சின்னத் தம்பியும், குஷ்புவின் தமிழர் கலாச்சாராமும்....

195 views
Skip to first unread message

நண்பன்

unread,
Sep 25, 2007, 10:24:04 AM9/25/07
to பண்புடன்
சரி, தனித் தலைப்பு தொடங்கியாயிற்று. அதாங்க, திரைப்பார்வையில் தொடங்கிய
விவாதம், இங்கே தொடரும்.

முழு விவரமும் தெரிய வேண்டுமானால், திரைப்பார்வையில் ஒரு வாசிப்பு
வாசிச்சுட்டு வந்துருங்கோ.....

எல்லோரும் வாங்க, விவாதத்திற்கு....

நட்புடன்

நண்பன்

Asif Meeran AJ

unread,
Sep 25, 2007, 10:47:57 AM9/25/07
to panb...@googlegroups.com
நல்லது. தலைப்பு தமிழ்ல இருக்குறதுங்குற ஒரே குறையை தவிர்த்தால் ஆட்டத்துக்கு அடிக்கல் போட்டுடலாம்.
 
குஷ்பூ சொன்னது என்ன? அப்படி அவர் சொல்லலாமா? அப்படிச் சொல்லக் கூடிய தகுதி அவருகு இருக்கிறதா? அவரை அதற்காக எதிர்கொண்டவர்கள் செய்தது முறைதானா?
 
இப்படி உருப்படியான விவாதமாக இருந்தால் சரி
 
கேவல்ம் ஒரு நடிகைக்கு என்ன் யோக்யதை என்பது போன்ற தனிப்பட்ட விமர்சனங்களளத்தவிர்த்து பண்புடனுக்கேற்ற வகையில் கருத்தாடலாம்  வாருங்கள்

SHAJAHAN

unread,
Sep 25, 2007, 11:04:11 AM9/25/07
to panb...@googlegroups.com

ச்சே! மறந்தே போச்சு....
 
இனி மாததனும்னுன்னா, யாராவது செஞ்சு கொடுத்தால் தான் உண்டு....
 
On 9/25/07, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:
நல்லது. தலைப்பு தமிழ்ல இருக்குறதுங்குற ஒரே குறையை தவிர்த்தால் ஆட்டத்துக்கு அடிக்கல் போட்டுடலாம்.
 
 
ஆமாம் - குறிப்பாக 'அவள், இவள் போன்ற ஏக விளி எல்லாம் வேண்டாம்...'
 

 
கேவல்ம் ஒரு நடிகைக்கு என்ன் யோக்யதை என்பது போன்ற தனிப்பட்ட விமர்சனங்களளத்தவிர்த்து பண்புடனுக்கேற்ற வகையில் கருத்தாடலாம்  வாருங்கள்


--
நண்பன்
----------------
உண்மையென்பது நிபந்தனையற்ற கருத்துகளின் தொகுப்பே.

செல்வன்

unread,
Sep 25, 2007, 12:05:34 PM9/25/07
to panb...@googlegroups.com
                                  குஷ்புவும்  சோமு தங்கச்சியும்
 
எனது நண்பன் சோமு வீட்டுக்கு போயிருந்தேன்.அவன் மேட்டூருக்கு போயிருப்பதாக சொன்னார்கள்.சரி எதோ சுற்றுலா போயிருக்கிறான் என்று நினைத்துகொண்டிருந்தேன்.நாலைந்து நாள் கழித்து பார்த்தால் நொண்டி நொண்டி நடந்து வந்து கொண்டிருந்தான். 'என்னடா ஆச்சு ' என்று கேட்டதற்கு மேட்டூரில் போலீஸ் லத்திசார்ஜ் செய்து காலில் அடித்தார்கள் என்றான்.

'அட பாவமே போலீஸ் கிட்ட எதுக்குடா அடி வாங்கினாய் ? ' என்று கேட்டேன். 'கோர்ட்டில் குஷ்பு மீது தக்காளி வீசியதற்கு தடியடி நடந்தது.அதில் அடிபட்டுவிட்டது ' என்றான்.

'ஓ இதுதானா நீ மேட்டுருக்கு போன சுற்றுலா ' என்று நினைத்துகொண்டேன்.அதன் பிறகு ரொம்ப நேரம் சுகாசினியை திட்டிகொண்டிருந்தான்.என்னால் காதுகொடுத்து கேட்க முடியவில்லை.

'அப்படி என்னடா தப்பா சொல்லிட்டாங்க ' என்றேன்.பிலுபிலு என்று பிடித்துகொண்டான். 'திருமணத்துக்கு முன் பெண்கள் செக்ஸ் வைத்துகொள்வது தப்பில்லை,பெண்கள் பாருக்கு போவது தண்ணியடிப்பது தப்பில்லை என்கிறார்கள்,பாய் பிரண்ட்ஸ் வைத்துகொள்ள சொல்கிறார்கள்.இதைஎல்லாம் விட்டுவைப்பதா ' என்று பொங்கினான்.

'சரி நீ தண்ணியிலேயே மூழ்கி கிடப்பவனாயிற்றே,பெண்கள் தண்ணி அடித்தால் என்ன தப்பு ' என்று கேட்டேன்.அவனுக்கு பிரமாதமான கோபம் வந்துவிட்டது. 'ஆண் என்ன வேண்டுமானாலும் செய்வான்.பெண் செய்யகூடாது.அது தான் கலாச்சாரம்,தமிழ் பண்பாடு ' என்றான்.

'சரியப்பா,ஆம்பளை தான் உசத்தி,பொம்பளைக பணிஞ்சு தான் போகணும் ' என்றேன்.அந்த பதில் அவனுக்கு பிடிக்கவில்லை போலிருந்தது. 'அப்படி எல்லாம் இல்லை.ஆனா யோசிச்சுபார் நாம சைட் அடிக்கிறோம்,தம் அடிக்கிறோம்.சரி.அதே நம்ம அக்கா, தங்கச்சி தம் அடிச்சா,கல்யாணத்துக்கு முன்னாடி எவன்கூடவாவது போனா ஒத்துக்குவமா ? ' என்று கேட்டான்.

'இல்லடா அது முடியாது ' என்று சொன்னேன்.அவனுக்கு ஒரே சந்தோஷமாகிவிட்டது. 'அதுதாண்டா நானும் சொன்னேன்.ஆம்பளைக ஆயிரம் தப்பு பண்ணுவானுங்க,பொம்பளை போட்டி போட்டுட்டு அதே மாதிரி தப்பு பண்ணலாமா ' அப்படின்னு கேட்டான்.

எனக்கு இதில் எதோ தப்பு இருக்கற மாதிரி தெரிஞ்சது. 'இல்லடா சோமு.அப்ப நீ என்ன தாண்டா சொல்லவர்ரே ?நீ பப்புக்கு,டிஸ்கொதேக்கு போவே ஆனா உன் தங்கச்சி போககூடாது அப்படிதானே ' என்று கேட்டேன். 'ஆமாம் ' என்று சொன்னான்.

'நீ மட்டும் ஏண்டா போறே ? ' என்றேன். 'அது என் அடிப்படை சுதந்திரம் ' என்று சொன்னான். 'உன் தங்கச்சிக்கு அந்த சுதந்திரம் இல்லையா ' என்று கேட்டதற்கு 'இல்லை,தமிழ் கலாச்சாரம் ' என்றான்.திருவிளையாடல் சிவன் தருமி பாணியில் ஒரு கேள்வி பதில் அடுத்து ஆரம்பமானது.

'சரி நீ கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட ஆளோட ,பீச்சு,பப்புக்கு,டிஸ்கோக்கு போவியா ? '

'பின்ன,இங்க எல்லாம் போகாமயா லவ்வு பண்ண முடியும் ? '

'சந்தர்ப்பம் கிடைச்சா பலான விஷயம் கூட பண்ணுவே இல்லையா ? '

'கண்டிப்பா..இது என்ன கேள்வி ?என்னோட ஆளுன்னு இல்லை.எந்த பொண்ணு கிடைச்சாலும் விடமாட்டேன். 12 வயசுல இருந்து எப்படா வாய்ப்பு கிடைக்கும் எவ மாட்டுவான்னு காத்துட்டிருக்கேன்..எது என்னடா கேள்வி ? '

'சரி அப்ப உன்கூட பப்புக்கு,பீச்சுக்கு வர்ரத்துக்கு,பலான விஷயம் பண்றதுக்கு உன்னோட ஆளுக்கு சுதந்திரம் வேணுமா வேண்டாமா ? '

'கண்டிப்பா வேணும். '

'அவ அண்ணன்காரன் தடுத்தா என்ன பண்ணுவே ? '

'கைய்ய உடைப்பேன்.நான் ஆம்பளை '

'என்னடா அக்கிரமமா இருக்கு.கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தங்கச்சி எல்லாம் ஒழுக்கமா வீட்டுல இருக்கணும்னு சொன்னாய்.இப்ப என்னடான்னா மாத்தி பேசறாய் ? '

'அது என் தங்கச்சிக்கு சொன்னது.என் தங்கச்சி ஒழுக்கமா இருக்கணும்.அவ்வளவுதான் '.

'அப்ப அடுத்தவன் தங்கச்சி ஒழுக்கமா இருக்ககூடாதா ? '

'அதெப்படி ?அப்புறம் யார் என்கூட மஜா பண்ணறது ?அதெல்லாம் ஒத்துக்க முடியாது.மத்த பொண்ணுக கட்டுபெட்டியா இருந்தா எனக்கு புடிக்காது '

'குஷ்பு சொன்னதும் அதுதாண்டா. 'எல்லா பொண்ணுங்களும் ஜாலியா இருக்கணும் 'னு நீ சொல்றதை தானே அவங்களும் சொன்னாங்க.அப்புறம் எதுக்கு நீ தக்காளி வீசுன ? '

'குஷ்பு அப்படி பேசிருக்க கூடாது.வேற மாதிரி பேசிருக்கணும் '

'எப்படி பேசிருக்கணும் ? '

'சோமு தங்கச்சி சிவகாமி மட்டும் தமிழ் பண்பாட்டோட இருக்கணும்.மத்த பொண்ணுங்க எல்லாம் அடிச்சு தூள் கிளப்பணும்னு ' பேசிருக்கணும்.

நான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன்.




--
செல்வன்

http://www.holyox.tk
http://groups.google.com/group/muththamiz


தனிமடல் தொடர்புக்கு: hol...@gmail.com

செல்வன்

unread,
Sep 25, 2007, 12:06:40 PM9/25/07
to panb...@googlegroups.com
நல்ல விவாதம்.இது பற்றி நான் எழுதிய பழைய கதை ஒன்று மேலே இட்டிருக்கிறேன்

Asif Meeran AJ

unread,
Sep 25, 2007, 12:11:08 PM9/25/07
to panb...@googlegroups.com
வாங்க செல்வன்
நெனச்சேன் நீங்க் கட்டாயம் ஆட்டைல கலந்துக்குவீங்கன்னு :-)
 
வாங்க வாங்க எல்லாரும் வரட்டும் மீதிக்கதைஅயி பொறவு பேசுவோம்

 

நந்தா

unread,
Sep 25, 2007, 1:46:10 PM9/25/07
to பண்புடன்
அண்னாச்சி எப்படியோ ஆட்டத்தை நீங்களே ஆரம்பிச்சு வெச்சுட்டீங்க.
பரவாயில்லை.

//கேவல்ம் ஒரு நடிகைக்கு என்ன் யோக்யதை என்பது போன்ற தனிப்பட்ட
விமர்சனங்களளத்தவிர்த்து பண்புடனுக்கேற்ற வகையில் கருத்தாடலாம்
வாருங்கள் //

சரியான வார்த்தைகள். ஆரம்பத்திலேயே விவாதம் தரம் இழந்து விடாமலிருக்க
நீங்கள் சொன்ன வார்த்தைகள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப் பட
வேண்டியவைதான்.

நட்புடன்,
நந்தா.

Siddharth Venkatesan

unread,
Sep 25, 2007, 1:51:15 PM9/25/07
to panb...@googlegroups.com
குஷ்பு என்ன சொன்னாங்கன்னு சரியா யாராவது எடுத்துப் போட்டா அங்க இருந்தே
ஆரம்பிக்கலாம் விவாதத்த. ஏன்னா இந்த விவாதத்தோட முதல் சுற்றுல அந்த பேச்ச
கண்ல காமிக்கவே இல்ல...

Asif Meeran AJ

unread,
Sep 25, 2007, 2:23:53 PM9/25/07
to panb...@googlegroups.com
சித்தார்த் ஆரம்பப் பிரச்னையே அதுதான்
அவங்க என்ன சொன்னாங்கன்னு யாருக்கும் தெரியலை
ஆனா, அவங்க முன்னுக்குப் ப்இன் முரணா பேசினாங்கங்குறது மட்டும் புரிஞ்சது.
 
கல்யாணத்துக்கு முன்னால பாலியல் தொடர்பு வச்சுக்குறது தப்பில்ல அப்படின்னு அவங்க திருவாய் மலர்ந்தருளியதாகச் செய்தி. அது அவர்களது கருத்து. அதைச் சொல்ல அவங்களுக்கு உரிமை இருக்கு. திருமணத்துக்கு முன்னால பாலியல் உறவுகள் இருந்தால் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்கும் நிலையில் இருக வேண்டுமென்ற நிலை இருந்தால் போதுமானது என்பது போல ஒரு பாவனையை உருவாக்கியிருந்தார் அவர்.
 
அதற்காக அவர் மீது எவரும் கல்லெறிந்ததாக நினைவில்லை. கூடவே தமிழநாட்டில் எத்தனை பெண்கள் அப்படி இல்லாமல் இருக்கிரார்கள் என்று ஒரு அசட்டு துணைக் கேள்வியையும் எழுப்பியதால்தான் அவர் மீது செருப்பு மாலை வீசப்பட்டதாகத் தகவல்.
 
இதுதான் ஊடகமும், பதிவுகலமும் சொல்லிய செய்திகள். இனி இதனைக் குறித்து விவாதிக்கலாம். ஆமா, இதுல சின்ன தம்பி எங்கேருந்து வந்தார்??
:-)

 

நண்பன்

unread,
Sep 25, 2007, 2:38:34 PM9/25/07
to பண்புடன்
குஷ்பு பிரச்சினையை ஒட்டி, திண்ணை தளத்தில் வாஸந்தி எழுதியதற்குப்
பதிலாக, இந்தக் கட்டுரையை அவர்களுக்கு அனுப்பி வைத்து இருந்தேன்.
கடிதங்கள் பகுதியில் அதைப் பதிப்பித்திருந்தார்கள். இந்த விவாதத்திற்கு
இது உதவும் என்பதால், இங்கே அதை மீண்டும் பதிப்பிக்கிறேன்.

இதை எனது 'நிகழ்வுகள்' என்ற தளத்திலும் பதிப்பித்திருந்தேன். இப்பொழுது
அந்தத் தளத்தைத் தொடரவில்லையென்றாலும், நீங்கள் அதை இங்கே படிக்கலாம்.

பிரேமின் கேள்விகளுக்குப் பின்னால் பதில் தருகிறேன். அது வரையிலும் இதைப்
படித்து வையுங்கள்.

http://nigarshaji.blogspot.com/2005/10/blog-post.html

அறிவுஜீவிகளின் குஷ்பி(வி)சம்.

தமிழ்ப் பெண்களின் பிரதிகளாகத் தங்களைக் கருதி கருத்துச் சொல்லும்
பெண்கள் - அதை சொல்வதோடு நிறுத்திக் கொண்டால் அதை கருத்துச் சுதந்திரமாக
எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் தாங்கள் பயின்ற வாழ்வையே தங்கள் கருத்தாக
வழி மொழியும் பொழுது அதில் நமக்கு என்ன தடைகள் இருக்கப் போகிறது?

ஆனால் அவர்கள் கருத்து அதையும் மீறி அனைத்துப் பெண்களின் மீதும்
திணிக்கப்படும் பிரதிநிதித்துவமான கருத்தாக மொழியப்படும் பொழுது - பிற
பெண்களின் மீதான கருத்துத் திணிப்புத் தானே? அடுத்தவர் கருத்துச்
சுதந்திரத்தைப் பறித்துத்தான் பெண்ணியவாதிகள் தங்கள் கருத்து கற்பிதங்களை
நிறுவுவார்களோ?

கருத்து சுதந்திரம் பேச முனைந்தவர்கள் - முதலில் பிரச்சினையின் முழுத்
தன்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். வாஸந்தி சொல்லுகிறார் - இந்தியா
டுடேயில் குஷ்புவின் கருத்தைக் கண்டு மிரண்டு பாய்ந்து விட்டனர் தமிழ்ப்
பண்பாட்டுப் பாதுகாவலர்கள் என்று. ஒரு அடிப்படை நேர்மை கூட இல்லாத
வாஸந்தி முழுப்பூசணிக்காயை அல்ல - முழு குஷ்புவையே சோற்று மூட்டைக்குள்
மறைக்கப் பார்க்கிறார். தமிழ் வாசிக்கத் தெரிந்த அனைவரும் இதை அறிவர்.

குஷ்பு இந்தியா டுடேயில் கூறிய எந்த ஒரு கருத்தையும் பெரிய அளவில் தமிழ்
மக்கள் அறிந்திருக்கவில்லை. போராட்டம் அதற்காகத் தொடங்கப்படவில்லை. மாறாக
தினத்தந்தியில் குஷ்பு பேசிய கருத்துத் திணிப்பை வாசித்துத் தான் அத்தனை
பெண்களும் கொதித்து எழுந்தனர். இந்தப் பின்னணியை வாஸந்தி
அறிந்திருக்கவில்லையா? அல்லது பாமர மக்கள் படிக்கும் தினத்தந்தியை, தான்
வாசித்ததை வெளியில் சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறாரா வாஸந்தி? இங்கேயே
தன் சார்புத் தன்மையை வெளிப்படுத்தி விடுகிறார். தான் பாமர மக்களின்
பக்கம் அல்ல என்பதை.
ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான பக்கமிருந்து கொண்டு, மீதியுள்ள
பெரும்பான்மையினரைப் பார்த்து, இழித்து இவர் பேசுவது கருத்து
சுதந்திரமாகிவிடுகிறது. இந்த கருத்தியல் பலாத்காரத்தை கண்டித்துப் பேசும்
மற்றவர்கள் எல்லாம் திராவிட வர்க்கத்தினர்!! என்ன ஒரு நியாயம் இது? இவரது
கோபமெல்லாம் - திராவிட இனத்தவர் மீது தானே தவிர - குஷ்பு விளக்கம்
சொல்லும் பெண்ணியத்தின் சார்பாக நின்று அல்ல.

அடிப்படையிலே நேர்மைத் திறனுடன் பேசும் தகுதி இழந்த பின்னும் வாஸந்தியின்
கருத்துகளைப் பொருட்படுத்த வேண்டுமா? ஒரு வாதத்திற்காக மேற்கொண்டும்
வாஸந்தியின் கருத்துகளை விவாதிக்கலாம்.

அவரின் ஆதங்கமே - திராவிட இனத்தை வசை பாட வேண்டும். அதற்கு குஷ்புவின்
கருத்து திணிப்பை பயன்படுத்திக் கொண்டு - சம்பந்தமேயில்லாத கருத்து
கோவைகளை எடுத்து வருகிறார்.

முதலில் பண்பாட்டுக் காவலர்கள் என்கிறார் - வாஸந்தி. அப்படியானால் அவர்
யார்? பண்பாட்டுக் கயவரா? காவலர்களின் பணி கயமைத்தனத்தை எதிர்ப்பது தானே?

விட்டுவிடுவோம்.

ஒரு நிலைபாடு எடுத்து விட்டு, பிறகு அதில் நின்று, எதிர்கருத்துகளின்றி
வெறும் வறட்டுக் கூச்சலினாலே வாதம் புரிவது தான் வாஸந்தியின் நோக்கம்.
பெண்ணியம் பற்றி பேசக் கிளம்பி பின் தேசியம் பேசுகிறார். தேசியம் என்பது
ஒரு கற்பிதம். தமிழ் தேசியம் என்பது ஒரு பயங்கர கற்பிதம். அப்படியானால்
கற்பிதமில்லாத ஒரு நியதியை எடுத்து வைக்கலாமே? கற்பிதமில்லாத நியமம்
என்று ஒன்று உண்டா?

பெண்ணியம் என்பது கூட ஒரு கற்பிதமாகத்தானே வளர்க்கப்படுகிறது? ஒவ்வொரு
பெண்ணும் தான் சுயமாக சிந்தித்தவற்றை வைத்தா பெண்ணுரிமை பேசுகிறாள்?
இல்லையே? குஷ்பு, வாஸந்தி போன்ற வெளியே தெரியும்படியான அடையாளம் உள்ள
பெண்கள் தரும் தகவல்கள், கருத்துகள் இவற்றைக் கொண்டு தானே கற்கிறார்கள்?
கற்பிதம் என்ற இயங்குதலில் ஈடுபட்டு நிற்கும் இவர்கள் தங்களை விலக்கிக்
கொண்டு மற்றவர்களை நோக்கி விரல் நீட்டுவது ஏன்? ஒரு விரலை நீட்டும்
பொழுது மற்ற விரல்கள் அனைத்தும் தங்களை நோக்கி குவிந்திருப்பதை
அறிந்திருக்கவில்லையா? இவ்வுலகின் எந்த ஒரு சித்தாந்தமுமே கற்பிதம்
இல்லாமல் இயங்குவதில்லை. பிறகு தமிழ்த் தேசியத்தின் மீது ஏன் இந்த
பாய்ச்சல்? அது - ஆற்றாமை. மக்களின் விழிப்புணர்ச்சியால் தங்களுக்கு
ஆபத்து என்று நினைக்கும் ஆதிக்க இனத்தின் மன உளைச்சல். மாறாக பெண்களின்
விடுதலை அல்ல.

இதே வீச்சில் பேசும் பொழுது - பெரியாரின் கொள்கைகளைத் தூக்கிப்
பிடிக்கிறார்கள். எந்தப் பெரியாரை தீவிரமாக எதிர்த்து வந்தார்களோ அந்தப்
பெரியார் திடீரென்று இவர்கள் கண்களுக்குத் தீர்க்கதரிசியாகப் படுகிறார்.
இந்த வகையில் குஷ்பு கிளப்பிய இந்த விவாதம் ஒரு நன்மையில்
முடிந்திருக்கிறது - ஆம் இன்று பெரியார் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டார்.
பதிவாகி இருக்கிறது - இந்தியா டுடேயில். எந்தப் பத்திரிக்கையை வாசிப்பது
தான் தங்கள் தர்மம் என்று வாஸந்தி போன்ற நேர்மையற்ற அறிவுஜீவிகள்
கருதுகிறார்களோ அதே பத்திரிக்கையில் இருந்து நாளை எங்களாலும் மேற்கோள்கள்
கொடுக்க முடியும் - இவர்களின் பெரியார் ஏற்புக் கொள்கையை.

ஆனால் இந்த மகிழ்வு - இவர்கள் பெரியாரை ஏற்று ஒரு ஆயுதமாக தமிழ்
சமூகவியலாளர்களுக்கு எதிராக முன் வைக்கும் பொழுது வடிந்து விடுகிறது.
பெரியாரைப் பற்றிய அறியாமை தான் இவர்களிடத்தில் இருக்கிறது. பாவம்
அவர்கள் என்ன செய்வார்கள் - முதன்முறையாக பெரியாரை எடுத்துக் கொண்ட
பொழுது கொஞ்சம் பிசகத் தான் செய்யும்.

பெரியார் கூறியது என்ன?

திருமணத்திற்கு முன் உறவு வைத்துக் கொள்ளுங்கள் என்றா கூறினார்? அப்படி
எங்கும் கூறியதே இல்லை. ஒழுக்கக் கேட்டை அவர் எங்கும் போதித்தது
கிடையாது.

அவர் கூறியதெல்லாம் - எவற்றைக் கொண்டு பெண்கள்
அடிமைப்படுத்தப்படுகிறார்களோ அவற்றை பெண்கள் துணிந்து செய்ய வேண்டும்
என்று!!! ஒரு ஆண்மகன் ஒருத்தியை ஆசை நாயகியாக வைத்துக் கொண்டால்,
அதற்குப் பதிலாக பெண்களும் ஆண்களை வைத்துக் கொள்ளுங்கள். இப்படித் தானே
கூறினார்? ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகக் கூறியதை அப்படியே
அர்த்தப்படுத்திக் கொள்வதாக இருந்தாலும் கூட, அவர் பேசியது
திருமணத்திற்குப் பின் பெண்கள் தங்களை எப்படி நடத்திக் கொள்ளலாம் என்று
தானே? அதாவது அவர் ஆண்- பெண் வர்க்கப் போராட்டத்தின் தாத்பரியத்தைத்
தெளிவாகப் புரிந்திருந்தார்.

ஒரு பெண் எங்கு மிக அதிகமாக அடிமைப்படுத்தப் படுகிறாள்? எந்த இடத்தில்
அவள் தன் சுயமரியாதையை இழக்கிறாள்? மனைவி என்ற முறையில் தான் அவள்
சுரண்டலுக்கும் அடிமைத்தனத்திற்கும் மிகுதியாக உள்ளாக்கப்படுகிறாள். ஒரு
மகளாக, ஒரு சகோதரியாக, ஒரு தாயாக சிறுமைப்படுத்தப்படுவதை விட - ஓர்
ஆணிடத்தில் மனைவியாக அடிமைப்பட்டுக் கிடக்கும் பொழுது தான் அதிகம்
சிறுமைக்கு ஆளாக்கப்படுகிறாள். அதனால் தான் பெரியார் பெண்ணியம்
பேசும்பொழுது கணவனின் ஆதிக்கத்தை எதிர்க்க பெண்களுக்கு அறைகூவல்
விடுக்கிறார்.

ஆனால் குஷ்பி(வி)சம் பேசும் பெண்ணியவாதிகள் எதை உரிமையாக - விடுதலையாகக்
கேட்கிறார்கள்?

திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளும் உரிமை!!!

கணவனுடன் (என்ற ஆணுடன்) இணைந்து இயங்கும் பொழுது இன்று இவர்களால்
வலியுறுத்தப்படும் இந்த உடலுறவு உரிமை தேவையில்லையா? தந்தையின்
கட்டுப்பாட்டில் இருக்கும் பெண், தனது உரிமை என்று கருதும் ஒன்று -
கணவனின் கட்டுப்பாட்டிற்குள் வரும் பொழுது தேவையில்லாத ஒன்றாகி விடுமா?
அப்படியானால் - இந்த பெண்ணியவாதிகளின் போராட்டமெல்லாம் தந்தையர்களை
எதிர்த்துத் தானா? வேறெதுவுமில்லையா? என்ன ஒரு பித்தலாட்டம்? பெண்ணியம்
என்பதை ஒரு துளி கூட புரிந்து கொள்ளாது, வியாக்கியானங்கள் மட்டும்
பேசினால் போதுமா?

சங்க இலக்கியங்களையும் துணைக்கழைக்கிறார்கள் -

சங்க இலக்கிய காலத்தில் - தாலி என்ற ஒன்று இல்லை தான்.(தாலி என்பதே
பிற்கால கற்பிதம் - வந்தேறிகளின் வழியான கற்பிதம்) ஆனால் அவர்கள் தலைவன்
தலைவியாகத் தானே வாழ்ந்தார்கள்? களவிலும் ஒழுக்கம் கண்ட மரபு அது என்பது
சரிதான். ஆனால் களவு புரிந்தது யாரோடு? தன் காதலனுடன். பின்னாளில்
இணைந்து வாழப் போகும் ஆடவனுடன். இன்று இச்சைக்காக உடலுறவு புரிந்து நாளை
வேறு ஒருவனை மணக்கப் போகும் நங்கை அல்ல அவள்.

எதையும் துணைக்கழைக்கும் பொழுது, அதன் பின்னணியை ஆராயாது அதை மேற்கோள்
காட்டுவது என்பது தவறல்லவா?

சங்க இலக்கியத்தில் தாலி இல்லை. காதலர்களுக்குத் திருமணம் செய்து
கொள்வதில் தடையேதுமில்லை. சாதிகள் குறுக்கிடாத சமூகம் அது. ஒருவரை ஒருவர்
ஏய்த்துப் போகும் எண்ணமில்லை.

இதெல்லாம் இப்பொழுது நடக்கக் கூடிய சாத்தியம் உண்டா? பெண்கள் ஏமாந்து
போவதற்கு மிகுதியான வாய்ப்புகள் உண்டு. அதனாலயே பாதுகாப்பு கருதி உறை
அணிய ஆலோசனை சொல்கிறார்களா? இந்த உறவை எப்படி சங்க இலக்கியத்துடன் ஒப்பு
நோக்குகிறார்கள்? திருமண பந்தங்களே ஒரு ஒப்பந்தம் என்ற நிலையில் அந்த
ஒப்பந்தத்தில் ஈடுபடும் இருவரும் உறவு கொள்வதும், எந்த ஒரு உறவிற்கும்
உத்தரவாதமில்லாத உறவில் பாதுகாப்புடன் ஈடுபடும் இருவரும் ஒன்றா?

தேவை கருதி சங்க இலக்கியம் இனிக்கிறது. தங்களை விட்டால் சங்க
இலக்கியங்களைக் கற்றவர்கள் யாருமில்லை என்ற மமதையில் மேற்கோள் காட்டுவது
அறிவுஜீவிகளின் தரம்.

இன்று இந்த குஷ்பிசத்தை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்பவர்கள் - அடிதட்டு
மக்களே - வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் கீழ்மையுற்ற நிலையிலிருந்து
மேல்நோக்கிய ஏற்றத்தில் போராடி ஏறிவரவேண்டிய கட்டாயம். ஒரு அடிப்படை
ஒழுக்கமிருந்தால் மட்டுமே இந்த மேல்நோக்கிய பயணத்தில் இயங்க முடியும்.
இங்கு திருமணத்திற்கு முன்பான உறவுகள் இருந்தால் - பெண்களுக்குள்ள சிரமம்
அதிகம். மேல்நோக்கிய பயணத்தில் இந்தப் பெண்கள் புறக்கணிக்கப்படும்
சாத்தியக் கூறுகள் அதிகம். சமூகத்தின் அடிதட்டிலிருந்து வரும் இந்தப்
பெண்களை மேலிருக்கும் சமூகம் ஏற்றுக் கொள்ளாது. ஆனால் மேல்மட்ட சமூக
பெண்களுக்கு இந்த சிக்கல்கள் அதிகமிருக்காது. அவர்களை ஏற்றுக் கொள்வதில்
அவர்களுக்கு கீழிருப்பவர்களுக்கு அதிக சிரமமிருக்காது. ஆகையால் மேல்தட்டு
மக்கள் களவு ஒழுக்கத்தில் ஈடுபட்டு வழுக்கிவிட்டாலும் பாதகமில்லை. ஆனால்
கீழ்தட்டு மக்களுக்கு அவ்வாறில்லை. ஆகவே தான் இத்தனை சீற்றம். இதை தமிழ்
மக்களின் கருத்து சுதந்திரத்தின் தோல்வியாக நிறுவ முயல்வது மேல்தட்டு
மமதையே அன்றி வேறெதுவுமில்லை.

ஆக குஷ்பி(வி)சம் பேசுபவர்கள் மூன்று விதத்தில் பெண்களுக்கு எதிரான
கருத்தை சொல்கிறார்கள்.

1. சாதியம் நிறைந்த இந்த சமூகத்தில் களவு ஒழுக்கம் எடுபடாது. அத்தகைய
நடைமுறையை ஏற்படுத்த முதலாக சாதியத்தை ஒழிக்க வேண்டும். இதன்
அடிப்படையிலேயே குஷ்பு அடித்தட்டு மற்றும் பிற்படுத்தப்பட்ட பெண்களால்
எதிர்க்கப்படுகிறார்.

2. உடலுறவு சுதந்திரத்தை இவர்கள் ஒரு ஆயுதமாக தந்தை, தாய் என்ற குடும்ப
அமைப்பிலிருக்கும் பொழுது கேட்கிறாள். இவளே தனியாகக் கணவன் என்பவனுடன்
இணைந்து குடும்பம் என்ற நிறுவனத்தை நிறுவும் பொழுது அதை உரிமையாகக்
கேட்பதில்லை. ஒரு வயதில் விடுதலையாகக் கருதப்படுவது மற்றுமொரு வயதில்
உரிமையாகப் பார்க்கப்படுவதில்லையே - ஏன்? அப்படியானால் -
antiestablishment trait - என்ற இளமையின் துடுக்கையும் நிறுவன
எதிர்ப்பில் மதர்த்து நிற்கும் இளமையின் இச்சையையும் தீர்த்துக் கொள்ளும்
வேட்கைக்கு மட்டும் தானா உரிமை? இது தவறாகப்படவில்லை?

3. உடலுறவு தான் உரிமை - திருமணத்திற்கு முன்னோ அல்லது பின்னோ என்று
வைத்துக் கொண்டால் கூட, அது என்ன உரிமையைப் பெற்றுத் தந்து விடும்.?
உரிமை என்று நினைக்கும் உடலுறவிற்காக ஒரு ஆணிடம் தானே போய் நிற்க
வேண்டியதிருக்கிறது? ஒரு ஆணிடம் சரணடைந்து - இணங்கி - ஒத்துழைத்து - எந்த
உரிமையை நிலைநாட்டப் போகிறீர்கள்? எங்கிருந்து வந்தது இதில் உரிமை? இது
கடைந்தெடுத்த அடிமைத்தனம் அல்லவா?

ஆக குஷ்பு பேசியது - அவருடைய அளவில் சரியே தவிர - அது பெண்களின் -
சுயமரியாதை உள்ள எந்த ஒரு பெண்ணுக்கும் உரிமை ஆகாது.

ஆமாம் - உரிமை என்பது உடல் சார்ந்த ஈர்ப்பில் இருப்பதில்லை. அது ஒரு
பெண்ணின் சுயமரியாதையில் இருக்கிறது. தனக்கு விருப்பமிருந்தால் மட்டுமே
உடலுறவில் ஈடுபடுவேன் என்று நிறுவும் ஆளுமையில் இருக்கிறது - அது கணவனாக
இருந்தால் கூட - Empowering the self esteem is the freedom for the
women. (for anyone, as a matter of fact)

இறுதியாக - யோனியின் காவலர்கள் - இருந்துவிட்டுப் போகிறோம். ஆனால்
இவர்கள் உரிமை என நினைத்து வீர்யம் பெற்ற யோனியை எவருடனும் பகிர்ந்து
கொள்வோம் என்ற தங்கள் சொந்த விருப்பை எல்லாப் பெண்களின் மீதும் திணித்து
ஒரு கருத்தியல் வன்முறைக்கு - கருத்தியல் பாஸிசத்திற்கு உட்படுத்தும்
பொழுது - அப்பாவிகளின் யோனிகளுக்கு காவல் தேவையாகத் தான் இருக்கிறது -
எல்லாவித புரிதல்களுடன் விரிந்து கொடுக்கும் அறிவுஜீவிகளின்
யோனிகளுக்கல்ல.
***

படித்து விட்டீர்களா?

நன்றி,

நந்தா

unread,
Sep 25, 2007, 2:48:55 PM9/25/07
to பண்புடன்
சரி நான் இப்போ எனது பகுதிக்கு வருகிறேன்.

குஷ்பூ சொன்ன வார்த்தைகளுடன் கருத்தளவில் நான் சுத்தமாக ஒத்துப் போக
வில்லை. ஆகையால் அவர்கள் கருத்தை எதிர்த்துதான் நான் இங்கு விவாதிக்கப்
போகிறேன்.

குஷ்பூ குறித்தான பேட்டி எனக்குள் பலத்த சலனத்தை உண்டாக்கி இருந்ததால்
இது குறித்து நடந்த பல விஷயங்களை நான் ஓரளவு அறிந்தே
வைத்திருக்கிறேன்.அந்த பேட்டியில் அவர் சொல்லி இருந்த ஒரு சில விஷயங்கள்
இதோ:

அந்த பேட்டிக்கு இந்தியா டுடே அளித்திருந்த தலைப்பு "காலாவதியாகும்
கற்பு".

"பெண்கள் தங்களுடைய செக்ஸ் விருப்பங்களை வெளியிடும் விஷயத்தில் சென்னை,
பெங்களூரை விட பின்தங்கியே இருந்தது. இப்போது சென்னையிலுள்ள பெண்கள்
செக்ஸ் பற்றிய மனத்தடைகளைக் கடந்து வருகிறார்கள்"

"ஒரு பெண் தனது பாய் பிரெண்டைப் பற்றி உறுதியாக இருக்கும்போது அவள் தனது
பெற்றோரிடம் சொல்லிக் கொண்டே அவனுடன் வெளியே போகலாம்... நான் காதலித்த
நபரைத் திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் எங்களது உறவு பற்றி நிச்சயமாக
இருந்ததால், திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம்"

"எங்களுடைய மண வாழ்க்கை நன்றாகவே போகிறது. குழந்தைகள் சற்று வளர்ந்து
விட்டதால் எங்களது தாம்பத்ய வாழ்க்கைக்கென்று தனி நேரம் ஒதுக்கிக் கொண்டு
வாழ்கிறோம்"

மேலே குறிப்பிட்டவை குஷ்பு அவர்கள் சொன்ன கருத்துக்கள். இதிலெல்லாம்
சத்திய்மாக எனக்கு ஒரு பிரச்ச்சினையும் இல்லை.

"பெண்கள் இப்போ எல்லாம் ரொம்ப அட்வான்ஸா இருக்காங்க. இளம் பெண்கள்
கல்யாணத்துக்கு முன்னாடி உடலுறவு வைத்துக் கொள்வது எல்லாம்
தவறில்லை.அப்படி ஈடுபடும் போது பாதுகாப்பான உறவு வைததுக் கொள்ள
வேண்டும்.அதுதான் மிகவும் முக்கியம்.

அதற்கப்புறம் கொடுத்த ஒரு பேட்டியில்

"நான் சொன்னதில் என்ன தவறு. உண்மையிலேயே படித்த அறிவுள்ள இளைஞர்கள் தனது
மனைவி கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க
மாட்டார்கள்."

"எத்தனை பேர் கல்யாணத்தின் போது கன்னித் தன்மையுடன் இருக்கிறார்கள் என்று
சொல்லுங்கள் பார்க்கலாம" (இதை உண்மையில் சொன்னாரா என்று தெரிய வில்லை.
பாதிபேர் சொன்னார் என்றும் பாதி பேர் இல்லை என்றும் சொல்கிறார்கள்).

இது இரண்டையும்தான் குஷ்பு சொல்லி இருந்தார் என்பது என் எண்ணம். இதை
வைத்துதான் நான் பேசப் போகிறேன். இல்லை இந்த வார்த்தைகள் இல்லை. என்று
யாரேனும் வார்த்தை அமைப்புகளை மாற்றுவதாய் இருந்தால் வந்து
திருத்துங்கள். அப்புறம் தொடரலாம்.

Asif Meeran AJ

unread,
Sep 25, 2007, 2:50:52 PM9/25/07
to panb...@googlegroups.com
சபாஷ்! மீண்டும் ஒரு நல்ல கருத்தாடலுக்கான தளம் அமைந்து விட்டது போலிருக்கிறது. எல்லாரும் வந்து யுவராஜ் மாதிரி அடித்து விளையாடுங்கள் :-)

நந்தா

unread,
Sep 25, 2007, 3:17:26 PM9/25/07
to பண்புடன்
இது வெறுமனே குஷ்பூவின் கற்பு குறித்தான கருத்தாக இருந்தால் இங்கு
இவ்வளவு அடித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையே இல்லை.

தனது பத்திரிக்கையில் வந்த ஒரு பேட்டி பிரச்சினையாகி விட்டதே என்பதற்காக
இந்தியா டுடே இதற்கு ஆதரவாய்ச் செய்த மறு வினைகள், வாஸந்தியின்
பேடடிடகள், அ.மார்க்ஸ் உள்ளிட்டவர்களை அழைத்து வைத்து நடத்திய விவாதம்,
குஷ்பூவை எதிர்த்தவர்களில், கருத்தியல் ரீதியாக எதிர்த்தவர்களை குஷ்புவை
தமிழ்நாட்டை விட்டே ஓடு என்று பைத்தியக்காரத்தனமாய் மிரட்டல்
விட்டவர்களுடன் ஒன்றாகச் சேர்த்து "கலாச்சாரக் காவலர்கள" என்று பொத்தாம்
பொதுவாக அழைத்து கேவலப் படுத்தியது, இது எல்லாவற்றிற்கும் மேலாக

இந்த பேட்டி வந்த அடுத்த தொடர்ச்சியாக பல வாரங்களிற்கு குஷ்பூவை விடாமல்
மாற்றி மாற்றிப் புகழ்ந்து கடைசியில் இந்தியா, தமிழ்நாட்டில மிக முக்கிய
பிரபலங்கள் என்ற சர்வேயில் குஷ்பூவை ஒரு "நவீன பெண் போராளி" என்று
வர்ணித்ததுதான் என் கொதிப்பை உச்ச கட்டத்திற்குக் கொண்டு சென்றது.

போராளின்னா அர்த்தம் தெரியுமாடா உங்களிற்கு?????

குஷ்புவுக்கு ஆதரவாக இந்தியா டுடே செய்த இன்னொரு முக்கிய விஷயம் என்ன
தெரியுமா?? தொடர்ச்சியாக அவர்களது அட்டைப் படத்திலும், உள்ளேயும் சாதாரண
வாசகர் கடிதம் வந்திருந்தால் கூட அதை சாக்காக வைத்து மறக்காமல் அவர்களது
ஃபோட்டோவை போடுவது.

அட்டைப் படத்தில்ஃபோட்டோ போடுவது எல்லாம் ஒரு மேட்டரா, காமாலை கண்ணு
மாதிரி எதை செஞ்சாலும் தப்புன்னே சொல்றியே என்று யாரேனும் சொல்லலாம்.
உங்களுக்கு ஒரு செய்தி.

இது நடப்பதகு வெகு சில வாரங்களிற்கு முன்னால் சானியா மிர்ஸாவினுடைய
போட்டோவை அட்டைப் படமாக் போட்டு விட்டு இந்தியா டுடே பெருமையுடன்
சொல்லிக் கொண்டது:

"இந்தியா டுடேயின் அட்டைப் படத்தை அலங்கரிப்பதற்கென்று தனித் தகுதிகள்
இருக்கின்றன. ஏன் எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் கூட அந்த பெருமை
வாய்த்து விடுவது இல்லை. வளர்ந்து வரும் டென்னிஸ் வீராங்கனை சானியா தனது
திறமையால் இன்று இப்பத்திரிக்கையின் அட்டைப்படத்தை அலங்கரிக்கிறார்.
ஏறக்குறைய 7 வருடங்கள் கழித்து (சுமாராக சொல்கிறேன்) ஒரு பெண் விளையாட்டு
வீராங்கனை இந்த அட்டைப் படத்தில் இடம் பெற்றிருக்கிறார்."

SHAJAHAN

unread,
Sep 25, 2007, 3:24:02 PM9/25/07
to panb...@googlegroups.com
பாராட்டுகள் நந்தா....
 
பென்னியம் என்பது என்ன என்பதை விட்டுவிட்டு, குஷ்புவை முன்னெடுத்துச் செல்ல முனைந்தவர்கள், மாற்றுக் கருத்துடையவர்கள் மீது நடத்திய 'கருத்தியல் பலாத்காரம் தான்' அனைவரையும் குஷ்புவிற்கு எதிராக ஒரு அணியில் திரட்டியது.
 
இன்னும், எதிர் கருத்து சொல்ல ஒருவரையும் காணவில்லையே?

 
On 9/25/07, நந்தா <media...@gmail.com> wrote:
இது வெறுமனே குஷ்பூவின் கற்பு குறித்தான கருத்தாக இருந்தால் இங்கு
இவ்வளவு அடித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையே இல்லை.

தனது பத்திரிக்கையில் வந்த ஒரு பேட்டி பிரச்சினையாகி விட்டதே என்பதற்காக இந்தியா டுடே இதற்கு ஆதரவாய்ச் செய்த மறு வினைகள், வாஸந்தியின் பேடடிடகள், அ.மார்க்ஸ் உள்ளிட்டவர்களை அழைத்து வைத்து நடத்திய விவாதம்,


--
நண்பன்
----------------
உண்மையென்பது நிபந்தனையற்ற கருத்துகளின் தொகுப்பே.

நந்தா

unread,
Sep 25, 2007, 3:29:09 PM9/25/07
to பண்புடன்
சாருலதா ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்."இது பேய்க்கும் பிசாசுகளிற்கு
இடையே நடக்கும் சண்டை.இதை பற்றி எல்லாம் நான் பேச விரும்ப வில்லை என்று".

