அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
குழுமம்--> http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
வலைப்பூ--> www.nilaraseegan.blogspot.com
அன்புக்கு நன்றி நிலா!
இன்றைக்குள் இடுகிறேன்.
~கோ
~ காதல் கூடம் - முதல் பகுதி ~
அது ஒரு வெயில்மாதத்தின்,
வெயில் பிறக்காத காலைப் பொழுது.
நம் ஊரில்
உன் கோவில் துவங்கி
மாரியம்மன் வீடு
வரையிலான பாதை
தேவதையின் பாதை.
அந்தப் பாதையெங்கும்
உன் மிதிவண்டி வேகத்தில்
நீர்க்கோலங்களை வரைந்தவண்ணம் செல்கிறது,
உன் கூந்தல் அருவி சிந்தும்
தலைக்குளியல் நீர்.
உன் வருகையை எதிர்பார்த்து
கர்ப்பகிரகத்துக்கும், வாசலுக்கும்
நடையாய் நடந்து கொண்டிருக்கிறாள் அம்மன்.
நீ நெருங்கியதும்,
உன் நுதலில் சிறுபிறையென
குங்குமத்தை அவள் கீற்ற,
கொஞ்சமாய்ச் சிவந்தது,
குங்குமம்!
பின், அங்கிருந்து மேற்காக
ஈசுவரன் கோவிலுக்குப்
பயணமானது உன் மிதிவண்டி...
அந்தப் பௌர்ணமி இரவில்...
நிலவு, கத்திரி பூ நிறத்தில் இருந்தது.
--
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
அந்த வரியை
ஆயிரம் அர்த்தங்களுடன்
நான் உச்சரித்துப் பார்த்த
அந்தப் பௌர்ணமி இரவில்...
//உன் வருகையை எதிர்பார்த்து
கர்ப்பகிரகத்துக்கும், வாசலுக்கும்
நடையாய் நடந்து கொண்டிருக்கிறாள் அம்மன்.//
//உனக்காக
நந்திமேல் கைவைத்தபடி காத்திருந்தான் ஈசுவரன்.//
இதனைத்தான் தெய்வீகக் காதல் என்கின்றீர்களளோ..?
ரசிக்கத்தக்க வகையில் காதலைப் பற்றி எழுதியுள்ளீர்கள் கோ.....
இன்னும் இன்னும் எதிர்பார்க்கின்றோம்...
நடு நடுவே சில பிரமாதமான வரிகள்,
> கொஞ்சமாய்ச் சிவந்தது,
> குங்குமம்!
.
.
.
> நெடுநாள் நண்பனைப் போல்
> எல்லோர் தோளிலும் கைபோட்டு
> நின்று கொண்டிருந்தது வெயில்.
சில இடங்களில் தயங்கித் தேங்கும் வரிகள் - நடை...
>எல்லோருக்கும்
> ஒரே நாளில் பிறந்தநாள் வந்ததைப்போல
> சீருடை தொலைத்து
> வண்ண உடைகளில்
> பள்ளிமுன் குழுமியிருந்தோம்.
.
.
.
> முடிவுகள் ஒட்டப்பட்டப் பலகைகள் கொண்டுவரப்பட
> எல்லாத் தெய்வங்களையும் துணைக்கழைத்தபடி நீயும்
> உன் பெயரை ஒருமுறை உச்சரித்தபடி நானும்
> நெருங்குகிறோம்.
ஆணுக்குப் பின் தான் பெண் வரவேண்டும் என்ற ஆணின் உள்மனக்கிடக்கை...
> பிரிந்து செல்கையில் சொல்லிவிட்டுப் போனாய்.
> "எப்போதுமே உன் பின்னால்தான் நானா?"
மிக நீண்ட கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் அழுத்தம் குறைந்து போய்,
ஆழமான காதலை வெறுமனே ஒரு puppy loveஆக மாறிப் போய்...
இனி வரும் கவிதைகளில், காதல் வலுவாக மையம் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்
தானே?
அன்புடன்,
நண்பன்.
On Sep 3, 6:15 pm, "அருட்பெருங்கோ" <arutperu...@arutperungo.com>
wrote:
> *~ காதல் கூடம் - முதல் பகுதி* ~
@ அண்ணாச்சி ~ அண்ணாச்சி, இது காதல் கவுஜ னு யார் சொன்னது??? கவிதைக்கு ஒரு கவுஜ மாதிரி இது கதைக்கு ஒரு கஜ ;) ( எப்படியோ சமாளிச்சாச்சு ;) )
~ காதல் கூடம் – இரண்டாம் பகுதி ~
வாங்கிக் கட்டிக் கொண்டதாக சொன்னாலும் மாறிக் கொள்ள மாட்டீர்கள்
போலிருக்கிறதே....
நட்புடன்
நண்பன்
அண்ணாச்சி, நன்றிங்க :) முதன் முதலில் கவிதை வாசிப்புக்கு வருகிறவர்களை இம்மாதிரி எழுத்தக்களே பெரும்பாலும் கவர்கின்றன என்பது கொஞ்சம் உண்மைதான்!!!
அண்ணாச்சி, நன்றிங்க :) முதன் முதலில் கவிதை வாசிப்புக்கு வருகிறவர்களை இம்மாதிரி எழுத்தக்களே பெரும்பாலும் கவர்கின்றன என்பது கொஞ்சம் உண்மைதான்!!!
அந்தப் பூங்காக் குழந்தைகள் விளையாடுவதற்காக உருவாக்கப் பட்டது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.
கொளுத்தும் வெயிலிலும் கூட அது எப்போதும் காதலர்களால் மட்டுமே நிரம்பியிருக்கும்.
சூரியன் தன் இருப்பைக் காட்ட ஆரம்பித்த அந்தக் காலை வேளையிலேயே அந்தப் பூங்காவுக்குள் நுழைந்தார்கள் இருவரும்.
அவளுடையத் தோள் மேல் தன் வலது கையைப் போட்டபடி அவனும், அவனுடைய இடுப்பைத் தன் இடது கையால் சுற்றியபடி அவளும்.
"அருள், இந்தப் பூங்காவுக்கு நாம இதுவரைக்கும் எத்தன தடவை வந்திருப்போம்?"
"இங்க இருக்கிற மரத்துக்கிட்ட தான் கேட்கனும், எனக்கென்னமோ நான் பிறந்ததுல இருந்தே இந்தப் பூங்காவுக்கு வந்துகிட்டு இருக்கிற மாதிரி தான் தோணுது"
ஒரு வகையில் அவன் சொல்வதும் உண்மைதான். அவன் வாழ்வில் இரண்டாவது முறைப் பிறந்தது இந்தப் பூங்காவில்தான்.
அப்போது இது குடும்பத்தோடு எல்லோரும் வரும் பூங்காவாய் இருந்தது.ஒரு நாள் தன்னுடையப் பூனைக்குட்டியோடு அவள் இந்தப் பூங்காவுக்கு வந்திருந்த போதுதான் முதன்முதலாய் அவளைப்பார்த்தான். அப்போதேப் பூனைக்குட்டியாய் மாறி விட ஆசைப்பட்டவன், இப்போது அவள் பின்னே ஒரு பூனைக்குட்டியாகவே மாறியிருந்தான்.
"அரசி, இந்த மரத்துல இதுக்கு முன்ன நீ பூ பூத்துப் பார்த்திருக்க?"
"அது வருஷத்துல ஒரு தடவை மட்டும் தான் பூக்கும், போன வருஷம் பூத்திருந்தத நான் பார்த்தேன்"
"நான் எப்படிப் பார்க்காமப் போனேன்?"
"வெளியில வரும்போதாவது சுத்திலும் என்ன இருக்குன்னுப் பார்க்கனும், எப்பவும் என்ன மட்டுமேப் பார்த்துக்கிட்டு இருந்தா இப்படித்தான்"
"இப்ப மரத்த விட்டுட்டு, உன்னப் பார்க்கனும்..அதான? இரு.. இரு..இந்தப் பூவ மட்டும் பறிச்சுட்டு வந்துட்றேன்.."
"அது அவ்ளோ உயரத்துல இருக்கே, வேண்டாம் விடுங்க…"
"கொஞ்சம் இரு..அந்தப் பூ அப்ப இருந்து ஏக்கத்தோட உன்னையேப் பார்த்துட்டு இருக்கு, அதப் பறிச்சு உங்கிட்டக் கொடுக்கலேன்னா என்னதானத் திட்டும்", சொல்லிக்கொண்டே ஒரு பெஞ்ச் மீது ஏறி கொஞ்சம் எக்கிப் பறித்தான் அந்தப் பூவை.
அவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டவள், கையிலேயே வைத்துக் கொண்டாள்.
"அதப் போய் அப்படி எக்கிப் பறிக்கிறீங்களே, கீழ விழுந்தா என்னாகறது?"
"அந்தப் பூ விழுந்திருந்தா, வேறப் பூ பறிச்சுத் தந்திருப்பேன்"
"ம்ஹூம்…உங்களத் திருத்தவே முடியாது!" என்று சிணுங்கியவள் பூவைச் சூடிக்கொள்ளத் திரும்பி நின்றாள்.
அவன் கையால் பூவைச் சூடிக்கொண்ட பின் அவர்கள் வழக்கமாய் அமரும் அந்த மரத்தடிக்குச் சென்று அமர்ந்து கொண்டார்கள்.
"இன்னைக்கு என்னங்கக் கூட்டமே இல்ல?"
"எல்லாருமே நம்மள மாதிரிக் காதலிக்கிறது மட்டுமே வேலையா இருப்பாங்களா என்ன?"
"ம்ம்..அதுவும் சரிதான்"
அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் காதலில் பிதற்ற ஆரம்பித்தான்.
"எப்பவும் கூட்டத்துக்கு நடுவிலப் பார்த்தாலே நீ தனியா அழகாத் தெரிவ; இன்னைக்கு பூங்காவில உன்னமட்டும் தனியாப் பார்க்க நீ எவ்ளோ அழகா இருக்கத் தெரியுமா?"
"அழகா இல்லாமப் பின்ன எப்படி இருப்பேனாம்? ஒரு நாளைக்கு ஒரு தடவை சொன்னாப் பரவால்ல! காலைலத் தூங்கி எழுந்ததுல இருந்து ராத்திரித் தூங்கப் போற வரைக்கும் ஆயிரத்தெட்டு தடவ "நீ அழகா இருக்கடி"னு சொல்லி சொல்லி எனக்கே மனசுல நான் அழகினு பதிஞ்சு போச்சு, நாம நினைக்கிற மாதிரிதான நாம இருப்போம்..அதான் நான் எப்பவும் அழகா இருக்கேன்"
அவள் பேசுவதையே ரசித்துக் கொண்டிருந்தவன், "நீ அழகா இருக்கிறதுக்கு இதுதான் காரணம்னா ஒவ்வொரு பிறந்த நாள் முடிஞ்சவுடனே உனக்கு மட்டும் ஒரு வயசுக் கம்மியாயிடுதே அதுக்கென்னக் காரணமாம்??"
"ஆமா, ஒரு தடவ "நீ அழகா இருக்கடி"னு சொன்னா ஒன்பது தடவ "நான் உன்னக் காதலிக்கிறேன்"னு சொல்றீங்க…தினமும் சொல்ற உங்களுக்கும் சலிக்கல…தினமும் கேட்கிற எனக்கும் சலிக்கல..இப்படி தினம் தினம் காதலிக்கப் படறவங்களுக்கு எப்படி வயசுக் கூடுமாம்??"
"எனக்கு மட்டும் கூடுது!"
"உங்க அளவுக்கு என்னாலக் காதலிக்க முடியல இல்ல! அதான் நீங்கக் காதலிக்கிறத விடக் காதலிக்கப் படறது கம்மி! அதனாலதான் உங்களுக்கு வயசுக் கூடிக்கிட்டேப் போகுது!"
"அரசி! நீ எப்போ இந்த மாதிரியெல்லாம் பேச ஆரம்பிச்ச?" ஆச்சரியமாய்க் கேட்டான்.
வழக்கமாய் அவள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அவன் தான் இப்படி காதலில் உருகிக் கொண்டிருப்பான்.
நேரம் கரைந்து, வெயில் கொஞ்சம் அதிகமாகவே இருவரும் பூங்காவை விட்டு வெளியே நடந்து வந்தார்கள்.
அவள்,எதிரில் இருந்த ஐஸ்க்ரீம் கடையைக் காட்டிக் கேட்டாள், "அருள், ஒரே ஒரு ஐஸ்க்ரீம் ப்ளீஸ்"
"உன்ன ஐஸ்க்ரீம் சாப்பிடக்கூடாதுனு சொல்லியிருக்கேன்ல…அப்புறம் குண்டாயிட்டீன்னா உன்ன வீட்ல எல்லாரும் ஜோதிகானு கிண்டல் பண்ணப் போறாங்க"
ஒவ்வொரு முறை அவள் ஐஸ்க்ரீம் கேட்கும்போதும் அவன் முதலில் மறுப்பதும், பின் அவளுடையக் கெஞ்சல், சிணுங்கலில் அவன் ஐஸ்க்ரீமாய் உருகி, ஒன்றை வாங்கித் தருவதும் வழக்கமாய் நடப்பதுதான். ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். ஒருக் குழந்தையைப் போல் அவள் ஐஸ்க்ரீமை ருசிப்பதை, ரசித்துக் கொண்டே வந்தான்.
"ம்ம்…இப்படிதான் ஐஸ்கிரீம சாப்பிடறதா..பாரு உதட்டுக்கு மேல எல்லாம்..", சொல்லிக்கொண்டே அவள் உதட்டருகே கையைக் கொண்டுபோனான்.
"அருள்! இது பொது இடம்! ஞாபகம் இருக்கட்டும்", என்று சொல்லி விட்டு உதட்டை அவளேத் துடைத்துக் கொண்டாள்.
"அடிப் பாவி! உன்னோட உதட்டப் போய் பொது இடம்னு சொல்றியே! அது நம்மோடத் தனி இடம்டி"
"ம்ம்..என்னோடத் தனி இடம்டா!"
பேசிக்கொண்டே அந்தத் துணிக்கடைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இருவரும் காலையில் கிளம்பியதே அடுத்த வாரம் அவர்களுக்கு நடக்க இருக்கும் கல்யாணத்திற்கு துணியெடுக்கத்தான். ஆனால் ஒருநாளைக்கு ஒருமுறையாவது அந்தப் பூங்காவுக்குள் நுழையாமல் அவர்களால் இருக்க முடியாது.அதனால்தான் காலையில் முதலில் பூங்காவில் கொஞ்ச நேரம் கழித்துவிட்டுப் பிறகுக் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
இருவருக்குமேப் பெற்றோர் இல்லாததால்தான் அவர்கள் மட்டும் தனியே வந்திருந்தனர்.
கடைக்குள் நுழைந்ததும், அவளே ஆரம்பித்தாள்:
"எப்பவும் சொல்ற மாதிரி புடவை வேண்டாம்னு சொல்லிடாதீங்க, கல்யாணத்தன்னைக்காவது நான் புடவையக் கட்டிக்கிறேன்"
"என்னை…"
"உங்களையுந்தான்…", சிரித்தாள்.
"சரி என்ன மாதிரிப் புடவை பார்க்கலாம்"
"பட்டெல்லாம் வேண்டாம், சிம்பிளா ஒரு கைத்தறிப் புடவை, தலைல ஒரே ஒரு ரோஸ், கழுத்துல ஒரு சின்ன செயின் இது மட்டுதான் என்னோடக் கல்யாண costume! So கைத்தறிப் புடவையேப் பார்க்கலாம்"
"என்னக் கலர்ல பார்க்கலாம்?"
"உங்களுக்குப் பிடிச்ச பச்சை"
"ம்ஹூம்… உனக்குப் பிடிச்ச ப்ளூ"
இருவரும் மாறி மாறி சண்டை போட்டு முடிவில் அவள் சொன்னாள்,
"சரி எனக்குப் புடவை பிடிக்கும், அத உங்களுக்குப் பிடிச்ச பச்சைக் கலர்ல எடுத்துடுவோம்..உங்களுக்கு சுடிதார் பிடிக்கும், ஒரு சுடிதார் எனக்குப் பிடிச்ச ப்ளூ கலர்ல எடுத்துடுவோம்! சரியா??"
