Re: [பண்புடன்] Re: பாடல்கள் பலவிதம் - III

349 views
Skip to first unread message

வில்லன்

unread,
Jan 7, 2014, 9:35:14 AM1/7/14
to panb...@googlegroups.com

//சண்டை போட்ட நாட்களை தான் எண்ணி சொல்ல
கேட்டு கொண்டால் கழுகும் பயந்து நடுங்கும்//

வாட் இஷ் திஷ் சென்ஷி???

Arumbanavan A

unread,
Jan 8, 2014, 12:52:28 AM1/8/14
to பண்புடன்
கணக்கும்.

//சண்டை போட்ட நாட்களை தான் எண்ணி சொல்ல
கேட்டு கொண்டால் கழுகும் பயந்து நடுங்கும்//



2014/1/7 வில்லன் <oms...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

Ganesh Kumar

unread,
Jan 19, 2014, 3:03:28 AM1/19/14
to panb...@googlegroups.com
கடந்த இரண்டு வருடங்களாக தொலைக்காட்சி பார்ப்பது அரிதாகி விட்டது.

சில மாதங்களுக்கு முன் பேருந்தில் பயணிக்கும் பொழுது மரியான் திரைப்படம்
பார்த்தேன்.

படம் எனக்குப் பிடித்திருந்தது.....

வெளிநாட்டு கடத்தல்காரர்களிடம் மாட்டிக் கொண்டு தான் இனி உயிருடன்
திரும்புவது கடினம் என தொலைபேசியில் தன் காதலியிடம் கதறும் போது ,
மரியான் என்பவன் மரணத்தை வெல்பவன் ...அவனுக்கு சாவே கிடையாது என காதலி
உத்வேகம் தரும் காட்சி அருமை..

பூ படத்தில் இந்த நாயகி (பார்வதி) நடித்திருந்தார் என நினைக்கிறேன்,
ஆனால் அந்தப் படத்தில் நடித்த பொழுது எலும்புந் தோலுமாக கெச்சலான
தோற்றத்தில் பரிதாபமாக இருப்பார்.

0
மரியான் படத்தில் இடம்பெற்ற

" இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன
என்ன அவசரம் என்ன அவசரம் அடி பெண்ணே "

என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, பாடகர் விஜய் பிரகாஷ்
சிறப்பாகப் பாடியிருக்கிறார்(குறிப்பாக பல்லவி), பாடல் படமாக்கப்பட்ட
விதமும் அருமையாக இருக்கும்.

தன்னை அலட்சியப் படுத்திக்கொண்டே வரும் நாயகனுக்கு ஓர் "உம்மா"வின்
மூலமாக தன் காதலின் ஆழத்தை உணர்த்திவிடுகிறாள் நாயகி...

சும்மாவா சொன்னார்கள் .." காதலின் திறவுகோல் முத்தம் " என்று...

http://www.youtube.com/watch?v=p_H55yyb_Fw
0

ரகுமான் இதே போல் ஸ்லோ பீட்டில் சில பாடல்களை ஏற்கனவே கொடுத்திருக்கிறார் .

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
என்னவளே அடி என்னவளே
என் மேல் விழுந்த மழைத்துளியே
கொல்லையிலே தென்னை வைத்து

0

நானறிந்த வரையில் தமிழில் ரொம்ப ஸ்லோ பீட்டில் எடுக்கப்பட்ட பாடல்
ஜெயகாந்தனின் புதுச்செருப்பு கடிக்கும் என்ற படத்தில் பாலா பாடிய
சித்திரப் பூ சேலை என்ற பாடலாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன்.

http://www.youtube.com/watch?v=oijasCnOmNg&list=PLu0O4bbFDErNfQkDN1j82SxXXK4gbcOxu

ஸ் பெ

unread,
Jan 21, 2014, 3:01:47 AM1/21/14
to panbudan
என்னமோ திடீருண்ணு கேக்க தோணிச்சு.. கேட்டுக்கிட்டே இருக்கேன்...
--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
Jan 25, 2014, 10:42:23 AM1/25/14
to panbudan
என்ன குரல், என்ன இசை, என்ன வரிகள்........அற்புதம் 
-------------------------------------------------------------------------------


புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன்
என்னை விடு...
விழியின் துளியில் நினைவைக் கரைத்து ஓடிப் போகிறேன்

என்னைவிடு...