குஷ்பூவின் கருத்தை எதிர்ப்பதன் மூலம் அவருக்கு விளக்குமாறு காட்டியதையோ,
முட்டை வீசியதையோ நான்(ங்கள்) நியாயப் படுத்த வில்லை. வெகு நிச்சயம் அது
காட்டுமிராண்டித்தனமானதுதான்.கேவலமானதுதான். (செல்வன் நானும்
மேட்டூர்தான்)

உண்மையில சொல்லப் போனால் இந்த எதிர் விளைவுகள்தான் அவர் மீது ஒரு
சிலருக்கு அனுதாப அலையை உருவாக்கி அவர் மீது தீவிர கருத்தியல்
குற்ற்ச்சாட்டை வைக்க முடியாமல் தடுத்து விட்டது.


நந்தா

unread,
Sep 25, 2007, 3:32:22 PM9/25/07
to பண்புடன்
நன்றிகள்.

//பென்னியம் என்பது என்ன என்பதை விட்டுவிட்டு, குஷ்புவை முன்னெடுத்துச்


செல்ல
முனைந்தவர்கள், மாற்றுக் கருத்துடையவர்கள் மீது நடத்திய 'கருத்தியல்
பலாத்காரம்
தான்' அனைவரையும் குஷ்புவிற்கு எதிராக ஒரு அணியில் திரட்டியது.

இன்னும், எதிர் கருத்து சொல்ல ஒருவரையும் காணவில்லையே? //

அனேகமாக தூங்கப் போய் இருப்பார்கள். காலையில் ஒருவேளை இந்த இழை சூடாகப்
போகலாம்.

நந்தா

unread,
Sep 25, 2007, 3:47:15 PM9/25/07
to பண்புடன்
இன்னொரு மிக முக்கிய விஷயத்தையும் நான் சொல்லியாக வேண்டும்.

இதன் மூலம் நான் கற்பு என்பது பெண்களிற்கு மட்டுமே என்று வரையறுக்கப்
பட்டது. ஆண்கள் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்ல வர
வில்லை.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் குஷ்பூவின் கருத்தை எதிர்ப்பவர்கள்
எல்லாரும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான் என்று ஒரு சிலர் சேர்ந்துக்
கொண்டு வெகு அழகாக ஜோடனை செய்து விட்டார்கள்.

"பெண்ணே உன்னைச் சுத்தி இருக்கிற எந்த ஆணாவது தப்பா நடந்துக்குறானா?
சட்டையைப் புடிச்சுக் கேளு. செருப்பைக் கழட்டி அடி. தப்பே இல்லை."
இதுதான் எனது நிலைப்பாடு.

இந்தியா டுடேயால் போராளி என்று வர்ணிக்கப் பட்ட குஷ்பூ நாட்டாமை
படத்துக்காக மீனாவிடம் பேசிய டயலாக்:

"ஒரு ஆம்பிளை பத்து பொம்பிளைக் கிட்ட போனாலும் அவன் பேரு ஆம்பளைதாண்டி.
ஆனா ஒரு பொம்பளை பத்து ஆம்பிளைக் கிட்ட போனால் அவ பேரு வேற"

குஷ்பூ மேடம் இந்த கேனத்தன்மான டயலாக்கை பேசமாட்டேன்னு போராடி
இருந்தாங்கன்னா போனாப் போகுதுன்னு போராளி மாதிரின்னு சொல்லி
ஒத்துக்கலாம்.

இந்த பிரச்சினைகள் தீவிரமாகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் குஷ்பூ
அவர்கள் ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். அதுல ஏதேதோ கொள்கைகளுடன் செயல்படப்
போவதா எல்லாம் அறிவித்திருந்தார். இது ஜூனியர் விகடனில் கூட
வந்திருந்தது. மக்களே இப்போ அந்த இயக்கம் எங்கயாவது இருக்கா???ன்னு
கொஞ்சம் கூகிள்ல சர்ச் பண்ணியாவது எனக்கு சொல்றீங்களா???ஏன்னா ஒரு பெண்
போராளியின் கனவுகள் மற்றும் கொள்கைகள் என்ன என்னன்னு நானும்
தெரிஞ்சுக்கலாம்னுதான்.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இதை எல்லாம் குஷ்பூ ஏதோ சீப்
பப்ளிசிட்டிக்காக பயன்படுத்திக் கொண்டாரோ என்றுதான் தோன்றுகிறது.

இப்னு ஹம்துன்

unread,
Sep 25, 2007, 4:25:58 PM9/25/07
to panb...@googlegroups.com

நந்தா...
உங்கள் கருத்துகள் மிகவும் சரியே.!

 
On 9/25/07, நந்தா <media...@gmail.com> wrote:

செல்வன்

unread,
Sep 25, 2007, 5:26:04 PM9/25/07
to panb...@googlegroups.com

நண்பனின் கட்டுரைக்கு முதலில் எதிர்வினை ஆற்றுகிறேன்.

1.பொதுமைப்படுத்தல் எனும் குற்றசாட்டு:

குஷ்பு தினதந்தியில் என்ன சொன்னார் என தெளிவுபடுத்தினால் இதை ஆராய இயலும்.அதனால் அடுத்த குற்றசாட்டுக்கு போகிறேன்.

2.பெரியாரின் கருத்தாக நண்பன் கூறுவது

//


பெரியார் கூறியது என்ன?

திருமணத்திற்கு முன் உறவு வைத்துக் கொள்ளுங்கள் என்றா கூறினார்? அப்படி
எங்கும் கூறியதே இல்லை. ஒழுக்கக் கேட்டை அவர் எங்கும் போதித்தது
கிடையாது//
 
பெரியார் இது பற்றி கூறியதை நண்பன் அறியவில்லை என்றே கருதுகிறேன்.பெரியார் சொன்னது இதோ
 

ஒரே புருஷன் என்ற கட்டாயம் கூடாது

...இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும்,
ஒரு மனைவி, ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து,
அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகிறது. இதன் பலாபலன் எப்படியிருந்தாலும்
இந்தப்படி சொல்கின்றவர்களை எல்லாம் உலகனுபவமும், மக்கள் தன்மையின் அனுபவ ஞானம் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கைத் தன்மையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ, அல்லது உண்மை யறிந்தும் வேறு ஏதாவதொரு காரியத்திற்காக வேண்டி, வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றோதான் கருத வேண்டியிருக்கிறது.

...இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும்.

உண்மையான சமரசம்

ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே இருக்காது.

- "தந்தை பெரியார் அறிவுரை 100' என்ற நூலிலிருந்து.

அடிமைத்தனம்

மக்களின் அன்பும், ஆசையும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, அது இன்னவிதமாக,
இன்னாரோடு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்பதாக நிர்பந்திக்க எவ்வித
நியாயமும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஏனெனில், ஆசை என்பது ஜீவ
சுபாவமானது. அதை ஏதோ நிர்பந்தத்திற்காக தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தன மேயாகும்.

கற்பு என்பது புரட்டு

சாதாரணமாகவே இன்றைய கற்பு, விபச்சாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும்
சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்கு, சிறிதும் தேவையில்லாததேயாகும். எப்படி கற்பு
என்ற வார்த்தையும் அதைப் பயன்படுத்தும் முறையும் புரட்டானது என்றும், பெண்ணடிமை கொள்ள உத்தேசித்து ஏற்படுத்தியதாகும் என்றும் சொல்லுகிறோமோ, அது போலவே விபச்சாரம் என்னும் வார்த்தையும் அதன் பிரயோகமும்
புரட்டானதும், பெண்களை அடிமை கொள்வதற்கென்றே ஏற்படுத்தப்பட்டதென்றும்
காணப்படுவதோடு, அது முக்கியமாய் இயற்கைக்கு விரோதமானதென்றும் கூட
விளங்கும்.

உப்பு, மிளகாயா பெண்கள் !
*"ஒருவனுடைய வீட்டு உப்பு மிளகாய் புளியை அபகரிக்க நினைப்பது எப்படி
திருட்டாகுமோ, அதுபோல் அவனுடைய மனைவியையும் அபகரிக்க நினைப்பது திருட்டு ஆகும்' என்று நினைத்து, அவளை அனுபவிக்க மனத்தாலும் நினைக்கக் கூடாதாம். என்னே அடிமைத்தனம்! உப்பு, மிளகாயா பெண்கள்? கேவலம் பெண்கள் இப்படியா ஒருவனுடைய வீட்டு உப்பு, மிளகாயைப் போல் தனி உடமைச் சொத்தாகி விடுவது?


- "விடுதலை' (11.10.48)

 
*கல்யாண முறை ஒழிய வேண்டும் !*

கலியாணம் என்பதையே சட்ட விரோதமாக்க வேண்டும். இந்தக் கலியாணம் என்ற அமைப்பு முறை இருப்பதால்தான் கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. மனைவியாகி விட்டால் அதோடு சரி - அவள் ஒரு சரியான அடிமை! அது மட்டுமல்ல இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்கு சொத்துக்கள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன?
- "விடுதலை' (28.6.73)
 


செல்வன்

unread,
Sep 25, 2007, 5:41:45 PM9/25/07
to panb...@googlegroups.com

அடுத்து நண்பன் சொல்வது

//1. சாதியம் நிறைந்த இந்த சமூகத்தில் களவு ஒழுக்கம் எடுபடாது. அத்தகைய


நடைமுறையை ஏற்படுத்த முதலாக சாதியத்தை ஒழிக்க வேண்டும். இதன்
அடிப்படையிலேயே குஷ்பு அடித்தட்டு மற்றும் பிற்படுத்தப்பட்ட பெண்களால்

எதிர்க்கப்படுகிறார்//

சாதி, மதம்,இனம்,திருமணம் என்ற அனைத்தும் பிறப்பதற்கு முன்பே தோன்றியது களவு ஒழுக்கம். இவை அழிந்த பின்னரும் களவு ஒழுக்கம் வாழும். சாதியத்துக்கும் இதற்கும் எப்படி முடிச்சு போட்டாலும் முடியாது. களவு ஒழுக்கத்துக்கும் ஜாதியத்தின் இருப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை.ஜாதி,மதத்தின் இருப்பை அசைக்க களவொழுக்கத்தை போன்ற வீரியமான மருந்து வேறேதும் இருப்பதாக தெரியவில்லை.

//2. உடலுறவு சுதந்திரத்தை இவர்கள் ஒரு ஆயுதமாக தந்தை, தாய் என்ற குடும்ப


அமைப்பிலிருக்கும் பொழுது கேட்கிறாள். இவளே தனியாகக் கணவன் என்பவனுடன்
இணைந்து குடும்பம் என்ற நிறுவனத்தை நிறுவும் பொழுது அதை உரிமையாகக்
கேட்பதில்லை. ஒரு வயதில் விடுதலையாகக் கருதப்படுவது மற்றுமொரு வயதில்
உரிமையாகப் பார்க்கப்படுவதில்லையே - ஏன்? அப்படியானால் -

அன்டிஎச்டப்லிஷ்மென்ட் ட்ரைட் - என்ற இளமையின் துடுக்கையும் நிறுவன


எதிர்ப்பில் மதர்த்து நிற்கும் இளமையின் இச்சையையும் தீர்த்துக் கொள்ளும்

வேட்கைக்கு மட்டும் தானா உரிமை? இது தவறாகப்படவில்லை?//

இதுவும் தவறான வாதம்.

இளமையின் துடிப்பையும் இச்சையயையும் (அது ஏன் இளமை?வயதானவர்களுக்கு ஆசை வராதா?) தாம் விரும்பிய வழியில் ஒருவர் ஏன் தணித்துகொள்ள கூடாது?திருமணத்துக்கும் இதற்கும் தான் என்ன சம்பந்தம்? பெரியார் சொல்வது போல் "மக்களின் அன்பும், ஆசையும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, அது இன்னவிதமாக,

இன்னாரோடு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்பதாக நிர்பந்திக்க எவ்வித
நியாயமும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஏனெனில், ஆசை என்பது ஜீவ
சுபாவமானது. அதை ஏதோ நிர்பந்தத்திற்காக தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தன மேயாகும்."

யாரும் யாரையும் கட்டுபடுத்த முடியாது. சட்டப்படி மனைவியோ, கணவனோ மற்றவரை விரும்பினால் அவரது துணை விவாகரத்து பெற்று கொள்ள வேண்டியதுதான் நியாயம்.திருமணத்துக்கு முன் 18 வயதை தாண்டிய ஆணும், பெண்ணும் விரும்பியவரோடு உறவு கொள்ளும் உரிமை உண்டு.அது இந்திய அரசியல் சட்டம் 18 வயது தாண்டியவருக்கு அளித்துள்ள உரிமை.அதை யாராலும் பறிக்க முடியாது என கருதுகிறேன்.

 

//3. உடலுறவு தான் உரிமை - திருமணத்திற்கு முன்னோ அல்லது பின்னோ என்று


வைத்துக் கொண்டால் கூட, அது என்ன உரிமையைப் பெற்றுத் தந்து விடும்.?
உரிமை என்று நினைக்கும் உடலுறவிற்காக ஒரு ஆணிடம் தானே போய் நிற்க

வேண்டியதிருக்கிறது? ஒரு ஆணிடம் சரணடைந்து - இணங்கி - ஒத்துழைத்து - எந்த

உரிமையை நிலைநாட்டப் போகிறீர்கள்? எங்கிருந்து வந்தது இதில் உரிமை? இது

கடைந்தெடுத்த அடிமைத்தனம் அல்லவா?//

என்ன உரிமையை பெற்று தந்துவிடும் என்றா கேட்கிறீர்கள்?

விருப்பம் போல் உறவு கொள்ள முடியும் என்பதே ஒரு உரிமைதானே?

துணையை தேர்ந்தெடுக்க இது ஒரு வழி என்பதும் உரிமைதானே?

உடலுறவுக்காக யாரும் யாரையும் கெஞ்ச வேண்டியதில்லை எனவே கருதுகிறேன்.அப்படியே கெஞ்சினாலும் அதில் என்ன தவறிருக்கிறதென்று புரியவில்லை.காதலுக்கு கண்ணுமில்லை, வெட்கமுமில்லை.




--
செல்வன்

http://www.holyox.tk

செல்வன்

unread,
Sep 25, 2007, 6:00:07 PM9/25/07
to panb...@googlegroups.com

கற்பு என்கின்ற காட்டுமிராண்டித்தனம்

தந்தை பெரியார்

 
நமது மக்கள் 100க்கு 80 பேர் தற்குறிகள். நம் பெண்கள் 100க்கு 90 பேர் தற்குறிகள். இந்தப் பெண்களுக்கு உள்ள 'கற்பு ' என்கின்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான விலங்கு 100க்கு 90 பெண்களை மிருகக் கன்றுகளாகவே ஆக்கிவிட்டன.

பெண்கள் அடிமை நீங்க வேண்டுமானால், முதலாவதாக அவர்களை கற்பு
என்னும் சங்கிலியால் கட்டிப் போட்டிருக்கும் கட்டை உடைத்தெறிய வேண்டும். கட்டுப்பாட்டிற்காகவும், நிர்பந்தத்திற்காகவும் கற்பு ஒருக்காலும் கூடாது! கூடாது!


– தந்தை பெரியார் – சமுதாய சீர்திருத்தம் என்ற நூல் – பெரியார் சுயமரியாதைப்
பிரச்சார நிறுவன வெளியீடு


கேள்வி : பெண்களுக்கு புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்?


பதில் : கற்பு என்கின்ற வார்த்தையும், விபச்சார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ, அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும்.


இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்குக் காரணம், ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபச்சார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்து விட்டதாலேயே, சட்டப்படி முழு விடுதலையும் பெற்றிருக்கிறார்கள்.


– தந்தை பெரியார் – குடிஅரசு 29.10.1933 – "விடுதலை' வெளியிட்ட தந்தை பெரியார்
125ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்

பிரேம்குமார் சண்முகமணி

unread,
Sep 26, 2007, 1:07:14 AM9/26/07
to panb...@googlegroups.com

அடடா, நான் ஒரு கேள்வி கேட்டாலும் கேட்டேன், ஒரு கருத்தாடலே ஆரம்பம் ஆயிடுச்சு. ஆனா இப்போதைக்கு ஆணி நிறைய இருக்குங்க. நான் மாலையில வந்து என் கருத்து சொல்றேன்.

அப்புறம் நந்தா, இந்த விசயத்துல உனக்கு நிறைய கருத்து இருக்குன்னு தெரியும். பட்டய கிளப்புற போல :)

செல்வன், உங்க கதை ரொம்ப நல்லா இருந்துச்சுங்க... :-))))))))))))))))

நந்தா

unread,
Sep 26, 2007, 2:16:33 AM9/26/07
to பண்புடன்
//நந்தா...
உங்கள் கருத்துகள் மிகவும் சரியே.! //

நன்றி இப்னு ஹம்தீன்.

//அடடா, நான் ஒரு கேள்வி கேட்டாலும் கேட்டேன், ஒரு கருத்தாடலே ஆரம்பம்


ஆயிடுச்சு.
ஆனா இப்போதைக்கு ஆணி நிறைய இருக்குங்க. நான் மாலையில வந்து என் கருத்து
சொல்றேன்.
அப்புறம் நந்தா, இந்த விசயத்துல உனக்கு நிறைய கருத்து இருக்குன்னு
தெரியும்.

பட்டய கிளப்புற போல :)//

பிரேம் ஆணியெல்லாம் புடுங்கிட்டு வாங்க. ஆனா எப்படியோ நல்லா ப்ளான் பண்ணி
எல்லாத்தையும் உசுப்பேத்தி விட்டுட்ட! நல்லா இரு.


Jazeela Banu

unread,
Sep 26, 2007, 3:25:48 AM9/26/07
to panb...@googlegroups.com
என்ன உரிமையை பெற்று தந்துவிடும் என்றா கேட்கிறீர்கள்?

விருப்பம் போல் உறவு கொள்ள முடியும் என்பதே ஒரு உரிமைதானே?

துணையை தேர்ந்தெடுக்க இது ஒரு வழி என்பதும் உரிமைதானே?


உடலுறவுக்காக யாரும் யாரையும் கெஞ்ச வேண்டியதில்லை எனவே கருதுகிறேன்.அப்படியே கெஞ்சினாலும் அதில் என்ன தவறிருக்கிறதென்று புரியவில்லை.காதலுக்கு கண்ணுமில்லை, வெட்கமுமில்லை.



ரொம்ப தமாஷா இருக்கு செல்வன். இதுதான் உங்க அகராதியில் பெண் உரிமையா? சரி, பெண் உரிமையின் வரையறை என்னன்னு உங்கள் பார்வையில் சொன்னீங்கன்னா நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சிக்கிறோம்.

செல்வன்

unread,
Sep 26, 2007, 9:25:36 AM9/26/07
to panb...@googlegroups.com

இதில்  தமாஷ் என்ன இருக்கு ஜசீலா? பாலியல் சுதந்திரம் இல்லாமல் பெண் விடுதலை என்பது சாத்தியமே இல்லை.பாலியல் சுதந்திரம் மறுக்கப்படும் பெண் அடிமையாகத்தான் இருப்பாள்.பெண்விடுதலை என்பதே பாலியல் சுதந்திரத்தில் தான் துவங்குகிறது. பெண் தனது உடலை முழுக்க, முழுக்க தனக்கு சொந்தமாக்கிக் கொள்வதன் அறிகுறியே பாலியல் சுதந்திரம். ஒரு பெண்ணின் உடலுக்கு சமூகம் உரிமைகோரும் அவலத்தை இன்னும் எத்தனை நாள் சகிப்பது?

பெண் சுதந்திரத்தின் வரையறை என்னவென்று நம் அரசியல் சட்டம் அழகாக சொல்கிறது.பாலியல் சுதந்திரம்,கருப்பை சுதந்திரம்,தொழில் செய்யும் உரிமை, வழிபாட்டுரிமை,அடிப்படை உரிமை,தனிமனித சுதந்திரம் என அனைத்தையும் பெண்ணுக்கு சமமாக வழங்குகிறது.சட்டம் தந்த இந்த உரிமையை நம் சமூகம் பெண்களுக்கு மறுக்கிறது.அந்த மனத்தடை நீங்கவே பெண்விடுதலை இயக்கங்கள் தேவைப்படுகின்றன



அன்பு குயில்

unread,
Sep 26, 2007, 9:28:26 AM9/26/07
to panb...@googlegroups.com
செல்வனோட ஒரே தமாசாத்தாங்க இருக்கும் இன்னும் என்னெல்லாம் படிக்க போறீங்களோ
 
நான் அவர் ஏற்கனவே இதை பற்றி விவாதித்த சுட்டி வேணும்னா தருகிறேன் :))

 
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..."
=============================
வலைப்பூ: www.thiagu1973.blogspot.com
குழுமம் : ttp://groups.google.com/group/Anbu2006
http://groups.google.com/group/pothuvudaimai

நா.ஆனந்த குமார்

unread,
Sep 26, 2007, 9:36:14 AM9/26/07
to panb...@googlegroups.com

தான் செய்யும் தவறை, தான் செய்யும் செயல்களை தன் மனைவியும் செய்யலாம் என்று ஒருவன் நினைப்பானேயானால் பெண்ணீயம், பெண் விடுதலை, ஆண் விடுதலை எதுவும் தேவையில்லாமல் போய்விடும் என்பது என் கருத்து!

அன்புடன்,
நா.ஆனந்த குமார்

நந்தா

unread,
Sep 26, 2007, 9:57:25 AM9/26/07
to பண்புடன்
செல்வன் கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கு. சுத்தமா புரியாத மாதிரியும்
இருக்கு.

//பெண் தனது உடலை முழுக்க, முழுக்க தனக்கு சொந்தமாக்கிக் கொள்வதன்
அறிகுறியே பாலியல் சுதந்திரம்.??//

ஒரு பெண் தனது விருப்பப்படி யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம்.
இதுதான் பாலியல் சுதந்திரம் என்று சொல்ல வருகிறீர்களோ???

அதாவது பாலியல் சுதந்திரம் ஆண்களிற்கு ஏற்கனவே இருக்கிறது.அதாவது அவர்கள்
விருப்பம் போல உறவு வைத்திருந்தனர்.ஆனால் அது பெண்களிற்கு மறுக்கப்
படுகிறது. எனவே பெண்களிற்கு கண்டிப்பாக பாலியல் சுதந்திரம் வேண்டும்
இதுதான் நீங்கள் சொல்ல வருகிற பாயிண்டோ???

இதை இன்னும் முழுப் பரிணாமத்துடன் பார்க்கும் போது திருமணம் மற்றும்
குடும்பம் ஆகிய அமைப்புகளையே கேள்விக்குறியாக்குகிறீர்களோ என்றுதான்
தோன்றுகிறது???அப்படியா?

பெரியார் சொல்லி எடுபடாமல் போன கருத்துக்களில் இதுவும் ஒன்று. பெரியாரே
சொல்லி இருந்தாலும் இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

நந்தா

unread,
Sep 26, 2007, 10:17:50 AM9/26/07
to பண்புடன்
"என்னுடைய கருத்து படித்தவர்களுக்குப் புரியும். தமிழ்நாட்டில்
திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளாதவர்கள் யாராவது
இருக்கிறார்களா? சொல்லுங்கள் பார்க்கலாம்."

- DINAMANI 27/09/2005

செல்வன்

unread,
Sep 26, 2007, 11:22:23 AM9/26/07
to panb...@googlegroups.com

//ஒரு பெண் தனது விருப்பப்படி யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம்.
இதுதான் பாலியல் சுதந்திரம் என்று சொல்ல வருகிறீர்களோ???//

ஆம்.

//அதாவது பாலியல் சுதந்திரம் ஆண்களிற்கு ஏற்கனவே இருக்கிறது.அதாவது அவர்கள்


விருப்பம் போல உறவு வைத்திருந்தனர்.ஆனால் அது பெண்களிற்கு மறுக்கப்
படுகிறது. எனவே பெண்களிற்கு கண்டிப்பாக பாலியல் சுதந்திரம் வேண்டும்

இதுதான் நீங்கள் சொல்ல வருகிற பாயிண்டோ?//

பாலியல் சுதந்திரம் என்பது "ஒரு பெண்ணின்(ஆணின்) உடல் முழுக்க, முழுக்க அவருக்கே சொந்தம். அதை அவர் எப்படி பயன்படுத்துவது என்பது அவரது விருப்பமே அன்றி சமூகமோ,அரசோ, கடவுளோ, கணவனோ/மனைவியோ/பெற்றோரோ ,அல்லது வேறு யாருமோ அவரது அந்த உரிமையை பறிக்க முடியாது" என்பதாகும்.

"வழிபாட்டு சுதந்திரம்" என்றால் எல்லோரும் வழிபட வேண்டும் என்று பொருளல்ல.வழிபட ஒருவருக்கு உரிமை உண்டு.அதை சமூகமோ ,அரசோ, கணவனோ தடுக்க முடியாது என்பதுதான்.அதே போல் தான் பாலியல் சுதந்திரமும்.

ஒருவரின் உடலே ஒருவருக்கு சொந்தமில்லை.அதன் பயன்பாடு மற்றவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது எனும்போது அவர் அடிமைதான்.அடிமைகளின் உடல் தான் மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

கூண்டுக்குள் கிளீயை அடைத்து வைத்து அது நம்மை கொஞ்சுவது நம் மீது அது அன்பை காட்டுகிறது என்பதாகுமா?

கூண்டை திறந்துவிடுங்கள். திரும்பி வந்தால் அது நம்முடையது.திரும்பி வரவில்லை என்றால் அது என்றுமே நம்முடையதாக இருந்தது இல்லை என்று பொருள்.

பாலியல் சுதந்திரம் பெற்ற ஒருவர் தாமாக விருப்பப்பட்டு கற்புடன் இருந்தால் அதையே சுதந்திர கற்பு என்று கொள்ள முடியும்.அவரது அன்பையே சுதந்திர காதல் என்று ஏற்க முடியும்.பாலியல் ஒழுக்கத்தை பேண விரும்பாதவரை அதை பேண வலியுறுத்துவதை பாலியல் பலாத்காரத்துக்கு சமமான செயலாகத்தான் கருத முடியும்.

சுதந்திரம் பெற்ற இரு மனிதர்களுக்கிடையேதான் உண்மையான கற்பும், உண்மையான காதலும் நிலவ முடியும்.பாலியல் சுதந்திரம் மறுக்கப்பட்ட பெண்களின் கற்பையும், காதலையும் கற்பாகவும் ஏற்க முடியாது,காதலாகவும் ஏற்க முடியாது.நிர்பந்த கற்பு,அடிமை காதல் என்றுதான் அவற்றை சொல்ல முடியும்.

//


இதை இன்னும் முழுப் பரிணாமத்துடன் பார்க்கும் போது திருமணம் மற்றும்
குடும்பம் ஆகிய அமைப்புகளையே கேள்விக்குறியாக்குகிறீர்களோ என்றுதான்

தோன்றுகிறது???அப்படியா?//

இந்த அமைப்புகளில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு அதன்மூலம் பந்தங்கள் நிலைத்து நிற்பதை தான் எதிர்க்கிறேன்.விவாகரத்து உரிமை, பாலியல் சுதந்திர மறுப்பு,காதலிக்கும் உரிமை ஆகியவை பெண்களுக்கு மறுக்கப்படுவதால் தான் குடும்பம் என்ற அமைப்பு சிதையாமல் இருக்கிறது.அதாவது பெண்னடிமைத்தான்மே குடும்பத்தை சிதையாமல் காக்கும் கவசமாக இருக்கிறது. இதை உடைத்து இந்த உரிமைகள்  பெண்களுக்கு வழங்கப்பட்டு அடிமைத்தனத்துக்கு பதில் அன்பே குடும்பத்துக்கு ஆதாரம் என்ற நிலையை உருவாக்கினால் ஒரு பெண் விரும்பும்வரை தான் குடும்பம் என்ற அமைப்பு நீடிக்கும் என்ற நிலை உருவானால் அன்பு தழைக்கும் குடும்பங்கள் நாடெங்கும் உருவாகும்.மனைவியை மதித்தால் தான் குடும்பம் என்ற அமைப்பு நீடிக்கும் என்பதை கணவர்கள் உணர்வார்கள்.அடித்தால் விவாகரத்து என்ற நிலை உருவானால் தான் அடிக்காமல் இருப்பார்கள்.

திருமணம் மற்றும் குடும்ப பந்தங்கள் நீடிக்க அடிமைத்தனம் காரணமாக இருப்பதை விட சுதந்திரமும் அன்பும் அடிப்படையாக இருப்பதையே நான் விரும்புகிறேன்.

பாலியல் சுதந்திரம் மறுக்கப்பட்டால் அதன் மூலம் விளையும் காதலும் கற்பும் அடிமைகாதலாகவும், நிர்பந்த கற்பாகவும் இருக்கும்.பாலியல் சுதந்திரம் அடைந்த ஒருவரின் காதலும் கற்புமே உண்மை காதலாகவும், சுதந்திர கற்பாகவும் இருக்கும்.




--
செல்வன்

http://www.holyox.tk

செல்வன்

unread,
Sep 26, 2007, 11:32:43 AM9/26/07
to panb...@googlegroups.com

//"என்னுடைய கருத்து படித்தவர்களுக்குப் புரியும். தமிழ்நாட்டில்


திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளாதவர்கள் யாராவது

இருக்கிறார்களா? சொல்லுங்கள் பார்க்கலாம்."//

தினதந்தியில் வெளியானது தன் கருத்து அல்ல என்றும் தான் ஆங்கிலத்தில் சொன்னதை தமிழில் திரித்து வெளியிட்டுவிட்டார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.



On 9/26/07, செல்வன் <hol...@gmail.com> wrote:

Asif Meeran AJ

unread,
Sep 26, 2007, 12:01:50 PM9/26/07
to panb...@googlegroups.com
செலவன்
 
சுவாரஸ்யமாக இருக்கிறது
 
அமெரிக்காவில் பெண்ணியாவாதிகள் தங்க்ள் மார்கச்சைகளை எரித்து பெண்னிய விடுதலையைக் கோண்டாடியதாக வாசித்திருகிறேன். என்ன ஒரு மூடத்தனம் என்று புரியவில்லை. இயற்கை பெண்காளுக்களித்த விசயத்தை எதிர்ப்பது மட்டுமே பெண்ணீய சுதந்திரத்திற்கு வித்திடுமா என்ன?
 
அது போலத்தான் பாலியல் சுதந்திரம் என்பது மட்டும் ஒரு பெண்ணை முழுமைப்படுத்தாது. வேண்டுமானால் ஆணுறை விற்பனையை அதிகப்படுத்தும்
போயும் போயும் பெண்னிய சுதந்திரம் ஆணுறையோடு தொடர்புபடுத்தப்படும் விசய்ம் ஆகிவிடும் போலிருக்கீறதே? :-)
 
குஷ்பூவில் தொடங்கி பெண்ணின் பாலியல் சுதந்திரம் பற்றி பேச்சு வளர்ந்திருப்பது நல்ல துவக்கம்தான். பார்க்கலாம். இன்னுமமென்னென்ன வாதங்கள் முன்வைக்கபப்டுமென்று.
 
 
நீங்கள் சொல்வதை நானோ நான் சொல்வதி நீங்களோஏற்க வேண்டுமென்ர எந்தக் கட்டாயமுமமில்லாமல் நமது கருத்துக்களை மட்டுமே முன்னெடுத்துச் செல்லலாம்

 

செல்வன்

unread,
Sep 26, 2007, 12:25:21 PM9/26/07
to panb...@googlegroups.com

ஆஃசிப்,

"பெண்கள் கருப்பையை கழட்டி எறிய வேண்டும், குழந்தை பெற மறுக்க வேண்டும்" என்றவர் பெரியார்.மார்க்கச்சையை எறிந்ததற்கு பல வருடம் முன்பே அவர் அதை விட வீரியம் மிகுந்த கருத்தை சொல்லிவிட்டார்.

பாலியல் சுதந்திரம் தான் பெண்விடுதலையின் முக்கிய சின்னம்.காரணம் என்னவென்றால் ஆணாதிக்க சமூகங்களில் அடிப்படைவாதிகள் அலறும் ஒரே உரிமை இதுதான்.கல்வி,தொழில் செய்யும் உரிமை என்ற மற்றவைகளையாவது முணுமுணுத்துக்கொண்டே கொடுத்தாலும் கொடுப்பார்கள்.இதன் பேரை கேட்டாலே அதிருதுல்ல என்பார்கள்:-))

காரணம் வெகு சிம்பிள்.பாலியல் சுதந்திரம் வழங்கப்படும் சமூகம் அதன்பின் அடிப்படைவாத சமூகமாக இருக்காது.பாலியல் சுதந்திரம் பெருகினால் ஜாதி ஏது, மதம் ஏது, இனம் ஏது, மொழி ஏது, வரதட்சிணை ஏது,சிசுக்கொலை ஏது, குடும்ப வன்முறை ஏது?ஒன்றும் கிடையாது..மனித இனத்தை பிடித்து ஆட்டும் சமூக பிரச்சனைகள் பலவும் சொடக்கு போடும் நேரத்தில் மாயமாக மறைந்துவிடும்.

இன்னொரு சிம்பிளான லாஜிக்.எந்த சமூகத்திலும் ஆண் எந்த அளவு ஒழுக்கமாக இருக்கிறானோ அந்த அளவுதான் பெண்களும் ஒழுக்கமாக இருக்க முடியும்.தப்பு செய்யும் ஒவ்வொரு ஆணும்,இன்னொரு பெண்னையும் சேர்த்து தானே கெடுக்கிறான்?ஆக ஒரு சமூகத்தில் 30% ஆண்கள் அயோக்கியர்கள் என்றால் 30% பெண்களும் அயோக்கியர்களாகத்தானே இருக்க முடியும்?

ஆணின் அயோகியத்தனத்தை சட்டபூர்வமாக்கும்போது பெண்ணின் அயோக்கியத்தனத்தை மட்டும் நடத்தை கெட்டவள்,வேசி என இகழ்ந்தால் அது மேலும், மேலும் ஆணின் அயோக்கியத்தனத்தை அதிகரிக்கவே செய்யும்.

எந்த நிமிடம் ஆண் வெளியே போனானோ அந்த நிமிடத்தில் பெண்ணை வெளியே போக கூடாது என்று சொல்லும் உரிமையை அவன் இழந்துவிட்டான்.இனி திருந்துவது, வருந்துவது எல்லாம் நடக்காத காரியம்.ஒரு மனிதன் எப்படி வாழவேண்டுமோ, வாழ்வானோ அப்படிப்பட்ட வாழ்வை ஒரு ஆண் வாழும்போது அதே உரிமையை பெண்ணுக்கும் கொடுப்பதுதான் நியாயம்.

இருவர் ஒரு செயலை செய்யும்போது அதில் ஒருவரை தண்டிப்பதும் மற்றவரை கண்டுகொள்லமால் இருப்பதும் அடக்குமுறைக்கே வழிவகுக்கும்.



செல்வன்

unread,
Sep 26, 2007, 12:27:21 PM9/26/07
to panb...@googlegroups.com

அயோக்கியத்தனம், ஒழுக்கம் போன்ற சொற்களை செக்யூலர் அர்த்தத்திலேயே பயன்படுத்தினேன்.

அதாவது ராஸ்கல் என கணவனை மனைவி அன்போடு அழைப்பது போன்ற பொருளில்.



On 9/26/07, செல்வன் <hol...@gmail.com> wrote:
--
செல்வன்

http://www.holyox.tk
http://groups.google.com/group/muththamiz


தனிமடல் தொடர்புக்கு: hol...@gmail.com
--
செல்வன்

http://www.holyox.tk

Jazeela Banu

unread,
Sep 26, 2007, 12:49:50 PM9/26/07
to panb...@googlegroups.com
On 9/26/07, செல்வன் <hol...@gmail.com> wrote:

இதில்  தமாஷ் என்ன இருக்கு ஜசீலா? பாலியல் சுதந்திரம் இல்லாமல் பெண் விடுதலை என்பது சாத்தியமே இல்லை .பாலியல் சுதந்திரம் மறுக்கப்படும் பெண் அடிமையாகத்தான் இருப்பாள்.பெண்விடுதலை என்பதே பாலியல் சுதந்திரத்தில் தான் துவங்குகிறது. பெண் தனது உடலை முழுக்க, முழுக்க தனக்கு சொந்தமாக்கிக் கொள்வதன் அறிகுறியே பாலியல் சுதந்திரம். ஒரு பெண்ணின் உடலுக்கு சமூகம் உரிமைகோரும் அவலத்தை இன்னும் எத்தனை நாள் சகிப்பது?

அப்படியா? ஆமாம்மாம்மாம் பாலியல் சுதந்திரம் கிடைத்துவிட்டாலே ஒரு பெண்ணுக்கு எந்த பிரச்சனையும் வராது அல்லவா? திருமணம் என்ற கெட்ட வார்த்தையே இருக்காது. அதனால் வரதட்சணை கொடுமையே நிகழாது. பெண் சிசு கொலையும் நிகழாது. ஒருவனுக்கு கட்டுப்பட்டு வாழாதிருந்தால், அவளே சம்பாதித்து, அவளே விரும்பியவுடன் இருந்துக் கொண்டு, இன்று பிடிக்க்வில்லையென்றால் நாளை வேறு ஒருவனோடு (ஒரு வேளை ஆண்கள் இப்படியிருப்பதால்தான் இதை பெண் சுதந்திரம் என்கிறார்களோ? எல்லா ஆண்களும் அப்படித்தானோ? )அன்பு கட்டுபாடுகள் இல்லாமல் குழந்தை வளர்ப்பு என்ற கட்டுக்குள் மாட்டாமல் சுதந்திரமாக ஒரே தலைமுறையில் உலகம் முடிந்தால்தான் என்ன?

//இந்த அமைப்புகளில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு அதன்மூலம் பந்தங்கள் நிலைத்து நிற்பதை தான் எதிர்க்கிறேன்.விவாகரத்து உரிமை, பாலியல் சுதந்திர மறுப்பு,காதலிக்கும் உரிமை ஆகியவை பெண்களுக்கு மறுக்கப்படுவதால் தான் குடும்பம் என்ற அமைப்பு சிதையாமல் இருக்கிறது.//

செல்வன், எப்படிங்க இப்படியெல்லாம்? அப்ப பாலியல் சுதந்திரம் ஆண்களுக்கு உண்டு, பெண்களுக்குதான் இல்லை? விவாகரத்து செய்வதெல்லாம் ஆண்கள்தான் பெண்கள் இல்லை? காதலிக்கும் உரிமை இதுவரை ஆண்களுக்குதான் பெண்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது அப்படித்தானே? ஒரு பெண் இல்லாமல் தனியாக ஒரு ஆண் இதுவரை காதலித்தானா? :-)) நல்ல காமெடி.

//அன்பே குடும்பத்துக்கு ஆதாரம் என்ற நிலையை உருவாக்கினால் ஒரு பெண் விரும்பும்வரை தான் குடும்பம் என்ற அமைப்பு நீடிக்கும் என்ற நிலை உருவானால் அன்பு தழைக்கும் குடும்பங்கள் நாடெங்கும் உருவாகும்.//
புரியலை செல்வன், ரொம்பவே குழப்புறீங்க. பாலியல் சுதந்திரத்தில் ஒரு பெண் ஒருவனோடு வாழவில்லை, அவளே சுதந்திரமாக குடும்ப கட்டுக்குள் அடங்காதவள் அப்ப ஏது குடும்பம்? இதுல வேற நாடெங்கு உருவாகுமாமே. ஆமாம் நிறைய பிள்ளை கட்டுக்குள் அடங்காமல் பெத்துப் போட்டா நாடெங்குமென்ன உலகமெங்கும் உருவாகத்தானே செய்யும் :-)))




செல்வன்

unread,
Sep 26, 2007, 1:13:10 PM9/26/07
to panb...@googlegroups.com

ஜசீலா,

பாலியல் சுதந்திரம் என்பதை நீங்கள் தவறாக புரிந்துகொண்டிருப்பதாக கருதுகிறேன்.பாலியல் சுதந்திரம் பெற்றவர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என கருதுவதாக தெரிகிறது:-)

இந்தியர்கள் அனைவருக்கும் "தொழில் செய்ய உரிமை உண்டு" என்றால் எல்லோரும் உடனே சுயதொழில் துவக்கி முதலாளிகளாகி விடவேண்டும் என அர்த்தம் இல்லை.உனக்கு அதை செய்ய உரிமை உண்டு..அதை செய்வதும்,செய்யாததும் உன் விருப்பம் தானே தவிர மற்றவர்கள் அதை கட்டுப்படுத்த முடியாது.அம்புட்டுதான் விசயம்.

ஒரு செயலை செய்ய சுதந்திரம் உண்டு என்று சொல்லிவிட்டால் பிறகு அந்த செயலை அவர் செய்தால் நாம் வருத்தப்படவோ, திட்டவோ கூடாது.அப்படி செய்தால் சுதந்திரம் என்பதற்கே அர்த்தமில்லாமல் போகும்.

விவாகரத்து செய்யும் பெண்கள் உண்டு.ஆனால் அப்படி செய்யும் பெண்கள் சமூகத்தில் எப்படி அழைக்கப்படுகின்றனர்,கருதப்படுகின்றனர்,டைவர்சிக்கு வீடாவது வாடகைக்கு கிடைக்குமா என யோசித்து பாருங்கள்.சட்டரீதியில் கிடைத்த சுதந்திரம் சமூகரீதியிலும் அவர்களுக்கு கிடைக்க வேண்டாமா?

காதல் செய்யும் ஆண் திட்டப்படுவான்,பெண் கர்ப்பமானால் அவள் நிலை என்ன?இருவரையும் ஒன்றாகத்தான் நாம் இதுவிசயத்தில் கருதுகிறோமா? நடத்துகிறோமா?

பெண்ணடிமைத்தனத்தால் தான் ஒரு குடும்பமும், திருமண பந்தமும் நீடிக்க வேண்டுமானால் அது இல்லமலே போய்த் தொலையட்டும் என்று தான் சொல்வேன்.மனைவியை மதிக்க தெரிந்தவனுக்குத்தான் குடும்பம் நடத்த தகுதியும், கல்யாணம் பண்ணிக்கொள்ள உரிமையும் உண்டு. அது நடக்காத குடும்பங்களில் விவாகரத்துகள் நடந்தால் நடக்கட்டுமே?இப்ப என்ன கெட்டுப்போனது?



On 9/26/07, Jazeela Banu <sjaz...@gmail.com> wrote:

Jazeela Banu

unread,
Sep 26, 2007, 1:52:04 PM9/26/07
to panb...@googlegroups.com
விவாகரத்து கேஸ் பிடிக்கும் வழக்கறிஞர் இல்லையே நீங்க? :-)) சும்மா கேலிக்குதான் கேட்டேன் கோபிச்சுக்காதீங்க. ஆமா காதலிச்சாலே கர்ப்பமாகிவிடுவாள் பெண் என்று உங்களுக்கு யார் சொன்னது? பாலியலை நான் தவறா புரிஞ்சுக்கல. அப்படி புரிஞ்சுக்கிட்டு குழப்பிக்கிறது நீங்க. குடும்பம் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கணும்னும் சொல்றீங்க. செய்வதும் செய்யாததும் உன் விருப்பம் அதை மத்தவங்க கட்டுப்படுத்த முடியாதுன்னும் சொல்றீங்க. ஒரு முடிவுக்கு வாங்க.

பெண்ணடிமைத்தனத்தால் தான் ஒரு குடும்பமும், திருமண பந்தமும் நீடிக்க வேண்டுமானால் அது இல்லமலே போய்த் தொலையட்டும் என்று தான் சொல்வேன்.

என்னப்பா லாஜிக் இது? பெண் அடிமைத்தனத்தில்தான் ஒரு குடும்பமா? அப்ப ஆணும்தானே அங்கே அடிமையாகிறான்? ஒரு குடும்பம் என்பது ஆண்- பெண் இருவரும் அடங்கிய விஷயம்தானே?
 
ம்ஹும் ஏதோ சொல்றீங்கன்னு நாங்க கேட்டுக்க வேண்டியதுதான்.

நந்தா

unread,
Sep 26, 2007, 2:11:53 PM9/26/07
to பண்புடன்
செல்வன் நீங்கள் சொல்ல வருவதை ஓரளவு என்னால் சரியாகப் புரிந்துக் கொள்ள
முடிகிறது.

தற்போது பெரும்பாலான குடும்ப அமைப்புகள் ஏதோ ஒரு வித கட்டுப்பாட்டின்
காரணமாகவே கட்டுக் குலையாமல் சென்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில்
அவை கட்டாயத்தின் காரணமாக இல்லாமல் இயற்கையாக ஏற்படும் அன்பினால் நடக்க
வேண்டும். பாலியல் சுதந்திரம் மறுக்கப் படும் வரை அது கண்டிப்பாக
அன்பினால் ஏற்படாது. கட்டாயத்தின் காரணமாகவே ஏற்படும் என்று சொல்ல
வருகிறீர்கள்.

