வாழ்த்துக்களா வணக்கமா ....?

138 views
Skip to first unread message

HAROON RASHEED

unread,
Nov 16, 2008, 3:16:57 AM11/16/08
to panb...@googlegroups.com
 
தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழுமத்தில் படித்தது ... உங்கள் பார்வைக்கு வேண்டி
Assalamu Alaikum,
 
Forwarding as received,
 
Masalam,
 
Nilofer

 




பார்ப்பணர்களின் சதி

கண்ணியமான முஸ்லிம்களின் வீடுகளுக்குள்ளேயும் டிவி மூலம் வண்டி வண்டியாக ஆபாசம், இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஆபாசத்தை முற்றிலுமாக வெறுக்கும் முஸ்லிம்களுக்கு சிறிது ஆறுதலாக மக்கள் தொலைக்காட்சி கிடைத்திருக்கிறது.

அதிலும் சில நெருடலான விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் மிக முக்கியமாக 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது.

'மகளிர் உலகம்' என்ற நேரலை நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கு கொள்ளக்கூடிய பெண், சுபைதா என்ற முஸ்லிம் பெண்.

ஒருமுறை அறிவிப்பாளர் 'வணக்கம்' – 'வணக்கம்' என்று பல முறை சொன்ன போது, மௌனமாக இருந்து விட்டு, ஹலோ என்று சொல்லி தனது பேச்சை ஆரம்பித்தார், அந்த முஸ்லிம் பெண். இருந்தும் அந்த அறிவிப்பாளர் 'வணக்கம்' என்று மீண்டும் சொல்லி பதிலை எதிர்பார்த்தார், பதில் ஏதும் வரவில்லை. 'முஸ்லிம்கள் தங்கள் மத விஷயங்களில் விடாப்பிடியாக இருக்கிறார்கள்' என்ற விமர்சனத்தை செய்து விட்டு நிகழ்ச்சிக்கு வந்து விட்டார்.

இதே நிகழ்ச்சியில் இன்னொரு முறை ஒரு பெண், 'வணக்கம்' என்று அறிவிப்பாளர் சொன்னதற்கு 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்னார். அநேகமாக மக்கள் தொலைக்காட்சியினர் அவரது தொலைத் தொடர்பை துண்டித்து இருக்கக் கூடும். ஏனெனில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்ன உடன் நிகழ்ச்சி நடத்துபவரிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டு, வேறொருவர் இணைப்பில் வந்துவிட்டார்.

அப்பொழுதிலிருந்து எனது மனதில் ஓர் எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது, அதாவது,

'வணக்கம்' என்கிற சொல் இறைவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டிய வணக்கத்தை குறிக்கும். இந்த சொல்லை வேறு எதற்கும் எவருக்கும் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் இஸ்லாமிய நம்பிக்கைப்படி ஷிர்க் எனும் இணைவைத்தலாகும். அதாவது அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார்.

'வணக்கம்' என்று சொல்லப்படும் போது, முஸ்லிம்கள் என்ன மறுமொழி சொல்வது? என்பது தான் எனது எண்ண ஓட்டமாக இருந்தது.

அதுமட்டுமின்றி இதே விஷயத்தை 'களத்து மேடு' நிகழ்ச்சியில் பேரா.நன்னன் அவர்களிடம் கேட்க வேண்டும் என்பதும் எனது எண்ணமாக இருந்தது.

ஆனால் கடந்த 9.11.2008, களத்து மேடு நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, பேரா.நன்னன் அவர்கள், 'முஸ்லிம்கள், குறிப்பாக நல்ல முஸ்லிம்கள் தங்களது கோட்பாடுகளில் தெளிவாக இருக்கிறார்கள்.. அதை உடனே நடைமுறைப்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால் சைவ, வைணவ சமயங்களில் அழுக்குகள் மண்டிக் கிடக்கின்றது. எவர் எதைச் சொன்னாலும் இந்த சமயங்கள் அவற்றை உள்வாங்கிக் கொள்கின்றது. ஆனால் முஸ்லிம்கள் 'வணக்கம்' என்பதை இறைவனுக்கு மட்டும் தான் செலுத்த வேண்டும், மனிதர்களுக்கு செலுத்தக் கூடாது, என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்' என்றார் (உரையின் சுருக்கம்)

இன்னொரு முஸ்லிம் சகோதரி பேரா.நன்னனிடம் வித்தியாசமான முறையில் தனது பேச்சை ஆரம்பித்தார். நிகழ்ச்சியின் அறிவிப்பாளரின் வழக்கமான 'வணக்க'த்திற்கு 'வாழ்த்துக்கள்' என்றார். பேரா.நன்னனையும் 'வாழ்த்துக்கள் ஐயா' என்று விளித்தார்.

மற்றொரு சகோதரர், 'சீதக்காதி' என்ற பெயர், ஷேக் அப்துல் காதிர் என்ற பெயரின் மருவுதலாகும் என்ற தகவலை சொன்னார்.

அடுத்த சகோதரர், பேராசிரியரிடம் நேரடியாகவே 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்த முடியவில்லை, அதனால் வேறொரு சொல்லை எங்களுக்கு சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு நன்னன் அவர்கள், 'முன்பு தொடர்பில் வந்த சகோதரி எனக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னார். நானும் வாழ்த்துக்கள் என்று பதில் சொன்னேன்' என்று பதில் சொன்னார்.

அதோடு, 'வணக்கம்' என்ற சொல்லை முந்தைய தமிழ் இலக்கியங்களில் காண முடியவில்லை, பண்டைய மன்னர்களை புலவர்கள் சந்திக்கும் போது, வணக்கம் மன்னா! என்று சொல்ல வில்லை, மாறாக 'வாழ்த்துக்கள்' என்ற சொல்லைத் தான் பயன்படுத்தியுள்ளார்கள். பின்னர் வந்த ஆரியர்கள் தான் கீழ்மக்கள், தங்களை வணங்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் 'வணக்கம்' என்ற சொல்லை அறிமுகம் செய்திருக்கிறார்கள். 'வணக்கம்' என்ற சொல்லை பயன்படுத்துவது தமிழ் மரபும் அல்ல, தமிழர் பண்பாடும் அல்ல. அதனால் அதனை பயன்டுத்துவதை தவிர்ப்பது நல்லது என்றார்.

தனக்கு சரி என்று பட்டதை போட்டு உடைக்கும் பேரா.நன்னன், தான் கடவுள் நமபிக்கை அற்றவன் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
முஸ்லிம்களை வணக்கம் என்ற பெரும் சிக்கலில் இருந்து காப்பாற்றிய பேரா.நன்னன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



 
__._,_.___
 
.

__,_._,___

 


--~--~---------~--~----~------------~-------~--~----~
தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழுமம் குறித்து:
http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en


--
*அஸ்ஸலாமு அலைக்கும்   வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீதும தங்கள் குடும்பத்தினர் நண்பர் உறவினர் அனைவர் மீதும்  என்றென்றும் நிலவட்டுமாக*
அன்பன் ஹாரூன் ரஷீத்

Asif Meeran AJ

unread,
Nov 16, 2008, 3:36:10 AM11/16/08
to panb...@googlegroups.com
கொடுமை
வேறென்னத்தச் சொல்ல?

வணக்கம்னா இறைவனுக்கு இணைவைக்கிறதாயிடுமா?

எனக்கு ஒரு கேள்வி எழுகிறது
நீங்கள் இறைவனை வணங்குகிறீர்களா தொழுகிறீர்களா?

மரியாதை நிமித்தம் சொல்லப்படும் வணக்கத்திற்கும் இறையை வணங்குதலுக்கும்
இருக்கும் அடிப்ப்டை வித்தியாசம் கூடப் புரியாமல் ....
என்னத்தச் சொல்றது?

இப்படி சொல்லிச் சொல்லியே நம்மை நாம் விலக்கிக் கொண்டிருக்கிறோமென்றே
தோன்றுகிறது.

'சிங்க குட்டி'டா என்று சொன்னால் சிங்கத்துக்குப் பிறந்தவன் என்று பொருள் இல்லை
சிங்கம் போன்ற ஆளுமை கொண்ட மனிதனின் குழந்தை என்றுதான் பொருள்

அதைப் போலத்தான் வணக்கம் சொல்வதும்
ப்டைத்த இறைவனுக்கு இணைவைக்கலாகாதென்பதை ஏற்றுக் கொள்கிறேன்
அதே நேரம் இணைவைப்பதற்காகச் செய்யபப்டும் வணக்கமும், வாழ்த்துகளைப்
பரிமாறிக் கொள்ளும் பொருட்டு சொல்லபப்டும் வணக்கமும் ஒன்றல்ல என்பதை
எல்லாம் வல்ல இறைவன் அறிய மாட்டானா என்ன?

அதை விட்டு விட்டு இதைச் சொல்லாதே அதைச் செய்யாதே என்று சொல்வது
படைத்த இறைவனையே கேலி செய்வது போலல்லவா இருக்கிறது? :-(


ezhil arasu

unread,
Nov 16, 2008, 3:49:34 AM11/16/08
to panb...@googlegroups.com
முதலில் இந்த தலைப்புக்கும் கட்டுரைக்கும் என்ன தொடர்பு?

நண்பன்

unread,
Nov 17, 2008, 4:04:08 PM11/17/08
to பண்புடன்
நல்லடியாரின் வணக்கம் வணக்கம் வணக்கம் பதிவில் பின்னூட்டமிட்டது.

http://nanbanshaji.blogspot.com/2007/12/blog-post_830.html

வணக்கம் என்ற சொல்லின் பயன்பாட்டை, இத்தனை தூரத்திற்கு ஆராய்ந்து
பார்த்திருக்கிறீர்கள் என்பதை நினைக்கும் பொழுது, வியப்பாக இருக்கிறது.

ஒவ்வொரு செயலையும், எந்த நோக்கோடு செய்யப்படுகிறது என்பதைக் கருத்தில்
கொண்டே, அந்தச் செயல் அங்கீகரிக்கப்படுகிறது. எந்த உள்நோக்கமுமின்றி,
இயல்பாக ஒரு மொழியைப் பயன்படுத்துவதால், எந்தப் பாதகமும் நிகழ்ந்து
விடுவதில்லை.

நோன்பு வைப்பவர்கள், அதற்கான 'நிய்யத்' செய்து கொள்ள வேண்டும். அதாவது
தனது நோக்கம் குறித்த உறுதிபாடு. இவ்வாறு 'நிய்யத்' செய்யாமல், சும்மா
பட்டினி கிடப்பதெல்லாம், நோன்பாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அதே போல்,
தொழுகையின் போது, 'இந்தத் தொழுகையை தொழுகிறேன்' என்று நிய்யத் செய்து
கொள்ள வேண்டும். இல்லையென்றால், அது தொழுகையாக ஏற்றுக் கொள்ளப்படாது.

ஆக, இறைவனை வணங்கும் பொழுது, 'நான் உன்னை வணங்குகிறேன்' என்ற
உறுதியில்லாதவற்றை இறைவணக்கமாக ஏற்பதில்லை என்ற கோட்பாட்டை இஸ்லாம்
உருவாக்கியதே இணைவைத்தல் என்ற பாவத்தை செய்து விட கூடாது என்ற காரணத்தால்
தான்.

இணைவைத்தல் நிகழ்வதற்கு - 'நான் இன்னதை வணங்குகிறேன் - இறைஞ்சுகிறேன்'
என்ற 'நிய்யத்'தை செய்து கொண்டாக வேண்டும். இன்றும் பலர் தர்காவில்
அடக்கமாகி இருக்கும் அறிஞர்களிடத்தில் 'நேர்ச்சையாக' வேண்டிக்
கொள்வார்கள் - எனக்கு நீ இதைக் கொடுத்தால், நான் உன் தர்காவில் வந்து
இன்னின்ன செய்கிறேன் என்று. அதாவது ஒரு உறுதிபாடை உண்டாக்கிக்
கொள்கிறார்கள். 'நிய்யத்' செய்கிறார்கள். அதுவே தவறாகிறது. ஆனால், எந்த
ஒரு 'நிய்யத்'துமின்றி, ஒரு சுற்றுலா போன்று அங்கு சென்று வருவதற்கு
தடையேது?

இங்கு 'வணக்கம்' என்று சொல்வது, எதிரில் இருப்பவரை நான் இறைவனாகக் கருதி
வணங்குகிறேன் என்பதாகக் கருதக் கூடாது. மரியாதை செலுத்துவதைக் குறிக்கும்
ஒரு மொழியின் சொல். அந்த சொல்லைப் பயன்படுத்தினால், அது இறைவனுக்கு
இணைவைத்ததாகிவிடும் என்பது மூளையின் சிந்தனைச் ஜவ்வுகளை வலுக்கட்டாயமாக
இழுத்து சிதைப்பதாகும் - வதைப்பதாகும். சிந்தனையாகாது.

வந்தே மாதரம் என்ற பாடலில் மண்ணின் பெருமையைத் தான் சொல்வதாகக் கருத்தில்
கொள்ள வேண்டுமே தவிர, அதை இறைவனாக உயர்த்தி, மனதில் 'நிய்யத்' செய்து
கொண்டு வணங்குவதாகக் கருதக் கூடாது. இத்தகைய மனத் தடைகளைக் களைவதில் நாம்
முனைப்பு காட்ட வேண்டும். மொழியைக் கையாள்கையில், அநாவசியமாக நோக்கங்கள்
கற்பித்துக் கொண்டு, தன்னைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பிக் கொண்டு,
தனித்தீவாக ஆவது சரியல்ல என்பது எனது கருத்து. இதை நான் எங்கும்
படித்துச் சொல்லவில்லை. எனது சிந்தனையாகத் தான் முன்வைக்கிறேன்.

மொழிகளின் பயன்பாடு குறித்து இத்தனை மனத்தடைகளை எழுப்பிக் கொண்டது நாம்
தானே தவிர, மொழிகள் எந்தத் தடையும் விதிக்கவில்லை. மொழி பெயர்த்தவர்கள்
அப்படி செய்திருக்கிறார்கள். அப்படியும் மனதில் சஞ்சலமிருந்தால்,
அழகப்பன் சொல்லியது போல, வணக்கத்திற்குரியவன் என்பதை வழிபடுதலுக்குரியவன்
என்ற சரியான பதத்தை இனி நாம் கையாள வேண்டுமே தவிர, 'வணக்கம்' என்று சொல்ல
மாட்டேன் என்று விலகி நிற்பது சரியல்ல.

நாம் பேசும் தாய்மொழியைத் தவறாக அர்த்தம் செய்து கொண்டு, அதை நான் சொல்ல
மாட்டேன். ஆனால், அதற்குப் பதிலாக, நாம் இருவருக்குமே அந்நியமான
மொழியில், 'அஸ்ஸலாமு அலைக்கும்' சொல்லிக் கொள்வோம் என்று அழைப்பு
விடுப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்பதை
அறிந்த இரு முஸ்லிம்கள் சொல்லிக் கொள்வதில் பொருள் இருக்கும். ஆனால்,
அரபி மொழி அறியாத ஒரு பிற மதத்தினருக்கு அவ்வாறு செய்யலாமே என்று
பரிந்துரைப்பது தவறு.

'நோக்கங்கள்' தெளிவாக இருக்கும் பொழுது, இறைவனுக்கு இணை வைத்தல் ஒரு
பொழுதும் நிகழாது - ஒரு மொழியைக் கையாள்வதால்.

வணக்கம் என்று சொல்வதினாலும், வந்தே மாதரம் என்று பாடுவதினாலும் நாம்
இறைவனுக்கு எந்த விதத்திலும் குற்றமிழைத்தவர்களாக மாட்டோம்.

As long as the intentions are clear, everything is fine.

இதை வாசித்து கருத்து சொன்ன நண்பர் ஒருவர் சொன்னார் - வணக்கம் என்பது
தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் எழுந்த முகமன் அல்ல. தமிழர் பண்பாட்டின்
வழியாக முகமன் சொல்வது "வாழ்க...." என்ற வாழ்த்துதலுடன் தான். எத்தனை
முறை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். (வாழ்க வாழ்க என்பது போல..)