பிரிவில் தொடங்கி பூத்ததை
பிரிவில் முடிந்து போகிறேன்

மீண்டும் நான் மீளப்போகிறேன்
தூரமாய் வாழப் போகிறேன்... ( புதிய உலகை...

மார்பில் கீறினாய்
ரணங்களை வரங்களாக்கினாய்

தோளில் ஏறினாய்
எனை இன்னும் உயரமாக்கினாய்

உன் விழி போல மண்ணில் எங்கும்
அழகு இல்லை என்றேன்

உன் விழி இன்று கண்ணீர் சிந்த
விலகி எங்கே சென்றேன்

மேலே நின்று
உன்னை நானும்
காணும் ஆசையில்...( புதிய உலகை...

யாரும் தீண்டிடா இடங்களில்
மனதைத் தீண்டினாய்

யாரும் பார்த்திடா சிரிப்பை
என் இதழில் தீட்டினாய்

உன் மனம் போல விண்ணில் எங்கும்
அமைதி இல்லை என்றேன்

உன் மனம் இன்று வேண்டாம் என்றே
பறந்து எங்கே சென்றேன்

வேறோர் வானம்
வேறோர் வாழ்க்கை
என்னை ஏற்குமா...( புதிய உலகை...

படம்: என்னமோ ஏதோ
பாடியவர்: வைக்கம் விஜயலட்சுமி
இசை: டி. இமான்
பாடலாசிரியர்: மதன் கார்க்கி.


துரை.ந.உ

unread,
Jan 25, 2014, 10:53:08 AM1/25/14
to பண்புடன்
அவங்க சிறப்புத் திறனாளி என்பதையும் பதிவு பண்ணீருங்க ஸ்.பெ 


2014/1/25 ஸ் பெ <stalinf...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Jan 25, 2014, 10:57:26 AM1/25/14
to பண்புடன்
பாடல்வரிகள் ...பாடியவரின் நிலை ... நிகழ்வுக்கான சாத்தியக் கூறு... . தன் இசையாலேயே தானே  கலங்கும் நிலைக்கு உள்ளானார் இமான் 


2014/1/25 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

ஸ் பெ

unread,
Jan 25, 2014, 10:59:01 AM1/25/14
to panbudan
இந்த பதிவு அவர்களை பற்றி தெரியாத நண்பர்களுக்கு ஒரு சிறு அறிமுகத்தை தரும் என நம்புகிறேன்..


2014/1/25 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
அவங்க சிறப்புத் திறனாளி என்பதையும் பதிவு பண்ணீருங்க ஸ்.பெ 




வைக்கம் விஜயலக்ஷ்மி



சமீபத்தில் வலை நண்பர் பந்து அவர்கள் தனது வலைப்பூவில்CELLULOIDஎனும் மலையாள படத்திலிருந்து காற்றே காற்றே நீ பூக்காமரத்தில்” எனும் பாடலை பகிர்ந்திருந்தார். பாடலைக் கேட்டதிலிருந்தே அவர் பற்றி இணையத்தில் தேடினேன். நிறைய பாடல்களைக் கேட்டு, அவரது ஒரு நேர்காணலையும் பார்த்தேன். இந்தப் பாடலைப் பாடிய வைக்கம் விஜயலக்ஷ்மி பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். அதற்கு முன்னர் அந்தப் பாடலைக் கேளுங்களேன்.