அதாவது உனக்கு என்னை விட்டால் வேறு கதி இல்லை என்ற ஆதிக்க மனோபாவத்தில்
ஆணும், இவனை விட்டா நமக்கு யார் என்ற அடிமை மனப்பான்மையில் பெண்ணும்
இருக்கும் வரை இது நடை பெறாது. இவள் நினைத்திருந்தால் இவள் யாருடனோ
வாழ்க்கை அமைத்துக் கொண்டிருந்திருக்க முடியும். ஆனால் என் மீதான்
அன்பினாலேயே என்னுடன் இருந்து என் வாழ்க்கையை அழகாக்கிக்
கொண்டிருக்கிறாள் என்ற இயல்பான அன்பு ஆணிற்கு வர வேண்டும் என்று
சொல்கிறீர்களோ???

யோசிக்க வேண்டிய விஷயம்தான் இது.

ஆனால் ஏதோ ஒன்று இடிப்பது போலத் தோன்றுகிறது.

நந்தா

unread,
Sep 26, 2007, 2:25:29 PM9/26/07
to பண்புடன்
எனக்கென்னமோ பல பரிமாணங்களில் அணுக வேண்டிய பிரச்சினையை பாலியல்
சுதந்திரம் என்ற ஒற்றைசாளாரம் வழியே அணுகுகிறீர்களோ என்றுதான்
தோன்றுகிறது. பெண் சுதந்திரத்தின் ஒரு பரிமாணமாகத்தான் இது இருக்கலாமே
தவிர இதுவே ஒட்டு மொத்த தீர்வாய் இருக்காது.

நீங்கள் மேலே கூறிய "காதல்- அதனால் பெண் மட்டுமே பாதிக்கப் படுகிறாள்-
விதவைக்கும்,டைவோர்சிக்கும் சமுதாயத்தில் உள்ள மரியாதை-குடும்ப அமைப்பில்
உள்ள அடிமைத்தனம்."இவையனைத்தும் தனிப்பட்டவர்களைப் பொறுத்து மாறுமே தவிர
ஒட்டு மொத்த சமுதாயத்திடம் வெறும் பாலியல் சுதந்திரத்தினால் எப்படி
விழிப்பு வந்து விட முடியும்???

செல்வன்

unread,
Sep 26, 2007, 3:00:01 PM9/26/07
to panb...@googlegroups.com

//விவாகரத்து கேஸ் பிடிக்கும் வழக்கறிஞர் இல்லையே நீங்க? :-)) சும்மா கேலிக்குதான் கேட்டேன் கோபிச்சுக்காதீங்க. ஆமா காதலிச்சாலே கர்ப்பமாகிவிடுவாள் பெண் என்று உங்களுக்கு யார் சொன்னது?//

கர்ப்பம் என்பதை ஆண் - பெண் காதலை சமூகம் அணுகும் விதத்துக்கு ஒரு உதாரணமாக தான் குறிப்பிட்டேன்.இன்னொரு பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு வரும் ஆணை அவன் குடும்பத்தால் "அவ யாருக்கு அந்த குழந்தையை பெத்தாளோ?நீ வாடா ராசா" என ஏற்று கொள்ள முடிகிறது.கர்ப்பமான பெண்ணின் குடும்பத்தால் அப்படி அந்த விசயத்தை ஒதுக்கி விட முடிவதில்லை.முடியாது.

//பாலியலை நான் தவறா புரிஞ்சுக்கல. அப்படி புரிஞ்சுக்கிட்டு குழப்பிக்கிறது நீங்க. குடும்பம் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கணும்னும் சொல்றீங்க. செய்வதும் செய்யாததும் உன் விருப்பம் அதை மத்தவங்க கட்டுப்படுத்த முடியாதுன்னும் சொல்றீங்க. ஒரு முடிவுக்கு வாங்க. //

தற்போதைய குடும்ப அமைப்பு நிர்பந்தத்தாலும் பெண்னடிமைத்தனத்தாலுமே நிலைத்து நிற்கிறது.அதை அகற்றிவிட்டு சுதந்திரத்தாலும்,அன்பினாலும் மட்டுமே குடும்ப அமைப்புகள் உருவாக வேண்டும்.ஆணும்,பெண்ணும் மனமொப்பி இருக்கும்வரை தான் ஒரு குடும்ப அமைப்பு நீடிக்க வேண்டும்.நிர்பந்தத்தால் யாரும் திருமண உறவில் நீடிக்க கூடாது.
அப்படி நிர்பந்தம் மூலம் தான் குடும்பம் என்ற அமைப்பும், திருமணம் என்ற பந்தமும் நீடிக்குமானால் அவை இரண்டும் போய் தொலைந்தால் கூட குற்றமில்லை.

நிர்பந்தமின்றி சுதந்திரமான உறவில் பூக்கும் உறவுகளை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன்.

//என்னப்பா லாஜிக் இது? பெண் அடிமைத்தனத்தில்தான் ஒரு குடும்பமா? அப்ப ஆணும்தானே அங்கே அடிமையாகிறான்? ஒரு குடும்பம் என்பது ஆண்- பெண் இருவரும் அடங்கிய விஷயம்தானே?//

ஆமாம்.பெண்ணடிமைத்தனம் தான் குடும்பத்தின் ஆணிவேர் என்பது வேதனையான விசயம்தான்.

குடும்ப பந்தத்திலிருந்து விலக விரும்பும் பெண் சமூகத்தால் மிரட்டி அதில் இருக்க வைக்கப்படுகிறாள்.கோபித்துகொண்டு அம்மா வீட்டுக்கு போகும் பெண்ணை அடித்து மிரட்டி அவள் புருசன் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்."தனியாக இருக்கும் பெண்ணை என்ன வேண்டுமானால் செய்யலாம்" என்பது எழுதப்படாத சட்டம்.அவளுக்கு வீடு கிடைக்காது.அம்மா,அப்பா ஆதரவு கிடைக்காது.வேலை கிடைத்தாலும் பாலியல் ரீதியில் அவளை பலர் சீண்டுவார்கள்.அவளை முக்கால்வாசி ஆண்கள் மறுதிருமணம் செய்ய விரும்ப மாட்டார்கள்.

ஆண் என்ன செய்தாலும் குடும்ப பந்தம் முறியாது என்பது தான் இப்போதைய நிலை.நகரங்களில் இது மாறிவந்தாலும் அதே பிரச்சனைகள் வேறு விதங்களில் நகரங்களில் தொடர்வதும்,கிராமங்களில் பழைய பிரச்சனைகளே மறையாமல் இருப்பதும் கண்கூடு.

கூட்டுகுடும்பம் என்பது இன்னொரு அடக்குமுறை.ஆண் மாமனார் வீட்டில் வசிக்க நேர்ந்தால் அது "சொல்லமறந்த கதை".லட்சக்கணக்கான பெண்கள் மாமியார் வீட்டில் துன்பப்படுவது "சொல்லவே கூடாத கதை"



On 9/26/07, Jazeela Banu <sjaz...@gmail.com> wrote:

நண்பன்

unread,
Sep 26, 2007, 3:23:47 PM9/26/07
to பண்புடன்
செல்வன்,

உங்களுடைய விவாதத்திறமையை ஏற்கனவே பல தளங்களிலும் கண்டுவிட்டேன்.
உங்களுடைய புரிதலின் சக்தி 'அபாரமானது' என்றும் அறிவோம். நீங்கள் ஏற்கனவே
வலைப் பூக்களில் விவாதித்து இறுதியில், 'எனக்கு ஒன்றுமே தெரியாது' என்று
பின் வாங்கியதைப் (திராவிட தமிழர்களிடம் அடிவாங்கி) போல இங்கும் பின்
வாங்க மாட்டேன் என்று உறுதி மொழி கொடுங்கள்.

பெரியாரைத் தவறாக திரித்து அற்ப சுகம் அடைய நினைக்கும் போலியவாதிகளை
அத்தனை லகுவாக விட்டுவிட முடியாது.

பிறர் சொன்னவற்றில், லாகவமாக இரண்டு வரிகளை உருவி மற்றவற்றை இருட்டடிப்பு
செய்து தான் என்ன பேசுகிறோம் என்றறியாமல் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கும்
உங்களிடம் வாதம் செய்வது வீண் என்றே சொல்ல வேண்டும். வீண்ஜம்பத்திற்காக
வாதம் செய்து கொண்டிருக்காதீர்கள். அதிகம் பேசும் பொழுது, உங்கள்
கருத்துகளை நீங்கள் முரண் செய்து கொள்கிறீர்கள். இங்கே
எழுதியவற்றிலிருந்து தான் சொல்கிறேன்.

நீங்கள் பெரியாரைப் பற்றி மட்டும் அல்ல, நண்பன் எழுதிய
கட்டுரையிலிருந்தும் கூட, சில வரிகளை மட்டும் உருவிக் கொண்டு மற்றவற்றை
மறைத்து எழுதும் கயமைத்தனத்தை பறைசாட்டுகிறீர்கள்.

உங்களின் முரண்பாடுகளை எடுத்துச் சொல்வேன். அதற்கு முன், நீங்கள் சுய
நினைவோடு தான் எழுதிகிறீர்களா என்பதை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.

மேற்கொண்டு விவாதம் செய்யுமுன் - 'பெண் ஏன் அடிமையானாள்' என்ற தந்தை
பெரியாரின் புத்தகத்தை முழுவதுமாக வாசித்துக் கொள்ளுங்கள். அரைகுறைப்
புரிதலுடன் வந்து இங்கு கோமாளித்தனங்களைக் காட்டிக் கொண்டிருக்க


வேண்டாம்.

என்னடா, இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று கேட்டீர்களென்றால் -
திராவிடத் தமிழர்களின் துபாய் அலுவலகமே எங்களது அறைதான் என்பதை நினைவில்
கொள்ளுங்கள்.
(எங்களது - நண்பன், முத்துகுமரன்)

சொல்லுங்கள் - 'நான் எழுதியதெல்லாம், சுயநினைவோடு தெரிந்தே எழுதுகிறேன்'
என்று.

விவாதிப்போம்.

நட்புடன்

நண்பன்

செல்வன்

unread,
Sep 26, 2007, 3:28:19 PM9/26/07
to panb...@googlegroups.com

//எனக்கென்னமோ பல பரிமாணங்களில் அணுக வேண்டிய பிரச்சினையை பாலியல்


சுதந்திரம் என்ற ஒற்றைசாளாரம் வழியே அணுகுகிறீர்களோ என்றுதான்
தோன்றுகிறது. பெண் சுதந்திரத்தின் ஒரு பரிமாணமாகத்தான் இது இருக்கலாமே

தவிர இதுவே ஒட்டு மொத்த தீர்வாய் இருக்காது.//

அதை ஒட்டுமொத்த தீர்வாக சொல்லவில்லை.ஆனால் "பாலியல் சுதந்திரம் இல்லாமல் பெண்விடுதலை என்பது சாத்தியமே அல்ல" என்றுதான் சொல்கிறேன்.பாலியல் சுதந்திரம் என்பது வழிமுறையே தவிர குறிக்கோளல்ல.பெண்கல்வி, விழிப்புணர்வு, பாலியல் சுதந்திரம்,தொழில் செய்யும் உரிமை போன்ற பலவும் வழிமுறைகள் தானே தவிர குறிக்கோளல்ல.இவைகளின் காம்பினேஷனில் தான் சுதந்திரம் கிடைக்க முடியும்.

//நீங்கள் மேலே கூறிய "காதல்- அதனால் பெண் மட்டுமே பாதிக்கப் படுகிறாள்-


விதவைக்கும்,டைவோர்சிக்கும் சமுதாயத்தில் உள்ள மரியாதை-குடும்ப அமைப்பில்

உள்ள அடிமைத்தனம்."இவையனைத்தும் தனிப்பட்டவர்களைப் பொறுத்து மாறுமே தவிர ஒட்டு மொத்த சமுதாயத்திடம் வெறும் பாலியல் சுதந்திரத்தினால் எப்படி
விழிப்பு வந்து விட முடியும்?//

பாலியல் சுதந்திரம் வந்தால் அதன்பின் ஆண் ஏன் மனைவியை அடிக்கிறான்?ஏன் நிர்பந்த உறவுகள் நீடிக்க போகிறது?மனமொப்பாத உறவுகள் ஏன் நீடிக்க போகிறது?



செல்வன்

unread,
Sep 26, 2007, 3:38:28 PM9/26/07
to panb...@googlegroups.com

நண்பன்,

உங்கள் கருத்துக்கு பதில் சொன்னேனே தவிர அவை எல்லாம் "கோமாளித்தனம்", "சுயநினைவு இன்றி எழுதப்பட்டவை", "திராவிட தமிழர்களிடம் அடி வாங்கியவர்" "வீண் ஜம்பம்" என்றெல்லாம் நான் விமர்சிக்கவில்லை. வலைபதிவில் மற்றவர்களால் விமர்சிக்கப்பட்டாதவர்கள், திட்டபடாதவர் யாரும் கிடையாது. உங்கள் நண்பர்கள் யார், உங்கள் அறையில் எந்த அலுவலகம் இருக்கிறது என்பதெல்லாம் எனக்கு தேவையில்லாத விஷயங்கள்.உங்கள் கட்டுரையின் ஒற்றை வரிக்கு பதில் போடுவதா, வரிக்கு வரி பதில் போடுவதா,போடாமலே இருப்பதா என்பது என் நேரம், விருப்பம் சம்பந்தப்பட்ட விஷயம்.

"சுயநினைவுடன் தான் எழுதுகிறேன்" என்றெல்லாம் சான்றிதழ் அளித்து எழுத இது +2 பரிட்சை கிடையாது.நீங்கள் எழுதியதற்கு மரியாதையுடன் தான் பதில் அளித்தேன் என நினைக்கிறேன்.அந்த மரியாதையை வாதிடுகிறவர் திருப்பிதராத பட்சத்தில் எந்த விவாதமும் சாத்தியமில்லை.



On 9/26/07, செல்வன் <hol...@gmail.com> wrote:
--
செல்வன்

http://www.holyox.tk
http://groups.google.com/group/muththamiz


தனிமடல் தொடர்புக்கு: hol...@gmail.com
--
செல்வன்

http://www.holyox.tk

நண்பன்

unread,
Sep 26, 2007, 3:38:45 PM9/26/07
to பண்புடன்
சர்க்கஸ் கூடாரங்களில், சாகசம் செய்பவர்களுக்கிடையே, கோமாளிகளும் கொஞ்சம்
தேவைதான். இளைப்பாறிக் கொள்ள.

சுட்டிகளைக் கொடுங்கள். படித்துப் பார்ப்போமே. (ஏற்கனவே சில சுட்டிகளை
வாசித்து விட்டோம். நீங்கள் ஏதாவது வித்தியாசமாக கொடுக்க நினைத்தால்
கொடுங்கள்.)

நண்பன்

unread,
Sep 26, 2007, 3:59:15 PM9/26/07
to பண்புடன்
பிரேம்

//*பிரபுவுடன், திருமணம் இல்லாத அவர் உறவு இங்கே தானே
ஆரம்பித்தது...!!!)*

அது அவர் அந்தரங்க வாழ்க்கை. அதை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்.
கோயில் கட்டியவர்களை பற்றியும் அவர் பெயரால் வியாபாரத்தை பெருக்கிக்
கொண்டவர்களை பற்றியும் கவலைப்படாத நாம் குஷ்பூவின் வாழ்க்கையை ஏன் நோண்ட
வேண்டும்

(என்னமோ அவர் தான் கோயிலை கட்டச் சொன்ன மாதிரியில்ல இருக்கு நாம
சொல்றது?) //

இது அவரது அந்தரங்க வாழ்க்கை என்று கொள்ளலாம் தான். ஆனால், ஒருவர்
எப்பொழுது தன் அந்தரங்கத்தை, வெளியரங்கில் பகிரங்கப் படுத்தி விட்டாரோ,
பின்னர், அது விவாதத்துக்குரியது தான். அதை அவர் அந்தரங்கம் – புனிதம்
என்றெல்லாம் நினைத்திருந்தாரென்றால், அது பற்றி பத்திரிக்கைப்
பேட்டியெல்லாம் கொடுத்திருக்க மாட்டார். பிரபல இதழ்களில், அவர் தானும்
பிரபுவும் இணைந்து வாழ்வதைப் பற்றி சொல்லி இருக்கிறார். தன் கையெழுத்தை –
குஷ்பு பிரபு என்று மாட்டிக் கொண்டதாகவும், வங்கிகள் அந்த கையெழுத்தை
ஏற்றுக் கொள்வதாகவும் கூறி இருந்தார்.

அவரே சொல்லிக் கொண்ட ஒரு விஷயத்தை – நான் சொல்வதில் என்ன தவறு இருக்கப்
போகிறது. அதிலும், எனது வார்த்தைகள் மிக கண்ணியத்துடன் எழுதப்பட்டவை.
அவரை – குஷ்புவை – இழிவாக சுட்டிக் காட்டும் விதமாகவா இருக்கிறது? குஷ்பு
என்றல்ல – எந்த ஒரு தனிமனிதனின் வாழ்வையும் மதிக்கத் தெரிந்தவன் நான். ஆக
நீங்கள் சொன்ன – நோண்ட வேண்டும்? என்ற சொற்றோடர் மிகத் தவறானது.

மேலும், குஷ்புவின் பெயரால் வியாபாரம் பெருக்கிக் கொள்ளப்பட்டது, குஷ்பு
ஒரு குல தெய்வத்திற்கு இணையாக உயர்த்தப்பட்டது எல்லாம் இந்தப்
படத்திற்குப் பின்னர் தான் என்பதைத் தான் சுட்டிக் காட்டினேன்.
அதற்கெல்லாம் காரணம் குஷ்பு என்று நான் கூறவில்லை. History is in the
making என்ற வகையில் தரப்பட்ட தகவல்கள்.

குஷ்பு தான் கோயிலைக் கட்டச் சொன்ன மாதிரியில்ல இருக்கு? என்ற கேள்வியில்
நியாயம் இருக்கலாம். ஆனால், முதலில் ரசிகர் மன்றங்களை எப்படி
நிர்வகிக்கிறார்கள் என்று தெரிந்திருந்தால் – இந்தக் கேள்வியே
எழுந்திருக்காது. ஒவ்வொரு நடிகரும் – தங்களது ரசிகர் மன்ற
நிர்வாகத்திற்கென பணம் கொடுக்கின்றனர். உள்ளூர் வசூல் என்பது தனி. சிலர்
இவ்வாறு பணம் கொடுக்க மறுத்து ரசிகர் மன்றங்களையே உதறித் தள்ளியவர்கள் –
உதாரணம் – சிவகுமார். என்றுமே அவர் ரசிகர் மன்றங்களை ஏற்படுத்திக்
கொள்ளவில்லை. அதற்கான அங்கீகாரத்தையும் வழங்க வில்லை. ஆனால், மற்ற
அனைவரும், தங்களுக்கென ஒரு பின் புலம் வேண்டியிருக்கிறது என்ற வகையில்,
பணம் கொடுத்து ரசிகர் மன்றத்தை வளர்த்து விடுகின்றனர். இந்த ரசிகர்கள்
பின்னர் ஒருவரை ஒருவர் விஞ்ச வேண்டும் என்ற எண்ணத்துடன் எவரும்
எதிர்பாராத காரியங்களைச் செய்து கவனைஈர்ப்பு செய்கிறார்கள்.

குஷ்பு கோயில் கட்டச் சொல்லி இருக்க மாட்டார். உண்மை தான். ஆனால் அவ்வாறு
செய்யும் மனநிலையுடைய ஒரு கூட்டத்தை வளர்த்து விட்டதில் அவருக்கும் ஒரு
பங்கு இருக்கத் தான் செய்கிறது. அந்த வகையில் திரைத்துரையினர் – குஷ்பு
உட்பட அனைவரும் கறைபடிந்த கரம் உடையவர்கள் தான்.

நண்பன்

unread,
Sep 26, 2007, 4:04:09 PM9/26/07
to பண்புடன்
செல்வன்,

'நான் சொன்ன கருத்துகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்' என சொல்ல
இயலாமல், மழுப்பிக் கொண்டு விட்டீர்கள்.

விவாதத்தின் அடிப்படை நேர்மை - ஒருவர் தன் கருத்திற்கு பொறுப்பேற்றுக்
கொள்வது. நான் ஏதாவது சொல்வேன் - ஆனால், அதற்குப் பொறுப்பேற்க வேண்டிய
அவசியமில்லை' என்பது உங்கள் கருத்து - சரிதானே?

உங்கள் பதில்களில் ' வாதத்திற்காக வைக்கப்பட்ட வரிகளைக் கணக்கில் கொண்டு,
மற்றவற்றை மூடி மறைத்துக் கொள்ளும் உத்தி இருந்ததினால் தான் இந்தக்
கேள்வியை முன் வைக்க வேண்டி இருந்தது.'

தளம் மாறியதும், தன் நேர்மையும் மாறி விடும் என்று நினைப்பு இருப்பதினால்
தான் இந்தக் கேள்வி. அவ்வளவே...

நண்பன்

செல்வன்

unread,
Sep 26, 2007, 4:33:25 PM9/26/07
to panb...@googlegroups.com

நண்பன்

நீங்கள் சொன்னது "'நான் எழுதியதெல்லாம், சுயநினைவோடு தெரிந்தே எழுதுகிறேன்'
என்று என்னை சான்றிதழ் அளிக்க சொன்னீர்கள்.

சுயநினைவின்றி எழுத நான் குடிகாரனோ, பைத்தியகாரனோ கிடையாது.ஒருவர் மின்னஞ்சலில் இருந்து குழுமத்துக்கு வந்த கருத்துக்களுக்கு அவர் தான் பொறுப்பு என்பது உலகறிந்த விசயம்.அதை மடலுக்கு மடல் வலியுறுத்திகொண்டிருக்க முடியாது.

//சர்க்கஸ் கூடாரங்களில், சாகசம் செய்பவர்களுக்கிடையே, கோமாளிகளும் கொஞ்சம்
தேவைதான்//

மீண்டும் தேவையற்ற தனிமனித விமர்சனம்.

வலைபதிவுகளில் கூட உங்களிடம் நான் எதுவும் விவாதித்ததாகவோ,திட்டியதாகவோ எனக்கு நினைவில்லை.அப்படி இருக்க குழும விவாதங்களில் உங்கள் கருத்துக்களுக்கு மரியாதையுடன் பதில் அளிக்கும்போது ஏன் இப்படி தனிப்பட்டு விமர்சிக்கிறீர்கள் என்பது புரியவில்லை.
 

//உங்கள் பதில்களில் ' வாதத்திற்காக வைக்கப்பட்ட வரிகளைக் கணக்கில் கொண்டு,


மற்றவற்றை மூடி மறைத்துக் கொள்ளும் உத்தி இருந்ததினால் தான் இந்தக்

கேள்வியை முன் வைக்க வேண்டி இருந்தது.'//

நீங்கள் எந்த வரியை எதற்காக எழுதீனிர்கள் என்பது எனக்கு தெரியாது.எனக்கு முக்கியமாக தோன்றும் வரிகளுக்கு மட்டும்தான் நான் பதில் அளிக்க முடியும்.உங்களுக்கு முக்கியமாக படும் வரிகள் இருந்தால் அவற்ரை குறிப்பிட்டு கேட்டிருந்தால் நான் பதில் அளித்திருப்பேன்.முன்பே சொன்னதுபோல் "உங்கள் பதிலில் அந்த வரிக்கு பதில் எழுதுவது,எதை விடுவது" என்பது என் நேரம்,விருப்பம் சம்பந்தப்பட்ட விஷயம்.

//விவாதத்தின் அடிப்படை நேர்மை - ஒருவர் தன் கருத்திற்கு பொறுப்பேற்றுக்


கொள்வது. நான் ஏதாவது சொல்வேன் - ஆனால், அதற்குப் பொறுப்பேற்க வேண்டிய

அவசியமில்லை' என்பது உங்கள் கருத்து - சரிதானே?//

என் மனதில் இருக்கும் கருத்து நான் எழுதாமல் உங்களுக்கு தெரிவதாக இருந்தால் நீங்கள் மந்திரவாதியாகத்தான் இருக்க முடியும்.


On 9/26/07, நண்பன் <nan...@gmail.com> wrote:

செல்வன்

unread,
Sep 26, 2007, 5:00:38 PM9/26/07
to panb...@googlegroups.com
குஷ்பு என்ன சொன்னார்..

இந்தியா டுடேவுக்கு அவர் அளித்த பேட்டியின் சுருக்கம்,

பெண்கள் தங்கள் செக்ஸ் விருப்பங்களை வெளியிடுவதில் பெங்களூரை விட சென்னை பின் தங்கியிருந்தது. இப்போது சென்னைப் பெண்களும் செக்ஸ் பற்றிய மனத் தடைகளை கடந்து வருகின்றனர். செக்ஸ் பற்றி பெண்கள் வெளிப்படையாக பேச முடிகிறது.

ஒரு பெண் தனது பாய் பிரண்ட் பற்றி உறுதியாக இருக்கும்போது அதை தன் பெற்றோரிடம் சொல்லலாம். தங்களது பெண் சீரியஸான ஒரு உறவை வைத்திருக்கும்போது அதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.

ஒரு பெண் திருமணம் ஆகும்போது அவள் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும்.

கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நான் காதலித்த நபரையே திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் எங்கள் உறவு குறித்து நிச்சயமாக இருந்ததால் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம். இப்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள். குழந்தைகள் எங்களுடனேயே தூங்குவதால் எங்களுக்கென்று நாங்கள் தனியாக நேரத்தை ஒதுக்க வேண்டிருக்கிறது.

மண வாழ்வில் ஈடுபடும் பெண்ணும் ஆணும் ஒருவருக்கு ஒருவர் உடல்ரீதியாகவும் மகிழ்ச்சியளிக்க வேண்டும். ஒருவரை ஒருவர் முழுமையாக திருப்தியடையச் செய்வது தான் ஆனந்தம். சில தம்பதிகள் செக்ஸ் புத்தகங்கள், படங்களைப் பார்த்து இன்பத்தை பெருக்கிக் கொள்கின்றனர். அதை தவறு என்று சொல்ல முடியாது.

பெண்கள் தங்கள் செக்ஸ் விருப்பங்களைப் பேசினால் அவர்களைத் தவறானவர்களாகப் பார்க்கும் ஆண்களின் கண்ணோட்டம் மாற வேண்டும்.
இவ்வாறு குஷ்பு பேட்டியளித்துள்ளார்.

 



--
செல்வன்

http://www.holyox.tk

நண்பன்

unread,
Sep 26, 2007, 5:28:23 PM9/26/07
to பண்புடன்
பிரேம்

//நண்பன்,

எத்தனை காலங்கள் தான் இந்த தப்பான புரிந்துணர்விலேயே இருப்பீர்கள்? அவர்
சொன்னதுக்கான அர்த்தம் 'யாருடனும் .....' என்பது அல்ல 'அப்படி
நேர்ந்தாலும்
பாதுக்காப்பாக இருக்கவேண்டும்' என்பதுதான்.

என்னமோ குஷ்பூ தான் அவுங்களுக்கு வழிக்காட்டின மாதிரியும் அதுக்கு
முன்னாடி எல்லோரும் உத்தமர்களாக, ஒன்னும் தெரியாத பச்சைப்பிள்ளைகள்
மாதிரி இருந்தது போலவும் சொல்கிறீர்களே //

இதில் தப்பான புரிந்துணர்வு எங்கிருந்து வந்தது என்பதை நீங்கள் விளக்க
வேண்டும். ‘அப்படி நேர்ந்தாலும் …’ என்பதன் பொருள் என்ன? தற்செயலாக அது
நடந்து விடும் என்றா?

அப்படி நடக்க –

இருவித சாத்தியக் கூறுகள் மட்டுமே உண்டு.
ஒன்று – பலாத்காராம்.
மற்றொன்று – விரும்பி ஈடுபடுவது.

பலாத்காரத்தின் போது – ஆணுக்கு உறை மாட்டிவிட, அந்தப் பெண்ணுக்கு
நேரமிருக்குமா? உறை மாட்டிவிடும் அளவிற்கு அந்தப் பெண் பொறுப்பேற்றுக்
கொள்ள வேண்டுமென்றால், அது பலாத்காராமாக இருக்க முடியாது. விரும்பியதாகத்
தான் கொள்ள வேண்டும்.

ஆக, பாதுகாப்பாக இருங்கள் என்ற அறிவுரை – எதிர்பாராவிதமாக நடந்தேறும்
விஷயத்திற்கு அல்ல. மாறாக, விரும்பி உறவு கொள்ளுங்கள் – உறை அணிந்து
என்பதற்கான அறிவுரையே தவிர, பெண் பலாத்காரம் செய்யும் ஆண்களிடமிருந்து
தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அல்ல.

திருமணத்திற்கு முன் உடலுறவுகள் திட்டமிட்டு நடப்பது அல்ல. அவை
உணர்ச்சிகளின் அதீத உந்துதலில், நிமிட நேர தன் வயமிழத்தலால் நடப்பது
தான். அந்த நிமிட நேர தன் வயமிழத்தலுக்காக, ஒரு இளம்பெண், திருமணமாகாத
பெண், எப்பொழுதும் தன் கைப்பையில் ஆணுறைகளை வைத்துக் கொண்டு அலைய
வேண்டுமா என்ன? அது சாத்தியமா?

இளம் பெண்களின் மீதான கரிசனை – குஷ்புவின் கரிசனை பிரமிக்க வைக்கிறது.
குஷ்பு சொல்ல வருவது – ஒரு பெண் தனது அன்றைய தினத்தைத் திட்டமிடும்
பொழுது, ‘இன்று நான் ராஜாவின் பிறந்த நாள் விழாவிற்குப் போகிறேன். அங்கு,
அவனுடன் உடலுறவு கொள்ள வேண்டியதிருக்கும். அதனால், எதற்கும், ஆணுறை
பாக்கெட்டுகளை வைத்துக் கொள்கிறேன்’ என்று திட்டமிட்டு செயல்பட வேண்டுமா
என்ன? அல்லது இன்று சுற்றுலா போகிறோம். எவனுடனவாவது படுத்துக் கொள்ள
வாய்ப்பு கிடைக்கும், அதனால் ஆணுறைகளை வைத்துக் கொள்கிறேன்’ என்றே
திட்டமிட வேண்டுமா என்ன? விரும்பி ஈடுபடும் உறவென்றால், அங்கு, ஆணுறை
அணிவது அல்லது பாதுகாப்பாக இருப்பது ஒரு ஆணிற்கும் உண்டான கட்டுப்பாடு
என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், குஷ்பு, இங்கு
பெண்களுக்கு அந்தப் பாதுகாப்பைச் சொல்லித் தர முனைவது என்ன காரணம்
கொண்டு? இருவரும் ஒருவரை ஒருவர் மதித்து செயல்பட வேண்டிய உறவாக இதை
குஷ்பு கருதவில்லை. மாறாக பெண்கள் விரும்பி அழைக்கும் உறவாக, பாதுகாப்பாக
இருக்க வேண்டும் என்கிறாரா? அப்படியானால், இதில் என்ன 'பெண் உரிமை'
கிட்டி விடும்? பெண்ணின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாத ஒரு ஆணுடன், ஒரு
பெண் தன் சுயமரியாதையை இழந்து உறவு கொள்ள வேண்டிய அவசியமென்ன? தன்
சுயமரியாதையை விட, தன் காமமே பெரிது என கருதும் பெண், எத்தகைய
குணமுடையவளாக இருக்க முடியும்?


அடக்கமுடியாத உணர்வுகள் என்று சில உண்டு. அது – மூச்சு விடுதல், மலஜலம்
கழித்தல் இவை மட்டும் தான். காம உணர்வும் அதே போன்று ஒன்றே என நினைத்தால்
அவர்கள் ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, they are sub-humans only.
காமம் என்பது கையாளப்பட வேண்டிய உணர்வே அன்றி – தோன்றிய இடத்தில்
வெளிப்படுத்திவிடக் கூடிய உணர்வல்ல. ஆக, ‘அப்படி நேர்ந்தால்…’ என குஷ்பு
சொல்லியதன் ஒரே வெளிப்பாடு, ‘உங்கள் காமத்தைக் கையாண்டு தீர்த்துக்
கொள்ள…’ என்ற அடிப்படையில் எழுந்தது தானே தவிர, அப்படி உங்களையும் மீறி
நேர்ந்தால், பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்பதற்கான அறிவுரை அல்ல.

தவறிழைக்க வாய்ப்புகள் இருக்கையில், அவற்றிலிருந்து மீளவும் வழி
தெரிந்திருக்க வேண்டும் – என்ற வகையில் அவரது அக்கறை புரிந்து கொள்ளப்பட
வேண்டியது தான். ஆனால், அதற்கான அறிவுரையாக அவர் சொல்ல வேண்டியது –
அத்தகைய தவறுகள் நிகழ வாய்ப்புகள் உண்டாகும் தருணங்களைத் தவிர்த்துக்
கொள்ளுங்கள் என்பதாக இருக்க வேண்டுமே தவிர, தவறுகள் செய்யுங்கள் – தவறு
செய்ய அஞ்சாதீர்கள் – மாட்டிக் கொள்ளாமல் தவறு செய்வது எப்படி என்று நான்
சொல்லித் தருகிறேன் என்பது ஒரு பெரிய திருடன், ஒன்றும் அறியாத
அப்பாவிக்கு, உனக்குத் திருட நான் சொல்லித் தருகிறேன் என்று பாடம்
எடுத்தது போன்றாகி விடுகிறதே…!!!!

// என்னமோ குஷ்பூ தான் அவுங்களுக்கு வழிக்காட்டின மாதிரியும் அதுக்கு
முன்னாடி எல்லோரும் உத்தமர்களாக, ஒன்னும் தெரியாத பச்சைப்பிள்ளைகள்
மாதிரி இருந்தது போலவும் சொல்கிறீர்களே //

இது உங்களின் புரிந்துணர்வாக இருக்கலாம். ஒரு விரல் விட்டு எண்ணக்கூடிய
சதவிகித அளவிலான பெண்களின் தவறுகளை, ஒட்டு மொத்த இனத்தின் மீதும் சுமத்தி
விடக் கூடாது நண்பரே.

தங்கள் உடல் இச்சையை, காமத்தைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க
தெரிந்தவர்கள் மிக மிக அதிகம். குஷ்புவின் வார்த்தைகள், தவறான
வழிகாட்டியாக அமைந்துவிடக் கூடிய சாத்தியதைகள் மிக அதிகம. ‘எல்லோரும்..’
தங்கள் கன்னித் தன்மையை இழந்தவர்கள் தான் என்பது உங்கள் அனுமானால்,
நிச்சயமாக, கண்டிப்பாக, நீங்கள் ஒரு தவறான கருத்துக் கணிப்பின்
அடிப்படையில், கண்களை மூடிக் கொண்டு, நம்புகிறீர்களே தவிர, உண்மையைப்
பிரதிபலிப்பதாக உங்கள் அனுமானங்கள் இருக்கவில்லை.

பெண்கள் தங்கள் காமத்தை அடக்கத் தெரியாமல் தவறிழைக்கிறார்கள் என்ற
கருத்தை நீங்கள் மீண்டும், வலியுறுத்துகிறீர்கள். இதைவிட, பெண்களை
அவமானப்படுத்தக் கூடிய வார்த்தைகள் வேறு இருக்க முடியாது. பெண்களின்
சுயமரியாதையைக் காயப்படுத்தக் கூடிய வாக்கியங்கள் வேறு இருக்க முடியாது.
பிறகு நீங்கள் பேசும் பெண்ணியம் எந்த வகையில் என்பதற்கான விவாதங்கள்
தேவையற்றதாகத் தான் முடியும்.

நண்பன்

unread,
Sep 26, 2007, 6:05:42 PM9/26/07
to பண்புடன்
செல்வன்,

On Sep 27, 12:33 am, "செல்வன்" <hol...@gmail.com> wrote:
> நண்பன்
>

> மின்னஞ்சலில்


> இருந்து குழுமத்துக்கு வந்த கருத்துக்களுக்கு அவர் தான் பொறுப்பு என்பது

> உலகறிந்த விசயம்.அதை மடலுக்கு மடல் வலியுறுத்திகொண்டிருக்க முடியாது.
>

Very Good

சுயநினைவோடு தான் எழுதினீர்களா என்று கேட்டதற்குக் காரணம் - பின்னர்,
நான் அப்படிச் சொல்லவில்லை என்று அந்தர்பல்டி அடித்து விடாமல்
இருப்பதற்காகத் தான்.

> மீண்டும் தேவையற்ற தனிமனித விமர்சனம்.

ஒரு பந்தை சுவரில் எறிந்தால், அது உங்களிடமே திரும்பி வரும.

இப்பொழுது நீட்டி முழக்கி நீங்கள் செய்த வாதங்களுக்கு வருவோம்


// 2.பெரியாரின் கருத்தாக நண்பன் கூறுவது
//
பெரியார் கூறியது என்ன?
திருமணத்திற்கு முன் உறவு வைத்துக் கொள்ளுங்கள் என்றா கூறினார்? அப்படி
எங்கும் கூறியதே இல்லை. ஒழுக்கக் கேட்டை அவர் எங்கும் போதித்தது
கிடையாது//

பெரியார் இது பற்றி கூறியதை நண்பன் அறியவில்லை என்றே கருதுகிறேன்.

பெரியார் சொன்னது இதோ //

பெரியார் என்ன சொன்னாரோ, அது என்னன்னு சொல்லிவிட்டுப் போவதை விட்டு
விட்டு, பெரியாரின் ஏகபோக வாரிசு மாதிரி ‘நண்பன் அறியவில்லை’ என்ற
விமர்சனம் தேவைதானா?

சர்க்கஸ் கூடாரங்களில் கோமாளிகள் அவசியம் என்று கூறினால், அது தனி மனித
காயப்படுத்துதல். ஆனால், நண்பனுக்குத் தெரிந்தது தெரியாதது என்றெல்லாம்
எழுதித் தள்ளும் உங்கள் மனப்பாவம் ரொம்ப நாகரீகமானது. ஆனால், அதிலும் ஒரு
நேர்மையைக் கடை பிடித்தீர்களா? இல்லை!!!

நண்பன் என்ன சொன்னார் என்பதை முழுவதுமாக நீங்கள் வாசிக்கவில்லை. மேற்கண்ட
வரிகளைத் தொடர்ந்து, நான் எழுதிய மற்ற வரிகளை வாசிக்கவே இல்லையே!!!

//அவர் கூறியதெல்லாம் - எவற்றைக் கொண்டு பெண்கள்
அடிமைப்படுத்தப்படுகிறார்களோ அவற்றை பெண்கள் துணிந்து செய்ய வேண்டும்
என்று!!! ஒரு ஆண்மகன் ஒருத்தியை ஆசை நாயகியாக வைத்துக் கொண்டால்,
அதற்குப் பதிலாக பெண்களும் ஆண்களை வைத்துக் கொள்ளுங்கள். இப்படித் தானே
கூறினார் //

ஒரு வரி இடைவெளியில் நண்பன் குறிப்பிட்ட வரிகளை மறைத்து விட்டு,
நண்பனுக்குப் பெரியாரைத் தெரியாது என்று எழுதி விட்டு, நீளநீளமாக ‘cut
and paste’ செய்து விட்டீர்கள். அந்த கட் அண்ட் பேஸ்டில் என்ன எழுதி
இருக்கிறது – அது நண்பன் எழுதியதில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்று
தெரியாமலே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்…!!!

பெரியார் சொன்னதாக உங்கள் கட் அண்ட் பேஸ்டில் இருந்து –

// உண்மையான சமரசம்

ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண்கள் மூன்று ஆசை
நாயகர்களை
வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும்.
உண்மையான
சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே இருக்காது. //

இரண்டையும் வாசித்துப் பாருங்கள். என்ன வித்தியாசம் இருக்கிறது என்று.

இப்பொழுது சொல்லுங்கள் – நீங்கள் எழுதியவை சுயநினைவோடு தான்
எழுதப்பட்டிருக்கிறதா?

நண்பனுக்குத் தெரியவில்லையே என்ற அங்கலாய்ப்பு வேறு!!!

இது கோமாளித்தனமாகத் தெரியவில்லை?

இது கருத்துக் கயமைத்தனமாகத் தெரியவில்லை?.

எதையுமே வாசிக்காமலே, அடுத்தவர்களை ‘தெரியாதவன்’ என விமர்சிக்கும் உங்களை
எப்படி அழைப்பது?

கட் அண்ட் பேஸ்ட் செய்வது வாதமல்ல. படித்துப் புரிந்து, உட்கிரகித்து,
அதை பிரசவிப்பது தான் மேற்கோள் காட்டுவதன் தாத்பரியம்.

உங்களுடைய பதிவு ஒரு கடைந்தெடுத்த கோமாளித்தனம் என்பதில் எனக்குத்
துளியும் சந்தேகமில்லை.

இன்னும் வரும்.


நண்பன்

செல்வன்

unread,
Sep 26, 2007, 6:19:25 PM9/26/07
to panb...@googlegroups.com

//ஒரு வரி இடைவெளியில் நண்பன் குறிப்பிட்ட வரிகளை மறைத்து விட்டு,நண்பனுக்குப் பெரியாரைத் தெரியாது என்று எழுதி விட்டு, நீளநீளமாக 'cut and paste' செய்து விட்டீர்கள். அந்த கட் அண்ட் பேஸ்டில் என்ன எழுதி இருக்கிறது - அது நண்பன் எழுதியதில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்று தெரியாமலே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்...!!!//

நீங்கள் சொன்னது....

"பெரியார் கூறியது என்ன?
திருமணத்திற்கு முன் உறவு வைத்துக் கொள்ளுங்கள் என்றா கூறினார்? அப்படி எங்கும் கூறியதே இல்லை."
 
திருமணத்துக்கு முன் உறவு பற்றி பெரியார் கூறியது என்ன?
 
"நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, "Proposed Husband and wife" என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். "நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்.'' என்றார்கள். "எவ்வளவு காலமாக' என்று கேட்டேன். "எட்டு மாதமாக' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? "பதிவிரதம்' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?

'விடுதலை' 28.6.1973

பெரியார் திருமணத்துக்கு முன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று எங்கேயும் கூறவில்லை என சொன்னீர்கள்.அது தவறு அவர் அம்மாதிரி சொல்லியிருக்கிறார் என நிருபித்துவிட்டேன்.

ஆக அவர் திருமணத்துக்கு முன் உறவு பற்றி சொன்னது உங்களுக்கு தெரியவில்லை என்றுதானே பொருள்?

நண்பன்

unread,
Sep 26, 2007, 6:39:22 PM9/26/07
to பண்புடன்
செல்வன்

உங்களுடைய புரிதல் இன்னமும் அபத்தம். அவர் அதை முன்மாதிரியாக எடுத்துக்
கொண்டு, உடலுறவு கொள்ளுங்கள் என்று கூறவே இல்லை.

இங்கு அவர் ஒப்பிடுவது இரு வகையான திருமண பந்தங்களை.

இருவகையான வாழ்க்கை முறைகளை.

இருவர் ஒருமித்து, வாழ்வதற்காகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம்
என்று சொன்னதற்கு அர்த்தம் 'ஒரு முழுமையான வாழ்க்கையில், ஒருவருக்கொருவர்
அனுசரணையாக இருக்க முடியுமா, whether we are compatible to each other
என்று தெரிந்து கொள்ளும் பொருட்டு, வாழ்கிறோம் என்பது தான். நாங்கள்
இருவரும் சேர்ந்து திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ள பயிற்சி எடுத்துக்
கொண்டிருக்கிறோம் என்பதல்ல.

இந்த இரு வித வாழ்க்கையையும் ஒப்பிடும் அவர் நமது திருமணமுறைகளைச்
சாடுகிறார் - ஏனென்றால், ஹிந்து திருமண முறைகள் 'கன்னிகா தானம்' என்ற
முறையில் நடைபெறுகிறது. இங்கு ஆண் பெண் ஒருவருக்கொருவர் இணையானவர்களா
என்று பார்க்கப்படுவதில்லை. மாறாக, ஒரு தந்தை, தன் சொத்தை - அதாவது
பெண்ணை - இன்னொரு ஆணுக்குத் தாரை வார்க்கிறார். அதாவது பெண் என்ற பொருளை
மற்றொரு ஆணுக்கு மாற்றிக் கொடுக்கிறார். பெண்ணை ஒரு ஜடப் பொருளாக
பாவித்து செய்யும் நம் திருமண முறைகளைக் கொண்டு நாம், வாழ்க்கையில்
முன்னேற முடியாது என்கிறார்.