இந்த வணக்கம் என்பது ஆர்யர்கள் தமிழர்களிடையே புகுத்தியது.
அடிமைப்படுதலைக் குறிக்கும் வகையில் வணக்கம் என்பதை புகுத்தி விட்டனர்.
பல பண்பாட்டு மயக்கங்களில் இதுவும் ஒன்று. இதை கைவிட வேண்டும். அதற்குப்
பதில், 'வாழ்க..' என்று வரவேற்பதுவும், பதில் மொழியாக 'வாழ்க வாழ்க..'
என்றும் கூறிக் கொள்வது, நம்மை அடிமைச் சிந்தனையிலிருந்து விடுவிக்கும்
என்று சொன்னார். (என்ன ஒன்று, வாழ்க வாழ்க என்று தகுதியற்ற
தலைவர்களையெல்லாம் வாழ்த்துக் கொண்டிருக்கும் பண்பாட்டை நினைத்தால் தான்,
அந்த வார்த்தையை நடைமுறையில் ஏற்றுக் கொள்ள முடியுமா என்ற சந்தேகம் பலமாக
எழுகிறது. தகுதியற்றவர்களை கூட்டம் போட்டு, கோஷம் போட்டு, வாழ்க வாழ்க
என்று கூவுவதை விட்டு விட்டால், வாழ்க என்பது வணக்கம் என்ற சொல்லிற்கு
நல்ல மாற்றாக அமையக் கூடும்...)

ஆக, இனி, நாம் வாழ்க என்று சொல்லியே ஒருவரை ஒருவர் வரவேற்கும் பழக்கத்தை
மேற்கொள்ளலாம்.

என்றாலும், 'இணைவைத்தலை' அதன் நோக்கம் கருதியே இணைவைத்தலா அல்லது இல்லையா
என்று வரையறுக்க வேண்டுமென்பதைக் குறித்து எனக்கு எந்த சந்தேகமும்
இல்லை.

நண்பர்கள் அனைவரும் வாழ்க என்று வாழ்த்தப் பழகும் வரையிலும் வணக்கத்தைத்
தாராளாமாகச் சொல்லலாம்.

On Nov 16, 12:49 pm, "ezhil arasu" <nand...@gmail.com> wrote:
> முதலில் இந்த தலைப்புக்கும் கட்டுரைக்கும் என்ன தொடர்பு?...
>

பண்பாட்டு மயக்கங்களை உருவாக்கி அதை பிற சமூகங்களின் மீது திணித்ததைத்
தான் அவர் குறிப்பிடுகிறார் என்றே எண்ணுகிறேன்.

நண்பன்

unread,
Nov 17, 2008, 4:16:10 PM11/17/08
to பண்புடன்
அன்பின் ஹாருன் ரஷீத்,

தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழுமம் இஸ்லாத்திற்கான authority கிடையாது.
அவர்கள் கூடி விவாதிக்கிறார்கள் என்பது வரையில் சந்தோஷமே. ஆனால், சரியான
புரிதல் இல்லாமல், வெறுமனே உணர்ச்சி வசப்பட்டு பேசுவது என்பது தவறான
வழிகோலாகிவிடும்.

மேலும், கட்டுரையில் குறிப்பிட்டது போல், 'அஸ்ஸாலாமு அலய்க்கும்' என்று
ஒருவர் சொல்லி, அதனால் அவரது தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது என்றால்,
அது பெருந்தவறாகும். அஸ்ஸலாமு அலய்க்கும் என்ற வாழ்த்தின் பொருள் -
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக ஏன்று மட்டும்
தானே? மொழி புரியாததினால், அந்த நிலையத்தார் அவ்வாறு செய்திருக்கக்
கூடும்.

இங்கே துபாயில், வானொலியில், பலவகையான greetings வாழ்த்து மொழிகளைக்
கேட்க இயலும்.

நமஸ்தே
நமஸ்காரம்
வணக்கம்
அஸ்ஸலாமு அலைக்கும்
Good Morning

இவையெல்லாம் தெரிந்த மொழிகள்

இது போக, இங்கு பிலிப்பினோஸ், ஷைனீஸ் என்று பெருமளவில் வாழக்கூடிய
மக்களும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் மொழியிலே தான் வாழ்த்திக்
கொள்கின்றனர். தமிழ் நாட்டுக்காரார்கள் மட்டும் தான் இப்படியெல்லாம்
யோசிக்கின்றனரோ, என தெரியவில்லை.

வணக்கம் என்று சொல்வதில் எந்தத் தவறுமில்லை.

ஆனால், அது தமிழுக்கே அந்நியமான பண்பாடு என்று வாதித்தால், அது வேறு
விஷயம்.

On Nov 16, 12:16 pm, "HAROON RASHEED" <haroon...@gmail.com> wrote:
>   **
> *தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழுமத்தில் படித்தது ... உங்கள் பார்வைக்கு வேண்டி
> *

ஒன்றே [நன்றே] சொல்

unread,
Nov 18, 2008, 2:49:09 AM11/18/08
to panb...@googlegroups.com


2008 நவம்பர் 18 00:04 அன்று, நண்பன் <nan...@gmail.com> எழுதியது:


வணக்கம் என்று சொல்வதினாலும், வந்தே மாதரம் என்று பாடுவதினாலும் நாம்
இறைவனுக்கு எந்த விதத்திலும் குற்றமிழைத்தவர்களாக மாட்டோம்.

As long as the intentions are clear, everything is fine.

வணக்கம் என்ற தமிழ் முகமன் வார்த்தை வரை, என்னால் சரிகாண முடிகிறது.
வந்தே மாதரம் எனும் பாடலோ, [தமிழக] அரசியல் வாதிகளின் காலில் விழும் கலாச்சாரமோ -  இதனுடன் சேர்ந்த ஒன்று தான் எனச் சொல்லமுடியாது.
 
வந்தே மாதரம் பாடலைப் பொறுத்தவரை, பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரின் வெறியூட்டும் ஆனந்த மடம் எனும் வங்க நாவலின் சூழல் தான், அறிஞர்கள் பலருக்கு அந்த பாடலை ஒரு சமத்துவ நாட்டின் தேசியப்பாடலாக அங்கீகரிக்க மனம் ஒப்புவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
இது உண்மை தானே?
 
அக‌த்திலிருந்து அன்புடன் வெளிப்ப‌டும், எந்த‌ வித‌மான‌ முக‌ம‌னும் வ‌ர‌வேற்க‌ப்ப‌ட‌த்த‌க்க‌து தான்.
அவற்றில் உள்ளன்பும், பொது நலமும் மட்டும் தான் இருக்க வேண்டும்.
இவ‌ற்றில் மொழி ஆய்வுகளும், மொழியினைப் பிடித்துக்கொண்டு நேர‌டிப்பொருள் காண‌ விழைவ‌தும் அப‌த்த‌மே.
 
தீ என்று சொன்னால், சுட்டா விட‌ப்போகிற‌து. அத‌ற்கு ப‌ர்னால் தான் த‌ட‌வுகிறோமா, என்ன‌?
வ‌ண‌க்க‌ம் என்றோ, வாழ்த்துக்க‌ள் என்றோ, அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ்ம‌த்துல்லாஹி வ‌ப‌ர‌காத்துஹூ என்றோ, குமுஸ்த‌கா என்றோ, ந‌ம‌ஸ்தே என்றோ, ஆயோ பவான் என்றோ  கூறி ந‌ம் அன்பை உல‌குக்குத் தூவுவ‌து தான் ந‌ல‌ம்.

jmms

unread,
Nov 18, 2008, 2:52:52 AM11/18/08
to panb...@googlegroups.com
 

 
அக‌த்திலிருந்து அன்புடன் வெளிப்ப‌டும், எந்த‌ வித‌மான‌ முக‌ம‌னும் வ‌ர‌வேற்க‌ப்ப‌ட‌த்த‌க்க‌து தான்.
அவற்றில் உள்ளன்பும், பொது நலமும் மட்டும் தான் இருக்க வேண்டும்.


சரியே..



--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

HAROON RASHEED

unread,
Nov 18, 2008, 6:13:22 AM11/18/08
to panb...@googlegroups.com

நன்றி நண்பனார் அவர்களுக்கு உங்களின் தெளிவான ஒரு பக்க சார்பில்லாத கருத்துக்கள் வரவேர்க்கப்படலாம் பலரால் ......!

வேண்டுமென்றே  ஒரு கருத்து ஒரு சமூகத்தின் மீது திணிக்கப் படுவதும் அதை சகித்திருப்பதும் சிந்தனை தெளிவு இல்லாத காலத்தில் வேண்டுமானால் முடிந்திருக்கலாம்.

HAROON RASHEED

unread,
Nov 18, 2008, 3:19:51 AM11/18/08
to panb...@googlegroups.com

நன்றி நண்பனார் அவர்களுக்கு உங்களின் தெளிவான ஒரு பக்க சார்பில்லாத கருத்துக்கள் வரவேர்க்கப்படலாம் பலரால் ......!

வேண்டுமென்ற ஒரு கருத்து ஒரு சமூகத்தின் மீது திணிக்கப் படுவதும் அதை சகித்திருப்பதும் சிந்தனை தெளிவு இல்லாத காலத்தில் வேண்டுமானால் முடிந்திருக்கலாம்.

 
இன்று ஒரு மார்க்கத்தை தெளிவுபட விளங்கி ஏற்றுக் கொண்டுவிட்ட ஒரு மனிதர் அவர் கொண்டிருக்கும் கொள்கைகளை இடரச்செயும் எந்த ஒரு கருத்தையும் நுணுகி ஆராய்வது தவறாகாது மேலும் நெருப்பு என்று சொல்லிவிட்டால் பற்றிக்கொள்ளுமா என்பது போல் நீங்கள் வைத்திருக்கும் கருத்துக்கு விடை என்னவோ பற்றிக்கொள்ளது என்றுதான் சொல்லமுடியும் ஆயினும் நெருப்பில்லாமல் புகையாது என்பது தான் இங்குள்ள கவலை

 

\\'நோக்கங்கள்' தெளிவாக இருக்கும் பொழுது, இறைவனுக்கு இணை வைத்தல் ஒரு பொழுதும் நிகழாது - ஒரு மொழியைக் கையாள்வதால்.\\

 

நோக்கங்கள் தெள்வுபட இருந்த சமூகங்களுக்கு மத்தியில் தானே பலதெய்வ வழிபாடு வந்தது....? ஒரு நினைவுக்கு வேண்டி சிலை வடித்தான் பின் கலை என்றான் தன் உன்னத நிலை மறந்து தகுதி இல்லாதவைகளை வணங்க ஆரம்பித்தான்...... தொடர்கிறான் ..... ஒரு தர்க்க ரீதியான காரணம் கூட சொல்ல மாட்டாமல் கண்மூடித்தனமாக  நம்பிக்கைகளை  வளர்த்துக் கொண்டு அதனை அழுத்தம் திருத்தமாக நியாயப் படுத்திக்கொண்டிருக்கும் பெரும் பெரும் பதவிகளை அலங்கரிக்கும் அறிஞர்களை .....!!!!!!!!!!!!!! சிலைவனங்கிகளை விலங்குகளை வணங்குபவர்களை  உலகில் பார்க்கையில் இந்த வணக்கச் சொல்லில் இருக்கும் பொருள் குற்றம் இலேசானதாக படவில்லைதான்.

Asif Meeran AJ

unread,
Nov 18, 2008, 6:51:13 AM11/18/08
to panb...@googlegroups.com

சிலைவனங்கிகளை விலங்குகளை வணங்குபவர்களை  உலகில் பார்க்கையில் இந்த வணக்கச் சொல்லில் இருக்கும் பொருள் குற்றம் இலேசானதாக படவில்லைதான்.


அப்ப என்ன செய்ய முடியும்?
இப்படியே பேசிக்கிட்டு காலத்தை ஓட்டிக்கிட்டு இன்னமும்
ஒரு நூறு வருசம் பின்னால போயிட்டோம்னா வெளங்கிடுவோம் :-((

கே.பாலமுருகன் balamurugan

unread,
Nov 18, 2008, 7:32:13 AM11/18/08
to panb...@googlegroups.com

அநங்கம்
மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ்
 
மலேசிய தீவிர எழுத்தாளர்களையும் வாசகர்களையும் விமர்சகர்களையும் இணைப்பது
 
இதழ் 2
 
ஆசிரியர்
கே.பாலமுருகன்
(bala_b...@hotmail.com)
 
துணை ஆசிரியர்
ஏ.தேவராஜன்
 
ஆசிரியர் குழு
ப.மணிஜெகதீஸ்
கோ.புண்ணியவான்
செ.நவீன்
மோ.கவிதா
 
அநங்கம் இரண்டாவது இதழ் மீண்டும் மலர்ந்துள்ளது. அச்சு வடிவமைப்புலும் பக்க மேம்பாட்டிலும் மேலும் நிறையவே வலுவடைய வேண்டிய சூழலில் அநங்கம் இருந்தாலும், சிறு பத்திரிக்கை நடத்துவதில் அதிகமான இலாப நோக்கங்களைப் பெற இயலாத நிலையைச் சரிகட்ட அநங்கம் வழக்கம் போலவே சாதாரண அச்சு அமைப்பில் மலர்ந்துள்ளது. இருந்தபோதும் மலேசிய எழுத்தாளர்களும் சிங்கப்பூர் எழுத்தாளர்களும் தங்கள் படைப்புகளைக் கொடுத்து ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். அவர்களின் படைப்புகள் நமது அநங்கம் சிற்றிதழின் நோக்கத்தை நிறைவாக்கும் என்கிற நம்பிக்கையும் எங்களுக்குண்டு.
       அநங்கம் இதழின் நோக்கங்கள் குறித்து கொஞ்சம் விளக்கமாக வாசகர்களுக்குத் தெரிவிப்பதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அநங்கம் இதழ் மலேசிய தீவிர எழுத்தாளர்களையும், விமர்சகர்களையும், வாசகர்களையும் இணைப்பதோடு, மேலும் வெளிநாட்டுப் படைப்பாளர்களையும் நம்மோடு இணைத்துக் கொண்டு நல்ல இலக்கியப் படைப்புகளை வாசகர்களிடம் கொண்டு செல்வதே ஆகும். தொடர்ந்து வளரும் இளம் படைப்பாளர்களையும் நாட்டின் மூத்த எழுத்தாளர்களையும் படைப்புலகத்தில் இணைக்க வேண்டும் என்பதே இதழின் பிரதான நோக்கமும்கூட.
அந்த வகையில் அநங்கம் இதழ் தொடர்ந்து குறிபிட்ட கால வரையறை இல்லாமல் வெளிவந்து கொண்டே இருக்கும். வாசகர்கள்-எழுத்தாளர்களின் ஆதரவில் அநங்கம் இதழ் தனிச் சுற்றுக்கும் மட்டுமே. எந்த வியாபார நோக்கத்திற்காகவும் இலாபத்திற்காகவும் வெளியீடப்படவில்லை என்பதை அன்பான வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் அநங்கம் இதழ் எந்தக் கடைகளிலும் விற்பனைக்குத் தரப்படாது. நண்பர்கள் வட்டம் மூலமே அநங்கம் இதழ் கொண்டு செல்லப்படும்.

தொடர்புக்கு:
கே.பாலமுருகன்
இதழாசிரியர்
bala_b...@hotmail.com


 


Share your beautiful moments with Photo Gallery. Windows Live Photo Gallery
ananggam-01.jpg
ananggam-03.jpg

Asif Meeran AJ

unread,
Nov 18, 2008, 7:39:00 AM11/18/08
to panb...@googlegroups.com
நன்றி பாலமுருகன்

அநங்கம் தன் இடர்களைக் களைந்து வென்று வாகை சூட வாழ்த்துகள்!

பண்புடனில் இப்போது மூன்று பத்திரிகை ஆசிரியர்கள் இருப்பது மகிழ்ச்சி
தருவதாகவும் பண்புடனின் செறிவைச் சொல்வதாகவும் இருக்கிறது (நான் இருப்பதைக்
கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் :-)

அநங்கம் - பால முருகன்

நாம் - பாண்டித்துரை

மென் தமிழ் - ரசிகவ், நிலாரசிகன், விழியன் உமாநாத்

துவக்கு இப்போது நின்று விட்டதால் நண்பனை இந்தப்பட்டியலில் சேர்க்க முடியவில்லை
அதைப் போலவே கானல் இதழ் நின்று போனதால் அதன் ஆசிரியர் சாபத்தாவையும் சேர்க்கவில்லை.

அட்றா சக்கை! அட்றா சக்கை!!
எத்தனை குடத்தில் இட்ட தீபங்களோ இன்னமும்???!!