Kaatte Kattee Nee Pookkaa Marathil | Muziboo 



என்ன நண்பர்களே, வைக்கம் விஜயலக்ஷ்மி அவர்களின் குரலில் நீங்கள் மயங்கி இருப்பது நிச்சயம். இந்தப் பாட்டை பாடிய வைக்கம் விஜயலக்ஷ்மி பிறந்தது 1981-ஆம் வருடத்தின் விஜயதசமி தினமான அக்டோபர் 7 ஆம் நாள்.  முரளிதரன் விமலா தம்பதியினரின் ஒரே மகள் விஜயலக்ஷ்மி. வைக்கத்தில் பிறந்தாலும், விஜயலக்ஷ்மியின் நிலையால் சில வருடங்களில் சென்னை வந்து ஐந்து வருடங்கள் அங்கே தங்கி பிறகு வைக்கம் திரும்பிவிட்டார்கள்.

சிறு வயதிலேயே இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோரின் பாடல்களைக் கேட்டு வளர்ந்த இவர், ஒரு பாடலைக் கேட்டுவிட்டால் உடனே அதன் நெளிவு சுளிவுகளோடு உடனே பாடி விடும் திறமையைப் பெற்றிருந்தார். ஜேசுதாஸ் பாடிய கர்நாடக சங்கீத ஒலி நாடாக்களைக் கேட்டுக் கேட்டு ஒரு வருடத்திற்குள்ளாகவே நூற்றுக்கும் மேற்பட்ட ராகங்களைக் கற்றுக் கொண்டதோடு, இதுவரை ஐந்து பாடல்களை இயற்றவும் செய்திருக்கிறார். இத்தனைக்கும் அதுவரை அவருக்கு முறையான சங்கீதப் பயிற்சி கிடையாது.   



சங்கீதத்தில் முறையான பயிற்சி இல்லா விட்டாலும், அவரது திறமை பல வித்வான்களையே பிரமிக்கச் செய்ததாம். 1987-ஆம் வருடம் தனது மானசீக குருவான ஜேசுதாஸை சந்தித்தபோது, இத்தனை சிறிய வயதில் விஜயலக்ஷ்மியின் விஷய ஞானம் கண்டு அவருக்கு ஆச்சரியம் உண்டாயிற்றாம். அதன் பிறகு சில குருகளிடம் பயிற்சி பெற்று பல கச்சேரிகளில் பாடத் துவங்கினார் இவர்.
மும்பையின் ஷன்முகாநந்தா அரங்கம் தொடங்கி, தமிழகத்தின் பல ஊர்களிலும் இதுவரை பல கச்சேரிகள் நடத்தி இருக்கும் விஜயலக்ஷ்மி ஒரே ஒரு கம்பி கொண்ட காயத்ரி வீணையை வாசிப்பதிலும் திறமை பெற்றவர். இந்த வீணை கொண்டும் பல கச்சேரிகளை நடத்தி இருக்கிறார். இந்த ஒரு கம்பி கொண்ட வீணைக்கு “காயத்ரி வீணை’ என பெயர் வைத்தது நமது குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்.
சபைகளிலும், கோவில்களிலும் பாடுவதில் அவ்வளவாக வருமானம் இல்லாத காரணத்தினால் சினிமா பக்கமும் தனது பார்வையை திருப்ப, அவருக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு மேலே சொன்ன படத்தில்.  இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தான் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் முன்பே பாடல்கள் வெளிவந்து விட்டதால், இந்தப் பாடல் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. இப்போது மலையாள சினிமாவில் நிறைய வாய்ப்புகள் இவரைத் தேடி வர ஆரம்பித்திருக்கிறது.
சரி நன்றாகத் தான் பாடுகிறார், எதற்கு இவருக்காக தனியாக ஒரு பதிவு எனக் கேட்பவர்களுக்கு, இவர் பிறவியிலேயே கண் பார்வையில்லாதவர். ஒரு குறையோடு பிறந்திருந்தாலும், தன்னம்பிக்கையோடு தனது வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டிருக்கும் அவரை மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துவோம்.

வாருங்கள் அவரது காயத்ரி வீணையின் நாதத்தினைக் கேட்போம்.

இந்த அற்புதமான ஒரு இசைக் கலைஞரை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பர் பந்து அவர்களுக்கு நன்றி. 

