை. குடும்பம் சார்ந்தது மட்டுமே. அதனால் கட்டுரையாசிரியருக்கு இவரின் காமெடி ஒவ்வாததாக இருக்கலாம்.

பாக்கியராஜுக்கு முன்பும் சரி, பின்பும் சரி இரண்டு தனிப்பட்ட கணவன் மனைவிக்கிடையேயான பரஸ்பர உறையாடல்களை வேறு யாரும் பேசவில்லை. அதில் உள்ள காமெடிகளை ரசிக்கவுமில்லை.

முன்னமே சொன்ன மாதிரி 70களுக்கு முந்தைய படங்களில் கட்டுக்கோப்பான கணவன் மனைவி. விட்டுக் கொடுத்தல், தியாகம் என்பதெல்லாம் கற்பு அல்லது சட்டம் என்பது மாதிரியாக இருக்கும். பாக்கியராஜுக்கு பிந்தைய படங்கள் ஆபாசம் அல்லது வெளிப்படை என்று சொல்லப்படுகின்ற வக்கிரம். அதில் காமெடி இல்லை. நான் என்ன சொல்ல வர்றேன் என்கிறதை உங்களுக்கு புரியும்படியா சொல்றெனான்னு எனக்கு தெரியல.
 


// தமிழ் சினிமாவை உலகத்தரத்துக்கு இழுத்துவந்த மற்ற இயக்குனர்களின் படங்களில் காமெடிக்கு அதிக வறட்சி இருந்தது என்பதை கட்டுரை ஆசிரியர் ஒப்புக்கவில்லை. //

அங்கு நகைச்சுவை தேவைப்படவில்லையென்றும் நாம் கொள்ளமுடியும்.


இந்த இடங்களில் முரண்பட வேண்டியிருக்குது. சினிமாவைப் பார்க்கும் கண்ணோட்டம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கின்றது. பாலுமகேந்திரா பாலச்சந்தர் எப்படி உலக சினிமா பேசுரவங்களுக்கு தேவைப் பட்டாங்களோ அதே மாதிரி பாக்கியராஜும், விசுவும் பலருக்கு தேவைப்பட்டார்கள்.

இப்போ ”லட்டு தின்ன ஆசையா” கூட இவ்வளவு வெற்றியுடன் ஓடக் காரணம் மற்ற படங்களில் உள்ள காமெடி வறட்சியே. இதுபோல அபத்தங்கள் அரங்கேறுவதற்கு சமூகம் சார்ந்து பேசும் சீரிய்ஸ் படங்களும்..

முன்னமே சொன்ன மாதிரி, கட்டுரை ஆசிரியர் 1980 களுக்கு அடுத்து 2010க்கு வந்துவிட்டார். இடையில் சமூகம் சார்ந்து பேசிய மற்ற காமெடியர்களையும் இயக்குனர்களையும் மறந்துட்டார். உதாரணம் விவேக், சத்தியராஜ், நாசர், மணிவண்ணன்... etc.

senshe senshe

unread,
Feb 10, 2013, 3:59:42 AM2/10/13
to panb...@googlegroups.com
அந்த மிகச்சில காமெடிகளை செய்ததே கவுண்டமணியின் சிறப்பு. (சுகுணா திவாகரின் சுட்டியைத் தேடி தனியேப் பதிகிறேன். முன்பே குழுமத்தில் இட்ட நினைவு உள்ளது.)

கவுண்டமணியின் மிகச் சில காமெடிகளே அரசியலையும், அபத்தங்களையும் கிண்டல் செய்ற மாதிரி இருக்கும். மற்றவையெல்லாம் எந்த வகையில சேர்க்கிறது. 

தவறு. முற்கால பாரதிராஜா, பாலச்சந்தர், ,மகேந்திரன் திரைப்படங்களில் காமெடியன் என தனியே யாரும் கிடையாது. கதையோட்டத்தின் மீது நிகழும் வாழ்வியல் அபத்தங்களையே நகைச்சுவையாக்கிக் கொண்டனர்.



 

பாரதிராஜா, மகேந்திரன், பாலச்சந்தர் படங்கள் எல்லாம் எதாவது சீரியசான் கான்செப்போடே இருந்தது. காமெடியர்கள் மட்டும் காமெடி செய்வார்கள்.


இதுவும் தவறு. மகேந்திரன் திரைப்படத்தில் கதாநாயகன் என்பவன் சமூக ஒழுக்கங்கள் என்பவனற்றை பெரியதாய் பேணுவதில்லை. பாலச்சந்தர் திரைப்படங்களில் பெண்ணிய திரைப்பட கருத்தாக்கங்களில் திரைப்பட முக்கிய ஆண்கள் பெரும்பாலும் எதிர்நாயகர்களே!



 
கதாநாயகன் என்றாலே ஒரு தவறும் செய்யக்கூடாத நல்லவனாக இருக்க வேண்டும். 70 களுக்கு முந்தைய படங்கள் எல்லாம் கட்டுக்கோப்பான குடும்ப அமைப்பைக் கொண்ட படங்களாக இருந்தது.