கே.பாலமுருகன் balamurugan

unread,
Nov 18, 2008, 7:48:33 AM11/18/08
to panb...@googlegroups.com




அநங்கம்
ananggam-01.jpg
ananggam-03.jpg

HAROON RASHEED

unread,
Nov 18, 2008, 7:40:28 AM11/18/08
to panb...@googlegroups.com
விரும்பாத ஒன்றை திணிக்கப் பார்க்காதீங்க என்கிறேன்
உங்களுக்கு ஏன் அத்தனை கோபம் வருகிறது
அவரவருக்கு அவரவர் கருத்து பெரிது இதில் பின்னோக்கிப் போவதற்கு என்ன இருக்கிறது ....?!!!!!!!!!! வணக்கம் சொல்லி குனிந்து கொண்டிருங்கள் உங்களை எவர் வேண்டாமென்றது ?
யோசித்துப் பார்த்தால் உங்களை முன்னெடுத்து செல்வதற்கு த்தான் குட்டக் குட்டக் வணங்க வேண்டாம் என்கிறார்கள் ....பிறர் வணங்க வணங்க  குட்டவும் வேண்டாம் என்கிறார்கள்
அண்ணாச்சி கொஞ்சம் அனுசரிச்சி பேச வேண்டாம் யோசிச்சி பேசுங்க  போதும்

ஆசாத்

unread,
Nov 18, 2008, 8:00:03 AM11/18/08
to பண்புடன்
இன்னிக்கா நேத்தா இந்தப் பிரச்சன அது 1995இலேர்ந்து ஓடிக்கிட்டிருக்கு.
யார் யாருக்கு பதில் சொல்றது, யார் யாருக்கு விளக்கம் சொல்றது.
சலிப்பாத்தான் இருக்கும்.

அப்ப அல்லாஹ் எல்லாரையும் ஆதத்துக்கு சஜுதா பண்ணச் சொன்னானே அது எப்படி
சஜுதா அல்லாஹ்வுக்கு மட்டுந்தானேன்னு கேட்டாக்கா, அல் ஜன்னத்துல என்னா
வெளக்கம் வருது, சஜுதான்ற சொல்லு தலைதாழ்த்தி வணங்கும் நிலையை மட்டும்
சொல்லல; இங்க அதுக்கு ஒத்துக்கறதுன்ற பொருள் வருது அப்படீன்னு வெளக்கம்
வருது.

அப்புறம் இன்னொரு எடத்துல் யவ்ம் அப்படீன்னா ஒரு இரவு ஒரு பகல் சேர்ந்த்
நாள் அதாவது 24 மணி நேரம் அப்படின்றது பொருந்துதான்னு கேட்டா, யவ்ம் - இத
நாள் அதாவது 'காலம்' அப்படீன்னும் பொருள் கொள்ளலாம். இப்படியும் வெளக்கம்
சொல்றாங்க.

அப்ப நாங்களும் சொல்றோம், வணக்கம்ன்னா நாங்க வணங்குறோம் அப்படீன்ற
அர்த்தம் கெடையாது, அது வாழ்த்துதான்றோம்.

நம்ம அரபி வாத்தியாரு தெளிவா சொல்லுவாரு. அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லணுமா
சொல்லிக்கோ, சபா அல் கைர் சொல்லணுமா சொல்லிக்கோ, மஸா அல் கைர் சொல்லணுமா
சொல்லிக்கோ, ஆனால், எதுர்ல இருக்றவரு சலாம் சொன்னா பதில் சலாம் சொல்லு,
அவரு சபா அல் கைருன்னா நீ சபா அந்நூர் சொல்லு அவ்வளவுதான் சிம்பிள்.

வணக்கம் சொன்னா பதில் வணக்கம்!
சலாம் சொன்னா பதில் சலாம்!

கூட்டத்துல மைக்கப் புடிச்சா எதுர்க்க ஆரு இருந்தாலும் நமக்கு சலாம்தான்,
துபாய்ல ஒருத்தரு கேக்கவே செஞ்சுட்டாரு, 'ஆசாத், எந்த சபையார்ந்தாலும்
மைக்குக்குப் போனா அஸ்ஸலாமு அலைக்கும்தானா?'ன்னாரு ஆமாங்க,
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் சொல்றதுக்கு முந்தியே சலாம் சொல்லிடுவங்க.
முடிக்கும்போது வ ஆகிர் தவானா..

எனக்கு இருக்ற ரெண்டு மூணு இஸ்லாமியரல்லாத நண்பர்களுக்கு போன்
பண்ணும்போது நான் வணக்கம் சொன்னாக்கூட அஸ்ஸலாமு அலைக்கும்னு திருப்பி
பதில் சொல்லுவாங்க.

இதுனால நானு வணக்கத்துக்கு எதிரி கெடையாது, வணக்கம் சொன்னா பதில்
வணக்கம், வணக்கம் சொல்றவரு சலாம் சொன்னாலும் ஏத்துக்குவாருன்னா
அவருக்கும் சலாம்தான்.

சலாம் சொல்றவரு வணக்கத்த ஏத்துக்கிட்டாருன்னா அவருக்கும் வணக்கம்
சொல்லலாம்.

ஆனா, நபிகள் நாயகத்தோட அறிவுரைன்றதால அதிகமா சலாம் சொல்லிக்றது நல்லது.
அதுக்கு மேல இதுல ஆராஞ்சு பாக்க எனக்கு ஒண்ணும் இல்ல.

அதையும் இணை வைக்றதையும் முடிச்சுப் போட்டாங்கன்னா...க்யா
கரேங்கே...சல்தாஹை யாரா! (யாரான்னா நண்பா - இது பஷ்தூனியப்பாணி)

Asif Meeran AJ

unread,
Nov 18, 2008, 8:18:31 AM11/18/08
to panb...@googlegroups.com
விரும்பாத ஒன்றை திணிக்கப் பார்க்காதீங்க என்கிறேன்

விரும்பாத ஒன்று எது?
வணக்கம் என்று சொல்வதா?
எதிரில் வரும்மனிதர் 'சலாம் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்க முடியுமா?

வணக்கம் எப்படி இருக்கீங்கன்னு சொல்லும்போது
பதிலுக்கு வணக்கம்ங்க! நல்லா இருக்கேன்னுதான் சொல்ல முடியுமே தவிர
'ஐயோ! அது இணைவைப்பாச்சேன்னு யோசிக்க முடியாது.
அதனால் இதுல இணைவைப்பௌங்குறதை நீங்கதான் திணிக்குறீங்க ஹாரூன் பாய்!
 
உங்களுக்கு ஏன் அத்தனை கோபம் வருகிறது

இது கோபமில்லை சகோதரரே!
ஆற்றாமை. இந்தச் சமூகம் இப்படி யோசித்துத்தான் ஆங்கிலம் படிப்பதை விட்டுத் தொலைத்தது
அதனுடைய வீழ்ச்சியிலிருந்தே நாம் இன்னும் மீளவில்லை முழுதாக. இன்னமும் மிகப் பிற்படுத்தப்பட்ட்வர்களை விடவும் மோசமான சூழலில் இருக்கிறது இசுலாமிய சமூகம். அதற்காகக் கிள்ளிப்போட எத்தனையோ இருக்கும்போது இன்னமும் வணக்கம் குறித்த ஆராய்ச்சியில் இருப்பவர்கள் மீது ஏற்படும் இயல்பான சலிப்பு.
 
அவரவருக்கு அவரவர் கருத்து பெரிது இதில் பின்னோக்கிப் போவதற்கு என்ன இருக்கிறது ....?!!!!!!!!!!

நிச்சயம் பின்னோக்கித்தான் செல்வோம்
ஒரே விசயத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதால் யாருக்கு என்ன லாபம்?
அவரவர்க்கு அதது என்றால் வணக்கம் சொல்வதையும் 'சரி அவன் சொல்லி விட்டுப் போகட்டும் நாளைக்கு
ம்றுமையில் இறைவனுக்கு அவன் பதில்சொல்லட்டும்' என்று அமைதியாய் இருக்க வேண்டியதுதானே?
 
வணக்கம் சொல்லி குனிந்து கொண்டிருங்கள் உங்களை எவர் வேண்டாமென்றது ?

வணங்குவதால் குனிந்து கொண்டிருக்கிறோம் என்று எவன் சொன்னது?
இது சமூகம் சார்ந்த ஒரு வாழ்த்து முறை. அதைச் செய்வதால் நாம் குனிந்து போகிறோம்
என்றால் நாம் பிற சமூகத்திடமிருந்து தனித்து விடப்படுவோம் என்ற உண்மையை நாம் உணர வேண்டும்
 
யோசித்துப் பார்த்தால் உங்களை முன்னெடுத்து செல்வதற்கு த்தான் குட்டக் குட்டக் வணங்க வேண்டாம் என்கிறார்கள் ....பிறர் வணங்க வணங்க  குட்டவும் வேண்டாம் என்கிறார்கள்
அண்ணாச்சி கொஞ்சம் அனுசரிச்சி பேச வேண்டாம் யோசிச்சி பேசுங்க  போதும்

யோசிச்சு பேசுறதாலதான் அனுசரிகக் முடியலைன்னு சொல்றேனுங்க :-)
எனக்குக் கோபமெல்லாம் இல்லை. வணக்கம் என்பதை வெறும் வாழ்த்தாக மட்டும் புழங்குவதில்
தவறேதும் இல்லையென்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்

HAROON RASHEED

unread,
Nov 18, 2008, 8:39:57 AM11/18/08
to panb...@googlegroups.com

சய்யத் ஆபாத் என்கிற அழஅகான பெயர் (நீதிமன்றத்தின் தலைமை அகம் ) உங்களைப்போன்றவர்களின் அனுசரிப்புகளால் சைதாப்பேட்டை என்று மாறிப் போனது போல
வணக்கமும் பையப் பைய அதன் இலக்கு மறந்து இடம் மாறிப் போகும் என்கிற கவலை உள்ளவர்கள் புலம்பிக்க் கொள்கிறோம்

எதிரில் வருபவர் பாய் என்று தெரிந்தவுடன் வணக்கம் சொன்னால் வேருப்பெரும் என்பது வெட்டவெளிச்சமான பின்னும் வணக்கம் சொல்வார்களா...
அவர்கள் உங்கள் நண்பர்களா  நடக்கட்டும்

HAROON RASHEED

unread,
Nov 18, 2008, 8:28:22 AM11/18/08
to panb...@googlegroups.com

அய்யா ஆசாத் சாஹிப்
ஆண்டவன் சொன்னா அல்லாரும் கேட்டுத்தான் ஆவணும்
அவன் ஆதத்தை அல்ல ஒரு துரும்புக்கு தலை வணங்கு என்றால் கேள்வி கேக்காம வணங்கித்தான் ஆவணும் இல்லன்னா இபுலீசுக்கு நேர்ந்தது தான் நேரும்

அது ஆண்டவன் கட்டளை (அவன் padaicchavan  )...
இது மனிதன் ... மனிதன் விருப்பம் நயவஞ்சகமா இருக்கும்போது ஏன் கட்டுப்படணும் என்பதுதான் கேள்வி..?

ஆசாத்

unread,
Nov 18, 2008, 9:34:07 AM11/18/08
to பண்புடன்
இனிய ஹாரூன்,

> அவன் ஆதத்தை அல்ல ஒரு துரும்புக்கு தலை வணங்கு என்றால் கேள்வி கேக்காம
> வணங்கித்தான் ஆவணும் இல்லன்னா இபுலீசுக்கு நேர்ந்தது தான் நேரும்
> அது ஆண்டவன் கட்டளை (அவன் padaicchavan )...
> இது மனிதன் ... மனிதன் விருப்பம் நயவஞ்சகமா இருக்கும்போது ஏன் கட்டுப்படணும்
> என்பதுதான் கேள்வி..?

நான் இரண்டு பொருள்படும் அரபி வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கின்றேன்.
அல் ஜன்னத்தில் வெளிவந்த கேள்வி பதில் பகுதியில் சஜுதாவின் விளக்கத்தை
அந்த மார்க்க அறிஞர் எழுதியது குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள்
அதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறீர்கள். எனது மடலைப்
படித்தீர்களா? சஜுதாவின் பொருள் குறித்தது தவிர எங்காவது இறையை வணங்குவது
இப்லீசு வணங்க மறுப்பது என்பதெல்லாம் இருக்கிறதா? சஜுதாவின் பொருள்
நெற்றி நிலத்தின்மீது படும்படியாக வணங்குவது மட்டுமல்ல, அது
ஒப்புக்கொள்வதையும் குறிக்கும், இதுதான் நான் முன்வைத்த பொருள். மீண்டும்
எழுதுகிறேன், இது அல்ஜன்னத்தில் வெளிவந்த பதில்.

இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் எழுதுங்கள். விவாதிக்கலாம்.

இப்படி பூச்சாண்டி காட்டுவது தேவையற்றது.

'அவன் துரும்பை வணங்கு எனச் சொன்னாலும்' என்ற பேச்சுக்கே இடமில்லை
என்பதுதான் இஸ்லாம். அவன் யாரை வணங்க சொன்னான், எப்படி வணங்கச் சொன்னான்,
எந்தெந்த நேரத்தில் வணங்கச் சொன்னான் என்பதெல்லாம் சொல்லப்பட்டு
முழுமையான மார்க்கமாக இஸ்லாம் இருக்கையில் எங்கே வந்தது அவன் துரும்பை
வணங்கச் சொன்னாலும் வணங்கவேண்டும் என்னும் ஒப்புமை? இது சரியான
ஒப்புமையா? 'அவன் துரும்பை வணங்கச் சொன்னாலும்' என்னும் வாசகமே அவனது
பெருமையைக் குறைக்கும் பாதையை நோக்குவதாக நான் உணர்கிறேன்.

இனிமேல் அவன் எதுவும் நம்மிடம் சொல்லப்போவதில்லை எனும் உறுதியான
நம்பிக்கையே இஸ்லாம். சொல்லவேண்டிய எல்லாவற்றையும் நபிமார்கள் மூலமாக
சொல்லிவைத்து மறுமை வாழ்விற்கான நற்பண்புகள் நம்மிடையே இம்மை வாழ்வில்
இருக்கின்றதா என கண்கணிக்கப்படுகிறோம் என தீர்மானமாக நம்புவதே இஸ்லாம்.
இப்படிப்பட்ட நம்பிக்கையினூடே எங்கிருந்து வந்தது 'அவன் துரும்பை வணங்கச்
சொன்னாலும்' என்னும் வாதம்?

எனக்கு மார்க்கம் சொல்லித்தந்த யாரும் இப்படி ஒரு கருத்தை
முன்வைக்கவில்லை. 'குன்' என்று சொன்னால் அனைத்தும் ஆகிவிடும் அதுதான்
அவனது பலத்திற்கு அறிஞர்கள் உதாரணமாகச் சொல்வது.

இப்பொழுது வணக்கம் குறித்து:

பேராசிரியர் நன்னனின் அந்த பதிலை நானும் கேட்டேன். அது எனக்கு
ஏற்புடையதாக இல்லை. வணக்கம் என்பது தமிழ் மரபு சார்ந்ததல்ல என்பது
நீங்கள் முன்வைக்கும் கருத்தா? ஆம் என்றால் சொல்லுங்கள். பதில்
சொல்லுமுன் உங்கள் பதிலுக்கு எத்தகைய கேள்விகள் வரலாம் என்பதையும்
யோசித்துவைத்துக்கொள்ளுங்கள்.

ஏனென்றால், அது தமிழ் மரபு சார்ந்ததன்று என்று நன்னன் அவர்கள் சொன்ன
பிறகும் அந்த நிகழ்ச்சியில் அந்தப் பெண்மணி வணக்கம்தான் சொன்னார் இன்னும்
சொல்கிறார்.

ஆசாத்

unread,
Nov 18, 2008, 9:48:10 AM11/18/08
to பண்புடன்
> சய்யத் ஆபாத் என்கிற அழஅகான பெயர் (நீதிமன்றத்தின் தலைமை அகம் )

கிள்ளியூர் - கெல்லீஸ்
ஹாமில்டன் பிரிட்ஜ் - அம்பட்டன் வாராவதி
கோடா பாக் - கோடம்பாக்கம்
சாய் பாக் - சேப்பாக்கம்

இதுல முன்னது ரெண்டுக்கும் வரலாற்று ஆதாரங்களக் காட்ட முடியும். பின்னது
ரெண்டுக்கும் வரலாற்று ஆதாரம் காட்ட முடியாது, ஏன்னா இராயப்பேட்டை
அமீர்மஹால்ல இருந்த நவாப் ஆப் ஆர்க்கோட் (ஆற்காட்டு நவாப்தான் ச்சும்மா
பீட்டர் வுட்டேன்) கோடம்பாக்கத்துல போயி குதுரயக் கட்டுனத வரலாற்று
சேதிங்க கெடையாது. அதே மாதிரி, சேப்பாகம் போயி டீ குடிச்ச சேதியும்
கெடையாது. எல்லாம் அப்படியே சொல்றது, நாமளும் கேட்டுக்கிட்டுப் போகணும்.
அவ்வளவுதாங்க ஹாரூன்ஜி.

எந்த நீதிமன்றம், யாரு ஆட்சிக்காலம், அப்படீனெல்லாம் கேக்கலாம்.
ஆற்காட்டு நவாப் சென்னைல இருந்தாங்க, தாசில்தார் சமாசாரமெல்லாம் உருது
பாதி கலந்து வர்ரர்து டெல்லி சுல்தான்களாலதான தவிர இங்க ஆற்காட்டு நவாபால
இல்லை, அப்புறம் பேட்டை, பாக்கம் எல்லாத்துக்கும் நாம் பார்சி, உருது,
அரபி மூலத்தத் தேடிப்போனா அவ்வளவுதான்.

