சில்லறை சந்தேகங்கள்!

53 views
Skip to first unread message

shylaja

unread,
Oct 18, 2009, 12:36:39 AM10/18/09
to முத்தமிழ், piravakam, பண்புடன்

சில்லரையா  சில்லறையா? எது சரியான சொல்?
 
ரொம்பநாளா  இது சந்தேகமாகவே இருந்தது..
 
புலவர் கவிக்கோஞானச்செல்வன் எனது இந்தசந்தேகத்தை  சமீபத்தில்  ஒரு  சிற்றிதழில்  எழுதிய கட்டுரைமூலம் தீர்த்துவிட்டார்..
 
அவர்  எழுதியதை அப்படியே தட்ட்ச்சுகிறேன்  ..
 
சில்லரை என்று பலர் எழுதுகிறார்கள்/  கால் அரை முக்கால்  என்பன,  /ஒன்று/  என்பதற்குள் அடங்குகிறது.
 
சில்லரை எனில் சில அரைகள் என்று ஆகிறது.
 
 சில என்பதற்கு இரண்டிற்கும் குறைவான எண் இருக்கமுடியாது  இரண்டு அரைகள் ,ஒன்று ஆகிவிடாதோ?
 
 ஆதலின் சில்லரை எனும் சொல்பிழை உடையது
 
ஒரு ரூபா எனில் முன்னர் இருந்த 10,.20காசுகள் இப்போது மறைந்துகொண்டிருகும்25காசு 50காசு  .. சில்லறை
 
100ரூ எனில்  5ரூபாய் 10ரூபாய் 50ரூபாய்  சில்லறையாகும்.
 
நாம் கொடுக்கும் தொகை அல்லது பெறும் தொகை  எதுவோ அதில் முழுமை  இல்லாத உதிரிகள் எவையோ அவையே சில்லறையாகும். 
 
ஒரு தொகையை சிலவாக அறுத்து(கூறுபோட்டு) தரப்படுத்தல் சில்லறை
ஆகவே சிலல்றைதான் சரியான சொல்.
 
 
 
அடுத்து அருகில்    அல்லது அருகாமையில்... எது சரி என்று பார்க்கலாமா?!
 
 
 
 
 
 
 

--

ராஜா

unread,
Oct 18, 2009, 2:28:00 AM10/18/09
to panb...@googlegroups.com
சில்லரைத்தனமா சில்லறையில இப்படி ஒரு தவறு செய்திருக்கோமே ?  இனிமேல் சரியா சொல்லுவோம். தகவலுக்கு நன்றி !   

18 அக்டோபர், 2009 7:36 am அன்று, shylaja <shyl...@gmail.com> எழுதியது:
Reply all
Reply to author
Forward
0 new messages