அதை நீங்கள் புரிந்து கொண்ட விதம்.... அட! அட! என்னே அழகு!!!

இந்த மாதிரி புரிந்து கொள்ள மூளை என்ற ஒன்று தேவையே இல்லை என்பது தான்
எனது கருத்து.

> பெரியார் திருமணத்துக்கு முன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்* என்று எங்கேயும்
> கூறவில்லை *என சொன்னீர்கள்.அது தவறு அவர் அம்மாதிரி சொல்லியிருக்கிறார் என


> நிருபித்துவிட்டேன்

> ஆக அவர் திருமணத்துக்கு முன் உறவு பற்றி சொன்னது உங்களுக்கு தெரியவில்லை


> என்றுதானே பொருள்?
>

இன்னமும் உங்களுக்குக் கோமாளித்தனம் செய்வது பிடித்திருக்கிறது
போலிருக்கிறது....

பெரியாரை புரிந்து கொள்ள உங்களுக்கு இந்த ஒரு ஜென்மம் பத்தாது,
நண்பரே...!!!

செல்வன்

unread,
Sep 26, 2007, 6:40:05 PM9/26/07
to panb...@googlegroups.com

நண்பன்,

உங்கள் கேள்விகள் சிலவற்றுக்கு பெரியார் முன்பே தீர்வு சொல்லியிருக்கிறார்.படித்து பாருங்கள்.

நண்பன் சொல்வது "அடக்கமுடியாத உணர்வுகள் என்று சில உண்டு.  அது - மூச்சு விடுதல், மலஜலம் கழித்தல் இவை மட்டும் தான். காம உணர்வும் அதே போன்று ஒன்றே என நினைத்தால் அவர்கள் ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, they are sub-humans only"
 

பெரியார் சொல்வது "மக்களின் அன்பும், ஆசையும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, அது இன்னவிதமாக, இன்னாரோடு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்பதாக நிர்பந்திக்க எவ்வித நியாயமும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஏனெனில், ஆசை என்பது ஜீவ சுபாவமானது. அதை ஏதோ நிர்பந்தத்திற்காக தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தன மேயாகும்."

"சாதாரண மனித ஜீவனின் உணர்ச்சியையும், இந்திரியச் செயலையும் கட்டுப்படுத்தும்படியானதான கொள்கைகளை, ஒழுக்கங்களை, கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினால் அது செலாவணியாகுமா? செலாவணியாவதாயிருந்தாலும், அதற்கு என்ன அவசியம் என்பன போன்றவைகளை கவனிக்க வேண்டாமா என்றுதான் கேட்கிறோம்."

நண்பன் சொல்வது "ஆக, பாதுகாப்பாக இருங்கள் என்ற அறிவுரை - எதிர்பாராவிதமாக நடந்தேறும் விஷயத்திற்கு அல்ல. மாறாக, விரும்பி உறவு கொள்ளுங்கள் - உறை அணிந்து என்பதற்கான அறிவுரையே தவிர, பெண் பலாத்காரம் செய்யும் ஆண்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அல்ல.

திருமணத்திற்கு முன் உடலுறவுகள் திட்டமிட்டு நடப்பது அல்ல. அவை
உணர்ச்சிகளின் அதீத உந்துதலில், நிமிட நேர தன் வயமிழத்தலால் நடப்பது

தான். அந்த நிமிட நேர தன் வயமிழத்தலுக்காக, ஒரு இளம்பெண், திருமணமாகாத பெண், எப்பொழுதும் தன் கைப்பையில் ஆணுறைகளை வைத்துக் கொண்டு அலைய வேண்டுமா என்ன? அது சாத்தியமா?"

பெரியார் சொல்லுவது "பெண்கள் வியாதியஸ்தர்கள் ஆவதற்கும், சீக்கிரம் கிழப்பருவம் அடைவதற்கும், ஆயுள் குறைவதற்கும், அகால மரணமடைவதற்கும் கர்ப்பம் என்பதே மூலகாரணமாயிருக்கிறது. பெண்கள் விடுதலைக்கும், சுயேச்சைக்கும், முன்னேற்றத்திற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்த வேண்டும் என்று நாம் சொல்லுகின்றோம்.

...ஆகையால் ஆண், பெண் இருவர்களின் சுயேச்சைக்குமே கர்ப்பமாவதும், பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது. அதிலும் பெண்கள் சுயேச்சைக்கு, கர்ப்பம் என்பது கொடிய விரோதியாய் இருக்கிறது. அதனால்தான் நாம் கண்டிப்பாய் "பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும்' என்கிறோம்.
– "குடியரசு' (6.4.1930)

"..இன்பத்திற்காகக் கல்யாணம் என்றால் அதற்கேற்ற முறையில் கல்யாணத் திட்டம் அமைக்கப்பட வேண்டுமே ஒழிய மற்றப்படி இன்பமும், காதலும் அல்லாமல் வெறும் உலகத்தை நடத்துவதற்கும் உலக விருத்திக்கு என்று புலபுலெனப் பிள்ளைகளைப் பெறுவதற்கும் ஆண்மக்களுக்கு அவனது வாழ்வுக்கும், கீர்த்திக்கும், திருப்திக்கும் நிபந்தனையற்ற நிரந்தர அடிமையாகப் பெண் இருப்பதற்கும் தான் கல்யாணம் என்பதனால் -

அம்மாதிரி கல்யாண வாழ்க்கையில் நமது பெண் மக்கள் ஈடுபடுவதை
விடக் கல்யாணமே இல்லாமல் வாழுவதையோ அல்லது அவர்கள் இஷ்டப்படி சர்வ சுதந்திரத்தோடு நடந்து கொள்வதையோ தான் நாம் ஆதரிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.."

இந்தத் தீர்மானம் கூட இந்நாட்டு மக்களுக்குக் கஷ்டமாயிருக்குமானால் மக்களுக்குள் கல்யாணம் என்கின்ற ஒரு முறையே கூடாது என்று தான் சொல்லித் தீர வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஏனென்றால் இன்பத்திற்காகக் கல்யாணம் என்றால் அதற்கேற்ற முறையில் கல்யாணத் திட்டம் அமைக்கப்பட வேண்டுமே ஒழிய மற்றப்படி இன்பமும், காதலும் அல்லாமல் வெறும் உலகத்தை நடத்துவதற்கும் உலக விருத்திக்கு என்று புலபுலெனப் பிள்ளைகளைப் பெறுவதற்கும் ஆண்மக்களுக்கு அவனது வாழ்வுக்கும், கீர்த்திக்கும், திருப்திக்கும் நிபந்தனையற்ற நிரந்தர அடிமையாகப் பெண் இருப்பதற்கும் தான் கல்யாணம் என்பதனால் -

அம்மாதிரி கல்யாண வாழ்க்கையில் நமது பெண் மக்கள் ஈடுபடுவதை
விடக் கல்யாணமே இல்லாமல் வாழுவதையோ அல்லது அவர்கள் இஷ்டப்படி சர்வ சுதந்திரத்தோடு நடந்து கொள்வதையோ தான் நாம் ஆதரிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

Siddharth Venkatesan

unread,
Sep 26, 2007, 6:50:26 PM9/26/07
to panb...@googlegroups.com
ஆயிடை, இரு பேராண்மை செய்த பூசல்... - ஔவையார் (குறுந்தொகை : 43)

இப்படியே போச்சுன்னா விவாதம் கடைசில 'போன வியாழக்கிழம நீ என்ன செஞ்ச?' ல
போய் நிக்கும் - சுஜாதா (கணையாழியின் கடைசி பக்கங்கள்).

செல்வன்

unread,
Sep 26, 2007, 7:01:17 PM9/26/07
to panb...@googlegroups.com

 

//உங்களுடைய புரிதல் இன்னமும் அபத்தம். அவர் அதை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, உடலுறவு கொள்ளுங்கள் என்று கூறவே இல்லை.//

பெரியார் திருமணம் என்ற முறையே வேண்டாம் என மாநாடு கூட்டி தீர்மானம் போட்டார்.அவரை போய் திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்ளகூடாது என்று எங்கும் சொல்லவில்லை என்கிறீர்கள்.

பெண்ணடிமை ஒழிய...

பெண்ணடிமைக்கு அடிப்படைக் காரணங்கள் திருமணம், கற்பு என்பவைகளேயாகும். திருமணம் என்பது மனிதத் தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமை கொள்ளவே ஏற்பட்டது... திருமணம் என்பது ஆண்களுக்கு நன்மையாகவும், பெண்களுக்கு கேடாகவும் இருக்கிறது. பெண்களை அடிமையாக வைத்திருப்பது என்பது ஆண்களுக்கு லாபமாக இருக்கிற காரணத்தால், பெண்கள் உரிமைக்கு ஆண்கள், ஒப்புவது இல்லை. இந்த நிலை மாறியாக வேண்டும். நாளைக்கே ஒரு அரசாங்கம் வந்து, திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சட்டம் செய்து விட்டால் பிரச்சனை இல்லை... எனவே, பெண்ணடிமை ஒழிய திருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல. மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டுமென்றாலும், இந்த திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும்.
 
– "உயர் எண்ணங்கள்' என்ற நூலில் பெரியார்

அன்பு குயில்

unread,
Sep 27, 2007, 12:35:53 AM9/27/07
to panb...@googlegroups.com
நண்பன் கேட்டதற்கிணங்க  வலையுலகில் செல்வன் கலாய்க்கப்பட்டது
 
//நண்பர் செல்வனுக்கு என் கேள்விகள் என்ற பதிவில் நண்பரின் எதிர்வினைக்குஎன் பதில்கள்.சுவாரசியமானது.படிக்காமல் இருந்துவிடாதீர்கள். நன்றி.

    //தலைப்பை பார்த்ததும் பகீரென்றது. என்னை தீவிரவாதி என்பதெல்லாம் நியாயமா?:-)//

    கண்டிப்பாக நியாயமில்லை. அல்-கொய்தாவின் படத்தை போட்டு நீங்கள் ஒருவரை எழுதும்போது இது உங்களுக்கு சாதாரணமாகத்தானே இருக்க வேண்டும் என்று நினைத்துத்தான் போட்டேன்:))).
    அந்த வார்த்தை சொன்னா அப்படி வலிக்குதா செல்வன்? இதே தான் அனைவருக்கும்.சொல்வதற்கு முன் யோசிக்கணும்.....

    //ஏதோ பெரிய பொறி வைத்திருக்கிறீர்கள் போலிருக்கு:)//

    பொறி அங்கேயே வெச்சாச்சு. எப்போது தமிழ் ஈழம் அமைவதை ஆதரிக்கறேன்னு நீங்க சொன்னீங்களோ அங்கேயே சிக்கியாச்சு.( மசால் வடை எலி ஞாபகம் வருதா:))


    //"பொதுவாக தேசியவாதிகள்" என்பதெல்லாம் எனக்கு தெரியாது. அது உங்கள் பார்வை, உங்கள் கருத்து. எனக்கு தெரிந்த தேசியவாதிகள் காமராஜர், கக்கன், எம்ஜிஆர் மாதிரி பெரியவர்கள் தான். சரி அதை விடுங்கள்....//

    காமராஜர்,கக்கன்,எம்.ஜீ.ஆர் எல்லாம் தேசியத்தை பற்றி என்ன சொன்னார்கள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா? கூகிளில் பார்த்து எடுத்து போடவும். நானும் தெரிந்துக்கொள்கிறேன்.

    //தமிழீழம் அமையவேண்டும் என ஆசைப்பட்டால் எப்படி தீவிரவாதி ஆவேன்?ஆயுதம் ஏந்தி அப்பாவிகளை கொன்றால் தான் தீவிரவாதி ஆவேன். ஆக முதல் கேள்வி தப்பு//

    அப்படியா? எனக்கு இது தெரியவே தெரியாது. இலங்கை ராணுவத்திலும் போலீசிலும் அப்பாவிகளே கிடையாதா செல்வன்?(கேட்க குரூரமாக இருந்தாலும் இதுதான் இங்கே கேள்வியே)

    //.இரண்டாம் கேள்விக்கு பதில் அவ்வளவு விவரமாக ஈழம் பிரச்சனை பற்றி எனக்கு தெரியாது,//

    //ஏன் புலிகள் ஆயுதம் தூக்கினர் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. //

    //இலங்கை ஏன் புலிகளுடன் பேசுகிறது என கேட்டால் அதுவும் தெரியாது//

    //சமாதானம் ஏற்பட பேசுவதாகவோ அல்லது நார்வே நிர்பந்தத்தில் பேசுவதாகவோ இருக்கலாம்.//

    தெரியாது.

    தெரியாது.

    தெரியாது.

    தெரியாது.

    என்னதான் தெரியும்? :)))
    ஏற்கனவே இடஒதுக்கீடு பற்றிய உங்கள் ஜல்லி கருத்து ஒன்றில் இடஒதுக்கீடு பற்றி எல்லாம் எனக்கு தெரியாது என்று சொன்னீர்களே? ஞாபகம் உள்ளதா?

    என்னது? அதுவும் தெரியாதா? சரி சரி.....:)))

    //இலங்கையின் இறையாண்மை எக்கேடு கெட்டால் எனக்கென்ன?//

    அப்படி போடுங்க ...இதுதான் உலகத்தின் புதிய கடவுளின் கருத்துக்களா? பேஷ்,..பேஷ்..

    //இந்திய ஒருமைப்பாடு பற்றி தான் கவலைப்பட முடியுமே அன்றி இலங்கை, ஜப்பான், கொரியா இறையாண்மை குறித்தேல்லாம் எனக்கு எந்த கவலையும் கிடையாது.தமிழன் வாழவேண்டும், இந்தியன் உயரவேண்டும் அவ்வளவுதான்//

    புல்லரிக்குதுங்க...பொதுவாக எல்லா வினைக்கும் தனிப்பதிவு போட்டு கலாய்ப்பீங்க.அதுதான் நானும் போட்டுட்டேன்:))))) படிச்சுட்டு, தெரிஞ்சுகிட்டு எழுதுங்கதல..நம்பஆளுங்க கைதட்டரானுங்களேன்னு மட்டும்எழுதிடாதீங்க... மேசமான பய புள்ளைங்க.. கவுத்துருவானுங்க...
    ஹிஹி....

    Posted by முத்து தமிழினி at 10:09 PM   

    88 comments:

    லக்கிலுக் said...

        இன்னைக்கு செல்வன் மாட்டினாரா?

        பேசாமல் அப்சலை தூக்கில் போட வேண்டுமா என்ற கேள்விக்கும் நண்பர் செல்வன் "தெரியாது" என்ற வழக்கமான பதிலை வைத்திருந்தால் பிரச்சினையே இல்லை :-)))))
        9.10.06  
    செல்வன் said...

        தலை

        என் இரண்டு பின்னூட்டத்துக்கும் இரண்டு பதிவுகளை போட்டு தமிழ்மணத்தின் மிகப்பெரும் செல்வாக்கு உடைய கட்சியின் தலைவர் என்னை பெரிய ஆளாக்குவதற்கு மிக்க நன்றி:))

        நானெல்லாம் சாதாரண ஆளுங்க.என்னை எல்லாம் வளர்த்து பெரிய ஆளாக்காதீர்கள்:)சொன்னா கேளுங்க:))
        9.10.06  
    முத்து(தமிழினி) said...

        ஓய் செல்வன்,

        ஃபீலிங்சா சொல்லிகினுக்கீறென்...:))

        நமக்குள்ள GIVE AND TAKE தானுங்களே....:))
        9.10.06  
    மசாலா மண்டையன் said...

        ஒண்ணும் இல்ல வோய்.....
        மங்களூர்ல ஊரடங்கு இன்னும் அமுலில் இருப்பதால் தலக்கி பொழுது போகமாட்டேங்கு.
        அதான் உன்ன கலாய்ச்சிகினு கீறாரு.
        9.10.06  
    செல்வன் said...

        ஓய் செல்வன்,

        ஃபீலிங்சா சொல்லிகினுக்கீறென்...:))

        நமக்குள்ள GIVE AND TAKE தானுங்களே....:)) ///

        இல்லைன்னு சொல்லலீங்க. நம் நட்பு என்றும் தொடரும். இன்னும் ஆயிரம் பதிவு போட்டாலும் நீங்களும் என்னை பற்றி எதுவும் மோசமாக எழுதபோவதில்லை. நானும் உங்களை பற்றி எதுவும் தனிப்பட்ட முறையில் எழுதபோவதில்லை.

        நான் சொல்வது என்னவென்றால் எந்த கட்சியிலும் இல்லாமல் தனி ஆவர்த்தனம் நடத்தும் என்னை தமிழ்மணத்தின் மிகப்பெரும் கட்சியின் தலைவரும், செயல் தலைவரும் எதிர்த்து என் பின்னூட்டத்துக்கேலாம் பதிவு போட்டு பெரிய ஆளாக்குவது நியாயமா என்றுதான்:)

        சரி..விடுங்க..ஆட்டம்னு வந்துடுச்சு..ஆடிட வேண்டியதுதான்:)))
        9.10.06  
    குழலி / Kuzhali said...

        //நானெல்லாம் சாதாரண ஆளுங்க.என்னை எல்லாம் வளர்த்து பெரிய ஆளாக்காதீர்கள்:)
        //
        என்ன இப்படி சொல்றிங்க, முகமூடி உங்களை விடிவெள்ளி ரேஞ்சுக்கு பேசுறார் நீங்க என்னடானா சாதாரண என்கிறீர்.

        உங்கள் பதிவிலேயே நடந்தது //நடவாதது,அறிந்தது அறியாதது, தெரிந்தது தெரியாது,பிறந்தது பிறவாதது,என அனைத்தையும் யாம் அறிவோம்.எல்லாம் எமக்கு தெரியும்.//
        அப்படினு போட்டிருக்கிங்க... என்னமோ போங்க...

        :-))))))))))
        9.10.06  
    செல்வன் said...

        கண்டிப்பாக நியாயமில்லை. அல்-கொய்தாவின் படத்தை போட்டு நீங்கள் ஒருவரை எழுதும்போது இது உங்களுக்கு சாதாரணமாகத்தானே இருக்க வேண்டும் என்று நினைத்துத்தான் போட்டேன்:))).
        அந்த வார்த்தை சொன்னா அப்படி வலிக்குதா செல்வன்? இதே தான் அனைவருக்கும்.சொல்வதற்கு முன் யோசிக்கணும்.....//

        ஏனுங்க...நான் யாரை தீவிரவாதின்னு சொன்னேன்?அல்கொய்தா படம் போட்டேன்.சரி. அந்த பதிவிலோ வேறு எந்த பதிவிலோ யாரையாவது தீவிரவாதி என்று சொன்னேனா?

        நான் வலிக்குது என்று எங்கேயும் சொல்லலை. கூட ஒரு ஸ்மைலி போட்டிருந்தேனே பாக்கலையா?


        //எப்போது தமிழ் ஈழம் அமைவதை ஆதரிக்கறேன்னு நீங்க சொன்னீங்களோ அங்கேயே சிக்கியாச்சு.( மசால் வடை எலி ஞாபகம் வருதா:))//

        ஏனுங்க...இம்மாம் பெரிய பொறிய வெச்சு யானையை பிடிக்கலாம்.சிங்கத்தை பிடிக்கலாம்.குட்டி முயலை பிடிக்கலாமா?வள்ளுவரே சொல்லிருக்கார்.யானைக்கு குறிவெச்சு அது தப்பிச்சாலும் பெருமை.முயலை குறிவெச்சு அது கிடைத்தாலும் பெருமை இல்லைன்னு.

        சரி..என்னவோ பொறி வெச்சீங்க..உள்ளே விழுந்தாச்சு...மசால்வடையாவது கிடைக்குதான்னு பாக்க வேண்டியதுதான்:))

        //காமராஜர்,கக்கன்,எம்.ஜீ.ஆர் எல்லாம் தேசியத்தை பற்றி என்ன சொன்னார்கள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா? கூகிளில் பார்த்து எடுத்து போடவும். நானும் தெரிந்துக்கொள்கிறேன்.//

        என் ஒவ்வொரு வார்த்தைக்கும் நிருபணம் கேட்டா எங்கே போறது?:))பொறி பயங்கரமான பொறியா இருக்கு. காமராஜர் கக்கன் பத்தி எல்லாம் நான் ஸ்கூலில் படிச்சப்ப ஸ்கூல் புஸ்தகத்தில் அப்படித்தாங்க போட்டிருந்துச்சு.அதை எல்லாம் ஸ்கேன் செஞ்சா போட முடியும்?இதேல்லாம் நியாயமான பொறியா சொல்லுங்க:))
        9.10.06  
    லக்கிலுக் said...

        //நான் சொல்வது என்னவென்றால் எந்த கட்சியிலும் இல்லாமல் தனி ஆவர்த்தனம் நடத்தும் என்னை//

        ஆடுறதுக்குன்னு வந்தாச்சி திடீருன்னு இதுமாதிரி எல்லாம் "டொக்கு" வெக்கலாமா? அடிச்சி ஆடுங்க செல்வன் சார் :-))))
        9.10.06  
    செல்வன் said...

        //என்ன இப்படி சொல்றிங்க, முகமூடி உங்களை விடிவெள்ளி ரேஞ்சுக்கு பேசுறார் நீங்க என்னடானா சாதாரண என்கிறீர்.//

        அதாங்க நானும் கேக்கறேன்.

        அவர் எல்லாம் மிகப்பெரும் அனுபவம் உள்ள பதிவர். அவர் அப்படி சொல்லி வளர்த்து விடுறார்.நீங்க எல்லாம் எதிர்த்து வளர்த்து விடறீங்க.

        என்னவோ போங்க.

        நான் வளர்கிறேனே மம்மி:)))
        9.10.06  
    செல்வன் said...

        //ஆடுறதுக்குன்னு வந்தாச்சி திடீருன்னு இதுமாதிரி எல்லாம் "டொக்கு" வெக்கலாமா? அடிச்சி ஆடுங்க செல்வன் சார் :-)))) //

        டொக்கு வெக்காம எல்லா பந்துக்கும் அடிச்சு ஆடினா அவுட் ஆயிடுவோம்ங்க. பந்துக்கு பந்து கவனிச்சு ஆடணும்:))
        9.10.06  
    முத்துகுமரன் said...

        //படிச்சப்ப ஸ்கூல் புஸ்தகத்தில் அப்படித்தாங்க போட்டிருந்துச்சு//

        ஒப்புதல் வாக்குமூலத்திற்கு நன்றி செல்வன். :-))
        9.10.06  
    செல்வன் said...

        //அப்படியா? எனக்கு இது தெரியவே தெரியாது. இலங்கை ராணுவத்திலும் போலீசிலும் அப்பாவிகளே கிடையாதா செல்வன்?(கேட்க குரூரமாக இருந்தாலும் இதுதான் இங்கே கேள்வியே)//

        நல்ல கேள்விங்க.

        நான் இலங்கை ராணுவத்தை பற்றியும், போலிசை பற்றியும் எதாவது சொன்னேனா? அப்புறம் ஏன் அதில் அப்பாவிகள் இருக்காங்களா, இல்லையான்னு கேள்வி?

        ஈழம் கிடைக்கணும்னு சொன்னேன்.அப்பாவிகள் சாகணும்னு சொன்னேனா?நான் சொன்னதை வெச்சு கேள்வி கேளுங்க. சொல்லாததை வெச்சு கேகாதீங்க:))

        ///தெரியாது.
        தெரியாது.
        தெரியாது.
        தெரியாது.
        என்னதான் தெரியும்? :))) ஏற்கனவே இடஒதுக்கீடு பற்றிய உங்கள் ஜல்லி கருத்து ஒன்றில் இடஒதுக்கீடு பற்றி எல்லாம் எனக்கு தெரியாது என்று சொன்னீர்களே? ஞாபகம் உள்ளதா?
        என்னது? அதுவும் தெரியாதா? சரி சரி.....:)))///

        வேணும்னா என் ஜாதி சர்ட்டிபிகேட்டை உங்களுக்கு மட்டும் ஸ்கேன் செஞ்சு அனுப்பறேனுங்க. அதில் இந்து பிற்படுத்தப்பட்டவர்னு போட்டு இருக்கும்ங்க.அதுக்கும் மேல ப்ரூப் வேணும்னா என்ன பண்ணனும்னு சொல்லுங்க.கேட்டுக்கறேனுங்க.

        ஏன் சொல்றேன்னா எது, எதையோ கொண்டு வந்து, எது எதிலோ இழுத்து எதை எதையோ கேட்டு....நல்ல பொறி வெக்கறீங்க போங்க.
        9.10.06  
    சந்துல சிந்துபாடி said...

        போட்டி விறுவிறுப்பாகச் செல்கிறது.

        பந்தயம் கட்ட விரும்புவோர் anon...@yahoo.com என்ற முகவரிக்கு தனி மடலிடவும்.
        9.10.06   
    லக்கிலுக் said...

        //டொக்கு வெக்காம எல்லா பந்துக்கும் அடிச்சு ஆடினா அவுட் ஆயிடுவோம்ங்க. பந்துக்கு பந்து கவனிச்சு ஆடணும்:)) //

        அதுக்குன்னு சிக்ஸர் அடிக்க வேண்டிய பாலுக்கு கூடவா டொக்கு வெப்பீங்க? Required Rate கூடிக்கிட்டே போகுது பாருங்க :-))))


        //ஏனுங்க...நான் யாரை தீவிரவாதின்னு சொன்னேன்?அல்கொய்தா படம் போட்டேன்.சரி. அந்த பதிவிலோ வேறு எந்த பதிவிலோ யாரையாவது தீவிரவாதி என்று சொன்னேனா?//

        குழலி சார் நீங்க தீவிரவாதி இல்லையாம்.... செல்வன் ஒத்துக்கிட்டார்....
        9.10.06  
    லக்கிலுக் said...

        பொறி பொறி இன்றாங்களே அது ஆயுத பூஜைக்கு கொடுக்கற அவல் பொரியா?
        9.10.06   
    சிந்து பைரவி said...

        //சந்துல சிந்துபாடி said...
        போட்டி விறுவிறுப்பாகச் செல்கிறது.//

        செந்தழலுல சிந்துபாடி தானே?
        9.10.06  
    செல்வன் said...

        //ஒப்புதல் வாக்குமூலத்திற்கு நன்றி செல்வன். :-)) //

        அய்யா வாங்கய்யா.நீங்க மட்டும் தானா?வேற யாரும் வரலையா?:))

        தலைவர், செயல் தலைவர், நீங்க, லக்கிலூக்..எல்லா பெருந்தலைகளும் வந்தாச்சா? இன்னும் மற்றவர்களும் வருவார்கள்.

        ஓக்கே.....ஆட்டம் களைகட்டுது:))
        9.10.06  
    வைரம் (இங்கிலிசினி) said...

        செல்வனை விட்டுடுங்க. இல்லேன்னா செகப்பு பதிவு போட்டுடுவார்.
        9.10.06  
    செல்வன் said...

        //அதுக்குன்னு சிக்ஸர் அடிக்க வேண்டிய பாலுக்கு கூடவா டொக்கு வெப்பீங்க? றெஃஉஇரெட் றடெ கூடிக்கிட்டே போகுது பாருங்க :-))))//

        போகட்டுங்க...

        உங்க கூட எல்லாம் ஆடி தோத்தாலே பெருமை தான்.எம்மாம் பெரிய டீம்? அத்தனை பெரிய டீம் கூட அவர்களின் ஹோம் கிரவுண்டில் ஒத்தை ஆளா அடி தோத்தா அதுவே பெருமை தானுங்க.

        //குழலி சார் நீங்க தீவிரவாதி இல்லையாம்.... செல்வன் ஒத்துக்கிட்டார்.... //

        நான் அவரை எப்பவும் தீவிரவாதின்னு சொன்னதில்லைங்க. அவர் என் மதிப்பிற்குரிய நண்பர். அவர் மேல் எனக்கு நல்ல மதிப்பும், மரியாதையும், பிரமிப்பும் உண்டு
        9.10.06  
    செல்வன் said...

        ///புல்லரிக்குதுங்க...பொதுவாக எல்லா வினைக்கும் தனிப்பதிவு போட்டு கலாய்ப்பீங்க.அதுதான் நானும் போட்டுட்டேன்:))))) படிச்சுட்டு, தெரிஞ்சுகிட்டு எழுதுங்கதல..நம்பஆளுங்க கைதட்டரானுங்களேன்னு மட்டும்எழுதிடாதீங்க... மேசமான பய புள்ளைங்க.. கவுத்துருவானுங்க... ஹிஹி.... //

        இதுக்கு என்னன்னுங்க பதில் போடறது?:))))

        புல்லரிச்சதுக்கு நன்றி. கேள்வி ஏதுனா இருந்தா கேளுங்க. பதில் சொல்றேன்:))
        9.10.06  
    ஆன்சைட் அனானி said...

        ஆவ்.... தூங்கப் போகணும்பா.
        காலைல பாக்கலாம்.
        9.10.06  
    குழலி / Kuzhali said...

        தல செல்வன் ஏகப்பட்ட தெரியாது போட்டிருக்கிங்க போல :-) பசும்பொன் முத்துராமலிங்க தேவரை விமர்சித்து அசுரன் பதிவிட்ட போது ஒரு எதிர்வினை பதிவு போட்டிங்களே, உங்களுக்கு தேவரை பற்றி நிறைய தெரிந்திருக்கும் என நினைத்தேன், திடீரென எனக்கு தேவரை பற்றி எதுவும் தெரியாதுனு சொல்லிடாதிங்க தல மண்டை காய்ஞ்சி போயிடும் எனக்கு :-)))
        9.10.06  
    லக்கிலுக் said...

        //உங்களுக்கு தேவரை பற்றி நிறைய தெரிந்திருக்கும் என நினைத்தேன், திடீரென எனக்கு தேவரை பற்றி எதுவும் தெரியாதுனு சொல்லிடாதிங்க//

        தேவரைப் பற்றி பாடப் புத்தகத்தில் என்னவெல்லாம் போட்டிருக்கிறதோ அதெல்லாம் கண்டிப்பாக தலைக்குத் தெரியும் குழலி. நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
        9.10.06  
    குழலி / Kuzhali said...

        தல செல்வன் (அதான் வளர்ந்துட்டிங்களே அப்புறம் என்ன தயக்கம் இருக்கு தலனு சொல்ல) ஏற்கனவே ஒரு தடவ முத்து(தமிழினி) பதிவிலயோ பின்னூட்டத்திலியோ எழுதியிருந்தாரே உங்களை பற்றி, பொருள் முதல்வாதம்னா என்னனு தெரியாது ஆனா கம்யூனிசம் மோசம், இடஒதுக்கீடுனா என்ன கட்-ஆப்னா என்னனு தெரியாது, பெரியார் பற்றி தெரியாது ஆனா அவர் நல்லவர் மாதிரி தெரியுது, இப்படி போட்டு சாத்தியிருப்பார் அப்பவே புரிஞ்சிக்கிட்டு பொறியில மாட்டாம இருந்திருக்கலாமே :-))))) என்னமோ போங்க தல எங்கயோ போயிட்டிங்க அதனால என்ன உங்களுக்கு ஆதரவு தர்ரவங்க எப்போதும் தருவாங்க, என் ஆதரவும் உங்களுக்கு உண்டு.

        செல்வம் தல கண்டுக்கிங்க நம்மளையும் அப்பப்ப :-)))
        9.10.06  
    செல்வன் said...

        //தல செல்வன் ஏகப்பட்ட தெரியாது போட்டிருக்கிங்க போல :-) பசும்பொன் முத்துராமலிங்க தேவரை விமர்சித்து அசுரன் பதிவிட்ட போது ஒரு எதிர்வினை பதிவு போட்டிங்களே, உங்களுக்கு தேவரை பற்றி நிறைய தெரிந்திருக்கும் என நினைத்தேன், திடீரென எனக்கு தேவரை பற்றி எதுவும் தெரியாதுனு சொல்லிடாதிங்க தல மண்டை காய்ஞ்சி போயிடும் எனக்கு :-)))//

        ஆமாங்க...தெரியாத விஷயத்தை கேட்டா தெரியாதுன்னு தானே சொல்ல முடியும்?உலகத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துகொண்டா வர முடியும்?

        ஒரு வேளை என் பதிவில் "அனைத்தும் எமக்கு தெரியும்னு" எழுதினதை வெச்சு இப்படி கேக்கறீங்களா?:))

        இப்ப தேவர் இங்க எதுக்குங்க வர்ராரு?அப்சலை பத்தி எழுதினா அங்கே திடீர்ன்னு இலங்கை வருது, எம்ஜிஆர் வர்ரார், பசும்பொன் தேவர் வர்ரார்..பெரியார் வர்ரார்..நீங்க, முத்து, ஜோ,லக்கிலூக் ந்னூ எல்லா பெரிய மனுஷங்களும் வர்ரிங்க.:))
        9.10.06  
    குழலி / Kuzhali said...

        //தேவரைப் பற்றி பாடப் புத்தகத்தில் என்னவெல்லாம் போட்டிருக்கிறதோ அதெல்லாம் கண்டிப்பாக தலைக்குத் தெரியும் குழலி. நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
        //
        யோவ் லக்கி உம்ம யாரு குறுக்கால பேச சொல்றது தல செல்வன் சொல்லட்டும்யா நான் கேட்டுக்கிறேன் :-)))
        9.10.06  
    செல்வன் said...

        //தேவரைப் பற்றி பாடப் புத்தகத்தில் என்னவெல்லாம் போட்டிருக்கிறதோ அதெல்லாம் கண்டிப்பாக தலைக்குத் தெரியும் குழலி. நீங்கள் கவலைப்பட வேண்டாம். //

        கண்டிப்பா தெரியும்ங்க...படிச்சா தானே வாழ்க்கை? அடிப்படையே ஸ்டாராங்கா இருந்தா தானே முன்னெற முடியும்? என்ன நான் சொல்றது?
        9.10.06  
    குழலி / Kuzhali said...

        //ஆமாங்க...தெரியாத விஷயத்தை கேட்டா தெரியாதுன்னு தானே சொல்ல முடியும்?உலகத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துகொண்டா வர முடியும்?
        //
        ஆகா செல்வன் தல இப்படி சொன்னா என்ன ஆறது?

        //ஒரு வேளை என் பதிவில் "அனைத்தும் எமக்கு தெரியும்னு" எழுதினதை வெச்சு இப்படி கேக்கறீங்களா?:))
        //
        அய்யய்யோ அப்போ உங்களுக்கு தெரியாத விசயம் கூட ஏதேனும் இருக்கா? சே... நான் தான் அப்போ இதை படிச்சி ஏமாந்துட்டனா?
        9.10.06  
    லக்கிலுக் said...

        //அப்சலை பத்தி எழுதினா அங்கே திடீர்ன்னு இலங்கை வருது, எம்ஜிஆர் வர்ரார், பசும்பொன் தேவர் வர்ரார்..பெரியார் வர்ரார்..நீங்க, முத்து, ஜோ,லக்கிலூக் ந்னூ எல்லா பெரிய மனுஷங்களும் வர்ரிங்க.:))//

        எல்லாம் ஒரு Co-incidence தான்...

        இன்னைக்கு யாருக்கும் வேலை, வெட்டி இல்லே போல.... நீங்க மாட்டிக்கிட்டீங்க :-)))))
        9.10.06  
    Anonymous said...

        //காமராஜர்,கக்கன்,எம்.ஜீ.ஆர் எல்லாம் தேசியத்தை பற்றி என்ன சொன்னார்கள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா? கூகிளில் பார்த்து எடுத்து போடவும். நானும் தெரிந்துக்கொள்கிறேன்.//

        மரங்களை வெட்டி, மரங்கள் இல்லாவிட்டாலும் டார்சான் போல தாவி சர்க்கஸ் பண்ணும் தலைவரின் ் அல்லக்கைகள் "வால்க"
        9.10.06  
    லக்கிலுக் said...

        "தெரியாது" - உலகத்துலேயே இதை விட Safe ஆன வார்த்தை ஒன்றை யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்....
        9.10.06  
    குழலி / Kuzhali said...

        //கண்டிப்பா தெரியும்ங்க...படிச்சா தானே வாழ்க்கை?
        //
        யோவ் லக்கி தெரிஞ்சிக்கோ தல செல்வன் பாடப்புத்தகமெல்லாம் படிச்சி தான் தெரிஞ்சிக்கிட்டிருக்காரு, ஆமாம் லக்கி நீ என்ன படிச்சிருக்க, நான் BE படிச்சிருக்கேன், அனேகமா ஆமா பாடபுத்தகம்லாம் படிச்சிருக்கியா லக்கிலுக்கு :-)))
        9.10.06  
    செல்வன் said...

        //தல செல்வன் (அதான் வளர்ந்துட்டிங்களே அப்புறம் என்ன தயக்கம் இருக்கு தலனு சொல்ல) //

        வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கின மாதிரி இருக்குங்க;)

        இன்னைக்கு ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்ச நாள்.ஆளுங்கட்சி, எதிர்கட்சின்னு ரெண்டு கட்சி தலைவர்களும் ஒண்ணு சேர்ந்து நான் வளர்ந்துட்டேன்னு சொல்லிட்டிங்க:)

        யார் தருவார் இந்த அரியாசனம்?:))

        ஆனா நமக்கெல்லாம் இந்த வளர்ச்சி வேணாம்ங்க...நான் உண்டு..என் ரசிகர்மன்றம் உண்டுன்னு அமைதியா தானுங்க இருப்பேன்

        //ஏற்கனவே ஒரு தடவ முத்து(தமிழினி) பதிவிலயோ பின்னூட்டத்திலியோ எழுதியிருந்தாரே உங்களை பற்றி, பொருள் முதல்வாதம்னா என்னனு தெரியாது ஆனா கம்யூனிசம் மோசம், இடஒதுக்கீடுனா என்ன கட்-ஆப்னா என்னனு தெரியாது, பெரியார் பற்றி தெரியாது ஆனா அவர் நல்லவர் மாதிரி தெரியுது, இப்படி போட்டு சாத்தியிருப்பார் அப்பவே புரிஞ்சிக்கிட்டு பொறியில மாட்டாம இருந்திருக்கலாமே :-))))) ///

        பொருள்முதல்வாதம் என்ற தமிழ்சொல்லுக்கு அர்த்தம் தெரியாதுன்னு தான் சொன்னேன். அது மெடீரியலிசம் என்று சந்திப்பு சொன்னதும் புரிஞ்சுகிட்டேன்.கம்யூனிசம் பத்தி நல்லாவே தெரியும். அடுத்து அதுபற்றியும் கேப்பிங்களோ என்னவோ?:))

        //என்னமோ போங்க தல எங்கயோ போயிட்டிங்க அதனால என்ன உங்களுக்கு ஆதரவு தர்ரவங்க எப்போதும் தருவாங்க, என் ஆதரவும் உங்களுக்கு உண்டு.//

        உங்க ஆதரவு இருந்தா அதுக்கு மேல வேறென்னங்க வேணும்?:))
        9.10.06  
    செல்வன் said...

        //அய்யய்யோ அப்போ உங்களுக்கு தெரியாத விசயம் கூட ஏதேனும் இருக்கா? சே... நான் தான் அப்போ இதை படிச்சி ஏமாந்துட்டனா? //

        நாந்தான் ஸ்கூல் புக்கை படிச்சு மோசம் போனேன்னா நீங்க அதுக்கு மேல இருக்கிங்க போல?பதிவின் தலைப்பில் எழுதியதை வெச்செல்லாம் ஏமாரறீங்க:))
        9.10.06  
    செல்வன் said...

        "தெரியாது" - உலகத்துலேயே இதை விட Safe ஆன வார்த்தை ஒன்றை யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்.... //

        தெரியாது:)
        9.10.06  
    குழலி / Kuzhali said...

        //இப்ப தேவர் இங்க எதுக்குங்க வர்ராரு?//
        என்னங்க காஷ்மீர் பற்றி எழுதுனா அல்கொய்தா வருதே, உங்களுக்கு தெரியாததுனு இருக்கா என்ன தல :-))))))
        9.10.06  
    அருண்மொழி said...

        இன்னாபா நடக்குது இங்க?

        இதுவரைக்கும் பா.க.ச இருந்தது. இப்போது செ.க.ச உருவாகிறதா?
        9.10.06  
    செல்வன் said...

        //யோவ் லக்கி தெரிஞ்சிக்கோ தல செல்வன் பாடப்புத்தகமெல்லாம் படிச்சி தான் தெரிஞ்சிக்கிட்டிருக்காரு, ஆமாம் லக்கி நீ என்ன படிச்சிருக்க, நான் Bஏ படிச்சிருக்கேன், அனேகமா ஆமா பாடபுத்தகம்லாம் படிச்சிருக்கியா லக்கிலுக்கு :-))) //

        எஞ்சினியர் மேல எனக்கு பெரிய மதிப்பும், மரியாதையும் உண்டு. என்ன இருந்தாலும் நான் ஆர்ட்ஸ்க்ரூப். நீங்க சயின்ஸ் க்ரூப். நிஜமாவே பெரிய ஆளுதாங்க நீங்க:)
        9.10.06  
    குழலி / Kuzhali said...

        //செ.க.ச உருவாகிறதா?
        //
        செ.க.ச.னா யின்னாபா?
        9.10.06  
    செல்வன் said...

        //என்னங்க காஷ்மீர் பற்றி எழுதுனா அல்கொய்தா வருதே, உங்களுக்கு தெரியாததுனு இருக்கா என்ன தல :-)))))) //

        வரும்ங்க..ஏன்னா காஷ்மீரில் அல்கொய்தா இருப்பதா அமெரிக்க அரசும், இந்திய அரசும் சொல்லிருக்குங்க.

        அப்படி இருக்கறப்ப காஷ்மீர் பத்தி எழுதினா அல்கொய்தா வருமா, வராதா?:))

        ஆதாரம் இதோங்க.இது ஸ்கூல் புக் இல்லைங்க.:))

        Aljazeera.Net - Al Qaeda enters Kashmir conflictThe leader of the new group 'Al Qaeda Jammu and Kashmir' said that Muslims ... The self-proclaimed spokesman for Al-Qaeda in Jammu and Kashmir said that its ...

        english.aljazeera.net/NR/exeres/F39C5514-6F8A-4CDA-9311-F194A36363BA.htm - 69k - Cached - Similar pages
        9.10.06  
    குழலி / Kuzhali said...

        //எஞ்சினியர் மேல எனக்கு பெரிய மதிப்பும், மரியாதையும் உண்டு.
        //
        அய்யயோ மோசம் போயிட்டிங்களே, அனேகமா என்னை பார்த்துக்கு அப்புறம் இந்நேரம் மாத்திக்கிட்டிருப்பிங்க :-)))
        9.10.06  
    Anonymous said...

        //இப்போது செ.க.ச உருவாகிறதா? //
        செ.க.ச ஏற்கனவே இருக்கே அருண்மொழி.. அதத் தான் தல ரசிகர் மன்றம்னு சொல்லிகிட்டாரே!

        //நான் உண்டு..என் ரசிகர்மன்றம் உண்டுன்னு //
        9.10.06  
    குழலி / Kuzhali said...

        அய்யய்யோ செல்வன் ஆரம்பிச்சிட்டிங்களா? அல்கொய்தாவுக்கு தான் நானும் நீங்களும் ஏகப்பட்ட பதிவு போட்டிருக்கோமே? அங்க பேசிக்கலாம், இந்த பதிவு மேட்டரே வேற.... :-))))))
        10.10.06  
    அழுவாத ராசா said...

        ஏம்ப்பா, ஸ்டாக் வெச்சிருந்த ஸ்மைலியெல்லாம் தீர்ந்து போச்சே.

        யாராவது சீக்கிரம் சப்ளை பண்ணுங்கப்பா.

        :((((((
        :((((((
        :((((((
        10.10.06  
    செல்வன் said...

        //அய்யய்யோ செல்வன் ஆரம்பிச்சிட்டிங்களா? அல்கொய்தாவுக்கு தான் நானும் நீங்களும் ஏகப்பட்ட பதிவு போட்டிருக்கோமே? அங்க பேசிக்கலாம், இந்த பதிவு மேட்டரே வேற.... :-))))))//

        உத்தரவுங்க:))

        நீங்க //என்னங்க காஷ்மீர் பற்றி எழுதுனா அல்கொய்தா வருதே, உங்களுக்கு தெரியாததுனு இருக்கா என்ன தல //ன்னு கேட்டதால தான் பதில் சொன்னேனுங்க.இங்க வேணாம்னா வேணாம்ங்க..
        10.10.06   
    செல்வன் said...

        //அய்யயோ மோசம் போயிட்டிங்களே, அனேகமா என்னை பார்த்துக்கு அப்புறம் இந்நேரம் மாத்திக்கிட்டிருப்பிங்க :-))) //

        இல்லைங்க.ஜாஸ்திதான் ஆயிருக்கு.
        10.10.06  
    ஜோ / Joe said...