"ம்ம்ம்…எக்ஸ்ட்ராவா ஒரு சுடிதார் வேணும், அதுக்கு இப்படியெல்லாம் ஒரு காரணமா? சரி சரி ரெண்டுமே எடுத்துடுவோம்!"
அவனுக்குப் பிடித்த பச்சை நிறத்தில் ஒரு புடவையை எடுத்துக் கொண்டு, சுடிதார் பகுதிக்கு வந்தார்கள்.
"அருள், இந்த மெட்டிரியல் எப்படி இருக்குன்னுப் பாருங்க?"
"இதுக்கென்னத் துப்பட்டாக் கிடையாதா?"
"இல்ல இந்த மாதிரி தச்சா துப்பட்டாப் போடாம இருக்கிறதுதான் இப்ப ஃபேஷன்"
"அப்போ plain-material வேண்டாம் embroidery பண்ணது எடுக்கலாம்…இந்தா இது எப்படி இருக்குன்னுப் பாரு"
"ம்ம்..பரவால்லியே உங்களுக்குக் கூடக் கொஞ்சம் dressing sense இருக்கு!"
"என்னோட dressing sense-ச வச்சி உனக்கு எது நல்லா இருக்குனுதான் சொல்லத் தெரியும்; எனக்கு நீயே பார்த்து ஒன்ன select பண்ணு"
அவனுக்கு அவளே ஓர் ஆடையைத் தேர்ந்தெடுத்தாள், அவளுக்குப் பிடித்த நிறத்தில்.
எல்லாம் முடித்துக் கொண்டு வீடு திரும்புகையில் வாசலிலேயே அவர்களுக்கு வரவேற்புக் காத்திருந்தது.
"ஏன் தாத்தா! Dress வாங்கப் போறோம்னு காலையிலேயேக் கிளம்பிப் போய்ட்டு இப்பதான் வர்றீங்க…இவ்ளோ நேரம் எங்கப் போய் லவ் பண்ணிட்டு இருந்தீங்க?"
கேட்டு விட்டு உள்ளே ஓடும் பேத்தியைத் துரத்திக்கொண்டு ஓடுகிறார்கள், அடுத்த வாரம் அறுபதாம் கல்யாணம் செய்துகொள்ளப் போகும் அருளும், அரசியும்!
அழியாத அன்புடன்,
நம்பிக்கைக்கு நன்றிங்க அண்ணாச்சி!!!
நீங்கள் அப்படி தங்கி விட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது எனக்கு.
சில சமயங்களில், ஊறுகாய் தேவைப்படலாம்.
போதைக்கு சுள் ஏற்றிக்கொள்ள.
ஆனால், அதுவே மட்டும் வயிறு நிரம்ப பயன்படாது. தபூசங்கரின் எழுத்துகள்
ஆனந்த விகடனின் பாமரவாசகனுக்குத் தேவைப்படும் ஊறுகாய். நடைமுறை
வாழ்க்கையை ஊன்றிப் பார்க்கும் ஆவல் இன்றி, அதை அப்படியே ஏற்றுக் கொண்டு,
அதன் இருப்பை நியாயப்படுத்தும் அநியாயத்திற்குத் துணை போகும் எழுத்துகள்
அவை. ஒதுக்கப்பட வேண்டியவை - சிந்திக்கத்தெரிந்தவர்களால்.
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய் என்பது போன்ற கருத்தாக்கங்கள்,
பெண்ணடிமையைத் தூக்கிப் பிடிக்கும் வெட்கங்கெட்ட செயல். An aspiring
intellectual should keep away from such silly writings. சிந்தனைத் தளம்
ஒரு நாளிலே வாய்க்கப் பெறுவதில்லை. தொடர்ந்த வாசிப்புகளால், கொஞ்சம்
கொஞ்சமாக கட்டமைக்கப்படுகிறது. அதை இப்பொழுது உணரா விட்டால், பின்னர்
அதுவே ஒரு போதையாகி, அதற்கு அடிமையாகி விடக் கூடும். அதனால், தான் தவறான
கருத்தாக்கங்களை எப்பொழுதுமே வெளிப்படையாக பேசி வருகிறேன்.
மற்றபடி, அருட்பெருங்கோவின் வார்த்தை பிரயோகங்கள், மொழி ஆளுமை -
பிரமாதம். He should not get trapped in this puppy love fantasies.
புரிந்து கொள்வார் என்றே நம்புகிறேன்.
நட்புடன்
நண்பன்.
தபூசங்கரின் அதீத காதல் வரிகள் உருவாக்கியிருக்கும் ரசனையின் நீட்சியாக இதனை எடுத்துக்கொள்வோம். வாங்க கோ, நீங்க தொடருங்க!
நிலவில் வாழமுடியுமோ முடியாதோ
ஆனால் நான் நிலவோடு வாழ்கிறேன்
இது தபுசங்கரின் கவிதை
>
> *நிலவில் வாழமுடியுமோ முடியாதோ
> ஆனால் நான் நிலவோடு வாழ்கிறேன்*
>
> இது தபுசங்கரின் கவிதை
> இதே வரிகள் 70 களில் வந்த திரைப்படப் பாடலொன்றில் அப்படியே இருக்கிறது.
> ஆனால் தபுசங்கர் அந்தப் பாடலைக் கேட்டிருக்க மாட்டார்.
>
> என்றும் அன்பகலா
> கணேஷ்
நட்புடன்
நண்பன்
நீங்கள் சொல்வதை முழுதாக புரிந்து கொள்கிறேன்.
கருத்துக்கும், அக்கறைக்கும் நன்றி நண்பன்.
கணேஷ்,
ஒரே பொருளில் வேவ்வேறு சொற்பிரயோகங்களினா கவிதைகளை சமகாலத்திலேயே பார்க்கிறோமே?
~தாய்மண்~
வேரோடு பிடுங்கி
வேறிடத்தில் நட்டு வைத்த செடி
விருட்சமென வளர்ந்தாலும்
வேரோடு ஒட்டியபடியேதான் இருக்கிறது
பிடுங்கப்பட்ட இடத்தின் தாய்மண்.
~கோ~
நல்லா இருக்கு கோ.
இன்னமும் செதுக்கியிருக்கலாம் வார்த்தைகளை
விருட்சமாகி நிற்கிறது
வேறோடு பிடுங்கி நட்ட செடி
இன்னும் ஒட்டியபடிதான் இருக்கிறது
வேரோடு தாய்மண்
என்று எழுதினால் உதைக்க வருவீர்களா? :-)
நன்றிங்க அண்ணாச்சி.
ம்ம்ம்…செதுக்கியிருக்கலாம்! அதுக்கென்ன அதான் இப்போ நீங்க செதுக்கிட்டீங்களே ;)
இனிமே முடிஞ்ச வரைக்கும் நானும் செதுக்க முயற்சி பண்றேன் :)
நன்றிங்க அண்ணாச்சி.
ம்ம்ம்...செதுக்கியிருக்கலாம்! அதுக்கென்ன அதான் இப்போ நீங்க செதுக்கிட்டீங்களே ;)
அடடா!
என் கவிதையில் நீ எப்பைட் கைவைக்கலாம்னு குதிச்சாத்தான்யா நீயெல்லாம் ஒரு கவுஞ்னாக முடியும். அதை விட்டுட்டு நன்றிங்குற :-) சரியாப்போச்சு போ
இப்படி ஆளாளுக்கு செதுக்குனா கடைசில கவிதை என்னாகும்னு கொஞ்சம் யோசிங்க
நன்றி – நல்லா இருக்குனு சொன்னதுக்கு அண்ணாச்சி :)
அதான் இனிமே நானே செதுக்கிட்றேனு சொல்லிருக்கேனே :)
(கழுதை தேஞ்சு, கட்டெறும்பான கதை.ன்னு எழுத ஆசை தான். ஆனால், நிறைய
பேருக்கு இடம் பொருள் ஏவல் அறியும் முனைப்பில்லாமல், வாசிக்கிறார்கள்..
என்பதனால், கழுதையை யானையாக மாற்றிப் போட்டாச்சு...)
நட்புடன்
நண்பன்
> > இனிமே முடிஞ்ச வரைக்கும் நானும் செதுக்க முயற்சி பண்றேன் :)- Hide quoted text -
>
> - Show quoted text -
அடங்கொய்யால… என் கவிதை யானையா? அது கவிதைப்பா ;)
அண்ணாச்சி, தேன்கூடு போட்டியில ஒருதடவை என்னோட கவிதை ரொம்ப நீளமா இருக்குன்னு நீங்க சொன்னது ஞாபகம் வருது :)
அடங்கொய்யால... என் கவிதை யானையா? அது கவிதைப்பா ;)
என்னக் கடவுள்னு எல்லாம் சொல்லாதீங்க அண்ணாச்சி, கூச்சமா இருக்கு ;)
கவிதையோட நீளம் கவிதைஅய் ஈர்த்து போகச் செய்து விடும்கறதாலதான்அப்படிச் சொன்னேன். நான் சொல்றது
நான் இப்போதுதான் பழகுநிலையில் இருக்கிறேன் நண்பன்.
அதனால் கடவுளை விஞ்சும் கவுஜையெல்லாம் ரொம்ப தூரம் எனக்கு :)
கவலப் படாதீங்க அண்ணாச்சி நம்மளப் பொருத்தவரைக்கும் முற்றுப்புள்ளியோ, ஆச்சர்யக்குறியோ வச்சிட்டா அந்தக் கவிதை முற்றுப்பெற்றதுன்னு அர்த்தம் ;)
~காதல் கூடம் – மூன்றாம் பகுதி~
ஆசிரியரில்லாப் பொழுதுகளில்
சதுரத்தில் சிறைபட்ட
சிறு நகரமென வாழ்கிறது
நம் வகுப்பறை.
பெர்மா தேற்றம்*, E=mc2, சவ்வூடு அழுத்தம் **
என தாவணியணிந்த கல்விக்கூடம் போல
புத்தகத்தோடு போரிடும் சில 'சரஸ்வதி'கள்.
கொய்யா, கடலை, பட்டாணி, நாவல்பழமென
ஒரு சாப்பாட்டு ராமனின் மேசைக்கடியில்
ரகசிய உணவகம் செயல்பட்டுக்கொண்டிருக்கும்.
திரைப்படம், ஊர்க்கதை, அரட்டையென
வாய்க்குள் கச்சேரி கட்டி
ஒலிபெருக்கிக் கொண்டிருப்பாள் ஒரு முத்துப்பேச்சி.
விகடன், சாண்டில்யன், ராஜேஷ்குமாரென
மேசைக்கடியில் நூலகம் திறந்திருப்பான்
கண்டதையும் படிக்கும் ஒரு பண்டிதன்.
ஆளுக்கொரு பாட்டு கேட்க, மேசையில் தாளமிட்டபடி
நேயர் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பான்
வானொலி நிலையமாக மாறிய ஒரு இளையராஜா.
இவர்களுக்கு மத்தியில்,
புன்னகை, கண்சிமிட்டல்,
உதட்டுசுழி, கன்னக்குழியென
விதவிதமானப் பூக்கள் பூத்து
முகத்திலொரு பூங்கா சுமந்தபடி நீ.
தொலைதூரப்பூங்காவை
தொடுதூரத்தில் பார்க்க,
இமைகளை சிலையாக்கி
கண்களை தொலைநோக்கியென
மாற்றியபடி நான்.
இருபுறமும் வீடுகள் அடைத்த வீதியாய்
நடுவில் கிடக்கிறது நீண்ட இடைவெளி.
இடப்பக்க முதல் மேசையில் வலது ஓரமாய் நீ.
வலப்பக்க இறுதி மேசையில் இடது ஓரமாய் நான்.
உன்னைப் பார்த்தபடியே ஒடியும்,
என் நிமிடங்களின் எல்லா நொடியும்.
இடைவெளியெங்கும் நிரம்பிக்கிடக்கும்
உனக்கான என் பார்வைகள்.
இடையூறின்றி விலகிச் செல்லும்
காற்று.
நோக்கம் எதுவுமின்றி
மயில் போல மெதுவாய்த்தான்
பின்புறம் திரும்புவாய்.
ரயில் போன தண்டவாளமாய்
தடுமாறும் என் பார்வைகள்.
காற்றில் அங்கங்கே புள்ளிவைத்து விட்டு
ஏட்டில் கோலமிட ஆரம்பிக்கும் என் விழிகள்.
அடுத்த வகுப்புக்கான மணியடிக்கிறது.
தமிழய்யா நுழைந்ததும்
உணவகம் முதல் நூலகம் வரை எல்லாம் மூடப்பட்டாலும்.
பூங்காவும், தொலைநோக்கும் தொய்வின்றித் தொடரும்.
அது ஓர் இலக்கண வகுப்பு.
அய்யா உன்னையெழுந்து வாசிக்க சொல்ல.
அவர் அருகில் நின்றபடி வகுப்பைப் பார்க்கிறாய்.
வகுப்பாய் மாறுகிறேன் நான்.
கரும்பலகை
இரவென பின்னணி கொடுக்க
நீ நிலவாகிறாய்.
என் எழுதுகோல்
தன் தொழில் மறந்து
தூரிகையாகிறது.
பென்சிலைக் கார்பனில் செய்தவனின் காதலி
கருப்பாய் இருந்திருப்பாளோ?
உன்னை வரைய
பொன்னில் செய்த பொன்சில்தான் வேண்டும்.
"இரு சொற்களின் புணர்ச்சியில்,
முதலிலுள்ள சொல் நிலைமொழியெனவும்,
இரண்டாவதாக வந்து சேரும் சொல் வருமொழியெனவும் அழைக்கப்படும்"
வாசிப்பினிடையே என்னைப் பார்க்கிறாய்.
நிலைமொழி நீ
வருமொழி நான்
காதலும் புணர்ச்சிதான்.
உணர்ந்தவளாய்,
உதட்டில் நகுகிறாய்.
விழிகளில் நாணுகிறாய்.
நீ விழிகளில் காதல் பரிமாறிய பின்னும்
என் உதடுகளில் உதறலெடுக்கிறதே.
ஏன்?
நண்பர்களோடு சிலம்பம் ஆடும்
என்சொற்கள் எல்லாம்
உன்னைக் கொண்டதும்
தியானத்தில் மூழ்கி விடுகிறதே.
எதற்கு?
தூரத்தில் நீ வருகையில்
இதயத்தில் இருந்து எழுந்து
தொண்டை வரை வார்த்தையாக வருபவையும்
அருகில் நீ வந்ததும்
குரலாக மாறாமல் காற்றாக கலைந்து மறைகிறதே.
எப்படி?
"உயிர் வரின் உ குறள் மெய் விட்டு ஓடும்" -
புணர்ச்சி இலக்கண விதியொன்றை
கரும்பலகையில் எழுதுகிறார் தமிழய்யா.
ஏட்டில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
"உயிர் வரின் உ குறள், மெய் விட்டோடும்"
"உயிர் வரின் என் குரல், மெய் விட்டோடும்"
"என்னுயிர் வரின் என் குரல், மெய் விட்டோடும்"
"என்னுயிர் நீ வரின் என் குரல், மெய் விட்டோடும்"
பெருங்கூட்டம் முன்னிலும்
பெருமழையெனப் பொழிகின்றன
என் வார்த்தைகள்.
ஒற்றைப் பெண்
உன் முன்நிற்கையிலோ
பூ மீது படியும் பனி போல
மென்மையாய் 'உம்' மட்டுமே கொட்டுகிறது.
அதற்குமொரு விதியெழுதுகிறார் தமிழய்யா.
"பூ பெயர் முன் இன மென்மை உம் தோன்றும்"
என் கதை அவருக்கும் தெரிந்திருக்குமோ?