Kasali Mohammed

unread,
Nov 18, 2008, 9:50:51 AM11/18/08
to panb...@googlegroups.com
என்னங்க இது சின்னப்புள்ளைதனமா....விவாதம்.
 
என்றைக்கு ஒரு அப்பாவி அநியாயமாய் ஏமாற்றப்படுகிறானோ..என்றைக்கு ஓர் அறிவுள்ள ஏமாற்றுக்காரன் கொழிக்கிறானோ...அன்றே மதத்தின் மேல் நம்பிக்கை குறைகிறது.
 
நல்லவர்களைக் கடவுள் சோதிப்பான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவன்தான் நல்லவனாயிற்றே... ஏன் வீணாக சோதிக்க வேண்டும்? கெட்டவனுக்கு இந்த உலகத்திலேயே தண்டனை கிடைத்தால் எல்லோரும் நல்லவனாக மாற சாத்தியக்கூறுகள் மிக அதிகம். அதை விட்டுவிட்டு...
 
கேள்வியுடன்
கஸாலி

 

ஆசாத்

unread,
Nov 18, 2008, 10:15:47 AM11/18/08
to பண்புடன்
> <kasali6...@gmail.com> wrote:
> நல்லவர்களைக் கடவுள் சோதிப்பான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவன்தான்
> நல்லவனாயிற்றே... ஏன் வீணாக சோதிக்க வேண்டும்? கெட்டவனுக்கு இந்த உலகத்திலேயே
> தண்டனை கிடைத்தால் எல்லோரும் நல்லவனாக மாற சாத்தியக்கூறுகள் மிக அதிகம். அதை
> விட்டுவிட்டு...

இனிய கஸ்ஸாலி,

'நாம் உங்களை சோதிப்போம்' இறைவனின் இந்த வாசகத்துக்கு மாற்றுக் கருத்தே
கிடையாது? நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் இனிய கஸ்ஸாலி, குரான்
வசனத்தின் எண்களைக் கொடுத்து ஹதீசுகளியும் சுட்டிக்காட்டி இந்த விவாதமும்
ஒரு மார்க்கக்கட்டுரை போல் ஆகிவிடக்கூடாதே என்னும் எண்ணத்தில், 'நாம்
உங்களை சோதிப்போம்' என்பது இறைவனின் வசனம் என்னும் வரியுடன் மற்ற
விவரங்களுக்குச் செல்கிறேன்.

> என்னங்க இது சின்னப்புள்ளைதனமா....விவாதம்.

எது சிறுபிள்ளைத்தனமான விவாதம் இபுலீசுக்கு நேர்ந்தது என்ன என பூச்சாண்டி
காட்டுவதா? இல்லை நான் எழுதியதில் ஏதும் குறை கண்டீர்களா? எது
சிறுபிள்ளைத்தனம். இபுலீசுக்கு நேர்ந்த கதிதான் என்று ஒருவர் சொல்லிச்
செல்வார், இபுலீசின் தன்மைகள் அறிந்திருந்தும் நாங்கள் அமைதியக
இருக்கவேண்டும். அமைதியாக இருந்தால் சிறுபிள்ளைத் தனம் அல்ல, அப்படியா?

எனது விவாதத்தில் எதனை சிறுபிள்ளைத் தனம் என்கிறீர்கள்?

ஒன்றே [நன்றே] சொல்

unread,
Nov 18, 2008, 10:51:06 AM11/18/08
to panb...@googlegroups.com
//தெளிவுபட விளங்கி ஏற்றுக் கொண்டுவிட்ட ஒரு மனிதர் அவர் கொண்டிருக்கும் கொள்கைகளை இடரச்செயும் எந்த ஒரு கருத்தையும் நுணுகி ஆராய்வது தவறாகாது//
 
மதிக்கிறேன்; வாழ்த்துகிறேன் நண்பா!

பிரேம்குமார்

unread,
Nov 18, 2008, 12:07:31 PM11/18/08
to panb...@googlegroups.com
அநங்கம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் பாலமுருகன்.

நண்பன்

unread,
Nov 18, 2008, 12:31:25 PM11/18/08
to பண்புடன்
அன்பின் ராஜன்,

> வந்தே மாதரம் பாடலைப் பொறுத்தவரை, பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரின்
> வெறியூட்டும் ஆனந்த மடம் எனும் வங்க நாவலின் சூழல் தான், அறிஞர்கள் பலருக்கு
> அந்த பாடலை ஒரு சமத்துவ நாட்டின் தேசியப்பாடலாக அங்கீகரிக்க மனம் ஒப்புவதில்லை
> என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
> இது உண்மை தானே?

உண்மை தான். ஆனந்த மடம் என்ற நாவலின் நாயகன், முஸ்லிம்களையெல்லாம்
அழித்து ஒழித்து விட கங்கணம் கட்டிக் கொண்டு, அதற்கான அறைகூவலை
விடுக்கிறான். அவன் அக்காரியத்திற்காக, இந்துக்களை (முஸ்லிம்களை
கருவறுப்பது என்ற நோக்கத்தின் பொருட்டு) ஒன்றிணைப்பதற்கும் எழுதிய,
நாவலில் அவன் பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல். கதையின் மைய நோக்கம் இஸ்லாமிய
மக்களுக்கு எதிரானது என்பதால், அதை இஸ்லாமியர்கள் பாட மறுத்தனர். அது
அரசியல். மதம் அல்ல. மற்றபடி அந்த பாடல், தேசத்தைப் புகழ்ந்து, பிறந்த
மண்ணை புகழ்ந்து பாடப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. அதனால், இதை
பாடுவதில் (அல்லது வாசிப்பதில்) எந்த மதகாரணங்களும் குறுக்கிடுவது
அவசியமில்லை. அரசியல் நீதியாக நீங்கள் மறுத்தால், அது வேறு விஷயம்.
அவ்வளவு தான். இதில் மதங்களைப் புகுத்துவது தேவையில்லாதது.

அரசியல்வாதிகளின் காலில் விழும் அவலத்தையெல்லாம் விவாதித்து நேரத்தை
வீணடிப்ப்பதில் என்ன புண்ணியம் இருக்கப் போகிறது. விடுங்கள், அந்தக்
கழுதைகளை.


On Nov 18, 11:49 am, "ஒன்றே [நன்றே] சொல்" <kmlra...@gmail.com> wrote:
> 2008 நவம்பர் 18 00:04 அன்று, நண்பன் <nanb...@gmail.com> எழுதியது:

நண்பன்

unread,
Nov 18, 2008, 3:48:59 PM11/18/08
to பண்புடன்
அன்பு நண்பர்களுக்கு...

> நன்றி நண்பனார் அவர்களுக்கு உங்களின் தெளிவான ஒரு பக்க சார்பில்லாத
> கருத்துக்கள் வரவேர்க்கப்படலாம் பலரால் ......!


Islam, ….involves the keen perception that life cannot forever be kept
in leading strings; that in order to achieve full self-consciousness
man must finally be thrown on his own resources.

(Muhammed and the Quran – Rafiq Zakaria)

வாழ்க்கை எப்பொழுதுமே வழிகாட்டி என்ற தும்பில் கட்டப்பட்டு உழல்வதாக
இருக்க முடியாது. அவன் தனது சுயத்தின் முழுவடிவையும் கண்டுணரும் வகையில்
அவன் அவனது ஆதாரங்களுடன் தனித்து விடப்பட வேண்டும்.

The call of Islam therefore concerns, above all, the remembrance of a
knowledge deeply embedded in our being, the confirmation of a
knowledge that saves, hence the soteriological function of knowledge
in Islam. Islam addressess the human being not primarily as will, but
as intelligence. If the great sin in Christianity is disobedience,
which has warped the will, the great sin in Islam is forgetfulness and
the resulting inability of the intelligence to function in the way
that God created it as the means to know the One. That is why the
greatest sin in Islam and the only one God does not forgive is shirk,
or taking a partner unto God, which means denying the Oneness of God
or tawhid.

(The Heart of Islam – Enduring Values for Humanity by Seyyed Hossein
Nasr)

மற்றெவற்றைக் காட்டிலும், இஸ்லாத்தின் அழைப்பு கவனம் கொள்வது, நம்முள்
ஆழ்ந்துறைந்திருக்கும் (இறையைப் பற்றிய) அறிவின் பரிமாணத்தை
நினைவிலிருத்துவதைக் குறித்தானது. நம்மைக் காப்பதை நிச்சயப்படுத்தும்
அறிவின் பரிமாணம். அதுவே இஸ்லாத்தின் மீட்டெடுக்கும் பண்பைக் கொண்ட
ஞானம். இஸ்லாம் மனிதர்களை ‘ இச்சையுடைத்தவனாக ’ முதன்மைப்படுத்தாமல்,
அவனது அறிவை சுட்டுகிறது. இச்சைகளின் வடிவங்களை உருக்குலைக்கும்
கீழ்ப்படியாமை (ஆதிபாவம் - ஆணை மறுத்து கனி உண்ணுதல்) என்பது
கிறித்துவத்தில் பெரும் பாவமாகக் கருதப்படுகையில், இஸ்லாத்தில்,
மறத்தலும் அதனால் விளையும் அறிவின் இயலாமையினால், இறைவன் எவ்வகையில்
அறிவையுண்டாக்கினோ, அவ்வகையில் இறைவனின் ஒருமையுணரும் தன்மையிழத்தலையுமே
பெரும்பாவமாகக் கொள்கிறது. அதனால் தான் இறைவனை மறந்து, (இணைவைத்தல் -
ஷிர்க்) இறைவனின் ஒருமை குறித்த அறிவை இழத்தலின் மூலம் அவனுக்கு சமமாக
மற்றொன்றைப் படைத்தலும் பாவமாகக் கொள்ளப்படுகிறது

தனித்த இறைவன், ஒவ்வொரு மனிதனுக்குமுண்டான ஆத்ய செய்தியாக சொல்வது -
இறைவனிடத்தில் அடிபணியுங்கள் - எவனது முழுமையின் முன்பு மற்றனைத்தும்
இருப்பற்றுப் போகிறதோ, அவனிடத்தில் அடிபணியுங்கள். மேலோட்டமாகப்
பார்த்தால், கடவுளின் முன் நம்மை அர்ப்பணித்தல் என்றே தோன்றும். மற்றொரு
தளத்தில், அவனது பூரணத்துவத்தின் முன்பு, நமது ‘இல்லாமை’ குறித்த
விழிப்பே (அறிவே) என்றாகும். (இறைவனிடத்தில் அடிபணிதல் என்றாகும்) அதைத்
தான் குரானும் சொல்கிறது. “All that dwells in the heavens and the
earth perishes, yet there abideth the Face of thy Lord, Majestic,
Splendid” (55:26-27)

இஸ்லாத்தின் பெயர்க்காரணமும் இந்த யதார்த்தத்திலிருந்து தான் வருகிறது.
அல்-இஸ்லாம் என்பதன் பொருள், அடிபணிதல், சரணடைதல் என்பது தானே! அதையும்
தாண்டி, தன் ஒன்றுமற்ற தன்மையை இறைவனின் பூரணத்துவத்தில் அடங்கக்
கொடுப்பது. இந்த வகையில், ஏக இறை வணக்கத்தில், வடிவ வழிபாடுகளற்று
வழிபடும் அனைத்து மனிதர்களும் - எம்மதமாயினும் - இஸ்லாத்திற்கு ஏற்பு
உடையவர்களே. உலகின் அனைத்து மதங்களுமே, இந்த அடிபணிதலின் தத்துவத்திலே
தான் கட்டமைக்கப்பட்டிருப்பதாக இஸ்லாம் கருதுகிறது. அதனால், அல்-இஸ்லாம்
என்ற நிலை, இறைவனிடத்தில் அடிபணிந்திருத்தல் என்ற ஒன்றை மட்டுமே சாரும்.
அந்த நிலைக்கு மத எல்லைகள் கிடையாது.

இணைவைத்தலை எந்த தளத்தில் வைத்துப் பேசுகிறார்கள் என்று இப்பொழுதாவது
புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். இறைவனை உணர்வதற்கு, நீங்கள்
அறிவுத் திறன் மிக்கவராக இருக்க வேண்டும். தனது இயலாமையைப் புரிந்திருக்க
வேண்டும். இறைவனின் மகாபெரும் சக்தியை உணர்ந்திருக்க வேண்டும்.

ஒரு குடிசைக்குள் உட்கார்ந்திருப்பவனுக்கு, அவனது கூரை தாண்டிய வானம்
பூரணத்துவமாக இருக்கலாம். விண்கலம் ஏறி, வான் வெளி பறப்பவனுக்கு, அவனது
அறிவு விரியும் வேகத்தை விட, இந்தப் பிரபஞ்சம் விரியும் வேகம் அவனை
ஒன்றுமில்லாதவனாக்கலாம். ஆக, இறைவனை உணரும் வகையில், ஒருவனின் அறிவின்
விசாலமே அதிமுக்கியமானது. அதனாலயே, அறிவைப் பெறும் வகையில், கல்வி
இஸ்லாத்தில் கட்டாயக் கடமையாக்கப்பட்டிருக்கிறது.

ஒரு காலத்தில், கணிதத்தில், மருத்துவத்தில், விஞ்ஞானத்தில்,
வானசாஸ்திரத்தில், இலக்கியத்தில் என்று அறிவின் விசாலத்தை, அதன்
உச்சத்தைத் தொட தொடர்ந்து முயன்றவர்கள் தான் இஸ்லாமியர்கள். இன்று தங்கள்
பெண் மக்களை கல்வி சாலைக்கு அனுப்ப மாட்டேன், ஆங்கிலம் படிக்க மாட்டேன்
என்று குறுகிய புத்திமான்களின் வலையில் வீழ்ந்து அழிந்தோம்.

இனியும், இந்த பித்தலாட்டங்கள், அரங்கேறாது. கூடாது.

இறைவனின் முன் தனது ஒன்ருமின்மையை உணர மறுத்தல் ஒன்றின் மூலமே இணை
வைத்தல் நிகழும் என்ற புரிதல் இருந்தால், மற்ற எதுவும், இணை வைத்தலாகாது.
அதில்லாமல், வணக்கம் சொல்வது, வந்தே மாதரம் பாடுவது, பக்கத்து
வீட்டுக்காரனின் விழாக்களில் போய் நிற்பது, அன்பாக அடுத்த வீட்டுக்காரன்
நெற்றியில் திலகமிட்டுவிட்டால் பதறிப் போய் விடுவது என்பதெல்லாம்
இணைவைத்தல் ஆகாது.

மக்களே, இன்னமும் பழங்குடிகளாக இருக்காதீர்கள். அறிவார்ந்த உலகிற்கு
வாருங்கள். இறைவன் கொடூரமானவன் அல்ல. அவனுக்கு உங்களைத் தெரியும். எது
இணை வைத்தல் என்பதுவும் அவனுக்கு நன்றாகவே தெரியும்.

கே.பாலமுருகன் balamurugan

unread,
Nov 18, 2008, 7:19:06 PM11/18/08
to panb...@googlegroups.com
மிக்க நன்றி பிரேம்குமார்.
ஏதேனும் படைப்புகளை அனுப்பிவிடுங்கள் அநங்கத்திற்கு




Date: Tue, 18 Nov 2008 22:37:31 +0530
From: prem.kav...@gmail.com
To: panb...@googlegroups.com
Subject: [panbudan] Re: மலேசிய அநங்கம் ச���ற்றிதழ்

pandii durai

unread,
Nov 18, 2008, 9:43:25 PM11/18/08
to panb...@googlegroups.com

வாழ்த்துக்கள் பாலா.

இதழின் வருகைக்காக காத்திருக்கிறேன்.
சென்னையில் பண்புடன் நண்பர்களில் ஒருவருக்கு சில இதழ்களை அனுப்பிவைத்தால் பண்புடன் சந்திப்பில் பகிர்ந்துகொள்ளவர்.

அல்லது எனக்கு அனுப்பும் இதழ்களில் கூடுதல் பிரதி அனுப்பினால் நான் பண்புடன் சென்னை நண்பர்களுக்கு அனுப்பிவிடுகிறேன்

பாண்டித்துரை
--
www.pandiidurai.wordpress.com
சிலர்தான் மாற விரும்புகிறார்கள்
மீதிப்பேர் மாற்றத்தைபற்றி சும்மா பேசவே விரும்புகிறார்கள்

நண்பன்

unread,
Nov 18, 2008, 11:20:17 PM11/18/08
to பண்புடன்
Bala,

Best Wishes. Couldn't write in Tamil. Sorry.