        இந்த முத்து இருக்காரே! விவகாரமா ஒரு 2 பதிவைப் போட்டுட்டு மத்தவங்கள மோத விட்டுட்டு மாத்தி மாத்தி பின்னூட்டம் அப்ரூவ் பண்ணிட்டு ஜாலியா உக்காந்திருக்காரு .படா கில்லாடிப்பா!
        10.10.06   
    Anonymous said...

        //நான் BE படிச்சிருக்கேன்//

        எப்படி தல நம்ம அன்புமணி MBBS படிச்ச மாதிரியா?..
        10.10.06  
    குழலி / Kuzhali said...

        //பதிவின் தலைப்பில் எழுதியதை வெச்செல்லாம் ஏமாரறீங்க:))
        //
        சரி தல இனி ஒன்னு செய்யுங்க, இனி பதிவு பின்னூட்டமெல்லாம் எழுதும்போது தெளிவா சொல்லிடுங்க, இது லுலுலாயிக்கு எழுதனது, இது தெரிந்து எழுதினது, இது தெரியாம எழுதினது, இது தெரிஞ்சிக்க எழுதினது, இது புரிஞ்சிக்க எழுதினதுனு, இது காமெடிக்கு எழுதினது, இது சீரியசா எழுதினது, இது சும்மா எழுதி பார்த்ததுனு.... இல்ல படிக்கிற நமக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது பாருங்க கேட்டா பின்னால பதிவின் தலைப்பில் எழுதியதை வெச்செல்லாம் ஏமாரறீங்க:)) , பதிவில் எழுதியதை வெச்செல்லாம் ஏமாரறீங்க:)) னு நீங்க ஸ்மைலி போட்டா நான் நேரா ஆசுபத்திரிக்கு தான் போவனும் என்ன தல ஓகே யா? :-))))
        10.10.06  
    செல்வன் said...

        ////நான் உண்டு..என் ரசிகர்மன்றம் உண்டுன்னு //

        அது என்னோட ரசிகர் மன்றம் இல்லை.அந்த அளவுக்கு பெரிய ஆளா நான்?அது நான் ஆரம்பிச்ச ரசிகர் மன்றம்.அ.கு.மு.கன்னு பேரு.(அண்ணன் குமரன் முன்னேற்ற கழகம்)அந்த வரலாற்றை எல்லாம் சொன்னால் பெரும் கதை

        தமிழ்மணத்தில் 8 மாசத்துக்கு முந்தி ஆரம்பிச்ச ரசிகர் மன்றம். கல்கி பத்திரிக்கையில் எல்லாம் பேர் வந்த மன்றம்:))
        10.10.06  
    Anonymous said...

        //காமராஜர்,கக்கன்,எம்.ஜீ.ஆர் எல்லாம் தேசியத்தை பற்றி என்ன சொன்னார்கள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா?//

        அதுலாம் இருக்கட்டும் நம்ம அன்பு மணி தொழுநோயை தொற்றுவியாதினு சொன்னாரே அதுதான் தேசியத்தபற்றி சொன்னதோ?..
        10.10.06  
    செல்வன் said...

        //சரி தல இனி ஒன்னு செய்யுங்க, இனி பதிவு பின்னூட்டமெல்லாம் எழுதும்போது தெளிவா சொல்லிடுங்க, இது லுலுலாயிக்கு எழுதனது, இது தெரிந்து எழுதினது, இது தெரியாம எழுதினது, இது தெரிஞ்சிக்க எழுதினது, இது புரிஞ்சிக்க எழுதினதுனு, இது காமெடிக்கு எழுதினது, இது சீரியசா எழுதினது, இது சும்மா எழுதி பார்த்ததுனு.... இல்ல படிக்கிற நமக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது பாருங்க கேட்டா பின்னால பதிவின் தலைப்பில் எழுதியதை வெச்செல்லாம் ஏமாரறீங்க:)) , பதிவில் எழுதியதை வெச்செல்லாம் ஏமாரறீங்க:)) னு நீங்க ஸ்மைலி போட்டா நான் நேரா ஆசுபத்திரிக்கு தான் போவனும் என்ன தல ஓகே யா? :-)))) ///


        நீங்க தான் இம்மாம் பெரிய எஞ்சினியராச்சே? எது, எது நிஜம் , எது எது லுலுலாயின்னிக்கு எழுதினதுன்னு பகுத்தறிஞ்சு கண்டுபிடிக்க உங்களால் முடியாதா என்ன?:))
        10.10.06  
    Anonymous said...

        //இப்ப தேவர் இங்க எதுக்குங்க வர்ராரு?//
        என்னங்க காஷ்மீர் பற்றி எழுதுனா அல்கொய்தா வருதே, உங்களுக்கு தெரியாததுனு இருக்கா என்ன தல :-))))))//

        மரம்னா வன்னியனு இருக்குல அதுமாதிதான் செல்வன் எல்லாம் ஒரு பினைப்பு.
        10.10.06  
    செல்வன் said...

        //இந்த முத்து இருக்காரே! விவகாரமா ஒரு 2 பதிவைப் போட்டுட்டு மத்தவங்கள மோத விட்டுட்டு மாத்தி மாத்தி பின்னூட்டம் அப்ரூவ் பண்ணிட்டு ஜாலியா உக்காந்திருக்காரு .படா கில்லாடிப்பா! //

        அட ஆமாம்...

        நைட்டு ஒரு மணிஆச்சு. தூங்க போகணும்.டெஸ்ட் மேட்சை நாளை தொடரலாம்.சரியா?:))

        புது பந்து வீச்சாளர்கள் யாராவது நாளைக்கு வாங்கப்பா. பேட்ஸ்மேன் ஸ்கோர் 50 நாட் அவுட்டுன்னு போயிக்கிட்டிருக்கு:)))

        பெருந்தலைகள் பந்துவீசியும் ஒண்ணும் நடக்கலை.பிரெண்ட்லி மேச்சா போச்சு போல:))
        10.10.06  
    குழலி / Kuzhali said...

        //நீங்க தான் இம்மாம் பெரிய எஞ்சினியராச்சே? //
        நான் எங்கய்யா சொன்னே பெரிய எஞ்சினியர்னு ஆரம்பிச்சாட்டங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்க, தல இதுல கூடவா தல உங்க அளவுக்கு என்னால முடியலை....

        //பகுத்தறிஞ்சு கண்டுபிடிக்க உங்களால் முடியாதா என்ன?:)) //
        உங்க பதிவுல முடியலையே
        10.10.06  
    குழலி / Kuzhali said...

        //டெஸ்ட் மேட்சை நாளை தொடரலாம்.சரியா?:))
        //
        அய்யய்யோ நாளைக்கு உங்க புது பாதுகாப்பு படை வந்துடுச்சினா துண்டை காணோம் துணிய காணோம்னு ஓட வேண்டியது தான்...
        10.10.06  
    செந்தழல் ரவி said...

        ///செந்தழலுல சிந்துபாடி தானே?///

        நான் ஏதோ செவனேன்னு கீறேன்...என்னை இன்னாபா கூப்டு கலாய்க்கிறீங்க...

        அப்பாவியா நான் ஒரு கேள்வி கேக்குறேன்..

        நம்ம செல்வென் $ போட்டிருந்தாரே..(முருகன் டாலரா ? ) அத்தே இப்போ கானோமே, இன்னா பிரச்சினை ?
        10.10.06  
    Anonymous said...

        இவருதாம்பா வேலைவெட்டியிலாம கொத்தனாரோட சேந்து 500 அடிச்சது. இனிமே இங்கேயும் கும்மிஅடிப்பார் போல.
        10.10.06  
    Anonymous said...

        //அய்யய்யோ நாளைக்கு உங்க புது பாதுகாப்பு படை வந்துடுச்சின�



 
On 9/27/07, செல்வன் <hol...@gmail.com> wrote:

 

//உங்களுடைய புரிதல் இன்னமும் அபத்தம். அவர் அதை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, உடலுறவு கொள்ளுங்கள் என்று கூறவே இல்லை.//

பெரியார் திருமணம் என்ற முறையே வேண்டாம் என மாநாடு கூட்டி தீர்மானம் போட்டார்.அவரை போய் திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்ளகூடாது என்று எங்கும் சொல்லவில்லை என்கிறீர்கள்.

பெண்ணடிமை ஒழிய...

பெண்ணடிமைக்கு அடிப்படைக் காரணங்கள் திருமணம், கற்பு என்பவைகளேயாகும். திருமணம் என்பது மனிதத் தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமை கொள்ளவே ஏற்பட்டது... திருமணம் என்பது ஆண்களுக்கு நன்மையாகவும், பெண்களுக்கு கேடாகவும் இருக்கிறது. பெண்களை அடிமையாக வைத்திருப்பது என்பது ஆண்களுக்கு லாபமாக இருக்கிற காரணத்தால், பெண்கள் உரிமைக்கு ஆண்கள், ஒப்புவது இல்லை. இந்த நிலை மாறியாக வேண்டும். நாளைக்கே ஒரு அரசாங்கம் வந்து, திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சட்டம் செய்து விட்டால் பிரச்சனை இல்லை... எனவே, பெண்ணடிமை ஒழிய திருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல. மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டுமென்றாலும், இந்த திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும்.
 
- "உயர் எண்ணங்கள்' என்ற நூலில் பெரியார்



--
செல்வன்

http://www.holyox.tk
http://groups.google.com/group/muththamiz


தனிமடல் தொடர்புக்கு: hol...@gmail.com





--
தியாகு
=============================
" என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..."
=============================
வலைப்பூ: www.thiagu1973.blogspot.com
குழுமம் : ttp://groups.google.com/group/Anbu2006
http://groups.google.com/group/pothuvudaimai

அன்பு குயில்

unread,
Sep 27, 2007, 12:38:12 AM9/27/07
to panb...@googlegroups.com
இதனலெல்லாம் செல்வன் கோவிச்சிக்க மாட்டார்  ரொம்ப நல்லவர் :))

பிரேம்குமார் சண்முகமணி

unread,
Sep 27, 2007, 12:51:18 AM9/27/07
to panb...@googlegroups.com
செல்வன் மற்றும் நண்பருக்கு
நல்லா தான் விவாதம் செய்யுறீங்க. படிக்கும் போது எங்கள் சிந்தனைகள் விரிவடைய வைக்கிறீர்கள். ஆனால் சற்றே உணர்ச்சி வயப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன். கொஞ்சம் அமைதி மக்களே!
பின்னூட்டம் நிறைய போடவில்லையென்றாலும் விழுந்து விழுந்து இழையை படிக்கிறோம்பா.
 
நிறைய சொல்லுங்க, ஆனா நயமா சொல்லுங்க‌
புரிதலுக்கு நன்றி!

பிரேம்குமார் சண்முகமணி

unread,
Sep 27, 2007, 1:00:51 AM9/27/07
to panb...@googlegroups.com


நண்பரே,

// - குஷ்புவை - இழிவாக சுட்டிக் காட்டும் விதமாகவா இருக்கிறது? குஷ்பு
என்றல்ல - எந்த ஒரு தனிமனிதனின் வாழ்வையும் மதிக்கத் தெரிந்தவன் நா
ன். //

இது.. இது தாங்க விசயமே. எழுத்துக்களை விமர்ச்சிக்கலாம், எழுத்தாளர்களை விமர்ச்சிக்க கூடாது. இது தான் நம்ம கட்சி!

இனி வாங்க பழகலாம், இல்லை இல்லை விவாதிக்கலாம்

//நீங்கள் சொன்ன - நோண்ட வேண்டும்? என்ற சொற்றோடர் மிகத் தவறானது//

அது தோண்டி பார்க்க வேண்டுமா? மாதிரியான அர்த்தம் வர எழுதியது. பேச்சு வழக்கிலேயே எழுதிவிட்டேன். தவறெனில் வருந்துகிறேன்.

//


அனைவரும், தங்களுக்கென ஒரு பின் புலம் வேண்டியிருக்கிறது என்ற வகையில்,
பணம் கொடுத்து ரசிகர் மன்றத்தை வளர்த்து விடுகின்றனர். இந்த ரசிகர்கள்
பின்னர் ஒருவரை ஒருவர் விஞ்ச வேண்டும் என்ற எண்ணத்துடன் எவரும்
எதிர்பாராத காரியங்களைச் செய்து கவனைஈர்ப்பு செய்கிறார்கள்

குஷ்பு கோயில் கட்டச் சொல்லி இருக்க மாட்டார். உண்மை தான். ஆனால் அவ்வாறு


செய்யும் மனநிலையுடைய ஒரு கூட்டத்தை வளர்த்து விட்டதில் அவருக்கும் ஒரு

பங்கு இருக்கத் தான் செய்கிறது. அந்த வகையில் திரைத்துரையினர் - குஷ்பு
உட்பட அனைவரும் கறைபடிந்த கரம் உடையவர்கள் தான்
.//

வலைப்பூ எழுதும் போதோ அல்லது ஒரு படைப்பை வெளியிடும்போதோ ஒரு எழுத்தாளர் எப்படி அதை பத்து பேர் பார்க்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்று நினைப்பாரோ அப்படி தான் நடிகர்களும் தங்களுக்கு ரசிகர்கள் இருக்க வேண்டும், ரசிகர் மன்றங்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
 
இதில் இரு பக்கமும் தவறு இருக்கிறது. சிவகுமார் அவர்களுக்கு ரசிகர் மன்றங்கள் இல்லை தான் ஆனால் சூர்யாவுக்கும் கார்த்திக்கும் இருக்கிறதே. எல்லாம் ஒரு விளம்பர உத்தி, வியாபார உத்தி தான். ரசிகர்களும் ஒரு வெட்டி பந்தாவுக்காக இதில் ஈடுபடுகிறார்கள்
 
ஆனால் பல சமயம் அவற்றினால் உருப்படியான காரியங்கள் நடக்கின்றனவா என்பது கேள்விக்குறி தான் ;) நேர விரயம், கால விரயம் தான் அதிகம் :(

(அடுத்த கேள்விக்கு கொஞ்சம் நேரம் கழிச்சு பதில் எழுதுறேங்க.... கொஞ்சம் ஆணிய பாத்துட்டு வந்திடுறேன்.)

 


 

நந்தா

unread,
Sep 27, 2007, 2:02:35 AM9/27/07
to பண்புடன்
விவாதம் சூடாகப் போனாலும், நடு நடுவே உன் கருத்து குப்பை, கோமாளித்தனம்
என்று மாற்றி மாற்றி சொல்லிக் கொள்ளுவதால், கருத்துக்கள் தேவை இல்லாமல்
தடம் புரளுகிறது. எனவே நண்பர்களே உணர்ச்சி வசப் படாமல் தொடர்ந்துப்
பேசலாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Asif Meeran AJ

unread,
Sep 27, 2007, 2:39:31 AM9/27/07
to panb...@googlegroups.com

திருவிளையாடலில் முத்துராமன் சொன்னது போல, 'புலவர்களுக்குள் சச்சரவு தேவைதான்.ஆனால் அவையடக்கத்துடன் பேசினால் தக்க பதில் கிடைக்கும்' :-)

நீ கோமாளி, நீ சரியில்லைன்னு  சொல்லாம கருத்துக்களை முன்வையுங்கள் நண்பர்களே!!

விசயம் என்னமொ ரொம்ப சூடா இருக்குற மாதிரிதான் இருக்கு.
கொஞ்சம் பொறுத்து வந்து ஆட்டையில கலந்துக்குறேன்


நந்தா

unread,
Sep 27, 2007, 2:45:41 AM9/27/07
to பண்புடன்
கற்பு குறித்து ஆரம்பித்து, பெண்ணடிமைத் தனத்தின் வாயிலாக இப்போது
குடும்ப அமைப்புகள் சரியா என்ற கேள்வியில் வந்து நிற்கிறோம்.

ஆனால் திரும்பத் திரும்ப பெரியார் அதைச் சொன்னாரா இல்லையா என்றே மாற்றி
மாற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.நான் கேட்பது பெரியார்
சொல்லியே இருந்தாலும் அதை என்னால் கண்ணை மூடிக் கொண்டு ஒத்துக் கொள்ள


முடியாது.

ஆகையால் பெரியாரைத் தவிர்த்து விட்டு இது சாத்தியமா? சாத்தியமில்லையா?

குடும்ப அமைப்புகள் சரியான முறையில்தான் இயங்க்குகின்ற்னவா?

பெண்கள் பிள்ளை பெற வேண்டியது அவசியமில்லையா?

பெண்கள் பிள்ளை பெறுவதை அடிமைத் தனம் என்று சொன்னால் ஒத்துக் கொள்ள


வேண்டுமா?

கூட்டுக் குடும்பங்கள் கலாச்சாரமாய் பிணைந்துக் கிடக்கும் ஒரு நாட்டில்
லிவிங் டு கெதர் வாழ்க்கை முறை இந்தியாவிற்கு ஒத்து வருமா?

பாலியல் சுதந்திரம் மட்டுமே பெண்ணடிமைத் தனத்தின் தீர்வா?
----(இது செல்வன் மற்றும் நண்பனின் விவாதத்தில் எனக்குத் தோன்றிய
சந்தேகங்கள்)-------

பாதுகாப்பான உடலுறவு என்பது ஆணுறை விற்பனைக்கான விளம்பரமாக இருப்பதைத்
தாண்டி பெண் சுதந்திரத்திற்கு எப்படி தீர்வாய் அமையும்?

படித்த ஆண்கள் தனது மனைவி கன்னித் தனமையுடன்தான் இருக்க வேண்டும் என்று
எதிர் பார்க்கக் கூடாதா? இந்த தெளிவைப் பெறுவதற்குத்தான் படிக்க


வேண்டுமா?

பெண்கள் கன்னித்தன்மையுடன் இருக்கத் தேவை இல்லை. அப்போ ஆண்களும் இருக்கத்
தேவையா என்று ஒரு கேள்வி வருகிறதே?

கன்னித் தன்மையுடன் ஆண்களும் இருக்கத் தேவை இல்லை. பெண்களும் இருக்கத்
தேவை இல்லை. இப்படி ஒரு நிலையில கல்யாணம் பண்ணிக்க்கிட்டு வாழ்ந்தா அது
ஒரு நல்ல குடும்ப மற்றும் சமூக அமைப்பை உருவாக்குமா???

"தமிழ்நாட்டில் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளாதவர்கள்
யாராவது
இருக்கிறார்களா? சொல்லுங்கள் பார்க்கலாம்" என்பது திமிர்த்தனமான பதில்
இல்லையா?

பாதுகாப்பான உடலுறவுதான் முக்கியம் என்றால் கல்யாணத்திற்கு முன் என்ன?
பின் என்ன?
----- இது குஷ்பூவின் கருத்து எனக்கு ஏன் உடன்பாடில்லை என்பதற்கு------

அன்பு குயில்

unread,
Sep 27, 2007, 2:48:23 AM9/27/07
to panb...@googlegroups.com
குடிப்பவன் - குடிக்க கூடாது என அறிவுரை சொன்னால் எப்படி இருக்கும்
தம் அடிப்பவன் - தம் அடிக்காதேன்னு சொன்னா எப்படி இருக்கும்
 
அம்மாதிரி
 
கற்பு என்பதை ்பேசினால் எவ்ளோ வேணாலும் பேசலாம் :))

 

Asif Meeran AJ

unread,
Sep 27, 2007, 2:57:15 AM9/27/07
to panb...@googlegroups.com
தியாகு

குடிப்பவன் குடித்து உடம்பு கெட்டுப் போனதால் நீயாவது குடிக்காதேப்பான்னு அறிவுரை சொல்றதா எடுத்துக்க வேண்டியதுதான்.

விவாதம்னு வரும்போது நாம எப்பவுமே மன்சை ஓரளவு தயார்படுத்திட்டு இருக்கோம். இதச்சொன்னா இதுக்கு இப்படி பதில் சொல்லணும்க்ற முன்முடிவோட. அப்படி இல்லாம திறந்த மனதோடு எதிராளியின் கருத்துக்களுக்கும் செவிசாய்க்கும்போதுதான் விவாதம் சிறப்பா இருக்கும். நந்தாவோட மடல்ல அவர் விவாதம் வழி மாறிப்பொறதை அழகா சொல்லி திரும்பவும் பேச வேண்டிய விசயங்களைப் பட்டியலிட்டிருக்கிறார் பாருங்கள். அதே மாதிரி விவாதத்தின் உட்பொருள் உணர்ந்து விவாதித்தால் குடிகாரன் குடிக்காதேன்னு சொன்னாலும் கேட்டுக்கலாம் :-))

அன்பு குயில்

unread,
Sep 27, 2007, 3:04:58 AM9/27/07
to panb...@googlegroups.com
அப்படியா சரி
 
இப்ப குடிகாரன் சொல்றான்
 
எல்லாரும் ஆண்கள் மட்டும் குடிப்பதால் மது பழக்கம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்
 
என்வே பெண்களும் குடிக்கனும் அதுதான் சரி
 
அப்படிங்கிறான்னு
 
இவனோட விவாதம் செய்வது சரியா :))

 

Asif Meeran AJ

unread,
Sep 27, 2007, 3:11:28 AM9/27/07
to panb...@googlegroups.com
இப்ப குடிகாரன் சொல்றான்
 எல்லாரும் ஆண்கள் மட்டும் குடிப்பதால் மது பழக்கம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்
என்வே பெண்களும் குடிக்கனும் அதுதான் சரிஅப்படிங்கிறான்னு
 இவனோட விவாதம் செய்வது சரியா :))

என்னய்யா இது  ஒரே அழிச்சாட்டியமா இருக்கு உங்களோட :-)))
அவன் கெட்டுப் போனதால அவன் குடும்பத்தையும் கெட்டுப்போனா தப்பில்லேன்னு சொல்றான்னு வைங்க. அது அவன் விருப்பம்னு விட்டுடலாம். ஆனா, தான் கெட்டுப்போனதால எல்லாரும் கெட்டுப்போகணும்னு சொன்னா... அவனே கெட்டுப்பொகட்டும்னு விட்டுட வேண்டியதுதான்


அன்பு குயில்

unread,
Sep 27, 2007, 3:15:31 AM9/27/07
to panb...@googlegroups.com
அட அதுக்கு போயி நாள் பூரா உக்கார்ந்து
 
பல உதாரணங்களை சொல்லி
 
மதுவினால் ஏற்படும் தீங்குகள் இன்ன இன்ன
 
முதலில் நீ குடிப்பதே தப்பு
 
இரண்டாவது ஊரு பூரா குடிக்கலாம்னு சொல்வது
 
மூனாவது பெண்கள் குடிக்கலாம்னு சொல்வது
 
இப்படி விவாதம் செய்தால்
 
அவனை என்ன சொல்வீர்கள்
 
நீங்க என்ன சொல்வீங்களோ இல்லையோ
 
அந்த குடிகாரன் கண்டிப்பா கெட்ட வார்த்தையால திட்டுவான்
 
வாங்க தயாரா இருக்கனும்

 
On 9/27/07, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:

நந்தா

unread,
Sep 27, 2007, 3:45:37 AM9/27/07
to பண்புடன்
.//அட அதுக்கு போயி நாள் பூரா உக்கார்ந்து

பல உதாரணங்களை சொல்லி
மதுவினால் ஏற்படும் தீங்குகள் இன்ன இன்ன
முதலில் நீ குடிப்பதே தப்பு
இரண்டாவது ஊரு பூரா குடிக்கலாம்னு சொல்வது
மூனாவது பெண்கள் குடிக்கலாம்னு சொல்வது
இப்படி விவாதம் செய்தால்
அவனை என்ன சொல்வீர்கள்
நீங்க என்ன சொல்வீங்களோ இல்லையோ
அந்த குடிகாரன் கண்டிப்பா கெட்ட வார்த்தையால திட்டுவான்
வாங்க தயாரா இருக்கனும் //


எனக்குப் புரிய வில்லை தியாகு.

இப்போ நான் சொன்னது ரைட்டுங்கறீங்களா? தப்புங்கறீங்களா?

என்னுடையது விதண்டாவாதமாகத் தோறுகிறதா? குடிகாரன் உதாரணத்தைத் தவிர்த்து
விட்டு நம் பேசு பொருளை வைத்தே சொல்லுங்கள்.

நந்தா

unread,
Sep 27, 2007, 3:52:05 AM9/27/07
to பண்புடன்
இப்போ கொஞ்சம் பிரியற மாதிரி இருக்கு. செல்வனை சொல்கிறீர்களோ???

நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் மாற்றுக் கருத்துடையவரின்
கருத்துக்களையே கேட்க மாட்டேன் என்பது போலத் தோன்றுகிறது. இங்கே அனைவருமே
எனது கருத்து சரிதான் என்று திரிபவர்கள்தான். ஆகையால் விவாதத்தின்
மூலமாகத்தான் கொஞ்சமேனும் புரிதலை ஏற்படுத்த முடியும் அல்லது
ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஆகையால் சரியானமுறையில் விவாதம் செய்வதுதான் சரியே தவிர, விவாதமற்று
இருப்பது அல்ல.

அன்பு குயில்

unread,
Sep 27, 2007, 3:53:58 AM9/27/07
to panb...@googlegroups.com
அன்புள்ள நந்தா நீங்கள் பேசுவது சரிதான்
ஆனால் நம்ம செல்வன் அன்னாச்சிக்குன்னு ஒரு பிரேம் இருக்கு அந்த பிரேம்ல இதே டாபிக்க ஏற்கனவே பிரிச்சு மேய்ஞ்சு காய போட்டாச்சு
அவரு சொல்வதெல்லாம் தீர பேசி ஒரு முடிவுக்கு வந்த ஒரு இழை இருக்கு அதைத்தான் தேடி பார்த்து கொடு இருக்கேன் கிடைக்கலை
 
அப்புறம் ஒன்னு தூங்கிறவனை எழுப்பலாம் தூங்கிற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியாது .
 
அம்மதிரி சிலர் இருக்ககங்கன்னு சொல்லவந்தேன்
 
மற்றபடி இந்த விவாதம் நீங்கள் சொன்ன அடிப்படையில் ந்டந்தா சந்தோசம் தான்
ஆனா துரதிஸ்டவசமா அப்படி நடக்காதுன்னு சொல்ல வந்டேன்
 
சரி மேலும் இந்த விவாதம் தொடர்ந்து நடந்தா நான் கண்டிப்பப படிக்கிறேன் ஆனா தவறிப்போய் விவாதம் பண்ண மாட்டேன் :))
 
உரையாடல் வேணா செய்யலாம்
 
தொடருங்கள்
 


 
On 9/27/07, நந்தா <media...@gmail.com> wrote:

அன்பு குயில்

unread,
Sep 27, 2007, 3:55:56 AM9/27/07
to panb...@googlegroups.com
//ஆகையால் சரியானமுறையில் விவாதம் செய்வதுதான் சரியே தவிர, விவாதமற்று

இருப்பது அல்ல.
//
 
இதில் நான் சொல்லவருவது விவாதிப்பவரையும் அவரது விவாதங்களையும் கணக்கில் கொண்டு  போகனும் என்பதுதான்
 
அப்படி கவனிக்கும் போது இந்த விவாதம் தேவையற்றதுன்னு தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்கன்ன்னு சொன்னேன் :)0

 
On 9/27/07, நந்தா <media...@gmail.com> wrote:

செல்வன்

unread,
Sep 27, 2007, 10:48:09 AM9/27/07
to panb...@googlegroups.com

நந்தா,நல்ல கேள்விகள்.

1.பெண்கள் பிள்ளை பெற வேண்டியது அவசியமில்லையா?

அது அந்த பெண் முடிவு செய்ய வேண்டிய விஷயம்.சுமக்கபோகிறவள் விரும்பவில்லை என்றால் பிள்ளை பெற வேண்டியதில்லை.அதன்பின் அவளை நிர்பந்திப்பது தவறு.

2.பெண்கள் பிள்ளை பெறுவதை அடிமைத் தனம் என்று சொன்னால் ஒத்துக் கொள்ள


வேண்டுமா?

பிள்ளை பெற,சுமக்க வலியுறுத்தப்படுவதும்,அபார்ஷன் செய்துகொள்ளும் உரிமை மறுக்கப்படுவதையும் அடிமைத்தனம் என்று தான் சொல்ல வேண்டும்.தானாக விருப்பப்பட்டு பெறுவது அடிமைத்தனமல்ல.

3. கூட்டுக் குடும்பங்கள் கலாச்சாரமாய் பிணைந்துக் கிடக்கும் ஒரு நாட்டில்


லிவிங் டு கெதர் வாழ்க்கை முறை இந்தியாவிற்கு ஒத்து வருமா?

அப்படி சிலர் வாழ ஆசைப்பட்டால் அனுமதித்து பார்ப்போமே?ஒத்து வருமா இல்லையா என்பது தெரியவரும்.ஒத்துவருதோ இல்லையோ அப்படி வாழ விரும்புகிறவரை அனுமதிப்பது தான் முறை

4.பாலியல் சுதந்திரம் மட்டுமே பெண்ணடிமைத் தனத்தின் தீர்வா?

பாலியல் சுதந்திரம் மனிதனின் அடிப்படை உரிமை.அடிப்படை உரிமையை மறுத்துவிட்டு பிறகு விடுதலை பற்றி பேசுவதில் அர்த்தமே இல்லையே?

5.பாதுகாப்பான உடலுறவு என்பது ஆணுறை விற்பனைக்கான விளம்பரமாக இருப்பதைத் தாண்டி பெண் சுதந்திரத்திற்கு எப்படி தீர்வாய் அமையும்?

பாலியல் சுதந்திரம் மனிதனின் அடிப்படை உரிமை.பீரியட்.

6.படித்த ஆண்கள் தனது மனைவி கன்னித் தனமையுடன்தான் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கக் கூடாதா? இந்த தெளிவைப் பெறுவதற்குத்தான் படிக்க
வேண்டுமா?

வருங்கால மனைவி/கணவன் கன்னிதன்மையுடன் தான் இருக்கிறார் என ஒருவர் எப்படி தெரிந்துகொள்வார் என்பது தான் எனக்கு புரியாத புதிராக இருக்கிறது.மற்றபடி அப்படி எதிர்பார்க்க ஒருவருக்கு உரிமை உண்டு என்பதை நான் மறுக்கவில்லை.

7.பெண்கள் கன்னித்தன்மையுடன் இருக்கத் தேவை இல்லை. அப்போ ஆண்களும் இருக்கத் தேவையா என்று ஒரு கேள்வி வருகிறதே?

அது அவரவர் விருப்பம் தான்.கன்னிதன்மையுடன் இரு/இருக்காதே என யாரும் யாரையும் வலியுறுத்த முடியாது.

8.கன்னித் தன்மையுடன் ஆண்களும் இருக்கத் தேவை இல்லை. பெண்களும் இருக்கத்


தேவை இல்லை. இப்படி ஒரு நிலையில கல்யாணம் பண்ணிக்க்கிட்டு வாழ்ந்தா அது
ஒரு நல்ல குடும்ப மற்றும் சமூக அமைப்பை உருவாக்குமா???

குடும்ப அமைப்புக்கும் கன்னிதன்மைக்கும் சம்பந்தமே இல்லை.மனைவியை மனிதபிறவியாக மதிக்கும் எந்த குடும்பமும் நல்ல குடும்பம்தான்.

9."தமிழ்நாட்டில் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளாதவர்கள்
யாராவது இருக்கிறார்களா? சொல்லுங்கள் பார்க்கலாம்" என்பது திமிர்த்தனமான பதில்
இல்லையா?

அதை தான் சொல்லவில்லை,தவறாக மொழிபெயர்த்து போட்டுவிட்டார்கள் என குஷ்பு மறுத்துவிட்டார்.

நண்பன்

unread,
Sep 27, 2007, 1:21:28 PM9/27/07
to பண்புடன்
நந்தா,

Call a spade a spade - அது தான் தேவை.

சொன்னதை சொல்லவில்லை என்று சொல்வதும், சொல்லாததை சொன்னதாக சொல்வதுமாக
கருத்து திரிப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதாக இருக்கத் தான்


செய்கிறது.

பெரியாரை எப்படியாவது தவறான விஷயங்களுடன் முடிச்சு போடுவது என்ற
கங்கணத்துடன், ஒரு agendaவுடன் செயல்படுபவர்களைக் கண்டிப்பதும்
நியாயமுள்ள அனைத்து நெஞ்சங்களின் கடமையாகும்.

அவர் என் கட்டுரை ஒன்றிற்கு எதிர்வினை செய்கிறேன் என்று அபத்தமான
வாதங்களை முன் வைத்துக் கொண்டே செல்கிறார். அதிலும் ஒவ்வொன்றையும்
தவறுதலான புரிதலுடன். அதற்குப் பதில் சொல்வதும் என்னுடைய கடமை.

ஆனால், குண்டக்க மண்டக்க பேசி, எல்லோரையும் முட்டாளாக்குவேன் என்ற
தமாஷ்களை ' கோமாளித்தனம்' என்றழைக்காமல் வேறு எப்படி அழைப்பது என்று இனி
நீங்கள் முடிவ்ய் செய்து கொள்ளுங்கள்.

நட்புடன்

நண்பன்

நண்பன்

unread,
Sep 27, 2007, 1:35:06 PM9/27/07
to பண்புடன்
செல்வனின் எதிர் வினைகளில் ஒன்று - கீழே:

On Sep 26, 1:41 am, "செல்வன்" <hol...@gmail.com> wrote:
> அடுத்து நண்பன் சொல்வது
>
> //1. சாதியம் நிறைந்த இந்த சமூகத்தில் களவு ஒழுக்கம் எடுபடாது. அத்தகைய
> நடைமுறையை ஏற்படுத்த முதலாக சாதியத்தை ஒழிக்க வேண்டும். இதன்
> அடிப்படையிலேயே குஷ்பு அடித்தட்டு மற்றும் பிற்படுத்தப்பட்ட பெண்களால்
> எதிர்க்கப்படுகிறார்//


> சாதி, மதம்,இனம்,திருமணம் என்ற அனைத்தும் பிறப்பதற்கு முன்பே தோன்றியது களவு
> ஒழுக்கம். இவை அழிந்த பின்னரும்

> களவு ஒழுக்கம் வாழும். சாதியத்துக்கும்
> இதற்கும் எப்படி முடிச்சு போட்டாலும் முடியாது. களவு ஒழுக்கத்துக்கும்
> ஜாதியத்தின் இருப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

> ஜாதி,மதத்தின் இருப்பை அசைக்க
> களவொழுக்கத்தை போன்ற வீரியமான மருந்து வேறேதும் இருப்பதாக தெரியவில்லை.
>
இதை எப்படி எடுத்துக் கொள்வது? நகைச்சுவை என்றா? ஒரு வரிக்கும் அடுத்த
வரிக்கும் எத்தனை முரண்பாடுகள்.?

முதல் வாக்கியத்தில், களவு ஒழுக்கத்துக்கும், ஜாதியத்தின் இருப்புக்கும்
எந்த சம்பந்தமுமில்லை என்கிறார்.

அடுத்த வாக்கியத்தில், ஜாதி, மதத்தின் இருப்பை அசைக்க களவொழுக்கத்தை
போன்ற வீரியமான மருந்து வேறெதுவும் இருப்பதாக தெரியவில்லை

இதைத் தான் கோமாளித் தனம் என்கிறேன். என்ன பேசுகிறோம் என்று புரியாமல்,
எல்லோருடைய நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான்
அவருக்குப் பதில் சொல்லுமுன், 'தெளிவாத் தான் இருக்கீகளா?' என்று
கேட்டுக் கொண்டேன்.

ஏதோ நானும் விவாதம் பண்ணுகிறேன் என்று எந்த logic இல்லாமல், தொடர்ந்து
பேருரை ஆற்றிக் கொண்டிருப்பது, வாசிக்கிறவன் எல்லாம் அடிமுட்டாள் என்ற
எண்ணத்தினால் தான்.

இந்த மாதிரியான விதண்டவாதங்கள் தான் எரிச்சலூட்டுகிறது. எத்தனை
சொன்னாலும் புரியாதவரா இருக்கிறாரே என்று சொல்லத் தோன்றுகிறது.

வின்னர் படத்திலே, கைப்பிள்ளையைப் (வடிவேலுவைப்) பார்த்து, ரியாஸ் கான்
சொல்வார் - 'இவனை அடிச்சும் பார்த்தாச்சு, அவித்தும் பார்த்தாச்சு, அடங்க
மாட்டேனெங்குறானே' என்று புலம்புவார். கைப்புள்ளயோ ஒரு அசால்டான லுக்
விட்டுட்டே, மையினால் வரைஞ்ச மீசையை முறுக்கி விட்டுக்குவார்.

சிரிச்சு, சிரிச்சு, வயிறே புண்ணாக்கிடுச்சு. மீண்டும் செல்வனின் வாதத்
திறமையைப் பார்த்து அதே நிலைமை.

என்ன செய்யறதுங்க?

சில நேரங்களில், சில மனிதர்கள்

நட்புடன்

நண்பன்

நட்புடன்

செல்வன்

unread,
Sep 27, 2007, 2:49:18 PM9/27/07
to panb...@googlegroups.com

நண்பன்

எழுதியதில் சந்தேகம் இருந்தால் கேட்டால் பதில் சொல்கிறேன்.அதை விடுத்து கோமாளி, கருத்து கயமைத்தனம், திரித்தல்வாதம் என பேசிக்கொண்டே போனால் எதிராக பேசுபவரும் அம்மாதிரி பேசி கடைசியில் வாதம் புரிவோர் எல்லோரும் கயவர்களாகவும்,கோமாளிகளாகவும் தான் காட்சி அளிப்பார்கள்.

"கல்யாண முறையே வேண்டாம்" "கற்பு என்பதே காட்டுமிராண்டித்தனம்" என்ற பெரியார் கருத்துக்களை பல ஆதாரங்களுடன் எடுத்து போட்டும் இன்னமும் அவர் 'திருமணத்துக்கு முன் உறவை ஆதரிக்கவில்லை' என்றே சொல்லி சாதித்து கொண்டிருக்கிறீர்கள்:-).

ஜாதியத்துக்கு முன்பே தோன்றியது களவொழுக்கம்.ஏதாவது சந்தேகம் உண்டா?இருக்காது என நம்புகிறேன்.

களவொழுக்கத்துக்கு பிறகு தோன்றிய ஜாதியம்/மதம் களவொழுக்கத்தை தடை செய்துவிட்டது.இதில் ஏதாவது சந்தேகம் உண்டா?இல்லை என நம்புகிறேன்.

தடை செய்தபோதும் களவொழுக்கம் திருட்டுதனமாக தொடர்ந்தே வந்துள்ளது.ஆனால் தடை செய்யப்பட்டதாலும் ஜாதி/மதரீதியான ஒழுக்க கோட்பாடுகள் மகக்ளிடம் பெரிதும் பரவியதாலும் களவொழுக்கத்தால் ஜாதி/மதத்தின் இருப்பை பெரிதாக இதுவரை அசைக்க முடியவில்லை.ஜாதி/மதம் இன்னமும் வலுவாகவே இருக்கிறது.இதில் ஏதாவது ஆட்சேபம் உண்டா?

அந்த தடையை அகற்றி களவொழுக்கத்தை சட்ட ரீதியில் முறைப்படுத்தினால் ஜாதி/மதத்தின் இருப்பு ஆட்டம் காணும்.அதாவது ஜாதியமும்/மதமும் மறுக்கும் கலப்பு திருமணம், திருமணம் மறுத்த டேட்டிங்/சேர்ந்து வாழுதல் உறவுகள், விவாகரத்து,பாலியல் சுதந்திரம் போன்றவற்றை சட்டபூர்வமாக்கி/சமூகரீதியில் அதை ஏற்கும் பக்குவத்தை மக்களிடம் கொண்டு போனால் வருங்காலத்தில் ஜாதியும் இருக்காது,மதமும் இருக்காது.

இதுதான் நான் சொல்ல வந்த முழுகருத்து.

(ஒரே பதிலில் இத்தனையையும் விளக்கினால் கோனார் நோட்ஸ் தான் வருங்காலத்தில் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் போட வேண்டும்.)



நந்தா

unread,
Sep 27, 2007, 3:21:35 PM9/27/07
to பண்புடன்
//1.பெண்கள் பிள்ளை பெற வேண்டியது அவசியமில்லையா?

அது அந்த பெண் முடிவு செய்ய வேண்டிய விஷயம்.சுமக்கபோகிறவள்
விரும்பவில்லை
என்றால் பிள்ளை பெற வேண்டியதில்லை.அதன்பின் அவளை நிர்பந்திப்பது தவறு.//

இல்லைங்க. அது சம்பந்தப் பட்ட கணவனும் மனைவியும் கலந்து பேசி முடிவு
செய்ய வேண்டிய விஷயம். சுமப்பதால் பெண்ணுக்கு மட்டுமே முழு உரிமை
இருக்கிறது என்பது தவறான வாதமாகும். கவனிக்க கலந்து பேசி என்று சொல்லி
இருக்கிறேன். இந்த புரிதல்கள் வீட்டுக்கு வீடு மாறுபடும்.

இந்த கேள்வி எதற்கு கேட்டேன் என்றால், "பெண்கள் பிள்ளை பெற்றுக்
கொள்வதால்தான் அவர்கள் உடல் நலம் கெட்டுப் போகிறது. ஆகையால் பெண்கள்
குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்த வேண்டும்" என்று சொல்லி உள்ளீர்கள்
அல்லவா(பெரியார் சொன்னதாக). அதனால்தான் இந்த கேள்வியே எழுந்தது. இது ஒரு
தவறான கருத்தியல் பிரச்சாரம் அல்லவா?

//2.பெண்கள் பிள்ளை பெறுவதை அடிமைத் தனம் என்று சொன்னால் ஒத்துக் கொள்ள


வேண்டுமா?
பிள்ளை பெற,சுமக்க வலியுறுத்தப்படுவதும்,அபார்ஷன் செய்துகொள்ளும் உரிமை
மறுக்கப்படுவதையும் அடிமைத்தனம் என்று தான் சொல்ல வேண்டும்.தானாக

விருப்பப்பட்டு பெறுவது அடிமைத்தனமல்ல. ??//

குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இல்லை இன்னும் ஓரிரு வருடங்கள் தள்ளிப்
போடலாம் என்பது போன்ற பேச்சுக்கள் பல குடும்பங்களில்
எழுந்திருக்கின்றனதான். சில குடும்பங்களில் மனைவி பேச்சுக்கு கணவன்
ஒத்துப் போவதும், சிலவற்றில் கணவனின் பேச்சுக்கு மனைவி ஒத்துப் போவது
நடப்பதுதான். இது முழுக்க முழுக்க தனிப்பட்ட விவகாரமே. இவற்றில் ஒரு
பொதுக் கருத்தை உருவாக்க முடியாது.'

அதே சமயம் நமது சமூக அமைப்பில் கல்யாணம் செய்து கொள்வதன் நோக்கங்களில்
ஒன்று தமது வாரிசை உருவாக்குவதும்தான். ஆகையால் கல்யாணம் செய்து கொண்ட
பின் "என் சுயேச்சை போய் விடும்" ஆகையால் நான் குழந்தை பெற்றுக் கொள்ள
மாட்டேன் என்று ஒரு பெண் சொன்னால் அதை கணவன் இது பெண் சுதந்திரம் என்று
ஒத்துக் கொண்டுப் போக வேண்டுமா? ஆம் என்றால் ஆண் சுதந்திரம் பற்றி பேச
வேண்டிய காலம் ரொம்ப தொலைவில் இல்லை என்று அர்த்தம்.

(மேலே உள்ள ரெண்டு கேள்விகளும் நீங்கள் குறிப்பிட்ட ஒரு சில
பகுதிகளினடிப்படையில் தொன்றியதுதானே தவிர,அதிகமாக இது போன்ற பிரச்சினைகள்
நடந்ததாகத் தோன்ற வில்லை. நல்ல வேளையாக)


நந்தா

unread,
Sep 27, 2007, 3:34:16 PM9/27/07
to பண்புடன்
//3. கூட்டுக் குடும்பங்கள் கலாச்சாரமாய் பிணைந்துக் கிடக்கும் ஒரு

நாட்டில்
லிவிங் டு கெதர் வாழ்க்கை முறை இந்தியாவிற்கு ஒத்து வருமா?
அப்படி சிலர் வாழ ஆசைப்பட்டால் அனுமதித்து பார்ப்போமே?ஒத்து வருமா
இல்லையா
என்பது தெரியவரும்.ஒத்துவருதோ இல்லையோ அப்படி வாழ விரும்புகிறவரை
அனுமதிப்பது
தான் முறை//

பெரும்பாலான கேள்விகளிற்கு நாம் இது அவரவர் தனிப்பட்ட விருப்பம்
என்றுதான் விட முடியும். இதுவும் அப்படிப் பட்ட ஒரு பிரச்சினைதான்.
இப்போது பெங்களூர்,மும்பை,டெல்லி போன்ற நகரங்களில் இது ஓரளவு பரவி
வருகிறது.இதன் சாதக பாதகங்கள் இன்னும் சரியாக தெரிய வராத நிலையில் இதைப்
பற்றி கருத்துக் கூற எனக்குத் தெரிய வில்லை.