'பேரூர்' – பிரித்தெழுதி புணர்ச்சி விதிகளையும்
எழுதச் சொல்லிவிட்டுச் செல்கிறார் அய்யா.
புணர்ச்சி விதி ஒவ்வொன்றிலும் கவிதைகளென
இடையிடையே நாமும் சேர்ந்து கொள்கிறோம்.
பெருமை + ஊர் -> பெரு + ஊர் (புணர்ச்சி விதி - ஈற்றழிதல்)
மணமாகிறேன்.
நிறமாகிறாய்.
காதல் பூக்கிறது.
சொல்லாகிறேன்.
இசையாகிறாய்.
காதல் கவிதையாகிறது.
பெரு + ஊர் -> பெர் + ஊர் ( புணர்ச்சி விதி - உயிர் வரின் உ குறள் மெய் விட்டோடும் )
கடலாகிறேன்.
கரையாகிறாய்.
காதல் அலையடிக்கிறது.
மழையாகிறேன்.
நிலமாகிறாய்.
காதல் மண்வாசமாகிறது.
பெர் + ஊர் -> பேர் + ஊர் ( புணர்ச்சி விதி - ஆதி நீடல்)
நீயாகிறேன்.
நானாகிறாய்.
காதல் நாமாகிறது.
காரணங்கள் எதுவுமின்றி
இதுபோல் என்னோடு வந்து
நீ ஒன்றானது ஏன்? எதற்கு?? எப்படி???
பேரூருக்கான கடைசி புணர்ச்சி விதிமூலம்
காதல் தேவதை பதில் சொல்லிப் போகிறாள்.
பேர் + ஊர் -> பேருர் ( புணர்ச்சி விதி – "உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" )
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
சிரமமின்றி வாசிக்க வைக்கும் நடை.
ஆனால், கதை சொல்லும் பொழுது, சம்பவங்களை நகர்த்திக் கொண்டே போக வேண்டும்.
கதை இன்னமும் காதல் விவரிப்பிலே தான் போய்க் கொண்டிருக்கிறது. என்ன
பிரச்சினை என்பதற்கு விரைந்து வாருங்கள். இல்லையென்றால் சுவராஸ்யம்
போய்விடும்.
அப்புறம் - புணர்ச்சி என்ற சொல் குறித்து காதலி நாணியதாக...
இன்றைக்கு வேண்டுமென்றால் புணர்ச்சி என்ற சொல்லின் பொருள் விளங்கி
இருக்கலாம் உங்களுக்கு. ஆனால், அந்த வயதில், இதன் பொருள் விளங்கி இருக்க
முடியாதே? நாணம் எங்கிருந்து வந்தது? நாங்கள் படிக்கும் பொழுதும்
இதையெல்லாம் படித்தோம். அப்பொழுது இது 'படுத்தி எடுத்த இலக்கண விதியாக'
மட்டும் தான் தோன்றியது. வேறு எதுவும் தோன்றவில்லை.
இன்று தெரிந்து கொண்டவற்றை வைத்துக் கொண்டு, அன்றைய தினத்தை எழுதும்
பொழுது, கொஞ்சம் செயற்கையாகத் தான் தோன்றுகிறது. கால மயக்கம்? கதை
சொல்லும் பொழுது, இத்தகைய கால மயக்கத்திற்கு இடம் கொடுக்கக் கூடாதல்லவா?
ம்ம்ம்.... சொல்லுங்கள், அடுத்து என்ன ஆயிற்று என்று!!!
நட்புடன்
நண்பன்
On Sep 10, 8:22 am, "அருட்பெருங்கோ" <arutperu...@arutperungo.com>
wrote:
> ~காதல் கூடம் – மூன்றாம் பகுதி~...
கோ,
சிரமமின்றி வாசிக்க வைக்கும் நடை.
ஆனால், கதை சொல்லும் பொழுது, சம்பவங்களை நகர்த்திக் கொண்டே போக வேண்டும்.
கதை இன்னமும் காதல் விவரிப்பிலே தான் போய்க் கொண்டிருக்கிறது. என்ன
பிரச்சினை என்பதற்கு விரைந்து வாருங்கள். இல்லையென்றால் சுவராஸ்யம்
போய்விடும்.
நன்றிங்க நண்பன்… ஒவ்வொரு அடியா போய்க்கிட்டு இருக்கேன்… :)
ரெண்டு பேர் மனசுலயும் காதல் வந்துடுச்சு…ஆனா எப்படி, எங்க, யார் முதலில் காதலைச் சொல்வதுங்கற தயக்கத்துல இருக்காங்க…
அடுத்தப் பகுதியில சொல்லிடுவாங்க ;)
அப்புறம் - புணர்ச்சி என்ற சொல் குறித்து காதலி நாணியதாக...
இன்றைக்கு வேண்டுமென்றால் புணர்ச்சி என்ற சொல்லின் பொருள் விளங்கி
இருக்கலாம் உங்களுக்கு. ஆனால், அந்த வயதில், இதன் பொருள் விளங்கி இருக்க
முடியாதே? நாணம் எங்கிருந்து வந்தது? நாங்கள் படிக்கும் பொழுதும்
இதையெல்லாம் படித்தோம். அப்பொழுது இது 'படுத்தி எடுத்த இலக்கண விதியாக'
மட்டும் தான் தோன்றியது. வேறு எதுவும் தோன்றவில்லை.
இன்று தெரிந்து கொண்டவற்றை வைத்துக் கொண்டு, அன்றைய தினத்தை எழுதும்
பொழுது, கொஞ்சம் செயற்கையாகத் தான் தோன்றுகிறது. கால மயக்கம்? கதை
சொல்லும் பொழுது, இத்தகைய கால மயக்கத்திற்கு இடம் கொடுக்கக் கூடாதல்லவா?
ம்ம்ம்.... சொல்லுங்கள், அடுத்து என்ன ஆயிற்று என்று!!!
நட்புடன்
நண்பன்
இதுல கால மயக்கம் என்ன இருக்குனு எனக்கு புரியல நண்பன்…
ரெண்டு பேரும் 11 ம் வகுப்பு படிக்கிறாங்க… 16 வயசுல புணர்ச்சினா என்னனு தெரியாமலா இருப்பாங்க? எனக்கு வியப்பா இருக்கு :-))))
ஒரு வேளை நாங்க படிச்சதெல்லாம் ஆண்கள் பள்ளிங்கறதால எங்களுக்கு சீக்கிரமே தெரிஞ்சிடுச்சோ? ;-)
எனக்கு இதை எழுதறதுல இருந்த/இருக்க ஒரே கஷ்டம் பொண்ணுங்க கூட படிக்காம போனதுதான்… எல்லாமே கற்பனைலதான் எழுதறேன்…
அதனால இந்தக் கதை இயல்பா இல்லைனு சொன்னா கண்டிப்பா அத ஒத்துக்குவேன்…ஏன்னா இதுல வர்ற நிகழ்வுகள் எதையும் நான் அனுபவிச்சதில்ல…
இந்த கவிதையில் கால மயக்கம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை (கோ, இது நடந்த ஆண்டு 'இது'வென எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை)பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணாக்களுக்கு இதெல்லாம் புரியாது என்றா சொல்கிறீர்கள்?இந்த காலத்து பசங்க கிட்ட பேசிப்பாருங்க. எவ்வளவு புத்திக்கூர்மை உள்ளதோ அவ்வளவு 'கேடி'த்தனமும் நிறைந்தவர்கள். காரணம் 'எக்ஸ்போஷர்' தான் !!!
எந்த ஆண்டுனு நான் குறிப்பிடலன்னாலும் என் மனசுல நான் பத்தாவது படிச்ச காலத்துல இருந்து ஆரம்பிச்சுக்கிட்டேன். அதாகப்பட்டது 1998 –ல.
ஒரு 16 வயது ஆணோ/பெண்ணோ இன்றைக்கு இந்த விசயங்களைப் புரிந்து கொள்வதற்கு வெளியில் பல எக்ஸ்போஷர் இருந்தாலும்,
அப்போ நான் பத்தாவது படிக்கும்போது நாங்கள் 'அனைத்தையும்' அறிந்து கொண்டது எங்கள் அறிவியல் ஆசிரியர் மூலமாகவேதான்.
அதனால்தான் நண்பன் கூறும்போது வியப்பாக இருக்கிறது என்றேன்.
இருபது வருடங்களுக்கு முன்பு 16 வயதில் ஒருவருக்கு தெரிந்த விசயங்களுக்கும், 10 வருடங்களுக்கு முன்பு 16 வயதில் ஒருவருக்கு தெரிந்த விசயங்களுக்கும் வேறுபாடு உண்டு!!!
(ஒரு வேளை நீங்க இதை 'கோ'வின் ஆட்டோகிராப் என நினைத்தால் அவர் தான் எங்கள் 'ஆண்கள் பள்ளியில் படித்தவர்கள் சங்கத்தின்' தலைவர் :-)))
பிரேம், பள்ளிக்கூடம் மட்டுமல்ல!!! கல்லூரிலயும் அப்படித்தான் ஆகிப்போச்சு. கல்லூரியில படிச்ச(?) 5 வருசத்துல மொத்தமா பொண்ணுங்ககிட்ட பேசினத ஒரு A4 காகிதத்துல எழுதிடலாம் :-)))) நம்ம தெறமையெல்லாம் அவ்வளவுதான் :-(
பிரேம், பள்ளிக்கூடம் மட்டுமல்ல!!! கல்லூரிலயும் அப்படித்தான் ஆகிப்போச்சு. கல்லூரியில படிச்ச(?) 5 வருசத்துல மொத்தமா பொண்ணுங்ககிட்ட பேசினத ஒரு A4 காகிதத்துல எழுதிடலாம் :-)))) நம்ம தெறமையெல்லாம் அவ்வளவுதான் :-(
உங்கள் பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் பெண்களுடன் இணைந்து படிக்கவில்லை
என்று சொல்கிறீர்கள். ஆனால், அப்போதைய 'பேபி கிளாஸ்' முதல் பொறியியற்
கல்லூரியில் பட்டம் வாங்கி வெளியே வரும் வரைக்கும், இருபாலாரும்
படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் படித்தேன்.
நிறைய பெண் நண்பர்கள் உண்டு. ஆரம்பத்திலிருந்தே அவ்வாறிருப்பதால்,
பெண்கள் மீதும் மதிப்பும், இயல்பாக பழகும் தன்மையும் கொண்டவன். நிறைய
(பெண்) நண்பர்களும் உண்டு. எப்பொழுதுமே இவர்கள் பெண்கள், அவர்கள் ஆண்கள்
என பாகுபடுத்திப் பார்த்தது கிடையாது. இது இன்னார் ஆள் என்ற விதிகளை
எல்லாம் மீறி, அனைவரிடமும் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. ஒரு வேளை ஆண்,
பெண் இருவரும் இணைந்து படித்ததால், தவறான எண்ணங்களோ, அனுமானங்களோ இல்லாது
போயிருந்திருக்கலாம்.
இன்றைய மாணவர்கள், புத்திசாலித்தனத்துடனும், கேடித்தனமும் நிறைந்தவர்கள்
என நீங்கள் இன்று கூறலாம். நாங்கள் படிக்கும் பொழுதும் அவ்வாறே
கூறினார்கள். இன்னும் பத்து வருடங்கள் கழியும் பொழுதும், ஐம்பது
வருடங்கள் கழியும் பொழுதும், இந்த வசனம் மாறப்போறதில்லை.
கால மயக்கம் என்று கூறியது, இன்று தெரிந்தவற்றை வைத்துக் கொண்டு, அன்றைய
உணர்வுகளை மதிப்பீடு செய்வதைத் தான். இது விமர்சகனுக்குத் தான் ஆகுமே
தவிர, கதை சொல்லிக்கல்ல. அதைத் தான் குறிப்பிட்டேன். ஆட்டோகிராஃப் அல்லது
அவ்வாறில்லை என்பதை நான் கணக்கில் கொள்ளவில்லை. அது தேவையுமில்லை.
ஏனென்றால், ஒரு கதை சொல்லும் பொழுது அதில், என்ன தான் புனைவாக
இருந்தாலும், ஒரு கதை சொல்லி, தன் அனுபவங்களைக் கொண்டே, அந்த புனைவை
எழுதி முடிக்க முடியுமே தவிர, வேறு வகையில் அல்ல. இதற்கு எத்தனை பெரிய
எழுத்தாளர்களும் விதி விலக்கல்ல. தன் அனுபவங்களை துணைக்கு வைத்துக்
கொண்டு எழுதும் பொழுது, அதில் ஒரு ஆட்டோகிராஃப்-பும் வந்து விடக்கூடிய
வாய்ப்புகள் அதிகம் உண்டு.
நட்புடன்
நண்பன்
//
அப்ப கலைப்படம் மாதிரி ஆகிடுச்சு உம்ம கல்லூரி வாழ்க்கைன்னு சொல்லும் :-)
நாங்கள்லாம் இந்த பொம்பளைப் பசங்களோட 'டார்ச்சர்' தாங்காம ஒழுங்காவே படிக்கலை//
படிப்பு வரலைன்னு தைரியமா சொல்லாம அவுக மே பழியைப் போடுறங்களே ஆசிப்... :)
நான் பள்ளி, கல்லூரி எல்லாமே இருபாலர் முறையில்தான் படித்தேன்...அவர்களிடமிருந்து நிறைய நிறைய நிறைய கற்றுக் கொண்டேன் கல்லூரிப் பாடத்தை விடவும்.. :)
கலைப்படம் இல்ல அண்ணாச்சி!
அது கலகல படம்! கல்லூரி கதையெல்லாம் அப்புறம் எழுதறேன் :-)
நீங்க படிக்காததுக்கு அவங்க மேல பழியா??? ;-)
உங்கள் பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் பெண்களுடன் இணைந்து படிக்கவில்லை
என்று சொல்கிறீர்கள். ஆனால், அப்போதைய 'பேபி கிளாஸ்' முதல் பொறியியற்
கல்லூரியில் பட்டம் வாங்கி வெளியே வரும் வரைக்கும், இருபாலாரும்
படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் படித்தேன்.
ஐந்தாம் வகுப்புவரை இருபாலர் பள்ளி.
6 முதல் 12 வரை ஆண்கள் பள்ளி.
கல்லூரி இருபாலர் கல்லூரிதான். ஆனால் நான்தான் அவர்களோடு இயல்பாக பழகியதில்லை.நிறைய பெண் நண்பர்கள் உண்டு. ஆரம்பத்திலிருந்தே அவ்வாறிருப்பதால்,
பெண்கள் மீதும் மதிப்பும், இயல்பாக பழகும் தன்மையும் கொண்டவன். நிறைய
(பெண்) நண்பர்களும் உண்டு. எப்பொழுதுமே இவர்கள் பெண்கள், அவர்கள் ஆண்கள்
என பாகுபடுத்திப் பார்த்தது கிடையாது. இது இன்னார் ஆள் என்ற விதிகளை
எல்லாம் மீறி, அனைவரிடமும் பழகும் வாய்ப்பும் கிடைத்தது.
ஒரு வேளை ஆண்,
பெண் இருவரும் இணைந்து படித்ததால், தவறான எண்ணங்களோ, அனுமானங்களோ இல்லாது
போயிருந்திருக்கலாம்.
தவறான எண்ணங்கள் என்று எதனைக் குறிப்பிடுகிறீர்கள் நண்பன்?
இன்றைய மாணவர்கள், புத்திசாலித்தனத்துடனும், கேடித்தனமும் நிறைந்தவர்கள்
என நீங்கள் இன்று கூறலாம். நாங்கள் படிக்கும் பொழுதும் அவ்வாறே
கூறினார்கள். இன்னும் பத்து வருடங்கள் கழியும் பொழுதும், ஐம்பது
வருடங்கள் கழியும் பொழுதும், இந்த வசனம் மாறப்போறதில்லை.
கால மயக்கம் என்று கூறியது, இன்று தெரிந்தவற்றை வைத்துக் கொண்டு, அன்றைய
உணர்வுகளை மதிப்பீடு செய்வதைத் தான். இது விமர்சகனுக்குத் தான் ஆகுமே
தவிர, கதை சொல்லிக்கல்ல. அதைத் தான் குறிப்பிட்டேன்.