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

V Ramesh

unread,
Jan 28, 2014, 6:02:23 AM1/28/14
to பண்புடன்
கலக்கல் வரிகள் பாடல்..நானும் இந்த பாடலை ரீப்பிட்ல போட்டு 4 நாளா கேட்டுட்டு இருக்கேன்.. பாடகி குரல் புதுசா இருக்கேனு பார்த்தேன்.. வாழ்த்துகள்.. கலக்கட்டும்..

நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/


2014-01-25 ஸ் பெ <stalinf...@gmail.com>

--

Ahamed Zubair A

unread,
Feb 4, 2014, 10:09:41 AM2/4/14
to பண்புடன்
கானா பிரபான்னு நினைக்கிறேன்... இந்தப் பாட்டை செமையா சிலாகிச்சு எழுதி இருந்தார்...

இமானுக்கு அவரின் மரணித்த அம்மாவின் நினைவு வந்திருக்கக் கூடும்.

கேட்டதில் இனித்தது : புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் என்னை விடு
http://www.radiospathy.com/2014/01/blog-post_25.html

இன்றைய காலைப்பொழுதில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வேலைகளுக்கு இடையில் எனக்கு கிடைத்த நேரம் வழக்கம் போல காரில் இசையை இயக்கிவிட்டுக் கேட்டுக் கொண்டே போகிறேன்.

"புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் என்னை விடு" சாதாரணமாக தான் ஆரம்பிக்கிறது, ஆனால் பல்லவி முடிந்து சரணத்துக்குப் பாயும் நேரம் கண்களில் முட்டி திடீர்க் குளம் ஒன்று, ஸ்டியரிங் பிடித்திருக்கும் இரண்டு கைகளிலும் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன. இந்த மாதிரி அனுபவமெல்லாம் எனக்குப் புதிதல்ல, அதிலும் குறிப்பாக இசைஞானியின் பாடல்கள் குறிப்பாக ஸ்வர்ணலதாவின் "என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்" எல்லாம் இந்தமாதிரி என்னைக் கோழையாக்கி அழ வைக்கவே படைக்கப்பட்டது. ஆனால் ஒரு புதிய பாடல் இம்மாதிரியானதொரு சாகசத்தை என்னுள் ஏற்படுத்தி விட்டதுதான் எனக்கே புரிபடாத ஆச்சரியம்.

வெளியே வாகனங்களின் போட்டா போட்டியோடு அந்தப் பெருஞ்சாலையில் இறுக மூடிய கார்க்கண்ணாடிக்குள் என் இசை உலகத்தில் கார் தன் வழி பயணிக்க, நானோ இரட்டைச் சவாரி.என்னைக் கயிற்றால் இறுகக் கட்டிவிட்டு கார் சீட்டில் பயணிக்க வைத்தது போன்றதொரு பிரமையை உண்டு பண்ணுகிறது.

எனக்கு நினைவு தெரிந்து சமீப ஆண்டுகளில் கேட்டதும் உடனேயே என் வசமிழந்த புதிய பாடல்களில்  மொழி திரைப்படத்தில் வந்த "காற்றின் மொழி இசையா" பாடல் தான் இதே மாதிரியான அனுபவத்தை விளைவித்திருந்தது. அதை அப்போது நான் பதிவாக்கியும் இருந்தேன்.

காற்றின் மொழி.....! http://www.madathuvaasal.com/2007/02/blog-post_13.html

 "புதிய உலகை புதிய உலகைத் தேடிப்போகிறேன் என்னை விடு" இந்த மாதிரிப் பாடல்களெல்லாம் இயந்திர கதியில் ஓடிக் கொண்டிருப்பவரின் திடீர் சுகப்பிரசவம் ஆகியிருக்காது. இசையமைப்பாளர்

டி.இமானின் மனதின் மூலையில் அவருக்குத் தெரியாமலேயே எங்கே ஒளிந்து கொண்டிருந்திருக்கும். செலுலாயிட் மூலம் "காற்றே காற்றே" என்று அறிமுகமான வைக்கம் விஜயலட்சுமியின் வருகைக்காகக் காலம் காத்துக் கொண்டிருக்கும். இவர்களை இணைத்து வைத்த பாலமாய் அமைந்த மதன் கார்க்கியின் வரிகள் கூட இந்த அற்புதத்துக்காகப் பொறுத்துக் கொண்டிருந்திருக்கும்.