//5.பாதுகாப்பான உடலுறவு என்பது ஆணுறை விற்பனைக்கான விளம்பரமாக


இருப்பதைத் தாண்டி
பெண் சுதந்திரத்திற்கு எப்படி தீர்வாய் அமையும்?

பாலியல் சுதந்திரம் மனிதனின் அடிப்படை உரிமை.பீரியட். //

புரியலைங்க. கொஞ்சம் தெளிவு படுத்துங்க.


நந்தா

unread,
Sep 27, 2007, 4:06:31 PM9/27/07
to பண்புடன்
//6.படித்த ஆண்கள் தனது மனைவி கன்னித் தனமையுடன்தான் இருக்க வேண்டும்

என்று எதிர்
பார்க்கக் கூடாதா? இந்த தெளிவைப் பெறுவதற்குத்தான் படிக்க
வேண்டுமா?

வருங்கால மனைவி/கணவன் கன்னிதன்மையுடன் தான் இருக்கிறார் என ஒருவர்
எப்படி

தெரிந்துகொள்வார் என்பது தான் எனக்கு புரியாத புதிராக இருக்கிறது.//

தனது துணை கன்னித்தன்மையுடையவராகத்தான் இருப்பார் என்ற நமபிக்கையோடுதான்
எல்லாரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். நீங்களே சொல்லி
இருக்கிறீர்கள்."மற்றபடி அப்படி எதிர்பார்க்க ஒருவருக்கு உரிமை உண்டு
என்பதை நான் மறுக்கவில்லை." என்று.

ஆகையால் படித்தவர்கள் அப்படி எதிர்பார்க்கக் கூடாது என்று ஒருத்தர்
எனக்கும் சேர்த்து சொன்னால்,"நீங்களும், உங்கள் கணவரும் எதிர்பாருங்கள்,
எதிர் பார்க்காதீர்கள் அது உங்கள் தனிப்பட்ட விருப்பமும் ஒழுக்கமும்
சார்ந்தது. ஆனால் நான் எதிர்பார்க்கக் கூடாது என்று சொல்ல எள்ளவும்
உங்களுக்கு உரிமை இல்லை குஷ்பு மேடம்" என்று நான் சொல்லக் கூடாதா???
கருத்துச் சுதந்திரம் என்ன குஷ்புவுக்கு மட்டும்தான் என்று பட்டா போட்டா
கொடுக்கப் பட்டிருக்கிறது?


//8.கன்னித் தன்மையுடன் ஆண்களும் இருக்கத் தேவை இல்லை. பெண்களும்


இருக்கத்
தேவை இல்லை. இப்படி ஒரு நிலையில கல்யாணம் பண்ணிக்க்கிட்டு வாழ்ந்தா அது
ஒரு நல்ல குடும்ப மற்றும் சமூக அமைப்பை உருவாக்குமா???

குடும்ப அமைப்புக்கும் கன்னிதன்மைக்கும் சம்பந்தமே இல்லை.மனைவியை
மனிதபிறவியாக

மதிக்கும் எந்த குடும்பமும் நல்ல குடும்பம்தான்.//

என்னங்க விளையாடறீங்க. பருவ வயதில் சலனப் பட்டோ, அல்லது பலாத்காரத்திலோ
ஒரு பெண்ணின்(ஆணுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்) கன்னித் தன்மை
போயிருந்தால் பரவாயில்லை. ஆனால் ஒரு ஆணோ பெண்ணோ விருப்பமானவருடன் உறவு
கொள்வது என்பது என் பாலியல் சுதந்திரம்.இதை என் கணவனோ அல்லது மனைவியோ கூட
தட்டிக் கேட்கக் கூடாது.நான் அப்படித்தான் இருப்பேன். உனக்கு வேண்டுமானல்
நீயும் அப்படி இருந்துக் கொள். நான் உன்னைக் கேட்க மாட்டேன். உன்
சுதந்திரம் உனக்கு. என் சுதந்திரம் எனக்கு. நாம் ரெண்டு பேரும் வெளியில்
ஊர் சுற்றி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து ஒன்றாய் சேர்ந்து நம்
குழந்தையை வளர்க்கலாம் என்று சொல்லிக் கொள்ளும் நிலை வர வேண்டுமா என்ன.

//9."தமிழ்நாட்டில் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளாதவர்கள்


யாராவது இருக்கிறார்களா? சொல்லுங்கள் பார்க்கலாம்" என்பது திமிர்த்தனமான
பதில்
இல்லையா?
அதை தான் சொல்லவில்லை,தவறாக மொழிபெயர்த்து போட்டுவிட்டார்கள் என குஷ்பு

மறுத்துவிட்டார். //

குஷ்பூ இப்படி சொல்ல வர வில்லை. அவர் சொல்ல வந்த Context வேறு. அது
சொல்லப்படுபவரின் தொனிக்கும், கேட்கப்படுபவரின் மன நிலைக்கும் இடையே
மருவி இப்படியாக அர்த்தம் கண்டுக் கொள்ளப் பட்டு விட்டது என்று வாஸந்தி
தனது அறிவு ஜீவித் தனத்தை வெளிப்படுத்தி, மேலும் சில இலக்கண வகுப்புகளும்
எடுத்து இந்தியா டுடேயில் குஷ்பூவின் இந்த வார்த்தைகள் குறித்து ஒரு
கட்டுரை எழுதி இருந்தார். அது மறுத்து சொன்னதாக எனக்குத் தெரிய வில்லை.
தெரிந்தோ தெரியாமலோ தவறாக சொல்லி விட்டதை வாபஸ் வாங்க மறுக்கும் ஒரு ஈகோ
பிடித்தவர் தனது அறிவு ஜீவித் தனத்தைக் காட்டி மற்றவர்களை முட்டாளாக்க
முயற்சிக்கும் வறட்டுத் தந்திரமாகத்தான் எனக்குத் தோன்றியது.

செல்வன்

unread,
Sep 27, 2007, 4:52:20 PM9/27/07
to panb...@googlegroups.com

//இல்லைங்க. அது சம்பந்தப் பட்ட கணவனும் மனைவியும் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயம். சுமப்பதால் பெண்ணுக்கு மட்டுமே முழு உரிமை இருக்கிறது என்பது தவறான வாதமாகும். கவனிக்க கலந்து பேசி என்று சொல்லி இருக்கிறேன். இந்த புரிதல்கள் வீட்டுக்கு வீடு மாறுபடும்.

இந்த கேள்வி எதற்கு கேட்டேன் என்றால், "பெண்கள் பிள்ளை பெற்றுக்

கொள்வதால்தான் அவர்கள் உடல் நலம் கெட்டுப் போகிறது. ஆகையால் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்த வேண்டும்" என்று சொல்லி உள்ளீர்கள் அல்லவா(பெரியார் சொன்னதாக). அதனால்தான் இந்த கேள்வியே எழுந்தது. இது ஒரு தவறான கருத்தியல் பிரச்சாரம் அல்லவா?//

திருமணமான பெண்கள் கணவனுடன் கலந்து பேசலாம்.பேசவேண்டும்.இல்லை எனவில்லை.ஆனால் முடிவு என்றும் பெண்ணினுடையதுதான்.ஆணுக்கு அந்த முடிவு பிடிக்காவிட்டால் விவாகரத்து செய்யலாமே தவிர வற்புறுத்த முடியாது.

பெரியார் சொன்ன "குழந்தை பெற்றுகொள்ள வேண்டாம்" கருத்தை ஆதரித்தோ,எதிர்த்தோ நான் இங்கே குறிப்பிடவில்லை.அவரது கருத்து இது என்ற அளவிலேயே அதை இட்டேன்.அவரது டேட்டிங்,திருமண மறுப்பு,குழந்தை தடுப்பு போன்ற பல கருத்துக்களும் ஒவ்வொருவரின் சூழ்நிலைகேற்பவே அணுகப்படவேண்டுமே அன்றி ஒட்டுமொத்தமாக அனைவருக்குமான தீர்வாக கருத கூடாது.

//2.அதே சமயம் நமது சமூக அமைப்பில் கல்யாணம் செய்து கொள்வதன் நோக்கங்களில் ஒன்று தமது வாரிசை உருவாக்குவதும்தான். ஆகையால் கல்யாணம் செய்து கொண்ட பின் "என் சுயேச்சை போய் விடும்" ஆகையால் நான் குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று ஒரு பெண் சொன்னால் அதை கணவன் இது பெண் சுதந்திரம் என்று ஒத்துக் கொண்டுப் போக வேண்டுமா? ஆம் என்றால் ஆண் சுதந்திரம் பற்றி பேச
வேண்டிய காலம் ரொம்ப தொலைவில் இல்லை என்று அர்த்தம்.//

கல்யாணம் செய்துகொள்ளும் முன் இதை தெளிவாக பேசிக்கொள்ள வேண்டும்.அப்படி பேசிக்கொண்டாலும் அதை மறுக்க மனைவிக்கோ கணவனுக்கோ உரிமை உண்டு(People have the right to break a social agreement).குழந்தை பெற மனைவி மறுத்தால் வேண்டுமென்றால் விவாகரத்து செய்யலாமே தவிர அவரை வலியுறுத்தி குழந்தை பெற வைக்க முடியாது.

//5.பெரும்பாலான கேள்விகளிற்கு நாம் இது அவரவர் தனிப்பட்ட விருப்பம்


என்றுதான் விட முடியும். இதுவும் அப்படிப் பட்ட ஒரு பிரச்சினைதான்.
இப்போது பெங்களூர்,மும்பை,டெல்லி போன்ற நகரங்களில் இது ஓரளவு பரவி
வருகிறது.இதன் சாதக பாதகங்கள் இன்னும் சரியாக தெரிய வராத நிலையில் இதைப்

பற்றி கருத்துக் கூற எனக்குத் தெரிய வில்லை.//

ஓக்கே.

//6.பாதுகாப்பான உடலுறவு என்பது ஆணுறை விற்பனைக்கான விளம்பரமாக

இருப்பதைத் தாண்டி பெண் சுதந்திரத்திற்கு எப்படி தீர்வாய் அமையும்?//

பாலியல் சுதந்திரம் மனிதரின் அடிப்படை உரிமை எனும்போது அதை இல்லாமல் எப்படி பெண்விடுதலை பூர்த்தியாகும்?

இதைதான் சொல்லவந்தேன்.

//7.ஆகையால் படித்தவர்கள் அப்படி எதிர்பார்க்கக் கூடாது என்று ஒருத்தர்


எனக்கும் சேர்த்து சொன்னால்,"நீங்களும், உங்கள் கணவரும் எதிர்பாருங்கள்,
எதிர் பார்க்காதீர்கள் அது உங்கள் தனிப்பட்ட விருப்பமும் ஒழுக்கமும்
சார்ந்தது. ஆனால் நான் எதிர்பார்க்கக் கூடாது என்று சொல்ல எள்ளவும்
உங்களுக்கு உரிமை இல்லை குஷ்பு மேடம்" என்று நான் சொல்லக் கூடாதா???
கருத்துச் சுதந்திரம் என்ன குஷ்புவுக்கு மட்டும்தான் என்று பட்டா போட்டா
கொடுக்கப் பட்டிருக்கிறது?//

நீங்கள் தாராளமாக சொல்லலாம்.

//9.என்னங்க விளையாடறீங்க. பருவ வயதில் சலனப் பட்டோ, அல்லது பலாத்காரத்திலோ ஒரு பெண்ணின்(ஆணுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்)  கன்னித் தன்மை போயிருந்தால் பரவாயில்லை. ஆனால் ஒரு ஆணோ பெண்ணோ விருப்பமானவருடன் உறவு கொள்வது என்பது என் பாலியல் சுதந்திரம்.இதை என் கணவனோ அல்லது மனைவியோ கூட தட்டிக் கேட்கக் கூடாது.நான் அப்படித்தான் இருப்பேன். உனக்கு வேண்டுமானல் நீயும் அப்படி இருந்துக் கொள். நான் உன்னைக் கேட்க மாட்டேன். உன் சுதந்திரம் உனக்கு. என் சுதந்திரம் எனக்கு. நாம் ரெண்டு பேரும் வெளியில் ஊர் சுற்றி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து ஒன்றாய் சேர்ந்து நம்

குழந்தையை வளர்க்கலாம் என்று சொல்லிக் கொள்ளும் நிலை வர வேண்டுமா என்ன.//

இதெல்லாம் தனிமனிதரின் முடிவுதான் நந்தா.கணவன் கள்ள உறவு வைத்திருந்தாலால் மனைவி ஒன்று அந்த உறவை கண்டுகொள்ளாமல் விடலாம்.அல்லது விவாகரத்து செய்யலாம்.அல்லது இரண்டாம் தாரமாக கட்ட அனுமதி வழங்கலாம்.ஒரே வீட்டிலும் வசிக்கலாம்.

அதே போல் கணவனும் மனைவியின் கள்ள உறவு குறித்து எந்த முடிவும் எடுக்கலாம்.

இப்படி முடிவெடுக்க தான் சுதந்திரம் உண்டு.ஆனால் "மனைவியை கொல்வேன்,தண்டனை வாங்கி கொடுப்பேன்" என்றெல்லாம் கிளம்ப முடியாது.அடல்டரியை விவாகரத்துக்கான காரணமாக ஏற்க முடியுமே தவிர தண்டனைக்கான காரணமாக ஏற்க முடியாது.

//10.குஷ்பூ இப்படி சொல்ல வர வில்லை. அவர் சொல்ல வந்த Cஒன்டெxட்  வேறு. அது


சொல்லப்படுபவரின் தொனிக்கும், கேட்கப்படுபவரின் மன நிலைக்கும் இடையே
மருவி இப்படியாக அர்த்தம் கண்டுக் கொள்ளப் பட்டு விட்டது என்று வாஸந்தி
தனது அறிவு ஜீவித் தனத்தை வெளிப்படுத்தி, மேலும் சில இலக்கண வகுப்புகளும்
எடுத்து இந்தியா டுடேயில் குஷ்பூவின் இந்த வார்த்தைகள் குறித்து ஒரு
கட்டுரை எழுதி இருந்தார். அது மறுத்து சொன்னதாக எனக்குத் தெரிய வில்லை.
தெரிந்தோ தெரியாமலோ தவறாக சொல்லி விட்டதை வாபஸ் வாங்க மறுக்கும் ஒரு ஈகோ பிடித்தவர் தனது அறிவு ஜீவித் தனத்தைக் காட்டி மற்றவர்களை முட்டாளாக்க
முயற்சிக்கும் வறட்டுத் தந்திரமாகத்தான் எனக்குத் தோன்றியது.

//

வாசந்தி எழுதியதை நான் படிக்கவில்லை.குஷ்பு மறுப்பு கொடுத்து அது பத்திரிகைகளைல் வெளிவந்ததை தான் படித்தேன்.



நண்பன்

unread,
Sep 28, 2007, 9:36:36 AM9/28/07
to பண்புடன்
செல்வன்,

பெரியாரைப் பற்றித் தவறாக பிரச்சாரம் செய்யும் சிலருள் நீங்களும் ஒருவர்
என்பதினாலேயே, உங்களுடன் இத்தனை முரண்பட வேண்டியதிருக்கிறது.

முதலில், திருமண முறையே வேண்டாம் என்று தான் பெரியார் கூறினார். அதனாலயே,
அவர் திருமணத்திற்கு முன்பே உறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று
கூறியதாகத் தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கேவலமான புரிதல்.
திருமணம் முறைகளைத் தான் அவர் வேண்டாம் என்று கூறினார். அதற்கான
காரணங்களை ஏற்கனவே கூறிவிட்டேன்.

மீண்டும் ஒரு முறை - திருமணம் என்று நடைமுறையில் இருக்கும் 'பெண்' தாரை
வார்த்தல், பெண்ணின் விரும்பம அறியப்படாதல், வரதட்சணை, பார்க்கப்படும்
குலம் கோத்திரம் ஜாதகம் வகையறாக்கள் - இப்படி இழிவுகளால் நிரம்பப்
பட்டிருக்கிருக்கும் இந்த திருமண முறைகள் வேண்டாம் என்று கூறினார்.

திருமணம் முறைகள் வேண்டாம் என்று கூறினால், திருமணம் தான் நடக்கவில்லையே
- பின்னர் அவர்கள் எப்படி உறவு கொண்டிருப்பார்கள் - திருமணம் இல்லாமல்
தானே என்று வாதாட உங்களால் மட்டும் தான் முடியும். ஆனால், பெரியார் இந்த
திருமண முறைகளுக்கு மாற்றாக வைத்த திருமண முறைகளை உங்களுக்குத் தெரிந்தே
இருக்க வில்லை. இல்லையென்றால், திண்ணையில் சுட்டு வந்த தப்பர்த்தங்களைக்
கொண்டு, கண்களை மூடிக் கொண்டு வாதிட்டுக் கொண்டிருக்க மாட்டீர்கள்.

ஐதீக திருமண முறைகளை எதிர்த்தவர் - அதற்கு மாற்றாக, அவர் முன் வைத்த
திருமண முறை ஒன்று இருக்கிறது. அதாவது பழந்தமிழர் எவ்வாறு திருமணம்
செய்து கொண்டார்களோ - அதே போன்ற திருமண முறையை அவர்
நடைமுறைப்படுத்தினார்.

மணமக்கள் எத்தகைய சூழலிலும் ஒருவரை ஒருவர் பிரிவதில்லை என உறுதி மொழி
எடுத்துக் கொண்டு, மலர் மாலை மாற்றிக் கொண்டு, திருமணம் நடத்திக்
கொள்வர். அவ்வளவு தான். அங்கே வேறெந்த ஐதீக்ங்களும் நிகழாது.

பெரியார் இந்த முறையில், கூட ஒன்றையும் சேர்த்துக் கொண்டார். ஒப்பந்தப்
பத்திரம் ஒன்றில் கையெழுத்திடுவதும் ஒன்றாகும். அது இன்றைய - திருமண
பதிவு தேவைகளை ஒட்டி ஏற்படுத்திக் கொண்டதாகும். இந்த திருமண முறை - சுய
மரியாதைத் திருமணம் என்று அழைக்கப்படுகிறது. இந்திய அரசியல் சட்டத்தின்
படியும் இத்தகைய திருமண முறைகள் செல்லும்.

இந்த திருமண முறையையே மறைத்து விட்டு, (ஐதீக) திருமண முறைகளே வேண்டாம்
என்று சொல்லிவிட்டார் பெரியார். அதனுடைய பொருள் - திருமணமின்றி உடலுறவு
கொள்வதை அவர் ஆதரிக்கிறார் என்று சொல்வது வக்கிரம் பிடித்த மனம்
உடையவர்களால் தான் முடியும். எந்த ஒரு செயலிலும் 'உடலுறவு' நிகழ்ந்ததா
என்று எண்ணிக் கொண்டிருக்கும் மனதினால், உடலுறவு மட்டுமே வாழ்க்கை அல்ல
என்பதைப் புரிந்து கொள்ள என்றுமே இயலாது.

என்றாலும், உங்களுடைய போலி பெரியார்த் தனங்களின் முகம் வெளிப்படுகிறதே -
அது தான் இந்த விவாதத்தின் நன்மை.


நண்பன்


On Sep 27, 3:01 am, "செல்வன்" <hol...@gmail.com> wrote:
> //உங்களுடைய புரிதல் இன்னமும் அபத்தம். அவர் அதை முன்மாதிரியாக எடுத்துக்
> கொண்டு, உடலுறவு கொள்ளுங்கள் என்று கூறவே இல்லை.//
>

> பெரியார்* திருமணம் என்ற முறையே வேண்டாம் என மாநாடு கூட்டி தீர்மானம்


> போட்டார்.அவரை போய் திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்ளகூடாது என்று எங்கும்

> சொல்லவில்லை என்கிறீர்கள்.*

நந்தா

unread,
Sep 28, 2007, 9:55:00 AM9/28/07
to பண்புடன்
//திருமணமான பெண்கள் கணவனுடன் கலந்து பேசலாம்.பேசவேண்டும்.இல்லை
எனவில்லை.*ஆனால்
முடிவு என்றும் பெண்ணினுடையதுதான்*.ஆணுக்கு அந்த முடிவு

பிடிக்காவிட்டால்
விவாகரத்து செய்யலாமே தவிர வற்புறுத்த முடியாது.//

//அவரது டேட்டிங்,திருமண மறுப்பு,குழந்தை தடுப்பு போன்ற பல


கருத்துக்களும் ஒவ்வொருவரின்
சூழ்நிலைகேற்பவே அணுகப்படவேண்டுமே அன்றி ஒட்டுமொத்தமாக அனைவருக்குமான
தீர்வாக
கருத கூடாது. //

//கல்யாணம் செய்துகொள்ளும் முன் இதை தெளிவாக பேசிக்கொள்ள


வேண்டும்.அப்படி
பேசிக்கொண்டாலும் அதை மறுக்க மனைவிக்கோ கணவனுக்கோ உரிமை உண்டு(People
have the
right to break a social agreement).குழந்தை பெற மனைவி மறுத்தால்
வேண்டுமென்றால் விவாகரத்து செய்யலாமே தவிர அவரை வலியுறுத்தி குழந்தை பெற
வைக்க
முடியாது. //

//அடல்டரியை விவாகரத்துக்கான காரணமாக ஏற்க முடியுமே தவிர தண்டனைக்கான


காரணமாக ஏற்க முடியாது. //

இந்த நிலைப்பாடை ஏற்றுக் கொள்கிறேன் செல்வன். சுயேச்சை என்பதற்கும், தான்
தோன்றித் தனத்திற்கும் இடையே கொஞ்சமேதான் வேறுபாடுகள் உள்ளது. அதை
உங்களது பதில்கள் காட்டி இருக்கின்றன.

மேலே கூறியவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. மற்றவர்களின்
கருத்துக்கள் எப்படி என்று தெரிய வில்லை. இதில் வேறு யாருக்கேனும்
மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றனவா மக்களே.


அன்பு குயில்

unread,
Sep 28, 2007, 10:00:12 AM9/28/07
to panb...@googlegroups.com
அதெல்லாம் சரி பாலியல் சுதந்திரம் பெண்களுக்கு
 
செக்சில் இருந்து தொடங்கனும்கிறாரே
 
அது தப்பு இல்லையா
 
ஆணுக்கு இருக்கு என்பது சொத்தை வாதம்

 

நந்தா

unread,
Sep 28, 2007, 10:42:30 AM9/28/07
to பண்புடன்
//ஆகையால் படித்தவர்கள் அப்படி எதிர்பார்க்கக் கூடாது என்று ஒருத்தர்

எனக்கும் சேர்த்து சொன்னால்,"நீங்களும், உங்கள் கணவரும் எதிர்பாருங்கள்,
எதிர் பார்க்காதீர்கள் அது உங்கள் தனிப்பட்ட விருப்பமும் ஒழுக்கமும்
சார்ந்தது. ஆனால் நான் எதிர்பார்க்கக் கூடாது என்று சொல்ல எள்ளவும்
உங்களுக்கு உரிமை இல்லை குஷ்பு மேடம்" என்று நான் சொல்லக் கூடாதா???
கருத்துச் சுதந்திரம் என்ன குஷ்புவுக்கு மட்டும்தான் என்று பட்டா போட்டா
கொடுக்கப் பட்டிருக்கிறது?//

//நீங்கள் தாராளமாக சொல்லலாம்.*** //

இதைத்தான் செல்வன் எதிர்பார்த்தேன். குஷ்பு விஷயத்தில் அவருக்கு ஆதரவாக
அணி திரண்டவர்கள் எல்லாரும் வசதியாக ஒரு விஷயத்தை மறைத்து விட்டார்கள்.
அது குஷ்பூவின் கருத்துக்கள் பிடிக்காதவர்கள் எல்லாரும் விளக்குமாறு
காட்டி,முட்டை அடித்த கும்பலைச் சேர்ந்தவர்கள். குஷ்பூவை எதிர்த்த ஆண்கள்
எல்லாம் தாங்கள் ஊர் மேய்ந்து விட்டு பெண்களை மட்டும் அடங்கி இரு என்று
சொல்லிக் கொண்ட கலாச்சாரக் காவலர்களாக அவர்கள் வலிந்து உருவகப்
படுத்தினார்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவர்களின் வன்முறை குஷ்புவின் மீது
வைக்கப்பட்ட கருத்தியல் சார்ந்த கேள்விகளிற்கு பதில் சொல்ல தேவையில்லா
ஒரு கேடயமாக அமைந்து விட்டது என்று சொல்லலாம். அதனாலேயே வாஸந்தி, இந்தியா
டுடே க்ரூப் உள்ளிட்ட பலர் குஷ்புவை போராளி ரேஞ்சுக்கு உயர்த்திப் பேசி
பாராட்டு மழை பொழிந்த போது எதிர் கருத்தியல் வாதிகளை குற்றவாளிகளாக
நிறுத்த அவர்களால் முடிந்தது.

சமூகத்தில் யாரும் பேசத் துணியா விஷயத்தை, போகிற போக்கில் பேசி விட்டுச்
சென்றால் போராளி பட்டம் கிடைக்கும் என்றால், கொடுங்கள் எனக்கும் ஒரு
போராளி பட்டம். நானும் சொல்லத்தயார் அதைவிட புரட்சிகரமான கருத்துக்களை.

செல்வன்

unread,
Sep 28, 2007, 11:08:48 AM9/28/07
to panb...@googlegroups.com

நண்பன்,

பெரியார் திருமணமே வேண்டாம் என்றாரா,திருமண முறையே வேண்டாம் என்றாரா என்று அவர் மாநாட்டில் போட்ட தீர்மானத்தையும் அவரது உரைகளையும் படித்தால் புரியும்.அவற்றை பலமுறை எடுத்து போட்டும் உங்களிடமிருந்து அவற்றுக்கு எந்த எதிர்வினையும் இல்லை.மாறாக ஓரிரு வரிகளில் அதை உங்கள் வசதிக்கேற்ப உரைக்கும் செயலைத்தான் செய்கிறீர்கள்.

மற்றபடி தேவையற்ற வார்த்தைகளை தொடர்ந்து பிரயோகித்து வரும் உங்களுடன் இனியும் இந்த வாதத்தை தொடர்வதில் எந்த அர்த்தமும் இருப்பதாக தெரியவில்லை.முன்பு பலமுறை சுட்டிகாட்டியபோதும் இம்முறை எழுதிய மடலிலும் //கேவலமான புரிதல், வக்கிரம் பிடித்த மனம் உடையவர்களால் தான் முடியும்// அந்த பாணியையே பின்பற்றுகிறீர்கள். அந்த மாதிரி வாதமே எனக்கு வேண்டாம்.உங்கள் பாணி யாருக்கு ஒத்துவருகிறதோ அவர்களுடன் உரையாடிக் கொள்ளுங்கள்.இனி உங்கள் எந்த மடலுக்கும் எங்கும் பதிலளிப்பதாக இல்லை.

நன்றி





--
செல்வன்

http://www.holyox.tk

செல்வன்

unread,
Sep 28, 2007, 11:16:31 AM9/28/07
to panb...@googlegroups.com

//அதெல்லாம் சரி பாலியல் சுதந்திரம் பெண்களுக்கு  
செக்சில் இருந்து தொடங்கனும்கிறாரே அது தப்பு இல்லையா?//

செக்ஸ் இல்லாம பாலியல் சுதந்திரம்...எப்படி?:-)))
 
//ஆணுக்கு இருக்கு என்பது சொத்தை வாதம் //

ஆணுக்கு பாலியல் சுதந்திரம் இருந்தா பெண்ணுக்கும் இருந்தாகனும்.ஆண் பெண்ணோடுதானே உறவு கொள்ள முடியும்?உறவு கொள்ள ஆணுக்கு உரிமை உண்டு, பெண்ணுக்கு இல்லைன்னா அப்புறம் ஆண் யாரோட உறவுகொள்வது?:-))

சோமு தங்கச்சி கதையா இல்லா இருக்கு?:-))

செல்வன்

unread,
Sep 28, 2007, 11:28:47 AM9/28/07
to panb...@googlegroups.com

நந்தா,

குஷ்பு விவகாரம் அரசியலாகிவிட்டதால் துடைப்ப கட்டை ஊர்வலம், கொடும்பாவி கொளுத்துதல் என போய் விட்டது.மற்றவர்கள் இதை எப்படி எதிர்கொண்டார்கள் என எனக்கு தெரியாவிட்டாலும் எனக்கு தெரிந்து இரு தரப்பிலும் பலர் நாகரிகமாகவே கருத்தை எடுத்து வைத்தனர்.இரு தரப்பிலும் எக்ஸ்ட்ரீம் துருவங்களில் நின்று கருத்தை விட்டுவிட்டு எதிராளியை வசைபாடிய அன்பர்கள் உண்டு.இணைய உலகம் இருக்கும் நிலையில் இதெல்லாம் சகஜம் என எடுத்துகொள்ள வேண்டியதுதான்.

//சமூகத்தில் யாரும் பேசத் துணியா விஷயத்தை, போகிற போக்கில் பேசி விட்டுச்


சென்றால் போராளி பட்டம் கிடைக்கும் என்றால், கொடுங்கள் எனக்கும் ஒரு

போராளி பட்டம். நானும் சொல்லத்தயார் அதைவிட புரட்சிகரமான கருத்துக்களை.//

:-))

குஷ்பு போராளி ஆனவரல்ல.ஆக்கப்பட்டவர்.சும்மா சிவனே என்று இருந்தவரை ஊரே கூடி எதிர்த்ததால் ஓவர் நைட்டில் போராளி ஆக்கிவிட்டார்:-)

நண்பன்

unread,
Sep 28, 2007, 2:56:05 PM9/28/07
to பண்புடன்
அனைத்து நண்பர்களுக்கும்,

இது கொஞ்சம் நீளமான பதிவு. அதனால் கொஞ்சம் பொறுமையுடன் வாசிக்கவும்.

// நண்பன்,

பெரியார் திருமணமே வேண்டாம் என்றாரா,திருமண முறையே வேண்டாம் என்றாரா
என்று அவர் மாநாட்டில் போட்ட தீர்மானத்தையும் அவரது உரைகளையும் படித்தால்
புரியும்.அவற்றை பலமுறை எடுத்து போட்டும் உங்களிடமிருந்து அவற்றுக்கு
எந்த எதிர்வினையும் இல்லை.மாறாக ஓரிரு வரிகளில் அதை உங்கள் வசதிக்கேற்ப
உரைக்கும் செயலைத்தான்
செய்கிறீர்கள். மற்றபடி தேவையற்ற வார்த்தைகளை தொடர்ந்து பிரயோகித்து
வரும் உங்களுடன் இனியும் இந்த வாதத்தை தொடர்வதில் எந்த அர்த்தமும்
இருப்பதாக தெரியவில்லை.முன்பு பலமுறை சுட்டிகாட்டியபோதும் இம்முறை எழுதிய
மடலிலும் //கேவலமான புரிதல், வக்கிரம் பிடித்த மனம் உடையவர்களால் தான்
முடியும்// அந்த பாணியையே பின்பற்றுகிறீர்கள். அந்த மாதிரி வாதமே எனக்கு
வேண்டாம்.உங்கள் பாணி யாருக்கு ஒத்துவருகிறதோ அவர்களுடன் உரையாடிக்
கொள்ளுங்கள்.இனி உங்கள் எந்த மடலுக்கும் எங்கும்
பதிலளிப்பதாக இல்லை.

நன்றி //

செல்வன்

நீங்கள் நான் எழுதிய எழுத்திலிருந்து, பெரியாரைப் பற்றிய தவறான
கருத்துகளை முன் வைத்ததைப் பற்றி மட்டும் தான் நான் வாதிடுகிறேனே தவிர,
நீங்கள் கூறும் உங்களது சொந்த கருத்துகளைப் பற்றி நான் எந்த ஒரு
விவாதத்தையும் முன் வைக்கவில்லை. உங்களுடைய கருத்துகள் – உங்களது
தனிப்பட்ட விருப்பம், நீங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த விரும்பும்
அல்லது கடைபிடிக்க விரும்பும் கருத்துகளைப் பற்றி, கருத்து கூற எனக்கு
எந்த வித விருப்பங்களும் கிடையாது.

ஆனால், மற்றவர்கள் கூறிய கருத்துகளை உங்கள் மனம் போல் திரித்து, நீங்கள்
ஒரு முறை சறுக்கியதை சரி செய்யும் பொருட்டு, தொடர்ந்து தவறாகப்
பிரச்சாரம் செய்வதை மறுப்பதற்கும், அவ்வாறு தொடர்ந்து செய்வதை ‘கருத்துப்
புரட்டு’ என்று கூறுவதற்கும் உரிமை உண்டு. இத்தகைய கருத்துப் புரட்டுகளை
ஒரு கூட்டமே கூடி செய்து வருகிறது, வந்திருக்கிறது. இன்னமும் செய்யும்.
அதை மறுப்பதற்கும், பெரியார் கூறிய கருத்துகளின் நேர்மையை எடுத்து
இயம்புவதற்கும் இன்னொரு கூட்டம் தொடர்ந்து இயங்குகிறது என்பதையும்
நீங்கள் உணர வேண்டும்.

வக்கிரம் பிடித்த மனநிலையுடையவர்களால் தான் முடியும் என்ற பொழுது, அது
அத்தகைய ஒரு கூட்டத்தையே குறித்து சொல்லப்பட்டது. அந்தக் கூட்டத்தில்
ஒருவராக நீங்கள் இருப்பதை நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்.

**// பெரியார் திருமணமே வேண்டாம் என்றாரா,திருமண முறையே வேண்டாம் என்றாரா


என்று அவர் மாநாட்டில் போட்ட தீர்மானத்தையும் அவரது உரைகளையும் படித்தால்
புரியும்.அவற்றை பலமுறை எடுத்து போட்டும் உங்களிடமிருந்து அவற்றுக்கு

எந்த எதிர்வினையும் இல்லை //**

நீங்கள் கூறியவற்றிற்கு நான் எதிர்வினைகள் ஆற்றவில்லையா?

‘தூங்குகிறவனை எழுப்பலாம் – ஆனால், தூங்குவதாக நடிப்பவனை எழுப்ப
முடியாது’ என்று கூறி பலரும் விலகிக் கொண்ட பொழுது, தொடர்ந்து நான்
விவாதிப்பது கொண்டிருப்பது – பெரியார் குறித்த தவறான விமர்சனங்களைப்
பற்றியது தானே தவிர, செல்வனைக் குறித்தல்ல. பெரியார் குறித்த தவறான
கருத்துகளை மறுப்பதற்கு, எப்பொழுதும், நான் தயங்க வேண்டியதில்லை.

இங்கு கூட, “பல முறை” நீங்கள் பெரியார் கூறியதாக எடுத்துக் கூறிய
கருத்துகள் தொகுத்து வைத்திருக்கிறேன். நீங்கள் பெரியார் கூறியதாக
எடுத்து வைத்த வாதங்கள் – திருமண முறைகள் குறித்து அவர் கூறியதை கீழே
காணுங்கள்.


Sept 26, 1:26 am

*கல்யாண முறை ஒழிய வேண்டும் !*

கலியாணம் என்பதையே சட்ட விரோதமாக்க வேண்டும். இந்தக் கலியாணம் என்ற
அமைப்பு முறை இருப்பதால்தான் கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத்
தன்மையும் உருவாகிறது. மனைவியாகி விட்டால் அதோடு சரி - அவள் ஒரு சரியான
அடிமை! அது மட்டுமல்ல இந்தக் ***கலியாண முறை*** இருப்பதால்தானே குழந்தை
குட்டிகள் - அவற்றுக்கு சொத்துக்கள் சம்பாதிப்பது - அதுவும் எதைச்
செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய
ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன?

- "விடுதலை' (28.6.73)

Sept 27, 3:01 am


பெண்ணடிமை ஒழிய...

பெண்ணடிமைக்கு அடிப்படைக் காரணங்கள் திருமணம், கற்பு என்பவைகளேயாகும்.
திருமணம் என்பது மனிதத் தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமை
கொள்ளவே
ஏற்பட்டது... திருமணம் என்பது ஆண்களுக்கு நன்மையாகவும், பெண்களுக்கு
கேடாகவும் இருக்கிறது. பெண்களை அடிமையாக வைத்திருப்பது என்பது ஆண்களுக்கு
லாபமாக இருக்கிற காரணத்தால், பெண்கள் உரிமைக்கு ஆண்கள், ஒப்புவது இல்லை.
இந்த நிலை மாறியாக
வேண்டும். நாளைக்கே ஒரு அரசாங்கம் வந்து, திருமணம் செய்து கொள்ளக் கூடாது
என்று சட்டம் செய்து விட்டால் பிரச்சனை இல்லை... எனவே, ***பெண்ணடிமை ஒழிய
திருமண முறை ஒழிந்தாக வேண்டும்.*** அதோடு மட்டுமல்ல. ***மனிதன் சுதந்திர
மனிதனாக இருக்க வேண்டுமென்றாலும், இந்த திருமண முறை ஒழிந்தே ஆக
வேண்டும்.***

– "உயர் எண்ணங்கள்' என்ற நூலில் பெரியார்

கீழே கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு, நீங்கள் வைத்த பதிலிலே, திருமண
அமைப்பு என்று தான் நீங்களே பதில் சொல்லி இருக்கிறீர்கள்.


Sept 26, 7:22 pm
//
இதை இன்னும் முழுப் பரிணாமத்துடன் பார்க்கும் போது திருமணம் மற்றும்
குடும்பம் ஆகிய அமைப்புகளையே கேள்விக்குறியாக்குகிறீர்களோ என்றுதான்
தோன்றுகிறது???அப்படியா?//
இந்த ***அமைப்புகளில்*** பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு அதன்மூலம்
பந்தங்கள் நிலைத்து நிற்பதை தான் எதிர்க்கிறேன்.//


இப்பொழுது அனைவரும் புரிந்து கொள்வார்கள் – பெரியார் கூறியது ஒரு திருமண
அமைப்பு முறையைத் தான் என்று. எதனால் எந்த அமைப்பு முறை ஒழிய வேண்டும்
என்பதற்கான காரணத்தையும் கூறி விட்டேன். ஒரு சமூகம் குறித்த உண்மையான
அக்கறையுடன் தன் பேச்சிலும், செயலிலும் கவலை கொண்ட மனிதரின் கருத்துகளை
தொடர்ந்து திரித்துப் பேச உங்களுக்கான நிர்ப்பந்தம் –

‘நண்பன் பெரியாரைப் பற்றி அறிந்திருக்க விலலை’ என்று எப்படியாவது
நிரூபித்து விட வேண்டும் என்ற பரிதவிப்பு தான். அதனால் தொடர்ந்து
குதர்க்க வாதம் செய்து கொண்டே போகிறீர்கள். இந்தக் குழுமத்தில் நான்
எழுதியதையே சரியாக வாசிக்காமல், கருத்து வைத்து விட்டு, பின்னர் அதை நான்
சுட்டிக் காட்டியதும், அத்தகைய கருத்து எழுதியதற்கு வருத்தம்
தெரிவிக்காமல், திசை திருப்பிக் கொண்டே செல்லும் நீங்கள், இனி என்னுடன்
வாதம் செய்யப் போவதே இல்லை என்று கூறித் தப்பித்துக் கொள்ள
முயற்சிக்கிறீர்கள்.

விவரம் புரியாதவர்களுக்கு – நான், நீங்கள் எழுதியவற்றின் வரிகள் கீழே:

நான் கூறியது -

// பெரியார் கூறியது என்ன?

திருமணத்திற்கு முன் உறவு வைத்துக் கொள்ளுங்கள் என்றா கூறினார்? அப்படி
எங்கும் கூறியதே இல்லை. ஒழுக்கக் கேட்டை அவர் எங்கும் போதித்தது
கிடையாது.


அவர் கூறியதெல்லாம் - எவற்றைக் கொண்டு பெண்கள்
அடிமைப்படுத்தப்படுகிறார்களோ அவற்றை பெண்கள் துணிந்து செய்ய வேண்டும்
என்று!!!

***ஒரு ஆண்மகன் ஒருத்தியை ஆசை நாயகியாக வைத்துக் கொண்டால், அதற்குப்
பதிலாக பெண்களும் ஆண்களை வைத்துக் கொள்ளுங்கள்.*** இப்படித் தானே
கூறினார்? //

இதை எடுத்து நீங்கள் கையாண்ட விதமென்ன?

// 2.பெரியாரின் கருத்தாக நண்பன் கூறுவது
//
பெரியார் கூறியது என்ன?
திருமணத்திற்கு முன் உறவு வைத்துக் கொள்ளுங்கள் என்றா கூறினார்? அப்படி
எங்கும் கூறியதே இல்லை. ஒழுக்கக் கேட்டை அவர் எங்கும் போதித்தது
கிடையாது//

***பெரியார் இது பற்றி கூறியதை நண்பன் அறியவில்லை*** என்றே கருதுகிறேன்.
பெரியார் சொன்னது இதோ //

என்று எழுதி விட்டு,

// உண்மையான சமரசம்

ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண்கள் மூன்று ஆசை
நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை
சரிப்பட்டுப்போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே


இருக்காது.

- "தந்தை பெரியார் அறிவுரை 100' என்ற நூலிலிருந்து. //

என்று ஒரு மிகப் பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியதைப் போல,
குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

இந்தத் தவறைச் சுட்டிக் காட்டிய பொழுது, நான் கூறியதற்கும், பெரியார்
கூறியதற்கும் எந்த வித வேறுபாடுகளும் கிடையாது என்று நான் சுட்டிக்
காட்டியதற்கு – தவறை ஒத்துக் கொள்ள மனமின்றி, அங்குமிங்கும் தேடி –
பெரியார் ‘திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக் கொள்ளுங்கள்’ என்று
கூறியிருக்கிறார் என்று நிருவ வேண்டிய கட்டாயத்தில், பெரியார்
கூறியவற்றைத் தொடர்ந்து தவறான எண்ணத்துடன் அணுகி வருகிறீர்கள். அதையும்
மறுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கும் என்னை உட்படுத்தி வருகிறீர்கள்.

அதனாலயே, இருவர் திருமணத்திற்கு முன் இணைந்து வாழும் முறையைக் குறித்து
எழுதினீர்கள். இருவர் இணைந்து வாழ்வதே ‘உடலுறவிற்காகத் தான்’ என்று
நீங்கள் கருதுகிறீர்கள். ஆனால், அவர்கள் தாங்கள் ஒருவருக்கொருவர்
இணையானவர்களா என்பதை அறியவே அவ்வாறு வாழ்கிறார்கள். ‘ஒருவருக்கொருவர்
இணையானவர்களா?’ என்று அறிந்து திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும்
இத்தகைய திருமண முறை தான் இன்றைய தேவை என்பதை பெரியார் வலியுறுத்துகிறார்
என்பதையும் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

அதைத் தொடர்ந்த விவாதமாக, திருமணமே வேண்டாம் என கூறினார் மாநாடு போட்டார்
என்று எழுதினீர்கள். அதையும் நான் மறுத்து எழுதினேன். அவர் திருமணமே
வேண்டாம் என்று கூறவில்லை. மாறாக ஒரு பெண்ணை, ஒரு பொருள் போன்று தானம்
வழங்கும் திருமண முறைகள் வேண்டாம் என மறுத்து, அதற்கு மாற்றாக இருவரும்
விரும்பி, கையொப்பமிட்டு, மாலை மாற்றி, திருமண பந்தத்தில் சம அந்தஸ்துடன்
இணைந்து கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தினார். அதை இந்திய அரசியல்
சட்டமும் அங்கீகரித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டேன்.

இதையெல்லாம் மறந்து விட்டு, நான் சொன்னதற்கு எதிர்வினையாற்றவில்லை என்பதை
எவ்வாறு சொல்வது?

// Sept 29, 10:49 pm

மேலும் ***"கல்யாண முறையே வேண்டாம்"*** "கற்பு என்பதே


காட்டுமிராண்டித்தனம்" என்ற பெரியார் கருத்துக்களை பல ஆதாரங்களுடன்

எடுத்து போட்டும் இன்னமும் அவர் 'திருமணத்துக்கு


முன் உறவை ஆதரிக்கவில்லை' என்றே சொல்லி சாதித்து

கொண்டிருக்கிறீர்கள்:-). //

நான் என்ன சாதித்துக் கொண்டிருக்கிறேன் – பெரியார் திருமண முறைகளை
வேண்டாம் என்று தான் சொன்னாரே தவிர – திருமணங்களை அல்ல என்று தானே?
பெரியார் என்ன சொன்னாரோ – அதைத் தானே?