நானும் அதையேதான் கூறுகிறேன். புணர்ச்சி என்பதற்கு 16 வயதில் நான் என்ன அர்த்தப்படுத்திக்கொண்டிருந்தேனோ அதே உணர்வைத்தான் அந்தக் கதையில் அவன் உணர்வதாக சொல்லியிருக்கிறேன். அவளின் உணர்வு என் கற்பனைதான். அதனால் காலமயக்கம் என்பதை மறுக்கிறேன். ஒரு பெண்ணின் உணர்வை ஆணாக இருந்துகொண்டு எழுதுவதால் பால்மயக்கம் என்று சொல்லலாம். ஏற்கனவே குறிப்பிட்டபடி பெண்களோடு இயல்பாக பழகியதில்லை என்பதால் நான் ஆண் அவள் பெண் என்கிற உணர்வில்தான் இதையும் எழுதியிருக்கிறேன். காலப்போக்கில் மாறுமா என்று பார்க்கலாம் :-)
ஆட்டோகிராஃப் அல்லது
அவ்வாறில்லை என்பதை நான் கணக்கில் கொள்ளவில்லை. அது தேவையுமில்லை.
ஏனென்றால், ஒரு கதை சொல்லும் பொழுது அதில், என்ன தான் புனைவாக
இருந்தாலும், ஒரு கதை சொல்லி, தன் அனுபவங்களைக் கொண்டே, அந்த புனைவை
எழுதி முடிக்க முடியுமே தவிர, வேறு வகையில் அல்ல. இதற்கு எத்தனை பெரிய
எழுத்தாளர்களும் விதி விலக்கல்ல. தன் அனுபவங்களை துணைக்கு வைத்துக்
கொண்டு எழுதும் பொழுது, அதில் ஒரு ஆட்டோகிராஃப்-பும் வந்து விடக்கூடிய
வாய்ப்புகள் அதிகம் உண்டு.
படிப்பு வரலைன்னு தைரியமா சொல்லாம அவுக மே பழியைப் போடுறங்களே ஆசிப்... :)
நான் பள்ளி, கல்லூரி எல்லாமே இருபாலர் முறையில்தான் படித்தேன்...அவர்களிடமிருந்து நிறைய நிறைய நிறைய கற்றுக் கொண்டேன் கல்லூரிப் பாடத்தை விடவும்.. :)
~ காதல் கூடம் – நான்காம் பகுதி ~
எல்லோரும் குடையுடன் வருகையில்
நீ மட்டும் மழையுடன் வரும் மழைக்காலமது.
வயலுக்கு உரம் தெளிக்கும் பெண்ணைப் போல
நிலமெங்கும் நீர்த்துளிகளை
சாரலென தூவிக் கொண்டிருக்கிறது மேகம்.
கைக்குட்டையை தலைக்கு(ட்)டையாக்கி
நீர் வழியும் முகத்தோடு பாலம் நெருங்குகிறேன்.
பாலிதீன் உடையணிந்த பூங்கொத்து போல,
மழையங்கியில் ஒரு மலர்ச்செடியாய்,
மரத்தடியில் நின்றிருக்கிறாய்.
புடவை முந்தானையால்
குழந்தையைப் போர்த்தும் தாயென,
கிளைகளால் உன்னைப் போர்த்தி நிற்கிறது மரம்.
'மழையிலும் காத்திருக்க வேண்டுமா?'
பார்வையில் சிறு கோபம் கலக்கிறேன்.
'மழையில்லை, வெறும் சாரல்தான்' எனும் பொருளோடு
என் கோபத்தையும் புன்னகையோடு வரவேற்கிறாய்.
சாரலில் கரைந்து நிலத்தில் விழுந்து தெறிக்கிறது என் கோபம்.
குளித்துக்கொண்டிருந்த மிதிவண்டிக்கு
தலை துவட்டிவிட்டு ஏறிக்கொண்டாய்.
பாலத்தில் நீர்க்கம்பளம் விரித்து
நம்மை அழைக்கிறது மழை.
மழைத்துளிகளின் ஸ்பரிசத்தில் நானும்
துளியொலிகளின் இசையில் நீயும்
நனைந்து கொள்கிறோம்.
புன்னகை கோர்த்தபடி சாரலோடு துவங்குகிறது இன்றைய நம் பயணம்.
நாம் வகுப்பறை நுழையும் வரை
ஒரு மெல்லிசையாய் வழிந்த சாரல்
சில பொழுதில் பெரு மழையாய் மாறுகிறது.
ஈரமானத் தலையை
ஈரமானக் கைக்குட்டை கொண்டே
துவட்டிக் கொள்கிறேன்.
உணவுக் கூடை மூடும்
பூத்துண்டை நீட்டுகிறாய்.
வாங்கிக் கொண்டு என் இடம் அடைகிறேன்.
முதல் பாடவேளை - இயற்பியல் - துவங்குகிறது.
நொடிக்கொரு முறை
தலை துவட்டினேனா என
திரும்பி திரும்பிப் பார்க்கிறாய்.
அதற்காகவே
துவட்டாமல் வைத்திருந்த
துண்டுக்கு நன்றி.
மழையோடு காற்றும் கைகோர்க்க
நட்டு வைத்த மதயானைகளென
மரங்கள் திமிருகின்றன.
மழையின் காரணமாக முதல் பாடவேளையோடு
பள்ளிக்கு விடுமுறை விடப் படுகிறது.
எல்லோரும் வீடு கிளம்ப,
ஏடு திறந்து எழுதுபவனைப் போல
நண்பர்களை விரட்டுகிறேன்…
போக மனமில்லாமல்!
என் குறிப்பறிந்தவளாய்
புத்தகம் விரித்து படிப்பவளைப் போல
தோழிகளைத் துரத்துகிறாய்.
முதல் தளத்தில் இருந்த ஓட்டுக்கூடம் நம் வகுப்பு.
கழுத்தளவு உயரத்தில் சுற்றுச்சுவர்.
நட்பு எல்லாம் விலகிப் போக
மழை மட்டுமே சுற்றம்.
ஒரு கண்ணாடிக்கூடு போல
எல்லாத் திசையிலும் நம்மை சூழ்ந்து நிற்கிறது மழை.
மழைக்கூட்டில் குடியிருக்கும்
இணைப் பறவைகளென
வார்த்தைச் சிறகுகள் ஒடுக்கி
மௌனமாய் இருக்கிறோம்.
பேனா மூடுகிறேன் நான்.
புத்தகம் மூடுகிறாய் நீ.
முதலில் சிறகடிக்க ஆவலாகிறேன்.
உன்னை நெருங்கி துண்டைத் திருப்பிக் கொடுத்து,
நினைத்ததை சொல்வதற்குள்,
வார்த்தை வந்து விழுகிறது "இயற்பியல் புத்தகம் இருக்கா?"
என் தவிப்புகளையெல்லாம் ரசித்துக்கொண்டவள்
சிரித்தபடி புத்தகம் நீட்டினாய்.
என் இயல்பை நொந்தபடி
இயற்பியல் புத்தகத்தோடு
என் இடம் திரும்புகிறேன்.
காலை நடத்தியப் பாடம் விரிக்கிறேன்.
பக்க எண் 143 எனக் காட்ட,
பக்க எண்ணுக்குப் பக்கத்தில்
உன் பெயர் எழுதுகிறேன்.
அன்று நடத்தியது புரியாததால்
மறுபடி படித்ததாய்ச் சொல்லிப் புத்தகத்தை
உன்னிடமேத் திருப்பித் தருகிறேன்.
பாடநூலில் நான்
நூல் விட
மனம் பட்டமாய்ப் பறக்கிறது.
முகம் மழையைப் பார்த்துக் கொண்டிருக்க
விழி உன்னை நோக்கியபடியே இருந்தது.
புத்தகம் திறக்கப்படாமலே பைக்குள் நுழைய
சிறகொடிந்து மீண்டும் அமைதியாகிறேன் நான்.
அமைதியிழந்தவளாய்
உணவுக்கூடை தூக்கிக்கொண்டு
என்னிடம் வந்து அமர்ந்தாய்.
முதன்முறையாய்ப் பகிர்ந்து உண்ணுகிறோம்.
'குழம்பு எப்படி?' என்கிறாய்.
'சுவையாயிருக்கிறது' என்கிறேன்.
'நாந்தான் வெங்காயம் உரிச்சேன்' என
முழுச்சமையலும் செய்தவள் போல பெருமை பட்டுக்கொள்கிறாய்.
வெங்காயம் துழாவுகின்றன என் விரல்கள்.
எவருமில்லாததால் தயக்கம் நீங்கியவளாய்
சாரலெனத் துவங்கி பெருமழையெனப் பேசுகிறாய்.
தட்டுத்தடுமாறி நடை பழகும் மழலை போல
உன்னிடம் உரை பழகுகிறேன்.
அத்தனை நாளும் தேக்கிவைத்த நம் எண்ணமேகங்கள்
எல்லாம் ஒரே நாளில் உடைந்து மழையெனப் பொழிந்தன.
அன்று மாலை மழை நிற்கும் வரை பேசினோம்.
நின்ற பிறகும் பேசினோம்.
வீடு திரும்புகையில்
உன்னிடம் நான் பேசிய வார்த்தைகள் அனைத்தும் மறந்து போனாலும்,
நீ உச்சரித்த ஒவ்வொரு 'ம்' மும் நினைவில் நின்றது.
அன்று இரவு முழுவதும்
அந்த 143 – ஆம் பக்கம் கனவில் படபடத்தபடியே இருக்க,
அடுத்தநாள் உனக்கு முன்னே வந்து பாலத்தில் காத்திருக்கிறேன்.
நிதானமாய் வந்தவள் நின்று புத்தகம் நீட்டி சொன்னாய் -
'நேத்தே முதல் பக்கத்திலிருந்து படிச்சிருந்தா எல்லாம் புரிஞ்சிருக்கும்'
முதல் பக்கம் விரிக்கிறேன்.
மேலே மையமாய் எழுதியிருந்தாய் 'அருள்முருகன் துணை!'
படித்துமுடிக்குமுன் நாணம் வந்தவளாய்
புத்தகம்பிடுங்கி மிதிவண்டியில் பறக்கிறாய்.
தொட்டுவிடாமல் துரத்துகிறேன்.
காதல் மனத்தில் துவங்கியது முதல் 'பருவ' மழை!
~கோ~
இன்னைக்கு (நிலைத்தகவல்) ஸ்டேடஸ் மெசேஜ் கவுஜ :)
நீ – ரோஜா.
நான் – பனித்துளி.
சாதி – சூரியன்.
நீ தலநான் தறுதலதப்பிக்குமா நாடு :)
கண்ணே ராணி
காதல் தந்த
கண்ணீரா நீ? :-)
இது என்னோட சைடு கவுஜ … எதிர் கவுஜ னு யாராவது சொல்லிடப் போறாங்க ;-)
கோ கோ னு சொல்றதாவது?
கவுஜர்கள்
கலக்குனா தான
கும்மி கலகலக்கும்?
(நல்லாப் பாருங்க இது கூட கவுஜ தான் ;-) )
அம்மி போலரைத்தாலும்
கும்மியாகப் போகுமென்று
கம்மியான வார்த்தையில் சொன்னால்
அது கவுஜையன்றோ?
கும்மியென்பார்
அம்மியென்பார்
கும்மாதவர் உயிரில்லா
மம்மியென்பார்.
அவரே கும்மி-கவுஜர்.
"உறங்கி எழும்முதல் நொடியிலேயேநினைவுக்கு வருகிறதுஉன் முகம்'
உறக்கத்தில்? :-)
ஜெசிலா தலைப்பு எடுத்து கொடுக்க,
ஆசிப் அண்ணாச்சி உசுப்பேத்தி விட
செல்வேந்திரன் மயானக்குரலெழுப்ப
( இப்படியெல்லாம் நான் ஓவர்பில்டப் கொடுக்க )
இந்த மொட்டைத்துவ கவுஜதான்
வெள்ளிக்கிழம சிறப்பு கவுஜ
யார் எழுதிய கவிதை.
'நேற்று'கள் இல்லாத ஒரு நாளில்
என்னைப் பற்றி நானெழுதிய கவிதையொன்று
நேற்று என்னை சந்திக்க
என்வாசல் வந்திருந்தது.
இல்லாமல் போன என்னைப் பார்த்து
'இருக்கிறாயா?' என்றது கேள்வியெழுப்ப,
'இருக்கிறேன்' என்று பொய் சொல்லி
என் இருப்பை உறுதி செய்கிறேன்.
பார்த்தவர்கள் சிரித்திருக்கக்கூடும்.
என்னால் நான் தொலைந்தேன் என்று
பாதி உண்மையை சொல்லவிடாமல் தடுக்கிறது
இருண்ட இதயத்தின் சூன்யகால வெம்மை.
நான்தான் என்னைத் தொலைத்தேன் என்று
மீதி உண்மையை மறைக்கத் தூண்டுகிறது
அகாலவெளி பரிமாணங்களின் உள்வெளிப்பயணம்.
தொலைத்த நானும்,
தொலைந்த நானும்,
தொலைந்த்து விட
எந்த 'என்'னோடு பேசிக்கொண்டிருக்கிறது இந்த கவிதை?
எழுதிய 'நான்'கள் இல்லாமல் போனபின்
இருக்கும் இது மட்டும்,
யார் (எந்த நான்) எழுதிய கவிதை?
கணக்கம்பட்டியார் கதை! ( சற்றே பெரிய சிறுகதை (முயற்சி) )
கொஞ்சங்கூட விடியாத நல்ல இருட்டு. இன்னும் கோழி கூட கூப்புட்ல. வெங்காயத் தோட்டத்துல தண்ணியடைக்கறதுக்காவ தெக்கியூர் ரோட்ல சைக்கிள்ல பறந்துகிட்டு இருந்தாரு கிட்டாஞா.சாமியாடித் தோட்டத்துக்கிட்ட மேக்கத் திரும்பும்போதுதான் – அந்நேரத்துல தெக்க இருந்து யாரோ வெக்கு வெக்குனு ஓடியார மாதிரி இருந்துது. வர்றவங்க என்னமோ கத்திகிட்டே வாராப்ல இருந்துது. காதோட சேத்து துண்ட உருமா கட்டிருந்ததால கிட்டாஞாவுக்கு ஒரு சத்தமும் கேக்கல. ஏதாவது கெட்டது நடந்து போச்சோனு வெசனப்பட்டவரு துண்ட அவுத்துக்கிட்டே மேக்கத் திரும்பாம தெக்கையே விட்டாரு சைக்கிள.
'அது யாரு கிட்டாஞாவா? ஆஞா*… கணக்கம்பட்டியாரு ஊர்ல இருக்காரா?' ஓட்டத்துலையே சத்தம் போட்டுகிட்டு வந்தது வேற யாருமில்ல. நம்ம வடவத்தூர் பால்காரன் பொண்டாட்டிதான். அவளும் ஓடியார இவரும் சைக்கிள மிதிக்க ரெண்டு பேரும் கிட்டத்துல வந்துட்டாங்க.
'இருக்காப்ல… இருக்காப்ல… என்ன சமாசாரம்… நீ இந்நேரத்துல ஒத்தைல வர்றவ? வூட்ல ஆம்பளையாளு இல்லியா'
'அதையேன் ஆஞா கேக்குற… அந்தாளுக்கு ராத்திரில இருந்து வவுத்துநோவு… அனத்திகிட்டே இருக்குது… சுக்குத்தண்ணி கொடுத்தும் ஒன்னும் கேக்கல.. இன்னும் பால்கறக்கவும் கெளம்பாம வவுத்தப் புடிச்சுக்கிட்டு படுத்துருக்கு… அதான் கணக்கம்பட்டியாருகிட்ட துண்ணூறு* வாங்கியார சொன்னுச்சு… குறுக்கால ஓடியாரேன்… என்ன செத்த அவர் வூட்ல எறக்கி வுட்றீயா' – மூச்சுவுடாம பொலம்புறா அவ.
