--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
Sent via Epic Browser
புதுகை அப்துல்லா கூகிள்+ ல் பகிர்ந்த ஒரு செய்தியை படிச்சிட்டு ஃபீலிங்ல இருக்கேன் :(
அன்போடு
மோரு
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
எதுவா இருந்தாலும் இங்க எடுத்து போடுடே
ஆனால் இஸ்லாமியர்களுக்கு பண்பு இருக்காது என்ற நஞ்சை இந்த வயதில் அவளுக்கு போதித்தது யார்?? பொதுவாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் எனக்கு துணிச்சல்காரன் என்ற பெயர் உண்டு. மிகவும் பயப்படுகிறேன் இந்த தேசம் போகும் திசை கண்டு.
- இதுல யார்மேலையும் பழி போடுறதுல எனக்கு உடன்பாடு இல்ல. ஆனா, இந்த வேறுபாடு கிட்டதட்ட எல்லா படிச்சவங்க வீட்டுக்குள்ளேயும் இருக்குன்னு தெரிஞ்சப்ப கவலையாயிடிச்சி :((
Shared publicly4:36 AMநேற்று இரவு நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் விருந்திற்காகச் சென்றிருந்தேன். அங்கு எனது நீண்டநாள் நண்பர் ஒருவர் தனது 4 ஆம் வகுப்பு படிக்கும் பேத்தியுடன் நின்று பஃபேயில் உணவருந்திக்கொண்டு இருந்தார். பல நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்த மகிழ்ச்சியில் அவர் அருகில் சென்று நலம் விசாரிக்கத் துவங்கினேன். அருகில் இருந்த பேத்தியிடம் "இவரு அப்துல்லா அங்கிள். தாத்தாவோட ஃபிரண்டு." என்று அவளிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவள் படிப்பு உள்ளிட்ட விசயங்களை அவளிடம் விசாரித்துவிட்டு அவரிடம் , "நீங்க மட்டும் வந்து இருக்கீங்க? அண்ணி வரலையாண்ணா?" என்று கேட்டேன். அருகில் இருந்த பேத்தி அவரிடம் இவர் அண்ணின்னு யாரைச் சொல்றார்? என்று கேட்டாள். அவர் 'உங்க பாட்டியைச் சொல்றார்டா குட்டி! இவர் எப்பவும் என்னைய அண்ணான்னும்,பாட்டியை அண்ணின்னும்தான் கூப்பிடுவார்!' என்று மகிழ்வோடும்,பெருமையோடும் சொன்னார். பட்டென்று அந்த சிறுபெண் "பரவாயில்லையே!! முஸ்லீம்ஸ்கெல்லாம் கூட பண்பு இருக்கே!!" என்றாள். அவர் உடனடியாக தனது பேத்தியைத் திட்டத் துவங்கிவிட்டார்.
பொதுவாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் எனக்கு துணிச்சல்காரன் என்ற பெயர் உண்டு. மிகவும் பயப்படுகிறேன் இந்த தேசம் போகும் திசை கண்டு.
தனி மனிதனை விட்டு ஏதோ ஒரு பொதுமைப்படுத்தும் உறை போட்டு இவன் இப்படித்தான்னு முடிவு பண்ணுறது ஒரு நவீன தீண்டாமை எனலாமா?
மோரு,இந்த விசயத்தில் இந்து முஸ்லீம் என யாரும் விதிவிலக்கல்ல.
ராசா இந்த விஷயத்துல மதத்த பத்தி தப்பு தப்பா சொல்லி வளக்குறாங்களோ இல்லையோ சாதியை பத்தி இன்ன சாதி இப்படின்னு சொல்லி வளக்குறாங்க.