(What? Panbudan is suffering from lack of space?!! It seems, two
interesting subjects are competing each other for space! May be
somebody would look into it and allocate proper space to ecah of
them... :-))

கே.பாலமுருகன் balamurugan

unread,
Nov 18, 2008, 11:27:05 PM11/18/08
to panb...@googlegroups.com
மிக்க நன்றி பாண்டித்துரை. தங்களுக்கு 10 இதழ்கள் மட்டுமே அனுப்பிவிட்டிருக்கிறேன்.
முடிந்தால் அதிலிருந்து 2 இதழை சென்னைக்கு அனுப்பி வைத்து உதவவும்.
 
பாலமுருகன்


 


Date: Wed, 19 Nov 2008 10:43:25 +0800
From: pandi...@gmail.com
To: panb...@googlegroups.com
Subject: [panbudan] Re: மலேசிய அநங்கம் ச���ற்றிதழ்

lucky shajahan

unread,
Nov 19, 2008, 1:00:21 AM11/19/08
to panb...@googlegroups.com
//. இறைவன் கொடூரமானவன் அல்ல. அவனுக்கு உங்களைத் தெரியும். எது

இணை வைத்தல் என்பதுவும் அவனுக்கு நன்றாகவே தெரியும்.
//
 
அதேதான் பெரும்பாலான கருத்தும்.. எந்த எண்ணத்தில் பேசுகிறோம் எந்த
எண்ணத்தின் அடிப்படையில் நாம் ஒன்றை செய்கிறோம் என்பதை
இறைவன் நன்கு அறிவான்..
 
"நிச்சயமாக நாம் உங்கள் பிடரி நரம்பை விட உங்களுக்கு சமீபத்திலிருக்கிறோம்"
குர் ஆன்
 
 
-
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.

HAROON RASHEED

unread,
Nov 19, 2008, 6:00:49 AM11/19/08
to panb...@googlegroups.com

அன்பான ஆசாத் சாஹிப்

நான் பூச்சாண்டியும் காட்டவில்லை நீங்களும் குழந்தை இல்லை ...

காலத்துக்கு ஏற்ப  பொருள் விளங்கிக்கொள்ளத்த் க்கவாறு பல விஷயங்கள் உண்டு அவைகளைப்  பற்றியல்ல இங்குள்ள விமர்சனகள்

 

ஒரு சொல் உணர்த்தும் பொருள் நலன் விளைவிக்காது எண்டு அறிந்த பின்னரும் அதனை தொடர்வது வேண்டுமா வேண்டாமா என்பதைப் பற்றிய விவாதமிது நான் கேட்டிருந்த கேள்விக்கு இன்னமும் பதில் வரவில்லை

 

"நோக்கங்கள் தெள்வுபட இருந்த சமூகங்களுக்கு மத்தியில் தானே பலதெய்வ வழிபாடு வந்தது."...?

 

வணக்கம் என்கிற சொல் வழஅக்கத்தில் உள்ள மாற்றுமத அன்பர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொள்ளட்டும் தடுத்தது யார் ...? என் சமுகம் அதனை விரும்பவில்லை ...

 

அவர்கள் முகம் சுளிப்பார்கள் என்பதற்காக நான் என்னுடைய சுயம் இழக்க வேண்டுமா என்கிறேன் ...?

என் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து வந்து பிராமண நண்பன் ஒருவருக்கு  அருமையான ஆட்டு பிரியாணி சுவையானது உடம்புக்கு உகந்து எண்டு ஊட்டினால் நானெல்லாம் நல்ல நண்பனாக இருக்க தகுதி அற்றவன் என்பதை சொல்லாமல் சொல்வதாகாதா...?

 
என்னுடைய மார்க்கம் எனக்கு அவருடைய மார்க்கம் அவருக்கு என்று சொல்வதன் அர்த்தம் தான் என்ன. அவருக்கு பிடிக்காத விஷயங்களை அவர்மீது நான் திணிப்பது தான் அந்த குரான் வசனத்தின் பொருளா ...? தவறு சுட்டிக் காட்டட்டும் நியாமிருந்தால் ஏற்றுக் கொண்டு கைவிடலாம் .... தப்பு தப்பான செயல்களை நியாயப் படுத்திக்கொண்டு என்மீது திணிக்க முயல வேண்டாம் என்பது தான் என் கருத்து இதைச்சொன்னால் நான் கற்காலத்துக்கு போய்விட்டேன் என்கிறார்கள்

 

அதுமட்டுமா ஒரு கருத்து தீமை விளைவிக்கும் நோக்கத்துடன் புழக்கத்துக்கு வந்து விட்டதை கண்டு கொள்ளும் ஒருவர் அந்த தீமை அரசியல் ரீதியாக சரியானது மதரீதியாக சரியற்றது என்றேல்லமா அலசிக் கொண்டிருப்பார் என்ன த்தை சொல்ல .... இப்படி சொல்வது அவர்களையும் கொஞ்சகாலம் ஆள்வதற்கு அனுமதித்துத்தான் பார்க்கலாமே என்று முடிவெடுத்த கதைபோல அல்லவா இருக்கிறது.

 

தெளிவானவைக்கும் தெளிவற்றவைக்கும் இடைப்பட்ட ஒன்றான சந்தேகத்துக்கு உட்பட்ட விடயங்களை விட்டிவ்ட்டு தெளிவாக உள்ளதை மட்டும் எடுத்துக் கொள்ள கறக்கவேண்டும் நாம் சந்தேகமாக உள்ளதை சாக்கு போக்கு சொல்லி க்கொண்டு அனுசரித்து போக முயன்றால் விபரீதம் தான் விளையும் ... இப்போதும் பூச்சாண்டி காட்டவில்லை உள்ளதைத்தான் சொல்கிறேன்

ஆசாத்

unread,
Nov 19, 2008, 9:45:09 AM11/19/08
to பண்புடன்
இனிய ஹாரூன்,

உங்களது இந்தப் பதில் தெளிவாகவே இருக்கிறது.

ஹாரூன்ஜி,

பேராசிரியர் நன்னனின் பார்வைகளுடன் என்னால் முழுதுமாக ஒத்துப்போக
இயலவில்லை. மொழிக்கலப்பிற்கு நன்னன் அவர்கள் வைத்திருக்கும் அளவுகோல்
சிறிது வித்தியாசமானது. சமக்கிருதத்தைத் தொட்டாலே அதனை மதத்துடன்
தொடர்புபடுத்தி இனத்துடன் தொடர்புபடுத்தி எங்காவது ஒரு புள்ளியில் இது
தமிழ் பண்பாட்டைக் கெடுப்பதற்காக சமக்கிருதத்தினர் செய்த சூழ்ச்சி
என்பதான பர்வையை முன்வைக்கிறார். அப்படி நன்னன் அவர்களால் வைக்கப்பட்ட
பார்வைதான் வணக்கம் சொல்வதில் இறைவணக்கம் கலப்பது. வணக்கம் சொல்வது
தொடர்பான விவாதங்களில் இணைவைப்பதை மட்டுமே பேசிவந்த இஸ்லாமியர்கள்
இப்பொழுது புதிதாக அதனை தமிழ் கலாசாரத்துக்கு எதிரானது என்னும் பார்வையை
முன்வைக்கிறார்கள். இதன் தோற்றுவாய் நன்னன் அய்யா அவர்களா என்பதை நான்
அறியேன்.

அத்வைதம் இஸ்லாமியர்களின் கோட்பாட்டில் கிடையாதென்பது தெளிவான
விடயமாயிற்றே, வணக்கம் சொல்வதன் ஒரே பொருள் அத்வைதத்தை முன்னிறுத்திதான்
என்பதை அறுதியிட்டு யாரேனும் நிரூபித்தார்களென்றால் வணக்கம் சொல்வதை
இஸ்லாமியர்கள் தவிர்த்துக்கொள்ளத்தான் வேண்டும், அதில் மாற்றுக் கருத்து
கிடையாது. தெளிவான நிரூபணங்கள் இல்லாமல், வணக்கம் என்பது இறைவணக்கத்துடன்
தொடர்பானது என்று வார்த்தைகளின் அர்த்தத்தில் மேம்போக்கான பார்வைகளை
முன்வைத்தார்களென்றால் ஏற்க இயலாது.

நான் உலவிய இஸ்லாமிய வட்டாரங்களில் வணக்கம் சொல்வதற்கு எதிரான பார்வையை
வைத்தவர்கள் 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர....' இப்படியாகவே
துவங்குவார்கள். சொற்கட்டுகளின் பொருள் ஒன்றே ஒன்றுதான் என்பதை ஏற்க
இயலுமா? கடிகாரத்துக்கும் 'சஆ'தான் நேரத்துக்கும் 'சஆ'தான் மணிக்கும்
'சஆ'தான் என வேர்ச்சொல்லிலிருந்தே மற்றதை விரித்துச் செல்லும் அரபியில்
பாண்டித்யம் பெற்றிருக்கும் இஸ்லாமியப் பெரியோர்களுக்கு, வணக்கம்
சொல்லிவிடாலே அத்வைதத்தை ஆதரிக்கிறோம் என்று பொருளாகிவிடாது, அது
வாழ்தாகக்கூட இருக்கலாம், ஒருவேளை தோற்றுவாய் அத்வைதத்தை
ஆதரித்திருந்தாலும் இன்றைக்கு அதன் பொருள் வாழ்த்தாக ஆகியிருக்கலாம்,
ஏற்றுக்கொள்ளலாம் என்பதைப் புரிந்துகொள்ள நேரம் ஆகாது.

மொழிவல்லுனர், கலாசார ஆய்வாளர்கள் இவ்விருவரும் பாரபக்கமின்றி ஆய்ந்து
முடிவெடுக்கவேண்டிய விடயத்தை சாதாரணமாக நாம் வணக்கம் சொன்னால்
இணைவைப்பதற்கிணையாகும் என்று பேசுவது எப்படிச் சரியாகும்?

அத்வைதக் கருத்தை நிக்கி இன்னொரு பார்வையில் இதனைப் பார்த்தால்,
மேட்டுக்குடியினரின் ஆணவப் போக்கால் மற்றவர் தன்னை இறையையாக நினைத்து
வணங்கவேண்டும் என்பதன் அடிப்படையில் வணக்கம் சொல்வதை
வழக்கத்திற்குள்ளாக்கினார்கள் என்றால், அங்கே வணக்கம் சொல்லிக்கொள்வது
இருவழித் தொடர்பல்ல என்பது நிரூபணமாகிறது. கீழ்க்குடியினர்
மேட்டுக்குடியினரைப் பார்க்கும்போது 'வணக்கம்' சொல்வார், அப்போது
மேட்டுக்குடியினர் 'நன்றாக இருங்கள்' என்பார் இப்படியான வழிமுறைதான்
வணக்கம் என்றால், அது இன்றைக்கு எங்கே? மேட்டுக்குடியினரும் மற்றவரும்
வணக்கம் சொல்லிக்கொள்ளும்போதும் வணக்கத்த்திற்கு வணக்கம்தானே பதிலாக
வருகின்றது.

எனக்குத் தெரியவேண்டுவதெல்லாம் வணக்கம் என்ற சொல் அத்வைதக் கருத்தை
மட்டுமே முன்வைக்கிறதா? இல்லை என்கிறேன் நான். அதற்கான எனது பக்க நியாயமக
நான் சொல்ல விரும்புவது இதனை அத்வைதமென அணுகுவதைவிட 'மரியாதை செய்கிறேன்'
என்ற அர்த்தத்தில் அணுவது எனக்கு இணக்கமாகிறது.

மலிக் ஒருவன்தான் என அடிக்கடி இஸ்லாமியப் பெரியோர்கள் கூறுவர். மர்ஹூம்
மன்னர் பஹத் அவர்களை எப்படி அழைத்தோம்? மலிக் பஹத் இப்னு அப்துல் அஜீஸ்.
மலிக் என்னும் வார்த்தையை மன்னன் என்னும் அளவில்தானே எடுத்துக்கொண்டோம்.
இப்போதைய சவூதி மன்னரின் பட்டயம் என்ன? ஹாத்தம்அல் ஹரமைன்அல் ஷெரிபைன் -
Custodian of The Two Holy Mosques. இதற்கான பொருளை நாம்
எப்படிக்கொள்கிறோம், சாதாரணமாகத்தானே எடுத்துக்கொள்கிறோம். தவறில்லைதானே.

அதேபோலத்தான் வணக்கம் என்னும் வார்த்தையின் பொருள் வாழ்த்துச்சொல்வதின்
ஒரு அணுகுமுறையாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டுமேயன்றி இதில் இணைவைத்தலை
இணைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

பிரேம்குமார்

unread,
Nov 19, 2008, 10:00:41 AM11/19/08
to panb...@googlegroups.com
அதான் இழை பிரியுது... இப்போ நான் அனுப்பியது ஒரே இழையா வந்திருக்குன்னு நினைக்கிறேன்

பிரேம்குமார்

unread,
Nov 19, 2008, 10:00:06 AM11/19/08
to panb...@googlegroups.com
நண்பன், இழை பிரிவது பற்றி சொல்லுறீங்களா?
எனில், பாலா ஜிமெயில் அல்லாது வேறு ஏதோ மென்பொருள் பயன்படுத்துறாருன்னு நினைக்கிறேன்

ezhil arasu

unread,
Nov 19, 2008, 10:21:02 AM11/19/08
to panb...@googlegroups.com
அத்வைதிகளுடையதா வணக்கம்? இல்லவே இல்லை.

இறைவன் தனியாக உண்டு என நம்பும் சைவ சித்தாந்தத்தில், மாணிக்கவாசகர் சொல்வார் 'கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க' என்று. தெய்வத்தை ஏற்கு வைணவத்திலும் வணக்கம் உண்டு. புத்த மதத்திலும் வணக்கம் உண்டு. சங்கரரின் அத்வைதத்திற்கு முன்பிருந்தது புத்த மதம்.
ஒரு இறைவ‌ன் உண்டு என‌ ந‌ம்புப‌வ‌ரும் வ‌ண‌ங்குத‌ல் உண்டு.


வ‌ண‌க்க‌ம் என்ப‌து இப்போது எதிரே இருப்ப‌வ‌ருக்கு ந‌ம் அன்பை தெரிவிக்கும் ஒரு செயலாக‌த்தான் எல்லோரும் செய்துக் கொண்டிருக்கிறோம்.
இது வ‌ரை அதில் ம‌த‌ம் இருப்ப‌தாக‌  நினைத்த‌து கூட‌ இல்லை. நிச்ச‌ய‌ம் கோவிலில் செய்யும் வ‌ண‌க்க‌த்திற்கும் ச‌க‌ ம‌னித‌ருக்கு செய்யும் வ‌ண‌க்க‌த்திலும் ந‌ல்ல‌ வித்தியாச‌ம் ம‌ன‌தில் இருந்துதான் இருக்கிற‌து.

2008/11/19 ஆசாத் <banu...@gmail.com>

நண்பன்

unread,
Nov 19, 2008, 10:56:13 AM11/19/08
to பண்புடன்
ஆமாம், பிரேம்.

இந்த இழையில், பாலாவின் செய்தியும், வாழ்த்துகளா, வணக்கமா என்ற விவாதமும்
மாறி, மாறி நிகழ்ந்த்து கொண்டேயிருக்கிறதல்லவா, அதைத் தான்
குறிப்பிட்டேன்.

குழப்பமேற்படுகிறது. மேலும், பலர் இந்த இழையை தவிர்த்து விடுவதால், பாலா
சொல்ல விரும்பிய தகவல் பல நண்பர்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்குமா என்ற
அச்சமும் இருக்கிறது.

பாலா மீண்டும் இந்தப் பதிவைத் தனியே தலைப்பிட்டு கொடுத்தால், இது
வரையிலும் வாசித்திராதவர்கள் வாசித்து, அவர்கள் நடத்தும் பத்திரிக்கையைப்
பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கும் என்று நினைக்கின்றேன்.

அன்புடன்

நண்பன்

ஆசாத்

unread,
Nov 19, 2008, 11:12:30 AM11/19/08
to பண்புடன்
> <nand...@gmail.com> wrote:
> அத்வைதிகளுடையதா வணக்கம்? இல்லவே இல்லை....

தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள் எழில்ஜீ.

நான், எனக்கு எதிரிலிருக்கும் மனிதரின் ஆன்மாவின் உள்ளிருக்கும் இறையை
வணங்குவதான அமைப்பாக 'வணக்கம்' எனும் சொல் இருப்பதாக எங்களில் சிலர்
என்னிடம் கருத்துகளை முன்வைத்துப் பேசுவதுண்டு. அதன் அடிப்படையில்
குறிப்பிட்டதுதான் அய்யா எனது கருத்து. இது எங்களிடையே (இஸ்லாமியரிடையே)
சில நாள்களாகவே நடந்துவரும் கருத்துப் பரிமாறல்.

