அகழ்நானூறு 21

18 views
Skip to first unread message

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Feb 15, 2023, 12:01:20 AMFeb 15
to பண்புடன்

அகழ்நானூறு 21

_______________________________________________

சொற்கீரன்நிரைபறை குரீஇ சிள்வீடு நிரப்ப‌

புள்ளி நீழல் பொறி ஆர்த்த மரத்து

அகலிடம் மறைத்த விண்பூச்சு ஒளியில்

ஒளிந்து களைந்த நான்வகை மொய்ம்பும்

நெகிழத்தந்த காதலின் களியில் 

அவன் அவளாய் அவள் அவனாய்

விண்குயில் மண்ணும் மண்குவி விண்ணும்

மயங்கிய காட்சியில் விழிபுதைந்து வித்திய‌

வான்பயிர் விளைந்தது போன்ம்

கண்படை யாழ பண்ணி நேர்ந்தனர்.

மறை பொருட் காமம் விரிக்க ஒல்லா

மகிழ்வுப்பெருங்கடல் அலைஎறி அயர்தல்

இயலா சூர்நகை மூழ்கும் நாணம்

கல்லென வீக்களின் பாயல் இயலுமோ?

பேஎய் கண்ட இப் பெருமறைக் கனவு.


_______________________________________________________‍

சங்ககாலத்து காதலர் தினம் பற்றிய ஒரு செய்யுட்கவிதையை இந்த அகழ்நானூறு 21 ல் நான் எழுதியிருக்கிறேன்.

பொழிப்புரை தொடரும்.

_____________________________________

சொற்கீரன்


எல்லோருக்கும் பதிலளி
எழுதியவருக்குப் பதிலளி
முன்னனுப்பு

Reply all
Reply to author
Forward
0 new messages