இதில், ‘ திருமணங்கள் வேண்டாம் – உடலுறவு கொள்ளுங்கள் ’ என்ற உங்கள்
தத்துவம் எங்கிருந்து வந்தது?

தான் பரிபூரணமாக நம்பிய ஒன்றை மக்கள் முன் எடுத்து வைப்பதற்கு எந்தவித
மனத் தடையுமற்றவர் பெரியார். அதை ‘சாடைமாடையாக’ சொல்ல வேண்டிய அவசியமே
இல்லை பெரியாருக்கு. ‘கடவுள் இல்லை’ என்றார். ஒட்டு மொத்த சமுதாயமுமே
கடவுள் என்ற தத்துவத்திற்குள் அஞ்சிக் கிடந்த காலத்தில். ‘கற்பு என்று
ஆண்கள் விதித்த நியதிகள் காட்டுமிராண்டித் தனமானவை’ என்று கூறியவருக்கு,
‘திருமணமின்றி உறவு கொண்டு மகிழுங்கள்’ என்று சொல்வதற்கு என்ன மனத்
தடைகள் இருந்திருக்க முடியும்? ஏனென்றால் அவர் பரிபூரணமாக நம்பியது,
‘பெண்ணை ஒரு பொருளாக பாவித்து, பெண்களின் விருப்பமறிய விரும்பாமலே,
பொருளாதார, சாதிய காரணங்களுக்காக நடைபெறும் திருமணங்களை அழித்தொழியுங்கள்
– அதுவே சமத்துவ சமுதாயத்தை அடைய உத்தரவாதம் தரும்’ என்று தான்
நம்பினார். இதை திரித்து, அவர் திருமணமின்றி உடலுறவில் ஈடுபடுங்கள் என
கூறியதாக நீங்கள் சொல்லிக் கொண்டு திரிவது – ஒரு ஆணும் பெண்ணும்
தனித்திருந்தால், அங்கே உடலுறவு நிகழும் என்ற பொதுப்புத்தியை முன்
வைப்பது எல்லாம் வக்கிரம் தான். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஆக, ஏதோ ஒன்றை நிறுவுவதற்காக, பெரியாரை இழுத்து அவமானப்படுத்தும் உங்கள்
போக்கை விமர்சிப்பதில் எனக்கும் எந்தவித மனத்தடைகளும் இருக்கப்
போவதில்லை.

மேலும். கற்பு என்ற காட்டுமிராண்டித்தனம் என பெரியார் கூறியதையும் இதே
பாங்கில் தான் நீங்கள் திரித்து வருகிறீர்கள். அவர் கற்பு என்ற
காட்டுமிராண்டித் தனமென கூறியதன் பொருள், ‘விருப்பம் போல் உடலுறவு
கொள்ளுங்கள் என்பதல்ல.’ ஒன்று வேண்டாம் என கூறியதும், உடன் அதை உங்களது
விருப்பம் போல் மாற்றிச் சொல்லக் கூடாது. அவர் ஏன் அவ்வாறு என கூறினார்
என சிந்திக்க வேண்டும்.

அவர் வாழ்ந்த காலத்தில் (ஏன் இப்பொழுதும் கூட) நிலவரம் என்ன?

கற்புக்கரசி என்றால் என்ன பொருளில் வழங்கி வந்தார்கள்?

கண்ணகி போல்
வாசுகி போல்
சீதையைப் போல்
பத்தினிப் பெண்டிர் பெய்யென்றால் பெய்யும் மழை

இவையெல்லாம் ‘கற்பை’ தூக்கி நிறுத்தும் வகையில் பெண்களுக்கு
புகட்டப்பட்டு, இத்தகைய பெண்களைப் போல் இருக்க வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டு வாழ நிர்ப்பந்திக்கப்பட்டதினால் தான், அவர் இதை
காட்டுமிராண்டித்தனம் என கூறி, இத்தகைய நியதிகளை உதறித்தள்ள அவர் அறை
கூவல் விடுத்தார்.

இந்தப் பெண்களின் வாழ்க்கையை கொஞ்சம் ஆய்ந்து பார்த்து, அது எந்த
அளவுக்கு நடைமுறை சாத்தியம் என்பதைப் புரிந்து கொண்டால், அவர் கூறியது
எந்த அளவிற்கு நியாயம் என்பதையும் புரிந்து கொள்ள முடியும். அதில்
இருக்கும் சீர்திருத்த மனப்பாவத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

கண்ணகியின் கதை என்ன?

மார்பை கிள்ளி எறிந்ததும் மதுரை எரிந்தது…

கண்ணகியின் மார்பு என்ன கந்தகத்தால் செய்யப்பட்டதா? இது எந்த வகையிலும்
சாத்தியப்பட இயலாது. ஒரு புனைவுப் பாத்திரத்தைக் கொண்டு, உயிருடன்
நடமாடும் மனுஷியைப் பார்த்து, நீயும் உன் மார்பைக் கிள்ளி எறிந்தால், அது
ஒரு ஊரையே எரிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தைப் பெண்கள் மீது எவ்வாறு
திணிக்க இயலும்?

வாசுகியின் கதை?

வள்ளுவர் அழைத்ததும், நீர் இறைக்கும் வாளியை அப்படியே விட்டுவிட்டு,
புருஷனின் அழைப்பை ஏற்று ஓடினார். பின்னர் திரும்பி வந்ததும், அப்படியே
அந்தரத்தில் நின்றது என பெண்களிடம் அறிவுறுத்தி, அவ்வாறு இருக்க வேண்டும்
என வற்புறுத்துவது எந்த வகையில் நியாயம்?

புவியீர்ப்பு விசையையும் மீறி, ஒரு பெண் தன் நேர்மையை நிரூபிக்க வேண்டும்
என்ற நிர்ப்பந்தம் தான் காட்டுமிராண்டிமிராண்டித்தனம் என கூறினார்.

சீதை?

புருஷன் தன் நேர்மையை சந்தேகிக்கிறான் என்று தெரிந்ததும், சந்தேகத்திற்கு
அப்பாற்பட்டவளாகத் தன்னை நிரூபிக்க நெருப்பிற்குள் புகுந்து வர வேண்டும்
என்ற கட்டாயப்படுத்தியதும், நெருப்பிற்குள் புகுந்து உயிருடன் மீண்டாளே –
அதே போல, நீயும் நெருப்பிற்குள் புகுந்தாலும் காயமின்றி வெளிவரவேண்டும் –
என்ற விதி எப்படி நியாயமுள்ளதாக இருக்கும். இது காட்டுமிராண்டித்தனம்
இல்லையா?

பெய்யென்றால் பெய்யும் மழை?

மழை பெய்வது இயற்கையின் செயல்பாடுகளுக்குள் இயங்கும் நிகழ்வு. அதை எப்படி
பெண்களின் நேர்மையின் பரிசோதனைக் களமாக மாற்ற இயலும்.?

ஆகையால் தான் கற்பு என்ற காட்டுமிராண்டித்தனம் என்று கூறினார். உடனே அதை
‘உடலுறவிற்கான அனுமதி’ என எடுத்துக் கொள்ளும் மனநிலை எவ்வளவு
கீழ்த்தரமானது?

ஒரு பெண்ணின் நேர்மையை சந்தேகிக்க எவருக்கும் உரிமையில்லை என
வற்புறுத்தும் விதமாகத் தான் இத்தகைய ‘கற்புக் கோட்பாடுகளை’ உடைப்பில்
போடுங்கள் என்றார். நேர்மையற்ற உறவுமுறைகளில் ஈடுபடுங்கள் என்று
கூறவில்லை.

செல்வன்,

உங்களுடைய தனிப்பட்ட கருத்துகளைப் பற்றி எனக்கு எந்தவித
ஆட்சேபணையுமில்லை. அதைக் குறித்து, ‘வக்கிரம்’ என எழுதவில்லை. பொது
வாழ்க்கையில் ஈடுபட்டு, மறைந்து போன ஒருவரைப் பற்றிய உங்கள் கருத்துகளை
மட்டும் தான் விமர்சித்தேன். அதிலும், ‘பெரியாரைப் பற்றிய செல்வனின்
புரிதல்கள் இவ்வளவு தான்’ என்ற அளவுடன் அதை நிறுத்திக் கொண்டிருந்தால்
அதைப் பற்றியும் எனக்கு எந்த வித அக்கறையுமில்லை. பெரியாரைப் புரிந்து
கொள்ளாமல் பேசுகிறார் என்று விட்டுவிடலாம்.

ஆனால், பெரியார் இப்படித்தான் சொன்னார். அவருடைய தத்துவங்கள் இத்தகையது
தான் என வியாக்கியானம் செய்யும் பொழுது, அதை மறுத்துக் கொண்டே
இருப்பதும், அப்படி வியாக்கியானம் செய்யும் மனநிலையைக் குறித்த எனது
அபிப்பிராயங்களையும் தொடர்ந்து வெளியிடுவதுவும் தவறல்ல. அனைவருக்கும்
பொதுவான ஒரு தத்துவத்தைக் குறித்து ஒரு கருத்தை வெளியிடும் பொழுது,
அவ்வாறு செய்பவர்களின் வினைகளையும் சேர்த்தே விமர்சித்து மறு வினை வரும்
என்பதையும் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

மேலும், ஒரு சக பதிவாளர் எழுதியதை மாற்றிச் சொல்லிவிட்டு – தவறாக
குறிப்பிட்டுவிட்டு, அது குறித்து எந்த வித வருத்தமும் தெரிவிக்காமல்,
சப்பைக்கட்டு கட்டிக் கொண்டே போகின்ற செயலையும் விமர்சிக்கத் தான்
செய்வார்கள்.

என் பதிவுகள் அனைத்தையும் மீண்டும் வாசித்துப் பாருங்கள் – நீங்கள்,
நண்பன் குறித்து, பெரியார் குறித்து நீங்கள் சொன்ன கருத்துகளை மட்டும்
தான் விமர்சித்து எழுதிக் கொண்டிருக்கிறேனே தவிர, ‘உங்கள் சுயபுத்தியில்
உதித்த கருத்துகளை’ குறித்து ஒரு வரி கூட நான் விமர்சிக்கவில்லை.

அது குறித்து, விமர்சித்து, பின்னர், தூங்குகிறவனை எழுப்பலாம்,
தூங்குவதாக நடிப்பவனை எழுப்ப முடியாது என நாசூக்காக விலகிக் கொண்ட
நண்பர்களைப் போலவே, நானும் அது குறித்து எதுவும் எழுதவில்லை.

ஆகையால், நண்பன் சொன்னவற்றைத் திரித்து அறியாமையில் எழுதியதாகவும்,
பெரியார் கூறியவற்றை உங்கள் மனம் போனபடிக்கு வியாக்கியானம் செய்து
கொண்டிருப்பதையும் நிறுத்திக் கொள்ளுங்கள். அதை விடுத்து, உங்களுடன்
வாதம் செய்யப் போவதில்லை என ஓட முயற்சிப்பது செய்த தவறை ஒப்புக் கொள்ள
மனமற்ற மனநிலையைத் தான் படம் பிடித்துக் காட்டுகிறதே தவிர, நேர்மையான
விவாத வாதியாக அல்ல.

சக பதிவர்களின் வார்த்தைகளை ஒரு போதும் திரித்துக் கொண்டிருக்காதீர்கள்.
அதை ஏற்கிறீர்களா, மறுக்கிறீர்களா என்ற அளவுடன், உங்கள் கருத்துகளை
நிறுத்திக் கொள்ளுங்கள். அதுவே நேர்மையான விவாதத்திற்கு வழி செய்யும்.

மற்ற பிற உங்கள் புரிதல்கள் குறித்தான பதிலையும் எழுதி விடுகிறேன்.
நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும். ஏனென்றால், அவற்றை நீங்கள்
என் எழுத்துகளுக்கான வினைகள் என்று வைத்து விட்ட பின்பு, அதைக் குறித்து
எதுவும் சொல்லாமல் போவதற்கில்லை.

நண்பன்

unread,
Sep 28, 2007, 6:56:03 PM9/28/07
to பண்புடன்
இதுவும் நீளமான பதிவு தான்....

சட்ட ரீதியாக சாதிகளை அகற்றி விட முடியுமா? முடியாது. உச்ச
நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை இறுதியாக இணைத்திருக்கிறேன். கலப்புத்
திருமணங்கள் சாதியத்தை ஒழித்து விடும் என்று நினைப்பது எத்தனை தவறானது
என்று.

படியுங்கள்.

அதற்கு முன்,

// ஜாதியத்துக்கு முன்பே தோன்றியது களவொழுக்கம்.ஏதாவது சந்தேகம் உண்டா?
இருக்காது என நம்புகிறேன். களவொழுக்கத்துக்கு பிறகு தோன்றிய ஜாதியம்/மதம்
களவொழுக்கத்தை தடை செய்துவிட்டது.Sept 27, 10: 49 pm //

களவொழுக்கம் என சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதை முதலில் என்ன என
புரிந்து கொள்ளுங்கள். களவொழுக்கம் என சங்கப் புலவர்கள் குறிப்பிட்டது –
ஒருவரை ஒருவர் விரும்பும் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் வாழ்க்கையில் இணைவதாக
உறுதி ஏற்றுக் கொள்வது. அந்த உறுதியை உலகிற்கு அறிவித்து, தம்பதியராக
வாழும் முன்னரே, தனிமையில் சந்தித்துக் கொள்வதும் முறையாக இருந்தது.
இவ்வாறு உறவு கொண்டவர்கள் ஏமாற்றி விட்டு பிரிந்ததாக எந்த குறிப்பும்
சங்க இலக்கியத்தில் இருந்தது இல்லை. எந்தக் கவிதையும் தன்னை ஏமாற்றிச்
சென்றவனைக் குறித்து புலம்பிப் பாடப்படவில்லை. காரணம் – அவர்கள் திருமண
பந்தத்தில் ஈடுபடும் விருப்பத்தை அறிவித்ததும் அதை ஏற்றுக் கொள்ளும்
மனப்பக்குவம் அந்தச் சமுதாயத்திற்கு இருந்தது. அங்கு, சாதிய
ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் இருந்தது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அந்தக்
காலகட்டத்திலும் இருக்கவே செய்தது. அவ்வாறான பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை
சமன் செய்யும் பொருட்டு, தலைவன் பொருள் ஈட்ட செல்வதும், தனிமையில்
அல்லலுறுவதுமாக இருக்கும் பாடல்கள் உண்டு.

இவ்வாறு விருப்பத்தைத் தெரிவிக்கும் பொழுது, அதை ஏற்றுக் கொள்வதும்,
மறுப்பதுவும் கூட அவர்கள் விருப்பமாக மட்டுமே இருந்தது. அவ்வாறு
மறுத்தாலும் தொடர்ந்து வலியுறுத்தி ஒரு ஆண் தன் காதலை ஏற்க வைக்க முனைந்த
கதைகளும் இலக்கியத்தில் உண்டு. (பெண்கள் அவ்வாறு செய்ததற்கான குறிப்புகள்
இல்லை என்றே நினைக்கிறேன்) அதற்குப் பெயர் மடலேறுதல். அதன் பின்னும்,
அவள் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ளாவிடில், அவன் தன் உயிரை மாய்த்துக்
கொள்வான். இத்தகைய சூழலில், ஊரே கூடி பேசி அவனது காதல் நிறைவேற தூது
போகின்ற கதையும் உண்டு. அந்தக் காலத்தில் இந்த களவொழுக்கம் ஏற்றுக்
கொள்ளப்பட்டதற்கான காரணம் – அன்றைய சமூகத்தில் சாதிய கூறுகள்
இல்லாதிருந்ததே. அத்தகைய சமூகம், பின்னர் அந்நிய ஆர்ய சமூக வரத்தால்,
சாதிய கூறுகளை ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்டது.

அதுவரையிலும் ஒரே இனமாக வாழ்ந்ததினால், களவொழுக்கம் எளிமையானதாக
இருந்தது. சாதியக் கூறுகளை ஏற்றுக் கொண்ட சமூகத்தால், முன் போல் திறந்த
மனதுடன் களவொழுக்கத்தை ஏற்க இயலவில்லை. ஆகையால், அது களவொழுக்கத்தை
முற்றிலுமாக அழித்தொழித்தது. அது தடை செய்யப்படவில்லை – மாறாக அது அறவே
ஒழிக்கப்பட்டது. சாதிய எல்லைகளை மீறி காதல் செய்ய முனைந்தவர்கள்,
எவ்வகையிலும் வாழ்க்கையில் இணைய முடியாமலே போய்விட்டது.

அதன் பின்னர் அது திருட்டுத் தனமாக எங்குமே வாழ்ந்திருக்கவில்லை.
விடுதலைப் போராட்டக் காலத்தில் நிகழ்ந்த சமூக மாற்றங்கள், அதன் விளைவாக
எழுந்த சட்ட திருத்தங்கள், சாதியக் கூறுகளை மறுத்து, கிளர்ந்தெழுந்த
சீர்திருத்தவாதிகளின் தொடர் பிரச்சாரங்கள் ஆகியவற்றால், கலப்புத்
திருமணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது – சுதந்திர இந்தியாவின்
அரசியலமைப்புச் சட்டத்தின் படி. இங்கும் அது மீண்டும் பழைய காலத்திய
களவொழுக்கமாக உயிர்த்தெழவில்லை. பெற்றவர்கள் ஏற்றுக் கொள்ளும் கலப்புத்
திருமணங்களாக அது இயங்கவில்லை. மாறாக, அந்த சமுதாயமே ஒதுக்கி வைக்கும்
திருமணங்களாகத் தான் அவை நிகழ்ந்து கொண்டிருந்தன. இன்று ஓரளவிற்கேனும்
மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்றால், தொடர்ந்து செய்யப்பட்ட
பிரச்சாரங்கள், அரசு ஆதரவு, இட ஒதுக்கீட்டில் கிடைக்கும் நன்மைகள், என பல
காரணிகளால் கட்டமைக்கப்பட்ட திருமணங்களாக நிகழ்கின்றனவே தவிர, எந்தவித
நிர்ப்பந்தங்களும் இன்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட களவொழுக்கமாக இல்லை. அது
மீட்டெடுக்கப்பட முடியாத மரணத்தை ஏற்றுக் கொண்டது. மாறாக மனு தர்மத்தின்
வழியான தர்மங்கள் – மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரான மனு தர்மத்தின்
வழியாக தம்பதியாராகும் முறைகள் வரையறுக்கப்பட்டன. திருமண முறைகள்
ஏற்படுத்தப்பட்டது. இன்றளவிலும் இந்த முறைகளின் படி செய்யப்பட்ட
திருமணங்களே அரசியல் அமைப்பின் சட்ட வரைவுகளின் படி ஏற்றுக்
கொள்ளப்படுகிறது. இந்த சட்டத்தின் படி, சில மரபுகளை கைவிட்டாலும் அதை
திருமணமாக ஏற்றுக் கொள்ளாது இந்திய அரசியலமைப்பு சட்டம். இதைப் பற்றி
விளங்கிக் கொள்ள

Act Name : THE HINDU MARRIAGE ACT, 1955
Act title : ACT NO. 25 OF 1955 1*

Enactment date : [18th May, 1955.] என்ற இந்திய அரசியலமைப்பு
சட்டத்தை வாசிக்க வேண்டும். குறிப்பான தகவல்கள் வேண்டுமென்றால், அது
குறித்து எழுதுங்கள்.

// தடை செய்தபோதும் களவொழுக்கம் திருட்டுதனமாக தொடர்ந்தே
வந்துள்ளது.ஆனால் தடை செய்யப்பட்டதாலும் ஜாதி/மதரீதியான ஒழுக்க
கோட்பாடுகள் மகக்ளிடம் பெரிதும் பரவியதாலும் களவொழுக்கத்தால் ஜாதி/
மதத்தின் இருப்பை பெரிதாக இதுவரை அசைக்க முடியவில்லை. ஜாதி/மதம் இன்னமும்
வலுவாகவே இருக்கிறது.//

களவொழுக்கம் என்று ஒன்று இல்லாமலே போய்விட்ட பொழுது, அது சாதியக் கூறுகளை
எங்ஙனம் அசைப்பது.? ஒரே இனத்தினுள் நிகழும் காதல் புகழப்பட்டது – ஏற்றுக்
கொள்ளப்பட்டது. வேறு இனங்களுக்கிடையிலான உறவுகள் நிர்த்தாட்சண்யமாக
மறுக்கப்பட்டது. அழிக்கப்பட்டது. மேலும், சாதியக் கூறுகள்
வாழ்விடங்களையும் பிரிக்கத் தொடங்கியது. சாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கேற்ப
மக்கள் ஒரே ஊரிலே கூட, தனித்தனி குழுக்களாகப் பிரிந்து
வாழத்தொடங்கினார்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், இளம் பெண்கள் மாற்று
சமூகத்தின் ஆண்களுடன் கலந்து விடக் கூடாதே என்ற அச்சத்தில்,
இல்லத்தினுள்ளே அடைக்கப்பட்டார்கள். திருமணம் ஆகி, கணவனுடன் வெளி உலகில்
புழங்க அனுமதிக்கப்பட்ட நேரங்களில் கூட, அவள் பிற ஆணின் மீது விருப்பம்
கொண்டு விட கூடாது என்ற நோக்கில், அவளுக்குக் கற்பின் மாண்பாகக்
கட்டுக்கதைகள் போதிக்கப்பட்டன. அதுவே வாழ்வின் நெறி என
அறிவுறுத்தப்பட்டனர். அறியாமையினுள் ஆணின் மேலாதிக்கத்தை ஏற்றுக்
கொள்ளும் பொருட்டு, அவர்களின் பொதுப்புத்தியில் அடிமைத் தனம் கற்பு என்ற
காட்டுமிராண்டித்தனத்துடன் புகுத்தப்பட்டது.

//அந்த தடையை அகற்றி களவொழுக்கத்தை சட்ட ரீதியில் முறைப்படுத்தினால் ஜாதி/


மதத்தின் இருப்பு ஆட்டம் காணும்.அதாவது ஜாதியமும்/மதமும் மறுக்கும்
கலப்பு திருமணம், திருமணம் மறுத்த டேட்டிங்/சேர்ந்து வாழுதல் உறவுகள்,

விவாகரத்து,பாலியல் சுதந்திரம் போன்றவற்றை சட்டபூர்வமாக்கி/சமூகரீதியில்
அதை ஏற்கும் பக்குவத்தை மக்களிடம் கொண்டு போனால் வருங்காலத்தில் ஜாதியும்
இருக்காது,மதமும் இருக்காது. இதுதான் நான் சொல்ல வந்த முழுகருத்து. //

சட்ட ரீதியில் இன்று முறைப்படுத்தி விட்டார்கள். ஆனால், களவொழுக்கம் –
the spontaneous outburst of love and its acceptance – மீண்டும் வரவே
இல்லை. சாதியக் கூறுகளை வலுப்படுத்தும் விதமாகத் தான் இந்தக் கலப்பு
திருமணங்கள் அமைந்திருக்கின்றன. இந்தக் கலப்புத் திருமணங்கள் வழியாக
பிறக்கும் குழந்தைகள் தந்தையின் சாதியையும், மதத்தையும் ஏற்கும். தாயின்
சாதியையும், மதத்தையும் ஏற்காது. இவ்வாறிருக்கையில், கலப்புத்
திருமணங்கள் சாதியத்தை ஒழித்து விடும் என்பது தவறான கூற்று.
வேண்டுமானால், சாதியங்களைக் கடந்த, அந்த தம்பதியரின் மனநிலையில்,
அணுகுமுறையில் மாற்றங்களைக் கொண்டு வர இயலும். அதாவது தனி மனிதராக,
சாதியக் கூறுகளை கடந்தவர்களை அது ஏற்றுக் கொள்ள உதவலாம். அதுவும்
நிச்சயம் என கூறிவிட முடியாது. எனக்குத் தெரிந்த நிறைய கலப்புத்
திருமணங்கள், பின்னர் அந்த சுவடற்று, ஆணின் மதத்தை ஏற்று பெண் நடந்து
கொள்ளும் வழக்கத்தை மட்டுமே கொண்டிருக்கின்றனர். இந்தக் கலப்புத் திருமண
தம்பதியர் தங்கள் குழந்தைகளை சாதியற்றவர்கள், மதமற்றவர்கள் என
அறிவித்துக் கொள்ள முடியாது. தந்தையின் சாதி, மதங்களை ஏற்றே வாழ
வேண்டும். ஆக சட்டங்களினால் சாதியத்தை ஒழித்து விட முடியும் என்ற ‘கனவு
உலகம்’ ஒரு போதும் நிறைவேற இயலாது. தனிப்பட்ட வாழ்க்கை அணுகுமுறையில்,
ஒரு சிலரிடையே அது மாற்றங்களைக் கொண்டு வரும். அத்தனை தானே தவிர, நடைமுறை
வாழ்க்கையில் இருந்தும், சமூக அமைப்பில் இருந்தும் சாதியத்தை ஒழித்துவிட
சட்டங்களாலும், இந்தக் கலப்புத் திருமணங்களாலும் ஒரு போதும் இயலாது.

(ஒரே பதிலில் இத்தனையையும் விளக்கினால் கோனார் நோட்ஸ் தான்
வருங்காலத்தில் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் போட வேண்டும்.)

என் மனதில் இன்னது தான் நினைக்கிறேன் என்று கோனார் நோட்ஸ் போட்டு
எழுதினால் தான் அதை மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியும் என்ற அளவிலே
உங்கள் எழுத்தை வைத்துக் கொண்டால் என்ன செய்வது?

சட்ட ரீதியில் முறைப்படுத்தினால் எல்லாம் சரியாகி விடும் என்று
நினைத்துத் தான் இவ்வாறு எழுதினீர்கள் என்று சொல்லப் போய் இந்த
விளக்கத்தைத் தர முடிந்தது.

கீழே உள்ள தி ஹிண்டு.காம் செய்தியைப் பாருங்கள்:
http://www.hindu.com/2005/06/05/stories/2005060503500300.htm

Sunday, June 5, 2005.
Order on caste of children opposed Government Order on caste of
children opposed

Staff Reporter

Action committee demands withdrawal of order

KANNUR: Children of Dalits, Adivasis and those belonging to backward
communities will be the victims of the new order of the State
Government cancelling the earlier order that children born of inter-
caste marriages will be treated as belonging to Scheduled Castes (SC)
or Scheduled Tribes (ST) communities if either of the parents belongs
to that community, according to activists under the banner of the
Reservation Rights Action Committee.

Rashtriya Mahasabha leader M. Geethanandan, who is campaigning against
the new order, issued by the Scheduled Castes/Scheduled Tribes
Development Department, told a press conference here on Saturday that
the order dated March 22, 2005, would deny children of SC/ST women or
unwed mothers of the reservation rights they had been entitled to
under the existing rules. The latest order cancels the earlier order,
which had been treated as the principle for determining the caste
status of children born to inter-caste parents.

*****The latest order had been issued in the wake of the Supreme Court
judgment in another case that a person would inherit his/her caste
from his/her father, not his/her mother, even in the case of an inter-
caste marriage.*****

Mr. Geethanandan said the Supreme Court judgment clearly stated that
the father's caste would be counted only in the absence of any
statutory law in this regard. The State had issued various statutory
Government orders since 1961 that had given concession and reservation
to children of inter-caste couples if either of the parents belonged
to SC/ST, he added. Mr. Geethanandan said that unwed Adivasi mothers,
and couples of inter-caste marriage from Dalit/Adivasi and Dalit
Christian communities would be the victims of the latest order. The
new order exposed the State Government's anti-reservation attitude, he
said. It was an affront to democracy and system of reservation as
affirmative action, he said. The action committee will stage a one-day
mass dharna in front of the Secretariat on Wednesday demanding the
withdrawal of the latest Government order and restoration of the 1977
order that allowed all educational concessions given to children of SC/
ST if either of the parent belonged to one of these communities. The
committee will also chalk out plans to intensify the agitation in its
next stage, he said.

The action committee activists Sasikumar Kizhakkedam, A. Rajappan and
V. Rajan Iritty were also present at the press conference.

விவாதிப்பதற்கு சில வரைமுறைகள் இருக்கின்றன. தான் கூறும் தகவல்கள்
சரியானவையா என கொஞ்சம் 'home work' செய்ய வேண்டும். இல்லாமல், தனக்குத்
தோன்றியதை எல்லாம் எடுத்து வைப்பதுவும், அதை வாதம் என்பதுவும் மிகவும்
தவறான அணுகுமுறை. அல்லது இந்த சிக்கல்களில் எல்லாம் மாட்டிக்காமல்
இருக்கணும்னா, சொந்த சரக்கை வைப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பெரியாரைத் தான் தன் விருப்பம் போல் வளைத்தார் என்றால் - அரசியல்
சட்டத்தையே வளைத்து விட்டார் தன் விருப்பம் போல.

என்ன செய்வது - கோபம் மட்டும் வந்தால் போதாது - அப்படி கோபப்படுவதற்கான
ஒரு நியாயமும் இருக்க வேண்டும்.

மேலும் அரசியல் சட்டம் பெண்களுக்கான 'பாலியியல்' உரிமைகளை வழங்கி
இருப்பதாக வேறு கூறி இருக்கிறார். ஆனால், அனைத்து சட்டங்களையும் தேடி
விட்டேன் - என்ன மாதிரியான உரிமைகள் இருக்கின்றன என பார்த்து விடலாம்
என்று.

அடுத்த பகுதியா வச்சுக்கலாம்.....

அன்பு குயில்

unread,
Sep 29, 2007, 12:03:17 AM9/29/07
to panb...@googlegroups.com

//மேலும் அரசியல் சட்டம் பெண்களுக்கான 'பாலியியல்' உரிமைகளை வழங்கி

இருப்பதாக வேறு கூறி இருக்கிறார். ஆனால், அனைத்து சட்டங்களையும் தேடி
விட்டேன் - என்ன மாதிரியான உரிமைகள் இருக்கின்றன என பார்த்து விடலாம்
என்று.
//
 
அட நீங்க வேற எங்க முன்னாடி கீ போர்டு இருந்தா போதுமே
 
//தோன்றியதை எல்லாம் எடுத்து வைப்பதுவும், அதை வாதம் என்பதுவும் மிகவும்
//
 
இம்மாதிரி எல்லாம் சொல்ல கூடாது
நாங்கள் பத்து பேரை ரெபர் செய்தால் அதில் உண்மை இருக்குதான்னு பார்பவர்கள் ரொம்ப குறைவு
உங்களை மாதிரி யாராவது கேட்டா
அவர் அப்படித்தான் சொன்னார்
 
நான் படிச்சு இருக்கேன்னு சொல்லிட்டா போச்சு
 

 
On 9/29/07, நண்பன் <nan...@gmail.com> wrote:
இதுவும் நீளமான பதிவு தான்....

சட்ட ரீதியாக சாதிகளை அகற்றி விட முடியுமா? முடியாது. உச்ச
நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை இறுதியாக இணைத்திருக்கிறேன். கலப்புத்
திருமணங்கள் சாதியத்தை ஒழித்து விடும் என்று நினைப்பது எத்தனை தவறானது
என்று.

படியுங்கள்.

அதற்கு முன்,

// ஜாதியத்துக்கு முன்பே தோன்றியது களவொழுக்கம்.ஏதாவது சந்தேகம் உண்டா?
இருக்காது என நம்புகிறேன். களவொழுக்கத்துக்கு பிறகு தோன்றிய ஜாதியம்/மதம்
களவொழுக்கத்தை தடை செய்துவிட்டது.Sept 27, 10: 49 pm //

களவொழுக்கம் என சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதை முதலில் என்ன என
புரிந்து கொள்ளுங்கள். களவொழுக்கம் என சங்கப் புலவர்கள் குறிப்பிட்டது -

ஒருவரை ஒருவர் விரும்பும் ஒரு ஆணும், ஒரு பெண்ணும்  வாழ்க்கையில் இணைவதாக
உறுதி ஏற்றுக் கொள்வது. அந்த உறுதியை உலகிற்கு அறிவித்து, தம்பதியராக
வாழும் முன்னரே, தனிமையில் சந்தித்துக் கொள்வதும் முறையாக இருந்தது.
இவ்வாறு உறவு கொண்டவர்கள் ஏமாற்றி விட்டு பிரிந்ததாக எந்த குறிப்பும்
சங்க இலக்கியத்தில் இருந்தது இல்லை. எந்தக் கவிதையும் தன்னை ஏமாற்றிச்
சென்றவனைக் குறித்து புலம்பிப் பாடப்படவில்லை. காரணம் - அவர்கள் திருமண

பந்தத்தில் ஈடுபடும் விருப்பத்தை அறிவித்ததும் அதை ஏற்றுக் கொள்ளும்
மனப்பக்குவம் அந்தச் சமுதாயத்திற்கு இருந்தது. அங்கு, சாதிய
ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் இருந்தது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அந்தக்
காலகட்டத்திலும் இருக்கவே செய்தது. அவ்வாறான பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை
சமன் செய்யும் பொருட்டு, தலைவன் பொருள் ஈட்ட செல்வதும், தனிமையில்
அல்லலுறுவதுமாக இருக்கும் பாடல்கள் உண்டு.

இவ்வாறு விருப்பத்தைத் தெரிவிக்கும் பொழுது, அதை ஏற்றுக் கொள்வதும்,
மறுப்பதுவும் கூட அவர்கள் விருப்பமாக மட்டுமே இருந்தது. அவ்வாறு
மறுத்தாலும் தொடர்ந்து வலியுறுத்தி ஒரு ஆண் தன் காதலை ஏற்க வைக்க முனைந்த
கதைகளும் இலக்கியத்தில் உண்டு. (பெண்கள் அவ்வாறு செய்ததற்கான குறிப்புகள்
இல்லை என்றே நினைக்கிறேன்) அதற்குப் பெயர் மடலேறுதல். அதன் பின்னும்,
அவள் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ளாவிடில், அவன் தன் உயிரை மாய்த்துக்
கொள்வான். இத்தகைய சூழலில், ஊரே கூடி பேசி அவனது காதல் நிறைவேற தூது
போகின்ற கதையும் உண்டு. அந்தக் காலத்தில் இந்த களவொழுக்கம் ஏற்றுக்
கொள்ளப்பட்டதற்கான காரணம் - அன்றைய சமூகத்தில் சாதிய கூறுகள்
இல்லாதிருந்ததே. அத்தகைய சமூகம், பின்னர் அந்நிய ஆர்ய சமூக வரத்தால்,
சாதிய கூறுகளை ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்டது.

அதுவரையிலும் ஒரே இனமாக வாழ்ந்ததினால், களவொழுக்கம் எளிமையானதாக
இருந்தது. சாதியக் கூறுகளை ஏற்றுக் கொண்ட சமூகத்தால், முன் போல் திறந்த
மனதுடன் களவொழுக்கத்தை ஏற்க இயலவில்லை. ஆகையால், அது களவொழுக்கத்தை
முற்றிலுமாக அழித்தொழித்தது. அது தடை செய்யப்படவில்லை - மாறாக அது அறவே

ஒழிக்கப்பட்டது. சாதிய எல்லைகளை மீறி காதல் செய்ய முனைந்தவர்கள்,
எவ்வகையிலும் வாழ்க்கையில் இணைய முடியாமலே போய்விட்டது.

அதன் பின்னர் அது திருட்டுத் தனமாக எங்குமே வாழ்ந்திருக்கவில்லை.
விடுதலைப் போராட்டக் காலத்தில் நிகழ்ந்த சமூக மாற்றங்கள், அதன் விளைவாக
எழுந்த சட்ட திருத்தங்கள், சாதியக் கூறுகளை மறுத்து, கிளர்ந்தெழுந்த
சீர்திருத்தவாதிகளின் தொடர் பிரச்சாரங்கள் ஆகியவற்றால், கலப்புத்
திருமணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது - சுதந்திர இந்தியாவின்

அரசியலமைப்புச் சட்டத்தின் படி. இங்கும் அது மீண்டும் பழைய காலத்திய
களவொழுக்கமாக உயிர்த்தெழவில்லை. பெற்றவர்கள் ஏற்றுக் கொள்ளும் கலப்புத்
திருமணங்களாக அது இயங்கவில்லை. மாறாக, அந்த சமுதாயமே ஒதுக்கி வைக்கும்
திருமணங்களாகத் தான் அவை நிகழ்ந்து கொண்டிருந்தன. இன்று ஓரளவிற்கேனும்
மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்றால், தொடர்ந்து செய்யப்பட்ட
பிரச்சாரங்கள், அரசு ஆதரவு, இட ஒதுக்கீட்டில் கிடைக்கும் நன்மைகள், என பல
காரணிகளால் கட்டமைக்கப்பட்ட திருமணங்களாக நிகழ்கின்றனவே தவிர, எந்தவித
நிர்ப்பந்தங்களும் இன்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட களவொழுக்கமாக இல்லை. அது
மீட்டெடுக்கப்பட முடியாத மரணத்தை ஏற்றுக் கொண்டது. மாறாக மனு தர்மத்தின்
வழியான தர்மங்கள் - மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரான மனு தர்மத்தின்

வழியாக தம்பதியாராகும் முறைகள் வரையறுக்கப்பட்டன. திருமண முறைகள்
ஏற்படுத்தப்பட்டது. இன்றளவிலும் இந்த முறைகளின் படி செய்யப்பட்ட
திருமணங்களே அரசியல் அமைப்பின் சட்ட வரைவுகளின் படி ஏற்றுக்
கொள்ளப்படுகிறது. இந்த சட்டத்தின் படி, சில மரபுகளை கைவிட்டாலும் அதை
திருமணமாக ஏற்றுக் கொள்ளாது இந்திய அரசியலமைப்பு சட்டம். இதைப் பற்றி
விளங்கிக் கொள்ள

Act Name :    THE HINDU MARRIAGE ACT, 1955
Act title :    ACT NO. 25 OF 1955 1*

Enactment date :    [18th May, 1955.] என்ற இந்திய அரசியலமைப்பு
சட்டத்தை வாசிக்க வேண்டும். குறிப்பான தகவல்கள் வேண்டுமென்றால், அது
குறித்து எழுதுங்கள்.

// தடை செய்தபோதும் களவொழுக்கம் திருட்டுதனமாக தொடர்ந்தே
வந்துள்ளது.ஆனால் தடை செய்யப்பட்டதாலும் ஜாதி/மதரீதியான ஒழுக்க
கோட்பாடுகள் மகக்ளிடம் பெரிதும் பரவியதாலும் களவொழுக்கத்தால் ஜாதி/
மதத்தின் இருப்பை பெரிதாக இதுவரை அசைக்க முடியவில்லை. ஜாதி/மதம் இன்னமும்
வலுவாகவே இருக்கிறது.//

களவொழுக்கம் என்று ஒன்று இல்லாமலே போய்விட்ட பொழுது, அது சாதியக் கூறுகளை
எங்ஙனம் அசைப்பது.? ஒரே இனத்தினுள் நிகழும் காதல் புகழப்பட்டது - ஏற்றுக்

கொள்ளப்பட்டது. வேறு இனங்களுக்கிடையிலான உறவுகள் நிர்த்தாட்சண்யமாக
மறுக்கப்பட்டது. அழிக்கப்பட்டது. மேலும், சாதியக் கூறுகள்
வாழ்விடங்களையும் பிரிக்கத் தொடங்கியது. சாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கேற்ப
மக்கள் ஒரே ஊரிலே கூட, தனித்தனி குழுக்களாகப் பிரிந்து
வாழத்தொடங்கினார்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், இளம் பெண்கள் மாற்று
சமூகத்தின் ஆண்களுடன் கலந்து விடக் கூடாதே என்ற அச்சத்தில்,
இல்லத்தினுள்ளே அடைக்கப்பட்டார்கள். திருமணம் ஆகி, கணவனுடன் வெளி உலகில்
புழங்க அனுமதிக்கப்பட்ட நேரங்களில் கூட, அவள் பிற ஆணின் மீது விருப்பம்
கொண்டு விட கூடாது என்ற நோக்கில், அவளுக்குக் கற்பின் மாண்பாகக்
கட்டுக்கதைகள் போதிக்கப்பட்டன. அதுவே வாழ்வின் நெறி என
அறிவுறுத்தப்பட்டனர். அறியாமையினுள் ஆணின் மேலாதிக்கத்தை ஏற்றுக்
கொள்ளும் பொருட்டு, அவர்களின் பொதுப்புத்தியில் அடிமைத் தனம் கற்பு என்ற
காட்டுமிராண்டித்தனத்துடன் புகுத்தப்பட்டது.

//அந்த தடையை அகற்றி களவொழுக்கத்தை சட்ட ரீதியில் முறைப்படுத்தினால் ஜாதி/
மதத்தின் இருப்பு ஆட்டம் காணும்.அதாவது ஜாதியமும்/மதமும் மறுக்கும்
கலப்பு திருமணம், திருமணம் மறுத்த டேட்டிங்/சேர்ந்து வாழுதல் உறவுகள்,
விவாகரத்து,பாலியல் சுதந்திரம் போன்றவற்றை சட்டபூர்வமாக்கி/சமூகரீதியில்
அதை ஏற்கும் பக்குவத்தை மக்களிடம் கொண்டு போனால் வருங்காலத்தில் ஜாதியும்
இருக்காது,மதமும் இருக்காது. இதுதான் நான் சொல்ல வந்த முழுகருத்து. //

சட்ட ரீதியில் இன்று முறைப்படுத்தி விட்டார்கள். ஆனால், களவொழுக்கம் -
the spontaneous outburst of love and its acceptance - மீண்டும் வரவே

இப்னு ஹம்துன்

unread,
Sep 29, 2007, 4:19:06 PM9/29/07
to panb...@googlegroups.com
பெரியார் என்ன சொன்னார், ஏன் திரிப்புகள் என்றெல்லாம் சர்ச்சை செய்வதை விட..
 
பெண்ணியம், ஆணியம் என்கிற பக்கச்சார்பு கருத்தாக்கங்களை ஒதுக்கிவிட்டு
நியாயம் எது என்பதை ஆய்வதே சரி ஆகும்.
அதாவது.... "நீ மட்டும்  தவறு செய்யலாமா? (அதனால்) நானும் செய்வேன்" என்று போவதை விட " நான் தவறு செய்யக்கூடாது என்பதுபோல நீயும் தவறு செய்யக்கூடாது" என்று போவதே நேர்மறையாகவும் சமூகப்பயனுடையதாகவும் இருக்கும்.

 

www.ezuthovian.blogspot.com

"There is no such thing as failure. There are only results".

நண்பன்

unread,
Sep 29, 2007, 5:17:16 PM9/29/07
to பண்புடன்

On Sep 29, 8:03 am, "அன்பு குயில்" <seewtypie2...@gmail.com> wrote:
>
> அட நீங்க வேற எங்க முன்னாடி கீ போர்டு இருந்தா போதுமே
>

கொஞ்சம் கஷ்டம். நானும் அப்படித்தான் எளிதாகத் தேடிக் கண்டுபிடித்து
விடலாம் என்று நினைத்தேன். ஆனால், அரசியலமைப்பு சட்டத்தை அவ்வளவு
சீக்கிரம் கண்டுபிடிக்க இயலவில்லை.

நீங்கள் வேண்டுமானால், Constitution of India தளத்தினுள் நுழைந்து தேடிப்
பாருங்கள். டன் கணக்கில் பக்கங்கள் வந்து கொண்டிருக்கின்றன. வக்கீல்களின்
தொழில் சற்று சிரமமானது தான்.

> //தோன்றியதை எல்லாம் எடுத்து வைப்பதுவும், அதை வாதம் என்பதுவும் மிகவும்
> //
>
> இம்மாதிரி எல்லாம் சொல்ல கூடாது
> நாங்கள் பத்து பேரை ரெபர் செய்தால் அதில் உண்மை இருக்குதான்னு பார்பவர்கள்
> ரொம்ப குறைவு
> உங்களை மாதிரி யாராவது கேட்டா
> அவர் அப்படித்தான் சொன்னார்
>
> நான் படிச்சு இருக்கேன்னு சொல்லிட்டா போச்சு
>

ஹாஹா..ஹா...

நன்றி. விவாதம் கொஞ்சமேனும் நடைமுறையை ஒத்திருக்கிறதா என்பதில்
எப்பொழுதும் ஆர்வம் உள்ளவன் என்பதினால், எழுதும் முன் என்ன எழுதுகிறோம் -
அதற்கு ஆதாரமிருக்கிறதா என ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

நீங்கள் சொன்ன மாதிரி சொல்லிக் கொண்டே போய்க் கொண்டிருக்க வேண்டியது
தான்.... அது தான் எளிது. யாருக்கும் எதையும் நிரூபித்துக் கொண்டிருக்க
வேண்டிய அவசியம் இல்லை தான்...

நன்றி.