அடிக்கடி சொல்லுவேன் சில பாடல்கள் இன்னார்க்கென்றே எழுதி வைத்தது என்று அப்படியானதொன்றுதான் இது. அந்த இசையைக் கேட்டுப் பாருங்கள் எவ்வளவு அன்னியோன்யமாகப் பாடல் வரிகளைச் சீண்டாமல் அரவணைத்துப் பயணிக்கிறது. தமிழ்ப் பாடல்களை வேற்று மொழிப்பாடகர் பாடக்கூடாது என்று கொடி பிடிக்கும் வீரர்களையும் தலை குனிய வைக்கிறது விஜயலட்சுமியின் மொழியாடல். இசையமைப்பு என்பது ஒரு உயர்ந்த தவத்தின் மிகச்சிறந்த வரமாக அமையவேண்டும்.

ரசிகனின் மனதுக்கு நெருக்கமாய்ப் பாடலைக் கொண்டு சேர்ப்பதில் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மூவரின் பங்கும் முழுமையாக இருக்க வேண்டும் என்பதில் சமரசம் செய்து கொள்ளாத எனக்கெல்லாம் இம்மாதிரிப் பாடல்கள் தான் ஆதரவுக் குரல் கொடுக்கின்றன.

டி.இமானைப் பற்றித் தனியே நிறையப் பேசவேண்டும், ஆனால் ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் இந்த இரண்டு ஆண்டுகளில் அவருக்குக் கிடைத்திருக்கும் கச்சிதமான வாய்ப்புகள் இன்னும் பெருக வேண்டும். இதே மாதிரிப் பாடல்களைக் கேட்கத் தான் நாம் இருக்கிறோம் என்று ஆதரவுக் குரலைக் கொடுத்துக் கொண்டே இருப்போம்.

ஊரெல்லாம் அலைந்து வீடு வந்து சற்று முன்னர் தான் இந்தப் பாடல் உருவாக்கத்தின் காணொளியைப் பார்க்கிறேன். பாடல் ஒலிப்பதிவு முடித்த தறுவாயில் டி.இமானும் தன் கண்ணாடியை மெதுவாகத் தூக்கிக் கண்களைத் துடைத்துக் கொள்கிறார். மீள வராது போன அவர் தாயைக் கூட இந்தப் பாடல் நினைவுபடுத்தியிருக்கக் கூடும். பாடலை அனுபவிக்க ஆரம்பித்துவிட்ட பிறகு காரணங்களைத்தேடி செல்கிறது அல்லது காரணங்களை நினைப்பூட்டி விடுகிறது.


புதிய உலகை

புதிய உலகை

தேடிப்போகிறேன்

என்னை விடு!

Yennamo Yedho - Puthiya Ulagai Full Song

இந்த நிமிடம் வரை தாலாட்டுத் தொடர்கிறது. இந்தப் பாடல் இன்னும் நெடு நாள் என்னிடம் தங்கிவிடும் என்று மனசு சொல்கிறது.


2014-01-25 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:

Sheik Mohamed Shajahan

unread,
Feb 5, 2014, 1:13:13 AM2/5/14
to பண்புடன்
சுபைரு .. பயபுள்ள நல்லா ரசிச்சு எழுதிருக்கேInline image 1


2014-02-04 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:



--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
ஷாஜஹான்.
ithanai.jpg

Arumbanavan A

unread,
Feb 5, 2014, 2:48:24 AM2/5/14
to பண்புடன்

சேக் அய்யா  அந்த வசனம் உங்களுக்கு  தான் பொருந்தும் முதல் லின்க்  பாருங்ய்யா.......