> நிச்ச‌ய‌ம் கோவிலில் செய்யும் வ‌ண‌க்க‌த்திற்கும் ச‌க‌ ம‌னித‌ருக்கு செய்யும்
> வ‌ண‌க்க‌த்திலும் ந‌ல்ல‌ வித்தியாச‌ம் ம‌ன‌தில் இருந்துதான் இருக்கிற‌து.

என்னைப்போன்ரோர்கள் முன்வைக்கும் கருத்து இதுதான் எழில்ஜீ. சிலர் அந்த
சொல்லைத் தவிர்க்கவேண்டும் என்கிறார்கள். காரணத்தை சரியாகச் சொல்லிவிட்டு
தவிர்க்கச் சொல்லுங்கள் மேம்போக்கான விளக்கங்கள் வேண்டாம் என்கிரோம்
நாங்கள்.

தெளிவை நோக்கியே நாங்கள் செல்வதாக நினைக்கிறேன்.

நண்பன்

unread,
Nov 19, 2008, 11:29:20 AM11/19/08
to பண்புடன்
ஆசாத்,

நீங்கள் சொன்னவற்றில் சிலவற்றுடன் உடன்படுகிறேன். சிலவற்றில் மாறுபட
வேண்டியதிருக்கிறது.

வணக்கம் தமிழ் மொழியின் ஆதிகாலத்தில் இல்லவேயில்லை என்பதைச்
சுட்டிக்காட்டியிருக்கிறார்.

வாழி, வாழிய வாழி என்பதே பழக்கத்தில் இருந்த வாழ்த்து என்று
இலக்கியங்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறார். இந்த வணக்கம் என்பது, பின்னர்
ஆர்யர்களுடன் கலந்து வாழ நேரிட்ட பொழுதிலே பழக்கத்திற்கு வந்தது என்பதே
அவர் வாதம். அவர் அதை சமயத்துடன் இணைத்துப் பேசினாரா, இல்லையா என்பது
நாம் அதை நோக்கும் விதத்தில் தான் இருக்கிறது என்கின்றேன்.

எப்படியிருந்தாலும், வணக்கம் என்ற வார்த்தையைக் குறித்த மனக்கிலேசம் நம்
நண்பர்களுக்குத் தேவையேயில்லை. வணக்கம் என்ற வார்த்த்தை நீங்கள்
சொன்னதைப் போல, மறுமொழியாக வணக்கம் என்ற சொல்லைத் தான் எடுத்து வருகிறது.
அரபு மொழியில், ஒருவர் ஒரு வாழ்த்தைச் சொன்னால், அதைவிட பலமடங்கு
சிறப்பான வார்த்தையைக் கொண்டு, வாழ்த்துவது என்பது ஒரு மரபாக இருக்கிறது.
ஆனால், நமது மொழியில், ஒரு வாழ்த்தை அப்படியே வாழ்த்தாக சொல்வது தான்
வழக்கமாக இருக்கிறது. இருவரும் சமம் என்ற அளவில் தான் அந்த வார்த்தைப்
பயன்படுத்தப்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில் வேற்று மொழியினர், நமஸ்காரம் என்று சொன்னால் கூட,
நாமும் அதையே சொல்கிறோம். இத்தனைக்கும் நமஸ்கரித்தல் என்ற சொல்லிலிருந்து
வந்தது தான் அந்த வார்த்தை. நமஸ்கரித்தல் என்ற தாழ்பணிதலையே வாழ்த்து
விளியாகவும் பயன்படுத்துகின்றனர். ஆனால், தமிழில் அவ்வாறு கூட இல்லை.
நான் உன்னை தாழ் பணிகிறேன் என்ற பொருளில் வணக்கம் என்ற சொல்
பயன்படுத்தப்படவேயில்லை.

மேலும் அத்வைதம் பற்றி சரியாகக் குறிப்பிட்டீர்கள். இஸ்லாத்தில் அத்வைதம்
என்றெல்லாம் ஒன்றில்லை. இஸ்லாத்தின் ஆன்மீகம், ஒரே வரியில் முடிந்து
போய்விடுகிறது. 'There is no God, but God' என்ற ஒற்றை வரியுடன்,
இஸ்லாமிய ஆன்மீகம் முடிந்து விடுகிறது. இதைப் புரியாதவர்கள் தான்,
என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருக்கின்றனர். ஏன் இத்தனை சிரமப்படுகிறார்கள்,
இஸ்லாத்தை விளங்கிக் கொள்ள என்று. நடைமுறை வாழ்க்கை குறித்து, இஸ்லாம்
பேசுவதைப் போன்று வேறு எந்த மதமும் பேசவில்லை. அவற்றைப் புரிந்து கொள்ள
முயற்சிக்காமல், இல்லாதவற்றைப் பற்றிக் கவலை கொள்வது அத்தனை தேவையா,
என்ன?

நீங்கள் நாகூர் ரூமி எழுதிய 'வார்த்தைகளின் சீனப்பெருஞ்சுவர்' என்ற
புத்தகம் படித்திருக்கிறீர்கள் தானே?
மற்றவர்களும் அதைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன். சில்வற்றை ஏற்கலாம்.
சிலவற்றை ஏற்க முடியாது என்ற நிலையில், அருமையான விவாதத்திற்குரிய
புத்தகம்.

(உங்களுடன் விவாதிக்கும் பொழுது, ஏனோ, புத்தகங்களைக் குறித்தும் பேச
வாய்ப்பு கிடைக்கிறது, அடிக்கடி. தொடரட்டும்.)

பிரேம்குமார்

unread,
Nov 19, 2008, 11:41:02 AM11/19/08
to panb...@googlegroups.com
பாலா அதை செய்துவிட்டார் என்று நினைக்கிறேன்.
 
நன்றி நண்பன் :)

ezhil arasu

unread,
Nov 19, 2008, 11:55:09 AM11/19/08
to panb...@googlegroups.com
அன்பு ஆசாத்

உங்கள் எண்ணங்களோடு உடன்படுகிறேன்.

மதத்தில் ஆழ்ந்து விருப்பமிருந்தால் அது தொடர்பான் குரூப்பில் போய் சேர்ந்திருப்பேன். இந்த மாதிரி குரூப்பில் சேர்வதன் காரணமே மதத்தை விடுத்து மீதி எல்லாம் பேசலாமே என்றுதான்.

ஆனால் எங்கேயும் இதே கதைதான்.  மதத்தில் வாதிட என்ன இருக்கிறது? யாருமே அவரவர் மத நம்பிக்கையை அல்லது கொள்கையை இழக்க போவதில்லை. அதை மீறி அல்லவா இங்கே இணைந்திருக்கிறோம்.

சொல்ல‌வே ஒன்றும் தோன்ற‌வில்லை.


2008/11/19 ஆசாத் <banu...@gmail.com>
> <nand...@gmail.com> wrote:

நண்பன்

unread,
Nov 19, 2008, 12:39:13 PM11/19/08
to பண்புடன்
இன்று இணையத்தில் நடக்கும் 90 சதவிகித விவாதங்களில், இஸ்லாம் குறித்து
காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்படுபவையே விவாதத்திற்கு வைக்கப்படுகின்றன.
அவற்றில் எந்த அளவும் உண்மையில்லையென்ற போதிலும், இஸ்லாமியர்களின் மனதைக்
காயப்படுத்தி விட்டால் போதுமென்ற அளவிலே, கல்லெறிவது நிகழ்கிறது. இத்தகைய
கல்லெறிபவர்கள், எங்கும் எல்லாவிடத்தும் இருக்கிறார்கள், என்னும்
பொழுதில், பண்புடனில் மட்டும் இல்லாது போய்விடுவார்களா, என்ன?

அதிலும், இணையத்தளம் வசதியாக ஒருவரின் அடையாளங்களை மூடி மறைத்து
விடுகிறது. அதனால், நேரிலே முகம் பார்த்து பேசத் தயங்கும் விஷயத்தைக்
கூட, எளிதாகப் பேசி விட்டு சென்று விடுகிறார்கள். மனசாட்சியற்ற ஒரு உலகம்
இயங்குகிறதென்றால், அது இணையம் தான். அந்த வழியைத் தவறாகப் பயன்படுத்திக்
கொள்பவர்களால் தான், விவாதம் என்ற பெயரில் அற்பத்தனங்கள்
நிகழ்த்தப்படுகின்றன. ஒருமுறை நானும், ஆசாத்தும் விவாதித்துக் கொண்டே
வந்தோம் - ஆசிப்பின் வீட்டிலிருந்து திரும்பும் சமயம்.

விவாதம் - இணையத்தில் இயங்குபவர்கள் நேர்மையுடன் இயங்க இயலாதா? என்ற
கேள்வி குறித்து தான். அப்பொழுது நான் சொன்னேன் - அனைத்து சேவை
வழங்குபவர்களும், தங்கள் சேவையைப் பெற - தங்களது அடையாளங்களை நிரூபிக்க
வேண்டும் என்று சொல்லட்டும் - பின்னர் பாருங்கள், 90% சதவிகித இணைய
உபயோகிப்பாளர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று. எப்படி, நிரூபிப்பது -
பாஸ்போர்ட் காப்பி, ரேஷன் கார்டு அட்டை, தேர்தல் அட்டை, என எத்தனையோ
வழிகள். மில்லியன் கணக்கில் இருக்கும் இவற்றை இனி கட்டுப்படுத்துவது
சாத்தியாமா, என்றால், நிச்சயம் சாத்தியம் தான். இன்று கைபேசிகள் கணிணியை
விட அதிகம் பயன்படுத்தப்படுகிறது - ஆனால், அதைப் பெறுவதற்கு
அநாமதேயங்களால் முடியாது. ஒரு முகவரியைக் கொடுக்க வேண்டும். சில நபர்கள்
அங்கேயும் ஏமாற்றலாம். ஆனால், நிச்சயமாக இன்றைய அநாமதேயங்கள்
போன்றிருக்காது.

தங்கள் அடையாளங்கள் நிச்சயமாகும் பொழுது, தாங்கள் என்ன பேசுகிறோம் என்ற
அச்சம் வரும். ஒவ்வொரு தளத்தில் ஒரு முகமூடி அணிவதும், காழ்ப்புணர்ச்சி
மிக்க செய்திகளை - திரித்து ஒரு மதத்தின் மீது இழிவுண்டாக்குவது போல்
எழுதுவதுவும், பின்னர் மற்றொரு தளத்தில் நலம் விரும்பியாக மாறுவதுவும்
என்று பல இழிந்த பிறவிகள் ஒழிந்திட முடியும். இந்த வகையான பொறுப்பேற்கும்
வகையில் இணையம் மாறும் வரையில், எங்கும் இந்த வகை விவாதங்கள் நிகழத் தான்
செய்யும்.

ஆனால், பாருங்கள் எழில், இந்த விவாதம் எந்தக் காழ்ப்புணர்ச்சியுமின்றி,
உண்மையாகவே ஒன்றை அறிந்து கொள்ளும் பொருட்டு, ஒரே மதம் சார்ந்தவர்களால்
நடத்தப்படுகிறது. அதில் பிறரும் ஆக்கபூர்வமாகக் கலந்து கொள்வதை
வரவேற்கிறோம். ஆனால், இதைக் குறித்து சலிப்படைய வேண்டிய அவசியமில்லை.
இந்த மாதிரி விவாதங்கள் வரவேற்கப்பட வேண்டும். துர்நோக்கம் கொண்டு,
சலிப்பூட்டும் வகையில் கட் அண்ட் பேஸ்ட் மாஸ்டர்களைப் போன்றதல்ல, இந்த
விவாதம்.

> யாருமே அவரவர்
> மத நம்பிக்கையை அல்லது கொள்கையை இழக்க போவதில்லை.

விவாதங்களினால், நம்பிக்கையை யாரும் இழக்கப் போவதில்லை தான்.. ஆனால்,
நம்பிக்கை பலம் பெறும் பாருங்கள். மேலும், ஒரு மதத்தின் ஊடாக
நடத்தப்படும் இந்த விவாதத்தின் நோக்கம் மோதல் அல்ல - தெளிவு.
பெறுபவர்கள், அதைப் பெற்று கொள்வார்கள்.

ஆகையால், தொடரட்டும் - இந்த விவாதம்...

ezhil arasu

unread,
Nov 19, 2008, 2:22:53 PM11/19/08
to panb...@googlegroups.com
நண்பன்

‍பெரும்பாலான மத விவாதங்களின் முடிவு தீராத மனக்கசப்பையும், நண்பர்களிடையே பிரிவையும் தருவதை பலமுறை கண்டிருக்கிறேன். எனக்கு தெய்வ நம்பிக்கை உண்டே தவிர மதப்பற்று கிடையாது. இதுதான் என் நிலைமை.

என் நம்பிக்கைபடி எல்லா மதமும் இறைவனால்தான் தரப்பட்டிருக்கிறது, ஏதோ காரணத்தால் என்பதுதான்.நான் நம்பும் சில ஆன்மீக பெரியவர்களும் இந்த கருத்தை சொல்ல என் மனம் இதில் பலப்பட்டது. இந்த‌ நம்பிக்கை அறிவுப்பூர்வமாக வந்ததல்ல  . ஏதோ உள்ளுணர்வில் இருக்கும் நம்பிக்கைதான் இது. இதை எப்படி என்னால் விவாதிக்க முடியும்?

மேலும் இதை போன்ற குரூப்பில் நல்ல படைப்புகள், அரசியல் சார்ந்த விஷயங்கள்,  கவிதைகள், கட்டுரைகள் என பலவற்றை எழுதி இரசிக்கும் நோக்கில் சேருகிறேன். மத சம்பந்தமான விஷயங்கள் என்றால் ஒரு பயம் வரத்தான் செய்கிறது. அது பலரை பிரித்துவிடும் மனக்கசப்பை ஏற்படுத்தி விடுமோ என்பதுதான். இந்த மனோநிலையை கடந்த மனப்பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை.

மத தலைப்பு இருந்தால் அந்த இழையை விட்டு விட்டு போய் விடுவேன். இந்த மாதிரி இழையில் தலைப்பை பார்த்து வேறு ஏதோ என ஏமாந்து மாட்டிக் கொண்டேன். :)

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால்,
'நீங்கள் சொல்வது போல இந்த விவாதம் நல்லதாக இருக்கலாம் ஆனால் இதில் நுழையும் அளவிற்கு எனக்கு மனப்பக்குவம் இல்லை'



2008/11/19 நண்பன் <nan...@gmail.com>

நண்பன்

unread,
Nov 19, 2008, 11:50:51 PM11/19/08
to பண்புடன்
எங்களுக்கு மட்டுமென்ன, விவாதித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற
விருப்பமா, என்ன? சில சமயங்களில் சிலரின் கபட நாடகத்தைச் சுட்டி விளக்கம்
தர வேண்டியதிருக்கிறது. அதனால், அதனுள் தலையிட வேண்டியதிருக்கிறது.

அவ்வளவே தான்.

ஆனால், அதற்காக மதத்தை எந்த ஒரு தளத்திலும் அணுகக் கூடாது என்று
ஒரேயடியாக விட்டு விலகிப் போவதும் கூடாது தான். நம்பிக்கையாளர்கள் என்ற
பெயரிலே, அங்கு நம்பமுடியாத விஷயங்களும் நடந்தேறி விடக் கூடும்.
கண்காணிப்பு தேவை. தலையீடு இல்லாத கண்காணிப்பு. அடக்குமுறைகள்
நம்பிக்கைகளின் பேரிலே தான் நடத்தப்படுகின்றன. ஒடுக்குமுறைகள் நம்பிக்கை
என்ற பெயரிலே தான் அரங்கேறுகின்றன. பெண்கள் நம்பிக்கைகளின் பேரிலே தான்
இழிவு செய்யப்படுகிறார்கள். ஆக, நம்பிக்கை என்பது என்ன என்ற அடிப்படை
கேள்வியே விவாதிக்கப்பட வேண்டியதாகி விடுகிறது.

அவரவர் மதம் அவரவர்க்கு, அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்பதெல்லாம், ஒரு
அடிப்படை வாதம் மற்றொரு அடிப்படை வாதத்திடம் ஆதரவு தேடுகிறது என்பது
மட்டுமே. விவாதங்கள் இல்லாமல், இனிதாக இருப்போம் என்ற பேச்செல்லாம்,
"நான் என் மதத்திற்குள் நாட்டாண்மை பண்ணிக் கொள்கிறேன், நீ உன்
மதத்திற்குள் நாட்டாண்மை பண்ணிக் கொள் - நாம் இருவர் மட்டும் மோதி
காயப்பட்டுக் கொள்ளவேண்டாம்" என்று சொல்வது போல் ஆகிவிடும். ஆக,
விவாதங்கள், விமர்சனங்கள் கண்டிப்பாகத் தேவை.