'ஏறு ஏறு இதுக்குதான் இந்தக் கோலத்துல ஓடி வந்தவளா.. நான் என்னமோ ஏதோனு தவுதாயப்* பட்டுட்டேன்' அவள ஏத்திகிட்டு கணக்கம்ப்பட்டியாரு வூட்டுக்கு சைக்கிள மிதிச்சாரு கிட்டாஞா.
எருமப்பட்டிக்கு தெக்க இருந்து வலையப்பட்டிக்கு வடக்க வரைக்கும் கணக்கம்பட்டியாருன்னா தெரியாதவங்க இருக்க மாட்டாங்க. அவரு பேரு அங்கமுத்துப்புள்ள னு ஊர்ல கொஞ்சம் பெருசுங்களுக்குதான் தெரியும். கணக்கம்பட்டியில இருந்து இங்க பொழைக்க வந்ததால கணக்கம்பட்டியாருனு பேராகிப்போச்சு. அந்தக்காலத்துல அவரு, கிட்டாஞா, கங்காணியெல்லாம் ஒரு சோட்டு. கணக்கம்பட்டியாருக்கு கொலதெய்வமெல்லாம் அவங்கூரு அங்காயிதான்னாலும் முருகனதான் மொதல்ல கும்புடுவாரு. காலங்காத்தால குளிச்சி முடிச்சு வந்தாருன்னா குறி கேக்க, நல்ல நாள் குறிச்சுட்டு போவ, துண்ணூறு மந்திரிச்சு வாங்கிட்டுப் போறதுக்குன்னு ஒரு கூட்டம் நிக்கும். அவருக்கும் சோசியம் கீசியமெல்லாம் எதுவும் தெரியாது. பஞ்சாங்கத்துல நல்ல நாளு பாத்து சொல்லுவாரு. சோழி போட்டு முடிவு சொல்லுவாரு. முருகனக் கும்புட்டு கொஞ்சம் துண்ணூறு அள்ளிக் கொடுப்பாரு. அவ்வளவுதான். ஆனா அவரு சொல்ற நாளு கெழமையெல்லாம் நல்லதாதான் நடந்திருக்கு. சோழி போட்டு முடிவு சொன்னாருன்னா பத்துக்கு எட்டு பெசகாம நடந்திரும். அவரு மந்திரிச்சத் துண்ணூற பூசிக்கிட்டு கொஞ்சம் வாயில போட்டுகிட்டா எல்லா நோவும் போன எடந்தெரியாம ஓடீரும். அப்பிடி ஒரு ராசி.
எப்பவாது மவளப் பாக்கனும்னு இருந்தா பொனாசிப்பட்டிக்கு சொல்லாம கொள்ளாம ஓடிருவாரு. நல்ல வேள அன்னைக்கு கணக்கம்பட்டியாரு ஊர்லதான் இருந்தாரு.
வாசல்லயே கட்டுல்ல குறுக்கிகிட்டுப் படுத்திருந்தவரு சைக்கிளு சத்தம் கேட்டு நாய் கொலைக்கவும் எந்திரிச்சுக்கிட்டாரு. துண்ணூறுக்கு இந்தமாதிரி நேரங்கெட்ட நேரத்துல அடிக்கொருதரம் ஆளுங்க வர்றதுதான். பால்காரன் பொண்டாட்டிய பாத்ததும் 'யாரு பால்காரன் பொண்டாட்டியா? ஓம்புருசனுக்குன்னுதான் வவுத்துநோவு வரம் வாங்கிட்டு வந்திருக்குமே' ன்னு சிரிச்சுகிட்டே கேணி மோட்டுக்குப் போயிட்டாரு. எந்நேரமா இருந்தாலும் அவரு குளிச்சிட்டு வந்துதான் துண்ணூறு மந்திரிக்கிறது. இந்நேரத்துல தொட்டித்தண்ணி சிலீர்னு இருக்குந்தான். ஆனா அவரு குளிக்காம துண்ணூறு அள்ளித் தர்றதில்ல. வேட்டிய அவுத்துட்டு துண்ட கட்டிகிட்டு தொட்டித்தண்ணிய மூனு வாளி மொண்டு தலையோட ஊத்திக்கிட்டு நிமுசத்துல வந்து சேந்துட்டாரு. மொதல்ல துண்ட அவுத்து இடுக்குல இறுக்கி துண்ணூற அள்ளி அவரு பூசிக்கிட்டதும், அவரப் பாக்க கோயில் பூசாரி கணக்காதான் இருந்துச்சு. சாயம்போன முருகன் படத்துக்கு முன்னாடி கையெடுத்து கும்பிட்டவரு 'இந்தப் பூசத்துக்கு பழனி போவும்போது புது படம் வாங்கியாரனும்'னு நெனச்சுக்கிட்டே ஒரு முருகன் பாட்ட மனசுக்குள்ள பாடுனாரு. பயபத்தியோட கொஞ்சம் துண்ணூற அள்ளி அவகிட்ட நீட்டுனதும், அத வாங்கி முந்தியில முடிஞ்சுகிட்டு பால்காரன் பொண்டாட்டியும் கெளம்பிட்டா. கிட்டாஞாவும் வெங்காயத்தோட்டத்துக்கு கிளம்பறதையும் பாத்துகிட்டே மனசுக்குள்ள, 'முருகா பால்காரனுக்கு நோவு கொணமாவனும்'னு வேண்டிகிட்டு கணக்கம்பட்டியாரும் டீத்தண்ணி வைக்க போயிட்டாரு. இன்னும் கோழி கூப்புட்லன்னாலும் அன்னைக்குப் பொழுது கணக்கம்ப்பட்டியாருக்கு விடிஞ்சிடுச்சுனுதான் சொல்லனும். முருகனக் கும்பிட்டு துண்ணூறு பூசிட்டா அவருக்கு பொழுது விடிஞ்சிருச்சுன்னு அர்த்தம்.
அன்னைக்குக் காத்தால ஆறுமுவம் டீக்கடையில பெருசுங்க எல்லாம் நாயம் பேசிக்கிட்டு இருக்கும்போது ரெண்டாவது வட்டம் பால் ஊத்த வந்தான் வடவத்தூர்க்காரன்.
'ஏய் என்னப்பா மொத சாமந்தான் ஒனக்கு வவுத்துநோவுன்னு ஒம்பொண்டாட்டி கணக்கம்பட்டியாருகிட்ட துண்ணூறு வாங்கிட்டுப் போனா… நீ என்னடான்னா 'எனக்கென்னா நோவு எனக்கேது சாவு'ங்கற கணக்கா பாலத்தூக்கிகிட்டு சைக்கிள்ல சுத்துறவன்' – கேட்டது கிட்டாஞாதான்.
'கிட்டாஞா…. கணக்கம்பட்டியாரு துண்ணூறு உள்ள போனதுக்கப்புறமும் வவுத்து நோவு வவுத்துல தங்குமா? நோவுக்கே நோவு கண்டிருக்குமில்ல?' சிரிச்சுக்கிட்டே போயிட்டான் பால்காரன்.
கணக்கம்பட்டியார இப்படி யாராவது ஒசத்தியா* சொல்லிட்டா ஒடனே கிட்டாஞாவுக்கு உச்சி குளுந்துரும்.
பால்காரன் போனதும் கிட்டாஞா ஆறுமுவத்துகிட்ட சொன்னாரு – 'கணக்கம்பட்டியான்கிட்ட துண்ணூறு வாங்கிப் பூசுனா பழனி மல முருகங்கையால பூசிக்கிட்ட மாதிரிடா'
கணக்கம்பட்டியார் மேல எல்லாருக்கும் எப்பிடி இப்படி ஒரு நம்பிக்கனு ஆறுமுவத்துக்கு ஆச்சர்யமா இருக்கும். அவன் இந்தூருக்கு வந்து கட போட்டு ஏழு வருசந்தான் ஆச்சு. 'ஏன் ஆஞா கணக்கம்பட்டியாருக்கு நெசமாலுமே அருளிருக்கா?' அவன் அப்படி கேட்டதும் கிட்டாஞா பழைய கதைய எடுத்து விட்டாரு. அது பத்து வருசத்துக்கு முந்தி நடந்தது.
பத்து வருசத்துக்கு முந்தி ஒரு நாளு மாரியாயிக் கோயிலுக்கு கும்பாயிசேகம் பண்ணீட்றதுன்னு கோயில்ல வச்சு ஊர் பெருசுங்க முடிவு செஞ்சாங்க.ஆளாளுக்கு இன்னின்ன வேலைனு போனமாசம் செத்துப்போன கந்தசாமிதான் சொல்லிக்கிட்டு வந்தாரு. கிட்டாஞாவுக்கு ராமக்கல் ஐயனப் பாத்து பேசியாரப் பொறுப்பக் கொடுத்திருந்தாங்க. கணக்கம்பட்டியார வரவு செலவ பாத்துக்க சொல்லிருந்துது.மக்யா நாளே*, ராமக்கல்லுக்கு ஐயனப் பாக்கப் போன கிட்டாஞா சித்திர மாசம் பத்தாந்தேதினு நாள் குறிச்சுகிட்டு வந்துட்டாரு. வளர்பெறையில வெள்ளிக்கிழமையா அமஞ்சது நல்ல அம்சமுன்னு ஊராளுங்களுக்கெல்லாம் சந்தோசம்.ஆனா கணக்கம்பட்டியாருக்கு அந்த நாள சொன்னதும் சுருக்குனு ஆகிப்போச்சு. ஏன்னா அதுக்கும் ஆறு வருசத்துக்கு முந்தி சித்திர மாசம் இதே ரெண்டாவது வெள்ளிக்கிழம தான் பிடாரியம்மங் கோயில் திருநாள்ல ஒரு கெட்டது நடந்துது. பங்காளிங்களுக்குள்ள இருந்த வாப்பேச்சு சண்ட முத்தி வெட்டுக் குத்துனு ஏழு உசுர இந்த ஊரு காவு கொடுத்துது அன்னைக்குதான். அதனாலயே கணக்கம்பட்டியாரு அந்த நாள கேட்டதும் கிட்டாஞாகிட்ட மெல்ல விசயத்த சொல்லிட்டாரு. அன்னைக்கு சாய்ங்காலமே கிட்டாஞா ராமக்கல்லுக்குப் போய் அந்த ஐயனையே ஊருக்கு இழுத்துட்டு வந்துட்டாரு. கோயில் திண்ணையிலயே இந்த சமாசாரத்தப் பேசி முடிவு பண்ணீர்றதுன்னு கூட்டம் போட்டிருந்தாங்க.
"இதோ பாருங்கோ… பொதுவாவே சித்திரை மாசம் அம்பாளுக்கு உகந்த நாள்… கும்பாபிஷேகத்துக்கு உகந்த நட்ஷத்திரம் வெள்ளிக்கிழமையிலயே வர்றதும் ரொம்ப விஷேஷமானது. வளர்பிறையும்கூட" வந்திருந்த ஐயன், கிட்டாஞாகிட்ட சொன்னதையே எல்லாருக்கும் கேக்குறாப்ல திரும்பி ஒருதரம் சத்தமா சொன்னாரு.
"அதில்ல சாமி… எங்க ஊருல சித்திர மாசம் ரெண்டாவது வெள்ளிக்கிழம ஏற்கனவே ஒரு கெட்டது நடந்து போச்சு…அதே நாள சாமி சொல்லவுந்தான்…" – இழுத்தாரு கிட்டாஞா.
அது வரைக்கும் பேசாம இருந்த கணக்கம்பட்டியாரு சித்திரையிலேயே மொத வெள்ளிக்கிழம நல்லாருக்குதான்னு பாக்கலாம்னு யோசனை சொன்னாரு.
சொல்லிக்கிட்டே பைக்குள்ள இருந்து சோழிய எடுத்து கைக்குள்ள வச்சி கண்ண மூடி நடுநெத்தில வச்சி என்னமோ முணுமுணுத்துட்டு, சோழிய கீழ விசுறுனாரு.
பனெண்டு சோழில பதினொன்னு மூடிருந்துது. ஒன்னு மட்டும் தெறந்திருந்தது.
'மொத மாசம் சித்திர தான் தாயே நாங்களும் பாக்குறோம்'னு சொல்லிகிட்டே அஞ்ச கழிச்சுட்டு ஏழு சோழிய மட்டும் கையில எடுத்தாரு.
'மாசத்த சொன்னவ கெழமையும் சொல்லும்மா' னு மறுபடியும் ஏழ விசுறுனாரு. அஞ்சு தெறந்திருந்துது. ரெண்டு மூடிருந்துது.
'அஞ்சாங்கெழமதான் ஆத்தாளும் சொல்றா' னு எல்லாரையும் பாத்து சொல்லிட்டு கடசியா நாலு சோழிய மட்டும் கையில எடுத்துகிட்டு
'எந்த வாரம்னும் ஆத்தாளையே கேட்ருவோம்'னு நாலையும் விசுறுனாரு. எல்லாரும் சோழி போன எடத்தையே எக்கிகிட்டு பாத்தாங்க.
அங்க ஒரு சோழி தெறந்திருந்துது. மூனு மூடிருந்துது. அவரு சொல்லாமயே எல்லாருக்கும் புரிஞ்சிருச்சு. எல்லாரும் ஐயனப் பாத்தாங்க. அவரு பஞ்சாங்கத்த தொறந்தவரு மொத வெள்ளிக்கிழம கரிநாளு அது ஒகந்த நாளு இல்லனு கைய விரிச்சிட்டாரு. பாத்தவங்களுக்கெல்லாம் மொகம் வாடிருச்சு. என்னப் பண்றதுன்னு யாருக்கும் புரியல. கணக்கம்பட்டியாரே சொன்னாரு 'கரிநாளெல்லாம் சூரியங்கணக்குதான், நாம உதயத்துக்கு முன்னாடியே கும்பாசியேகத்த முடிச்சிரலாம்'னு அவரு சொல்லி வாய மூட்றதுக்குள்ள பழனி மூலையில கவுளி* சத்தம் கேட்டுச்சு. அந்தப் பக்கம் திரும்பி பாத்து கன்னத்துல போட்டுக்கிட்டாரு கிட்டாஞா. நல்ல சகுனம்னு எல்லாருக்கும் தெரியும் ஆனா ஐயன் அந்த தேதிக்கு ஒத்துக்கலயே. ரெண்டாவது வெள்ளின்னா தான் வர்றதாகவும் இல்லன்னா அவங்களயே கும்பாசியேகம் நடத்திக்க சொல்லிட்டுப் போயிட்டாரு. அவரு போனதுக்கப்புறம் கோயில்ல ரெண்டு பக்கமும் பேசறதுக்கு ஆளுங்க இருந்தாங்க.
'ஐயன் சொல்றபடியே அவனக் கூப்ட்டே பண்ணிரலாம்…சாமி சமாசாரமெல்லாம் அவனுக்குத் தெரியாததா நமக்குத் தெரிஞ்சிரப் போவுது?'
'ஏன் ஐயனக் கூப்பிட்டுதான் பண்ணனும்னு எதாவது கணக்கு இருக்குதா? தெக்கியூர் கோயில்ல நம்மாளுங்கதான பண்ணாங்க?'
'நாளு நல்லா இல்லைன்னா நாம என்னைய்யா பண்ண முடியும்? ரெண்டாவது வெள்ளிக்கிழமன்னு முடிவு பண்ணுவோம் அதுக்கு மேல ஆத்தா விட்ட வழி'
'அதே ஆத்தா விட்ட வழியில மொத வெள்ளிக்கிழம நடத்த வேண்டியதுதானா? கும்பாயிசேகம் நம்மூர்க்கோயிலுக்கு! இதுல நம்மூர்க் காரனவிட அசலூர்க்காரன் சொல்றத கேக்கனுமாங்கறேன்'
'யாருப்பா அது? கணக்கம்பட்டியான் நம்மூரா? அவனும் அசலூர்ல இருந்து பொழைக்க வந்தவந்தானப்பா' – பின்னாடி இருந்து எவனோ ஒருத்தன் இப்படி சொன்னதும் அதுக்கப்புறம் யாரும் பேசல.