On 5 Feb 2014 10:13, "Sheik Mohamed Shajahan" <luckys...@gmail.com> wrote:
>
> சுபைரு .. பயபுள்ள நல்லா ரசிச்சு எழுதிருக்கே
>
>

>>>>  -இனியொரு விதி செய்வோம்

>>>>                                         ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         


>>>> வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
>>>> குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
>>>> காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
>>>> கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
>>>> ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
>>>> புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
>>>>                                                        :http://www.flickr.com/photos/duraian/
>>>
>>>
>>>
>>>
>>> --

>>>  -இனியொரு விதி செய்வோம்

>>>                                         ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         


>>> வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
>>> குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
>>> காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
>>> கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
>>> ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
>>> புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
>>>                                                        :http://www.flickr.com/photos/duraian/
>>>
>>> --
>>> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
>>> வாக்கென்றால் சேரும் பழி'
>>>  
>>> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>>>  
>>>  
>>> இணைய இதழ் : http://www.panbudan.com
>>
>>
>> --
>> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
>> வாக்கென்றால் சேரும் பழி'
>>  
>> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>>  
>>  
>> இணைய இதழ் : http://www.panbudan.com
>
>
>
>
> --
> எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
> நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
> *
> ஷாஜஹான்.
>

மோரு

unread,
Feb 20, 2014, 2:05:47 AM2/20/14
to பண்புடன்

திரும்ப திரும்ப கேட்டாலும் சலிக்காமாட்டுது. ஏடி கள்ளச்சி மாதிரி இந்த பாட்டும் ரொம்ப பிடிச்சிருக்கு.

கோணக்கொண்டக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்கல
நோயில் கிடக்கல
காரணம் யாருங்க
கேரளத்துச் சாரலுதானுங்க - மதயானைக்கூட்டம்.

http://www.youtube.com/watch?v=sZRXRCPGUN4

Ahamed Zubair A

unread,
Feb 20, 2014, 2:55:48 AM2/20/14
to பண்புடன்
இந்தப் படமும் செம...

நம்ம ஊர்ல பாத்துப் பழகின முகங்கள் மாதிரி வந்து போறவுங்க தான் படத்துக்கு பலமே....


--

Arumbanavan A

unread,
Feb 20, 2014, 3:20:17 AM2/20/14
to பண்புடன்

+1

மோரு

unread,
Mar 18, 2014, 6:15:18 AM3/18/14
to பண்புடன்
பொதுவாகவே பெண்கள் ஆண்கள் குறித்து வர்ணிக்கும் பாடல்களில் ஆணின் தோள் வலிமையை தேக்கோடு ஒப்பிட்டும் சிங்கம் போன்ற விலங்கோடு அவன் வீரத்தை ஒப்பிட்டும் பாடல்கள் வரிகளை பெண் பாடுவாள்.

ஆண் பெண்ணை வர்ணிக்கும் பாடலில் மெல்லிய இடையையும் நிலவு போன்ற முகத்தையும் பால் போன்ற தேகத்தையும் ஒப்பிட்டு பாடல் வரிகள் இருக்கும்.

இதிலே கூட ஒரு மேட்டிமைதனம் இருப்பதாக தெரியவில்லையா....  பெண் ஏன் வேறு மாதிரி ரசிக்க கூடாது

இந்த பாட்ட இதுக்கே எனக்கு பிடிக்கும்...

இஞ்சி இடுப்பழகா மஞ்ச சிவப்பழகான்னு பெண் ஆணை வர்ணித்தது இந்த பாட்டுலதான் 

yesura...@gmail.com

unread,
Aug 31, 2015, 12:56:57 AM8/31/15
to பண்புடன்
dsdsd

yesu rajan

unread,
Aug 31, 2015, 12:59:30 AM8/31/15
to panb...@googlegroups.com
இது என்ன இழை என விளங்க வில்லை

--
Reply all
Reply to author
Forward
0 new messages