நாம் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுவோம், கண்டிக்கப்படுவோம் என்பது கூட,
சிலரையாவது, சிந்தித்து, சமூகத்தின் பிற அங்கங்களுடன் உண்டான சீரிய
உறவிற்கு வழி வகுக்குமாறு கேட்கத்தூண்டும். இந்தப் புரிதல் இருப்பவர்கள்
- விவாதத்தினால், மனக்கசப்பு அடைய மாட்டார்கள், நம்பிக்கை இழக்க
மாட்டார்கள், மாறாக, தங்களைப் பற்றி எத்தகைய எண்ணங்கள் பிறரிடமிருக்கிறது
என்பதை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகத் தான் கருதுவார்கள்.

ஆனால், எப்பொழுது இது சாத்தியம்?

எதிரில் இருப்பவர் நம்பிக்கைகுப் பாத்திரமானவராக இருந்தால்.
காழ்ப்புணர்ச்சி கொண்டு விமர்சிப்பவர்களாகத் தங்களை ஏற்கனவே நிரூபித்து
விட்டவர்கள், நலம் விரும்பிகள் மாதிரி தோற்றம் தருபவர்கள் என வரும்
பொழுது, அதன் உள்நோக்கங்கள் விளங்கிவிடும் பொழுது தான், விவாதங்கள்
கசப்பை நோக்கி நகர்கின்றன.

அவ்வாறில்லாமல், விவாதங்கள் நேர்மையாக நடத்தப்பட வேண்டும். ஏனென்றால்,
ஒவ்வொரு மதமும் தன்னுள்ளே கொன்ண்டிருக்கும் கருத்துகளை அவ்வப்பொழுது,
காலத்திற்க்கேற்ப உரசிப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது.

ஆக, நீங்கள் சொல்லக்கூடிய விவாதங்களை விட்டுவிடுவோம், என்பது,
அடிப்படைவாதிகளுக்கும், ஒடுக்குமுறையாளர்களுக்கும் சிவப்பு ரத்தின
கம்பளம் விரித்து விடுவது போலாகிவிடும்.

I will not let them have a free run, Boss.

On Nov 19, 11:22 pm, "ezhil arasu" <nand...@gmail.com> wrote:
> நண்பன்...
>
> read more »

ezhil arasu

unread,
Nov 20, 2008, 2:50:10 AM11/20/08
to panb...@googlegroups.com
>எதிரில் இருப்பவர் நம்பிக்கைகுப் பாத்திரமானவராக இருந்தால்.
காழ்ப்புணர்ச்சி கொண்டு விமர்சிப்பவர்களாகத் தங்களை ஏற்கனவே நிரூபித்து
விட்டவர்கள், நலம் விரும்பிகள் மாதிரி தோற்றம் தருபவர்கள் என வரும்
பொழுது, அதன் உள்நோக்கங்கள் விளங்கிவிடும் பொழுது தான், விவாதங்கள்
கசப்பை நோக்கி நகர்கின்றன.<

எதிரே இருப்பவர்கள் அப்படி இல்லை என்று எப்படி கண்டுப்பிடிப்பீர்கள், ந‌ண்ப‌ரே?


முக்கிய‌மான‌ பாயிண்ட். உங்களுக்கு எது ந‌ல்ல‌து எது கெட்ட‌து என்ற‌ தெளிவான‌ தீர்மான‌ம் இருக்கிற‌து.

என்னை பொறுத்த‌வ‌ரை எல்லா ம‌த‌ங்க‌ளும் நிறையும் குறையும் கொண்டிருக்கின்ற‌ன‌. நிறை இறைவ‌னாலும், குறை ம‌னித‌ராலும் ஏற்ப‌ட்ட‌து என்ப‌து என் ந‌ம்பிக்கை.

இதில் அவ‌ர‌வ‌ர் அவ‌ர‌வ‌ர் இட‌த்தில் நாட்டாண்மை என்ப‌தை விட‌ ஒருவ‌ர் இன்னொருவ‌ர் இட‌த்தில் நாட்டாண்மை ப‌ண்ணுவ‌து த‌வ‌றாகி விட‌லாம‌ல்ல‌வா? கார‌ண‌ம், நாட்டாண்மை ப‌ண்ணுப‌வ‌ர் எவ‌ருக்கும் தான் நாட்டாண்மை பண்ணுகிறோம் என்ப‌தே தெரிவ‌தில்லை அல்ல‌வா? இதில் முக்கிய‌மாக‌ என்னைத்தான் சொல்கிறேன். ஒரு விவாத‌த்தில் ஒரு க‌ருத்தை சொல்கிறேன் பேர்வ‌ழி என்று நான் என்னைய‌றியாம‌ல் நாட்டாண்மை ப‌ண்ணி விடும் வாய்ப்புண்டு. அதே போல் அடிப்படை வாதமும். எந்த அடிப்படைவாதிக்கும் தான் ஒரு அடிப்படைவாதி என்று தெரியாது.

உங்க‌ளுக்கு என் நிலைமை இல்லை. நீங்க‌ள் பேசுவ‌தை த‌ப்பு என்று சொல்ல‌வில்லை. என‌க்கு நீங்கள் இருக்கும் அந்த‌ ப‌க்குவ‌ம் இல்லை என்றுதான் சொல்கிறேன்.

முக்கிய‌மாக‌ நான் சொல்ல‌ வ‌ந்த‌து இந்த‌ குழுவில் ம‌த‌ம் சார்ந்த‌ பேச்சு இவ்வள‌வு காட்ட‌மாக‌ இருப்ப‌தை எதிர்பார்க்க‌வில்லை என்றும் சொன்னேன். ம‌ற்ற‌ப‌டி வேறேதுமில்லை.

ம‌ற்ற‌ப்ப‌டி நீங்க‌ள் சொல்வ‌து மூல‌மாக‌ விவாத‌த்தில்தான் குறை தெரியும் என்ப‌தை நான் ஏற்க‌வில்லை. ஒரு ம‌த‌த்தின் குறையை நீங்க‌ள் சொன்ன‌தும் உங்க‌ள் ம‌த‌த்தின் குறையை அடுத்த‌வ‌ர் சொல்வார். இது ஒவ்வொரு முறையும் மிக‌ பெரிய‌ பிள‌வை நோக்கி த‌ள்ளும் என்று க‌ண்டிருக்கிறேன். அத‌னால் நான் ஒதுங்குகிறேன்.இது மதங்களுக்கு இடையேயான துவேஷத்தை பல மடங்கு அதிகப்படுத்தும் அவ்வளவுதான். இதுதான் என் கருத்து ந‌ண்ப‌ரே.

ந‌ல்ல‌ விஷய‌ம் உங்க‌ள் பேச்சில் இருக்கும்போதெல்லாம் அதை வ‌லிய‌ வ‌ந்து ஏற்றிருக்கிறேன்.

 நீங்கள் சொன்ன அந்த தன்மைதான் என்னிடத்தில்.

என் மதம் எனக்கு. உங்கள் மதம் உங்களுக்கு. அதே சமயம் இது அடிப்படை வாதம் இன்னொரு அடிப்படை வாதத்திடம் துணை தேடுவதல்ல. எல்லாமே ஆண்டவனால் தரப்பட்டது என்னுமொரு நம்பிக்கை. நம்பிக்கையில் என்ன விவாதம் செய்ய முடியும்? :)



2008/11/20 நண்பன் <nan...@gmail.com>

Asif Meeran AJ

unread,
Nov 20, 2008, 3:22:24 AM11/20/08
to panb...@googlegroups.com
நண்பன்


நீங்கள் நாகூர் ரூமி எழுதிய 'வார்த்தைகளின் சீனப்பெருஞ்சுவர்' என்ற புத்தகம் படித்திருக்கிறீர்கள் தானே?
மற்றவர்களும் அதைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன். சில்வற்றை ஏற்கலாம். சிலவற்றை ஏற்க முடியாது என்ற நிலையில், அருமையான விவாதத்திற்குரிய புத்தகம்.

இந்தப் புத்தக விழா குறித்து என் பதிப்வில் எழுதியிருந்தேன்
வழக்கம்போல 'இசையில் இறைவனைக் காண்கிறேன்' என்று பர்வீன் சுல்தானா சொன்னதைப்
பிடித்துக்கொண்டு தொங்கத் துவங்கி விட்டார்கள் நம் இஸ்லாம் தெரிந்த பெருமக்கள் :-)
ரூமி வீட்டில் கவிஞர் யுகபாரதியோடு அமர்ந்து மதிய உணவருந்தியபோது்  கிடைத்த விளக்கங்கள்
சுவார்ஸ்யமானவை

நேரம் கிடைக்கும்போது பகிர்ந்து கொள்வோம் :-)
 

Asif Meeran AJ

unread,
Nov 20, 2008, 3:35:32 AM11/20/08
to panb...@googlegroups.com
அன்பின் எழில்

இங்கே மதத்தைப் பற்றிய விவாதமா நடக்கிறது?
இன்னொருவர் மதத்தைப் பழிக்கும் விதமாக எதுவும் நடக்கவில்லை :-)

இசுலாமியர்களுக்குள்ளேயே சில வார்த்தை குறித்த விளக்கங்களும் பார்வைகளும்
பகிர்ந்து கொள்ளப்படுகிறது. சில சந்தேகங்கள் அது குறித்த விளக்கங்கள்

வணக்கம் என்ற வார்த்தையை எப்படி ஏற்றுக் கொள்வது என்பது குறித்தான பார்வை
இதில் இன்னொருவர் மதம் குறித்துப் பேச அவசியமேயில்லை


ஆனால் எங்கேயும் இதே கதைதான்.  மதத்தில் வாதிட என்ன இருக்கிறது? யாருமே அவரவர் மத நம்பிக்கையை அல்லது கொள்கையை இழக்க போவதில்லை. அதை மீறி அல்லவா இங்கே இணைந்திருக்கிறோம்.

நிச்சயமாக மதத்தை மீறிய நட்புணர்வுதான் இந்தக் குழுமத்தின் அடிப்ப்டை
அதை இங்கிருக்கும் நண்பர்களுக்கிடையேயான புரிதலில் நீங்கள் அறிந்திருப்பீர்கள்
அப்படியே அது தொடரவும் செய்யும்

மதங்களை விடவும் மனிதர்கள் முக்கியமில்லையா?

ezhil arasu

unread,
Nov 20, 2008, 3:50:40 AM11/20/08
to panb...@googlegroups.com

>இங்கே மதத்தைப் பற்றிய விவாதமா நடக்கிறது?
இன்னொருவர் மதத்தைப் பழிக்கும் விதமாக எதுவும் நடக்கவில்லை :‍)<Asif Meeran

உண்மைதான் ஆசிஃப். ஆனால் அப்படி ஆரம்பித்தது நடுவில் திரு. ஹாரூன் அவர்களால் இந்த இழையிலேயே மதத்தை குறை சொல்லும் விதமாக மாறிவிட்டது. அந்த வரியை கீழே இட்டிருக்கிறேன்.

//நோக்கங்கள் தெள்வுபட இருந்த சமூகங்களுக்கு மத்தியில் தானே பலதெய்வ வழிபாடு வந்தது....? ஒரு நினைவுக்கு வேண்டி சிலை வடித்தான் பின் கலை என்றான் தன் உன்னத நிலை மறந்து தகுதி இல்லாதவைகளை வணங்க ஆரம்பித்தான்...... தொடர்கிறான் ..... ஒரு தர்க்க ரீதியான காரணம் கூட சொல்ல மாட்டாமல் கண்மூடித்தனமாக  நம்பிக்கைகளை  வளர்த்துக் கொண்டு அதனை அழுத்தம் திருத்தமாக நியாயப் படுத்திக்கொண்டிருக்கும் பெரும் பெரும் பதவிகளை அலங்கரிக்கும் அறிஞர்களை .....!!!!!!!!!!!!!! சிலைவனங்கிகளை விலங்குகளை வணங்குபவர்களை  உலகில் பார்க்கையில் இந்த வணக்கச் சொல்லில் இருக்கும் பொருள் குற்றம் இலேசானதாக படவில்லைதான்..// Haroon





>நிச்சயமாக மதத்தை மீறிய நட்புணர்வுதான் இந்தக் குழுமத்தின் அடிப்ப்டை
அதை இங்கிருக்கும் நண்பர்களுக்கிடையேயான புரிதலில் நீங்கள் அறிந்திருப்பீர்கள்
அப்படியே அது தொடரவும் செய்யும்

மதங்களை விடவும் மனிதர்கள் முக்கியமில்லையா?<

அதை நீங்க‌ள் சொல்ல‌வும் வேண்டுமா ஆசிஃப்! ந‌டுநிலையோடு அனைவ‌ரையும் நியாயமான முறையில் அனுச‌ரித்து போவ‌தால்தான் இந்த குழுவில் இருப்ப‌து உறுத்தாம‌ல் இருக்கிற‌து. :)

இங்கு பிற மதத்தவராகிய என்னை போன்ற சகோதரர்களும் உண்டு என்று இங்கு இருக்கும் சகோதரர்கள் அறிந்துக் கொண்டால் நலம்.

2008/11/20 Asif Meeran AJ <asifm...@gmail.com>

HAROON RASHEED

unread,
Nov 20, 2008, 3:58:26 AM11/20/08
to panb...@googlegroups.com

அய்யா ஆசாத் சாஹிப் அவர்களுக்கு

நான் ஆரம்பத்திலிருந்தே தெளிவாகத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்கள் வணக்கம் என்கிற சொல்லின் பொருள் உருவானதன் மூலத்தையும் போட்டு உடைத்திருக்கிரீர் அதற்க்கு நன்றி

அந்த சொல் வெறும் மரியாதை செய்வதற்கு சொல்வதற்கு கூட ஆளப்படும் என்பதை என்னால் ஏற்க முடிய வில்லை என்பதற்கு காரணத்தை முன்வைத்து விட்டேன் ( மரியாதைக்காக பயன்படுத்தும் அதே வஜிமுரையினைத்தான் தங்களைப் படைத்து பரிபாளிப்பதாக கருதும் ஒன்றின் முன் நின்று அவர்கள் செய்து வருகிறார்கள்..... நீங்கள் உலகத்தை கண்ணை மூடிக்கொண்டு பார்க்கிறீர்களா என்ன ....?)

 நீங்கலாக வேறுவேறு விஷயங்களை உள்ளுக்கு இழுத்து வருகிறீர்கள் ,,, அவைகளெல்லாம் தெளிவாக்கப் பட்டுவிட்ட விஷயங்கள்

படைத்தவனை சுட்டும் சொல்லுக்கும் படைப்பினங்களை சுட்டும் சொல்லுக்கும் பாரிய வித்தியாசம் உண்டு இறைவனின் திருநாமம் மற்றும் அதன் பண்புகள் பற்றி இங்கு பாடமெடுக்க வேண்டுமெண்பது  உங்கள் நோக்கமா....?

Asif Meeran AJ

unread,
Nov 20, 2008, 4:11:01 AM11/20/08
to panb...@googlegroups.com
அன்பின் ஹாரூன் ஐயா!

எச்சரித்து வழி நடத்துவது உங்கள் கடமை

அதைச் செய்து விட்டீர்கள். 'வணக்கம்' சொல்லக் கூடாதென்று நீங்கள் சொல்கிறீர்கள்
அப்படிச் சொல்வது இறைவனைக்கு இணைவைப்பதாகாது; அன்பை
வெளிப்படுத்த நாம் செய்யும் ஒரு மரபு சார்ந்த நிகழ்வு என்று மட்டுமே நாங்கள் (நான், நண்பன்,
ஆசாத்) கருதுகிறோம்.

நீங்கள் சொல்வதைச் சொல்லி விட்டீர்கள்.
இனி செய்ய வேண்டியதை அவர்கள் செய்து கொள்வார்கள்.

இது தொடர்பாக இனியும் விவாதம் செய்வது பொருளற்றது
உறங்குபவனைத்தான் எழுப்ப இயலும் உறங்குவது போல நடிப்பவர்களை அல்ல
இதில் யார் உறங்குபவர்கள் என்று இன்னொரு விவாதம் வேண்டாம்.