நண்பன்

unread,
Sep 29, 2007, 6:32:53 PM9/29/07
to பண்புடன்
ஒருவருக்கொருவர் நேர்மையுடன் இருப்பதே வாழ்க்கையை நம்பிக்கையுடன்
எதிர்கொள்வதற்கு சரியான வழி என்பது தான் ஒரு சார்பினரின் வாதமே.

ஆனால், தவறு செய்வதற்கு எங்களுக்கு உரிமை வேண்டும் என்று குரல் கொடுப்பதே
பெண்ணியம் என நினைத்துக் கொண்டு வாதாடுவது இன்னொரு பக்கம்.

அதனால், நானும் தப்பு செய்யவில்லை - நீயும் தப்பு செய்யாதே என்ற
நல்லெண்ணத்தை அவர்கள் சட்டை செய்யப் போவதில்லை. அதனால், அவர்கள் வழியிலே
போய் விவாதம் செய்வதே சரியான வழியாக இருக்கும்.

இதற்கிடையில், தங்கள் செயலை நியாயப்படுத்த அரசியலமைப்பு சட்டம் முதல்
பெரியார் வரை அனைவரையும் எடுத்து வைக்கும் பொழுது, அதில் உள்ள தவறைச்
சுட்டிக் காட்டி விளக்கினால் தான், இந்த வாதம் சரியான திசையில்
செல்லும்.

உதாரணமாக, அரசியலமைப்புச் சட்டத்தின் படி, உறவு வைத்துக் கொள்ள 18 வயது
நிரம்பியவர்களுக்கு அரசியல் சட்டம் அனுமதி தருகிறது என்றொரு வாதத்தை
வைத்திருக்கிறார்கள்.

சட்டத்தின் படி, இந்திய பெண்களின் திருமண வயது - 18 பெண்ணிற்கு. ஆணிற்கு
வயது 21. இந்த வரையறை படி திருமணம் செய்து கொண்ட பின்னர், உறவிற்கு
ஒப்புதல் பெற வேண்டும் பெண்ணிடமிருந்து. (இருவரிடமும் தான். ) திருமண
வயதை 18 என்று சொல்லி விட்டு, தாம்பத்ய உறவிற்கு ஒப்புதல் வயது வேறொன்றாக
வைத்தால், அது முட்டாள் தனமாக இருக்கும். ஆக, ஒரு பெண் தாம்பத்ய உறவிற்கு
ஒப்புதல் தரும் வயது - age of consent - 18 என்று வைத்திருக்கிறார்கள்.
இது சட்டத்தின் படி அடிப்படை நியாயம்.

இந்த வயது - தனிநபர் சட்டங்களுக்குப் பொருந்தாது. உதாரணம் Muslim
Personal Law. இங்கு 18 வயதிற்கு கீழ்ப்பட்ட பெண்களும் உறவிற்கு ஒப்புதல்
கொடுக்கலாம். ஆனால், இங்கும் சரி, மற்ற மதங்களின் சட்டத்தின் படியும்
குறைந்த பட்ச வயதும் ஒன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த முறை
திருமணமென்றாலும், அந்த வயது 15. இந்த வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள்
ஒப்புதல் கொடுத்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அந்தப் சிறுமியிடம் -
(பெண்) உறவு கொள்வது பாலியியல் பலாத்காரத்திற்கு இணையான குற்றம். 18
வயதிற்குக் கீழ் தாம்பத்ய உறவு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் அல்லாமல்
நிகழ்ந்தால், அதை விவரிக்கும் வார்த்தைகள் - illicit intercourse.

ஆக. பெண்கள் 18 வயதிற்கு மேல் - உறவிற்கு ஒப்புதல் கொடுக்கலாம் என்பது
seems to be technically correct. ஆனால் அதே சமயம் It has never been
explicitly told anywhere that the girls aged above 18 on their own
free will, can give consent to mate any one they desire. இதைத் தான்
தேடிக் கொண்டிருக்கிறேன். எங்கே சொல்லி இருக்கிறார்கள் என்று.

திருமணத்திற்கான வயது 18 என்பதால், அதையே, சம்மதம் தெரிவிக்கும்
வயதாகவும் அறிவித்ததை, பொதுப்படையாக பயன்படுத்துகிறார்களோ என எண்ணத்
தோன்றுகிறது. யாருக்காவும், இந்த சட்டப் பிரிவு தெரிந்தால்
தெரிவிக்கலாம்.

எந்த வயதாக இருந்தாலும், சம்மதம் தெரிவிக்கும் பொழுது, அவர்கள் தெளிந்த
மனநிலையுடையவர்களாக இருக்க வேண்டும். போதையில் இருந்தால் கூட அது சம்மதம்
என ஏற்கப்படாது. இன்றைய நடைமுறை வழக்கத்தில், பல உறவுகள் நிகழ்வது -
இந்தப் போதையின் அடிப்படையில் தான் நிகழ்கிறது. இவ்வாறு நிகழ்வது -
சட்டத்தின்படி பாலியியல் பலாத்காரம்.

அதையும் மீறி, கணவன் மனைவி போல், திருமணமாகாத இளம் பெண்கள், திட்டமிட்டு,
ஓரிடத்தில் சந்தித்து உறவை நிகழ்த்திக் கொண்டிருக்கப் போவதில்லை.
அப்படியே திட்டமிட்டு நிகழ்த்தினாலும், அதை பெற்றவர்களிடத்திலோ, அல்லது
சுற்றத்தானரிடமோ சொல்லிக் கொண்டு போய், 'அனுபவித்து' விட்டு வரப்
போவதில்லை. மறைவாக, ஒளிந்து கொண்டு தான் போய்ச் செய்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால், பெற்றவர்களிடத்தில் சொல்லிக் கொண்டு, அவர்கள் அனுமதி பெற்று,
'வாழ்க்கையை' அனுபவித்து விட்டு வர, எந்தப் பெற்றவர்கள் அனுமதி
கொடுப்பார்கள்? ஆக, நேர்மையற்ற ஒரு உறவில் தான் ஈடுபட முடியும்.

நேர்மையற்ற உறவு எவ்வாறு ஒரு பெண்ணிற்கு அவள் விரும்பும் பாலியியல்
உரிமையைப் பெற்றுத் தந்து விடும்.? தான் திருமணம் செய்து கொள்ளும்
ஒருவனிடம் தானே அவள் உறவு கொள்கிறாள் என்றாலும், அதற்கும் விதிகள் உண்டு.
இந்தியாவில் அல்ல. பெண்கள் ஓரளவிற்கேனும் உரிமை பெற்று விட்டதாகக்
கருதும் நாடுகளில். அவர்கள், Living together என்ற முறையில் வாழ்ந்தாலும்
அதை பதிவு செய்ய வேண்டும். அப்பொழுது தான் they will be entitled to
certain civil benefits. இல்லையென்றால், அது முறையற்ற உறவாகத் தான்
இருக்கும். இந்தியாவில் இவ்வாறு வாழ்வதை பதிவு செய்ய இயலாது. அதனால்
தான், இது பாதுகாப்பற்ற வாழ்க்கை முறைக்கு வழி வகுக்கும். ஆக, குஷ்பு
சொன்னது போல், திருமணத்திற்கு முன் பாதுகாப்பாக உறவு வைத்துக்
கொள்ளுங்கள் என்பது ஒரு நேர்மையற்ற உறவில் தான் முடியும். அதனால் தான்,
இதை 'பெண்ணிற்கான பாலியியல் உரிமை'யைப் பெற்றுத் தந்து விடும் என்பது
ஏற்க முடியாத வாதமாக இருக்கிறது.

நேர்மையற்ற ஒரு உறவின் மூலம் உரிமைகளைப் பெற்றுவிடலாம் என
'பெண்ணியல்வாதிகள்' நினைப்பார்களேயானால், அவர்கள் 'போலி'யாகத் தான்
இருக்க வேண்டும். அப்படியானால் பெண்ணியல்வாதிகள் கோருவது தான் என்ன?

தங்கள் தேவைகளைப் பற்றிப் பேசுவதற்கான சுதந்திரம். தங்கள் உணர்வுகளை
வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம். அதன் மூலம் தங்கள் உடல் மொழியை - இந்த
உடலின், அதனுள்ளான மனதின் தேவைகள் - ஏக்கங்கள், விரகதாபங்கள், இவற்றைப்
புரிந்து கொள்ள வைக்க ஓரு வாய்ப்பு. ஆண்கள் பெண்களைப் பற்றிய புரிதல்
உடையவர்களாக இருக்க வேண்டும். பெண்களைப் பற்றிய புரிதல் இல்லாமல்,
அவர்களது உணர்வுகளையும், அதன் தேவைகளையும் அறியாதவர்களாக ஆண்கள்
இருக்கும் பட்சத்தில், அவன் கணவனாக இருந்தாலென்ன அல்லது வேறு ஒருவனாக
இருந்தாலென்ன? இத்தகைய ஆண்களிடத்தில் ஒரு பெண் கூடுவதினால் என்ன இன்பம்
கிடைத்து விடும்? அதனால், பெண் மொழி - அவளது உடலின் மொழி - அவளது மனதின்
மொழி இவற்றைப் புரிந்து கொள்பவனாக ஒரு ஆண் மாற வேண்டும். இதைப் புரிய
வைக்க அவனுக்குப் பெண்களே சொல்ல வேண்டும் - அவர்களது மொழியில் ' என் தேவை
இன்னது என்று'. மாறாக நேர்மையற்ற உறவுகளாக இருக்க முடியாது.

மேலும், இந்த உணர்வுகள் - இன்பம் என்ற உணர்வை பாலியியலுடன் இணைப்பதினால்
வருவது. ஆனால், பாலியியல் உரிமைகள் இந்த இன்பத்தை மட்டுமே குறி வைத்து
இயங்குவதில்லை. மாறாக - பாலியியல் வழியாக அவளது pregnancy, abortion,
health of reproductive system, protection from deseases, equal
opportunities in employement, equal salary for similar work, freedom
of expression to their feelings, thoughts, and emotions, exercising
freewill in choosing partners in marriage, right to privacy, right to
protect their modesty, protection from theories depicting women as
sinners etc., போன்றவை தான். இவற்றில் சிலவற்றிற்கு சட்டம் இருக்கிறது.
சிலவற்றிற்கு சட்டம் இல்லை. சிலவற்றிற்கு சமூக மனமாற்றங்கள்,
சிலவற்றிற்கு பொருளாதார உதவிகள் என பலப் பல. ஆனால், இதெயெல்லாம் விட்டு
விட்டு, நேர்மையற்ற உறவுகள் மட்டுமே பெண் விடுதலை பெற்றுத் தந்து விடும்
என்பது சரியான திசையில் பெண்ணியல்வாதம் பேசும் சிலர் செல்லவில்லை
என்பதைத் தான் குறிக்கிறது. நேர்மையற்ற உறவுகள், பிளவுகளைத் தான்
உண்டாக்கும் - அது எத்தகைய முன்னேற்றமடைந்த சமூகமாக இருந்தாலும்.

இங்கிலாந்து அரச குடும்ப திருமணங்களே இந்த நேர்மையற்ற உறவுகளைத் தாக்குப்
பிடிக்க இயலாமல் சிதறிப் போகையில், குஷ்புவின் அறிவுரை மிக மிக
ஆபத்தானது. அவருடைய குற்ற உணர்வுக்கான வடிகாலாக உளறியதை நாம் இத்தனை
சிரமேற்கொண்டு கவனம் கொடுப்பது அவசியம் தானா? அவர் ஒரு நேர்மையற்ற
வாதத்தை வைத்திருக்கிறார். அதை ஒதுக்கித் தள்ளுவது சிந்திக்கத்
தெரிந்தவர் அனைவரது கடமையாகும்...

வேறு யாருக்கும் ஏதேனும் தோன்றினால் எழுதுங்கள். நாளை பார்ப்போம்....

நண்பன்

unread,
Sep 29, 2007, 6:39:03 PM9/29/07
to பண்புடன்

> போவதை விட " நான் தவறு செய்யக்கூடாது என்பதுபோல நீயும் தவறு செய்யக்கூடாது"
> என்று போவதே நேர்மறையாகவும் சமூகப்பயனுடையதாகவும் இருக்கும்.
>

நண்பன்

unread,
Sep 30, 2007, 2:14:53 PM9/30/07
to பண்புடன்
பெண்கள் குழந்தை பெறுவதைப் பற்றிய சில கருத்துகள் கீழே உள்ளன. அதில்
பெரியார் கூறிய சில கருத்துகளையும் சேர்த்து பேசப்பட்டிருக்கிறது. அது
ஒரு தவறான கருத்தியல் பிரச்சாரம் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை.
பெரியாரின் உண்மையான அக்கறையைப் புரிந்து கொள்ளாது தவறாகப் புரிந்து
கொண்டவர்களின் விஷமப் பிரச்சாரம் தான் அது.

பெண்களின் உடல் நலம் குறைகிறது என்ற அக்கறை வந்தது அக்காலத்திய சூழலினால்
எழுந்தது. ஒரே திருமணத்தின் மூலமே பத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள்
பெற்றுக் கொண்ட காலம் அது. அதை இறைவனின் கொடையாகக் கருதி சமூகமே
கொண்டாடிய காலம் அது.

சரியான உணவு முறைகள் இல்லாமை, அனைவருக்கும் மருத்துவ வசதிகள் கிடைக்காமை,
குழந்தைப் பராமரிப்பு வசதிகள் இல்லாமை, என்பன போன்ற பல காரணிகள் இருந்தன.
இத்துடன், பல குழந்தைகள் பெற்று அவர்களின் வளர்ப்பில் கவனம் செலுத்த
இயலாமை, குடும்பப் பொருளாதாரம் நொடித்துப் போதல் போன்ற காரணிகளும் உடன்
சேர்ந்து குழந்தை பெறுவதைப் பற்றிய ஒரு மறு பார்வை தேவை என்ற சூழலில்
பெண்களுக்குப் பெரியார் அறிவுறுத்தினார் - குழந்தைகள் பெற்றுக் கொள்வதைத்
தவிருங்கள் என்று. இது ஒரு conditional statement தான். அனைத்து
வசதிகளும் கிடைக்கப் பெறுகையில், அளவோடு பெற்றுக் கொள்வதை வலியுறுத்தித்
தான் அவரது கூற்று அமைந்தது. இது ஒன்று.

அடுத்தது -

இது பெண்ணின் உரிமை மட்டுமே என்பது ஒரு புறம்

இருவரும் கலந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு என்பது மறு புறம்.

ஆனால், மூன்றாவதாக ஒன்றும் உள்ளது. அது சமூக நலன். ஒரு சமூகம்
ஆரோக்கியமானதாகவும், தொடர்ந்து வலுப் பெற்று ஒரு நற்சமுதாயமாகவும்
இருக்கவும், இழப்பைத் தொடர்ந்து ஈடு கட்டும் வகையிலும் குழந்தை
பிறப்புகள் அமைந்தாலே ஒரு சமுதாயம் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

ஒரு பெண் தன்னிச்சையாக முடிவு எடுத்து, குழந்தை பெறுவதை மறுத்தால், அதை
பாலியியல் உரிமை என குரல் கொடுத்தாள், அங்கு அவளது உரிமையையும் மீறிய ஒரு
சுயநலம் மட்டுமே காணப்படும். முறையான குழந்தை பெறுவதற்கு ஒரு சமூக
ஒப்பந்தம் மூலம் உடன்பட்டுவிட்டு, பிறகு அதை மறுப்பது அப்பட்டமான
சுயநலம். அது சமூக நலனுக்கு விரோதமானது.

அது போலவே ஒரு தம்பதியினர் இணைந்து இந்த முடிவை எடுத்தாலும் அது சமூக
விரோதமானது. எத்தனை நாட்கள் தள்ளிப் போட முடியும் என்பதை வேண்டுமானால்
அவர்கள் திட்டமிட்டுக் கொள்ளலாம். ஆனால், குழந்தையே பெற்றுக் கொள்ள
மாட்டோம் என்று அவர்கள் முடிவு எடுத்தால் அது சமூக நலன் அல்லது பொது
நலனைப் பாதிக்கும் ஒரு சுயநல முடிவாக மட்டுமே இருக்கும்.

இன்று இந்திய சூழலில், குழந்தைகள் பெறாமலிருப்பது என்பது, இந்திய
சமூகத்திற்கு நலன் விளைவிக்கும் முடிவு. ஆனால் இதே சூழலை ஒரு ஐரோப்பிய
நாட்டில் பொருத்திப் பாருங்கள் - அங்கு மக்கள் பெருக்கம் தேய்மான
நிலையில் இருக்கிறது. அதனால், அரசே மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது -
அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்ளுங்கள் என்று. இல்லையென்றால், இன்னும்
சில நூற்றாண்டுகளில் சில நாடுகள் வெறும் பூகோள உருண்டையில் இருக்கும்
ஆனால், மக்களற்ற நாடாக இருக்கையில், அது பிற சமுதாய மக்களால்
நிரப்பப்பட்டு விடும். இன்று அரபு நாடுகளை எடுத்துக் கொண்டால், அவர்களது
மிகக் குறைந்த மக்கள் தொகையால், அரசு நிர்வாகப் பணிகளுக்காகக் கூட அயல்
நாட்டு மக்களைத் தேட வேண்டிய கட்டாய சூழலில் இருக்கின்றன. இத்தகைய
சூழலில், அவர்கள் குழந்தை பெறுவதை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயத்தில்
இருக்கின்றனர். அதனால், கரு கலைப்பு போன்றவற்றை, மருத்துவ காரணங்களுக்காக
அன்றி, பிற காரணங்களுக்காக அனுமதிக்க மறுக்கின்றனர். அதே சமயம், மருத்துவ
வசதி, குழந்தைகளின் கல்வி செலவு போன்றவற்றிற்கு தாராளமாக மான்யம்
அளிக்கின்றனர்.

இந்த சூழலில் உள்ள ஒரு பெண், தன் சுய நலம் மட்டுமே கருத்தில் கொண்டு,
உரிமை, அது இது என்று பிதற்றினால், உதை தான். ஏனென்றால், ஒரு சமூக நலன்
என்ற பரந்த அளவைக் கணக்கில் கொண்டு, ஒரு அரசு செயல்படும் பொழுது, தனி
நபர் உரிமைகள் இரண்டாம்பட்சமே. இதில் தவறு ஏதும் இருப்பதாகத்
தெரியவில்லை. ஆக, ஒருவரின் உரிமைகள் பொது நலனைப் பாதிக்காது இருக்காத
வரையில் மட்டும் தான் அது உரிமையாக மதிக்கப் படுமே தவிர, வேறல்ல.

இந்திய சூழல் இதற்கு மாறானது என்பதால், இதை உரிமையாக வாதிடுகின்றோம்.
அரசும் அதை ஆதரிக்கலாம் - ஏனென்றால், இத்தகைய உரிமைகள் பொது நலனிற்கும்
உகந்ததாக இருப்பதால், அதை அரசு ஊக்குவிக்கிறது. இதைக் குறித்து தான்
அனைவரும் பேச வேண்டும் - பொறுப்புள்ளவர்களாக இருந்தால். அதையே உலகளாவிய
ஒரு தத்துவமாக வைத்துக் கொண்டாட முடியாது. ஆனால், இந்த உரிமைகள் சமீப
காலமாக வேறு ஒரு வடிவம் எடுத்து வருகிறது.

அது பெண் சிசுக் கொலை. சமீபத்திய BBC அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கடந்த
ஒரு தலை முறையில் நடந்த கருக்கலைப்பினால் இழந்த பெண்குழந்தைகளின்
எண்ணிக்கை - ஒரு மில்லியனுக்கும் அதிகம். அதாவது கருக்கலைப்பு எங்கள்
அடிப்படை உரிமை என்று முழங்கும் பெண்கள் கலைத்து கொன்று குவித்தது பெண்
சிசுக்களை மட்டுமே. தங்கள் இனத்தை தாங்களே அழித்துக் கொள்வதற்குத் தான்
உரிமை என்று பெயரா? எந்தக் குழந்தையாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வது
என்ற மனப்பான்மையை இழந்து விட்டு, பெண் குழந்தை என்றால் அழித்தொழி என்ற
நிலைக்குத் தள்ளப்பட்டது தான் பெண்கள் உரிமையைக் கோரும் விதமா?

இந்தப் பெண் குழந்தை அழிப்பின் மூலம், சமூகத்தில் ஆண் பெண் விகிதம்
ஏறுக்கு மாறாகப் போய்க் கொண்டிருக்கிறது. 1000 : 10000 என்ற விகிதத்தில்
இப்பொழுது ஆண் பெண் விகிதம் 1060 : 1000 என்ற விகிதத்தில் நிற்கிறது.
இதன் பொருள் ஒவ்வொரு ஆயிரத்திலும் 60 ஆண்களுக்கு பெண்கள் கிடைக்க
மாட்டார்கள் திருமணம் செய்து கொள்ள. இது சமூகத்தின் மீது ஏற்படுத்தக்
கூடிய தாக்கம் பெண்கள் உரிமைக்கே வேட்டு வைத்து விடும். இந்த விகிதம்
இன்னும் ஏறுக்கு மாறாகாப் போகக் கூடிய வாய்ப்புகள் அதிகம். ஒரு பெண்ணை பல
ஆண்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடிய கட்டாயங்கள் நிகழலாம். ஏற்கனவே
பஞ்சாபில் இத்தகைய திருமணங்கள் நடந்திருக்கின்றன என்று செய்திகள்
வருகின்றன. (இந்தியா டுடே). இது உடனே சமன் செய்யப் பட வேண்டிய கட்டாய
நிலையை உருவாக்கி இருக்கின்றது. ஆக குழந்தை பெறுவது அதுவும் எந்தக்
குழந்தையைப் பெறுவது என்பதில் ஒருவரின் முடிவு - எனது உரிமை என்ற பெயரில்
முழங்குவது சமூக நலனுக்குப் பாதகம் விளைவிக்கும் உரிமைக் குரல் ஆகும்.

நந்தா உங்கள் கருத்துகளுடன் மேலும் ஒன்று சேர்ந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது Prevention of Domestic Violence Act என்ற சட்டத்தின் மூலம்
ஆண்கள் பல வகைகளிலும் தொல்லுக்குட்படுத்தும் நிலை உருவாகி இருக்கிறது.
மனைவி மற்றும் அவளது குடும்பத்தார் மூலம், ஏற்கனவே வரதட்சணை வழக்குகள்
மூலம் தொல்லைப்பட்டு வந்த ஆண் வர்க்கத்தினர் இப்பொழுது குடும்ப வன்முறை
என்ற சட்டத்தின் மூலம் உடல் ரீதியாக துன்புறுத்தப்படும் நிலையும்
ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதிலிருந்து சட்ட பாதுகாப்பு பெற ஆண்கள் கூடி
தங்கள் உரிமையை நிலை நாட்ட சங்கம், இயக்கம், அமைப்பு எல்லாம் தொடங்கினால்
தான் உண்டு. :-))))

நண்பன்

unread,
Sep 30, 2007, 2:41:40 PM9/30/07
to பண்புடன்

On Sep 30, 2:39 am, நண்பன் <nanb...@gmail.com> wrote:

> தங்கள் தேவைகளைப் பற்றிப் பேசுவதற்கான சுதந்திரம். தங்கள் உணர்வுகளை
> வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம். அதன் மூலம் தங்கள் உடல் மொழியை - இந்த
> உடலின், அதனுள்ளான மனதின் தேவைகள் - ஏக்கங்கள், விரகதாபங்கள், இவற்றைப்
> புரிந்து கொள்ள வைக்க ஓரு வாய்ப்பு.

> ஆண்கள் பெண்களைப் பற்றிய புரிதல்
> உடையவர்களாக இருக்க வேண்டும். பெண்களைப் பற்றிய புரிதல் இல்லாமல்,
> அவர்களது உணர்வுகளையும், அதன் தேவைகளையும் அறியாதவர்களாக ஆண்கள்
> இருக்கும் பட்சத்தில், அவன் கணவனாக இருந்தாலென்ன அல்லது வேறு ஒருவனாக
> இருந்தாலென்ன? இத்தகைய ஆண்களிடத்தில் ஒரு பெண் கூடுவதினால் என்ன இன்பம்
> கிடைத்து விடும்?

> அதனால், பெண் மொழி - அவளது உடலின் மொழி - அவளது மனதின்
> மொழி இவற்றைப் புரிந்து கொள்பவனாக ஒரு ஆண் மாற வேண்டும். இதைப் புரிய
> வைக்க அவனுக்குப் பெண்களே சொல்ல வேண்டும் - அவர்களது மொழியில் ' என் தேவை
> இன்னது என்று'. மாறாக நேர்மையற்ற உறவுகளாக இருக்க முடியாது.
>

இங்கு பெண் மொழி என்ற கருத்தாக்கத்தை எழுது இருக்கிறேன். இதைப் பற்றி
மேலும் வாசிக்க, புரிந்து கொள்ள - இந்தத் தளத்திற்குச் சென்று உலாவி
வாருங்கள் :

http://udaru.blogdrive.com/

செல்வன்

unread,
Oct 1, 2007, 6:49:39 PM10/1/07
to panb...@googlegroups.com

//பெண்ணியம், ஆணியம் என்கிற பக்கச்சார்பு கருத்தாக்கங்களை ஒதுக்கிவிட்டு


நியாயம் எது என்பதை ஆய்வதே சரி ஆகும்.

அதாவது.... "நீ மட்டும்  தவறு செய்யலாமா? (அதனால்) நானும் செய்வேன்" என்று போவதை விட " நான் தவறு செய்யக்கூடாது என்பதுபோல நீயும் தவறு செய்யக்கூடாது" என்று போவதே நேர்மறையாகவும் சமூகப்பயனுடையதாகவும் இருக்கும். //

இப்னு ஹம்துன்

பெண்ணியம் பக்கசார்பானது என்ற கருத்தையே நிராகரிக்கிறேன்.தலித்தியம் எப்படி உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கான உரிமையை மீட்டெடுக்கும் போராட்டமோ அதே போல் தான் பெண்ணியம் உரிமை மறுக்கப்பட்ட பெண்களுக்கு உரிமையை மீட்டெடுக்கும் போராட்டமாகும்.இதை ஆணீயம் என்ற ஆதிக்கவாதத்துடன் ஒரே தட்டில் வைப்பதே தவறு.

"நானும் தவறு செய்ய கூடாது.நீயும் தவறு செய்யகூடாது" - இந்த வாதத்தில் இருக்கும் தவறு என்ற சொல்லே தவறு:). அதாவது பாலியல் சுதந்திரம் தவறு என்ற காலகட்டத்தை சமூகம் கடந்துவிட்டது. தனிமனித விருப்பு வெறுப்பின்பால்பட்ட இவை யாவும் முதற்கண் தவறே அல்ல. பெரியார் சொல்வது போல் "இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும்" என்றுதான் சொல்ல வேண்டும்.

நண்பன்

unread,
Oct 3, 2007, 2:59:36 AM10/3/07
to பண்புடன்
மீண்டும் ஒரு தவறான வாதத்தை பெரியார் சொன்னதாக முன் வைக்கிறார். இது ஒரு
வடிகட்டிய மோசடித்தனம் ஆகும். பெரியார் கூறிய அந்த வார்த்தைகள், பெண் ஏன்
அடிமையானாள் என்ற புத்தகத்தில், காதல் என்ற அத்தியாத்தில் வருகிறது. ஒரு
முறை காதல் ஏற்பட்டு விட்டு, பின்னர் அது ஏதாவது காரணம் கொண்டு, முறிந்து
விட்டாலோ, அல்லது தவறான துணையுடன் காதல் ஏற்பட்டுவிட்டால் அதை முறித்துக்
கொள்ளவதில் எந்தத் தவறுமில்லை என்கிறார். இந்தக் காதல் என்று அவர்
குறிப்பிடுவது, திருமணமான தம்பதியருக்குள்ளும் இந்தக் காதல் மாற முடியாது
என்ற நிர்ப்பந்தத்தின் அடிப்படையில், ஒரு முறை காதல் ஏற்பட்டுவிட்டால்,
அது அவள் சாகும் வரைக்கும் மாற்ற முடியாதது என்று கூறி, மணமுறிவு என்பதை
அனுமதிக்காத சமூகத்தைப் பார்த்துக் கூறியதாகும்.

தன் விருப்பப்படி, மிருகங்களைப் போல உறவு கொண்டு மகிழுங்கள் என்று
குறித்துச் சொல்லவில்லை.

தவறான கருத்துகளை - எடுத்து வைப்பதில், சிலர் மிக்க ஆர்வம் கொண்டு
அலைகின்றனர். அதாவது, தாங்கள் உரிமை என்று கோருவதை ஆமோதிக்க அவர்களுக்கு
ஒரு ஆஜானுபாகுவான ஆசாமியின் ஆதரவு தேவைப்படுகிறது. அதற்காகப் பெரியாரை
இழுத்துக் கொண்டு வருகிறார்கள் - அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலே...

இவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் - தனித்தனியாக உருவப்பட்ட
வாக்கியங்கள் - மொத்த கட்டுரையின் வடிவத்தையும் பாராமல், ஒரு வரி, இரண்டு
வரி என உருவிக் கொண்டு வந்து, 'வித்தை' காட்ட முயற்சிக்கிறார்கள், பாவம்.

இப்னு ஹம்துன்,

தூங்குகிறவனை எழுப்பலாம் - ஆனால் நடிப்பவனை எழுப்ப முடியாது. ஆணியம்,
பெண்ணியம் என்ற முன் முடிவுகள் இல்லாது, எந்த பாராபட்சமுமின்றி, இந்தக்
கருத்தை அணுகுங்களேன் என்று கூறியதற்கு கிடைத்த பதிலைக் கண்டு
விட்டீர்களா? பாவம், பெண்களே கூடி, போலி பெண்ணியம் பேசுபவர் என்று
கூறிவிட்ட பின்பும் இன்னும் தன்னை உணர்ந்து, நேர்மையான வாதங்களை வைக்க,
தர்கிக்க இயலாமல், பெரியாரிடமே மீண்டும் மீண்டும் ஓடுவதைக் கண்டு நகைப்பு
தான் வருகிறது.

(பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற புத்தகத்தைப் பகுதி பகுதியாக
இங்கே பிரசுரிக்கிறேன் - பின்னர் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் - செல்வன்
போன்றவர்கள் பெரியாரை எப்படித் திரிக்கிறார்கள் என்று.)

அன்பு குயில்

unread,
Oct 3, 2007, 3:08:03 AM10/3/07
to panb...@googlegroups.com
//தவறான கருத்துகளை - எடுத்து வைப்பதில், சிலர் மிக்க ஆர்வம் கொண்டு

அலைகின்றனர். அதாவது, தாங்கள் உரிமை என்று கோருவதை ஆமோதிக்க அவர்களுக்கு
ஒரு ஆஜானுபாகுவான ஆசாமியின் ஆதரவு தேவைப்படுகிறது. அதற்காகப் பெரியாரை
இழுத்துக் கொண்டு வருகிறார்கள் - அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலே...

//
அப்பட்டமான உண்மை திரு நண்பன்
 


 
தியாகு
=============================
" என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..."

அன்பு குயில்

unread,
Oct 3, 2007, 3:09:33 AM10/3/07
to panb...@googlegroups.com
"புரட்டுவதும் திரிப்பதும் நாங்கள் செய்தால் அது அப்படி இல்லை என சொல்லிவிட்டு போகவேண்டியதுதானே. "என்பார்
 


 
--
தியாகு
=============================
" என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..."
=============================
வலைப்பூ: www.thiagu1973.blogspot.com
குழுமம் : ttp://groups.google.com/group/Anbu2006



--

நண்பன்

unread,
Oct 3, 2007, 12:13:51 PM10/3/07
to பண்புடன்
பெண் ஏன் அடிமையானாள்?
Thanks :: பொன்ஸ்

போனவாரம் படித்து முடித்த புத்தகம் பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?".
பெரியார் எழுத்துக்கள் படித்ததில்லை. இந்தக்கால எழுத்துக்களை
ஒப்பிடுகையில் மிகவும் கடினமான உரைநடையாக இருக்கிறது. "பார்த்தோமேயானால்"
போன்ற சொற்களால் நீள நீளமாகும் வாக்கியங்கள்."நான்" என்பதை ஒழித்து
"நாம்" என்று அவர் எழுதுவதைப் புரிந்து கொள்ளவும் எனக்குக் கொஞ்சம்
சிரமமாகவே இருந்தது. சரளமாக பயன்படும் சம்ஸ்கிருத சொற்களைப் பார்க்கையில்
மணிப்பிரவாள நடையைத் தாண்டி, நாம் இன்றைக்கு எத்தனை தூரம் தனித்தமிழுக்கு
அல்லது, தங்கிலீஸுக்கு வந்துவிட்டோம் என்பது கொஞ்சம் ஆறுதலாக(?!)
இருந்தது.


இப்போது புத்தகத்தைப் பற்றி:

விடுதலை ஆப்செட் ப்ரிண்டர்ஸ் வெளியீடான இந்தப் புத்தகம், முதன்முதலில்
எழுதப்பட்டது 1942ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில். அறுபது ஆண்டுகள்
கழிந்து, சுதந்திர இந்தியாவில் கூட புத்தகம் பேசும் பிரச்சனைகள் இன்றும்
அதே உயிர்ப்புடன் மாறாமல் இருப்பது தான் வேதனை.

கற்பு என்ற அத்தியாயத்துடன் தொடங்குகிறது நூல். கற்பு என்பது
இருபாலருக்கும் பொதுவாக இல்லாமல் வெறும் பெண்ணுடைமையாக்கப் பட்ட
விதத்தின் சுலபமான விளக்கம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. தெய்வத்
திருமறை என்றும் எக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துக்களைக் கூறும்
உலகப் பொதுமறையாகவும் போற்றப்படும் திருக்குறளும் இந்த விசயத்தில்
சறுக்குவதைப் படிக்கும் போது, ஆண்டாண்டு காலமாக மக்கள் மனதில்
ஊட்டப்பட்டு வந்த பெண்ணடிமைச் சிந்தனைகளைத் தாண்டி இந்த ராமசாமிப்
பெரியாரால் மட்டும் எப்படி வித்தியாசமாக யோசிக்க முடிந்தது என்ற எண்ணம்
எழுந்தது. முதல் அத்தியாயத்தில் சும்மா கோடி காட்டும் பெரியார்,
அடுத்தடுத்த அத்தியாயங்களில், வள்ளுவரைக் கிட்டத்தட்ட துவைத்துக் காயப்
போட்டுவிடுகிறார். வள்ளுவர் இன்றைக்கு இருந்து இதைப் படித்தால், உலகப்
பொதுமறையிலும் மூன்றில் ஒரு பாகத்தை வாசுகி அம்மையாரை எழுதச் சொல்லி
இருப்பார் என்பது திண்ணம்.

வண்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி,
பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது, வீரம், வன்மை,
கோபம், ஆளுந்திறம் புலிகளுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி,
பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை.

நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும்
வீரம், வண்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக் கொள்ள
வேண்டும் என்பதே ஆகும்

- பெரியார்

கற்பின் இலக்கணத்தைக் காலிசெய்தபின்னர், காதலையும் உரிக்க உரிக்க
ஒன்றுமில்லாத வெங்காயமாக்கிவிடுகிறார். இன்றைய தொலைக்காட்சி சீரியல்கள்
பெரியாரின் இந்த அத்தியாயத்திலிருந்து தான் கருத்துக்களை எடுத்துக்
கொண்டிருக்கிறதோ என்று நினைக்குமளவு, நடைமுறையில் காதல் எப்படி ஒரே
ஆணுக்கும் ஒரே பெண்ணுக்கும் இடையில் ஏற்படுவதில்லை என்ற விளக்கத்தை
மறுக்க ஏதும் இருப்பதாகவே தெரியவில்லை.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் 'கற்பு பெண்ணடிமை அடையாளம், காதல்
வெறும் ஆசை, என்றானால், கல்யாணத்தை மட்டும் எதற்குப் பிடித்துக் கொண்டு
தொங்க வேண்டும்?' என்று பெரியார் கேட்பது பதிலில்லாத
கேள்வியாகிவிடுகிறது. பிடிக்காத திருமண பந்தத்தை உதறிவிட்டு வெளியேற
வேண்டிய அவசியத்தை இருபாலருக்கும் பொதுவாகவே வைக்கிறார் பெரியார்.
இன்றைக்காவது திருமணபந்தத்தை விட்டு வெளியேறி வந்திருக்கும் பெண்களை
"வாழாவெட்டி", போன்ற சொற்களால் காயப்படுத்துவதைச் சமூகம்
நிறுத்தியிருக்கிறது. கௌதம புத்தர், மரணத்துக்குச் சொன்னது போல் குறைந்த
பட்சம் குடும்பத்தில் ஒரு விவாகரத்தாவது இல்லாத வீடுகள் இன்னும் சில
நாட்களில் நிச்சயம் அரிதாகிவிடும்.

விவாகரத்தை ஓரளவு சாதாரணமாக ஏற்றுக் கொண்டுவிட்ட இன்றைய சமுதாயம் கூட
மறுமணத்தை முழுமனதுடன் ஒப்புக் கொள்ள மறுக்கிறது. முக்கியமாக பெண்கள்
மறுமணம் செய்வதை - அது விதவா விவாகமானாலும் கூட. எங்கேயோ அத்தி
பூத்தாற்போல் ஒன்றிரண்டு பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை 'அவள் விகடன்'
முதலான பத்திரிக்கைகள் பேட்டி கண்டு பிரசுரித்து பாராட்ட வேண்டிய அளவில்
தான் இன்றைக்கு மறுமணம் பார்க்கப்படுகிறது. அது போன்ற பேட்டிகளிலும் கூட
அந்தப் பெண் நிச்சயமாக "இவர் ரொம்ப நல்லவர்.. பெரிய மனசு இவருக்கு.
என்னையும் குழந்தையையும் ரொம்ப சந்தோஷமா வச்சிக்கிறார்" என்ற சொற்களைச்
சொல்லியிருப்பார், அல்லது, சொல்லாவிட்டாலும் எழுதி இருப்பார்கள்.
கல்யாணம் பண்றதே சந்தோஷமா வச்சிக்கிறதுக்குத் தானே, இதைத் தனியாகச்
சொல்லும்போதே, சமூகம் அது போல் நடக்காமலும் போகலாம் என்ற பயத்தை அந்தப்
பெண்ணின் மனதில் நன்றாகவே விதைத்திருக்கிறது என்று தானே பொருள்?

சமுதாயத்தைச் சீரழிப்பதில் இன்றைய பெண்கள் பெயர் தாங்கிய சீரியல்கள்
அடுத்த குற்றவாளிகள். ஊரெல்லாம் சுத்தி, வியாபாரம் செய்யும் அபி, மறுமணம்
செய்யாமலேயே கஷ்டப்படுவாளாம், அவள் முன்னாள் கணவன் பாஸ்கர் சுலபமாகத்
திருமணம் செய்து கொண்டு விடுவானாம்(கோலங்கள்)!

விதவைகள் எண்ணிக்கை இன்றைய மருத்துவ விஞ்ஞான உலகில் குறைந்திருந்தாலும்,
குழந்தைத் திருமணங்கள் குறைந்துவிட்டாலும் இருக்கிற விதவைகளின் நிலை
மட்டும் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதிலிருந்து இன்றும் பெரிதும்
மாறாமல் இருந்திருக்கிறது, என்பதை திருவின் இந்தக் கட்டுரையிலும்
காணலாம்.

இன்றைய நிலையில் பெண்களின் சொத்துரிமை ஓரளவுக்குக்
காப்பாற்றப்பட்டிருக்கிறது, இந்த விஷயத்தில் கொடுமைக்கார
மாமியார்களுக்கும் நம் நன்றிகள் உரித்தாக வேண்டும். அப்படியும் சில
படிப்பறிவில்லாத பெண்களை ஏமாற்றுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
பொதுவாகவே இரக்க சுபாவம் கொண்ட பெண்களும், சகோதரர்களுக்கு விட்டுக்
கொடுத்து ஏமாறுவது மற்றொரு விதம். இவை எல்லாம் தவிர பல்வேறு சட்டங்களின்
மூலம் பெண்கள் பெற்றோர் சொத்தில் உரிமை பெறுவது இன்றைக்கு
நடக்கக்கூடியதாகவே இருக்கிறது.

விடுதலை பெற்ற இந்தியாவில் அமலுக்கு வந்த கர்ப்பத்தடை பற்றியும்
பிரிட்டிஷ் இந்தியாவிலேயே பேசி இருக்கிறார் பெரியார். "நான்
உழைக்கிறதெல்லாம் இந்தக் குழந்தைக்காகத் தான்", "இந்தப் புள்ளைங்க
இருக்குதேன்னு தான் எல்லா அவமானத்தையும் பொறுத்துப் போறேன்" என்பன போன்ற
சீரியல், சினிமா டயலாக்குகளை எல்லாம் தூள் தூளாக்கி, "அவமானத்தை உண்டு
பண்ணும் பிள்ளைகளை எதுக்குப் பெத்துக்கிறீங்க?" என்று ஒரே போடாகப்
போடுகிறார். குழந்தைகள் என்றிருந்தால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை தானே
உருவாகிறது, அதெல்லாம் எதுக்கு? என்று அவர் கேட்கும் போது, சும்மாவேனும்
சண்டை போட சாக்குதேடி குழந்தைகளின் மீது சுமத்திக் கொள்ளும் கணவன்
மனைவிக்கு நல்ல இடி தான்.

இறுதியாக, இந்தப் புத்தகத்தில் எனக்கு மிக மிகப் பிடித்த அத்தியாமுமான
விபச்சாரம் பற்றிப் பேச வரும்போது, தமிழும் ஒரு ஆணாதிக்க மொழி என்பதை
நம்ப வேண்டியதாகத் தான் இருக்கிறது. விபச்சாரி, வாழாவெட்டி, விதவை என்று
எந்தப் பையனைப் பார்த்துச் சொல்கிறோம்? எல்லாம் பெண்பாற்சொற்கள் மட்டும்
தானே. இன்றைக்குக் 'கண்ணியத்துக்கும்' 'மரியாதைக்கும்' கட்டுப்பட்டு
மனதால் மட்டும் விபச்சாரம் செய்யும் ஆண் விபச்சாரிகள் இல்லையா என்ன?
குடித்துவிட்டு ரோட்டில் மனைவியைப் போட்டு அடித்துக் கொண்டிருந்த ஒரு
புருஷன், தன் குற்றங்களை முன்வைத்ததற்காக, "ஏண்டீ தே..." என்று
திட்டியதைப் பார்த்தபின், ஆண்களின் மிகக் கேவலமான ஆயுதமாக இன்றும் அந்தச்
சொல் இருப்பது அழிக்க முடியாத உண்மையாக இருக்கிறது! இன்று தொழிற்நுட்ப
வல்லுனர்களான, இணையத்தில் திட்டும் படித்தவர்கள் கூட, திட்டு
வாங்குபவனின் தாயாரைத் தானே இந்த வார்த்தைகள் சொல்லித் திட்டிக்
கொண்டிருக்கிறார்கள்! அப்பாவையோ அல்லது எதிரியையோ நேரடியாக 'விபச்சாரன்'
என்று திட்டவேண்டியது தானே!

'எத்தனை பெரியார் வந்தாலும் சமூகத்தைத் திருத்த முடியாது' என்ற சொற்கள்
உண்மைதான் என்று இந்தப் புத்தகத்திலேயே புரிந்துவிட்டது. இருந்தாலும்
மிகவும் கட்டுப்பெட்டியான சமூகத்தில் தன் தங்கை மகளான ஒரு இளம்
விதவைக்குத் திருமணம் செய்து வைத்து வெறும் வாய்ச்சொல் வீரர் ஆகாமல்
செயலிலும் காட்டிய பெரியாரின் சுயசரிதையைக் கட்டாயம் படிக்க வேண்டும்
என்ற ஆவலை எனக்குள் விதைத்துவிட்டது இந்தப் புத்தகம். பெண்விடுதலை பற்றி
யாருமே யோசிக்காத, யோசிக்கவும் தயங்கிய காலத்தில் இப்படியெல்லாம்
யோசிக்கும் எண்ணம் ஒருவனுக்கு உண்டானதென்றால், அந்த மனிதரின் வாழ்க்கை
எப்படிப் பட்டதாக இருக்கும்!


http://poonspakkangkal.blogspot.com/2006/11/blog-post_116471531788220397.html

இப்பொழுதுக்கு இதைப் படித்து வையுங்கள். புத்தகத்திலிருந்து,
வார்த்தைக்கு வார்த்தை மாறாமல், மற்றவற்றைப் பிறகு தருகிறேன். பிறகுன்னா,
ஒரு இரண்டு நாட்களுக்குள் ஆரம்பித்து விடலாம்...

It is loading more messages.
0 new messages