அதுவரைக்கும் கணக்கம்பட்டியார அசலூர்க்காரனா யாரும் பாத்ததில்ல. அந்த சொல்லு வந்தபின்னாடி யாரும் எதுவும் பேசாம இருக்கவும் எல்லாருமே அப்பிடிதான் இவ்வளவுநாளா நெனைச்சிருக்காங்கன்னு கிட்டாஞாவுக்கு கோவம் வந்துருச்சு.
'எவண்டா அவன் கணக்கம்பட்டியான பொழைக்க வந்தவன்னு சொன்னது? நாளைக்கே ஒங்களுக்கு ஒரு நோக்காடுன்னா அவன் வீட்டுக்குதாண்டா வரணும் மசுராண்டிகளா. நீங்க என்னைக்கு வேணா கும்பாயிசேகம் நடத்திக்கோங்க..எங்கள ஆள விடுங்க' னு கோவமா கத்திட்டு கணக்கம்பட்டியானையும் இழுத்துகிட்டு போயிட்டாரு.
அதுக்கப்புறம் ஐயன் சொன்ன மாதிரியே சித்திர மாசம் ரெண்டாவது வெள்ளியே கும்பாயிசேகம் நடத்தறதுனு முடிவு பண்ணி வேலையெல்லாம் ரொம்ப வெரசா* நடந்துது. நாள் குறிச்சதுல இருந்து ஊரே கவுச்சி* தொடாம சுத்தபத்தமா இருந்துதுன்னுதான் சொல்லனும். வெசாலக்கெழம ராத்திரியே ஐயனுங்க வந்து அவங்க வேலைய செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. கும்பாயிசேகமும் நல்லபடியா முடிஞ்சுது. ஆனா செத்த நேரத்துலையே கோயிலுக்குள்ள ரைட்டுக்கு இழுத்திருந்த ஒயரு அறுந்து வுழுந்து ஈரத்துல நின்னவங்க பதினேழு பேரு கட்டையாப் போயிட்டாங்க. ராமக்கல்லாசுபத்திரிக்கு கொண்டுபோயும் இன்னும் மூனு உசுரு முடிஞ்சிருச்சு. மொத்தமா இருவது பேர காவு வாங்கிட்டா மாரியாயி. அதுக்கப்புறம் ஒரு வருசம் கழிச்சு கணக்கம்பட்டியாரு குறிச்சு கொடுத்த தேதியிலதான் மறுபடியும் கும்பாயிசேகம் நல்ல விதமா நடந்து முடிஞ்சது. அப்போதான் ஊராளுங்களுக்கெல்லாம் கணக்கம்பட்டியான் மகிம புரிஞ்சுதுங்கறது கிட்டாஞாவோட கணக்கு.
அந்த வருசம் இன்னொன்னும் நடந்துச்சு. கிட்டாஞா மவளுக்கு பொட்டபுள்ள பொறந்து மூனு மாசம் இருக்கும்போது ஓயாம ஒரு ராத்திரி முச்சூடும்* அழுதுகிட்டே இருந்துது. அவரு பொண்டாட்டியும், மவளும் வசம்ப தேச்சுப் பாக்குறாங்க, புள்ள மருந்த சங்குல ஊத்தி ஊத்தி பாக்குறாங்க. அது அழுவறதுக்கேப் பொறந்த மாதிரி அழுதுகிட்டே கெடந்துது. மூச்சு வாங்கி மூச்சு வாங்கி அழுததுல புள்ள பொழைக்குமாங்கறதே சந்தேகமாப்போச்சு. அப்புறம் கணக்கம்பட்டியாரு வந்துதான் துண்ணூறு மந்திரிச்சு அழுகறது நிப்பாட்டுனாரு. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பொக்க வாய சிரிச்சுக்கிட்டு பால குடிச்சுட்டு ஒன்னுந்தெரியாத புள்ள கணக்கா அது தூங்கிருச்சு. அப்போ கிட்டாஞா பொண்டாட்டியும், மவளும் கணக்கம்பட்டி கால்லையே வுழுந்துட்டாங்க.அன்னைய பொழுதுக்கு அவருதான் அந்த குடும்பத்துக்கு தெய்வம்.
அப்பறம் ஒரு தடவ கிட்டாஞாவுக்கும் மேலுக்கு சொகப்படாமப் போயிருந்துது. கணக்கம்பட்டியாரு, பேத்திக்கு கொடுத்த துண்ணூறுல மீந்து போனத மடிச்சு வச்சிருந்தத எடுத்துப் பூசிப் பார்த்தாரு கிட்டாஞா. ஆனா அது ஒன்னும் கேக்கலயாம். அப்பறம் அவருகிட்டையே போயி அவரு கையால மந்திரிச்சதும் தான் சரியாப் போச்சாம். அப்பறந்தான் இந்தாளுக்கு ஒரு அருளு இருக்குனு கிட்டாஞா அசலூரு போனாலும் கணக்கம்பட்டியாரப் பத்தி பெருசா சொல்ல ஆரம்பிச்சதெல்லாம்.
அந்தக்கதையெல்லாம் டீக்கட ஆறுமுவம் கேட்டூட்டு பெருமூச்சு விட்டுகிட்டான். 'சாமி செல பேருக்கு நாக்குலையே குடியிருக்கும் போல'னு சொல்லிட்டு க்ளாசக் கழுவப் போயிட்டான்.
செம்பட்டையன் மவளுக்கு மாப்ள கெழக்க இருந்துதான் வருவான்னு சோழி போட்டு சொன்னது, காணாமப் போன கங்காணி மவன கண்டுபுடிச்சது, தண்ணியில்லாத மேட்டாங்காட்ல கெணறு தோண்ட எடம்பாத்து சொல்லி, அங்கன மூனு ஊத்து கண்டது னு கணக்கம்பட்டியாரப் பத்தி கிட்டாஞா பேச ஆரம்பிச்சா அன்னைய பொழுதுக்கும் நிப்பாட்ட மாட்டாரு. கணக்கம்பட்டி தன்னோட கூட்டாளிங்கறதுலையும் அவருக்கு ஒரு பெருமை.
பழைய கதையெல்லாம் பேசிட்டு டீக்கடைய வுட்டு எந்திரிச்சு சைக்கிள எடுக்கவும், அரச மர முக்குல ஒம்பதர மணி வண்டி வாரதுக்கும் சரியா இருந்துச்சு. யாராவது ஊர்க்காரங்க வர்றாங்களான்னு பாக்க சைக்கிளப் புடிச்சிக்கிட்டே நின்னுட்டாரு கிட்டாஞா. வந்த வண்டியில இருந்து எறங்குனது கணக்கம்பட்டியாரு மவதான். கையில பத்து மாச புள்ள.
'என்ன சரோசா… எப்பவும் மவளப் பாக்க அந்தாளுதான் கெளம்பிருவாரு… இன்னைக்கு அப்பனப் பாக்க நீ வந்திருக்க'
'நல்லாருக்கீங்களாஞா? இந்த பொட்ட புள்ள பொறந்து பத்து மாசம் முடிஞ்சிருச்சு…அதான் மூனுக்கும் சேத்து ஒன்னா காது குத்திரலாம்னு ஒரு ஓசன…ஆஞா என்ன சொல்லுதுன்னு கேட்டுக்கலாம்னுதான் ஒரெட்டு நானே வந்துட்டேன்'
'ஓ காதுகுத்தா…ஆமாமா அந்தாளும் சொல்லிக்கிட்டே தான் இருந்தாரு… கெடா வுட்ருக்கார்ல…இந்த மாசமே நாளு பாத்துருவாரு வா…சைக்கிள்ல ஏறு வூட்ல எறக்கி வுட்றேன்'
மவ வந்த விசயம் தெரிஞ்சதும் பஞ்சாங்கத்த எடுத்த கணக்கம்பட்டி அந்த மாசத்துல இருந்த நல்ல நாளெல்லாம் குறிச்சுக்கிட்டாரு. மொத்தம் ஆறு நாளுதான் தேறுச்சு. ஆறையும் மனசுல வச்சிக்கிட்டு சோழி போட்டாரு. மொத சோழியிலயே ரெண்டு நாளு அடிபட்டு போயிருச்சு. அடுத்த சோழியில இன்னும் ரெண்டு கழிய மூனாவது சோழியில நாள முடிவு பண்ணிட்டாரு. ஐப்பசி மாசம் பத்தா நாளு காது குத்திரலாம்னு அவரு சொல்லவும் பழனி மூலைல கவுளி சத்தம் கேட்டுச்சு. கிட்டாஞா சொன்னாரு – 'நல்ல சவுனந்தான் சரோசா… நீ போய் வேலைய ஆரம்பி…நாங்க கெடாவ இழுத்துட்டு ரெண்டு நாளு முந்தியே வந்துர்றோம்' னு சொல்லி அனுப்பி வச்சாரு.
மூனு பிள்ளைக போட்டோவும் போட்டு பத்திரிக்கை அடிச்சு ஊர்ல எல்லாருக்கும் கொடுத்தாரு கணக்கம்பட்டியாரு. எல்லாரையும் மொத நாளே பொனாசிப்பட்டில* மவ வூட்டுக்கு வந்துர சொல்லிருந்துது. மவ வூட்டு கொலதெய்வம் திருச்சிக்குப் பக்கத்துல இருக்குது. பொனாசிப்பட்டில இருந்து கோயிலுக்கு போறதுக்கும் வர்றதுக்கும் லாரி பேசிட்டாரு. எப்பிடியும் ஒரு எரநூறு சனம் சேந்துரும்ங்கறது அவுரு கணக்கு. காலைல ஆறு மணிக்கு தான் காது குத்தறதுக்கு நேரம் குறிச்சிருந்தாங்க. விடியகாலைல ஒரு நாலு மணி வாக்குல பயணப்பட்டா செரியா இருக்கும்னு நேரத்த கணக்கு பண்ணிருந்தாங்க. அதனால மொதநா ராத்திரியே சரோசா வூட்ல சாப்பாடு ஏற்பாடு பண்ணிரவும் சனமெல்லாம் சாய்ங்காலமே வந்து சேந்துருச்சுங்க. சாப்ட்டு முடிச்சுட்டு எல்லா சனமும் படுத்துருச்சு.
காலைல எல்லாசனத்தையும் எழுப்பி அரக்க பரக்க கெளம்பி வூட்ட வுட்டு லாரிய எடுக்க நாலர மணியாயிருச்சு. லாரிக்குள்ள பொம்பளையாளுங்க எல்லாம் குந்திகிச்சுங்க. ஆம்பளையாளுங்க எல்லாம் ஓரத்துல நின்னுகிட்டாங்க. கிட்டாஞாவும், கணக்கம்பட்டியாரும் பின்னாடி ரெண்டு மூலைலயும் நாக்காலிய போட்டு குந்தியிருந்தாங்க. பாதி பொம்பளைங்க குந்துன சாயல்லயே தூங்குனாலும் தூக்கம் வராத பெருசுங்க ஊர்ப்பழமைல புடிச்சிருச்சுங்க.. வண்டி அப்பதான் குளித்தல தாண்டுச்சு.
'மாமா… பேத்திக்கு காது குத்து வச்சுட்ட…எப்ப கல்யாண சோறு போடப் போற?' இருட்டுல எந்த கெழவி கேட்டுச்சுனு செரியாத் தெரியல.
'எவடி அவ? புள்ள வயசுக்கு வந்ததும் கேட்டின்னா…அது நாயம்…காது குத்தும்போது புத்தி கெட்டத் தனமா கல்யாணத்தப் பத்தி கேட்கிறவ' கிட்டாஞா சத்தம் போட்டாரு.
'அட பெரியாஞா… அம்மாயி சொன்னது பேத்தியோட கல்யாணத்த இல்ல…தாத்தனோட கல்யாணத்த' னு ஒரு கொமரி சொல்லிட்டு சிரிக்கவும் கூட எல்லாப் பொம்பளைகளும் சேந்துக்கவும், கிட்டாஞாவும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு.
'யோவ் கிட்டு, புடிமானம் பத்திரம்யா சிரிச்சுகிட்டு கீழ வுழுந்துரப் போற' சிரிப்புலயும் கணக்கம்பட்டி கவனமாத்தான் இருந்தாரு.
இப்ப வண்டி சிறுகமணி, பெருகமணியெல்லாம் தாண்டி தெக்க மண்ணுரோட்டுல திரும்பிருச்சு. தெக்க இன்னும் ஏழு மைலு போவனும் ஏவுரிமங்கலம் சேர.
'ஏம் பக்கட்டு வண்டி எதுவும் வாராதுய்யா…ஒம் பக்கட்டுதான் எதுத்தாப்டி வார வண்டிலாம் ஒரசுனாப்ல போய்க்கிட்டிருக்கு நீ சூதானமா குந்திக்க' னு கிட்டாஞா பதிலுக்கு அவர சாக்கிரத பண்ணுனாரு.
'அதான் தெக்க திரும்பியாச்சே இதுல எங்கன எதுத்தாப்ல வண்டி வரப் போவுது'னு சொல்லி கணக்கம்பட்டி வாயமூடுல… அது நடந்து முடிஞ்சிருச்சு.
எதுத்தாப்ல வெறவு செரா ஏத்திகிட்டு ஒரு லாரி வந்திருக்கு. அந்த லாரிக்கு பக்கவாட்டுல ரெண்டடிக்கு வெறவு செராயெல்லாம் நீட்டிகிட்டு இருந்ததுல இவுங்க போன லாரியில ஓரத்துல நின்னவங்க மேலயெல்லாம் வெறவு செரா இடிச்சுட்டு போவ, ஆம்பளையாளுக அஞ்சு பேருக்கு மண்டையில அடி. மூலையில குந்திருந்த கணக்கம்பட்டி மண்டைய பெரிய செறா ஒன்னு பதம்பாத்து, கட்டியிருந்த துண்டோட அவரு மண்டய பேத்துகிட்டு போயிருச்சு. லாரியும் கொட சாஞ்சு கவுந்து போவவும் சனமெல்லாம் ஐயோ அம்மானு அலறுச்சுங்க. வாய்க்காலுக்குள்ள வுழுந்து கெடந்த கிட்டாஞா எந்திரிச்சு ஓடியாந்து கணக்கம்பட்டியோட ஒடம்பதான் பாத்தாரு அப்பவே மண்ட பொளந்து உசுரு போயிருச்சு. ஐயோ னு வாய்வுட்டு கதறிபுட்டாரு. யாருக்கும் என்ன செய்யறதுன்னு ஒன்னும் வெளங்கல. அப்புறம் எளவட்டப் பயலுக போன் பண்ணி போலிசுக்கு சொல்லி ஆசுப்பத்திரி வண்டி வந்து கொள்ளபட்ட சனத்த அள்ளிப்போட்டுகிட்டு திருச்சி பெரியாசுபத்திரிக்கு போச்சு. எத்தன பொழக்கும். எத்தன நெலக்கும்னு அப்ப ஒன்னும் சொல்லுறாப்ல இல்ல.
அன்னைக்குப் பொழுது அவங்களுக்கு அழுதுகிட்டுதான் விடிஞ்சுது ஆசுபத்திரில. கணக்கம்பட்டியாரு மட்டுமில்ல, பங்காளி வூட்டு ஆளுங்க மூனு பேரு, அப்பறம் கெடா உரிக்க வந்த சுரும்பன் னு மொத்தம் அஞ்சாளுங்க பொணமாயிட்டாங்க. தலைல அடிவாங்குன ரெண்டு பேருக்கு சீரியசுன்னு சொல்லிருக்காங்க. போலிசுக்கெல்லாம் காசுவெட்டி பொணத்த ஊருக்கு கொண்டாரதுக்கு அன்னைக்கு மத்தியானமாயிருச்சு. ஆசுபத்திரில அறுத்த பொணம்ங்கறதால சாய்ங்காலத்துக்குள்ள தூக்கிரனும்னு காரியமெல்லாம் சீக்கிரமா நடந்துச்சு. "புள்ளைக்கு மொட்டையடிக்கப் போயி அப்பன காவு கொடுத்துட்டனே"னு நெஞ்சு நெஞ்சா அடிச்சுகிட்டு அழுவுறா சரோசா. அவளத் தேத்தற தெம்புல அங்கன யாருமில்ல. அவ அழுவுறத பாத்து எல்லா சனமும் சேந்துகிட்டு அழுவுதுங்க.