எங்களுக்கு இறைவன் நல்லருள் புரிய வேண்டுமென்று பிரார்த்திக்கொண்டு இந்த
இழையை விட்டு விடுங்கள். புண்ணியமாகப் போகும்

இதைக் கோபத்தோடோ அல்லது சலிப்போடோ சொல்லவில்லை
உள்ளுணர்ந்த புரிதலோடு சொல்கிறேன்

HAROON RASHEED

unread,
Nov 20, 2008, 4:21:00 AM11/20/08
to panb...@googlegroups.com

அன்பர் எழில் அவர்கள்
பரிதவிக்க வேண்டியதில்லை.
பொய்யான ஒரு தகவலை மெய்ப்படுத்த எத்தனை பிரயத்தனம் மேற்கொள்ளப் படுகிறது உலகில் கையும் மெய்யுமாய் அகப்பட்ட பின்புகூட 
இஸ்லாமியர்களெல்லாம் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால் பயங்கரவாதிகளெல்லாம் இஸ்லாமியர்கள் தான் என்று ஜனரஞ்சக மான் ஒரு ஊடகமொன்றில் கேள்வி என்கிற பெயரில் கருத்து திணிக்கும் முயர்ச்சி நடைபெறும் இந்தக் காலத்தில்

உணமயினை உண்மை என்று உரத்து சொல்லிக் கொள்ளக்கூட அவசரம் தரவிடாமல் நீங்கள் எங்களின் விவாதத்தினை திசை திருப்ப முனைகிறீர்கள் ... என்கிறேன் நான் ... அது ஏன்

ezhil arasu

unread,
Nov 20, 2008, 4:30:51 AM11/20/08
to panb...@googlegroups.com
இது என்னங்க எப்ப பார்த்தாலும் திசை திருப்பல் திசை திருப்பல்னு சொல்லறீங்க? ஆசிஃப் கேட்ட ஒரு கேள்விக்கு அந்த பதிலை சொன்னேன்.

உங்களுக்கல்ல.

உங்களோடு கடுகளவும் வாதிட நான் வரவில்லை. இதில் மதம் வரவில்லையே என்று ஆசிஃப் சொன்னார் இங்கே வந்திருக்கிறது என்று நான் காட்டினேன் அவ்வளவுதான்.

இந்த இழை நீங்கள் இருக்கும் வரை கடுகளவும் திசை திரும்பாது. போய் கொண்டே இருங்கள்.



2008/11/20 HAROON RASHEED <haro...@gmail.com>

HAROON RASHEED

unread,
Nov 20, 2008, 4:40:20 AM11/20/08
to panb...@googlegroups.com

இன்றைய தினத்தில் இருந்து  இந்த ஹரமுககுள் ஈமான் கொண்டவர்கள் தவிர்த்து வேறெவரையும் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாம் என்று இறைவன் நபி அவர்களுக்கு கட்டளை பிறப்பித்தபோது மதி மயங்கி நின்றார்கள் நபி அவர்கள்.

அப்போது மார்க்கத்தின் காவலன்   இறைவன் சொன்னான் நீங்கள் உக்கி உருக வேண்டாம் இந்த பொட்டல் வெளியினை பெரும் அபிவிருத்தி நிறைந்த இடமாக ஆக்கும் வல்லமை படைத்த என் சொல்லின் பொருளை உலகம் உணர்ந்து கொள்ளும் என்று அந்த நிதர்சன உண்மையினை மீண்டும் மீண்டும்போய் பார்த்துவிட்டு மெய்சிலிர்த்துப் போகிறேன். இறைவன் அல்லா நித்தியன் அவன் ஆற்றல் நிறைந்தவன் நிராகரிப்பாளர்கள் வராவிட்டால் வணிகம் மூலம் வந்து கொண்டிருக்கும் வளங்கள் குறைந்தா போய்விட்டது அங்கு ... ஸுப்ஹாநக்க யாறப்

பிரிவினை நோக்காமல்ல எனக்கு அந்த நோக்கமுள்ளவர்கள் வெல்வது ஒழியவேண்டும் அது என் ஆசை அவ்வளவுதான்.

Asif Meeran AJ

unread,
Nov 20, 2008, 4:45:11 AM11/20/08
to panb...@googlegroups.com

பிரிவினை நோக்காமல்ல எனக்கு அந்த நோக்கமுள்ளவர்கள் வெல்வது ஒழியவேண்டும் அது என் ஆசை அவ்வளவுதான்.


பிரிவினையற்ற உங்கள் நோக்கம் வெற்றி பெற வேண்டுமென்பதே எங்கள் நோக்கமும்

ஆசாத்

unread,
Nov 20, 2008, 5:30:30 AM11/20/08
to பண்புடன்
> <haroon...@gmail.com> wrote:
> படைத்தவனை சுட்டும் சொல்லுக்கும் படைப்பினங்களை சுட்டும் சொல்லுக்கும் பாரிய
> வித்தியாசம் உண்டு இறைவனின் திருநாமம் மற்றும் அதன் பண்புகள் பற்றி இங்கு
> பாடமெடுக்க வேண்டுமெண்பது உங்கள் நோக்கமா....?

இந்த ஞானச்செருக்கான வார்த்தை இறைவனுக்கு ஏற்புடையதென நினைக்கிறீர்களா?
எதனைப்பற்றிப் பேசப்போகிறீர்கள்? பேசலாமே! அதற்குத்தானே குழுமம்.
துவங்குங்களேன். இறைவனின் திருநாமங்களையும் அதன் பண்புகளையும்
இன்னொருமுறை படிப்பதால் நான் குறைந்துவிடப்போவதில்லை, ஆனால், உங்களுக்கு
சில வேண்டுகோள்கள்.

இறைவனின் திருநாமங்கள், படைப்பினங்களின் பெயர்கள் இவற்றுக்கிடையே உள்ள
வித்தியாசங்கள் குறித்தும் அரபு மொழியின் இலக்கணங்கள், தோற்றுவாய், ஆகி
வந்த பெயர்கள், திரிந்திருக்கும் பெயர்கள், அரபு கலாசாரத்தில்
மனிதர்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களின் பின்புலங்கள், விலங்கினங்களின்
பெயர்களிலும் மனிதர்களின் பெயர்கள் ஆகிவந்த பெயரிடும் கலாசாரம்,
இப்படியான பல தளங்களைத் தொட்டு உங்கள் பாடம் ஆழமாக அமையவேண்டும் என
எதிர்பார்க்கிறேன்.

மேலெழுந்தவாரியாக பதிவுசெய்யப்பட்ட ஒலிநாடாவாக எங்கோ இருப்பதை மறுபதிப்பு
செய்யவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் அதனை அறையிலிருக்கும்
புத்த்கங்களிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் அல்லவா. மேலும், இன்னொரு
வேண்டுகோள், இப்படியானன செருக்குடன் துங்காதீர்கள். அர்ரஹ்மான் அவன்
என்பதற்காக நாம் எதைச் செய்தாலும் மன்னித்துவிடமாட்டான் எல்லாவற்றிற்கும்
கணக்குகள் எழுதப்படுகின்றன.

> நீங்கலாக வேறுவேறு விஷயங்களை உள்ளுக்கு இழுத்து வருகிறீர்கள் ,,, அவைகளெல்லாம்
> தெளிவாக்கப் பட்டுவிட்ட விஷயங்கள்

ஏற்கெனவே தெளிவாக்கப்பட்டுவிட்டதாக நீங்கள் கூறும் விவரங்களிலிருந்து
எங்களுக்கு ஏதாவது தெளிவுகிடைக்காதா என்பதே எனது எண்ணம்.

> அந்த சொல் வெறும் மரியாதை செய்வதற்கு சொல்வதற்கு கூட ஆளப்படும் என்பதை என்னால்
> ஏற்க முடிய வில்லை என்பதற்கு காரணத்தை முன்வைத்து விட்டேன் ( மரியாதைக்காக
> பயன்படுத்தும் அதே வஜிமுரையினைத்தான் தங்களைப் படைத்து பரிபாளிப்பதாக கருதும்
> ஒன்றின் முன் நின்று அவர்கள் செய்து வருகிறார்கள்..... நீங்கள் உலகத்தை கண்ணை
> மூடிக்கொண்டு பார்க்கிறீர்களா என்ன ....?)

அவர்கள் எங்கே என்ன செய்கிறார்கள் என்பதையும் தவறாகப்
புரிந்துவைத்திருக்கிறீர்களே.

சைவ, வைணவ கோயில் வழிபாட்டு முறைகளாகட்டும், குலதெய்வ பூசைகளாகட்டும்,
விவசாயம் தொடர்பான வழிமுறைகளாகட்டும் அதாவது, இந்துக்கள் தெய்வம்
தொடர்பான வணக்க வழிபாட்டு முறைகளைப் போன்ற அதே முறைகளில்தான் மனிதனுக்கு
மரியாதை செய்கிறார்களா?

அதாவது, நீங்கள் சுற்றி வளைத்துச் சொல்வதை தெளிவான முறையில்
எழுதவேண்டுமென்றால், சிலைகளுக்குச் செய்யும் மரியாதையைத்தான்
மனிதனுக்கும் செய்கிறார்கள் என்கிறீர்களா? நீங்கள் சொல்லவந்தது
இதுதானென்றால் இதனை நான் மறுக்கிறேன். நீங்கள் தவறான கருத்தைக்
கொண்டிருக்கிறீர்கள் என உறுதியாக்ச் சொல்கிறேன்.

அதுவல்ல, நீங்கள் சொல்ல வந்தது வேறென்றால், அது என்னவென எனக்குப்
புரியவில்லை. அதனைக் கொஞ்சம் தெளிவாக எழுதுங்கள்.

> நான் ஆரம்பத்திலிருந்தே தெளிவாகத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்கள்
> வணக்கம் என்கிற சொல்லின் பொருள் உருவானதன் மூலத்தையும் போட்டு
> உடைத்திருக்கிரீர் அதற்க்கு நன்றி

நான் ஒன்றும் போட்டு உடைக்கவில்லை ஹாரூன், அது நீண்ட நாள்களாக
விவாதங்களில் உழன்றுகொண்டுதான் இருக்கிறது, நீங்கள் அதனை
அறிந்திருக்கவில்லையென்பதை 'போட்டு உடைத்துவிட்டேன்' என்னும் வாசகத்தின்
வாயிலாக அறிவித்துக்கொள்கிறீர்கள், சல்தாஹை.

விஷயத்திற்கு வருகிறேன், பாடம் எடுக்கவேண்டுமா என்று கேட்டீர்களல்லவா,
எடுங்கள். நான் முன்வைத்த வேண்டுகோள்களான, அரபு மொழியில் ஆகி வந்த
பெயர்கள், மருவி வந்த பெயர்கள், அந்தப் பெயர்களுக்கும் இறைவனின்
திருநாமங்களுக்கும் உள்ள தொடர்பு, அப்படி மருவிய பெயர்கள் இறைவனின்
திருநாமத்தை ஒட்டியவையாக இருந்தாலும் அவற்றை ஏன் இறைவனின் திருநாமமாகக்
கணக்கில் கொள்ளக்கூடாது என்பதற்கான விளக்கங்கள், இப்படியான பரந்த
தளத்தில் உங்கள் பாடங்களை / கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன், முயற்சியும்
இறையருளும் இருக்குமானால் உங்களால் முடியும்.

ஒன்றே [நன்றே] சொல்

unread,
Nov 20, 2008, 5:42:17 AM11/20/08
to panb...@googlegroups.com
அன்பின் எழில்,
இதில் எந்த மதத்தையும் குறை சொல்வது போல வார்த்தைகள் இருப்ப‌தாக‌த் தெரிய‌வில்லையே. வ‌ண‌க்க‌மா, வாழ்த்துக்க‌ளா? என்ற‌ இந்த‌ இழை தொட‌ர்பான‌ விவாத‌மாக‌த் தானே தெரிகிற‌து.

நான் புரிந்த‌ வ‌ரை...
ந‌ண்ப‌ர் ஹாரூன் சொல்ல‌ வ‌ருவ‌து...
சிலை வ‌ண‌க்க‌ம் முற்றிலும் ம‌றுக்கும் ஒரு ச‌முதாய‌த்தின‌ரிட‌ம், சொல்லும் செய‌லும் ஒன்றாய் இருக்க‌ விழையும் அவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ள், சாதாரண வார்த்தையில் கூட‌ அந்த‌ சாய‌ல் புல‌ப்ப‌ட‌க்கூடாதே என்று ஆவ‌ல் கொள்வ‌தில் த‌வ‌றில்லை தானே! இந்த‌ மாதிரியான‌ சிறு சிறு க‌ருத்துப்பிழைக‌ள்/ சொற்பிழைக‌ள், அவ‌ர்க‌ளின் கொள்கை அடிப்ப‌டையையே த‌க‌ர்க்கும் வ‌ண்ண‌ம் பிற‌ழ்ந்து விட‌க்கூடாது என்று அவ‌ர் எண்ணுவ‌தில் த‌வ‌றில்லை தானே நண்பா!

நாமாக‌ அதற்கு ஏதேனும் பொருள் கொண்டு, அவ‌ர் சொல்ல‌ வ‌ந்த‌ க‌ருத்தை/ அத‌ன் ஓட்ட‌த்தைத் த‌டை செய்ய‌ வேண்டாமே!

அத‌ற்காக‌, நான் வ‌ண‌க்க‌ம் என்ற‌ வார்த்தையைச் சொல்ல‌க்கூடாது என்றெல்லாம் கூற‌வில்லை.

புரித‌லுக்கு ந‌ன்றி!

2008 நவம்பர் 20 11:50 அன்று, ezhil arasu <nan...@gmail.com> எழுதியது:

ஒன்றே [நன்றே] சொல்

unread,
Nov 20, 2008, 6:13:10 AM11/20/08
to panb...@googlegroups.com

அன்பின் ஹாரூன்,

//டைத்தவனை சுட்டும் சொல்லுக்கும் படைப்பினங்களை சுட்டும் சொல்லுக்கும் பாரிய வித்தியாசம் உண்டு இறைவனின் திருநாமம் மற்றும் அதன் பண்புகள் பற்றி ...//

நீங்கள் இவ்வாறு சொல்லி இருப்பதனால் அது சம்பந்தமாக ஒரு சிறு விளக்கம், என் நண்பர்கள் மூலம் எனக்குத் தெரிந்த வரை...

ஒரு நபர் நம்பிக்கையாளர்/ விசுவாசி என்று சொல்வதற்கு, அரபியில் "முஃமின்" என்று சொல்வார்கள்.
அதே ச‌ம‌ய‌ம், அல்லாஹ்வின் அழ‌கிய‌த் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று "முஃமின்" என்ப‌து.

உங்களுக்குத் தெரியும்: இறைத்திருப்பெயர்களை மனித‌ர்க‌ளுக்குப் பெய‌ரிடும் போது, அத‌ற்கு prefix ஆக‌ [முன்னொட்டியாக‌] "அப்துல்" [அடியான்] என்ற‌ சொல்லைச் சேர்த்து இடுவார்க‌ள்.

இப்போது நான் கேட்கிறேன்:
ஒரு ந‌ல்ல‌டியாரான‌/ இறை விசுவாசியான‌ ம‌னித‌ரை "முஃமின்" என்ப‌தா? "அப்துல் முஃமின்" என்ப‌தா?

நீங்க‌ள் சொல்வ‌து போல் வார்த்தைக்கு நேரடிப்பொருள் மட்டும் கருதிக்கொண்டு விவாதிப்போமானால், வெறும‌னே முஃமின் என்றால் த‌வ‌றாகிவிடும். உங்க‌ள் க‌ருத்துப்ப‌டி அப்துல் முஃமின் என்று தான் சொல்ல‌ முடியும்.

ஆனால், இறை ந‌ம்பிக்கையாள‌ரை முஃமின் என்று அழைக்கும் வார்த்தைக‌ள் அருள்ம‌றை குர்ஆனில் கூட‌ நிறைந்து இருக்கின்றன‌.

இங்கு என்ன‌ சொல்ல‌ வ‌ருகிறேன் என்றால்.....
வார்த்தையை விட அத‌ன் நோக்க‌ம் முக்கிய‌ம்.

ச‌ரி தானே?
பிழை இருப்பின் திருத்த‌வும்.

ஒன்றே [நன்றே] சொல்

unread,
Nov 20, 2008, 7:05:32 AM11/20/08
to panb...@googlegroups.com

ஹாத்தம் அல் ஹரமைன்அல் ஷெரிபைன்

ஆ? அல்லது க்ஹாதிம் அல் ஹரமைன் ஆ?

க்ஹாதிம் [khadim] என்றால் சேவகர்/ பணியாளர் என்பது தானே? க்ஹித்மா [khidma] என்றால் சேவை.
இதில் வணக்கம் என்று எதுவும் இல்லையே!

custodian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

[தொகு] ஆங்கிலம்

பலுக்கல்


custodian

  • காப்பாளர்; பாதுகாவலர்; பாதுகாவலர் பொறுப்பாளர்; பொறுப்பாளர்

[தொகு] உசாத்துணை

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் custodian
"http://ta.wiktionary.org/wiki/custodian" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது


2008 நவம்பர் 19 17:45 அன்று, ஆசாத் <banu...@gmail.com> எழுதியது:
Reply all
Reply to author
Forward
0 new messages