பாக்கியராஜின் திரைக்கதை அமைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆனால் பெரிதும் பெரிதாய் அவை குடும்ப அமைப்புக்குள்ளும், கணவன் மனைவி ஊடலுக்குள்ளூம், இரட்டை அர்த்த வசனங்களுக்குள்ளும், நாயக துதிக்குள்ளும் அடங்கியதாய் மாறியது மாத்திரமே கொடுமை.

 

மஞ்சூர் ராசா

unread,
Feb 10, 2013, 4:25:23 AM2/10/13
to panb...@googlegroups.com
கமலின் எத்தனையோ படங்கள் நகைச்சுவையை மையப்படுத்தி வந்திருக்கின்றன.  ஒரு சிலவற்றில் நல்ல நகைச்சுவை இழையோடும் என்றாலும் பல படங்களில் வசனங்களே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.  கவுண்டமணி-செந்தில் நகைச்சுவையாக - ஒரு வக்கிரம் கலந்த அடுத்தவனை சிறுமைப்படுத்தி அதனால் சிரிக்கவைப்பது.  அது தான் இப்பொழுதும் தொடர்கிறது.  தற்போது உடல்மொழியின் மூலம் நகைச்சுவையாக நடித்தவர் என்றால் அது வடிவேலு மட்டுமே.  அவரும் காணாமல் போய்விட்டார்.  ஜெமோ தன் தமிழ்படங்களில் நகைச்சுவை என்ற கட்டுரையில் சொன்னது போல தமிழ் படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி என்பது விளக்கமாக பேசினால் தான் புரியும்.  அல்லது அப்படி உருவாக்கிவிட்டார்கள் - அதாவது மேஜர் சுந்தரராஜன் ஆங்கிலத்தில் ஒரு வசனம் பேசி அதையே திரும்பவும் தமிழில் சொல்வது போல.

Ganesh Kumar

unread,
Feb 11, 2013, 4:33:16 AM2/11/13
to panb...@googlegroups.com
பாக்கியராஜுக்கு பிந்தைய படங்கள் ஆபாசம் அல்லது வெளிப்படை என்று சொல்லப்படுகின்ற வக்கிரம். அதில் காமெடி இல்லை. 


பாக்யராஜ் தன் படங்களில் வக்கிரத்தைக் காமெடி முலாம் பூசித் தந்தார் . ஆனால் அவர் வழித் தோன்றல்கள் வக்கிரத்தை வக்கிரமாகவே தந்தனர்.அது தான் வித்தியாசம்.

நாயகிகளிடம் நாயகர்களே வக்கிரமாகப் பேசுவார்கள் , அதற்கு பிராயசித்தமாக தனது அம்மாவை ஒரு பாட்டில் புகழ்ந்து விடுவார்கள்

ஸ் பெ

unread,
Feb 11, 2013, 4:36:55 AM2/11/13
to panb...@googlegroups.com
:)))

2013/2/11 Ganesh Kumar <mara...@gmail.com>


நாயகிகளிடம் நாயகர்களே வக்கிரமாகப் பேசுவார்கள் , அதற்கு பிராயசித்தமாக தனது அம்மாவை ஒரு பாட்டில் புகழ்ந்து விடுவார்கள்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
Feb 11, 2013, 4:38:54 AM2/11/13
to panb...@googlegroups.com
உள்ளே வெளியே-வில் ஹார்ன் அடித்த பார்த்தீபன் தான் கடல் 'துளசி' இக்காக கொந்தளித்தார்..

ம்ம்.. காலம் ஒரு மனிதனை எவளவு தூரம் நகர்த்தி விடுகிறது என்று விட்டு விட்டேன்..

:))

2013/2/11 Ganesh Kumar <mara...@gmail.com>
பாக்கியராஜுக்கு பிந்தைய படங்கள் ஆபாசம் அல்லது வெளிப்படை என்று சொல்லப்படுகின்ற வக்கிரம். அதில் காமெடி இல்லை. 


பாக்யராஜ் தன் படங்களில் வக்கிரத்தைக் காமெடி முலாம் பூசித் தந்தார் . ஆனால் அவர் வழித் தோன்றல்கள் வக்கிரத்தை வக்கிரமாகவே தந்தனர்.அது தான் வித்தியாசம்.

நாயகிகளிடம் நாயகர்களே வக்கிரமாகப் பேசுவார்கள் , அதற்கு பிராயசித்தமாக தனது அம்மாவை ஒரு பாட்டில் புகழ்ந்து விடுவார்கள்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Naresh Kumar

unread,
Feb 11, 2013, 6:24:21 AM2/11/13
to panb...@googlegroups.com
//உள்ளே வெளியே-வில் ஹார்ன் அடித்த பார்த்தீபன் தான் கடல் 'துளசி' இக்காக கொந்தளித்தார்..//
வித்தியாசம், தான் முத்த்மிடும் வயதிற்கும், தன் பெண்ணை இன்னொருவர் முத்தமிடும் வயதிற்கும் உள்ள வித்தியாசம்தான்!