செய்ய வேண்டிய காரியமெல்லாம் கிட்டாஞா முன்ன நின்னு செஞ்சுகிட்டு இருந்தாரு. செதைய* குளிப்பாட்டி, பேரம்பேத்திங்க எண்ண வச்சி நெய்ப் பந்தம் புடிச்சு கடேசில செதையத் தூக்கி தேருல வச்சதும் 'கே' னு சத்தம் போட்டு அழுதா சரோசா. கிட்டாஞாவுக்கு தொண்டக்குழிக்குள்ள பாறாங்கல்லு எறங்குனாப்ல இருந்துது. தேரு நத்தமோட்ட* நெருங்கிருச்சு. கிட்டாஞா பக்கத்துல வந்துகிட்டு இருந்த ஆறுமுவம் பொலம்புனான் 'எல்லாருக்கும் நல்ல நாளா குறிச்ச ஆளு, தாங்குடும்பத்துக்கு இப்புடியொரு நாள குறிச்சுட்டாரே'. அத கேட்டதும் கிட்டாஞா தொண்டையில இருந்த பாறாங்கல்லு ஒடையறாப்ல இருந்துச்சு.
ஒடஞ்ச பேச்சுல, 'அவந் தலமாட்டுக்கு தேங்கா ஒடச்சத பாத்தல்ல…செம்பாகமா ஒடஞ்சுதுய்யா…இன்னைக்குதான் அவன் ஆயுசு முடியற நாளு… அவன் சாமிய்யா…அதான் அவன் நாள அவனேக் குறிச்சிருக்கான்' சொல்லிட்டு என்னைக்குமில்லாம ஓ னு அழ ஆரம்பிச்சுட்டாரு கிட்டாஞா.
அது, அவன் மனுசனாவே இருந்திருக்கலாமோனு அவரு அழுவுறாப்ல இருந்துச்சு ஆறுமுவத்துக்கு.
__________
*ஆஞா – அப்பா எனும் பொருளில் போன தலைமுறை வரை எங்கள் ஊரில் புழக்கத்தில் இருக்கும் சொல்.
*துண்ணூறு – திருநீறு, விபூதி
*தவுதாயப் படுதல் – எனக்கும் சரியான சொல் தெரியவில்லை. வருத்தப்படுதல் எனும் பொருள் வரும்.
*ஒசத்தியா – உயர்வாக
*மக்யா நாளு – மறுநாள்
*கவுளி – பல்லி
*வெரசா – விரைவாக
*கவுச்சி – அசைவம்
*முச்சூடும் – முழுவதும்
*பொனாசிப்பட்டி – புனல்வாசல்பட்டி எனும் ஊரின் பெயர் மருவி எழுத்து வழக்கில் புனவாசிப்பட்டி, பேச்சுவழக்கில் பொனாசிப்பட்டி. ஊரின் பெயருக்கு பொருள் 'நீர்நிறைந்த ஊர்'.
*செதைய – சிதையை
*நத்தமோடு – சுடுகாடு
__________
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
சற்றே நீளமான கதை எனினும் படிக்க படிக்க உள்ளே இழுத்துச் சென்றுவிட்டது. கிராமிய வாசமும் எழுத்து நடையும் அருமை. வாழ்த்துக்கள் கோ!இது என்ன வட்டார வழக்கு என்று சொல்வீர்களா? இதில் பயன்படுத்தப்பட்ட நிறைய சொற்களை எங்கள் ஊரிலும் பயன்படுத்துவார்கள்
அத வட்டார வழக்குன்னு எல்லாம் சொல்ல முடியாது பிரேம். கிராமத்து வழக்கு னு சொல்லலாம். கதைல வந்த கிராமம் நாமக்கல், எருமப்பட்டிக்கு தெற்கே இருக்கு. ஊர் பேரு காவல்காரன்பட்டி. இன்னொரு ஊர் கரூர் – திருச்சி சாலையில் இருக்கும் லாலாபேட்டையில் இருந்து தெற்கே இருக்கும் புனவாசிப்பட்டி
எருமப்பட்டிக்கு தெற்கே இருக்கு. ஊர் பேரு காவல்காரன்பட்டி. இன்னொரு ஊர் கரூர் - திருச்சி சாலையில் இருக்கும் லாலாபேட்டையில் இருந்து தெற்கே இருக்கும் புனவாசிப்பட்டி
சிறுகதைன்னா சிறுசாத்தான் இருக்கணும்னு அவசியமெல்லாம் இல்லைங்க
கிராமமும் வட்டாரத்துக்குள்ள அடங்கிடும் கோ. உங்க வட்டாரத்தில் உள்ள வழக்கு :-)
நான் சொல்ல வந்தது என்னன்னா இந்தக் கதையில வர்ற சில வார்த்தைகள் கோவை, மதுரை போன்ற வட்டாரங்களில் உள்ள கிராமங்களிலும் பயன்பாட்டில் இருப்பதுதான். அதனாலதான் இது வட்டாரங்களைத் தாண்டிய கிராம வழக்கா இருக்கும்னு சொன்னேன் :-)
வட்டார வழக்கு தமிழைச் சிதைத்து விடுமென்று தமிழ்றிஞர்கள் சொல்வதுண்டெனினும், மக்கள் பாவிக்கும் மொழியை எழுத்திலும் கொண்டு வருவதில் தவறில்லையென்றே உணர்கிறேன்
வட்டாரவழக்கு தமிழை சிதைக்குமா, வளர்க்குமாங்கற பட்டிமன்றத்தோட முடிவு தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்க.
நான் இந்தக்கதைய கிராமவழக்குலேயே எழுதக் காரணம் கி.ரா வுடைய கோபள்ளபுரத்து மக்கள். அதப் படிக்கும்போது எங்க தாத்தா கத சொல்ற மாதிரியே இருந்ததுதான் காரணம்!!!
மொய்யெழுதீருக்கீங்களா???
முன்னலாம் கல்யாண வீடுகள்ல ஒவ்வொரு வேலையையும் செய்யறதுக்குனு சொந்தக்காரங்கள்ல சில நிபுணர்கள் இருப்பாங்க.
ஸ்டோர் ரூம் பாத்துக்கிறதுக்குனு ஒருத்தர் இருப்பார். சமையல் காரங்க சொன்ன அளவவிட கொஞ்சம் அதிகமாவேதான் பொருட்கள் எல்லாம் வாங்கிப் போடுவோம். ஆனா அத அளவா வேணுங்கும்போது மட்டும் கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் பண்ணி கால்வாசிப் பொருட்கள மிச்சம் பண்ணி கல்யாணம் முடிஞ்சதும் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துடுவாங்க இந்த ஸ்டோர் கீப்பர்ஸ்.
அப்புறம் பந்தி பரிமாறுவதும் ஒரு கலை. வரிசையா ஒவ்வொரு ஐட்டமா வச்சிட்டுப் போறதுதானன்னு சாதாரணமா நெனச்சுட முடியாது. பந்தியில பொதுவா யாருமே என்ன வேணும்னு கேட்கிறதுக்கு தயங்குவாங்க. அவங்க முகக்குறிய வச்சே என்ன வேணும்னு கேட்டுப் பரிமாறுறதுல இருந்து, எவ்வளவு பேர் சாப்பிட்டாங்க, இன்னும் எவ்வளவு பேர் வருவாங்க, என்னென்ன ஐட்டம் தீந்து போச்சு, பத்தலன்னா ரெடி மேடா என்ன செய்யலாம்? இப்படி முடிவெடுக்கிற வல்லமை படைச்ச ஆளுங்க தான் இதுக்கெல்லாம் லாயக்கு.
அடுத்தது பந்தல், மேளம், போக்குவரத்து வசதி, லைட் செட், மேடை அலங்காரம் இப்படி அததுக்குனு இருக்கிற ஆளுங்களப் பிடிச்சி சேர்க்கிறதுக்கு நல்ல வெளிவட்டார தொடர்பு இருக்கிற ஆளு வேணும். கடைசி நேரத்துல எது வேணும்னாலும் இவருகிட்ட சொன்னா போதும் எங்க இருந்தோ, எப்படினோ தெரியாது ஆனா கேட்டது கிடைச்சிடும். எப்பவும் கல்யாணம் முடிஞ்சு மண்டபத்த விட்டு கடைசியா போற ஆளு இவராத்தான் இருப்பாரு.
ஆனா இப்போ இந்த மாதிரி எல்லா வேலைகளையும் அவுட்சோர்சிங் பண்ணிடறாங்க. சமையல் + பரிமாற ஒரே காண்ட்ராக்ட். யூனிஃபார்ம போட்டுகிட்டு அவங்களும் மெசின் மாதிரி வேலைய முடிச்சிட்றாங்க. அப்புறம் மண்டபம் + மேடை + பந்தல் எல்லாம் ஒரே கணக்கில் வந்துடுது. எதுக்கும் பெரிசா அலைய வேண்டியதில்லை. ஆனா எல்லா வேலையும் இப்படி அவுட்சோர்சிங்க்ல போனாலும் இன்னமும் சொந்தக்காரங்களே பாத்துக்கிட்டு இருக்கிற வேலை இந்த மொய்யெழுதுறதுதான். பண விசயமாச்சே…நம்மாளுங்க உசாராத்தான் இருப்பாங்க :)
தாலி கட்டின அடுத்த நொடியே மண்டப வாசல்ல ரெண்டு பக்கமும் ஆளுக்கு ஒரு டேபிள் ஒரு சேர இழுத்துப் போட்டு மாப்பிள்ளை & பொண்ணு வீட்டு ஆளுங்க உக்காந்துடுவாங்க. பொண்ணு வீட்டு மொய், மாப்பிள்ள வீட்டு மொய் ரெண்டும் கலந்துடக் கூடாதுனு கொஞ்சம் உசாரா எதிர் கோஷ்டி பக்கம் போற ஆளுங்கள நோட் பண்ணிகிட்டே இருக்கனும். நாற்பது பக்க நோட்டெல்லாம் போய் இப்போ அர குயர் நோட்டு வந்துடுச்சு. ஒரு ஆள், பெயர் + தொகை எழுதிகிட்டே வர இன்னொரு ஆள் பணத்த வாங்கி ஒரு மஞ்ச பைக்குள்ள போட்டுக்குவாரு.(இந்த மஞ்ச பை எப்போதான் மறையும்?) எங்க வீட்டு விசேசங்கள்ல எப்பவும் எல்லா வேலைகள்லையும் கை வச்சிட்டாலும் இந்த மொய்யெழுதுற வேலைல இப்போ கடசியா ரெண்டு மூனு கல்யாணத்துலதான் உக்காந்தேன். எனக்கு இருக்கிற பயம் என்னன்னா என்னோட கையெழுத்து பதினாலு கோழி சேந்து கிறுக்கின மாதிரியே இருக்கும். அத அந்த மொய்நோட்டுல காலத்தால் அழியாச்சின்னமா வைக்கனுமாங்கறதுதான். ஆனா பழைய மொய் நோட்டுகளப் பாத்த பின்னாடி என் கையெழுத்து எனக்கே அழகா தெரிஞ்சது. அப்புறம் துணிச்சலா உக்காந்தாச்சு. இப்ப போன மாசம் தங்கச்சி (சித்தப்பா பொண்ணு) கல்யாணத்துல மொய் எழுதினேன்.
மொத பேரு எழுதும்போதே கஷ்டமாப் போச்சு. பேர ஏழுமலை னு சொன்னா எனக்கு ஏழுமலைனு எழுத வர மாட்டேங்குது. Ezumalai னு எழுதப் போறேன். மொத பக்கம் ஒரு இருபது பேர் எழுதின பின்னாடிதான் தமிழ் கொஞ்சம் தானா வர ஆரம்பிச்சுது. இனிமே அப்பப்போ தமிழ்ல பேனா எடுத்து எழுதனும்.
ஆனா கிராமத்து ஆளுங்க இன்னமும் தமிழோடதான் இருக்காங்க. பேர் சொல்லும்போது ஒருத்தர் ஆவன்னா திருஞானம் னு சொன்னார். நானும் 'ஆவன்னா திருஞானம்'னே தான் எழுதினேன். அவரு தம்பி ஆவன்னா தலையெழுத்துப்பா ன்னாரு. தலையெழுத்தா? இவருக்கு தலையெழுத்து கூட தெரிஞ்சிருக்குமோனு பாத்தா இனிசியல தான் தலையெழுத்துனு சொல்றாருனு புரிஞ்சது. அப்புறம் அவர் பேர ஆ. திருஞானம்னு ஒழுங்கா எழுதியாச்சு. தலையெழுத்த அதாங்க இனிசியல இன்னமும் தமிழ்ல சொல்ற ஆளுங்களும் இருக்காங்க.
இன்னொருத்தர் பேர சொல்லிட்டு 'முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்'னு அடுப்புக்குள்ள போடுங்கன்னாரு. எந்த அடுப்புக்குள்ள போட்றதுன்னு நான் முழிக்க, அவர் திரும்ப திரும்ப அடுப்புக்குள்ள போடுங்க அடுப்புக்குள்ள போடுங்கன்னே சொல்லிட்டு இருந்தாரு. எனக்கு அப்புறம் தான் புரிஞ்சது அவர் அடப்புக்குள்ள ( இந்த மாதிரி அடைப்புக்குறிக்குள்ள:-) ) போட சொல்றாருன்னு. நாந்தான் இன்னும் ப்ராக்கெட்டுக்குள்ள போட்டுட்டு இருக்கேன் :(
இன்னொரு பாட்டி வந்தாங்க. 'யாரு சின்னபுள்ளயோட சின்ன மவனா? நல்லாருக்கியா கண்ணு'னு கேட்டுட்டு சுருக்குப் பையில இருந்து பணத்த எடுத்து கொடுத்துட்டு தாத்தா பேர்ல எழுதீருனு சொல்லிட்டாங்க. நான் காலேஜ் சேந்த பின்னாடி எங்க வீட்டுக்குப் போறதே எப்போவாதுதான். சொந்த கிராமத்துக்குப் போய் பல வருசமாச்சு. சொந்தக்காரங்க பேரு, உறவுமுறையெல்லாம் அம்மாகிட்ட அடிக்கடி கேட்டுதான் ரெப்ரஷ் பண்ணிக்குவேன். இவங்களே எந்த பாட்டி, அம்மா வழி சொந்தமா, அப்பா வழி சொந்தமானு ஒன்னும் புரியல. இதுல தாத்தா பேருக்கு நான் எங்க போறது? தாத்தா பேரு என்னனு அவங்க கிட்டவே கேட்கிறதுக்கும் தயக்கமா இருந்துச்சு. எப்பவும் ஒரு மூலைல அமைதியா இருந்தாலும் அப்பப்போ என் மூளையும் வேலை செய்யும். 'தாத்தாவோட முழுப் பேரு (என்னமோ பாதிப் பேரு எனக்குத் தெரிஞ்சுட்ட மாதிரி) என்னம்மாயி?' னு கேட்டேன். (அந்த பாட்டி எனக்கு அம்மாயி முறையா அப்பாயி முறையானும் தெரியல) நல்லவேளை பாட்டிக்குத் துணையா வந்த ஒரு அக்கா தாத்தாவோட முழுப் பேர சொல்லிக் காப்பாத்திட்டாங்க. அப்புறம் ஊர்ப்பேரயும் நான் கேட்டதும் 'ஒம் பேரன் ஊர் பேரு கூட தெரியாத மாதிரி கேக்குது பாரு'னு சொல்லி சிரிச்சுட்டு அந்த அக்காவும் கைவிரிச்சுட்டுப் போய்ட்டாங்க. எனக்கும் ஒரு வழியும் தெரியல. தாத்தா பேருக்கு முன்னாடி அம்மா சொந்த ஊரையும், பின்னாடி அப்பா சொந்த ஊரையும் போட்டுட்டேன். ரெண்டுல ஒரு ஊராதான் கண்டிப்பா இருக்கும் :-)
அப்புறம் ஒருத்தர் வந்தாரு. 'பொனாசிப்பட்டி நரசிங்கபுரம் வடக்குத் தோட்டம் சொக்காஞா பெரிய மவ வூட்டுப் பேரன், கான்ன ராமலிங்கம், தாய் மாமன் பணமாக எழுதிக்கொண்டது….' னு ஒரு கடிதம் எழுதற மாதிரி சொல்லிக்கிட்டே போறாரே ஒழிய நிறுத்தமாட்டேங்கறாரு. அவரு பேர எழுதுறதுக்கே தனியா மொய் வசூலிச்சிருக்கனும்.
அப்புறம் இப்போ புதுசா இன்னொன்னு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. பணத்த ஒரு கவருக்குள்ள போட்டு வெளிய ஊரு பேரு எல்லாம் தெளிவா எழுதிக் கொடுத்துட்றாங்க. நமக்கும் அது வசதிதான். ஆனா என்ன… உள்ள பணம் இருக்குதான்னு கொஞ்சம் பாத்துக்கனும் :-) அப்படிதான் ஒருத்தரு வந்தாரு கையில ஒரு ஏழு கவரோட. தம்பி அமவுண்ட் கரெக்டா இருக்கானு பாத்துக்கப்பானு பக்கத்துலையே நின்னுட்டாரு. கவருக்கு வெளிய குறிச்சிருந்த தொகையும் உள்ள இருக்கிற பணமும் சரியா இருக்கானு ஏழு கவர்லையும் சரி பாத்துட்டு சரியா இருக்குண்ணே னு சொன்னேன். போகும்போது கேட்டாரு. இது மாப்பிள்ள வீட்டு மொய் தான னு. அத மொதல்லையே கேட்டிருக்கலாம்ல? 'இது பொண்ணு வீட்டு மொய்ணே மாப்பிள்ள வீட்டு மொய் அந்தப்பக்கம்'னு சொல்லி அனுப்பிட்டேன். அவரு கேட்காமலே போயிருந்தா அந்த பேரெல்லலம் யாருனு எங்க சித்தப்பாதான் பாவம் மண்ட காஞ்சு போயிருப்பாரு.
இதனால நான் சொல்ல வர்றது என்னன்னா அடுத்த முறை சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போனா மொய் வைக்கிறீங்களோ இல்லையோ மொய் எழுதுங்க, இந்த மாதிரி ஒரு மொக்கப் பதிவு போடறதுக்காகவாவது பயன்படும் :-)
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
இன்னொருத்தர் பேர சொல்லிட்டு 'முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்'னு அடுப்புக்குள்ள போடுங்கன்னாரு. எந்த அடுப்புக்குள்ள போட்றதுன்னு நான் முழிக்க, அவர் திரும்ப திரும்ப அடுப்புக்குள்ள போடுங்க அடுப்புக்குள்ள போடுங்கன்னே சொல்லிட்டு இருந்தாரு.
அப்புறம் ஒருத்தர் வந்தாரு. 'பொனாசிப்பட்டி நரசிங்கபுரம் வடக்குத் தோட்டம் சொக்காஞா பெரிய மவ வூட்டுப் பேரன், கான்ன ராமலிங்கம், தாய் மாமன் பணமாக எழுதிக்கொண்டது….' னு ஒரு கடிதம் எழுதற மாதிரி சொல்லிக்கிட்டே போறாரே ஒழிய நிறுத்தமாட்டேங்கறாரு. அவரு பேர எழுதுறதுக்கே தனியா மொய் வசூலிச்சிருக்கனும்.
இதனால நான் சொல்ல வர்றது என்னன்னா அடுத்த முறை சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போனா மொய் வைக்கிறீங்களோ இல்லையோ மொய் எழுதுங்க, இந்த மாதிரி ஒரு மொக்கப் பதிவு போடறதுக்காகவாவது பயன்படும் :-)
யோவ் கோ!! அட்டகாசமான நகைச்சுவை எழுத வருதுய்யா உமக்கு.
இப்படியே எழுதும். இம்மாதிரி மொக்கைகள் மிக உற்சாகத்துடன் வரவேற்கப்படுகின்றன
கணக்கம்பட்டியார் கதை! ( சற்றே பெரிய சிறுகதை (முயற்சி) )
கொஞ்சங்கூட விடியாத நல்ல இருட்டு. இன்னும் கோழி கூட கூப்புட்ல. . ஓயாம
__________
*ஆஞா - அப்பா எனும் பொருளில் போன தலைமுறை வரை எங்கள் ஊரில் புழக்கத்தில் இருக்கும் சொல்.
*துண்ணூறு - திருநீறு, விபூதி
*தவுதாயப் படுதல் - எனக்கும் சரியான சொல் தெரியவில்லை. வருத்தப்படுதல் எனும் பொருள் வரும்.
*ஒசத்தியா - உயர்வாக
*மக்யா நாளு - மறுநாள்
*கவுளி - பல்லி
*வெரசா - விரைவாக
*கவுச்சி - அசைவம்
*முச்சூடும் - முழுவதும்
*பொனாசிப்பட்டி - புனல்வாசல்பட்டி எனும் ஊரின் பெயர் மருவி எழுத்து வழக்கில் புனவாசிப்பட்டி, பேச்சுவழக்கில் பொனாசிப்பட்டி. ஊரின் பெயருக்கு பொருள் 'நீர்நிறைந்த ஊர்'.
*செதைய - சிதையை
*நத்தமோடு - சுடுகாடு
அண்ணாச்சி நம்ம ஊரு மக்கள் எல்லாருமே நகைச்சுவையான ஆளுங்கதான்.
போனவாரம் பெங்களூர்ல இருந்து எங்க ஊருக்கு போறதுக்கு புதுசா விட்டிருக்கிற தமிழ்நாடு பேருந்துல ஏறினேன். காசு அதிகம் தான். சரி சீக்கிரம் கொண்டு போய் சேர்த்துடுவான்னு அதுல ஏறிட்டேன். ஓசூர் தாண்டறதுக்குள்ள 15 பேருந்து, 23 லாரி, கணக்கு வழக்கு இல்லாம காருங்கனு எங்க பேருந்த முந்திகிட்டு போய்கிட்டு இருக்கு. கண்டக்டர்கிட்ட கேட்டேன் 'அண்ணே 60 ரூவா கூட வாங்குறீங்களே கொஞ்சம் வேகமா போகக்கூடாதா? டவுன் பஸ்செல்லாம் முந்திகிட்டு போகுதே' அப்படின்னு.
அவர் என்ன சொன்னார் தெரியுங்களா? 'தம்பி இது சொகுசுப் பேருந்து! விரைவு பேருந்து கிடையாது!!! நம்ம வண்டி சொகுசாதான் போகும் வேகமா எல்லாம் போகாது' னு சொல்லிட்டார். அதுக்கு மேல என்ன கேட்க முடியும் அவர்கிட்ட???
அண்ணாச்சி நம்ம ஊரு மக்கள் எல்லாருமே நகைச்சுவையான ஆளுங்கதான்.
போனவாரம் பெங்களூர்ல இருந்து எங்க ஊருக்கு போறதுக்கு புதுசா விட்டிருக்கிற தமிழ்நாடு பேருந்துல ஏறினேன். காசு அதிகம் தான். சரி சீக்கிரம் கொண்டு போய் சேர்த்துடுவான்னு அதுல ஏறிட்டேன். ஓசூர் தாண்டறதுக்குள்ள 15 பேருந்து, 23 லாரி, கணக்கு வழக்கு இல்லாம காருங்கனு எங்க பேருந்த முந்திகிட்டு போய்கிட்டு இருக்கு. கண்டக்டர்கிட்ட கேட்டேன் 'அண்ணே 60 ரூவா கூட வாங்குறீங்களே கொஞ்சம் வேகமா போகக்கூடாதா? டவுன் பஸ்செல்லாம் முந்திகிட்டு போகுதே' அப்படின்னு.
அவர் என்ன சொன்னார் தெரியுங்களா? 'தம்பி இது சொகுசுப் பேருந்து! விரைவு பேருந்து கிடையாது!!! நம்ம வண்டி சொகுசாதான் போகும் வேகமா எல்லாம் போகாது' னு சொல்லிட்டார். அதுக்கு மேல என்ன கேட்க முடியும் அவர்கிட்ட???
அவர் என்ன சொன்னார் தெரியுங்களா? 'தம்பி இது சொகுசுப் பேருந்து! விரைவு பேருந்து கிடையாது!!! நம்ம வண்டி சொகுசாதான் போகும் வேகமா எல்லாம் போகாது' னு சொல்லிட்டார். அதுக்கு மேல என்ன கேட்க முடியும் அவர்கிட்ட???
அட அருள் ஒரு கல்்யாண காட்சியை காமடியா அதாங்க நடக்கறத அப்படியே எப்படிப்பா படம் பிடிச்சமாதிரி எழுத முடியுது. அசலா அப்படியே எழுதீட்டிங்க போங்கள்.
ம்ம்ம்ம் பழுத்த அனுபவம்......... :))
என்னது பழுத்த அனுபவமா??? எப்பா எனக்கு 24 வயசுதான் ஆகுது… இன்னும் ஒரு கல்யாணம் கூட பண்ணல :(
நம்மா ஊர் கதை நல்லா இருக்குங்க.ராமக்கல் - நாமக்கல்.நன்றி அருள்.
ஆமா ஜேகே அது நாமக்கல் தான் ஆனா மக்கள் புழக்கத்துல ராமக்கல் :)
ஒரே நகைச்சுவை தான் போங்கள்....
ம்ம்ம், டோட்டல் டேமேஜ்'ன்னு சொல்லுங்க :))))
அதுக்கு மேல என்னப்பா பேச முடியும்???? :(
அவர் என்ன சொன்னார் தெரியுங்களா? 'தம்பி இது சொகுசுப் பேருந்து! விரைவு பேருந்து கிடையாது!!! நம்ம வண்டி சொகுசாதான் போகும் வேகமா எல்லாம் போகாது' னு சொல்லிட்டார். அதுக்கு மேல என்ன கேட்க முடியும் அவர்கிட்ட???
சரி விடுங்க அப்புறம் பயணம் சொகுசாகவாவது இருந்துச்சா இல்ல கொசுவா இருந்துச்சா.... :))
உன் ஓவியமொன்று,
என் இமைக்குள்
வரையப்பட்டிருக்கிறது!
~பேரழகானஉன் ஓவியமொன்று,
என் இமைக்குள்
வரையப்பட்டிருக்கிறது!
--
நண்பன்
----------------
உண்மையென்பது நிபந்தனையற்ற கருத்துகளின் தொகுப்பே.
திறந்திருக்கும் பொழுதாமூடிக்கொண்டிருக்கும் பொழுதாசொல் பெண்ணே!!!
பதிலாக என் பழைய கவிதை ஒன்று :)
பார்க்கும் பொருளெல்லாம் நீயாகத் தெரிகிறது.
இமைகளை மூடினேன்.
நீ மட்டும் தெரிகிறாய்.
On Oct 12, 11:55 am, "அருட்பெருங்கோ" <arutperu...@arutperungo.com>
wrote:
நான் எழுதி என்னுடைய முதல் கவிதைத் தொகுதியான 'விரியக் காத்திருக்கும்
உள்வெளிகள்' என்னும் கவிதை நூலிலிருந்து
கண்மூடி
கிடக்கும் சுகம் -
தனிமையின்
இனிமையால்
மட்டுமல்ல -
இமைகளின் மீது
தடவப்பட்டிருக்கும்
உன் நினைவாலும் தான்
சும்மா இருக்கும்
நேரங்களில் மட்டுமே
உன்னை நினைக்கிறேனென்கிறாய்.
உண்மைதான்.
உன்னையே நினைத்திருக்க
எப்பொழுதும் சும்மாவே இருப்பவன் நான்.
- ஒரு சோம்பேறி காதலன் :)
பார்க்கும் பொருளெல்லாம்
நானாக இருக்கையில்
பார்க்காத பொருளெல்லாம்
எத்தனை எத்தனை பேராக
நீ அறிந்திருப்பாய்!
எப்பொழுதும் கண்மூடி கிட
என் பொருட்டு...
On Oct 12, 11:55am, "அருட்பெருங்கோ" <arutperu...@arutperungo.com>
கண்மூடி
கிடக்கும் சுகம் -
தனிமையின்
இனிமையால்
மட்டுமல்ல -
இமைகளின் மீது
தடவப்பட்டிருக்கும்
உன் நினைவாலும் தான்
நீங்களும் காதல் கவிதை எழுதுவீங்களா நண்பன்? ;-)
உன்னையும் என்னையும்....;)அது சரி...இப்போ எதுக்கு "கோ"வை கூப்பிடுறிங்க...காதல் கவிதை எழுதவா ;)))
உன்னையும் என்னையும்....;)
கோபி, இதுல உன்னையும் அப்படினு சொன்னது பிரேமையா???
அவர எல்லாம் இந்த ஆட்டத்துல சேர்க்காதீங்க… அவரு காதலிக்கிற வயச எல்லாம் 10 வருசம் முந்தியே தாண்டிட்டாரு…
அது சரி...இப்போ எதுக்கு "கோ"வை கூப்பிடுறிங்க...காதல் கவிதை எழுதவா ;)))
வேணாம்யா… ஏற்கனவே நான் எழுதறத படிச்சுட்டு பல பேரு கொலவெறியோட திரியறாங்க…. (ஆனாலும் நீங்க சொல்றதையும் மைண்ட்ல வச்சிக்கிறேன் ;-) )
கோபி, இதுல உன்னையும் அப்படினு சொன்னது பிரேமையா???
அவர எல்லாம் இந்த ஆட்டத்துல சேர்க்காதீங்க… அவரு காதலிக்கிற வயச எல்லாம் 10 வருசம் முந்தியே தாண்டிட்டாரு…
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ இதை நான் வன்மையாக் கண்டிக்கிறேன்
வேணாம்யா… ஏற்கனவே நான் எழுதறத படிச்சுட்டு பல பேரு கொலவெறியோட திரியறாங்க…. (ஆனாலும் நீங்க சொல்றதையும் மைண்ட்ல வச்சிக்கிறேன் ;-) )
கொலவெறியோடவா இல்லை காதல்வெறியோடவா?
கொலவெறியோடவா இல்லை காதல்வெறியோடவா?
காதல்(கோ)மேல கொலவெறியோடு :))
:))))))))))))
ஆரம்பகாலத்தில் காதல் கவிதைகள் நிறைய எழுதினேன். பிறகு குறைத்துக்
கொண்டேன். அவ்வளவே::!!!
On Oct 14, 6:41 pm, "அருட்பெருங்கோ" <arutperu...@arutperungo.com>
wrote:
ஆரம்பகாலத்தில் காதல் கவிதைகள் நிறைய எழுதினேன். பிறகு குறைத்துக்
கொண்டேன். அவ்வளவே::!!!
ஐய்யே, என்ன காதல் என்ன தீண்டத்தகாததா? அது எல்லோரையும் தீண்டும்.
வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் - சொல்லி இருக்கிறேன் - நான் என் மனைவியை
என் உயிரைப் போல் காதலிக்கிறேன் என்று. இன்னமும் காதலிக்கிறேன். இனியும்
காதலிப்பேன்.
ஆரம்பகாலத்தில் காதல் கவிதைகள் நிறைய எழுதினேன். பிறகு குறைத்துக்
கொண்டேன். அவ்வளவே::!!!
புத்திசாலி :-)
நான் இனிமேல்தான் காதல் கவிதைகள் எழுதலாம் என்றிருக்கிறேன். வெளங்கும்னு யாருய்யா குரல் விடுறது?