Naresh Kumar

unread,
Feb 11, 2013, 6:40:20 AM2/11/13
to panb...@googlegroups.com
சென்ஷி,

கவுண்டமணி இழை ப்ளீஸ்...

senshe senshe

unread,
Feb 11, 2013, 6:50:17 AM2/11/13
to panb...@googlegroups.com
https://groups.google.com/forum/?hl=de&fromgroups=#!topic/panbudan/1U8dw0del_w

தனி இழையிலும் பதிவிட்டுள்ளேன்.

2013/2/11 Naresh Kumar <meet...@gmail.com>
சென்ஷி,

கவுண்டமணி இழை ப்ளீஸ்...

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
- senshe

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
Feb 12, 2013, 8:41:26 PM2/12/13
to panb...@googlegroups.com

;)
ரெண்டெ வரியில் சிரிக்கவும் சிந்திக்கவும் வச்சிட்டீங்க!

On Feb 11, 2013 4:54 PM, "Naresh Kumar" <meet...@gmail.com> wrote:
//உள்ளே வெளியே-வில் ஹார்ன் அடித்த பார்த்தீபன் தான் கடல் 'துளசி' இக்காக கொந்தளித்தார்..//
வித்தியாசம், தான் முத்த்மிடும் வயதிற்கும், தன் பெண்ணை இன்னொருவர் முத்தமிடும் வயதிற்கும் உள்ள வித்தியாசம்தான்!

--

Asif Meeran AJ

unread,
Feb 13, 2013, 1:00:12 AM2/13/13
to panb...@googlegroups.com


ரெண்டெ வரியில் சிரிக்கவும் சிந்திக்கவும் வச்சிட்டீங்க!


ஏன்னா அவர் நந்தாளரோட உபி
உங்களுக்கு நந்தாளரைத் தெரியுமா?
தயவுசெஞ்சு இல்லைன்னு சொல்லுங்க. ஒரு ப்ழைய இழைய திரும்பத் திறந்துடலாம்.
யாரெல்லாம் ரெடியா இருக்கீங்கன்னு மட்டும் சொல்லுங்க 

Naresh Kumar

unread,
Feb 13, 2013, 1:01:15 AM2/13/13
to panb...@googlegroups.com
:))) அர்த்தம் உங்களுக்கு தெரியும்!

2013/2/13 Asif Meeran AJ <asifm...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
நரேஷ்
www.nareshin.wordpress.com

இனியவன்

unread,
Feb 13, 2013, 1:21:23 AM2/13/13
to panb...@googlegroups.com

 யார் அது?

:-)


2013/2/13 Asif Meeran AJ <asifm...@gmail.com>
உங்களுக்கு நந்தாளரைத் தெரியுமா?
தயவுசெஞ்சு இல்லைன்னு சொல்லுங்க. ஒரு ப்ழைய இழைய திரும்பத் திறந்துடலாம்.

--
என்றென்றும் ப்ரியங்களுடன்,
இனியவன்.
[யாதும் ஊரே. யாவரும் கேளிர். ஒன்றே குலம். ஒருவனே தேவன் ]

Ahamed Zubair A

unread,
Feb 13, 2013, 3:09:35 AM2/13/13
to panb...@googlegroups.com
அண்ணாச்சி....

நந்தாளர்னா யாரு??


2013/2/13 Asif Meeran AJ <asifm...@gmail.com>

Srimoorthy.S

unread,
Feb 13, 2013, 3:00:19 PM2/13/13
to பண்புடன்

ரெண்டாவது ஆளு நீர்தான்

--

Srimoorthy.S

unread,
Feb 13, 2013, 3:00:19 PM2/13/13
to பண்புடன்

தமிழ் நாட்டுல நந்தாளர் யாருன்னு கேட்ட மொத ஆளு நீர்தான்.

--

இனியவன்

unread,
Feb 13, 2013, 9:48:35 PM2/13/13
to panb...@googlegroups.com

2013/2/14 Srimoorthy.S <srimoo...@gmail.com>

தமிழ் நாட்டுல நந்தாளர் யாருன்னு கேட்ட மொத ஆளு நீர்தான்.

அப்பிடியாவது அந்த பழைய இழையை திறக்கட்டும். வரலாறை தெரிஞ்சிக்கலாம்னு பார்த்தா விட மாட்டிங்க போல...

:-)

Sahul Hameed

unread,
Feb 15, 2013, 2:10:33 PM2/15/13
to panb...@googlegroups.com
மூணாவது ஆள் நான்  - நந்தாளர் யாரு


2013/2/13 Srimoorthy.S <srimoo...@gmail.com>



--
இப்படிக்கு 
ஷாகுல் ஹமீது 

Reply all
Reply to author
Forward
0 new messages